மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

7.6.12

Sharing படித்ததில் பிடித்தது: கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

 படித்ததில் பிடித்தது: கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

யார் என்னதான் சொன்னாலும், மனசுக்கு திருப்தியே அடையாத இரண்டு கேள்விகள் இருக்கின்றன. கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இன்னொரு கேள்வி, இறந்த பிறகு - உயிர் என்ன ஆகிறது? இதுக்கு யார், என்னதான் சமாதானம் கொடுத்தாலும்,  நம்ப முடிவதே இல்லை.

முதல் கேள்வி சம்பந்தமாக, ஓஷோ ஒரு கதையை நமக்கு சொல்லி இருக்கிறார்...... படித்துப் பாருங்கள்..!

குருடன் ஒருவன் புத்தரிடம் கொண்டுவரப்பட்டான்.அவன் ஒரு தத்துவவாதியாக மிகவும் வாதாடுபவனாக இருந்தான். அவன்
கிராமத்தாரிடம் வெளிச்சம் என்பதே கிடையாது.நான் குருடனாக இருப்பதை போலவே நீங்கள் எல்லோரும் குருடர்கள்.நான்  அதை அறிந்து கொண்டேன், நீங்கள் அதை அறியவில்லை,அதுதான் வித்தியாசம் என்று கூறி வாதிட்டான். இதை அவன்

கண்கள் உள்ள கிராம மக்களிடம் கூறி கொண்டிருந்தான்.அந்த கிராமத்து மக்களே ஒன்றும் பேச முடியாத அளவிற்கு அவன்  வாதிடுவதில் வல்லவனாக இருந்தான்.அவனை என்ன செய்வது என்று தெரியாமல் கிராமத்தார் தவித்தனர்.

அவன் அவர்களிடம் நீங்கள் கூறும் வெளிச்சத்தை கொண்டு வாருங்கள்.நான் அதை ருசித்து பார்க்கிறேன்.இல்லை நுகர்ந்து  பார்க்கிறேன்.இல்லை,தொட்டு பார்க்கிறேன். அதன் பின்தான் நான் நம்ப முடியும்.என்று கூறினான். வெளிச்சத்தை  தொடமுடியாது,ருசிக்க முடியாது.நுகரவும் முடியாது. கேட்கவும் முடியாது.ஆனால் இந்த குருட்டு மனிதனுக்கு உள்ளவையோ
இந்த நான்கு புலன்களும்தான். ஆகவே அவன் வெற்றியடைந்து விட்டதாக சிரிப்பான்.பாருங்கள் ஒளி என்று  கிடையாது.உண்டு எனில் எனக்கு நிருபித்து காட்டுங்கள் என்று கூறுவான்.

புத்தர் அந்த கிராமத்துக்கு வந்த போது அங்குள்ளவர்கள் அவனை அவரிடம் அழைத்து வந்தார்கள். அவனது வரலாறு  முழுவதையும் புத்தர் கேட்டார். அதன் பின் அவர் இவனுக்கு நான் தேவை இல்லை.வெளிச்சத்தை பற்றி இவனிடம் பேசுவது  முட்டாள்தனம்.இவனோடு நீங்கள் வாதிட்டால் அவன்தான் வெற்றி பெறுவான்.அவனால் வெளிச்சம் இல்லை என்பதை நிருபிக்க  முடியும்.எனவே இவனை என் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். என்று கூறினார். ஆறு மாத காலத்தில் புத்தருடைய
மருத்துவர் அவனை குணப்படுத்தினார். அவன் புத்தர் கால்களில் வந்து விழுந்தான்.

நீங்கள் மட்டும் இல்லையெனில் நான் என் வாழ்நாள் முழுவதும் வெளிச்சத்தை பற்றி விவாதம் செய்தே கழித்திருப்பேன்.ஆனால்
வெளிச்சம் உள்ளது.இப்போது நான் அதை அறிகிறேன்.என்று கூறினான்.

இப்போது புத்தர் நீ அதை நிருபிக்க முடியுமா?வெளிச்சம் எங்கே உள்ளது?நான் அதை ருசிக்க வேண்டும்.அதை தொட வேண்டும்.நுகர வேண்டும். என்று கேட்டார்.

உடனே அந்த முன்னாள் குருடன்.அது முடியாத காரியம் அதை பார்க்க மட்டும்தான் முடியும் என்பதை இப்போதுதான் நான் அறிகிறேன்.அதை அடைவதற்கு வேறு வழி இல்லை.என்னை மன்னித்து விடுங்கள் என்றான்.

ஓஷோ சொல்கிறார்: ஞாபகத்தில் கொள்ளுங்கள் எதிர்மறையானவற்றை மிக எளிதில் நிருபித்து விடலாம்.ஆனால்  நேர்மறையானவற்றை நிரூபித்தல் சாத்தியமில்லை. எனவே தான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும் ஆத்திகன் எப்போதும்  தோல்வியுறுபவனாகவும்  இருக்கிறான்.அவன் கடவுள் அல்லது ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியாது.

படித்த பதிவின் சுட்டி:
அந்த அன்பருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!
http://www.livingextra.com/2012/06/blog-post_05.html#ixzz1wySWCH4Z
---------------------------------
மின்னஞ்சல் மூலம் நமக்கு இதை அறியத் தந்தவர்:
திரு பிரகாஷ் அந்த அன்பருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!
pracash1982@gmail.com
-----------------------------------------

வாழ்க வளமுடன்!

37 comments:

kmr.krishnan said...

நல்லதோர் பதிவு ஐயா!நன்றி!

ஒரு சமயம் காட்டு வழியில் இரு சக்கர வாகனத்தில் ன் வரும்போது பெட்ரோல் தீர்ந்து வண்டி நின்றுவிட்டது. அந்தி சாயும் வேளை. என்ன செய்வது என்று திகைத்து என் குல தெய்வத்தை வாய்விட்டுக் கூப்பிட்டேன் எங்கிருந்தோ ஒருவர் காரில் வந்து காரை நிறுத்தி ஒரு பாட்டில் பெட்ரோலை அளித்தார். என் வண்டியில் ஊற்றிவிட்டு பாட்டிலைத் திருப்பித்தரத் திரும்பினால் ஆளைக்காணும். காரையும் காணும். பெட்ரோலுக்கான பணமும் வாங்கிக் கொள்ளவில்லை.

உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை.

சரண் said...

/////////////எதிர்மறையானவற்றை மிக எளிதில் நிருபித்து விடலாம்.ஆனால் நேர்மறையானவற்றை நிரூபித்தல் சாத்தியமில்லை. எனவே தான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும் ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும் இருக்கிறான்.அவன் கடவுள் அல்லது ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியாது./////////

-சத்தியமான வார்த்தைகள்.

ஜி ஆலாசியம் said...

நல்லதொரு பதிவு ஐயா!

ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டது இறை என்பது என்பது அடிப்படையான விஷயம். அதை உணரத்தான் முடியும் எனும் போது வாதிடுவது என்பது கைகள் இல்லாத வேறு இரு வேறு மொழிகள் கொண்ட இருவர் இதைப் பற்றி வாதிடுவது போன்றதாகும்.

மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட மேலான சக்தி ஒன்று இருக்கிறது என்று நம்பும் இருவர் வேண்டுமானால் இதைப் பற்றிய கலந்துரையாடலில் சிலவற்றை பகிர்ந்தும், வாதிட்டும் தெளிவும் பெறலாம் அப்படி இல்லாத போது அது வீணான ஒன்றே.

ஆஸ்திகர், நாத்திகர் இருவரும் வாதிடும் போது அங்கே உண்மையான வற்றைப் பற்றிய பேச்சை விட எப்படியாவது முடக்க வேண்டும் என்ற நோக்கோடு முயலும் போதும்!!!???...

உணரவேண்டியதை காட்டச் சொல்லும் ஒருவரிடம் வாதிட முடியாது என்பதை அந்த ஆஸ்திகர் முதலில் உணர வேண்டும்.

இதில் யாருக்கும் நஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒன்று மூளை சலவை செய்தவர்களாக இருந்தால் இருவரும் ஒன்றே...

என் தாத்தா சொன்னார், என் அப்பா சொன்னார், அதனால் நானும் சொல்கிறேன் என்பது இருக்கிறதே இரண்டு தரப்பிலும் ஒரு அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டும்.... நாம் குழந்தைகளாக இருக்கும் போது பலவற்றும் ஆரபித்தது அப்படித் தான் இருந்தும் நாம் நாளடைவில் பல நேரங்களில் யாவற்றையும் ஏற்பதும் இல்லை. அதே நேரம் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் சென்றவழி எனும் போது முழு நம்பிக்கையில் செல்வதே சரியானதாகவும் இருக்கும்.

அப்படிப் போகும் போது அந்த இறைசக்தி உண்மையானதே என்பதால் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் பல தருணங்களில் இல்லை சில தருணங்களிலாவது இறைவனின் இருப்பை அன்றாட வாழ்வில் உணர்ந்திருப்பான். அது பாலுக்குள் இருக்கும் நெய்யைப் போன்றது என்பதை புரிந்து கொள்ள இயலாமல் இருந்திருப்பான் அவ்வளவே.

ஓசோவின் சிந்தனையை அனுப்பிய சகோதரர் பிரகாஷிற்கும் பதிவிட்ட வாத்தியாருக்கும் நன்றிகள் பல.

palani vel said...

எனக்கும் பிடித்து. நன்றி வாத்யாரே..!

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்

நல்ல பதிவு

நன்றி

Bhuvaneshwar said...
This comment has been removed by the author.
Bhuvaneshwar said...

Good Morning Sir! I am Present Sir!

I personally feel there is no need to go about proving to an atheist about the presence of God if we truly believe.

There would come a time when they get drawn by the inward force, the call of God from within and turn inwards.

There is a spark of the divine in every creation which will eventually take the creation to the absolute. No cause for worry.

The spark of divinity that has been placed in every man will, in this or the subsequent births take him closer and closer to his own self and finally the dissolution would occur.

Till then, there is no way he can say Aham Brahmasmi. Without the direct cognizance of the one fit to be cognized, that phrase is meaningless.

That's why we never believe in the man or woman who goes around entreating people to worship them. Real realized souls never dis that but people thronged behind them, much to their discomfort!

thanusu said...

தொடர்ந்து இரண்டாவது நாளாக மனதை வளப்படுத்தும் இன்னுமொரு கட்டுரை.

ஓஷோவின் இறுதி வரிகள் தீர்க்கமாய் சொல்லி உள்ளன.

கிருஷ்னன் சாரும் உணர்ந்ததை சொல்லியது போல் எனக்கும் ஒரு சம்பவம் நடந்த்தது.நான் முதன் முதலாக விமானம் ஏறிய போது நடந்தது. சென்னையிலிருந்து கோலாலம்பூர் வந்து இறங்கி ஒரு நாள் தங்கியபின் புருனை செல்ல வேண்டும். இமிக்ரேஷன் முடிந்து வெளியில் வறும்போது அதிகாலை மனி 4. டாக்ஸி எடுக்க அருகில் செல்லும் முன் போக வேண்டிய விலாசத்தை கைப்பையில் இருந்து எடுக்க முற்படும் போது அதிர்ச்சி. விலாசம். கைசெலவுக்கான பணம், அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர், எதுவும் கானவில்லை. எங்கேயோ எப்படியோ தவறவிட்டுவிட்டேன்.புதிய இடம் புதிய சூழ்னிலை.என்ன செய்வது என தெரியாமல் நிற்கையில் ஒரு பெரியவர் வந்து தம்பி எங்கே போகனும் நாம் இருவரும் சேர்ந்து டாக்சி ஷேர் செய்துக்கொள்ளலாமா என்று கேட்க நான் என் நிலமையை சொல்கிறேன்.பரவாய்ல்லை என்னோடு வா அழைக்கிறார்.அவரோடு போகிறேன். அவர் வீட்டுக்கு கொண்டுபோய் தங்கவைத்து மறு நாள் ஏர் போர்டுக்கு அழைத்துவந்து கையில் பத்து டாலர் கொடுத்து என்னை விமானம் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு போகிறார்.

ஒருவருடம் கழித்து நான் மீண்டும் கோலாலம்பூர் போகும் போது அவர் விலாசம் தேடி அவர் வீட்டுக்கு சென்றால் அவர் குடும்பத்தை காலி செய்துக் கொண்டு பூர்வீகம் தமிழ் நாட்டுக்கே போய்விட்டர் என்று பக்கத்தில் சொன்னார்கள்.

Ravi said...

ஒருவர் கடவுளிடம் தனது மகன் படித்து மிகப்பெரிய டாக்டர் ஆகவேணும் என்று அவன் ஒன்றாம் வகுப்பு படிக்கும் முதல் பிரார்த்தித்தார். இந்த பிரார்த்தனையில் பல பிரார்த்தனைகள் அடங்கி உள்ளது. ஒன்று அவன் நன்றாகப்படிக்க வேண்டும் - பிறகு மெடிகல் சீட் கிடைக்கவேண்டும் - அதன் பிறகு நல்ல டாக்டர் என்று பெயர் எடுக்கவேண்டும் - நன்றாக அவன் தொழில் நடைபெறவேண்டும் - வாழ்க்கையில் அவன் சிறந்த வெற்றி பெறவேண்டும் - இதில் ஒன்றிலாவது இவர் மகன் சறுக்கி விட்டால் பழி கடவுளுக்கு - இவன் வெற்றி பெற்றால் - இவனை வாழ்த்தும் பொழுது - ஆடிட்டர் பேரன் - இஞ்சினியர் மகன் என்று தனது தலைமுறையை புகழும் வழக்கம் இன்றும் உண்டு.

இதில் இவரது மகன் செய்யும் தவறுகளுக்கு கடவுளை காரணமும் காட்டுவர் - வாய்ப்புகள் அருகாமையில் இருந்தும் உபயோகப்படுத்த தவறினால் அதற்கு கடவுள் பொறுப்பாக மாட்டார் - உதாரணமாக டாக்டர் தொழிலுக்கு தேவை "உடல் நலமற்று உள்ளவர்கள்" - தவறிப்போய் கூட இந்த வாய்ப்புகளை கடவுள் அவரது உற்றார் உறவினர் நண்பர் போன்றவர்களுக்கு மட்டும் அளிக்கக்கூடாது. மும் பின் பார்த்திராதவர்களுக்கு இவை வர வேண்டும் - அதனை இவரது மகனும் எல்லா சமயங்களிலும் சரியாக புரிந்து கொண்டு, சரியான மருத்துவத்தை அளிக்க வேண்டும்.

(இதனைத்தான் - கடவுள் முயற்சி உடையவர்களுக்கே ஆசி வழங்குவார் என்று கூறுவர்)

இவை அனைத்திற்கும் தனது குடும்ப பாரம்பரியம் என்ற ஒரே காரணத்தை கூறும் உலகில் கடவுளை புரியும் சக்தி இருக்கும் என்று எதிர்பார்ப்பது மடமை.

எனக்கு தெரிந்த வரை, எந்த ஒரு டாக்டருக்கும், கடவுள், "உடல் நலமற்று உள்ளவர்கள்" - தவறிப்போய் கூட இந்த வாய்ப்புகளை கடவுள் அவரது உற்றார் உறவினர் நண்பர் போன்றவர்களுக்கு மட்டும் அளிப்பதில்லை. பெரும்பாலான சமயங்களில் இத்தகைய வாய்ப்புகள் நாம் முன் பின் பார்த்திராதவர்களுக்கு "மருத்துவம்" செய்வதால், நிகழ்கிறது.

இது ஒன்றே கடவுள் இருப்பதற்கு, மிகப்பெரிய சாட்சி.

இந்த நோய்களை கடவுள் அவரது உற்றார் உறவினர் நண்பர் போன்றவர்களுக்கு மட்டும் அளித்து இவரது மகனை வைத்தியம் பார்க்கச்சொன்னால் - இன்று ஒருவரும் "மருத்துவம்" படிக்க மாட்டார் - அதே சமயத்தில் கடவுள் நம்பிக்கையும் அறவே இருக்காது. இதே கருத்து மற்றைய தொழில்களுக்கும் பொருந்தும்.

அய்யர் said...

படித்ததில்
"பிடி"த்தது..

மீண்டும் அதே கருத்துக்களுடன் வரும் பதிவு
மீட்குமா இவர்களை..?

பதிவில் வெளியான இந்த வெளிச்சம் இருள் (இந்த ஓஷோ தகவல் அல்ல)
பற்றியே தோழர் மைனர்வாலுக்கு அண்மையில் மாணவர்மலர் குறித்த நிகழ்விற்கு வாழ்த்தியனுப்பினோம்..

நமக்கு நல்லது செய்தால்
நம்முடன் ஆண்டவன் என்பது ஒரு வகையில் சரியே என்றாலும்..

முன்னர் சொன்னபடியே சொல்கிறோம்..
நாம்
அடிப்படை விஷயங்களை தெளிவாக தெரிந்து கொள்ளவில்லை..
அதைவிட கொடுமை பல விஷயங்களை தவறாகவே புரிந்து கொண்டுள்ளோம்..
இப்போ அதுவே சரியென வாதடவும் துணிந்து விட்டோம்..

நமது கடிகாரத்தின் நேரமே சரியென
மற்றவரது கடிகாரத்தை சரி செய்ய நினைப்பது சரியல்ல..

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா

என்ற பாடல் வரிகளை சுழல விடாமல் பாடி மகிழ்விக்கின்றோம்..

வணக்கமும்
வாழ்த்துக்களும்

தோழர் பிரCASHக்கு

தேமொழி said...

///யார் என்னதான் சொன்னாலும், மனசுக்கு திருப்தியே அடையாத இரண்டு கேள்விகள் இருக்கின்றன. கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இன்னொரு கேள்வி, இறந்த பிறகு - உயிர் என்ன ஆகிறது? இதுக்கு யார், என்னதான் சமாதானம் கொடுத்தாலும், நம்ப முடிவதே இல்லை.///

முதல் கேள்வி சம்பந்தமாக இன்று ஒரு கண்ணோட்டத்தை அறிமுகப்படுதியுள்ளீர்கள், நன்றி.
இரண்டாம் கேள்வி சம்பந்தமாக உங்கள் பதிவு ஒன்றையும் எதிர்பார்க்கிறேன் ஐயா.
"நெஞ்சம் மறப்பதில்லை" மறு பிறவி கதைகளிலும், "பைரவி இவள் அவைகளுக்குப் பிரியமானவள்" என்பது போன்ற பேய்க்கதைகளில் ஆர்வம் அதிகம் என்றாலும், கண்ணதாசன் கொடுத்த "வந்தது தெரியும் போவது எங்கே வாழ்க்கை நமக்கே தெரியாது" என்ற அறிவுக்கு எட்டும் வரிகளே இதுவரை பிடித்துள்ளது.
நீங்கள் மறுபிறவி பற்றிய பதிவுகள் சிலவற்றை எழுதியுள்ளீர்கள், ஆரம்ப பாட வரிசைகளில் அவைகளைப் படித்ததுண்டு.
கடவுளைப்போல அதையும் உணர்ந்து தெளிவாய் என்று சொல்லாதீர்கள் ஐயா. ...ஹி....ஹி.... ஹீ. ...பேய், பிசாசு, பூதம், ஆவிகள் அநுபவங்களுக்கு நான் தயாரில்லை.

sury said...

நமது அன்றாட வாழ்விலே நிகழும் மனதை நெகிழச்செய்யும் ஒரு சில காட்சிகள் ஆதாரத்திலே கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று அனுமானிப்பது சரிதானா என எனக்குத் தெரியவில்ல.

2004 ம் வருடம்.மே மாதம் 28ம் தேதி. \

அன்று இரவு நான் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தஞ்சைக்கு ஒரு அரசு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். மணி 9 இருக்கும். திடிரென பஸ் நின்றுவிட்டது. இந்தப்பக்கம் அந்தப்பக்கம் எல்லாமே வயற்காடு. வெளிச்சமும் அவ்வளவாக இல்லை.
பஸ்ஸில் என்னையும் சேர்த்து ஆறு பேர். கண்டக்டர், ட்ரைவர் உட்பட. என்ன ப்ராப்ளம் அப்படின்னு தெரியல்ல. வண்டி ஸ்டார்ட் ஆவல்ல. எதித்தாப்போல வண்டி வந்தா சொல்லி அனுப்புரோம். இதே ஸைடு எதுனாச்சும் வண்டி வந்துச்சுன்னா ஏறிப்போங்க என்றார் கண்டக்டர். வேறு வழியில்லை. நாங்கள் எல்லோருமே ரோடில் நின்று கொண்டிருந்தோம்.

என்ன இது! 11.00 மணி சென்னைக்கு செல்லும் பஸ்ஸுக்கு ரிஸர்வ் செய்து இருக்கிறோமே ! எப்ப வண்டி வந்து எப்ப போறது !!

திடிரென ஒரு பைக் வந்து நின்றது.ஏதோ ஆக்ஸிடென்ட் என்று நினைத்து பைக்கை ஆஃப் செய்து விட்டு.
என்ன என்ன ஏதேனும் ஆக்சிடென்ட் ஆ என்று விசாரித்தவர் என்னைப் பார்த்து, அடடா, சூரி ஸார் ! என்னது உங்களை எதிர்பார்க்கவில்லையே என்று என்ன ஏது என்று குசலம் விசாரித்தார். அவர் பார்த்த பார்வையிலிருந்து அவர் எனக்கு ஒரு லிஃப்ட் கொடுப்பார் என்று தோன்றவில்லை. அடடா !
ஐ ஆம் சோ சாரி,ஐ ஆம் நாட் ஏபில் டு ஹெல்ப் யூ என்று அவர் சும்மா போயிருந்தால், இந்த பின்னூட்டம் இருந்திருக்காது.
ஸார் ! ஒண்ணு சொல்லணும் ஸார் !! என்றார். சொல்லுங்கள் என்றேன்.
நீங்க ரிடையர் ஆயிட்டங்க இல்லையா என்று உறுதிப்படுத்திக்கொண்டார். எதற்கெனத் தெரியவில்லை.

ஸார், கோவிச்சுக்காம இருந்தா சொல்றேன். என்று ஒரு முத்தாய்ப்புடன் துவங்கினார்.

எட்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு புரோமோஷன் வந்த போது உங்ககிட்ட வந்து அத்தன சொல்லியும் என்ன தண்ணி இல்லாத காட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சிங்கல்ல !! அப்பவே நினைச்சுகிட்டேன். ஆண்டவா ! என்னிக்காச்சும் ஒரு நாளைக்கு இந்த பி அன்ட் ஆர் மேனேஜர் ஐ நடுத்தெருவில்ல நிக்கவை, அப்பதான் என் மனசு ஆறும் அப்படின்னு நினச்சேன். இன்னிக்கு நடந்துடுத்து. தைவம் இருக்கு ஸார், இருக்கு என்றார்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

கதை முடியவில்லை.

பை என்று எனக்குச் சொல்லிவிட்டு,
அவர் தன் பைக்கை ஸ்டார்ட் செய்தார். ஏதோ தகராறு. ஸ்டார்ட் ஆகவில்லை. உதைக்கிறார் உதைக்கிறார். பைக்கை இந்தப்பக்கம் அந்தப்பக்கம் சாய்த்துப்பின் உதைக்கிறார். ஊஹும். பைக் நகரவில்லை.

ஒரு பத்து நிமிஷம் அவர் உதைக்க உதைக்க அத்தனை உதையும் அந்த பைக் வாங்கிக்கொண்டதே தவிர நகர்ர மாதிரி தெரியவில்லை.

தூரத்தில் இருந்து ஒரு பஸ் வந்தது. நின்றது. எல்லோரும் ஏறிக்கங்க என்றார் எங்க பஸ் கன்டக்டர். நான் பஸ்ஸில் ஏறினேன். அவரைப் பார்த்தேன். நீங்களும் இதில் வாருங்களேன்.என்றேன்.

இந்த பைக்கை விட்டு விட்டு எப்படி வர முடியும் ? என்றார். அங்கேயே நின்றுவிட்டார்.

இந்த நிகழ்வில் ஏதோ ஒரு லெஸன் இருப்பதாக either for me or for my friend நான் நினைக்கவில்லை. இது ஒரு ஆர்டினரி நிகழ்வு என்றாலும் என் மனதில் நின்று விட்டது.

Whatever happens, happens .
most times, not by us, but despite us.

subbu rathinam.ட்

வாத்தியாரின் கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். அனால், இன்று வாத்தியாரை மிஞ்சும் மாணவர்களின் கருத்துரைகளால் ஈர்க்கப்பட்டுவிட்டேன்.

தேமொழி said...

இப்பதிவின் பின்நூட்டங்களில் "படித்ததில் பிடித்தது"

///ஜி ஆலாசியம் said... ஆஸ்திகர், நாத்திகர் இருவரும் வாதிடும் போது அங்கே உண்மையான வற்றைப் பற்றிய பேச்சை விட எப்படியாவது முடக்க வேண்டும் என்ற நோக்கோடு முயலும் போதும்!!!???...
உணரவேண்டியதை காட்டச் சொல்லும் ஒருவரிடம் வாதிட முடியாது என்பதை அந்த ஆஸ்திகர் முதலில் உணர வேண்டும்.
இதில் யாருக்கும் நஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒன்று மூளை சலவை செய்தவர்களாக இருந்தால் இருவரும் ஒன்றே...
என் தாத்தா சொன்னார், என் அப்பா சொன்னார், அதனால் நானும் சொல்கிறேன் என்பது இருக்கிறதே இரண்டு தரப்பிலும் ஒரு அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டும்....////

///அய்யர் said... நமது கடிகாரத்தின் நேரமே சரியென
மற்றவரது கடிகாரத்தை சரி செய்ய நினைப்பது சரியல்ல....///

///subbu rathinam sir said .... Whatever happens, happens .
most times, not by us, but despite us.

kimu said...

நல்ல பதிவு ஐயா
நன்றி!

Jawahar Govindaraj said...

அருமையான கதை!
‍‍- ஜவஹர் கோவிந்தராஜ்

Balaji said...

padivu ingirinthu edukka pattuluathu .

http://www.livingextra.com/2012/06/blog-post_05.html

Neengal pathivai aasiriyaridam irunthu anumathi petru ullera ?

Parvathy Ramachandran said...

மிக அற்புதமான, ஆழ்ந்த கருத்துக்கள் செறிந்த பதிவைத் தந்தமைக்கு நன்றி. சக மாணவர்களின் கருத்துரைகளும் மிக மிக அருமை.

வாத்தியார் அவர்கள் வலைப்பூவில் இருக்கும் இந்தப் பொன்மொழி எப்போதும் எனக்குப் பிடித்தது.

""God always gives the very best
to those who leave the choice to Him"

இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடையும்போது நாளும் பொழுதும் அவனால் வழிநடத்தப்படுவதை உணர முடியும். அந்த நிலையில் வாழ்வில் தோன்றும் துன்பங்கள் யாவும் கண்ணருகில் வைத்துப்பார்க்கப்படும் சிறுகல் போல் பெரிதாகத் தோன்றாது. மேலும் அதிலிருந்து நாம் விடுவிக்கபடுவது உறுதி என்ற நம்பிக்கை இருப்பதால், நிதானமிழக்காமல் இருப்பதும் இயலும். ஓஷோவின் அருமையான செய்தியைத் தந்துதவிய சகோதரர் பிரகாஷுக்கும் நல்லதொரு பதிவைத் தந்த தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

kmr.krishnan said...
This comment has been removed by a blog administrator.
SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
நல்லதோர் பதிவு ஐயா!நன்றி!
ஒரு சமயம் காட்டு வழியில் இரு சக்கர வாகனத்தில் ன் வரும்போது பெட்ரோல் தீர்ந்து வண்டி நின்றுவிட்டது. அந்தி சாயும் வேளை. என்ன செய்வது என்று திகைத்து என் குல தெய்வத்தை வாய்விட்டுக் கூப்பிட்டேன் எங்கிருந்தோ ஒருவர் காரில் வந்து காரை நிறுத்தி ஒரு பாட்டில் பெட்ரோலை அளித்தார். என் வண்டியில் ஊற்றிவிட்டு பாட்டிலைத் திருப்பித்தரத் திரும்பினால் ஆளைக்காணும். காரையும் காணும். பெட்ரோலுக்கான பணமும் வாங்கிக் கொள்ளவில்லை.
உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை.////

தெய்வம் என்றால் தெய்வம் - வெறும்
சிலை என்றால் சிலைதான்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger சரண் said...
/////////////எதிர்மறையானவற்றை மிக எளிதில் நிருபித்து விடலாம்.ஆனால் நேர்மறையானவற்றை நிரூபித்தல் சாத்தியமில்லை. எனவே தான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும் ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும் இருக்கிறான்.அவன் கடவுள் அல்லது ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியாது./////////
-சத்தியமான வார்த்தைகள்.//////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ஜி ஆலாசியம் said...
நல்லதொரு பதிவு ஐயா!
ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டது இறை என்பது என்பது அடிப்படையான விஷயம். அதை உணரத்தான் முடியும் எனும் போது வாதிடுவது என்பது கைகள் இல்லாத வேறு இரு வேறு மொழிகள் கொண்ட இருவர் இதைப் பற்றி வாதிடுவது போன்றதாகும்.
மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட மேலான சக்தி ஒன்று இருக்கிறது என்று நம்பும் இருவர் வேண்டுமானால் இதைப் பற்றிய கலந்துரையாடலில் சிலவற்றை பகிர்ந்தும், வாதிட்டும் தெளிவும் பெறலாம் அப்படி இல்லாத போது அது வீணான ஒன்றே.
ஆஸ்திகர், நாத்திகர் இருவரும் வாதிடும் போது அங்கே உண்மையான வற்றைப் பற்றிய பேச்சை விட எப்படியாவது முடக்க வேண்டும் என்ற நோக்கோடு முயலும் போதும்!!!???...
உணரவேண்டியதை காட்டச் சொல்லும் ஒருவரிடம் வாதிட முடியாது என்பதை அந்த ஆஸ்திகர் முதலில் உணர வேண்டும்.
இதில் யாருக்கும் நஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒன்று மூளை சலவை செய்தவர்களாக இருந்தால் இருவரும் ஒன்றே...
என் தாத்தா சொன்னார், என் அப்பா சொன்னார், அதனால் நானும் சொல்கிறேன் என்பது இருக்கிறதே இரண்டு தரப்பிலும் ஒரு அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டும்.... நாம் குழந்தைகளாக இருக்கும் போது பலவற்றும் ஆரபித்தது அப்படித் தான் இருந்தும் நாம் நாளடைவில் பல நேரங்களில் யாவற்றையும் ஏற்பதும் இல்லை. அதே நேரம் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் சென்றவழி எனும் போது முழு நம்பிக்கையில் செல்வதே சரியானதாகவும் இருக்கும்.
அப்படிப் போகும் போது அந்த இறைசக்தி உண்மையானதே என்பதால் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் பல தருணங்களில் இல்லை சில தருணங்களிலாவது இறைவனின் இருப்பை அன்றாட வாழ்வில் உணர்ந்திருப்பான். அது பாலுக்குள் இருக்கும் நெய்யைப் போன்றது என்பதை புரிந்து கொள்ள இயலாமல் இருந்திருப்பான் அவ்வளவே.
ஓசோவின் சிந்தனையை அனுப்பிய சகோதரர் பிரகாஷிற்கும் பதிவிட்ட வாத்தியாருக்கும் நன்றிகள் பல./////

உங்களின் கருத்துப் பகிர்விற்கும், நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

///Blogger palani vel said...
எனக்கும் பிடித்து. நன்றி வாத்யாரே..!////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
நல்ல பதிவு
நன்றி/////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Bhuvaneshwar said...
Good Morning Sir! I am Present Sir!
I personally feel there is no need to go about proving to an atheist about the presence of God if we truly believe.
There would come a time when they get drawn by the inward force, the call of God from within and turn inwards.
There is a spark of the divine in every creation which will eventually take the creation to the absolute. No cause for worry.
The spark of divinity that has been placed in every man will, in this or the subsequent births take him closer and closer to his own self and finally the dissolution would occur.
Till then, there is no way he can say Aham Brahmasmi. Without the direct cognizance of the one fit to be cognized, that phrase is meaningless.
That's why we never believe in the man or woman who goes around entreating people to worship them. Real realized souls never dis that but people thronged behind them, much to their discomfort!/////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger thanusu said...
தொடர்ந்து இரண்டாவது நாளாக மனதை வளப்படுத்தும் இன்னுமொரு கட்டுரை.
ஓஷோவின் இறுதி வரிகள் தீர்க்கமாய் சொல்லி உள்ளன.
கிருஷ்னன் சாரும் உணர்ந்ததை சொல்லியது போல் எனக்கும் ஒரு சம்பவம் நடந்த்தது.நான் முதன் முதலாக விமானம் ஏறிய போது நடந்தது. சென்னையிலிருந்து கோலாலம்பூர் வந்து இறங்கி ஒரு நாள் தங்கியபின் புருனை செல்ல வேண்டும். இமிக்ரேஷன் முடிந்து வெளியில் வறும்போது அதிகாலை மனி 4. டாக்ஸி எடுக்க அருகில் செல்லும் முன் போக வேண்டிய விலாசத்தை கைப்பையில் இருந்து எடுக்க முற்படும் போது அதிர்ச்சி. விலாசம். கைசெலவுக்கான பணம், அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர், எதுவும் கானவில்லை. எங்கேயோ எப்படியோ தவறவிட்டுவிட்டேன்.புதிய இடம் புதிய சூழ்னிலை.என்ன செய்வது என தெரியாமல் நிற்கையில் ஒரு பெரியவர் வந்து தம்பி எங்கே போகனும் நாம் இருவரும் சேர்ந்து டாக்சி ஷேர் செய்துக்கொள்ளலாமா என்று கேட்க நான் என் நிலமையை சொல்கிறேன்.பரவாய்ல்லை என்னோடு வா அழைக்கிறார்.அவரோடு போகிறேன். அவர் வீட்டுக்கு கொண்டுபோய் தங்கவைத்து மறு நாள் ஏர் போர்ட்டுக்கு அழைத்துவந்து கையில் பத்து டாலர் கொடுத்து என்னை விமானம் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு போகிறார்.
ஒருவருடம் கழித்து நான் மீண்டும் கோலாலம்பூர் போகும் போது அவர் விலாசம் தேடி அவர் வீட்டுக்கு சென்றால் அவர் குடும்பத்தை காலி செய்துக் கொண்டு பூர்வீகம் தமிழ் நாட்டுக்கே போய்விட்டர் என்று பக்கத்தில் சொன்னார்கள்.//////

நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

Blogger Ravi said...
ஒருவர் கடவுளிடம் தனது மகன் படித்து மிகப்பெரிய டாக்டர் ஆகவேணும் என்று அவன் ஒன்றாம் வகுப்பு படிக்கும் முதல் பிரார்த்தித்தார். இந்த பிரார்த்தனையில் பல பிரார்த்தனைகள் அடங்கி உள்ளது. ஒன்று அவன் நன்றாகப்படிக்க வேண்டும் - பிறகு மெடிகல் சீட் கிடைக்கவேண்டும் - அதன் பிறகு நல்ல டாக்டர் என்று பெயர் எடுக்கவேண்டும் - நன்றாக அவன் தொழில் நடைபெறவேண்டும் - வாழ்க்கையில் அவன் சிறந்த வெற்றி பெறவேண்டும் - இதில் ஒன்றிலாவது இவர் மகன் சறுக்கி விட்டால் பழி கடவுளுக்கு - இவன் வெற்றி பெற்றால் - இவனை வாழ்த்தும் பொழுது - ஆடிட்டர் பேரன் - இஞ்சினியர் மகன் என்று தனது தலைமுறையை புகழும் வழக்கம் இன்றும் உண்டு.
இதில் இவரது மகன் செய்யும் தவறுகளுக்கு கடவுளை காரணமும் காட்டுவர் - வாய்ப்புகள் அருகாமையில் இருந்தும் உபயோகப்படுத்த தவறினால் அதற்கு கடவுள் பொறுப்பாக மாட்டார் - உதாரணமாக டாக்டர் தொழிலுக்கு தேவை "உடல் நலமற்று உள்ளவர்கள்" - தவறிப்போய் கூட இந்த வாய்ப்புகளை கடவுள் அவரது உற்றார் உறவினர் நண்பர் போன்றவர்களுக்கு மட்டும் அளிக்கக்கூடாது. மும் பின் பார்த்திராதவர்களுக்கு இவை வர வேண்டும் - அதனை இவரது மகனும் எல்லா சமயங்களிலும் சரியாக புரிந்து கொண்டு, சரியான மருத்துவத்தை அளிக்க வேண்டும்.
(இதனைத்தான் - கடவுள் முயற்சி உடையவர்களுக்கே ஆசி வழங்குவார் என்று கூறுவர்)
இவை அனைத்திற்கும் தனது குடும்ப பாரம்பரியம் என்ற ஒரே காரணத்தை கூறும் உலகில் கடவுளை புரியும் சக்தி இருக்கும் என்று எதிர்பார்ப்பது மடமை.
எனக்கு தெரிந்த வரை, எந்த ஒரு டாக்டருக்கும், கடவுள், "உடல் நலமற்று உள்ளவர்கள்" - தவறிப்போய் கூட இந்த வாய்ப்புகளை கடவுள் அவரது உற்றார் உறவினர் நண்பர் போன்றவர்களுக்கு மட்டும் அளிப்பதில்லை. பெரும்பாலான சமயங்களில் இத்தகைய வாய்ப்புகள் நாம் முன் பின் பார்த்திராதவர்களுக்கு "மருத்துவம்" செய்வதால், நிகழ்கிறது.
இது ஒன்றே கடவுள் இருப்பதற்கு, மிகப்பெரிய சாட்சி.
இந்த நோய்களை கடவுள் அவரது உற்றார் உறவினர் நண்பர் போன்றவர்களுக்கு மட்டும் அளித்து இவரது மகனை வைத்தியம் பார்க்கச்சொன்னால் - இன்று ஒருவரும் "மருத்துவம்" படிக்க மாட்டார் - அதே சமயத்தில் கடவுள் நம்பிக்கையும் அறவே இருக்காது. இதே கருத்து மற்றைய தொழில்களுக்கும் பொருந்தும்./////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

SP.VR. SUBBAIYA said...

Blogger அய்யர் said...
படித்ததில்
"பிடி"த்தது..
மீண்டும் அதே கருத்துக்களுடன் வரும் பதிவு
மீட்குமா இவர்களை..?
பதிவில் வெளியான இந்த வெளிச்சம் இருள் (இந்த ஓஷோ தகவல் அல்ல)
பற்றியே தோழர் மைனர்வாலுக்கு அண்மையில் மாணவர்மலர் குறித்த நிகழ்விற்கு வாழ்த்தியனுப்பினோம்..
நமக்கு நல்லது செய்தால்
நம்முடன் ஆண்டவன் என்பது ஒரு வகையில் சரியே என்றாலும்..
முன்னர் சொன்னபடியே சொல்கிறோம்..
நாம்
அடிப்படை விஷயங்களை தெளிவாக தெரிந்து கொள்ளவில்லை..
அதைவிட கொடுமை பல விஷயங்களை தவறாகவே புரிந்து கொண்டுள்ளோம்..
இப்போ அதுவே சரியென வாதடவும் துணிந்து விட்டோம்..
நமது கடிகாரத்தின் நேரமே சரியென
மற்றவரது கடிகாரத்தை சரி செய்ய நினைப்பது சரியல்ல..
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
என்ற பாடல் வரிகளை சுழல விடாமல் பாடி மகிழ்விக்கின்றோம்..
வணக்கமும்
வாழ்த்துக்களும்/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தேமொழி said...
///யார் என்னதான் சொன்னாலும், மனசுக்கு திருப்தியே அடையாத இரண்டு கேள்விகள் இருக்கின்றன. கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இன்னொரு கேள்வி, இறந்த பிறகு - உயிர் என்ன ஆகிறது? இதுக்கு யார், என்னதான் சமாதானம் கொடுத்தாலும், நம்ப முடிவதே இல்லை.///
முதல் கேள்வி சம்பந்தமாக இன்று ஒரு கண்ணோட்டத்தை அறிமுகப்படுதியுள்ளீர்கள், நன்றி.
இரண்டாம் கேள்வி சம்பந்தமாக உங்கள் பதிவு ஒன்றையும் எதிர்பார்க்கிறேன் ஐயா.
"நெஞ்சம் மறப்பதில்லை" மறு பிறவி கதைகளிலும், "பைரவி இவள் அவைகளுக்குப் பிரியமானவள்" என்பது போன்ற பேய்க்கதைகளில் ஆர்வம் அதிகம் என்றாலும், கண்ணதாசன் கொடுத்த "வந்தது தெரியும் போவது எங்கே வாழ்க்கை நமக்கே தெரியாது" என்ற அறிவுக்கு எட்டும் வரிகளே இதுவரை பிடித்துள்ளது.
நீங்கள் மறுபிறவி பற்றிய பதிவுகள் சிலவற்றை எழுதியுள்ளீர்கள், ஆரம்ப பாட வரிசைகளில் அவைகளைப் படித்ததுண்டு.
கடவுளைப்போல அதையும் உணர்ந்து தெளிவாய் என்று சொல்லாதீர்கள் ஐயா. ...ஹி....ஹி.... ஹீ. ...பேய், பிசாசு, பூதம், ஆவிகள் அநுபவங்களுக்கு நான் தயாரில்லை.///////

உயிர் என்ன ஆகிறது? இதற்கு விடை தெரிந்தால் உங்களுக்கு பரிசாக பெரும் தொகை அளிக்க பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்!

SP.VR. SUBBAIYA said...

Blogger sury said...
நமது அன்றாட வாழ்விலே நிகழும் மனதை நெகிழச்செய்யும் ஒரு சில காட்சிகள் ஆதாரத்திலே கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று அனுமானிப்பது சரிதானா என எனக்குத் தெரியவில்ல.
2004 ம் வருடம்.மே மாதம் 28ம் தேதி. \
அன்று இரவு நான் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தஞ்சைக்கு ஒரு அரசு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். மணி 9 இருக்கும். திடிரென பஸ் நின்றுவிட்டது. இந்தப்பக்கம் அந்தப்பக்கம் எல்லாமே வயற்காடு. வெளிச்சமும் அவ்வளவாக இல்லை.
பஸ்ஸில் என்னையும் சேர்த்து ஆறு பேர். கண்டக்டர், ட்ரைவர் உட்பட. என்ன ப்ராப்ளம் அப்படின்னு தெரியல்ல. வண்டி ஸ்டார்ட் ஆவல்ல. எதித்தாப்போல வண்டி வந்தா சொல்லி அனுப்புரோம். இதே ஸைடு எதுனாச்சும் வண்டி வந்துச்சுன்னா ஏறிப்போங்க என்றார் கண்டக்டர். வேறு வழியில்லை. நாங்கள் எல்லோருமே ரோடில் நின்று கொண்டிருந்தோம்.
என்ன இது! 11.00 மணி சென்னைக்கு செல்லும் பஸ்ஸுக்கு ரிஸர்வ் செய்து இருக்கிறோமே ! எப்ப வண்டி வந்து எப்ப போறது !!
திடிரென ஒரு பைக் வந்து நின்றது.ஏதோ ஆக்ஸிடென்ட் என்று நினைத்து பைக்கை ஆஃப் செய்து விட்டு.
என்ன என்ன ஏதேனும் ஆக்சிடென்ட் ஆ என்று விசாரித்தவர் என்னைப் பார்த்து, அடடா, சூரி ஸார் ! என்னது உங்களை எதிர்பார்க்கவில்லையே என்று என்ன ஏது என்று குசலம் விசாரித்தார். அவர் பார்த்த பார்வையிலிருந்து அவர் எனக்கு ஒரு லிஃப்ட் கொடுப்பார் என்று தோன்றவில்லை. அடடா !
ஐ ஆம் சோ சாரி,ஐ ஆம் நாட் ஏபில் டு ஹெல்ப் யூ என்று அவர் சும்மா போயிருந்தால், இந்த பின்னூட்டம் இருந்திருக்காது.
ஸார் ! ஒண்ணு சொல்லணும் ஸார் !! என்றார். சொல்லுங்கள் என்றேன்.
நீங்க ரிடையர் ஆயிட்டங்க இல்லையா என்று உறுதிப்படுத்திக்கொண்டார். எதற்கெனத் தெரியவில்லை.
ஸார், கோவிச்சுக்காம இருந்தா சொல்றேன். என்று ஒரு முத்தாய்ப்புடன் துவங்கினார்.
எட்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு புரோமோஷன் வந்த போது உங்ககிட்ட வந்து அத்தன சொல்லியும் என்ன தண்ணி இல்லாத காட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சிங்கல்ல !! அப்பவே நினைச்சுகிட்டேன். ஆண்டவா ! என்னிக்காச்சும் ஒரு நாளைக்கு இந்த பி அன்ட் ஆர் மேனேஜர் ஐ நடுத்தெருவில்ல நிக்கவை, அப்பதான் என் மனசு ஆறும் அப்படின்னு நினச்சேன். இன்னிக்கு நடந்துடுத்து. தைவம் இருக்கு ஸார், இருக்கு என்றார்.
நான் ஒன்றும் சொல்லவில்லை.
கதை முடியவில்லை.
பை என்று எனக்குச் சொல்லிவிட்டு,
அவர் தன் பைக்கை ஸ்டார்ட் செய்தார். ஏதோ தகராறு. ஸ்டார்ட் ஆகவில்லை. உதைக்கிறார் உதைக்கிறார். பைக்கை இந்தப்பக்கம் அந்தப்பக்கம் சாய்த்துப்பின் உதைக்கிறார். ஊஹும். பைக் நகரவில்லை.
ஒரு பத்து நிமிஷம் அவர் உதைக்க உதைக்க அத்தனை உதையும் அந்த பைக் வாங்கிக்கொண்டதே தவிர நகர்ர மாதிரி தெரியவில்லை.
தூரத்தில் இருந்து ஒரு பஸ் வந்தது. நின்றது. எல்லோரும் ஏறிக்கங்க என்றார் எங்க பஸ் கன்டக்டர். நான் பஸ்ஸில் ஏறினேன். அவரைப் பார்த்தேன். நீங்களும் இதில் வாருங்களேன்.என்றேன்.

இந்த பைக்கை விட்டு விட்டு எப்படி வர முடியும் ? என்றார். அங்கேயே நின்றுவிட்டார்.
இந்த நிகழ்வில் ஏதோ ஒரு லெஸன் இருப்பதாக either for me or for my friend நான் நினைக்கவில்லை. இது ஒரு ஆர்டினரி நிகழ்வு என்றாலும் என் மனதில் நின்று விட்டது.
Whatever happens, happens .
most times, not by us, but despite us.
subbu rathinam./////

உங்களின் வருகைக்கும், அனுபவப் பகிர்விற்கும் நன்றி சுப்பு ரத்தினம் சார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ravi said...
வாத்தியாரின் கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். அனால், இன்று வாத்தியாரை மிஞ்சும் மாணவர்களின் கருத்துரைகளால் ஈர்க்கப்பட்டுவிட்டேன்./////

என்னைவிட வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் உயர்வானவர்கள் பலர் வகுப்பறைக்கு வந்து செல்கின்றார்கள். அது எனக்குத் தெரிந்ததுதான். என்னை மகிழ்விப்பதுதான்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kimu said...
நல்ல பதிவு ஐயா
நன்றி!/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Jawahar Govindaraj said...
அருமையான கதை!
‍‍- ஜவஹர் கோவிந்தராஜ்/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Balaji said...
padivu ingirinthu edukka pattuluathu .
http://www.livingextra.com/2012/06/blog-post_05.html
Neengal pathivai aasiriyaridam irunthu anumathi petru ullera ?/////

பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். அதில் இதை நான் குறிபிட்டுள்ளது தெரியவரும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Parvathy Ramachandran said...
மிக அற்புதமான, ஆழ்ந்த கருத்துக்கள் செறிந்த பதிவைத் தந்தமைக்கு நன்றி. சக மாணவர்களின் கருத்துரைகளும் மிக மிக அருமை.
வாத்தியார் அவர்கள் வலைப்பூவில் இருக்கும் இந்தப் பொன்மொழி எப்போதும் எனக்குப் பிடித்தது.
""God always gives the very best
to those who leave the choice to Him"
இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடையும்போது நாளும் பொழுதும் அவனால் வழிநடத்தப்படுவதை உணர முடியும். அந்த நிலையில் வாழ்வில் தோன்றும் துன்பங்கள் யாவும் கண்ணருகில் வைத்துப்பார்க்கப்படும் சிறுகல் போல் பெரிதாகத் தோன்றாது. மேலும் அதிலிருந்து நாம் விடுவிக்கபடுவது உறுதி என்ற நம்பிக்கை இருப்பதால், நிதானமிழக்காமல் இருப்பதும் இயலும். ஓஷோவின் அருமையான செய்தியைத் தந்துதவிய சகோதரர் பிரகாஷுக்கும் நல்லதொரு பதிவைத் தந்த தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.///////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கும் பாராட்டிற்கும் நன்றி சகோதரி!

Sivamjothi said...

First step self realization?
உயிர் எங்கே உள்ளது ?

http://sagakalvi.blogspot.in/2011/10/self-realization.html