மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

15.6.12

Devotional முன்வினை எப்போது தீரும்?

முன்வினை எப்போது தீரும்?

பக்திப்பாடல்

பாடல்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி
படம்: மகாநதி (1994)
இசை: இளையராஜா
பாடலாக்கம்: கவிஞர் வாலி
பாடியவர்கள்:  ஷோபனா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன்

பாடல் வரிகள்:

ஸ்ரீரங்க  ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி  
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி

(ஸ்ரீரங்க)

கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அன்னாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளூமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்

கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மருவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்
நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் தானடி
ஊர்வண்ணம் என்ன கூறுவேன் தேவலோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி

ஸ்ரீரங்க  ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி  
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி
----------------------------------------------------
பாடலின் காணொளி:
Our sincere thanks to the person who uploaded the video clipping!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

27 comments:

தேமொழி said...

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாலி மிகவும் பெருமையுடன் தன் ஊர்ப்பெருமை பேசுகிறார்.
அமைதியான முறையில் அழகாக உச்சரித்துப் பாடும் பாடுவோர் குரல்களின் இனிமையும் அருமை
காவிரி, ஸ்ரீரங்கம், கடவுள்களின் பெருமை எனப் புகழும் பாடலின் வரிகளின் எளிமையும் அருமை.
இவற்றை வெளிக்கொணரும் வண்ணம் இசையமைத்த இளையராவின் திறமையும் அருமை.
அருமையான பாடல்களில் ஒன்றை பதிவேற்றிய வாத்தியாரின் ரசனையும் அருமை. நன்றி.

Bhogar said...

இவ் உலகம் என்பது ஒரு பரிட்சை ஹால் மாதிரி !
மிகவும் சரியாக பரிட்சை எழுதியவர்கள்(மகான்கள்)
தேர்ச்சி அடைந்து போய்விடுகிறார்கள்.

தேர்வு பெறதாவர்கள் புதிய அனுபவங்கள் பெற,
புதிய உடலோடு வருகிறார்கள்.

பரிட்சை எழுத இரண்டு பேனாகள் தரப்படுகிறது.

நல்வினை
தீவினை

பயன்படுத்தும் வினையை பொருத்து,
மீண்டும் மீண்டும் திரும்ப அனுப்பபடுகிறார்கள்,
புதிய உடலோடு,

ஓம் சரவணபவ நம

ஜி ஆலாசியம் said...

அரங்கன் உறையும் மங்களபுரி அதுவே
ஆழ்வார்கள் யாவரும் கூடிய அழகாபுரி
திருப்பாணாழ்வாரை தொழில் ஏற்றியே
அரங்கனிடம் அழைத்துவர அர்ச்சகருக்கு
அரங்கனே அன்பான கட்டளையிட்ட
சமதர்ம சர்வேசன் இருந்தருளும்
சான்றோர் பணியும் உன்னதபுரி

இன்னும் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்திய அந்த ஸ்ரீரங்க நாதனின் புகழையும் அவன் வீற்றிருக்கும் புண்ணிய ஸ்தலத்தையும் அழகாக கவிஞர் புனைந்ததோடு அல்லாமல் மிகவும் ரம்மியமான இசையை இசை ஞானி அவர்கள் தந்தும் தெய்வீக தேன்சொட்டும் குரலில் பாடியும் இருக்கிறார்கள்.
ஷோபனாவின் குரலில் அரங்கனின் கருணை பொங்குகிறது எனலாம்.. அற்புதம்.. அருமை.

மிகவும் அருமையான தெய்வீகப் பாடலை பதிவிட்ட ஆசிரியருக்கு அவர்களுக்கு எனது பணிவான வணக்கமும், நன்றியும்.

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
நல்ல ஒரு தெய்வீகப் பாடல் கலையில் ஸ்ரீரங்க நாதனின் தரிசனம் பதிவிட்ட ஆசிரியருக்கு அவர்களுக்கு எனது பணிவான நன்றியும்.

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
நல்ல ஒரு தெய்வீகப் பாடல் கலையில் ஸ்ரீரங்க நாதனின் தரிசனம் பதிவிட்ட ஆசிரியருக்கு அவர்களுக்கு எனது பணிவான நன்றியும்.

அய்யர் said...

வருகை பதிவு

அய்யர் said...

மிகவும் சரியாக பரிட்சை எழுதியவர்கள்(மகான்கள்)
தேர்ச்சி அடைந்து போய்விடுகிறார்கள்.

தேர்வு பெறதாவர்கள் புதிய அனுபவங்கள் பெற,
புதிய உடலோடு வருகிறார்கள்.

மிகச் சரியே..

///பரிட்சை எழுத இரண்டு பேனாகள் தரப்படுகிறது.///

3 பேனாக்கள் என்பது அவை

பிராரப்தம்
சஞ்சிதம்
ஆகாமியம்

எமது கருத்தினை
திருத்துங்கள் தவறு இருப்பின்

Parvathy Ramachandran said...

தேவர்கள் இழந்த செல்வங்களையும் அமுதத்தையும் பெறும் பொருட்டு, பாற்கடலைக் கடைய, அவர்களுக்கு உதவுவதற்காக, பரந்தாமன், கூர்மாவதாரம் எடுத்த கூர்ம ஜெயந்தி நன்னாளான இன்று, ஸ்ரீ ரங்கநாதரின் புகழ் பாடும் அழகான பாடல் ஒன்றைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

ஸ்ரீ ரங்கநாதரின் படம் அருமை. மனதை வருடும் மிக இனிமையான பாடல்.
நல்லதொரு பாடல் தந்தமைக்கு நன்றி ஐயா.

ThirumalaiBaabu said...

அழகான பாடல் . பதிவுக்கு நன்றி .

kmr.krishnan said...

11 ஜூன் 2012 அன்று ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை தரிசித்தேன்.நாங்கள் சென்ற சமயமே ஸ்ரீசிருங்கேரி பீடாதிபதி மகாசன்னிதானம் அவர்களும் தரிசனத்திற்கு வந்தார்கள்.பள்ளி கொண்டவனின்(பள்ளி என்றால் படிக்கும் இடம் என்றும் பொருள்தானே!)சன்னிதியில் மகாசன்னிதானம்,குருவின் தரிசனமும் பெற்றது
இறையருள்தானே.

மஹாநதி ஷோபனா ஒரே படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தாலும் என்றும் மறக்க முடியாதவராகிவிட்டார். பின்னர் படங்களில் தொடர்ந்து நடிக்காமல் நல்ல‌ கர்நாடக சங்கீத வித்வாம்சினி ஆகிவிட்டார்.

நல்ல பாடல், நல்ல இசைகூட்டல், நல்ல தமிழ். பதிவுக்கு நன்றி ஐயா!

kmr.krishnan said...
This comment has been removed by the author.
Bhogar said...

ஒரு உயிர் இவ் உலகத்தில் பிறந்து,நன்மை தீமைகளை,
அனுப்பவிப்பதற்கு,
அவ் உயிர் அதன் முற்பிறவிகளில்,செய்த நல்வினை தீவினைகளே காரணமாகும்.
ஒவ்வொரு உயிரும் தன் இலக்கை அடையும் வரை,
பல லட்சக்கணக்கான பிறவிகளை,கடக்க வேண்டியது இருக்கிறது.
அப்படி பல பிறவிகள் எடுத்து,இனியும் பல பிறவிகள்,
எடுக்க போகிறவர்கள் தான் நாம் அனைவரும்.

இந்த அனைத்து பிறவிகளுக்கும் ஆரம்பம்,
நம்முடைய முதல் பிறவியாகும்.
ஒவ்வொரு உயிரும் தன்னிலை உணர்ந்து
முன்னேற வேண்டும் என்பதற்க்காக தான்,
இறைவன் முதல் பிறவியை தருகிறான்.
கர்மாக்கள் அற்ற உயிர் தன்னுடைய,முதல்
பிறவியை தொடங்குகிறது.
உடல் அனுபவங்களால் ஏற்ப்படுகிற குண பேதங்களால்,

நல்வினை தீவினைகளில் ஈடுபடுகிறது.
நல்வினை தீவினைகளே ஆரம்பமாகும்.
அதனால் ஏற்ப்படுகிற நிர்ணயங்களே,
பிராப்தம்,சஞ்சிதம்,ஆகாமியாம் போன்றவைகளாகும்.

ஓம் சரவணபவ நம

அய்யர் said...

///Bhogar said...
நல்வினை தீவினைகளில் ஈடுபடுகிறது.
நல்வினை தீவினைகளே ஆரம்பமாகும்.
அதனால் ஏற்ப்படுகிற நிர்ணயங்களே,
பிராப்தம்,சஞ்சிதம்,ஆகாமியாம் போன்றவைகளாகும்...////

தங்களின் விளக்கத்திற்கு நன்றிகள் தோழரே..
அந்த பேனாவில் ஊற்றப்படும் மை தான் இந்த பிராரப்தம் சஞ்சிதம் ஆகாமியம் என்பன என கொள்கிறோம்..
நன்றி

seenivasan said...

Good song How i have missed out ? may be most of time I am away from TN.

Thanks for the lovely song
G.seenivasan
Bharuch
Gujarat

Uma said...

நல்ல பாடல். ஆனால் பாடலில் முதலில் வரும் வரிகள் மட்டுமே ஷோபனா பாடியது. அதன்பின் உமா ரமணன் பாடியிருக்கிறார் என நினைக்கிறேன்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தேமொழி said...
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாலி மிகவும் பெருமையுடன் தன் ஊர்ப்பெருமை பேசுகிறார்.
அமைதியான முறையில் அழகாக உச்சரித்துப் பாடும் பாடுவோர் குரல்களின் இனிமையும் அருமை
காவிரி, ஸ்ரீரங்கம், கடவுள்களின் பெருமை எனப் புகழும் பாடலின் வரிகளின் எளிமையும் அருமை.
இவற்றை வெளிக்கொணரும் வண்ணம் இசையமைத்த இளையராவின் திறமையும் அருமை.
அருமையான பாடல்களில் ஒன்றை பதிவேற்றிய வாத்தியாரின் ரசனையும் அருமை. நன்றி./////

ஊர்ப்பெருமை பேசுபவரை நக்கலடித்துப் பின்னூட்டம் இட்டதும் அருமை:-)))

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Bhogar said...
இவ் உலகம் என்பது ஒரு பரிட்சை ஹால் மாதிரி !
மிகவும் சரியாக பரிட்சை எழுதியவர்கள்(மகான்கள்)
தேர்ச்சி அடைந்து போய்விடுகிறார்கள்.
தேர்வு பெறதாவர்கள் புதிய அனுபவங்கள் பெற,
புதிய உடலோடு வருகிறார்கள்.
பரிட்சை எழுத இரண்டு பேனாகள் தரப்படுகிறது.
நல்வினை
தீவினை
பயன்படுத்தும் வினையை பொருத்து,
மீண்டும் மீண்டும் திரும்ப அனுப்பபடுகிறார்கள், புதிய உடலோடு,
ஓம் சரவணபவ நம/////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ஜி ஆலாசியம் said...
அரங்கன் உறையும் மங்களபுரி அதுவே
ஆழ்வார்கள் யாவரும் கூடிய அழகாபுரி
திருப்பாணாழ்வாரை தொழில் ஏற்றியே
அரங்கனிடம் அழைத்துவர அர்ச்சகருக்கு
அரங்கனே அன்பான கட்டளையிட்ட
சமதர்ம சர்வேசன் இருந்தருளும்
சான்றோர் பணியும் உன்னதபுரி
இன்னும் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்திய அந்த ஸ்ரீரங்க நாதனின் புகழையும் அவன் வீற்றிருக்கும் புண்ணிய ஸ்தலத்தையும் அழகாக கவிஞர் புனைந்ததோடு அல்லாமல் மிகவும் ரம்மியமான இசையை இசை ஞானி அவர்கள் தந்தும் தெய்வீக தேன்சொட்டும் குரலில் பாடியும் இருக்கிறார்கள்.
ஷோபனாவின் குரலில் அரங்கனின் கருணை பொங்குகிறது எனலாம்.. அற்புதம்.. அருமை.
மிகவும் அருமையான தெய்வீகப் பாடலை பதிவிட்ட ஆசிரியருக்கு அவர்களுக்கு எனது பணிவான வணக்கமும், நன்றியும்./////

நல்லது. உங்களின் நெகிழ்ச்சியான மற்றும் மனம் உவந்த பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
நல்ல ஒரு தெய்வீகப் பாடல் கலையில் ஸ்ரீரங்க நாதனின் தரிசனம் பதிவிட்ட ஆசிரியருக்கு அவர்களுக்கு எனது பணிவான நன்றியும்./////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
வருகை பதிவு/////

நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
மிகவும் சரியாக பரிட்சை எழுதியவர்கள்(மகான்கள்)
தேர்ச்சி அடைந்து போய்விடுகிறார்கள்.
தேர்வு பெறதாவர்கள் புதிய அனுபவங்கள் பெற,
புதிய உடலோடு வருகிறார்கள்.
மிகச் சரியே..
///பரிட்சை எழுத இரண்டு பேனாகள் தரப்படுகிறது.///
3 பேனாக்கள் என்பது அவை
பிராரப்தம்
சஞ்சிதம்
ஆகாமியம்
எமது கருத்தினை
திருத்துங்கள் தவறு இருப்பின்/////

எங்களிடம் அத்தனை பேனாக்கள் இருப்பதாகத் தெரியவில்லை!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Parvathy Ramachandran said...
தேவர்கள் இழந்த செல்வங்களையும் அமுதத்தையும் பெறும் பொருட்டு, பாற்கடலைக் கடைய, அவர்களுக்கு உதவுவதற்காக, பரந்தாமன், கூர்மாவதாரம் எடுத்த கூர்ம ஜெயந்தி நன்னாளான இன்று, ஸ்ரீ ரங்கநாதரின் புகழ் பாடும் அழகான பாடல் ஒன்றைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
ஸ்ரீ ரங்கநாதரின் படம் அருமை. மனதை வருடும் மிக இனிமையான பாடல்.
நல்லதொரு பாடல் தந்தமைக்கு நன்றி ஐயா.////

உங்களின் பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ThirumalaiBaabu said...
அழகான பாடல் . பதிவுக்கு நன்றி .////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
11 ஜூன் 2012 அன்று ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை தரிசித்தேன்.நாங்கள் சென்ற சமயமே ஸ்ரீசிருங்கேரி பீடாதிபதி மகாசன்னிதானம் அவர்களும் தரிசனத்திற்கு வந்தார்கள்.பள்ளி கொண்டவனின்(பள்ளி என்றால் படிக்கும் இடம் என்றும் பொருள்தானே!)சன்னிதியில் மகாசன்னிதானம்,குருவின் தரிசனமும் பெற்றது
இறையருள்தானே.
மஹாநதி ஷோபனா ஒரே படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தாலும் என்றும் மறக்க முடியாதவராகிவிட்டார். பின்னர் படங்களில் தொடர்ந்து நடிக்காமல் நல்ல‌ கர்நாடக சங்கீத வித்வாம்சினி ஆகிவிட்டார்.
நல்ல பாடல், நல்ல இசைகூட்டல், நல்ல தமிழ். பதிவுக்கு நன்றி ஐயா!/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும் தகவல்களுக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Bhogar said...
ஒரு உயிர் இவ் உலகத்தில் பிறந்து,நன்மை தீமைகளை,
அனுப்பவிப்பதற்கு,
அவ் உயிர் அதன் முற்பிறவிகளில்,செய்த நல்வினை தீவினைகளே காரணமாகும்.
ஒவ்வொரு உயிரும் தன் இலக்கை அடையும் வரை,
பல லட்சக்கணக்கான பிறவிகளை,கடக்க வேண்டியது இருக்கிறது.
அப்படி பல பிறவிகள் எடுத்து,இனியும் பல பிறவிகள்,
எடுக்க போகிறவர்கள் தான் நாம் அனைவரும்.
இந்த அனைத்து பிறவிகளுக்கும் ஆரம்பம்,
நம்முடைய முதல் பிறவியாகும்.
ஒவ்வொரு உயிரும் தன்னிலை உணர்ந்து
முன்னேற வேண்டும் என்பதற்க்காக தான்,
இறைவன் முதல் பிறவியை தருகிறான்.
கர்மாக்கள் அற்ற உயிர் தன்னுடைய,முதல்
பிறவியை தொடங்குகிறது.
உடல் அனுபவங்களால் ஏற்ப்படுகிற குண பேதங்களால்,
நல்வினை தீவினைகளில் ஈடுபடுகிறது.
நல்வினை தீவினைகளே ஆரம்பமாகும்.
அதனால் ஏற்ப்படுகிற நிர்ணயங்களே,
பிராப்தம்,சஞ்சிதம்,ஆகாமியாம் போன்றவைகளாகும்.
ஓம் சரவணபவ நம/////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger seenivasan said...
Good song How i have missed out ? may be most of time I am away from TN.
Thanks for the lovely song
G.seenivasan
Bharuch
Gujarat////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Uma said...
நல்ல பாடல். ஆனால் பாடலில் முதலில் வரும் வரிகள் மட்டுமே ஷோபனா பாடியது. அதன்பின் உமா ரமணன் பாடியிருக்கிறார் என நினைக்கிறேன்./////

இல்லை பாடியவர்களின் பெயரில் நீங்கள் குறிப்பிடும் உமா ரமணின் பெயர் இல்லையே!