மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

25.6.12

Astrology: காஞ்சிப் பெரியவரின் ஜாதகம்!

Astrology: காஞ்சிப் பெரியவரின் ஜாதகம்!

ஜாதக அலசல் பாடம்!

பெரியவர் என்றால் அவர் ஒருவர்தான் பெரியவர். அந்தச் சொல்லிற்குத் தகுதியானவர் அவர் ஒருவர்தான்!

சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளைத்தான் சொல்கிறேன்

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஜகத்குருவாக இருந்து சிறப்பாக இறைத் தொண்டாற்றியவர் அவர். நூறு ஆண்டுகாலம் வாழ்ந்து சிறந்தவர்.

வாழ்வது என்பது ஆண்டு எண்ணிக்கையில் அல்ல! சேவையை வைத்துக்கணக்கிட வேண்டும்.

1894ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி பிறந்த அவர், 1994ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதிவரை வாழ்ந்து, தன் நற்செயல்களாலும், இறைப்பணிகளாலும் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர்.

பிப்ரவரி 1907ம் ஆண்டில் அவருக்கு மடத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அதற்கு முற்பட்ட 13 ஆண்டுகளை அவர் சிறுவனாக இருந்த கணக்கில் கழித்து விட்டால் சுமார் 87 ஆண்டுகள் இறைப்பணி செதிருக்கிறார். மக்களை நெறிப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.

87ஆண்டுகள் உழைப்பது, பணி செய்வது என்பது சாதாரணமான விஷயம் அல்ல! ஆர அமர உட்கார்ந்து யோசித்துப்பாருங்கள். இதுவரை வாழ்ந்த வாழ்வில், நீங்கள் எத்தனை ஆண்டுகள் சேவை செய்திருப்பீர்கள்? ஆண்டுகளில் வேண்டாம். மாதங்களிலாவது சொல்லுங்கள்!
அல்லது நாட்களிலாவது சொல்லுங்கள்.

அவருடைய ஜாதகத்தை அலசுவதை ஒரு பாக்கியமாகக் கருதி,  இன்று அதைச் செய்திருக்கிறேன்.

கருத்து வேறுபாடு உடையவர்கள் பதிவை விட்டு விலகவும்.

கருத்து வேறுபாடு உடைய பின்னூட்டங்களுக்கும் அனுமதியில்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெரியவரைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட சுட்டியைப் பயன் படுத்துங்கள். தேமொழியின் அக்கா விக்கி காமாட்சி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://en.wikipedia.org/wiki/Chandrashekarendra_Saraswati

இந்தப் பதிவை நான் எழுதுவதற்குக் காரணமாக இருந்த நமது வகுப்பறை மாணவரும், அணுசக்தி விஞ்ஞானியுமான அன்பர் புவனேஷ்வர் அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிறப்பு விவரம்
பிறந்த தேதி: 20.5.1894
பிறந்த நேரம்: மதியம் 1.22 மணி
பிறந்த ஊர்: விழுப்புரம்
நட்சத்திரம்: அனுஷம்
லக்கினம்: சிம்ம லக்கினம்
ராசி: விருச்சிக ராசி

இயற்பெயர்: சாமிநாதன்
கல்வித்தகுதி: திண்டிவனத்தில் அப்போது இருந்த அமெரிக்கன் மிஸன் உயர் நிலைப் பள்ளியில் படித்தவர்
வேதபாடங்களைத் தனியாக ஒரு ஆசிரியர் மூலம் கற்றுத் தேர்ந்தவர்
படிக்கின்ற காலத்தில் இவருடைய ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர் இப்படிச் சொன்னாராம்:
One day the whole world will fall at his feet!
----------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------

337 வகுத்தல் 12 = 28 இது சராசரி பரல் கணக்கு
சுவாமிகளின் ஜாதகத்தில்
2ல் 30 பரல்கள் (வாக்கு ஸ்தானம்)
4ல் 28 பரல்கள்
5ல் 30 பரல்கள்
6ல் 33 பரல்கள்
8ல் 35 பரல்கள்
10ல் 28 பரல்கள்
---------------------------------------------------
சுயவர்க்கப் பரல்கள்:

சூரியன் 4 பரல்கள்
சந்திரன் 7 பரல்கள்
செவ்வாய் 4 பரல்கள்
புதன் 5 பரல்கள்
குரு 6 பரல்கள்
சுக்கிரன் 6 பரல்கள்
சனி 2 பரல்கள்

ஒரு கிரகத்திற்கு சுயவர்க்கத்தில் 8 பரல்கள். 4 பரல்களுக்கு மேல் இருக்க வேண்டும்.சுவாமிகளுக்கு 4 கிரகங்கள் அதிக பரல்களுடன் வலிமையோடு உள்ளன.
-----------------------------------------------------------
திரிகோண வீடுகள், கேந்திர வீடுகள், மறைவிடங்களுக்கான் பரல்கள்திரிகோண்ங்கள் (1,5,9) = 79 பரல்கள்
கேந்திரங்கள் (4,7,10) =  83 பரல்கள்
இந்த 6 வீடுகளுக்கும் சராசரி 27 பரல்கள்

மறைவிடங்கள் (Inimical Houses)
3,6,8, 12 =  121 = சராசரி 30 பரல்கள்
லெள்கீக வாழ்க்கைக்கான அமைப்பில்லாமல் ஞான வாழ்க்கைக்கான அமைப்புத்தான் ஜாதகத்தில் உள்ளது
--------------------------------------------------------
 1. அரச கிரகங்களான சூரியனும், சந்திரனும் கேந்திர ஆதிபத்யம் பெற்று ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில் உள்ளனர்.

2. சுக்கிரன் உச்சம். அத்துடன் குரு பகவானுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்.

3. அஷ்டகவர்க்கத்தில் சுபக் கிரகங்களான குரு, சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியவர்கள் தங்களுடைய சுயவர்க்கத்தில் அதிக பரல்கள் பெற்று வலுவாக உள்ளார்கள். குருவிற்கு 6 பரல்கள், சந்திரனுக்கு 7 பரல்கள், சுக்கிரனுக்கு
6 பரல்கள்.

4. வெற்றிகளுக்கு உரிய 3ம் இடத்து அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுத்துள்ளார். சுவாமிகள் மடத்தின் குருவாக பல ஆண்டுகள் திறம்படப் பணி செய்துள்ளார். செய்யும் வேலையில் சிரத்தையைக் கொடுத்ததோடு, பெரும்புகழையும் சுக்கிரன் கொடுத்தார்.

5. சுக்கிரன் இந்த ஜாதகத்திற்கு 10ம் இடத்து அதிபதியும் ஆவார். அவர் உச்சம் பெற்றதுடன், தன் வீட்டிற்கு 11ம் இடத்தில் அமர்ந்துள்ளார்.

6. சிம்ம லக்கின ஜாதகம். வனங்களில் சிங்கத்திற்கு என்ன சிறப்போ, அதே சிறப்பு 12 லக்கினங்களிலும் சிம்ம லக்கினத்திற்கு ஒரு தனிச்  சிறப்பு உண்டு. நாயகர்களின் லக்கினம்.

7. லக்கினாதிபதி சூரியன் கேந்திரங்களில் முக்கியமான பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ளார். இது ஒரு சிறப்பு

8. லக்கினாதிபதி சூரியனுடன் லாபாதிபதி புதனும், பூர்வபுண்ணியாதிபதி குருவும் கூட்டாக உள்ளார்கள்.இதுவும் ஒரு சிறப்பு

9. கஜகேசரி யோகம் உள்ள ஜாதகம். குருவும் சந்திரனும் கேந்திர வீடுகளில் எதிரெதிரே பலத்துடன் அமர்ந்துள்ளார்கள். ஜாதகரை  அறவழியில் கொண்டு சென்றதுடன், பெரும் புகழையும் கொடுத்தார்கள்.

10. புத ஆதித்த யோகம்: புதனும் சூரியனும் கூட்டாக இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.  புத்திசாலித்தனம், நிபுனத்துவம்,சாமர்த்தியம், பிரபலம், மரியாதைக் குரியவாரக இருத்தல் ஆகிய பலன்கள் உண்டாகும். சுவாமிகளின் ஜாதகத்தில் சூரியனும்,  புதனும் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள். அதுவும் முக்கியமான கேந்திரத்தில் இருப்பதையும் பாருங்கள்

11. ஆதியோகம்: சந்திரனுக்கு 6 அல்லது 7 அல்லது 8ல் நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இங்கே  சந்திரனுக்கு 7ல் குருவும், புதனும் ஒன்றாக இருக்கிறார்கள். ஒரு அமைப்பிற்கு தலைமை தாங்கி நடத்தக்கூடிய பொறுப்பு தேடி வரும் சுவாமிகளுக்கு ஆன்மீக குருவாக பக்தர்களை வழிநடத்திச் செல்லும் பதவி கிடைத்தது.

12. சாமரயோகம்: 7 அல்லது 8 அல்லது 10ம் வீடுகளில் இரண்டு நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள்,
மேதைத் தனம், பல கலைகளில் தேர்ச்சி ஆகியவை இருக்கும். சுவாமிகளின் ஜாதகத்தில் குருவும், புதனும் 10ல் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள்

13. தபஸ்வி யோகம், துறவி யோகம் (சுயநலமில்லாத,
தியாக மனப்பான்மையுள்ள பொதுவாழ்க்கை - அதுவும் ஆன்மிகம்
இறைப்பணி நிறைந்த பொது வாழ்க்கை) சுக்கிரன், சனி, கேது
ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை அல்லது ஒருவருக்
கொருவரான பார்வை இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
சுவாமிகளின் ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது.

14. ராஜயோகம்: (equal to a king) 5ம் அதிபதி லக்கினகாரகனோடோ அல்லது 9ம் அதிபதியோடோ சேரும்போது இந்த யோகம் உண்டாகும். சுவாமிகளின் ஜாதகத்தில் 5ம் அதிபதி குரு லக்கினாதிபதி சூரியனுடன் சேர்ந்துள்ளார்.

15. விபரீத ராஜயோகம்: எட்டாம் அதிபதி குருவும் 12ம் அதிபதி சந்திரனும் சமசப்தகமாக உள்ளார்கள்

16. ராஜ சம்பந்த யோகம் அமத்யகாரகன் (இந்த ஜாதகத்திற்கு சுக்கிரன்) உச்சம் பெற்றுள்ளதால் கிடைத்தது. அதீத புத்திசாலித்தனம்

17. ஆட்சியாளர்களுடனா தொடர்பு: லக்கினாதிபதி கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்தால் கிடைக்கும். சுவாமிகளின் ஜாதகத்தில்
லக்கினாதிபதி 10ல்

சுவாமிகள் லெளகீக வாழ்க்கை (அதாவது பொருள் சார்ந்த உலகியல் வாழ்க்கை) வாழாமல் துறவியாக ஆனதற்குக் காரணம்.
1
முதலில் பூர்வ புண்ணியம். பூர்வ புண்ணியாதிபதி குருவும், லக்கினாதிபதி சூரியனும் சேர்ந்து 10ம் வீட்டில் அமர்ந்து ஒரு மடாதிபதியாக ஆக்கினார்கள்.  இறைவனுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யப் பணித்தார்கள்.
2.
லக்கினாதிபதியும், விரையாதிபதியும் ஒன்றாக இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் நேர் பார்வையில் இருந்தாலும், ஜாதகரின்
வாழ்க்கை ஜாதகருக்குப் பயன்படாது - மற்றவர்களுக்குதான் பயன்படும். பயன்பட்டது.
3.
லக்கினத்தில் குறைவான பரல்கள் (24 பரல்கள் மட்டுமே உள்ளன). இரண்டாம் வீட்டில் குடும்பஸ்தானத்தில் சனி, கேது ஆகிய தீய  கிரகங்கள். லக்கினத் திற்கு ஏழாம் அதிபதி சனி, அந்த வீட்டிற்கு எட்டில். இக்காரணங்களால் அவதிகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை  இல்லாமல் போய்விட்டது. ஜாதக மேன்மையினால், அவற்றைக் கொடுக்காமல் சின்ன வயதிலேயே காலதேவன் அவரைத்  துறவியாக்கிவிட்டான்

ஆயுள்
1
ஆயுள் காரகன் சனியின் நேரடிப் பார்வையில் எட்டாம் வீடு. எட்டாம் வீட்டுக்காரன் குரு கேந்திரத்தில். எட்டாம் வீட்டிற்கு  அஷ்டகவர்க்கத்தில் 35 பரல்கள். ஆகவே நீண்ட ஆயுள். பரிபூரண ஆயுள் சுமார் நூறு ஆண்டுகாலம் வாழ்ந்துள்ளார்.
2
மூன்றாம் வீடு வாழ்வதற்கு உள்ள சக்திகளைக் காட்டும். எட்டாம் வீடு ஆயுளைக் காட்டும். அந்த இரண்டு வீடுகளுக்கும் 12ம் வீடு  அவற்றிலிருந்து 12ம் வீடு - அதாவது 3ற்கு 12ம் வீடு 2. எட்டிற்கு 12ம் வீடு 7. ஆக 2ம் வீடும்,
7ஆம் வீடும்தான் மாரக ஸ்தானங்கள். அதன்  அதிபதிகள் தான்
மரணத்தைக் கொடுப்பார்கள். அவர்கள் தாமதிக்கும் போது
(அதாவது அவர்களுக்கு உரிய தசாபுத்திகள் வராதபோது) 3ம் அதிபதி
அல்லது 8ம் அதிபதி அந்தவேலையைச் செய்துவிடுவார்கள்.
3
சுவாமிகளுக்கு குரு திசை சூரிய புத்தியில் மாரகம் ஏற்பட்டது. குரு எட்டாம் இடத்ததிபதி. அவரோடு சூரியனும் கூட்டாக இருப்பதைக்  கவனியுங்கள். குரு மகாதிசை சூரிய புத்தியில் அது நடந்தது. சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்கள்.

------------------------------------------------------------------
விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

78 comments:

SP.VR. SUBBAIYA said...

அனைவருக்கும் காலை வணக்கம்!
உங்கள் மீதுள்ள நம்பிக்கையில் பின்னூட்டப் பெட்டி திறந்து வைக்கப்பெற்றுள்ளது!
பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை யாரும் இட வேண்டாம்
என்றும் அன்புடன்,
வாத்தியார்

ரமேஷ் வெங்கடபதி said...

அற்புதமான மனிதரைப் பற்றிய ஜாதக அலசல்! சிலிர்ப்புடன் அறிவையும் தந்தது! ஐயாவிற்கு நன்றி! வணக்கம்!

தேமொழி said...

ஜாதக அலசல் பாடம் விளக்கமாக கொடுக்கப் பட்டதால் எளிதில் புரிந்தது நன்றி ஐயா.
பலரும் துறவு வாழ்க்கை மேற்கொண்டாலும் அதில் மற்றவர்களுக்கு முன்னோடியாக ஒரு சிலர் வாழ்வதற்கு என்ன அமைப்பு வேண்டும். உதாரணத்திற்கு பல புத்த துறவிகள் இருந்தாலும் தலாய்லாமா முன்னின்று இருப்பதற்கும், பல பாதிரியார்களும், மதர்களும் இருக்கும்பொழுது போப்பாண்டவர் வழி நடத்தும் நிலையில் இருப்பது போல, இந்து மதத்திலும் பலர் துறவறம் மேற்கொண்டாலும் காஞ்சி மடாதிபதி முன்னின்று மதத்தின் அடையாளமாக விளங்க வாழ்ந்ததற்குரிய அமைப்பு எது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.

அய்யர் said...

புத ஆதித்திய யோகம்
2ல் கேது..

ஆகா...
அருமை,, அருமை,,

jegans said...

அன்புடன் வாத்தியர் அவர்கட்கு!
கண்ணதாசன் அவர்கள்..புலனடக்கத்தில் இருவரை குறிப்பிடுவார் முதலாமவர் சுவாமி விவேகான்ந்தர் அவர் புலனடக்கத்தால்
தனது நடுத்தரவயதில்காலமானார்
அதேபோல்புலனடக்கத்தில்இன்றுவரை
நம்மோடு வாழ்ந்துவரும்சங்கராச்சரியர்
ஒரு நூற்றாண்டு வாழ்வார் என்று தனது மனவாசம் அல்லது வனவசம் என்றநுலில் எழுதியுள்ளார். எதேச்சையக பெரியவரை சந்தித்தேன்
மிகப்பெரிய அந்தக்கூட்டத்தில் என்னை சைகை காட்டி அழைத்து 2நிமிடங்கள் என்னுடன் பேசியது என்றும் என்னால் மறக்கமுடியாத அனுபவம்..அவரின் ஜாதகம் ஒரு பொக்கிஷம்.
ந்ன்றி

Vannamalar said...

Thank you for this lesson.

Udhaya Kumar said...

குருவிற்ககு வணக்கம்
இன்றையப் பாடம் அற்புதமானது
நன்றி

sriganeshh said...

காஞ்சி மஹா பெரியவரின் விரிவான ஜாதக அலசலுக்கு மிக மிக நன்றி. சகோதரி தேமொழியைப் போல (//இந்து மதத்திலும் பலர் துறவறம் மேற்கொண்டாலும் காஞ்சி மடாதிபதி முன்னின்று மதத்தின் அடையாளமாக விளங்க வாழ்ந்ததற்குரிய அமைப்பு எது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.) அந்த அமைப்பினை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

Bhuvaneshwar said...
This comment has been removed by the author.
Bhuvaneshwar said...
This comment has been removed by the author.
Bhuvaneshwar said...

சிறப்பு ஏதும் இல்லாத இச்சிறியேனின் வேண்டுகோளை மதித்து உன்னதமான ஒரு ஆத்மாவின் ஜாதகத்தை நன்கு அலசி தந்த வாத்தியார் ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல பல பல.

உங்கள் அலசல்களில் உள்ள சிறப்பம்சம், எல்லார் ஜாதகத்தையும் எப்படி எல்லாம், எந்த கோணங்களில் எல்லாம் பார்க்க வேண்டும் என ஒருத்தருக்கு செய்முறை விளக்கம் என அமைவதே.

உங்கள் சீரிய பணி தொடரவும், தாங்கள் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழவும் இறையருளை வேண்டுகின்றேன்.

மகாபெரியவா பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த சுட்டியை தேர்வு செய்யவும். இது அவர் மேல் அன்பு கொண்ட தொழில் நுட்ப வல்லுனரான திரு. மகேஷ் அவர்கள் நடத்தும் வலைத்தளம். விருப்பம் உள்ளவர்கள் போய் பார்க்கலாம்.

www.mahaperiyavaa.wordpress.com

இந்த நாள் நல்ல நாளாக அமைந்து இந்த வாரமும் அனைவருக்கும் இன்பமான வளமான வாரமாக அமையட்டும்!

Bhuvaneshwar said...

ஒரு ஜாதகரின் பத்தாம் இடத்தில் உள்ள கிரகங்கள் தான் எடுக்கும் வ்ருத்தியில்/செய் கர்மத்தில் மேன்மை ஏற்பட காரணம்.

சுவாமிகளின் ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் சூரிய பகவான், புத பகவான் மற்றும் குரு பகவான் ஒன்றாக இருக்கிறார்கள்.

இது அவரை உலகம் போற்றும் துறவியாக ஆகியதற்கு ஒரு காரணம் (பத்தாம் இடத்தில் மூன்று கிரகங்கள் அமைந்தால் உலகம் போற்றும் துறவி ஆவார் என ஒரு விதி உள்ளது, அதை எங்கோ படித்த ஞாபகம்)

இந்த அமைப்போடு தபஸ்வி யோகம் உள்ளது.

பின் இந்த அமைப்புகளும் சேர்ந்து தான் அவரை ஒரு துரவரசர் என ஆக்கியன.
//
ராஜயோகம்: (equal to a king) 5ம் அதிபதி லக்கினகாரகனோடோ அல்லது 9ம் அதிபதியோடோ சேரும்போது இந்த யோகம் உண்டாகும். சுவாமிகளின் ஜாதகத்தில் 5ம் அதிபதி குரு லக்கினாதிபதி சூரியனுடன் சேர்ந்துள்ளார்.

விபரீத ராஜயோகம்: எட்டாம் அதிபதி குருவும் 12ம் அதிபதி சந்திரனும் சமசப்தகமாக உள்ளார்கள்

ராஜ சம்பந்த யோகம் அமத்யகாரகன் (இந்த ஜாதகத்திற்கு சுக்கிரன்) உச்சம் பெற்றுள்ளதால் கிடைத்தது. அதீத புத்திசாலித்தனம்
ஆட்சியாளர்களுடனா தொடர்பு: லக்கினாதிபதி கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்தால் கிடைக்கும். சுவாமிகளின் ஜாதகத்தில்
லக்கினாதிபதி 10ல்
//

அவர் இவ்வுடலை நீத்து குரு தசையில் சூரிய புக்தியில் குரு அந்தரத்தில்.

அவர் எட்டு நாட்களுக்கு முன்னரே நாள் குறித்து விட்டு மிக நெருங்கிய பக்தர்களுக்கு மட்டும் சொல்லி விட்டாராம்.

மாதா பிதா குரு தெய்வம் என்ற வாக்கிற்கு இணங்க தாம் உடலை நீக்கு முன் தனது பெற்றோர் புகைப்படத்தை பார்த்து விட்டு, தனது குரு மற்றும் பரம குரு நாதர்களை தியானித்து விட்டு சென்றார்.

ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன். தவறு இருந்தால் திருத்தவும். கற்று கொள்ள ஆவலாக உள்ளேன்.

Bhuvaneshwar said...

தொடர்ச்சி: பத்தாம் இடத்து அதிபதி சுக்கிர பகவான் உச்ச வீட்டில் நல்ல நிலையில் வலுவாக தபஸ்வி யோகத்தை தந்து உள்ளார்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
அற்புதமான மனிதரைப் பற்றிய ஜாதக அலசல்! சிலிர்ப்புடன் அறிவையும் தந்தது! ஐயாவிற்கு நன்றி! வணக்கம்!//////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger தேமொழி said...
ஜாதக அலசல் பாடம் விளக்கமாக கொடுக்கப் பட்டதால் எளிதில் புரிந்தது நன்றி ஐயா.
பலரும் துறவு வாழ்க்கை மேற்கொண்டாலும் அதில் மற்றவர்களுக்கு முன்னோடியாக ஒரு சிலர் வாழ்வதற்கு என்ன அமைப்பு வேண்டும்.

உதாரணத்திற்கு பல புத்த துறவிகள் இருந்தாலும் தலாய்லாமா முன்னின்று இருப்பதற்கும், பல பாதிரியார்களும், மதர்களும்

இருக்கும்பொழுது போப்பாண்டவர் வழி நடத்தும் நிலையில் இருப்பது போல, இந்து மதத்திலும் பலர் துறவறம் மேற்கொண்டாலும் காஞ்சி

மடாதிபதி முன்னின்று மதத்தின் அடையாளமாக விளங்க வாழ்ந்ததற்குரிய அமைப்பு எது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.////

வாரணாசிக்குச் சென்றீர்கள் என்றால் ஏராளமான துறவிகளை/ சன்யாசிகளை/ சாதுக்களை/ சாமியார்களைப் பார்க்கலாம். லெவல் ஆஃப் எஜுகேஷனை வைத்து வேலை கிடைப்பதைப்போல, ஜாதக அமைப்பை வைத்துத்தான் அவர்களுக்கு உரிய மேன்மை/மரியாதை கிடைக்கும். பூர்வ புண்ணியம் ப்ளஸ் அரசகிரகங்களான சூரியன், சந்திரன் மற்றும் குரு பகவானின் வலிமையை வைத்துத்தான் முன்னிற்பதற்கான அங்கீகாரம் கிடைக்கும். அதாவது தலைமைப் பதவி கிடைக்கும்

இன்னும் சுருக்கி ஒரே வார்த்தையில் சொன்னால்: இறையருள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
புத ஆதித்திய யோகம்
2ல் கேது..
ஆகா...
அருமை,, அருமை,,/////

நல்லது. நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger jegans said...
அன்புடன் வாத்தியர் அவர்கட்கு!
கண்ணதாசன் அவர்கள்..புலனடக்கத்தில் இருவரை குறிப்பிடுவார் முதலாமவர் சுவாமி விவேகான்ந்தர் அவர் புலனடக்கத்தால்
தனது நடுத்தரவயதில்காலமானார்
அதேபோல்புலனடக்கத்தில்இன்றுவரை
நம்மோடு வாழ்ந்துவரும்சங்கராச்சரியர்
ஒரு நூற்றாண்டு வாழ்வார் என்று தனது மனவாசம் அல்லது வனவசம் என்றநுலில் எழுதியுள்ளார். எதேச்சையக பெரியவரை சந்தித்தேன்
மிகப்பெரிய அந்தக்கூட்டத்தில் என்னை சைகை காட்டி அழைத்து 2நிமிடங்கள் என்னுடன் பேசியது என்றும் என்னால் மறக்கமுடியாத
அனுபவம்..அவரின் ஜாதகம் ஒரு பொக்கிஷம்.
நன்றி/////

நெகிழ்ச்சியான உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Vannamalar said...
Thank you for this lesson./////

நல்லது. நன்றி சகோதரி

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Udhaya Kumar said...
குருவிற்ககு வணக்கம்
இன்றையப் பாடம் அற்புதமானது
நன்றி//////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி உதயகுமார்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger sriganeshh said...
காஞ்சி மஹா பெரியவரின் விரிவான ஜாதக அலசலுக்கு மிக மிக நன்றி. சகோதரி தேமொழியைப் போல (//இந்து மதத்திலும் பலர்

துறவறம் மேற்கொண்டாலும் காஞ்சி மடாதிபதி முன்னின்று மதத்தின் அடையாளமாக விளங்க வாழ்ந்ததற்குரிய அமைப்பு எது என்று

தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.) அந்த அமைப்பினை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன்./////

லெவல் ஆஃப் எஜுகேஷனை வைத்து வேலை கிடைப்பதைப்போல, ஜாதக அமைப்பை வைத்துத்தான் அவர்களுக்கு உரிய மேன்மை/மரியாதை கிடைக்கும். பூர்வ புண்ணியம் ப்ளஸ் அரசகிரகங்களான சூரியன், சந்திரன் மற்றும் குரு பகவானின் வலிமையை வைத்துத்தான் முன்னிற்பதற்கான அங்கீகாரம் கிடைக்கும். அதாவது தலைமைப் பதவி கிடைக்கும்

இன்னும் சுருக்கி ஒரே வார்த்தையில் சொன்னால்: இறையருள்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Bhuvaneshwar said...
சிறப்பு ஏதும் இல்லாத இச்சிறியேனின் வேண்டுகோளை மதித்து உன்னதமான ஒரு ஆத்மாவின் ஜாதகத்தை நன்கு அலசி தந்த

வாத்தியார் ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல பல பல.
உங்கள் அலசல்களில் உள்ள சிறப்பம்சம், எல்லார் ஜாதகத்தையும் எப்படி எல்லாம், எந்த கோணங்களில் எல்லாம் பார்க்க வேண்டும்

என ஒருத்தருக்கு செய்முறை விளக்கம் என அமைவதே.
உங்கள் சீரிய பணி தொடரவும், தாங்கள் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழவும் இறையருளை வேண்டுகின்றேன்.
மகாபெரியவா பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த சுட்டியை தேர்வு செய்யவும். இது அவர் மேல் அன்பு கொண்ட தொழில் நுட்ப

வல்லுனரான திரு. மகேஷ் அவர்கள் நடத்தும் வலைத்தளம். விருப்பம் உள்ளவர்கள் போய் பார்க்கலாம்.
www.mahaperiyavaa.wordpress.com
இந்த நாள் நல்ல நாளாக அமைந்து இந்த வாரமும் அனைவருக்கும் இன்பமான வளமான வாரமாக அமையட்டும்!/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

thanusu said...

எனக்கு மிகவும் பிடித்த அலசல் பாடம். இன்றைய அலசலில் பெரியவர் .அத்தனை விளக்கமாக இருந்தது. ராசிக்கட்டம், அஷ்டவர்க்கம், யோகபலங்கள், தசா காலங்கள்,அத்துடன் முடிவு என அத்தனை கோணத்திலும் பாடம்.மிக்க நன்றிகள் அய்யா

thanusu said...

என்றும் நன்றிக்கு நாய்.இன்று பொறுப்புக்கும்நாயே என்றாகிவிட்டது .நாம் தான் நம் நன்றியையும் பொறுப்பையும் மறந்து ஏனோதானோ என்று இருக்கிறோம்

eswari sekar said...

mega arumina jathka alseal padam nanru thanks

Bhuvaneshwar said...

இந்த இடத்தில ஒரு titbit தகவலையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அனைவருக்கும் அது அநேகமாக தெரிந்து இருக்கும்.

சுக்கிர பகவான் ஃபேஷனுக்கும், "இன்பங்களுக்கும்" மட்டும் அதிபதி அல்ல.

வேதியியல், சமையல் (என்ன வித்தியாசம்??) மற்றும் நீதி சாஸ்திரம் ஆகியவற்றுக்கு கூட தலைவர் (குரு அல்ல, சுக்கிரர் தான்). "நீதி சாஸ்திரத்தில் சுக்கிரனை போன்றவன்" என சகாதேவனை சொல்லுவார் தருமர். இது எனது தாத்தா எனக்கு சொன்னது.

இன்னொரு நாள் மாணவர் மலரில் ஒரு சுவையான வரலாற்றை சொல்லுகிறேன்.

சுக்கிர பகவானுக்கு ஒரு குட்டி சுட்டி பெண் மகளாக இருந்தாள். அவள் பெயர் தேவயானி. அவளுக்கு தகப்பனான சுக்கிராச்சாரியார் சொல்லும் நன்னெறி உபதேசம் ரசமாக இருக்கும்.

கோபித்து கொண்டு விட்ட சிறு பெண் குழந்தைக்கு நீதி உபதேசம் சொல்கிறார் என்பதால் மிக தெளிவாக சொல்லி இருப்பார்.

மற்றொரு நாள் இதை விரிவாக தனியாக போடுகிறேன்.

Ravichandran said...

Ayya,

One small clarification. Ketu at 2 and Rahu at 8, it is Naga Dosam. Since Guru has seeing second house(Ketu house), so Naga dosam got cancelled..Ist correct Ayya in Periyavar Horoscope?

Student,
Trichy Ravi

Parvathy Ramachandran said...

மடாதிபதியாக இருந்தபோதும் ‘கரதல பிக்ஷை தருதல வாஸம்’ என்னும் துறவற விதியை, எள்ளளவும் பிசகாமல் வாழ்ந்து காட்டிய, யுக,யுகாந்திரங்களுக்கு ஒரு முறை தோன்றும் மஹா புருஷரான, ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவரின் ஜாதக அலசலைத் தந்தமைக்கு ஆயிரம் கோடி நன்றிகள். ஜாதகத்தில், சிவபெருமானை அர்ச்சிக்க மிக விசேஷமான, வில்வ பத்ரத்தின் பெயர் கொண்ட (வில்வபுரம், விழுப்புரம்) ஊரில், நடமாடும் சிவமாகவே வணங்கி வழிபடப்பெற்ற, மகான் அவதரித்தது என்ன அருமையான பொருத்தம்!!!!.

இன்றும் என் போன்ற எண்ணற்ற பக்தர்களுக்குத் தோன்றாத் துணையாக ஸ்ரீ மஹாபெரியவர் அருகிருந்து காப்பது கண்கூடு. மிகப் பெரும் பாரம் மனதை அழுத்தும் போதெல்லாம், அவர் படத்தைப் பார்த்து பிரார்த்தனை செய்ய‌ சில விநாடிகளிலேயே மனம் லேசாகி விடுவது என் சொந்த அனுபவம். தங்களுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றி.

மாற்று மதத்தினரும் போற்றிக் கைதொழும், ஸ்ரீ மஹாபெரியவரின் மகிமை, கீழ்கண்ட வலைப்பூவிலும் படிக்கக் கிடைக்கிறது.

www.mayavaramguru.blogspot.in

kmr.krishnan said...

பெரியவர் ஜாதக அல்சல் வாசித்துப் பயன் பெற்றேன்.

எட்டாம் இடம் எட்டாம் அதிபதி அதிக பரல் பெற்றதால் 100 வயது.
ஆனால் ஆயுள்காரகன் சனீஸ்வரன் சுய வர்கத்தில் 2 தானே பெற்றுள்ளார்.
அவர் ஆட்டத்தில் சேரமாட்டாரா? அல்லது அஷ்ட வர்கத்தில் காரகத்துவத்திற்கு வேலை கிடையாதா?

Bhuvaneshwar said...

பெருமதிப்பிற்குரிய கிருஷ்ணன் ஐயா:
சன்யாசத்தை இரண்டாவது ஜனனம் என்பார்கள் இல்லையா?
பெரியவருக்கு அதனால் தான் பதின் மூன்று வயதில் துறவறம் கிடைத்ததோ?

saravanan said...

அன்புள்ள குருவே நமஸ்காரம் ...
என்ன ஒரு பாக்கியம் ......இந்த ஜாதகத்தை கண்ணால் பார்க்கும் அனைவருக்கும் , இதை எங்கள் கண்பார்வைக்கு தந்த வாத்தியார் அவர்களுக்கும் கோடானுகோடி புண்ணியம் .....அருமை ...அய்யா ..அருமை ....நான் புதிய மாணவன்..இப்பொழுதுதான் பழைய பாடங்களை படித்து வருகிறேன்.
பின்னாட்களில் இதுவெல்லாம் எனக்கு புரியவரும் போது இன்னும் பிரமிப்பாக இருக்கும்.நன்றி குருவே.

ரா.சரவணன்

Pandian said...

அய்யா அருமையான பதிவை தந்தமைக்கு நன்றிகள்...எனது சிறு வயது முதலே எவ்வளோவோ முயன்றும் ஆன்மிக வழியில் செல்ல முடியவில்லை...சரி நமது கர்மவினை என்று விட்டு விடவும் முடியவில்லை...எனது 35 வயது முதல் முழுவதுமாக பொது சேவை மற்றும் ஆன்மிக சேவை செய்யலாம் என்று உத்தேசித்து உள்ளேன் (இப்போது எனக்கு 28 வயது) ...இறைவன் கிருபை எவ்வாறு உள்ளது என்று தெரியவில்லை... நன்றி...

Megalabala said...

பெருமதிப்பிற்குரிய குருவே வணக்கம்!
மிக மிக அருமையான ஒரு மனித தெய்வத்தின் ஜாதகத்தை அலசுவதற்கு மட்டுமல்ல, அதை கண்ணால் பார்ப்பதற்க்கே கொடுத்துவைத்திருக்க வேண்டும். அந்த கொடுப்பினையை எங்களுக்கெல்லாம் அளித்த உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள். தொடரட்டும் உங்கள் பணி.
- Manimegalai, Singapore.

தேமொழி said...

///Pandian said... எனது 35 வயது முதல் முழுவதுமாக பொது சேவை மற்றும் ஆன்மிக சேவை செய்யலாம் என்று உத்தேசித்து உள்ளேன் (இப்போது எனக்கு 28 வயது) ...இறைவன் கிருபை எவ்வாறு உள்ளது என்று தெரியவில்லை.///

சங்கரியின் கிருபை உங்களுக்கு பூரணமாக கிட்ட வாழ்த்துக்கள்.

Bhuvaneshwar said...

///87ஆண்டுகள் உழைப்பது, பணி செய்வது என்பது சாதாரணமான விஷயம் அல்ல! ஆர அமர உட்கார்ந்து யோசித்துப்பாருங்கள். இதுவரை வாழ்ந்த வாழ்வில், நீங்கள் எத்தனை ஆண்டுகள் சேவை செய்திருப்பீர்கள்? ஆண்டுகளில் வேண்டாம். மாதங்களிலாவது சொல்லுங்கள்!
அல்லது நாட்களிலாவது சொல்லுங்கள்.
///

ஊன்றி நினைத்தால் மலைப்பாகவே இருக்கிறது. சேவைக்கு மட்டும் 87 வயது!
ஒரு சராசரி ஆயுளை விட அது அதிகம்.

பெரியவர் நூறாண்டு வாழ்ந்தார்....... ஒரு கைப்பிடி மட்டுமே உண்டு, மரநிழலில் அல்லது பாழடைந்த மண்டபங்களில் தங்கி........

எத்தனையோ பேருக்கு லௌகிகத்திலும் நல்வாழ்வு அமைத்து தந்தார்.

கணித பேராசிரியர் முனைவர். சுந்தர ராமன் அவர்களுக்கு படிப்பு செலவு, தங்க வசதி உள்பட எல்லாம் பண்ணி கொடுக்க ஏற்பாடு பண்ணியது பெரியவர் தான். அவரோடு நான் தொலை பேசியில் பேசிய போது பேராசிரியர் இதை சொன்னார். அவர் கணித பேராசிரியர். அமெரிக்காவில் உள்ளார். அவர் மெக்சிகோவில் இருந்த போது வந்த நிலநடுக்கத்தில், நிலா நடுக்கம் வந்த அதே நிமிஷம், இங்கே பெரியவர் பேராசிரியரை பற்றி " நான் ஒருத்தனை நினைச்சேன், அவன் பறந்து போயிட்டான், அவன் யாரு?" என விடுகதி போல சொன்னாராம். ஐந்து நிமிடங்கள் எல்லாரும் திகைத்த பின் (மெக்சிகோவில் நிலநடுக்கம் ஓய்ந்த பின், அதாவது பேராசிரியரை காப்பாற்றிய பின்), "துரைசாமி மகன் சுந்தரராமன்" என்று விடையையும் சொன்னாராம். இது பேராசிரியர் எனக்கு தான் வாயால் சொன்னது.

இத்தனையையும் செய்த அவர், துளி கூட அகங்காரமின்றி "நான் என்னடா பண்ணினேன், எல்லாம் காமாக்ஷி கிருபை" என்று சொன்னார்.

சித்தர்கள் கணக்கில் பெரியவரையும் வைத்து உள்ளார்கள். ஆனால் எந்த சித்து வேலையையும் தனக்கு சம்பந்தம் இல்லாதது போல வைத்து கொண்டு, அணுக்ரகதிற்கு மட்டுமே விளம்பரம் பண்ணாமல் "அதெல்லாம் ஒண்ணும் இல்லைடா, காமாக்ஷியின் அருள், பரமேஸ்வரனின் அருள், சந்திர மௌலி அருள்" என்று சொல்லியே பட்டும் படாமல் இருந்தார்.

புகழுக்கு உரியவர்களை பெரியோர்களை புகழ்வதும் பாக்கியம் தான்.

அனைவரும் நலமுடன் வாழ இறையருளை வேண்டுகிறேன்.

கலையரசி said...

பார்வதி அம்மாவுக்கு , நீங்கள் மங்கையர் மலரில் எழுதியதை பள்ளி பருவத்திலேய படித்திருக்கிறேன். என் அம்மா உங்கள் தொடர் கட்டுரையை என்னிடம் படிக்கச் சொல்லி அறிமுகம் செய்தார். அந்த நாட்களில் tonsils ஆபரேஷன் கு நான் பயந்த போது உங்கள் கட்டுரை ரொம்ப உதவியாய் இருந்தது. பல வருடங்கள் கழித்து அதே நடையில் படிக்கும் போது நிறைய சந்தோசம். என் அப்பாவுக்கு இப்போதுதான் இரண்டு அறுவை சகிச்சை நடந்து உள்ளது. Open heart bypass and laproscopic for kidney stones.
நிறைய கவலைகளை சுமந்து கொண்டு இருக்கும் வேளையில் பெரியவர்கள் நீங்கள் , வாத்தியார் அய்யா போன்றவர்கள் சொல்லும் வார்த்தைகள் நிறைய ஆறுதல் தருகிறது. மன இறுக்கத்தை குறைக்கிறது. நான் இன்னும் சிறு தினங்களில் இந்தியாவுக்கு வருகிறேன். அப்பாவை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிறது. என் இரண்டாவது மகன் பிறந்து இப்பொழுதுதான் அப்பாவிடம் காட்ட எடுத்து வருகிறேன். நிறைய நெகிழ்ச்சியுடன் இந்த கட்டுரையை தந்த உங்களுக்கும் , அய்யாவுக்கும் என் வணக்கங்கள்.

மற்ற வகுப்பறை தோழர்களுக்கும் , தோழிகளுக்கும் பின்னோட்டம் எழுத முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். அவசரமாக கிளம்புவதால் (நாங்கள் இந்த வருட கடைசியில் கிளம்பலாம் என்றிருந்தோம்) தமிழில் தட்டச்சு செய்து பின்னோட்டம் இட முடியவில்லை. மேலும் பல பாடங்களை ஒரே நாளில் படிப்பதாலும் அப்போபோ எழுத முடியவில்லை. எல்லாம் சரிவர இன்னும் ஒறிரு மாதங்கள் ஆகலாம் என்று நினைகிறேன். வகுப்பு தோழர்களுக்கு ஒரு அன்பான மற்றும் உரிமையான வேண்டுகோள், உங்கள் பிரார்த்தனையில் என் அப்பா விரைவில் குணமாகிடவும் வேண்டி கொள்ளுங்கள். மருத்துவ ரீதியாக அவர் உடம்பில் ஏதும் இல்லை என்று மருத்துவர் சொல்லி விட்டார்கள். ஆனால் நிறைய பயந்து போய் உள்ளார். கூட உள்ளவர்கள் நிறைய தெம்பு தந்து கொண்டு இருக்கிறார்கள். இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறோம்.

வாத்தியார் அய்யாவுக்கு நன்றி. பண முகதோரை அறிமுகம் செய்து அவர்களுக்கு ஒருவரையொருவர் connect செய்து கொள்ள ஒரு பாலமாக இருக்கிறீர்கள் அல்லவா அதற்கும் , எப்போதும் உங்கள் positive thoughts மற்றும் positive vibration கும். கலை சியாட்டல்

கலையரசி said...

அய்யா மன்னிக்கவும். இரண்டு browser open செய்து வைத்ததில் குழம்பி சரியாக paste- செய்யவில்லை என்று இங்கும் பேஸ்ட் செய்து விட்டேன். மன்னிக்கவும்.

பெரியவரின் ஜாதக அலசலில் ஒவ்வொரு யோகத்தையும் அதற்கான் விளக்கத்தையும் கொடுத்து இருந்தது நன்றாக புரியும் படி இருந்தது.
சுக்ரன் உச்சம் பெற்றால் லௌதீக வாழ்கை நன்றாக இருக்கும் என்ற என் புரிதலை சரி படித்தியது இன்றைய பாடம்.
அதே போல் விருசிகத்தில் சந்திரன் இருப்பதால் (நீசம் பெறுவதால்) அவர்கள் மன சமந்தப்பட்ட விஷயங்களில் ஏற்ற இரக்கமாய் இருப்பார்கள் என்ற புரிதலையும் சரி செய்தது இன்றைய பாடம். (புரிந்து கொள்வதில் தான் எத்தனை குழப்பம்?!)

கலை சியாட்டல்

SP.VR. SUBBAIYA said...

Blogger Bhuvaneshwar said...
ஒரு ஜாதகரின் பத்தாம் இடத்தில் உள்ள கிரகங்கள் தான் எடுக்கும் வ்ருத்தியில்/செய் கர்மத்தில் மேன்மை ஏற்பட காரணம்.
சுவாமிகளின் ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் சூரிய பகவான், புத பகவான் மற்றும் குரு பகவான் ஒன்றாக இருக்கிறார்கள்.
இது அவரை உலகம் போற்றும் துறவியாக ஆகியதற்கு ஒரு காரணம் (பத்தாம் இடத்தில் மூன்று கிரகங்கள் அமைந்தால் உலகம் போற்றும் துறவி ஆவார் என ஒரு விதி உள்ளது, அதை எங்கோ படித்த ஞாபகம்)
இந்த அமைப்போடு தபஸ்வி யோகம் உள்ளது.
பின் இந்த அமைப்புகளும் சேர்ந்து தான் அவரை ஒரு துரவரசர் என ஆக்கியன.
//
ராஜயோகம்: (equal to a king) 5ம் அதிபதி லக்கினகாரகனோடோ அல்லது 9ம் அதிபதியோடோ சேரும்போது இந்த யோகம் உண்டாகும். சுவாமிகளின் ஜாதகத்தில் 5ம் அதிபதி குரு லக்கினாதிபதி சூரியனுடன் சேர்ந்துள்ளார்.
விபரீத ராஜயோகம்: எட்டாம் அதிபதி குருவும் 12ம் அதிபதி சந்திரனும் சமசப்தகமாக உள்ளார்கள்
ராஜ சம்பந்த யோகம் அமத்யகாரகன் (இந்த ஜாதகத்திற்கு சுக்கிரன்) உச்சம் பெற்றுள்ளதால் கிடைத்தது. அதீத புத்திசாலித்தனம்
ஆட்சியாளர்களுடனா தொடர்பு: லக்கினாதிபதி கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்தால் கிடைக்கும். சுவாமிகளின் ஜாதகத்தில்
லக்கினாதிபதி 10ல்
//
அவர் இவ்வுடலை நீத்து குரு தசையில் சூரிய புக்தியில் குரு அந்தரத்தில்.
அவர் எட்டு நாட்களுக்கு முன்னரே நாள் குறித்து விட்டு மிக நெருங்கிய பக்தர்களுக்கு மட்டும் சொல்லி விட்டாராம்.
மாதா பிதா குரு தெய்வம் என்ற வாக்கிற்கு இணங்க தாம் உடலை நீக்கு முன் தனது பெற்றோர் புகைப்படத்தை பார்த்து விட்டு, தனது குரு மற்றும் பரம குரு நாதர்களை தியானித்து விட்டு சென்றார்.
ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன். தவறு இருந்தால் திருத்தவும். கற்று கொள்ள ஆவலாக உள்ளேன்./////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கும் செய்திகளுக்கும் நன்றி புவனேஷ்வர்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger thanusu said...
எனக்கு மிகவும் பிடித்த அலசல் பாடம். இன்றைய அலசலில் பெரியவர் .அத்தனை விளக்கமாக இருந்தது. ராசிக்கட்டம், அஷ்டவர்க்கம், யோகபலங்கள், தசா காலங்கள்,அத்துடன் முடிவு என அத்தனை கோணத்திலும் பாடம்.மிக்க நன்றிகள் அய்யா////

உங்களின் பாராட்டிற்கு நன்றி அன்பரே!

SP.VR. SUBBAIYA said...

///Blogger thanusu said...
என்றும் நன்றிக்கு நாய்.இன்று பொறுப்புக்கும் நாயே என்றாகிவிட்டது .நாம்தான் நம் நன்றியையும் பொறுப்பையும் மறந்து ஏனோதானோ என்று இருக்கிறோம்////

அந்தப் படத்தைப் பார்த்து பின்னூட்டம் போட்டமைக்கு நன்றி தனுசு!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger eswari sekar said...
mega arumina jathka alseal padam nanru thanks////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

///Blogger Bhuvaneshwar said...
இந்த இடத்தில ஒரு titbit தகவலையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அனைவருக்கும் அது அநேகமாக தெரிந்து இருக்கும்.
சுக்கிர பகவான் ஃபேஷனுக்கும், "இன்பங்களுக்கும்" மட்டும் அதிபதி அல்ல.
வேதியியல், சமையல் (என்ன வித்தியாசம்??) மற்றும் நீதி சாஸ்திரம் ஆகியவற்றுக்கு கூட தலைவர் (குரு அல்ல, சுக்கிரர் தான்). "நீதி சாஸ்திரத்தில் சுக்கிரனை போன்றவன்" என சகாதேவனை சொல்லுவார் தருமர். இது எனது தாத்தா எனக்கு சொன்னது.
இன்னொரு நாள் மாணவர் மலரில் ஒரு சுவையான வரலாற்றை சொல்லுகிறேன்.
சுக்கிர பகவானுக்கு ஒரு குட்டி சுட்டி பெண் மகளாக இருந்தாள். அவள் பெயர் தேவயானி. அவளுக்கு தகப்பனான சுக்கிராச்சாரியார் சொல்லும் நன்னெறி உபதேசம் ரசமாக இருக்கும்.
கோபித்து கொண்டு விட்ட சிறு பெண் குழந்தைக்கு நீதி உபதேசம் சொல்கிறார் என்பதால் மிக தெளிவாக சொல்லி இருப்பார்.
மற்றொரு நாள் இதை விரிவாக தனியாக போடுகிறேன்./////

நல்லது. நன்றி!~

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ravichandran said...
Ayya,
One small clarification. Ketu at 2 and Rahu at 8, it is Naga Dosam. Since Guru has seeing second house(Ketu house), so Naga dosam got cancelled..Ist correct Ayya in Periyavar Horoscope?
Student,
Trichy Ravi//////

குரு பார்வையால் கோடி தோஷம் நீங்கும் என்பார்கள். அது நிறைவேறியுள்ளது.

SP.VR. SUBBAIYA said...

///Blogger Parvathy Ramachandran said...
மடாதிபதியாக இருந்தபோதும் ‘கரதல பிக்ஷை தருதல வாஸம்’ என்னும் துறவற விதியை, எள்ளளவும் பிசகாமல் வாழ்ந்து காட்டிய, யுக,யுகாந்திரங்களுக்கு ஒரு முறை தோன்றும் மஹா புருஷரான, ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவரின் ஜாதக அலசலைத் தந்தமைக்கு ஆயிரம் கோடி நன்றிகள். ஜாதகத்தில், சிவபெருமானை அர்ச்சிக்க மிக விசேஷமான, வில்வ பத்ரத்தின் பெயர் கொண்ட (வில்வபுரம், விழுப்புரம்) ஊரில், நடமாடும் சிவமாகவே வணங்கி வழிபடப்பெற்ற, மகான் அவதரித்தது என்ன அருமையான பொருத்தம்!!!!.
இன்றும் என் போன்ற எண்ணற்ற பக்தர்களுக்குத் தோன்றாத் துணையாக ஸ்ரீ மஹாபெரியவர் அருகிருந்து காப்பது கண்கூடு. மிகப் பெரும் பாரம் மனதை அழுத்தும் போதெல்லாம், அவர் படத்தைப் பார்த்து பிரார்த்தனை செய்ய‌ சில விநாடிகளிலேயே மனம் லேசாகி விடுவது என் சொந்த அனுபவம். தங்களுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றி.
மாற்று மதத்தினரும் போற்றிக் கைதொழும், ஸ்ரீ மஹாபெரியவரின் மகிமை, கீழ்கண்ட வலைப்பூவிலும் படிக்கக் கிடைக்கிறது. www.mayavaramguru.blogspot.in/////

நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!!

SP.VR. SUBBAIYA said...

Blogger kmr.krishnan said...
பெரியவர் ஜாதக அல்சல் வாசித்துப் பயன் பெற்றேன்.
எட்டாம் இடம் எட்டாம் அதிபதி அதிக பரல் பெற்றதால் 100 வயது.
ஆனால் ஆயுள்காரகன் சனீஸ்வரன் சுய வர்கத்தில் 2 தானே பெற்றுள்ளார்.
அவர் ஆட்டத்தில் சேரமாட்டாரா? அல்லது அஷ்ட வர்கத்தில் காரகத்துவத்திற்கு வேலை கிடையாதா?/////

எட்டாம் இடத்து அதிபதி முக்கியமல்லவா? சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருந்ததாலும், லக்னாதிபதியுடன் கூட்டணி போட்டு இருந்ததாலும் வீக்காக இருந்த ஆயுள் காரகனை தாங்கிப் பிடிக்கும் சக்தி அவருக்குக் கிடைத்தது!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger saravanan said...
அன்புள்ள குருவே நமஸ்காரம் ...
என்ன ஒரு பாக்கியம் ......இந்த ஜாதகத்தை கண்ணால் பார்க்கும் அனைவருக்கும் , இதை எங்கள் கண்பார்வைக்கு தந்த வாத்தியார் அவர்களுக்கும் கோடானுகோடி புண்ணியம் .....அருமை ...அய்யா ..அருமை ....நான் புதிய மாணவன்..இப்பொழுதுதான் பழைய பாடங்களை படித்து வருகிறேன்.
பின்னாட்களில் இதுவெல்லாம் எனக்கு புரியவரும் போது இன்னும் பிரமிப்பாக இருக்கும்.நன்றி குருவே.
ரா.சரவணன்/////

நல்லது. நன்றி சரவணன்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Pandian said...
அய்யா அருமையான பதிவை தந்தமைக்கு நன்றிகள்...எனது சிறு வயது முதலே எவ்வளோவோ முயன்றும் ஆன்மிக வழியில் செல்ல முடியவில்லை...சரி நமது கர்மவினை என்று விட்டு விடவும் முடியவில்லை...எனது 35 வயது முதல் முழுவதுமாக பொது சேவை மற்றும் ஆன்மிக சேவை செய்யலாம் என்று உத்தேசித்து உள்ளேன் (இப்போது எனக்கு 28 வயது) ...இறைவன் கிருபை எவ்வாறு உள்ளது என்று தெரியவில்லை... நன்றி.../////

நல்லது. பழநியப்பன் அருளால் உங்கள் எண்ணம் ஈடேறட்டும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Megalabala said...
பெருமதிப்பிற்குரிய குருவே வணக்கம்!
மிக மிக அருமையான ஒரு மனித தெய்வத்தின் ஜாதகத்தை அலசுவதற்கு மட்டுமல்ல, அதை கண்ணால் பார்ப்பதற்க்கே கொடுத்துவைத்திருக்க வேண்டும். அந்த கொடுப்பினையை எங்களுக்கெல்லாம் அளித்த உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள். தொடரட்டும் உங்கள் பணி.
- Manimegalai, Singapore./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Bhuvaneshwar said...
///87ஆண்டுகள் உழைப்பது, பணி செய்வது என்பது சாதாரணமான விஷயம் அல்ல! ஆர அமர உட்கார்ந்து யோசித்துப்பாருங்கள். இதுவரை வாழ்ந்த வாழ்வில், நீங்கள் எத்தனை ஆண்டுகள் சேவை செய்திருப்பீர்கள்? ஆண்டுகளில் வேண்டாம். மாதங்களிலாவது சொல்லுங்கள்!
அல்லது நாட்களிலாவது சொல்லுங்கள்.
///
ஊன்றி நினைத்தால் மலைப்பாகவே இருக்கிறது. சேவைக்கு மட்டும் 87 வயது!
ஒரு சராசரி ஆயுளை விட அது அதிகம்.
பெரியவர் நூறாண்டு வாழ்ந்தார்....... ஒரு கைப்பிடி மட்டுமே உண்டு, மரநிழலில் அல்லது பாழடைந்த மண்டபங்களில் தங்கி........
எத்தனையோ பேருக்கு லௌகிகத்திலும் நல்வாழ்வு அமைத்து தந்தார்.
கணித பேராசிரியர் முனைவர். சுந்தர ராமன் அவர்களுக்கு படிப்பு செலவு, தங்க வசதி உள்பட எல்லாம் பண்ணி கொடுக்க ஏற்பாடு பண்ணியது பெரியவர் தான். அவரோடு நான் தொலை பேசியில் பேசிய போது பேராசிரியர் இதை சொன்னார். அவர் கணித பேராசிரியர். அமெரிக்காவில் உள்ளார். அவர் மெக்சிகோவில் இருந்த போது வந்த நிலநடுக்கத்தில், நிலா நடுக்கம் வந்த அதே நிமிஷம், இங்கே பெரியவர் பேராசிரியரை பற்றி " நான் ஒருத்தனை நினைச்சேன், அவன் பறந்து போயிட்டான், அவன் யாரு?" என விடுகதி போல சொன்னாராம். ஐந்து நிமிடங்கள் எல்லாரும் திகைத்த பின் (மெக்சிகோவில் நிலநடுக்கம் ஓய்ந்த பின், அதாவது பேராசிரியரை காப்பாற்றிய பின்), "துரைசாமி மகன் சுந்தரராமன்" என்று விடையையும் சொன்னாராம். இது பேராசிரியர் எனக்கு தான் வாயால் சொன்னது.
இத்தனையையும் செய்த அவர், துளி கூட அகங்காரமின்றி "நான் என்னடா பண்ணினேன், எல்லாம் காமாக்ஷி கிருபை" என்று சொன்னார்.
சித்தர்கள் கணக்கில் பெரியவரையும் வைத்து உள்ளார்கள். ஆனால் எந்த சித்து வேலையையும் தனக்கு சம்பந்தம் இல்லாதது போல வைத்து கொண்டு, அணுக்ரகதிற்கு மட்டுமே விளம்பரம் பண்ணாமல் "அதெல்லாம் ஒண்ணும் இல்லைடா, காமாக்ஷியின் அருள், பரமேஸ்வரனின் அருள், சந்திர மௌலி அருள்" என்று சொல்லியே பட்டும் படாமல் இருந்தார்.
புகழுக்கு உரியவர்களை பெரியோர்களை புகழ்வதும் பாக்கியம் தான்.
அனைவரும் நலமுடன் வாழ இறையருளை வேண்டுகிறேன்./////

நல்லது. உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger கலையரசி said...
அய்யா மன்னிக்கவும். இரண்டு browser open செய்து வைத்ததில் குழம்பி சரியாக paste- செய்யவில்லை என்று இங்கும் பேஸ்ட் செய்து விட்டேன். மன்னிக்கவும்.
பெரியவரின் ஜாதக அலசலில் ஒவ்வொரு யோகத்தையும் அதற்கான் விளக்கத்தையும் கொடுத்து இருந்தது நன்றாக புரியும் படி இருந்தது.
சுக்ரன் உச்சம் பெற்றால் லௌதீக வாழ்கை நன்றாக இருக்கும் என்ற என் புரிதலை சரி படுத்தியது இன்றைய பாடம்.
அதே போல் விருசிகத்தில் சந்திரன் இருப்பதால் (நீசம் பெறுவதால்) அவர்கள் மன சமந்தப்பட்ட விஷயங்களில் ஏற்ற இறக்கமாய் இருப்பார்கள் என்ற புரிதலையும் சரி செய்தது இன்றைய பாடம். (புரிந்து கொள்வதில் தான் எத்தனை குழப்பம்?!)
கலை சியாட்டல்/////

தொடர்ந்து படித்து வாருங்கள். பல விஷயங்கள் தெளிவாகும்!

GAYATHRI said...
This comment has been removed by the author.
GAYATHRI said...

Xellent analysis. Thanks Mr.Bhuvaneshwar for having shared the website. Basically i am living in West Mambalam, Chennai and my husband is one of the volunteer for Mahaperiyavas's anusham is being held every year May in Ayodhya Mandapam, West Mambalam. The site has the excellent information. His life itself is the great example for simplicity.

Balamurugan Jaganathan said...

மஹா பெரியவரின் ஜாதக அலசல் மிகவும் அருமை அய்யா. அலசல் முழுவதும் ராசியை வைத்தே விளக்கிவிடீர்கள்.

நவாம்சதையும் இனைத்து விளக்கினால் என்போன்ற மாணவர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும். மிக்க நன்றி அய்யா.

Uma said...

காஞ்சிப் பெரியவரின் ஜாதக அலசலுக்கு நன்றி!

அவரின் நீண்ட ஆயுளுக்கு எட்டாம் அதி தவிர எட்டில் உச்சம் பெற்ற சுக்கிரனும், ஆயுள்காரகன் சனி வர்கோத்தமத்தில் இருப்பதும் ஒரு காரணமா சார்? ஆறில் செவ் உச்சம்.

Anonymous said...

வணக்கம் ஐயா பெரியவரின் ஜாதக அலசல் சூப்பர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக சித்தர்கள் ராஜ்ஜியத்தில் ஒருவர் கமெண்ட் குடுத்திருந்தார் ஒருவரின் ஜாதகம் இதுதான் கல்கியின் ஜாதகம் என்று அதை தங்களுக்கு அனுப்பவா அதையும் அலசுங்கள் உண்மையை கூறுங்கள்

SP.VR. SUBBAIYA said...

////Blogger GAYATHRI said...
Xellent analysis. Thanks Mr.Bhuvaneshwar for having shared the website. Basically i am living in West Mambalam, Chennai and my husband is one of the volunteer for Mahaperiyavas's anusham is being held every year May in Ayodhya Mandapam, West Mambalam. The site has the excellent information. His life itself is the great example for simplicity./////

நல்லது. உங்களின் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Balamurugan Jaganathan said...
மஹா பெரியவரின் ஜாதக அலசல் மிகவும் அருமை அய்யா. அலசல் முழுவதும் ராசியை வைத்தே விளக்கிவிடீர்கள்.
நவாம்சதையும் இனைத்து விளக்கினால் என்போன்ற மாணவர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும். மிக்க நன்றி அய்யா.//////

நவாம்சம் என்பது ராசியின் விரிவாக்கம். Navamsam is the magnified version of a rasi chart. நவாம்சத்திற்குப் பதிலாக நான் அஷ்டகவர்கப் பலன்களை முழுமையாகக் கொடுத்திருக்கிறேன் நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger Uma said...
காஞ்சிப் பெரியவரின் ஜாதக அலசலுக்கு நன்றி!
அவரின் நீண்ட ஆயுளுக்கு எட்டாம் அதிபதி தவிர எட்டில் உச்சம் பெற்ற சுக்கிரனும், ஆயுள்காரகன் சனி வர்கோத்தமத்தில் இருப்பதும் ஒரு காரணமா சார்? ஆறில் செவ் உச்சம்.//////

ஆமாம்! உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger சித்தர்கள் ரகசியம் said...
வணக்கம் ஐயா பெரியவரின் ஜாதக அலசல் சூப்பர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக சித்தர்கள் ராஜ்ஜியத்தில் ஒருவர் கமெண்ட் குடுத்திருந்தார் ஒருவரின் ஜாதகம் இதுதான் கல்கியின் ஜாதகம் என்று அதை தங்களுக்கு அனுப்பவா அதையும் அலசுங்கள் உண்மையை கூறுங்கள்//////

கல்கி என்றாலே மக்கள் மத்தியில் சர்ச்சைக்கு உரிய விஷயமாகிவிட்டது. (சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் நான்தான் கல்கி என்று தன்னைப் பிரபலப்படுத்தி ஒரு கூட்டத்தைச் சேர்த்து கலக்கிய செய்தி உங்களுக்குத்தெரியுமல்லவா?) சர்ச்சைக்கு உரிய விஷயங்களை எல்லாம் நான் தவிர்க்கவே விரும்புகிறேன். ஆகவே நீங்கள் அதை அனுப்ப வேண்டாம்! உங்கள் ஆர்வத்திற்கு நன்றி!

Bhuvaneshwar said...
This comment has been removed by a blog administrator.
Maaya kanna said...

ஐயா விற்கு வணக்கம்.

எல்லோருடைய ஜாதகத்தை வைத்து மிகவும் அருமையாக விளக்கம் அளிக்கும் நீங்கள் தங்களுடைய ஜாதகத்தை த்தராதது ஏனோ ஐயா?

அன்புடன் மாயக்கண்ணா.

SP.VR. SUBBAIYA said...

Monday, June 25, 2012 5:11:00 PM
////Blogger Maaya kanna said...
ஐயா விற்கு வணக்கம்.
எல்லோருடைய ஜாதகத்தை வைத்து மிகவும் அருமையாக விளக்கம் அளிக்கும் நீங்கள் தங்களுடைய ஜாதகத்தைத் தராதது ஏனோ ஐயா?
அன்புடன் மாயக்கண்ணா.///////

மாயக் கண்ணா!

பதிவின் தலைப்பில் உள்ள என்னைப் பற்றி என்னும் சுய விளக்கத்தைப் பார்க்கவில்லையா? அதில் கடைசியாக இப்படி எழுதியிருப்பேன்:

“எட்டு ஆண்டுகளாக எழுதுகிறேன். அது என்னுடைய போதாத நேரம். என்னுடைய நல்ல நேரம் துவங்கும்போது நானே நிறுத்திவிடுவேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்”

சனி என்னைப் புரட்டி எடுத்தான். எப்படி புரட்டி எடுத்தான் என்பதை மட்டும் 50 பக்கங்களுக்கு எழுதலாம். சனி என்னுடைய ராசிநாதனும் ஆவான். அதே சனி தன்னுடைய பரிவர்த்தனை யோகத்தினால், எனக்கு மேன்மையாக பல அனுபவங்களை கொடுத்து, என்னை எழுதவும் வைத்தான். எழுத்தாளன் ஆக்கினான். அதையும் 50 பக்கங்களுக்கு எழுதலாம்.

என்னுடைய ஜாதகத்தை விரிவாக பத்துப் பக்கங்களுக்கு அலசலாம். படிப்பவர்கள் நொந்து போகும் அளவிற்கு (சம்பவங்களூடன்) அந்த அலசல் இருக்கும். இருந்தாலும் நகைச்சுவையுடன் சுவையாக எழுதலாம். அதைச் செய்ய உள்ளேன்.

எப்போது?

எனக்கு நல்ல நேரம் வரும்போது - உங்களுக்கெல்லாம் ஜோதிடப் பாடத்தில் ப்ரமோஷன் கொடுத்துவிட்டு, நேரத்தை வீணடிக்கும், எழுத்துக்களுக்கும், பதிவுகளுக்கும் ஒரு வந்தனம் சொல்லிவிட்டு, வகுப்பறையைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்பை உங்களைப் போன்ற நெருங்கிய நண்பர்கள் இருவர் அல்லது மூவரிடம் (கூட்டு நிர்வாகம்) கொடுத்துவிட்டு விடைபெறலாம் என்றுள்ளேன்.

அப்படி விடைபெறும்போது, வகுப்பறையின் கடைசி பதிவாக எனது ஜாதக அலசல் இருக்கும்!!

அதுவரை (இன்னும் இரண்டு ஆண்டுகள்) பொறுத்துக்கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

Pandian said...

SP.VR. SUBBAIYA said...////

அதுவரை (இன்னும் இரண்டு ஆண்டுகள்) பொறுத்துக்கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்//////

வேண்டாம் வாத்தியார் அய்யா அப்படியொரு முடிவு...தங்கள் எழுத்துக்கு ஒரு மாய சக்தி உள்ளது...என்னை போன்ற பலறை செம்மை படுத்தி கொண்டு இருக்கிறது... வாரத்தில் ஒரு பதிவேனும் தங்கள் எழுத வேண்டும் என்பதே இந்த மாணவனின் விருப்பம்...முருகன் துணை புரியட்டும்...

Bhuvaneshwar said...

//விடைபெறலாம் என்றுள்ளேன்//
அப்படி எல்லாம் சொல்லக்கூடாது ஐயா. எனது தாழ்மையான வேண்டுகோள்.

Pandian said...

வகுப்பறை இல்லாத பொது, எனக்கு இன்டர்நெட் connection வேஸ்ட் என்பதே எனது அபிபிராயம்...

sundari said...

சார் வணக்கம்,
நீங்க ரொம்ப மனசை தொட்டுவிட்டீர்கள் காரணம் இவ்வளவு பெரிய விஷயங்களை சும்மா சொல்லிதருகிறீர்கள் மேலும் அந்த சுவாமி ரொம்ப எனக்கு பிடிக்கும் இப்போ காரணம் புரிந்துவிட்டது சிம்ம லக்கன்ம் விருச்சிகா ராசி அதான் காரணம் மேலும் பாப்கான் பதிவு ரொம்ப நல்லாயிருந்தது நான் பாப்கான்
ரொம்ப நல்லா சாப்பிட்டு விட்டேன் நாளைக்கு தருவிங்கள்ளா சார் திருமதி பார்வதி ராமச்சந்திரன் யாரு அப்பா ரொம்ப நல்லா மருத்துவமனை அனுபவம்
ரொம்ப நல்லா எழுதுறாங்கோ அந்த நாயி சிம்ம லக்கனம்மா எல்லாரையும் எங்கும் போகவிடாமல் பார்த்துகொள்கிறது.

daran said...

தங்களின் ஆன்மிக தொண்டிற்கு மிக்க நன்றி.

நல்ல அலசல். பயன் உள்ளதாக இருந்தது.

தேமொழி said...

சப்ஸ்ட்டியூட் டீச்சர் வந்தாங்கன்னா நானும் லீவ் லெட்டர் எழுதிக் கொடுத்திடுவேனாக்கும்

SP.VR. SUBBAIYA said...

///////Blogger Pandian said...
SP.VR. SUBBAIYA said...////
அதுவரை (இன்னும் இரண்டு ஆண்டுகள்) பொறுத்துக்கொள்ளுங்கள்!
அன்புடன்
வாத்தியார்//////
வேண்டாம் வாத்தியார் அய்யா அப்படியொரு முடிவு...தங்கள் எழுத்துக்கு ஒரு மாய சக்தி உள்ளது...என்னை போன்ற பலறை செம்மை படுத்தி கொண்டு இருக்கிறது... வாரத்தில் ஒரு பதிவேனும் தங்கள் எழுத வேண்டும் என்பதே இந்த மாணவனின் விருப்பம்...முருகன் துணை புரியட்டும்...///////

Man proposes; God disposes என்பார்கள். பழநி அப்பன் என்ன செய்கிறான் என்று பார்ப்போம். பொறுத்திருங்கள்.
நான் எழுதத் துவங்கிய காலத்தில் முதல் ஆறு மாதங்கள், தினமும் 10 அல்லது 20 பேர்கள் மட்டுமே வந்து படிப்பார்கள். நான் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்று பதிவில் உள்ள தொடர்பாளர்கள் 3,297 (இன்றைய கணக்கு), கூகுள் ரீடர் வழியாகப் படிப்பவர்களையும் சேர்த்து, சராசரியாக 5,000 பேர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
என் முயற்சி அதில் எதுவும் இல்லை. பழநி அப்பன்தான் அவ்வாறு அனுப்பி, என்னை தொடர்ந்து எழுத வைத்துக்கொன்இருக்கிறான் என்று தான் நினைக்கிறேன். இன்னும் இரண்டு ஆண்டு இடைவெளி இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

என் விருப்பத்தை நான் சொல்லியிருக்கிறேன். முடிவு அவன் கையில் அல்லவா இருக்கிறது!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Bhuvaneshwar said...
//விடைபெறலாம் என்றுள்ளேன்//
அப்படி எல்லாம் சொல்லக்கூடாது ஐயா. எனது தாழ்மையான வேண்டுகோள்.///////

நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒரு வழியில் நம்மை அனுப்பிவைக்கும். பொறுத்திருங்கள். அப்பன், பழநியப்பன் என்ன செய்கிறான் என்று பார்ப்போம்!

SP.VR. SUBBAIYA said...

////////Blogger Pandian said...
வகுப்பறை இல்லாத பொது, எனக்கு இன்டர்நெட் connection வேஸ்ட் என்பதே எனது அபிபிராயம்...//////

டச்சிங், டச்சிங் பண்ணீட்டிங்களே!
உங்கள் புது மனைவியிடம் சொல்லும் டயலாக் போல உள்ளது இது!
”நீயில்லைன்னா ராசாத்தி, இந்த உலகமே வேஸ்ட்!”
இது எப்படியிருக்கு?

SP.VR. SUBBAIYA said...

Blogger sundari said...
சார் வணக்கம்,
நீங்க ரொம்ப மனசை தொட்டுவிட்டீர்கள் காரணம் இவ்வளவு பெரிய விஷயங்களை சும்மா சொல்லிதருகிறீர்கள் மேலும் அந்த சுவாமி ரொம்ப எனக்கு பிடிக்கும் இப்போ காரணம் புரிந்துவிட்டது சிம்ம லக்கன்ம் விருச்சிகா ராசி அதான் காரணம்
மேலும் பாப்கான் பதிவு ரொம்ப நல்லாயிருந்தது நான் பாப்கான் ரொம்ப நல்லா சாப்பிட்டு விட்டேன் நாளைக்கு தருவிங்கள்ளா சார் திருமதி பார்வதி ராமச்சந்திரன் யாரு அப்பா ரொம்ப நல்லா மருத்துவமனை அனுபவம்
ரொம்ப நல்லா எழுதுறாங்கோ அந்த நாயி சிம்ம லக்கனம்மா எல்லாரையும் எங்கும் போகவிடாமல் பார்த்துகொள்கிறது.////////

பாப்கார்ன் பதிவுகள் தொடர்ந்து உண்டு. நாளையும் உண்டு! உங்களின் ஆர்வத்திற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger daran said...
தங்களின் ஆன்மிக தொண்டிற்கு மிக்க நன்றி.
நல்ல அலசல். பயன் உள்ளதாக இருந்தது.////////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger தேமொழி said...
சப்ஸ்ட்டியூட் டீச்சர் வந்தாங்கன்னா நானும் லீவ் லெட்டர் எழுதிக் கொடுத்திடுவேனாக்கும்//////

லீவ் லெட்டரெல்லாம் எதற்கு? அந்த நேரத்தில், நீங்களும் வகுப்பறைக்கு ஒரு டீச்சராக வந்து விடுங்கள். நீங்கள் சுட்டிக்காட்டும் நபரையே தலைமை ஆசிரியராகப் போட்டுவிடுவோம்!

SCS SUNDAR said...

வாத்தியார் ஆக தாங்கள் இல்லாத வகுப்பறையா?
நினைத்து பார்க்கவே முடியவில்லை.

நான் ஆன்லைனிக்கு வருவதே தங்களுடைய எழுத்தை படிக்கத்தான்.

தயவு செய்து எழுதுவதை நிறுத்தும் எண்ணமே வேண்டாம்.ஐயா

SP.VR. SUBBAIYA said...

/////Blogger SCS SUNDAR said...
வாத்தியார் ஆக தாங்கள் இல்லாத வகுப்பறையா?
நினைத்து பார்க்கவே முடியவில்லை.
நான் ஆன்லைனிக்கு வருவதே தங்களுடைய எழுத்தை படிக்கத்தான்.
தயவு செய்து எழுதுவதை நிறுத்தும் எண்ணமே வேண்டாம்.ஐயா/////

வாருங்கள் கூடுதுறையாரே!
உலக இயக்கம் யாரையும் நம்பி இல்லை. இறைவனின் படைப்பு அப்படி!
பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் இருக்கும்போது இப்படிச்சொன்னார்கள்: ”நேரு இல்லாதா இந்தியாவா? நினைத்து பார்க்கவே முடியவில்லை.”
ஆனால் அவர் காலமான பிறகு, அவருடைய மகள் இந்திராகாந்தி அவர்கள், பிரதமராகி, 17 ஆண்டு காலம் சூப்பராக ஆட்சி செய்தார்!

ஓம் தத் சத் said...

அருமையான அலசல் அதுவும் இவரை
போன்ற புண்ணிய ஆத்மாக்களின்
ஜாதகத்தை அறிந்து ஆராய்ந்து
தகல்வல்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி
ஐயா

Bhuvaneshwar said...

////Blogger GAYATHRI said...
Xellent analysis. Thanks Mr.Bhuvaneshwar for having shared the website. Basically i am living in West Mambalam, Chennai and my husband is one of the volunteer for Mahaperiyavas's anusham is being held every year May in Ayodhya Mandapam, West Mambalam. The site has the excellent information. His life itself is the great example for simplicity./////

My apologies for the late response, Gayathri.
You are most welcome!
Thank you for your comment, am happy for you and your husband. May your good work continue and take wings.
Thanks.
---
Regards,
Bhuvaneshwar