------------------------------------------------------------------------------------------
Short Story: சிறுகதை: சாவிக்கொத்து சண்முகம் செட்டியார்
சாவன்னா கோனா வீடு என்றால் எங்கள் ஊரில் மிகவும் பிரசித்தம். அதாவது சாவிக்கொத்து சண்முகம் செட்டியார் என்பதின் சுருக்கம் அது.
செட்டிநாட்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் அல்லது அங்கே உள்ள புள்ளிகளுக்கும் அடையாளப்பெயர் இருப்பது காலம் காலமாக உள்ள வழக்கம். சில வீடுகளுக்கு அவர்கள் திருப்பணி செய்த கோவிலை வைத்து அல்லது அக்கோவில் இருக்கும் ஊரை வைத்து அடையாளப் பெயர் நிலவும். உதாரணமாக திருச்சுளிக் கோவிலுக்குத் திருப்பணி செய்த வீட்டிற்குத் திருச்சுளியார் வீடு என்ற அடையாளப் பெயர். சில வீடுகளுக்கு அவர்களுக்கு நிலபுலன்கள் உள்ள கிராமத்தின் பெயரை வைத்து அடையாளப் பெயர் இருக்கும். துடுப்பூர் கிராமத்தில் நிலபுலன்கள் இருந்த வீட்டிற்கு துடுப்பூரார் வீடு என்று பெயர். கல்கத்தாவில் வணிகம் செய்த வீட்டுக்காரர்களுக்கு வங்காளத்தார் வீடு என்ற பெயர் நிலவும்.
ஒரே வீட்டில் மூன்று வீரப்பன்கள் இருந்தால் எப்படி அடையாளப் படுத்துவது? பெரிய வீரப்பன், நடு வீரப்பன், சின்ன வீரப்பன் என்று வேறு படுத்திச் சொல்வார்கள். ஆச்சிமார்கள் சிலருக்கும் அடையாளப் பெயர் நிலவும். சறுக்குப்படி சாலி ஆச்சி, சுருக்குப் பை சுந்தரி ஆச்சி என்ற பெயர்கள் நிலவும்.
ஆனால் சாவிக்கொத்து என்ற அடையாளப் பெயர் சற்று சற்று வித்தியாசமாகப் படவே, என் தந்தையாரிடம் வினவினேன். ஒரு நல்ல கதை கிடைத்தது.
++++++++++++++++++++++++++++++
சண்முகம் செட்டியார் வீட்டிற்கு முதலில் சூம்பியோ சூனாபானா என்ற பெயர்தான் இருந்ததாம். சண்முகம் செட்டியாரின் அய்யா பர்மாவில் கொண்டு விற்றுப் பெரும் பொருள் ஈட்டி வந்தவர். ஊரில் இரண்டு வீட்டு மனையில் மிகவும் பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீட்டையும் கட்டினாராம். அதனால் அவர் பெயரில் அது அறியப்பட்டதாம். அவருக்கு வம்சா வழியில் ஒரே மகன், ஒரே பேரன். பேரன்தான் நமது கதையின் நாயகர்.
காந்திஜியின் வெள்ளையனே வெளியேறு போராட்டம் சூடி பிடிக்கத் துவங்கிய 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம்தான் சண்முகம் செட்டியார் பிறந்தார்.
ஆடிமாதம் ஆண்பிள்ளை பிறந்தால் ஆட்டி வத்துவிடும் என்று சொல்வார்களாம். அது உண்மையா அல்லது பொய்யா என்று அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் சண்முகம் செட்டியார் விஷயத்தில் அது உண்மையாகி விட்டது. அது சமயம் இரண்டாம் உலகப்போர் வேறு நடந்து கொண்டிருந்தது. சண்முகம் செட்டியாரின் அப்பச்சிக்கு அப்போது முப்பது வயது. பர்மாவில் அனைத்தையும் போட்டது போட்டபடி உயிர் பிழைத்தால் போதுமென்று வந்தவருக்கு அடி மேல் அடி!
யுத்தம் முடிந்து பர்மாவில் அரசு மாறியதில், சொத்துக்கள் அனைத்தும் பறிபோய்விட்டன. மொத்தம் நான்காயிரம் ஏக்கர்கள் விளை நிலம் மற்றும் அந்தக்கால மதிப்பில் ரூபாய் நான்கு லட்சம் அளவில் இருந்த கொடுக்கல், வாங்கல் கடை.
சம்பாதித்ததை எல்லாம் ஒரே கூடையில் போட்டு வைக்காதே என்பார்கள். போட்டு வைத்ததால் அனைத்தும் கூடையோடு பர்மாவில் பறிபோய்விட்டது. இங்கே மேலூரில் இருந்த ஐம்பது ஏக்கர் நிலம் மட்டுமே மிஞ்சியது.
அந்த ஐம்பது ஏக்கர் நிலத்தில் கிடைத்த வருமானம்தான் சண்முகம் செட்டியாரையும், அவருக்கு முன்னதாகப் பிறந்த மூன்று பெண்பிள்ளைகளையும், வளர்த்து ஆளாக்குவதற்கு அவருடைய அப்பச்சிக்குப் பெரிதும் உதவியதாம்.
1964ஆம் அண்டு சண்முகம் செட்டியார் அழகப்பாவில் படித்து முடித்து ஒரு கல்யாண டிகிரியோடு அதாவது இளங்கலை ஆங்கில இலக்கிய பட்டத்தோடு வெளியே வந்தபோது, உள்ளூரில் ஒரு பங்குத் தரகர் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. மேலூர் சொத்தில் ஒன்றும் மிஞ்சாது, ஆச்சிகளின் கல்யாணச் செலவில் கரைந்து போகும் என்று தெரிந்த சண்முகம் செட்டியார், முனைப்புடன், பங்கு வணிகத்தில் இருந்த நெளிவு சுளிவுகளை அக்கறையுடன் கற்றுத் தேர்ந்து, பிறகு அதையே தன் தொழிலாக்கிக்கொண்டார்.
தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருந்த சண்முகம் செட்டியாரின் வாழ்வில், அவருக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்த சம்பவம் அவருடைய நாற்பத்தி ஐந்தாவது வயதில்தான் அரங்கேறியதாம்.
சண்முகம் செட்டியாருக்கும், அவருடைய மைத்துனனுக்கும் காரைக்குடி சந்தைப்பேட்டை அருகே இருந்த ஒரு இடம் விஷயமாக வழக்கு நடந்து கொண்டிருந்த நேரம் அது. சண்முகம் செட்டியாரின் மூத்த மகன் சுப்பிரமணியன் என்ற மணி வீட்டிற்கு அடங்காமல் ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தவன், தன் அம்மானுடன் கூட்டு சேர்ந்ததோடு மட்டும் அல்லாமல் அப்பச்சிக்குத் தெரியாமல் அப்பச்சி பீரோவில் இருந்த வழக்கு சம்பந்தமான பத்திரங்கள், காகிதங்கள் அனைத்தையும் தன் அம்மானிடம் கொண்டுபோய்க் கொடுத்து விட்டான். சும்மா அல்ல, அம்மானிடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு கொடுத்துவிட்டான். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. அதை வைத்து வியாபாரம் செய்யலாம் என்ற ஆசையோடு சென்னைக்கும் ரயிலேறிப் போய்விட்டான்.
இரண்டு நாட்கள் கழித்து விஷயம் முழுமையாகத் தெரிந்தபோது, சண்முகம் செட்டியார் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. தன் மகனே இப்படிச் செய்வான் என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை. மகனின் நம்பிக்கைத் துரோகச் செயலால் அவர் மிகவும் நொடிந்துபோய் விட்டார். அதிலிருந்து மற்றவர்கள் மேலிருந்த நம்பிக்கை அவருக்கு முற்றிலும் போய்விட்டது.
எல்லாவற்றையும் பூட்டி வைக்கத் துவங்கியவர், முக்கியமான சாவிகளை எல்லாம் ஒரு கொத்தாக்கித் தன்னுடனேயே வைத்திருந்தார். வீட்டுச் சாவிகளை எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றை வைத்துப் பூட்டியிருப்பார். மற்றவர்களால் அத்தனை எளிதில் அவர் வைத்துள்ள சாவிகளை எடுப்பதோ அல்லது திறப்பதோ நடக்காத காரியம்.
உள்ளூர் கோவிலுக்குச் சென்றாலும் சரி, கடை கண்ணிகளுக்குச் சென்றாலும் சரி அல்லது பங்காளிகள், உறவினர்கள் வீட்டு விஷேசங்களுக்குச் சென்றாலும் சரி சாவியை மட்டும் பிரிய மாட்டார். இடுப்பிலேயே இருக்கும். உறங்கும்போது கூட பொது இடங்களில் உறங்க மாட்டார். முகப்பு அறையில் ஒன்றுக்கு மூன்றாகத் தாள் போட்டுவிட்டுத் தனியாகத்தான் உறங்குவார்.
இந்த இடுப்புச்சாவி உறவால்தான் அவருக்கு சாவன்னா கோனா என்ற அடையாளப் பெயரும் வந்ததாம். செட்டியாரின் முன்கதைச் சுருக்கம் இதுதான்.
ஆனால் அவருடைய பின்கதை இன்னும் விறுவிறுப்பானது. அதையும் என் தந்தையாரே சொன்னார்கள்.
தன்னுடைய நான்கு பெண் மக்களுக்கும், இரண்டாவது மகனுக்கும் நல்ல இடங்களில் திருமணம் செய்து வைத்தவர், தன் மூத்த மகனுடன் மட்டும் ஒட்டுதல் இல்லாமல் போய்விட்டார். பங்காளிகளில் இரண்டு பெரியவர்கள் சேர்ந்து, அவனுக்கு மணம் செய்து வைத்தபோது, ஊராரின் வற்புறுத்தலுக்காக கலந்து கொண்டவர், இசை குடிமானத்தில் மட்டும் தன் கையெழுத்தைப் போட்டு பெற்ற கடனைத் தீர்த்துவைத்தாராம். மணமக்களை வீட்டிற்கு அழைத்து வந்து பால்பழம் கொடுத்து ஆசீர்வாதம் செய்யும் நிகழ்வையும், காய்ச்சி ஊற்றும் நிகழ்வையும் தவிர்த்து விட்டாராம்.
கால ஓட்டம் அவருடைய எல்லாக் காயங்களுக்கும் மருந்து போட்டுக் குணப்படுத்தியது.
இந்த ஆண்டு மே மாதம் தனது 69ஆவது வயதில் சண்முகம் செட்டியார் காலமாகிவிட்டார். ஆனால் அதுகூட ஒரு விபத்தின் மூலம் அரங்கேறியது.
சண்முகம் செட்டியார் வீடு பேருந்துகள் செல்லும் பிரதான சாலையில் இருந்தது. குடிநீர்க் குழாய்களைப் பதிப்பதற்காக குடிநீர் வாரியத்துக்காரர்கள், மூன்றடி அகலம், ஆறடி ஆழத்திற்குப் பெரிய தொடர் பள்ளத்தை வெட்டிப் போட்டிருந்தார்கள். சண்முகம் செட்டியார் தன் வீட்டிலிருந்து அந்தப் பள்ளத்தைக் கடந்து செல்வதற்குப் பலகைகளைப் போட்டு வைத்திருந்தார். அவர்கள் வெட்டிப்போட்டு வாரக் கணக்காகிவிட்டது. பணி ஒப்பந்தக்காரர்கள் வேலையை முடித்துப் பள்ளத்தை இன்னும் மூடாமல் வைத்திருந்தார்கள்.
வீட்டில் விடுமுறைக்கு வந்திருந்த பேரன் பேத்திகளுக்கு, வீட்டிற்கு எதிரே பலகாரக்கடை வைத்திருக்கும் இசக்கி கடைக்குச் சென்று, பதினைந்து உருளைக்கிழங்கு போண்டாக்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பியவர், அந்தப் பள்ளத்தைக் கடக்கும்போது, பலகை புரண்டு, தடால் என்று குழிக்குள் தலைகுப்புற விழுந்து விட்டார்.
ஒரு கையில் பலகாரப் பொட்டலம், இன்னொரு கையில் சாவிக்கொத்து என்று இரண்டையும் விடாமல் பிடித்துக்கொண்டே குழிக்குள் விழுந்ததால், தலையில் பலமாக அடிபட்டு, விழுந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டார். அதாவது ஸ்பாட் அவுட்!
முதல் உதவிக்கு வந்த மருத்துவரும் அதைத்தான் சொன்னார்.”விழுந்து இறக்கக்கூடிய அளவிற்கு அது பெரிய பள்ளம் ஒன்றும் அல்ல. இவர் விழுகும்போது கைகளைத் தரையில் ஊன்றி இருந்தால், தலையில் அடிபட்டிருக்காது, மரணமும் ஏற்பட்டிருக்காது!”
எல்லாம் விதிக்கப்பட்டது. யார் என்ன செய்ய முடியும்?
“சாவிக்கொத்து சண்முகம் செட்டியார் கையில் சாவியைப் பிடித்துக் கொண்டே காலனோடு பயணமாகிவிட்டார்” என்று ஊரில் பேசிக்கொண்டார்கள்.
கதையை இத்துடன் முடித்திருந்தால், பத்திரிக்கையில் அல்லது பதிவில் எழுதும் அளவிற்கு அதில் மேன்மை இல்லாது போயிருக்கும்!
ஆனால் குறிப்பிட வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உள்ளது.
செட்டியார் காலமான செய்தியைக் கேள்விப்பட்டு, அதுவரை வீட்டு வாசப்படிக்குள் கால் பதிக்காத மூத்த மகன் மணியும் உடனே புறப்பட்டு வந்து, தன்னைப் பெற்றவருக்கு கிரியைகள் அனைத்தையும் செய்தான்.
ஆறு பிள்ளைகளும் சேர்ந்து, அவருக்கு மற்ற காரியங்களையும் செய்து முடித்தனர். செட்டியார் ஊரிலேயே தன் காலம் முழுவதும் இருந்து அத்தனை வீட்டின் நல்லது கெட்டதுக்குச் சென்று வந்தவர் என்பதால் ஒட்டு மொத்த ஊராரும் விஷயத்தைக் கேள்விப்பட்டு, காரியம் நடந்த பத்து நாட்களுக்குள் அவர் வீட்டிற்கு வந்து கேதம் கேட்டுவிட்டுப் போனார்கள்.
பதினொன்றாம் நாள் அவர் பெட்டகத்தையும், பீரோவையும் பிரித்தபோதுதான், அவர் சம்பாத்தித்து சேர்த்துவைத்திருந்த செல்வத்தின் அளவு பிள்ளைகளுக்குத் தெரிந்தது. தெரிந்தது மட்டுமல்ல, பிரமிப்பையும் கொடுத்தது.
ஆனால் அது முக்கியமில்லை. அதைவிட முக்கியமானது பெட்டகத்தின் மேலாக இருந்த செட்டியாரின் பதிவு செய்யப்பெற்ற உயில்தான் பார்த்த அனைவரையும் கலக்கிவிட்டது.
அதில் செட்டியார் குறிப்பிட்டிருந்த முக்கியமான வாசகம் இதுதான்:
செட்டிநாட்டில் வீட்டிற்கு வீடு அடையாளப் பெயர்கள் மாறலாம். ஆனால் தர்ம சிந்தனை மட்டும் மாறாமல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதுதான் செட்டி நாட்டின் சிறப்பு. காலம் காலமாகக் காப்பாற்றப்பட்டு வரும் மரபு அது!
++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
அடியவன் எழுதி, மாத இதழ் ஒன்றில், சென்ற
நவம்பர் மாதம் (2011) வெளிவந்து பலரது பாராட்டையும் பெற்ற சிறுகதை இது.
நீங்களும் படித்து மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன்.
அன்புடன்,
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

”என் மனம் பக்குவப்பட்டுவிட்டது. மூத்த மகன் மணி மீதிருந்த கோபம் இப்போது எனக்கு இல்லை. மன்னிப்பதுதான் உயர்ந்த குணம். அவனை நான் மன்னித்து விட்டேன். என் சொத்துக்கள், செல்வங்களில் இந்த பூர்வீக வீட்டை தவிர மற்ற அனைத்தையும் எட்டு சரிசம பங்காக வைத்து என்னுடைய பிள்ளைகளுக்கு ஆறு பங்கைக் கொடுத்துவிட வேண்டியது. அதாவது அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியது. இந்தப் பூர்வீக வீடு என் மகன்கள் இருவருக்கு மட்டுமே உரியது. பிரித்த செல்வத்தில் இரண்டு பங்குகளில் ஒரு பங்கை உள்ளூர் நகரச் சிவன் கோவிலுக்கும், இன்னொரு பங்கைக் கல்விப் பணி செய்யும் வித்யா பரிபாலன அமைப்பாளர்களிடமும் கொடுத்துவிட வேண்டியது.”
செட்டிநாட்டில் வீட்டிற்கு வீடு அடையாளப் பெயர்கள் மாறலாம். ஆனால் தர்ம சிந்தனை மட்டும் மாறாமல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதுதான் செட்டி நாட்டின் சிறப்பு. காலம் காலமாகக் காப்பாற்றப்பட்டு வரும் மரபு அது!
++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
ஐயாவிற்கு வணக்கம்! மேன்மக்கள் மேன்மக்களே!..தர்மத்திற்கும்,பொது காரியங்களுக்கும் பொருள் அளிக்கவேண்டும் என்பதை நியாபகப் படுத்தும் விதமக இருந்ததது இப்பதிவு!
ReplyDeletestory nanrga erunthu
ReplyDeleteஉண்மைக் கதை, நல்லதோர் கதை. நன்றிகள்.
ReplyDeleteகாலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
ReplyDeleteகோலங்கள் மாறும் கோபமும் மாறும்
நல்லோரின் உண்மையான அன்பும் அறமும்
எள்ளளவும் என்றும் மாறாதது.
என்பதை அழகாகக் காட்டிய அற்புத நிகழ்வை அருமையாகப் பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றிகள் ஐயா!
நண்பர்களின் திருமணத்தை முன்னிட்டு செட்டிநாடு பக்கம் போயிருக்கிறேன். நீங்கள் சொன்ன கதை, அப்படியே என்னை செட்டிநாட்டு பக்கம் இழுத்துச் சென்று விட்டது. கதையின் முடிவில் சொல்லப் பட்ட தர்ம சிந்தனை, செட்டிநாட்டு கோயில்கள் இன்றும் சிறப்பாக இருப்பதன் காரணத்தை தெரியப் படுத்துகிறது.
ReplyDeleteஐயா, மானிடவியல் கண்ணோட்டத்தில் கூறவேண்டும் என்றால் நீங்கள் எழுதும் நகரத்தார் கதைகள் கள்ளிக்காட்டு இதிகாசம் போன்று வட்டார வழக்கை, வாழ்வை ஆவணப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. கல்விப்பணிக்கு வழங்குவது, தர்ம சிந்தனை, இறைத்தொண்டு போன்றவற்றை சுட்டிக்காட்டும் நல்லதொரு கதை, நன்றி.
ReplyDelete/// ஒவ்வொரு வீட்டிற்கும் அல்லது அங்கே உள்ள புள்ளிகளுக்கும் அடையாளப்பெயர் இருப்பது காலம் காலமாக உள்ள வழக்கம்.///
ReplyDeleteஐயா, உங்கள் அடையாளப்பெயர் என்ன? :)))
கேதம் கேட்பது = துக்கம் விசாரிப்பது என யூகித்தேன். ஆனால் ...
கல்யாண டிகிரி என்ற பெயரின் காரணம்? இசை குடிமானம் என்றால் என்ன? காய்ச்சி ஊற்றும் நிகழ்வு என்பதன் பொருள் புரியவில்லை. விளக்க முடியுமா?
சறுக்குப்படி சாலி ஆச்சி, சுருக்குப் பை சுந்தரி ஆச்சி போன்றவர்களைப் பற்றியும் படிக்க விருப்பம் உள்ளது.
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteஅறம் செய விரும்பு கருத்து
ஆறுவது சினம் மணிதனின் இயல் பன்பு
நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteWith you one minute please...
ReplyDeleteTHE GROUP PRAYER CALLED FOR IS BEING ANSWERED...
THE "16 DAY" GROUP PRAYER COMES TO AN END BY TOMORROW AND RESULTS ARE WITNESSED TODAY..!!
THANK U ALL WHO JOINED AT THE PRAYER..
WE CONTINUE TO BE AT "PRAYER" FOR THE NEXT POSITIVE MOVE
IYER WOULD LIKE TO SHARE THIS; THOUGH IT IS NOT RELATED TO THE TODAYS POST/ (Pl permit ...!!)
நகரத்தார் சமூகத்தின் சிறப்பம்சங்கள் பலவும் உள்ளடக்கிய, உணர்வுபூர்வமான கதை.
ReplyDeleteநான் மதுரையில் பிறந்து வளர்ந்தாலும், பூர்வீகம், சிவகங்கைக்கருகில் உள்ள நாட்டரசன்கோட்டை தான். எனவே, அந்த வட்டார நடைமுறைகளில் மிக அதிகப் பரிச்சயம் உண்டு. எனது தந்தை, இந்து சமய அறநிலையத்துறையில் ஆடிட்டராக இருந்தவர். ஒவ்வொரு கோவிலுக்கும் பணிநிமித்தம் போய் வந்து, எங்களிடம் விவரம் கூறும் போது, 'நகரத்தார் பராமரிப்பு' என்று மிகப்புகழ்ந்து கூறுவார். சண்முகம் செட்டியாரைப்போன்ற மிகப் பலரின் கொடை அது என்று நன்றாகப் புரிகிறது.
'பெத்த மனம் பித்து' என்பதை அழுத்தமாகச் சொல்லும் அற்புதமான உணர்ச்சிப்பின்னல். நல்லதொரு கதை தந்தமைக்கு நன்றி ஐயா.
ஆவி போறதுக்குள்ள
ReplyDeleteசாவி கொடு என கேட்கும் பிள்ளைகள்
நமக்குள்ள சண்டை வேணாமே
நம்ம வீட்டை (எனக்கு) எழுதி வைச்சுருங்கன்னு சொல்ற (மா)பிள்ளைகள்
இந்த வரிசையில் வேறுபடுத்தி
இன்சொல் கருத்தை தந்தது மகிழ்ச்சி
மாறாத அந்த தர்ம சிந்தனைகளை மதிக்கின்றோம் அந்த குடும்பங்களில் பார்க்கையில் ..
இரு கரம் கூப்பி வணங்குகின்றோம்.
miga arumayana kathai
ReplyDeleteஎதார்த்தமான அழகான கதை. செட்டியாரின் மனம் பக்குவமடைந்ததால் அவர் மகனை மன்னித்தது சரி, ஆனால் அவரின் மகனின் மனநிலை என்ன என்பது குறித்து நீங்கள் எதுவும் சொல்லவில்லை.
ReplyDeletenice story...
ReplyDeleteமன்னிக்கும் மனமே மகேசன்.
ReplyDeleteசெட்டி நாட்டு மண் வாசனையில் வட்டார வார்தைகள் வாவ்.கதையின் நடையும் ஓட்டமும் நமக்கும் சொல்லுது பாடம் ரகம்.செட்டியாரின் உண்மையான பாசத்துக்கு அடையாளம் பேத்திகளுக்கு போண்டா வாங்கியது, இறுதியாய் மன்னித்தது.
கதைக்களம் உண்மை சம்பவம் எனும் பட்சத்தில் செட்டியாருக்கு ஒரு வணக்கம்.
////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteஐயாவிற்கு வணக்கம்! மேன்மக்கள் மேன்மக்களே!..தர்மத்திற்கும்,பொது காரியங்களுக்கும் பொருள் அளிக்கவேண்டும் என்பதை ஞாபகப் படுத்தும் விதமாக இருந்ததது இப்பதிவு!/////
நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!
////Blogger eswari sekar said...
ReplyDeletestory nanrga erunthu////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger krishnar said...
ReplyDeleteஉண்மைக் கதை, நல்லதோர் கதை. நன்றிகள்./////
உண்மைக்கதை அல்ல! கற்பனைக் கதைதான்! நன்றி!
/////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteகாலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
கோலங்கள் மாறும் கோபமும் மாறும்
நல்லோரின் உண்மையான அன்பும் அறமும்
எள்ளளவும் என்றும் மாறாதது.
என்பதை அழகாகக் காட்டிய அற்புத நிகழ்வை அருமையாகப் பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றிகள் ஐயா!/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி ஆலாசியம்!
/////Blogger தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteநண்பர்களின் திருமணத்தை முன்னிட்டு செட்டிநாடு பக்கம் போயிருக்கிறேன். நீங்கள் சொன்ன கதை, அப்படியே என்னை செட்டிநாட்டு பக்கம் இழுத்துச் சென்று விட்டது. கதையின் முடிவில் சொல்லப் பட்ட தர்ம சிந்தனை, செட்டிநாட்டு கோயில்கள் இன்றும் சிறப்பாக இருப்பதன் காரணத்தை தெரியப் படுத்துகிறது.//////
உண்மைதான். நன்றி நண்பரே!
/////Blogger தேமொழி said...
ReplyDeleteஐயா, மானிடவியல் கண்ணோட்டத்தில் கூறவேண்டும் என்றால் நீங்கள் எழுதும் நகரத்தார் கதைகள் கள்ளிக்காட்டு இதிகாசம் போன்று வட்டார வழக்கை, வாழ்வை ஆவணப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. கல்விப்பணிக்கு வழங்குவது, தர்ம சிந்தனை, இறைத்தொண்டு போன்றவற்றை சுட்டிக்காட்டும் நல்லதொரு கதை, நன்றி./////
மானிடவியல் எல்லோர்க்கும் பொதுதான். சுவைக்காக வட்டார வழக்கில் எழுதுகிறேன். மேலும் எனது வாசகர்களில் 90 சதவிகிதம் பேர்கள் அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
//////Blogger தேமொழி said...
ReplyDelete/// ஒவ்வொரு வீட்டிற்கும் அல்லது அங்கே உள்ள புள்ளிகளுக்கும் அடையாளப்பெயர் இருப்பது காலம் காலமாக உள்ள வழக்கம்.///
ஐயா, உங்கள் அடையாளப்பெயர் என்ன? :)))//////
பூர்வ காலத்தில் துடுப்பூர் என்னும் கிராமத்தில் எங்கள் பாட்டனாருக்கு நிறைய விளை நிலங்கள் இருந்ததாம். அதனால் அந்தக் கிராமத்தின் பெயரை வைத்து துடுப்பூரார் வீடு என்று பெயர்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..
/////கேதம் கேட்பது = துக்கம் விசாரிப்பது என யூகித்தேன். ஆனால் ...
கல்யாண டிகிரி என்ற பெயரின் காரணம்? இசை குடிமானம் என்றால் என்ன? காய்ச்சி ஊற்றும் நிகழ்வு என்பதன் பொருள் புரியவில்லை. விளக்க முடியுமா?
சறுக்குப்படி சாலி ஆச்சி, சுருக்குப் பை சுந்தரி ஆச்சி போன்றவர்களைப் பற்றியும் படிக்க விருப்பம் உள்ளது.//////
வரன் வெறும் கலைப் பட்டம் (B.A History அல்லது B.A Lit போன்ற பட்டம்) வாங்கியிருந்தால், அதைத் திருமணத்திற்காக வாங்கிய பட்டம் என்ற முறையில் கல்யாண டிகிரி என்பார்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இசை குடிமானம் என்பது திருமண ஒப்பந்தம். திருமணத்தன்று பெண்ணின் தந்தையார், மாப்பிள்ளையின் தந்தை மற்றும் திருமணத்திற்கு வந்திருக்கும் இரண்டு உறவினர்கள் (சாட்சிகள்) ஆகியோர் கையெழுத்திட எழுதி வைத்துக்கொள்ளும் திருமண ஒப்பந்தம்.
காய்ச்சி ஊற்றுவது என்பது புதுமணத்தம்பதிகளுக்கு, பெண்ணின் பெற்றோர்களும், பையனின் பெற்றோர்களும் திருமணத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் தத்தம் வீடுகளில் கொடுக்கும் விருந்து. புது மணத்தம்பதிகளுடன் முக்கிய உறவினர்களும் (உடன் பிறப்புகளும்) கலந்து கொள்வார்கள்
விளக்கம் போதுமா?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
அறம் செய விரும்பு கருத்து
ஆறுவது சினம் மனிதனின் இயல் பண்பு
நன்றி/////
நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!
//////Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteநகரத்தார் சமூகத்தின் சிறப்பம்சங்கள் பலவும் உள்ளடக்கிய, உணர்வுபூர்வமான கதை.
நான் மதுரையில் பிறந்து வளர்ந்தாலும், பூர்வீகம், சிவகங்கைக்கருகில் உள்ள நாட்டரசன்கோட்டை தான். எனவே, அந்த வட்டார நடைமுறைகளில் மிக அதிகப் பரிச்சயம் உண்டு. எனது தந்தை, இந்து சமய அறநிலையத்துறையில் ஆடிட்டராக இருந்தவர். ஒவ்வொரு கோவிலுக்கும் பணிநிமித்தம் போய் வந்து, எங்களிடம் விவரம் கூறும் போது, 'நகரத்தார் பராமரிப்பு' என்று மிகப்புகழ்ந்து கூறுவார். சண்முகம் செட்டியாரைப்போன்ற மிகப் பலரின் கொடை அது என்று நன்றாகப் புரிகிறது.
'பெத்த மனம் பித்து' என்பதை அழுத்தமாகச் சொல்லும் அற்புதமான உணர்ச்சிப்பின்னல். நல்லதொரு கதை தந்தமைக்கு நன்றி ஐயா./////
நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி!
////Blogger அய்யர் said...
ReplyDeleteஆவி போறதுக்குள்ள
சாவி கொடு என கேட்கும் பிள்ளைகள்
நமக்குள்ள சண்டை வேணாமே
நம்ம வீட்டை (எனக்கு) எழுதி வைச்சுருங்கன்னு சொல்ற (மா)பிள்ளைகள்
இந்த வரிசையில் வேறுபடுத்தி
இன்சொல் கருத்தை தந்தது மகிழ்ச்சி
மாறாத அந்த தர்ம சிந்தனைகளை மதிக்கின்றோம் அந்த குடும்பங்களில் பார்க்கையில் ..
இரு கரம் கூப்பி வணங்குகின்றோம்./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!
/////Blogger arul said...
ReplyDeletemiga arumayana kathai/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger Uma said...
ReplyDeleteஎதார்த்தமான அழகான கதை. செட்டியாரின் மனம் பக்குவமடைந்ததால் அவர் மகனை மன்னித்தது சரி, ஆனால் அவரின் மகனின் மனநிலை என்ன என்பது குறித்து நீங்கள் எதுவும் சொல்லவில்லை.////
தந்தை இறந்த செய்தியைக் கேட்டு மகன் உடனே வந்து உரிய அந்திம காரியங்களைச் செய்தான் என்று கதையில் எழுதியிருக்கிறேனே - சகோதரி!
//////Blogger Balamurugan Jaganathan said...
ReplyDeletenice story.../////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger thanusu said...
ReplyDeleteமன்னிக்கும் மனமே மகேசன்.
செட்டி நாட்டு மண் வாசனையில் வட்டார வார்தைகள் வாவ்.கதையின் நடையும் ஓட்டமும் நமக்கும் சொல்லுது பாடம் ரகம்.செட்டியாரின் உண்மையான பாசத்துக்கு அடையாளம் பேத்திகளுக்கு போண்டா வாங்கியது, இறுதியாய் மன்னித்தது.
கதைக்களம் உண்மை சம்பவம் எனும் பட்சத்தில் செட்டியாருக்கு ஒரு வணக்கம்./////
உண்மைக் கதை அல்ல! கற்பனைக் கதைதான். நன்றி!
பொதுவாக காரைக்குடி காரர்கள் செலவழிப்பதில் சிக்கனம் காட்டுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த நண்பர் ஒருவர் செட்டியார்களைப் பற்றி தான் அறிந்த சிறு தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
ReplyDelete''ஊதாரி செலவுகளை தவிர்த்துதான் அவர்கள் சிக்கனமாக இருப்பார்கள். ஆனால் கோவில் திருப்பணி, கல்வி, அன்னதானம், ஏழைப்பெண்களின் திருமணம் என்று வந்துவிட்டால் அவர்களைப்போல் வள்ளல்கள் யாருமே கிடையாது.''
கதையைப் படிக்கும்போது அது புரிகிறது.
சாவிக் கொத்துடன் ஆவியை விட்டவரின் கதை நன்றாக அமைந்துள்ளது. நன்றி ஐயா!
ReplyDeleteஇசைகுடிமானப் பத்திரம் என்பதில் இசை என்பது இசைவு என்று பொருள் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.நிச்சய தாம்பூலத்தின் போது பொது நபர் எழுதி இரண்டு பக்கமும் கையெழுத்திட்டு ஒப்புக் கொள்ளுதல் வழக்கில் உள்ளது.
பெற்றபிள்ளையே துரோகம் செய்வது, அதனைத் தாங்கிக் கொள்ளும் பெரியவர்கள், பின்னர் பக்குவப்பட்டு துரோகம் செயத பிள்ளையை மன்னித்து ஏற்றுக்கொள்வது என்று நல்ல சூழல்களையே எழுதுவது உங்களாலேயே முடியும்.எதையும் ஒரு 'ஹை டிராமா'வாக மாற்றாமல் தெளிந்த நீரோடையாக
சொல்வது தனிச்சிறப்பு ஐயா!