மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.6.12

Humour நகைச்சுவை: அசைவப் பிரியர்களுக்கு மட்டும்!


++++++++++++++++++++++++++++++++++++++++++

நகைச்சுவை: அசைவப் பிரியர்களுக்கு மட்டும்!
எச்சரிக்கை: அடல்ஸ் ஒன்லி பதிவு!

”யோவ் வாத்தியார், வகுப்பறையில் இந்தமாதிரிப் பதிவு தேவைதானா?” என்பவர்கள் பதிவை விட்டு விலகவும்!

மற்றவர்கள் சமூக இயல் பாடமாக இந்தப் பதிவைக் கணக்கில் கொண்டு மேலே படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்றைய நாட்டு நடப்பை, மக்களின் மனப்போக்கை மாணவர்களுக்குத் தெரிவிப்பது வாத்தியாரின் கடமையாகும்.

அதோடு என்னுடைய மாணாக்கர்களின் சராசரி வயது 40
குறைந்த வயது 21
அதிக வயது 75
அதையும் கணக்கில்கொண்டுதான் பதிவை வலையில் ஏற்றுகிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு அழகான இளம்பெண் தான் கர்ப்பமாகி இருப்பதை உணர்ந்தாள்.

பயந்தாளா? அதுதான் இல்லை. நவீன உலகத்துப்பெண். தன் அன்னையிடம் செய்தியைச் சொன்னாள்.

அவளுடைய அன்னை, மிரண்டுபோனதுடன், அதீதக் கோபத்துடன் காட்டுக் கத்தலாக அவளிடம் கேட்டாள்:

“உன்னுடன் பழகும் எந்தப் பன்றி இந்தக் காரியத்தைச் செய்தது?”
("Who was the pig that did This to you?)

”இரு, நானும் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று அமைதியாகச் சொன்னவள். தன் கைபேசியை எடுத்துப் பேசினாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் அவள் வீட்டு வாசலில், மிகவும் விலை உயர்ந்த சிவப்பு வண்ண பெராரி கார் வந்து நின்றது. அசத்தலான தோற்றத்துடன் ஒரு இளைஞன் வண்டியை விட்டு இறங்கினான். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தான். ஊரையே தூக்கும் அளவிற்கு நறுமணம் அவனுடன் சேர்ந்து வந்தது. வீட்டிற்குள்ளே பவ்வியமாக வந்தான்.

வந்தவன், அந்தப் பெண்ணின் தாய், தந்தை, மற்றும் அவளுடன், வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்தான்.

சற்றும் யோசிக்காமல், கவலைப்படாமல், பேசலானான்.

“உங்கள் பெண் சற்றுமுன் என்னிடன் தன்னுடைய புதுப் பிரச்சினையைச் சொன்னாள். நான் என்னுடைய சில சொந்த மற்றும் குடும்பப் பிரச்சினை களால், அவளைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. ஆனாலும்
நடந்த தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன். (I can't marry her because of
my personal family Situation, but I'll take responsibility.)

”பெண் குழந்தைபிறந்தால், அடையாறில் ஒரு பங்களா, அண்ணா சாலையில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், ஒரு கோடி ரூபாய்க்கு வங்கி வைப்புத்தொகை தருகிறேன்.”

”ஆண் குழந்தை பிறந்தால், வாரிசுச் சிக்கல் வரக்கூடாது. சென்னைப் புறநகரில் எங்களுக்கு உள்ள தொழிற்சாலைகளில் இரண்டை எழுதித் தருகிறேன். இரண்டு கோடி ரூபாய் வங்கி வைப்புத்தொகையாகத் தருகிறேன்”

”இரட்டைக் குழந்தைகள் என்றால், சொன்னவற்றை இரண்டு மடங்காகத் தருகிறேன்.”

”அதே சமயம், இடையில் கர்ப்பச் சிதைவு ஏற்பட்டாலோ அல்லது குழந்தை பிறப்பு சிக்கலாகி, குழந்தை உயிருடன் பிறக்காவிட்டாலோ, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லுங்கள்
(However, If there is a miscarriage or unsuccessful delivery , what do you suggest I do?")

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

இந்த இடத்தில், அதுவரை அமைதியாக இருந்த
அந்தப் பெண்ணின் தந்தை,
எழுந்து நின்று, அவனுடைய தோளில்
ஆறுதலாகத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சொன்னார்:

என்ன சொன்னார்?

கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

"You can try again!!!"
++++++++++++++++++++++++++++++

இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது.
மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது!

நட்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!


22 comments:

  1. ஐயா பெண் குழந்தைபிறந்தால் ஏன் வாரிசுச் சிக்கல் வராதாம்? புரியல்லீங்களே!!!!!
    பெண் குழந்தை பிறந்தாலும் சென்னைப் புறநகரில் உள்ள தொழிற்சாலைகளில் இரண்டும், இரண்டு கோடி ரூபாய் வங்கி வைப்புத் தொகையும் வேணுமாக்கும்.
    சமூகவியல் பாடத்தின் கருத்து உதைக்கிறதே ஐயா? ஆனா மாமாவும் (மாமா மாதிரியே பேசுகிறார்) மருமகனும் ரொம்பவே பிராக்டிகலாவே டிஸ்கஸ் பண்றாங்க.

    ReplyDelete
  2. மீண்டும் (மீண்டும்) முயற்சி செய்யலாம். முயற்சி திருவினையாக்கும். இதுதான் இந்த கதை சொல்லும் தத்துவம்.

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  5. ஆஹா...பச்சைமிளகாய் கடித்தது போல் இன்று .

    மைனர் அவர்களின் பாணியில் சொல்வதென்றால் இது ட்ரைலர், அல்லது சாம்பிள், என்று எடுத்துக்கொள்ளலாமா அய்யா.

    ReplyDelete
  6. வணக்கம்,ஐயா!இறக்குமதிச் சரக்குன்னா கொஞ்சம் தூக்கலா தான் இருக்கும்!

    ReplyDelete
  7. மறுபடியும்
    மனதில் வந்தது கற்பு பிரச்சனையா..

    கற்பு நிலை என சொல்ல வந்தால் அதை இரு பாலருக்கும் பொதுவில் வைப்போம் என்றான் பாரதி

    கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் என்கிறது வள்ளுவம்

    கற்பெனப் படுவது சொல் பிறழாமை என்பார் ஔவை பாட்டி..


    இன்னமும் மனதில் சுமப்பது
    இதைத்தானா...

    மனம் போல் வாழ்க.. என
    மனதில் பாடும் பாடலை சுழலவிடாமல்

    என் நாவில் இருப்பது சரஸ்வதியே
    என்னை பாட வைப்பது கணபதியே

    கோகுலத்து கண்ணா கண்ணா
    சீதை இவள் தானா

    மானும் இல்லை ராமன் இல்லை
    கோகுலத்தில் நானா

    சோகம் இல்லை சொந்தம் யாருமில்லை

    இராவனின் நெஞ்சில் காமம் இல்லை
    கிருஷ்ண கிருஷ்ண கேசவனே…..

    ReplyDelete
  8. நல்ல குடும்பம்..
    'காசுக்காக எதையும் செய்வார்கள்' என்று சிலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்..
    இது அந்த வகை...
    வாழ்க என்றெல்லாம் வாழ்த்த விரும்பவில்லை..

    ReplyDelete
  9. எல்லாம் 'டேக் இட் ஈஸி பாலிஸி' பண்ணுகிற கூத்துதான்.

    "If you can not resist a rape, fall back and enjoy it!"
    என்று சொன்ன 'மேதை' ஏனோ நினைவுக்கு வருகிறார்.

    Marriage is a licenced prostitution"

    என்று நினைக்கும் சமுதாயத்தில் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.

    "எங்கள் சமுதாயப் பெண்ணை மனதால் நினைக்கும் மாற்று சாதிக்காரன் தலை அவன் கழுத்தில் இருக்காது" என்று வெளிப்படையாகப் பேசும் காடு வெட்டி குரு
    போன்ற சாதித் தலைவர்கள் இருக்கும் வரை இங்கே இதெல்லாம் நகைச்சுவைக்காகக் கூட பேசக் கூடாதவை.உஷார்! ஐயா உஷார்!

    ReplyDelete
  10. //////Blogger தேமொழி said...
    ஐயா பெண் குழந்தைபிறந்தால் ஏன் வாரிசுச் சிக்கல் வராதாம்? புரியல்லீங்களே!!!!!
    பெண் குழந்தை பிறந்தாலும் சென்னைப் புறநகரில் உள்ள தொழிற்சாலைகளில் இரண்டும், இரண்டு கோடி ரூபாய் வங்கி வைப்புத் தொகையும் வேணுமாக்கும்.
    சமூகவியல் பாடத்தின் கருத்து உதைக்கிறதே ஐயா? ஆனா மாமாவும் (மாமா மாதிரியே பேசுகிறார்) மருமகனும் ரொம்பவே பிராக்டிகலாவே டிஸ்கஸ் பண்றாங்க./////

    பெண்களுக்கும் பிறந்த வீட்டுச் சொத்தில் பங்கு உண்டு என்பது புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம். ஆகவே கொடுத்து விடுவோம். கதை சட்டம் பிறப்பிற்பதற்கு முன்பு நடந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள் சகோதரி!

    ReplyDelete
  11. /////Blogger ananth said...
    மீண்டும் (மீண்டும்) முயற்சி செய்யலாம். முயற்சி திருவினையாக்கும். இதுதான் இந்த கதை சொல்லும் தத்துவம்./////

    இந்த மாதிரி மேட்டர்களுக்கெல்லாம் திருவினை எங்கே கூடிவரும் சுவாமி?

    ReplyDelete
  12. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஐயா
    நன்றி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. //////Blogger thanusu said...
    ஆஹா...பச்சைமிளகாய் கடித்தது போல் இன்று .
    மைனர் அவர்களின் பாணியில் சொல்வதென்றால் இது ட்ரைலர், அல்லது சாம்பிள், என்று எடுத்துக்கொள்ளலாமா அய்யா./////

    வகுப்பறையில் ட்ரைலர் அல்லது சாம்பிள்களெல்லாம் கிடையாது ராசா! இடையிடையே சற்று வித்தியாசமான பதிவுகள் அவ்வளவுதான். தயிர் சாதம் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தால் சுவாரசியம் இருக்குமா என்ன?

    ReplyDelete
  14. /////Blogger Yoga.S. said...
    வணக்கம்,ஐயா!இறக்குமதிச் சரக்குன்னா கொஞ்சம் தூக்கலா தான் இருக்கும்!////

    தூக்கல் கீழே விழவைக்காமல் இருந்தால் சரிதான்!

    ReplyDelete
  15. ////Blogger அய்யர் said...
    மறுபடியும்
    மனதில் வந்தது கற்பு பிரச்சனையா..
    கற்பு நிலை என சொல்ல வந்தால் அதை இரு பாலருக்கும் பொதுவில் வைப்போம் என்றான் பாரதி
    கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் என்கிறது வள்ளுவம்
    கற்பெனப் படுவது சொல் பிறழாமை என்பார் ஔவை பாட்டி..
    இன்னமும் மனதில் சுமப்பது
    இதைத்தானா...
    மனம் போல் வாழ்க.. என
    மனதில் பாடும் பாடலை சுழலவிடாமல்//////

    குப்பை இல்லாத தெரு எது?
    தூசி இல்லாத வீடு எது?
    அழுக்கு இல்லாத மனம் எது?

    ReplyDelete
  16. //////Blogger arul said...
    nice post/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. //////Blogger minorwall said...
    நல்ல குடும்பம்..
    'காசுக்காக எதையும் செய்வார்கள்' என்று சிலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்..
    இது அந்த வகை...
    வாழ்க என்றெல்லாம் வாழ்த்த விரும்பவில்லை../////

    இன்றைய பணத் தேடல் மிகுந்த வாழ்வில் இதெல்லாம் சகஜம் மைனர்!

    ReplyDelete
  18. //////Blogger kmr.krishnan said...
    எல்லாம் 'டேக் இட் ஈஸி பாலிஸி' பண்ணுகிற கூத்துதான்.
    "If you can not resist a rape, fall back and enjoy it!"
    என்று சொன்ன 'மேதை' ஏனோ நினைவுக்கு வருகிறார்.
    Marriage is a licenced prostitution"
    என்று நினைக்கும் சமுதாயத்தில் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.
    "எங்கள் சமுதாயப் பெண்ணை மனதால் நினைக்கும் மாற்று சாதிக்காரன் தலை அவன் கழுத்தில் இருக்காது" என்று வெளிப்படையாகப் பேசும் காடு வெட்டி குரு
    போன்ற சாதித் தலைவர்கள் இருக்கும் வரை இங்கே இதெல்லாம் நகைச்சுவைக்காகக் கூட பேசக் கூடாதவை.உஷார்! ஐயா உஷார்!/////

    ஏராளமான கலப்புத் திருமணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன! அதெல்லாம் காலத்தின் கட்டாயம். எதிர் காலத்தில் சாதிகள் இருக்குமா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. சாதிகள் இல்லையடி பாப்பா என்னும் பாரதியின் பாடல் உண்மையாகப் போகின்றது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!

    ReplyDelete
  19. ஏராளமான கலப்புத் திருமணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன! அதெல்லாம் காலத்தின் கட்டாயம். எதிர் காலத்தில் சாதிகள் இருக்குமா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. சாதிகள் இல்லையடி பாப்பா என்னும் பாரதியின் பாடல் உண்மையாகப் போகின்றது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!//

    குடும்ப அமைப்பு வழக்கொழிந்தாலோழிய சாதி அழியாது. இப்பொழுது சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் தங்கள் மகன் மகளுக்கு காதல் அமையாவிட்டால் தங்கள் இருவரில் யாருடைய சாதியிலாவதுதான் திருமணம் செய்வர். மேல்நாடுகளில் பிள்ளைகள் பதினைந்து வயதிற்கு மேல் பெற்றோர் சொத்தை எதிர்பார்க்காமல்
    பெற்றோரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன் மேல் படிப்புக்கு தானே பகுதி நேர வேலை செய்து சம்பாதித்து அவர்களே வாழ்க்கைத் துணையையும் தேடிக் கொள்வர்.
    அது போன்ற குடும்ப அமைப்பு இருந்தால்தான் சாதி ஒழியும்.

    நம் சமுதாயத்தில் நிச்சயிக்கபட்ட சாதி மறுப்பு திருமணங்கள் மிகவும் குறைவே. காதல் திருமணம் அனைவருக்கும் அமைந்து விடாது என்பது உங்களுக்கே தெரியும்.

    நம் சமுதாயத்தில் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் நாடுகள் போன்ற குடும்ப அமைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லாததால் சாதி ஒழிப்பு என்பதெல்லாம் மேடைப் பேச்சுக்கே உதவும். இதை சொன்னால் நான் பிற்போக்குவாதி என்பார்கள். யதார்த்தவாதி வெகுஜன விரோதி என்பது அனைத்து காலத்துக்கும் பொருந்தும்தானே.

    ReplyDelete
  20. சமுதாயத்தின் ( மக்களின் ) இன்றைய நிலையை புரிய வைக்க இதை விட சிறந்த எடுத்துக்காட்டு இல்லை என்றே கூறலாம் . மிக்க நன்றி .

    ReplyDelete
  21. //ஏராளமான கலப்புத் திருமணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன!//

    கலப்புத் திருமணங்கள் நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவை சமுதாயத்தால் எந்த அளவு சகஜமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன?

    இந்த சமுதாய மாற்றத்திலும் முன்னோடியாக பாரதியாரின் சமுதாயமே முன் நிற்கிறது.இன்று கலப்புத் திருமணங்களை இயல்பாக எடுத்துக் கொள்பவர்கள் அவர்கள் மட்டுமே.மற்ற சாதியினர் அறுவாளைத் தீட்டுகின்றனர்.

    சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்கத் துவங்கியிருக்கும் நேரத்தில்
    சாதி ஒழிந்துவிடும் என்று நாம் நினைப்பது கானல் நீர்தான்.

    கலப்புத்திருமணங்கள் அல்ல இன்றைய தேவை.சாதிக்குள்ளே திருமணம் செய்து கொண்டாலும் முன்னுக்கு வந்த ஒரு குடும்பம், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் சம்பந்தம் செய்வதன் மூலம் சீக்கிரமாக எல்லோரும் பொருளாதார முன்னேற்றம் காணலாம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com