மாணவர் மலர்
நமது வகுப்பறை மாணவர் லால்குடி கே முத்துராமகிருஷ்ணன் அவர்கள் இன்று எழுதியுள்ள கட்டுரையுடன், இதுவரை மொத்தம் நூறு ஆக்கங்களை அவர் அனுப்பியுள்ளார். நமது வகுப்பறையின் சார்பில் அவருக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு முன்னுரிமை தந்து முதல் ஆக்கமாக இன்று அதை வலை ஏற்றியுள்ளேன். அத்துடன் வேறு ஏழு ஆக்கங்களும் உள்ளன. அனைவரும் படித்து மகிழுங்கள்,
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
லால்குடியார் அடித்த சதம்!
'மக்கள் சேவையே மகேசன் சேவை’
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன்
இது இவருடைய நூறாவது கட்டுரை.
-----------------------------------
'சதமானம் பவதி, சதாயுஷ்'என்று வாழ்த்துவார்கள். 'இன்னும் ஒரு நூறாண்டு இரும்' என்பது அதற்குப் பொருள்.
அப்படிப் பட்ட வாழ்த்து உண்மையாகவே நாம் அளிக்க வேண்டியவரைப் பற்றியும் அவர் பணிகளைப் பற்றியும் என் நூறாவது ஆக்கத்தில் கொடுப்பது என்று ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னர் முடிவு செய்தேன்.
'மக்கள் சேவையே மகேசன் சேவை', 'நர சேவையே நாராயண சேவை', 'ஜீவ சேவையே சிவ சேவை' என்பது எனக்கு மிக
வும் பிடித்த சொற்கள்.
எந்த ஊருக்குப்போனாலும் அந்த ஊரில் உள்ள நல்ல சேவை நிறுவனத்திற்குப் போவதும், அங்கே அவர்கள் செய்யும் பணிகளை அருகில் இருந்து பார்ப்பதும்,பாராட்டுவதும், முடிந்தால் அதனை என் பகுதியில் 'காப்பி'அடித்துத் தொண்டு செய்யக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராய்வதுமாக என் பொழுது கழியும்.
பல தொண்டுகளைத் துவங்கித் தொடர முடியாமல் கை விட்டுள்ளேன். இதற்காக சமுதாயத்திலும், உறவு, நட்பு, குடும்பத்திலும் ஏளனத்திற்கு ஆளாகியுள்ளேன்.அப்படித் தோல்விகளைச் சந்திக்கும் போதெல்லாம் சுவாமி விவேகானந்தரின் சொற்கள் எனக்கு ஆறுதலாக இருக்கும்.
"ஒரு நற்செயலைத் தோல்வி பயத்தினால் துவங்கத் தயங்குபவனைக் காட்டிலும் துவங்கித் தோல்வி அடைபவனை நான் அதிகம் நேசிக்கிறேன் " என்பார் சுவாமிஜி.(நினைவிலிருந்து எழுதியுள்ளேன். கருத்தில் மாற்றம் இல்லை. சொற்களில் மாற்றம் இருக்கலாம்)
மனித சேவை என்று வந்துவிட்டால் நான்'எண்ணித் துணிக கருமம்' என்பதை வசதியாக மறந்து விடுவேன்.
1975ல் எனக்குத் திருமணம். நான் புதுமனைவியுடன் இல்லறத்தின் இன்பங்களைச் சுவைத்துக் கொண்டிருந்த போது, அதே ஆண்டில், என்னைவிட ஆறு அல்லது ஏழு வயது குறைவான, பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர் ஒரு விபத்தில் தன் வாழ்க்கையையே தொலைத்துவிட்டார்.
நான்காம் ஆண்டு பொறியியல் மாணவருக்கு லட்சியக்கனவு, தான் ஒரு கப்பல்படை அதிகாரி ஆக வேண்டும் என்பதே. சின்னக் குழந்தையாக இருந்த போதே கடல் மேல் மிதக்க்கும் கனவில் அந்த மாணவன் மூழ்கிவிட்டான்.
அதற்காகவே தன்னைத் தயார் படுத்திக்கொண்டு வந்தான். ராணுவத்தில் நேவி பிரிவைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டான். கல்லூரி இறுதியாண்டில் கப்பல் படையில் சேருவதற்கான எழுத்துத் தேர்வில் வெற்றிவாகை சூடிவிட்டான்.நேர்முகத் தேர்வு, உடற்பயிற்சி/தகுதித் தேர்வுகளிலும் தொண்ணூறு சதம் வெற்றியே. இறுதியாக ஓர் உடற்பயிற்சித் தேர்வின் போது கைதவறி மிக உயரத்திலிருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கினான்.
நினைவு இழந்தவனை ராணுவ மருத்துவமனையில் சேர்த்தார்கள்.பல நாட்கள் கவலைக்கிடம் பட்டியலில் இருந்தான். நீண்ட மாதங்கள் சிகிச்சை கிடைத்த பின்னர் உயிர் ஆபத்திலிருந்து தப்பினான் அந்த மாணவன்.
அப்போதுதான் அவனுக்கு அந்த அதிர்ச்சிச் செய்தி கூறப்பட்டது.
அவனுடைய கழுத்துக்குக் கீழ் எந்த அவயவமும் இயங்காது. பிறர் உதவியின்றி எந்தச் செயலும் செய்ய முடியாது.
"இப்படி உயிர் வாழ்வதற்கு நான் செத்தே போயிருக்கலாமே!"
மனத்திற்குள்ளும் , வெளியிலும் இந்தக் கேள்வியுடன் மருகினான்.
யாருக்கும் ஏற்படும் மன அழுத்தம் அவனுக்கும் ஏற்பட்டது.
அப்போதுதான் ஆண்டவனின் குரல், பொறுமையுடன் அவனுக்குச் சிகிச்சை அளித்த டாக்டரின் மூலமாகக் கிடைத்தது.
"கலங்காதே! நீ உயிர்பிழைத்தது தெய்வாதீனம்தான்.உன்னால் இந்த உலகிற்கு ஆக வேண்டிய நற்செயல் ஏதோ ஒன்று இருக்கிறது.துணிவு கொள்! "
சிகிச்சை முடிந்து தன் சொந்த ஊரான ஆய்க்குடிக்கு வந்து சேர்ந்தான்.ஆய்க்குடி தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ள அழகிய கிராமம.
என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான்.பேச முடியுமே தவிர கைகால்களையோ, உடலையோ அசைக்கக் கூட முடியாது.
சிறிய அளவில் அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகப் பாடம் நடத்தினான்.
தன்னைப் போல உடல் ஊனம் உற்றவர்களுக்கான பயிற்சிப் பள்ளியைத் துவங்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. அந்த எண்ணம் தோன்றிய நேரம் நல்ல நேரம்.
பள்ளிக்குப்பெயர் வைக்க வேண்டுமே!அவனுக்கு அதில் எந்தத் தயக்கமும் தோன்றவில்லை. தன் உயிரைக் காப்பாற்றி தனக்கு வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய டாக்டரின் பெயர்தான் முதலில் தோன்றியது.
அமர்சிங் என்ற மருத்துவருக்கு நன்றிக் கடனாக அவர் பெயரிலேயே "அமர் சேவா சங்கம்" 1981ல் துவங்கப்பட்டது.
ஐந்தே ஐந்து மாணவர்களுடன் தோன்றிய அந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி இந்த 30 ஆண்டுகளில் ஆல விருட்சம் போல வளர்ந்து பாரத அளவில், ஏன் உலக அளவிலும் கூட ஒரு 'மாடல்', மாதிரிப் பள்ளியாகத் திகழ்கிறது.
அந்தப் பொறியியல் மாணவனின் பெயர் ராமகிருஷ்ணன்.இப்போது அவருக்கும் 57 வயது இருக்கும்.
1991ல் சங்கரராமன் என்ற ஆடிட்டர், அவரும் ஒரு சக்கர நாற்காலியில் வலம் வரவேண்டிய துர்பாக்கியத்திற்கு உள்ளானவர், அமர்சேவா சங்கத்திற்கு வந்தார். ராமகிருஷ்ணனையும், அந்தப் பள்ளியையும் கண்டதும் காதல் கொண்டார்.அங்கேயே ராமகிருஷ்ணனுக்குத் துணையாகத் தங்கிவிட்டார்.
இந்த இரட்டையர்களுக்கும், அமர்சேவா சங்கத்திற்கும் பல விருதுகள் கிடைத்துள்ளன.
மேதகு அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது ராமகிருஷ்ணனின் சேவையைப் பாராட்டி விருது வழங்கியுள்ளார்.
www.amarseva.org
மேற்படி தளத்தில் முழு விவரங்களும் கிடைக்கும். அனபர்கள் அனைவரும் அந்த தளத்தினை முழுமையாகப் படிக்க வேண்டுகிறேன்.
உடல் நிலை நன்றாக இருக்கும் நம்மால் முடியாத நற்செயலை முற்றிலும் உடல் ஒத்துழைப்புக் கிடைக்காதவர்கள் செய்துள்ள சாதனைகளைப் படியுங்கள். தன்னம்பிக்கை தானாக வரும்.
அவர்களுடைய 2010=2011 ஆண்டறிக்கையைப் படியுங்கள். வரவு செலவு தணிக்கை அறிக்கையைப் பாருங்கள். இவ்வளவு துல்லியமான கணக்குக் கொடுக்கக் கூடிய பொது நிறுவனங்கள் இன்று பாரதத்தில் மிகச் சிலவே இருக்கின்றன.
இந்தக் காணொளியைக் காணுங்கள்.
http://www.youtube.com/watch?v=fCajWROQp_M
உங்களுக்கு நம்பிக்கை உண்டானால் உதவ விருப்பம் உள்ளவர்கள் உதவுங்கள். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சொல்லுங்கள்.
அறம் செய விரும்புங்கள்.'அறம் செய்வோரை அந்த அறமே காக்கும்' என்பது வேதம்.
வாழ்க வளமுடன்.
ஆக்கியோன்:கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
பின் குறிப்பு:
இனி என் ஆக்கங்கள் வாரம் தோறும் வெளிவராது. எப்போதாவது மன எழுச்சி தோன்றுமானால் எழுதுவேன்.15 ஆகஸ்டு 2010 முதல் இது நாள் வரை ஒவ்வொரு வாரமும் எழுதியுள்ளேன். பொறுமையுடன் வெளியிட்ட வாத்தியார் ஐயாவுக்கும், படித்து ஊக்கமளித்த மாணவ நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
தொழில்: Used Cars Seller
------------------------------------
நன்றி வணக்கத்துடன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.
(திருமிகு கச்சியப்ப சிவாச்சாரியார், கந்தபுராணம்)
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.
(திருமூலர், திருமந்திரம்)
பார்க்குமிடந்தோறும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமனாம் சிவபெருமானை ஆதியும் அந்தமும் நடுவுமாய்த் தொழும் சைவ சமயத்தைப் பற்றி, நானறிந்த வரையில் இக்கட்டுரையில் சொல்லப் புகுகின்றேன்.
மானிட வாழ்வை நல்வழிப்படுத்தி, அந்த உயிரைப் பரிபக்குவ நிலைக்கு இட்டுச் செல்வதே சமயம் ஆகும் இந்து சமயம் என்பது சைவ சமயமே என்பது சைவ சித்தாந்த வழி நடப்போரின் துணிபு. உலகளாவியது இச்சமயம். . சிவனாரை முதன்மைப் படுத்தி வணங்குவதால், 'சிவசம்பந்தம்' பெற்றது என்னும் பொருளில் சைவம் என்று போற்றப்படும் இந்தச் சமயம் அநாதியானது. அதாவது தொடங்கிய காலம் அறிய இயலாதது. சைவசித்தாந்தம் என்னும் மிகவுயர்ந்த உன்னத நெறி, சைவ சமயத்தின் உயிர்நாடி எனப் போற்றப் படுகின்றது.வேதத்தின் முடிவை வேதாந்தம் என்பது போல் (அந்தம்= முடிவு). சித்தம், அதாவது, மனம்/அறிவின் எல்லையை சித்தாந்தமாகக் கொள்ளலாம்.
சிவனாரை முழுமுதற் கடவுளாக உணர்ந்து வழிபடுவோரே சைவர். இறைவன், அனைத்தையும் தாமே அறியும் பேரறிவு உடையவன். அவர் ஒருவரே பதி. இறைவன் எண்குணத்தான். எண்குணமாவன, தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை , முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவையாம்.
சைவ சித்தாந்தத்தின் படி, உயிர்கள் அநாதியானவை. அவை அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையன. இறைவனானவர் அவற்றைப் படைப்பதில்லை. இறைவன் கருணை வடிவானவர். நாம் படைக்கப்பட்டதாலேயே, இவ்வுலகில் துயருறுகிறோம். அவ்வாறிருக்க, அவர் நம்மைப்படைத்து, துன்பத்தில் உழலவிட்டார் எனில் அவர் எங்ஙனம் கருணைக்கடலாயிருத்தல் சாத்தியம்?. ஆகவே ஆன்மாக்களை இறைவன் படைக்கவில்லை.
ஆனால் அவற்றின் மும்மலங்களை நீக்கும் பொருட்டு, தநு, கரண, புவன போகங்களைப் படைத்தல், படைத்தவற்றைக் காத்தல், மீண்டும் அவற்றை ஊழிக்காலத்தில் ஒடுக்குதல், ஆன்மாக்களை இருவினைப் பயன்களில் அமிழ்த்துதல், வீடுபேறாகிய முத்தியின்பத்தை அருளல் ஆகிய ஐந்தொழில்களைப் புரிகிறார்.
ஒருவனு மேஉலகு ஏழும் படைத்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் அளித்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் துடைத்தான்
ஒருவனு மேஉலகு ஓடுஉயிர் தானே.
(திருமூலர், திருமந்திரம்)
தநு, கரணம், புவனம் போகம் ஆகியவற்றின் பொருள், முறையே, தநு= உடல், கரணம்=புறக்கரணம் மட்டுமின்றி அகக்கரணம்(மனம், புத்தி) முதலியன, புவனம்= வினையை அறுவடை செய்யும் களமாக உள்ள இந்த உலகம்,
போகம்= அனுபவிக்கப்படும் பொருள்.
சிவனார், ஆன்மாவுடன் ஒன்றியும் அதனிலிருந்து வேறுபட்டும், ஆன்மாவின் உடனாகவும் இருக்கிறார். இதுவே சைவசித்தாந்தம் காட்டும் அத்துவிதம் (இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு) ஆகும்.
“அவையே தானேயாய், இருவினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கமின்றி நிற்கும் அன்றே”
(சிவஞானபோதம்)
சைவ சித்தாந்தம், பசு,பதி, பாசம் என்னும் மூன்று பெரும் அடிப்படைக் கோட்பாடுகளை உள்ளடக்கியது.
பசு= ஆன்மா
பதி= இறைவன்
பாசம்= ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள். திரோதானம், மாமாயை ஆகியவற்றைச் சேர்த்து ஐவகை மலங்களாகக் கொள்வதும் உண்டு.
ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.
(திருமந்திரம்-எட்டாம் தந்திரம்)
அரிசியை, தவிடு, உமி, முளை இம்மூன்றும் சூழ்ந்திருப்பதைப் போல் மனித ஆன்மாவைஆணவம், கன்மம், மாயையாகிய முக்குற்றங்களும், சூழ்ந்திருக்கின்றன என்கிறார் திருமூலர்.
ஆணவம்: நான், என்னுடையது எனும் கருத்தே ஆணவமாகும். இது சகஜ மலம் என்று கூறப்படுகிறது ஆணவமலம், பிறக்கும் போதே, ஆன்மாவோடு சேர்ந்து இருக்கிறது. இதன் காரணமாகவே, ஆன்மா உடலெடுத்து, எங்கும் சென்று, எதையும் செய்ய இயலும்.
நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ண லடிசேர் உபாயம தாகுமே.
(திருமூலர், திருமந்திரம்)
உயிர்கள் பிறவா நிலை அடைய வேண்டும் எனும் பேரருள் காரணமாக மாயை, கன்மம் என்னும் இரு மலங்களை இறைவனார் சேர்ப்பிக்கிறார். இந்தக் கன்மம் மூலகன்மம் எனப்படும். மூலகன்மத்தின் காரணமாக உயிர்கள் வினை செய்கின்றன. வினையின் பயனை இறைவர் தருகிறார். சிந்திக்கும் திறன் இல்லாத உயிரிகளிடத்தும் இது உண்டு கன்மமும் மாயையும் ஆகந்துக மலம் (இடையில் சேர்க்கப்பட்டது) எனப்படுகிறது.
கன்மம் என்பது, ஆன்மாக்கள் பிறவியெடுத்துச் செய்த புண்ணிய பாவங்கள்(நல்வினை, தீவினையாகிய இரு வினைகள்). நல்வினை, தீவினைக்கேற்ப பலனளிப்பவர் இறைவனே.
உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே.
(நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர்பெருமான் தேவாரம்).
ஒவ்வொரு பிறவியிலும் இவ்வாறு சேர்ந்த கன்மங்கள் சஞ்சிதம் எனப் பெயர் பெறும். இந்த சஞ்சித கன்மங்கள், இன்ப துன்பங்களைத் தந்து பயன்படும்பொழுது பிராரத்தம் எனப் பெயர் பெறும். மனம், வாக்கு, காயம் இவற்றால், எடுத்த பிறவியில் செய்த இருவினைகள் ஆகாமியம் எனப் பெயர் பெறும். மூலகன்மம் நுண்வினை. மற்ற மூன்று வினைகளும் பருவினை எனப்படுகிறது.
ஒரு விதையில் மரமும், மரத்தில் விதையும் தொடர்ந்து வருவது போல், கன்மம், ஆன்மாக்களைத் தொடரும்.
உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின்
விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும்
தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின்
இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல்.
(அருணந்தி சிவாச்சாரியார், சிவஞான சித்தியார் )
செய்திடும் கன்ம மெல்லாம் செய்தவர் தம்மைப் பற்றி
எய்திடு மென்னில் இங்கே மாய்ந்திடும் ஏய்வ தெங்ஙன்
மெய்தரு தூலங் கெட்டுச் சூக்கமாய் மேவு மென்னில்
ஐயனே தீபம் போனால் அதனொளி யாவ துண்டோ.
(சிவஞான சித்தியார்)
(பொருள்: “முற்பிறவியில் செய்யும் வினையெல்லாம், இப்பிறப்பிலேயே பயன் தருமென்றால், இப்பிறவி வினையெல்லாம், இப்பிறவியோடே கெடும். பிற்பிறப்புக்கு அவை சேருவது எவ்விதம்? இந்தத் தூலவுடல் கெட்டு, சூக்குமமாய்ப் பொருந்து முறை எப்படியென்னில், தீபத்தில் ஒளி, திரியை விட்டு நீங்கி வேறு இடத்தில் ஒளிரும் என்று கூறுதல் போலவாம்.”)
மனித ஆன்மாவுக்கு உயிருள்ள,மற்றும் உயிரற்ற பொருட்களினிடையே ஏற்படுகின்ற சம்பந்தங்கள், பாதிப்புகள் இவைதான் மாயை எனப்படுகிறது.
அஞ்ஞா னம்பொய் அயர்வே மோகம்
பைசால சூநியம் மாச்சரி யம்பய
மாவேழ் குணமும் மாயைக் கருளினை
இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவலென் றெடுத்த
(இருபா இருபஃது, அருணந்தி சிவாச்சாரியார்)
சிவபெருமான், மாயையைக் கொண்டே, நாம் காணும், இவ்வுலகையும் அதில் உள்ள பொருள்களையும் படைக்கிறார். மாயை உயிர்களுக்குப் எதிரானதென்றாலும், ஆணவத்தினால் மறைக்கப்பட்டுள்ள அறிவை வெளிப்படுத்த உதவுவதும் மாயையே. மாயை, சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என மூவகைப்படும். மூன்று மாயைகளிலும் சேர்த்து 36 தத்துவங்கள் தோன்றுகின்றன். இவற்றின் அடிப்படையில்தான் உலகத்துப் பொருள்கள் தோற்றமாகின்றன.
மும்மலங்களின் அடிப்படையில் சீவர்கள் மூவகைப்படுவர். ஆணவமலம் மட்டும் உடையவர், விஞ்ஞானகலர். ஆணவம், கன்மம் என்ற இருமலமுடையோர் பிரளயாகலர். ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலமுடையோர் சகலர் ஆவர்.
விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.
(திருமூலர், திருமந்திரம்)
வீடுபேறாகிய முத்தி நிலை:
வீடு பேறு என்பது உயிர்கள், மும்மலம் நீங்கப் பெற்று சிவனாரின் திருவடிகளில் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். 'திருவடிகளில் கலந்து' என்று சொல்லப்பட்டாலும் சிவனாரின் அடிமையாய், ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றலில்லாமல் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும் நிலையே இது. முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவா நிலையை அடைகின்றன.
முத்தி அடைய வேண்டும் என்கிற ஆவல் உயிர்க்கு ஏற்படவேண்டும். இந்த ஆவல் பெருகப் பெருக, அது உயிருக்கு, மலபரிபாகம், இருவினை ஒப்பு, சத்திநிபாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனி மூலமாக உயிருக்கு ஞானம் ஏற்படும்.
ஆணவ மலத்தின் ஆற்றல், உயிரின், இச்சை, செயல்களை மறைக்க இயலாமல் நிற்கும் நிலையே மலபரிபாகம் எனப்படும். உயிரின் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நீங்கும் நிலை அடைதலே மலபரிபாகம்.
மலபரி பாகம் வருமளவிற் பன்னாள்
அலமருதல் கண்ணுற் றருளி - உலவா
(குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு).
(பொருள்: மலபரிபாகம் வரும்வரை, உயிர்கள், பலநாள் அலைப்புண்டு உழலும்)
மலபரிபாகத்தின் பயனாக, இன்பத்தின் பால் விருப்பும், துன்பத்தின் பால் வெறுப்பும் கொள்ளாது இவற்றைச் சமமாகப் பாவிக்கும் இருவினை ஒப்பு ஏற்படும். இந்த நிலை எய்திய பின், சத்திநிபாதம் (இறையருள் வீழ்ச்சி) உயிருக்கு நிகழும். சத்திநிபாதம், மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.
புண்ணியம், பசுபுண்ணியம், பதி புண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியமாகிய சிவ புண்ணியமே, சத்திநிபாதத்தின் பயன்.
சிவபெருமானை நினைந்து, அவரை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் அனைத்தும் பதி புண்ணியம். அவ்வாறில்லாமல் செய்யப்படும் நற்செயல்கள், பசு புண்ணியம் ஆகும். பசு புண்ணியத்தின் பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியம் அவ்வாறு அழிவதில்லை.
பிற உயிர்களுக்குச் செய்யும் நற்செயல்களை, இறையருளால் செய்வதாக நினைந்து செய்யும்போது அது பதிபுண்ணியம் ஆகி விடுகிறது.
இறையருள் கிடைப்பதற்கு உயிர்கள் செய்கிற முயற்சியே சமயநெறியாகும். சமய நெறிகள் நான்காக வகுக்கப்பட்டுள்ளன.
சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர்
(சிவஞான சித்தியார்)
சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாத(தாச) மார்க்கம் ஆகியவற்றை சரியை (உடலால் வழிபடுவது), கிரியை(உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது), யோகம் (உள்ளத்தால் வழிபடுவது), ஞானம் (எங்கும் இறையருட்கருணையையே காண்பது) என்றும் கூறுவர்.
தாதமார்க்கம் (சரியை): திருக்கோவிலுக்கும், அக்கோவிலில் உறைகின்ற இறையனாருக்கும், இறையடியார்களுக்கும் தொண்டு செய்வதே இந்த நெறி. இதன் மூலம், சாலோகம்(இறைவனுடைய உலகம்) செல்லுகின்ற பேறு கிட்டும்.
சற்புத்திர மார்க்கம்(கிரியை): இது இலிங்கத் திருமேனிக்கு, மந்திரம், கிரியை, பாவனை என்ற மூன்றினாலும் அகத்திலும் புறத்திலும் செய்து வழிபடுதல் ஆகும். இந்நிலையில் இறையனாருக்கு அபிடேகம் செய்தல் போன்ற வழிபாடுகளின் போது மந்திரம் கூறித் துதித்தல் வேண்டும். இவ்வழிபாடு, திருக்கோவிலில் இருக்கும் இலிங்கத் திருமேனிக்குச் செய்யப்படும் போது, பரார்த்தம் எனவும், ஞானாசிரியரிடமிருந்து பெற்ற இலிங்க வடிவத்திற்குச் செய்யப்படும்போது ஆன்மார்த்தம் எனவும் பெயர் பெறும். இதன் மூலமாக, சாமீபம் (இறைவனுக்கு அருகிலிருப்பது) எனும் பேறு கிட்டும்.
சகமார்க்கம் (யோகம்)
இது அட்டாங்க யோகத்தைக் குறிக்கும். அவை, இயமம்( தீய ஒழுக்கங்களை விலக்குதல்) நியமம்( நெறிமுறைகளைக் கடைபிடித்தல்), ஆதனம்(யோகாசனங்கள்), பிரணாயாமம் (பேச்சினை அடக்குதல், மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதல்), பிரத்தியாகாரம்(தான் நினைத்த பொருளின் வடிவாக மாற்றிக் கொள்ளுதல்) தாரணை(மனத்தை ஒருநிலைப்படுத்துதல்), தியானம் (இறைவனை ஒளி வடிவினனாக எண்ணுதல்), சமாதி (அந்நினைவில் தன்னை மறந்திருத்தல்) ஆகியவை ஆகும்.
இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே.
(திருமூலர், திருமந்திரம்)
இதன் மூலம், சாரூபம்(இறைவனின் உருவ அடையாளங்கள்) பெறலாம்.
சன்மார்க்கம் (ஞானம்): பசு, பதி, பாசம் என்னும் முப்பொருள்களைப் பற்றி தெளிவாக உணர்வதால் மும்மலம் நீங்கி ஞானம் கிடைக்கும்.
ஞானநூல் தனை ஓதல், ஓது வித்தல்,
நல்பொருளைக் கேட்பித்தல், தான்கேட்டல், நன்றா
ஈனம்இலாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவன்அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
(சிவஞான சித்தியார்)
திருமறையாகிய வேதம், 28 சிவாகமங்கள், புராணங்கள், சமயக்குரவர்களாகிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் முதலியோர் அருளிய தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகள் ஆகியவற்றை ஓதுதல், ஓதுவித்தல், சைவசித்தாந்தப் பொருள்களைத் தக்கவரிடத்து கேட்டல், கேட்பித்தல், இறைவனாரைச் சிந்தித்தல் ஆகிய ஐந்தும் சாயுஜ்ய நிலை (இறையருளை முழுமையாகப் பெறும் நிலை) தரும் ஞானமார்க்கமாம். இதில் சாயுஜ்ய நிலை 'பரமுத்தி' எனவும் ஏனைய மூன்றும் 'அபரமுத்தி' எனவும் கூறப்படுகின்றன.
சரியை நெறியில், இறைவனுக்கும் நமக்கும் உள்ள உளவு முறை, ஆண்டான் அடிமை போன்றதாகும். கிரியை நெறியில், தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு முறை போன்றதாகும். யோக நெறியில், இரு தோழர்களுக்கு இடையேயான உறவைப் போன்றது. ஞானநெறியில், குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவைப் போன்றதாகும்.
ஒரு நற்குருவை நாடி, மேற்கூறிய மார்க்கங்களைக் (ஞானம் தவிர்த்து) உணர்த்தும்படி வேண்டுதல் வேண்டும். அவ்வாறு உணர்த்துபவர் 'கிரியா குரு' ஆவார். ஞானத்தை சிவனார் ஒருவரே உணர்த்த வல்லவர் ஆதலின் அவரே ஞான குரு ஆவார்.
மேற்கூறிய மார்க்கங்களில், உள்ளன்போடு ஒழுகி வருபவர்கள் இந்தப் பிறப்பிலேயே முத்தியைப் பெற்றுவிட முடியும் என்று சைவசித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
கிரியாகுரு சரியை முதலியவற்றை, 'தீக்கை' (தீக்ஷை ,பாசத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தல்) அளித்து உணர்த்துவார்.
தீக்ஷை சபீசம்(ஓதியுணர்ந்த உத்தமர்களுக்குச் செய்வது), நிர்பீசம் (எழுபது வயதுக்கு மேற்பட்டோர், வியாதியாளர்கள், யோகத்தின் பால் ஈடுபாடுடையோர் முதலியோருக்குச் செய்யப்படுவது) என இருபெரும் வகைப்படும் அது சக்ஷுதீக்ஷை, ஸ்பரிசதீக்ஷை, வாசகதீக்ஷை, மானசதீக்ஷை, சாஸ்திரதீக்ஷையென அறுவகை முறைகளில் ஆசாரியரால் தரப்படும்.
தீக்ஷைகளில் சமய தீக்ஷை , விசேட தீக்ஷை, நிருவாண தீக்ஷை ஆகிய மூன்றும் முக்கியமானவையாகும்.
இதில் சமய தீக்ஷை, 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்தை விதிப்படி எண்ணும் முறையைக் கற்பிக்கிறது. இது சைவ சமயத்தில் நுழைவதற்குத் தரும் அனுமதிச் சீட்டுப் போன்றதாகும். விசேட தீக்ஷை, அன்றாடம் சிவபூசனையைச் செய்யும் நெறியைக் கைக்கொள்ளச் செய்கிறது. நிருவாண தீக்ஷை, பாசபந்தம் அனைத்தையும் நீக்கி, சிவனார் திருவடியை அடையச் செய்வதாகும். இது சிஷ்யனின் பக்குவமறிந்து செய்யப்படுவது.
சிவனார் தம் உடலில் சரிபாதியாக விளங்கும் உமாதேவியாரோடு, திருக்கயிலையில் வாசம் புரிகிறார். திருக்கோவில்களில் இலிங்க உருவில் பேரருள் புரிகிறார். சுயம்பு லிங்கங்கள் தோறும் மூர்த்திகரித்திருக்கிறார். அன்பே சிவமாகி, சிவமே அன்பாகி நின்று விளங்குகிறார்.
தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடும் எம்பிரானின் திருக்கூத்து, அவரது ஐந்தொழில்களுக்கு விளக்கமாக அமைகிறது. அவரது திருக்கரங்களில் இருக்கும் டமருகத்தில் ஒலி, ஸ்ருஷ்டி ஏற்படக் காரணமாக அமைகிறது, அபயக்கரம், ஸ்திதி எனும், காத்தல் தொழிலுக்கும், மற்றொரு கரத்திலிருக்கும் அக்னி, அழித்தல் தொழிலுக்கும், முயலகனின் மேல் ஊன்றியிருக்கும் வலது பாதம் மறைத்தல் தொழிலுக்கும், தூக்கிய திருவடி, முத்தியருளும் கருணைக்கும் விளக்கமாக அமைகிறது.
சைவத்தில் வீரசைவம், காஷ்மீர சைவம் முதலிய பிரிவுகள் பல உண்டு. 63 நாயன்மார்களும் சிவநெறியில் ஒழுகி பிறவாப் பெருநிலை அடைந்தனர்.
சைவசமயம் எந்நாளும் வாழ்வது. அதற்கு சோதனைகள் நேருவது போல் தோன்றுவதெல்லாம் எம்பெருமான், அதன் புகழை ஓங்குமாறு செய்வதற்காகச் செய்யும் திருவிளையாடலே.
சைவ சமயத்தைப் பற்றிய விவரணங்களை ஒரு கட்டுரையில் அடக்குதல் கடலினைக் குடுவைக்குள் அடக்க முயல்வது போன்றதாகும். இதில் உள்ள குற்றங்குறைகளை, படிக்கும் அன்பர்களும் சான்றோர் பெருமக்களும் பொறுத்தருளுவதோடு, மேலதிகத் தகவல்களைத் தந்து என்னை வழிநடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தென்னாடுடைய சிவனே போற்றி!!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4
சான்றோனாக்குதல் தந்தையின் கடன்
தேசத்தந்தை காந்தியும் தந்தை பெரியாரும் தீவிரமா விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
"ஐயா, நீங்க சுதந்திரம் வாங்கினவுடனே காங்கிரஸ கலைக்க சொன்னீங்க. நானும் திராவிட இயக்கம் அரசியல்ல, தேர்தல்ல ஈடுபடாம மக்களுக்கு உழைக்கும் இயக்கமாக மட்டுமே இருக்கணும்னு சொன்னேன். நீங்க சொன்னதையும் யாரும் கேக்கல, நான் சொன்னதையும் கேக்காம திராவிட முன்னேற்றக் கழகம்னு பிரிஞ்சி போயி இந்த கூத்தாடிங்க மக்களைப் பாடாப் படுத்திக்கிட்டு இருக்காங்க" என்றார் பெரியார்.
பொறுமையாக கடலை சாப்பிட்டுக்கொண்டு பொக்கை வாய் திறந்து சிரித்தார் தேசத்தந்தை. "சரி, விடுங்க நாயக்கரே, நம்மால இப்ப என்ன செய்யமுடியும் சொல்லுங்க? இந்தாங்க கொஞ்சம் கடலை சாப்பிடுங்க" என்று கடலையை பெரியாரிடம் நீட்டுகிறார்.
"வேணாங்க ஐயா, நீங்களே வச்சிக்கிடுங்க. பார்க்கிறவங்க இந்த வயசிலையும் கடலை போடுறேன்னு கன்னா பின்னான்னு குறை சொல்லுவாங்க, வெங்காயம்" என்கிறார் பெரியார்.
அருகில் இருந்த மணியம்மையும் காந்தியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அப்பொழுது உற்சாகமாக பாடியவாறே வருகிறார் பாரதியார்.
"வாங்க தம்பி வாங்க, எங்க இந்தப் பக்கம்?" என்று முகம்மலர்கிறார் பெரியார்.
"தந்தையர்தின வாழ்த்துகளைச் சொல்லவந்தேன் தேசத்தந்தையே, தந்தை பெரியாரே உங்களை வணங்குகிறேன்", என்று பணிவாக வணங்கி சொல்கிறார் பாரதி.
அவர்கையில் கொஞ்சம் கடலையைக் கொடுத்துவிட்டு, பாரதியின் தோளைத் தட்டி, "நீங்களும் கொஞ்ச நாள் அதிகம் வாழ்ந்திருந்தால் உங்களையும் ஏதாவது ஒரு தந்தை என்று மக்கள் சொல்லியிருப்பார்கள் பாரதி" என்று சிரிக்கிறார் காந்தி.
"இல்லை, என்னையும் சில இலக்கியவாதிகள் "சிந்துக்குத் தந்தை" என்று என் பாடல்களின் சொல்நயத்தில் மகிழ்ந்து பாராட்டியதுண்டு.
"பைந்த மிழ்த்தேர்ப் பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்!..."
என்று பாரதிதாசன் பாராட்டியது நினைவிற்கு வருகிறது."
"சரி போகிறது...அப்படியே எனக்கு தந்தை பட்டம் இல்லாதிருந்தாலும் என்ன குறைந்துவிடும் என்கிறீர்கள் ஐயா? எப்படியும் நாம் சொல்லும் நல்ல அறிவுரைகளை கேட்கப் போவதில்லை என்று மக்கள் முடிவு எடுத்துவிடுகிறார்கள். "தந்தை" என்று பட்டம் கொடுத்தால், சூசகமாக நீங்கள் சொல்வதை நாங்கள் ஒருபொழுதும் கேட்கவே போவதில்லை என்று சொல்லும் மறைமுக அறிக்கைதானே அது. "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்று சொன்னாலும், அப்பா பேச்சுக்கு மரியாதை கொடுத்து கேட்டு நடப்பவர்கள் இந்த உலகத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?" என்கிறார் பாரதி ஆதங்கத்துடன்.
"தம்பி என்னமா யோசிக்கிறீங்க?" என்று ஆச்சரியத்துடன் பாராட்டுகிறார் பெரியார்.
"தம்பி, நீங்க கொஞ்சநாள் அதிகமா வாழ்ந்திருந்தா சுயமரியாதை இயக்கத்திற்கு நிறைய பாடல்கள் எழுதியிருப்பீர்கள், 38 வயசெல்லாம் போகிற வயசா என்ன? நீங்க உயிரோட இருந்திருந்தா இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்து எவ்வளவோ சாதித்திருக்கலாம். நீங்கள் மறைந்து 20 ஆண்டுகள் கழித்து நான் திராவிட இயக்கம் ஆரம்பித்த பொழுது இந்நேரம் தம்பி இருந்தால் சுயமரியாதை இயக்கத்தைப் போற்றி எழுச்சியுடன்எத்தனை பாடல்கள் பாடியிருப்பார் என நினைத்தேன்."
"சமீபத்தில் உங்களைப் பற்றிய படம் ஒன்று பார்த்தேன். நம்ம பேராண்டி இளையராஜா இசையில உங்களுடைய ..
..
"கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வினில் தாழ்வென்றும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரு தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால்
வையம் பேதைமை யற்றிடுங் காணீர்."
[ காணொளி: http://youtu.be/ScA2TJ-IUkU ]
பாட்டைக் கேட்டு கண்ணு கலங்கிடுச்சுங்க தம்பி. நாம தலை தலையா அடிச்சிக்கிட்டு சொன்னதையே இந்த தம்பியும் சொல்லியிருக்காரு. இப்படி அற்ப ஆயுசில போயிட்டாருன்னு ரொம்ப வருத்தமாயிடிச்சி. அப்புறம் மணியம்மை சமாதானப் படுத்தினாங்க" என்றார் பெரியார்.
"என்ன செய்யிறதுங்க ஐயா?
"நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ !
சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமைதாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ"
என்று சக்தியிடம் புலம்பிப் பாடினேன். சக்தி என்மேல் இரக்கப்பட்டு நிலச்சுமை என வருந்தாதே என்று அழைத்து கொண்டு விட்டார்கள்" என்று ஆறுதலாக சொல்கிறார் பாரதி.
தொடர்ந்து "நானும் உங்களைப்பற்றி வந்த திரைப்படம் பார்த்த பின்பு வருத்தப்பட்டேன் ஐயா. எவ்வளவு படித்து படித்து சொல்லிவிட்டு சென்றீர்கள். ஒரு திரைப்படம் எடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்களே. சொன்னதை நடைமுறைப்படுத்துவதில் தவறி விடுகிறார்கள் நம் மக்கள் என்பது வேதனைதான்" என்றார் பாரதி.
"உங்கள் இருவருக்குமாவது பரவாயில்லை, என் படத்தை ரூபாயில் போட்டதுடன் மறந்துவிட்டார்கள். என்ன ஒரு தலைவலி கொடுத்தேன், எத்தனை விரட்டி அடித்தேன். என்னை அத்தனை திட்டு திட்டினாலும் கடைசியில் என்னை மதித்தும் என் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தவன் அந்த வெள்ளைக்காரன்தான்" என்றார் காந்தி.
பிறகு, "சரி பாரதி, நம் மக்கள் ஜாதிய விட்டொழிக்கிறதா தெரியலையே, இதுக்கு ஏதாவது ஒரு வழி தோன்றுகிறதா உங்களுக்கு?" என்று ஆவலுடன் கேட்டார் காந்தி.
"இல்லாமலா? ஆனால் அதை சொன்னாலும் யாரும் கேட்கப்போவதில்லை என்று வெறுப்பாக இருக்கிறது" மீசை துடிக்க கோபத்துடன் முழங்கினார் பாரதி.
"பரவாயில்லை, சொல்லுங்க தம்பி, ஜாதியை எப்படி ஒழிக்கலாம்?" என்று நிமிர்ந்து உட்கார்ந்து, புதிதாக பிறந்த உற்சாகத்துடன் தாடியை நீவிக்கொண்டு ஆர்வத்துடன் கேட்டார் பெரியார்.
"ஐயா, இதற்கு முதலில் கலப்பு மணத்தை ஆதரிக்கவேண்டும். அத்துடன் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதை மேம்படுத்தவேண்டும்."
"இன்னும் கொஞ்சம் புரியற மாதிரி விளக்கமா உங்க திட்டத்த சொல்லுங்க"
"ஐயா, கலப்பு மணம் செய்பவர்களையும், இந்த கலப்பு மணத்தில் பிறந்த குழந்தைகளையும் ஒரு புதிய வகைப் பிரிவில் சேர்த்து அவர்களுக்கு சிறப்புச் சலுகை தரவேண்டும். மீண்டும் தந்தையின் ஜாதியோ அல்லது தாயின் ஜாதியோ, அல்லது எந்த ஜாதிக்கு அதிக சலுகை என்று முடிவு செய்து அந்த ஜாதிப் பெயரைத் தேர்ந்தெடுக்கவோ விடக்கூடாது. கலப்பு மணத்தில்... ஜாதியோ, மதமோ, இனமோ... எந்தக் கலப்பாக இருந்தாலும், கலப்பு மணம் செய்பவர்களையும் அதில் பிறந்தவர்களையும் "சான்றோர்" எனக் குறிப்பிட்டு அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்றோர்களுக்கே அரசு சலுகை கொடுப்பதில் முன்னுரிமை என அறிவிக்க வேண்டும். அதனால் சான்றோர் என்றால் "நற்பண்புகள் உள்ளவர்" என்ற பொருளைக் குறிப்பதற்கு சமத்துவ எண்ணமே அடிப்படையானது என்பதையும் உணர்த்தலாம்."
"இவ்வாறு செய்தோமானால் சான்றோர் எனக் குறிப்பிடப்படாதவர்களுக்கு, தாங்கள் சான்றோர்கள் இல்லை என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக நினைத்து அவமானம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. ஆனால் சலுகை கிடைக்கும் என்றால் நம் மக்கள் சான்றோராக மாற முயற்சிப்பார்கள். அப்படியும் கண்டு கொள்ளாமல் கலப்புமணத்தை ஆதரிக்காத பெற்றோர்களையும், தங்கள் ஜாதியில் வரன் பார்க்கும் பெற்றோர்களையும் அவர்கள் பிள்ளைகள் "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடன்" என சுட்டிக்காட்டி இடித்துரைப்பார்கள்.
" ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்."
என்பார்களே ஏன் உங்களுக்கு அந்த விருப்பம் இல்லை என்று அன்னையிடம் வாதிடுவார்கள். எதையும் தனக்கு சாதகமாக உபயோகிக்க இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குத் தெரியும். நாங்கள் சான்றோர்கள் ஆவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா? என்று போர்முழக்கம் இடுவார்கள். வளர்ப்பதில் குறை வைத்த குற்றவாளிகள், பிள்ளைகளிடம் அன்பில்லாதவர்கள், அவர்களது நல்வாழ்வில் அக்கறை இல்லாதவர்கள் என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்க எந்தப் பெற்றோர்களும் விரும்ப மாட்டார்கள்."
"பிறகென்ன, காலப்போக்கில் நிறைய சான்றோர்கள் உருவாகுவார்கள். சான்றோரும் சான்றோரும் இணைந்து தமிழகம் எங்கும் சான்றோர்களே நிறைந்திருப்பார்கள். பின்பு தமிழகத்தைப் பார்த்து வியந்து மற்றவர்களும் பின்பற்ற இந்தியா முழுவதும் ஜாதி, மத, இன பேதங்களே இல்லாத இந்தியாவாக மாறக்கூடும்"
"அருமையான யோசனை பாரதி" எனக் கைதட்டிப் பாராட்டுகிறார் காந்தி.
"தம்பி, நம்ம மக்கள சான்றோராக்கிறது அவ்வளவு சுலபமில்ல, எப்படியோ இப்படி ஒரு குறுக்கு வழியில் அவங்கள சான்றோராக்க முயற்சி செய்யலாம்னு சொல்றீங்க" என்று குலுங்கி குலுங்கி உரத்த குரலில் சிரிக்கிறார் பெரியார். "தம்பி, இதை நடைமுறைப்படுத்த முடியும், மக்கள் ஒத்துழைப்பார்கள் என நினைக்கிறீர்களா?" என்றார் சந்தேகத்துடன் கேட்டார் பெரியார்.
"ஆமாம், பாரதி எனக்கும் அதைப்பற்றி யோசனையாக இருக்கிறது" என்று ஆழ்ந்த சிந்தனையுடன் காந்தி சொன்னார்.
"ஐயா, எனக்கு இளைய சமுதாயத்திடம் என்றும் நம்பிக்கை உண்டு. உங்களைப் பின்பற்றிய அந்தக்கால இளைய பாரதத்தினர் இந்தியா சுதந்திரம் அடைவதில் பெரும்பங்கு வகிக்கவில்லையா? இன்றைய இளைய சமுதாயத்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" என்று சொல்லியவாறு எழுந்த பாரதி,
"இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா பலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதயஞாயிறு ஒப்பவே வா வா வா"
என்று பாடியவாறு கையசைத்து விடைபெற்ற வண்ணம் வீறு நடை போட்டுக் கிளம்பினார்.
தந்தைகுலத்திற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்!
காணொளி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
தோழருக்கு வாழ்த்துக்கள்
ஆக்கம்: தனுசு
என்
வகுப்பறை தோழர்.
அவர் பெயர் கிருஷ்ணர்-இன்று சொல்லி
அடித்தார் ஒரு நூறு-இனி
சொல்லாமல் படைப்பார் பல நூறு!
எழுத்தில்
எளிமை என்பது
இவரின் நோக்கம்-அந்த எளிமையை
நானும் எடுத்தாள உண்டாக்கினார்
என்னிடம் பெரும் தாக்கம்.
இவர் படைப்பில்
தாயின் பாசத்துக்கு சுசிலா!
தாய் மண்ணின் பாசத்துக்கு தஞ்சை!
தன் எளிமைக்கு புளியோதரை!-பாருங்கள்
இந்த
சமூகவாதியின் படைப்பிலக்கண தெரிவுமுறை.
என் பாட்டி சொன்னதோ
வடை சுட்ட கதை!- இவர் பாட்டி
புகைவண்டியில் புகட்டியதோ
மாணவருக்கு தர்மத்தை!
ரசனையான எழுத்தில்
ரஜினிகாந்தின் வேகம்!
இன்னும் எழுதுவதில்
வயதை மறந்த
கஜினிமுஹம்மதுவின் தாகம்!
வகுப்பறையில்
இவரின் ஆக்கம்-அது ஒரு
தமிழின் துணைப்பாட பகுதி!
இதைவிட வேறென்ன வேண்டும்
இவரின் படைப்புக்கு தகுதி!
பாலகன் கிருஷ்ணன்
திருடியது வெண்ணை-இந்த
வயோதிக கிருஷ்ணன்
திருடியது அவரின் எழுத்தால் என்னை.!
ரசிப்புக்கு
சிரிப்புக்கு
சிந்தனைக்கு
போதனைக்கு
நீதிக்கு
பக்திக்கு-என நமக்கு படைத்தார்
பல விருந்து!
நாமும் அளிப்போம்
"செந்தமிழ் செல்வர்" எனும்
கௌரவ விருது.!
ஆயிரம் பழமொழிக்கு
அர்த்தம் சொன்னார்.
"உன்னைச்சொல்ல
உன் நண்பனை காட்டு"-இந்த
பழமொழிக்கு
தன்னையே தந்தார்.
வகுப்பறை சுப்பையா
தஞ்சை கோபாலைய்யா
இவருக்கு தோஸ்த்தையா!
அப்படியெனில்
இவரைப்பற்றி சொல்ல வேண்டுமாய்யா?
இந்த
செம்பிறை சீடருக்கு
பால்குடியில்
வந்தது தொண்டாற்றும் எண்ணம்.
அது
லால்குடியில் கோலோச்சுது இன்னும்.
எழுத்துக்கும் ஏழைக்கும்
இவரின்
தொண்டுகள் மேலும் சிறக்க
வகுப்பறை சார்பாய்
இந்த
பூச் செண்டுகள் தருகிறோம்
வாழ்க! வளர்க!!.
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6
சக்திகொடு!
ஆக்கம்: தனுசு
(சென்ற வாரத்தில் "வரிகள்" பற்றிய ஒரு பதிவு வெளியிட்ட போது அதற்கு தேமொழி அவர்கள் "சக்திகொடு சக்திகொடு சக்திகொடு......."என்று ஒரு பின்னூட்டமிட்டார். அந்த சக்திகொடு எனும் வார்தை உண்டாக்கிய கவிதை இது.)
சக்தியே
எனக்கொரு சக்திகொடு
பாராளும் சக்தியே
எனக்கொரு சக்திகொடு.
சுற்றும் பூமி நின்றுபோக
கடலின் நீரும் வற்றிப்போக
தீயும் தீர்ந்து சாம்பலாய் போக
நான்
யாகம் செய்ய சக்தி கேட்கவில்லை!
நானிலம் ஆளும் நாயகி!
இந்த
மா நிலம் மக்கிடவேண்டுமா?
கூனிக்குறுக வேண்டியதெல்லாம்
கோபுரம் ஏறி ளர்ந்திடலாமா?
அரிதாரம் முதல் அவதாரம் வரை
அத்தனையும் இங்கு வேஷம்!
அதை புரியாமல்
போடுது ஒரு கூட்டம் தினந்தோரும் கோஷம்!
பக்தியில் முக்திக்கு
சம்போ சிவ சம்போ!
பத்திக்கும் காமத்தீயில்
அத்தனையும் இங்கு அம்போ!
ராத்திரி ரகசியம் மட்டும்
இங்கு
சாஸ்திரம் பார்ப்பதில்லை-அந்த
ரம்மி ஆட்டத்தில் ராஜா ராணி
தட்சனை ஏதும் கேட்பதில்லை!
பாலாறு என்றொரு நைல் ஆறு!
அதனை
பங்கு வைக்கும் நாடுகளோ ஆறு!
இங்கு இருப்பதோ அதுபோல பல ஆறு-பாவம்
அதனாலே பலநூறு தகறாரு!
பட்டம் முதல் பட்டயம் வரை
கொள்ளை போகுது காசில்!
விட்டகுறை தொட்டகுறையாக
சட்டமும் படுக்குது பாயில்!
பத்திரம் முதல் பக்தர்வரை
யாதும் போலி!
தொண்டன் முதல் தலைவன் வரை
மேயும் வேலி!
உழைத்து பிழைக்க மறுக்கும் ஜனம்!
அவரின்
கண்ணில் தெரிவதெல்லாம் பணம்!
நெஞ்சில் நிறைவது
சுயநலம் என்ற குணம்!
எங்கெங்கு கானினும்
பிழையான பிழைப்பு
சரிசெய்ய நானிங்கு
யாருக்கு வைப்பது அழைப்பு!
என்னோடு கூட்டமில்லை
கொடி பிடிக்க யாருமில்லை!
நான்
கொண்டாடும் கொள்கையை
என் குடிசையிலும் ஆதரிப்பாரில்லை!
உள்ளம் பொறுக்கவில்லை-இங்கு
தஞ்சம் அநீதியின் எல்லை!
யாரின் நெஞ்சிலும் நீதியில்லை
நெடும் ஆட்டத்திற்கும் அளவில்லை
ஆடுகின்ற ஆட்டத்தை
ஆடும்வரை ஆடவிட்டு-அவர்
அடங்கும் முன்
வந்ததற்கு வரவு வைக்க
மிச்சம் உள்ள மனித நேயம்
புரியவைக்க சக்திகொடு.
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை
அனுப்பியவர். ஜி.ஆனந்தமுருகன்
DEFINITIONS
Sent by G AnanthamuruganSchool:A place where Papa pays and Son plays.
Life Insurance: A contract that keeps you poor all your life so that you can die Rich.
Nurse:A person who wakes u up to give you sleeping pills.
Marriage: It's an agreement in which a man loses his bachelor degree and a woman gains her masters..
Tears:The hydraulic force by which masculine willpower is defeated by feminine waterpower.
Lecture: An art of transferring information from the notes of the Lecturer to the notes of the students without passing through "the minds of either"
Conference: The confusion of one man multiplied by the number present.
Compromise: The art of dividing a cake in such a way that everybody believes he got the biggest piece.
Dictionary: A place where success comes before work.
Conference Room: A place where everybody talks, nobody listens and everybody disagrees later on.
Father: A banker provided by nature.
Boss:Someone who is early when you are late and late when you are early.
Politician: One who shakes your hand before elections and your Confidence after.
Doctor: A person who kills your ills by pills, and kills you by bills.
Smile:A curve that can set a lot of things straight.
Yawn:The only time some married men ever get to open their mouth.
Etc.: A sign to make others believe that you know more than you actually do.
Committee: Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together.
Experience: The name men give to their mistakes.
---------------------------------------------
School:A place where Papa pays and Son plays.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8
நகைச்சுவை
ஆக்கம்: எஸ்.சபரி நாராயணன், சென்னை
புதிதாகச் சேர்ந்த மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு மிகவும் கஷ்டமான இயற்பியல் பாடம் ஒன்றை பேராசிரியர் ஒருவர் நடத்தத் துவங்கினார்.
இரண்டாம் நாள் பாடம் அதிக சிரமமாக இருந்தது.
ஒரு மாணவன் முரட்டுத்தனத்துடன் குறுக்கிட்டுக் கேட்டான்:
”இந்தக் கருமத்தைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?”
பேராசிரியர் அமைதியாகச் சொன்னார்,” பலருடைய வாழ்க்கையை இது காப்பாற்றும்!”
சில நிமிடங்களுக்குப் பிறகு அதே மாணவன் எழுந்து கேட்டான்,” இயற்பியல் எப்படி வாழ்க்கையைக் காப்பாற்றும்?”
”உன்னைப் போன்ற முட்டாள்கள் மருத்துவத்தில் பட்டம் பெறுவதை இது தடுத்து நிறுத்தும்!”
"It keeps idiots like you from graduating,"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

2
கண்ணை நம்பாதே!
ஆக்கம்: சதன்ராஜ் (திருநெல்வேலி)
வகுப்பறை மாணவர் ( பதிவிற்குப் புது முகம்)தொழில்: Used Cars Seller
------------------------------------
சில வாரங்களுக்கு முன்பு மாணவர் மலரில் சகோதரி தேமொழி அவர்கள் கவிஞர் மருதகாசியின் பாடல்களைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் முதன்மையாக கண்ணை நம்பாதே என்ற பாடலும் இருந்தது. அதைப்பற்றி எனக்கு தெரிந்த ஒரு விளக்கத்தை எழுதவேண்டும் என நினைத்து அதை இப்போதுதான் எழுதமுடிந்தது.(அவ்வளவு சோம்பேறி நான்)
என் இளம்பிராயத்தில் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஒரு சந்தேகம் மனதில் வரும் நம் கண் நன்றாகத்தானே இருக்கிறது அது எப்படி நம்மை ஏமாற்றமுடியும்?
நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளையோ, மனிதரையோ ,உள்ளது உள்ளபடிதானே காட்டுகிறது. ஊரில், கண் அளக்காததையா கை அளந்துவிடும் எனஒரு சொலவடை கூடஉண்டு .எனவே இந்தபாடலில் தவறு உள்ளது என நினப்பதுண்டு. ஆனால் பிற்காலத்தில் வாழ்க்கையில் கிரகங்கள் ஆடிய சதிராட்டத்தில்,பாடலில் தவறு இல்லை,நம் கண்ணில்தான் தவறு உள்ளது என பட்டுணர்ந்தபின்னே புரிந்தது. எப்படி?
கீழே கொடுத்துள்ள
இரு விதமான அம்புகுறியிட்ட படத்தை பாருங்கள்.அதில் அம்புகுறிக்குள் இருக்கும் இரு நேர்கோடுகளை
பாருங்கள்.
நம்
கண் எப்படி நமக்கு காட்டுகிறது? ஒன்று சிறியதாகவும்,மற்றது பெரியதாகவும் காட்டுகிறதல்லவா?
உண்மையில் இரண்டும் சம கோடுகளே.எனக்கு ஸ்கிரீனில் அளவுகோலை கொண்டுவரும் வித்தை தெரியவில்லை.எனவே
ஒருபேப்பரில் இரு சமகோடுகள் வரைந்து மேலும்,கீழும் அம்புகுறியிட் டு பாருங்கள் வேறுபாடகத்தான் நம்கண்கள் நமக்கு காட்டும்.
ஏன் மேலும்,கீழும் அம்புகுறிகளை போட்டாய் அதனால்தானே
என் கண்கள் வித்தியாசமாக காட்டியது என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.ஆம் நண்பர்களே
அதில்தான் நாம்படிக்கவேண்டிய வாழ்க்கைப்பாடம் உள்ளது.
மேல்நோக்கிய
அம்புகுறிகள் நாம் தினமும் வாழ்க்கையில் பார்க்கும் மனிதர்களின்,பொருட்களின் உயர்வான
புறத்தோற்றம்.இந்த புறதோற்றத்தை கொண்டு,நல்லவன், நல்லது என நம்பி எத்தனைமுறை ஏமாற்றப்பட்டிருக்கிறோம்.
அதுபோல் கீழான அம்புகுறிகளைப்போல் நல்ல புறத்தோற்றம் இல்லாத மனிதர்களின் அன்பு,நட்பை
இழந்திருப்போம். இப்போது சொல்லுங்கள் நம்கண்கள் நம்மை ஏமாற்றுகிறதா? இல்லையா?
சரி, இதைப்பற்றி
அறிவியல்(மருத்துவம்) என்ன சொல்கிறது? அது அப்படித்தான்.எல்லோருடைய கண்களும் குறைபாடு
உடையதே என.(என் சிற்றரிவுக்கு தெரிந்தவரை கூரியிருக்கிறேன் மருத்துவம் தெரிந்தவர்கள்
மேலும் விளக்கம் தரலாம்)
சரி, இதைப்பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது?
நமது ஆன்மாவானது
மனம் என்ற மாயையின் பிடிக்குள் உள்ளது.இந்த மாயமனதின் கட்டுப்பாட்டில் ஐம்புலன்களும்
உள்ளன. கண் என்னும் புலன்வழியாக தெரியும் தோற்றத்தை மனமானது தன் நுட்பமான கபடத்தால்
உண்மையை தெரியவிடாமல் சிறிது ஏற்றதாழ்வுடன் நம் அறிவை நம்பவைக்கிறது. நாம் ஏதாவது ஒரு
மார்க்கம் மூலமாக (பக்திமார்க்கம்,தியானமார்க்கம்,இன்னபிற) தீவிர பயிற்சி மேற்கொண்டு, இந்த
மனதைகடந்து ஆன்மாவை தரிசித்து,ஆன்மாவின் கட்டுப்பாட்டில் புலன்களை வைத்து,அப்போது பார்த்தால்
இந்த உலகிலுள்ள அனைத்தின் உண்மை சொரூபம் தெரியவரும்.ஏன்,வானத்தில் உள்ள கோள்களே நம்
கண்களுக்கு தெரியும்.(இதுவும் என் சிற்றரிவுக்கு தெரிந்தவரை கூரியிருக்கிறேன்.ஆன்மீகம்
தொடர்பான சிறப்பான கட்டுரைகள் எழுதும் சகோதரி பார்வதிஅவர்கள்.போன்றோர் இன்னும் விளக்கம் தரலாம்).
நன்றி வணக்கத்துடன்
சதன்ராஜ்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
சைவமும் தமிழும்
ஆக்கம்: பார்வதி ராமச்சந்திரன்
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.
(திருமிகு கச்சியப்ப சிவாச்சாரியார், கந்தபுராணம்)
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.
(திருமூலர், திருமந்திரம்)
பார்க்குமிடந்தோறும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமனாம் சிவபெருமானை ஆதியும் அந்தமும் நடுவுமாய்த் தொழும் சைவ சமயத்தைப் பற்றி, நானறிந்த வரையில் இக்கட்டுரையில் சொல்லப் புகுகின்றேன்.
மானிட வாழ்வை நல்வழிப்படுத்தி, அந்த உயிரைப் பரிபக்குவ நிலைக்கு இட்டுச் செல்வதே சமயம் ஆகும் இந்து சமயம் என்பது சைவ சமயமே என்பது சைவ சித்தாந்த வழி நடப்போரின் துணிபு. உலகளாவியது இச்சமயம். . சிவனாரை முதன்மைப் படுத்தி வணங்குவதால், 'சிவசம்பந்தம்' பெற்றது என்னும் பொருளில் சைவம் என்று போற்றப்படும் இந்தச் சமயம் அநாதியானது. அதாவது தொடங்கிய காலம் அறிய இயலாதது. சைவசித்தாந்தம் என்னும் மிகவுயர்ந்த உன்னத நெறி, சைவ சமயத்தின் உயிர்நாடி எனப் போற்றப் படுகின்றது.வேதத்தின் முடிவை வேதாந்தம் என்பது போல் (அந்தம்= முடிவு). சித்தம், அதாவது, மனம்/அறிவின் எல்லையை சித்தாந்தமாகக் கொள்ளலாம்.
சிவனாரை முழுமுதற் கடவுளாக உணர்ந்து வழிபடுவோரே சைவர். இறைவன், அனைத்தையும் தாமே அறியும் பேரறிவு உடையவன். அவர் ஒருவரே பதி. இறைவன் எண்குணத்தான். எண்குணமாவன, தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை , முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவையாம்.
சைவ சித்தாந்தத்தின் படி, உயிர்கள் அநாதியானவை. அவை அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையன. இறைவனானவர் அவற்றைப் படைப்பதில்லை. இறைவன் கருணை வடிவானவர். நாம் படைக்கப்பட்டதாலேயே, இவ்வுலகில் துயருறுகிறோம். அவ்வாறிருக்க, அவர் நம்மைப்படைத்து, துன்பத்தில் உழலவிட்டார் எனில் அவர் எங்ஙனம் கருணைக்கடலாயிருத்தல் சாத்தியம்?. ஆகவே ஆன்மாக்களை இறைவன் படைக்கவில்லை.
ஆனால் அவற்றின் மும்மலங்களை நீக்கும் பொருட்டு, தநு, கரண, புவன போகங்களைப் படைத்தல், படைத்தவற்றைக் காத்தல், மீண்டும் அவற்றை ஊழிக்காலத்தில் ஒடுக்குதல், ஆன்மாக்களை இருவினைப் பயன்களில் அமிழ்த்துதல், வீடுபேறாகிய முத்தியின்பத்தை அருளல் ஆகிய ஐந்தொழில்களைப் புரிகிறார்.
ஒருவனு மேஉலகு ஏழும் படைத்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் அளித்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் துடைத்தான்
ஒருவனு மேஉலகு ஓடுஉயிர் தானே.
(திருமூலர், திருமந்திரம்)
தநு, கரணம், புவனம் போகம் ஆகியவற்றின் பொருள், முறையே, தநு= உடல், கரணம்=புறக்கரணம் மட்டுமின்றி அகக்கரணம்(மனம், புத்தி) முதலியன, புவனம்= வினையை அறுவடை செய்யும் களமாக உள்ள இந்த உலகம்,
போகம்= அனுபவிக்கப்படும் பொருள்.
சிவனார், ஆன்மாவுடன் ஒன்றியும் அதனிலிருந்து வேறுபட்டும், ஆன்மாவின் உடனாகவும் இருக்கிறார். இதுவே சைவசித்தாந்தம் காட்டும் அத்துவிதம் (இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு) ஆகும்.
“அவையே தானேயாய், இருவினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கமின்றி நிற்கும் அன்றே”
(சிவஞானபோதம்)
சைவ சித்தாந்தம், பசு,பதி, பாசம் என்னும் மூன்று பெரும் அடிப்படைக் கோட்பாடுகளை உள்ளடக்கியது.
பசு= ஆன்மா
பதி= இறைவன்
பாசம்= ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள். திரோதானம், மாமாயை ஆகியவற்றைச் சேர்த்து ஐவகை மலங்களாகக் கொள்வதும் உண்டு.
ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.
(திருமந்திரம்-எட்டாம் தந்திரம்)
அரிசியை, தவிடு, உமி, முளை இம்மூன்றும் சூழ்ந்திருப்பதைப் போல் மனித ஆன்மாவைஆணவம், கன்மம், மாயையாகிய முக்குற்றங்களும், சூழ்ந்திருக்கின்றன என்கிறார் திருமூலர்.
ஆணவம்: நான், என்னுடையது எனும் கருத்தே ஆணவமாகும். இது சகஜ மலம் என்று கூறப்படுகிறது ஆணவமலம், பிறக்கும் போதே, ஆன்மாவோடு சேர்ந்து இருக்கிறது. இதன் காரணமாகவே, ஆன்மா உடலெடுத்து, எங்கும் சென்று, எதையும் செய்ய இயலும்.
நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ண லடிசேர் உபாயம தாகுமே.
(திருமூலர், திருமந்திரம்)
உயிர்கள் பிறவா நிலை அடைய வேண்டும் எனும் பேரருள் காரணமாக மாயை, கன்மம் என்னும் இரு மலங்களை இறைவனார் சேர்ப்பிக்கிறார். இந்தக் கன்மம் மூலகன்மம் எனப்படும். மூலகன்மத்தின் காரணமாக உயிர்கள் வினை செய்கின்றன. வினையின் பயனை இறைவர் தருகிறார். சிந்திக்கும் திறன் இல்லாத உயிரிகளிடத்தும் இது உண்டு கன்மமும் மாயையும் ஆகந்துக மலம் (இடையில் சேர்க்கப்பட்டது) எனப்படுகிறது.
கன்மம் என்பது, ஆன்மாக்கள் பிறவியெடுத்துச் செய்த புண்ணிய பாவங்கள்(நல்வினை, தீவினையாகிய இரு வினைகள்). நல்வினை, தீவினைக்கேற்ப பலனளிப்பவர் இறைவனே.
உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே.
(நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர்பெருமான் தேவாரம்).
ஒவ்வொரு பிறவியிலும் இவ்வாறு சேர்ந்த கன்மங்கள் சஞ்சிதம் எனப் பெயர் பெறும். இந்த சஞ்சித கன்மங்கள், இன்ப துன்பங்களைத் தந்து பயன்படும்பொழுது பிராரத்தம் எனப் பெயர் பெறும். மனம், வாக்கு, காயம் இவற்றால், எடுத்த பிறவியில் செய்த இருவினைகள் ஆகாமியம் எனப் பெயர் பெறும். மூலகன்மம் நுண்வினை. மற்ற மூன்று வினைகளும் பருவினை எனப்படுகிறது.
ஒரு விதையில் மரமும், மரத்தில் விதையும் தொடர்ந்து வருவது போல், கன்மம், ஆன்மாக்களைத் தொடரும்.
உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின்
விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும்
தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின்
இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல்.
(அருணந்தி சிவாச்சாரியார், சிவஞான சித்தியார் )
செய்திடும் கன்ம மெல்லாம் செய்தவர் தம்மைப் பற்றி
எய்திடு மென்னில் இங்கே மாய்ந்திடும் ஏய்வ தெங்ஙன்
மெய்தரு தூலங் கெட்டுச் சூக்கமாய் மேவு மென்னில்
ஐயனே தீபம் போனால் அதனொளி யாவ துண்டோ.
(சிவஞான சித்தியார்)
(பொருள்: “முற்பிறவியில் செய்யும் வினையெல்லாம், இப்பிறப்பிலேயே பயன் தருமென்றால், இப்பிறவி வினையெல்லாம், இப்பிறவியோடே கெடும். பிற்பிறப்புக்கு அவை சேருவது எவ்விதம்? இந்தத் தூலவுடல் கெட்டு, சூக்குமமாய்ப் பொருந்து முறை எப்படியென்னில், தீபத்தில் ஒளி, திரியை விட்டு நீங்கி வேறு இடத்தில் ஒளிரும் என்று கூறுதல் போலவாம்.”)
மனித ஆன்மாவுக்கு உயிருள்ள,மற்றும் உயிரற்ற பொருட்களினிடையே ஏற்படுகின்ற சம்பந்தங்கள், பாதிப்புகள் இவைதான் மாயை எனப்படுகிறது.
அஞ்ஞா னம்பொய் அயர்வே மோகம்
பைசால சூநியம் மாச்சரி யம்பய
மாவேழ் குணமும் மாயைக் கருளினை
இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவலென் றெடுத்த
(இருபா இருபஃது, அருணந்தி சிவாச்சாரியார்)
சிவபெருமான், மாயையைக் கொண்டே, நாம் காணும், இவ்வுலகையும் அதில் உள்ள பொருள்களையும் படைக்கிறார். மாயை உயிர்களுக்குப் எதிரானதென்றாலும், ஆணவத்தினால் மறைக்கப்பட்டுள்ள அறிவை வெளிப்படுத்த உதவுவதும் மாயையே. மாயை, சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என மூவகைப்படும். மூன்று மாயைகளிலும் சேர்த்து 36 தத்துவங்கள் தோன்றுகின்றன். இவற்றின் அடிப்படையில்தான் உலகத்துப் பொருள்கள் தோற்றமாகின்றன.
மும்மலங்களின் அடிப்படையில் சீவர்கள் மூவகைப்படுவர். ஆணவமலம் மட்டும் உடையவர், விஞ்ஞானகலர். ஆணவம், கன்மம் என்ற இருமலமுடையோர் பிரளயாகலர். ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலமுடையோர் சகலர் ஆவர்.
விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.
(திருமூலர், திருமந்திரம்)
வீடுபேறாகிய முத்தி நிலை:
வீடு பேறு என்பது உயிர்கள், மும்மலம் நீங்கப் பெற்று சிவனாரின் திருவடிகளில் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். 'திருவடிகளில் கலந்து' என்று சொல்லப்பட்டாலும் சிவனாரின் அடிமையாய், ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றலில்லாமல் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும் நிலையே இது. முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவா நிலையை அடைகின்றன.
முத்தி அடைய வேண்டும் என்கிற ஆவல் உயிர்க்கு ஏற்படவேண்டும். இந்த ஆவல் பெருகப் பெருக, அது உயிருக்கு, மலபரிபாகம், இருவினை ஒப்பு, சத்திநிபாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனி மூலமாக உயிருக்கு ஞானம் ஏற்படும்.
ஆணவ மலத்தின் ஆற்றல், உயிரின், இச்சை, செயல்களை மறைக்க இயலாமல் நிற்கும் நிலையே மலபரிபாகம் எனப்படும். உயிரின் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நீங்கும் நிலை அடைதலே மலபரிபாகம்.
மலபரி பாகம் வருமளவிற் பன்னாள்
அலமருதல் கண்ணுற் றருளி - உலவா
(குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு).
(பொருள்: மலபரிபாகம் வரும்வரை, உயிர்கள், பலநாள் அலைப்புண்டு உழலும்)
மலபரிபாகத்தின் பயனாக, இன்பத்தின் பால் விருப்பும், துன்பத்தின் பால் வெறுப்பும் கொள்ளாது இவற்றைச் சமமாகப் பாவிக்கும் இருவினை ஒப்பு ஏற்படும். இந்த நிலை எய்திய பின், சத்திநிபாதம் (இறையருள் வீழ்ச்சி) உயிருக்கு நிகழும். சத்திநிபாதம், மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.
புண்ணியம், பசுபுண்ணியம், பதி புண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியமாகிய சிவ புண்ணியமே, சத்திநிபாதத்தின் பயன்.
சிவபெருமானை நினைந்து, அவரை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் அனைத்தும் பதி புண்ணியம். அவ்வாறில்லாமல் செய்யப்படும் நற்செயல்கள், பசு புண்ணியம் ஆகும். பசு புண்ணியத்தின் பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியம் அவ்வாறு அழிவதில்லை.
பிற உயிர்களுக்குச் செய்யும் நற்செயல்களை, இறையருளால் செய்வதாக நினைந்து செய்யும்போது அது பதிபுண்ணியம் ஆகி விடுகிறது.
இறையருள் கிடைப்பதற்கு உயிர்கள் செய்கிற முயற்சியே சமயநெறியாகும். சமய நெறிகள் நான்காக வகுக்கப்பட்டுள்ளன.
சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர்
(சிவஞான சித்தியார்)
சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாத(தாச) மார்க்கம் ஆகியவற்றை சரியை (உடலால் வழிபடுவது), கிரியை(உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது), யோகம் (உள்ளத்தால் வழிபடுவது), ஞானம் (எங்கும் இறையருட்கருணையையே காண்பது) என்றும் கூறுவர்.
தாதமார்க்கம் (சரியை): திருக்கோவிலுக்கும், அக்கோவிலில் உறைகின்ற இறையனாருக்கும், இறையடியார்களுக்கும் தொண்டு செய்வதே இந்த நெறி. இதன் மூலம், சாலோகம்(இறைவனுடைய உலகம்) செல்லுகின்ற பேறு கிட்டும்.
சற்புத்திர மார்க்கம்(கிரியை): இது இலிங்கத் திருமேனிக்கு, மந்திரம், கிரியை, பாவனை என்ற மூன்றினாலும் அகத்திலும் புறத்திலும் செய்து வழிபடுதல் ஆகும். இந்நிலையில் இறையனாருக்கு அபிடேகம் செய்தல் போன்ற வழிபாடுகளின் போது மந்திரம் கூறித் துதித்தல் வேண்டும். இவ்வழிபாடு, திருக்கோவிலில் இருக்கும் இலிங்கத் திருமேனிக்குச் செய்யப்படும் போது, பரார்த்தம் எனவும், ஞானாசிரியரிடமிருந்து பெற்ற இலிங்க வடிவத்திற்குச் செய்யப்படும்போது ஆன்மார்த்தம் எனவும் பெயர் பெறும். இதன் மூலமாக, சாமீபம் (இறைவனுக்கு அருகிலிருப்பது) எனும் பேறு கிட்டும்.
சகமார்க்கம் (யோகம்)
இது அட்டாங்க யோகத்தைக் குறிக்கும். அவை, இயமம்( தீய ஒழுக்கங்களை விலக்குதல்) நியமம்( நெறிமுறைகளைக் கடைபிடித்தல்), ஆதனம்(யோகாசனங்கள்), பிரணாயாமம் (பேச்சினை அடக்குதல், மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதல்), பிரத்தியாகாரம்(தான் நினைத்த பொருளின் வடிவாக மாற்றிக் கொள்ளுதல்) தாரணை(மனத்தை ஒருநிலைப்படுத்துதல்), தியானம் (இறைவனை ஒளி வடிவினனாக எண்ணுதல்), சமாதி (அந்நினைவில் தன்னை மறந்திருத்தல்) ஆகியவை ஆகும்.
இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே.
(திருமூலர், திருமந்திரம்)
இதன் மூலம், சாரூபம்(இறைவனின் உருவ அடையாளங்கள்) பெறலாம்.
சன்மார்க்கம் (ஞானம்): பசு, பதி, பாசம் என்னும் முப்பொருள்களைப் பற்றி தெளிவாக உணர்வதால் மும்மலம் நீங்கி ஞானம் கிடைக்கும்.
ஞானநூல் தனை ஓதல், ஓது வித்தல்,
நல்பொருளைக் கேட்பித்தல், தான்கேட்டல், நன்றா
ஈனம்இலாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவன்அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
(சிவஞான சித்தியார்)
திருமறையாகிய வேதம், 28 சிவாகமங்கள், புராணங்கள், சமயக்குரவர்களாகிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் முதலியோர் அருளிய தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகள் ஆகியவற்றை ஓதுதல், ஓதுவித்தல், சைவசித்தாந்தப் பொருள்களைத் தக்கவரிடத்து கேட்டல், கேட்பித்தல், இறைவனாரைச் சிந்தித்தல் ஆகிய ஐந்தும் சாயுஜ்ய நிலை (இறையருளை முழுமையாகப் பெறும் நிலை) தரும் ஞானமார்க்கமாம். இதில் சாயுஜ்ய நிலை 'பரமுத்தி' எனவும் ஏனைய மூன்றும் 'அபரமுத்தி' எனவும் கூறப்படுகின்றன.
சரியை நெறியில், இறைவனுக்கும் நமக்கும் உள்ள உளவு முறை, ஆண்டான் அடிமை போன்றதாகும். கிரியை நெறியில், தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு முறை போன்றதாகும். யோக நெறியில், இரு தோழர்களுக்கு இடையேயான உறவைப் போன்றது. ஞானநெறியில், குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவைப் போன்றதாகும்.
ஒரு நற்குருவை நாடி, மேற்கூறிய மார்க்கங்களைக் (ஞானம் தவிர்த்து) உணர்த்தும்படி வேண்டுதல் வேண்டும். அவ்வாறு உணர்த்துபவர் 'கிரியா குரு' ஆவார். ஞானத்தை சிவனார் ஒருவரே உணர்த்த வல்லவர் ஆதலின் அவரே ஞான குரு ஆவார்.
மேற்கூறிய மார்க்கங்களில், உள்ளன்போடு ஒழுகி வருபவர்கள் இந்தப் பிறப்பிலேயே முத்தியைப் பெற்றுவிட முடியும் என்று சைவசித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
கிரியாகுரு சரியை முதலியவற்றை, 'தீக்கை' (தீக்ஷை ,பாசத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தல்) அளித்து உணர்த்துவார்.
தீக்ஷை சபீசம்(ஓதியுணர்ந்த உத்தமர்களுக்குச் செய்வது), நிர்பீசம் (எழுபது வயதுக்கு மேற்பட்டோர், வியாதியாளர்கள், யோகத்தின் பால் ஈடுபாடுடையோர் முதலியோருக்குச் செய்யப்படுவது) என இருபெரும் வகைப்படும் அது சக்ஷுதீக்ஷை, ஸ்பரிசதீக்ஷை, வாசகதீக்ஷை, மானசதீக்ஷை, சாஸ்திரதீக்ஷையென அறுவகை முறைகளில் ஆசாரியரால் தரப்படும்.
தீக்ஷைகளில் சமய தீக்ஷை , விசேட தீக்ஷை, நிருவாண தீக்ஷை ஆகிய மூன்றும் முக்கியமானவையாகும்.
இதில் சமய தீக்ஷை, 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்தை விதிப்படி எண்ணும் முறையைக் கற்பிக்கிறது. இது சைவ சமயத்தில் நுழைவதற்குத் தரும் அனுமதிச் சீட்டுப் போன்றதாகும். விசேட தீக்ஷை, அன்றாடம் சிவபூசனையைச் செய்யும் நெறியைக் கைக்கொள்ளச் செய்கிறது. நிருவாண தீக்ஷை, பாசபந்தம் அனைத்தையும் நீக்கி, சிவனார் திருவடியை அடையச் செய்வதாகும். இது சிஷ்யனின் பக்குவமறிந்து செய்யப்படுவது.
சிவனார் தம் உடலில் சரிபாதியாக விளங்கும் உமாதேவியாரோடு, திருக்கயிலையில் வாசம் புரிகிறார். திருக்கோவில்களில் இலிங்க உருவில் பேரருள் புரிகிறார். சுயம்பு லிங்கங்கள் தோறும் மூர்த்திகரித்திருக்கிறார். அன்பே சிவமாகி, சிவமே அன்பாகி நின்று விளங்குகிறார்.
தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடும் எம்பிரானின் திருக்கூத்து, அவரது ஐந்தொழில்களுக்கு விளக்கமாக அமைகிறது. அவரது திருக்கரங்களில் இருக்கும் டமருகத்தில் ஒலி, ஸ்ருஷ்டி ஏற்படக் காரணமாக அமைகிறது, அபயக்கரம், ஸ்திதி எனும், காத்தல் தொழிலுக்கும், மற்றொரு கரத்திலிருக்கும் அக்னி, அழித்தல் தொழிலுக்கும், முயலகனின் மேல் ஊன்றியிருக்கும் வலது பாதம் மறைத்தல் தொழிலுக்கும், தூக்கிய திருவடி, முத்தியருளும் கருணைக்கும் விளக்கமாக அமைகிறது.
சைவத்தில் வீரசைவம், காஷ்மீர சைவம் முதலிய பிரிவுகள் பல உண்டு. 63 நாயன்மார்களும் சிவநெறியில் ஒழுகி பிறவாப் பெருநிலை அடைந்தனர்.
சைவசமயம் எந்நாளும் வாழ்வது. அதற்கு சோதனைகள் நேருவது போல் தோன்றுவதெல்லாம் எம்பெருமான், அதன் புகழை ஓங்குமாறு செய்வதற்காகச் செய்யும் திருவிளையாடலே.
சைவ சமயத்தைப் பற்றிய விவரணங்களை ஒரு கட்டுரையில் அடக்குதல் கடலினைக் குடுவைக்குள் அடக்க முயல்வது போன்றதாகும். இதில் உள்ள குற்றங்குறைகளை, படிக்கும் அன்பர்களும் சான்றோர் பெருமக்களும் பொறுத்தருளுவதோடு, மேலதிகத் தகவல்களைத் தந்து என்னை வழிநடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தென்னாடுடைய சிவனே போற்றி!!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4
சான்றோனாக்குதல் தந்தையின் கடன்
ஆக்கம்: தேமொழி
தேசத்தந்தை காந்தியும் தந்தை பெரியாரும் தீவிரமா விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
"ஐயா, நீங்க சுதந்திரம் வாங்கினவுடனே காங்கிரஸ கலைக்க சொன்னீங்க. நானும் திராவிட இயக்கம் அரசியல்ல, தேர்தல்ல ஈடுபடாம மக்களுக்கு உழைக்கும் இயக்கமாக மட்டுமே இருக்கணும்னு சொன்னேன். நீங்க சொன்னதையும் யாரும் கேக்கல, நான் சொன்னதையும் கேக்காம திராவிட முன்னேற்றக் கழகம்னு பிரிஞ்சி போயி இந்த கூத்தாடிங்க மக்களைப் பாடாப் படுத்திக்கிட்டு இருக்காங்க" என்றார் பெரியார்.
பொறுமையாக கடலை சாப்பிட்டுக்கொண்டு பொக்கை வாய் திறந்து சிரித்தார் தேசத்தந்தை. "சரி, விடுங்க நாயக்கரே, நம்மால இப்ப என்ன செய்யமுடியும் சொல்லுங்க? இந்தாங்க கொஞ்சம் கடலை சாப்பிடுங்க" என்று கடலையை பெரியாரிடம் நீட்டுகிறார்.
"வேணாங்க ஐயா, நீங்களே வச்சிக்கிடுங்க. பார்க்கிறவங்க இந்த வயசிலையும் கடலை போடுறேன்னு கன்னா பின்னான்னு குறை சொல்லுவாங்க, வெங்காயம்" என்கிறார் பெரியார்.
அருகில் இருந்த மணியம்மையும் காந்தியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அப்பொழுது உற்சாகமாக பாடியவாறே வருகிறார் பாரதியார்.
"வாங்க தம்பி வாங்க, எங்க இந்தப் பக்கம்?" என்று முகம்மலர்கிறார் பெரியார்.
"தந்தையர்தின வாழ்த்துகளைச் சொல்லவந்தேன் தேசத்தந்தையே, தந்தை பெரியாரே உங்களை வணங்குகிறேன்", என்று பணிவாக வணங்கி சொல்கிறார் பாரதி.
அவர்கையில் கொஞ்சம் கடலையைக் கொடுத்துவிட்டு, பாரதியின் தோளைத் தட்டி, "நீங்களும் கொஞ்ச நாள் அதிகம் வாழ்ந்திருந்தால் உங்களையும் ஏதாவது ஒரு தந்தை என்று மக்கள் சொல்லியிருப்பார்கள் பாரதி" என்று சிரிக்கிறார் காந்தி.
"இல்லை, என்னையும் சில இலக்கியவாதிகள் "சிந்துக்குத் தந்தை" என்று என் பாடல்களின் சொல்நயத்தில் மகிழ்ந்து பாராட்டியதுண்டு.
"பைந்த மிழ்த்தேர்ப் பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்!..."
என்று பாரதிதாசன் பாராட்டியது நினைவிற்கு வருகிறது."
"சரி போகிறது...அப்படியே எனக்கு தந்தை பட்டம் இல்லாதிருந்தாலும் என்ன குறைந்துவிடும் என்கிறீர்கள் ஐயா? எப்படியும் நாம் சொல்லும் நல்ல அறிவுரைகளை கேட்கப் போவதில்லை என்று மக்கள் முடிவு எடுத்துவிடுகிறார்கள். "தந்தை" என்று பட்டம் கொடுத்தால், சூசகமாக நீங்கள் சொல்வதை நாங்கள் ஒருபொழுதும் கேட்கவே போவதில்லை என்று சொல்லும் மறைமுக அறிக்கைதானே அது. "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்று சொன்னாலும், அப்பா பேச்சுக்கு மரியாதை கொடுத்து கேட்டு நடப்பவர்கள் இந்த உலகத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?" என்கிறார் பாரதி ஆதங்கத்துடன்.
"தம்பி என்னமா யோசிக்கிறீங்க?" என்று ஆச்சரியத்துடன் பாராட்டுகிறார் பெரியார்.
"தம்பி, நீங்க கொஞ்சநாள் அதிகமா வாழ்ந்திருந்தா சுயமரியாதை இயக்கத்திற்கு நிறைய பாடல்கள் எழுதியிருப்பீர்கள், 38 வயசெல்லாம் போகிற வயசா என்ன? நீங்க உயிரோட இருந்திருந்தா இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்து எவ்வளவோ சாதித்திருக்கலாம். நீங்கள் மறைந்து 20 ஆண்டுகள் கழித்து நான் திராவிட இயக்கம் ஆரம்பித்த பொழுது இந்நேரம் தம்பி இருந்தால் சுயமரியாதை இயக்கத்தைப் போற்றி எழுச்சியுடன்எத்தனை பாடல்கள் பாடியிருப்பார் என நினைத்தேன்."
"சமீபத்தில் உங்களைப் பற்றிய படம் ஒன்று பார்த்தேன். நம்ம பேராண்டி இளையராஜா இசையில உங்களுடைய ..
..
"கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வினில் தாழ்வென்றும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரு தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால்
வையம் பேதைமை யற்றிடுங் காணீர்."
[ காணொளி: http://youtu.be/ScA2TJ-IUkU ]
பாட்டைக் கேட்டு கண்ணு கலங்கிடுச்சுங்க தம்பி. நாம தலை தலையா அடிச்சிக்கிட்டு சொன்னதையே இந்த தம்பியும் சொல்லியிருக்காரு. இப்படி அற்ப ஆயுசில போயிட்டாருன்னு ரொம்ப வருத்தமாயிடிச்சி. அப்புறம் மணியம்மை சமாதானப் படுத்தினாங்க" என்றார் பெரியார்.
"என்ன செய்யிறதுங்க ஐயா?
"நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ !
சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமைதாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ"
என்று சக்தியிடம் புலம்பிப் பாடினேன். சக்தி என்மேல் இரக்கப்பட்டு நிலச்சுமை என வருந்தாதே என்று அழைத்து கொண்டு விட்டார்கள்" என்று ஆறுதலாக சொல்கிறார் பாரதி.
தொடர்ந்து "நானும் உங்களைப்பற்றி வந்த திரைப்படம் பார்த்த பின்பு வருத்தப்பட்டேன் ஐயா. எவ்வளவு படித்து படித்து சொல்லிவிட்டு சென்றீர்கள். ஒரு திரைப்படம் எடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்களே. சொன்னதை நடைமுறைப்படுத்துவதில் தவறி விடுகிறார்கள் நம் மக்கள் என்பது வேதனைதான்" என்றார் பாரதி.
"உங்கள் இருவருக்குமாவது பரவாயில்லை, என் படத்தை ரூபாயில் போட்டதுடன் மறந்துவிட்டார்கள். என்ன ஒரு தலைவலி கொடுத்தேன், எத்தனை விரட்டி அடித்தேன். என்னை அத்தனை திட்டு திட்டினாலும் கடைசியில் என்னை மதித்தும் என் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தவன் அந்த வெள்ளைக்காரன்தான்" என்றார் காந்தி.
பிறகு, "சரி பாரதி, நம் மக்கள் ஜாதிய விட்டொழிக்கிறதா தெரியலையே, இதுக்கு ஏதாவது ஒரு வழி தோன்றுகிறதா உங்களுக்கு?" என்று ஆவலுடன் கேட்டார் காந்தி.
"இல்லாமலா? ஆனால் அதை சொன்னாலும் யாரும் கேட்கப்போவதில்லை என்று வெறுப்பாக இருக்கிறது" மீசை துடிக்க கோபத்துடன் முழங்கினார் பாரதி.
"பரவாயில்லை, சொல்லுங்க தம்பி, ஜாதியை எப்படி ஒழிக்கலாம்?" என்று நிமிர்ந்து உட்கார்ந்து, புதிதாக பிறந்த உற்சாகத்துடன் தாடியை நீவிக்கொண்டு ஆர்வத்துடன் கேட்டார் பெரியார்.
"ஐயா, இதற்கு முதலில் கலப்பு மணத்தை ஆதரிக்கவேண்டும். அத்துடன் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதை மேம்படுத்தவேண்டும்."
"இன்னும் கொஞ்சம் புரியற மாதிரி விளக்கமா உங்க திட்டத்த சொல்லுங்க"
"ஐயா, கலப்பு மணம் செய்பவர்களையும், இந்த கலப்பு மணத்தில் பிறந்த குழந்தைகளையும் ஒரு புதிய வகைப் பிரிவில் சேர்த்து அவர்களுக்கு சிறப்புச் சலுகை தரவேண்டும். மீண்டும் தந்தையின் ஜாதியோ அல்லது தாயின் ஜாதியோ, அல்லது எந்த ஜாதிக்கு அதிக சலுகை என்று முடிவு செய்து அந்த ஜாதிப் பெயரைத் தேர்ந்தெடுக்கவோ விடக்கூடாது. கலப்பு மணத்தில்... ஜாதியோ, மதமோ, இனமோ... எந்தக் கலப்பாக இருந்தாலும், கலப்பு மணம் செய்பவர்களையும் அதில் பிறந்தவர்களையும் "சான்றோர்" எனக் குறிப்பிட்டு அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்றோர்களுக்கே அரசு சலுகை கொடுப்பதில் முன்னுரிமை என அறிவிக்க வேண்டும். அதனால் சான்றோர் என்றால் "நற்பண்புகள் உள்ளவர்" என்ற பொருளைக் குறிப்பதற்கு சமத்துவ எண்ணமே அடிப்படையானது என்பதையும் உணர்த்தலாம்."
"இவ்வாறு செய்தோமானால் சான்றோர் எனக் குறிப்பிடப்படாதவர்களுக்கு, தாங்கள் சான்றோர்கள் இல்லை என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக நினைத்து அவமானம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. ஆனால் சலுகை கிடைக்கும் என்றால் நம் மக்கள் சான்றோராக மாற முயற்சிப்பார்கள். அப்படியும் கண்டு கொள்ளாமல் கலப்புமணத்தை ஆதரிக்காத பெற்றோர்களையும், தங்கள் ஜாதியில் வரன் பார்க்கும் பெற்றோர்களையும் அவர்கள் பிள்ளைகள் "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடன்" என சுட்டிக்காட்டி இடித்துரைப்பார்கள்.
" ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்."
என்பார்களே ஏன் உங்களுக்கு அந்த விருப்பம் இல்லை என்று அன்னையிடம் வாதிடுவார்கள். எதையும் தனக்கு சாதகமாக உபயோகிக்க இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குத் தெரியும். நாங்கள் சான்றோர்கள் ஆவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா? என்று போர்முழக்கம் இடுவார்கள். வளர்ப்பதில் குறை வைத்த குற்றவாளிகள், பிள்ளைகளிடம் அன்பில்லாதவர்கள், அவர்களது நல்வாழ்வில் அக்கறை இல்லாதவர்கள் என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்க எந்தப் பெற்றோர்களும் விரும்ப மாட்டார்கள்."
"பிறகென்ன, காலப்போக்கில் நிறைய சான்றோர்கள் உருவாகுவார்கள். சான்றோரும் சான்றோரும் இணைந்து தமிழகம் எங்கும் சான்றோர்களே நிறைந்திருப்பார்கள். பின்பு தமிழகத்தைப் பார்த்து வியந்து மற்றவர்களும் பின்பற்ற இந்தியா முழுவதும் ஜாதி, மத, இன பேதங்களே இல்லாத இந்தியாவாக மாறக்கூடும்"
"அருமையான யோசனை பாரதி" எனக் கைதட்டிப் பாராட்டுகிறார் காந்தி.
"தம்பி, நம்ம மக்கள சான்றோராக்கிறது அவ்வளவு சுலபமில்ல, எப்படியோ இப்படி ஒரு குறுக்கு வழியில் அவங்கள சான்றோராக்க முயற்சி செய்யலாம்னு சொல்றீங்க" என்று குலுங்கி குலுங்கி உரத்த குரலில் சிரிக்கிறார் பெரியார். "தம்பி, இதை நடைமுறைப்படுத்த முடியும், மக்கள் ஒத்துழைப்பார்கள் என நினைக்கிறீர்களா?" என்றார் சந்தேகத்துடன் கேட்டார் பெரியார்.
"ஆமாம், பாரதி எனக்கும் அதைப்பற்றி யோசனையாக இருக்கிறது" என்று ஆழ்ந்த சிந்தனையுடன் காந்தி சொன்னார்.
"ஐயா, எனக்கு இளைய சமுதாயத்திடம் என்றும் நம்பிக்கை உண்டு. உங்களைப் பின்பற்றிய அந்தக்கால இளைய பாரதத்தினர் இந்தியா சுதந்திரம் அடைவதில் பெரும்பங்கு வகிக்கவில்லையா? இன்றைய இளைய சமுதாயத்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" என்று சொல்லியவாறு எழுந்த பாரதி,
"இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா பலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதயஞாயிறு ஒப்பவே வா வா வா"
என்று பாடியவாறு கையசைத்து விடைபெற்ற வண்ணம் வீறு நடை போட்டுக் கிளம்பினார்.
தந்தைகுலத்திற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்!
காணொளி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
தோழருக்கு வாழ்த்துக்கள்
ஆக்கம்: தனுசு
என்
வகுப்பறை தோழர்.
அவர் பெயர் கிருஷ்ணர்-இன்று சொல்லி
அடித்தார் ஒரு நூறு-இனி
சொல்லாமல் படைப்பார் பல நூறு!
எழுத்தில்
எளிமை என்பது
இவரின் நோக்கம்-அந்த எளிமையை
நானும் எடுத்தாள உண்டாக்கினார்
என்னிடம் பெரும் தாக்கம்.
இவர் படைப்பில்
தாயின் பாசத்துக்கு சுசிலா!
தாய் மண்ணின் பாசத்துக்கு தஞ்சை!
தன் எளிமைக்கு புளியோதரை!-பாருங்கள்
இந்த
சமூகவாதியின் படைப்பிலக்கண தெரிவுமுறை.
என் பாட்டி சொன்னதோ
வடை சுட்ட கதை!- இவர் பாட்டி
புகைவண்டியில் புகட்டியதோ
மாணவருக்கு தர்மத்தை!
ரசனையான எழுத்தில்
ரஜினிகாந்தின் வேகம்!
இன்னும் எழுதுவதில்
வயதை மறந்த
கஜினிமுஹம்மதுவின் தாகம்!
வகுப்பறையில்
இவரின் ஆக்கம்-அது ஒரு
தமிழின் துணைப்பாட பகுதி!
இதைவிட வேறென்ன வேண்டும்
இவரின் படைப்புக்கு தகுதி!
பாலகன் கிருஷ்ணன்
திருடியது வெண்ணை-இந்த
வயோதிக கிருஷ்ணன்
திருடியது அவரின் எழுத்தால் என்னை.!
ரசிப்புக்கு
சிரிப்புக்கு
சிந்தனைக்கு
போதனைக்கு
நீதிக்கு
பக்திக்கு-என நமக்கு படைத்தார்
பல விருந்து!
நாமும் அளிப்போம்
"செந்தமிழ் செல்வர்" எனும்
கௌரவ விருது.!
ஆயிரம் பழமொழிக்கு
அர்த்தம் சொன்னார்.
"உன்னைச்சொல்ல
உன் நண்பனை காட்டு"-இந்த
பழமொழிக்கு
தன்னையே தந்தார்.
வகுப்பறை சுப்பையா
தஞ்சை கோபாலைய்யா
இவருக்கு தோஸ்த்தையா!
அப்படியெனில்
இவரைப்பற்றி சொல்ல வேண்டுமாய்யா?
இந்த
செம்பிறை சீடருக்கு
பால்குடியில்
வந்தது தொண்டாற்றும் எண்ணம்.
அது
லால்குடியில் கோலோச்சுது இன்னும்.
எழுத்துக்கும் ஏழைக்கும்
இவரின்
தொண்டுகள் மேலும் சிறக்க
வகுப்பறை சார்பாய்
இந்த
பூச் செண்டுகள் தருகிறோம்
வாழ்க! வளர்க!!.
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6
சக்திகொடு!
ஆக்கம்: தனுசு
(சென்ற வாரத்தில் "வரிகள்" பற்றிய ஒரு பதிவு வெளியிட்ட போது அதற்கு தேமொழி அவர்கள் "சக்திகொடு சக்திகொடு சக்திகொடு......."என்று ஒரு பின்னூட்டமிட்டார். அந்த சக்திகொடு எனும் வார்தை உண்டாக்கிய கவிதை இது.)
சக்தியே
எனக்கொரு சக்திகொடு
பாராளும் சக்தியே
எனக்கொரு சக்திகொடு.
சுற்றும் பூமி நின்றுபோக
கடலின் நீரும் வற்றிப்போக
தீயும் தீர்ந்து சாம்பலாய் போக
நான்
யாகம் செய்ய சக்தி கேட்கவில்லை!
நானிலம் ஆளும் நாயகி!
இந்த
மா நிலம் மக்கிடவேண்டுமா?
கூனிக்குறுக வேண்டியதெல்லாம்
கோபுரம் ஏறி ளர்ந்திடலாமா?
அரிதாரம் முதல் அவதாரம் வரை
அத்தனையும் இங்கு வேஷம்!
அதை புரியாமல்
போடுது ஒரு கூட்டம் தினந்தோரும் கோஷம்!
பக்தியில் முக்திக்கு
சம்போ சிவ சம்போ!
பத்திக்கும் காமத்தீயில்
அத்தனையும் இங்கு அம்போ!
ராத்திரி ரகசியம் மட்டும்
இங்கு
சாஸ்திரம் பார்ப்பதில்லை-அந்த
ரம்மி ஆட்டத்தில் ராஜா ராணி
தட்சனை ஏதும் கேட்பதில்லை!
பாலாறு என்றொரு நைல் ஆறு!
அதனை
பங்கு வைக்கும் நாடுகளோ ஆறு!
இங்கு இருப்பதோ அதுபோல பல ஆறு-பாவம்
அதனாலே பலநூறு தகறாரு!
பட்டம் முதல் பட்டயம் வரை
கொள்ளை போகுது காசில்!
விட்டகுறை தொட்டகுறையாக
சட்டமும் படுக்குது பாயில்!
பத்திரம் முதல் பக்தர்வரை
யாதும் போலி!
தொண்டன் முதல் தலைவன் வரை
மேயும் வேலி!
உழைத்து பிழைக்க மறுக்கும் ஜனம்!
அவரின்
கண்ணில் தெரிவதெல்லாம் பணம்!
நெஞ்சில் நிறைவது
சுயநலம் என்ற குணம்!
எங்கெங்கு கானினும்
பிழையான பிழைப்பு
சரிசெய்ய நானிங்கு
யாருக்கு வைப்பது அழைப்பு!
என்னோடு கூட்டமில்லை
கொடி பிடிக்க யாருமில்லை!
நான்
கொண்டாடும் கொள்கையை
என் குடிசையிலும் ஆதரிப்பாரில்லை!
உள்ளம் பொறுக்கவில்லை-இங்கு
தஞ்சம் அநீதியின் எல்லை!
யாரின் நெஞ்சிலும் நீதியில்லை
நெடும் ஆட்டத்திற்கும் அளவில்லை
ஆடுகின்ற ஆட்டத்தை
ஆடும்வரை ஆடவிட்டு-அவர்
அடங்கும் முன்
வந்ததற்கு வரவு வைக்க
மிச்சம் உள்ள மனித நேயம்
புரியவைக்க சக்திகொடு.
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7 | |||
அனுப்பியவர். ஜி.ஆனந்தமுருகன்
DEFINITIONS
Sent by G AnanthamuruganSchool:A place where Papa pays and Son plays.
Life Insurance: A contract that keeps you poor all your life so that you can die Rich.
Nurse:A person who wakes u up to give you sleeping pills.
Marriage: It's an agreement in which a man loses his bachelor degree and a woman gains her masters..
Tears:The hydraulic force by which masculine willpower is defeated by feminine waterpower.
Lecture: An art of transferring information from the notes of the Lecturer to the notes of the students without passing through "the minds of either"
Conference: The confusion of one man multiplied by the number present.
Compromise: The art of dividing a cake in such a way that everybody believes he got the biggest piece.
Dictionary: A place where success comes before work.
Conference Room: A place where everybody talks, nobody listens and everybody disagrees later on.
Father: A banker provided by nature.
Boss:Someone who is early when you are late and late when you are early.
Politician: One who shakes your hand before elections and your Confidence after.
Doctor: A person who kills your ills by pills, and kills you by bills.
Smile:A curve that can set a lot of things straight.
Yawn:The only time some married men ever get to open their mouth.
Etc.: A sign to make others believe that you know more than you actually do.
Committee: Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together.
Experience: The name men give to their mistakes.
---------------------------------------------
School:A place where Papa pays and Son plays.
Life Insurance: A contract that keeps you poor all your life so that you can die Rich.
Nurse:A person who wakes u up to give you sleeping pills.
Marriage: It's an agreement in which a man loses his bachelor degree and a woman gains her masters..
Tears:The hydraulic force by which masculine willpower is defeated by feminine waterpower.
Lecture: An art of transferring information from the notes of the Lecturer to the notes of the students without passing through "the minds of either"
Conference: The confusion of one man multiplied by the number present.
Compromise: The art of dividing a cake in such a way that everybody believes he got the biggest piece.
Dictionary: A place where success comes before work.
Conference Room: A place where everybody talks, nobody listens and everybody disagrees later on.
Father: A banker provided by nature.
Boss:Someone who is early when you are late and late when you are early.
Politician: One who shakes your hand before elections and your Confidence after.
Doctor: A person who kills your ills by pills, and kills you by bills.
Smile:A curve that can set a lot of things straight.
Yawn:The only time some married men ever get to open their mouth.
Etc.: A sign to make others believe that you know more than you actually do.
Committee: Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together.
Experience: The name men give to their mistakes.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8
நகைச்சுவை
ஆக்கம்: எஸ்.சபரி நாராயணன், சென்னை
புதிதாகச் சேர்ந்த மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு மிகவும் கஷ்டமான இயற்பியல் பாடம் ஒன்றை பேராசிரியர் ஒருவர் நடத்தத் துவங்கினார்.
இரண்டாம் நாள் பாடம் அதிக சிரமமாக இருந்தது.
ஒரு மாணவன் முரட்டுத்தனத்துடன் குறுக்கிட்டுக் கேட்டான்:
”இந்தக் கருமத்தைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?”
பேராசிரியர் அமைதியாகச் சொன்னார்,” பலருடைய வாழ்க்கையை இது காப்பாற்றும்!”
சில நிமிடங்களுக்குப் பிறகு அதே மாணவன் எழுந்து கேட்டான்,” இயற்பியல் எப்படி வாழ்க்கையைக் காப்பாற்றும்?”
”உன்னைப் போன்ற முட்டாள்கள் மருத்துவத்தில் பட்டம் பெறுவதை இது தடுத்து நிறுத்தும்!”
"It keeps idiots like you from graduating,"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
மாணவர் மலர் மிகவும் அருமை. அனைத்து ஆக்கங்களும் அற்புதமாய் வரையப்பட்டுள்ளது. அனைவருக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஎன் இரண்டு ஆக்கங்களையும் வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்
ReplyDeleteகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் நன்றிகள் .
ReplyDeleteஅமர் சேவை தளம் போய் வந்தேன் ,அதனை பார்வைக்கு கொடுத்ததுக்கும் படிக்க கொடுத்ததுக்கும் மீண்டுன் நன்றிகள். நானெல்லாம் ஒரு தூசுக்கு கூட அவரின் முன் சமம் ஆகமாட்டேன்.நான் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பி ஒரு வாரம்தான் ஆகிறது.மீண்டும் ஆகஸ்ட் இறுதியில் செல்வேன்
அந்த நேரத்தில் கண்டிப்பாக நான் அங்கு போய் வருகிறேன் அத்துடன் சிறிய நிதி உதவியும் செய்கிறேன் .
ராமகிருஷ்ணன் அவர்களை பாராட்டவெல்லாம் நம்மிடம் வார்த்தைகள் இல்லை .
ஆயக்குடி ராமகிருஷ்ணருக்கும், லால்குடி முத்து ராமகிருஷ்ணருக்கும் "சதமானம் பவதி,சதாயுஷ் "
கிருஷ்ணன் அவர்களே ராமகிருஷ்ணன் எனும் பெயர் கொண்டோர் யாவருக்கும் இந்த தொண்டாற்றும் குணம் வந்துவிடுமோ .
நூறாவது பதிவினை வெளியிட்ட KMRK ஐயாவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்று சொல்வது போல....
உங்கள் எழுதிய கையும் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற என் விருப்பத்தையும் எதிர்பார்ப்பையும் இத்தருணத்தில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
நூறாவது சிறப்பு பதிவிற்கு தேர்வு செய்த கரு உங்களைப் பிரதிபலிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பலருக்கு உதவும், நம்பிக்கையூட்டும் நல்லதொரு பதிவிற்கு நன்றி.
பார்வதியின் சைவ விளக்க ஆக்கம் அதனை நான் அறிந்துகொள்ள வைத்தது , நான் இப்போதுதான் இது போன்ற செய்திகளெல்லாம் படிக்கிறேன் .நன்றி பார்வதி அவர்களே.
ReplyDeleteதேமொழி தந்தையர் தினத்தை தேசத்தந்தையுடன் கொண்டாடியுள்ளார்.
ReplyDelete"பாக்குறவங்க இந்த வயசிலேயும் கடலை போடுறேன்னு நினைக்க போறாங்க " இது தேமொழியின் கை வண்ணத்திற்கு சான்று .
"என் படத்தை ரூபாயில் போட்டதோடு என்னை மறந்து விட்டார்கள் "-இது சத்தியமான உண்மை
ஆக்கத்தின் ஆரம்பத்தில் நான் நினைத்தது அவர்களின் உண்மையான உரையாடல் போல் இருக்கிறது என்று நினைத்தேன் .பாரதி வந்தபின்தான் தெரிகிறது லொகேஷன் வேறு இடம் என்று. இந்த உரையாடலில் கலப்பு மனம் முடித்த எந்த தலைவரையாவது சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .காதல் வாழ்க .
நன்றாக இருக்கும் நான் காலில் லேசாக சிறு கட்டி வந்தாலே அம்மாவை ஒரு வழியாக்கிவிடுவேன்.
ReplyDeleteஅமர் சேவா சங்கத்தின் சேவைகள் பற்றி சில பல ஆண்டுகளுக்கு முன்பு விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் பார்த்து எனக்கு வெட்கம்தான் வந்தது. இந்த அளவு உடல் பாதிக்கப்பட்ட பிறகும் தான் அடுத்தவர் உதவியை நாடி இருப்பதை தாண்டி தான் பலருக்கு உதவியாக இருக்கும் வகையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட ராமகிருஷ்ணன் போற்றுதலுக்குரியவர்.
எனது ஆக்கத்திற்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட்ட ஐயாவுக்கும்,உடனே படித்துப் பின்னூஉட்டம் இட்ட தனுசு, தேமொழி, சரண் ஆகியோருக்கு நன்றி!
ReplyDeleteபுதியவர் சதன்ராஜ் கண்கள், பார்வையில் ஏற்படும் மயக்கத்தை நல்ல கேள்விகளால்/ எடுத்துக் காட்டுகளால் விளக்கியுள்ளார். சீரிய முயற்சி. தத்துவத்தை வேறு தொட்டுள்ளார். மதுறையில் இருந்து புறப்படும் ஏவு கணைக்குத்க்குத் தயாராக இருக்கவும்.
ReplyDeleteசதம் அடித்த கிருஷ்ணன் சாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற தலைப்பை பார்த்தவுடன் ஒரு வேளை அரசியலில் சேரும் அறிவிப்போ என்று நினைத்தேன். அமர் சேவா சங்கம் பற்றி அறிய தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஇந்து மதத்தில் ஸ்தூலமும் சூக்குமமும்
ReplyDeleteஇணைந்தது சிவ வழிபாடு.
மற்ற எல்லா தெய்வங்களுக்கும்,மனிதர்களை
போல் உருவம் கொடுத்து வணங்கும் நாம்,
சிவனை மட்டும் சிவலிங்கமாக அருவ உருவமாக வழிபடுகிறோம்.
நம்முடைய உயிரின் சூக்கும நிலைதான் சிவலிங்கமாகும்.
எனவே சிவலிங்க வழிபாடு என்பது,
நம் உள்ளே இருக்கும் இறைவனை வழிபடுவதாகும்.
சித்தர்கள் மொழியில் கூற வேண்டுமென்றால்,
நமசிவய என்கிற ஐந்தெழுத்தே,பஞ்சபூதங்களாக விரிந்து,
இந்த பிரபஞ்சத்தை இயக்கி கொண்டிருக்கிறதாகும்.
இந்த பஞ்சபூதங்களை தன்னுள் அடக்கி,
இயக்கி தானே சிவம் என்று உணர்ந்தவர்களே சித்தர்கள்.
சித்தர்களின் தலைமை வழி சிவயோகம் என்றாலும்,
சிவயோகத்தில் பல ஆண்டுகள் நிலை பெற,
காயகற்ப மூலிகைகளை பயன்படுத்துவார்கள்.
இன்றும் சதுரகிரி மலை,கொல்லிமலை, போன்ற மலைகளில்,
சாகவரம் தர கூடிய,பல காய கற்ப மூலிகைகள் பல உண்டு.
சாதராண மனிதர்களால் போய் எடுக்க முடியாது.
பல ஜென்மங்களாக செய்த சிவயோகத்தின்,பயன் இருந்தால் கிடைக்கும்.
இதை யார் அறிவார்கள்?விதி இருப்பவார்கள் அறிவார்கள்.
சிவ யோகத்தில் சிறந்த அகத்தியரின் அன்பை பெற்றவார்கள் அடைவார்கள்.
நமசிவய என்கிற ஐந்தெழுத்தின் அதிர்வுகள் அண்டசரசரம் முழுவதும் நிரம்பி உள்ளது.
நமசிவய என்கிற மந்திரத்தின் சூக்குமம் இல்லாமல்,
எந்த மந்திரமும் செயல்படாது.
ஐந்தெழுத்தின் துணை கொண்டு,
வசியம்,மோகனம்,ஆகர்ஷணம்,தம்பனம்,
உச்சடானம்,வித்வேஷணம்,பேதனம்,மாரணம்,
போன்ற அஷ்ட கர்மக்களை ஆடலாம்.
இது சித்தர்களின் வழி முறையாகும்.
உயிரின் சூக்குமத்தை அறிய சிவ வழிபாடு சிறந்தது.
சிவனின் வழியே சித்தர்களின் வழி.
சித்தர்களின் வழியில் போனால் நாமும் சிவமாகலாம்.
ஓம் நமசிவய நமஹ
ஓம் சரவணபவ நமஹ
KMRK அவர்களின் 100-வது ஆக்கத்திற்கு
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தாங்கள் நலமாய் வாழ
முருகபெருமானை பிராத்தனை செய்து கொள்கிறோம்.
ஓம் சரவணபவ நம
இது வார்த்தைகளால் தரும் வாழ்த்தல்ல
ReplyDeleteஇதயம் மலர்ந்து
உள்ளம் நெகிழ்ந்து
உள்ளபடியே மனமும் மயங்கி தருகிறோம்..
பதிவுகள் அத்தனையும் இனிக்கவில்லை
பதித்து சொன்னால் தித்திக்கிறது
(இனிப்பு திகட்டும் தித்திப்பு திகட்டாது)
எட்டாக்கணி எழுத்து என
எண்ணிய பலரை உருவாக்கியது
உங்கள் எழுத்தும் படைப்பும்
உதாரணம் சொல்ல ஒரு 100 போதாது
1)
நல்லதையே எண்ணி சொல்லும்
நல்ல "நண்பனாய்"
2)
வல்லமை நிரம்பிய
வான் உயர வளர விரும்பிய "நடிகனாய்"
3)
சொல் நெறி நிர(ப்)பிய எழுத்துக்களால்
அறநெறி பரப்பிய "எழுத்தாளனாய்"
4)
பழைய சிந்தனை தகவல்களை
படிக்க புதிய பாணியில்
(சொல்லடைகளையும் பழமொழியையும்) படைத்து
கலாச்சார ப(ய)ன்பாட்டினை பரப்பிதந்த
"காவலனாய்" இன்னமும்
5)
தரமான சேவைகளை வெளிப்படுத்தி
தயாள குணம் படைத்த "பண்பாளனாய்"
6) (கோபாலய்யா வின் நாட்டியாஞ்சலி) நிகழ்ச்சியை வருணித்து
நிஜாமாக்கி வழங்கிய "வருணனையாளனாய்"
7)
ஓட்டை பலுனையும்
ஒரு விரல் கொடுத்து ஊதி காட்டி
கற்பனை இயற்கையாக தந்ததை
கதையாக்கி வழங்கிய "கர்ணனாய்"
8)
பக்தி காவியங்களை பரவசமுடன்
படைத்ததோடு சிந்திக்க (த்+ஊ)ண்டி
படித்துக் கொள்ள இன்னமும் உளதா என
பார்த்து ரசிக்கும் "கோமகனாய்"
9)
வெளிநாட்டு பயணத்து அனுபவங்களை
வெளிப்படையாக தந்து தன் வெள்ளை
மனதை அள்ளி படிப்பவர்
மனதையும் மகிழ்வித்த "அறிஞனாய்"
10)
மாற்று கருத்து உள்ளோரிடமும்
மனம் மா(ற்)றி தன்னை காட்டும் "எளியனாய்"
பல்கலை கழகம் தரும் பட்டம் நாம் படித்ததால் நம்மை கௌரவிக்க
பழகும் தோழர் தரும் பட்டம் நம்மை படித்ததால் நாம் கௌரவிக்கப்பட
என்பது போல்
அன்று
மனவியலில் பெற்றது முதுகலை;
இன்று
மாணவர் மனதிலே பெற்றது முதல்நிலை
இன்று..
படைத்தது பத்து பத்து (10 X 10)
இனி
படைக்கனும் பத்து 100 (10 x 100)
என
இந்த தேவார பாடலினை பாடி வாழ்த்தி
இறைவன் திருமுன் வேண்டி நிற்கிறோம்.
திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி இணைபணி சிரபுர
நகர் இறை தமிழ் விரகனது உரை
நலமலி ஒருபது நவில்பவர்
நிகழ்குல நிலநிறை
திரு உரு நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி அடிமையின் மிகைபுணர் தரநல மிகுவரே
இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும் ஓதி வழிபடுபவர்
1)குலம்,
2)நிலம்,
3)நிறைந்த செல்வம்,
4)அழகிய வடிவம்,
5)ஒப்பற்ற கொடை
6)வண்மை,
7)மிக்க வெற்றிதிரு,
8)இவ்வுலகிடை தொடர்ந்து வரும் சந்ததி,
9)அன்புடன் பணிசெய்யும் ஏவலர்
10)இறைவனடியார் என்ற பெருமிதம்
ஆகியன தம்பால் விளங்க எல்லா நலங்களும் மிகப்பெறுவர்.
வாழ்க.. வாழ்க.. வாழ்க...
1.
ReplyDeleteசே(ர்த்து)வை என சொல்லாமல்
சொல்லி வந்த தகவலாகவே எடுத்துக் கொள்கிறோம்..
பதித்தவருக்கும் பதிவில் வந்தவருக்கும்
பணிவான வணக்கங்கள்..
2.
நெல்லை தோழரே..
சொல்லை கொண்டு ஓவியம் படைத்துள்ளீர்..
கண்(மணி) யான கருத்தினை
கண்னைக் கொண்டு தந்த விளக்கம் அருமை..
இப்படி ஒரு படைப்பினை
இந்த வகுப்பு மாணவர் தருவது எங்களுக்கெல்லாம் பெருமை..
தொடரட்டும் இது போன்ற நற்சிந்தனை
தொட்டு விட்ட மனம் தருது வாழ்த்து
தேர்ந்தெடுத்து தரும்
தோழி தேமொழியார் தரும்
ஒவ்வொரு சொல்லையும் கொண்டு
ஒவ்வொருவரும் படிகல்லாய் கொண்டு
மேற்கொள்ளும் பயணம் அத்தனையும்
மேன்மைகொள்ள வைக்கின்றது
சிறப்பு பாராட்டுக்களுடன் அவர்களை
சிரம் குவித்து வணங்குகின்றோம்
3.
சைவமும் தமிழும் என
சைகை காட்டி சைவத்தை
உயர்த்திக்காட்டிய தோழியே.. உம்மை
உயர்ந்த (மன) ஆசனத்தில் அமர்த்துகிறோம்.
சிறப்பான வாழ்த்தொன்று சூலையில்
செந்தமிழால் தனுசு படைப்பார்
வாழ்க.. வாழ்க.. என
வாழ்த்தி முயற்சிகள் தொடர
இறைவன் திருமுன்
இப்பவும் வேண்டி நிற்கிறோம்.
4.
சான்றோனாக்குதல் தந்தைக்கு கடன்
சரிதான்.. இந்திய குடிமகனின் கடனே
கணக்கில்லாமல் இருக்கு அங்கே வங்கி
கணக்கில் உள்ள பணம் என எண்ணி
(counting)
படித்து பார்த்தோம்..
பச்சை வர்ணத்தில் வந்த கரண்சி இப்போ
சிவப்பு வர்ணத்தில் வந்தாலும்
சிரிக்கும் அந்த காந்தியோடு
தந்தையர் தின வாழ்த்து சிந்திக்க வைத்தது..
தவறாக எண்ண வேண்டாம்..
சாதிகள் ஒழிய வேண்டாம்..
சாதிவேற்றுமை தான் ஒழிய வேண்டும்
இது அய்யரின் கருத்து..
இவர் இப்படித்தான் என எண்ணினால்
(ஒரு வரி எழுதி வையுங்களேன்)
5.
///நாமும் அளிப்போம்
"செந்தமிழ் செல்வர்" எனும்
கௌரவ விருது.!///
வழக்கம் போலவே..
வழி மொழிகின்றோம்...
வளமான வாழ்த்துக்களுடன்
பலமான உங்கள் கைதட்டல்களுடன்
6.
சக்தி கொடு என கொடுத்த வாக்கியத்தை வைத்து
கவிதை தொடுத்த தனுசுவே..
எதை கொடுத்தாலும் அதன்
சதை எடுத்து தொடுக்கும் நீ
வில்லாளன் அல்ல
சொல்லாளன்.. (சொல்லை ஆள்பவன்)
வாழ்க... வாழ்த்துக்கள்..
7.
computerல் இருந்து download செய்வது சுலபம் அதனை அப்படியே mindல்
upload செய்வது கடினம் என சொல்லி வந்த கடைசி வரிகள் தொட்டுகாட்டியது..
தொடரட்டும் (கட்டுரை)படைப்புகள்..
ஆவலுடன்..
அய்யரும்...
8.
சபரி தமிழில் வழங்கிய பதிவுக்கு
சபாஷ்.. தொடர வேண்டும் இதே ..
உங்கள் அனுமதியுடன்
இந்த பாடலினை சுழல விடுகிறோம்
ஒரு தாய் மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள் குலமென்போம்
தலைவன் ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!
பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவைப் பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரிக் கரையில் களித்தவளாம்
வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!
உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம்
மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் தந்தோம்
ஒரு தாய் மக்கள் நாமென்போம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ்த் தாயின் மலரடிவணங்கிடுவோம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
ஒரு தாய் மக்கள் நாமென்போம்
பார்வதி அம்மையாரின் சைவம் சார்ந்த,
ReplyDeleteவிளக்கங்கள் சிறப்பு.
அதிலும் சித்தர்களின் இலக்கணபடி,
காயகற்ப முறைபடி உடலை சித்தி செய்து,
மூவாயிரம் வருடங்கள் வாழ்ந்து,
வருடத்திற்கு ஒரு பாடலாக எழுதிய,
திருமூலரின் திருமந்திர விளக்கம்
ஈசனுக்கு அபிஷேகம் செய்யபட்ட தேன்
போல் இனிமை.....,
ஓம் சரவணபவ நம
சைவத்தைப் பற்றிச் சொல்ல பார்வதிக்குத்தானே முதல் உரிமை!ஆம் சிவனை அருகில் இருந்து அனுபவிப்பதில் பார்வதி அன்னைதானே முதல்!
ReplyDeleteஅறு சமயம் பற்றிய தொகுப்புப் பலருக்கும் நல்ல திறப்பு.பார்வதி அம்மைக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள்.
சற்புத்திர மார்க்கம்=திருஞான சம்பந்தர்.
தாத மார்க்கம்=திருநாவுக்கரசர்(அப்பர்)
சக மார்க்கம்=சுந்தரர்
சன்மார்க்கம்=மாணிக்க வாசகர்
சமயக் குரவர்களைப் பற்றியும், சந்தானக் குரவர்களைப் பற்றியும் பலரும் அறிந்திருக்க வாய்ப்புக்கள் குறைவு.எனவே பின்னர் ஒருமுறை,சமய, சந்தானக் குரவர்களைப் பற்றியும், அவர்களின் நூல்களைப் பற்றியும் அறிமுகக் கட்டுரை எழுத பார்வதி அம்மை/போகர்/அய்யர் ஆகியோரை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்
தேமொழியின் சான்றோனாக்குதல் கட்டுரையை வாசித்தேன்.கற்பனையாக காந்திஜி, பெரியார்,பாரதியார் சந்தித்து உரையாடுவது போல(ஆவி உலகத்திலா?)கட்டுரை நல்ல கற்பனைதான்.
ReplyDeleteஅந்த மூவருமே ஆங்கிலேயர்கள் தங்களுக்கு வசதியாக நம்முடைய நாட்டுப் பழக்க வழக்கங்களைத் திரிபு செய்து பிரசாரத்தில் ஈடுபட்டபோதும் அதற்குப் பின்னரும் வந்தவர்கள்.
சாதி என்னமோ இந்தியாவில் மட்டுமே இருக்கும் ஒரு கொடுமை என்று தவறாகப் பிரசாரம் ஆகியுள்ளது. சமூக இயலாளர்கள் ஆய்வு செய்து சாதி இல்லாத மனிதக் கூட்டமே இல்லை என்று கண்டு பிடித்திருக்கிறாரகள்.ஏதோ ஒருவகையில் சாதி எங்கும் கோலோச்சுகிறது.
uniformity என்பதை unity என்பதுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.இரண்டும் வெவ்வேறானவை.
எல்லோருக்கும் 337தான். அதில் சந்தேகம் இலை. ஆனால் அந்த 337 பங்கீடு செய்யப்பட்டுள்ளதில் நிச்சயம் வேற்றுமை உள்ளது.வேற்றுமைகளை பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்துப் பெரிது படுத்தினால் சமூகப் பிரச்சனை ஆகிறது.அதையே இயல்பாக எடுத்துக்கொண்டால் எந்தப் பிரச்சனையும் உண்டாகாது.
சான்றோன் என்பதே ஒரு சாதி ஆகிவிடும். சாதி முறையில்லை என்று நம்பி கிறித்துவர் ஆனவர்களும் கூட நாடார் கிறித்துவர், வெள்ளாளக் கிறித்துவர்,
தலித் கிறித்துவர் என்று அடையாளத்தை இழக்கவில்லை.முஸ்லிம்களிடமும் இந்தப் பாகுபாடு உள்ளது.
வேதக் கல்வி உட்பட , சமஸ்கிருதக் கல்வி உட்பட எதுவுமே யாருக்கும் மறுக்கப்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.இந்தியாவில் ஆதாரக் கல்வி எல்லோருக்கும் கிடைத்து வந்துள்ளது.உண்மையில் ஆங்கில தேசத்தில்தான் பிரபுக்களுக்கு மட்டுமே படிப்பும், தொழிலாளர்களுக்குப் பள்ளிப் படிப்பே இல்லை என்ற நிலை இருந்துள்ளது.
இங்கே சாதிக்கு ஒரு வீதி இருந்தது உண்மைதான்.வீதிக்கு ஓரிரு திண்ணைப் பள்ளிகளும், அந்த சாதியைச் சேர்ந்த ஆசான்களும் இருந்து எண்ணும் எழுத்தும் கற்பித்துள்ளனர்.
"சாதித் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்" என்பதுதான் பாரதியாரின் அடிப்படை ஸ்வரம்.ஆதார ஸ்ருதி.
இங்கே "சாதி ஒழிக!" என்று கூக்குரல் இடுபவன் குரலைத் தாழ்த்தி
"என் சாதியைத்தவிர.."என்றும் சொல்லிக் கொள்வான்.
"(என் சாதியைத் தவிர மற்ற)சாதிகள் ஒழிக!"
ஒன்றை ஒழித்தால் அதுவே வேறொன்றாகக் கிளம்பும்.ஒழிக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வப் போது சிறிய மாற்றங்களைச் செய்து கொண்டு முன்னேறுவோம்.அழிக,ஒழிக என்ற வெற்றுக் கோஷங்களைத் தவிர்ப்போம். மனித நேயத்தை வளப்போம்.!
எனக்குப் பூச்செண்டு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்த தனுசுவுக்கு மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteபால்குடி, லால்குடி என்ற ரைமிங்கை ரசித்தேன்.
ஆம்! வாத்தியாரைய்யா, தஞ்சாவூரார் ஆகியோரின் நட்பை பொன்னே போல் போற்றுகிறேன்.
தனுசு என்னைப் பாராட்டிக்கவிதை எழுதுவார், பின்னூட்டத்தில் என்று எண்ணினேன்.பாராட்டுக் கவிதை ஆக்கமாகவே வெளி வந்தது மனமகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் நன்றி!
சமூக மாற்றம் வேண்டியும், மனித நேயம் வேண்டியும் தனுசு கேட்டுள்ள சக்தியை அன்னை பராசக்தி அவசியம் கொடுப்பாள்.கவிதை சந்தக் கவி போல நல்ல விறு விறுப்பு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎன் ஆக்கத்திற்கு மாணவர் மலரில் இடமளித்த வாத்தியாருக்கும் படிக்கும் அனைவருக்கும், கருத்து சொன்னவர்களுக்கும், சொல்லப் போகிறவர்களுக்கும் நன்றி.
ReplyDeleteசபரி மற்றும் ஆனந்தமுருகனின் நகைச்சுவை வழக்கம் போல அருமை. ஆனால் ஆனந்தமுருகனின் நகைச்சுவைத் துணுக்குகளை முன்பே வாரமலரில் படித்திருப்பது போலவும் ஏனோ தோன்றுகிறது.
பார்வதியின் ஆக்கத்திற்கு வாத்தியார் தேர்ந்தெடுத்திருக்கும் படத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்:
இந்த சிவதாண்டவம் நடப்பது ஜெனிவாவில் (நம்ம ஸ்விஸ் வங்கி இருக்கே அங்கேதான்...ஹி..ஹி..ஹீ)
The European Organization for Nuclear Research, known as CERN is an international organization whose purpose is to operate the world's largest particle physics laboratory, which is situated in Geneva. It is one of the world’s largest and most respected centres for scientific research. Its business is fundamental physics, finding out what the Universe is made of and how it works.
see: http://en.wikipedia.org/wiki/CERN
On June 18, 2004, an unusual new landmark was unveiled at CERN, a 2m tall statue of the Indian deity Shiva Nataraja, the Lord of Dance.
The statue, symbolizing Shiva's cosmic dance of creation and destruction, was given to CERN by the Indian government to celebrate the research center's long association with India.
In choosing the image of Shiva Nataraja, the Indian government acknowledged the profound significance of the metaphor of Shiva's dance for the cosmic dance of subatomic particles, which is observed and analyzed by CERN's physicists.
see: http://www.redicecreations.com/article.php?id=4700
and
http://infomotions.com/gallery/geneva/Pages/DSCN6224.shtml
சதன்ராஜ் அவர்களின் பதிவு நன்றாக இருக்கிறது. படம் சொல்லும் கதையாக...
ReplyDelete/// மேல்நோக்கிய அம்புகுறிகள் நாம் தினமும் வாழ்க்கையில் பார்க்கும் மனிதர்களின்,பொருட்களின் உயர்வான புறத்தோற்றம்.இந்த புறதோற்றத்தை கொண்டு,நல்லவன், நல்லது என நம்பி எத்தனைமுறை ஏமாற்றப்பட்டிருக்கிறோம். அதுபோல் கீழான அம்புகுறிகளைப்போல் நல்ல புறத்தோற்றம் இல்லாத மனிதர்களின் அன்பு,நட்பை இழந்திருப்போம்.///
என்று தத்துவம் போன்றதொரு வாழ்க்கைப்பாட விளக்கமும் நன்றாக இருக்கிறது. ஆனால் கண்ணை நம்பாதே என்ற தலைப்பின் கீழ் தொழில்: Used Cars Seller என்று குறிப்பிடவும் நான் பழைய கார் வாங்கும்பொழுது கண்ணை நம்பாமல் எப்படி கவனமாக வாங்க வேண்டும் என்று அறிவுரை சொல்லப்போகிறார் என்று அவசரப்பட்டு நினைத்துவிட்டேன். :)))
ஆனந்த முருகனின் சொற்களுக்கான புதிய விளக்கங்கள் படித்து ரசித்தேன்.
ReplyDelete'செயல்படு முன்னரே வெற்றி கிடைப்பது அகராதியில் மட்டுமே' என்பது ஆழ்ந்த கருத்து உடையது. இதை வைத்து தனுசு ஒரு கவித எழுதலாம்.
சபரியின் நகைச்சுவையும் நன்றாக இருந்தது. இருவருக்கும் பாராட்டுக்கள்.
பார்வதியின் ஆக்கத்தில் கருத்தைக் கவர்ந்தது ....
ReplyDelete///இறைவன் எண்குணத்தான். எண்குணமாவன, தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை , முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவையாம்.///
திருவள்ளுவரின் ஒன்பதாவது குறள்:
"கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை."
என்பதாகும்.
வள்ளுவர் சைவத்தை சார்ந்தவராக இருக்கக்கூடும் என்று கருதுபவர்களுக்கு இந்தக் குறள் ஒரு சான்றாக உதவி இருக்கலாம்.
எண்குணங்களாவன:
1. தன்வயத்தன் ஆதல்,
2. தூய உடம்பினன் ஆதல்,
3. இயற்கை உணர்வினன் ஆதல்,
4. முற்றும் உணர்தல்,
5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்,
6. பேரருள் உடைமை,
7. முடிவு இல் ஆற்றல் உடைமை,
8. வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.
இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது என்று பரிமேலழகர் உரை கூறும்.
குன்றக்குடி அடிகளாரும் இதே மேற்கோளைத்தான் காட்டுவார்.
எண்குணத்தான் என்பதற்கு பொருள் உரைக்கும் பொழுது ...
"சிந்தித்து உணர்வதற்கு எளிமையான குணமுடைய" இறைவனது என்று திருக்குறளார் முனுசாமி அவர்களும்,
"எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான" கடவுளின் என்று சாலமன் பாப்பையா அவர்களும் குறிப்பிடுவார்கள்.
நான் அறிந்த மற்ற உரை ஆசிரியர்களான மணக்குடவர், மு.வ, போன்றவர்கள் எட்டுகுணத்தை உடைய இறைவன் என்பதோடு நிறுத்திக் கொள்வார்கள், எட்டு குணங்கள் யாவை என்ற விளக்கத்தை கூறியதாக அறிய முடியவில்லை
கலைஞர் தன் உரையில் எண்குணம் என்ற சொல்லையே தவிர்த்துவிடுவார்.
(ஹா.... பார்வதியின் ஆக்கத்திற்கு நானே உருப்படியான கருத்தாக எழுதியது எனக்கே மயக்கமாக வருகிறது.)
பாரதி படத்தில் வந்த மது பாலகிருஷ்ணன் பாடிய புலமைபித்தன் அவர்களின்
ReplyDelete"எதிலும் இங்கு இருப்பானவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
தவழும் நதியைத் தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பானவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?"
என்ற பாடலை நினைவு படுத்தியது பார்வதியின் ஆக்கம்.
பாட்டுக்கொரு புலவனான பாரதியே தன் பாடலைப் பாடுவதாக சித்தரித்த பொழுது புலமைபித்தன் எப்படி உணர்ந்திருப்பார் என்று என்னால் கற்பனைகூட செய்ய முடியவில்லை. பார்க்க விரும்புபவர்களுக்காக காணொளி சுட்டி: http://youtu.be/nn9tGTm-sHM
நம் அனைவர் சார்பாகவும் தனுசு கொடுத்த பூச்செண்டு கவிதைக்கு நன்றி. அணைத்து வரிகளுமே பிடித்ததுடன் KMRK அவர்களின் படைப்புக்களை நினைவிற்கு கொணர்ந்தது.
ReplyDelete///செம்பிறை சீடருக்கு
பால்குடியில்
வந்தது தொண்டாற்றும் எண்ணம்.
அது
லால்குடியில் கோலோச்சுது இன்னும்.///
வரிகள் மிகவும் பிடித்தது.
"சக்தி கொடு' பாட்டில் சமுதாயத்தில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி, வெம்பி, மனித நேயத்திற்கு சக்தி கொடுக்க வேண்டியுள்ளீர்கள். அடுத்தமுறை KMRK ஐயா காட்டிய நல்ல உள்ளங்களுக்காக, தொண்டு உள்ளங்களுக்காக சக்தி கொடுக்க சொல்லும் உங்கள் பாடல் எப்படி இருக்கும் என்று அறியவும் ஆவலாகவும் உள்ளது தனுசு.
முப்பட்டகதிற்கு முன்னால் படும் வரை அது பாகுபாடற்ற வெள்ளொளிக் கற்றைதான். மறுபுறம் வந்தபின்பு அது நிறமாலை ஆகிவிடுகிறது. அப்பொழுது அது "வர்ணம்" பல நிறைந்த நிலைக்கு வந்துவிடுகிறது. பிறகு யாரைக் கேட்டாலும் பேதங்களைத்தான் விளக்க முற்படுவார்கள், ஏனென்றால் அதுதான் கண்ணுக்குத் தெரியும். முப்பட்கத்தின் முன்பாயும் வெள்ளொளிக் கற்றையிடம் யாராலும் பேதம் காணமுடியாது. இது நான் விளங்கிக் கொண்டவரை விளக்க முற்பட்டது.
ReplyDelete///kmr.krishnan said... ஒன்றை ஒழித்தால் அதுவே வேறொன்றாகக் கிளம்பும்.ஒழிக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வப் போது சிறிய மாற்றங்களைச் செய்து கொண்டு முன்னேறுவோம்.அழிக,ஒழிக என்ற வெற்றுக் கோஷங்களைத் தவிர்ப்போம்.///
///அய்யர் said...
சாதிகள் ஒழிய வேண்டாம்..
சாதிவேற்றுமை தான் ஒழிய வேண்டும்
இது அய்யரின் கருத்து..
இவர் இப்படித்தான் என எண்ணினால்
(ஒரு வரி எழுதி வையுங்களேன்)///
மனித குலத்திற்கு இதுவரை இந்த வேறுபாடின் (அதாவது ...சாதிகள் ஒழிய வேண்டாம்..ஆனால் சாதிவேற்றுமை தான் ஒழிய வேண்டும்) அடிப்படை புரிந்திருப்பதாகத் தெரியவில்லை.
உண்மையில் சாதிகள் ஒழியவேண்டாம் எனப் பிடித்து வைத்துக்கொள்வது "எந்தவிதத்தில், யாருக்கு, என்ன பயன்?" என்பதும் எனக்குப் புரியவில்லை. இதன் பயனை யாராவது ஒரு கட்டுரை எழுதி விளக்கினால் பரவாயில்லை.
ஜாதி இருந்துவிட்டு போகட்டும் அதனால் இன்னென்ன பலன் நமக்கு என்று ஒடுக்கப்பட்ட இன மக்களும் அவர்கள் பார்வையில் இருந்து விளக்கினால் இன்னமும் பயனுள்ளதாக இருக்கும்.
குடி குடியைக் கெடுக்கும் என்று தெரிந்த பின்பு, கண்கூடாகவும் கேடுகளைப் பார்த்த பிறகு விட்டுவிடுவது நல்லதல்லவா?
இன்றைய ஆக்கங்கள் அனைத்துமே கொஞ்சம் ஹெவி சப்ஜெக்ட்..
ReplyDeleteபொறுமையா டீப்பாப் படிச்சாத்தான் விளங்கும் என்கிற அளவுக்கு இருந்த ஆக்கங்கள் பல..
குறிப்பாக தேமொழி,பார்வதி,தனுசுவின் ஆக்கங்கள்..
போகிற போக்கிலே ஏனோ தானோவென்று ஸ்க்ரோல் பண்ணிவிட்டுப் நுனிப்புல் மேய்ந்து போகும் விதத்திலே வெகுஜனப் பத்திரிகை ஆக்கங்களில் இருந்து வாரமலர் தனித்துவத்துடன் வேறுபட்டு வளர்ந்து நிற்பதை இன்றைய வாரமலர் பறைசாற்றுகிறது..பொறுமையாகப் படித்தேன்...
ஆக்கங்களை ஆக்கிய அனைவருக்கும், வெளியிட்ட வாத்தியாருக்கும் வாரமலர் வாசகர் குழு சார்பாக வாழ்த்துக்கள்..
சதம் அடித்த சாதனையாளர்
ReplyDelete'சான்றோர்' KMRK அவர்களுக்கு இந்தப் பொன்னாடையை அணிவித்து,
'அருட்தந்தை' என்று வகுப்பறை நண்பர் நந்தகோபால் அவர்களால் பாசத்துடன் விளிக்கப்பட்ட பெரியவர் என்ற முறையிலே
அவருக்கு தந்தையர் தின வாழ்த்துக்களைக் கூறிக்கொள்ளும் இதே தருணத்தில்
ஆக்கியோன் என்று தன்னை ஆக்கிக் கொண்ட KMRK அவர்களின் தளராத, சீரிய எழுத்துப்பணி வாராவாரம் தொடர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
தேமொழி ஆக்கம் இன்றைய மலரில் என்னைக் கவர்ந்தது..
ReplyDeleteநல்ல வசனங்களும் காட்சியமைப்பும்தான் அருமையான நடையும்தான் காரணம்..
"'தந்தையர் நாடெனும் போதினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே' என்று நெஞ்சை நிமிர்த்திப் பாடிக்கொண்டேவந்தார் பாரதியார்" என்று பாரதியாரின் என்ட்ரியை வைத்திருக்கலாம்..
நல்ல கருத்தாழமிக்க கற்பனை... இன்று தேமொழி அவரின் எழுத்து முயற்சியில் இன்னொரு பரிணாமத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார்.
சான்றோர் ஏற்கும்,சான்றோர் போற்றும் எதிர்காலச் சான்றோரை ஆக்கும் முயற்சியில்,
சமுதாயப் பார்வையில்அமைந்த தேமொழி அவர்களின்
புதுமை ஆக்கத்துக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துக்கள்..
தனுசுவின் கவிதைகளையும் , சதன்ராஜ் அவர்களின் எழுத்தார்வத்தையும் பாராட்டும் இதே வேளையில் , ஆனந்தமுருகன்,சபரி அனைவரின் நகைச்சுவை ஆக்கங்களும் நன்று..என்று அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
ReplyDeleteபுரியாத விவரங்கள் மிக அதிக அளவிலே நிறைந்திருந்த சகோதரி பார்வதி ராமச்சந்திரன் அவர்களின் விளக்கக் கட்டுரையிலே காணப்படும் பல வார்த்தைகளை பலகாலம் வகுப்பறையில் கேள்வியாகவே கேட்டு வந்த சிலரின் பதில் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் ஆக்கமாகக் கொள்ளலாம்..
ReplyDeleteமுன்னோர்களின் பழைய செய்யுள் பாடல்களை சரியா,தவறா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்காமல், அனுபவித்துப் படித்து அவரவர் பார்வையில் பொருள் புரிந்து யாரோ ஒருவர் இப்படி எதையாவது எழுதிவைக்காமல் போனால் இங்கே வகுப்பறையில் முன்னாளில் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு செய்யுள் வடிவிலே சொல்லப்பட்ட பதில்கள் பற்றித் தெரியாமலே போகிவிட்டிருந்திருக்கும்..
அந்த வகையில் பார்வதி ராமச்சந்திரன்அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
என் நூறாவது ஆக்கத்திற்குப் பாராட்டுத் தெரிவித்த போகர், அய்யர் மற்றும் மைனர்வாளுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅய்யர் இவ்வளவு பெரிய பின்னூட்டம் இடுவார் என்று நினைக்கவில்லை.ஒரு சிறு திருத்தம்.
பாரதி விழாவுக்குத்தான் நான் ஓர் அறிக்கை சமர்ப்பித்தேன்.நாட்டியாஞ்சலிக்கு தஞ்சாவூராரே அறிக்கை, புகைப்படங்களுடன் அளித்தார்.
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteஇன்றைய ஆக்கங்கள் அனைத்தும் அற்புதகள்,
திரு கே.முத்துராமகிருஷ்ணன்அவர்களின் நூறவது படைப்புக்கு வழ்த்துக்கள்,தொடருட்டும் அவரது ஆக்கம்.
மற்றும் அனைவருக்கும் பாரட்டுக்கள் உங்கள், அனைவருக்கும் இறைவனின் அருள் கிட்டட்டும் தொடரும் ஆக்கங்களுக்கு வழ்த்துக்கள்
நன்றி
இங்கே 'சாதி ஒழிப்பு இயக்கம்'எப்படித் துவங்கியது என்று பார்ர்க்க வேண்டும்.
ReplyDeleteஅவர் அவர் பணிகளை ஒரு தர்மமாகக் கருதி ம்க்கள் செய்து வந்து கொண்டிருந்த கால கட்டத்தில் மக்களிடையே எந்த பேத உணர்ச்சியும் இல்லை.
அரசியலில் இந்தியர்கள் போட்டியிடலாம் என்ற சமயத்தில் சில பிராமணர் அல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தோல்வியைத் தழுவுகிறார்கள்.
தங்கள் தோல்விக்குத் தங்களுக்குப் பிராமணர்களின் ஓட்டு கிடைக்காததே காரணம் என்று தாங்களாகவே கற்பித்துக் கொள்கிறார்கள்.
எனவே தங்களுக்கு ஓர் ஓட்டு வங்கியை உருவாக்க ஒரு பொது எதிரியைச் சுட்ட வேண்டும். அதற்கு வாய்ப்பாக 'பிராமணன்தான் ஜாதியை உருவாக்கினான்;அவனை எதிர்த்து மற்ற சாதிக்காரார்கள் அனைவரும் ஒன்று
திரள வேண்டும்' என்று பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டது. இப்படி பிரச்சாரம் செய்தவர்கள் ஒருவருக்கும் சாதி ஒழிப்பில் நாட்டமில்லை.சொல்லப் போனால்
சாதி இருந்தால்தான் அவர்களுக்கு அரசியல் ஆதாயம்.
இன்று வரை இது தொடர்ந்து வருகிறது. இட ஒதுக்கீடு,சாதிவாரி கணக்கெடுப்பு என்று சாதீய அரசியல் பல்கிப் பெருகி வருகிறது. இதில் அடிக்கடி சாதி ஒழியவேண்டும் என்று பேசுவது,தன்னை முற்போக்க்காகக் காட்டிக் கொள்ள வெறும் வாய்ப் பந்தல் தானே ஒழிய, இடது சாரிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் வேட்பாளரின் சாதியை கணக்கில் எடுத்துத் தேர்தலை சந்திக்கும் போது, சாதியை ஒழிப்பதாகப் பேசுவது 'சும்மனாச்சு'க்கும்தான்!
அகவை அறுபதைத் தொட்ட போதும்
ReplyDeleteஅருமையாய் ஆக்கங்கள் பல தந்தீர்
கருவில் இருந்தே தொண்டுகள் செய்யும்
உருவாய் வளர்ந்தீர், உயர்ந்தீர் சிறந்தீர்
எழுதத் தொட்டது எத்துறையாயினும்
அழுந்தப் பதித்தீர் அன்பின் முத்திரையை
பொழிந்திடும் நல்சொல் அருவியாலே
பழகுதமிழ் பொலிந்திடும் தங்கள் ஆக்கங்களாலே
ஆக்கங்கள் தருவதோடு அடுத்தவருக்கு நல்
ஊக்கங்கள் தருவதிலும் தாங்களே உயர்ந்தவர்
தேக்கங்கள் இல்லா தங்கள் எழுத்துநடை மூலம்
தாக்கங்கள் பெற்றே நான் எழுதுகின்றேன்
எந்தையின் இடத்தில் தங்களை
சிந்தையில் நிறுத்துகின்றேன்
வந்தனை செய்கின்றேன்
வாழ்த்த வயதில்லை
ஆயிரம் பிறை கண்டு
அரிய பல தொண்டுகள் செய்து
சீரிய புகழ் அடைந்து
சிறந்ததோர் வாழ்வு வாழ்ந்து
நூறையும் தாண்டி
நூறாயிரம் ஆக்கம் தந்து
பாயிரம் நான் பாடும் வகை செய்தருளல் வேண்டும்
மாற்றங்கள் நிறைந்த உலகில்
மாறாது தங்கள் எழுத்திளமை
போற்றியே வணங்குகின்றேன் புவி
சாற்றுக தங்கள் புகழை நாளும்.
சதன்ராஜின் வருகை நல்வரவாகுக
ReplyDeleteஆன்மாவை மறைக்கும் மாயை கண்கள் . தெளிவாக சொல்லி உள்ளார்.
"கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் ,உண்மை இல்லாதது ,
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும் "
இது தலைவர் படப்பாடல்.
ஆனந்தமுருகனுக்கும் ,சபரிக்கும் பரிவர்த்தனையா? ஆங்கிலம்,தமிழ் இருவருக்கும் இடம் மாறி விட்டது இரண்டும் நன்றாக இருந்தது.நன்றிகள்.
ReplyDeleteParvathy Ramachandran said...
ReplyDelete///ஆக்கங்கள் தருவதோடு அடுத்தவருக்கு நல்
ஊக்கங்கள் தருவதிலும் தாங்களே உயர்ந்தவர்
தேக்கங்கள் இல்லா தங்கள் எழுத்துநடை மூலம்
தாக்கங்கள் பெற்றே நான் எழுதுகின்றேன்///
இந்த வரிகள் அருமை பார்வதி. கல்லூரி நாட்களில் கவிதை எழுதிய ஆர்வம் இன்றும் தொடருகிறதா? கவிதை நன்றாக இருக்கிறது.
///kmr.krishnan said... இங்கே 'சாதி ஒழிப்பு இயக்கம்'எப்படித் துவங்கியது என்று பார்க்க வேண்டும்....///
ReplyDeleteKMRK ஐயா,
'சாதி ஒழிப்பு இயக்கம்'எப்படித் துவங்கியது என்று ஆராய்ந்த உங்கள் கண்ணோட்டம் அறிந்துகொண்டேன்.
எந்தக் கண்ணோட்டத்திற்கும் மறுபக்கம் உண்டு.
திருட்டு நடந்து ஒருவர் அதனால் பாதிக்கப்பட்டால் திருடுவது தவறு என்ற அறிவுரை கிளம்பும்.
கொலை செய்யப் பட்டு ஒருவர் வாழ்க்கை பாதித்தால் கொலையின் பாதகம் பற்றி அறிவுறுத்தப்படும்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...
அதுபோல தன்னைப் போன்ற மக்கள் காரணமின்றி கேவலப்படுத்தும் பொழுது அதைக்கண்டு கொதித் தெழுந்தவர்கள் புரட்சிக் குரல் எழுப்பினார்கள்.
ஒரு பாதிப்பு என்ற நிகழ்ச்சி நடக்காவிட்டால் அதைப் பற்றி பேசவும் தேவை இருப்பதில்லை.
(மேலும் நீங்கள் குறிப்பிடுவது உதய சூரியன் காலத்து அரசியல் தந்திரங்களை. இப்பொழுது அது அரசியல் ஆதாயம் தேடுவதில் வந்து நின்றுவிட்டது. அதிலும் கழகத்திடம் பதவியைப் பறிகொடுத்த காமராஜரும் ஓட்டு வங்கியை உருவாக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பொது எதிரியும் கிடையாது.)
ஆனால் இந்தப் பிரச்சனை அதற்கு முன்பே இருந்திருந்ததால்தான் இன்று நான் பதிவில் எடுத்துக்கொண்ட பெரியோர்களான காந்தியும், ஈ.வெ.ராவும் , பாரதியும் போராடினார்கள்.
அதிலும் இந்த மூவரும் அரசியல் ஆதாயம் தேடினார்கள் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காமல் மக்கள் நலனை மட்டும்தான் கருத்தில் கொண்டார்கள்.
மேலும் இந்த மூவரும் பாதிக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களும் அல்ல. மக்கள் கேவலமாக நடத்தப் படாவிட்டால் அவர்களுக்கெல்லாம் இந்த வேலை இருந்திருக்கப் போவதில்லை.
நம் குற்றத்திற்கு, நம்மிடம் குற்றம் உள்ளது என்று சுட்டிக்காட்டிய வெளிநாட்டினரையோ, பிற மதத்தினரையோ குறை கூறுவதால் இழப்பு அவர்களுக்கு இல்லை. சரியாக நடத்தப்பட்டால் மற்றவர்கள் ஏன் அடுத்த மதத்தை நாடுகிறார்கள். சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றம் சொல்லும் பொழுது மற்ற மூன்று விரல்கள் நம்மைத்தான் காட்டும். காலம் காலமாக நமக்கு உதவியது என்றாலும் புரையோடி விட்டால் உயிருக்கு ஆபத்தான அங்கத்தை வெட்டி எரிந்து உயிரைக் காபாற்றதான் வேண்டும்.
இந்த நூற்றாண்டில் இந்திய மக்கள் அனைவரும் இந்தியர் என்ற உணர்வுடன் முன்னேற வேண்டிய நேரத்தில் ஆக்கபூர்வமாக செயல் படுவது நம் கடமை என்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் கருத்திற்கு நன்றி.
அய்யர் said...சாதிகள் ஒழிய வேண்டாம்..
ReplyDeleteசாதிவேற்றுமை தான் ஒழிய வேண்டும்
நல்ல கருத்து அய்யர் அவர்களே.
அய்யர் said..
ReplyDeleteஎதை கொடுத்தாலும் அதன்
சதை எடுத்து தொடுக்கும் நீ
வில்லாளன் அல்ல
சொல்லாளன்.. (சொல்லை ஆள்பவன்)
உற்சாகப் படுத்திய பாராட்டுக்களுக்கு நன்றிகள் அய்யர் அவர்களே.
kmr.krishnan said...சமூக மாற்றம் வேண்டியும், மனித நேயம் வேண்டியும் தனுசு கேட்டுள்ள சக்தியை அன்னை பராசக்தி அவசியம் கொடுப்பாள்.கவிதை சந்தக் கவி போல நல்ல விறு விறுப்பு
ReplyDeleteகவிதையை ரசித்தமைக்கு நன்றிகள் கிருஷ்ணன் அவர்களே.
அய்யர் said..உயர்த்திக்காட்டிய தோழியே.. உம்மை
ReplyDeleteஉயர்ந்த (மன) ஆசனத்தில் அமர்த்துகிறோம்.
சிறப்பான வாழ்த்தொன்று சூலையில்
செந்தமிழால் தனுசு படைப்பார்
தேமொழி said...அடுத்தமுறை KMRK ஐயா காட்டிய நல்ல உள்ளங்களுக்காக, தொண்டு உள்ளங்களுக்காக சக்தி கொடுக்க சொல்லும் உங்கள் பாடல் எப்படி இருக்கும் என்று அறியவும் ஆவலாகவும் உள்ளது தனுசு.
உங்களின் ஆர்வத்திற்கு நன்றிகள்.இறைவன் நாடினால் எழுதிவிடுகிறேன்.
ஆர்வத்தில் மறந்து விட்டேன் .சக்திகொடு எனும் கவிதைக்கு இந்திய தாயை தாங்கிய படம் வெளியிட்ட அய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அந்த கவிதைக்கு அத்தனை பொருத்தம் அது. அந்த படம் தான் கவிதையை தூக்கி நிறுத்துகிறது .மீண்டும் நன்றிகள் அய்யா .
ReplyDeleteஆய்க்குடி அமர் சேவா சங்கம் பற்றிய அருமையான தகவல்கள் நிறைந்த அற்புதப் பதிவு தங்கள் நூறாவது ஆக்கமாக அமைந்தது. அதைப் படித்து மனம் நிறைந்தது.
ReplyDeleteதன்னம்பிக்கை தொலைத்தோருக்கெல்லாம் நன்னம்பிகை கொடுக்கும் திரு.இராமகிருஷ்ணனின் சேவையை முதன்முதலில், எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய ஒரு தொடர்கதை மூலமே நான் அறிந்தேன்.
சமீபத்தில் ஒரு மாத இதழில் வெளிவந்த, திருமதி.சித்ரா இராமகிருஷ்ணனின் (படத்தில் திரு, இராமகிருஷ்ணனின் அருகிலிருப்பவர்) பேட்டி என் கண்களை நிரப்பியது. அவரைப் பற்றித் தெரிந்து, புரிந்து, பல போராட்டங்களுக்குப் பிறகு அவரை மணந்து, தன்னலம் சிறிதும் இல்லாமல், 'காரியம் யாவினும் கைகொடுத்து' வாழ்ந்து வரும் அந்த உன்னத மாதரசியின் உயர்ந்த மனப்பாங்கைப் படிக்கும் போது, எனக்குத் தங்களின் நினைவு வந்தது. தொண்டுகள் செய்வோரைப்போல், தொண்டு செய்ய ஊக்குவிப்போரும், அவர்க்கு உதவுவோரும் மிக உயர்ந்தவரே.
அந்த வகையில் தங்களின் இந்த ஆக்கம் என் மனதில் இருப்பதைப் படித்தது போல் அமைந்தது மிக்க மகிழ்ச்சி. அருமையானதொரு ஆக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.
Parvathy Ramachandran said...
ReplyDeleteஆக்கங்கள் தருவதோடு அடுத்தவருக்கு நல்
ஊக்கங்கள் தருவதிலும் தாங்களே உயர்ந்தவர்
தேக்கங்கள் இல்லா தங்கள் எழுத்துநடை மூலம்
தாக்கங்கள் பெற்றே நான் எழுதுகின்றேன்.
நல்ல பாராட்டு ,உண்மையான பாராட்டும்கூட . இந்த நாலே வரிகளில் கிருஷ்ணரை அடக்கி விட்டர்கள் .அதனால் அவர் தொடந்து எழுத வேண்டும் ,அதுதான் நம் அனைவரின் விருப்பமும் ,கட்டாயம் ஏற்றுக்கொள்வார் என நம்புவோம்
சகோதரர், திரு.சதன்ராஜின் முதல் ஆக்கம் அவர் எழுத்து துறைக்குப் புதியவரல்ல என்று தெளிவாக உணர்த்துகிறது.
ReplyDelete//தீவிர பயிற்சி மேற்கொண்டு, இந்த மனதைகடந்து ஆன்மாவை தரிசித்து,ஆன்மாவின் கட்டுப்பாட்டில் புலன்களை வைத்து,அப்போது பார்த்தால் இந்த உலகிலுள்ள அனைத்தின் உண்மை சொரூபம் தெரியவரும்//
முற்றிலும் உண்மை. ஆனால், ஆன்மீகத்தின் அடிப்படையே உணர்தல் என்பதாக இருக்கும் போது, இந்த அடிப்படையை நம்புபவரே, இந்த வரிகளின் சத்தியத்தை உணர முடியும்.
//.ஆன்மீகம் தொடர்பான சிறப்பான கட்டுரைகள் எழுதும் சகோதரி பார்வதிஅவர்கள்//
நான் ஆன்மீகம் தொடர்பான கட்டுரைகள் எழுதுகிறேன். 'சிறப்பான' என்கிற நிலைக்கு வருவதற்கு, இன்னும் பலகாத தூரம் போக வேண்டும்.
அருமையான ஆக்கம். அறிவியல், ஆன்மீகம், வாழ்வியல் நடைமுறைகள் என்று எல்லா பக்கங்களிலிருந்தும் சிந்தித்து எழுதப் பெற்ற சிறப்பான ஆக்கம். மேலும் பல நல் ஆக்கங்களை எதிர்ப்பார்க்கிறேன். மிக்க நன்றி.
எனது ஆக்கங்களை தொடர்ந்து வெளியிட்டு, என் எழுத்துக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் வாத்தியார் அவர்களுக்கு, 'நன்றி' என்ற ஒரு வார்த்தை போதாது. தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். படித்துக் கருத்துரைக்க நேரம் எடுத்துக் கொண்ட சக மாணவர்களுக்கும் நன்றிகள்.
ReplyDeleteவெகுநாட்களுக்குப் பின் தேமொழி அவர்களுக்கு, என் ஆக்கத்தின் தாக்கம், இரு நீண்ட பின்னூட்டங்கள் எழுத வைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நான் கலைஞரின் உரை தவிர்த்து மற்ற அனைத்துப் பெருமக்களின் உரையையும் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல, சைவ சித்தாந்தம் சார்ந்தே, 'எண்குணத்தான்' விளக்கப்பட்டிருக்கிறது. திருக்குறளின் முதற்குறட்பாவில் வரும், 'ஆதிபகவன்' என்ற வார்த்தைக்கே, சைவ சித்தாந்தம் சார்ந்து பொருள் கூற இயலும். நான் எழுதிய எண்குணங்களை சீர் பிரித்துக் கொடுத்த மேன்மைக்கு நன்றி.
ReplyDeleteஎன் கவிதை பற்றிய தங்களின் பாராட்டுக்கும் நன்றி. எப்போதாவது இப்படிப் 'பழைய நினைப்பு' வந்து விடுகிறது. மாணவர் மலரில், தெய்வீகக் கவிஞர், திரு. ஆலாசியம் அவர்களின் கவிதைகள், திரு.தனுசுவும், தாங்களும் எழுதும் புதுக்கவிதைகள் ஆகியவற்றைப் படித்த பிறகு, கவிதை எழுதும் (ஒரு பயம்தான்) ஐடியாவைக் கைவிட்டிருக்கிறேன்.
தேமொழி அவர்களின் ஆக்கம் மிக நல்ல கற்பனை. எழுத்து நடை, தெளிந்த நீரோடை போல் இருந்தது.
ReplyDeleteசாதி ஒழிய வேண்டும் என்பது நல்ல கருத்துதான். ஆனால் ஒழிப்பது என்பது எளிதல்ல. 'சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்' தடுத்துக் கொண்டே இருக்கும். சில நாட்களுக்கு முன் மதிப்பிற்குரிய, திரு. ஜகந்நாத் அவர்கள் சாதி ஒழிப்பைக் குறித்துத் தெரிவித்த கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.
தனுசு அவர்களின் இரு கவிதைகளும் அருமை. பூச்செண்டு கொடுத்த மேன்மைக்கு ஒரு லாரி நிறையப் பூச்செண்டு தரலாம்.
ReplyDelete//ஆயிரம் பழமொழிக்கு
அர்த்தம் சொன்னார்.
"உன்னைச்சொல்ல
உன் நண்பனை காட்டு"-இந்த
பழமொழிக்கு
தன்னையே தந்தார்.//
வரிகள் அருமை. இரண்டாவது கவிதை தங்கள் வழக்கமான பாணியில் அமைந்திருந்தது. உணர்ச்சி பொங்கக் கவிதை தருவதில் உங்களுக்கே முதலிடம். மிக்க நன்றி.
///தேமொழி said...
ReplyDeleteவள்ளுவர் சைவத்தை சார்ந்தவராக இருக்கக்கூடும் என்று கருதுபவர்களுக்கு இந்தக் குறள் ஒரு சான்றாக உதவி இருக்கலாம்.///
இதில் சந்தேகம் என்ன தோழியே..
சைவர்களின் வேதம் திருக்குறளே
என ஒரு இயக்கம் முழங்கி வருவதினை தாங்கள் அறிவீர்கள் தானே..,,,
தேடிப் பிடித்து தந்த உங்கள் மேலதிக தகவலுக்கு சிரம் குவித்து தருகிறோம் நன்றிகள்,,,
சபரியின் ஆக்கம், ரொம்ப நன்றாக இருக்கிறது. சற்றே நீண்ட ஆக்கங்கள் தருமாறு வேண்டுகிறேன். ஆனந்த முருகனின் ஆக்கமும் நன்று. ஆமாம், தமிழில் எழுத ஆரம்பித்தீர்களே என்ன ஆச்சு?!!!
ReplyDelete///தேமொழி said...
ReplyDeleteஉண்மையில் சாதிகள் ஒழியவேண்டாம் எனப் பிடித்து வைத்துக்கொள்வது "எந்தவிதத்தில், யாருக்கு, என்ன பயன்?" என்பதும் எனக்குப் புரியவில்லை///
மாம்பழத்திலும் சாதி உண்டு
பங்கனபள்ளி ருபஸ்தா அல்போன்ச நீலம் ருமானி காளபாடி என 117 சாதிகள் உண்டு
வாழைப்பழத்திலும்
பூவன், ரஸ்தாலி, செவ்வாழை, என 13 சாதிகள் உள்ளன..
சாதிக்காக சண்டை வேண்டாம்
சாதிக்க பிறந்தவர்கள் நாம்
சாதிகள் ஒழிய அழிய வேண்டாம்
தில்லை வாழ் அந்தணருக்கு அடியேன்
என்று தொடங்கிய திருத்தொண்டர் தொகையிலே அடுத்த வரியிலேயே திருநீல கண்டத்து குயவனார்க்கு அடியேன் என வேற்றுமை பாராது சாதியை சொன்னதைமறக்க முடியுமா
இதே கருத்தை வைத்துக்கொண்டு
வேதியராயினும் ஒன்று அன்று
வேறு குலத்தவராயினும் ஒன்றே என
சொன்ன பாரதியின் வாக்கு ஒப்பு சிந்திக்கத் தக்கது..
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பதிப்பித்த சாதிகள் பற்றிய எமது ஆய்வுகட்டுரையினை நினைவு படுத்தி நிழலாட வைத்து விட்டீர்கள்..
வாழ்க
/// kmr.krishnan said...
ReplyDeleteஅய்யர் இவ்வளவு பெரிய பின்னூட்டம் இடுவார் என்று நினைக்கவில்லை.ஒரு சிறு திருத்தம்.
பாரதி விழாவுக்குத்தான் நான் ஓர் அறிக்கை சமர்ப்பித்தேன்.நாட்டியாஞ்சலிக்கு தஞ்சாவூராரே அறிக்கை, புகைப்படங்களுடன் அளித்தார்.////
அன்னை அளக்க முடியுமா தோழரே..
அந்த தகவலை திருத்திக் கொண்டோம்
நன்றி வாழ்க..
/// Parvathy Ramachandran said...
ReplyDeleteஆக்கங்கள் தருவதோடு அடுத்தவருக்கு நல்
ஊக்கங்கள் தருவதிலும் தாங்களே உயர்ந்தவர்
தேக்கங்கள் இல்லா தங்கள் எழுத்துநடை மூலம்
தாக்கங்கள் பெற்றே நான் எழுதுகின்றேன்...////
சபாஷ் ஒன்று போதுமா..
அவருக்கும்
அதை வடித்துச் சொன்ன உங்களுக்கும்
//Bhogar said...
ReplyDeleteபார்வதி அம்மையாரின் சைவம் சார்ந்த,
விளக்கங்கள் சிறப்பு.//
தங்களின் மிக அற்புதமான மேலதிகத் தகவல்களுக்கும், என் எழுத்துக்கள் குறித்த
தங்கள் பாராட்டுக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த பணிவான வணக்கங்களையும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் எழுத்துக்கள் என்னையும் அறியாமல் என் கண்களில் நீர் அரும்பச் செய்தன. 'நான் வாழ்வதும் எழுதுவதும் வீணல்ல' என்ற மிகப் பெரும் உத்வேகம் தந்தன என்றால் மிகையில்லை. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
எனது முதல்பதிவை வெளியிட்ட வாத்தியார் அய்யாவிற்கு மிக்கநன்றி.லால்குடி கிருஷ்ணன் அவர்கள் சதமடித்த அன்று என் முதல் கணக்கு துவங்கியதை என்றுமே என்னால் மறக்கமுடியாது.அவரின் சதத்திற்கு தலைவணங்கி வாழ்த்துகிறேன்.அவர்கள் இன்னும் பல பதிவுகள்,பின்னூட்டங்கள் எழுதி என்னைப்போன்றோரை ஊக்குவிக்கவேண்டும்.அதற்கு அவருக்கு நல்ல உடல்,மன நலத்தை தறுமாறு செந்தூர்முருகனை பிரார்த்திக்கிறேன்.மேலும் என் கட்டுரயை படித்து பாராட்டிய அனைத்து சகோதர,சகோதிரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
ReplyDelete///minorwall said...
ReplyDeleteமுன்னோர்களின் பழைய செய்யுள் பாடல்களை சரியா,தவறா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்காமல், அனுபவித்துப் படித்து அவரவர் பார்வையில் பொருள் புரிந்து யாரோ ஒருவர் இப்படி எதையாவது எழுதிவைக்காமல் போனால் ///
ஆமாம் தோழரே...
நீங்கள் எப்போது பிறந்தீர்கள்
என கேள்வி கேட்டால் குறிப்பிட்ட தேதியை சொல்லும் நமக்கு
உண்மையிலேயே அப்போது தான் பிறந்தோம் என்று தெரியுமா..
இதனை அளவை இலக்கணம் என்று சொல்வதுண்டு.
காட்சி அளவை, கருத்தல் அளவை, உரை அளவை இன்மை அளவை உண்மை அளவை உவமை அளவை ஒழிவு அளவை வழக்கு அளவை இயல்பு அளவை பொருள் அளவை என பல உண்டு இவைகளை காட்சி கருதல் உரை ஆகியவனுற்றுள் அடக்கலாம்..
அதனால் தான் முன்னரே சொன்னோம் பல அடிப்படை விஷயங்களை நாம் தவறாக புரிந்து கொண்டிருப்பதாக..
காத்திருக்கின்றோம்
காலம் கனியும் வரை
///Parvathy Ramachandran said...
ReplyDeleteநான் ஆன்மீகம் தொடர்பான கட்டுரைகள் எழுதுகிறேன். 'சிறப்பான' என்கிற நிலைக்கு வருவதற்கு, இன்னும் பலகாத தூரம் போக வேண்டும்.///
உங்களின் தன்னடக்கம்
உங்களை உயர்த்தி காட்டுகிறது..
நெஞ்சம் நெகிழ..
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
என்ற குறளை பாடி வாழ்த்துகிறோம்
///kmr.krishnan said...
ReplyDeleteஒருமுறை,சமய, சந்தானக் குரவர்களைப் பற்றியும், அவர்களின் நூல்களைப் பற்றியும் அறிமுகக் கட்டுரை எழுத பார்வதி அம்மை/போகர்/அய்யர் ஆகியோரை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்///
உங்கள் அன்பிற்கு
தலைவணங்குகிறோம்..
தங்களின் 501வது படைப்புடன் பெருமைசேர்க்கும்
அய்யரின் படைப்பும் வரலாம்/வரும்
நன்றிகள்..
@பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய திரு. அய்யர் அவர்களுக்கு,
ReplyDeleteஇடியுடன் மின்னும் வானம்
இனிதாகப் பொழியும் மழைபோல்
அமிழ்தான வரிகள் தந்து
தமிழாலே வாழ வைத்தீர்
சித்தாந்தம் குறித்த தங்கள்
முத்தான வினாக்கள் என் எழுத்தின்
வித்தான தென்றால் உண்மை.
சத்தியம் ஒன்றே நன்மை.
சிரம் தாழ்த்தி பணிகின்றேன்
கரம் குவித்து வணங்குகின்றேன்
பரமனவர் திருவருளைப்
பாரிலின்றே நான் அறிந்தேன்.
மிக மிக மிக நன்றி. திரு அய்யர் அவர்களே.
அய்யர் said...
ReplyDelete///தில்லை வாழ் அந்தணருக்கு அடியேன்
என்று தொடங்கிய திருத்தொண்டர் தொகையிலே அடுத்த வரியிலேயே திருநீல கண்டத்து குயவனார்க்கு அடியேன் என வேற்றுமை பாராது சாதியை சொன்னதைமறக்க முடியுமா///
நம்மால் நந்தனார் கதையையும்தான் மறக்க முடியாது :))))
//thanusu said...
ReplyDeleteபார்வதியின் சைவ விளக்க ஆக்கம் அதனை நான் அறிந்துகொள்ள வைத்தது , நான் இப்போதுதான் இது போன்ற செய்திகளெல்லாம் படிக்கிறேன் .நன்றி பார்வதி அவர்களே//
மிக்க நன்றி தனுசு அவர்களே. என் எழுத்து நடையை எளிமைப்படுத்தக் காரணம் நீங்களே.
//சைவமும் தமிழும் என
சைகை காட்டி சைவத்தை
உயர்த்திக்காட்டிய தோழியே.. உம்மை
உயர்ந்த (மன) ஆசனத்தில் அமர்த்துகிறோம்.
சிறப்பான வாழ்த்தொன்று சூலையில்
செந்தமிழால் தனுசு படைப்பார்//
தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். என்னைப் பொறுத்தவரை, என் சிந்தையில் நின்று, என்னை எழுதுவிக்கும் இறைவனாரை வாழ்த்துவதே
முறைமை. திரு. தனுசு அவர்களுக்கும் திரு. அய்யர் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
எனது ஆக்கத்தைப் பாராட்டிப் பின்னூட்டமிட்ட திரு. கே.எம்.ஆர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
ReplyDelete//அறு சமயம் பற்றிய தொகுப்புப் பலருக்கும் நல்ல திறப்பு.பார்வதி அம்மைக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள்.//
//சமய, சந்தானக் குரவர்களைப் பற்றியும், அவர்களின் நூல்களைப் பற்றியும் அறிமுகக் கட்டுரை எழுத பார்வதி அம்மை/போகர்/அய்யர் ஆகியோரை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்//
இறையருள் இருப்பின், தங்கள் ஆவலை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.
// minorwall said...
ReplyDeleteஅந்த வகையில் பார்வதி ராமச்சந்திரன்அவர்களுக்கு வாழ்த்துக்கள்..//
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
///Parvathy Ramachandran said...
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரை, என் சிந்தையில் நின்று, என்னை எழுதுவிக்கும் இறைவனாரை வாழ்த்துவதே முறைமை....////
உம்மை வாழ்த்துச் சொல்வதும்
உள்ளத்தில் இருக்கும் அவன் தானே..
தன்னையே அவனுக்கு தந்துவிட்டபின்
தடுமாற்றம் இல்லையே எங்கும்
வாழ்க.. வாழ்க..
புதியவர் என்று சொல்ல முடியாது... இதுவரை வகுப்பறையில் மௌனகுருவாக இருந்த சதன்ராஜ் அவர்கள் திருக்குறளாய் தனது எண்ணத்தை பதிவு செய்திருக்கிறார்... ஒருதுளிஎன்றாலும் தேனாய் இனித்தது. வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteநூறு பதிவுகள் நூற்றிய பெரியார்
ReplyDeleteவேறு காரணமிருந்தால் கூறுக என்பார்
வேற்றுமையில் ஒற்றுமை வேண்டும் என்பார்
போற்றுவதற்கு முந்துவார் பொல்லாதது என்றால்
தூற்றுவதற்கும் முந்துவார் அவர் எப்போதும்
வேற்று மனிதர் என்றுப் பாரார்
வேண்டுவோருக்கு உதவுவார் வீணில்
சோம்பிக் கிடப்போரை சீண்டுவார்
கோபம் வராது வந்தால் யாராயினும்
வேகமாக வீழ்த்தவே வாலியாய்த் தாண்டுவார்
காரியம்பல செய்வார் கடையோரின் நலனுக்கே
வீரியம் மிகுந்தே வினைகள் புரிவார்
வீட்டையே மறந்து வீதிவரை வந்தே
கூட்டை விட்டு ஆவியே போனாலும்
கொண்ட இக்கொள்கை மாறாத நம்
கர்ம வீரர் திருமிகு கிருஷ்ணன்ஜி அவர்கள்
இன்னும் பல நூறு படைத்தே
பரவசப் படுத்தவே வேண்டுகிறோம்
பரமன் உமக்கு பல்லாண்டு அருள
சிரம்மேல் கொண்டு அவன் தாள்பணிகிறோம்.
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் எங்கள்
ReplyDeleteஇளங்கவியே இன்னும் எத்தனை எத்தனை
களமைத்தே இத்தனை அழகிய கவிபாட...
சிந்தனையில் ஊறியத் தேனா மனப்
பொந்தையில் பூத்த மகிழம் பூவா
விந்தை புரியும் தமிழுதப் பண்ணா...
எந்தை அவன் வார்சடை பொங்கிய
கங்கையாய் சீறி எழுந்து எங்கும்
பரவும் சங்கத் தமிழ் கவியா...
சைவம் சமைத்த மகிமையா -உயர்
சங்கம்வளர் மதுரை வளர்த்த அருமையா
சமயம் யாவும் சமமாய் பார்த்தே
இமயமாய் உயர்ந்த பக்தியின் மேன்மையா
எங்கிருந்து வந்த திந்த இன்பம்
பொங்கும் இன்பத் தமிழ் - புதுப்
புனலில் பூத்துக் குலுங்கும் பூந்தமிழ்
பொங்கும் மகிழ்வில் பூத்த தமிழில்
எங்கும் மிளிரும் இன்ப எழிலில் மனம்
தங்குமழகிய கவிதை மழையை வகுப்பறை
எங்கும் பொழியச் செய்து இங்கேயும் ஒரு
கங்கையை நதியை தமிழால் பெருக்கி
தங்கையே தமிழ் கவியே இப்போது
எங்கள் இதயம் நிறைந்(த்)தாய்; நீவாழி
அங்கிங்கு எனாது எங்கும்நிறை; இறையது
சங்கத் தமிழ்கவிகள் படைக்க அருளட்டும்!!!
கங்கையும் காவேரியும் தாமிரபரணியும்
ReplyDeleteசங்கமித்த திங்கே என்றே கூறுவேன்!!!
இன்றல்ல என்றாவது ஒருநாள்
இந்த நதிகள் இணைக்கப் படுமென்றே
நம்புவோம்!!!
கற்பனை நன்று சகோதரியாரே.....
சொல்லால் வில்லெடுத்து சூரனாய்
ReplyDeleteகவிஅம்புதொடுத்த; எங்கள்கவி அவர்
தனுசு என்னும் புது தினுசுக் கவி
மனுசனுக்கும் பாடுவார் மனுசனில்லா
கம்சனைப் போனோரையும் சாடுவார்
ஈரமான இதயம் கொண்ட கவி...
சக்திகொடு என்று சக்தியிடம் முறையிட்ட
பக்தியின் காரண விரக்தியில்
வியப்புற்றேன் கவிஞரே....
அருமை! அருமை!! அருமை!!!
///Parvathy Ramachandran said...
ReplyDelete'நான் வாழ்வதும் எழுதுவதும் வீணல்ல' என்ற
மிகப் பெரும் உத்வேகம் தந்தன என்றால்
மிகையில்லை.///
உங்களுக்கு முருகபெருமானின் அருள் பரிபூரணமாக இருக்கிறது.
உங்களின் முன்னோர்களில் பலர்,முருக பக்தர்களாக இருந்து,
முருகனுக்கு பல விதங்களில் தொண்டு செய்தவர்கள்.
அவர்களின் ஆசிர்வாதமும் உங்களுக்கு
உள்ளது.
எந்த காரியம் தொடங்குவதற்கு முன்பு,
முருகபெருமானையும்,
உங்களின் முன்னோர்களின் ஆத்மாக்களையும் வணங்கி விட்டு தொடங்குங்கள்,
வாழ்வில் பல நன்மைகள் நடப்பதற்கான,
வாய்ப்புகளை அவர்கள் ஏற்படுத்தி தருவார்கள்.
ஓம் சரவணபவ நம
//அதுபோல தன்னைப் போன்ற மக்கள் காரணமின்றி கேவலப்படுத்தும் பொழுது அதைக்கண்டு கொதித் தெழுந்தவர்கள் புரட்சிக் குரல் எழுப்பினார்கள்.
ReplyDeleteஒரு பாதிப்பு என்ற நிகழ்ச்சி நடக்காவிட்டால் அதைப் பற்றி பேசவும் தேவை இருப்பதில்லை.//
இந்தக் கருத்துப் பற்றி நீங்கள் விரிவாகச் சொன்னாலே விவாதிக்க முடியும்.
இங்கே சாதி ஒழிப்பு இயக்கம் வலுப்பெற ஆரம்பித்தது நீதிக்கட்சிக் காலத்தில்தான்.நீதிக்கட்சிதான் உதயசூரியன் கட்சிக்கெல்லாம் முன்னோடி.நீதிக்கட்சியில் பிரபலமானவர்கள் அனைவரும் சமுதாய அந்தஸ்தில் உயர்ந்த நிலையிலேயே இருந்தனர்.பதவி சுகத்திற்காக வெள்ளைக்காரார்களின் விருப்பப்படி சமூகத்தில் அபிப்பிராயங்களை
உருவாக்குவதில் முனைந்து நின்றனர்.
மகாத்மாஜி எல்லோரையும் ஒன்றிணைக்க நினைத்து/விரும்பி எல்லாக் கருத்தோட்டங்களுக்கும் இடமளித்தார்.
தாங்கள் சுட்டியுள்ள காணொளியில் வரும் வெள்ளை நிறத்தொரு பூனை பாடலின் முழு வடிவத்தை படித்துப்பாருங்கள் பாரதியின் சாதி பற்றிய கருத்து
விளங்கும்.
ஒருவனுக்குத் தன் சாதி உணர்வே இல்லாமல் இருக்க அவன் பெற்றோர்களால் வளர்க்கப்படாமல், எந்த பாரம்பரியம், மரபு பற்றியும் கற்பிக்கப்படாமல்
ரோபோவால் வளர்க்கப்பட்டு, ரோபோக்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து மறைந்தால் அவன் சாதி இல்லாத மனிதலாகலாம்.
இரத்தமும் சதையும் முன்னோர்களைப்பற்றிய பரவசமும் உள்ள எந்த மனிதனும் சாதியைத் துறக்க முடியாது.குறைந்தபட்சம் மற்ற சாதியினரை தூஷிக்காமல் இருந்தாலே சாதி மோதல்களைத் தவிர்க்கலாம்.
அன்பு ஹாலாஸ்யம்ஜியின் அருமையான பாராட்டுக் கவிதைக்கு நன்றி,நன்றி நன்றி!
ReplyDeleteஅமர்சேவா சங்கம் பற்றி நண்பர்களுக்கேல்லாம் கூறி ஆன சேவையைச் செய்யுங்கள்.
Bhogar said...
ReplyDelete//உங்களின் முன்னோர்களில் பலர்,முருக பக்தர்களாக இருந்து,
முருகனுக்கு பல விதங்களில் தொண்டு செய்தவர்கள்.//
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஐயா. என் முன்னோர்கள், திருப்பரங்குன்றம் திருமுருகன் சன்னதியில் அர்ச்சனைகள் கூறித் தொண்டு செய்தவர்கள். முன்வினைகளில் நான் செய்த மிகச்சில நல்வினைகளின் பயனாக, ஒரு முருகபக்தருக்கு மகளாய்ப்பிறக்கும் பெரும் பாக்கியம் கிடைக்கப்பெற்றேன்.
சிறு வயது வாழ்வும், வளர்ப்பும் எம்பெருமான் முருகன் உறையும் திருக்கோவில் சுற்றியே கிடைக்கப்பெற்றேன். இன்று எனக்கு இருப்பதாக நான் நினைத்திருக்கும் எழுத்தும் தமிழும், முருகவேள் தம் கருணையால் எனக்கிட்ட பெரும் கொடை.
தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். தங்களது மேலான அறிவுரைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா. தாங்கள் கூறியபடியே நடக்கிறேன். மிக்க நன்றி.
ஜி ஆலாசியம் said...
ReplyDelete//தங்கையே தமிழ் கவியே இப்போது
எங்கள் இதயம் நிறைந்(த்)தாய்; நீவாழி//
தாங்கள் மிக நீண்டதொரு கவிதை தந்து வாழ்த்திய மேன்மைக்கு மிக்க நன்றி அண்ணா. நீங்கள் கூறியது போல் சைவம் எழுதுவதற்காக, இறையருளாளர்களின் பாடல்களைப் படித்த தாக்கம் மிக அபரிமிதமாக இருக்கிறது.
தங்களது கவி புனையும் மேன்மைக்கு உறை போடக் காணமாட்டேன் எனினும் தங்களப் போன்ற பூக்களோடு சேர்ந்து இந்த நாரும் மணந்திருக்கிறேன். மிக மிக நன்றி அண்ணா.
Parvathy Ramachandran said...
ReplyDelete///......வரிகள் அருமை. இரண்டாவது கவிதை தங்கள் வழக்கமான பாணியில் அமைந்திருந்தது. உணர்ச்சி பொங்கக் கவிதை தருவதில் உங்களுக்கே முதலிடம். மிக்க நன்றி.////
மிக்க மகிழ்ச்சி பார்வதி அவர்களே. உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றிகள்.
ஜி ஆலாசியம் said...சொல்லால் வில்லெடுத்து சூரனாய்
ReplyDeleteகவிஅம்புதொடுத்த; எங்கள்கவி அவர்
தனுசு என்னும் புது தினுசுக் கவி
மனுசனுக்கும் பாடுவார் மனுசனில்லா
கம்சனைப் போனோரையும் சாடுவார்
ஈரமான இதயம் கொண்ட கவி...
சக்திகொடு என்று சக்தியிடம் முறையிட்ட
பக்தியின் காரண விரக்தியில்
வியப்புற்றேன் கவிஞரே....
அருமை! அருமை!! அருமை!!!
பாராட்டு மழையை கவிதையாய் வடித்த தாங்களுக்கு என் மனமார்ந்த நண்றிகள்
.Parvathy Ramachandran said...
ReplyDelete///இடியுடன் மின்னும் வானம்
இனிதாகப் பொழியும் மழைபோல்
அமிழ்தான வரிகள் தந்து
தமிழாலே வாழ வைத்தீர்
சித்தாந்தம் குறித்த தங்கள்
முத்தான வினாக்கள் என் எழுத்தின்
வித்தான தென்றால் உண்மை.
சத்தியம் ஒன்றே நன்மை.////
///அகவை அறுபதைத் தொட்ட போதும்
அருமையாய் ஆக்கங்கள் பல தந்தீர்...////
இப்படியெல்லாம் எழுதி எங்களை காலி செய்துவிட்டு
"திரு.தனுசுவும், தாங்களும் எழுதும் புதுக்கவிதைகள் ஆகியவற்றைப் படித்த பிறகு, கவிதை எழுதும் (ஒரு பயம்தான்) ஐடியாவைக் கைவிட்டிருக்கிறேன்" என்று இப்படி எழுதினால் எப்படி?
உண்மையில் நாங்கள் தான் கவிதை எழுதுவதை கைவிட வேண்டும் பார்வதி அவர்களே.
http://www.techsatish.net/2012/06/vijay-tv-lakshmi-sahasaranaamam-10-06.html
ReplyDeleteஏற்கனவே ஒருமுறை நான் வகுப்பறையிலே புகழ்ந்து சொன்ன திருவாளர்
உ.வே .கருணாகராச்சாரியார் மேற்கண்ட லின்க்லிலே டிவி பிரசங்கம் செய்யும் போது பெருமாளும் லக்ஷ்மி தேவியும் ஆடும் செஸ் விளையாட்டில் பிரம்மனும்,இந்திரனும் போலே
சிவபெருமானும் பகடைக்காய்தான் என்று விளக்கம் அளிக்கிறார்..
இதுகுறித்து சைவம் பற்றிய விளக்கங்கள் அதிகம் நிறைந்த இந்தப் பதிவிலே சீனியர் அய்யர் அவர்களின் கருத்தை விழைகிறேன்..
வேறு யாரேனும் அறிந்திருந்தாலும் தெரியப்படுத்த வேண்டுகிறேன்..
///பதவி சுகத்திற்காக வெள்ளைக்காரார்களின் விருப்பப்படி சமூகத்தில் அபிப்பிராயங்களை
ReplyDeleteஉருவாக்குவதில் முனைந்து நின்றனர்.///
பாவம் வெள்ளைக்காரர்கள் ....அவர்களை விட்டு விடலாம்.
அவர்கள் வந்துதான் பேதங்களற்று, அனைவரையும் சமமாக நடத்தப்பட்ட நம் பாரதத்தில் தங்களுக்கு காரியம் ஆகவேண்டும் என்று சாதிகளுக்கிடையே பிரித்தாளும் சூழ்ச்சி செய்தார்கள் என்பது தேவையற்ற கற்பனை. அதற்கு முன்பு மக்களிடையே பேதங்கள் இல்லாமல் இருந்தது என்பதும் கற்பனைதான்.
நந்தனார் கோவிலுக்கு நுழைய விரும்பியதற்காக கொலை செய்யப்பட்டு கடவுளுடன் கலந்தார் என்று கூறப்பட்டது போன்ற செயல்கள் நடந்த காலம் வெள்ளையர்கள் நம் நாட்டிற்கு வராமல் இருந்த பொழுதே நடந்ததுதான். நந்தனார் நிகழ்ச்சி நடைபெற்ற காலம்....
///அவர் அவர் பணிகளை ஒரு தர்மமாகக் கருதி ம்க்கள் செய்து வந்து கொண்டிருந்த கால கட்டத்தில் மக்களிடையே எந்த பேத உணர்ச்சியும் இல்லை.///
என்று நீங்கள் குறிப்பிட்ட காலத்தில்....அவரவர் தங்கள் பணிகளை தர்மமாக கருதி வாழ்ந்த காலத்தில் நடைபெற்றதுதானே?
///இரத்தமும் சதையும் முன்னோர்களைப்பற்றிய பரவசமும் உள்ள எந்த மனிதனும் சாதியைத் துறக்க முடியாது.///
என்பதில் இருந்து உங்கள் மனநிலை புரிகிறது.
ஆனால்ஜாதியினால் சமுதாயத்திற்கு என்ன பயன் ஏற்பட்டது, எதனால் அதை விடக்கூடாது என்பதை மட்டும் தெரிந்து கொள்ள விரும்புவதால் அதை விவரித்தால் படிக்க ஆவலாக இருக்கிறேன். ஆனால் சாதி ஒழிப்பு இயக்கத்திற்கு அரசியல் ஆதாயம் என்ற விவாதங்கள் "ஜாதிக் கொடுமைகள்" பற்றிய விவாதத்தை திசை திருப்புகிறது, அதனால் அதை விவாதிப்பதும் பயனற்றது.
///////தேமொழி said...அதனால் அதை விவாதிப்பதும் பயனற்றது.///////
ReplyDeleteமனதின் அழுக்கைக் கறையை, களங்கத்தைத் துடைக்க அவரவர் மனதிலே முயற்சித்தால் ஒழிய இது தீராது..
இப்படி அடிப்படை எண்ணங்கள் உலாவரும் வரையில் எத்துணை டிசம்பர் 6கள் வந்தாலும் அதிலேயும் ஒரு நியாயத் தன்மை இருக்கத்தான் செய்யும்..
அதனால் அதை விவாதிப்பதும் பயனற்றது..
நந்தனார் கதைக்கு யாருடைய நூலை ஆதாரமாகக் கொண்டுள்ளீர்கள், தேமொழி?
ReplyDeleteஇன்று சாதி ஒற்றுமையால் முன்னுக்கு வந்தவர்களில் முதலில் நிற்பவர்கள் நாடார் சமூகத்தவர்களே.இன்னும் பல சமூகத்தவர்களும் தங்கள் சாதி அடையாளங்களைத் தொலைத்து விடாமல் பேணிக் காக்கிறார்கள்.அதனால் அவர்களுக்குப் பலன் இல்லாமலா அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?
சாதி தனக்குப் பின்புலமாக ஒரு குழு உள்ளது என்ற தன்னம்பிக்கையை வளர்க்கிறது.இன்றைய சாதீய அரசியலில் தங்களுக்கான அரசியல் சக்தியை சாதி மூலம் கொடுக்கும் அழுத்தத்தாலேயே பெறுகிறார்கள்.
ஆங்கிலேயந்தான் நம்மை ஒற்றுமைப் படுத்தினான் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பது பற்றி பல நூல்கள் வந்துள்ளன.இங்கே சிற்றரசர்கள் தான் சண்டையிட்டுப் பிரிந்து இருந்தனர் அல்லது ஆங்கிலேயன் தூண்டுதலால், நரித் தந்திரத்தால் பிரிக்கப்பட்டனரே அல்லாது மக்கள் கலாச்சாரத்தாலும் பல ஒருமித்த பழக்கங்களாலும் ஒற்றுமையாகவே இருந்தனர்.
John Burdon Sanderson Haldane (1892- 1964) the world-renowned geneticist. In 1922, he joined Cambridge University to take up research in biochemistry. Among his significant contributions is an estimate of the rate of mutation of a human gene. Some of his famous books are The Causes of Evolution, New Paths in Genetics and Biochemistry of Genetics.
He immigrated to India and soon found himself attracted to Hindu culture. Himself a rationalist, Haldane told his colleagues, “I do not think that a Rationalist and Humanist need necessarily break with Hinduism.” He watched with disdain the way the socialist government machinery rooted in sycophancy and corruption, was developing a stranglehold on the budding Indian science. The stranglehold on the progress of India, as Haldane observed was of a socialist government's making and not that of the Dharma. He wrote:
“The old caste system had this merit, that the richest merchant or Zamindar could not buy the status of Brahmin for his son, even if the son was learned and pious. Whatever the defects of that system – and I think that they were and are grievous – it was not subservient to wealth. The new caste system, which the university administrative authorities, with the connivance of many government officials, are trying with some success to impose upon India, has no such excuse…. In India today the unworthy successors of Durvasa and Vishvamitra actually invite governors, vice-chancellors, and the like, to address them. This may be a relic of British Rule. If so, it is a regrettable one.”
(source: A passage to India - By JBS Haldane 1958 and Science and Indian Culture - By JBS Haldane 1991 p.19 & p.24.
'The caste system is often portrayed as the ultimate horror. Inborn inequality is indeed unacceptable to us moderns, but this does not preclude that the system has also had its merits.
ReplyDeleteCaste is perceived as an "exclusion-from," but first of all it is a form of "belonging-to," a natural structure of solidarity. For this reason, Christian and Muslim missionaries found it very difficult to lure Hindus away from their communities. Sometimes castes were collectively converted to Islam, and Pope Gregory XV (1621-23) decreed that the missionaries could tolerate caste distinction among Christian converts; but by and large, caste remained an effective hurdle to the destruction of Hinduism through conversion. That is why the missionaries started attacking the institution of caste and in particular the brahmin caste. This propaganda has bloomed into a full-fledged anti-brahminism, the Indian equivalent of anti-Semitism.
Every caste had a large measure of autonomy, with its own judiciary, duties and privileges, and often its own temples. Inter-caste affairs were settled at the village council by consensus; even the lowest caste had veto power. This autonomy of intermediate levels of society is the antithesis of the totalitarian society in which the individual stands helpless before the all-powerful state. This decentralized structure of civil society and of the Hindu religious commonwealth has been crucial to the survival of Hinduism under Muslim rule. Whereas Buddhism was swept away as soon as its monasteries were destroyed, Hinduism retreated into its caste structure and weathered the storm.
Caste also provided a framework for integrating immigrant communities: Jews, Zoroastrians and Syrian Christians. They were not only tolerated, but assisted in efforts to preserve their distinctive traditions.
Nineteenth-century Westerners projected the colonial situation and the newest race theories on the caste system: the upper castes were white invaders lording it over the black natives. This outdated view is still repeated ad-nauseam by anti-Hindu authors: now that "idolatry" has lost its force as a term of abuse, "racism" is a welcome innovation to demonize Hinduism. In reality, India is the region where all skin color types met and mingled, and you will find many brahmins as black as Nelson Mandela. Ancient "Aryan" heroes like Rama, Krishna , Draupadi, Ravana (a brahmin) and a number of Vedic seers were explicitly described as being dark-skinned.
Finally, caste society has been the most stable society in history. Indian communists used to sneer that " India has never even had a revolution." Actually, that is no mean achievement.
(source: Why the Christian missionaries attack the institution of caste and in particular the brahmin caste? - By Koenraad Elst).
Sir Sidney Low (1857-1932) in his book, A Vision of India: with a frontispiece says:
ReplyDelete“There is no doubt that it (caste) is the main cause of the fundamental stability and contentment by which Indian society has been braced for centuries against the shocks of politics and the cataclysms of Nature. It provides every man with his place, his career, his occupations, his circle of friends. It makes him, at the outset, a member of a corporate body; it protects him through life from the canker of social jealousy and unfulfilled aspirations; it ensures him companionship and a sense of community with others in like case with himself. The caste organization is to the Hindu his club, his trade union, his benefit society, his philanthropic society. There are no work houses in India, and none are as yet needed. The obligation to provide for kinsfolk and friends in distress is universally acknowledged; nor can it be questioned that this is due to the recognition of the strength of family ties and of the bonds created by associations and common pursuits which is fostered by the caste principle.
"It is easy to see that despite all the national and linguistic barriers, even modern Western society is fundamentally, like all societies, a caste system. The problem of Western society derive from the fact that while proclaiming the equality of men, it is entirely graded on a hierarchical system as far as the professions are concerned. Under the pretext of equality, Western lawmakers do not let the various groups cooperate among themselves while keeping their different habits, ethics, and social life. Jews, Mormons, Muslims, Celts, Basques, Albigemsoams, Pygmies, Blacks or Inuits are accorded a relative equality only on condition that they conform to our customs, losing most of their social, national, and religious characteristics and in fact abandoning their own personality."
ReplyDeleteHindu Society is 'caste-ridden' while modern democratic society reveals the presence of 'classes', sociologist explain. They acclaim 'class' and condemn 'caste'. Caste, according to them, has its roots in Hindu (Brahmannical) religion, while 'class' has its roots in economic disparities.
(source: Virtue, Success, Pleasure, & Liberation : The Four Aims of Life in the Tradition of Ancient India - by Alain Danielou p. 33 - 35).
குழுவாகச் செயல் படுதல் என்பது மனித இயற்கை. "ஒன்று போல இறக்கை உள்ள பறவைகள் சேர்ந்து பறக்கின்றன"என்பது ஆங்கிலப் பழமொழி. அதுவேதான் மனித இனத்திற்குமான சூத்திரம்.
ReplyDeleteநேற்று இங்கே நகரத்தார் சமூகப் பேராசிரியர் பழனியப்பன் நடத்தும் சித்தாந்த வகுப்புக்குச் சென்று இருந்தேன். பேச்சின் இடையே மரபுகள் பற்றிய குறிப்பு வந்தது.தங்கள் சமூகத்தில் உள்ள மரபைக் கூறினார்.
"நாங்கள் பிள்ளைகளை 'வட்டியிலே சாப்பிடு, வட்டியிலே சாப்பிடு' என்று குழந்தையிலிருந்து கூறிக் கூறி வளர்ப்போம். குழந்தையாக இருக்கும் போது 'வட்டி' என்பது சாப்பிட உதவும் பாத்திரத்தைக் குறிக்கும்.வட்டில், வட்டா,என்பது சாப்பிடும் தட்டைக் குறிக்கும். வளர்ந்த பின்னர் அதில் உள்ள தத்துவம் பிள்ளைக்குப் புரியும்.முதலை எடுத்துச் செலவு செய்யக்கூடாது.வரும் வட்டிக்குள்ளாகத் தன் செலவுகளைக் கட்டுப் படுத்த வேண்டும் என்று குழந்தையிலிருந்து ஊட்டி வளர்த்த மரபு அவனுக்கு வாழும் முறையைச் சொல்லும்"
மீண்டும் சொல்கிறேன் 'குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவ'மே தவிர நான் ஒரு குலம், சாதியைச் சேர்ந்தவன் என்ற உணர்வு தவறோ மன அழுக்கோ கிடையாது.
தேமொழியின் சான்றோன் சாதியை புதிதாக உருவாக்கும் திட்டத்தைப் போலவே
முன்னர் ஒரு பெண்மணி மிகவும் கோபமாக எழுதினார்:
"I am prepared to accept a bastardly society to destroy the caste based
society"
இது நமக்கு உடன் பாடுதானா?
வாத்தியாரின் வகுப்பறையில் ஜாதிப் பிரச்னை விவாதத்தை துவக்குவது என் குறிக்கோள் அல்ல.
ReplyDeleteஒரு கற்பனைக் கதை இந்த விவாதத்தை எழுப்பும் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை.
கதையுடன் நான் அனுப்பிய ஐன்ஸ்டினின் பொன்மொழிப் படம் ஒன்றை வெளியிடாமல் வாத்தியார் தவிர்த்ததின் மூலம் அவருக்கு உள்ள தீர்க்க தரிசனம் எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது. என்ன இருந்தாலும் வாத்தியாராச்சே!!!
KMRK ஐயாவின் பதிவிட்ட கருத்துகள் சொல்லும் கோணத்திற்கு மாறுபட்ட கோணத்தை சொல்வதே எனக்கு சிந்திக்க சொல்லிக்கொடுத்த என் அப்பாவிற்கு நான் வழங்கும் சிறந்த தந்தையர் தினப் பரிசு எனத் தோன்றுகிறது.
அனைவரும் செய்தது போல நானும் இளவரசி டயானாவின் திருமண நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை கேட்டுக்கொண்டிருந்த பொழுது "உன்னைவிட அவள் எதில் உயர்ந்தவள்? உலகில் தினசரி நடக்கும் எத்தனையோ திருமணங்களில் இதுவும் ஒன்று இல்லையா?" என்று கேட்டு எனக்கு உண்மையை உணர்த்தினார். யார் சொல்வதையும் அப்படியே பின்பற்றாமல் ஏன் என்ற கேள்வி எழுப்பி, கிடைத்த பதில்களை வைத்து, எது சரி என்று தீர்மானிக்க கற்று கொடுத்த என் அப்பாவிற்கு பின் வரும் பதில்கள் சமர்ப்பணம்.
///நந்தனார் கதைக்கு யாருடைய நூலை ஆதாரமாகக் கொண்டுள்ளீர்கள், தேமொழி?///
ReplyDeleteதொன்று தொட்டு உள்ள கொடுமைக்கு உதாரணமாகக் காட்டப் பட்டவர் நந்தனார். சிலநாட்களுக்குமுன் இராமாயண அறிவு ஆதாரத்தை கேட்டு எழுந்த விவாதங்கள் போன்று இந்தக் கேள்வி நேரடி பதிலைத் தவிர்க்கும் பாதையில் செல்கிறது.
இந்தியாவில் பிறந்த யாரும் நாட்டின் கலாச்சாரத்தைப் பற்றிய அடிப்படை செய்திகளைப் படிக்காமல் பள்ளியைத் தாண்டியிருக்கமுடியாது.
திருநாளைப் போவார் பற்றியும் அவர் கதை பற்றியும் பள்ளியில் தமிழ் இலக்கியம் பயின்ற அனைவருக்கும் தெரிந்ததுதான். நானும் அதே இலக்கியங்கள் படித்துதான் தேறினேன்.
///சாதி தனக்குப் பின்புலமாக ஒரு குழு உள்ளது என்ற தன்னம்பிக்கையை வளர்க்கிறது.இன்றைய சாதீய அரசியலில் தங்களுக்கான அரசியல் சக்தியை சாதி மூலம் கொடுக்கும் அழுத்தத்தாலேயே பெறுகிறார்கள்.///
ReplyDeleteஅதாவது, இந்த பதில் மூலம் ஜாதியின் பயன் எனப் பொதுவாக நீங்கள் சொல்லவருவது ....ஜாதிப் பிரிவு பேதங்களினால் பாதிக்கப்பட்டால், அதிலிருந்து மீள ஜாதியைப் பிடித்துக்கொண்டு குழுவாக ஒற்றுமையாக போராடி முன்னேற ஜாதி உதவும் என்கிறீர்கள். அதுதான் ஜாதியின் பயன் என்கிறீர்கள். முதலில் இந்த பேதங்கள் சொல்லும் ஜாதியே வேண்டாமே. அது இருந்தால்தானே பாகுபாடு ஏற்படுகிறது.
நோய் நாடி நோய் முதல் நாடி...என்று படித்திருக்கிறோம். அது போல நோயின் அடிப்படையை நீக்குவதே சிறந்தது. அதைவிட்டு நோயிற்கு மருந்து கொடுப்பது போலிருக்கிறது குழுவாகாக போராடி உரிமைகளைப் பெறுவது. பின்புலமாக ஆதரவுக்கு ஒரு குழு வேண்டும் என்பதற்கு ஜாதி தேவையில்லை. கார்கில் போர் வந்தபொழுது மாநில, மொழி, மத வேறுபாடுகளை மீறி இந்தியா ஒருங்கிணைந்தது. பதின்ம வயது கண்ணகி கொதித்தெழுந்து மன்னனையே அதட்டி நியாயம் கேட்க சென்ற பொழுது தன் பின்புலங்களை பரிவாரமாக கூட்டி சென்றதாகவும் தெரியவில்லை.
///ஆங்கிலேயந்தான் நம்மை ஒற்றுமைப் படுத்தினான் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பது பற்றி பல நூல்கள் வந்துள்ளன.///
ReplyDelete///Why the Christian missionaries attack the institution of caste///
தங்கள் எண்ணம் ஈடேறாததால் அல்லது சுயநலத்திற்காக பிரிவினை தூண்டப் பட்டதாக மீண்டும் பிற நாட்டினரையும் பிற மதத்தினரையும் குறை கூறுவதாகவே இருக்கிறது. நாம் விவாதிப்பது இதைப் பற்றி இல்லை. தொன்று தொட்டு இருந்த பேதங்கள் இவை. இதை அடுத்தவர் வந்து சொல்லத் தேவையில்லை. கைபுண்ணுக்கு கண்ணாடியும் தேவையில்லை. நாமே நம் நாட்டு இலக்கியங்களில் படித்தும் இருக்கிறோம்.
எனக்குத் தெரிந்து இந்தியவர்கள் என்றால் வெளிநாட்டினருக்கு முதலில் நினைவு வருவது பாம்பாட்டிகள் உள்ள நாடு, மாட்டுவண்டியில் பயணிப்பவர்களின் நாடு, ஜாதி அடிப்படையில் தீண்டத் தகாதவர்..தலித் என்ற கொடுமை உள்ள நாடு, வரதட்சினை, லஞ்ச லாவண்யங்கள் நிறைந்த நாடு என்பதுதான்.
நம் மண்ணில் பிறந்து வளர்ந்து, அதன் கலாச்சாரத்தை அறிந்து, நம்மோடு வாழ்ந்த மகாத்மா போன்றவர்கள் ஜாதிப் பிரிவினையினால் வரும் தீமைகளை உணர்ந்து போராடி சொல்லியதை கருத்தில் கொள்ளாமல் வெளிநாட்டினர் சொல்வதை ஏன் மேற்கோள் காட்ட வேண்டும் என்பது புரியவில்லை.
ReplyDeleteநமக்கு உதவாத பொழுது வெளிநாட்டினர் சதிகாரர்கள், அவர்கள்தான் நம்மிடம் பேதம் வளர்த்தார்கள் என்பதும், நமக்கு வேண்டும் பொழுது அவர்கள் நம் கலாச்சாரத்தை இவ்வாறு புகழ்ந்து சொன்னார்கள் என்பதும் முறையான விவாதமா? முன்னுக்குப் பின் முரண்.
சரி, எது எப்படியிருந்தாலும்...நானும் உங்கள் வழிப்படியே வந்து விவாதிக்கிறேன்...
///It provides every man with his place, his career, his occupations, his circle of friends. It makes him, at the outset, a member of a corporate body; it protects him through life from the canker of social jealousy and unfulfilled aspirations;
it ensures him companionship and a sense of community with others in like case with himself ///
இந்த நூற்றாண்டில் மக்களின் உரிமையைப் பாதுகாக்க சட்டம் இருக்கிறது. அது நாட்டின் பிரதமராக இருந்தவரையே கருணை காட்டாமல் சிறையில் வைத்தும் இருக்கிறது. சட்டத்தின் சக்தியைப் பற்றி திஹார் சிறை நிரப்பிய தமிழக அரசியல்வாதிகளைக் கேட்டாலும் சொல்லுவார்கள்.
இந்தியர்கள் பலர் வெளிநாட்டில் தனித்துவிடப்பட்டு வாழ்ந்துகொண்டுதான் இருகிறார்கள். அப்பொழுது அவர்களுடன் ஒட்டிகொண்டிருக்கும் ஜாதி எப்படி சமூக உணர்வை வளர்கிறது? அப்பொழுது அவர்கள் சமூக அரவணைப்பின்றி, பாதுகாப்பின்றி தத்தளிக்கிரார்களா?
___________________
///The obligation to provide for kinsfolk and friends in distress is universally acknowledged; nor can it be questioned that this is due to the recognition of the strength of family ties and of the bonds created by associations and common pursuits which is fostered by the caste principle. ///
இன உணர்வுடன் உரிமைக்காக போராடிய எத்தனை நாடுகளில் ஜாதி என்ற கட்டுகோப்பு அவர்களுக்கு கை கொடுத்தது. அநீதி என்றால் பாதிக்கப் பட்டவர்கள் ஒன்று சேர்ந்து போராடுவது எங்கும் உள்ளதுதான், அதற்கு ஜாதி தேவையில்லை. போராடும் தொழிலாளர் இயக்கங்கள் போன்றவைகளின் அடிப்படை அது. பூனைக்குட்டியை அபகரிக்க நினைத்தால் பூனை கூட போராடும். அதனிடம் உள்ள குடும்ப பாசத்தை எந்த ஜாதி அமைப்பு பின்னிருந்து வளர்த்து வந்திருக்கிறது.
___________________
///It is easy to see that despite all the national and linguistic barriers, even modern Western society is fundamentally, like all societies, a caste system.///
even modern Western society???? அடுத்தவரைப் பற்றிய கவலை நமக்கு அனாவசியம்.
"அவர்கள் கிணற்றில் குதிக்கச் சொன்னால் குதிப்பாயா?" என்பது போன்ற கேள்விகளை நம் பெற்றோர்களே நம்மிடம் எத்தனை முறை கேட்டுள்ளார்கள்? மனிதர்களை மேம்படுத்த பல மதங்களை உருவாக்கியது இந்தியா. அதனால் உலகத்தை நல்வழிப்படுத்துவதில் முன்னணியில் இருக்க முற்சிப்பதைவிட்டு அவர்கள் அப்படி நடக்க வில்லையா? நாமும் அப்படி இருப்பதில் என்ன தவறு, அவர்கள் செய்வது போலத்தான் நாமும் செய்கிறோம் என்றால் நம் வேதங்கள் மற்றும் இதிகாசங்களின் முக்கியத்துவம் இங்கே கேள்விக்குறியாகிறது.
///Hindu Society is 'caste-ridden' while modern democratic society reveals the presence of 'classes', sociologist explain. They acclaim 'class' and condemn 'caste'. Caste, according to them, has its roots in Hindu (Brahmannical) religion, while 'class' has its roots in economic disparities.///
ReplyDeleteThey acclaim 'class' and condemn 'caste'... அவ்வளவுதான், இந்த வாக்கியம்தான் இந்தியரல்லாதவர்கள் நம்மைப் பற்றி கொண்டிருக்கும் எண்ணத்திற்கு ஆதாரம். எடுத்துகொடுத்து உதவியதற்கு நன்றி.
while they acclaim 'class' they condemn India's 'caste' system...
அதற்கு காரணம் ....
ஜாதி பிறப்பினால் வருவது, அதிலிருந்து வெளியேற அனுமதிக்கப் படுவதில்லை.
உங்கள் மேற்கோளிலேயே....
"“The old caste system had this merit, that the richest merchant or Zamindar could not buy the status of Brahmin for his son, even if the son was learned and pious. Whatever the defects of that system – and I think that they were and are grievous – it was not subservient to wealth."
அதை நீங்கள் கொடுத்துள்ளீர்கள்.
அதற்கு மாறாக, பொருளாதார வேறுபாடு உலகம் முழுவதும் உள்ளது. பிறப்பில் ஏழையாக இருந்தாலும் உழைப்பினால் அதை மாற்றி செல்வந்தர்களாக மாறியவர்கள் பலரை உங்களுக்கே தெரியும். ஏழை பணக்காரராக மாறுவதும், செல்வந்தர் பொருளை இழப்பதும் அவர்களுக்கு வாழ்கையில் ஏற்படும் வாய்ப்புகளைப் பொருத்தது. ஆனால் அடுத்த பிரிவிற்கு முயன்றால் போக முடியும், போனால் தடை சொல்லி யாரும் குறுக்கே நிற்கவும் முடியாது.
அதனால் ஜாதிப் பிரச்னையும் வகுப்பு வாத பிரச்னையும் வேறு வேறு.
ஜாதி செய்யாத தவறுக்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு பிறவியிலேயே கிடைக்கும் ஆயுள் தண்டனை ....அதிலிருந்து வெளியேற வாய்ப்பில்லை.
அல்லது உயர்ந்த குலம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு முயற்சி இல்லாமல் பிறவிலேயே கிடைத்த பரிசுத் தொகை போன்றது, கிடைத்த ஆதாயத்தை இழக்க அவர்களுக்கு மனம் இருப்பதில்லை. பாதிக்கப் பட்டவர்கள் அதை வெறுப்பதும், ஆதாயம் அடைந்தவர்கள் அதை புகழ்வதும் ஏனென்று மனோதத்துவ அடிப்படையில் அனைவருக்கும் புரியும்.
பாதிக்கப் பட்டதால் போராடியவர்கள் வீர்கள், பாரதி போன்று பாதிக்கப் படாமலே போராடியவர்கள் கர்ம வீர்கள். வாழ்ந்த காலத்தில் அவர்கள் தனிமை படுத்தப் பட்டாலும், போராட்டமான வாழ்க்கைக்குத் தள்ளப் பட்டாலும், வரலாற்று நாயகர்களாக அவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
உண்மை எதுவாக இருந்த போதிலும் உங்கள் கருத்து உங்களுக்கு உயர்ந்தது, அது போல என் கருத்து எனக்கு உயர்ந்தது. இதற்கு மேல் நம்மை யாரும் மாற்றப் போவதில்லை, நாமும் மாறப் போவதுமில்லை.
நந்தனார் பற்றிய மூலம் திருத்தொண்டர் தொகையிலும், பெரியபுராணத்திலும் காண்கிறது.சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் கோபால கிருஷ்ண பாரதியார் எழுதிய நந்தன் சரித்திரம் கதாகாலட்சேபம் செய்வதற்காக பல நிகழ்ச்சிகளைக் கற்பனையாகச் சேர்த்து சுவை கூட்டப்பட்டது.இன்று அதனை ஆதார நூலாக
ReplyDeleteஎடுத்துக்கொண்டு நந்தனாருக்கு வேதியர் கொடுமை செய்வதாகப் பேசுவது வழக்கமாகிவிட்டது.
//நமக்கு உதவாத பொழுது வெளிநாட்டினர் சதிகாரர்கள், அவர்கள்தான் நம்மிடம் பேதம் வளர்த்தார்கள் என்பதும், நமக்கு வேண்டும் பொழுது அவர்கள் நம் கலாச்சாரத்தை இவ்வாறு புகழ்ந்து சொன்னார்கள் என்பதும் முறையான விவாதமா? முன்னுக்குப் பின் முரண்.//
ReplyDeleteஎன் கருத்தாகச் சொன்னால் என் மேல் சாதிச் சாயம் பூசி ஒதுக்குவீர்கள் என்பதால் வெளிநாட்டுக்காரர்கள் கூற்றுக்களைச் சொன்னேன்.மேலும் இங்கே
சாதிபற்றிய வேற்றுமைக் கண்ணோட்டத்தை உருவாக்கியதே அரசு அதிகாரத்தில் இருந்த வெளிநாட்டோரே என்பதால் அவர்களில் புரிதல் உள்ளவர்களின் கூற்றுக்களையே கூறினேன்.அதுவும் இல்லாமல் நாம் இன்னும் காலனீய அடிமை புத்தியில் இருந்து விடுபடாததால் வெளிநாட்டுக்காரர்கள் எடுத்துக்கூறும் கருத்துக்களுக்கு இன்றுவரை மக்கள் மதிப்பு அளிப்பதால் அவர்களுடைய கருத்துக்களை முன் வைத்தேன்.
இன்று தொழில் அடிப்படையிலான சாதி என்பது விவசாயத்தைத் தவிர பிறவற்றில் மறைந்துவிட்டது. அதுவும் மேலை நாகரீகத்தைத்தழுவி
ReplyDeleteஇயந்திரமயமாக்கப்பட்டு கார்ப்பொரேட் நிறுவனங்கள் விவசாயத்தை ஆக்கிரமித்துவிட்டால் பாரம்பரிய விவசாயக் குடும்பங்களும் இல்லாமல் போய்விடும்.
காந்திஜி போராடியது தீண்டாமையை எதிர்த்துதான். வர்ண, சாதி, மரபு சார்ந்த பாசிடிவ் செய்திகளை அவர் கூறாமல் இல்லை. அதனாலேயே அவரை ஒரு சனாதனி என்று அவரை எதிர்போர் கூறியதும், கூறுவதும் உண்டு.
எப்படி சாதியை எதிர்த்து மதம் மாறியவர்கள் தங்கள் சாதிய அடையாளத்தைத் துறக்க வில்லையோ அதுபோலவே கலப்புத் திருமணக்காரர்ர்களும், எதோ ஒரு வகையில் தங்களை வகைப்படுத்திக் கொள்வார்கள்.
நான் நடப்புக்களைச் சொல்கிறேன். நீங்கள் லட்சிய வாதம் பேசுகிறீர்கள். என்றுமே லட்சியத்திற்கும் நடைமுறைக்குமான இடைவெளி அதிகம்தான்.
சாதி தவறு அல்ல. சாதி வேற்றுமை தவறு.தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.சாதியை இப்படி ஒழித்துவிடலாம் அப்படி ஒழித்துவிடலாம் என்பது கற்பனா வாதமே.
தன் பயலாஜிகல் பெற்றோரைத் தேடும் மன இயல்பு ஒரு தத்துப் போன குழந்தைக்கு இருக்கும் வரை சாதி எந்த ஒரு வகையிலாவது உலகத்தில் வாழும். பெற்ற குழந்தைக்குப் பால் கொடுக்காமல் குப்பைத் தொட்டியில் வீசும் தாய்மார்கள் அதிகமாகும் காலத்தில்தான் சாதி அழியும்.
சாதிகளினால் உள்ள பெருமை
ReplyDeleteசாதிக்க தெரிந்தவர்களுக்கே புரியும்..
சாதி சாய பூச்சு விழுந்தாலும்
சமயக் கொள்கைகளை விடலாகாது
சாதி சமயம் மதம் என வேறுபடுத்தி
சரியானதை புரிந்து கொண்டால்
சண்டைகளில்லை..
சர்ச்சைகள் இல்லை...
சாதிகள் என்பது ஆடை போல
சாதியை ஒழித்தல் என்பது
எல்லோரும் ஒன்று தானே என அது
அல்லாமல் இருப்பது போல
சாதி பற்றிய விவாதத்தில் அய்யர்
சத்தியமாக லால்குடியார் பக்கமே..
வகுப்பறை விவாத மேடை அமைத்து தரும் வரை அய்யரின் கருத்தில் மௌனமே தொடரும்..
வாழ்க.. வாழ்க
minorwall said...
ReplyDelete//சிவபெருமானும் பகடைக்காய்தான் என்று விளக்கம் அளிக்கிறார்..
இதுகுறித்து சைவம் பற்றிய விளக்கங்கள் அதிகம் நிறைந்த இந்தப் பதிவிலே சீனியர் அய்யர் அவர்களின் கருத்தை விழைகிறேன்..
வேறு யாரேனும் அறிந்திருந்தாலும் தெரியப்படுத்த வேண்டுகிறேன்..//
இது குறித்து தனியாக ஒரு கட்டுரை எழுத எண்ணியிருந்தேன். தாங்கள் கேட்டுவிட்டதால், பின்னூட்டத்திலேயே எனது கருத்தினை முன் வைக்கிறேன்.
இது குறித்து, திரு.ஸ்ரீகணேஷ் அவர்களுக்கு, 'சௌரம்' பற்றிய பதிவிலேயே விளக்கமளித்திருக்கிறேன். மீண்டும் தருகிறேன்.
ஷண்மதங்கள் ஒவ்வொன்றும் அந்தந்தப் பிரிவின் முழுமுதல் கடவுளே பரம்பொருள், மற்ற கடவுளர்கள் அந்தப் பரம்பொருளால், உலகை நடத்துவிக்கும் பொருட்டு, படைக்கப்பட்டவர்களே என்று கூறுகின்றன. இது ஸ்ரீ வைஷ்ணவத்திற்கும் பொருந்தும்.
உதாரணமாக, சாக்தத்தில், மும்மூர்த்திகளும் அம்பிகையின் ஆணைப்படியே செயல்படுகிறார்கள் என்றிருக்கிறது. மனிதர்கள் ஒவ்வொருவரும், வெவ்வேறு விதமான மனப்பாங்கு கொண்டவர்கள். ஒருவருக்கு, பரம்பொருளை தாயாகப்பார்க்கப் பிடிக்கும், மற்றொருவருக்குப் பேரொளி மயமாக வழிபடப் பிடிக்கும். ஆகவே, ஒரே பரம்பொருள் என்பது முக்காலும் உண்மையாக இருந்தாலும், வெவ்வேறு வடிவங்கள் நமது ஹிந்து தர்மத்தினால் கொடுக்கப்பட்டன.
மேலும் ஒரு திருடனுக்கு, மற்றொரு திருடனுடைய கதைதான் ரசிக்கும். அவனையும் நன்னிலைக்கு உயர்த்த வேண்டியே, ஸ்ரீ கிருஷ்ணர் வெண்ணெய் திருடினார் என்று சொல்லப்படுவது. இவ்வாறு சொல்லி, ஸ்ரீமத் பாகவதத்தின் மேல் அவனுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தி பிறகு அடிப்படை உண்மைகளைப் புரிய வைப்பதே நோக்கம்.
சைவத்திலும், ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கு, சுதர்சனச் சக்கரம், சிவனாரால் வழங்கப்பட்டது என்றிருக்கிறது. அம்பிகையின் வலது கண் சூரியனே என்று சாக்தத்தில் வருகிறது.
அந்தந்தப் பிரிவின் முழுமுதல் கடவுளாகக் குறிக்கப்படுபவரை, மற்ற கடவுள்கள், துதிப்பது போலவும், அவருக்குக் கட்டுப்பட்டவராகவும் ஏற்றிச் சொல்லுதல் ஒரு மரபு. இது ஒருவருக்கு அவர் சார்ந்த பிரிவில் உள்ள விருப்பத்தை அதிகரிப்பதற்காகச் சொல்லப்படுவது. கவிமரபு என்று சிலவற்றைக் குறிப்பது போலவே இதுவும் ஒரு மரபு.
ஒவ்வொருவருக்கும், அவர் சார்ந்த பிரிவின் பால் மாறாத பிடிப்பு வருவதற்காக, இவ்வாறு சொல்லப்பட்டது. 'ஒரே இறைவன், ஒரே மந்திரம், ஒரே வழிபாடு' என்ற நிலை வருவதற்கு இவை முதல் படிகளே. அந்த நிலை வரும்போது, பிறவாநிலை
அடைவது நிகழும். லௌகீக வாழ்வில் உழன்று திரியும் சாதகனை மேலேற்றி விடவே இது போல் சொல்லப்பட்டது. மற்ற பிரிவுகளில் முழுமுதல் கடவுளாகக் குறிக்கப்படுபவரையோ, அல்லது அந்தப் பிரிவுகளையோ குறைவு படுத்துவது நிச்சயமாக இவ்வாறு சொல்லப்பட்டதன் நோக்கமல்ல.
ஆறுகள் அனைத்தும் கடலைச் சென்றடைவது போல், எந்த வடிவத்தில் இறைவழிபாடு செய்யப்பட்டாலும், அவ்வழிபாடு, நம்மை ஒரே பரம்பொருளிடம் இட்டுச் செல்கிறது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.
minorwall said...
ReplyDelete//சிவபெருமானும் பகடைக்காய்தான் என்று விளக்கம் அளிக்கிறார்..
இதுகுறித்து சைவம் பற்றிய விளக்கங்கள் அதிகம் நிறைந்த இந்தப் பதிவிலே சீனியர் அய்யர் அவர்களின் கருத்தை விழைகிறேன்..//
உங்கள் விருப்பப்படி பதில் சொல்ல விரும்புகிறோம்..
ஆனால்
வகுப்பறை அனுமதி தர வேண்டும்
மேலும் இந்த பதிவில் தந்ததால் அது மற்றவர்களின் நம்பிக்கைகளில் குறை சொல்வதாக இருக்கலாகாது
அப்படி எண்ணி பதில் சொன்னால் நாம் சொல்லும் கருத்தின் முழுமை அறிபவர்களுக்கு எடுத்துச் சொல்வது இயல்பாகாது.
அதனால்
உங்களுக்கு வழக்கம் பதில் அனுப்புகிறோம் அடுத்த சில நாட்களில்..
வாழ்க..
வணக்கம்
உங்கள் அன்பிற்கும் நட்பிற்கும்
This comment has been removed by the author.
ReplyDeleteவகுப்பறையின்
ReplyDelete"ஆன்மிக அலைவரிசை"
சகோதரி பார்வதியார் விளக்கம் தந்துள்ளார்
மைனர் அவர்கள் இன்னமும் கேள்வி எழுப்பி தாருங்கள்...
உம்.
ஆறுகள் அனைத்தும் கடலைச் சென்றடைவது சரி
ஆனால் ஒவ்வொரு ஆற்று நீரின் சுவை போல், அது சேரும் கடல் நீர் இல்லையே..
கடல் நீர் சுவைபோல் இறைவன் என சொல்வது ஏற்கும் படி இல்லையே..
இப்படி பல கேள்விக் கணைகளை தொடுங்கள் மைனர்வால்...
இறைவன் துணைடன் நிறைவான விளக்கங்களுடன் பதில் தருவார் அய்யர்
This comment has been removed by the author.
ReplyDeleteParvathy Ramachandran said...
ReplyDeleteminorwall said...
நம்மை ஒரே பரம்பொருளிடம் இட்டுச் செல்கிறது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.///
அன்பு நிறைந்த
”ஆன்மிக அலைவரிசை”யே
சாதி பற்றிய சூடான விவாதத்தில்
தமிழ் சொன்ன சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதி வேண்டகிறோம்..
''ஒன்றே குலமும் , ஒருவனே தேவனும்
என்று திருமூலரும்....,
''யாதொரு தெய்வம் கொண்டீர் ; அங்கே அத் தெய்வமாகி
மாதொரு பாகனார்தாம் வருவர் ..''
-- என்று அருணந்திச சிவாச்சாரியாரும்..,
'' அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தி யாகி''
- என்று தாயுமானவரும்...,
'' சாதியிலே மதங்களிலே சமய நெறி களிலே
சாத்திர சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் !
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே ..''
-- என்று வள்ளலாரும்..,
'' அரியலால் தேவி யில்லை ஐயன் ஐயாற னார்க்கே...''
-என்று அப்பர் பெருமானும்,
'' எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா
யானும் வந்தேனொரு சித்தன் இந்த நாட்டில்..'
,,என்ற முண்டாசு கவியே
'' ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் !''
-- என்றதனை
தோழர் மைனர்வாலுக்கு எடுத்துச் சொல்லுங்கள்
வகுப்பறை விரும்பினால்
வருகிறோம் மீண்டும் பல சொல்ல
//இந்தியர்கள் பலர் வெளிநாட்டில் தனித்துவிடப்பட்டு வாழ்ந்துகொண்டுதான் இருகிறார்கள். அப்பொழுது அவர்களுடன் ஒட்டிகொண்டிருக்கும் ஜாதி எப்படி சமூக உணர்வை வளர்கிறது? அப்பொழுது அவர்கள் சமூக அரவணைப்பின்றி, பாதுகாப்பின்றி தத்தளிக்கிரார்களா?//
ReplyDeleteவலைதளம் சென்று தேடுங்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் எவ்வாறெல்லாம் தங்களை ஒரு குழுவாகக் காண்பித்துக் கொள்ள முயல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.தங்கள் மரபு கலாச்சாரம் மறந்துவிடக் கூடாது என்று எப்படியெல்லாம் செயல் படுகிறார்கள் என்பதற்கான ஆதாரம் கொட்டிக் கிடக்கிறது. தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் சென்று குடியேறிய தமிழர்களின் வாரிசுகளுக்குத் தமிழ் மொழியே தெரியாது. இருந்தாலும் இங்குள்ள மரபுசார் விஷயங்களில் எப்படி துடிப்போடு குழுவாக இயங்குகிறார்கள் என்று ஊடகங்களைப் பார்த்தால் புரியும். அதுவும் ஒரு குழு தங்களை மைனாரிடி என்று எண்ணத் தலைப்பட்டால் அவர்களுடைய ஒற்றுமை உச்சத்தைத் தொடும்.
//கார்கில் போர் வந்தபொழுது மாநில, மொழி, மத வேறுபாடுகளை மீறி இந்தியா ஒருங்கிணைந்தது. பதின்ம வயது கண்ணகி கொதித்தெழுந்து மன்னனையே அதட்டி நியாயம் கேட்க சென்ற பொழுது தன் பின்புலங்களை பரிவாரமாக கூட்டி சென்றதாகவும் தெரியவில்லை.//
ReplyDeleteபோர் நிலை என்பது எப்போதும் வருவதில்லை. உள் நாட்டுக் குழப்பங்களை மறக்கச் செய்ய/ ஒத்திப் போட வெளிநாட்டு ஆபத்தை சுட்டுவது எப்போதும் எல்லா அரசுகளுக்குமான வாடிக்கையும்தான்.அரசியல் நடத்தப் பொது எதிரி அவசியம். இன்று பாகிஸ்தான் அரசின் அடிப்படையே இந்தியா என்ற பொது எதிரிதான். பாகிஸ்தானியரை ஒற்றுமைப்படுத்த இது ஒன்றுதான் அவர்களிடம் உள்ள ஒரே கருவி.
பல வேறுபாடுகள் இருந்ததாலேயே தேவை ஏற்பட்ட போது ஒற்றுமைப் பட்டது
சிறப்பாக எடுத்துக் கூறப்படுகிறது. எந்த வேற்றுமையுமே இல்லை என்ற நிலை சர்வாதிகாரத்தில் இருக்கலாம். அல்லது சிந்தனை இல்லாதவர்களிடம் இருக்கலாம்.
கண்ணகிக்கு வந்த தார்மீகக் கோபம் அவள் வாழ்ந்து வளர்ந்த சூழலாலும் சமூகப் பிரக்ஞையாலுமே வருமே அல்லாது, எந்த ஒட்டுறவும் , மரபும், கற்பிக்கப்படாத ஒருவருக்கு வந்துவிடாது.
தவறு செய்த கோவலன் மனம் திருந்தி இல்லறம் திரும்பியதும், அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டு மீண்டும் அவனுடன் வாழத் தலைப்பட்ட கண்ணகி மரபுகளினால் வந்த பண்பாடாலேயே அவ்வாறு செய்தாள் அல்லவா?
//அய்யர் said...
ReplyDeleteParvathy Ramachandran said...
minorwall said...
நம்மை ஒரே பரம்பொருளிடம் இட்டுச் செல்கிறது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.///
அன்பு நிறைந்த
”ஆன்மிக அலைவரிசை”யே
சாதி பற்றிய சூடான விவாதத்தில்
தமிழ் சொன்ன சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதி வேண்டகிறோம்.//
பெரியீர் பொறுத்தருள்க. தாங்கள், ஆன்மீகத்தில், பி.எச்.டி. முடித்த முழுமையான நிலையில் இருக்கின்றீர். எனக்கு எல்.கே.ஜி.கே என்பாடு உன்பாடு என்றிருக்கிறது.
நான் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறேன். இது நிச்சயமாகத் தன்னடக்கம் இல்லை. உண்மை. தாங்கள் சித்தாந்தம் சார்ந்து விளக்குகிறீர்கள் ஐயா. நான் இப்போது பொதுவாகவே சொல்லி வருகிறேன். தங்களது
மிக உயர்ந்த நிலைக்கு வருவதற்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ ஈசனே அறிவார்.
இறை நம்பிக்கை என்ற வட்டத்திற்குள் வந்தாலல்லவா தாங்கள் கூறும் அற்புதத் தமிழ்பாக்களை எடுத்துக் கூறுவது இயலும்?. இது தாங்கள் அறியாததல்லவே. என் பொருட்டு, காலம் கனியும் வரை பொறுத்தருள் புரியுமாறு மிகப் பணிவுடன் வேண்டுகிறேன்.
///இன்று தொழில் அடிப்படையிலான சாதி என்பது விவசாயத்தைத் தவிர பிறவற்றில் மறைந்துவிட்டது. அதுவும் மேலை நாகரீகத்தைத்தழுவி
ReplyDeleteஇயந்திரமயமாக்கப்பட்டு கார்ப்பொரேட் நிறுவனங்கள் விவசாயத்தை ஆக்கிரமித்துவிட்டால் பாரம்பரிய விவசாயக் குடும்பங்களும் இல்லாமல் போய்விடும்.///
பரிணாம வளர்ச்சி போல தானே எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக காலத்திற்கேற்றவாறு மாறுவதைக் கண்ட பின்பும் தொழில் அடிப்படையில் பிரிவுபடுத்தப்பட்ட பழங்கால ஜாதி வழக்கத்தை விடாதிருப்பதால் பயன் என்ன, இல்லை யாருக்கு அதனால் ஆதாயம்?
_______________
///காந்திஜி போராடியது தீண்டாமையை எதிர்த்துதான். வர்ண, சாதி, மரபு சார்ந்த பாசிடிவ் செய்திகளை அவர் கூறாமல் இல்லை. அதனாலேயே அவரை ஒரு சனாதனி என்று அவரை எதிர்போர் கூறியதும், கூறுவதும் உண்டு.///
காந்தி போன்ற மகாத்மாக்களை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை
_______________
///சாதி வேற்றுமை தவறு.தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.///
சாதி இருப்பதால் மட்டும் இந்த தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் இல்லை. வேறு பல காரணங்களை காண்பித்து அடுத்தவரை தாழ்வாக கருதுவது என்றும் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. செல்வமும், நிறமும் போன்ற பல இந்தப் பட்டியலில் அடங்கும்.
ஆனால் ஜாதி இந்தியா ஸ்பெஷல், மனித இனத்தில் கடைபிடிக்கப் படும் மற்றவற்றுடன் கொசுறுவாக சேர்க்கப்பட்டுள்ள ஒன்று.
///தன் பயலாஜிகல் பெற்றோரைத் தேடும் மன இயல்பு ஒரு தத்துப் போன குழந்தைக்கு இருக்கும் வரை சாதி எந்த ஒரு வகையிலாவது உலகத்தில் வாழும்.///
ReplyDeleteதன்னை படைத்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அறிந்து கொள்ளும் இயற்கையான ஆர்வம், அல்லது தன்னை பெற்றோர்களின் பாசத்திற்கு ஏங்கவிட்டவர்களிடம் கொண்ட கோபத்தை வெளிப்படுத்த தேடுவார்கள்.
இது அனாதைக் குழந்தையாக வளர்ந்த அனைவருக்கும்/மனித இனத்தில் உள்ள அனைவருக்கும் உள்ள பொது உணர்வு
(தன் ஜாதி பற்றி அறிந்து கொள்ள தேடுவதில்லை, எனக்குத் தெரிந்தவரை நான் கேள்விப் பட்ட அயல் நாட்டின் தேடுதல்களுக்கு ஜாதி அறிவது என்பது காரணமில்லை)
_______________
///வலைதளம் சென்று தேடுங்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் எவ்வாறெல்லாம் தங்களை ஒரு குழுவாகக் காண்பித்துக் கொள்ள முயல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.///
வெளிநாடு வாழும் இந்தியர்கள் மட்டுமல்ல, பிற நாட்டினருக்கும் இந்த உணர்வு உண்டு. பழைய இனிய நினைவுகளுடன் தங்களைத் தொடர்புபடுத்தும் சூழ் நிலைகளை உருவாக்கிக் கொள்ளும் ஆர்வம். போகுமிடமெல்லாம் "சைனா டவுன்" அமைப்பது சீனர்களின் பழக்கமும் கூட. It's simply Nostalgia.
இது அனைத்து நாட்டினருக்கும்/மனித இனத்தில் உள்ள அனைவருக்கும் உள்ள பொதுவான உணர்வு.
_______________
///பாகிஸ்தான் அரசின் அடிப்படையே இந்தியா என்ற பொது எதிரிதான். பாகிஸ்தானியரை ஒற்றுமைப்படுத்த இது ஒன்றுதான் அவர்களிடம் உள்ள ஒரே கருவி.///
பொது எதிரி வந்தவுடன் இணைவதும் உலகம் முழுவதும் நடப்பதுதான். இதுதான் ஒசாமா அமெரிக்காவைத் தாக்கியபொழுது அமெரிகர்களிடமும் தோன்றியது.
இது அனைத்து நாட்டினருக்கும்/மனித இனத்தில் உள்ள அனைவருக்கும் உள்ள பொதுவான உணர்வு.
_______________
///தவறு செய்த கோவலன் மனம் திருந்தி இல்லறம் திரும்பியதும், அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டு மீண்டும் அவனுடன் வாழத் தலைப்பட்ட கண்ணகி ///
மறந்து மன்னிப்பதை அனைத்து மதமும் அறிவுறுத்துகிறது; மற்ற பிற மதத்தினருக்கும் மிக பரிச்சயமான அறிவுரைகளில் ஒன்று ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட சொல்லும் ஏசுவின் அறிவுரை.
இதுவும் அனைத்து மதத்தினருக்கும்/மனித இனத்தில் உள்ள அனைவருக்கும் உள்ள பொதுவான உணர்வு.
(கண்ணகி கற்புக்கரசி என்று விவாதத்தை திசை திருப்ப வேண்டாம் என்பது என் வேண்டுகோள்).
_______________
இதுவரை மனித இனத்திற்கே இயல்பாக பொதுவாக உள்ள (அன்பு, காதல், பாசம், வெறுப்பு போன்றவற்றை ஒத்த) குணங்களைப் பட்டியல் இட்டாகிவிட்டது.
இனி அடுத்த கட்ட நடவடிக்கை.....இப்பொழுது இந்தியாவிற்கே உரிய ஜாதி பிரிவுகளால் ஏற்படும் கொடுமைகளுடன் எப்படி இவற்றை இணைப்பது என்றும் சொல்லிவிடுங்கள்.
.....இப்பொழுது இந்தியாவிற்கே உரிய ஜாதி பிரிவுகளால் ஏற்படும் கொடுமைகளுடன் எப்படி இவற்றை இணைப்பது என்றும் சொல்லிவிடுங்கள்.//
ReplyDeleteசாதி என்பது இந்திய ஸ்பெஷல் கிடையாது. சமூகவியல் ரீதியாகப் பார்த்தால் குடும்ப அமைப்பு வலுவாக உள்ள நாடுகளில் இனக்குழுக்கள் அல்லது சாதிகள் வலுவாக இருக்கின்றன. தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் சமுதாயம் இனக்குழு அல்லது சாதி அடிப்படையில்தான் அமைந்துள்ளது.
எதிர்காலத்தில் சாதி இருக்காது என வாத்தியார் சொன்னதற்கு நான் இட்ட பின்னூட்டம்:
குடும்ப அமைப்பு வழக்கொழிந்தாலோழிய சாதி அழியாது. இப்பொழுது சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் தங்கள் மகன் மகளுக்கு காதல் அமையாவிட்டால் தங்கள் இருவரில் யாருடைய சாதியிலாவதுதான் திருமணம் செய்வர். மேல்நாடுகளில் பிள்ளைகள் பதினைந்து வயதிற்கு மேல் பெற்றோர் சொத்தை எதிர்பார்க்காமல்
பெற்றோரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன் மேல் படிப்புக்கு தானே பகுதி நேர வேலை செய்து சம்பாதித்து அவர்களே வாழ்க்கைத் துணையையும் தேடிக் கொள்வர்.
அது போன்ற குடும்ப அமைப்பு இருந்தால்தான் சாதி ஒழியும்.
நம் சமுதாயத்தில் நிச்சயிக்கபட்ட சாதி மறுப்பு திருமணங்கள் மிகவும் குறைவே. காதல் திருமணம் அனைவருக்கும் அமைந்து விடாது என்பது உங்களுக்கே தெரியும்.
நம் சமுதாயத்தில் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் நாடுகள் போன்ற குடும்ப அமைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லாததால் சாதி ஒழிப்பு என்பதெல்லாம் மேடைப் பேச்சுக்கே உதவும். இதை சொன்னால் நான் பிற்போக்குவாதி என்பார்கள். யதார்த்தவாதி வெகுஜன விரோதி என்பது அனைத்து காலத்துக்கும் பொருந்தும்தானே.
. //எனக்குத் தெரிந்து இந்தியவர்கள் என்றால் வெளிநாட்டினருக்கு முதலில் நினைவு வருவது பாம்பாட்டிகள் உள்ள நாடு, மாட்டுவண்டியில் பயணிப்பவர்களின் நாடு, ஜாதி அடிப்படையில் தீண்டத் தகாதவர்..தலித் என்ற கொடுமை உள்ள நாடு, வரதட்சினை, லஞ்ச லாவண்யங்கள் நிறைந்த நாடு என்பதுதான்.//
ReplyDeleteமாட்டு வண்டியில் பயணிப்பது என்னவோ தவறு என்று ஒரு கண்ணோட்டமா?
மோட்டார் காரில் பறப்பது முன்னேற்றமா?
இன்று பாம்பு பிடிப்பதிலும், பாம்புப் பண்ணை நடத்துவதிலும் முன்னணியில் வெளி நாட்டினரே உள்ளனர்.வர்த்தகம் உண்டானால் பாம்பு மட்டுமல்ல,நண்டு நட்டுவாக்கிளி, வவ்வால் எல்லாவற்றையும் அழிப்பார்கள் வெளிநாட்டவர்கள்.
இங்கே மிகக்குறைந்த எண்ணிக்கையில் பாம்பை வைத்து மகுடி ஊதி ஆடவைத்து வித்தை காட்டியவர்கள் இருந்தார்கள். அவர்கள் பாம்புத் தோலில் பெல்ட் செய்ய பாம்புகளைக் கொல்லவில்லை.
வரதட்சணை என்பது ஆங்கிலேயரால் இந்திய ஆண்களுக்கு அளிக்கப்பட்ட "கொடை".வரதட்சணை இந்திய மரபு அல்ல. பரிசம் போடுதல், கன்யாசுல்கம் என்பதே நமது முறை.பெண்ணுக்குத் தான் ஆண் தொகை கொடுத்து மணக்க வேண்டும்.ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு 1856 போலத் திருமணம். அதுவரை கன்யாசுல்கம்தான் இங்கே நடைமுறை என்று தெரிகிறது. 1857ல் இருந்து விக்டோரியா மகாராணியின் நேரடி நிர்வாகம்.சிப்பாய் கலகம் என்று சிறுமைப் படுத்தப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர் நடந்து முடிந்து கிழக்கிந்திய கும்பெனியை விலக்கி அரசி நேரடி நிர்வாகத்திற்கு வந்தபின்னர், அரசு உத்யோகங்கள் இந்தியருக்குக் கிடைக்கத்துவங்கிய பின்னர் ஆங்கிலேயரிடமிருந்து கற்றுக்கொண்ட பழக்க்மே டவுரி.டவுரி என்ற சொல்லின் மூலத்தை ஆராயவும்.
தீண்டாமையை கடைப்பிடித்தவர்களில் தலித்துக்களும் அடங்குவர்.இதை அறிவீர்களா? ஒரு பிராமணன் அவர்களுடைய காலனிக்குள் நுழைவது அபசகுனமாகவும், அச்சான்னியமாகவும்,தீட்டுப்பட்டுவிட்டதாகவும் கருதுவது
இருந்துள்ளது. அம்பேத்காரும், அயோத்திதாச பண்டிதருமே இதை விளக்கியுள்ளார்கள்.நூல் ஆதாரம் தரலாமா?
லஞ்ச லாவண்யமே இல்லாத நாடுதான் இது. சைன யாத்திரிகர்கள் அவ்வாறெல்லாம் எழுதியுள்ளார்கள்.
வாரன் ஹேஸ்டிங்ஸ்(முதன்மை ஸ்தானதில் இருந்தவர்) இங்கே வந்து லஞ்சம் பெற்றது கீழ் மட்டம் வரை பரவிவிட்டது.நமது சாத்திர நூல்களில்
லஞ்சத்திற்கு அதிக பட்ச தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. "சிவன் சொத்து குலநாசம்" என்று பொதுச் சொத்துக்களைக் கையாளும் எளிய மக்கள் இன்றும் கூறும் நாடுதாம் நாம்.
வெளிநாடுகளில் எல்லாம் பலரும் மனம் மாறி இந்தியாவைப்பற்றி நல்லெண்ணம் கொண்டபின்னர் "உங்களுக்குத் தெரிந்துள்ள" செய்திகள் 18ம்
நூற்றாண்டுச் செய்திகளாக உள்ளன.
சரி நடைமுறையில் சாதி ஒழிப்பை எப்படிச் செய்யலாம் என்று பார்ப்போம்:
ReplyDeleteசாதி என்பது குழந்தைக்குப் பெயர் வைப்பதிலிருந்து தொடங்குகிறது. இப்பொழுது பெரும்பாலான சாதியினர் வடமொழிப் பெயர்களையே அதிகம் விரும்புகிறார்கள். அப்பொழுது வடமொழிப் பெயர் விரும்பாத சாதியினர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா அல்லது அரசாங்கம் சாதி வேற்றுமையைக் குறிக்காத பெயர்களை அறிவித்து அவற்றில் ஒன்றைத்தான் அனைவரும் வைத்துக் கொள்ள வேண்டுமென்று சட்டம் இயற்ற வேண்டுமா?
குழந்தைக்குப் பெயர் வைக்கும் சடங்குக்கு ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வொரு முறை வைத்துள்ளார்கள். அரசாங்கம் ஒரு பொது முறையை அறிவிக்க வேண்டுமா?
குழந்தைக்கு ஒரு வயதாகும் போது சில சாதியினர் ஹோமம் செய்வார்கள். சில சாதியினர் ஆடு வெட்டி பொங்கல் படைப்பார்கள். அனைவரும் ஹோமம் செய்ய வேண்டுமா அல்லது அனைவரும் ஆடு வெட்ட வேண்டுமா அல்லது அரசாங்கம் இதை முறைப்படுத்த வேண்டுமா?
இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நடக்கும் விடயங்களை அரசாங்கம் முறைப்படுத்திக் கொண்டிருந்தால் அரசாங்கத்தால் வேறு வேலைகளைக் கவனிக்க முடியுமா?
சாதியைச் சொல்லி யாரையும் கொடுமைப் படுத்துவதை சட்ட ரீதியாகத் தடுப்பதுதான் அரசாங்கம் செய்யக் கூடிய காரியம்.
எதிர்காலத்தில் மேற்கத்திய நாடுகள் போல பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு குடும்ப அமைப்பு சிதைந்து சடங்குகளில் நம்பிக்கை இல்லாத சமுதாயம் உருவாகும். அப்பொழுது உங்கள் சாதி ஒழிப்பு லட்சியம் நிறைவேறும். ஆனால் அப்பொழுது குடும்பமில்லா குழந்தைகளின் மற்றும் இளைஞர்களின் மனவியல் பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்று யோசிக்க வேண்டியிருக்கும்.
ரத்த சம்பந்தமுடைய சாதிய அமைப்பு உலகில் எல்லா நாடுகளிலும் உண்டு.
ReplyDeleteநமது நாட்டில் தொழில் அடிப்படையில் சொல்லப்பட்ட வர்ணமும்,சாதியும் ஒன்றல்ல என்றாலும் , ஒன்றோடு 'ஒன்று ஓவர் லாப்பிங்' ஆகி எதனால் எது வளர்ந்தது என்று வகைப்படுத்த முடியாதபடி ஆகிவிட்டது.
கொல்லர்/தச்சர் என்று எடுத்துக் கொண்டால் தங்கம், தாமிரம்,இரும்பு, கல்,மரம் என்று பல பொருட்களில் தொழில் புரிவோர் தனித்தனிக் குழுவாக, சாதியாக ஆகிவிட்டனர்.அவர்களுக்குள் கொண்டு கொடுப்பு இல்லாமல் ஆகிவிட்டது.இதற்கும் வர்ண பகுப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
தொழில் முறை சாதிமுறை இப்போது இல்லை.ஆனால் ரத்த முறை சாதி முறை எஞ்சி உள்ளது.இதனை மக்கள் கைவிட மிக நீண்டகாலம் ஆகலாம். கைவிட வேண்டுமா, வேண்டாமா என்பதே நம் முன் உள்ள கேள்வி.
கோத்திரம் என்பது சகோதரர், சகோதரி உறவுகளுக்குள் திருமணம் ஆகிவிடக்கூடாது என்பதை தவிர்ப்பதற்காக ஏற்பட்ட ஒரு முறை.அது பிராமணர்களுக்குள்ளே தான் நடைமுறையில் உள்ளது என்று அறியாமையால் நினைத்து இருந்தேன்.சமீபத்தில் பல சாதியாரிடம் கேட்டு அறிந்ததில் அவர்களுக்குள்ளும் அதற்கான தற்காப்பு ஏற்பாடுகள் இருப்பதைக் கண்டு வியந்தேன்.
ரத்த உறவுகள் இருக்கும் வரை சாதி/குழு மனப்பானமை இருந்தே தீரும்.
ஜகன்னாத் கூறுவது போல குடும்ப அமைப்பு முற்றிலும் சிதறினாலே சாதி இங்கே ஒழியும்.
எல்லாவற்றையும் உதறிவிட்டு சுதந்திரமாகக் கிளம்பிய கூட்டத்திற்கும் ஹிப்பி என்ற அடையாளம் கிடைத்துவிட்டது.
அப்படியே சடங்குகளே இல்லாமல் இலட்சியவாதியாக குழந்தைகளை வளர்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். குழந்தை பத்தாம் வகுப்பு வந்ததிலிருந்து பலருக்கு சாதி அடிப்படையிலான சலுகைகள் கிடைப்பதைப் பார்த்து இது ஏன் என்று கேட்டால் என்ன விளக்கம் சொல்வது? இந்தியாவில் இட ஒதுக்கீடு உண்மையாக
ReplyDeleteதாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மட்டும் அளிக்கப்பட்டால் அதை பதிலாகச் சொல்லலாம். இங்கோ ஒவ்வொரு சாதியினரும் இருக்கும் ஓட்டு பலத்திற்கு ஏற்ப பிற்படுத்தப்பட்டவர் என்ற பட்டியலில் போலியாக இடம் பெற்று விடுகிறார்கள். கல்லூரி நுழையும்போதே ஒவ்வொருவனுக்கும் தான் இன்ன சாதி என்பதைத் தெரிந்து கொள்ளாமல் நுழைய முடியாது. பிற்படுத்தபட்டவனுக்கு தாழ்த்தப்பட்டவன் மேலும், பொதுப் பிரிவினருக்கு மற்ற பிரிவினர் மேலும் காழ்ப்புணர்வு வந்து விடுகிறது. இதில் எங்கிருந்து சாதியை ஒழிப்பது?
உண்மையாக சாதியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்று இருந்தால் இத்தகைய காழ்ப்புணர்வுகள் குறையும். அமெரிக்காவில் கருப்பர்களுக்கான இட ஒதுக்கீட்டின் நியாயம் அனைவருக்கும் புரிந்திருப்பதால் அங்கு காழ்ப்புணர்ச்சிகள் காலப்போக்கில் குறைந்துள்ளன.
சேலத்தில் பிறந்த செம்மல், தஞ்சைத் தரணியில் வாழ்ந்த வள்ளல், லால்குடியில் கரையிறங்கிய புயல், பல்துறை வித்தகர், நினைவுத்திறனில் யானையையும், சுறுசுறுப்பில் தேனீயையும் ஒத்த எங்கள் வகுப்பறையின் மூத்த மாணவர் கிருஷ்ணன் அவர்களுக்கு செஞ்சுரி அடித்ததற்காக இந்த நூறு ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட மாலையை வகுப்பறையின் சார்பாக அணிவிக்கிறோம். இதுபோல் மேலும் பல செஞ்சுரிகள் அவுட் ஆகாமல் அடித்து விளையாட உங்களுக்கு நல்ல உடல்நலத்தை நாளும் தரவேண்டி இறைவனை வேண்டுவதோடு, படைப்பாளிக்குத் தேவையான மகிழ்ச்சியான சூழலை அமைத்துக்கொடுத்த தங்களின் மனைவியையும் இத்தருணத்தில் பாராட்டுகிறோம்.
ReplyDeleteஉங்களின் நூறாவது ஆக்கத்தில் என்ன எழுதப்போகிறீர்கள் என ஆவலுடன் படித்தேன். நெகிழ்ச்சியூட்டும் பதிவு. இதேபோல் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைப் போனவாரம் படித்தேன். அவர் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகமாக்கும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
ReplyDeleteசதன்ராஜின் முதல் ஆக்கம் அவரின் முதல் ஆக்கம் போல் உண்மையில் தோன்றவில்லை, நல்ல எழுத்து நடை. சோம்பேறித்தனத்தை உதறிவிட்டு (ஹி ஹி, இதைச் சொல்ல உனக்கு தகுதி இருக்கான்னு கேட்கபடாது) தொடர்ந்து ஆக்கங்களைத் தாருங்கள்.
ReplyDeleteபார்வதியின் கட்டுரை ஓரளவு புரிந்தது (அதுவும் கஷ்டப்பட்டுதான்). இருந்தும் இந்த ஆக்கங்களை எழுத மேற்கொண்ட உங்களின் உழைப்பு புரிகிறது, வாழ்த்துக்கள்!
நல்ல கற்பனை தேமொழி!
ReplyDeleteபொறுமையாக கடலை சாப்பிட்டுக்கொண்டு பொக்கை வாய் திறந்து சிரித்தார் தேசத்தந்தை. //
பொக்கைவாய் இருந்தும் கடலை எப்படி சாப்பிட்டார்??
சாதிகள் ஒழிப்பைவிட சாதி துவேஷத்தை ஒழிப்பதுதான் முக்கியமானது. நடைமுறையில் இதுதான் செய்யக்கூடியதும் கூட.
ஆனால் சலுகை கிடைக்கும் என்றால் நம் மக்கள் சான்றோராக மாற முயற்சிப்பார்கள்.//
இப்படி சலுகை கொடுத்து மாற்றுவதற்கு அவர்கள் சான்றோராக ஆகவே வேண்டாமே!
என் நெருங்கிய உறவினர் பெண் வேறு மதத்தில் திருமணம் செய்துகொண்டிருக்கிறாள். திருமணத்திற்கு முன் அவர்கள் போட்ட முதல் கண்டிஷன், அவள் மதம் மாறவேண்டும் என்பது, அதன் பின் பொட்டு வைக்கக்கூடாது, உன் கடவுளை வணங்கக்கூடாது என நிறைய. அவள் இன்றுவரை அவர்கள் சொல்லும் எதற்கும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. தன்னை முழுதுமாக மாற்றிக் கொண்டுவிட்டாள். அதனால் பிரச்சனையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல் சலுகை கொடுத்தாலும் அதை வாங்கிக்கொண்டு உள்ளுக்குள் இது நடக்கும். இது சரியான தீர்வு கிடையாது.
இதை நான் எழுதுவதால் காதல் திருமணத்தை எதிர்க்கவில்லை. அஜீத் - ஷாலினி போல் ஒருவர் மற்றவரின் சுதந்திரத்தில் தலையிடாமல் மதித்து வாழ முடியும். ஆனால் அப்படி வாழ்பவர்கள் மிகவும் குறைவு.
வரதட்சணை வாங்கக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. எத்தனை பேர் அதைப் பின்பற்றுகிறார்கள்? சட்டத்திற்குத் தெரியாமல் மறைவாக நடக்கத்தானே செய்கிறது. நம் ஊரில் பரவாயில்லை என்பது போல் இங்கெல்லாம் பெண்ணிற்கு கார், பீரோ, ஐம்பது, நூறு பவுன் நகை என்று ஏகத்திற்கு வரதட்சணை. ஆனால் வரதட்சணை என்று ஒரு பைசா கூட வாங்காமல், இன்னும் சொன்னால் தான் சில நகைகள் போட்டு திருமணம் செய்துகொள்பவர்கள் சட்டத்திற்குப் பயந்து அதைச் செய்வது இல்லை. தன் கொள்கை உறுதியால் செய்கிறார்கள். சிக்னலில் போலிஸ் நின்றால் சட்டத்தை மதித்தும், யாருமில்லைஎன்றால் மீறுவதும் நடக்கும் ஒன்றுதானே?
இவை தன்னாலேயே நடக்க வேண்டுமென்றால் மனித நேயம் வளர வேண்டும். ஒரு ஜாதியினர், மதத்தினர் மற்ற பிரிவினரை குறை கூறிக்கொண்டு இருக்கும் வரையில் இது நடக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு.
ஜாதகப்படியும் கலப்பு மணத்திற்கு என சில அமைப்புகள் இருக்கின்றன. அவை எல்லா ஜாதகத்திலும் இருக்காது.
காலையில் அலுவலகம் வரும்போது கண் இமைத்து மூடும் நேரத்தில் ஒரு பையனின் மரணம் கண்முன்னால் நிகழ்ந்தது. நமக்கு இருக்கும் குறுகிய வாழ்க்கையில் நான் இந்த ஜாதி, மதம், இனம் என்ற வட்டத்திற்குள் சிக்கவிரும்பவில்லை.
தனுசு கிருஷ்ணன் சாருக்கு நீங்கள் எழுதிய கவிதை வாழ்த்து சூப்பர்! உங்களின் வழக்கமான கோபம் கொப்பளிக்கும் சக்தி கொடு கவிதை. நிறைய வரிகள் பிடித்திருந்ததால் இரண்டாவது முறையும் படித்தேன்.
ReplyDeleteஆனந்தமுருகனின் நகைச்சுவை ஏற்கனவே படித்திருக்கிறேன். சபரியின் துணுக்கும் நன்றாக இருந்தது.
நானும் கிருஷ்ணன் சாரைத் தொடர்ந்து வாராவாரம் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஎப்படி இப்படி பார்வதி? அசத்தல் (இது உங்கள் கவிதையைப்பற்றிய கருத்து).
ReplyDeleteஆனந்தமுருகனுக்கும் ,சபரிக்கும் பரிவர்த்தனையா? ஆங்கிலம்,தமிழ் இருவருக்கும் இடம் மாறி விட்டது இரண்டும் நன்றாக இருந்தது.//
ReplyDeleteஹா ஹா நல்ல கமெண்ட்!
/////////அய்யர் said...
ReplyDeleteminorwall said...
//சிவபெருமானும் பகடைக்காய்தான் என்று விளக்கம் அளிக்கிறார்..
இதுகுறித்து சைவம் பற்றிய விளக்கங்கள் அதிகம் நிறைந்த இந்தப் பதிவிலே சீனியர் அய்யர் அவர்களின் கருத்தை விழைகிறேன்..//
உங்கள் விருப்பப்படி பதில் சொல்ல விரும்புகிறோம்..
ஆனால்
வகுப்பறை அனுமதி தர வேண்டும்
மேலும் இந்த பதிவில் தந்ததால் அது மற்றவர்களின் நம்பிக்கைகளில் குறை சொல்வதாக இருக்கலாகாது
அப்படி எண்ணி பதில் சொன்னால் நாம் சொல்லும் கருத்தின் முழுமை அறிபவர்களுக்கு எடுத்துச் சொல்வது இயல்பாகாது.
அதனால்
உங்களுக்கு வழக்கம் பதில் அனுப்புகிறோம் அடுத்த சில நாட்களில்..
வாழ்க..
வணக்கம்
உங்கள் அன்பிற்கும் நட்பிற்கும்////////
அவரு தெளிவா டிவி ப்ரோக்ராம்லே பப்ளிக்காதான் இதைச் சொல்லியிருக்காரு.. (அதுக்காக போயி அவரை அறிவிலி அப்பிடி இப்பிடி ன்னு ஏன் திட்டுறீங்கோ? )
எனக்கு தனியா ஒண்ணும் மெயிலிலே சொல்லலே..அதுனாலே நீங்களும் மெயிலிலேதான் சொல்லணும்ன்னு ஒண்ணும் கட்டாயம் இல்லே..இல்லே தனியாத்தான் சொல்லுவேன்னா அப்படியே பண்ணுங்கோ..வாழ்த்துக்கள்..
minorwall said...
ReplyDeleteஅவரு தெளிவா டிவி ப்ரோக்ராம்லே பப்ளிக்காதான் இதைச் சொல்லியிருக்காரு.. (அதுக்காக போயி அவரை அறிவிலி அப்பிடி இப்பிடி ன்னு ஏன் திட்டுறீங்கோ? )
எனக்கு தனியா ஒண்ணும் மெயிலிலே சொல்லலே..அதுனாலே நீங்களும் மெயிலிலேதான் சொல்லணும்ன்னு ஒண்ணும் கட்டாயம் இல்லே..இல்லே தனியாத்தான் சொல்லுவேன்னா அப்படியே பண்ணுங்கோ..வாழ்த்துக்கள்.....///
கடவுள் இல்லைன்னு சொல்ற கருப்புச் சட்டை காரர்கள் கூட பப்ளிக்கா மீட்டீங் போட்டு சொல்றாங்க அதுக்காக நாமும் அப்படியா செய்யனும்..
சாக்கடையில் கல் எறிந்து பார்க்க யார் தான் விரும்புவார்கள்..
அர்த்தமற்ற வாதங்களுக்கு
அப்படி பதில் சொல்வது சரியல்ல..
ஆனாலும் சந்தேகம் என விளக்கம் கேட்டு வரும் போது நிச்சயம் சொல்லித்தான் ஆக வேண்டும்..
அதற்கு தான் அந்த மின்னஞ்சல்..
முன்னரே சொன்னோம் கடவுள் வேறு இறைவன் வேறு தெய்வம் வேறு தேவர்கள் வேறு..
கடவுளின் வேலையே வேறு..
கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால்
கேட்பவருக்கு மதி எங்கே போயிற்று.
எதிர்வாதம் செய்து PLI போடுவது நாம் செய்வதில்லை.. அவர்களே திருந்தி வரட்டும் என காத்திருப்போம்..
பொறுமை கடலில் பெரிது என அடிக்கடி வாத்தியார் சொல்வார்..
கடல் பூமியில் 71%
பூமி இருப்பதோ ஆகாயத்தில்
நமது பொறுமை
அதைவிட பெரியது..
அதனால் தான் உங்களுக்கு மெயிலில் பதில் தருவதாக சொன்னோம்..
தவறாக எண்ண வேண்டாம்
////////Parvathy Ramachandran said...
ReplyDeleteminorwall said...
//சிவபெருமானும் பகடைக்காய்தான் என்று விளக்கம் அளிக்கிறார்..
இதுகுறித்து சைவம் பற்றிய விளக்கங்கள் அதிகம் நிறைந்த இந்தப் பதிவிலே சீனியர் அய்யர் அவர்களின் கருத்தை விழைகிறேன்..
வேறு யாரேனும் அறிந்திருந்தாலும் தெரியப்படுத்த வேண்டுகிறேன்..//
இது குறித்து தனியாக ஒரு கட்டுரை எழுத எண்ணியிருந்தேன். தாங்கள் கேட்டுவிட்டதால், பின்னூட்டத்திலேயே எனது கருத்தினை முன் வைக்கிறேன்.
இது குறித்து, திரு.ஸ்ரீகணேஷ் அவர்களுக்கு, 'சௌரம்' பற்றிய பதிவிலேயே விளக்கமளித்திருக்கிறேன். மீண்டும் தருகிறேன்.
ஷண்மதங்கள் ஒவ்வொன்றும் அந்தந்தப் பிரிவின் முழுமுதல் கடவுளே பரம்பொருள், மற்ற கடவுளர்கள் அந்தப் பரம்பொருளால், உலகை நடத்துவிக்கும் பொருட்டு, படைக்கப்பட்டவர்களே என்று கூறுகின்றன. இது ஸ்ரீ வைஷ்ணவத்திற்கும் பொருந்தும்.
உதாரணமாக, சாக்தத்தில், மும்மூர்த்திகளும் அம்பிகையின் ஆணைப்படியே செயல்படுகிறார்கள் என்றிருக்கிறது. மனிதர்கள் ஒவ்வொருவரும், வெவ்வேறு விதமான மனப்பாங்கு கொண்டவர்கள். ஒருவருக்கு, பரம்பொருளை தாயாகப்பார்க்கப் பிடிக்கும், மற்றொருவருக்குப் பேரொளி மயமாக வழிபடப் பிடிக்கும். ஆகவே, ஒரே பரம்பொருள் என்பது முக்காலும் உண்மையாக இருந்தாலும், வெவ்வேறு வடிவங்கள் நமது ஹிந்து தர்மத்தினால் கொடுக்கப்பட்டன.
மேலும் ஒரு திருடனுக்கு, மற்றொரு திருடனுடைய கதைதான் ரசிக்கும். அவனையும் நன்னிலைக்கு உயர்த்த வேண்டியே, ஸ்ரீ கிருஷ்ணர் வெண்ணெய் திருடினார் என்று சொல்லப்படுவது. இவ்வாறு சொல்லி, ஸ்ரீமத் பாகவதத்தின் மேல் அவனுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தி பிறகு அடிப்படை உண்மைகளைப் புரிய வைப்பதே நோக்கம்.
சைவத்திலும், ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கு, சுதர்சனச் சக்கரம், சிவனாரால் வழங்கப்பட்டது என்றிருக்கிறது. அம்பிகையின் வலது கண் சூரியனே என்று சாக்தத்தில் வருகிறது.
அந்தந்தப் பிரிவின் முழுமுதல் கடவுளாகக் குறிக்கப்படுபவரை, மற்ற கடவுள்கள், துதிப்பது போலவும், அவருக்குக் கட்டுப்பட்டவராகவும் ஏற்றிச் சொல்லுதல் ஒரு மரபு. இது ஒருவருக்கு அவர் சார்ந்த பிரிவில் உள்ள விருப்பத்தை அதிகரிப்பதற்காகச் சொல்லப்படுவது. கவிமரபு என்று சிலவற்றைக் குறிப்பது போலவே இதுவும் ஒரு மரபு.
ஒவ்வொருவருக்கும், அவர் சார்ந்த பிரிவின் பால் மாறாத பிடிப்பு வருவதற்காக, இவ்வாறு சொல்லப்பட்டது. 'ஒரே இறைவன், ஒரே மந்திரம், ஒரே வழிபாடு' என்ற நிலை வருவதற்கு இவை முதல் படிகளே. அந்த நிலை வரும்போது, பிறவாநிலை
அடைவது நிகழும். லௌகீக வாழ்வில் உழன்று திரியும் சாதகனை மேலேற்றி விடவே இது போல் சொல்லப்பட்டது. மற்ற பிரிவுகளில் முழுமுதல் கடவுளாகக் குறிக்கப்படுபவரையோ, அல்லது அந்தப் பிரிவுகளையோ குறைவு படுத்துவது நிச்சயமாக இவ்வாறு சொல்லப்பட்டதன் நோக்கமல்ல.
ஆறுகள் அனைத்தும் கடலைச் சென்றடைவது போல், எந்த வடிவத்தில் இறைவழிபாடு செய்யப்பட்டாலும், அவ்வழிபாடு, நம்மை ஒரே பரம்பொருளிடம் இட்டுச் செல்கிறது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.////////////
நல்லாச் சொன்னீங்க போங்க..
கடல்லே கவுதமும் துளசி நாயரும்தான் கலக்கப்போறதாக் கேள்விப்பட்டேன்..நீங்க ஆறு எல்லாமே கலக்குதுன்னு சொல்லிக் கலக்கிட்டீங்க..
ஆனா கேட்ட கேள்விக்கு பதிலை மட்டும் சொல்லவே மாட்டேங்குறீங்களே?
பெருமாளால் சிவனுக்கு செக் வைக்க முடியுமா அப்புடிங்குற என் கேள்விக்கு என்ன பதில்?கருணாகராச்சாரியார் கான்செப்ட் படி முடியும்..மத்தவா என்ன சொல்றேள்ன்னுதான் கேட்டேன்...
This comment has been removed by the author.
ReplyDeleteஇந்த அப்பர் தேவாரத்தினையே பதிலாக தருகிறோம்..
ReplyDeleteஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே
அது சரி
தோழர் மைனர்வால் அவர்களே..
Chief Secretary
Chief Ministerக்கு
Memo கொடுக்க முடியுமா..
This comment has been removed by the author.
ReplyDelete///////அய்யர் said...
ReplyDeleteஅது சரி
தோழர் மைனர்வால் அவர்களே..
Chief Secretary
Chief Ministerக்கு
Memo கொடுக்க முடியுமா..//////////
முன்னாள் இந்திய கேபினட் செக்ரட்டரி ஆகவும், வடமாநிலங்களில் கவர்னராகவும் இருந்த தர்ம வீரா என்ற சீனியர் ஜூனியர்களுக்கு சொன்ன அட்வைஸ்:
"நீங்கள் ஒரு நிர்வாக அலுவலர்.முடிந்த வரையில் உங்கள் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்..எவ்வளவுக்கெவ்வளவு குறைவாகப் பேசுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்கு வரும் தொந்தரவுகளும் குறைவாக இருக்கும்."
அப்பாயன்ட்மென்ட்டே C .M .பார்த்துப் பண்றதுதான்..
வாயைத் திறக்கவே இந்தப் பாடு படும் போது வீணா மெமோ கனவெல்லாம் எதுக்கு?
இப்பத்தான் பிரச்சினையெல்லாம் ஒய்ஞ்சு போய் கொஞ்சம் calmஆ இருக்கு..
அது உங்களுக்குப் பொறுக்கலையாக்கும்?
ஏற்கனவே ஒருமாசத்தைக் கடத்திட்டாரே?(சிம்ம ராசிக்கு மூணுலேருந்து ரெண்டுக்கு வந்த சனிப் பெயர்ச்சி ஆனது மே 16 )
இன்னும் ஒரு ஒண்ணரை மாசம் தாக்குப் பிடிச்சுட்டாருன்னா அப்புறமா பிரச்சினை சால்வ் ஆகிடாது?(சிம்ம ராசிக்கு ரெண்டுலே இருக்குற சனிப்பெயர்ச்சி ஆகி மூணுக்கு திரும்பி வர ஆகஸ்ட் 3 வரைக்கும் பொறுத்துத்தானே ஆகணும்.?)
Uma said...
ReplyDeleteதனுசு கிருஷ்ணன் சாருக்கு நீங்கள் எழுதிய கவிதை வாழ்த்து சூப்பர்! உங்களின் வழக்கமான கோபம் கொப்பளிக்கும் சக்தி கொடு கவிதை. நிறைய வரிகள் பிடித்திருந்ததால் இரண்டாவது முறையும் படித்தேன்.
நன்றி உமா. கவிதை எழுதும் போதெல்லாம் உங்களைத்தான் நினைத்து எழுதுவேன், எழுத்து பிழைகள் வராமல் இருக்க வேண்டுமே என்பதால். இப்போது தெரிகிறது டீச்சர்.
//மேலும் ஒரு திருடனுக்கு, மற்றொரு திருடனுடைய கதைதான் ரசிக்கும். அவனையும் நன்னிலைக்கு உயர்த்த வேண்டியே, ஸ்ரீ கிருஷ்ணர் வெண்ணெய் திருடினார் என்று சொல்லப்படுவது. இவ்வாறு சொல்லி, ஸ்ரீமத் பாகவதத்தின் மேல் அவனுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தி பிறகு அடிப்படை உண்மைகளைப் புரிய வைப்பதே நோக்கம்.//
ReplyDeleteவெண்ணை தூய உள்ளத்திற்கு எடுத்துக்காட்டு. உள்ளத் தூய்மை உள்ளவர்களின் இதயத்தைக் கண்ணன் கவர்ந்துவ்டுவான். உள்ளம் கவர் கள்வன் கண்ணன்.
வைராக்யம் என்ற நெருப்பால் காய்ச்சிய பாலை, மந்திரஜபம் என்ற உரைகுத்தி ஆடாமல் அசங்காமல் மோன நிலையில் வைக்க வேண்டும்;அப்போது அது கட்டித் தயிர் ஆகிவிடும்;அந்தத் தயிரைக் கர்மயோகம் என்ற மத்தினால் கடைந்தால் தூய வெண்ணை பொங்கிவரும். அதனை கண்ணன் கவர்ந்து சென்று விடுவான். அவன் 'படா சித்த சோர்' அல்லவா?
மைனர்வாள் சுட்டிய கருணாகராச்சாரியர் உபன்யாசத்தை இப்போதுதான் கேட்டேன்.
ReplyDelete'பெர்சனல் காட்' என்பது இந்திய வழிபடு முறைகளில் சகஜமான ஒன்று.
ஒரு குழந்தைக்குத் தன் தாய் தான் உலகத்திலேயே அழகானவள்.அதேபோல காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.அதுபோலவே இங்குள்ள அறுசமயக்காரார்களும் தன் வழிபடு தெய்வமே மற்ற ஐவரைக் காட்டிலும்
சிறந்தது என்று பாவித்துக் கொள்வார்கள்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் இதனை ஓர்அழகிய உதாரணத்தால் விளக்குவார்.ஒரு வீட்டுப்
பெண்மணி மைத்துனருக்கும்,மாமனாருக்கும், மற்ற வீட்டில் உள்ள ஆண்களுக்கு உணவு சமைத்தல், பரிமாறுதல் போன்ற சேவைகளைச் செய்தாலும் அவளுடைய கணவனுக்கு மட்டும் அவளுடைய சேவை பிரத்யேகமானது/அந்தரங்கமானது அல்லவா? 'பெர்சனல் காட்' உள்ளவர்களுக்கு அவர்கள் வழிபடு தெய்வத்தை உயர்த்திப் பேசுவது ஒரு வழக்கம்.
பெருமாள் கோவிலில் சிவன் கோஷ்ட(கோட்ட), தேவதையாக இருக்கும்.
அதுபோலவே சிவன் கோவிலில் பெருமாள் கோஷ்ட தெய்வமாக இருப்பார்.
கோஷ்ட என்றால் சுற்றுப்பிராகாரத்தில் இருப்பது.
விஷ்ணுதான் முழுமுதற் கடவுள் என்பாருக்கு சிவனும் பிரம்மாவும் அவருடைய சதுரங்கத்தில் விளையாட்டுப் பொருள்தான்.அதுபோலவே சிவனே முழுமுதற் கடவுள் என்பாருக்கு விஷ்ணுவும் பிரம்மாவும் சிவனுக்கு விளையாட்டுக் காய்கள்தான்.
சிவன் சோதி வடிவமாக விண்ணையும் மண்ணையும் கடந்து நின்றார். விஷ்ணுவும்,பிரம்மாவும் சிவனின் அடிமுடியைத் தேடினார்கள்;தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சைவம் மீண்டும் மீண்டும் சிவன் புகழ் பாடும்.
கடவுளை உருவமும், குணங்களோடும் வணங்க விரும்பினால் நமக்கு
விருப்பமான, அல்லது குடும்பப் பாரம்பரியத்துக்கு உகந்த உருவத்தைத் தேர்ந்து எடுத்து வணங்க வேண்டியதுதான்.அப்போது எந்த உருவக் கடவுளை வணங்குகிறோமோ அவருடைய புராணங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.
கருணகராச்சாரியார் வைணவர்தான் என்றாலும், மற்ற மரபுகளின் மீது துவேஷம் இல்லாதவரே.அந்த உபன்யாசத்திலேயே 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று முஸ்லிம் கோட்பாட்டையும் சொல்கிறாரே.அது போலவே சைவத்தைப் பற்றிய சுந்தரர் குறிப்பையும் கூறுகிறார்.எனவே சிவனை விஷ்ணுவின் செஸ் விளையாட்டில் ஒரு காயாகச் சொல்லி அவமானப் படுத்திவிட்டார் என்று நினைக்க வேண்டியதில்லை.
அறு சமயங்களை ஒன்றிணைத்து ஒன்றுக்கொன்று காம்ப்ளிமென்டரி அண்டு சப்பிளீமென்டரியாக ஆதிசங்கரர் ஆக்கி வைத்துவிட்டார்.ஸ்மார்த்தர்கள் ஆறு உருவங்களையும் ஏற்பவர்களாக, புராணங்களின் எல்லையை உணர்ந்தவர்களாக உருவாகிவிட்டனர்.
மைனர்வாள் எந்தக்காரணத்திர்காக கருணாகராச்சரியாரைக் கேட்டாலும் கடவுள் சிந்தனையில் சிறிது பொழுதைக் கழிப்பது குறித்து மகிழ்ச்சி.
kmr.krishnan said...
ReplyDelete///மாட்டு வண்டியில் பயணிப்பது என்னவோ தவறு என்று ஒரு கண்ணோட்டமா?///
///இன்று பாம்பு பிடிப்பதிலும், பாம்புப் பண்ணை நடத்துவதிலும் முன்னணியில் வெளி நாட்டினரே உள்ளனர்.///
///வரதட்சணை என்பது ஆங்கிலேயரால் இந்திய ஆண்களுக்கு அளிக்கப்பட்ட "கொடை".வரதட்சணை இந்திய மரபு அல்ல.///
///தீண்டாமையை கடைப்பிடித்தவர்களில் தலித்துக்களும் அடங்குவர்.இதை அறிவீர்களா?///
///வாரன் ஹேஸ்டிங்ஸ்(முதன்மை ஸ்தானதில் இருந்தவர்) இங்கே வந்து லஞ்சம் பெற்றது கீழ் மட்டம் வரை பரவிவிட்டது.///
KMRK ஐயா, இந்த கேள்விகளை என்னைக் கேட்டால் என்ன பயன்? எய்தவன் இருக்க அம்பை நோவது என்பதைப் போல இருக்கிறது. நான் பார்த்தவரை, கேட்ட வரை சொல்லியுள்ளேன்.
அயல்நாட்டு தொலைகாட்சிகளில் இந்தியா செய்திகளை சொல்லுவதற்கு முன் தோன்றும் படங்களில் ...மாட்டு வண்டிகள் , தண்ணீர்க் குடத்துடன் நடக்கும் பெண்கள் போன்ற காட்சிகள் அடிக்கடி தோன்றுவதில் இருந்து அவர்களுக்கு இந்தியா என்றால் முதலில் நினைவு வருவதைக் கண்டு நானே வெறுப்பில் இருக்கிறேன். அமெரிக்கர் என்றால் நாம் ஒருவகையாக திரைபடத்தில் காண்பிக்கும் ஸ்டீரியோ டைப் போல. அது உண்மையா என்பது அந்த நாட்டில் வசிப்பவர்களை கேட்டால் தெரியும்.
இதைப் பற்றி ஆராய விரும்பினால் எல்லோரையும் விட நீங்களே சரியான இடத்தில உள்ளீர்கள்....உங்கள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் மகள்களிடம் பொது இடங்களில்; பூங்கா, பள்ளி, கடை போன்ற இடங்களில் ஆளுக்கு பத்துப்பேரை தேர்வு செய்து, இந்தியா என்றால் உங்களுக்கு முதலில் தோன்றுவது என்ன? ஒரே வாக்கியத்தில் சொல்லுங்கள் என்று கேட்க சொல்லுங்கள். அவர்கள் சொல்லும் பதில்களைத் தொகுத்து எங்களுக்கும் அறியத் தாருங்கள்.
Jagannath said...
ReplyDelete///சாதி என்பது இந்திய ஸ்பெஷல் கிடையாது. சமூகவியல் ரீதியாகப் பார்த்தால் குடும்ப அமைப்பு வலுவாக உள்ள நாடுகளில் இனக்குழுக்கள் அல்லது சாதிகள் வலுவாக இருக்கின்றன. ///
எனக்கு அடுத்த வீடுகள் குப்பையாய் இருப்பதைப் பற்றி அலட்டிக் கொள்ள விருப்பமில்லை. நம் வீட்டை முதலில் சுத்தம் செய்வதைப் பார்ப்போம் என்பதே நான் நினைப்பது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நம் வீட்டை எப்படி சுத்தப் படுத்தலாம்?
kmr.krishnan said...
///தொழில் முறை சாதிமுறை இப்போது இல்லை.ஆனால் ரத்த முறை சாதி முறை எஞ்சி உள்ளது.இதனை மக்கள் கைவிட மிக நீண்டகாலம் ஆகலாம். கைவிட வேண்டுமா, வேண்டாமா என்பதே நம் முன் உள்ள கேள்வி.///
மற்றும்
Jagannath said...
///சரி நடைமுறையில் சாதி ஒழிப்பை எப்படிச் செய்யலாம் என்று பார்ப்போம்:....////
///சாதியைச் சொல்லி யாரையும் கொடுமைப் படுத்துவதை சட்ட ரீதியாகத் தடுப்பதுதான் அரசாங்கம் செய்யக் கூடிய காரியம்.///
///அப்படியே சடங்குகளே இல்லாமல் இலட்சியவாதியாக குழந்தைகளை வளர்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். குழந்தை பத்தாம் வகுப்பு வந்ததிலிருந்து பலருக்கு சாதி அடிப்படையிலான சலுகைகள் கிடைப்பதைப் பார்த்து இது ஏன் என்று கேட்டால் என்ன விளக்கம் சொல்வது?///
நன்றி...நன்றி...நன்றி ஜெகநாத். நான் கேட்ட கேள்விகளையே நீங்களும் கேட்டுள்ளீர்கள்.
நான் என்னால் முடிந்தவரை ஆக்கபூர்வமாக என்ன செய்யலாம் ஒரு வழியாக சிந்தித்து...
அரசின் தலையீடு எந்த அளவில் இதை ஊக்கப் படுத்துவதாக இருக்க வேண்டும் என்று முடிந்தவரை யோசித்து ...
கல்லூரியில் சேரும்பொழுது இலட்சியவாதிகளால் வளர்க்கப் பட்டு, ஒருமைப்பாட்டுக்கு அடையாளமாக இருப்பவர்களுக்கு சலுகை கொடுத்தால் இந்தப் பிரச்னை நீங்கும் என்று கதை எழுதினேன்.
ஆனால் இதை நடைமுறைக்கு கொண்டு வரமுடியுமா, இந்த திட்டத்தில் இந்த ஓட்டை இருக்கிறது, இதை இப்படி மேம்படுத்தலாம், இதை நடைமுறைப் படுத்த என்ன செய்வாய் என்று யாரவது கருத்துப் பகிர்வுகள் செய்வார்கள் என்ற என் எண்ணம் ஏமாற்றத்தில் முடிந்தது.
பிறந்த வீட்டு பெருமையை உடன் பிறப்பிடம் சொல்லுவதைப் போலதான் கருத்துப் பகிர்வுகள் சென்றது.
எனக்குத் தெரிந்த இந்தியக் கலாசாரத்தையே மீண்டும் எனக்கு பாடம் எடுக்கவும், சாதிக்கொடுமைகளே நடந்ததில்லை, பேதங்களினால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது போன்ற முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சிதான் நடந்தது.
ஆனால் சாதிக்கொடுமைகள் வேண்டாம், தாழ்ச்சி உயர்த்தி சொல்லுதல் தவறு என்பது கூறியதன் மூலம் இவையெல்லாம் நடந்தது என்றும் உடனே ஒப்புகொள்ளவும் பட்டது.
சாதிக்கப் பிறந்தவர்களுக்கு சாதியின் பெருமை தெரியம் என்று கூறப்பட்டாலும்...
சாதி உண்மையில் சாதித்தது என்ன? அதை ஏன் விடக்கூடாது? என்று அதன் பெருமை தெரிந்தவர் யாரும் சொல்ல வரவில்லை.
எனக்குத் தெரிந்தவரை அது சாதித்தது எதுவும் பெருமைப் படக்கூடியதாக இல்லை. பெருமைப் படகூடிய பண்புகளாக யாரும் பட்டியலும் இடவில்லை.
அடுத்த நாடுகளில் இருக்கும் இனப்பிரிவுகளுக்கும் நம் நாட்டின் சாதிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற புரிந்துணர்தலும், இந்தப் பிரிவுகளினால் யாரவது ஒருவரை மட்டமாக நினைப்பதும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும் அந்த நாடுகளில் உள்ள பிரிவுகளால் ஏதாவது பயன் அடைந்தார்களா? அதுவும் சொல்லப் படவில்லை.
ஜாதிப் பிரிவின் அடிப்படைக் காரணத்திற்கும், அடுத்தவர் வாய்ப்புகளை தடை செய்து தன் பரம்பரையை மட்டும் மந்திரிகளாக்கும் வாரிசு அரசியலுக்கும் வேறுபாடில்லை.
"“The old caste system had this merit, that the richest merchant or Zamindar could not buy the status of Brahmin for his son, even if the son was learned and pious. Whatever the defects of that system – and I think that they were and are grievous – it was not subservient to wealth."
என்பதின் சாரமே அதுதான்.
வாரிசு அரசியலை விமரிசித்து தடை செய்ய நினக்கிறோம், ஆனால் ஜாதி அடிப்படையில் இதுவே அறங்கேறிய பொழுது, அரங்கேறிக் கொண்டிருக்கும்பொழுது அதைத் தடுக்க நாம் என்ன முயற்சி செய்கிறோம். உலகமெங்கும்தான் நடக்கிறது விட்டுத் தள்ளு என்பது சமாதானமான பதிலாகத் தோன்றவில்லை.
நான் எழுதிய கதை பற்றி ... That's my two cents
//சாதிக் கொடுமைகளே நடந்ததில்லை, பேதங்களினால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது போன்ற முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சிதான் நடந்தது.//
ReplyDeleteதங்களுடைய 'ஸ்ட்மென்ட்சும்' பூசி மெழுகி இருப்பதாலேயே மற்றவர்களுடையதும் அவ்வாறு வந்துள்ளது.கொடுமைகள் என்ன என்பதையும் யாரால் என்பதையும் போட்டு உடைத்தாலே உணமை நிலையைக் கூற் இயலும்.
சாதி அமைப்பு அதன் அடிப்படையில் குறை ஒன்றும் இல்லாததே. அதனை உங்களைப் போல் குப்பை என்றோ, நோய் என்றோ நினைக்கவில்லை.அதன் சரியான வடிவம் தொடர்ந்து இருப்பதால் தவறு இல்லை என்றே நினைக்கிறேன்.
இதுதான் நமக்குள் இருக்கும் அடிப்படை வேற்றுமை.
செங்கோவி வலைப்பூவில் "பிராமணர்கள் வர்ணம், சாதி இட ஒதுக்கீடு" என்று ஒரு விவாதம் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது. அதில் என் கருத்துக்களை நேரடியாக வைத்தேன்.
சாதி தவறு என்றும், அதுதான் இந்தியாவின் வளர்ச்சிக்குத்தடை என்றும், அதனால் சாதியை ஒழிப்போம் என்றும் மேடையில் பேச வாய்ப்பாக உள்ளது.
பேசினால் கைதட்டல் கிடைக்கிறது. எனவே அதனால் பெரும்பாலனவர்கள் அதனை முற்போக்குக் கருத்தாகவும், சாதி என்ற யதார்த்ததை ஏற்றுக் கொள்பவர்களை பிற்போக்காகவும், சாதி வெறியர்களாகவும் சித்தரிப்பது இங்கே நடக்கிறது.
சாதி அமைப்பால் பயன் அடைந்தவர்கள் அதனை ஆதரிப்பதாகக் கூறியுள்ளீர்கள்.பயன் அடைந்தவர்கள் யார் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அடைந்தார்களா இல்லையா என்பதை அப்ப்போதுதான்
ஆராய முடியும்.
முன்னேற்றம் என்பதை அமெரிக்க அளவு கோல்களாலும், அவர்கள் அளிக்கும்
பொருளாதார சூத்திரங்களாலும் அளந்து நம்மை வளராத நாடு என்று நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம்.
//உங்கள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் மகள்களிடம் பொது இடங்களில்; பூங்கா, பள்ளி, கடை போன்ற இடங்களில் ஆளுக்கு பத்துப்பேரை தேர்வு செய்து, இந்தியா என்றால் உங்களுக்கு முதலில் தோன்றுவது என்ன? ஒரே வாக்கியத்தில் சொல்லுங்கள் என்று கேட்க சொல்லுங்கள்.//
ReplyDeleteநீங்கள் கூறும் பூங்கா கடை போன்ற இடங்களில் வெளிநாடுகளில் சுற்றுபவர்கள் பெரும்பாலும் பள்ளிப் படிப்பையே முடிக்காத டிராப் அவ்ட்ஸ்தான். அவர்களிடம் பேசும் நிலையிலும் இருக்க மாட்டார்கள். மதுவின் பிடியில் இருப்பார்கள்.பெரும்பாலனவர்கள் நிற வெறியர்களும்கூட.
அவர்களிடம் பேட்டி எடுப்பதால் எந்தப் பய்னும் இல்லை.
நேற்று தினமலர் செய்திப்படி தமிழ்ப் பெண்களுடன் பழகிய ஓர் அமெரிக்கக் காதலர்கள் இந்தியாவில் வேத முறைபடி திருமணம் புரிந்துள்ளார்கள்.இருவரையும் இங்குள்ளவர்கள் தத்து எடுத்துக் கொண்டு வைதிகச் சடங்குகளை நடத்தித் திருமணம் முடித்துள்ளார்கள்.
என்னுடைய 'ஸ்டெலா சுசீலா ஆன கதை' உண்மையில் நடந்துள்ளது. ஏன் அதுவும் உண்மையாக நடந்ததுதான்.
//சாதி உண்மையில் சாதித்தது என்ன? அதை ஏன் விடக்கூடாது? என்று அதன் பெருமை தெரிந்தவர் யாரும் சொல்ல வரவில்லை.
ReplyDeleteஎனக்குத் தெரிந்தவரை அது சாதித்தது எதுவும் பெருமைப் படக்கூடியதாக இல்லை. பெருமைப் படகூடிய பண்புகளாக யாரும் பட்டியலும் இடவில்லை.//
இந்தக் கேள்விக்குப் பதிலாகத்தான் வெளிநாட்டவர் கூறிய கருத்துக்களை வைத்தேன்.மீண்டும் பட்டியல் இடுகிறேன்:
1. சாதி, குழு ஒற்றுமையைக் கொடுக்கிறது.
2. சாதி தனக்குப் பின்னணியில் ஒரு பலம் பொருந்திய குழு உள்ளது என்ற
நம்பிக்கையை வளர்க்கிறது.
3. நாடார் போன்ற சாதிகளில் பொருளாதார ரீதியாகவும் பின்புலம் கிடைக்கிறது.
4. தன் சாதியில் ஒருவர் அடைந்த பெருமை தாங்கள் ஒவ்வொருவருமே அடைந்ததாக மகிழ்ச்சியைக் கொடுகிறது.காமராஜரைப் பற்றி நாடார்களும்,
முத்துராமலிங்த் தேவரை முக்குலத்தோரும் கொண்டாடுவது அதனால்தான்.
5. மற்ற போட்டிக் குழுக்காரரகளிடமிருந்து பாதுகாப்பைக்கொடுக்கிறது.சாதி மோதல்களுக்கு முன்பாக மாற்றான் வலியை சீர்தூக்கிப் பார்த்து நிதானப் படுத்த வைக்கிறது. பல சமயங்களில் இது மோதல்களைத் தவிர்த்து விடுகிறது.
6.சாதி வழிபடு முறைகளில் இருந்து, வாழும் முறை வரை தங்களுடைய பிரத்யேக சுதந்திரத்தை அளிக்கிறது. இது எங்கள் வழக்கம், பழக்கம், மரபு பாரம்பரியம் என்று சொல்லி 'டோடலிடேரியனாக' அரசாங்கம் செய்யும் முடிவுகளையே எதிர்க்க வைக்கிறது.உதாரணம்: பிராணி பலி கொடுப்பதை தடை செய்த ஜெயலலிதா அதனை அவாசரம் அவசரமாக ரத்து செய்ய வேண்டி வந்தது.
7.சாதி சீக்கிரமாக, செலவு அதிகம் இல்லாத நியாயம் வழங்கு சபையாக உள்ளது. பெரும்பாலான வழக்குகள் சாதிப் பெரியவர்களாலேயே முடிவு செய்யப்படுகின்றன.
8. தொழில் சார்ந்த சாதி தனக்கான வாழ்வாதாரத்துக்கான தொழிலை உறுதிப்படுத்துகிறது.
9. தொழில் சார்ந்த சாதி தேவையற்ற போட்டியைத் தவிர்க்கிறது
10. சில சிறப்பு வேலைகளுக்கு பாரம்பரியப் பயிற்சியும் தொடர்ந்த ஈடுபாடும் வருமானம் என்ற கண்ணோட்டமும் இல்லாமல் இருக்க வேண்டும்.வருமானம் இல்லாவிட்டால் விலகி விடுவார்கள் என்பவர்களல் அந்தத் தொழில் சிறக்காது. வளராது. எல்லாக் கலைகளும், கலை சார்ந்த தொழில்களும் இதில் அடங்கும். கிராமக் கோவில் குருக்கள் பூஜாரிகள் இதில் வருவர்.
இன்னும் 100 சொல்லுவேன். படிப்பவர்கள் படிக்க வேண்டாமா?
///////// kmr.krishnan said...:
ReplyDelete//////1. சாதி, குழு ஒற்றுமையைக் கொடுக்கிறது. /////
சாதி, குழு ஒற்றுமையைக்கெடுக்கிறது..பல்வேறு குழுக்களாக்கி,மக்களிடையே வேற்றுமையை வளர்க்கிறது..
///2. சாதி தனக்குப் பின்னணியில் ஒரு பலம் பொருந்திய குழு உள்ளது என்ற நம்பிக்கையை வளர்க்கிறது. //////
வேறு வார்த்தைகளில் சொன்னால் தன்னம்பிக்கை இல்லாதவர்களின் வழிப்பாதையாக அமைகிறது..
3. நாடார் போன்ற சாதிகளில் பொருளாதார ரீதியாகவும் பின்புலம் கிடைக்கிறது. //////
அவரவர் படிப்பு,திறமை,உழைப்பு போன்ற தகுதி அடிப்படையிலே அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை இது..சமுதாயத் தலைவர்களும் இதையெல்லாம் பார்க்காமல் சும்மா தூக்கிக் கொடுத்துவிடுவதில்லை....
/////4. தன் சாதியில் ஒருவர் அடைந்த பெருமை தாங்கள் ஒவ்வொருவருமே அடைந்ததாக மகிழ்ச்சியைக் கொடுகிறது.காமராஜரைப் பற்றி நாடார்களும்,
முத்துராமலிங்த் தேவரை முக்குலத்தோரும் கொண்டாடுவது அதனால்தான்.///////
உதாரணத்துக்கு எம்ஜிஆர் கேரளத்துக்காரர்.. ரஜினி கர்நாடகக்காரர்..(தமிழகத்து சாதியைச் சாராதவர்..)அனைத்து மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தவர்கள்..போற்றிக் கொண்டாடப்பட்டவர்கள்..நீங்கள் சொன்ன இரு தலைவர்களுமே தனிப்பட்ட சாதிக்கு சொந்தமானவர்கள் அல்ல..பொதுச் சொத்தாக இருந்தவர்கள்..அனைவருக்கும் அந்த கொண்டாடும் உரிமை உண்டு..
/////5. மற்ற போட்டிக் குழுக்காரரகளிடமிருந்து பாதுகாப்பைக்கொடுக்கிறது.சாதி மோதல்களுக்கு முன்பாக மாற்றான் வலியை சீர்தூக்கிப் பார்த்து நிதானப் படுத்த வைக்கிறது. பல சமயங்களில் இது மோதல்களைத் தவிர்த்து விடுகிறது.////////
பங்காளி சண்டை தவிர பல கொலைகள், அரிவாள் வெட்டுக்கள்,வழக்குகள்,பழிவாங்கல்கள்,நிலத் தகராறு என்று ரத்த ஆறுகள் ஓடுவதும், ஆங்காங்கே "இவர் அழைக்கிறார் வாரீர்..அவர் அழைக்கிறார் வாரீர்" என்று சமுதாயக் கூட்டங்கள் நடத்தி தங்கள் பலத்தை கூட்டத்தைக் கூட்டி நிரூபிக்க முயற்சிப்பதும்,போட்டிக் கூட்டங்களை நடத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதும்,ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் அடக்குமுறை என்ற பெயரில் சாதி பாரபட்சங்களுடன் கூடிய துப்பாக்கிச் சூடுகள் வரை தொடர்வதும் இந்த கேடுகெட்ட சாதி அமைப்பினால் உந்தப்பட்ட ஆரோக்கிய வழிகாட்டுதல் இல்லாத இளைஞர்களின் இன்றைய நடப்பு நிலவரம்..ஆரோக்கிய சமுதாய அமைப்புக்கு உகந்த பழக்க வழக்கங்களாக இல்லை..
(Contd.)
(Contd)
ReplyDelete////////6.சாதி வழிபடு முறைகளில் இருந்து, வாழும் முறை வரை தங்களுடைய பிரத்யேக சுதந்திரத்தை அளிக்கிறது. இது எங்கள் வழக்கம், பழக்கம், மரபு பாரம்பரியம் என்று சொல்லி 'டோடலிடேரியனாக' அரசாங்கம் செய்யும் முடிவுகளையே எதிர்க்க வைக்கிறது.உதாரணம்: பிராணி பலி கொடுப்பதை தடை செய்த ஜெயலலிதா அதனை அவாசரம் அவசரமாக ரத்து செய்ய வேண்டி வந்தது./////////
அரசாங்கம் மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பு கொடுத்து செயல்படவேண்டியது அவசியம்..அது இதைப் போன்ற பலியிடுதல் போன்ற விஷயங்களில் அல்ல..பஸ் கட்டண உயர்வு, பால்விலை, விலைவாசி ஏற்றம் என்று வாழ்வைப்பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகளின் போது..எவ்வளவு அடித்தாலும் நான் தாங்குவேன் என்று ஒரு மாநில மக்கள் போராட்ட உணர்வின்றி நலிந்து கிடந்து கிடக்கக் காரணம் சாதி போன்ற பிளவுகளால் பொது சமுதாய உணர்வு என்பது மழுங்கடிக்கப் பட்டிருப்பதே..
///////7.சாதி சீக்கிரமாக, செலவு அதிகம் இல்லாத நியாயம் வழங்கு சபையாக உள்ளது. பெரும்பாலான வழக்குகள் சாதிப் பெரியவர்களாலேயே முடிவு செய்யப்படுகின்றன./////
ஒரு சொம்பும் ஆலமரமும் இருந்துவிட்டால் சட்டையில்லாமல் மேல் துண்டு மட்டுமே
போட்டுக்கொண்டு நியாயம்(?) வழங்கி வந்த ஜட்ஜ்கள் எல்லோரையும் கடந்த பத்து வருடங்களில் கலாய்க்காத சினிமாக்கள் இல்லை..மிக மோசமான சாதீய அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள் என்று காட்டுமிராண்டிக் கூட்டத்தின் செயல்முறையை அங்கீகரிக்கும் உச்சகட்டவழிமுறை இது..
"சூர்யா சார் ஒரசாத" "முடிஞ்சா தொட்டுப்பார்.."என்று அசிஸ்டன்ட் கமிஷனர்களை விடாய்க்கும் தளபதி பாணி ரவுடித்தனங்கள் நகரங்களில் என்றால் கிராமங்களில் கமுக்கமாக ரவுடித்தனங்கள் அரங்கேறும் சபை இதுதான்..இந்த கூட்டங்களின் மிரட்டல் பற்றிய பயத்திலே சராசரிப் பொதுமக்களுக்கு இந்தியாவிலே காவல்துறையின்,கோர்ட்டுகளின் மீதான நம்பிக்கை செல்லாக் காசாகியிருப்பது இப்படி ஆட்களின் காரணமாகத்தான்..
///// 8. தொழில் சார்ந்த சாதி தனக்கான வாழ்வாதாரத்துக்கான தொழிலை உறுதிப்படுத்துகிறது./////
முழுக்கமுழுக்க தவறான பார்வை..எச்சரிக்கத்தகுந்த, திருத்திக்கொள்ளப்படவேண்டிய பார்வை..
எல்லையில்லாத எந்தத் துறையிலும் சாதிக்கப் பிறந்தசக்தியுள்ள மனிதவளத்தை குறுகிய நோக்கோடு எல்லை வகுத்து சிறுமைப்படுத்தி, ஆரோக்கியமான பார்வையினால் உந்திக் கொண்டுசெல்ல முடியாத தொலைநோக்குப் பார்வையில்லாத, பிற்போக்குத் தனமான அரசியல் தலைவர்களின் அணுகுமுறை..மனிதகுல வளச்சிக்கே பெரும் இழுக்காக அமைந்த மோசமான ஒரு கண்ணோட்டம்..
//////9. தொழில் சார்ந்த சாதி தேவையற்ற போட்டியைத் தவிர்க்கிறது///////
போட்டிதான் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்..கடைநிலைப் பயனீட்டாளருக்கு சரியான,நியாயமான தரமான சேவையை வழங்கும்..எந்தத் துறையிலும் மோனோபோலி என்கிற குழு எதேச்சாதிகாரம் வளர்வது ஆரோக்கிய சமுதாயத்துக்கு நல்லதல்ல..ஒரு குழு இன்னொரு குழுவுக்கு அளிக்கும் அநீதி..சரிசெய்ய முனையாதது அரசின் தவறு..
////////10. சில சிறப்பு வேலைகளுக்கு பாரம்பரியப் பயிற்சியும் தொடர்ந்த ஈடுபாடும் வருமானம் என்ற கண்ணோட்டமும் இல்லாமல் இருக்க வேண்டும்.வருமானம் இல்லாவிட்டால் விலகி விடுவார்கள் என்பவர்களல் அந்தத் தொழில் சிறக்காது. வளராது. எல்லாக் கலைகளும், கலை சார்ந்த தொழில்களும் இதில் அடங்கும். கிராமக் கோவில் குருக்கள் பூஜாரிகள் இதில் வருவர். ///////
இவையெல்லாம் அமைப்புசாரா வகைத் தொழில்கள்..என்ற போதிலும் இதிலும் வருமானம் வராமல் இல்லை..எந்தத் தொழிலுக்கும் வருமானத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டு..சரியான வருமானத்தைத் தேடி சரியான பாதையில் பயணிக்க வேண்டியது வயதோடு வளரவேண்டிய அலசல் மனப்பாங்கு..இதனை சாதியுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டியதில்லை..
////////இன்னும் 100 சொல்லுவேன். படிப்பவர்கள் படிக்க வேண்டாமா?/////////
படிக்கலாம்..
பதிலை டைப்படிக்கவும் வேண்டாமா?அதற்கு நேரமும் வேண்டாமா? நன்றி..
அன்புடன்... மைனர்.
சபாஷ் மைனர்! நல்ல வெயிட்டான ஆர்குமென்ட்ஸ்க்காகத்தான் காத்து இருந்தேன்.நேரம் செலவழித்து பதில் அளித்ததற்கு நன்றி. செங்கோவியில் பேசியது போலவே ஒரு பக்கத்து வக்கீலாகவே இங்கேயும் பேசிவருகிறேன்.
ReplyDeleteஉஙளுடையது மீண்டும் படித்துப் பார்த்து பதில் எழுத வேண்டும். நான் வெட்டி ஆபிசர். நேரத்தைப் பற்றிய கவலையில்லை.நீங்கள் நேரம் கொடுத்து நீண்ட பதில் கூறியதற்கு நன்றி/பாராட்டுக்கள்.
வைஷ்ணவ x சிவ செஸ் விளையாட்டுக்கு என் பதிலைப் பார்த்தீர்களா?
////kmr.krishnan said...உஙளுடையது மீண்டும் படித்துப் பார்த்து பதில் எழுத வேண்டும். நான் வெட்டி ஆபிசர். நேரத்தைப் பற்றிய கவலையில்லை.நீங்கள் நேரம் கொடுத்து நீண்ட பதில் கூறியதற்கு நன்றி/பாராட்டுக்கள். ////////
ReplyDeleteநன்றி..இன்று மாலை 5 .30 க்கு வேலை முடிந்து வந்து தங்களின் டென் பாயின்ட் ப்ரோக்ராம் படித்தவுடன் தொடர்ந்து நேரடியாக டைப் செய்ய ஆரம்பித்து வலை ஏறாததால் இரண்டாகப் பிரித்து வலைஎற்றியபோது சரியாக மணி 7PM .
படிக்கும் போது எழும் எண்ணங்களை அப்படியே சொல்லுவதில்லையே தவிர கருத்துக்கள் மனதிலே அலைமோதுவது இயற்கையான வழக்கம்தான்..வரிக்கு வரி மாற்றுக்கருத்தைப் பதிவிட வேண்டிய அவசியம் வந்ததாக உணர்ந்தேன்..ஒரே மூச்சில் செய்துவிட்டேன்..அவ்வளவுதான்..
சராசரியாக ஒரு பொது மனிதனாகவே என் கருத்தைப் பதிவு செய்தேன்..எந்தப்பக்கத்து வக்கீலாகவும் வழக்காடும் நோக்கமெல்லாம் இல்லை..
அதிலும் குறிப்பாக தங்களுடன் வழக்காடும் எண்ணமெல்லாம் இல்லவே இல்லை..'நீயும் நானுமா?கண்ணா நீயும் நானுமா?' என்றெல்லாம் கவுரவம் படப் பாட்டெல்லாம் பாடவேண்டாம்..
அப்படிப்பட்ட ஒரு கிரிடிகல்லான சப்ஜெக்ட் இது..இங்கே வரும் வாசகர்கள் பலரும் இந்த விவாதத்திலே தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தேமொழி அவர்கள் ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தார்..கருத்துத் தெரிவிக்காவிட்டாலும் படிக்கின்ற அனைவருக்குள்ளுமே ஒரு கருத்து மனதிலே நிச்சயம் அலைமோதும்..ஆனால் சாதிபற்றி வெளிப்படையாகப் பேசவோ,விவாதிக்கவோ இயலாத அளவுக்கு சமுதாயத்திலே புரையோடிக் கிடக்கிற ஒரு மோசமான உணர்வாக இருக்கிற விஷயத்திலே தலையை நுழைக்காமலே இருந்து விடுவதே உத்தமம் என்கிற சராசரி மனப்பான்மைதான் காரணம்..
////////வைஷ்ணவ x சிவ செஸ் விளையாட்டுக்கு என் பதிலைப் பார்த்தீர்களா?//////////
பார்வதி ராமச்சந்திரன் அவர்களுக்கு நான் திரும்பிக் கேட்டிருந்த 'என் கேள்விக்கு என்ன பதில்?' பார்த்தீர்களா?
செக் வைக்க முடியுமா?முடியாதா?ரெண்டில் ஒன்றே பதிலாக இருக்கமுடியும்..அதை நீங்களும் சொல்லவில்லையே..
///kmr.krishnan said...
ReplyDeleteதங்களுடைய 'ஸ்ட்மென்ட்சும்' பூசி மெழுகி இருப்பதாலேயே மற்றவர்களுடையதும் அவ்வாறு வந்துள்ளது.கொடுமைகள் என்ன என்பதையும் யாரால் என்பதையும் போட்டு உடைத்தாலே உணமை நிலையைக் கூற் இயலும்.///
இப்பொழுது பூசி மெழுகுவது யாரென்பதிலும் உங்களுக்கு குழப்பம் இருப்பதாகத் தெரிகிறதே KMRK ஐயா!!!!
சரி விடுங்க.... நான்தான் பூசி மெழுகுகிறேன் என்று வைத்துக் கொள்வோம்.
பாரதி அதுபோல செய்யமாட்டார் அல்லவா? கீழே உள்ள பாரதியின் வரிகளுக்கு நீங்களே பதவுரை எழுதி விளக்கி விடுங்கள் ....
"சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதிக் கொடுமைகள் வேண்டாம்"
பிறகு நீங்கள் எழுதும் பதவுரை மற்றும் விளக்கமும் எல்லாவற்றையும் உங்களுக்கு போட்டு உடைத்துவிடும். இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிகள் என்பார்கள் அதனால் ஒரே ஒரு வேண்டுகோள் பாடல் நடந்த காலப் பின்னணியை மட்டும்தான் கருத்தில் கொள்ளவேண்டும். ஏன் அப்படி பாடினார், எதற்காக அப்படி பாடினார் என்றும் விளக்க வேண்டும். தயவு செய்து புராதனக் காலத்திற்கு போக வேண்டாம்.
///சாதி அமைப்பால் பயன் அடைந்தவர்கள் அதனை ஆதரிப்பதாகக் கூறியுள்ளீர்கள்.பயன் அடைந்தவர்கள் யார் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அடைந்தார்களா இல்லையா என்பதை அப்ப்போதுதான் ஆராய முடியும்.///
ReplyDeleteஅது நீங்கள் கொடுத்த மேற்கோளிலேயே இருக்கிறதே.
"“The old caste system had this merit, that the richest merchant or Zamindar could not buy the status of Brahmin for his son, even if the son was learned and pious. Whatever the defects of that system – and I think that they were and are grievous – it was not subservient to wealth."
//முன்னேற்றம் என்பதை அமெரிக்க அளவு கோல்களாலும், அவர்கள் அளிக்கும்
ReplyDeleteபொருளாதார சூத்திரங்களாலும் அளந்து நம்மை வளராத நாடு என்று நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம்.///
இந்தக் கருத்தை சொல்லும்பொழுது வெளிநாட்டுக்காரர்கள் சதிகாரர்கள் என்ற மனக் கண்ணோட்டத்திற்கு மீண்டும் மாறிவிட்டீர்கள் என்பதை புரிந்து கொண்டேன்.
///நீங்கள் கூறும் பூங்கா கடை போன்ற இடங்களில் வெளிநாடுகளில் சுற்றுபவர்கள் பெரும்பாலும் பள்ளிப் படிப்பையே முடிக்காத டிராப் அவ்ட்ஸ்தான். அவர்களிடம் பேசும் நிலையிலும் இருக்க மாட்டார்கள். மதுவின் பிடியில் இருப்பார்கள்.பெரும்பாலனவர்கள் நிற வெறியர்களும்கூட.
அவர்களிடம் பேட்டி எடுப்பதால் எந்தப் பய்னும் இல்லை.///
சரி இதையும் உங்கள் விருப்பப்படியே செய்யலாம். நான் குறிப்பிட்ட பள்ளியை நீங்களும் வசதியாக பட்டியலில் இருந்து நீக்கி விட்டீர்கள். அதனால் பள்ளிப் படிப்பை முடிக்காத, பூங்காவிற்கும் கடைக்கும் போகும் குடிகாரர்களைப் பற்றி பேசுவது வீண்தான்.
இனிமேல் CNN போன்ற உலகெங்கிலும் செய்தி தரும் செய்தி நிறுவனங்கள் செய்தியை பார்க்கும்பொழுது இந்தியா செய்திகள் வரும்பொழுது கவனமாக நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் (ஆனால் அதில் வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பேற்க மாட்டேன் என்பதையும் இப்பொழுதே சொல்லிவிடுகிறேன்).
அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்குத் தேவை இல்லாவிட்டாலும், அது ஒரு விழிப்புணர்வைத் தரும்.
///தமிழ்ப் பெண்களுடன் பழகிய ஓர் அமெரிக்கக் காதலர்கள் இந்தியாவில் வேத முறைபடி திருமணம் புரிந்துள்ளார்கள்.இருவரையும் இங்குள்ளவர்கள் தத்து எடுத்துக் கொண்டு வைதிகச் சடங்குகளை நடத்தித் திருமணம் முடித்துள்ளார்கள்.///
ReplyDeleteமணமக்கள் நீடூழி வாழ்க. அத்துடன் இந்துப் பையன் இஸ்லாம் மதத்திற்கு மாறி நிக்காஹ் செய்து கொண்டாலும், கிறிஸ்துவ பெண்ணும் புத்த மதப் பையனும் தங்கள் மதத்தினைக் கைவிட்டு சீக்கியர்களாக மாறி திருமணம் செய்துகொண்டாலும், யாவரும் நீடூழி வாழட்டும்.
///இந்தக் கேள்விக்குப் பதிலாகத்தான் வெளிநாட்டவர் கூறிய கருத்துக்களை வைத்தேன்.மீண்டும் பட்டியல் இடுகிறேன்:///
ReplyDeleteநீங்கள் குறிப்பிடும் அனைத்திற்கும் ஜாதி இல்லாமலே இவற்றை செய்ய இந்தக் காலத்தில் வாய்ப்பிருகிறது என்று உதாரணத்துடன் மாற்றுக் கருத்துக்கள் விவாதிக்கப் பட்டுவிட்டது. சில மனித குலம் அனைத்திற்கும் பொதுவானதுதான் அதற்கு ஜாதி என்னும் அடிப்படையும் தேவையில்லை என்றும் சொல்லியாகிவிட்டது.
நான் தோசை செய்து சாப்பிட்டு வருவதற்குள் மைனரும் வந்து அவருடைய கண்ணோட்டத்தில் பதில் சொல்லிவிட்டார். நீங்களும் பிடித்து போய் சபாஷ் என்று பாராட்டிவிட்டீர்கள். இது போன்ற பாராட்டுக்கள் பெரும் பதிலைத் தந்த மைனருக்கு நன்றி.
இருந்தாலும் ... நானும் கொஞ்சமே கொஞ்சம் சொல்லி விடுகிறேன்.
இவைகளினால் நீங்கள் எதிர்பார்ப்பது "entitlement, a guaranteed access to benefits based on established "birth"rights
நான் சொல்வது... "opportunity should not be restricted" யாருக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருந்தாலும் அதில் முன்னேறுங்கள் வெற்றி பெறுங்கள். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பது முக்கியமல்ல, எதை அடைகிறீர்களோ அதுதான் முக்கியம்.
பிறந்த குழந்தைகள் பலவற்றை உங்களிடம் (நாப்பி மட்டும் போட்ட குழந்தைகளை) காட்டினால் உங்களால் அவர்களுடைய ஜாதியை/மதத்தை சொல்லிவிடமுடியுமா? நீங்களே தொட்டிலில் தூங்கும் நாப்பி போட்ட குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்க சிரமப் பட்டதாக சொல்லியிருக்கிறீர்கள். அப்படியிருக்க பிறக்கும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்து ஏன் மக்களின் வாழ்க்கைப் பாதையை மாற்ற முயற்சிக்க வேண்டும். அதற்கு நாம் யார் கடவுளா? அல்லது கடவுளின் அவதாரமா?
....அப்படியிருக்க "பிறக்கும் போது வேறுபாடுகள் தெரியாமல்" பிறக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்து ஏன் அவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்ற முயற்சிக்க வேண்டும்...... என்று மாற்றிப் படிக்க வேண்டுகிறேன்
ReplyDeleteKMRK ஐயா, உங்கள் நூறாவது பதிவு வந்த அன்று 200 க்கு மேற்பட்ட கருத்துகள் வந்தது என்று சொல்வதற்காக, பதில் தெரிந்தாலும் புரிந்தும் புரியாதது போல வேண்டுமென்றே நிறைய கேள்விகள் கேட்பதாக எனக்கு ஒரு சந்தேகம் எட்டிப் பார்க்கிறதே. அதனால் விவாதத்திற்கு மட்டும் பதில் சொல்லலாம், விதண்டாவாத்தை தவிர்க்கலாம் என உத்தேசித்திருக்கிறேன் :)))))
ReplyDeleteமைனர், தேமொழி! இருவருக்கும் ஒரு விவாதத்தை டீஸென்டா(டீஜெண்டா அல்லது ரீஜெண்டா)முன்னெடுத்து சென்றதற்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteவலை தளத்தில் பல சமயங்களில் விவாதம் சிறிது முன்னேறும் முன்னர் பெர்ஸனலாகத் தாக்கத் துவங்கி விடுவார்கள்.அவ்வாறு நிகழாமல் இந்த விவாதம் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேற்கொண்டு உங்கள் நேரம் கருதித் தொடர வேண்டுமா வேண்டாமா என்று கூறினால் தொடருகிறேன்.
//அது நீங்கள் கொடுத்த மேற்கோளிலேயே இருக்கிறதே.
ReplyDelete"“The old caste system had this merit, that the richest merchant or Zamindar could not buy the status of Brahmin for his son, even if the son was learned and pious. Whatever the defects of that system – and I think that they were and are grievous – it was not subservient to wealத்."//
இந்த ஸ்டேட்மென்டின் அடிநாதம் பணத்தினால், லஞ்ச லாவண்யத்தால், அதிகாரத்தால் முந்தைய நடைமுறையில் ஒன்றும் செய்ய முடியவில்லை; தற்போது பல்கலைக்கழகங்களும், அரசாங்கமும் லஞ்ச லாவண்யத்தில் புரள்கின்றன என்று அங்கலாய்ப்பாகச் சொல்லப்பட்டது. இதில் பிராமணர்கள்தான் பயன் அடைந்தார்கள் என்று நீங்கள் நேரடியாகக் குற்றம்
சாட்டினாலே நான் மேற்கொண்டு பேச முடியும். யார் பணக்கார வியாபாரியாக இருந்தார்கள், யார் ஜமீந்தாரர்களாக இருந்தார்கள் என்பதையும் கணக்கில் கொள்ளவும்.
//அதனால் விவாதத்திற்கு மட்டும் பதில் சொல்லலாம், விதண்டாவாத்தை தவிர்க்கலாம் என உத்தேசித்திருக்கிறேன் :)))))//
ReplyDeleteநல்லது. இது உஙளுக்காகச் சொல்லிக் கொண்டதா? எனக்காகவா?
என்னுடையது விதண்டாவதம என்றால் உடனே நிறுத்திக்கொள்கிறேன்.
என்னுடைய ஆக்கங்கள் வந்த சமயம் பலமுறை பின்னூட்டங்கள் டபுள் சென்சுரியெல்லாம் அடித்துள்ளன. இங்கே பின்னூட்டம் அதிகரிப்பதால் யாருக்கென்ன லாபம்?அப்படிப்பட்ட அற்ப ஆசையெல்லாம் கிடையாது.
சோஷலிசம் எல்லோரும் பேசுவது போல , சமத்துவம், சாதி ஒழிப்பு பேசுவது
இன்று ஒரு ரு ஃஃபேஷன். அதன் மறு பக்கத்தைக் காட்டுவது என் ஜனநாயகக் கடமை.
எந்த ஒரு அமைப்பும் அதன் உன்னதத்தையும், சீரழிந்த நிலையையும் கால மாற்றத்தால் அடையும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த சாதி முறைக்கும் அது உண்டு.
உலகம் முழுவதும் சென்ற ஆங்கிலேயன் ஆங்காங்கு உள்ள கலாசாரங்களை அழித்தாலே அடிமைபடுத்த முடியும் என்பதால் இங்கிருந்த எல்லாவற்றையும் கொச்சைப்படுத்தினான். அதில் சாதிஅமைப்பு முக்கியமானது.
// செக் வைக்க முடியுமா?முடியாதா?ரெண்டில் ஒன்றே பதிலாக இருக்கமுடியும்..அதை நீங்களும் சொல்லவில்லையே..//
ReplyDeleteசொல்லியுள்ளேன் என்றுதான் தோன்றுகிறது.
//விஷ்ணுதான் முழுமுதற் கடவுள் என்பாருக்கு சிவனும் பிரம்மாவும் அவருடைய சதுரங்கத்தில் விளையாட்டுப் பொருள்தான்.அதுபோலவே சிவனே முழுமுதற் கடவுள் என்பாருக்கு விஷ்ணுவும் பிரம்மாவும் சிவனுக்கு விளையாட்டுக் காய்கள்தான்.//
சிவன் விஷ்ணுவுக்கு செக் வைக்க முடியும்.
சாதி தேவையா? அதனால் என்னப் பயன் என்பதைப் பற்றிய காரசார விவாதகளுக்கு இடையில் நேரமின்மையிலும் எனது எண்ணத்தையும் சொல்லிக் கொள்ள விரும்பினேன் அதனால் இங்கே வந்து குறுகிடுகிறேன்..... உங்களது புரிதலையும் உணர்வுகளையும் மதிக்கிறேன். இது எனது எண்ணம்.
ReplyDelete''சாதி இரண்டொழிய வேறில்லை''
''இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்'' என்பது ஒளவையின் வாக்கு...
''செய் தொழில் வேற்றுமையான்'' என்பது வள்ளுவரின் வாக்கு.
சாதீயம் சமூக இயக்கத்திற்கு அவசியமான ஒரு முறையாக இருந்திருக்கிறது... எப்படி ஒரு காலத்திற்கு முன்பு ஜனநாயகம் நன்றாக இருந்ததோ அப்படி... அது உயர்வு தாழ்வு கருதி பாலடைததால் தான் ஒளவையும், வள்ளுவனும், பாரதியும் இன்னும் பல சான்றோரும் இப்படி கூற வேண்டிய நிலை வந்தது. இதில் முக்கியம் பிராமண சாதி மாத்திரமே இதற்கு பொறுப்பு என்று சொல்வது தான் பிராமணர்களுக்கு மாத்திரம் அல்ல நடுநிலையாளர்களுக்கும் ஏற்க முடியாது... அப்படி இருபினும் ஒரே ஒரு விஷயத்தை மாத்திரம் இங்கே குறிப்பிடணும் அப்படி அநீதி நடக்கும் சமயத்தில் செய்தவர்களோடு சேர்ந்து தாமும் அந்த வேளையில் ஈடுபட்டோ அல்லது மௌனமாக இருந்தோ வேதம் படித்த பிராமணர்கள் கடமை தவறி விட்டார்கள் என்பது மாத்திரம் யாவரும் ஏற்க்க வேண்டிய ஒன்று. அவர்கள் தான் சமூகத்தின் மூளையும் மனசாட்சியும். அவர்கள் தாம் நமது சமூகம் என்னும் குடும்பத்தை நடத்தும் தந்தை மார்களாக இருந்தார்கள். continue..
அநீதி செய்தார்கள் என்பது உயர்வு தாழ்வு காட்டி மனித நேயமில்லாமல் நடந்துக் கொண்டது தான். அது அனைத்து சாதியனரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டு செய்தார்கள். அதை நிறுத்தி இருக்க வேண்டிய கடமை. படித்தவர்கள் முக்கியமாக வேதம் படித்தவர்களுக்கு இருந்திருக்க வேண்டிய தர்மம். செய்யவில்லை. ஆக இருந்தும்... கொடுமைக்கு பிராமணர்கள் மாத்திரம் பொறுப்பாக முடியாது. இதை கூற பிராமணர்கள் தாம் சமூகத் தந்தை என்று ஏற்றுக் கொள்ள மனம் வேண்டும்... காரணம் அது தான் அன்றைய நிலை... மேலும் மறுபிறவி தத்துவத்தை ஏற்பவர்களாக இருந்தால் நீங்களுமே அப்போது பிராமணர்களாகப் பிறந்து இருக்கலாம்... இது அவர்களை உயர்ந்தவர்கள் என்பதை கூறி அற்ப சந்தோசத்திற்காக கூறவில்லை இப்போது போல் அப்போதும் படித்தவர்கள் அப்படித்தான் காணப் பட்டிருப்பார்கள் என்ற புரிதல் தான்... மனதுள் பொறாமை இருந்தால் இதையும் கூற முன் வரமாட்டார்கள் பலர்.
ReplyDeleteமனசாட்சியோடு சொல்லணும் இப்போது எந்த குலத்தவர்களாக இருந்தாலும் படித்தவன் நான் என்ற மமதை இல்லை என்று யாராவது சொல்லுங்கள்... மனித இயல்பு அது தான்..
ராமானுஜர் சங்கரர் போன்ற மகான்களும், ஏன்? இறைவனார் கூட இதை கொண்டு கண்டு கொதித்து பல நிகழ்வுகளை நடத்தியும் இருக்கிறார். நாயன்மார்களில், ஆழ்வார்களில் பல தொழில் புரிந்த மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். வியாசரின் பிறப்பை கூர்ந்தால் யாவரும் வெளிப்படையாக அறிய முடியும். சரி எப்படியோ.. காலக் கோலம் நடந்து முடிந்தது. அதனாலே உயரிய சாதீய அமைப்பு... சீரழிந்து போனது.... அதனால் ஞானிகள் வழி வேத, வேதாந்தம் வழி.... மகான்கள் வழி இதை சரிசெய்ய இறைவன் துணிந்தார் இருந்தும் அவைகள் முற்றிலுமாக சரி செய்ய முடியாமல் போகவே பின் வந்த மகாகவிகளும் இந்த சாதியே வேண்டாம் என்று சொல்லாமல் இரண்டு தான் சாதி என்றும் கூறினார்கள்.
அது நூற்றாண்டுகள் ஆகியும் பழைய நிகழ்வுகளை மீண்டும் அசை போட்டுக் கொண்டு வீண் வெட்டி வாதம் செய்து கொண்டும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்கிறோம். மேலே கூறினேனே சமூகத் தந்தையர் அமைதி காத்தார்கள் என்று அதற்கு பரிகாரமாக அல்லது விழித்துக் கொண்ட அந்த சமூக இளைஞர்கள் பின்னாளில் இந்த மண்ணிற்கும், மானுடத்திற்கும், மொழிக்கும் நிறைய செய்து தங்களது சுய வாழ்வையே அற்பணித்தார்கள் அதை வரலாறு நன்கு உணர்த்துகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு தான் வாஞ்சிநாதன் என்னும் பிராமண இளைஞனின் நூறாவது நினைவு நாள்... அதை மறுப்பவர் இருந்தால் அது அந்த இனத்தின் மீது கொண்ட துவேசம். பழைய கொடுமைகளை ஒரு பிரிவின் மீது சுமத்தும் யாவரும் நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காமல் அந்தத் தியாகங்களைப் பாராட்டுகிறோமா என்பதையும் பார்க்க வேண்டும்... continue...
இப்போது என்ன நடக்கிறது என்று மன சாட்சியை கொண்டு யாவரும் பேசவேண்டும்... வகுப்புவாரி ஒதுக்கீடு என்று ஆரம்பித்த முறை எங்கேப் போகிறது!!! சரியான முறையில் நடைமுறைப் படுத்தப் படுகிறதா? காலமும், சமூக மாற்றமும், பொருளாதார மாற்றமும் மாறும் நேரங்களில் அவைகள் சரியான முறையில் மீண்டும் மீண்டும் பரிசோதிக்கப் பட்டு விவாதிக்கப் பட்டு பயன் பெறாமல் இருப்பவரை தேடித் பிடித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப் படுகிறதா என்றால் அதை யாவரும் நன்கு அறிவர். இதற்கு மேல் இந்த முறை இத்தனை ஆண்டுகளையும் தாண்டி தேவை தானா அல்லது... மேல் சாதி என்று கூறப் படும் அந்த சாதி ஏழைகளுக்கு வாய்ப்பு வழங்கப் படுகிறதா என்ற சிந்தனை யாவருக்கும் இருக்கிறதா? முக்கியமாக சமநீதி பேசுவோருக்கு இருக்கிறதா? (எல்லோரும் இந்தியர்கள் அறிவு பொதுவானது அறிவாளிகள் பிறந்த சாதியைக் காண்பித்து நிராகரிக்கப் படுவதும் அல்லது முண்டியடித்து வந்தோரும் மறுக்கப் பட்டு வெளிநாடுகளில் சென்று பிறந்த நாட்டிற்கு உபயோகம் இல்லாமல் வாழ்வது??!!!) என்றால் இல்லை அவர்கள் வேண்டுமென்றே செயல் பட்டு பொதுவான அறிவை சீர் தூக்கிப் பார்க்காமல் சாதி அடிப்படையை கொண்டு சமநீதி கிடைக்காமலே செய்யப் படுகிறது என்பதே உண்மை. என்னளவு அறிவுகொண்ட எனது பிராமண நண்பனுக்கும், செட்டியார் இன நண்பனுக்கும், நிராகரிக்கப் பட்டு... எங்களைவிட அறிவு குறைவாக கொண்ட தாழ்வான சாதி என்று அரசாங்கமும் வரையறுக்கப் பட்ட சாதியைச் சார்ந்த எனது மற்றொரு நண்பனுக்கு அவனின் அறிவுக்கு மீறிய துறையில் படிக்க வாய்ப்பு ஒதுக்கப் படுவது எப்படி சமநீதியாகும். அறிவு பொதுவானது... பொருளாதார ரீதியில் வகைப் படுத்தி தான் சலுகைகள் தரவேண்டும். அது இடத்திற்கு இடம் நாடு தழுவிய நிலையில் வேறுபாடும் இவைகளை அரசு செய்கிறதா? அதற்கு சமநீதி கேட்க்கும் நாம் என்ன செய்தோம்!???... செய்கிறோம், பெரும்பாலும் ஜனநாயகத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் யாவர்??
ReplyDeleteமகாகவியைப் பொறுத்தவரையில் சாதியை தமிழ் சாதி என்று மாத்திரமே கூறுகிறான். நடுநிலையோடு இந்த விசயத்தைப் பேச வேண்டும்... வெறுப்புனர்வோடும் அல்லது சாதிப் பற்றோடும் பேசினால் அது வெட்டிப் பேச்சாகவே போகும். (ஒருவர் சாதியே வேண்டாம் என்கிறார்... ஒருவர் வேண்டும் என்கிறார்.... ஒழுக்கம் தனிமநிதனோடது.. அவன் சார்ந்த சாதி அதில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க இயலாது...) சரி இல்லை என்றார்கள் பெரியோர் அரசாங்கம் காரணங்களைக் கொண்டு வைத்து இருக்கிறது அதை வேண்டாம் என்று சொல்வது அவரவரின் விருப்பம்.. சாதி வேண்டும் என்பதும் அவரவர் விருப்பம்... அது நான் உயர்ந்தவன் அல்லது நான் தாழ்ந்தவன் என்ற நினைவு இருவரிடம் இருக்கும் வரை இந்தச் சண்டையும் இருக்கத்தான் செய்யும். உயர்ந்தவன் என்போன் அதற்கான லட்சணங்களைக் கொள்ளவேண்டும்.... தாழ்ந்தோன் எனப்படுவோனும் அல்லது தன்னை தாழ்ந்தோனாக எண்ணுகிறார்கள் என்று எண்ணம் கொள்பவனும்.. நமது தமிழ் நமக்கு கற்பித்த உயர்ந்தவனாக வாழ்ந்துக் காண்பிக்க வேண்டும் அப்போது... அங்கே பல சிங்காரவேலர்களும், பல அம்பேத்காரர்களும், பல கக்கன்களும், பல நந்தனார்களும் பல திருப்பாணாழ்வார்களும், பல கண்ணப்ப நாயனார்களும், பல குரவல்லிகளும் சமூகத்தில் காணப் படுவார்கள். continue...
சாதிகள் இல்லை என்றான் பாரதி.... அதே நேரம் குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றான்... ஆக, குல வழக்கங்களை கடைபிடிப்பவர்கள் கடைபிடிக்கட்டும் அதில் உயர்வு தாழ்வு கற்பிக்க வேண்டாம் என்பது அவனின் எண்ணம்... குல வழக்கம் அது அவர்களின் விருப்பம் என்பதோடு அது அவர்களின் குடும்பம் என்னும் கணினி இயங்க தரவிறக்கம் செய்யப் பட்ட புரோகிராம் போன்றது.... அது வேண்டாம் என்று தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதி என்பது ஒரு அடையாளப் பெயராக கொள்பவர்களை அல்லது அவர்களின் குல வழக்கத்தை நான் மாற்றவேண்டாம் காலமும், இடமும் தானாக மாற்றும். நமக்குள் பழைமையைப் பேசி அடித்துக் கொள்ள வேண்டாம். நாம் அனைவரும் நல்ல நண்பர்களாக இருப்போம். வேதம் / வேதாந்தம் / உபநிடதங்கள் சொல்வது போல் தவறு செய்தவனின் பாவ புண்ணியங்களுக்குத் தகுந்த மாதிரி தான் அடுத்த பிறவி என்றால் முந்திய பிறவியும்... இனி வரப் போகும் பிறவியும் எப்படி இருக்கும் என்பதை அவரவர் சிந்தனைக்கே விட்டு விடுவோம். சாதிகளை சட்டமாக வைத்து இருக்கும் அரசாங்கமே அதை தவறுதலாக பயன்படுத்தினாலோ.. அல்லது ஒருவர் மற்றவரை கொடுமை செய்தாலோ தண்டிக்கவும் சட்டம் வைத்து இருக்கிறது. இதில் பொதுவாக என்ன சாதியாக இருந்தாலும் சரி ஒரு தனி மனிதனின் ஒழுக்க பண்பு நடைமுறை வாழ்க்கையை வைத்தே இந்த சமூகத்தில் மதிக்கப் பட்டு இருக்கிறான், படுகிறான், படுவான்... ஏன்? சமூகம் அவனது மனைவி, மக்கள்... இல்லை இன்னும் சொன்னால் அவனது மனசாட்சியும் கூட அவனை அதன் பொருட்டே மதிப்பிடும். உயர் சாதிக் காரர்கள் என்போர் மாத்திரம் தனது சாதியைக் கட்டிக் காக்கிறார்களா? என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். வேண்டுவோர் வைத்துக் கொள்ளட்டும்.. வேண்டாதவர் விட்டுவிடட்டும்... இருந்தும் ஒருவரை ஒருவர் சீண்டாது இருக்கும் பேரறிவை வளர்த்துக் கொள்ளட்டும் அதற்கு ஆண்டவன் அருளட்டும்.
ReplyDelete''எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர்''
இது எனது எண்ணம்... சாதியை அரசாங்கம் வைத்துக் கொள்ளும் வரை இந்த விவாதங்கள் வெறும் வெட்டிப் பேச்சாகவே இருக்கும் என்பது எனது எண்ணமும் கூட. பெரியோர் இப்படிக் கூறுவதால் வருத்தம் கொள்ளவேண்டாம். எனது பின்னூட்டத்தை சரி என்றாலும் மறுத்தாலும் நான் மீண்டும் எதுவும் கூற வர நேரமிருக்காது என்பதை விட சொல்ல ஏதும் இல்லை அவ்வளவே... யாரையும் தனிப் பட்ட முறையில் குறை கூற வேண்டும் என்ற நோக்கோடு எழுத வில்லை... உங்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.... இருசாராரின் எண்ணமும் தனிமனித நலனுக்கே என்பது புரிகிறது..
நட்போடு பழகுவோம்... ஏற்காதக் கருத்தை பேசாது விடும்... நன்றி.. வணக்கம்.
அன்புக்குரிய மக்களே,
ReplyDeleteசாதி வேறு வர்ணம் வேறு.
உதாரணமாக செட்டியார், ஆரிய வைஸ்யர் போன்றோர் வைச்யர்களில் இரு சாதியினர்.
அது போல ஒவ்வொரு வர்ணத்திலும் உண்டு. அவை உட்பிரிவுகள்.
எந்த வர்ணமும் உயர்ந்தது அல்ல. ஒரு மேசைக்கு நான்கு கால்கள். எது உயர்ந்தது?
ஒரு சமூகத்தில் நான்கு வருணங்கள். எது உயர்ந்தது? எல்லாம் சமம். ஆனால் வேறுபட்டவை.
சமத்துவம் வேறு ஒன்றுபடுதல் வேறு. தொழிலால் பிரிந்தாலும் இதயத்தால் ஒன்றிய வாழ்வு தான் நம் சமூக வாழ்வு. அப்படி தான் இருந்தது.
பிராம்மணன் யாரையும் அடிமைப்படுத்தியதாக எனக்கு ஆதாரம் இல்லை. இடைக்காலத்தில் சில மூட பிராம்மணர்கள் அப்படி பண்ணி இருக்கலாம். நான் சொலும் காலம் ஒரு நானூறு ஆண்டுகளுக்கு முன்னில் இருந்து. ஆனால் நமது தர்மம் அப்படி சொல்லவில்லை.
மனு ஸ்ம்ருதியை எதிர்க்கிறார்கள். பிராமணன் பிறரை அடிமை படுத்த எழுதிய நூல் என. அதில் படித்து பாருங்கள். மிக கடுமையான விதிகளும் தண்டனைகளும் பிராம்மணனுக்கு தான். பிறருக்கு அல்ல. பிறரை அடிமை படுத்த விழைபவன் ஏன் தனக்கு தானே அதனை கட்டு திட்டங்களை போட்டு கொள்ள வேண்டும்?
தீண்டாமை - அப்படி ஒன்று இல்லை.
பிராம்மணன் மற்றவரை தீண்ட மாட்டான். உண்மை. ஆனால் மீறி தீண்டி விட்டால் அவன் தான் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று விதியே தவிர தொட்டவனுக்கு அல்ல.
இன்றைக்கும் எங்கள் விஞ்ஞான கூடத்தில் உள்ளே இருப்பவர் பிறரை தொட கூடாது, அங்கி அணிய வேண்டும் என கட்டுப்பாடுகள் உள்ளன. அது தீண்டாமையா? லோக க்ஷேமத்துக்காக வேதத்தை ரட்சிக்கும் பிராம்மணனுக்கு சுத்தம் அவசியம்.
அந்த சுத்தத்தை அவர்கள் தங்கள் வீட்டிலேயும் கடைப்பிடிப்பார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா/ மடி விழுப்பு பத்து எல்லாம் அவர்கள் வீட்டுக்கு உள்ளேயும் உண்டு.
நந்தனார் கதைக்கு மூல ஆதாரம் சேக்கிழார் தந்த ஆதாரமே. அதன் பின் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அதை எல்லாம் மேற்கோள் காட்டுவது விதண்டா வாதத்துக்கு ஆகலாம். வேறு எதற்கும் உதவாது.
நானும் நாளைக்கு நீங்கள் குறிப்பிட்ட புரட்சியாளர்களை பற்றி அவதூறாக எழுதுகிறேன் என்றால், ஒப்புக்கொள்வீர்களா? அதே தான்.
பிராம்மணனுக்கு இன்றைய நிலையில் இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். இவன் தான் than குல தர்மத்தை விட்டு இங்கிலீஷ் படிப்பு படித்தான். இவனைப்பார்த்து மற்ற வகுப்பினரும் அதை பண்ண ஆரம்பித்தார்கள்.
இவன் தான் முதலில் பெண்களை வேலைக்கு விட்டான். முப்பது வயது வரை வேலைக்கு போக விட்டான். ஸ்திரீ தர்மத்தை குலைத்தான். மற்றவர்களும் இன்று வழி தொடர்கிறார்கள்.
பூணூல் போட்டவனெல்லாம் பிராம்மணன் அல்ல. அத்யயனம் பண்ணி விதிக்கப்பட்ட நித்ய நைமித்திக கர்மாக்களை எவன் ஒருத்தன் பூரணமாக செய்கிறானோ அவனே பிராம்மணன். இன்று கோயில்களில் சிகை வைக்காத குருக்கள் பலர். மற்றவர்கள் துர்பிராம்மணர்கள் தான்.
ஆங்கிலம் வேற்று மொழி தானே? எண்ணிலா கொடுமை உண்மையில் பண்ணிவர்களுடைய பாஷை தானே? அதை ஏற்க தெரிந்த நமக்கு நம் நாடு மொழியான வடமொழியை ஏன் ஏற்க மனம் வரவில்லை? வடமொழி தெரியாமல் எப்படி சாத்திரங்களை படித்து பிராமணன் கொடுமை செய்தான் என கூற இயலும்?
-------
இந்து மதத்தில் - சனாதன தர்மத்தில் பல தெய்வங்கள் கிடையாது.
யோ யோ யாம் யாம் தனும் பக்த்யா
சரத்யா - அர்சிதும் இச்சதி|
தஸ்ய தஸ்ய அசலம் பக்த்யா
தம் ஏவ விததாம்யஹம்||
எவனெவன் எந்த எந்த ரூபத்தில் என்னை சிரத்தையோடு வணங்குகிறானோ, அவனவனுக்கு அந்தந்த ரூபத்திலே அவன் அசையாத பக்திக்கு இணங்கி நான் ஆட்கொள்ளுகிரேன் என கண்ணன் மொழிந்தான்.....
இஷ்ட தெய்வம் எதுவாக வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். அந்த தெய்வத்திடம் அசையாத பக்தியை ஒருத்தன் பண்ணினான் என்றால் அந்த தெய்வமே அவனுடைய ஐயங்களை போக்கி, எல்லா ரூபமும் தன்னுடையதே, ஆனால் தான் ரூப நாம பேதமற்ற நிர்குண வஸ்து என்பதை மெல்ல மெல்ல புரிய வைக்கும்.
பக்தி பண்ணுகிற பொழுது அசையாத பக்தி ஏற்பட வேண்டும் என்பதற்காக ஏதோ அந்த தெய்வம் தான் உசத்தி போலவும் மற்ற தேவதைகள் அதை தொழுத மாதிரியும் காட்டும் புராணம். அதற்கு நஹி நிந்தா நியாயம் என பெயர்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவர்ணங்களுக்கும் ஆத்ம லாபத்துக்கும் சம்பந்தமே கிடையாது.
ReplyDeleteகர்மாவை கழிக்க பூலோகம் வந்தோம். இங்கு சமூகமாக இயங்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் வேண்டும். இவர்கள் இங்கு செய்யும் தொழிலாலே சுத்தி அடைந்து உய்ய, அவர்களுடைய குணத்தை அடிப்படையாக கொண்டு தொழில்கள் பிரிக்கப்பட்டன. அவ்வளவு தான். மற்றபடி பிராம்மணன் உசத்தி சூத்ரன் தாழ்த்தி என்றெல்லாம் கிடையாது.
வியாசரே சொல்லி இருக்கிறார் - கலி சாது: சூத்ர சாது என்று.
அதாவது யுகங்களுக்குள் கலியுகம் உயர்ந்தது - ஏனெனில் பக்தி பண்ணி உய்யலாம்.
வர்ணங்களுக்குள் சூத்ர வர்ணம் சிறந்ததாம் - ஏனெனில் பிறரை போல கடும் ஆசார அனுஷ்டான நியமங்கள் இல்லாமல் வெறும் அடக்கத்தாலும் (அது எல்லாருக்கும் வேண்டும், இவனுக்கு இயல்பிலேயே உண்டு) உழைப்பினாலும் சேவையினாலும் இவன் உயர்ந்து விடுகிறான்.
பெண்களுக்குன் அதே தான். கணவன் கடும் விரதங்களால் பெரும் பயனை மனைவி அவனிடம் சரணாகதி பண்ணி செய்யும் பணிவிடையினால் அடைந்து விடுகிறாள். பின் அவளே அவனுக்கு ஞான உபதேசம் பண்ணி கணவனுக்கு குருவான வரலாறும் யோக வாசிஷ்டத்தில் உண்டு.
கணவன் இவளிடம் உபதேசம் பெற்று அதன் பின் அவளை வணங்க வந்த போது ஐயோ கூடாது என மறுத்த பணிவும் கவனிக்க தகுந்தது.
சகோதரர் ஆலாசியம் அவர்களின் கருத்து மிக்க ஏற்புடையதே ஆகும்.
ReplyDeleteஅவரது பின்னூட்டங்களை படித்த பின் நான் ஏன் எழுத வேண்டும் என சில நிமிடங்கள் யோசித்தேன். இருந்தாலும் நம் குரலை "சுழல விடுவோம்" என எண்ணி எழுதினேன்..... :)
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநமது மூத்த மாணவர், பெரு மதிப்பிற்கு உரிய லால்குடியார் அவர்கள் தமது கருத்தினை மிக மிக தெளிவாக, அழுத்தமாக அதே சமயம் மென்மையாக, மேன்மையாக சொன்னார்.
ReplyDeleteநூறு வார்த்தை தமிழில் எழுதுவதற்குள் தட்டு தடுமாறி இடரும் என் போன்றவர்கள் மத்தியில் அன்னார் ஒரு எழில் ஞாயிறு. தலை வணங்குகிறோம் அவரை.
உயர்திரு கிருஷ்ணன் அவர்களின் பின்னூட்டங்களை பல நாட்களாக படித்து பயன் பெற்று வந்திருக்கிறேன்.
ReplyDeleteஎன்போன்ற சிறார்களை ஊக்குவிப்பதில் தந்தை போலவும், பாராட்டுவதில் சகோதரராகவும் வழிகாட்டுதலில் ஆசான் போலவும் விளங்கி வருகிறார்.
கள்ளினை உண்டு களிப்புடன், வெண்ணிற புள்ளிகளை உடைய சினம் கொண்ட யானையின் மீது அமர்ந்த வேற்று அரசரின் வீரன் எறிந்த ஒளி சிந்தும் வேலினை கண்டு அஞ்சாது சிரிப்புடன் எதிர் கொண்டு தன வாளால் அவ்வேலினை அறுத்து பயனற்று விழ செய்யும் பாலை நிலத்து மறவன் போல, பாய்ந்து வரும் எதிர் கருத்துக்களுக்கு அமைதியாக ஆனால் ஆழமாக பதில் அளிக்கும் அவர் உயரிய பண்பு நாவென்னும் குறுந்தடியால் வாயாகிய பறையை அறைந்து எங்கும் முழங்கத்தக்கது.
அன்பு சகோதரி தேமொழி:
ReplyDeleteசிலப்பதிகாரத்திலே மதுரைக்காண்டதிலே வழக்குரைத்த காதையிலே எழுபதாவது வரி:
"தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி" என வரும்......... அதே பாராட்டினை எல்லா தருணங்களிலுமே தங்களுக்கு தர வேண்டும் என்று தான் எனக்கு ஆசை....................................................................................................................
தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திய ஹாலாயம்ஜி,புவனேஷ்வருக்கு நன்றி.
ReplyDeleteஇந்தத் தலைப்பு இன்று பேசுவதற்கு மிகவும் சங்கடமானது. ஆனாலும் பேசித் தீர்க்க வேண்டியது.
என் வளர்ப்பும்,பின்னணியும்,என் செயல்பாடுகளும் என் ஆக்கங்களில் இருந்து பலரும் நன்கு அறிந்திருக்கலாம்.நான் ஒரு சாதீயவாதியாக இருக்கவே முடியாது. ஆனாலும் இங்கே அப்படி ஏன் பேசுகிறேன் என்றால் எப்போதும்
எந்தத் தரப்பின் குரல் ஓங்கி ஒலிக்காதோ அந்தத் தரப்புக்காகப் பேசுவேன்.
நீங்கள் வேறு தலைப்பில் விவாதத்தால் அங்கே சிறுபானமையாரின் கருத்துக்களைப் பேசுவேன்.அக்யூஸ்டுக்கும் ஒரு வழக்கறிஞர் வேண்டுமல்லவா?
சாதி பற்றிய கருத்தரங்கில் நான் பிராமணர் பக்கம் பேசினால் ,நானும் அந்த வகுப்பில் பிறந்து விட்டதால் 'இவர் அவாளை விட்டுக் கொடுப்பாரா?" என்று சுலபமாக ஓரம் கட்டுவார்கள்.
சாதி யதார்த்தம். சாதி ஒழிப்பு லட்சியம். தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
என்ற நிலை இடைப்பட்டக் காலத்தில் கொள்ளவேண்டியது.லட்சியத்தை அடைய பல நூற்றாண்டுகள் ஆகலாம்.
புவனேஷ்வர் கூறியதுபோல பட்டம், பவிஷு, பணம், சொத்துக்கு ஆசைபடாமல் பிராம்மணன் சிவனே என்று(கண்ணா என்று, பகவானே என்று)
பிறர் பொறாமைப் படத் தக்க வாழ்க்கை முறைகளை வாழாமல் தனக்கு விதிக்கப்பட்ட எளிய வாழ்வைத் தொடர்ந்திருந்தால் சாதிப் பிரச்சனை இப்படி வளர்ந்திருக்காது.
என்ன செய்ய முடியும்? இன்றைய யதார்த்தத்தைக் கணக்கில் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்து கொண்டு முன்னேறுவோம்.