மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.6.12

Manavar Malar கைலாயத்தில் ஒரு கலக்கலான உரையாடல்

மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை மொத்தம் 11 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அப்படியே தந்துள்ளேன். படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

Manavar Malar கைலாயத்தில் ஒரு கலக்கலான உரையாடல்
ஆக்கம்: எஸ். உமா, தில்லி

வா தேவி உட்கார்!  என்ன திடீரென்று இந்தப்பக்கம்?

ஒன்றுமில்லை சுவாமி, நீண்ட நாட்களாக என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு சந்தேகத்திற்கு விடை தெரியாமல் குழம்புகிறேன்.

(சிறிது நேரம் தனிமையில் இருக்கலாம் என்றால் முடியவில்லையே என்று நினைத்துக்கொண்டே)

சொல் தேவி!  என்ன சந்தேகம் உனக்கு?

பிரபோ!  உலகில் உங்களை மறுத்துப் பேசுபவர்கள் அநேகம் பேர் இருக்கின்றார்களே?  அதைப்பற்றிய ஒரு குழப்பம்தான்....

அது எப்போதும் இருக்கும் ஒன்றுதானே?  அதைப்பற்றி நானே கவலைப்படவில்லை, உனக்கு என்ன தேவி?

இல்லை பிரபோ!  எனக்கு இவர்கள் கடவுள் என்ற ஒன்றே இல்லை என்று சொல்லும்போது கேட்கும் ஒவ்வொரு முறையும் வருத்தம் உண்டாகிறது.  அவர்களுக்கு ஏன் தாங்கள் தங்கள் இருப்பை உணர்த்தக்கூடாது?

இதெல்லாம் நடக்கிற காரியமா தேவி?

ஏன் தாங்கள் நினைத்தால் நடக்காதது என்று ஏதாவது இருக்கிறதா?

முதலில் என் இருப்பை நான் ஏன் உணர்த்தவேண்டும், அதைச் சொல்.  ஒவ்வொரு உயிரிலும் நான் சூட்சும ரூபத்தில் இருக்கிறேன்.  அதை ஆறு அறிவு படைத்த மனிதர்கள் தாங்களே உணர்வதுதானே சரியாக இருக்கும்?  அதை விட்டுவிட்டு நான்தான் கடவுள் என்று தம்பட்டம் அடிக்கச் சொல்கிறாயா?

அப்படியில்லை, உங்களை மறுப்பவர்கள் உங்களை ஒருமுறை கூட நேரில் பார்க்காததாலோ அல்லது உணராததாலோதானே மறுக்கிறார்கள்?  அப்படியிருக்க தாங்கள் ஒருமுறை நிரூபித்துவிட்டால் அவர்கள் உங்களை இல்லை என்று சொல்லமாட்டார்கள்தானே?

சரி உன் வழியிலேயே சென்று உனக்குப் புரிய வைக்கிறேன்.  எப்படி நிரூபிக்கலாம் என்று நீயே சொல்!

உங்களிடம் அதீத பக்தி செலுத்தும் யார் கனவிலாவது சென்று..

அப்படிப்பட்ட ஒருவனைத் தேடுவது மிகவும் கடினம், அப்படியே தேடி நான் தரிசனம் தந்தாலும் அவன் அந்த அனுபவத்தில் மூழ்கித் திளைத்துவிடுவானே தவிர வெளியில் பெருமை அடித்துக்கொண்டு திரிய மாட்டான்.

சரி ஓரளவு பக்தி சிரத்தையுடன் உள்ள ஒருவரின் கனவில் வந்து உணர்த்தலாமே!

அதை அவன் மக்களுக்கு எடுத்துச் சொன்னாலும் பெரும்பாலோர் அதை நம்பமாட்டார்கள்.  சிலர் கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு அவன் பின்னால் ஒரு கூட்டமாகச் சேர்ந்துவிடுவார்கள்.  அந்த நபர் சுயநலவாதியாக இருக்கும் பட்சத்தில் அவன் அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பணம் சம்பாதிக்க முற்படுவான்.  நான் கனவில் வாரதபோதே இதெல்லாம் கலியுகத்தில் நடந்துகொண்டுதானே இருக்கிறது?  மேலும் கனவு என்பதே நமது தொடர்ச்சியான எண்ணங்களின் வெளிப்பாடுதான் என்று மனிதர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.  ஆகவே என்னைப்பற்றியே சிந்தனை வயப்பட்டிருந்ததால் அவன் கனவில் அதேபோன்ற பிம்பம் தோன்றியதாக பகுத்தறிவுவாதிகள் வாதிடுவார்கள்.

என்ன மெளனமாக இருக்கிறாய்?  வேறு ஏதாவது சொல்!

சரி நாத்திகம் பேசுபவனின் கனவில்?

அதை அவனே நம்பமாட்டானே?

யாருக்காவது நேரில் தரிசனம் கொடுத்துவிடுங்களேன்!

இதற்கும் முன்னர் சொன்ன பதிலே பொருந்தும்.  இது உண்மையா, பிரமையா என்று அவனே குழம்பக்கூடும்.  ஒருவர் சொல்வதை எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்தானே?

இல்லையென்றால் ஒன்று செய்யலாம் சுவாமி, ஏதாவது ஒரு பொது இடத்திற்கு உங்களை மறுப்பவர்களை வரவழைத்து அங்கே தரிசனம் கொடுக்கலாமே?

ஏன் தேவி, நான் இங்கே நிம்மதியாக இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா?  நான் தரிசனம் கொடுத்தால் மட்டும் என்னை மறுப்பவன் எப்படி நம்புவான்?  என்னை முதலில் சோதனைகளுக்கு உட்படுத்த நினைப்பான்.  தனக்குத் திருப்தி வரும்வரை நம்பமாட்டான்.

மனிதகுல நன்மைக்காக தாங்கள் அந்த சோதனைகளுக்கு உட்பட்டால்தான் என்ன?

ஐயகோ தேவி!  அதற்கு அவன் சொல்லும்படிஎல்லாம் நான் ஆடவேண்டும்.  அவன் சோதனை முடிவுகளை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.  அது மிகவும் கடினம்.  ஒவ்வொருவரும் தன் பாணியில் சோதனைகளை நடத்துவார்கள்.  மனிதன் தன்னிடம் இருக்கும் அறிவியல் உபகரணங்களை வைத்து சோதனைகளை முடிக்க எத்தனை காலம் பிடிக்குமோ தெரியாது.  அதுவரை நான் அங்கேயே அடைபட்டிருக்க வேண்டும்.  நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை, என்னை விட்டுவிடு.

பின் என்னதான் இதற்கு முடிவு?

மனிதர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுவதுதான் தேவி!  எப்போது அவர்கள் உணருவார்களோ உணரட்டும், சிலருக்கு பத்து ஆண்டுகள் பிடிக்கலாம், சிலருக்கு நூறாண்டுகள், இன்னும் சிலருக்கு சில பிறவிகள் தேவைப்படலாம்.  எல்லோரும் என் குழந்தைகளே.  உணர்ந்து அவர்களே என்னைத் தேடிவரட்டும் என்றுதான் போற்றினாலும், தூற்றினாலும் பொறுமையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

இதற்கு முந்தைய யுகங்களில் இருந்த மனிதர்கள் தங்கள் ஆன்ம சக்தியால் எந்த அறிவியல் உபகரணங்களும் இன்றி வானத்தில் கோள்களின் சுழற்சியையும் என்னையும் அறிந்து உலகிற்கு உரைக்கவில்லையா?  மனிதனால் முடியாதது எதுவுமில்லை.  அவன் தன் ஆன்மசக்தியைப் பெருக்கிக்கொண்டால் என்னை உணர்வதும் கடினமில்லை.  என்னை அறியும் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் இதற்கு கண்டிப்பாக முயல்வார்கள்.  எதையும் யாரிடமும் திணித்தால் அந்தப்பொருளின் மதிப்பு போய்விடும்.  அவரவர்களே போராடிப் பெறும்போதுதான் அவர்கள் அந்த மதிப்பை உணர்வார்கள்.  

என்ன இன்னமும் ஏதாவது கேள்வி இருக்கிறதா?

இப்போதைக்கு இல்லை, ஒருவேளை தோன்றினால் திரும்ப வருகிறேன், இப்போது செல்கிறேன் பிரபோ!

(விட்டால் போதுமென்று) சென்று வா!
ஆக்கம்: எஸ்.உமா, தில்லி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
கடவுள் வந்துவிட்டார்
ஆக்கம்: K.G. நெப்போலியன், ஜப்பான்

25 ஆம் தேதி அதிகாலை அதாவது  24 ஆம் தேதி பின்னிரவிலிருந்து கடவுளின் வரவை எதிர்பார்த்த கற்பனயில் சரியான உறக்கம் இல்லாமல் போன காரணத்தால் அதன் தாக்கம்  25 ஆம் தேதி பகலில் மதியம் வரைக்கும் தலைவலியாகப் மாறி விட்டிருந்தது..

கடவுள் விவகாரமே வேண்டாத தலைவலிதான் என்று நன்கு உணர்த்தியது..

ஒமேகா-3 EPA & DHA ஜெனரல் supplement அலுவலக நண்பரிடத்தில் ஆர்டர் பண்ணியிருந்தது US இம்போர்டேட் அயிட்டம்  இரண்டு பாட்டில் இன்று வந்து சேர்ந்திருந்தது.. மற்றபடி வழக்கம் போலே அலுவலக வேலைகள்  துவங்கியது..மணித்துளிகள் கடந்தன..

"இறைவன் யாரோ என்ன பாடம் சொல்லித் தந்தாரோ..?" என்ற பாடல் காலை 9 :30 மணிக்கு மனதிற்குள் ஒலிபரப்பானது..அனேகமாக கீழ்கண்ட பாடலின் வார்த்தைகளை மாற்றி ஆனால் அதே ட்யூனில் எனக்காக பாடப்பட்டதாக நினைக்கிறேன்..

"ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி "

காலை 10 :00 மணிக்கு "இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்” என்ற பாடல் மனதிற்குள் ஒலிபரப்பானது.. இது 24 ஆம் தேதி இரவு அய்யர் எனக்கு மெயிலில் அனுப்பி சுழல விட்டிருந்த பாடல்..

காலை 10 :00 மணிக்கு "தர்ம தேவன் கோவிலுக்கு ஒரு வழி" என்ற பாடல் மனதிற்குள் ஒலிபரப்பானது..இதற்கு காரணம் ஆனந்த் அவர்கள் சில நாட்களுக்கு முன்னாள் இந்தப் பாடலை ஒலிபரப்பியதாக இருக்கும்..

காலை 11 :20  மணிக்கு

"கடவுள் ஒருநாள் மனிதனைக் காணத் தனியே வந்தாராம்..
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா? என்றாராம்
ஒரு மனிதன் 'வாழ்வே இனிமை' என்றான்
ஒரு மனிதன் 'வாழ்வே புதுமை' என்றான்"
என்ற பாடல் மனதிற்குள் ஒலிபரப்பானது..

காலை 11 :55  மணிக்கு
சிவவாக்கியார் பாடல் என்று நினைக்கிறேன்..
'நட்ட கல்லும் பேசுமோ?' என்ற வரிகள் மனதிற்குள் ஒலிபரப்பானது..

மதியம் 01 :00  மணிக்கு
"கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று.."
என்ற பாடல் ஒலிபரப்பானது ..

இறுதியாக மாலை 04 :30  மணிக்கு
"இறைவன் இருக்கின்றானா?
மனிதன் கேட்கிறான்..
அவன் இல்லா உலகத்திலே இங்கே வாழ்கிறான்"
என்கிற வரிகள் ஒலிபரப்பப்பட
அலுவல் நேரம் இனிதே முடிவுற்றது..

அந்தந்த நேரங்களிலே குறிப்பெடுத்து வைத்துக் கொண்டதால் நேரவிவரங்களுடன் எழுதமுடிந்தது..அய்யர் பாடலைச் சுழலவிட்டு அமைதி கொள்பவர் ஆதலால் இப்படிப் பாடலகள் என் சிந்தனையிலே சுழன்றதோ என்னவோ? என்றும் இல்லாத வழக்கமாக கடவுள் பாடல்கள் தொகுப்பாக வந்தமைக்குக் காரணமாக ஒருவேளை அய்யர் தமது ப்ளேயரிலே இதே பாடல்களை இந்த வரிசையிலே சுழல விட்டிருக்கலாம்..

அப்படி இருந்தால் இந்தியாவிலிருந்து கடல் கடந்து ஜப்பானை வந்தடைந்த அய்யரின் டெலிபதி வேலை அதிசயம் என்று வழக்கத்துக்கு மாறான விஷயமாக எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் சமீப காலமாக எனக்கு பாடல்களை மனதினுள் ரீங்காரமிடும் பதினைந்து வருடங்களுக்கும் மேலாய் இருந்து வந்த பழக்கம் கூட மாறி விட்டிருக்கிறது..அதுவும் பெரும்பாலும் காதல் பாடல்களேதவிர தத்துவம்.கடவுள் வகையறாக்கள் அல்ல. ஆனால் இன்று அய்யரின் ஆசியுடன் இந்த சம்பவம் நடந்ததற்குக் காரணம் அய்யர் சொன்ன கடவுளை எதிர்பார்த்து எனக்குத் தெரியாமல் எனது உள்மனம் செய்த கற்பனைத் தொகுப்பாக இருக்கலாம்.

மற்றபடி அய்யர் சொன்னது போலே எந்த ரூபத்திலும் கடவுள் எனக்குக் காட்சி தரவில்லை..வழக்கத்துக்கு மாறாக நடந்ததென்னவோ தலைவலிதான்.லஞ்ச் முடித்து ஒரு பத்து நிமிடக் குட்டித் தூக்கம் போட்டதும் அதுவும் கலைந்து போனது..

மாலையும்  இரவும் நண்பர் நேற்று கொடுத்த DVD யான  'Shobo with a shotgun'' என்கிற ஒரு alliance films வழங்கிய  with the participation of telefilm canada & filmnovascotia produced by Rombhus media/whizbanc films என்ற ஒரு மொக்கைப் படத்தைப் பார்த்துக் கழிந்தது..அங்கேயும் கடவுள் காட்சியளிக்கவில்லை.

கடவுளைப் பார்த்ததாகச் சொல்லும் எல்லோரும் சொல்வது போல 'கடவுளைக் காணத் தகுதி வேண்டும்' என்கிற அடிப்படையில் 'நான் தகுதியிழந்து விட்டேன்' என்று கொள்ளவேண்டியதுதான்..

வேறு கோணங்களும் பார்வைகளிலும் பார்த்தால்

எது எப்படியோ சூரி என்கிற சுப்புரத்தினம் அவர்கள் பாணியிலே சொன்னால் இன்றுமுழுதும் பாடல் வாயிலாக கடவுள் எனது சிந்தனையை ஆக்கிரமித்திருந்தார், எனது சிந்தனைக்குள் கடவுள் வந்துவிட்டார் என்று சொல்லாம்..

அய்யர்  பாணியில் சொன்னால் உணர்தல்/அறிதல்/ தெரிதல்/ புரிதல் என்று எந்த வகையிலும் சேர்த்தியில்லாத ஒரு அனுபவம் இது..

'விடாமுயற்சி' என என் பாணியில் சொன்னால் அத்துடன் சூன் 9 மற்றும் 11ஆகிய தேதிகளில் நான் முயற்சியே செய்யாமல் வரப்போகும் கடவுள் மெயின் பிக்சருக்கு இது வெறும் ட்ரெயிலர் 'டைட்டில்  சாங்' ஆக இருக்குமோ? 

அன்புடன்,
K.G.Napoleon
+++++++++++++++++++++++++++++
மேலே உள்ள இரு ஆக்கங்களும் சென்ற வாரம், வார மலருக்காக வந்தவை. ஆனால் மலர் வலை ஏறிய பிறகு தாமதமாக வந்த காரணத்தால், இந்த வாரம் வலை ஏற்றப்பட்டுள்ளன!
- வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++

3


எங்கெங்கு காணினும் சக்தியடா
ஆக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே. 
(அபிராமி அந்தாதி)

 ஸ்ரீ ஆதிசங்கரர் தொகுப்பித்த ஷண்மதங்களில், காணபத்யம், சௌரம், கௌமாரம் ஆகியவற்றின் வரிசையில், உலகனைத்தும் இயங்கக் காரணமான சக்தி வழிபாட்டைப் போற்றும் 'சாக்தம்' பற்றிப் பார்க்கலாம்.

 பெண்மை போற்றுதலுக்குரியது. துதிக்கத் தகுந்தது. 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்று வள்ளுவப்பெருமான் போற்றிப் புகழ்கிறார். உலகில் உயிர்களின் தோற்றம் நிகழ்வது பெண்மையாலேயே.

 இவ்வுலகமனைத்தும் ஒரு ஒழுங்கில் இயங்குகிறது.  ஒவ்வொரு இயக்கமும், அணுவிலிருந்து அண்டம் வரை இயங்குவதற்குக் காரணமான‌ ஆற்றலின் பிரவாகத்தை, சக்தியின் சொரூபத்தை பெண்வடிவில் தொழுது போற்றும் மார்க்கமே சாக்தம் ஆகும்.

 நாம் வாழும் பூமி, அதில் ஓடும் நதிகள், பேசும் மொழி, உண்ணும் உணவு என எதையும் பெண்ணின் அம்சமாக, பூமாதா, கங்கையம்மன், காவிரித்தாய், அன்னைத் தமிழ், அன்னபூரணி, அன்னலட்சுமி என்று சிறப்பித்துக் கூறுவது நமது மரபு

 நமது மரபில் 'அன்னை' என்ற உறவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் மிக உன்னதமானது. 'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்' நாம் மிக உயர்வாக வைத்து மதிக்க வேண்டியவை.

 உயிர்களின் தோற்றத்திற்குக் காரணம் அன்னை. 'கெட்டமகன் இருக்கலாம் ஆனால் ஒரு போதும் கெட்ட தாய் இல்லை' என்பது நிதர்சன உண்மை. குழந்தைகள் என்ன தவறு செய்தாலும் மன்னிக்கும் த‌கைமை தாய் ஒருத்திக்கே உண்டு. உலகிற்கு நம்மைத் தருவதிலிருந்து, உணவூட்டிப் பாதுகாத்து, நரைகூடி கிழப்பருவம் எய்தினாலும் தன் மக்கள் நலமே பெரிதென நினைத்துத் தியாகத்தின் மொத்த உருவமாய் வாழும் தாய்மார்களைப் பெரிதெனப் போற்றும் பாரம்பரியம் நம்முடையது.

 தாய்மையின் மிக உன்னத, உயரிய வடிவாக, கருணைமழை பொழியும் கற்பக விருட்சமாக, உலகனைத்தும் தோன்றக் காரணமான பரம்பொருளாக, ஜகன்மாதாவாக, உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவி நின்று உலகை இயங்கச் செய்யும் ஆற்றலின் பெருவடிவாக, அம்பிகையை போற்றி வழிபடுகிறார்கள் சாக்தர்கள்.

 சக்தியில்லையேல் சிவமில்லை' என்பது சாக்தர்களின் துணிபு. ச‌லனமற்றிருக்கும் நிர்க்குண நிராகாரப் பரம்பொருள் சக்தி எனும் ஆற்றலின் முழுவடிவமாய் இவ்வுலகனைத்தையும் தோற்றுவித்து, காத்து, பின் முடிவில் உலகனைத்தும் ஒடுங்கும் இடமாய்த் திகழ்கிறது.

 பிரபஞ்சமுழுவதும் உள்ளும் புறமும் ஊடாடி நின்று உலகனைத்தையும் நன்றாய் இயங்கச் செய்து காத்து ரட்சிக்கும் சக்தியின்வழிபாடு, ஷண்மதங்கள் (காணபத்யம், சௌரம், கௌமாரம், சாக்தம், சைவம், ஸ்ரீ வைணவம் எனும் ஆறு பிரிவுகளே ஷண்மதங்கள்) அனைத்திலும் வியாபித்து நிற்பது கண்கூடு.

 சைவத்தில் சக்தி சிவனாரின் பத்தினி. திருமாலின் தங்கை. விநாயகர், முருகப்பெருமானின் தாய். ஸ்ரீ வைணவத்தில் ஸ்ரீ மஹால்க்ஷ்மி, 'தாயார்' என்றே போற்றப்படுகிறாள். மும்மூர்த்திகளும் சக்தி சொரூபமான தேவியரின் துணை கொண்டே, முத்தொழில்களைப் புரிகிறார்கள்.

தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;  . (அபிராமி அந்தாதி)

என்று அபிராமி பட்டர், மும்மூர்த்திகளையும் படைத்த பரம்பொருளான ஆதிசக்தியின் வெவ்வேறு வடிவங்களே, முப்பெருந்தேவியர் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

'த்ரயாணாம் தேவாநாம் ' எனத் தொடங்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரபகவத் பாதர், "சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் வடிவமாகத் தோன்றிய மும்மூர்த்திகளும் உனது திருவடிகளுக்குப் பூஜை செய்த வண்ணம் இருக்கின்றனர். ஆகவே, உனது திருவடிகளைத் தொழுதால், மும்மூர்த்திகளையும் தொழுவதாக ஆகிவிடுமன்றோ" என்று அம்பிகையின் மும்மூர்த்திகளுக்கும் மேலான தன்மையைப் புகழ்கிறார்.

 அம்பிகையின் கருணை அளப்பரியது. அடியவர்களை அதிகம் சோதிக்காது, வேண்டுவனவற்றை அப்பொழுதே தரும் தன்மையுடையது. இதை சௌந்தர்ய லஹரியில்,  'பவாநி த்வம் தாஸே' எனத் தொடங்கும் ஸ்லோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர், "பவானி, உன் கருணையுடன் கூடிய கடைக்கண் பார்வையைத் தந்து அருள்வாயாக எனக் கேட்க நினைக்கும் ஒருவன், 'பவானி' எனத் தொடங்கும் முன்பே, மும்மூர்த்திகளின் கிரீடங்களால் மங்கள ஆரத்தி செய்யப்பட்ட உன் திருவடிகளை உடைய உனது மேலான சாயுஜ்ய பதவியையே அளித்து விடுகிறாய்" என்று புகழ்கிறார்.

"கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே." என எங்கும் நிறைப் பரம்பொருளாக அம்பிகையைப் போற்றித்துதிக்கிறார் அபிராமி பட்டர்.

அம்பிகையே 'ப்ரஹ்மாண்ட பாண்ட ஜனனி' யாக உலகனைத்தையும் படைக்கிறாள். தன் கடைக்கண் பார்வையாலேயே உயிரினங்களைக் காக்கிறாள்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள  "உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளீ" என்ற திருநாமம், தேவி இமை கொட்டாமல் உலகைக் காக்கும் தன்மையை வியந்து போற்றுகிறது. இமை கொட்டுகிற அந்த சிறு துளி நேரம் கூட அம்பிகையின் குழந்தைகளான நமக்கு அவள் பார்வையின் பாதுகாப்பு  கிடைக்காமல் போய்விடக் கூடாதே என்ற தாய்மையின் தவிப்போடு நம்மைக் காக்கிறாள் அம்பிகை.

உலகில் கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போகும் போது மஹாகாளியாக  அசுரர்களை சம்ஹரித்து அருளுகிறாள். மஹாமாயையாக, உலகனைத்தையும் வசப்படுத்தி, ஆள்கிறாள். அஞ்ஞான இருளில் மூழ்கி ஜீவர்கள் தவிக்கும் போது, தன் வற்றாத பெருங்கருணையால் முக்தியை அருள்கிறாள்

 சக்தி வழிபாட்டின் வேர் மிகப் பழமையானது. தாய் வழிபாடும் கன்னி வழிபாடும் மெல்ல மெல்ல ஒருங்கிணைந்தே சாக்தமாகத் தோற்றம் கொண்டது என்றொரு கூற்று உண்டு.ஆதிகாலத்தில், உயிர்களைத் தோற்றுவிக்கும் அதிசய சக்தியாகப் பெண்மையை மதித்த மனிதன், தன் கூட்டங்களுக்குப் பெண்ணின் தலைமையை ஏற்று நடந்தான். காலமாற்றத்தால், இந்நிலை மாறியபோது கூட, பெண்மையின் மகிமையை உணர்ந்து போற்றும் மார்க்கம் மனிதனால் சாக்தமாகப் பேணப்பட்டே வந்திருக்கிறது.

 சிறுமி, இளம்பெண், திருமணமான மங்கை, வயது முதிர்ந்த பெண் என பெண்மையின் அனைத்து வடிவங்களையும் பூஜிக்கிறது சாக்தம். பாலா, கன்யாபூஜை, சுமங்கலிபூஜை, ஸூவாஸினி பூஜை என அனைத்தும் சாக்தத்தில் முக்கிய இடம் பெறுகிறது. முக்கியமாக, அம்பிகைக்கு உகந்த தினங்களான 'நவராத்திரியில்' இப்பூஜைகள் செய்வது இகபர சுகங்களை அளிக்க வல்லது.

 கல்விக்கு அதிபதியாக சரஸ்வதியையும் செல்வத்தின் தலைவியாக, ஸ்ரீ லக்ஷ்மியையும் வீரத்தின் அதிதேவதையாக பார்வதியையும் போற்றும் சாக்தத்தில் நவராத்திரிப் பண்டிகை, அமைதியும் காருண்யமும் பொருந்திய அம்பிகை, அநீதி மேலோங்கும் போது துர்க்கையாக, மஹாசண்டியாக, மகிஷாசுரமர்த்தினியாக உருவெடுத்து மகிஷாசுரனை வென்றதைப் போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. இது புரட்டாசி மாதத்தில் பத்து தினங்களாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிரவும், வசந்த நவராத்திரி, சியாமளநவராத்திரி, ஆஷாட நவராத்திரி ஆகியவையும் சாக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

 சிவனாரின் இருப்பிடமாக கயிலையும், திருமாலின் வசிப்பிடமாக ஸ்ரீவைகுண்டமும் சொல்லப்படுவது போல், தேவியின் வாசஸ்தலமாக, சாக்தத்தில் ஸ்ரீபுரம் சொல்லப் படுகிறது. 'ஸ்ரீ' என்னும் அற்புதச் சொல்லுக்குப் பொருள் கூற ஆரம்பித்தால் அது வானளவு விரியும்.

 அம்பிகையின் வழிபாட்டில் இருவகைகள் உள்ளன. அவை வாமாசாரம் அல்லது ஸமயாசாரம், தக்ஷிணாசாரம் ஆகியவை ஆகும். இதில் வாமாசாரம், உள்முகமாக தேவியை ஆராதிக்கும் முறை. 'குண்டலினி யோகம்' மூலம் அம்பிகையை ஆராதித்தலே இது. இதில் மந்திரசித்தி முதல் சமாதி வ‌ரை 30 நிலைகள் உள்ளன. யோகசாதனா மார்க்கத்தில், ஸ்ரீவித்யாமார்க்கமே, சிறந்ததும் பாதுகாப்பானதும் ஆகும். சாக்தத்தில் 'ஸ்ரீ வித்யா மார்க்கம்' உபாசனா முறைகளில் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது.

 தக்ஷிணாசாரம் என்பது மூன்று வகைப்படும். அவை, மந்திரங்களை உச்சரித்து தேவியைப் பூஜித்தல், ஸ்ரீசக்ரம்  ஸ்ரீ மேரு முதலிய யந்திரங்களைப் பூஜித்தல், தாந்திர அதாவது கை அசைவுகள் மூலமாகச் செய்யப்படும் முத்திரைகள் மூலம் ஆராதித்தல் ஆகியவை ஆகும்.

 ஆதிபராசக்தியின் வடிவான ஸ்ரீ லலிதா தேவி, பண்டாசுர வதத்தின் போது, தேவர்களின் பக்திக்கிரங்கி, சிதக்னி குண்டத்தில் தோன்றி, பண்டாசுரனை வெல்கிறாள். ஸ்ரீ காமேஸ்வரருடன், ஸ்ரீபுரத்தில் தேவி  வீற்றிருக்கும் போது, வசினி முதலிய வாக்தேவதைகளால் அம்பிகையைத் துதித்துச் சொல்லப் பட்ட ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், தேவியின் துதிகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது. இது அம்பிகையின் எங்கும் நிறைத் தன்மையைப் பலவாறு போற்றித் துதிக்கிறது.

முதல் 33 ஸ்லோகங்கள் அம்பிகையின் பண்டாசுர வதத்தை விவரித்தும் அதன் பின்  வரும் ஸ்லோகங்கள் அம்பிகையின் பரப்பிரம்மத் தத்துவத்தை விளக்குவதாகவும் ஸ்ரீ வித்யா உபாசனையின் விரிவாகவும் அமைந்துள்ளது. இந்த சஹஸ்ரநாமம் (ஆயிரம் நாமாவளிகள் கொண்ட துதி) இவ்வுல கனைத்தும் தோன்றக் காரணமான அம்பிகையை, அன்னையர்க்கெல்லாம் அன்னையை, 'ஸ்ரீ மாத்ரே நம:' என்று போற்றித் துவங்குகிறது..

 ஸ்ரீ லலிதா தேவியான அம்பிகையின் கையிலிருக்கும் ஐந்து புஷ்ப பாணங்கள், ஐம்பொறிகளுக்கும் கரும்பு வில், மனத்துக்கும் பாச அங்குசங்கள், மனத்தையும் ஐம்பொறிகளையும் அம்பிகையின் அருளால் வென்று அவள் தாள் பணிதலையும் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளப்படுகிறது.

ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ விவேகானந்தர் முதலிய எண்ணற்ற சாக்தர்கள் இந்தப் புண்ணியபூமியிலே. 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று முழங்கிய மஹாகவி பாரதியும் சாக்தரே.

யாதுமாகி நின்றாய்– காளீ,
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் — காளீ
தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்து மானாய் — காளீ
பொறிக ளைந்து மானாய்
போத மாகி நின்றாய் — காளீ
பொறிகளைக் கடந்தாய்.
என்று அம்பிகையின் எங்கும் நிறைத் தன்மையைப் பாரதியார் போற்றுகிறார்.

நோக்குகிற இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் ஆற்றலின் திருவுருவாம் சக்தியின் அடிபணிந்து நலம் பெறுவோம்.

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே!
(அபிராமி அந்தாதி)

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்
பெங்களூரு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4


சுரண்டிப் பிழைக்கத் தெரியாத மனிதரின் கதை
ஆக்கம்: தேமொழி


கனடாவில் உள்ள டொராண்டோவில் வசிக்கும் மோகன் ஸ்ரீவாஸ்தவா ஒரு நிலவியல் புள்ளியியல் வல்லுநர்  (Mohan Srivastava, geological statistician).  இவர் அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற எம். ஐ.டி மற்றும் ஸ்டான்ஃபோர்ட் போன்ற பல்கலைக்கழகங்களிலும் படித்து பட்டம் பெற்றவர்.  ஆனால் என்ன படித்து என்ன பலன், வாழ்வில் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதராக இருந்தால் எப்படி அவரை மெச்சுவது?

2003 ஆம் ஆண்டு ஒரு நாள் வேலையில் இருந்தபொழுது ஒரு கோப்பை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொண்டிருந்தார்.  அது அதிக நேரம் எடுக்கவே, அதுவரை தனது மேஜையைக் குடைய ஆரம்பித்தார்.  அப்பொழுது என்றோ ஒருநாள் அவர் நண்பர் ஒருவர் அவருக்கு பரிசாக விட்டுச் சென்ற இரு பரிசுச்சீட்டுகள் அவர் கண்களில் பட்டது.  அது tic-tac-toe விளையாட்டு பரிசுச்சீட்டுகள்.  அதில் ஒரு பகுதியில் latex வண்ணம் பூசப்பட்டு சில எண்கள் மறைக்கப்பட்டிருக்கும். அவை விளையாடுபவருக்கென கொடுக்கப்பட்ட எண்கள். அவற்றை சுரண்டியபின்பு அதே பரிசுச்சீட்டின் மற்றொரு  பகுதியில் உள்ள மற்ற எண்களுடன் அவை ஒரே வரிசையில் அமையுமாறு பொருந்தினால் பரிசுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள பரிசுத் தொகையைப் பெறலாம் என்பது விளையாட்டின் விதி.

மோகன் ஒரு நாணயத்தை எடுத்து சுரண்டினார். முதல் சீட்டிற்கு எந்தப் பரிசும் இல்லை.  இந்த ஏமாற்று வேலைக்காகத்தான் நான் இது போன்ற விளையாட்டுகளில் பணத்தை இழக்க விரும்புவதில்லை என்று எண்ணிக் கொண்டு அடுத்த சீட்டையும்  சுரண்டினார்.  ஆனால் அந்த சீட்டிற்கு மூன்று டாலர் பரிசு கிடைத்தது.  இருப்பதிலேயே குறைந்த பரிசுத் தொகை.  அந்தப் பரிசுச்சீட்டின் விலையும் அதுதான்.  மதிய உணவின் பொழுது அருகில் உள்ள பரிசுச்சீட்டுகள் விற்கும்  பெட்ரோல் பங்க்கிற்கு சென்று பரிசைப் பெற்ற பின்பு மேலும் சில பரிசுச் சீட்டுகள் வாங்கினார்.

புள்ளியியல் படிதவராயிற்றே, அவர் மூளை இந்த சீட்டுகள் பரிசுதரும் சீட்டுகளா என எப்படி நிர்ணயிக்கப் பட்டிருக்கும் என யோசிக்க ஆரம்பித்தது.  எப்பொழுதும் இந்த பரிசுச் சீட்டுகள் மொத்தமாக அச்சிடப்படும்.  அத்துடன் எண்களும் சீராகவோ, ஒரு வரிசையாகவோ இல்லாமல் ஒழுங்கற்ற முறையில் (random order) கணினியின் துணைகொண்டு நிர்ணயிக்கப்படிருக்கும்.  ஆனாலும் பரிசுச் சீட்டு நிறுவனம் பரிசு பெறப்போகும்  சீட்டுகளை ஒரு சில எண்களில்  தொடங்கும், அல்லது முடியும், அல்லது ஏதாவது ஒரு ஒரு சில எண்கள் இணைந்து வரும் வரிசை எனப் பலப்பல உத்திகளில் ஏதாவது ஒன்றினைக் கையாண்டு பரிசு பெறப்போகும் ஒரு சில எண்களை  நிர்ணயித்திருப்பார்கள்.

பரிசுச் சீட்டு நிறுவனத்தின் இந்த முறை சுலபமாகத் தெரியாதவாறு, அதாவது விளையாடும் மக்களுக்கு எளிதில் புரியாதவாறு, ஒரு குறிப்பிட்ட பத்து அல்லது இருபது சீட்டுகளில் ஒன்றிக்கு பரிசு விழுமாறு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கும்  வகையில் இந்த எண்கள் மற்ற சீட்டுகளின் வரிசையில் இடம் பிடிக்கும்.  ஒரு நிகழ்ச்சி நடக்க எத்தனை வாய்ப்புள்ளது (probability) என்ற புள்ளியியலின் துணைகொண்டு கணிக்கும் முறையை  தினசரி தன் தொழில் காரணமாக உபயோகிப்பவர் மோகன். ஒரு சில பரிசுச்சீட்டுகளை வாங்கி, பரிசு விழுந்த மற்றும் விழாத எண்களை ஒப்பிட்டு, எந்த வகையில் எண்கள் இணைந்திருந்தால் சீட்டுகள் பரிசு பெறக்கூடிய வாய்ப்புள்ளது என்பதை சுலபமாக புத்திசாலித்தனமாக  அனுமானித்து விட்டார்.  அவர்  கண்டுபிடித்த முறையினை உபயோகித்து   ஒருபுறம் கொடுக்கப்பட்டுள்ள எண்களை கணக்கில் கொண்டு சுரண்டாமலே 90% வரை சரியான பரிசுச்சீட்டுகளை அவரால் கண்டுபிடித்துவிட முடியும்.

இந்த ரகசியத்தை கண்டிபிடித்த நாம் என்ன செய்வோம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவர் செய்ததது...பரிசுச் சீட்டு நிறுவனத்தைத் தொலைபேசியில் கூப்பிட்டு, அவர்கள் பரிசுகளை தரும் குறிப்பிட்ட விளையாட்டின் சீட்டுகளின் எண்களை நிர்ணயித்த முறை சுலபமாக உள்ளது என்று சொன்னார்.  நிறுவனத்தின் மேலதிகாரியைச்  சந்தித்து அதைப்பற்றி நேரில் விளக்க விரும்புவதாக சொல்லி சந்திக்க வாய்ப்பளிக்கும்படி கேட்டார்.  நிறுவனத்தினர் அவரது மனநிலையை சந்தேகித்தார்களோ என்னவோ தொடர்ந்து தட்டிக் கழித்து வந்தார்கள்.  வெறுப்பேறிய மோகன் மீண்டும் கத்தைகளாக கொஞ்சம் பரிசு சீட்டுகள் வாங்கி தான் அறிந்து கொண்ட முறையைப் பயன்படுத்தி பரிசு பெரும் சீட்டுகள் ஒரு கத்தை, பரிசு பெறாத சீட்டுகள் ஒருகத்தை எனப்பிரித்தார்.  பரிசு சீட்டு நிறுவனத்தின் மேலதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

இந்த இரண்டு கத்தைகளையுமே நீங்களோ அல்லது உங்கள் உதவியாளர் உதவியுடனோ சுரண்டிப் பாருங்கள்.  பரிசு விழும், பரிசு விழாது என நான் யூகித்தது சரியாக இருக்கும் என்று கடிதம் எழுதி இரு கத்தைப் பரிசுச்சீட்டுகளையும் தபாலில் சேர்த்தார்.  அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல பரிசோதித்துப் பார்த்து உண்மையைப் புரிந்து கொண்ட கனடாவின்  பரிசுச்சீட்டு நிறுவனம் இரண்டே மணிநேரத்திற்குள் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டது.  சில நாட்களுக்குள் நாடு முழுவதும் "டிக் டக் டோ" பரிசுச்சீட்டு விற்பனையும் நிறுத்தப்பட்டுவிட்டது. 

இதே போன்ற நிகழ்ச்சி அமெரிக்காவிலும் நடந்திருப்பதாக நம்பப் படுகிறது.  ஜோஅன் கின்த்தர்  (Joan Ginther) என்ற பெண்மணி ஒருவர் தொடர்ந்து ஒரு டெக்சாஸ் மாநில பரிசுச்சீட்டில் மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பரிசுகளைப் பெற்று வந்தார்.  அவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் புள்ளியியல் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதும், பல்கலைகழகம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றியவர் எனவும் தெரிந்தது.  அவரும் மோகனைப் போல பரிசுவிழும் சீட்டினை அடையாளம் கண்டுகொள்வது எப்படி என்று புரிந்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது.  ஆனால் அவரே அதைத் தெரிவிக்காத காரணத்தினால் சந்தேகப் படுவதுடன் நிறுத்திக் கொள்வதைத் தவிர நிரூபிக்க வேறு வழியில்லாமல் போனது.  மோகன் பரிசுச்சீட்டினை சுரண்டிப் பணம் சேர்ப்பதை தன் முழு நேரத் தொழிலாக மாற்றததற்கு காரணம், அந்த முறையினால் பணம் ஈட்டுவதற்கு செலவழிக்கும் நேரத்துடன் ஒப்பிட்டால் வரும் வருமானம் சொற்பம் என்பது அவர் கருத்து.

[possible image locations: http://images.ctv.ca/archives/CTVNews/img2/20110204/800_lottery_man_110204.jpg and https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIFwd0yaT6Ph3N6OcNCF6C5toV5nUw7k6UtwQmY7BhJqhxBtCCt3fN_TuEhHnbvk0oRCUG9gNkaf07dplns1CHelzWphFMgwxk5HecxD_GMznG_p8MXxwnHIl2ss0m5yJuW9jpyTu2lovD/s320/Mohan+Srivastava+lottery+ticket.jpg]
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5


நெஞ்சை நிறைக்கும் தஞ்சை!
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி


சென்ற ஆக்கத்தில் தஞ்சைக்காரர்களைப் பற்றி எதிர்மறையாக சில நிகழ்ச்சிக‌ளைக் கூறிவிட்டேன்.திருமண சம்பந்தத்தின் போதும் 'தஞ்சாவூரா?'

என்று மற்ற மாவட்டத்துக்காரர்கள் சற்றே தயங்குவது இன்றும் உண்டு.

தஞ்சையின் சிறப்புக்களையும் நான் கூறாவிட்டால் நான் ஓரவஞ்ச‌னை செய்தவன் ஆகிவிடுவேன். 38 ஆண்டுகள் எனக்கு வாழ இடம் கொடுத்த தஞ்சை மண்(பூமித்தாய்) என்னை மன்னிக்க மாட்டாள்.

தஞ்சை நகரத்திலும், மாவட்டம் முழுமையும் நிறைந்துள்ள கோவில்கள்தான் தஞ்சைக்கு முதல் பெருமை.கோவில் என்றால் சிறு  கிராமத்தில் கூட  குறைந்தது 2 ஏக்கர் நிலப்பரப்பில் கோவில் நிறைவாக அமைந்திருக்கும்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தினமும் 2 கோவில்கள் என்று வைத்துக் கொண்டு தரிசனம் செய்தாலும் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்தால்தான் முழுமையாக தரிசிக்க முடியும்.இந்த மாவட்டத்தில் கற்களுக்கு வழியில்லை. பெரும் பாறைகளோ ,மலைகளோ இல்லாத ஒரு பகுதி தஞ்சை.இங்கே உள்ள‌ அத்த‌னை கோவில்களுக்கும் புதுக்கோட்டைப் பகுதியில் இருந்துதான் கற்கள் கடத்தப்பட்டு இருக்க வேண்டும்.

சுமார் 60 கிமீ தூரத்திற்கு சரக்கு உந்து வசதிகள் இல்லாத காலத்தில், ஓடைகளுக்கும் , ஆறுகளுக்கும் உறுதியான‌ பாலங்கள் இல்லாத சமயத்தில் எப்படி அந்த கற்கள் கோவில் பணிக்கு வரவழைக்கப்பட்டன என்பதே ஒரு அதிசயம்தான்.

இன்றும் தஞ்சை மாவட்டத்தில் கோவில்கள் பலவும் நன்கு பராமரிக்கப்படுகின்றன.இதற்கு நாம் சைவ ஆதினங்களுக்கும், வருமானம் இல்லாவிட்டாலும் கோவிலைக் கைவிட்டுவிடாத குருக்கள் சமூகத்தையும்தான் பாராட்ட வேண்டும்.

தஞ்சையின் மற்றொரு சிறப்பு ஆண்டுதோறும் நடைபெறும் திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாதான்.தைமாதம் வரும் இந்த விழா சமயத்தில் திருவையாற்றில் பொழியும் சங்கீத மழைபோலவே, தஞ்சைவாசிகளின் விருந்தோம்பல் பண்பும் சிறப்புப் பெறும். ஆராதனை உற்சவத்திற்கு வந்தவர்கள் பசியுடன் திரும்பினார்கள் என்று இருக்கக்கூடாது என்று பல அன்னதான அறக்கட்டளைகள் சுறு சுறுப்பாக இயங்கும். ஒரு சில அறக்கட்டளைகளில் திருமண விருந்தே கிடைக்கும்.'சோழ நாடு சோறுடைத்து' என்பதை அங்கே காணலாம்.

கடந்த 15 ஆண்டுகளாக நம் தஞ்சாவூரார் கோபாலன் ஐயா முன்னின்று நடத்தும் நாட்டியாஞ்சலியும் நன்கு புகழ் பெற்று வருகிறது.வெளிநாட்டு கலைஞர்களும் அதில் இடம் பெற போட்டிப் போட ஆரம்பித்துவிட்டனர்.

சரஸ்வ‌திமஹால் நூலகம் தஞ்சைக்கு மணிமகுடம் போன்றது.பல மூல நூல்கள் ஓலைச்சுவடி வடிவத்தில் அங்கே பாதுகாக்கப்படுகின்றன.

அவையெல்லாம் இப்போது மைக்ரோ ஃபிலிம் எடுக்கப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன.மன்னர் சரபோஜி மைனராக இருந்தபோதே ஆங்கில அரசின் ஆளுமைக்குக் கீழ் வந்துவிட்டார். அவருடைய அதிகாரங்களும் செல்வாக்கும் குறைந்திருந்த போதும் சரஸ்வதி மஹாலை விரிவுபடுத்த அவர் செய்த முயற்சிகள் என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறத்தக்கது.

தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் வரப்பிரசாதி. சதாசிவப் பிரம்மேந்திரருடன் தொடர்புடைய இந்தக் கோவில் ஏழை எளிய மக்களின் புகலிடம்.இந்த அம்பாள் அணிந்த ஆடைகளே மற்ற வருமானம் இல்லாத‌ கோவில்களின் விக்ரகங்களுக்குச் செல்கின்றன.தஞ்சை மக்களின் பக்தியை நேரில் காண ஆவணி மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தக் கோவிலுக்கு வந்தால் போதும்.

காஞ்சி காமாட்சியம்மனின் உற்சவ விக்ரஹமான தங்கக் காமாட்சி தஞ்சையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.(நமது டெல்லிக்கார உமாஜியின் தாத்தா இங்கேதான் ஸ்தானிகராக‌ இருந்தார்.) பங்காரு காமாட்சி அம்பாளின் அனுக்கிரஹத்தால் தஞ்சை நாளொரு மாற்றங்களைக் கண்டு முன்னேறி வருகிறது.

இன்று தஞ்சை பட்ட மேல் படிப்புக்கு உகந்த ஓர் இடமாக மாறியுள்ளது.மருத்துவக் கல்லூரியும், பல தொழில் நுட்பக் கல்லூரிகளும் பிற மாநில மாணவர்களையும் கவர்ந்து இழுக்கின்றன.இன்று தஞ்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. நான் 1973ல் வந்தபோது மூன்றே மூன்று கல்லூரிகள் தான் இருந்தன.

18 கருட சேவை என்பது தஞ்சையின் ஒரு சிறப்பு. ஒரே நாளில் பல பெருமாள் கோவில் உற்சவர்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் உலாவருவது கண் கொள்ளாக் காடசி.

தஞ்சையில் தேர்திருவிழா கிடையாது.அதற்கு பதில் முத்துப் பல்லக்கு என்று நடைபெறும்.பல கோவிகளின் உற்சவ மூர்த்திகள் மல்லிகைப் பூவால் அலங்கரிக்கப்பட்ட பெரிய பல்லக்குகளில் பவனி வருவார்கள். இரவு முழுதும் வாண வேடிக்கை, மயிலாட்டம் ஒயிலாட்டம் என்று ஊரே அமர்களப்படும்.நாதஸ்வர இசைப் பிரியர்களுக்கு அன்று பெரிய இசை விருந்து கிடைக்கும்.பல ஸ்பெஷல் செட் நாதஸ்வரக் கலைஞர்கள் தெருவிலேயே அமர்ந்து வாசிப்பார்கள்.

பச்சைக்காளி பவ‌ளக்காளி என்பது ஒரு முக்கிய நிகழ்வு. பெரிய காளி உருவ பொம்மைகளுக்குள்(லாலி பொம்மைகள்) மனிதன் புகுந்து கொண்டு தெருமுழுதும் ஆடி வருவார்கள்.தீடீரென்று இரண்டு காளிகளுக்கும் சண்டையெல்லாம் நடக்கும். மக்களுடைய பக்தி சிரத்தையையும், மரபார்ந்த பழக்கங்களையும் வெளிப்படுத்தும் ஓர் எளிய நிகழ்ச்சி 

தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றிச் சொல்லாமல் விடலாமா? இன்று உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெரியகோவிலின் பெருமை சொல்லி மாளாது.பல வலை தளங்கள் உள்ளன படித்து மகிழுங்கள்.

அறு படைவீட்டில் ஒன்றான சுவாமிமலை,கும்பகோணம் மஹாமக‌ம், திருவாரூர் தேரோட்டம், வல‌ங்கைமான் பாடைக்காவடி,மாயூரம் கடைமுகம், வேதாரண்யம் சமுத்திர ஸ்நானம், நவக்கிரக க்ஷேத்திரங்கள்,ஒப்பிலாஅப்பன் கோவில், அய்யாவாடி பிரத்யங்கரா, கோவிந்தபுரம் என்று முடிவில்லாமல் சொல்லலாம்.சொல்லிக் கொண்டே போகலாம்.

சுதந்திரப் போராட்டத்தில் தென்னகத்தில் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்யாகிரஹத்தின் போது அந்த நடைப் பயணம் முழுவதும் பெரும்பாலும் தஞ்சை மாவட்டத்திலேயே நடந்தது.ஆங்கில அரசாங்கத்தின் கெடுபிடியையும் மீறித் துணிவுடன் அந்த சத்யாகிரஹிகளுக்கு உதவிசெய்த தஞ்சை மாவட்ட மக்களை எத்துணை போற்றினாலும் தகும்.


தஞ்சாவூர் கதம்பம், டிகிரி காப்பி, அசோகா அல்வா, முந்திரிப் பருப்பு, தலையாட்டி பொம்மை , தஞ்சாவூர் ஆர்ட் ப்ளேட், கட் கண்ணாடி ஆர்ட் வேலை,கும்பகோண‌ம் வெற்றிலை, வறுவல் சீவல், வெண்ணாத்தி புருஷன் கடை,இட்லிக்கு கடப்பா, கொத்சு....

அடடா முடிவில்லை தஞ்சையின் தனிச் சிறப்புக்களுக்கு...

இறுதியாக கடந்த 45 ஆண்டுகளாகத் தமிழகம் தஞ்சைக்கார‌ர்களாலேயே  ஆளப் பெறுகிறது. ஒருமுறை தியாகராஜசுவாமி ஊர்க்கார‌ர் ஆட்சியென்றால் மற்றொரு முறை  ராஜகோபால சுவாமி ஊர்க்காரர்களின் ஆட்சி.

பல செய்திகளையும் கட்டுரையின் நீளம் கருதி விட்டுவிட்டேன். பின்னூட்டத்தில் நீங்கள் விட்டுப்போன செய்திகளைக்கூறக் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே.முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)

பின் குறிப்பு:இது என் 98வது ஆக்கம். இன்னும் இரண்டு வெளியானால் 100 என்ற இலக்கைத் தொட்டு விடுவேன்.என் ஆக்கங்களைத் தொடர்ந்து படித்துவரும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். 15 ஆகஸ்டு 2010 முதல் இதுவரை வெளிவந்த என் ஆக்கங்களில் உங்கள் மனதில் சட்டென்று நினைவுக்கு வருபவைகளை கூற வேண்டுகிறேன்.மறக்காமல் இருக்கும் அந்த ஆக்கங்களை மட்டும் புத்தக‌ வடிவாக்கி நண்பர்களுக்கும், நூலகங்களுக்கும் பரிசளிக்க ஆவல்.பின்னூட்டத்திலும் கூறலாம். என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதலாம்.
My mail ID: kmrk1949@gmail.com
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.



படைப்பின் ரகசியம்
ஆக்கம்: K.G.நெப்போலியன்


கிட்டத்தட்ட 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தததாக ஆராய்ச்சியாளர்களால் சான்றுகளுடன் அனுமானிக்கப்படும் புவியின் எரிமலை வெடிப்புக்களோ, அல்லது இடி போன்ற இயற்கையின் அதி உயர் வெப்ப மின் தாக்கமோ காரணமாக  அமைய அப்போதிருந்த புவிச் சூழலில் இருந்த எரிமலை வெடிப்பின் போது வெளிப்படும் வாயுக்களான  கார்பன் டை ஆக்சைடு,ஹைட்ரஜென் சல்பைடு,சல்பர் டை ஆக்சைடு,நைட்ரஜென், போன்றவை ஆர்கானிக் அமிலங்களாக உருமாற்றம் பெற்றிருக்கலாம் அல்லது ஆழ்கடல் பகுதிகளின் புவியின் ஆழத்திலிருந்து வெந்நீர் ஊற்றுக்களாய் வெளிப்படும் ஆர்கானிக் கெமிகல்களோதான் உயிர் என்கிற இயங்கும் செல்லைத் தோற்றுவித்த காரணமாக இருக்கமுடியும் என்று கொள்கை வடிவம் தந்தனர் ஆராய்ச்சியாளர்கள் அலெக்ஸ்ஸாந்தர் ஓபரின்ன்னும், J .B .S .ஹால்டேன் அவர்களும்.. 
அதை நிரூபணமாக்கும் முயற்சிகளில் 1950 களிலே ஸ்டான்லி மில்லர் -ஹெரால்ட் யுரே என்கிற ஆய்வாளர்கள் ஈடுபட்டு ஒரு மாதிரியை வடிவமைத்து புவியிலே உயர்வெப்பநிலைகளிலே 
மீதேன்,நீராவி,ஹைட்ரஜென்,அம்மோனியா போன்ற வாயுக்களை  கொள்கலனில் இட்டு வைத்து ஆங்கே உயர் மின்னோட்டத்தைப் பாய்ச்சி செயற்கையாக இப்படி ஒரு ஆய்வைச் செய்து பார்த்தனர்..விளைவு என்னவோ ஆச்சரியப் படும்படி அதே வகைக் கற்பிதக் கருத்தாக்கத்தையே ஒத்திருந்தது.. இந்த வகை இனார்கானிக் வாயுக்கள் உருமாற்றம் பெற்று செல் கட்டமைப்புக்கு அடிப்படையாய் விளங்கும் 20௦ வகை அமினோ அமிலங்களாக மாறிப் போயிருந்தன..

உயிரிகளின் அடிப்படை செல்களால் ஆனது என்று ராபர்ட் ஹூக் 1800௦௦ களிலே கண்டறிந்து அறிவித்துவிட்டாலும் காரணமாக அமைந்த இயற்கைச் சூழலையும் அதன் விளைவாக இணைந்த அமினோ அமிலங்களையும் சான்றாக்கி மனிதகுல வளர்ச்சியின் சூட்சுமங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்க்கத் துவங்கினர் அறிவியலாளர்கள்.

     இப்படி இயற்கையால், வேதிவினையால், விளைந்த அதிவெப்பத்திலே ஹைட்ரோஜென்,ஆக்ஸிஜன்,நைட்ரஜென்,கார்பன் என்று ஆதி வாயுக்கள் ஒன்றிணைந்து அமினோ அமிலமாக மாற்றமெடுக்க, ப்ரோட்டீன் உருவாகி,முதல் உயிரின் செல் கட்டமைப்பு உருவானது.. பல  படிநிலைகளில் மானுட இருபாலினத்து அணுக்களும் சேர்ந்து அடுத்த ஒரு கருவை உருவாக்கும் பொழுதிலும் இதே வகையில் செல் உருவாக்கமும் தொடர்ந்த செல் பிளவுமாக வளர்ச்சி துவங்குகிறது.. 
இப்படித்தான் பிரபஞ்சத்தின் அடுத்தடுத்த தொடர் வேதிவினைகளும் பரிணாம மாற்றங்களும் மனித குலத்தை கொணர்ந்திருக்கின்றன என்கிற வழியிலேதான் அறிவுப்பூர்வமாக இதுவரை படைப்பின் ரகசியம் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது..

கிட்டத்தட்ட மூன்று பில்லியன் DNA க்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 46 குரோமோசோம்களைக் கொண்டு வடிவமைநததே  மனித ஜெனோம். இப்படி மனித உடல் பத்து ட்ரில்லியன் செல்களைக் கொண்டதாக அறியப்படுகிறது..
    
கம்ப்யூட்டர் இன்போர்மேஷன் மூலம் எழுதப்பட்ட ஜெனிடிக் codeடை ஆபெரேடிங் சிஸ்டம் ஆக, சாப்ட்வேர் ஆக கொண்டு, நான்கு பாட்டில் கெமிகலால்
தயாரிக்கப்பட்ட, ப்ரோடீன், அமினோ அசிட் மூலம் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட DNA க்களைக் கொண்டு  குரோமொசொம்களைத் தயாரித்து, ஜெனோம்களைத் தயாரித்து (ஹார்ட்வேர் போன்ற),ஒரு செயற்கையான உயிரான இயங்கும் செல்லை வடிவமைத்து உருவாக்கி சாதனை படைத்துவிட்டார் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கிரெய்க் வென்ட்டர். தொண்ணூறுகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சிகள் இரண்டு வருடங்களுக்கு முன்பே 2010லே இந்த வெற்றியை அடைந்துவிட்டது.. (ஏற்கனவே வகுப்பறையிலே இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்..)

உயிரணு முட்டையுடன் இணைந்து கருவாக்கம் துவங்குகிற நிலையிலே அமினோ அமிலங்களின் டை ஆக்சி ரிபோ ந்யூக்ளிக் அமிலமாக மாறி ஒரு செல்ஆக துவங்கும் இந்த இயக்கம்..தொடர்ந்து பல செல்லாக அரித்மெடிக் ப்ரோக்ரேஷன்லே பல்கிப் பெரிதான அளவிலான செல்களாக உருவாக்கம் அடைந்து மனித உடலின் பாகங்களுக்கான செல்களாக உருவாக்கம் அடைகிறது..இந்தத் தருணங்களிலான வேதியல் மாற்றங்களின் வளர்ச்சியின் போது இந்த இயங்குதலுக்குள்ளான உருவத்தின் பிசிகல் அமைப்பை உடலென்றும் இயக்கத்தை உயிரென்றும் நாம்தான் பெயர்கொடுத்து கொள்கிறோம்.. இவ்வித இயங்கும் தொகுப்புக்கு மனிதன் என்று நாம் பெயரிட்டு அழைத்து வந்துள்ளோம்..
இயற்கையின் ஒரு அங்கமாக நிகழும் இந்த வேதிவினைகளின் தொகுப்பிலே உருவாகும் இந்த தொகுப்புருவம் இயற்கையின் சுற்றத்திலிருந்து காற்றைச் சுவாசித்து,இன்னபிற விஷயங்களை கிரகித்தும் வேதிவினைகளைத் தொடர்கிறது..ஒலியைக் கிரகிக்கும் இந்த அமைப்பு காற்றினூடே நெருக்கத்திலிருக்கும் தன்னையொத்த இயங்குத் தொகுப்புக்களுடனான தொடர்புகளை கற்றுத் தெரிந்த மொழியின் மூலமாக தொடர்புகளை எற்படுத்திக் கொள்கிறது.. இந்தக் காலகட்டத்திலே சுற்றத்திலுள்ள ஏற்கனவே தோன்றியிருக்கிற இதே போன்ற மனித உருவங்களின் வழிகாட்டுதலில் பல விஷயங்களை தெரிந்துகொள்கிறது.. வேதிவினைஇயங்குதலை அடிப்படையாகக் கொண்டு மூளையின் அதிர்வுகளும் அதிர்வை அடிப்படையாகக் கொண்டு மின்சாரமும்,அதனை அடிப்படையாகக் கொண்ட காந்தப் புலமும் என்று இந்த இயங்கும் தொகுப்பு செயல் படுகிறது..
இப்படியாக மனித இயக்கத்தை அறிவார்ந்த உயிர், அறிவில்லா உடல் என்றெல்லாம் பிரித்துப் பார்க்க வழியில்லை..உடலில்லாமல் உயிரில்லை..உயிரில்லாமல் உடலும் இல்லை..

இந்தக் காலகட்டத்திலே கொஞ்சம் கொஞ்சமாக தேர்ச்சி அடைகிற தன்மையிலே இந்த இயங்கும் தொகுப்பு ஒரு காந்தப் புலனை தன்னகத்தே கொண்டதாக இருக்கிறது..இப்படியான இந்தக் காந்தப்புலம் பரந்த வெளியிலே கலந்திருக்கும் எண்ண அலைகளையும் கிரகிக்கிறது.. பரந்த வெளியை ஊடகமாக்கி  தன்னைப் போன்ற பிற இயங்கும் தொகுப்புகளுடன் காந்தப் புலத்தின் வாயிலாகவே தொடர்பு கொள்ளவும் கூட முடிகிறது.... சில சமயங்களில் நாம் மனதினுள்ளே நினைத்து ரீங்காரமிடும் பாடலை எதிரில் வருபவர் பாடக் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்வதற்குக் காரணம் இப்படியாகத்தானிருக்க முடியும்.. எண்ண அலைகளின் மூலமே டெலிபதி போன்ற விஷயங்கள் சாத்தியப்படுவதும் இதனாலேதான்..

குறிப்பிட்ட காலம் தொடர்ந்து இயக்கத்துக்குள்ளான இந்த அமைப்பின் இயங்குதிறன் செயலிழக்கும்போது செல்கள் இயங்காமல் நின்று போகின்றன.. இந்த வகையிலே இதயத் துடிப்பு என்கிற இயக்கம் நின்று போன ஒரு இயங்குத் தொகுப்பை அறிவற்ற உடல் என்றும் அதனுள்ளான உயிர் எங்கோ பறந்துவிட்டது என்றும் அதற்கு அழிவில்லை, அதுதான் ஆன்மா என்றும் 'படைத்தானே' என்று பாடல் பாடிப் புலம்புவதெல்லாம் நமது கற்பனைதானோ என்றே தோன்றுகிறது....

 எந்தக் கற்பிதத்தையும்  சரியா தவறா என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தீர்மானமே தவிர வேறில்லை.. இந்த வகையிலே கற்பிதம் செய்து பார்த்தால் அறிவார்ந்த இயக்கங்களுக்கு பதில் கிடைக்கிறது.. மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகளை அறிவியல் பூர்வமாக எந்த நிலையையும் விளக்க முடியும்..ஏற்கனவே எல்லாமே விளக்கப்பட்டவையே..இந்த அடிப்படையில் இப்போதைய விஞ்ஞானம் கடந்திருக்கிற தூரம் அதிகம்..

கிரெய்க் வென்ட்டர் சொல்கிறபடி ஜெனிடிக் codeடை, அதாவது செல்களின் தலைஎழுத்தை,உயிரின் தலைஎழுத்தை எழுதி,இயக்கி, மனிதன் உண்மைப் படைப்பாளியாக மாறி அதிசயங்களைச் செய்துவிட்டான்.... இயற்கை செய்த புதிரிலே விளைந்துவிட்டிருக்கிற, பல்கிப் பெருகும் மனிதகுலத்துக்கு
இயற்கை விட்டுவைத்திருக்கும் எரிசக்தியோ,மருந்துப் பொருட்களோ ஏற்கனவே அளவில் இவ்வளவுதான் என்று தீர்மானிக்கப்பட்டுவிட்டிருக்கிறது..அவற்றின் தேவையைச் சமாளிக்க பிரயத்தனங்களைச் செய்து போராடவேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மனிதகுலத்துக்கு கிரெய்க் வென்ட்டர் இப்படியாக சொல்லும் தீர்வுதான் ஆச்சரியத்தைத் தூண்டுகிறது..
“உலகை அச்சுறுத்தும்  கார்பன்டை ஆக்சைடை உண்டு டீசலாக,பெட்ரோலாக மாற்றும் பாக்டீரியாக்களை உருவாக்குதல் சாத்தியமே” என்பதுதான் அது..
 
இந்த கண்டுபிடிப்பான பாக்டீரியா சிறு துளிதான்..  'தன் கல்லா நிரம்பினால் சரி..ஏதாவது கொளுத்திப் போட்டுவிட்டுப் போவோம்' என்கிற ஆட்களைப் போலல்லாமல்  தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டு, உண்மைகளை உலகுக்கு உணர்த்தும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் தியாகத்துக்கும்,சமூகப் பொறுப்புணர்வுக்கும் மதிப்பளித்து வணங்கி,   மூட நம்பிக்கைகளைக் களைந்த, அறிவார்ந்த நாளைய சமுதாயமும் முயற்சித்தால்  பெரு வெள்ளமாவது சாத்தியமே....

K.G.Napoleon
நன்றி:
விக்கிப்பீடியா
http://www.guardian.co.uk/science/2010/may/20/craig-venter-synthetic-life-form
http://www.ted.com/talks/craig_venter_is_on_the_verge_of_creating_synthetic_life.html
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 7



ஆண் பாவம்
கவிதை ஆக்கம்: தனுசு


என் திருமணம் முடிந்தது
சுதந்திரம் பறிபோனது
தினம் ஒரு பொய்யை
பரிசாய் தருகிறேன்
என் திருமண வாழ்கைக்கு.

வாழ்கையின் வாழ்வாதாரம்
வாரியிறைத்த வள்ளுவனும்
வாழ்கையில் தாரம் வந்த பின்னே
"பொய்மையும் வாய்மையிடத்த" என்ற
வாக்கை எழுதியிருப்பானோ?

என் இல்லத்தரசியே
நீ
இம்சை அரசியாய் மாறுவதேன்?
அஹிம்சை ஆயுதம் ஏந்துவதேன்?.

உன் சேலையின் அழகை
சொல்லமறந்தால் சிடுசிடுப்பு.
உனக்கு மல்லிகைபூ
வாங்க மறந்தால் முறைப்பு.
உன் சமையலை
ருசிக்க மறந்தால் கடுகடுப்பு.
என் மூன்று நாள் தாடியை
பார்த்தால் வெடிப்பு.

ஒரு அம்மாஞ்சி மூஞ்சி
என்னைப் பார்த்தால் கோபம்-என்
அத்தை மகள் என்னோடு பேசினாலும் கோபம்.
வீடு வர தாமதமானால் கோபம்.
நீ தெரிவு செய்த சட்டையை
போட மறந்தாலும் கோபம்.

ம்.. என்றால் எழுகிறேன்.
ஏன்... என்றால் அமர்கிறேன்.
இன்னும் ஏன்
இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறாய்.

இல்லறம் துவங்கியதால்
இனிய நண்பர்களை
இழக்கவேண்டுமா?-இல்லை
நீ தான் எங்களை
பிரிக்கவேண்டுமா?

இரவு துவங்குமுன் வீடு வர வேண்டும்
வீடு வந்தால்
வெளிஉலகம் வெட்டப்பட வேண்டும்
இது என்ன நியாயம்?.

"உன் உலகம் நான்" என்பாய்.
பெண்ணுலகம் இதுவே என்பாய்.
தத்துவம் பேசும்
ராட்சசி நீ.

நான் நண்பர்களோடு இருக்கையில்
கை பேசியில் அழைப்பாய்;
"நீ விரும்பும் நீல ரோஜா வாங்க காத்திருக்கிறேன்".
"நீ விரும்பும் விகடன் வாங்க காத்திருக்கிறேன்".
என்றே பொய்யுரைப்பேன்.

என் சின்ன சின்ன பொய்களை
புரிந்துக்கொண்டு
நீ
சினுங்குகையில்
உன்னைவிட எனக்கு எதுவும் பெரிதில்லை
என்று
பெரிதாய் ஒரு பொய்யுரைப்பேன்..

ஓடிய கால்கள் நிற்காது!
பாடிய வாய் மூடாது!
ஆடிய கால்கள் ஆணுக்கு-ஆனால்
அது
அடங்கிடும் அன்பில் பெண்ணுக்கு
என்னை நீ அடக்கிவிட்டாய்!.

தூண்கள் இல்லாத கூறை நிற்காது!
பெண்கள் இல்லாத வாழ்கை நிமிராது!
புரிந்து கொள்கிறேன்,
உன் அதீத அன்போடு
ஒப்பிடுகையில்
நான் தூசிக்கு சமம்தான்.-ஆனால்

இந்த
கோபம்
தாபம்
கண்டிப்பு
அடக்குமுறை
கட்டுப்பாடு
கட்டிப்போடுதல்
இவைகளை அவிழ்த்துவிடு!
இல்லையேல் இந்த
ஆண்பாவம் உன்னை சும்மாவிடாது!.
-தனுசு_
------------------------------------------------------------
8


நீலக்கன்னி
கவிதை ஆக்கம்: தனுசு

வானமின்று
வகுப்புக்குள் நுழைந்ததோ!-அது
மேகங்களை விட்டு
தனியாக வந்ததோ!

நீல நட்சந்த்திரங்கள்
பெண்ணானதோ!-கோல
எழில் கொண்டு
கோடி கதை சொல்லுதோ!

பிரம்மனின்
மதி நுட்பத்தை தோற்கடித்து
தொழிட் நுட்பத்தால்
துளிர்த்த தாரகையே....

நீ
டிஜிட்டல் செதுக்கிய சிலுக்கா?
நாசா நட்ட லுக்கா?
ஸ்பேசில் சிரிக்கும் சிலையா?
ஃபேஷியல் செய்த சரக்கா?

ஏரோ நாடிக் ரோஜா!-நீ
ஜீரோ டிகிரி ஐசா?
எலி பேட் வந்திறங்கிய
சாம்சங் ஐ பேட் செல்லா?

நீ
கேலக்சில் மெயினா?
கிராஃபிக்ஸ் குயினா?
நாள்பட்ட ஒயினா?
ப்ளுகலர் அபினா?

புவியில் பிறந்து
ப்ளு டூத் மூலம்
புலம் பெயர்ந்த
லாஸ் ஏஞ்சல்சின்
ப்ளு ஏஞ்சலா?.

பித்தம் ஏறி பிதற்றுகிறேன்
ஆல் டைம்
மிஸ் யுனிவர்ஸ் நீதான் -உனை
பாடும் ஆல் தோட்ட பூபதியும் நான்தான்.
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

9


சீதை என்னும் வீரமங்கை
ஆக்கம்: புவனேஷ்வர்


சீதை, உதாரண பெண்மணி, வீரமங்கை

நமது மக்களுக்கு வெறும் வாயை மெல்ல "அவல்" வேண்டும் அல்லது "அவள்" வேண்டும்... .

சமீபத்தில் ஒரு நீதிமன்றம் அழகிய ஒரு ஆலோசனையை வழங்கியது. பெண்கள் சீதையைப்போல இருக்க வேண்டும் என்பதே அந்த ஆலோசனை. உடனே பொங்கி எழுந்தனர் மங்கையர் திலகங்கள் (அதாங்க, பெண்ணிய வாதிகள், மற்றும் அவர்களுக்கு ஒத்து ஊதுவோர்). ஆஹாவென்றெழுந்தது காண் பெண்ணியக்கூச்சல்!

இவர்கள் எல்லாரும் சீதையை ஒரு ஆணாதிக்கத்தின் பலிகடாவாக பார்க்கிறார்கள். எங்கிருந்து தான் கண்டுபிடித்தார்களோ இந்த ஆணாதிக்கம் என்ற சொல்லை நான் அறியேன். சரி அதை விடுங்கள். விஷயத்துக்கு வருவோம். இந்தப்பதிவின் மூலம் நான் ஒன்றைத்தெளிவு படுத்த விரும்புகிறேன். சீதை ஒரு வீர மங்கை. இவர்கள் எல்லோரும் நினைப்பது போல வேறு வழி இல்லாமல் கணவனால் வற்புறுத்த பட்டோ அல்லது கடமைக்காகவோ காடு செல்லவில்லை. காலமெல்லாம் அழுது வடியவும் இல்லை.

ராமன் காடு சென்றது தகப்பனாருக்காக. ஆனால் சீதை காடு சென்றது ராமனுக்காக. ராமனுக்காக மட்டுமே. கடமைக்காக அல்ல. காதலுக்காக.

கடமைக்காக கணவனைப்பின் தொடர்ந்திருந்தால் அவள் "நீர் இன்றி ஒரு கணமும் நான் உயிர் தரித்திருக்க முடியாது" என சொல்லி இருக்க மாட்டாள். உண்மையில் ராமன் எவ்வளவோ சொல்லிப்ப்பார்த்தான் சீதையிடம். காடு துக்ககரமானது, நந்தவனம் இல்லை, கல்லும் முள்ளும் துஷ்ட விலங்குகளும் நிறைந்தது என்று சொல்லிப்பார்த்தான். ஒன்றும் சீதையின் காதலுக்கு முன்னால் எடுபடவில்லை. அவள் சொல்கிறாள் "கல்லும் முள்ளும் புலன்களை அடக்கும் திறன் இல்லாத மக்களுக்கு பயம் தரும். நீரும் நானும் அவ்வாறான்றே. உமக்கு முன்னால் நான் கல்லையும் முல்லையும் மிதித்துக்கொண்டு உமக்கு மென்மையாக்கிக்கொண்டு போவேன்" என்று. இது கடமைக்காக போகிற மனைவி பேசும் பேச்சா? தானே விரும்பி, கணவனார் தடுத்தும் கேளாது அவரைப்பின் தொடர்ந்தாள் மஹாபதிவ்ரதையான சீதை.

காட்டில் அவளை ராமன் தேடாமல் கால விளம்பம் பண்ணினான் என்று சிலர் குற்றம் கூறுவது வேடிக்கையாக தான் இருக்கிறது. அவர்கள் இருந்தது காட்டில். உயிரை விடப்பிரியமான மனைவி காணவில்லை என்றவுடன், எவன் முன்னால் யாரும் யுத்தத்தில் நின்று உயிருடன் திரும்ப முடியாதோ, அப்பேர்ப்பட்ட மஹா வீரனான ராகவன் உடைந்து தவித்து ஏங்கி கலங்கி கதறி கேவி அழுதான். அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா, விலங்கு தின்றதா, ராக்ஷசர் தின்று விட்டார்களா, ஒளிந்து விளையாட்டு காட்டுகிறாளா ஒன்றும் புரியாமல் அலை மோதி, தேடி திண்டாடி குற்றுயிராக இருந்த ஸ்ரீ ஜடாயு பெருமான் துப்பு சொல்லும் வரைக்கும் அவளுக்கு என்னாயிற்று என அறியாதவன் ஆகத்தானே இருந்தான் ராமன்?

அவன் காதலை கேள்விக்குறியாக்கும் பேதையர் பார்க்க வேண்டியது: யாராலும் ஜெயிக்க முடியாத மஹாவீரனை காதலியின் பிரிவு "மானே கண்டாயா?", "அசோக மரமே கண்டாயா?", "பனை மரமே கண்டாயா?"."யானையே கண்டாயா?", "ஏ புலியே,, உனக்கு தான் பயமே இல்லையே நீயாவது சொல்லேன் என் சீதையைக்கண்டாயா" என புலம்ப வைத்து.

காட்டையும் மேட்டையும் நதிகளையும் தாண்டி துக்கத்தோடு அவர்கள் சுக்ரீவனை அடைந்ததே பெரும் சாதனை. சாமான்ய மனுஷனானால் மரித்துப்போயிருப்பான். அதன் பின் மழைக்காலம் வந்தது. சீதையை தேட வானரர்களை அனுப்பி காலம் ஆனது. இதெல்லாம் கணக்கில் வராதா?

இத்தனையையும் தாண்டி அந்த பக்கம் பார்த்தால் சீதையும் கஷ்டம் தானே பட்டாள்?

ராவணன் பண்ணிய பெரிய தப்பு எதிரியை குறைத்து மதிப்பிட்டது. அதை விட பெரிய தப்பு மாற்றான் மனைவி மேல் காமுற்று கைவைத்தது. அவனைப்பொறுத்தவரை தன் தங்கையை மூக்கறுத்த மனிதனுக்கு பொறுக்க முடியாத தண்டனையை தர வேண்டும். அவன் மனைவியை மயக்குவதை விட என்ன தண்டனை பெரிது என நினைத்தான்.

அவன் அவ்வாறு நினைப்பதற்கு அவனுக்கு காரணங்களும் இருந்தன. அந்த நாள் வரை, ராவணன் மஹா பண்டிதன், மஹா வீரன், அழகன்...... அவனுக்கு மயங்கிய பெண்கள் பலர் பலர். அவன் அழகுக்கு சிலரும், வீரத்துக்கு சிலரும், செல்வத்துக்கு சிலரும், அதிகாரத்துக்கு பயந்து சிலரும் அவனுக்கு உடன்பட்டுக் கிடந்தனர். அவர்களைப்போலத்தான் சீதையும் இருப்பாள், தன்னைப்பார்த்ததும் மயங்கி உடன்படுவாள் என நினைத்தான் தசகண்டன். எந்தப்பெண் தான் தன்னைக்கண்டு மயங்க மாட்டாள் என இறுமாந்தான். ராமனும் அற்ப மனிதப்பூச்சி என எள்ளினான்.......

ஆஹா, எவ்வளவு தப்புக்கணக்கு போட்டு விட்டான்! ராமன் வீரத்தை மதிக்காதது கூட கிடக்கட்டும்.சீதையை சாமானியப்பட்ட பெண் என நினைத்தது அவன் பண்ணிய முதல் தவறு. அதனால் தான் அவளை மயக்கி விடலாம் என எண்ணி அபஹரித்தான். ஆனால் நடந்தது நேர்மாறானது. அவன் எவ்வளவுக்கெவ்வளவு சீதாதேவியை வற்புறுத்தினானோ அவ்வளவுக்கவ்வளவு அவள் ராமன் மேல் கொண்ட காதல் வளர்ந்தது. எவ்வளவுக்கெவ்வளவு அவளை பயமுறுத்த பார்த்தானோ அவ்வளவுக்கவ்வளவு அவள் உறுதி கூடியது. "உயிரை விட்டாலும் விடுவேன், உனக்கு உடன்படேன்" என்றாள்.

அது மட்டும் இல்லை, அவள் ராமன் மீது கொண்ட நம்பிக்கை ஒரு புறம் காதலியாக, மனைவியாக. அதே சமயம் ஒரு அரசியாக அவன் கடமையை அவன் செய்ய வேண்டும் என்ற நோக்கம்.

அவள் நினைத்திருந்தால் இரவோடு இரவாக ஹனுமான் முதுகில் தப்பி இருக்கலாம். வஞ்சகத்தால் கொண்டு வரப்பட்டவள் வஞ்சகத்தால் தப்பினால் தவறில்லை அவள்பால். ஆனால் ராமன் தன் கடமையை செய்ய வேண்டும் என உறுதியோடு அங்கேயே இருந்தாள். அழுது வடியும் பெண்ணாக இருந்திருந்தால் கோழையாக இருந்திருப்பாள். கோழை, தப்பிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் தப்பி இருப்பாள். சீதை வீர மங்கை. அதை செய்யவில்லை. மிகத்தெளிவாக இருந்தாள். அது மட்டும் இல்லை. ராவணன் பண்ணும் அட்டூழியங்களுக்கு, அங்கே ராமன் வந்தால் தானே முடிவு ஏற்படும் என ஒரு மக்கள் நன்மைக்காக  ஒரு அரசியாக யோசித்தாள்..... ராமன் அங்கு வந்தால் போர் புரிய நேரிடும். வஞ்சகர்களோடு போடும் போரில் அவனுக்கு ஆபத்தும் நேரலாம். ஒரு மாதம் தான் உயிர் தரிப்பேன் என்ற கெடு முடிந்தால் தான் இறக்க நேரிடலாம். ராவணன் பலாத்காரம் பண்ண முயன்றாலும் கற்புக்காக உயிர் விட நேரிடலாம். தப்பிக்க வழி கிடைத்தும் அங்கேயே இருந்தாள் இரும்பு இதயத்தோடு, உறைந்த உள்ளத்தோடு.... ஒரு அரசிக்கு உரிய கடமையாலும் கணவன் மீது கொண்ட நம்பிக்கையாலும். கோழையா அவள்? இல்லை...... அவள் வீர மங்கை!

பலரும் சொல்கிறார்கள் ராமன் அவளைக்காட்டுக்கு அனுப்பி விட்டான். அவள் வாழ்நாளெல்லாம் துயரம் தவிர வேறு இல்லை என்று அளப்பார்கள்.

ராமனுக்காகட்டும் சீதைக்காகட்டும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விட அவர்களின் அரசு கடமை தான் முக்கியம். இதில் அவர்கள் இருவருமே மிகத்தெளிவாக இருந்தார்கள். வண்ணான் ஒருவன் குறை சொன்னான் என்பதற்காக ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பினான் என்பதே குற்றச்சாட்டு. ஆனால் ராமன் ஒரு அரசனாக வேறு என்ன செய்திருக்க முடியும்?

"நீ சொல்வதை சொல்லு, நான் கண்டுகொள்ளப்போவதில்லை" என்று நாம் சொல்லலாம். நாடாளும் மன்னன் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் வதந்தி உண்மை என்றே பேசுவார்கள்.

வண்ணானை பிடித்து சிறையில் போடலாமா? இல்லை நாவை அறுக்கலாமா? இல்லை தலையையே வாங்கி விடலாமா? அப்படிப்பண்ணினால் வதந்தி உண்மையாகும், ராமனும் கொடுங்கோலன் என்று தூற்றப்படுவான்.

சரி, பரதனுக்கு ஆட்சியை தந்து விட்டு சீதையோடு காட்டுக்கு பொய் விடலாமா? அப்படியானால், உண்மை வெளிவந்ததால் அவமானப்பட்டு அரசன் ஆட்சி துறந்தான் என்று ஆகி, வதந்தி உண்மையாகும். நல்ல அரசனாக பெயர் எடுத்தாலும் சீதை மேல் கற்பிக்கப்பட்ட களங்கம் உண்மையானது போல தான் ஆகும்

மீதமுள்ள ஒரு வழி என்ன?

சீதையை காட்டுக்கு அனுப்புவது தான். சீதையும் ஒன்றும் அழுது வடிந்து கொண்டு செல்லவில்லை. தன்னிச்சையாக ராமன் எடுத்த ஆணாதிக்க முடிவும் அல்ல. தன்னிச்சையாக இந்த முடிவை ஒருவேளை யாராவது எடுத்திருக்க முடியும் என்றாள் அது சீதையும் முடிவாக தன் இருந்திருக்க முடியும். (என்னை சந்தேகப்பட்ட நாட்டில் இனி எனக்கு வேலை இல்லை, நீர் வேண்டுமானால் அரசராக கடமைக்காக இரும். நான் வனம் போகிறேன்.... என்று அவளே சொல்லி இருப்பாள்......)

அவர்கள் சொன்னது என்ன? அப்பா, உனக்கு ராணி மீது சந்தேகம் வந்து விட்டதா, அவள் இந்த நாட்டில் இனி இருக்க மாட்டாள். கடமைக்காக ராமன் இருப்பான் ஆட்சி செய்ய. கணவன் என்ற கடமையை விட காவலன் என்ற கடமை பெரிது. என்னை சந்தேகப்பட்ட மக்களுக்கு நானும் இனி ராணியாக இருக்க விரும்பவில்லை, இனி இந்த இடத்தில எனக்கு வேலை இல்லை என்று நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாக தான் சீதை காட்டுக்கு போயிருப்பாள்.

ராமனை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்? அவன் வாழ்க்கையில் சுகம் என்று எதையாவது அனுபவித்தானா? மொத்தம் பன்னிரண்டு ஆண்டுகள் தான் மனைவியோடு அதுவும் கலியாணம் ஆன புதிதில் இருந்தான். பின் பிதாவின் சொல்லைக்காக்க காட்டுக்கு போனான். அங்கும் மனைவியை ஒருத்தன் அபஹரித்தான். யுத்தம் வந்தது. உயிரைப்பணயம் வைத்து போராடி மீட்ட மனைவியை நாட்டுக்கு வந்தவுடன் வேறு வழி இல்லாமல் காட்டுக்கு அனுப்பினான். அவன் இதயம் எவ்வளவு நொறுங்கிப்போயிருக்கும்? அத்தனையையும் தாங்கி, கடமை வீரனாக நாட்டுக்கு வாழ்ந்தான்.

அவனைப்பற்றியோ, சீதாதேவியைப்பற்றியோ அவதூறு பேச நமக்கு யோக்யதை இல்லை.

தியாகிகள் அவர்கள். உலக நன்மைக்காக தங்கள் வாழ்வை தெரிந்தே தொலைத்தவர்கள். எந்த நிலையிலும் பிரஜைகலையே முன்னிறுத்தி, தங்கள் சுகங்களை உறவுகளை மறந்தவர்கள்.

ஒன்றை நினைவில் கொள்க: எந்த நேரத்திலும் ராமன் தன்னை சந்தேகப்பட்டுவிட்டதாக சீதை எண்ணவில்லை. கணவன் - மனைவி என்ற முறையில் ராமனும் சீதையை என்றுமே சந்தேகப்பட்டதில்லை. அவர்களுக்குள் நம்பிக்கை இருக்க வேண்டிய அளவுக்கு அதிகமாகவே இருந்தது.

அரசன் என்ற முறையில், கணவன் என்ற பொறுப்பையும் பின்னுக்கு தள்ளி ராமன் இதயத்தை இரும்பாக்கிக்கொண்டு கடமைக்காக காடு போக சொன்னான் என்றாள் அவன் கடமை இது என உணர்ந்து இவளும் தன மனதை கல்லாக்கிக்கொண்டு அரசனான அவன் கடமைக்கு அரசியாக (பிரஜையாக அல்ல, அரசியாக) ஒத்துழைத்தாள். அவள் சீரிய மனைவி. அதோடு நிகரில்லா அரசி. கற்பின் திண்மை உடைய வீர மங்கை. துன்பப்பட்டு அழுத கோழை அல்ல. எந்த நேரத்திலும் இரும்பு இதயத்தோடு நிமிர்ந்து நடந்த பெண்சிங்கம்.

நான் பெண்ணாக இருந்தால் நிச்சயம் சீதையைப்போல இருக்க விழைவேன். கணவனை பின்தொடர்வதில் மட்டும் அல்ல, அவள் கற்பில், அவள் திண்மையில், அவள் கடமை உணர்ச்சியில், "காதலன் ஒருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவுக்கும் கை கொடுத்து" என்ற படி கணவனின் கடமைக்கு ஒத்துழைக்க நம்பிக்கையோடு எந்த அளவுக்கும் ஏகியது, எந்த நிலையலும் உயிரே போகும் என்றாலும் பெண் சிங்கம் போல நிமிர்ந்து நடந்த வீரம்.... இத்தனையிலும் சீதை ஒரு உதாரண பெண்மணி....... வீரமங்கை......நிச்சயமாக..
.....
Best Regards,
Bhuvaneshwar Dharmalingam
www.bhuvaneshwar.com
+++++++++++++++++++++++++++++++++++++++++++

10
நம்புங்கள்; வரைபடம்தான் இது
வரைந்தவரின் பெயர் தெரியவில்லை
அனுப்பியவர்: S. சபரி நாராயணன், சென்னை



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
11

சிரிப்பதற்கு மட்டுமே!
ஆக்கம்: ஜி.ஆனந்தமுருகன்



1) செய்... அல்லது செத்துமடி...  ---- நேதாஜி..
   படி.. அல்லது பன்னி மேய்...  --- எங்க ....பிதாஜி!


2)
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது ?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில
இருந்தேன்

3)
மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி:  நான் ரொம்ப அழகு... இது என்ன காலம் ? (Tense)
கணவன்:  அது ஒரு இறந்த காலம்!

4)
நாட்டாமை: என்றா... பசுபதி...எக்ஸாம்க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற ?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை:  என்ற தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா.....!

5)
லவ் லட்டருக்கும் , எக்ஸாம்க்கும் என்ன வித்தியாசம் ?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்!


6) கணவன்: காலெண்டர்ல என்னப் பாக்குற ?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்கவிழுந்தது ?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...


7)
நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்...அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து

அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்கமுயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர்
படகிலிருந்து குதித்துநீந்தி சென்று படிக்கிறார்...
இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.

8)
நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால்
பன்ச்டயலாக்எப்படி இருக்கும் ?

* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கிளாத்தான்
வரும்

9)
வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.( *Stages)
1. *படிப்பு *
2. *விளையாட்டு *
3. *பொழுது போக்கு *
4. *காதல் *
5.
6.
7. *
ஹலோ... என்ன தேடுறீங்க ? *காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...!
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

164 comments:

  1. எதையும் யாரிடமும் திணித்தால் அந்தப்பொருளின் மதிப்பு போய்விடும். அவரவர்களே போராடிப் பெறும்போதுதான் அவர்கள் அந்த மதிப்பை உணர்வார்கள்.

    ஆக்கங்கள் அனைத்தும் நிறைவைத் தந்தன.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. present sir

    ஆக்கங்கள் அனைத்தும் நிறைவைத் தந்தன.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கம்

    உள்ளேன் ஐயா

    ஆக்கங்கள் அனைத்தும் தந்தவர்களுக்கு நன்றி...

    ReplyDelete
  4. உமாஜி லேட்டா வந்தாலும் லேடெஸ்டா வந்து இருக்கீங்க!

    நமது மரபில் இறைவனுக்கு உருவம் கொடுத்ததில் என்ன ஒரு செள‌கரியம் பாருங்கள். நையாண்டியெல்லாம் இறைவனைப் பண்ணலாம்.அவர் கோபித்துக் கொள்ளவே மாட்டார்.

    அதுசரி உமாஜி!அன்னை பார்வதிதேவியும் ஷிவ்ஜியும் தனித்தனியாக இருக்கிறார்களோ? "என்ன இந்தப் பக்கம்?" என்ற கேள்வியும், "சரி போய் வா"
    என்ற விடையளிப்பும் அப்படித்தான் சொல்கிறது.

    ஆமாம் பார்வதி அம்மை பின்னால் கூறுவதுபோல அப்பன் இருப்பது கைலாயம், அம்மையோ ஸ்ரீபுரம்.

    இல்லை என்றாலும், உண்டு என்றாலும் அவனுக்குக் கவலையில்லை.

    நல்ல ஆக்கம் தந்த உமாஜிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை
    கையிலை நாதனக்கு காட்சியும் தேவையில்லை.

    பசியை காட்ட காலியான வயிரை அறுத்தா காட்ட முடியும்.. உணர்வை விட வேறு ஏது?.உணர்வுகளை உணரத்தெரிந்தவன் உயிர் உள்ளவன்.உனர்வுதான் ஒருவரைகாட்டும்.
    மரனத்தின் கடைசி நொடியில் மகேசனிடம் மன்னிப்பு கேட்காத உயிர் ஏதும் உள்ளதா?

    தமாஷான உரையாடலில் தன் கருத்தை கதையாக்கிய உமாவுக்கு பாராட்டுக்கள்.தெய்வம் இருப்பது உன்மை, என்னிடம் கயிலை நாதனாகவும் உங்களிடம் அல்லாவாகவும்
    தேமொழியிடம் யேசுவாகவும் அய்யர் அவர்களிடம் பாடலாகவும் கிருஷ்னன் சாரிடம் தொண்டாகவும் ஏதோ ஒரு ரூபத்தில் அவன் இருப்பது உன்மை.

    ReplyDelete
  6. கடவுள் வந்துவிட்டார். இது மைனர் சொல்வது.

    கமகம பாடல்களை கதம்பமாக கொடுத்து மெயின் பிக்சருக்கு ஏக எதிர்பார்ப்பு தந்துவிடீர்கள்.

    ReplyDelete
  7. சபரி அனுப்பிய படம் வரைந்தவர் -- விகடன் ஓவியர் இளையராஜா.
    புகைப்படம் போல மிகவும் அருமையாக வரைவார்.
    அவரைப் பற்றிய சில சுட்டிகள் கீழே, இறுதியாக உள்ளது அவருடைய பிக்காசா படங்கள் பக்கம்

    நன்றி சபரி, நானும் அவரது ஓவியங்களின் ரசிகை, முன்பு ஒருமுறை பாடம் சொல்லித்தரும் அம்மாவின் முகத்தை மட்டும் தேர்ந்தெடுத்து என் வகுப்பறை ப்ரோபைலில் வைத்திருந்திருந்தேன். இவர் நம் காலத்தில் உள்ள ரவிவர்மா.

    http://geethappriyan.blogspot.com/2011/04/blog-post_29.html
    http://www.vikatan.com/article.php?page=2&mid=1&sid=134&aid=4609&type=all
    https://picasaweb.google.com/artistilayaraja/IndianGirlsWomens#

    ReplyDelete
  8. வேண்டுகோள்:

    உங்கள் மீது உள்ள நம்பிக்கையால் பின்னூட்டப்பெட்டி திறந்து வைக்கப்பெற்றுள்ளது. நீங்கள் இடும் பின்னூட்டம் அடுத்த நொடியில் பதிவிற்கு வந்து விடும்.

    ஆகவே யாரும், பதிவிற்கும், வகுப்பறைக்கும் சம்பந்தமில்லாத செய்திகளை (அது எதுவாக இருந்தாலும்) பின்னூட்டத்தில் எழுத வேண்டாம்.

    எழுதினால் என்ன ஆகும்?

    அப்படி எழுதப் பெற்ற பின்னூட்டங்கள் நீக்கப் படும்! எழுதியவரின் பெயர் மட்டும் இருக்கும். செய்தி இருக்காது. நீக்கியமைக்காக பிறகு வருத்தப்படுவது அர்த்தமற்றதாகி விடும். அனைவரும் அதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்!

    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  9. மைனர்வாளின் தலைவலி குணமானது பற்றி மகிழ்ச்சி.எப்படியோ ஒரு 12 மணிநேரம் இறைச் சிந்தனையில் கழித்துள்ளீர்கள்.இந்தத் தேடல் ஒரு ஆத்திகனுக்குக் கூட இருப்பதில்லை.உமாஜி ஆக்கத்தில் தான் காட்சி அளிக்காததற்கு ஷிவ்ஜி பல காரணங்களைக் கூறியுள்ளாரே!கவனித்தீர்களா?
    மைனர்வாளின் ஆக்கம் படித்தவுடன், அவருக்கு மட்டுமாவது முதலில் உணார்த்து என்று ஆண்டவனை வேண்டினேன். சரியென்று சொல்லியிருக்கிறார்.

    ReplyDelete
  10. வேண்டுகோள்:

    உங்கள் மீது உள்ள நம்பிக்கையால் பின்னூட்டப்பெட்டி திறந்து வைக்கப்பெற்றுள்ளது. நீங்கள் இடும் பின்னூட்டம் அடுத்த நொடியில் பதிவிற்கு வந்து விடும்.

    ஆகவே யாரும், பதிவிற்கும், வகுப்பறைக்கும் சம்பந்தமில்லாத செய்திகளை (அது எதுவாக இருந்தாலும்) பின்னூட்டத்தில் எழுத வேண்டாம்.

    எழுதினால் என்ன ஆகும்?

    அப்படி எழுதப் பெற்ற பின்னூட்டங்கள் நீக்கப் படும்! எழுதியவரின் பெயர் மட்டும் இருக்கும். செய்தி இருக்காது. நீக்கியமைக்காக பிறகு வருத்தப்படுவது அர்த்தமற்றதாகி விடும். அனைவரும் அதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்!

    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  11. பல வெள்ளிக்கிழமை சேர்ந்து வந்ததுபோல் உள்ளது இன்றைய வாரமலர்.

    நோக்குகிற இடமெல்லாம்
    நீக்கமற நிறைந்திருக்கும்
    ஆற்றலின் திரு உருவாம் சக்தி-அதை
    உயிராய் உணர்ந்து
    குறையின்றி நிறைந்திருக்கும்
    திருமதி பார்வதியின் பக்தி

    அவரை தொடர்ந்து நாமும் உணர்ந்து நலம் பெறுவோம்.

    ReplyDelete
  12. தேமொழி அந்த ஐடியாவையும் கால்குலேஷனையும் கொஞ்சம் தெளிவாக்கியிருந்திருந்தால். புருனை மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளில் 4d விளையாட நன்றாக இருந்திருக்கும்
    ஆலாசியம், ஆனந்த், நான் எல்லோரும் உங்கள் புண்ணியத்தில் வாராவாரம் ஒரு தொகையை சுருட்டி இருப்போம்.

    ReplyDelete
  13. பார்வதி அம்மையின் சக்தியைப் படித்தவுடன் சக்தி உடலிலும் உள்ளத்திலும் ஏறியது.சாக்தத்தை முழுமையாகத் தந்த பார்வதி அம்மைக்குக்குப் பாராட்டு.

    ஐயா வெளியிட்டுள்ள படத்தில் காளி அன்னை சிவனின் மீது ஆடுவதாகக் காண்கிறதே!அதற்கான விளக்கம் என்ன தெரியுமா?

    கற்பை சோதிக்க வந்த மூவரையும் குழந்தையாக்கிய ரிஷிபத்தினி சக்தியின் அன்னை வடிவம்தானே?

    சாதாரணமான ஏழை மீனவக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மாதா அமிர்தானந்த மயி இன்று ஆற்றும் பணிகள் சக்தியின் நவீனகால‌ வெளிப்பாடு

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. 16.
    மூவா வண்ணர் முளை வெண் பிறையர்
    முறுவல் செய்து இங்கே
    பூவார் கொன்றை புனைந்து வந்தார்
    பொக்கம் பல பேசிப்
    போவார் போல மால் செய்து உள்ளம்
    பிக்க பிரி நுலர்
    தேவார் சோலைக் கான்ஊர்மேய
    தேவ தேவரே
    (சம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை)

    ReplyDelete
  16. உண்மையாகவே மோஹன் ஸ்ரீவத்ஸவாவை உளமாறப் பாராட்டத்தான் வேண்டும். தன் அறிவின் திறத்தையும், இந்தியனின் தார்மீக குணத்தையும்
    ஒரு சேர வெளிப்படுத்தியுள்ளார்.குறுக்குவழியில் பணம் பண்ண நினைக்கும் உலகத்தில் இப்படிப்பட்ட அம்மான்ஜிகளால்தான் 'உண்டாலம்ம இவ்வுலகம்' என்று சொல்லத் தோன்றுகிறது.வகுப்பறை விக்கிபீடியா தேமொழிக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. அறிவியல் ஆதரவாளர் மைனர்வளுக்கு ஒரு ஜே! நமது மரபு அறிவியலுக்கு என்றுமே எதிரி கிடயாது.பல அறிவியல் உண்மைகளுக்கான ஆரம்பத் தேடல் நமது முதல் நூல்களில் உள்ளன.

    எப்படி ஆன்மீகத்தில் போலிகளோ அதுபோலவே அறிவியலிலும் கல்லா கட்டும் அறிவியலாளர்கள் உண்டு.

    அறிவியல் கொடுத்தது அணு பற்றிய அறிவு. அத‌னை அழிவுக்குப் பயன்படுத்திய மனிதனின் மனதில் புகுந்தது என்னவோ அசுரத்தனம்.

    ஆன்மீகம் விலக்கிய அறிவியல் அழிவுக்கே வழிகோலும்.வெடிமருந்து கண்ட நோபல் அல்லவா இலக்கியத்திற்கும் அமைதிக்கும் அறிவியலுடன் சேர்த்துப் பரிசு கொடுக்கிறார்.

    ReplyDelete
  18. 1.
    ஆஹா.. ரொம்ப நாட்களுக்குப்பிறகு சகோ உமா அவர்களின் ஆக்கம்..

    அடிப்படை கொள்கை தெரியாதவரையில் அவர்கள் எதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள்..
    அதைவிட கொடுமை அடிப்படை கொள்கைகளை தவறாக புரிந்து கொண்டமையால் தான்..

    2.
    கடவுளை பற்றிய சிந்தனையில் இருந்தீர்களே... அந்த சிந்தனையை கடவுள் என்று சொல்லாமா...
    உரித்து பார்த்தால் வெங்காயத்தில் எதுவும் இல்லை என்று சொல்லும் தாடிக்காரர்களே.. உரித்தால் அதற்குள் இன்னொரு தோல் இருக்கிறது என்பதை தாங்கள் உணரவில்லை...
    சுவைத்து உண்ண வேண்டிய பொருளை சுவைத்து இன்புறாமல் சுவையை தேடினால் என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்..

    3.
    குழந்தைகளை குப்பைத் தொட்டியிலும் கழிவறைகளிலும் விட்டுச் செல்லும் தாய்(குலங்கள்) உங்கள் எண்ணத்தில் வரவில்லை என்று கருதுகிறோம்.. ஆறையும் முடித்து விட்டு வாருங்கள் அப்புறம் அய்யரின் கருத்தை தருகிறோம்.

    4.
    தொடர்ந்து நிலவும் பங்கு சந்தை
    EURO Crash
    பெருமூச்சு விட வைக்கும் USD
    வெள்ளி சரிவு
    தடுமாறும் தங்கம் என இந்நிலையில்
    சு(ர)ண்டலும் என்றதும்.
    கையை (தலையில்)எங்கே வைப்பது என யோசிக்க வைக்கின்றது

    5.
    அந்த கோயிலுக்கு செல்லும்
    அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில் ஜெயிப்பதில்லையாமே ... (அது அப்படியா?)

    படித்ததில் பிடித்தது..
    ஸ்டெல்லா சுசீலா ஆன கதை
    சுமார் ஒரு ஆண்டிற்கு முன்னர் வெளியானது.. (இங்கே சொன்னதால் தனிமின்னஞ்சலில் அனுப்பவில்லை)

    6.
    ரகசியங்களை சொல்லும்
    ரம்மியமே... உங்களிடம் ஒரே ஒரு கேள்வி உயிர் என்றால் என்ன?
    ஆம்
    ஏன் எப்படி என்ற கேள்விகளில்
    ஏன் என்ற கேள்விக்கு அறிவியல் பதில் சொல்லும்
    எப்படி என்ற கேள்விக்கு விஞ்ஞானம் பதில் சொல்லாது மெய்ஞானமே பதில் சொல்லும்..
    காத்திருங்கள்... கதவுகள் திறந்தே இருக்கிறது.. உங்களை இருகரம் நீட்டி வரவேற்றபடியே..

    7,8.
    தனுசுவின் கவிதை வழக்கம் போல் என்றாலும் அய்யரின் ரசனையில் ருசிக்கவில்லை... வருத்தமில்லை, அடுத்த நல்வரவை எதிர்நோக்கி

    9.
    ராம காவியத்தில் அய்யருக்கு வேறு கருத்து உண்டு.. மக்களை குறிப்பாக இளைய சமூகத்தினை நல்வழிப்படுத்தாத போலித்தனமான எந்த கதைகளையும் பற்றி கருத்துச் சொல்வது மானமிகு மனிதர்களுக்கு சிறப்பல்ல என்பதினால் அமைதி கொள்கிறோம்.

    10.
    வாங்க சபரியாரே..
    வாரந்தோறும் உம்(மை பார்க்காமல்) பதிவை பற்றி சிரிக்காமல் இருக்க வைக்கலாமோ..
    அந்த பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறதா?

    11.
    ஓவியமா காவியமா என சிந்திக்க வைத்தது
    மேல் விவரம் தந்த இளைய ராஜா பற்றிய தகவலுக்கு தோழி தேமொழிக்கு நன்றிகள்..

    ReplyDelete
  19. //////Blogger அய்யர் said...
    3.
    குழந்தைகளை குப்பைத் தொட்டியிலும் கழிவறைகளிலும் விட்டுச் செல்லும் தாய்(குலங்கள்) உங்கள் எண்ணத்தில் வரவில்லை என்று கருதுகிறோம்.. ஆறையும் முடித்து விட்டு வாருங்கள் அப்புறம் அய்யரின் கருத்தை தருகிறோம்.
    7,8.
    தனுசுவின் கவிதை வழக்கம் போல் என்றாலும் அய்யரின் ரசனையில் ருசிக்கவில்லை... வருத்தமில்லை, அடுத்த நல்வரவை எதிர்நோக்கி
    9.
    ராம காவியத்தில் அய்யருக்கு வேறு கருத்து உண்டு.. மக்களை குறிப்பாக இளைய சமூகத்தினை நல்வழிப்படுத்தாத போலித்தனமான எந்த கதைகளையும் பற்றி கருத்துச் சொல்வது மானமிகு மனிதர்களுக்கு சிறப்பல்ல என்பதினால் அமைதி கொள்கிறோம்.////////

    வழக்கத்திற்கு மாறாக இப்போதுதான் - அதுவும் முதன் முறையாக - முறையோடு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் விசுவநாதன்!
    அதற்கு பழநிஅப்பனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்! Thanks my dear Palani Appa!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    எழுதியவற்றில் மூன்றில் மட்டும் நெருடல் உள்ளது.

    3. நீங்கள் சுட்டிக்காட்டும் தாய்கள் லட்சத்தில் ஒருத்தி இருப்பாள். அவர்கள் விதிவிலக்கானவர்கள். விதிவிலக்குகளை எல்லாம் உதாரணப் படுத்த முடியாது. உங்களைப் பெற்ற தாயும், என்னைப் பெற்ற தாயும் நல்ல முறையில் நம்மை வளர்த்து ஆளாக்கினார்களே என்ற நன்றி உணர்வோடு தாய்க்குலத்தை மதியுங்கள். குப்பைத்தொட்டிகளிலும், கழிவறைகளிலும் சிந்தனையைச் செலுத்திக்கொண்டிருக்காதீர்கள்!

    எந்த ஆறையும் முடித்துவிட்டு அவர் வரவேண்டும்? எதற்காக வரவேண்டும்? அவர் கேட்டால் மட்டும் உங்கள் கருத்தைச் சொன்னால் போதும். சக மாணவர்கள், மற்றும் சக மாணவிகள் அனைவரும் நம்மை விட மேலானவர்கள், அவர்களுக்கு உரிய மரியாதையைத் தரவேண்டும் என்ற எண்ணம் இங்கே வரும் அனைவருக்கும் வேண்டும். அதை மனதில் கொள்ளுங்கள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    7,8, எல்லோருக்கும் ருசிக்கும்படியாக கவிதை எழுதுவது கடினம். எல்லோர் ரசனையிலும் ருசிக்கும்படியாக நீங்கள் ஒரு கவிதை எழுதி அனுப்புங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    9. ராமகாவியத்தில் உங்களுக்கு உள்ள கருத்து வேறுபாட்டைக் கட்டுரையாக எழுதி அனுப்புங்கள். அதைவிடுத்து போலித்தனமான கதை, மானமிகு மனிதர்கள் என்ற வார்த்தைப் பிரயோகங்களால், எழுதிய நல்ல உள்ளங்களைப் புண்படுத்தாதீர்கள். அடுத்தவரைப் புண்படுத்திவிட்டு நீங்கள் எப்படி அமைதி கொள்ள முடியும்?

    நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்!
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  20. //////Blogger அய்யர் said...
    16.
    மூவா வண்ணர் முளை வெண் பிறையர் முறுவல் செய்து இங்கே
    பூவார் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பல பேசிப்
    போவார் போல மால் செய்து உள்ளம் பிக்க பிரி நுலர்
    தேவார் சோலைக் கான்ஊர்மேய தேவ தேவரே
    (சம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை)/////

    அஞ்சரைப் பெட்டியில் அதற்குரிய சாமான்கள்தான் இருக்க வேண்டும்
    பணப் பெட்டியில் (Cash Box) என்ன இருக்க வேண்டுமோ அதுதான் இருக்க வேண்டும்!
    அதுபோல பின்னூட்டப் பெட்டியில் (Comment Box) என்ன இருக்க வேண்டுமோ அதுதான் இருக்க வேண்டும்!
    தேவாரப் பாடல்களை இங்கே எதற்குக் கொண்டு வருகிறீர்கள்? உங்களுக்கு தேவாரப் பாடல்களின் மீது ஆர்வம் இருந்தால் எழுதி, பதிவிற்கு அனுப்புங்கள். இங்கே வேண்டாம்!

    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  21. என் பதிவிற்கு மாணவர் மலரில் இடம் கொடுத்த வாத்தியாருக்கு நன்றி.
    படித்து ரசித்தவர்களுக்கும் அதைப் பற்றி கருத்து சொல்ல நேரம் எடுத்துக் கொண்டவர்களுக்கும் நன்றி.

    தலைப்பில் உள்ள "படித்ததில் பிடித்தது"
    ......பிடித்தது...மிகவும் பிடித்தது.
    ///அடிப்படை கொள்கை தெரியாதவரையில் அவர்கள் எதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள்..
    அதைவிட கொடுமை அடிப்படை கொள்கைகளை தவறாக புரிந்து கொண்டமையால்தான்..///
    என்று அய்யர் ஐயா பின்னூட்டத்தில் சொன்னதை விளக்கும் கதை போலவும் இருக்கிறது

    சுரண்டிப் பிழைக்கத் தெரியாத மனிதரின் கதை என்ற தலைப்புக்கு வடிவேலுவின் படத்தை தேர்வு செய்ததன் மூலம், வடிவேலுவைப் பற்றி ஐயா நினைக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. :)))))

    மைனரின் படைப்பின் ரகசியம் ஆக்கத்திற்கு, சிதம்பர ரகசியம் போல "சீக்ரெட் ஆப் தி யுனிவெர்ஸ்" என்று ஒரு படம் தேர்ந்தெடுத்து ஐயா இன்னமும் என்னை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள். அந்தப் படம் என்ன ரகசியம் சொல்கிறது என்பதை தெரிந்தவர்களை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  22. முன் குறிப்பு: எனக்கும் தஞ்சை நகருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாவிட்டாலும் அவர்கள் சார்பாக என் வேண்டுகோள். தினசரி வாழ்க்கையில் KMRK ஐயா தஞ்சையில் சந்தித்த நல்லவர்களை சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    நெஞ்சை நிறைக்கும் தஞ்சை! என்று தஞ்சை வரலாறு எழுதி தப்பித்துக் கொள்கிறார் KMRK என்பது புரிகிறது. தஞ்சைவாசிகள் கலை வளர்த்தார்கள், கோயில் கட்டினார்கள், பக்தியில் சிறந்தவர்கள், ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் என்று எழுதிக்கொண்டே சென்று சரபோஜி "மைனராக" இருந்த வரை நாம் அனைவரும் வரலாற்றில் படித்தவற்றையே சொல்லி காதில் பூ சுற்றிவிடீர்கள் KMRK ஐயா. கோபாலன் ஐயாவைத் தவிர உங்கள் 38 ஆண்டு தஞ்சை வாழ்க்கை யாரையும், "என்ன இருந்தாலும் இவர்களைப்போல உண்டா?" என்று நினைக்க வைத்த ...குறிப்பிட்ட தனி வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள் உங்கள் நினைவிற்கு வரவில்லையே! ராங்கியம் செட்டியார் பற்றியாவது விரிவாக சொல்லியிருக்கலாமே.

    ///இங்கே உள்ள‌ அத்த‌னை கோவில்களுக்கும் புதுக்கோட்டைப் பகுதியில் இருந்துதான் கற்கள் கடத்தப்பட்டு இருக்க வேண்டும்.///

    என்னது தஞ்சைவாசிகள் கடத்தல்காரர்களா? புதுக்கோட்டை பகுதி அவர்கள் வசம் இருந்ததில்லையா? என்ன போங்க... இப்படி தன் நாட்டுக்குள்ளே இருப்பதை உபயோகிப்பதையே கடத்தல் அப்படின்னு பேர் வாங்கும்படி ஆச்சே. இமயமலையில் இருந்து செங்குட்டுவன் கொண்டுவந்தால் வீரம் என்று பெயர்... சொந்தக் கல்லை உபயோகித்தால் கடத்தல்...ஹூம் ...

    ReplyDelete
  23. ///வாழ்கையின் வாழ்வாதாரம்
    வாரியிறைத்த வள்ளுவனும்
    வாழ்கையில் தாரம் வந்த பின்னே
    "பொய்மையும் வாய்மையிடத்த" என்ற
    வாக்கை எழுதியிருப்பானோ?////

    ஹி..ஹி..ஹீ.....

    (நான் வாசுகியைப் பற்றிப் படித்தது இதுவரை அப்படி எந்த நிகழ்ச்சியையும் நினைவுக்கு கொண்டு வரவில்லை).

    ///ம்.. என்றால் எழுகிறேன்.
    ஏன்... என்றால் அமர்கிறேன்.///

    தனுசு, நம்ப மறுக்கிறேன்...இந்தக் கவிதையை எழுதி அதை வார மலருக்கு அனுப்ப நீங்கள் உங்கள் வீட்டில் அனுமதி வாங்கியதாகத் தெரியவில்லையே
    _____

    சென்றவார மாணவர் மலரில் வெளியான என் படத்தைக் கண்டதும் டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா? என்ற பாணியில் ஒரு கவிதை எழுதியது அந்தப் படத்திற்கு ஒரு கெளரவத்தைத் தருகிறது, நன்றி தனுசு ....

    ///டிஜிட்டல் செதுக்கிய சிலுக்கா?
    நாசா நட்ட லுக்கா?
    ஸ்பேசில் சிரிக்கும் சிலையா?///

    என அனைத்து வரிகளுமே அருமை..இயந்திரன் படத்திற்கு வைரமுத்துவின் பாடலைக் கேட்டபின்பு அந்தப் பாடலின் அறிவியியல் தகவல்களைப் புகழ்பவர்கள் உங்களது இந்தப் பாடலைப் படித்தால் என்ன சொல்வார்களோ? ஏதாவது ஒரு புதிய தமிழ்படத்தில் ரீமிக்ஸ் இசையில் உதயநிதி, தனுசு, விஜய் போன்றவர்கள், டிஸ்னியின் எப்காட் சென்ட்டர் பின்னணியில் ஹன்சிகா பின்னே பாடிக்கொண்டே ஓட.. ஆட.. இந்தப் பாடலைத் தேர்ந்தெடுக்க பரிந்துரை செய்கிறேன்.

    ReplyDelete
  24. உமாவின் கற்பனையே கற்பனை. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மட்டும் கவனித்து ரசித்தேன்.
    கதை வசனம் எழுதுவதில் உமாவை யாரும் மிஞ்ச முடியாது போலிருக்கிறது.

    (கூடவே... பார்வதி சிவனிடம் போய் கடவுள் இருப்பதை உணர்த்த சொல்லி ஏன் விண்ணப்பம் செய்ய வேண்டும், அவரே கடவுள் இல்லையா, அவரே உணர்த்தினால் என்ன? என்று அபத்தமாக நினைக்க ஆரம்பித்த பொழுது பார்வதியே வந்து பதில் சொன்னார். ஹி. ஹி. ஹீ..... அந்த அளவுக்கு கடவுள் தரிசனம் பெற நான் இன்னமும் தகுதி பெறவில்லை. நம்ம பெங்களூரு பார்வதி வந்து கைலாயப் பார்வதியைப் பற்றி சொன்னார்.)
    ____________
    மைனரின் இரண்டு ஆக்கங்களும் பிடித்திருந்தது. சமீப கால இறைவிவாதத்தின் மறுபக்கத்தை வாசகர் முன் கொண்டுவருவதில் அவர் பங்கு இன்றி அமையாதது. கோடை ஆரம்பமாகிவிட்டதே மைனர், கடற்கரை பக்கம் போய் இரண்டு கவிதையும் எழுதுங்களேன். சாமிப் பாட்டெல்லாம் விட்டு விட்டு ஜென்சி பாடல்களைக் கேளுங்கள்
    ____________
    பார்வதியின் படைப்பு வழக்கம் போல தகவல் நிறைந்தது. வழக்கம் போல நானும் எத்தனை நூல்களை பார்வதி கரைத்துக் குடித்திருக்கிறார் என்று வியந்தேன்.
    ____________
    புவனேஷ்வர், ராமாயணக் கதையை உங்கள் பாணியில் விளக்கியதற்கு நன்றி. மற்றவர்களும் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்பதற்கு உரிமை உள்ளது என்பதை சொல்லத் தேவையில்லை. அதற்காக அவர்கள் அனைவரும் பெண்ணிய வாதிகள் என்று முடிவு கட்டவும் தேவையில்லை. ராமாயணத்தை பற்றிய பழங்கதை பெருமைகள் பேசுவதை விடுத்து ராமராஜ்ஜியம் வேண்டும் என்று விரும்பிய காந்தி நினைத்ததை செயல் படுதியிருக்கிரோமா என சிந்திப்போம்.
    ____________
    ஆனந்தமுருகனின் நகைச்சுவை தொகுப்பு அருமை, சூப்பர் ஸ்டாருடையதுதான் சூப்பர்

    ReplyDelete
  25. ///thanusu said... தேமொழி அந்த ஐடியாவையும் கால்குலேஷனையும் கொஞ்சம் தெளிவாக்கியிருந்திருந்தால். புருனை மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளில் 4d விளையாட நன்றாக இருந்திருக்கும்///

    தனுசு, http://www.wired.com/magazine/2011/01/ff_lottery/all/1 இந்த இணைய தளத்தில் மோகன் விளக்கம் கொடுத்திருக்கிறார், படித்துப் பாருங்கள்.

    ///தேமொழியிடம் யேசுவாகவும் அய்யர் அவர்களிடம் பாடலாகவும் கிருஷ்னன் சாரிடம் தொண்டாகவும் ஏதோ ஒரு ரூபத்தில் அவன் இருப்பது உன்மை.///

    பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே...
    ஆனந்தமுருகனுக்கு அனந்தராமன் என்று தனுசு பெயர் மாற்றியதுபோல, என்னையும் மதம் மாற்றி தேவாலயத்திற்கு அனுப்பிவைத்து விட்டாரே!!!!
    சீக்கிரமே தனுசு எனக்கு ஒரு கிறிஸ்துவ பெயரை தேர்ந்தெடுத்து சொன்னவுடன் ஞானஸ்நானம் வச்சுக்குவோமா?

    ReplyDelete
  26. என் ஆக்கத்தை வெளியிட்ட வாத்தியார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. படித்துவிட்டுப் பின்னூட்டமிட்ட/இடப்போகும் வகுப்பறை சக மாணவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  27. தஞ்சையை அக்குவேறு ஆனிவேறு என்று அலசி கொடுத்துவிட்டீர்கள் மியுசியத்தில் உள்ள மீன் முள்ளை மட்டும் மறந்துவிட்டீர்கள்.ஆனால் சென்றவாரம் தஞ்சை மக்களின்
    மனங்களையும், குணங்களையும் குறை சொல்லிவிட்டு இந்த வாரம் தஞ்சையின் செய்திகளை உயர்த்தினால் எப்படி அதற்கு இது ஈடாகும்.கணக்கு நேரில்லையே.

    நான் வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து ஒன்பது மாதங்கள் தான் ஆகிறது.

    உங்களின் ஆக்கங்கள் அனைத்தும் நன்று.ஒவ்வொன்றும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை, பல விழயங்களை ஆக்கமாக தந்துள்ளீர்கள். அவை அனைத்தும் என் போன்ரோரிடம் வந்து சேர்ந்துள்ளது, அதற்கு உங்களின் எழுத்து நடை தான் காரணம்.கட்டுரையாளராக நீங்கள் கொடுத்தது அத்தனையும் கல்கண்டு தான்.எந்த கல்கண்டு சுவை அதிகம் என்று கேட்டால் எப்படி சொல்வது, யோசனையே செய்யாமல் பட்டென்று நினைவுக்கு வந்தது பாட்டி(ரயில்-சாபம்-வாழ்த்து),புளியோதரை,யாருக்கும் பொதுவான பசி, பழமொழிகள், இரண்டு வாரம் முன் வந்த காமெடிகள்.

    மீதி இரண்டு ஆக்கங்கள் நீங்கள் வெளியிட்டபின் சொல்கிறேன். புத்தக வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. திருமதி. உமாவின் கற்பனை உரையாடல் அருமை. உண்மையிலேயே மிக நல்ல கற்பனை. அதற்கு தேர்வு செய்யப்பட்ட படமும் அழகு. பாம்பு நெக்லஸ் மாட்டும் உமாதேவியாரை நோக்கும் சிவனார் பார்வை ஒரு கோடி பெறும்.
    =================================================================
    பெருமதிப்பிற்குரிய மைனர் அவர்களின் இரு கட்டுரைகளும் படிக்க சுகம். குறிப்பாக இரண்டாவது கட்டுரை, மைனர் அவர்களின் ஆழ்ந்து படித்தறியும் திறனுக்குச் சான்றாக மிளிர்ந்தது. இரண்டாவது கட்டுரையின் எழுத்தாக்கம் மிக மிக அருமை.
    =======================================================================
    திருமதி.தேமொழி அவர்களின் ஆக்கம் எப்போதும் போல் அருமையாக இருந்தது. வகுப்பறை விக்கிபீடியா என்று திரு. கே.எம்.ஆர். அவர்கள் சொல்லிவிட்டார். அதற்கு மேல் வேறு வார்த்தைகள் தோன்றவில்லை.
    =======================================================================
    திரு. தனுசு அவர்களின் இரு கவிதைகளும் நன்றாக இருந்தன. ஆண்பாவம் கவிதைக்கு பாண்டியராஜன் படம் நல்ல தேர்வு (என்ன முழி முழிக்கிறார் பாவம்)
    நீலக்கன்னி கவிதைக்கு அறிவியல் சார்ந்த சொற்தேர்வு அருமை. மதன்கார்க்கியின் சாயல் தெரிகிறது. ஒரு முறைக்கு இரு முறை படித்தேன். மிக அருமை.

    ReplyDelete
  29. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் தனுசு அவர்களே ஆண்பாவம் பொல்லாததுதான். பெண்கள் புரிந்து கொள்ள வேண்டுமே!
    +2 தேர்வு சமயத்தில் ஒரு வெட்டு வெட்டிப் போகும் பெண்ணை நம்பித் தேர்வைக் கோட்டைவிடும் அம்பிகளே, தனுசுவின் கவிதையைப் படியுங்கள்.

    நீலக்கன்னியும் நன்றாக இருந்தாலும், பேசாமல் ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கலாம். நாங்களும் தனுசு ஒரு 'பொயெட்'டும் கூட என்று சொல்லியிருப்போம்ல.ஹி ஹி ஹி....

    ReplyDelete
  30. மைனர் உங்களின் கருத்தை ஆழமாக பதிவு செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    ஏன் ஏன் என்ற கேள்வி எழ எழத்தான் அறிவு விருத்தியாகும்.


    விலக்கப்பட்ட கனியை கடித்ததால் பூலோகத்துக்கு வீசப்பட்ட ஆதாம் ஏவாள் கூட ஏன் கடிக்ககூடாது என்று சொன்னார்கள் என்ற கேள்வி எழுந்ததாலயே கடித்துப்பார்க ஆசைப்பட்டார்கள்.

    விஞ்ஞானிகளும் ஏன் ஏன் என்ற கேள்வியை தங்களுக்குள் கேட்டுக் கொண்டதால் இந்த பிரபஞ்சத்தின் பிரமிக்கதக்க பல தகவல்கள் நமக்கு கிடைத்தன.ஏன் கடவுள் உண்டு என சொல்கிறார்கள் என்று உங்களை நீங்கள் கேட்டுக்கொண்டதாலேயே இன்றைய உங்களின் ஆக்கமூம் உருவாகியுள்ளது..

    ஏன் என்ற கேள்வி எப்போதும் நாம் கேட்டுக்கொண்டே இருப்போம்..

    கணினி மனிதனின் மூளையை விட, ரோபோ மனிதனைவிட ஆயிரம் மடங்கு பலம் வேகம் கொண்டது.அப்படி இருக்க மனிதனை விட கணினியோ ரோபோவோ உயர்ந்தது
    என்று சொல்லிவிட முடியுமா? படைப்பளி என்ற மனிதன் இல்லாமல் கணினியோ ரோபோவோ இல்லை அதன் இயக்கமும் இல்லை.
    நம் வகுப்புக்கு ஒரு சுஜாதா கிடைகிறார் வரவேற்போம்.

    ReplyDelete
  31. புவனேஷ்வரின் ஆக்கம் பார்வதி அம்மையின் ஆக்கத்திற்கு ஒத்திசைவாக சக்தியின் புக்ழ் பாடுகிறது. 'சீதை உன் லட்சியமாக இருக்கட்டும்' என்று கூறிய விவேகானந்தரின் குரல் கட்டுரையில் ஒலிக்கிறது.

    சீதைக்கு இருந்த மன‌ ஆற்றலாலேயே ராவணனை அழித்து இருக்க முடியும்.
    ஆனால் ராமன் செய்ய வேண்டிய செயலைத் தான் செய்யலாகாது என்று அசோக வனத்தின் அத்தனை துன்பங்களையும் பொறுத்துக் கொண்டாளே பிராட்டி!பூமாதேவியின் மகள அல்லவா? அதனால்தான் அத்தனை பொறுமை.
    புவனேஷ்வர் நல்ல ஆற்றலாளர்.மேலும் மேலும் எழுதுங்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  32. என் இரு கவிதையையும் வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  33. ஆனந்த விகடனின்ப்ப‌ நீண்ட நெடுங்கால வாசகியான நான், அதில் வரும் எல்லா ஓவியங்களின் ரசிகையும் கூட. 'சொல்வனம்' பகுதியில் வரும் கவிதைகளை விடவும் அவரது ஓவியம் கண்ணைக் கவரும் ஓவியத்தில் வரையப்படும் பழங்காலத்து வீடுகளின் அமைப்பு, பொருட்கள், முக்கியமாக, ஓவியத்தில் உள்ள பெண்களின் முக உணர்வுகளை அவரது தூரிகை பிரதிபலிக்கும் விதம் என நான் பார்த்து வியந்தவை நிறைய. இந்தப் படத்தில் கூட 'ட்ரான்ஸிஸ்டரில்' பாடல் கேட்கும் பெண்ணின் முகத்தில் தெரியும் உணர்வுகள் அழகு. அருமையான படத்தைப் பார்வைக்குத் தந்த திரு. சபரி அவர்களுக்கு நன்றி.
    ====================================================================
    திரு. ஆனந்தமுருகன் அவர்களின் நகைச்சுவையும் அருமை. அதற்கான படமும் பிடித்திருந்தது.
    =======================================================================
    திரு. புவனேஷ்வரின் கட்டுரை மிக நன்றாக இருந்தது. 'சீதா' என்றால் நேராக என்றொரு பொருள் உண்டு. சுவாமி விவேகானந்தர் சீதாதேவி பற்றிப் புகழ்ந்து எழுதியதைப் படித்திருக்கிறேன். கிட்டத்தட்ட அதேபார்வையில் இருந்தது உங்களின் கட்டுரை. மிக அருமை. நன்றி.

    ReplyDelete
  34. சபரி அனுப்பிய படம் புகைப்படம் என்றே ஏமாந்து போனேன்.ஆனாலும் அந்தப் பெண் கொள்ளை அழகுதான்.ஹும்ம்.. மாமி பக்கத்தில் இருக்காங்கோ. மேல ஏதும் சொன்னா இன்று முழுதும் பட்டினிதான்....ஹிஹிஹி...

    ReplyDelete
  35. புவனேஷ்வரின் வீரமங்கை; பள்ளிக்காலத்தில் வகுப்பிலே தமிழ் வாத்தியார் சீதையின் வீரத்தையும் கணவன் மீது கொண்ட பக்தியையும் விரிவாக எடுத்து வைப்பார்.அந்த நினைவு இன்றைக்கு வந்தது. நன்றி புவனேஷ்வர்.

    ReplyDelete
  36. திரு.கே.எம்.ஆர் அவர்களின் தஞ்சையின் பாஸிடிவ் பக்கங்களை வெளிக்காட்டும் ஆக்கம் நன்றாக இருந்தது. திருமதி உமா அவர்கள் வெகுநாட்களுக்கு முன் கேட்ட பச்சைக் காளி, பவளக் காளியும் சந்தடி சாக்கில் உள்ளே வந்தது அருமை. சுவாமி சதாசிவப் பிரம்மேந்திரர் புற்று மண்ணால் உருவாக்கிய புன்னை நல்லூர் மாரியம்மன், சோழ இளவரசிக்குக் கண்கொடுத்தருளிய மஹாசக்தி. பெரும் வரப்பிரசாதி.

    சரஸ்வதி மஹாலில் இருந்த பழம்பெரும் ஓலைச்சுவடிகள், வெள்ளையரால் கைப்பற்றப்பட்டு, அதில் இருந்த பல குறிப்புகளின் படியே பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன என்று படித்திருக்கிறேன். திரு. என்.எஸ். கிருஷ்ணனின் 'விஞ்ஞானத்த வளர்க்கப் போறன்டி' பாடலில் 'தஞ்சாவூரு ஏட்ட எடுத்து தலகீழாப் பாடம் படிச்சு' என்றொரு வரி வருவது இதன் தாக்கத்தாலேயே.

    திரு. பாலகுமாரன் அவர்களின் 'உடையார்' நாவலில், தஞ்சைக்கோவிலுக்குக் கற்கள் கொண்டுவரப்பட்ட விதம், பெரிய கோபுரம் கட்டப்பட்டமுறை ஆகியவைகளைப்படித்து வியந்திருக்கிறேன். தமிழனின் தலைசிறந்த சிற்பக்கலை நுணுக்கத்துக்கு சிறந்த சான்று தஞ்சைப் பெரிய கோவில்.

    ReplyDelete
  37. சபரி
    அவ்வளவு தத்ருபமான ஓவியம்.
    அழகோஅழகு,
    இன்று அய்யருக்கு பதிலாக நான் பாடலை சுழலவிடுகிறேன்

    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்
    நல்ல அழகியென்பேன்...........

    ReplyDelete
  38. ஆனந்தமுருகனின் தமிழ் நகைச்சுவை அனைத்தும் படித்து மகிழ்ந்தேன்.
    மொழி மாற்ற‌ம் செய்யப்பட்டதா?எனில் நன்றாகவே வந்துள்ளது.

    ஆன்டி வைரஸ் சிங்கிளா வரட்டும். சிங்கிள் டீ வாங்கித்தந்து வழி அனுப்புவோம்.

    பல்லி விழுந்தது சாம்பாரிலா? ஒன்றும் பயனில்லை.

    தூங்கிய ஓட்டுனரும், இலக்கண மனைவியும், புத்திசாலி நாட்டாமையும் அருமை.

    ReplyDelete
  39. திரு.கே.எம்.ஆர் அவர்களின் ஆக்கங்களில் சட்டென்று நினைவுக்கு வருவது, சுவாமிமலையில் அவருக்கு நிகழ்ந்த அற்புதத்தைப் பற்றி எழுதியது. நான் எனது பதிவில், ஆதாரச்சக்கரங்களைப் பற்றி எழுதும்போது, சுவாமிம்லையின் சிறப்புகளைப் படிக்க நேர்ந்தது. அங்குள்ள 'வஜ்ரதீர்த்த' மகிமையைப் படித்ததும் உங்களது ஆக்கம் நினைவு வந்து மீண்டும் படித்தேன்.

    அப்புறம் 'குதிச்சு, குதிச்சு மாவிடிச்சாலும்'. தங்களின் சொல்லடைத் தொகுப்புகள் யாவும் நினைவில் உள்ளன.

    ReplyDelete
  40. // என்னிடம் கயிலை நாதனாகவும் உங்களிடம் அல்லாவாகவும்
    தேமொழியிடம் யேசுவாகவும் அய்யர் அவர்களிடம் பாடலாகவும் கிருஷ்னன் சாரிடம் தொண்டாகவும் ஏதோ ஒரு ரூபத்தில் அவன் இருப்பது உன்மை.//

    திரு. தனுசு அவர்களே. தங்களின் தமிழறிவை எண்ணி எண்ணி வியக்கிறேன். 'வேற்றுப் பொருள் வைப்பணி' மிளிர்கிறது. (உ.ம்) 'இராமனை மகனாகப் பெற்ற என்னை' என்று கைகேயி கூறுவது. நீங்கள் மரபுக் கவிதைகள் பல‌ எழுத வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் .

    ReplyDelete
  41. ஆனந்தமுருகன் அள்ளிக்கொட்டிய சிரிப்பு வயிறுவலி வந்ததுதான் மிச்சம்.தேமொழியின் வகுப்பறை பாடத்துக்குப்பின் என்னை நீண்ட நேரம் சிரிக்க வைத்தது.

    அதிலும் 1,2,6,9 நினைத்து நினத்து சிரிப்பு வருகிறது.

    நன்றி ஆனந்தமுருகன்.

    ReplyDelete
  42. //ஐயா வெளியிட்டுள்ள படத்தில் காளி அன்னை சிவனின் மீது ஆடுவதாகக் காண்கிறதே!அதற்கான விளக்கம் என்ன தெரியுமா? //

    என் சிற்றறிவுக்கு எட்டியவரை விளக்க முயல்கிறேன். படுத்திருக்கும் சிவனார் நிர்க்குணப் பிரம்மத்தின் சொரூபமாகவும், காளி சகுணப் பிரம்மத்தின் சொரூபமாகவும் கொள்ளப்படுகிறார்கள். உலக இயக்கம் மறைமுகமாக விளக்கப் படுகிறது. உதாரணமாக, ஓடும் பாம்பு சக்தி எனவும் அது அசைவற்ற நிலையில் சிவமாகவும் உருவகப்படுத்தப்படுகிறது. வேறு வித விளக்கங்கள் தெரிந்தவர்கள் சொல்லப் பிரார்த்திக்கிறேன்.

    //கற்பை சோதிக்க வந்த மூவரையும் குழந்தையாக்கிய ரிஷிபத்தினி சக்தியின் அன்னை வடிவம்தானே?//

    அத்ரி முனிவரின் பத்தினி அனுசூயா தேவியைப் பற்றி நினைவுபடுத்திய மேன்மைக்கு நன்றி. தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

    ReplyDelete
  43. //ராங்கியம் செட்டியார் பற்றியாவது விரிவாக சொல்லியிருக்கலாமே.//

    பின்னூட்டத்திற்கு நன்றி தேமொழியாரே!

    30 ஜனவரி 2011 அன்று எனது ஆக்கம் "நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்" என்பதில் ராங்கியம் வள்ளலின் புகைப்படத்துடன் எழுதியுள்ளேன். வாசிக்கவும் சகோதரி.

    என்னைப்போலவே செட்டியாரும் வெளி மாவட்டத்துக்காரார்.தஞ்சையில் வந்து சீவல் வியாபாரத்தால் நன்கு பொருள் ஈட்டி நிறைய தானம் செய்தார்.
    வந்தாரை வாழவைக்கும் தஞ்சைத் தரணி!

    ReplyDelete
  44. //திரு. தனுசு அவர்களே. தங்களின் தமிழறிவை எண்ணி எண்ணி வியக்கிறேன். 'வேற்றுப் பொருள் வைப்பணி' மிளிர்கிறது.//

    பிறிது மொழிதல் அணி உவமானத்தை மட்டும் கூறி உவமேயத்தை உணர்த்தி நிற்கும். ஆகவே, திரு. தனுசு அவர்களே, தாங்கள் கூறியதைப் பிறிது மொழிதல் அணி என்றும் கூறலாம்.
    அதாவது, தேமொழி அவர்கள், உமா அவர்கள், ஆகியோரிடம் அல்லாவாகவும் ஏசுவாகவும் இருப்பதாகக் கூறுவது உவமானம். உவமேயத்தை (அனைத்துயிரினிடத்தும் உறையும் இறைவன் ஒன்றே) அது குறிப்பால் உணர்த்தி நிற்கிறது. நன்றி.

    ReplyDelete
  45. //அந்த கோயிலுக்கு செல்லும் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில் ஜெயிப்பதில்லையாமே ... (அது அப்படியா?)

    படித்ததில் பிடித்தது..
    ஸ்டெல்லா சுசீலா ஆன கதை//

    நன்றி அய்யர்ஜி! தஞ்சைக் கோவிலுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து என்று ஒரு மூட நம்பிக்கை நிலவுவது உண்மைதான்.
    தீ விபத்தின் போதும் பின்னரும் கோவிலுக்குள் வந்த அரசியல்வாதிகள் பிரகதீஸ்வரருக்கு நேராக இருக்கும் நுழைவு வாயிலைப் பயன் படுத்தவில்லை.

    ஸ்டெல்லா சுசீலா ஆன கதையைத் தேர்வு செய்ததற்கு நன்றி. இப்போது ஓர் உண்மையைப் போட்டு உடைக்கிறேன்.அதில் ஸ்டெல்லாவை தத்து எடுத்துத்
    திருமணம் செய்து வைத்தவர் நமது தஞ்சாவூரார்தான்.

    ReplyDelete
  46. //என்னது தஞ்சைவாசிகள் கடத்தல்காரர்களா? புதுக்கோட்டை பகுதி அவர்கள் வசம் இருந்ததில்லையா? என்ன போங்க...//

    க‌டத்தல் என்றால் ''ஸ்மக்லிங்(smuggling) என்ற பொருள் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. 'ட்ரான்ஸ்போர்டெட்'(transported)
    என்று பொருள் கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete
  47. //சீக்கிரமே தனுசு எனக்கு ஒரு கிறிஸ்துவ பெயரை தேர்ந்தெடுத்து சொன்னவுடன் ஞானஸ்நானம் வச்சுக்குவோமா?//

    அப்படி ஒரு ஆசையிருக்கா?

    அதுசரி,ஸ்நானம் பண்ணினால் ஞானம் வரும் என்றால், தண்ணீரிலேயெ வாழும் மீனும், முதலையும் ஞானிகள்தான்!

    ReplyDelete
  48. //மியுசியத்தில் உள்ள மீன் முள்ளை மட்டும் மறந்துவிட்டீர்கள்.//

    பின்னூட்டத்திற்கு நன்றி தனுசு அவர்களே. தஞ்சை மியூசியம் பற்றி ஒரு தனிப் பதிவு எழுதலாம்.சரித்திரத்தில் நல்ல ஆர்வம் உள்ள தஞ்சாவூரார் எழுதினால் நன்றாக இருக்கும்.

    என் ஆக்கங்களைப் படித்து சிலவற்றை நினைவிலும் வைத்திருப்பது மனதுக்கு மகிழச்சி அளிக்கிறது. நன்றிகள்.

    ReplyDelete
  49. உமாவின் கற்பனை கதை நன்றாக இருந்தது அதன் முடிவில் ஒரு அர்த்தமும் இருந்தது...
    ஒரு குட்டிப் புராணக் கதையின் சாயலில்...

    ReplyDelete
  50. கடவுளைப் பற்றிய இத்தனைப் பாடல்கள் சட்டென எனக்கும் வராது...
    நன்றிகள் சகோதரரே!

    ReplyDelete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. சாக்தம் பற்றிய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது...
    அன்னை அவள் (அவளின்) சக்தி தான் இயக்கமாக எங்கும் பிரபஞ்சம் முழுவதும் நிறைத்து இருக்கிறது.
    அதனாலே அவளின்றி எதுவும் இல்லை என்பதை அருமையாக விளக்கிய ஆக்கம்...

    ''எங்கெங்கு காணினும் சக்தியடா அவள்
    ஏழு கடல் வண்ணமடா''

    பாரதி தாசனின் முதல் கவிதை வரிகளின் உதாரணத்தோடு... யாருக்கு தாசன் என்றுத் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு கடைசிவரை இருந்தாரோ அந்த குருவாகிய மகாகவியின் பாடல்களை உதாரணம் காண்பித்து விளக்கிய விதம் இன்னமும் என்னை மகிழ்வுறச் செய்ததது.

    பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி...

    ReplyDelete
  53. அக்கா தேமொழியின் குட்டி ஆக்கம் அதில் ஒரு இந்தியனின் (வம்சாவழி!!) அறிவோடு ஒழுக்க மேன்மையையும் மாண்புறக் காண்பித்தது...
    கல்வி / அறிவு (நல் - கூறிய) / ஒழுக்கம் இவைகள் யாவும் ஒருங்கேப் பெற்றவனே உயர்ந்த மனிதன் என்ற வாஸ்தவமான வாசகத்தை மோகனமாக ஸ்ரீவாஸ்தவா நிரூபித்து இருக்கிறார். ஆக்கம் அருமை சகோதரியாரே!

    ReplyDelete
  54. தஞ்சையின் பெருமைகளைஎல்லாம் சொல்லி மாளாது என்று இயன்றவரை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் கிருஷ்ணன் சார்...
    இருந்தும் இந்த அற்புத கலைகளுக்கும் உயர் பொக்கிஷ விக்ரஹங்களுக்கும் கற்களை நான் பிறந்த பூமியில் இருந்து தான் பெற்று இருக்கிறார்கள் என்பது என்னை இன்னும் மகிழ்வுறச் செய்யும் செய்தி... நன்றிகள் சார்.

    ReplyDelete
  55. கிருஷ்ணன் சார்.
    தங்களின் ஆக்கங்களை வரிசைப் படுத்த இயலவில்லை இருந்தும் தாங்கள் விரும்பியதும், நிறைய பாராட்டுகளை பெற்றதுமான கதைகள் தங்களின் வரிசையில் முன்னிருக்கட்டும் என கூற ஆசைப் படுகிறேன்.

    ReplyDelete
  56. எனது சகோதரன் விஞ்ஞானக் காதலன் அவரின் தொகுப்பு சிரத்தை என்னை கவர்ந்தது...
    கட்டுரையின் ஆழம் அதற்கெடுத்த நேரம் யாவற்றிற்கும் நன்றிகள் சகோதரரே!

    ReplyDelete
  57. ''கவிஞன் ஞானாக் காலக் கணிதம்'' என்றான் கண்ணனுக்கு தாசன்..
    இன்று கவிஞர் தனுசாரின் கவிதைகள்....

    உமறு புலவனின் அமர காவியமாகவும்
    உருது கவியின் உணர்வுகளின் ஊர்வலமாகவும்
    நவீனக் கம்பனாக புதுக் கவிதையிலே சராசரிப்
    பெண்ணின் இயல்புகளை பாங்குடன் விளம்பியே
    எந்தன் மனதைக் கொள்ளை கொண்டீர்!

    அனுபவக் கூற்று இருந்தும் ஒட்டு மொத்த
    ஆண்களின் பறை சாற்றும் கூடவே!
    அருமைக் கவிஞரே! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  58. நீலக்கன்னியும் நித்தியக் 'கல்யாணியாய்'
    ஆலாபனை செய்கிறாள்...
    அருமை!!

    ReplyDelete
  59. சகோதரர் புவனேஸ்வரரின் வீர மங்கை ஆக்கம் நன்று....

    ''நின் பிரிவினும் சுடுமோ அக்காடு'' என்பதாக கம்பன் அன்னை தேவியவளின் உயிருக்கும் மேலான தனது கணவனின் வீது கொண்டக் காதலை கூறியிருப்பான்....

    அக்காலச் சூழலில் பெண்ணுரிமையை வேதகாலத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய வேலையை மிகவும் துணிந்து செய்த கம்பர் முதற்கட்டத்திலே முன்னிறுத்தியும் காட்டி இருக்கிறார்.

    வீரமங்கை என்னும் ஆய்வு அருமை எனினும் அவளின் விவேகம் தான் எத்தனை சிறப்பு... என்ன தான் அன்னையை அனுமன் சுமந்து செல்ல என்னினும் ஒரு ஆண்மகன் தன்னை, அது எத்தனை பெரிய அவசிய காரணமாயினும் தொடுவது வேண்டாம் என்ற விவ்கமும் ஒருக் காரணமும் கூட.. அவள் ஒருக் கற்பின் கனலி...

    தங்களின் ஆக்கம் அருமை.. பகிர்வுக்கு நன்றி சகோதர

    ReplyDelete
  60. நமது ''மெளனகுரு'' திருவாளர் சபரியார் அனுப்பியப் படத்தை ரசித்தேன் நன்றி.

    ReplyDelete
  61. ஆனந்தம் அளித்தது அருமைத் தம்பியாரே!
    பத்தும் அருமை... இருந்தும்
    பத்தில் நிறுத்தியது தான்
    அத்தனையிலும் அருமை.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  62. ஜி ஆலாசியம் said...
    //பாரதி தாசனின் முதல் கவிதை வரிகளின் உதாரணத்தோடு... யாருக்கு தாசன் என்றுத் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு கடைசிவரை இருந்தாரோ அந்த குருவாகிய மகாகவியின் பாடல்களை உதாரணம் காண்பித்து விளக்கிய விதம் இன்னமும் என்னை மகிழ்வுறச் செய்ததது. //

    தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரரே. பழைய ஆனந்த விகடனொன்றில் வெளிவந்த 'பாரதி தாசன் பற்றிய சில குறிப்புகள் படித்துக்கொண்டிருந்தேன். அதில் வந்த ஒரு குறிப்பு கீழே கொடுத்திருக்கிறேன்.

    `சுப்புரத்தினம் எனக்காக ஒரு பாட்டு எழுதேன்’ என்று பாரதியார் கேட்டுக் கொண்டதும் இவர் எழுதிய பாட்டுதான், `எங்கெங்கு காணினும் சக்தியடா!’

    இதைப் படித்ததும், பாரதியாரின் விருப்பத்திற்காக அவரின் சீடரால் எழுதப்பட்ட பாடலின் முதல் வரி, பாரதியார் உள்ளமொழியின் எதிரொலியாகவே இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆகவே அதை எடுத்தாண்டிருந்தேன். கட்டுரையை ஆழ்ந்து படித்துப் பாராட்டிய மேன்மைக்கு நன்றி.

    ReplyDelete
  63. ///Parvathy Ramachandran said...
    உலக இயக்கம் மறைமுகமாக விளக்கப் படுகிறது. உதாரணமாக, ஓடும் பாம்பு சக்தி எனவும் அது அசைவற்ற நிலையில் சிவமாகவும் உருவகப்படுத்தப்படுகிறது. வேறு வித விளக்கங்கள் தெரிந்தவர்கள் சொல்லப் பிரார்த்திக்கிறேன்.///

    There are many perspectives, therefore....
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    The Relationship Between Mother Kali and Lord Shiva

    The following excerpt was taken from "The Great Masters and the Cosmic Gods", by Sri Chinmoy.
    Mother Kali - Lord Shiva

    "Mother Kali is the consort of Lord Shiva. Lord Shiva is the silent aspect of the Transcendental Reality, and Mother Kali is the dynamic aspect of the Transcendental Reality. Truth is complete when it is both dynamic and silent. Truth is complete when the dynamic aspect and the silent aspect function together.

    In the Upanishads it says: "That is far and at the same time, that is near. That moves and that moves not. That is within and that is without. It moves and it moves not." When Kali is performing her role, reality is moving. When Shiva is performing, reality is silent. When they perform together, that moves and that moves not. With our human consciousness, when we try to see the Truth, it is far, very far. But with our divine consciousness, when we try to see the Truth, it is all near; it is right in front of our nose.

    "That is within and that is without." These conflicting terms cease when our inner consciousness is fully awakened. If something is within, then that very thing also has to be without. If there is a seed, then there will be a tree. If there is a tree, there also is a seed. If the Truth is already there within, then the Truth has to be manifested sooner or later outside.

    Mother Kali is the dynamic aspect of the Transcendental Truth and Lord Shiva is the silent aspect of the highest Transcendental Truth. They fulfil the highest Supreme together, like the obverse and the reverse of the same coin. Shiva is silent and Kali is active and dynamic. If we see with our ordinary human eyes, then we say that they are separate. But with our inner eye if we see them, we see that they are together."
    REF:
    http://khmer.cc/community/t.c?b=18&t=2280&o=2
    __________

    To stop Goddess Kali from destroying the cosmos, Shiva went into the battlefield and lied down motionless among the corpses of demons.

    Goddess Kali moved across the corpses destroying and cutting them into pieces, suddenly she found herself standing on top of a beautiful male body. For a moment she stood still and then she looked down at the body and saw it was Shiva, her husband.

    When she realized she was touching her husband with her feet, Goddess Kali stretched out her tongue in shame and the destruction came to an end.
    REF:
    http://www.hindu-blog.com/2011/12/story-of-goddess-kali-standing-on-shiva.html
    (and)
    http://www.fscclub.com/strength/durga-e.shtml
    __________

    Her stepping on her husband is a challenge to the institution of patriarchal values. It’s a reminder to the ‘upholders of the moral conscience of the society’, not to rid the woman of her rights and dues and the respect that she so deserves. A woman who is expected to worship her husband can step on him to protect her own self-respect. Many modern writers see Kali as the goddess of feminism.
    REF:
    http://utkarshspeak.blogspot.com/2010/11/goddess-kali.html
    __________

    The goddess is believed to be the slayer of all ego a human being possesses. She is hence the goddess of death responsible for killing the ego of a man.
    REF:
    http://www.zimbio.com/Kali/articles/rXsYBk7lKvP/Kali+Mantra+Ma+Kaali+Mantra+Goddess+Kali+Maa
    __________

    Moreover, Kali stands on Shiva’s body, represented in Tantrism as sexually active, on top of him – as would have liked Adam’s first wife, Lilith. She’s generally represented “dancing” or moving, a leg lifted up and the other foot on the ground, energy entirely in motion.
    REF:
    http://www.ilcerchiodellaluna.it/central_ENGdee_Kali.html
    __________

    ReplyDelete
  64. மிக மிக அருமையான விளக்கங்கள் தேடித் தந்த மேன்மைக்கு மிக்க நன்றி தேமொழி அவ்ர்களே. நிறையத் தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  65. அன்பு நெஞ்சங்களே,
    வணக்கம்.
    முதற்கண், எனது கட்டுரையை வெளியிட்ட ஆசானுக்கு எனது நன்றிகள். படித்த நண்பர்களுக்கும், கருத்துக்களை சொன்ன நண்பர்கள்/தோழிகளுக்கும் எனது நன்றிகள்.
    ஆக்கங்கள் தந்தவர்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.

    பதிவு கிரமப்படி வராமல் முதலில் அன்பர் தனுசுவுக்கு மிகப்பெரிய applause தரவேண்டும் என ஆசைப்படுகிறேன்.
    அவரது முதல் கவிதை ரசிக்க வைத்தது. அதற்கு ஒரு சின்ன reflection பின்னூட்டம் போடுகிறேன். ஆனால் அது இந்த கவிதையின் விமர்சனம் அல்ல. அருமையான கவிதை, யதார்த்தத்தின் எதிரொலி.
    அடுத்த கவிதையில் "நாள்பட்ட ஒயினா" என்ற வரிகள் என்னை கவர்ந்தன. இவர் ஆங்கிலப்புலமையும் கொண்டவராக இருப்பார் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள், தனுசு.

    நெப்போலியன் அவர்களின் இரண்டு கட்டுரைகளுமே நன்று. தெளிவான நடையில் சிந்தனைகளை விளக்கி உள்ளார். ஒரு scientist என்ற முறையில் அவர் கட்டுரைக்கு நான் ஒரு கட்டுரை எழுதி அப்புறம் அனுப்புகிறேன்.

    தேமொழி அவர்களின் கட்டுரை நன்று. அன்னாரை நான் லண்டனில் இருந்த பொழுது பார்த்திருக்கிறேன். ஏதோ ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்திருந்தார் என ஞாபகம். துறை வேறு என்பதால் பேசியதில்லை. நம்ம ஊர் பெயராக இருக்கிறதே என எட்டி பார்த்து விட்டு வந்து விட்டேன்.

    சகோதரி பார்வதியாரின் கட்டுரை வழக்கம் போல அருமை. இத்தனை தகவல்களை தொகுத்து சீரிய முறையில் கோர்வையாக அழகு தமிழில் எழுதுகிறார். அந்த முயற்சி, அதன் பின் இருக்கும் பக்தி தலை வணங்கத்தக்கதே.
    நிறையக்கற்றுக்கொண்டேன் சகோதரி பதிவுகளில் இருந்து இன்று. நன்றிகள்!

    சகோதரி உமா அவர்கள் உம்மாச்சி கதை (சாமி கதை) சொன்னது சூப்பர். கதையின் ஆழம் அற்புதம். பெரிய கருத்தை இலகுவாக சொல்லி இருக்கிறார். அவரிடம் நீறு பூத நெருப்பு போல படைப்பாற்றல் இருக்கிறது. வாழ்த்துக்கள்......

    கிருஷ்ணன் ஐயா அவர்களின் தஞ்சாவூர் பற்றிய கட்டுரை அழகாக இருந்தது. வழக்கம் போல.
    புன்னை மாரியம்மன் கோயிலுக்கு நான் போய் இருக்கிறேன். அழகிய கோயில். திருமணங்களுக்கு பேர் போனது என நினைக்கிறேன். பெரிய கோயில் பற்றி சொல்லவே வேண்டாம். அதற்குள் உள்ள சுரங்க பாதையில் ராஜராஜனின் உருவப்படம் சுவற்றில் வரையப்பெற்று உள்ளது. அந்த மாமன்னனின் படம் இது ஒன்று தான். அவன் மகா சிவபக்தன். அவன் தலை முடியை கூட சிவனார் போல சடையாக திரித்து வாழ்ந்த அன்பன்.

    சபரி அவர்கள் அனுப்பிய படம் வியக்க வைத்தது. ஓவியர் பெயர் தெரியாதது சோகம். அந்த பெண்ணின் முகம் எங்கோ பார்த்த முகமாக இருந்தது! சிவகாமியின் சபதத்தில் நாகநந்தி அடிகள் அஜந்தா குகை சித்திர பெண்ணை பற்றி சொல்லுவது நினைவுக்கு வந்தது!

    நகைச்சுவை தந்த ஆனந்த முருகன் அவர்களுக்கு நன்றி......

    ReplyDelete
  66. ..//பதிவிற்கும், வகுப்பறைக்கும் சம்பந்தமில்லாத செய்திகளை (அது எதுவாக இருந்தாலும்) பின்னூட்டத்தில் எழுத வேண்டாம்...//

    படித்ததிலே பிடித்தது இதுதான்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. தேமொழி சொன்னார்:

    //புவனேஷ்வர், ராமாயணக் கதையை உங்கள் பாணியில் விளக்கியதற்கு நன்றி. மற்றவர்களும் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்பதற்கு உரிமை உள்ளது என்பதை சொல்லத் தேவையில்லை. அதற்காக அவர்கள் அனைவரும் பெண்ணிய வாதிகள் என்று முடிவு கட்டவும் தேவையில்லை. ராமாயணத்தை பற்றிய பழங்கதை பெருமைகள் பேசுவதை விடுத்து ராமராஜ்ஜியம் வேண்டும் என்று விரும்பிய காந்தி நினைத்ததை செயல் படுதியிருக்கிரோமா என சிந்திப்போம்.//

    அன்புக்குரிய சகோதரி, வணக்கங்கள்!

    இந்தப்பதிவினை நான் எழுதுவதற்கு முன் பல பெண்ணியவாதிகளோடு நான் கருத்துப்பரிமாற்றங்கள் செய்து இருக்கிறேன், இந்த நீதி மன்ற தீர்ப்பு பற்றி.
    அவர்களுடைய கருத்தை மனதில் கொண்டு தான் இந்த கட்டுரை வரையப்பெற்றது, அதனால் தான் தெளிவாக பெண்ணியவாதிகள் என அவர்களை குறிப்பிட்டேன். அவசரப்பட்டு வார்த்தையை விடுவது எனது பலமாக என்றுமே இருந்ததில்லை.

    எல்லாருக்கும் எல்லாருடைய கருத்துக்களும் ஒத்து போய் விடுவதில்லை, அப்படி போக வேண்டிய அவசியமும் இல்லை, சகோதரி. யார் உரிமையையும் நான் மறுக்கவில்லை. எனது பதிவில் இருந்திருந்தால் அந்த வரிகளை சுட்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    காந்தி விரும்பிய ராஜ்ஜியம் ராம ராஜ்ஜியமாக இருந்திருக்க இயலாது. இதை பற்றி வேறு இடத்தில் விவாதிப்போம். அப்படியே ராமராஜ்ஜியமாக இருந்திருந்தாலும், அது வராதது ராமனின் குற்றமல்ல. நமது குற்றம்.

    உனது சகோதரன் ஏழு முறை உனக்கு குற்றம் இழைத்து, அந்த ஏழு முறையும் உன்னிடம் மன்னிப்பு கேட்பானாகில் நீ அந்த ஏழு முறையும் அவனை மன்னிக்கக்கடவாய் என பெருந்தகை இயேசு நாதர் சொன்னாரே, அதை எந்த அளவு பின்பற்றுகிறோம்? அதையே தானே ராமன் சொன்னான், ராவணனே வந்து என்னிடம் சரணம் என்றால், அவனை மறுப்பேனா? என்று.......

    உங்களில் எவர் பாபமே பண்ணியதில்லையோ அவர் இந்த பெண்ணின் மேல் முதல் கல்லை எறிந்து தண்டனை வழங்கட்டும் என்ற இயேசு நாதரின் வார்த்தை, தன்னை துன்புறுத்திய அரக்கிகளை கூட காக்க எண்ணி அனுமனிடம் "ந கஸ்சித் ந அபராத்யதி" - "தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லை" என்ற சீதையின் சொல்லோடு அப்படியே பொருந்துவது இல்லையா?

    என்னையே மார்க்கமாக கொண்டவன் பாவங்களில் இருந்து காக்கப்படுகிறான் என்று பெத்லகேம் பெற்ற பெருந்தகை சொன்னதும், என்னை சரணடைந்தவன் எவனாயினும், பாபியாயினும் அவனுக்கு அடைக்கலம் தருவேன் என ராகவன் சொன்னதும், எல்லா கருமங்களையும் எனக்கு அர்ப்பணித்து விட்டு என்னை சரணடை, உன்னை அதனை பாபங்களில் இருந்தும் காக்கிறேன் என கண்ணனும் கூறியது ஒரே இறைவனின் வார்த்தைகள்! அவை பழம்பெருமை அன்று!

    ராமாயணத்தைப்பற்றி பேசுவது பழம் பெருமையா?

    ஒரு வேளை நீங்கள் சொல்வது போல இருக்கலாம். அப்படியானால், சுதந்திரப்போராட்டத்தை பற்றி பேசுவதும், கட்ட பொம்மனை பற்றி பேசுவதும், ந்யூட்டனை பற்றிபேசுவதும், ஏன் காந்தியையே பற்றி சிலாகிப்பதும், பெரியாரை புகழ்வதும், நமது தாத்தா பாட்டி பற்றி பேசுவதும், இஸ்ரேலில் ஆண்ட சாலமன் மாமன்னனை பற்றி பேசுவதும், தாவீதின் மூதாதையரை பற்றி பேசுவதும், அன்பே வடிவான ஏசுபிரானை தலை வணங்கி போற்றுவதும் எந்த அளவு பழம்பெருமை பேசுவதாக இருக்குமோ அந்த அளவு இதுவும் இருக்கும். பாரதத்தின் முதல் சரித்திர நாயகர்களுள் ராமன் தவிர்க்க முடியாத மனிதன் என்பது எனது கருத்து....... ஆகையால் அவனைப்பற்றி பேசுவது பழம்பெருமை ஆகாது. அத்தகைய உயர்ந்த பிறவியை பற்றி பேசவாவது முடிந்ததே என நான் சந்தோஷம் அடைகிறேன்.

    தனக்கு விஷம் வைத்து கொல்ல எண்ணிய யூத பெண்மணியை நபிகள் நாயகம் மன்னித்து அனுப்பிய பின், அந்த விஷத்தால் உடல் நலம் குன்றி இறைவனடி சேர்ந்தார். தன்னை சிலுவையில் அறைந்தவரையும் மன்னிக்க வேண்டினார் இயேசு மகான். தன்னை துன்புறுத்திய அர்ரக்கனையும் நல்வழி படுத்த முயன்றாள் சீதம்மா. தன்னை கொல்ல நினைத்த அரக்கியரை அவள் மரணத்தில் இருந்து காத்தாள். இதை எல்லாம் பேசுவது பழம் பெருமை அல்ல. அப்படி பேசினாலாவது அந்த சரித்திரத்தில் இருந்து யாரேனும் ஒருவன் பாடம் கற்க மாட்டானா என்ற ஆசை.

    அரிச்சந்திரன் கதை பழம் பெருமையா? அப்படி ஆனால் பழம் பெருமை பேசுவோம். நிறைய பேசுவோம். ஏனெனில் தாங்கள் சொன்ன காந்தி வாய்மையை தழுவியது சிறு வயதில் அந்த அரிச்சந்திரம் "பழங்கதை" கேட்டு தான்.

    ஒரு அகலில் இருந்து இன்னொரு அகலை ஏற்ற வேண்டும். ஏற்றாதது நம் குற்றம். அகலின் குற்றமல்ல.

    Thanks a lot for your comment. That made me think and sharpen my brain :)
    Way to go!

    ReplyDelete
  69. In this august audience today, we have had a discussion about Seethaa, and also about Kaali.
    So I thought I would, for the benefit of folks who may be interested, give a naamaavali from Kaali sahasranaamam that bears allusion to Seethaavathaaram.

    सीता पतिव्रता साद्ध्वी रामप्राणौक वल्लभा

    अशोका काननावासा लंकेश्वर विनासिनी

    लंकेश्वर समाराद्ध्या सर्वैश्वेरैय प्रदायिनि

    रामस्तुता रमा रामशत्रुहन्त्री रणप्रिया

    Seethaa, pathi-vrathaa, saadhdhvee,
    raama-praanaika-vallabhaa,
    Ashoka-kaananaa-vaasa,
    lankesvara-vinaashini,
    Lankesvara-samaa-aaraadhya,
    sarvaishvairya-pradaayini
    Raama-sthutha, ramaa, raama-
    shathru-hanthree, rana-priyaa.

    Kaali sahasra-naamam, with naamas relating to the Seetha-avathaaram of Bhagavathi Aadhi Paraa-shakthi. Extolling grandly and piously:-

    her pristine chastity, supreme enlightenment, being fulcrum of her husband Rama's existence, dwelling in Ravana's Garden of Joy in Lanka Island, role as destroyer of Lanka,honour done to her by others of the puissance of Lanka's God-like ruler Ravana;
    possessor, presider over, and grantor of all manner of wealth; exalted and praised by husband Raama, consort of Raama, killer of Raama's enemies, and reveller in just wars.

    Thanks.
    ---

    ReplyDelete
  70. @உமா..
    நல்ல கற்பனை..

    (விட்டால் போதுமென்று) சென்று வா!
    என்றே சொல்லத் தோன்றுகிறது..

    ReplyDelete
  71. This comment has been removed by the author.

    ReplyDelete
  72. சகோதரர் ஆலாசியம் அவர்களின் பின்னூட்டங்களை ரசித்தேன்.
    தாங்கள் அளித்த ஊக்கத்துக்கு நன்றி, சகோதரரே.....
    தங்கள் பின்னூட்டங்களில் இருந்து நிறைய கற்றேன். நன்றிகள் பல.
    வணக்கங்கள் பல பல..... :)

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. எனது ஆக்கத்துக்கு பாராட்டி ஊக்கம் கொடுத்த தோழர் தனுசு, சகோதரி பார்வதி, மதிப்புக்கு உரிய திரு. கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் நல்லெண்ணங்களும் ஆசிகளும் என்னை மேலும் வளர வைக்கும் என்பது திண்ணம்.

    அன்புக்கு உரிய அய்யர் அவர்களே,

    தங்கள் மனம் மகிழும்படி எழுத இயலாமை எனது குறை தான். அது குறித்து வருந்துகிறேன். மன்னித்து விடுங்கள்.

    பொதுவான, மூவாயிரம் மாணவர்கள் பார்க்கும் பொது இடமான வகுப்பறையில் என் மீது இவ்வளவு கோபத்தோடு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் (பழைய பதிவுகளிலும்) என்றால் அதற்கு ஏற்ற, தக்க வலுவான அறிபுபூர்வமான காரணம் தங்களிடம் இருக்கும் என்பது திண்ணம் என நம்புகிறேன்.

    அதனை இங்கே சொன்னால் நானும் அறிந்து கொள்வேன், என் பக்கம் தவறு இருந்தால் அதை பற்றி சிந்தித்து திருத்தி கொள்வதற்கும் பேருதவி செய்தவராவீர்.

    அதை இங்கே விவாதிப்பது வகுப்பறைக்கு disturbance அல்லது less relevant ஆக இருக்கும் என கருதினால் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றி, ஐயா.

    ReplyDelete
  75. வாத்தியார் சென்ற வாரம் இந்த ஆக்கத்தை பதிவிடாத காரணம் புரியாததால்(அவருக்கு மெயிலில் பதில் சொல்லும் வழக்கம் இல்லை.)
    நானும் "கடவுள் சம்பந்தப் பட்ட மறுப்புக் கருத்தை தொடர்ந்தும் வகுப்பறையில் இடமளிக்கவேண்டாம், விவாத மனப்பான்மை கொண்டவர்களைத் தூண்டும் என்று வாத்தியார் நினைத்திருக்கலாம்" என்று அனுமானித்ததாலே

    நானும் கடவுள் சம்பந்தப்பட்ட ஆக்கங்கள் குறித்து
    விமர்சித்தலைத் தவிர்க்கப் போகிறேன் என்று கருத்து தெரிவித்திருந்தேன்..

    இப்போதுதான் அவரின் காரணம் புரிந்தது..நல்லது..

    ReplyDelete
  76. பார்வதி ராமச்சந்திரன் அவர்களின் கட்டுரை வழக்கம்போலே..அதிக விவரங்கள்..
    ஆன்மிக விவரங்களில் திளைப்போருக்கு அமுதமாக இருக்கும்..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  77. This comment has been removed by the author.

    ReplyDelete
  78. ஒரு தன்னிலை விளக்கம்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ////எழுதியவற்றில் மூன்றில் மட்டும் நெருடல் உள்ளது.

    எந்த ஆறையும் முடித்துவிட்டு அவர் வரவேண்டும்? எதற்காக வரவேண்டும்?

    நம்மை விட மேலானவர்கள், அவர்களுக்கு உரிய மரியாதையைத் தரவேண்டும் என்ற எண்ணம் இங்கே வரும் அனைவருக்கும் வேண்டும். ///

    தாங்கள் சுட்டியமைக்கு நன்றிகள்..
    இதில் ஆறையும் என்றது ஷன்மதங்களை தொடர்ந்து எழுதும் ஆறினையும் என்றது..

    உண்மையில் (எங்கள் ஊரைச் சேர்ந்த) சகோ பார்வதியாரிடம் மிகுந்த மரியாதை உடையவர் உங்கள் அய்யர் அதனை ஒரு முறை அவர்கள் எழுதிய மின்னஞ்சலில் தெளிவாக விளக்கி உள்ளதை அவர்களே அறிவார்.

    அய்யர் சொல்வதெல்லாம் அவர்கள் சொல்லும் கருத்துக்களில் தான் அவர்களை குறைத்து பேசும் அல்லது எண்ணும் எண்ணம் எள்ளவும் இல்லை. அது தேவையும் இல்லை என்பது வாத்தியாருக்கும் தெரியும் தானே.

    ///7,8, எல்லோருக்கும் ருசிக்கும்படியாக கவிதை எழுதுவது கடினம். எல்லோர் ரசனையிலும் ருசிக்கும்படியாக நீங்கள் ஒரு கவிதை எழுதி அனுப்புங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்///

    உண்மைதான். எல்லாராலும் ருசிக்கும்படி கவிதை யாராலும் எழுத முடியாது. எல்லோரும் ருசிக்கும் படியாக யாராலும் சமைக்க முடியாது

    அய்யருக்கு ருசிக்க வில்லை என்று தான் சொல்லப்பட்டது. அய்யரின் ரசனையை வெளிப்டுத்துகிறோம் அது தவறாக எண்ணுவது சரிதானோ..

    எங்கள் ரசனையை சொல்வதின் மூலம் எங்கள் ரகனைக்கேற்ற கவிதைகளையும் அன்பு தோழர் தனுசு தருவார்/தரவேண்டும் என்பது ஆவல் அவ்வளவு தான்

    ////9. ராமகாவியத்தில் உங்களுக்கு உள்ள கருத்து வேறுபாட்டைக் கட்டுரையாக எழுதி அனுப்புங்கள். அதைவிடுத்து போலித்தனமான கதை, மானமிகு மனிதர்கள் என்ற வார்த்தைப் பிரயோகங்களால், எழுதிய நல்ல உள்ளங்களைப் புண்படுத்தாதீர்கள். அடுத்தவரைப் புண்படுத்திவிட்டு நீங்கள் எப்படி அமைதி கொள்ள முடியும்?////

    கையில் வில்லோடு வந்தால் தன்னை அடிக்கத் தான் வருவதாக கொள்வது சரிதானா?

    "நாக்கை மடக்கி கையை உயர்த்தி" என்று எதுவும் எமக்கு தெரியாது. அதற்கு அய்யர் தயாராகவும் இல்லை..

    பதிவான தேவாராப் பாடல்

    அண்மையில் நடந்து வரும் நிகழ்ச்சிக்காக சென்ற நாட்களின் பின் ஊட்டத்தில் சொன்ன் படி

    வகுப்பறை தோழர்களை அவர்களது அன்பு நட்பினையும் சுற்றங்களையும் வேண்டுதலுக்கு அழைப்பதே.

    தாங்கள் அனுமதிக்க வில்லை என்றால்
    அமைதி கொள்கிறோம்..

    வழக்கமான வணக்கமும் வாழ்த்துக்களும் (சுழலு விட பாடல் இருந்தும் அது இல்லாமல்)

    ReplyDelete
  79. This comment has been removed by the author.

    ReplyDelete
  80. காளி ஏன் சிவன் மீது நர்த்தனம் புரிகிறாள்?

    வாஸ்தவத்தில் சக்தி வேறு சிவம் வேறு அல்ல.
    சிவம் அசைவற்ற ஆத்மஸ்வரூபம். தான் இருப்பது கூட தெரியாத இருப்பு நிலை. தெரிய வேண்டும் என்றால் தெரிந்து கொள்பவன் வேண்டுமே. சிவத்துக்கு பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்வை - இம்மூன்றும் ஒன்றான நிலை.
    சக்தி என்பது சிவத்தின் அறிவு. அறிவை மட்டும் தனியாக பார்த்தல் அது சக்தி.
    அறிவு செயலாற்றும். ஊர் ஊராக போகும், தண்டம் எடுத்து கொண்டு உபன்யாசம் பண்ணும், சந்யாசியாக ஆசேது ஹிமாசலம் (சேது முதல் இமயம் வரை) நடக்கும்...... வேதப்ப்ரசாரம் பண்ணும்..... வில்லை எடுக்கும், சண்டை போடும், தேர் ஓட்டும், கீதோபதேசம் பண்ணும், வெண்ணை திருடி மூஞ்சியில் அப்பி விளையாடி மயக்கும், பிக்ஷாடன மூர்த்தியாக மோஹிக்க பண்ணும்...... ஆத்மஸ்வரூபமான சிவம் இதை எல்லாம் பண்ணாது. ஆதாரமாக இருக்கும் அறிவை உள்ளடக்கி அவ்வளவே. தேவையான போழ்து அவதாரம் பண்ணி காளியாக நர்த்தனம் பண்ணும் சக்தி (சிவத்தின் அறிவு) சிவன் மீது ஆடுவது, அந்த செயலற்ற ஆத்மஸ்வரூபமான சுத்தசிவம் தான் செயலுக்கு ஆதாரம் என்பதை காட்டுகிறது. கார்யம் முடிந்தவுடன் சக்தி என்ன பண்ணுகிறாள்? அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் சிவத்தில் மீண்டும் கரைகிறாள். இது தான் தம்பதி கோலத்தை வைத்து நமக்கு விளக்குவதற்காக போட்ட வேஷம். வாஸ்தவத்தில் எல்லாம் ஒன்று தான்..... எல்லாம் லீலை!

    ReplyDelete
  81. தேமொழி அவர்களின் புள்ளிவிவரம் ஏற்கனவே அறிந்ததுதான்..

    இந்தமுறை பரிசுமழையை அள்ளித்தரும் விவரத்தையேக் கண்டறிந்த ஆட்களின் புள்ளிவிவரத்தைக் கட்டுரையாக்கி சாதனை படைத்துவிட்டார்..
    வாழ்த்துக்கள்..

    தேமொழி அவர்கள் வேலைக்காகாத மோகன் ஸ்ரீவஸ்தவாவை விட்டுவிட்டு ஜோஅன் கின்த்தர் அவர்களைத் தொடர்பு கொண்டு, வெளிநாடுகளிலும் புழக்கத்திலே இருக்கும் லாட்டரி முறைகளை அலசி பரிசை எடுக்கும் குறுக்கு வழியை, வேகமாகக் கண்டுபிடிக்கும் முறையை கண்டுபிடிக்கச் சொல்லி ஊக்கப்படுத்த வேண்டும்..

    உலகளவிலே புரட்சிகரமாகப் பரவ இருக்கும் நமது இந்த இயக்கத்துக்கான ஜப்பான் பகுதிக்கான நிர்வாகப் பொறுப்புக்களை நான் மேற்கொள்கிறேன்..

    ReplyDelete
  82. தஞ்சைப் பகுதியின் விவரங்களை அருமையாகக் கோர்த்து வழங்கியிருந்தார் KMRKஅவர்கள்.

    'சோழவளநாடு சோறுடைத்து' என்ற வரிகளைக் கிண்டலடித்திருக்காமல் இருந்திருக்கலாம்..

    விவசாயத் தொழிலிலே முன்னணிப் பகுதியான காவிரி டெல்டாவின் தஞ்சை குறித்து எழுதிய விவரங்களில் அதுகுறித்த விளக்கங்கள் இல்லாது போனது ஆக்கத்துக்கு முழு நிறைவைத் தரவில்லை..

    ReplyDelete
  83. //இதில் ஆறையும் என்றது ஷன்மதங்களை தொடர்ந்து எழுதும் ஆறினையும் என்றது..//

    வகுப்பறை சக மாணவர்களுக்கு நான் ஒன்றை விளக்கக் கடமைப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். நான் ஷண்மதங்கள் என்றது. 1. காணபத்யம், 2.சௌரம், 3.கௌமாரம், 4.சாக்தம், 5. ஸ்ரீ வைணவம் 6. சைவம் முதலிய இந்து மதத்தில் உள்ள ஆறு பிரிவுகளையே. வேறு எவையும் அல்ல.

    இவற்றை தொடச்சியாக எழுதக் காரணம், சகோதரி தேமொழி ஒரு பின்னூட்டத்தில் காணபத்யம், சௌரம் போன்றவற்றை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். ஒரு தொடர்ச்சியாக இருக்கட்டுமே என்று எழுதி வருகிறேன்.

    புத்தம், சமணம், கடவுள் மறுப்பு போன்றவைகளை எழுதுவதாக நான் எங்கும் சொல்லவில்லை. அப்படி யாரும் அனுமானிக்க வேண்டாம்.

    எனக்குத் தெரிந்த, விஷயங்களை நான் எழுதுகிறேன். நான் திரு. தனுசு அவர்கள் சொல்வது போல், எல்லா மதங்களும் சுட்டும் இறைவன் ஒன்றே என்று நம்புகிறேன். திரு, புவனேஷ்வர், அவரது பின்னூட்டத்தில் எல்லா மதக் கொள்கைகளைப் பற்றியும் விவரித்திருந்தார். அது போல் நான் அவ்வளவாக அறிந்ததில்லை.

    நான் எனது எழுத்துக்களில் மற்ற எந்த மதத்தையோ அல்லது மார்க்கத்தையோ குறைவாகவோ, அல்லது தரம் குறைந்தோ எழுதியதில்லை. இனி எழுதப்போவதுமில்லை.

    எல்லாவற்றிலும் மேலாக, நான் எழுதுவது என் மனோதர்மப்படியே. இதை வெளியிடும் உரிமை வலைப்பூவின் தலைவர் என்ற முறையில் வாத்தியாருடையது. நியாயமான விமரிசனங்களைத் தலைவணங்கி ஏற்கிறேன்.
    நான் எழுதுவதாகச் சொல்லாததை, மேலும் எழுதிய அனைத்தும் உண்மையில்லை என்று சொல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை என்னால் ஏற்க முடியாது. என் எழுத்துக்களைத் தொடர்ச்சியாகப் படித்துவரும் அன்பர்கள், பெரியோர்கள் அனைவரும் இதைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  84. Dear Themozhi,
    Thanks a ton for indicating the person who drew the portrait..... I appreciate it....

    ReplyDelete
  85. கவிதையிலே படிக்கவே வேணாம் என்கிற அளவுக்கு சிலவற்றில் ஆழமான அர்த்தம் புரியாத வார்த்தைகள் இருந்து படுத்தி எடுக்கும்..

    தமிழே இப்படி என்றால் ஆங்கிலம்,சமஸ்கிருதம் போன்ற வேற்று மொழிகளை என்னவென்று சொல்வது?
    'என் கண்ணில் புகாமலும், வாயில் ஏதாவது வராமலும் இருத்தலே நல்லது என்கிற அளவிலே விமர்சனங்களைத் தவிர்ப்பது நலம்' என்று அந்த எண்ணத்தை சொல்லியிருந்தேன்..

    இந்தமுறை தனுசுவின் கவிதை அதை உடைத்துவிட்டது..

    இரண்டாவது கவிதை சுக்குநூறாக்கிவிட்டது..

    அருமையாக அமைந்த ஆண்பாவத்து வரிகளை விட அடுத்த கவிதை பரிசுமழையைத் தள்ளிக் கொண்டு போய்விட்டது..

    ReplyDelete
  86. ///நான் எழுதுவதாகச் சொல்லாததை, மேலும் எழுதிய அனைத்தும் உண்மையில்லை என்று சொல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை என்னால் ஏற்க முடியாது. ////

    அப்படி யாரும் சொல்ல வில்லையே சகோதரி..

    படிப்பவரின் ஆர்வம் அப்படி ஒரு எதிர்பார்ப்பை தந்திருக்கலாம்..

    ஒரு சீரியலில் அடுத்து என்னவாக இருக்கும் என்பது போல..


    தாங்கள் சொல்வது போலவே
    தங்களின் எழுத்துக்களைத் தொடர்ச்சியாகப் படித்துவரும் அன்பர்கள், பெரியோர்கள் அனைவரும் இதைப் புரிந்து கொள்வார்கள் என்றே நாமும் நம்புகிறோம்..

    அன்பான வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  87. This comment has been removed by the author.

    ReplyDelete
  88. This comment has been removed by the author.

    ReplyDelete
  89. This comment has been removed by the author.

    ReplyDelete
  90. மகான்கள் தங்களுக்குள் சித்தாந்த சண்டை போட்டு கொண்டது இல்லை.

    விவாதம் தான் பண்ணினார்கள் அதிலும் அன்பும், உண்மையை அறிய வேண்டும் என்ற ஏகோபித்த ஆர்வமும் தான் இருக்கும். ஒருவரை ஒருவர் காயப்படுத்தும் நோக்கம் இருக்காது.

    காஞ்சி மடமும் திருவரங்கத்தில் உள்ள ஜீயர் மடமும் தருமபுரம் ஆதீனமும் சண்டை போட்டு கொண்டதாக தகவல் இல்லை.

    இஸ்லாமியரின் திரு குர் ஆனில் கூட இது இருக்கும். எங்கே? இரண்டாம் அத்தியாயம் வசனம் 136, மூன்றாம் அத்தியாயம் வசனம் 84... (ஒரே வசனம் இரு அத்தியாயத்திலும் வரும்)......

    "நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக."

    யோ யோ யாம் யாம் தானும் பக்த்யா ஷ்ரத்யா - அர்ச்சிதும் இச்சதி
    தஸ்ய தஸ்ய அசலம் ஷ்ரத்வா தம் ஏவ விததாம்யஹம்

    என கண்ணன் கூறியதும் இதையே தான்......

    யார் யார் எந்த வகையில் என்னை சிரத்தையுடன் ஆராதிக்கிரார்களோ அவர் அவர்களுக்கு அவரவர் விருப்பப்படியே, அவரவர் அசையாத நம்பிக்கையின் படியே நான் அருள் புரிகிறேன்....... என்றான்.....
    இதில் கவனிக்க வேண்டியது ஸ்ரத்தையை. அது முக்கியம், எந்த சித்தாந்தமானாலும்............

    ஆகவே.... யாருக்கு என்ன பிடிக்குமோ அதை பின் பற்றுவோம்...... கருத்துக்களை சொல்லலாம்..... விவாதிக்கலாம்... ஆனால் அதில் அன்பு இருக்க வேண்டும்.

    ReplyDelete
  91. ////யார் யார் எந்த வகையில் என்னை சிரத்தையுடன் ஆராதிக்கிரார்களோ அவர் அவர்களுக்கு அவரவர் விருப்பப்படியே, அவரவர் அசையாத நம்பிக்கையின் படியே நான் அருள் புரிகிறேன்....... என்றான்.....
    இதில் கவனிக்க வேண்டியது ஸ்ரத்தையை. அது முக்கியம், எந்த சித்தாந்தமானாலும்............

    ஆகவே.... யாருக்கு என்ன பிடிக்குமோ அதை பின் பற்றுவோம்...... கருத்துக்களை சொல்லலாம்..... விவாதிக்கலாம்... ஆனால் அதில் அன்பு இருக்க வேண்டும்....////

    ஆம் புவனேஷ் அவர்களே..
    யாதொரு தெய்வம் கொண்டீர்
    என சித்தியார் சொல்வதும் இதைத்தானே..

    விவாதங்களையே சிலர் வேறுபடுத்தி பார்ப்பதினால் தான் அன்பு இல்லாதது போல தோன்றுகிறது..

    அன்பு இருக்கும் போது மாறுபட்ட கருத்துக்கள் கூட தவறாக தோன்றாது.

    "அன்பும் சிவமும்" என்ற திருமூலர் பாடலினை தங்கள் வாயினால் அறிய விரும்புகிறோம்

    ReplyDelete
  92. This comment has been removed by the author.

    ReplyDelete
  93. This comment has been removed by the author.

    ReplyDelete
  94. அன்பும் விவாதமும் ஒன்றுக்கொன்று விலக்கானவை அல்ல.
    தகப்பனும் மகனும் விவாதிக்கிற பொழுது கருத்துகள் தான் மோதும். இருவரும் மோத மாட்டார்கள். நண்பர்கள் விவாதிக்கிற இடத்திலும் அது தானே....

    இறை விஷயத்தில் யாரும் தவறு இல்லை.

    ஒரு கதவின் இரு புறம் உள்ளவர்கள் இருவர். ஒருவன் சொல்கிறான் கதவு வெள்ளை நிறம் என்று.
    மற்றொருவன் சொல்கிறான் இல்லை இல்லை சிவப்பு நிறம் என்று. வார்த்தை வலுத்தது..... கைகலக்கும் போது தான் பார்த்தார்கள் இருவருமே சரி என்று...... ஒரு புறம் வெள்ளை வண்ணமும் மறு புறம் சிவப்பு வண்ணமும் பூசப்பட்ட கதவு அது......

    அது போல தான்......

    ReplyDelete
  95. This comment has been removed by the author.

    ReplyDelete
  96. This comment has been removed by the author.

    ReplyDelete
  97. எனது ஆக்கங்கள் குறித்து விமர்சித்த, பாராட்டிய அனைவருக்கும் நன்றி..

    வேலை மெனக்கெட்டு ஆதாரமெல்லாம் தேடி அறிவியல் பூர்வமா விளக்கியிருந்துமே 'சீதைக்கு ராமன் சித்தப்பனா' என்று 'உயிர் என்றால் என்ன?' என்ற கேள்வி கேட்டிருக்கும் அய்யருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி..ஏன்னா இன்னிக்கு வந்த ரெண்டு ஆக்கங்களுக்குமே காரணம் அய்யர் அவர்கள்தான்..
    அய்யருக்கு மெயிலில் சொல்ல நினைத்த பதில் நீண்டு கட்டுரை போன்ற தோற்றமளித்ததால் இங்கே அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விழைந்து ஆசிரியருக்கு அனுப்பிவிட்டேன்..

    ReplyDelete
  98. சபரி அனுப்பியிருந்த ஓவியம் உண்மையில் ஓவியம் என்று சொல்லமுடியாமல் சந்தேகிக்க வைக்கிறது..தத்ரூபமான உணர்வுகளுடன் வரையப்பட்ட ஓவியத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..மோனலிசா ஓவியத்தைக் கூட ஓரம்கட்டுகின்ற அளவுக்கு உணர்ச்சிகளைச் சொல்லுகிற முகபாவத்தைப் படைத்த ஓவியரை பாராட்ட வார்த்தைகள் இல்லை..

    ReplyDelete
  99. ஆனந்தமுருகனின் நகைச்சுவை அனைத்தும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கும் ரகம்..நன்றி..

    ReplyDelete
  100. //சரஸ்வதி மஹாலில் இருந்த பழம்பெரும் ஓலைச்சுவடிகள், வெள்ளையரால் கைப்பற்றப்பட்டு, அதில் இருந்த பல குறிப்புகளின் படியே பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன என்று படித்திருக்கிறேன். திரு. என்.எஸ். கிருஷ்ணனின் 'விஞ்ஞானத்த வளர்க்கப் போறன்டி' பாடலில் 'தஞ்சாவூரு ஏட்ட எடுத்து தலகீழாப் பாடம் படிச்சு' என்றொரு வரி வருவது இதன் தாக்கத்தாலேயே.//

    இதனை மெய்ப்பிக்க எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் வெள்ளையரை பழி சொல்ல நான் துணியவில்லை.

    மஹாலில் இருந்த நாடி சோதிட ஓலைச் சுவடிகளைப் பயனற்றவை என்று கடாசி விட்டார்களாம். அவைதாம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து இன்று சிலருக்குப் பணத்தை அள்ளிக் கொடுக்கிறதாம். செவி வழிச் செய்திதான்.

    பின்னூட்டத்திற்கு நன்றி பார்வதி அம்மையாரே!

    ReplyDelete
  101. KMRK ,தேமொழி, அய்யர்,தனுசு, பார்வதி ராமச்சந்திரன், ஆலாசியம், புவனேஷ் என்று எனது ஆக்கங்கள் குறித்து விமர்சித்த, பாராட்டிய அனைவருக்கும் நன்றி..

    ReplyDelete
  102. அய்யர் said...தனுசுவின் கவிதை வழக்கம் போல் என்றாலும் அய்யரின் ரசனையில் ருசிக்கவில்லை... வருத்தமில்லை, அடுத்த நல்வரவை எதிர்நோக்கி

    இதுபோன்ற மனம் திறந்த விமர்சனத்தை நான் எதிர்பார்க்கிறேன்.

    நான் கருவை உருவாக்கிகொண்டு கவிதை எழுதுவதில்லை. படிக்கும் செய்திகள், பார்க்கும் காட்சிகள், கேட்கும் தகவல்கள்,இவைதான் உந்துதலாக இருந்திருகிறது.கண்டிப்பாக உங்களுக்கு பிடித்தமான கவிதையாக அடுத்தடுத்து வர கடவுள் எனக்கு ஒரு செய்தி கொடுப்பார்.

    இந்தவாரம் அனுப்ப இருந்த கவிதை வேறு. அத்ற்காக தேமொழி அவர்களிடமிருந்து ஒரு ஓவியம் வாங்கி வைத்திருந்தேன்.ஆனால் இடையில் செய்வ்வாய் அன்று எனக்கும் என் மதிப்ப்ற்குரிய இல்லத்தரசிக்கும் செல்லமான சண்டை.சீரியசாக ஒன்னுமில்லை. (இப்போதும் கூட மனைவி பிள்ளைகளோடு கேரளாவில் தான் இருக்கிறேன் சுற்றுப்பயனமாக).

    அதிக அன்பு வைத்து என்னை கட்டிப்போட்டதுதான் பிரச்சினை. அதிலிருந்து வந்ததுதான் இன்றைய ஆக்கம்.

    நன்றி அய்யர் அவர்களே.

    ReplyDelete
  103. தேமொழி said...தனுசு, நம்ப மறுக்கிறேன்...இந்தக் கவிதையை எழுதி அதை வார மலருக்கு அனுப்ப நீங்கள் உங்கள் வீட்டில் அனுமதி வாங்கியதாகத் தெரியவில்லையே

    நீங்கள் எதை நம்பியுள்ளீர்கள். சில மாதங்களுக்கு முன் "என்னவென்று தெரியவில்லை தெரிந்தவர் சொல்லுங்களேன்"என்று எழுதிய போதும் இவ்வளவு அப்பாவியா நம்ப முடியவில்லையே என்றீர்கள்.

    நன்றி தேமொழி.

    அந்த நீலக்கன்னி சென்றவாரம் பின்னூட்டத்தில் இட்டு இருக்க வேண்டியது நெரமில்லாததால் தங்கிவிட்டு இந்தவாரம் கவிதையாக வந்திவிட்டது.

    பாராட்டுக்கு நனறிகள்

    தேமொழி said...மதம் மாற்றி தேவாலயத்திற்கு அனுப்பிவைத்து விட்டாரே!!!!

    அப்படி அல்ல ஏசுவைத்தான் உங்களிடம் அனுப்பு உள்ளேன். கொண்டாடுங்கள்.

    ReplyDelete
  104. //இருந்தும் இந்த அற்புத கலைகளுக்கும் உயர் பொக்கிஷ விக்ரஹங்களுக்கும் கற்களை நான் பிறந்த பூமியில் இருந்து தான் பெற்று இருக்கிறார்கள் என்பது என்னை இன்னும் மகிழ்வுறச் செய்யும் செய்தி... நன்றிகள் சார்.//

    பின்னூட்டத்திற்கு நன்றி ஹாலாஸ்யம்ஜி. ஆம். தஞ்சை மாவட்டக் கோவில்களுக்குக் கற்கள் புதுக்கோட்டை, திருச்சி போன்ற இடங்களில் இருந்தே வந்திருக்க வேண்டும்.பிரம்மாண்டமான மலைகள் காணாமல் போயிருக்கக்கூடும்.

    என் ஆக்கங்கள் முழுமையும் வெளியிட்டால் 500 பக்கம் உள்ள புத்தகம் ஆகலாம்.அடக்க விலை 200/= ஆகலாம். விற்பனை ஆகாது என்பதால், இலவசமாக அளிக்கும் போது தனி ஒருவனால் அவ்வளவு பெரும் தொகையைத் தாங்க முடியாது. எனவே ஆகச் சிறந்த 10 ஆக்கங்களை மட்டும் வெளியிட ஆவல்.

    ReplyDelete
  105. வலைதளத்தை நன்கு பயன்படுத்திப் பல தகவல்களைக்கொண்டு குவிக்கும்
    தேமொழியாருக்கு நன்றி.

    ஒரு பம்பரம் சுற்றாமல் இருந்தால் அது இயக்கமற்று சும்மா கிட‌க்கிறது.
    ஒரு ஊக்கம் கிடைத்தவுடன் சுற்றத் துவங்குகிறது.அது சுற்றும் போதும் அதன் சுற்றாத தன்மை(ஜடமாக இருத்தல்)அதனுள்ளே இருந்து கொண்டே இருக்கிறது.
    சுற்றித் தன் ஆற்றலை வெளிப்படுத்தும் போது அது காளியன்னை.சுற்றாத போது அதுவே சிவம்.சிவனின் மேல் ஆடும் காளி பம்பரத்தின் சுற்றும் தன்மையை வெளிப் படுத்துகிறாள்.சிவன் ஜடமாகக் காட்சி அளிக்கிறார்.இரண்டும் வெவ்வேறானவை என்று எண்ணுவது நம் புராண அறிவினால் வந்த மயக்கம்.

    ReplyDelete
  106. என்னுடைய ஆக்கத்தைப் படித்துப் பின்னூட்டம் இட்ட புவனேஷ்வருக்கும் மைனர்வாளுக்கும் நன்றி.

    தஞ்சைக் கோவிலில் பெருவுடையாரின் உள் பிராகாரத்தில்தான் ராஜராஜனின் உருவம் உள்ளது. சோழர்கால ஓவியங்கள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன.

    தஞ்சையின் விவசாயச் சிறப்பைக் கூறாமக் விட்டது கவனக் குறைவுதான். சுட்டிய மைனர்வாளுக்கு நன்றி!

    ReplyDelete
  107. ///sury said...
    ..//பதிவிற்கும், வகுப்பறைக்கும் சம்பந்தமில்லாத செய்திகளை (அது எதுவாக இருந்தாலும்) பின்னூட்டத்தில் எழுத வேண்டாம்...//
    படித்ததிலே பிடித்தது இதுதான். சுப்பு தாத்தா////

    அது....அதுதான் சூரிஜியின் தனி முத்திரை.

    தங்களுடைய‌ தமிழ், ஹிந்தி, ஆங்கில அறிவின் வீச்சை அறிந்தவன் நான்.
    தாங்கள் இங்கே வந்து எழுதிக் கொண்டிருக்கும் இளைஞர்களைத் தங்கள் பின்னூட்டங்களால் பாராட்ட வேண்டும் என்று பணிந்து வேண்டுகிறேன்.தவறுகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளலாம்.

    என்னைத் தாங்கள் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. பக்கத்து இலைக்குத்தான் பாயசம் கேட்கிறேன்.

    பிறந்த அகத்துப் பெருமையை உடன் பிறந்தவர்களிடமே கொண்டாட முடியாது அல்லவா?

    ReplyDelete
  108. புவனேஷ்வரின் பரந்து பட்ட பல மதங்களினைப் பற்றிய‌ அறிவு பின்னூடங்களில் இருந்து வெளிப்படுகிறது.இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதலாம்.

    ராமாயணக்கதை பலவடிவங்களில் உலாவருவது உண்மைதான்.உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஏதோ ஒருவகையில் ராமாயணத்தைக் கையாள்கிறார்கள். மணிரத்தினம் ராமாயணம் எனக்கு ஏற்புடையதல்ல‌. மைனர்ஜிக்குப் பிடித்திருந்தால் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
    வால்மீகி சொல்லும் ராமாயணமே மூலம். கம்பர் கூட நமது தமிழகப் பண்பாட்டுக்காகச் சில மாறுதல்களைச் செய்துள்ளார்.

    ReplyDelete
  109. வாத்தியார் ஐயாவுக்கு வணக்கம்.

    உங்களுக்கு படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது.

    பொதுவாகவே மனித மனம், தான் சொகுசாக இருக்க என்ன வழிவகை உண்டோ அதை மட்டும்தான் முதலில் யோசிக்கும் என்று எதிலேயோ படித்த நினைவு. இந்த சந்நியாசியும் அப்படித்தான் உழைத்து நாலு பேருக்கு கொடுக்கணும் என்ற செய்தியின் எதிர் துருவத்தை அதாவது பிச்சை எடுக்கும் 4 பேரில் ஒருவராக இரு என்று புரிந்து கொண்டுவிட்டார் போலிருக்கிறது.
    -----------------------
    மாணவர் மலர் ஆக்கங்கள் படித்தேன்.

    பல புகழ்பெற்ற வருமானம் அதிகம் உள்ள கோயில்களில் வருமானம் ஒன்றே குருக்கள்களுக்குள்ளேயே பகையை தோற்றுவித்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

    அவர்களின் நெஞ்சை நிறைக்கும் தஞ்சை கட்டுரையில்,

    //இன்றும் தஞ்சை மாவட்டத்தில் கோவில்கள் பலவும் நன்கு பராமரிக்கப்படுகின்றன.இதற்கு நாம் சைவ ஆதினங்களுக்கும், வருமானம் இல்லாவிட்டாலும் கோவிலைக் கைவிட்டுவிடாத குருக்கள் சமூகத்தையும்தான் பாராட்ட வேண்டும். // என்று லால்குடி கே.முத்துராமகிருஷ்ணன் தனது கட்டுரையில்
    குறிப்பிட்டிருந்தார்.

    இது உண்மைதான். எனது நண்பர் 1993ல் அவர் 12ஆம் வகுப்பு படிக்கும்போது அவர்கள் குடும்பத்தில் 3 தலைமுறைகளாக பூஜை செய்து வந்த ஒரு பிள்ளையார் கோவிலின் பூஜையை ஏற்றார்.

    அந்த கோயிலில் பூஜை செய்ய அவருக்கு சம்பளம் கிடையாது. இன்று வரை தட்டில் விழும் தட்சணை, சிறப்பு அபிஷேகம், ஆகிய வருமானங்கள் மட்டுமே சொற்பமாக அந்த கோவிலில் இருந்து கிடைத்து வந்தாலும் வெளியில் ஹோமம், மற்ற கோவில்களில் உற்சவத்திற்கு சாமி அலங்காரம் போன்ற மற்ற வருமானங்களை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார். எம்.காம் படித்திருக்கும் அவரை, போட்டித்தேர்வுகள் எழுதுங்கள். இல்லை என்றால் தனியார் நிறுவன வேலைகளுக்காவது முயற்சி செய்யுங்கள் என்று சொல்லியாயிற்று.

    ஆனால் அவர் எனக்கு கோவில் பூஜைகள் செய்வதில் உள்ள ஆத்ம திருப்தி போதும் என்று வாழ்ந்து வருகிறார்.

    இந்த ஆலயத்தை இடித்து விட்டு புதிதாக கட்டும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 2009ல் பாலஸ்தாபனம் செய்த போது நாங்கள் போட்ட திட்ட மதிப்பீடு ஆறரை லட்ச ரூபாய். ஆனால் தற்போது 8 லட்ச ரூபாய் வரை செலவாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் ஆலயத்தில் இருந்த மடப்பள்ளியை ஆக்கிரமித்திருந்த ஒருவரை சட்டரீதியாக காலி செய்ய 2 ஆண்டுகள் பெரும் போராட்டம் செய்ய வேண்டியதாயிற்று. திருப்பணிக்கு பொருளோ பணமோ தர தயாராக இருந்த யாரும், இந்த சட்ட சிக்கலை எதிர்கொள்ள தயக்கம் காட்டினார்கள்.

    ஆலயத்தின் குருக்கள், நான் மற்றொரு நண்பர் மட்டுமே எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. பிள்ளையார் எங்களின் மன உறுதியை சோதித்திருப்பார் போலிருக்கிறது. சட்டரீதியாக அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு இப்போது திருப்பணிகள் தொடர்கின்றன. (இவர்தான் கிட்டத்தட்ட 4 லட்ச ரூபாய் வரை செலவழித்திருப்பவர். உடல் உழைப்பை தவிர என்னால் ஒரு பைசா செலவழிக்க முடியவில்லை. ஆலயத்தின் எலட் ரிக்கல் வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். அந்த பொருட்கள் கூட சென்னையில் இருக்கும் எங்கள் நண்பர்தான் வாங்கித்தந்துள்ளார்.)

    இன்னும் ஒண்ணரை லட்ச ரூபாய்க்கு பணி காத்திருக்கிறது. தை மாதம் கும்பாபிஷேகம் நடத்தலாம் என்று நினைத்திருக்கிறோம். பிள்ளையார் எப்போது நடத்திக்கொள்ள முடிவு செய்திருக்கிறாரோ தெரியவில்லை.

    அதேபோல் எனது நண்பரின் தந்தை பூஜை செய்து வரும் சிவன் கோவில் திருவாரூர் பெரிய கோவிலில் இருந்து கிழக்கில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திருவாரூர் கோவில் ஆழித்தேர் திருவிழாவுடன் தொடர்புடைய அந்த ஆலயம் பற்றிய தகவல்களுடன் விரைவில் பின்னூட்டம் இடுகிறேன்.

    அந்த கோவிலைப்பற்றி காதில் விழுந்த சிறப்புக்களையும், கோவில் இருக்கும் நிலையையும் தினமணி கதிர், குமுதம் பக்தி ஸ்பெஷல், ராணி, தினகரன் போன்ற இதழ்களில் எழுதினேன். அந்த கட்டுரைகளை லேமினேட் செய்து கோவிலில் மாட்டி வைத்திருந்தோம்.

    அதைப் படித்து ஆர்வமான ஒரு தொழிலதிபர், இந்த ஆலயத்தைப் பற்றிய ஒரு பாடலை தஞ்சை சரஸ்வதிமஹால் நூல் நிலையத்தில் இருந்து தேடி எடுத்தார். மிகச் சிறிய பாடல்தான் அது. அது தந்த உந்துதலில் பஞ்ச பாண்டவர்கள் பூஜித்ததாக கூறப்படும் இந்த பஞ்ச லிங்க ஆலயம் மிகவும் மோசமான நிலையில் இருந்தை தற்போது 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அவர் திருப்பணியில் இறங்கி விட்டார்.

    ஆலயம் பிரமாண்டமான முறையில் சீரமைக்கப்பட்டு புதிய ராஜகோபுரத்துடன் கும்பாபிஷேகத்துக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகமும் தை மாதம் நடைபெறும் என்று நினைக்கிறேன். அபிமுக்தீஸ்வரர் மனதில் உள்ளதை யாரறிவார்?

    ReplyDelete
  110. Parvathy Ramachandran said...திரு. தனுசு அவர்களின் இரு கவிதைகளும் நன்றாக இருந்தன. ஆண்பாவம் கவிதைக்கு பாண்டியராஜன் படம் நல்ல தேர்வு (என்ன முழி முழிக்கிறார் பாவம்)
    நீலக்கன்னி கவிதைக்கு அறிவியல் சார்ந்த சொற்தேர்வு அருமை. மதன்கார்க்கியின் சாயல் தெரிகிறது. ஒரு முறைக்கு இரு முறை படித்தேன். மிக அருமை.

    நன்றி பார்வதி அவர்களே, வாத்தியாருக்கு என் மீது என்ன கோபமோ?இல்லையென்றால் அஜித் படத்தைப் போட்டு இருப்பாரே.

    ReplyDelete
  111. kmr.krishnan said...பேசாமல் ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கலாம். நாங்களும் தனுசு ஒரு 'பொயெட்'டும் கூட என்று சொல்லியிருப்போம்ல.ஹி ஹி ஹி...

    எங்கிருந்து எழுதுவது அவ்வளவுதான் சரக்கு.

    நன்றி கிருஷ்னன் சார்.

    ReplyDelete
  112. Parvathy Ramachandran said...தனுசு அவர்களே. தங்களின் தமிழறிவை எண்ணி எண்ணி வியக்கிறேன். 'வேற்றுப் பொருள் வைப்பணி' மிளிர்கிறது. (உ.ம்) 'இராமனை மகனாகப் பெற்ற என்னை' என்று கைகேயி கூறுவது. நீங்கள் மரபுக் கவிதைகள் பல‌ எழுத வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் .

    எல்லோருக்கும் பொதுவான அந்த இறைவன் நடத்திக்காட்டுவான் . நன்றி பார்வதி அவர்களே.

    இந்த திரு வெல்லாம் வேண்டாமே ,நீங்கள் 'திரு"ட்டு முழியை தான் சுருக்கி சொல்கிறீர்களோ என்று சந்தேகம் வருகிற்து.

    ReplyDelete
  113. ஜி ஆலாசியம் said...அனுபவக் கூற்று இருந்தும் ஒட்டு மொத்த
    ஆண்களின் பறை சாற்றும் கூடவே!
    அருமைக் கவிஞரே! வாழ்த்துக்கள்!!

    நீலக்கன்னியும் நித்தியக் 'கல்யாணியாய்'
    ஆலாபனை செய்கிறாள்...
    அருமை!!
    நன்றி ஆலாசியம்.

    ReplyDelete
  114. Bhuvaneshwar said...அன்பர் தனுசுவுக்கு மிகப்பெரிய applause தரவேண்டும் என ஆசைப்படுகிறேன்.
    அவரது முதல் கவிதை ரசிக்க வைத்தது. அதற்கு ஒரு சின்ன reflection பின்னூட்டம் போடுகிறேன். ஆனால் அது இந்த கவிதையின் விமர்சனம் அல்ல. அருமையான கவிதை, யதார்த்தத்தின் எதிரொலி.
    அடுத்த கவிதையில் "நாள்பட்ட ஒயினா" என்ற வரிகள் என்னை கவர்ந்தன. இவர் ஆங்கிலப்புலமையும் கொண்டவராக இருப்பார் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்,

    ரசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள் புவனேஷ்வர்.

    ReplyDelete
  115. minorwall said...கவிதையிலே படிக்கவே வேணாம் என்கிற அளவுக்கு சிலவற்றில் ஆழமான அர்த்தம் புரியாத வார்த்தைகள் இருந்து படுத்தி எடுக்கும்.இந்தமுறை தனுசுவின் கவிதை அதை உடைத்துவிட்டது..

    இரண்டாவது கவிதை சுக்குநூறாக்கிவிட்டது..

    அருமையாக அமைந்த ஆண்பாவத்து வரிகளை விட அடுத்த கவிதை பரிசுமழையைத் தள்ளிக் கொண்டு போய்விட்டது..

    மைனர்,உங்களை படிக்க வைத்ததே அந்த பரிசு மழையை தந்துவிட்டது. நன்றி மைனர்.

    ReplyDelete
  116. //அந்த கோவிலைப்பற்றி காதில் விழுந்த சிறப்புக்களையும், கோவில் இருக்கும் நிலையையும் தினமணி கதிர், குமுதம் பக்தி ஸ்பெஷல், ராணி, தினகரன் போன்ற இதழ்களில் எழுதினேன்.//

    ச‌பாஷ் சரண் சபாஷ்.உங்கள் எழுத்துவண்மையால் விளைந்த ஆக்கம் புத்துணர்ச்சி அளிக்கிறது.வாய்ச்சொல் அருளீர் என்று பாரதி கேட்டது இதைத்தான்.
    வாழ்க உங்கள் பணி.அபிமுக்தீஸ்வரர பற்றி எழுதுங்கள். சிறு காணிக்கை (பிள்ளையார் கோவிலுக்கு) எப்படி அனுப்பவேண்டும் என்றும் எழுதுங்கள்.

    ReplyDelete
  117. This comment has been removed by the author.

    ReplyDelete
  118. This comment has been removed by the author.

    ReplyDelete
  119. I've had some discussions, albeit heated arguments in a few topics, none so fascinating than that pertaining to faith.

    I wish to bring to your notice, the old tale of some men born blind, seeking to describe a pachyderm.

    Though blind, these folks were known to delight in beating about the mulberry bush in search of an exact description of the lordly Indian elephant "though all of them are blind, That each by his own observation, Might satisfy his mind." As expected, indeed as inevitable, "Each, in his own opinion, Exceeding stiff and strong, Though each was partly in the right, And all were in the wrong."

    That's no different in any way, from men seeking to describe the indescribable, save by his own direct conscious cognizance. Till then, to each man, his own.

    ReplyDelete
  120. This comment has been removed by the author.

    ReplyDelete
  121. மைனர்வாள், தங்கள் பாராட்டுக்கு நன்றி.
    அதே சமயம் reading your last comment, எனக்கு ஓர் ஐயம் எழுகிறது.
    ராவணன் பண்பாளன் என்றால் முதலில் மாற்றான் மனைவியான சீதையை எதற்காக கடத்தினானாம்?

    அவன் பண்பாளன் ஆயின் சீதையை, மாற்றான் மனைவியை கடத்தியதும் பண்புடைய செயல் தானோ?

    அல்லது கடத்திய பின்னர் பண்பாளனாக மாறி விட்டானா? இல்லையே அப்படியானால் பண்பு வந்த பின்னர் ராமனிடம் அவளை மீண்டும் சேர்த்து மன்னிப்பு கோரி இருக்க வேண்டுமே.........

    எதை வைத்து அவனை பண்பாளனாக காட்ட விழைகிறார்களாம்? தெரிந்தால் சொல்லுங்களேன், ப்ளீஸ்?

    ReplyDelete
  122. minorrwall:


    சீதையின் கற்பை தூக்கி நிறுத்த அது முதலில் வீழவில்லை...... இந்த மணி ரத்னம் யார்? அவருக்கும் ராமாயணத்துக்கும் என்ன தொடர்பு? இவர் ராம காதை நடந்த போது இருந்தாரா? அல்லது கனவில் வந்து யாராவது கதை சொன்னார்களா? இருப்பின் யார்? ஏதோ சில படங்களை எடுத்து விட்டதால் யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் சித்தரிக்கலாம் என்ற துணிவா? தெரியவில்லை.
    பிற சமயங்களை பற்றி இப்படி அவதூறாக பேசி விடுவார்களா? சனாதன தர்மத்தை பற்றி பேசுவார்கள். ஏனென்றால் நாம் கலாட்டா பண்ண மாட்டோம், என்ன கரி பூசினாலும் சும்மா இருப்போம்....... அதனால்...... இதை எல்லாம் ஆதாரமாக வைத்து கொண்டு மூல நூலை படிக்காமல் சீதையின் கற்பை பற்றி பேசுபவர்கள் தான் மிலேச்சர்கள் என்பது அடியேன் அபிப்ராயம்.
    பிறர் மத உணர்வுகள் புண்படும் படி பேச வேண்டாம் என ஏற்கெனவே உம்மிடம் வேண்டுகோள் விடுத்தாயிற்று.

    ReplyDelete
  123. ராவணன் பண்பாளன் இல்லை என்பது. அவன் கபட‌ சந்நியாசி வேடத்தில் வந்து,
    ராமனை சீதையை விட்டுப் பிரிக்க மாரீசன் மூலம் சூழ்ச்சி செய்து, சீதையை அபகரித்தது மூலம் அறிந்து கொள்ளலாம்.

    ராவண‌னுக்கு அவன் செய்யும் அதர்மத்தை சகோதரர்கள் எடுத்துக்கூறியும் மனைவிகூறியும் அவன் அந்த அதர்மத்தில் இருந்து விலகவில்லையே!பின்னர் அவன் எப்ப்டிப் பண்பாளன்?

    ReplyDelete
  124. ராவணன்...

    பதிவுக்கு தொடர்பில்லாததை
    பின் ஊட்ட பெட்டியில் இடவேண்டாம் என

    வாத்தியார் சொன்னதினால் ..
    வாய்ப்பு ஊட்டும்(வாய்ப்பூட்டும்)படி
    அமைதி கொள்கிறோம்.

    ReplyDelete
  125. //////////////Blogger kmr.krishnan said...

    //அந்த கோவிலைப்பற்றி காதில் விழுந்த சிறப்புக்களையும், கோவில் இருக்கும் நிலையையும் தினமணி கதிர், குமுதம் பக்தி ஸ்பெஷல், ராணி, தினகரன் போன்ற இதழ்களில் எழுதினேன்.//

    ச‌பாஷ் சரண் சபாஷ்.உங்கள் எழுத்துவண்மையால் விளைந்த ஆக்கம் புத்துணர்ச்சி அளிக்கிறது.வாய்ச்சொல் அருளீர் என்று பாரதி கேட்டது இதைத்தான்.
    வாழ்க உங்கள் பணி.அபிமுக்தீஸ்வரர பற்றி எழுதுங்கள். சிறு காணிக்கை (பிள்ளையார் கோவிலுக்கு) எப்படி அனுப்பவேண்டும் என்றும் எழுதுங்கள்.//////////////

    தங்களின் பக்திக்கு நன்றி. இரண்டு கோவில்களின் திருப்பணிக்கு முந்தைய நிலை, வேலைகள் நடைபெறும் நிலையில் உள்ளபோது உள்ள நிலை ஆகியவற்றின் படங்கள், ஆலயங்கள் பற்றிய செவிவழிச் செய்திகள் நான் தொகுத்து அனுப்பி பிரசுரமான தகவல்கள் ஆகியவற்றை கோர்வையாக உங்கள் பார்வைக்கு வைக்க ஒரு சில தினங்கள் அவகாசம் தேவைப்படுகிறது.

    உடனடியாக படிக்க விரும்புபவர்கள் 2009ல் நான் ஸ்கேன் செய்து பதிவேற்றிய இடுகைகளை http://tiruvarurtalkies.blogspot.in/ என்ற ப்ளாக்கில் சென்று படிக்கலாம்.

    ReplyDelete
  126. செய் அல்லது செத்து மடி - சொன்னது காந்தி அடிகள் என்று நினைக்கிறேன்............

    ReplyDelete
  127. Thanks to all writers and for comments also.My interest is increasing in the classroom and to know about god.
    Thanks to classroom 2007 & Teacher.

    In my house I believe god is there but my wife arguing with me that it is individual choice & perception.
    Any way after hard work of one week I enjoyed all the writings.
    G.Seenivasan
    Bharuch-Gujarat.

    ReplyDelete
  128. திருவாரூரில் தெற்குவீதி முழுவதும் வணிகத்தலமாக ஆகிவிட்டது. மேலவீதியில் பாதிதூரம் கோவில் கோபுரமும் கமலாலய திருக்குளமும்தான். மீதி இடம் கடைகள். வடக்கு வீதி ஒரு காலத்தில் வீடுகள் அதிகம் கொண்ட பகுதியாக இருந்தது. ஆனால் இப்போது தெற்குவீதியின் பரபரப்பை பூசிக்கொள்ளும் அளவுக்கு வணிக நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. கீழவீதியும் அப்படியே.

    இதை எல்லாம் நான் சொல்லக்காரணம், திருவாரூர் தேரோட்டம் என்பது பங்குனி உத்திரத்திருவிழாவில்தான் நடைபெறும். ஆண்டுக்கு 48 நாட்கள் (ஒரு மண்டலம்) திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உற்சவமும் சுவாமி வீதி உலாவும் உண்டு (நான் சொன்னதில் ஓரிரு நாட்கள் வித்தியாசம் இருக்கலாம்.மன்னிக்கவும்). வீடுகள் அதிகம் இருக்கும் பகுதி என்றால் ஒவ்வொரு வீட்டிலும் அர்ச்சனை என்று சுவாமி ஒரு சுற்று சென்று வர குறைந்தது 4 மணி நேரமாவது ஆகும்.

    ஆனால் சுவாமி வீதியுலா செல்லும் பாதை வணிகமயமாகி விட்டதால் அரை மணி நேரத்தில் வீதி உலா முடிந்து விடும்.(சாமியை யாரும்கண்டுக்க மாட்டாங்க) இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக ஆழித்தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்களுடன் எவ்வளவு விமரிசையாக நடைபெறுகிறது என்பது பலரும் அறிந்த செய்தியாகத்தான் இருக்கும்.

    இந்தப் புகழ் மிக்க தியாகராஜர் கோவிலின் தேரோட்டம் நடைபெறக்கூடிய பங்குன் உத்திரத்திருவிழாவிற்கு கொடியேற்றம் நடைபெறும்போது மண் எடுத்து பூமி பூஜை போட்டு முளைப்பாலிகை வளர்க்கப்படும். அப்போது கோவிலைச்சுற்றி ஒவ்வொரு திசையிலும் உள்ள ஒவ்வொரு கோவிலில் முக்கியமான சடங்குகள் நடைபெறும்.

    திருவாரூர் பெரிய கோவிலின் சண்டிகேஸ்வரர் முளைப்பாலிகை வளர்க்க மண் எடுக்கும் இடம்தான் மருதப்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் ஆலயம். இந்த கோவில் இருக்கும் பகுதியில் சென்னையில் உள்ள பிரபல பதிப்பகத்தார் வீடு வாங்கியுள்ளனர். அந்த வீட்டுக்கு வரும்போது இந்த சிவாலயத்தை பார்த்திருக்கிறார்கள். கோவிலைப் பற்றிய கட்டுரைகள் லேமினேட் செய்யப்பட்டிருந்ததைப் படித்து விட்டு, தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தில் இந்த ஆலயம் பற்றிய பாடல் இருந்ததை தேடிப்பிடித்து, அவர்கள் குடும்பத்தார் மட்டுமே (அண்ணன், தம்பி, மகள் என்று) குறிப்பிட்ட சிலர் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணியை ஏற்றுக்கொண்டார்கள்.

    அதனால் அந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேக சமயத்தில் எல்லா பக்தர்களும் பங்கு கொண்டால் போதுமானது என்ற சூழ் நிலைதான் இப்போது இருக்கிறது.

    ReplyDelete
  129. ஆனால் பிள்ளையார் கோவிலின் நிலை வேறு.

    சுமார் 500 சதுரடியில் மஹா மண்டபம், சுமார் 350 சதுரடியில் கர்ப்பக்கிருஹம், சுமாராக 300 சதுரடியில் அர்த்த மண்டபம் என்று திட்டமிட்டு வேலையை ஆரம்பித்தோம்.

    வேலை ஆரம்பித்து 4 மாதங்களில் மஹாமண்டபம் வரை மேற்கூரை (கான்கிரீட்) போட்டுவிட்டோம். அதன் பிறகுதான் தொய்வு.

    கோவில் இருக்கும் இடம் நான்கு சாலைகளின் சந்திப்பு. ஆலயத்தின் பக்க வாட்டில் இருக்கும் சாலை மிகவும் உயரமாக உள்ளதால், பழைய ஆலயத்தில் பிள்ளையார் இருந்த உயரத்தை விட சுமார் 5 அடி வரை அதிகமாக்கியிருக்கிறோம். இதனால் முதலில் ப்ளான் செய்ததை விட விமானத்தின் உயரத்தை கலசத்துடன் 13 அடியிலிருந்து மூன்று நிலைகளாக 23 அடி உயர்த்த வேண்டியதாயிற்று.எல்லா கோவில்களிலும் சுதை வேலைகள் தான் தாமதமாகும் என்று சொல்வார்கள். ஆனால் இந்த பிள்ளையார் கோவிலில் 21 சுதைகள் கொண்ட விமான வேலைகள் எளிதாக முடிந்து விட்டன.

    கர்ப்பக்கிரஹம், அர்த்த மண்டபம், மஹாமண்டபம் ஆகியவற்றில் தளம் (கிரானைட் மற்றும் டைல்ஸ் போடும் பணி ) முடிவடைந்து விட்டது. உள்ளே கிரானைட் போட்டாலும்,குழந்தைகள், பெரியவர்கள் உட்பட யாரும் நடக்க சிரமமில்லாமல் வழுக்காமல் இருக்க வேண்டும் என்று மஹா மண்டபத்தில் காலுக்கு பிடிப்பு கொடுக்கும் வகையில் சாதாரண டைல்ஸ் போட்டுவிட்டோம்.

    பிரகாரசுற்றுப்பாதை, ஒயரிங், ஆகிய வேலைகள் முக்கியமாக ஆனால் வெளிப்பார்வைக்கு முக்கியத்துவம் இல்லாத வேலைகள் மீதம் உள்ளன. சுதை, ஜன்னல், கேட் உள்ளட்டவைகளுக்கு பெயிண்டிங் தான் இப்போதைய பட்ஜெட்டில் மிகப்பெரிய தொகை கேட்கும் போல் இருக்கிறது. நான்கு காலம் யாகசாலையுடன் கும்பாபிசேக செலவு உட்பட எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் அதிக பட்சம் ஒண்ணரை லட்ச ரூபாய் மதிப்பீடு செய்திருக்கிறோம்.

    திருப்பணியை தலைமையேற்று செய்யும் நண்பன் செலவிட்ட தொகை 5 லட்சத்திற்கும் மேல் இருக்கும். ஆனால் அவன் பங்கு அதிகபட்சம் 3 லட்ச ரூபாய்க்குள் இருந்தால் போதும் என்று முடிவு செய்து குறிப்பிட்ட தொகையை அவன் வசம் மீண்டும் அளித்து வருகிறோம்.

    கம்பி, கிரில், கேட், கிரானைட் டைல்ஸ், சிமெண்ட் என்று அவ்வப்போது தேவைப்படுபவற்றை உபயதாரர்களே நேரடியாக வாங்கிக்கொண்டுவந்து தந்துவிட சொல்லிவிடுகிறோம். இப்படி ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைத்துக்கொண்டிருக்கும்போதே பல பள்ளங்களில் விழ நேரிடுகிறது. ஆனாலும் பிள்ளையார் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகிறோம்.

    கோவில் வரலாறு மிகவும் நீளமாகி விட்டது. எங்களின் நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்திய இரண்டு சம்பவங்களை சொல்லிவிடுகிறேன்.

    திருப்பணி ஆரம்பித்த உடனேயே கோவிலில் இருந்த ஆக்கிரமிப்பை காவல் நிலையம் மூலமாக அகற்ற முயற்சித்தோம். அப்போது பாதியை அந்த ஆக்கிரமிப்பாளர் அகற்றிக்கொண்டார். அன்று சங்கடஹர சதுர்த்தி.(06.10.2009) அதன் பிறகு பல பொய்ப்புகார்கள், போலீசாரின் மிரட்டல்கள், போலீஸ் ஸ்டேஷன், பெட்டிஷன் என்று நீண்ட போராட்டத்திற்குப்பிறகு அரசு தரப்பில் இருந்து ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பிறகு வேறு வழி இல்லாமல் ஆக்கிரமிப்பாளர் கோவிலில் இருந்து விலகியதும் சங்கடஹர சதுர்த்தி அன்றுதான்(12.01.2012).

    ReplyDelete
  130. புவனேஷ்வர் நான் கூறிய கருத்துக்கு பதில் சொல்லும்பொழுது பின்வருமாறு பதில் அளித்தீர்கள்....
    ///Bhuvaneshwar said... எல்லாருக்கும் எல்லாருடைய கருத்துக்களும் ஒத்து போய் விடுவதில்லை, அப்படி போக வேண்டிய அவசியமும் இல்லை, சகோதரி. யார் உரிமையையும் நான் மறுக்கவில்லை. எனது பதிவில் இருந்திருந்தால் அந்த வரிகளை சுட்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.///
    REF: http://classroom2007.blogspot.com/2012/06/manavar-malar.html?showComment=1338705211955#c1722374341953728097

    உங்கள் விருப்பத்தை மறுப்பானேன்...இதோ சுட்டிக் காட்டுகிறேன். நீங்கள் எழுதிய இந்தப் பின்னூட்டத்தை மீண்டும் ஒருமுறை படிதுவிடுங்களேன்.....

    REF: http://classroom2007.blogspot.com/2012/06/manavar-malar.html?showComment=1338731565539#c1800161677774688275

    ReplyDelete
  131. This comment has been removed by the author.

    ReplyDelete
  132. This comment has been removed by the author.

    ReplyDelete
  133. தேமொழி:

    நீங்கள் குறிப்பிட்ட பின்னூட்டம் குறித்து என்ன குற்றச்சாட்டு வைக்கப்போகிறீர்கள்?

    உங்களுக்கு எப்படியோ தெரியாது.

    எனக்கும் என்னைப்போன்ற பலருக்கும் சீதையும் ராமனும் அனுமனும் கண்ணனும் சாத்யகியும் திரௌபதியும் அர்ஜுனனும் அபிமன்யுவும் லக்ஷ்மணனும் ஊர்மிளையும் பரதனும் சுக்ரீவனும் பலராமனும் கௌசலையும் கைகேயியும் ஜடாயுவும் ஜாம்பவானும் அன்பிற்குரிய குடும்பத்தினர். எங்கள் இதயங்களிலும் வீட்டிலும் வாழ்பவர்கள்.

    அவர்களை பற்றி அவதூறு பேசினால் அதை கண்டிப்போம். இங்கே திறந்த மனது கட்சி சாராமை எல்லாம் வாதம் அல்ல. அவை விதண்டா வாதம்.

    இப்படி பேசுபவர்கள் தங்கள் வீட்டு பெண்மணியின் கற்பை பற்றி சம்பந்தமே இல்லாத, அவளை பற்றி அறியாத ஒருவன் பேசினான், படம் எடுத்தான் என்றால் சும்மா இருப்பார்களோ என்னவோ, தெரியாது. ஒரு வேளை "பண்பாளர்களாக", "வாங்க பேசலாம்" என்று அழைத்து காப்பி கொடுத்து "வெங்காய பஜ்ஜி" கொடுத்து உபசரித்து தங்கள் வீட்டு பெண்ணின் கற்பை பற்றி ஊரானோடு விவாதிப்பார்களோ என்னவோ. எனக்கென்ன தெரியும்? என்னால் முடியாது.

    இராமாயண மூல நூலே அறியாத அறிய விருப்பமில்லாத ஒருத்தர் சீதாதேவியை பற்றி களங்கமாக ஆதாரமே இல்லாமல் (மணி ரத்னம் படத்தை ஆதாரமாக கொள்வாரோ?) பேசினால், அதை கண்டிப்பது ஒவ்வொரு ஹிந்துவுக்கும் உள்ள உரிமை.

    ராமாயனதொடு தொடர்பு உள்ளது போல பொய் கதையை யாரோ படமெடுத்தால் அதை ராமாயணம் என்று சொல்லிக்கொண்டு அவதூறு பேச அலையும் மனிதர்களுக்கு நான் கொடுத்த மறுமொழி சரியானதே. பிறர் மனதை புண்படுத்த தயாராக இருந்தால் தங்கள் மனதுக்கு பிடிக்காத மறுமொழியையும் சகித்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

    எதை வேண்டுமானாலும் பேச்சுரிமை என்ற போர்வையில் பிதற்றலாம் என்று நிலைமை இன்று ஆகி விட்டது.
    உங்கள் கைத்தடியின் ஸ்வதந்த்ரம் எங்களது மூக்கு நுனி வரை தான்!

    முதலில் அதை எங்கள் மூக்கினுள் விட்டு ஆட்டியது யார்? அதற்கு மறுமொழி கொடுத்தேன்.

    நானாக யாரையாவது வேண்டுமென்றே வம்புக்கிழுத்து சீண்டியிருந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete
  134. இங்குள்ள அனைவரும் பிறர் sensitivities உணர்ந்து, கண்ணியத்தோடு எல்லைகளை மதித்து பின்னூட்டங்கள் இட்டால் cordial சூழ்நிலை நிலவுமே. பிறர் மத உணர்வுகளை ஏன் புண்படுத்த வேண்டும்? சீதையின் கற்பை பற்றி கேள்விக்குறியாக இங்கே பிரஸ்தாபிக்க வேண்டிய அவசியம் என்ன?

    நையாண்டி, சீண்டல் மற்றும் குத்தல் பேச்சுக்களும், குறை கண்டுபிடிக்கவே காத்திருக்கும் கழுகுப்பார்வைகளும், மிரட்டல்களும் மனமுதிர்ச்சி பெற்ற adults செய்யும் காரியங்களாக எனக்கு படவில்லை.

    வாத்தியாரின் அறிவுரை, அவரை வழி மொழிந்தே இதனை எழுதுகிறேன். மனமகிழ்வோடு இதனை எழுதுகிறேன் என்றால் அது பொய்யாக இருக்கும்.

    நானாக இது வரை யாரையும் வம்புக்கு இழுக்கவில்லை. இழுக்கவும் மாட்டேன்.

    முடிந்தவரை அடுத்தவரை புண்படுத்தாமல் இருக்கவே விழைகிறேன். அதை பலவீனமாக கொண்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என நினைக்க வேண்டாம்.

    நான் ஒன்றும் பெரிதாக மறுமொழி கொடுத்து விடப்போவதில்லை. அமைதி தான் காப்பேன். ஆனால் பொது இடத்தில் எல்லாருக்கும் புரியும். யார் என்ன பண்ணுகிறார்கள் என்று.

    எனது சக மாணவர்கள் தங்கள் மின் பிம்பத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என எண்ணி நட்போடு இதை கூறி அமைகிறேன்.

    இந்த சபையில் அறிவில் பெரியோர் பலரும் உள்ளீர்கள். நான் தவறாக பேசி இருப்பின் மன்னிக்கவும்.

    பிரியங்களுடன்,
    புவனேஸ்வர்.

    ReplyDelete
  135. KMRK ஐயா, இது என் நேயர் விருப்பம்.... உங்கள் படைப்பில் நீங்கள் அறிமுகப் படுத்திய முதியோர் இல்லப் பாட்டி...
    மதம் மாறி திருமணம் செய்துகொள்ள மகளுக்கு உறுதுணையாக இருந்து, மகளுக்கு குழந்தை பிறந்ததை பார்க்க சென்றதால் வீட்டில் இருந்து துரத்தப்பட்டாலும், கடைசிவரை தன் காலிலேயே நின்று உழைத்து வாழ்ந்து, முதியோர் இல்லத்திலும் அனைவருக்கும் உதவி செய்த பாட்டி என்னைக் கவர்ந்தவர்.

    ReplyDelete
  136. This comment has been removed by the author.

    ReplyDelete
  137. //படத்தை ரிலீஸ் பண்ணாமல் அப்போதே போராட்டங்களை நடத்தியிருந்தால் இப்படி விமர்சனங்கள் வந்திருக்காது.//

    அப்படிச் செய்வது இங்கே வழக்கம் இல்லை. கருத்துச் சுதந்திரம் அதிகம் உள்ள நாடு இது.யாரையும் யாரும் மாற்ற முடியாது.

    சாதாரணமாக சீக்கிரம் புகழ் பெறவேண்டுமானால் மக்கள் மனதில் பல்லாண்டுகளாக இடம் பிடித்துள்ள நம்பிக்கைகள், மரபுகள்,பழக்க வழக்கங்களைக் கேள்வி கேட்டு விமர்சனம் செய்ய வேண்டும்.அது மக்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும். சொன்னவருக்குப் புகழும் கிடைக்கும்;சில சமயம் பணமும் கிடைக்கும்.எடைக்கு எடை வெங்காயம்,வெள்ளைப் பூண்டு கூட கிடைக்கும்.அந்தப் புகழ், பணம் தந்த போதையில் எதை வேண்டுமானாலும் பேசலாம்.

    மணிரத்தைனம்கள் 'துணிவுடன்' எடுத்துக்கொள்ளும் சப்ஜெக்ட் எந்த சமுதாயம் இதை அலட்சியப்படுத்திக் கடந்து போகுமோ அவர்களுடையதை எடுத்துக் கொள்ளும்.நிச்சயமாக அடி கிடைக்கும் என்று தெரிந்த சமுதாயத்தின் செய்திகளை எடுத்துக் கொள்ளாது. வேண்டுமானால்
    தான் எவ்வளவு 'செகுலர்' என்று காண்பித்துக் கொள்ள அவர்களுக்கு மலர்ப் பாவாடை கூட விரிக்கும்.

    சைகலாஜிசல் கவுன்சலிங் என்று வெளிநாட்டில் எவ்வளவு தொகை செல‌வு செய்கிறார்கள்.நம் நாட்டில் எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் படிக்காத பாமரர்கள் கூட ஒரு ராமாயண, மஹாபாரத சம்பவத்தை எடுத்துக் கூறி காசு செலவில்லாமல் கவுன்சலிங் செய்து விடுவார்கள்.அந்த அளவில் மக்களுடன் மக்களாக ராமாயண,மஹாபாரத பாத்திரங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  138. அமைதி! அமைதி! அமைதி!

    சீதை, ராவணன் குறித்த விவாதம் திசை மாறுவதால், அது குறித்து இது வரை வந்தது போதும். இனி வேண்டாம்.

    இந்தப் பதிவிற்கு வரும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்! பெட்டி பூட்டப்பட்டுள்ளது!
    வகுப்பறையின் கண்ணியம், கட்டுப்பாட்டைக் காக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்!
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  139. என் கதையை வெளியிட்டதற்கு நன்றி சார்!

    'விடாமுயற்சி' என என் பாணியில் சொன்னால் அத்துடன் சூன் 9 மற்றும் 11ஆகிய தேதிகளில் நான் முயற்சியே செய்யாமல் வரப்போகும் கடவுள் மெயின் பிக்சருக்கு இது வெறும் ட்ரெயிலர் 'டைட்டில் சாங்' ஆக இருக்குமோ? //

    ட்ரெயிலர் 'டைட்டில் சாங்' ஆர்வத்தைத் தூண்டுகிறது. மெயின் பிக்சரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    பார்வதியின் ஆக்கம் நல்ல எழுத்து நடையுடன் அருமையாக அமைந்துள்ளது.

    வித்தியாசமான மனிதர்தான் மோகன் ஸ்ரீவஸ்தவா.

    ReplyDelete
  140. தஞ்சையின் சிறப்புகளை மட்டுமே எழுதி இருக்கிறீர்களே கிருஷ்ணன் சார், அங்கே வாழும் மனிதர்கள் பற்றி பாசிடிவாகச் சொல்ல எதுவுமில்லையா?

    படைப்பின் ரகசியத்தை மைனர் சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.

    அடப்பாவமே! புலிகட் தனுசுவை அவர் மனைவி இப்படி புலம்ப வைத்துவிட்டாரே! அப்படியும் போராடி இரண்டாவது கவிதை எழுதியிருக்கீங்க பாருங்க, அங்கதான் நீங்க நிக்கறீங்க!!!!

    புவனேஸ்வரி ஆக்கம் நல்ல எழுத்துனடையுடன் கோர்வையாக எழுதப்பட்டிருக்கிறது.

    சபரி பகிர்ந்த படம் சூப்பெரோ சூப்பர்!

    ஆனந்தமுருகனின் நகைச்சுவை அனைத்துமே சிரிக்க வைத்தன. உங்க பிதாஜி சொன்ன இரண்டில் நீங்க எதைப் பின்பற்றிநீங்கன்னு சொல்லவே இல்ல??????

    ReplyDelete
  141. இராஜராஜேஸ்வரி மற்றும் உதயகுமாருக்கு என் நன்றிகள்!

    சுந்தரி இது என்ன, கதை எழுது எழுதுன்னு சொல்லிட்டு, காப்பி பேஸ்ட் ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  142. நையாண்டியெல்லாம் இறைவனைப் பண்ணலாம்.அவர் கோபித்துக் கொள்ளவே மாட்டார்//

    நையாண்டியா, அப்படின்னா என்னா!!!!

    அவர்கள் இருவரும் தனித்தனி அறையில் இருந்திருக்க வாய்ப்பு இல்லையா?

    நல்ல ஆக்கம் தந்த உமாஜிக்கு வாழ்த்துக்கள்.// நன்றி சார்!

    ReplyDelete
  143. தமாஷான உரையாடலில் தன் கருத்தை கதையாக்கிய உமாவுக்கு பாராட்டுக்கள்.தெய்வம் இருப்பது உன்மை, என்னிடம் கயிலை நாதனாகவும் உங்களிடம் அல்லாவாகவும்
    தேமொழியிடம் யேசுவாகவும் அய்யர் அவர்களிடம் பாடலாகவும் கிருஷ்னன் சாரிடம் தொண்டாகவும் ஏதோ ஒரு ரூபத்தில் அவன் இருப்பது உன்மை.//

    பாராட்டுக்கு நன்றி தனுசு! (நம்ம ஜட்ஜே சொல்லிட்டாரு, அப்பீலே இல்ல!!!!!)

    ReplyDelete
  144. உமாவின் கற்பனையே கற்பனை. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மட்டும் கவனித்து ரசித்தேன்.
    கதை வசனம் எழுதுவதில் உமாவை யாரும் மிஞ்ச முடியாது போலிருக்கிறது.//

    நன்றி தேமொழி!

    (கூடவே... பார்வதி சிவனிடம் போய் கடவுள் இருப்பதை உணர்த்த சொல்லி ஏன் விண்ணப்பம் செய்ய வேண்டும், அவரே கடவுள் இல்லையா, அவரே உணர்த்தினால் என்ன? என்று அபத்தமாக நினைக்க ஆரம்பித்த பொழுது பார்வதியே வந்து பதில் சொன்னார். ஹி. ஹி. ஹீ...//

    ஹி ஹி நாம இன்னும் கொஞ்சம் வளரணுமோ!!!!!

    ReplyDelete
  145. ஆஹா.. ரொம்ப நாட்களுக்குப்பிறகு சகோ உமா அவர்களின் ஆக்கம்..//

    நன்றி அய்யர் அவர்களே!

    ReplyDelete
  146. திருமதி. உமாவின் கற்பனை உரையாடல் அருமை. உண்மையிலேயே மிக நல்ல கற்பனை//

    நன்றி பார்வதி!

    ReplyDelete
  147. உமாவின் கற்பனை கதை நன்றாக இருந்தது //

    நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  148. சகோதரி உமா அவர்கள் உம்மாச்சி கதை (சாமி கதை) சொன்னது சூப்பர். கதையின் ஆழம் அற்புதம். பெரிய கருத்தை இலகுவாக சொல்லி இருக்கிறார். அவரிடம் நீறு பூத நெருப்பு போல படைப்பாற்றல் இருக்கிறது. வாழ்த்துக்கள்......//

    நன்றி புவனேஸ்வர்!

    ReplyDelete
  149. நல்ல கற்பனை..
    (விட்டால் போதுமென்று) சென்று வா! என்றே சொல்லத் தோன்றுகிறது..//

    என்ன இது?????? நான் உங்களை மனதில் நினைத்து இந்தக் கதையை எழுதினால் இப்படி ஒரு கம்மேண்டா? சரி சென்று வருகிறேன்!!!!

    ReplyDelete
  150. படித்துக் கமேன்ட்டிய சீனிவாசனுக்கு என் நன்றிகள்!

    ReplyDelete
  151. ///////Bhuvaneshwar said...
    இங்குள்ள அனைவரும் பிறர் sensitivities உணர்ந்து, கண்ணியத்தோடு எல்லைகளை மதித்து பின்னூட்டங்கள் இட்டால் cordial சூழ்நிலை நிலவுமே. பிறர் மத உணர்வுகளை ஏன் புண்படுத்த வேண்டும்? சீதையின் கற்பை பற்றி கேள்விக்குறியாக இங்கே பிரஸ்தாபிக்க வேண்டிய அவசியம் என்ன?

    பிரியங்களுடன்,
    புவனேஸ்வர்.///

    ஏதோ ஒரு வகையில் இந்து சமயத்தைச் சார்ந்த நான் அனைவரும் போற்றி வணங்கும் கற்பிலக்கணம் சீதா தேவியாரையும், ஆண் கற்புக்கு இலக்கணமாகச் சொல்லப்படும் ஒரே இந்துக் கடவுளான ஸ்ரீ ராமப்பிரபுவையும் கண்ணியக் குறைவான விமர்சனங்களின் மூலம் இங்கு கூடியிருந்து ஆன்மிகத்தில் வழிகாணும் அனைவரின் மனமும் புண்படும்படி நடந்துகொண்டேன் என்றே உணர்கிறேன்..

    புவனேஷ்ஷின் வேண்டுகோளை ஏற்று, எனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து நடந்தவற்றை மறந்துவிடும்படியும் தேவையில்லாத இந்தப் பின்னூட்டங்களை நானே டெலிட் செய்தும் விடுகிறேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்..

    அன்புடன்,
    மைனர்..

    ReplyDelete
  152. Uma said..பாராட்டுக்கு நன்றி தனுசு! (நம்ம ஜட்ஜே சொல்லிட்டாரு, அப்பீலே இல்ல!!!!!)

    என்னையா சொல்றீங்க,எந்த சபைக்கு நான் நாட்டாம புரியலியே.

    ReplyDelete
  153. மைனர் I'm really proud of you .
    "ஏதோ ஒரு வகையில் இந்து சமயத்தைச் சார்ந்த நான்" என்று குறிப்பிட்டுள்ளீர்கள், உண்மை ...அதனால் ஆன்மீகவாதிகளாக தன் சமயத்தை ஆராய்பவர்களுக்கு உள்ள பிறப்புரிமை போல, உங்களுக்கும் அதன் எதிர்புறம் நின்று தன் சந்தேகங்களைக் கேட்கும் பிறப்புரிமை இருக்கிறது.
    சமய சந்தர்ப்பம் இல்லாமல் உங்கள் கருத்துக்களை பேசாமல், அதைப் பற்றிய பதிவு வந்தபொழுது மட்டும்தான் உங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளீர்கள். அதையும் பொதுக்கருத்தாக, குறிப்பிட்ட ஒருவரையும் தாக்கும் எண்ணமின்றி வாத்தியாரின் அறிவுரை விதிகளை மீறாமல் கூறியுள்ளீர்கள்.
    ஆனால் அந்தக் கருத்துக்களை பிறர் புண்படுத்துவதாகக் கருதும் பொழுது, தேவையே இல்லாவிட்டாலும் கூட வருத்தம் தெரிவித்து நீக்கிய உங்கள் பெருந்தன்மை பாராட்டுக்குரியது.

    சமீபத்தில் ஆன்மீகவாதிகளுக்கு பண்பு என்ற கட்டுப்பாடு உண்டு மீறினால் விமர்சிக்கப்படுவார்கள், நாத்திகர்கள் எனப்படுபவர்கள் அதைப் பற்றி கவலைப் படப் போவதில்லை என்று KMRK ஐயா சொன்னதும் நினைவு வந்தது. சிலநாட்களுக்குள்ளேயே அது தவறு என்று உங்கள் செய்கையினால் உணர்தி விட்டீர்கள். நான் பார்த்தவரை கடவுள் உண்டா என்று கேள்வி எழுப்புபவர்களுக்கே, கடவுளை நம்புபவர்களை விட சகமனிதர்கள் உரிமை (ஜாதி, பெண்கள் எனப் பிரிவுகள்) பறிக்கப்படுவதைப் பார்த்து அதிக கோபமும் வருகிறது, அவர்களைவிட அதிக சகிப்புத்தன்மையும் இருக்கிறது.

    நான் வகுப்பறைக்கு வெளியே நின்று படித்துவிட்டு சென்று கொண்டிருந்த காலத்தில், கைம்பெண்களைக் குறிக்கும் வார்த்தைகளை கேவலமாக உபயோகிப்பதற்கு நீங்கள் கண்டனம் தெரிவித்தபொழுதுதான் உங்கள் மீது கவனம் திரும்பியது. அப்பொழுது பாராட்டி எழுதும் அளவிற்கு பரிச்சயம் ஆகவில்லை. இப்பொழுது சிலசமயங்கள் கடிதவழி உரையாடினாலும் இந்தப் பாராட்டை வகுப்பறையில் சொல்லக் காரணம், குறைகள் சுட்டிக் காட்டப்படுவது பகிரங்கமாக இருக்கும்பொழுது, பாராட்டும் அவ்வாறே இருக்கவேண்டும் என்பதினால்தான். மாண்புமிகு என்று நான் சிலசமயம் விளையாட்டாக உங்களை அழைத்தாலும் நீங்கள் அந்தப் பட்டத்திற்கு உரியவர்தான்.

    ReplyDelete
  154. @தேமொழி and all

    அடுத்தவர் இதயம் புண்படுகிறது என்பது ஒரு காரணம்,உண்மையில் எனது இதயமே புண்பட்டிருக்கிறது..
    மக்கள் எல்லோரும் நலமாக வாழ வாழ்வாதாரம் முக்கியம்..அவர்களின் வாழ்வையும் தாண்டி,வாழ்வே முடிந்துவிடாமல் இருக்க,முடிந்தபின்னும் மானுட ஆன்மா உயர்நிலையை அடைய என்று பல வழிகளிலே வாழுகின்ற வாழ்க்கையிலும்,வாழ்ந்த பின்னுமாய் கடவுள் நம்பிக்கை மனிதனுக்கு பலம் கொடுப்பதென்னவோ உண்மை..

    என்னைச் சுற்றிலும் உள்ள, இதுவரை நான் பார்த்த,கடந்து வந்த உறவுகள் அனைத்துமே, ஏன், பல சமயங்களிலே நானுமே வாழ்வின் விளிம்பிலே இருக்கும் சோதனையான கட்டங்களிலே இப்படி ஏதாவது சுப்ரீம் பவர் இருந்து சில பிரச்சினைகள் தீராதா என்று அங்கலாய்ப்பதுண்டு..

    அப்படி நம்பிக்கை தரும் ஒரு அம்சத்தை நாமே இல்லையென்று சொல்லி நம்பிக்கையைக் குலைத்துவிடும் முயற்சிகளில் இறங்குதல் கூடாது என்றுதான் நான்காண்டு காலமும் பொறுமையாகவே எதிர்க்கருத்துக்கள் சொல்லாமலே தவிர்த்து வந்தேன்..

    சிலசமயங்களில் பெருமையும்,சிறுமையும் கண்களை மறைக்கும்போது மனிதன் நிதானம் இழப்பது,திடீர் முடிவுகளை எடுத்து விடுவது வழக்கம்தான்..நானும் மனிதனே..எனக்கும் விவாதங்களின் போக்கு அப்படி ஒரு நிலையை எடுக்கச் செய்துவிட்டது..
    ஆனந்த்,அய்யர்,புவனேஷ் என்று அனைவரும் தொடுத்த வார்த்தை வீச்சுக்கள் என்னை எதிர் நிலையிலிருந்தே விவாத மனநிலையைத் தொடர்ந்தும் தூண்டிவிட்டது.. நானும் எடுத்த நிலைப்பாட்டிலிருந்து மாறி திசை திரும்பிவிட்டேன்..
    ஆனால் அவர்கள் அனைவரின் வேகத்துக்கும்,உணர்வுக் கொந்தளிப்புக்கும் முகாந்திரம் உள்ள சில விஷயங்களை நானும் தொடர்ந்தும் எழுதிவந்துவிட்டேன்..
    இதனை இத்துடன் முடிப்பது நல்லது என்று சொல்லி
    'அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு' என்று பிறருக்காகவும் நம்மைச் சார்ந்த சொந்தங்களுக்காகவும்,நமக்காக்கவுமே 'இறைவன் வருவான்.. அவன் என்றும் நல்வழி தருவான்' என்று பாடி காலம்காலமாய் இருக்கும் நம்பிக்கை நமக்கும் சேர்த்து நம்பிக்கையை வழங்கட்டும் என்றே சொல்லி, எனக்கு உணர்த்தச் சொல்லி இறைவனை வேண்டிய வாத்தியார், சூரித் தாத்தா, தஞ்சாவூரார், அய்யர்,KMRK ,ஆலாசியம், உமா,ஆனந்த்,தனுசு,பார்வதி, புவனேஷ், விடுபட்ட நல்ல உள்ளங்கள் என்று அவைவருக்குமே நன்றியைச் சொல்லி இறைசிந்தனையே இந்த உணர்வை, உணர்த்தலைத் தந்தது என்று உள்ளம் நெகிழ்ந்து சொல்லி வகுப்பறை சக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கங்களையும்,வாழ்த்துக்களையும் கூறி விடைபெறுகிறேன்..நன்றி வணக்கம்..

    ReplyDelete
  155. Minorwall:
    There is no need to apologize at length.
    But the fact that you do so reflects that you are an honorable man.
    Every one errs, and when that happens to the extent of hurting others, it's natural that they retort, which is no different from what has been orchestrated here.
    I do not carry grudges forward. Nor am I an authority to forgive, just another ordinary human being with his own frailty, fragility, faults and fallibility....
    Am glad sanity prevails once again here!
    Thanks for your comments and the initiative.
    As I always say, let's respect boundaries and sensitivities, and matters should be fine.
    If I had hurt you in any way, I apologize too.
    Peace.

    ReplyDelete
  156. , எனக்கு உணர்த்தச் சொல்லி இறைவனை வேண்டிய வாத்தியார், சூரித் தாத்தா, தஞ்சாவூரார், அய்யர்,KMRK ,ஆலாசியம், உமா,ஆனந்த்,தனுசு,பார்வதி, புவனேஷ், விடுபட்ட நல்ல உள்ளங்கள் என்று அவைவருக்குமே நன்றியைச் சொல்லி இறைசிந்தனையே இந்த உணர்வை, உணர்த்தலைத் தந்தது என்று உள்ளம் நெகிழ்ந்து சொல்லி வகுப்பறை சக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கங்களையும்,வாழ்த்துக்களையும் கூறி விடைபெறுகிறேன்..நன்றி வணக்கம்..//

    மைனர் என்ன இது? எதற்கு விடைபெறவேண்டும்? நான் உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அப்படி ஏதுமிருக்காது என்று நம்புகிறேன்.

    உங்கள் கொள்கையைப் பின்பற்ற உங்களுக்கு முழு உரிமை உள்ளது, அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. நான் உங்களுக்கு உணர்த்தச் சொல்லி இறைவனிடம் நிச்சயம் வேண்டவில்லை. உங்களை நினைத்து கதை எழுதினேன் என்று சொன்னது, உங்கள் கமெண்ட் இதற்கு என்னவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே எழுதினேன். ஆனால் நீங்கள் சுருக்கமாக கமெண்ட் போட்டதால் அப்படிக்கூறினேன்.

    இறைவனைத் திட்டவும் உங்களுக்கு உரிமை உள்ளது. இறைவனை நம்பும் நாங்களே சில சமயங்களில் எப்படி சண்டை போட்டு திட்டியிருக்கோம்? ப்ளீஸ், நீங்கள் வழக்கம்போல் வகுப்பறை வரவேண்டும் என்பது என் அவா. ஏமாற்றம் கொடுக்கவேண்டாம்.

    ReplyDelete
  157. பெருமதிப்பிற்குரிய மைனர் அவர்களுக்கு,

    உமாவின் முந்தைய கமென்ட்டை நானும் வழிமொழிகிறேன். நீங்கள் சொன்னதில் எனக்கு வருத்தம் தான். ஆனால் அதை விட பலப்பல மடங்கு வருத்தம் நீங்கள் விடைபெறுவதாகச் சொன்னது. ஒரு போதும் கண்ணியம் குறையாது இருக்கும் உங்களது கருத்துரைகள். யாராவது மனம் வருந்துவதை உணர்ந்தால் உடனே ஈகோ பார்க்காது மன்னிப்புக் கேட்பது (இப்போது போலவே) உங்கள் தனிச் சிறப்பு.
    நம் வாழ்வில் பலரைப் பார்க்கிறோம். சிலரோடு பழகுகிறோம். அதிலும் மிகச்சிலரை மட்டுமே, உடன்பிறந்தவரைப்போல் உணர்ந்து பழகுகிறோம். உங்களை அப்படித்தான் நான் நினைத்திருக்கிறேன். தாங்கள் 'விடைபெறுகிறேன்' என்றது இந்த விவாதத்திலிருந்து மட்டும் இருக்கட்டும். தயவு செய்து, நான் உங்கள் மனதை வருத்தப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். வகுப்பறையில் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  158. @உமா, பார்வதி ராமச்சந்திரன்,
    தொடர்ந்து வளவளன்னு கமென்ட் அடிச்சுட்டிருக்க வேணாம்; இன்னிக்கு இத்தோட முடிச்சுக்கலாம்னு நினைச்சு சொன்னேன்..
    ஒரேயடியா பேக் அப் ன்னு நினைச்சுட்டீங்க..
    நானும் உங்களைப் போலே வாரத்துக்கு ஒரு நாள் தான் வந்து போயிட்டுருக்கேன்..(@உமா )
    கொஞ்சம் யோசனை பண்ணிப் பார்த்தா வரவர ரொம்ப டிஸ்கஷன்ஸ் -
    ஒண்ணு மொக்கையாப் போகுது.. இல்லே எல்லாமே ஹாட்டா, சீரியஸா போகுது.. ஒருவேளை, குரு ட்ரான்சிட் ஆன எஃபெக்ட்டா இருக்குமோ?
    ரிலாக்ஸ்டா, பழைய டீம் இருந்தப்போ இருந்த ஒரு கலகலப்பே ..இல்லே..
    கொஞ்ச காலம் ஒரேயடியா பேக் அப் ஆனாதான் என்னன்னு யோசிக்கிறேன்..
    அன்பு உள்ளங்களோட பழக கிடைத்த வாய்ப்பை எளிதா உதறுகிரோமோ என்றும் தோன்றுகிறது..
    மூடைப் பொறுத்து எப்படிப் போகுதுன்னு பார்க்கலாம்..

    ReplyDelete
  159. /////Blogger minorwall said...
    @உமா, பார்வதி ராமச்சந்திரன்,
    தொடர்ந்து வளவளன்னு கமென்ட் அடிச்சுட்டிருக்க வேணாம்; இன்னிக்கு இத்தோட முடிச்சுக்கலாம்னு நினைச்சு சொன்னேன்..
    ஒரேயடியா பேக் அப் ன்னு நினைச்சுட்டீங்க..
    நானும் உங்களைப் போலே வாரத்துக்கு ஒரு நாள் தான் வந்து போயிட்டுருக்கேன்..(@உமா )
    கொஞ்சம் யோசனை பண்ணிப் பார்த்தா வரவர ரொம்ப டிஸ்கஷன்ஸ் -
    ஒண்ணு மொக்கையாப் போகுது.. இல்லே எல்லாமே ஹாட்டா, சீரியஸா போகுது.. ஒருவேளை, குரு ட்ரான்சிட் ஆன எஃபெக்ட்டா இருக்குமோ?
    ரிலாக்ஸ்டா, பழைய டீம் இருந்தப்போ இருந்த ஒரு கலகலப்பே ..இல்லே..
    கொஞ்ச காலம் ஒரேயடியா பேக் அப் ஆனாதான் என்னன்னு யோசிக்கிறேன்..
    அன்பு உள்ளங்களோட பழக கிடைத்த வாய்ப்பை எளிதா உதறுகிரோமோ என்றும் தோன்றுகிறது..
    மூடைப் பொறுத்து எப்படிப் போகுதுன்னு பார்க்கலாம்..///////

    குரு, சனி கோள்சாரம் எல்லாம் உங்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கில்லையா? நானும் சமயங்களில் நேரமின்மை காரணமாகவும் வேலைப் பளுவின் காரணமாகவும் வகுப்பறையை மூடிவிடலாமா என்று நினைப்பதுண்டு. அடுத்த நொடி உங்களைப் போன்ற அன்புள்ள உள்ளங்கள் (மொத்தம் 3,250 பேர்கள்) கூட்டமாகக் கண்முன் வந்து நிற்பார்கள். ” வாங்கய்யா வாத்தியரய்யா! வரவேற்க வந்தோமைய்யா” என்ற பாடல் வரிகளும் கோரசாக ஒலிக்கும்.

    அப்புறம்?

    அப்புறம் என்ன? வகுப்பறையைத் தொடர்ந்து நடத்துவதன் ரகசியமும் அதுதான்!

    ReplyDelete
  160. /////// SP.VR. SUBBAIYA said... குரு, சனி கோள்சாரம் எல்லாம் உங்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கில்லையா? நானும் சமயங்களில் நேரமின்மை காரணமாகவும் வேலைப் பளுவின் காரணமாகவும் வகுப்பறையை மூடிவிடலாமா என்று நினைப்பதுண்டு. அடுத்த நொடி உங்களைப் போன்ற அன்புள்ள உள்ளங்கள் (மொத்தம் 3,250 பேர்கள்) கூட்டமாகக் கண்முன் வந்து நிற்பார்கள். ” வாங்கய்யா வாத்தியரய்யா! வரவேற்க வந்தோமைய்யா” என்ற பாடல் வரிகளும் கோரசாக ஒலிக்கும்.
    அப்புறம்?
    அப்புறம் என்ன? வகுப்பறையைத் தொடர்ந்து நடத்துவதன் ரகசியமும் அதுதான்!////////

    வாங்கய்யா வாத்தியரய்யா! உங்க கூட பேசியே ரொம்ப நாளாச்சு..
    என்னதான் இருந்தாலும் நீங்க ஷிப் கேப்டன்..
    நாங்கல்லாம் பயணிகள்தானே?
    எப்போ வேணும்னாலும் எஸ்கேப் ஆகலாம்..
    உங்களாலே அப்புடி முடியுமா?

    ReplyDelete
  161. //////////தேமொழி said...
    மைனர் I'm really proud of you .
    "ஏதோ ஒரு வகையில் இந்து சமயத்தைச் சார்ந்த நான்" என்று குறிப்பிட்டுள்ளீர்கள், உண்மை ...அதனால் ஆன்மீகவாதிகளாக தன் சமயத்தை ஆராய்பவர்களுக்கு உள்ள பிறப்புரிமை போல, உங்களுக்கும் அதன் எதிர்புறம் நின்று தன் சந்தேகங்களைக் கேட்கும் பிறப்புரிமை இருக்கிறது.
    சமய சந்தர்ப்பம் இல்லாமல் உங்கள் கருத்துக்களை பேசாமல், அதைப் பற்றிய பதிவு வந்தபொழுது மட்டும்தான் உங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளீர்கள். அதையும் பொதுக்கருத்தாக, குறிப்பிட்ட ஒருவரையும் தாக்கும் எண்ணமின்றி வாத்தியாரின் அறிவுரை விதிகளை மீறாமல் கூறியுள்ளீர்கள்.
    ஆனால் அந்தக் கருத்துக்களை பிறர் புண்படுத்துவதாகக் கருதும் பொழுது, தேவையே இல்லாவிட்டாலும் கூட வருத்தம் தெரிவித்து நீக்கிய உங்கள் பெருந்தன்மை பாராட்டுக்குரியது.

    சமீபத்தில் ஆன்மீகவாதிகளுக்கு பண்பு என்ற கட்டுப்பாடு உண்டு மீறினால் விமர்சிக்கப்படுவார்கள், நாத்திகர்கள் எனப்படுபவர்கள் அதைப் பற்றி கவலைப் படப் போவதில்லை என்று KMRK ஐயா சொன்னதும் நினைவு வந்தது. சிலநாட்களுக்குள்ளேயே அது தவறு என்று உங்கள் செய்கையினால் உணர்தி விட்டீர்கள். நான் பார்த்தவரை கடவுள் உண்டா என்று கேள்வி எழுப்புபவர்களுக்கே, கடவுளை நம்புபவர்களை விட சகமனிதர்கள் உரிமை (ஜாதி, பெண்கள் எனப் பிரிவுகள்) பறிக்கப்படுவதைப் பார்த்து அதிக கோபமும் வருகிறது, அவர்களைவிட அதிக சகிப்புத்தன்மையும் இருக்கிறது.


    நான் வகுப்பறைக்கு வெளியே நின்று படித்துவிட்டு சென்று கொண்டிருந்த காலத்தில், கைம்பெண்களைக் குறிக்கும் வார்த்தைகளை கேவலமாக உபயோகிப்பதற்கு நீங்கள் கண்டனம் தெரிவித்தபொழுதுதான் உங்கள் மீது கவனம் திரும்பியது. அப்பொழுது பாராட்டி எழுதும் அளவிற்கு பரிச்சயம் ஆகவில்லை. இப்பொழுது சிலசமயங்கள் கடிதவழி உரையாடினாலும் இந்தப் பாராட்டை வகுப்பறையில் சொல்லக் காரணம், குறைகள் சுட்டிக் காட்டப்படுவது பகிரங்கமாக இருக்கும்பொழுது, பாராட்டும் அவ்வாறே இருக்கவேண்டும் என்பதினால்தான். மாண்புமிகு என்று நான் சிலசமயம் விளையாட்டாக உங்களை அழைத்தாலும் நீங்கள் அந்தப் பட்டத்திற்கு உரியவர்தான்.///////

    தங்கள் சமூக அக்கறையுள்ள விஷ்யங்களில் தயங்காது வெளிவந்து பேசும் உயரிய பண்பையும்,
    ஆராய்ந்து அலசி சீர்தூக்கி மார்க் போட்டு எழுதும் திறமையையும் கண்டு வியக்கிறேன்..வாழ்த்துக்கு தலை வணங்குகிறேன்.. நன்றி..

    ReplyDelete
  162. "விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை"

    மைனர்வாள் அழகாக இந்த சங்கடமான சூழலைத் தாண்டிச் சென்றது பாராட்டக் கூடியது.

    இங்கே பக்திமலரில் மாணவர்களுக்கு வாத்தியார் இடம் அளித்தபோது மட்டுமே பக்திச் செய்திகளை எழுதினேன். பக்திமலர் வாத்தியார் மட்டுமே என்ற போது பொதுவான செய்திகளையே எழுதி வருகிறேன்.

    நாத்திகமோ, ஆத்திகமோ எதுவாக இருந்தாலும் மனிதப் பண்புகளைக் கடைப்பிடிக்கும் அனைவரும் நமது நண்பர்களே.

    மைனரின் கோணமும் தெரிந்தாலே நம்முடைய கொள்கைகள் கூர்மை பெறும்.

    எனவே வழக்கம் போல மைனர் தனது கேலி கிண்டலுடன் பின்னூட்டங்களை
    இங்கே பிரசுரிக்க வேண்டும் என்பதே என் அவா!

    ReplyDelete
  163. @Bhuvaneshwar..

    Ok..Have a nice time..bye..

    @KMRK
    தங்களின் புரிதலுக்கும் அன்புக்கும் நன்றி..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com