மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.6.12

Manavar Malar மனதை வருடும் மருத்துவமனை அனுபவங்கள்!

 மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை 10 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அப்படியே கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++
 1

மனதை வருடும் மருத்துவமனை அனுபவங்கள்!
ஆக்கம்: பார்வதி ராமச்சந்திரன், பெங்களூர்

 எனக்கு அறுவை சிகிச்சைகள் நடந்த காரணங்கள், அவை சம்பந்தப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் போன்றவற்றை பின்னொரு பதிவில் தருகிறேன். இம்முறை, ஆபரேஷன் தியேட்டர் அனுபவங்கள் மட்டும்.

‘நான் முதல் முறை ஆபரேஷன் தியேட்டரைப் பார்த்த போது ’ என்று ஆரம்பிப்பது இயலாது. ஏனென்றால் நான் முதலில் பார்த்ததே(?!!) ஆபரேஷன் தியேட்டர்தான்.

 என்னைத் தலைகீழாய் பிடித்துத் தூக்கி, பிருஷ்டத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தவரைப் பார்த்து, 'பொறந்ததும் பொறக்காததுமாய் இப்படி அறையறியே' என்று திட்ட நினைத்து இயலாமல் போனதால் ஓவென்று அழுதேன்.

இப்படியாகத்தானே, என் சிசேரியன் ஜனனத்துக்கு டாக்டர் நண்பகலில் குறித்திருந்த முகூர்த்தம் சற்றும் மதிக்கப்படாமல் போய், விடிகாலை யிலேயே, அம்மாவுக்கு வலியெடுத்ததால், கொட்டும் மழையில் டாக்டர் ஓடி வந்து கத்தியோடு இரத்தமோடு என் பூலோகப் பிரவேசத்துக்கு வழி வகுத்தார்.
என் தாத்தாவுக்கு ஆபரேஷன் நடந்த போதுதான் ஆபரேஷன் தியேட்டரை நினைவு தெரிந்து பார்த்தேன். பீதி ததும்பும் கண்களால் பார்த்தது நினைவிருக்கிறது. அப்போது சிறிய வயது.

பின் ஒரு நாளில் எனக்கு ஆபரேஷன் தியேட்டர் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வந்த போது தான், வழியனுப்புவது வேறு, நாமே போவது வேறு என்பது என் மண்டையில் உறைத்தது. அதுவும் மக்கள் கிளப்பும் பீதி தனி ரகம்.
ஒண்ணு சாம்பிளுக்கு,

'ஆபரேசன் தியேட்டருக்குள்ள நிறைய ஆவி சுத்தும்!!!!. அங்கனக்குள்ள, ஆபரேசன் நடந்தவுக நிறையப் பேரு செத்துப்போயிருப்பாங்கல்ல' என்று என் மீது பேரன்பு கொண்ட வேலைக்காரப் பெண்மணி கிலி கிளப்பியதோடு அல்லாமல், மந்திரித்த கயிறு ஒன்று வாங்கி வந்து என் கையில் கட்டினார். எனக்கு இது வேடிக்கையாக இருந்தாலும் அவளது அன்புக்குக் கட்டுப்பட்டு, கட்டிக்கொண்டேன். கிளம்பும் போது என்னவர் இதைப் பார்த்து கேட்க,  நான் காரணம் சொன்னதும் தலையிலடித்துக் கொண்டார்.

முதல் நாள் இரவே அட்மிட்டாகியாயிற்று. ஆபரேஷன் தியேட்டர் பக்கத்தில் பத்துத் தப்படியில் அறை கொடுத்தார்கள். மறு நாள் காலை மூன்று மணி சுமாருக்கு, ஆபரேஷன் தியேட்டருக்குச் செல்ல அலங்கரிக்கும் பெண் மணிகள் இருவர் 'என்ட்ரி' கொடுத்தனர். ஒருவர் செய்த முதல் வேலை, என் கையில் இருந்த கயிறைக் கத்தரித்தது தான்.

ஒருவர் சற்றே பெரிய சைஸ் கீரைக்கட்டு போல் இருக்கும் என் தலைமுடியை இரண்டாகப் பிரித்து, அந்தக்கால நடிகை சரோஜாதேவி தலையில் வைக்கும் பூ மாதிரி உர்ர்ருட்டி  பின்னல் போட்டு என்னை ரெட்டை ஜடை அம்முலு வாக்கினார்.

மற்றவர் கவுன் மாட்டி, கைகால்களில் உறை போட்டு, வலையாலான மணிமகுடம் சூட்டி அலங்கரித்து முடித்தார்.  புறங்கையில் ஓங்கி ரெண்டடி கொடுத்து, நரம்பு தேடி 'வெய்ன் ப்ளான்ட்' சொருகினார். ஒரு பெரிய ஷால் (பொன்னாடை?!!) போர்த்தினார்கள்.

நான் 'உத்தமபுத்திரன்' படத்தில், பட்டாபிஷேகத்திற்காக கொலுமண்டபம் போகும் சிவாஜி பாணியில் .'கண்மணிகாள், போய் வரட்டுமா!!' என்று ஸ்ரீதர் வசனத்தை கண்களால் பேசி விடைபெற்றுகொண்டு, ஜி.இராமநாதன் பின்னணி இசை மனதில் ஒலிக்க நர்ஸூடன் நடந்தேன்.

ஆபரேஷன் தியேட்டர் போனதும் அங்கு  நடக்கும் ப்ரொஸீஜரை அங்கு இருக்கும் டாக்டர் விளக்குவார் (இது நடைமுறை).  எனக்கு முதல் நாளே என்ன நடக்கும் என்று விலாவாரியாகச் சொல்லப்பட்டிருந்தது  (இதுவும் நடைமுறை). இது தெரியாமல், மறு நாள் அதை அங்குள்ள டாக்டர் வேகு வேகென்று தொண்டைத் தண்ணி வத்த 'ரிபீட்டு' செய்யும் போது, முந்திரிக்கொட்டை மாதிரி, 'நேத்தே சொல்லிட்டாங்க டாக்டர்' என்று உளறி முறை வாங்கினேன்.

அப்புறம் வந்தார் அனஸ்தீஷியா டாக்டர். கைப்பட்டியில் என் பெயரைப் பார்த்து, 'ஹை பார்வதி, ஹௌ ஆ யூ?' என்றார். அசந்தர்ப்பமாகத் தோன்றிய போதும் சிரித்து, 'ஃபைன்' என்றேன். 'ஸே ஒன் டூ த்ரீ' என்றார். சொல்ல ஆரம்பித்து, இரண்டு முடிக்கும் முன் மயக்கத்தில் ஆழ்ந்தேன்.

என் முதல் ஆபரேஷனில் நான் கற்ற பாடங்கள்.

1. ரிப்போர்ட்டுகளோடு, செய்த டெஸ்ட்களின் பில்களைப்  பத்திரப்படுத்த வேண்டும் என்பது. அவ்வாறு செய்யாததால் மெடிகல் இன்ஷ்யூரன்ஸ் இருந்தும், கணிசமான தொகையை இழந்தேன். சிலர் அட்மிட் ஆவதற்கு முன் எடுத்த டெஸ்ட்களின் பில்களை ரிப்போர்ட் ஃபைலில் பின் செய்யாமல் புக் மார்க் மாதிரி வைப்பார்கள். அவை காற்றில் பறந்தால் காசும் பறந்துவிடும். ஜாக்கிரதை!!!!.

2. ஒரு ஆபரேஷன் முடிந்ததும், 'ஆச்சு' என்று ரிப்போர்ட்களை பரணில் போடக்கூடாது. அவ்வாறு செய்திருந்தால் பின்னால் வேறொரு ப்ரச்னை வரும்போது டாக்டரிடம் நன்றாக 'வாங்க வேண்டிவரும்'. 'போன ஆபரேஷன்(அது என்னவாக இருந்தாலும்) ரிப்போர்ட் கொண்டாங்க' என்று சொல்லி வைத்த மாதிரி எல்லா டாக்டரும் கேட்பார்கள். அவர்களுக்கு அதில் நிறைய விஷயமிருக்கும். உதாரணமாக, நமக்கு ஒவ்வாத மருந்துகள் குறித்து அவர்கள் கண்டுபிடிக்கலாம்.

3. ஒரு மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் எடுப்பது என்பது இன்றைய காலக் கட்டாயங்களுள் ஒன்று. எடுத்தால் மட்டும் போதாது. அதில் என்னென்ன சிகிச்சைகள் 'கவர்' செய்யப்பட்டிருக்கின்றன முதலிய விவரங்களையும் மறக்காமல் நினைவு கொள்ளுங்கள்.

கிட்டத்தட்ட முதல் ஆபரேஷனைப் பற்றி மறந்து போன நிலையில் மற்றொரு தியேட்டர் பிரவேசத் திருநாள் குறிக்கப்படவேண்டிய நிலை வந்தது. இந்த முறை எனக்கு அவ்வளவு பயமில்லை. முன்கூட்டியே, குறைந்த அளவே மயக்க மருந்து தரப்படும் என்று சொல்லிவிட்டார்கள்.

முதல் நாளே, கையில் வித வித ஊசிகள் போட்டு, போட்ட இடத்தை வட்டம் கட்டி, 'படம் வரைந்து பாகங்களைக் குறி' ரேஞ்சில் வட்ட, மா(பெரிய) வட்டங்களுக்கு மருந்துகளின் பெயர்களை எழுதினார்கள். எது அலர்ஜி என்று கண்டறிய இந்த டெஸ்ட். நமக்கு அலர்ஜி ஏற்படுத்தும் ஊசி மருந்துகள் மனப்பாடமாயிருப்பது கட்டாயம்.

மறு நாள் அலங்காரமாகி, தியேட்டர் பிரவேசம் முடிந்து, 'மயக்கமென்ன' பாடி ஆகிவிட்டது. திடீரென்று கொஞ்சம் வலியேற்பட்டு, விழித்துக் கொண்டேன். தையல் போடுகிற ஸ்டேஜ் என்று நினைக்கிறேன். பக்கத்தில் ஒரு டாக்டர் ஆபரேஷன் முடிந்த தென்பில், 'யாரு வந்தாலும் விலை வாசி குறையாது' என்று கமென்ட் அடிப்பது காதில் விழுந்தது.  சிரமப்பட்டு விழித்தேன். முதலில் எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. 'அமரதீபம்' சிவாஜி மாதிரி, 'நான் யார், என் பெயர் என்ன' என்று கேட்காத குறை. பின்,, ஆபரேஷன் தியேட்டரில் தான் இருக்கிறேன் என்று அறிந்து கொண்டேன். மெல்ல கஷ்டப்பட்டு வாய் திறந்து, 'டாக்டர், எனக்கு இன்னும் கொஞ்சம் அனஸ்தீஷியா கொடுங்க, நான் முழிச்சுட்டேன்' என, அவர் பதறிப்போனார் பாவம். பின், மீண்டும் ஒரு ஊசி கொடுத்து, 'தூங்கும்மா' என்று சமாதானப்படுத்தினார்.

பிறகு நான் செக்கப்புக்குப் போன போது, அந்த டாக்டர், 'ஏம்மா, மயக்கம் தெளிஞ்சுடுச்சுன்னா தெளிஞ்சுடுச்சுன்னு சொல்வீங்களா, என்னமோ, இன்னும் கொஞ்சம் மயக்க மருந்து கொடுங்கன்னு கடைக்காரர்கிட்ட கால்கிலோ கத்திரிக்கா கொடுங்கன்னு கேக்கற மாதிரி கூலா கேக்கறீங்க' என்று கிண்டலடித்தார்.

அடுத்த முறை எனக்கு ஏற்பட்டது அலாதியான அனுபவம். இது சற்றே பெரிய ஆஸ்பத்திரி. ஆபரேஷன் தியேட்டர் போனதும், ஒரு ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தார்கள். என்னைப் போலவே நாலைந்து பேர் வரிசையில் இருக்கிறோம் என்பது புரிந்தது.

இது தியேட்டரின் முதல் பிரிவு. அடுத்த பிரிவில், யாருக்கு அடுத்தபடியாக ஆபரேஷன் நடக்கப் போகிறதோ அவர் உள்ளே கொண்டு செல்லப்படுவார். அப்புறம் மெயின் தியேட்டர். ஒவ்வொரு பிரிவிலும் நர்ஸ்கள் உண்டு.

இரண்டாவது பிரிவுக்கு வந்தவரை, அனஸ்தீஷியா (ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் ஆபரேஷன் முடியும் நேரத்துக்கு) கொடுத்து உள்ளே அனுப்புவார்கள். எக்கச்சக்க ஆபரேஷன்கள் நடந்து கொண்டிருந்ததால் இந்த ஏற்பாடு. டாக்டர்களும் ஷிஃப்ட் மாறுவார்கள்.

ஆபரேஷன் முதல் நாள் இரவிலிருந்தே 'உண்ணாவிரதம்' இருப்பது ஆபரேஷன் நடைமுறைகளில் ஒன்று என்று தியேட்டர் பிரவேச அனுபவமிருப்பவர்களுக்குத் தெரியும். என் கல்யாண (?!!) குணங்களில் ஒன்று பெரும் மன உளைச்சல், பசி போன்ற நேரங்களில் அடித்துப் போட்டாற்போல் தூங்குவது. 'இடி விழுந்தென்ன, இந்திரன் எழுந்தென்ன' என்று தூங்குவாள் என்பது என் பாட்டியின் கமென்ட்.

அதை வழுவாது ஒட்டி, முதல் பிரிவுக்கு வந்த உடனே அங்கிருந்த பெட்டில் படுத்துத் 'தூக்கம் கண்களைத் தழுவட்டுமே' என்று தூங்கத் துவங்கினேன். சற்று நேரத்தில் ஸ்ட்ரெச்சர் கொண்டு வந்து அதில் படுக்க வைத்து இரண்டாவது பிரிவுக்குக் கொண்டு போனார்கள்.

நான் இரண்டாவது பிரிவுக்கு வந்ததும், டாக்டர் வந்து, என் அனஸ்தீஷியா அனுபவங்கள், இதற்கு முந்திய ஆபரேஷன்களில்  கொடுத்தது லோக்கலா, ஓவரால் அனஸ்தீஷியாவா, அலர்ஜிகள் உண்டா, வாந்தி போல பின் விளைவுகள், இருந்திருக்கிறதா என்றெல்லாம்  விசாரித்தார்.

ஊசி போடுவாராக்கும் என்று காத்திருந்து அவர் வர நேரமாகவே, தூக்கத்தைத் தொடர்ந்தேன். சற்று நேரத்தில் 'ஆட்டம்' கண்டு விழித்த போது ஆபரேஷன் தியேட்டருக்கு உள்ளே கொண்டுசென்று கொண்டிருந்தார்கள். முதலில் ஆபரேஷன் நடந்து முடிந்திருந்த பேஷன்டை வெளியே கொண்டு வருவதைப் பார்த்து, 'இவங்களுக்கு என்ன ஆபரேஷன் நடந்துச்சு?' என்று நான் வார்டு பாயை வினவ, அவர் பேயறைந்தார் போல் என்னை விரைவாக, ஸ்ட்ரெச்சரை வெளியே தள்ளிக் கொண்டு வந்து, அங்கிருந்த நர்ஸை பல்லைக் கடித்துக்கொண்டு தாழ்ந்த குரலில் விளாசினார்.

நடந்தது இதுதான். மயக்க மருந்து டாக்டர் வந்து சென்ற போது வெளியே சென்றிருந்த அந்தப் பிரிவு நர்ஸ், திரும்ப வந்த போது நான் தூங்குவதைப் பார்த்து மயக்க மருந்து தந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு விட்டார். (எனக்குக் குறட்டை விடும் வழக்கமில்லை. அசையாமல் தூங்குவேன்) . வார்டு பாயிடம், 'அனஸ்தீஷியா கொடுத்தாச்சு, உள்ளே கொண்டு போ' என்றிருக்கிறார்'. அவரும் கொண்டு சென்ற போதுதான்  நான் விழித்துக் கொண்டு இருக்கிறேன். அவ்வளவே.

அப்போது மயக்க ஊசியுடன் டாக்டர் வந்து அவரும், 'உள்ளே ஆபரேஷன் முடிஞ்சுதான்னு செக் பண்ண வேண்டாமா?' என்று நர்ஸைத் தாளிக்க, எல்லோரும் ஏகத்துக்கு என் பக்கம் திரும்பி, 'நீங்க ஏன் தூங்கினீங்க' என்று துவங்க, நான் கூலாக 'சாப்பிடக்கூடாதுன்னு சொன்னீங்க, தூங்க வேணாம்னு சொல்லலியெ' என்று 'அதச் சொல்லலியே' பாணியில் பதிலளித்தேன். இந்த அனுபவத்திற்குப் பிறகு, தியேட்டர் பிரவேசத்தின் போது தூங்குவதைக் கைவிட்டேன்.

இந்த இடத்தில் டாக்டர்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்வது முறை என்று நினைக்கிறேன். எனக்கு ட்ரீட் செய்த எந்த டாக்டர்களும், 'நான் டாக்டர்' என்று நடந்து கொண்டதில்லை. அமைதியாக, 'நான் 'நெட்'டில் பார்க்கும் போது இந்த விஷயம் தெரிய வந்தது, இது எனக்கு அப்ளை ஆகுமா என்று புரியவில்லை. இது நீங்கள் நன்றாக விளக்கக் கூடும் என்பதால் கேட்கிறேன்' என்று நான் கேட்கும் விஷயங்களை, பொறுமையாக, ஒரு ஊசி முதற்கொண்டு, ஏன் போடுகிறோம் என்று விளக்கியிருக்கிறார்கள்.

சில வயதான டாக்டர்கள் கண்டிப்பாக (கடுமையாக அல்ல) இருப்பார்கள். இளம் டாக்டர்கள், நோயாளியை நண்பனாக நினைத்து உரையாடுகிறார்கள்.

ஒரு முறை, நான் ஆபரேஷன் டேபிளில்  'கவுந்தடித்த பறவை' யாக கை கால்கள் கட்டப்பட்டு, (ஸ்டாண்ட் கொடுத்துதான்) இருந்த போது, அடுத்த தியேட்டருக்கு (ஆபரேஷன் தியேட்டர்தாங்க) போன அனஸ்தீஷியா டாக்டர் வரத்தாமதமானது. முதல் நாள் கிருஷ்ண ஜெயந்தி. என்னருகில் இருந்த டாக்டர், 'நீங்க சீடை கொண்டுவந்திருப்பீங்கன்னு நினைச்சாரு, இல்லை ன்னதும் கோவிச்சுட்டுப் போயிட்டாரு' என்று ஜாலியாகக் கிண்டலடித்து மூடை மாற்றினார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய நோயாளிகளை, 'இந்த டெஸ்ட் இங்க வேண்டாம், நிறைய செலவாகும், இந்த இடத்தில் போய் எடுத்துட்டு வாங்க' என்று சொல்லி அனுப்பிவிட்டு, பின் அவர்கள் ரிப்போர்ட் கொண்டு வந்ததும், 'இவங்க இப்போதான் இந்த டெஸ்ட் முடிச்சுருக்காங்க, இதை ரிபீட் செய்ய வேண்டாம்' என்று ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் சமாளிக்கும் டாக்டர்கள் எனக்குத் தெரியும்.

அது போல, புகுந்த வீட்டில் மனநிலை சரியில்லை என்று சொல்லி, ஷாக் ட்ரீட்மென்ட்  கொடுக்கவென அவர்கள் அழைத்துவந்த ஒரு மருமகளை விசாரித்து, உண்மை அறிந்து, தானே போன் போட்டு அவள் பிறந்த வீட்டுக்குச் சொல்லி, பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவளைக் காப்பாற்றிய உன்னத மருத்துவரை நான் அறிவேன்.

இறுதியாக ஒரு வார்த்தை. மிகக்குறுகிய மனித வாழ்வில், உறவு, நட்பின் அருமையை உணர்த்தும் அற்புதப் பள்ளிக்கூடம் மருத்துவமனை என்றால் அது மிகையில்லை. வாழ்வில் அனைத்துப் பரிமாணங்களும் நிதர்சனமாகக் காணக்கிடைக்கும் இடம் அது. உப்புப் பெறாத காரணத்துக்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனைக்கு வந்த ஒரு பையன், அங்கும் தன் முயற்சியைத் தொடர, மருத்துவமனையே கூடி நின்று அவனுக்கு அட்வைஸ் செய்தது போன்ற சம்பவங்கள், 'எனக்கென்ன' என்று போகாமல், அடுத்தவரின் பால் அக்கறை கொண்ட நம் மண்ணின் தனித்துவத்தைப் பற்றி என்னை பெருமிதம் கொள்ளச் செய்திருக்கின்றன.

ஒற்றைப் பிள்ளை, கண் எதிரில் விபத்துக்குள்ளாகி, கோமாவில் இருக்கும் போது, மனதில் அத்தனை வேதனையையும் தாங்கிக் கொண்டு,  தான் பூஜை செய்த பிரசாதங்களை, அந்த வார்டில் இருந்த நோயாளிகள் அனைவருக்கும் கொண்டு போய்க் கொடுத்து அவர்கள் நலம் பெற வாழ்த்துவதோடு நில்லாமல், டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போகும் நோயாளிகளைப் பழக்கூடை தந்து வாழ்த்தும் வயதான அம்மா மாதிரி உன்னத மனிதர்கள் கண்முன் நடமாடுவதை அறியும் போது, நாம் தேவையில்லாத நாள்பட்ட குரோதம், வெறுப்பு முதலிய விஷச்செடிகளை மனதிற்குள் வளர்த்து அதற்கு முதல் பலியாவது எவ்வளவு அபத்தம் என்று புரிந்தது.

ஆயிரம் கோடிப் பணம் இருக்கட்டுமே, அன்பான வார்த்தைகள் தரும் மனிதர்கள் நம் பின்னால் இருப்பது தனி பலம். 'இதுதான் வாழ்க்கை' என்று கண்முன் தெரியும் போது, வேண்டாத வெறுப்புகளைக் கழித்து, வாழ்வில் அமைதியையும் நிம்மதியையும் கூட்டுவது நம் கையில் தான்.  நான் கற்ற மருத்துவமனை அனுபவப் பாடங்களில் இதையே முதலாவதாக நினைக்கிறேன்.

ஆஸ்பத்திரியில் இருப்போருக்கு பண உதவி செய்வது மிகப்பலரால் முடியாத காரியம். உடல் உழைப்பால் உதவ முடிவது கூட சிரமமாக இருக்கலாம். நேரமிருப்பின் நேரில் பார்த்துச் சொல்லும் ஒரு ஆறுதல் வார்த்தை, இல்லாவிட்டால் ஒரு போன் காலில் நலம் விசாரிப்பது, நம் உறவு, நட்பு வட்டத்தில் ஒரு பூந்தோட்டத்தையே உருவாக்கும்.

அனைவரும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன். பெங்களூரு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 2


Contribution to my nation 
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

என் அம்மான் சேய் (அம்மாஞ்சி) திரு.எஸ். கிருஷ்ணகுமார் அனுப்பிய மின் அஞ்சலை பிரசுரத்திற்கு அப்படியே தருகிறேன்.மொழி  மாற்ற‌ நேரமில்லை. மேலும் மொழி பெயர்த்தால் அதில் உள்ள 'வேகம்' போய்விடும் என்றும் தோன்றியது.ஆங்கிலத்தில் இருப்பதால் எல்லா மொழிக்காரர்களும் படித்துப் புரிந்து கொள்ளவும் தோதாக இருக்கும் என்று எண்ணி அப்படியே தருகிறேன்.

ஏனெனில் அதனுடைய கருத்து (யுனிவெர்சல்) உலகளாவியது.

Over to S.Krishnakumar
=============================================
Dear Earthly Siblings !

It was a blessing in disguise for me last month when my motor bike developed a technical snag. I was looking forward to the opportunity to get out of this tiresome peak hour journey's of moving inch by inch driving a vehicle.

I started going by public transports- Bus, Train & Share Auto ( Only by Tata Magic Not by Piaggio). Within few days around May 20th- there was  a Petrol price rise- non-availability of Petrol- lot of queues in Petrol Bunks- I was happily zipping past those bunks without any need to wait.

I could save 12 Litres of Petrol at least in this period. My (in) significant contribution towards my nation -
- I am now less polluting
- I could save few dollars for my country- especially when Rupee is shedding tears @Rs.56/ Dollar
- I could shed extra calories from my tummy
- My share towards unwanted expenditure of Govt. has come down
- I have increased my tolerance limit by traveling in Public Transports

I am looking forward to days where I could freely walk on roads with no vehicles ,with everyone around me so happy to walk leisurely in the road without the fear of vehicles, with no vehicles parked on the roads- I don't need to zig zag even in a tiny lane. I don't need to run for my life to cross a road. Every dog could happily run across without being hit.

It is Possible -
 When I care for You &
            you care for me!

         You don't Car for a nearby store
you don't buy a car without a place to store
        don't roar your bike my ears are sore
             we have nothing left to tore

        Don't drive to save time
            life is wonderful to lie lame

         Please care for Me
I don't want to die on the road.

Best Regards
 S. Krishna Kumar
============================================================
பி.கு:
"போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட" என்று பாடலாம்.

ஐயாவின் அலைபேசி அழைப்பு, மற்றும் பல நண்பர்களின் அறிவுரைப்படி வகுப்பறையில் தொடர்ந்து எழுத முடிவு செய்துள்ளேன்.

இதில் முக்கியப் பங்கு டெல்லி உமாஜிக்குத்தான். என் ஆக்கங்களில் பலவற்றை நினைவு கூர்ந்து எழுதியிருந்தார்.பல ஆக்கங்களின் தலைப்பை எழுதாமல், கருவின் முக்கியப் பகுதியை/சொற்களைக் கோடிட்டுக் காட்டி எழுதியிருந்தார்.அதிலிருந்து என் எழுத்தும் ஏதோ ஒரு மூலையில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்று தோன்றியது.மனதில் மகிழ்ச்சி தோன்றியது.

ஒரு படைப்பாளிக்கு வேறு என்ன வேண்டும்? 
ஒரு பாராட்டும் வாசகன்/வாசகி 
அவர்கள்  இருக்கும் வரை என் எழுத்துப் பணி தொடரும்.
நன்றி!
வாழ்க வளமுடன்!
கே. முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
3

ஒடிஸி ஆட்டம்
வரைபடம்
வரைந்து அனுப்பியவர்: தேமொழி


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4
(இந்த ஆக்கத்திற்கு ஓவியம் வரைந்து கொடுத்த சகோதரி 
தேமொழி அவர்களுக்கு நன்றிகள் .)

மாலைகொடு வீரைய்யா!
ஆக்கம்: தனுசு

வண்டி ஒட்டும் வீரைய்யா!
சண்டிதனம் ஏனைய்யா?
ஒண்டிக்கட்டை நானையா -என்னை
கட்டிக் கொண்டு போய்யா!

முருக்கு மீசை மாமனே!
திறுக்கை மீன் நானாவேன்
திருக்கிக் கொண்டு போவானேன்?
செருக்கு வேண்டாம் கோமானே.

எட்டு பத்து சிங்கக்குட்டி
பெத்துத்தாறேன் புள்ளக்குட்டி -இந்த
வெல்லக்கட்டி சொல்லுறதைக் கேளைய்யா-என்
மயிலக்காளை பொன்னையா! .

விடலைக்கோழி விரட்ட
வேட்டைக்காரன் ஓடாதே!
வெட்கப்பட்டு தப்பாதே
வச்சக்குறி மீளாதே!

கடைசி மாமன் பெண்குட்டி
என்னைவிட சிறுகுட்டி-அவள்
மூனுமாசம் முன்னாடி
முடிஞ்சிதய்யா வளைகாப்பு!

ஓலமிதை கேட்பாய்யா-மனக்
கோலம் கான வருவாய்யா -எங்கள்
வாத்தியார் பெயர் சுப்பையா
அவரிடம் சொல்வேன் உஷாரைய்யா!

தப்புத்தாளம் இல்லையா!-இது
தப்புத்தாண்டா இல்லையா!
ஊரைக்கூட்டி சொல்லையா!
ஊமத்துரை பேசய்யா!

நான் பூத்திருக்கும் ரோஜாப்பூ தோட்டம்-நல்ல
கனியிருக்கும் மாம்பழதோப்பு!-இங்கு
காவக்காரன் இல்லாட்டி -நரி
ஊளையிடும் வாலாட்டி.

காடுகரை காக்கும் வேலய்யா!
அக்கா பொண்ணு முகம் பாரைய்யா!-அதில்
ஏக்கம் ஒரு நூறைய்யா-நல்ல
சாங்கி செய்தி சீக்கிரம் சொல்லைய்யா!
-தனுசு-

------------------------------------------
5


சந்தணம் மணக்கும் என்றாலும் சமையலில் சேர்ப்பதில்லை!
ஆக்கம்: தனுசு

விபத்தே
உனக்கொரு விபத்து வந்து
சேராதா?
உயிரிழக்க மாட்டாயா?
அல்லது
உன் கோரக் கைகால்கள்
அடிப்பட்டு ஊனமாகாதா?

ஏனென்றால்
அதனால்
எங்களுக்கு
விபத்து நேராதல்லவா?
அல்லது
விபத்தின் போது
உன் கொடுரம் குறையுமல்லவா?

எங்கும் இருப்பவன் இறைவன்
என்பது போல்
நீயும் எங்கும் எதிலும்
நீசமற நிறைந்திருக்கிறாய்.!

நீ
பிரதானமாய் சாலையை
தேர்ந்தெடுப்பது ஏன்?
நாங்கள்
சாலை விதிகளை மீறுகிறோம் என்பதாலா?

எங்கள்
பார்வையும் நினைவும்
இரு துருவங்களாகும் போது
நீ
விபத்தில் விருந்தே தந்துவிடுகிறாய்!

எங்கள்
ரோமியோக்கள் வாகனத்தில்
தங்களின் ஜூலியட்டுக்காக
சாலையில் எட்டு போடும் போது
நீ
ஏழரையாய் வந்து விடுகிறாய்

எங்கள்
நடபாதை பாடகர்கள்
ராகலீலையில் சரிகம பாடும்போது
நீ
எமனாய் வந்து எதிர்பாட்டுத் தருகின்றாய்.

எங்கள்
விடலைகள் வளைவை வெற்றிகொள்ள
வேகத்தை விரட்டும் போது
நீ வளையாமால்
உயிரை எடுத்துக்கொள்கிறாய்

எங்கள்
உற்சாகபான ராஜாக்கள்
இருவாகனத் தேரில்
சொர்க்கபுரி தேடும்போது
நீ
தேடி வந்து
தேர் ஏற்றி மாலைபோட்டு விடுகிறாய்.

எங்கள்
பண வசதிக்கு ஏற்ப
ஓடும் ஊர்தியில் ஏறும் அவசரத்தில்
பிசகினால்
நீ
எங்களை
பிண ஊர்தியில் ஏற்றிவிடுகிறாய்.

எங்களுக்கு
உன்னால் உண்டாகும்
வலியும் வேதனையும் விட
எங்கள் குடும்பத்தாருக்கு
நீ
தரும் வலியும் வேதனையும்
அதிகம், அதிகம்.

சந்தணம் மணக்கும் என்பதால்
சமையலில் சேர்ப்பதில்லை!
சாகசம் தெரியும் என்பதால்
சாலையில் செய்யக்கூடாதுதான்.

தங்கத்திற்கு மாற்று உண்டு
எங்கள் அங்கத்திற்கு மாற்று இல்லை!
உறைவை கொடுக்க பலர் உண்டு
ஆனால்
உயிரை கொடுப்பவர் யார்?

வெட்ட வெட்ட முளைக்க
எங்கள் உடல் என்ன வாழையா?
ஒன்று போனால் இன்னொன்று வர
உயிர் என்ன ஒன்பதா?

புரிந்து கொண்டோம்.
சமரசம் ஒன்று செய்துகொள்வோம்!
இனி...
சாலை விதிகளை மதிக்கிறோம்
நீயும் உன் பாசக்கைகளை
விலக்கி கொள்.
உன்னை மதித்தால்
உண்டுவாழ்வு அல்லவா!

-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
6

வைத்தீஸ்வரன் கோவில்
ஆக்கம்: சரவணன், திருவாரூர்

சிந்துஜாவிற்கு 2 வயது 6 மாதம். திடீரென்று உடலில் மிக அதிக அளவிலான வீக்கம். நீர் பிரிவதில் சிக்கல். உள்ளூரில் வைத்து எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் பலன் இல்லாமல் தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவர் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள சிறப்பு நிபுணரிடம் செல்ல பரிந்துரைத்தார். குழந்தையை தூக்கிக்கொண்டு அதன் பெற்றோர்கள் இரவு முழுவதும் பேருந்தில் பயணம் செய்து காலை 6 மணிக்கே அந்த மருத்துவர் வீட்டின் கதவைத் தட்டுகிறார்கள்.

குறைந்தது 70 வயதாவது இருக்கும் அந்த மருத்துவருக்கு. தூக்கம் போய்விட்டது அவர் கூப்பாடு போடவில்லை. விஷயத்தை கேட்டுவிட்டு குழந்தையின் சுவாசத்தை கவனித்தார்.. பிறகு சில பரிசோதனைகளை எழுதிக்கொடுத்து, அந்த பரிசோதனைக்கூடத்திற்கு செல்லும் வழியைக் காண்பித்ததுடன் வழியில் உள்ள இரண்டு மூன்று ஹோட்டல்களைப் பற்றிக் கூறி அங்கே சாப்பிட்டுவிட்டே போகலாம். 8 மணிக்கு முன்னால் பரிசோதனைக்கூடத்தில் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்று அனுப்பி வைத்தார்.

மாலையில்தான் பரிசோதனையின் முடிவுகள் கிடைத்தன. ""தஞ்சாவூர்லேருந்து அந்த டாக்டர் என்கிட்ட அனுப்பினதும் அவரை விட நான் பெரிய டாக்டர்னு நினைச்சுடாதீங்க. அவரே நல்ல டாக்டர்தான். அவருக்கு நோயைப் பத்தி புரியாம அனுப்பலை. ஒரு விஷயத்தைப் பத்தி ரொம்ப நல்லா தெரிஞ்ச ரெண்டு பேர் கலந்து ஆலோசனை செஞ்சா புதிய கோணத்துல தீர்வு கிடைக்கும்னுதான் அவர் என் பேரை பரிந்துரை செஞ்சிருக்கார்.

குழந்தைக்கு பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்லை. பெட்ரோல் போட்டா வண்டி ஓடுற மாதிரி புரதச் சத்து மனிதனை இயங்க வைக்கிது. அந்த புரதம் மனிதனோட சிறுநீர்ல 5 முதல் 10 என்ற அளவில்தான் வெளியேறணும். ஆனா இந்த குழந்தைக்கு 150 முதல் 170 வரை வெளியேறுது. அதுதான் இந்த குழந்தைக்கு உடல் முழுவதும் இவ்வளவு மோசமா வீங்குறதுக்கு காரணம். அதோட சிறுநீரகம் உப்பை பிரிக்கிற வேலையை செய்யுறதுக்கும் கஷ்டப்படுது.

சல்லடையில பெரிய ஓட்டை இருந்தா அதுல எதைப் போட்டு சலிச்சாலும் அது எல்லாம் அப்படியே கீழே வர்ற மாதிரி புரோட்டீன் வெளியேறிடுது. இதுக்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவத்துறையில ஆராய்ச்சிதான் பண்ணிகிட்டு இருக்காங்க. இந்த பிரச்சனை லட்சத்துல ஒருத்தருக்கு வர்றதே அபூர்வம். புரோட்டீன் வெளியேறுறதை தடுக்க முடியலைன்னா என்ன, அதை அதிகமா குழந்தைக்கு கொடுத்துட வேண்டியதுதான். ஊறுகாய், அப்பளம், சிப்ஸ் இதுமாதிரி உப்பு அதிகமா இருக்குற பண்டத்தை கொடுக்கவே கூடாது. நிலக்கடலை, பயறு இது மாதிரி புரதச்சத்து இருக்குற உணவை அதிகமா கொடுக்கணும். கடலையை வறுத்து கொடுத்தா உப்பு போட்டு திங்க சொல்லும். ஆனா கடலை மிட்டாயா செஞ்சு கொடுக்கலாம். இப்படி புரதத்தை குழந்தைக்கு அதிகமாக சேர்க்க என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்க. இப்போ 3 மாசத்துக்கு மருந்து எழுதித் தர்றேன். இது இப்போ இந்த குழந்தைக்கு இருக்குற மோசமான உடல்நிலையை மீட்டு கொண்டு வர்றதுக்கு மட்டும்தான். அப்புறம் மருந்து மாத்திரை தேவையில்லை. சாப்பாட்டில் கட்டுப்பாடு முக்கியம்.

இந்த மாத்திரை, மருந்து சாப்பிட்டும் உடலுக்கு கோளாறுன்னா என்னைத் தேடி வரணும்னு இல்லை. தஞ்சாவூர்ல நீங்க பார்த்த டாக்டர்கிட்டயே ஆலோசனை கேட்கலாம். '' என்று பொறுமையாக அவர் பேசிய விதத்திலேயே குழந்தையின் தாய்க்கு நம்பிக்கை வந்துவிட்டது.இந்த சம்பவம் 2008 பிப்ரவரியில் நடந்தது. உடன் சென்றிருந்த எனக்கு, சென்னையில் இப்படி ஒரு டாக்டரா? என்று வியப்பு. இவருக்கு இயல்பாவே இந்த குணமா? இல்லை...ரொம்ப பாவம் பண்ணி அதனால பெரிய இழப்பு ஏற்பட்ட பிறகு வந்த ஞானோதயமா அப்படின்னு என் மனசுல சந்தேகம் வந்தாலும் அதை கேட்கவில்லை.

அந்த மருத்துவர் கொடுத்த மருந்துகளை கொடுத்துவந்ததுடன் அவர் சொன்னபடி அந்த குழந்தைக்காக குடும்பமே உணவுக்கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. குழந்தையின் தந்தை, அந்தக் குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தன்று வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வந்தார். 6 மாதங்கள் தொடர்ந்து சென்ற அவரிடம், எவ்வளவு நாள் இந்த மாதிரி போவதாக உத்தேசம் என்று கேட்டேன். என் உடலில் தெம்பு இருக்கும் வரை என்றார்.

தினமும் வேலைக்கு செல்வதைப் போல் ஒவ்வொரு மாதமும் அவர் மகளின் ஜென்ம நட்சத்திரத்தன்று குடும்பத்துடன் அல்லது இவர் ஒருவராவது வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போய் அர்ச்சனை செய்வது வழக்கமாகிப் போனது. புரோட்டீன் வெளியேறுவதை தடுக்க எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று மருத்துவர் சொன்னதைக் கேட்ட அந்த குழந்தையின் தந்தை முழு பாரத்தையும் வைத்தீஸ்வரன் கோயில் சுவாமியின் மீது இறக்கி வைத்துவிட்டார் என்பது மட்டும் எனக்கு புரிந்தது. அதற்காக சாமி பார்த்துக்கொள்ளும் என்று அலட்சியமாகவும் அவர் இருக்கவில்லை. குழந்தையின் சாப்பாட்டு விஷயத்தில் அவர் மனைவியை விட இவர் அக்கறையுடனும் கண்டிப்புடனும் இருப்பதை நான் அறிவேன். அது மாயமா, மந்திரமா என்று எனக்கு புரியவில்லை. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளாக குழந்தைக்கு எந்தபிரச்சனையும் இல்லை.

உறவினர் வீட்டிலோ, திருமண இடத்திலோ எளிதில் ஜீரணமாகாத உணவை சாப்பிட்டால் மட்டும் அந்தக்குழந்தைக்கு ஒத்துக்கொள்வதில்லை. இரண்டு மூன்று முறை அவஸ்தைப்பட்ட பின்னர் அந்த விஷயத்திலும் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட இந்த விஷயத்தை நான் மறந்தே போனேன். இப்போது ஏன் அது என் நினைவில் வந்தது தெரியுமா?
***********************************************************
Bhogar said...

    மேற்கொண்டு தனக்கு எதுவும் அறுவை சிகிச்சை நடக்குமோ என்று,
    இவன் பயப்படுகிறான்.அகத்தியனை நம்பி வந்ததால்,
    இவனுக்கு அந்த துன்பம் ஏற்ப்படாது.

    ஒவ்வொரு மாதத்தில் வருகிற,இவனுடைய ஜென்ம நட்ச்சதிரத்தில், வைத்தியனுக்கெல்லாம் வைத்தியனாகிய,வைத்தீஸ்வரன்கோவிலில்,குடி கொண்டுள்ள ஈசனை,வைதீஸ்வரனை,வணங்கி வர வேண்டும்.

    மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு,பணம் இல்லாத ஏழைகளுக்கு,தன்னால் முயன்ற அளவிற்கு,பொருளுதவி செய்து வரவேண்டும்.

    இந்த இரண்டு வழிமுறைகளை,வாழ்க்கை முழுவதும் அனுசரித்து வந்தால்,அகத்தியன் அருளால் நலமோடு வாழ்வான்.    என்று அருள்வாக்கை முடித்தார்.

    இந்த அருள்வாக்கை கேட்ட பெரியவர்,சிறிது நேரம் சிலை போல் அமர்ந்து விட்டார்.

    தன்னுடைய உடல் சார்ந்த,துன்பத்திற்கெல்லாம்,  தன் முன் ஜென்ம கர்மவினைகள் தான்,காரணமென்று உணர்ந்து கொண்டதாகவும்,
அகத்தியர் கூறியபடியே,இனி நடப்பதாகவும் உறுதி எடுத்தார்.

    அகத்தியரின் ஜீவ நாடியை தனக்கு அறிமுகப்படுத்தியதற்கு,எனக்கு நன்றி கூறினார்.   அகத்தியர் கூறியபடி நடந்ததால்,அவருக்கு உடலில் எந்த பாதிப்பும் கடைசி வரை வரவில்லை.

    இது போல் பல முற்பிறவி அனுபவங்களை,நாடி மூலம் எனது,     சொந்த  செலவிலே ஆராய்ந்து உள்ளேன்.

    இது போல் பலரின் முற்பிறவி கர்மவினை அனுபவங்களை,ஆராய்ந்து பார்த்த பொழுது எனக்கு தெரிந்த உன்மை இது தான்.

    ''காரணமின்றி இவ்வுலகில் காரியம் எதுவும் நடப்பதில்லை.நாம் இன்று அனுபவிக்கிற இன்பம் துன்பத்திற்கான காரணங்கள்,நம்முடைய முற் பிறவிகளில்  உள்ளது''.

    ஓம் சரவணபவ நம
********************************************************************
அகத்தியர் சொன்னதாக  20ஆம் தேதி பதிவுக்கு போகர் எழுதிய பின்னூட்டத்தில் படித்ததும் சிந்துஜாவின் தந்தையிடம் ""வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தில் சென்று வணங்கி வரவேண்டும் என்று உங்களுக்கு ஆலோசனை சொன்னது யார்'' என்று கேட்டேன்.

யாரும் சொல்லவில்லை. பொதுவாக வியாதிகளை குணப்படுத்தும் கடவுள் என்ற நம்பிக்கை இருப்பதால் நானாவே வேண்டிக்கொண்டு ஒவ்வொரு மாதமும் சென்று வருகிறேன் என்றார்.

இறைவனின் திருவிளையாடலை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வைத்தீஸ்வரன் கோயில் வாசலில் குடியிருப்பவனுக்கு கூட இப்படி ஜென்ம நட்சத்திரத்தில் சென்று வழிபடவேண்டும் என்ற நினைப்பு வராமல் போயிருக்கலாம். அல்லது யாரும் சொல்லாமல் இருக்கலாம். இரண்டு மூன்று மணி நேரம் பயணம் செய்து அந்த கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் சென்று வழிபட வேண்டும் என்று அவர் மனதில் தானாகவே தோன்ற என்ன காரணமாக இருக்கும்?

எனக்கு தெரிந்த காரணம், அந்த குழந்தையின் தந்தை ஒரு சிவாலய அர்ச்சகர். அவர் பிழைப்பிற்காக பல கோயில்களில் பூஜை, ஹோமம், அர்ச்சனை என்று சென்றாலும், வீட்டு வாசலில் உள்ள கோயிலில் வேறு வருமானம் இல்லாமல் இருந்தாலும், கிணற்றில் இருந்து குடத்தின் மூலம் நீர் இறைத்து,
7 லிங்கம் உட்பட எல்லா சாமிகளுக்கும் அபிஷேகம் செய்து வரும் புண்ணியம்தான் அவர் மனதில் இப்படி ஒரு எண்ணம் தோன்றக்காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தக் கோயிலுக்கு இப்போ எந்த வருமானமும் இல்லை. திருப்பணி நடைபெற்று வரும் அந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தால் குறைந்தது
5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். தண்ணீர் பிடிச்சு அபிசேகம் செய்வதற்கும் எல்லா சன்னதியிலும் பைப் போட்டுடுவாங்க. அப்போ உங்கள் அண்ணனை குருக்களாக நியமித்தால் என்ன செய்வீர்கள் என்று சிலர் அவரிடம் கேட்டார்கள். பரவாயில்லை அவரே பூஜை செய்யட்டும். அவரால நிறைய இடங்களுக்கு அலைய முடியாது. நான் நாலு இடத்துக்கு அலைஞ்சு பூஜை செய்ய தயாரா இருக்கேன். அது மட்டுமில்லாம அந்த கோயிலுக்கு சம்பளமா அப்பாவுக்கு வந்த நெல்லை அரைச்சுதான் நாங்க சாப்பிட்டு வளர்ந்துருக்கோம். அப்படி இருக்கும்போது சாமியை பட்டினி போட எனக்கு மனசு வராது. அதனால என்னால முடிஞ்ச அளவு தண்ணீர் இறைச்சு தினமும் அபிஷேகம் செஞ்சுடுவேன் என்றார்.
***********************************************
இது உண்மைச்சம்பவம் என்பதால் குழந்தையின் பெயரை மாற்றியிருக்கிறேன். மற்றவர்களின் பெயர்களையும் குறிப்பிட வில்லை.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7



கண்ணன் என் காதலன்
ஆக்கம்: புவனேஷ்வர்

பல்லவி:
காதலெ னும்மது வுண்டோம் – கோதையர்
மாதவ னாஞ்சிறு மாமல ரான்மிசை
காதலெ னும்மது வுண்டோம்;

அனுபல்லவி:
ஆதியி லாதியெம் மாயனவ் வேய்துளை
யூதிவ ருங்குழ லாயன ருந்தவர்
ஓதும றைபொரு ளானமு குந்தனின்
கோடிநி லாவொளி சோதிப தம்மிசை
(காதலெனும்)

சரணம்:
போதல்ம றந்தவன் காதலி னால்தரு
போதிநி ழல்துற வோனிகர் ஞானியர்
காதலு டன்னுற வாடிம கிழ்திரு
மாதவ னில்கலந் தேகிடவே யொரு
(காதலெனும்)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8

மென்பொருள் பொறியாளர்கள் படும் பாடுகள்!
படத்தை அனுப்பியவர்: ஜி.ஆனந்தமுருகன்
படத்தைக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும். 
படிப்பதற்கு வசதியாக இருக்கும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++


நகைச்சுவை
பெருமைக்குரிய நமது அடுத்த குடியரசுத் தலைவர்!
படத்தை அனுப்பியவர்: ஜி.ஆனந்த்முருகன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10
Humour
Bad news, Good news, and Great news
Sent by S.Sabari Narayanan, Chennai

The day after his wife disappeared in a kayaking accident, an Anchorage man answered his door to find two grim-faced Alaska State Troopers.
"We're sorry Mr. Wilkins, but we have some information about your wife", said one of the troopers.
"Tell me! Did you find her?" Wilkins exclaimed.
The troopers looked at each other.  One said, "We have some bad news, some good news, and some really great news.  Which would you like to hear first?"
Fearing the worst, the ashen Mr. Wilkins said, "Give me the bad News first."
The trooper said, "I'm sorry to tell you, sir, but this morning we found your wife's body in Kachemak Bay.
"Oh my Gosh,"  exclaimed Wilkins. Swallowing hard, he asked, "What's the good news?"
The trooper continued,  "When we pulled her up, she had 12, twenty-five pound king crabs and 6 good sized Dungeness crabs clinging to her and we feel you are entitled to a share in the catch."
Stunned, Mr. Wilkins demanded, "If that's the good news, then what's the great news?"
The trooper replied, "We're going to pull her up again tomorrow..!!!"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

85 comments:

  1. 1.
    ஆஹா..
    மங்கையர் மலரில் எழுதும் போது முதலே அய்யர் சகோதரி பார்வதியாரின் வாசகர்..
    அது வகுப்பறையிலும் தொடர்வது மகிழ்ச்சியே..
    தன் வேறு முகத்தை காட்டி பெரும் பாராட்டினை பெறுகிறார்..
    முன்னர் நாங்கள் மருத்துவமனைக்கு சென்று பிரார்த்தனை செய்வோம் அந்த நினைவுகளை நிழலாட செய்தமைக்கு நன்றிகள்..

    2.
    தொடர்ந்து எழுத விரும்பியமைக்கு உளம் மகிழ்ந்து வணங்குகிறோம் ..
    தொடரட்டும் நம் நட்பும் புத்தம் புதிய பதிவுகள்..

    3.

    ஒடிசி..
    ஒடி.. சி
    ஓடி...சி
    (கருத்து சொல்லியாச்சு...
    புரிஞ்சால் மகிழ்ச்சி..
    புரிந்ததை ஒரு வரி இடுங்களேன்..
    இல்லாவிட்டால் வருத்தமில்லை)

    4.
    முறைப் பொண்ணு பாடுதுன்னு தெரியுது..
    அந்த உணர்வுகற் பற்றிய அனுபவம் இல்லை என்பதால் கருத்து சொல்ல தெரியவில்லை..

    5.
    சாலை விதிகளை மதிக்க சொல்கிறீர்கள்
    சரி..
    பல இடங்களில்
    சாலையே சரியாக இல்லையே..
    அடுத்து
    மேம்பாட்டிற்காக எழுதும் நீங்கள்
    மேம்பாலம் பற்றி எழுதுங்கள்..
    (சுவைஞர்கள் எங்களுக்காக..)

    6.
    உண்மை சம்பவங்களை எழுதி தந்த சரவணனனுக்கு வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..

    தோழர் போகரின் எண்ணங்களை குறித்துக்காட்டியமை மேன்மையை காட்டுகிறது..


    ஜடாயு வழிபட்ட தலம்
    இத் திருத்தலத்தில் நவகிரகங்கள் வரிசையாக இருக்கும்

    தருமை ஆதீன நிர்வாகத்தில் உள்ள இத்திருக்கோயிலில் மின் விளக்கு செலவுகளுக்காக ஒரு முறை ரூ.1000 தந்தால் போதும் ...
    விரும்புபவர்களுக்கு பயனாகுட்டுமே என்ற கூடுதல் தகவல்கள்...

    7.

    கண்ணா..
    சரி கன்னா..

    8.

    அப்பா..ப்பா...
    அந்த மென் பொருள் பொறியாளர்களின் பாடுகளை
    பொரு(ட்படு)ப்பெடு த்தி எழுதி தந்தமைக்கு வாழ்த்துக்கள்...

    9.

    அடுத்த தலைவர் சரி..
    அதனை உறுதி படுத்தியாச்சா..?

    10.

    சேதி கேட்டோம்..
    சேதி கேட்டோம்..
    சிரிக்க சிரிக்க
    சேதி கேட்டோம்...
    சபரிக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. சகோதரி பார்வதி அவர்களின் கட்டுரை மிகவும் ரசிக்கும் படி இருந்தது. கொஞ்சம் அச்சமூட்டுவதாகவும் இருந்தது. (பாதி ஆபரேசனில் முழிச்சது)

    ஆபரேசன் தியேட்டரில் எதற்காக இரட்டை ஜடை போட்டு விடுகிறார்கள் என்று எனக்கு ஒரு கேள்வி குழந்தை முதல் உண்டு.

    எனது திருத்தகப்பனார் மருத்துவ துறையில் இருந்ததால் குழந்தை பருவம் முதலே நான் ஆஸ்பத்திரியில் விளையாடி மகிழ்ந்து வளர்ந்தேன்.. நான் வேதியியல் எடுக்க ஒரு காரணம் அங்கு இருந்த லேப் இல் நான் எல்லா reagents களையும் அலசி விளையாடியது தான். அங்குள்ள microscope அப்போது எனக்கு ரொம்ப பிடிக்கும். வெங்காய தோல் முதல் எனது சொந்த ரத்தம் வரை அதில் வைத்து பார்ப்பேன். இது மற்றும் எனது அணைத்து நடவடிக்கைகளும் மேலுக்கு சேட்டை போல தெரிந்தாலும் அங்கு உள்ள பணியாளரின் மேற்பார்வையில் மட்டுமே நடக்கும். ஆதலால் எந்த விதமான குளறுபடிகளும் நடந்ததில்லை. எனக்கோ மற்றவர்களுக்கோ கேடு வராமல் அவர்கள் பார்த்து கொண்டார்கள். அதையும் இங்கு தெரிவித்தாக வேண்டும்.

    அந்த ஆஸ்பத்திரி வாசனை தான் இன்றளவும் எனக்கு பிடித்த நறுமணம். பழக்கம் வெறுப்பை வளர்க்கும் என்ற ஆங்கில பழமொழி என் விஷயத்தில் இங்கு உண்மையாகவில்லை.

    எனது அப்பா தான் அங்கு தலைமை அதிகரி என்பதால் யாரும் என்னை அவ்வளவாக உருட்டி மிரட்டியதில்லை. ஓரிரண்டு வயதான ட்யூட்டி டாக்டர்கள் ஒரு முறை முறைத்து விட்டு போவார்கள். அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் அல்லாது மொபைல் வண்டி ஒன்று உண்டு. அதில் ஏறி டிரைவர் அங்கிள் மடியில் உட்கார்ந்து வண்டி ஸ்டீயரிங் பிடித்து ஓட்ட கற்று கொண்டதும் உண்டு (நான் ஒரு வண்டி பைத்தியம்).

    வார்டுகளில் ரவுண்டு வரும் அத்தையோடு நானும் வளைய வருவேன் லீவு நாட்களில். அந்த நாட்களில் ரொம்ப கேடு பிடி எல்லாம் கிடையாது இப்போது உள்ளது போல. அப்போது தான் இந்த ரெட்டை ஜடை பற்றி சந்தேகம் வந்தது. புதிதாக பிறந்த குட்டி பாப்பாக்களை சில சமயம் வெளியே கொண்டு வந்த பின் தொட்டிலில் பார்த்து இருக்கிறேன்.
    (தியேட்டருக்குள் என்னை விட மாட்டார்கள் என்பதையும் இங்கு சொல்ல விட வேண்டும்)

    சகோதரி பார்வதி அவர்கள் எல்லா நலனும், ஆரோக்யமும், இறையருளும் பூரணமாக பெற்று இன்புற்று, என் போன்ற சிறார்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழ வேண்டும் என அம்பாளை பிரார்த்திக்கிறேன்.

    -----

    கிருஷ்ணன் சார் பதிவில் அம்மாஞ்சி என்றால் அம்மான் சேய் என்ற விளக்கத்தை அறிந்து கொண்டேன். அப்படியே அத்தங்கா என்ற சொல்லுக்கும் ஐயா விளக்கம் தந்தால் மிக்க நலமாயிருக்கும். இது எனது சிறு வேண்டுகோள். நானும் யோசித்து பார்த்து விட்டேன். பிடி படவில்லை.

    ------

    ஓவியம் நன்று. சகோதரி தேமொழியிடம் நல்ல ஆற்றல் இருக்கிறது.

    -----

    தனுசு அவர்களின் கவிதைகள் இரண்டும் அழகாக இருந்தன. முதல் கவிதை கிராமிய பாங்குடன் இருந்தது.

    -----
    திரு சரவணனின் கட்டுரை: நெகிழ்ச்சி!
    முதன் முதலில் ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய வேப்ப மரத்தை பார்த்தவுடன் பயமாக இருந்தது. இன்னும் நினைவில் உள்ளது.
    சோழ நாட்டு கோயில்கள் அனைத்துமே பிரம்மாண்டமான அமைப்பை உடையன........ அருகில் உள்ள திருவெண்காடு கோயிலும் sprawling பெரிய கோயில்!
    கீழ்பெரும் பள்ளம் ஆலயம் தான் கொஞ்சம் திருப்பணி பண்ணினால் தேவலை போல இருக்கிறது........ திருநாகேஸ்வரம் நல்ல நிலையில் உள்ளது....... சொல்ல தோன்றியது அதனால் சொன்னேன். நல்ல நெஞ்சங்களுக்கு சென்றடையும் அல்லவா.......

    -----

    மென்பொருள் ஆட்கள் பற்றிய பதிவு உண்மை.
    எனது தமையனாரும் அந்த துறையில் உள்ளதால் இதை நான் அறிவேன்.

    -----

    நாடாளுமன்ற படம்........ பாவம் அவருக்கு என்ன அசதியோ..... வயசாயிருச்சு இல்ல! (நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்லன்)

    -----

    என்னமோ தெரியவில்லை, சபரியார் தந்த ஜோக் படிக்கையில் எனக்கு சிரிக்க தோன்றவில்லை. தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.
    எனக்கு தோன்றியதை சொன்னேன். படிக்கையில் கொஞ்சம் மனசு கனத்தது. மனைவி உயிரில் பாதி இல்லையா? :-)
    (இது விமர்சனம் அல்ல. ஜஸ்ட் என் கருத்தை சொன்னேன். விவாதங்களுக்காக அல்ல,)

    அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துக்கள். இந்த வார இறுதி அனைவருக்கும் இனியதாக அமைய இறையருளை வேண்டுகிறேன்.

    எனது கவிதையை வெளியிட்ட வாத்தியார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  6. பார்வதி அம்மையின் அறுவை சிகிச்சை, மருத்துவமனை அனுபவங்கள் நகைச்சுவையுடன் கூட்டி எழுதியுள்ளது சுவையாக இருந்தது. இடுக்கண் வருங்கால் நகுக!

    அறுவை சிகிச்சை அறைக்குள் ஆவி சுத்தும் என்று எதிர்பார்த்து கொண்டு உள்ளே போனால், மயக்க மருந்தும் பயத்தினால் பல‌ன் கொடுக்காமல் போகலாம்.

    மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சையையே தூங்கும் நோயாளிக்குத் துவங்கியிருந்தால் .....? நினைக்கவே உடல் பதறுகிறது.
    நல்ல் கண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்துவிட்டு,அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கண்ணை அப்படியே விட்டவர்கள் பற்றியெல்லாம் படித்துள்ளோம்

    Doctors blunders are buried. Engineers blunders are monumental

    இன்று மருத்துவம் என்பது முற்றிலும் வியாபாரமாக மாறிவிட்ட சூழலில், பார்வதி அம்மை கூறும் நல்ல மருத்துவர்கள் தேவ தூதர்களே. பல தனியார் மருத்துவ மனைகளில் இறந்த நோயாளியின் உடலை வைத்துக்கொண்டு பேரம் பேசுவதெல்லாம் நடக்கிறது.

    தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் சுமார் 50 மருத்துவ முகவர்கள்(ஏஜெண்ட்) TOUTS சுற்றிக் கொண்டு இருப்பார்கள்.பேருந்தை விட்டு இறங்குபவர்களை அமுக்கித் தங்களுக்குக் 'கமிஷன்' தரும் மருத்துவரிடம் தள்ளிக் கொண்டு போவார்கள்.

    ReplyDelete
  7. என் அம்மான்சேயின் மின் அஞ்சலை வெளியிட்ட ஐயாவுக்குப் பல நன்றிகள்.

    ஒவ்வொருவரும் 'ஒரு சில துளி பெட்ரோலையாவது சேமிப்பேன்' என்று நினைக்கத் துவங்கினால் நாட்டிற்கு அன்னியச் செலாவணி எவ்வளவோ மிச்சம் ஆகும்.

    ReplyDelete
  8. தேமொழியின் ஓவியங்கள் இரண்டும் அருமை.ஒடிசி ஆட்டத்தின் ஒயில் அப்படியே வெளிவந்துள்ளது. நாட்டுப்புறக் காதலர்களின் கண்களிலேயே காதல் கொப்பளிக்கிறது.

    ReplyDelete
  9. "எட்டு பத்து சிங்கக்குட்டி பெத்துத்தாரேன் புள்ளக்குட்டி..."

    அப்போ சீக்கிரமாகவே இந்தியாவை மக்கட்த்தொகையில் முதல் நாடு என்ற இலக்கை எட்ட வைக்க உத்தேசமோ?தனுசுவின் நாட்டுப்புறப் பாடலை படித்துச்சுவைதேன். அந்த முறை மாப்பிள்ளை சுத்த மக்குப்போல..இவ்வளவு சொல்லியும் முழிக்கிறானே!

    ReplyDelete
  10. சிங்காரிதான் காவேரி, காவேரிதான் சிங்காரி! சரண்தான் சரவணன் சரியா?

    வைத்தியநாதரால் குணமான குழந்தையைப் பற்றி வாசித்தேன்.நம்பிக்கை அளிக்கும் உறுதியே அலாதிதான். பார்வதி அன்னையின் லீட் கட்டுரைக்கு நல்ல பக்கவாத்தியம் சரவணனின் கட்டுரை.இறைவனின் புகழைப் ப‌டிக்கச் சலிப்பதே இல்லை. சரவணனின் நடையில் நல்ல தெளிவு. நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  11. புவனேஷ்வரின் சாகித்யம் பாடிப் பார்க்கத் தூண்டியது.
    இர‌ண்டு மூன்று ராகங்களில் 'சிக்' என்று அமர்கிறது பாடத் தெரிந்தால், ராகம் அறிந்தால் புவனேஷ்வரே தான் தெரிந்து எடுக்கும் ராகத்தினை குறிப்பிடலாம்.
    பாரதியார் தன் பாட்டுக்களுக்குத் தானே ராகம் சொல்லியுள்ளார்.பல சாகித்யங்களைத் தாருங்கள் புவனேஷ்வர்.

    ReplyDelete
  12. 40% கணினியாளர்களுக்கு எங்கே நிரந்தரமாகத் தங்குவது என்பதில் குழப்பம் என்பது முற்றிலும் யதார்த்தம்.

    அதேபோல் திருமணம் செய்யாமல் 'லிவிங் டுகதெர்'அதிக மாகிவிட்டது வருத்தமாக இருக்கிறது.ஆனந்த முருகன் எடுத்தாண்ட செய்தி யதார்த்தமே.

    வருங்காலக் குடியரசுத் தலைவர் அந்தப் பதவியில் செய்ய வேண்டியதை மக்களவையிலேயே பயிற்சி எடுக்கிறார்போலும்.

    நன்றி ஆன‌ந்த முருகன்.

    இந்தியா ஒளிவிடுகிறது முந்தைய பிஜேபி அரசின் முழக்கம். அதனை வைத்துச் செய்யப்பட்ட கார்ட்டூன் இப்போது 'அவுட் ஆஃப் டேட்.'

    சபரிநராயணனின் நகைச்சுவை எனக்கு உள்ள சொற்ப‌ ஆங்கில அறிவைக் கொண்டு படித்ததில் சட்டென்று சிரிப்பு வரவில்லை.

    தவறாமல் பிற தளங்களில் இருந்து எடுத்து நமக்குப் பரிசளிக்கும் இரட்டையர்களுக்கும் நன்றி.பாராட்டுக்கள்.

    காப்புரிமை இடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete
  13. //தொடர்ந்து எழுத விரும்பியமைக்கு உளம் மகிழ்ந்து வணங்குகிறோம் ..
    தொடரட்டும் நம் நட்பும் புத்தம் புதிய பதிவுகள்..//
    நன்றி ஐயர் அவர்களே. இனி கூடியவரை மிகவும் பொதுவான செய்திகளும், பலருக்கும் தெரியாத செய்திகளும் எழுத ஆவல். சுய புராணத்தை சிறிது
    குறைக்க எண்ணம்.

    ReplyDelete
  14. பார்வதி ராமச்சந்திரன் அவர்களின் ஆஸ்பத்திரி அனுபவ வர்ணனையும் சொல்ல வந்த இறுதி கருத்தும்
    நல்ல சிறப்பான எழுத்தை,வாசிப்பைத் தந்ததாக உணர்கிறேன்..
    அடுத்தமுறை தியேட்டருக்கு போகும் போது அந்த நிஜக் காட்சிப்படம் தங்களின் நெடுநாள் கனவை பூர்த்தி செய்யும் நல்ல அனுபவமாக இருக்கப் போவதை தங்களின் மனத்திரையிலே இப்போதிலிருந்தே தொடர்ந்து பார்க்க வேண்டுகிறேன்..இதைத்தொடர்ந்து செய்தால் உங்களின் கட்டுரைக் கடைசி வரிகளின் வேண்டுதல் உங்களளவிலே பலிக்கும் என்பதே என் நம்பிக்கை.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. //கிருஷ்ணன் சார் பதிவில் அம்மாஞ்சி என்றால் அம்மான் சேய் என்ற விளக்கத்தை அறிந்து கொண்டேன். அப்படியே அத்தங்கா என்ற சொல்லுக்கும் ஐயா விளக்கம் தந்தால் மிக்க நலமாயிருக்கும். இது எனது சிறு வேண்டுகோள். நானும் யோசித்து பார்த்து விட்டேன். பிடி படவில்லை.//

    அத்தை (பெற்ற) மங்கை, ஆர் விகுதி சேர்த்து 'அத்தங்கார்'
    அம்மான் (பெற்ற)மங்கை ஆர் விகுதி சேர்த்து "அம்மங்கார்'

    இது ஒரு யூகம்தான். பார்வதி அம்மை, அய்யர் போன்றோர் வேறு தோன்றினாலும் கூறலாம்.
    புவனேஷ்வருக்கு நன்றி.

    ReplyDelete
  16. தேமொழி ஒடிசி நடனத்திலே அபிநயம் காட்டி ஆ(ட்)டி அசத்தியிருக்கிறார்..வாழ்த்துக்கள்..
    ஆனாலும் எனக்கென்னவோ அந்த அக்கா மகளின் முகத்திலே துளிர்க்கும் நாணம் கலந்த புன்முறுவல் தூண்டில்தான் என்னை ஈர்த்தது..இப்படி எனைக் கவர்ந்த ஒரு அழகை சிறந்த கவிதையாக வடித்த தனுசுவின் கருணைக்கு எல்லையே இல்லை..புல்லரித்துப் போனது..வாழ்த்துக்கள்..
    இரண்டு ஓவியங்களிலும் தேமொழி அசத்தியத்தைப் போலே இரண்டு கவிதைகளிலும் தனுசுவும் அசத்தியிருக்கிறார்.
    விபத்திலே சிக்காமல் இருக்க சிறப்பான கவிதை தந்த தனுசுவுக்குப் போட்டியாக
    சொந்த வண்டியை ஓட்டும் பொறுப்பைத் தவிர்த்தால் பெட்ரோல் செலவும் மிச்சமாகும்,தொப்பையும் குறையும் என்று பட்டியலிட்ட KMRKஅம்மான்சேயின் மெயிலும் அருமை..

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. நல்ல மருத்துவர்களை சந்தித்ததுதான் அந்த மாய மந்திரம் என்பது சரவணனுக்கு மனதில் படாததாலேதான் நடந்த கதை சம்பந்தமேயில்லாமல் வைத்தீஸ்வரன் கோவில் வரை போகியிருக்கிறது..

    மருத்துவரையே சந்திக்காதிருந்தால் மாயமந்திர அடிப்படையை சிலாகிக்கலாம்.

    மற்றபடி எழுத்து நடை இயல்பாக அமைந்திருந்தது..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  19. பெங்களூரிலேதான் அதிக BPO ஆட்கள் தற்கொலை என்று புள்ளிவிவரம் கூறுவதாக சமீபத்தில் படித்தேன்..
    சாப்ட்வேர் பிழைப்பு என்பது எங்கே செட்டில் ஆவது என்று குழப்பத்தைத் தூண்டும் விஷயமாக ஆகியிருப்பதென்னவோ உண்மைதான்..

    சாஃப்ட்வேர் ஆட்களின் நிலை பற்றிய அனந்த முருகனின் கட்டிங்கும், பிரணாப் முகர்ஜியின் குறட்டையும் சபரியின் படமும் படித்து ,பார்த்து பொழுதுபோக்க முடிந்தது..

    இந்த வரிசை ஆக்கங்களில் ஒவ்வாத, சிந்தனை அலையைத் தூண்டும் ஆழமான கட்டுரைகளை பிரசுரிக்காமல் தவிர்த்து வெயிலுக்கு இதமான கூலான வாரமலரை தந்த வாத்தியாரைப் பாராட்டலாம்..

    ReplyDelete
  20. என் ஆக்கத்தை வெளியிட்ட வாத்தியார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஊக்கி, என் மனதை இலகுவாக்கிய‌ வாத்தியார் அவர்களுக்கும், திரு. கே.எம்.ஆர் உள்ளிட்ட வகுப்பறை மாணவர்களுக்கும் என் நன்றி. இதைப் படித்துக் கருத்துரைக்க நேரம் எடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  21. திரு.கே.எம்.ஆர் அவர்களின் கட்டுரையில் அவர் அம்மான் சேய் தந்த விவரங்கள் பலருக்கு உபயோகமாக இருக்கும். உள்ளூரில் மிக அதிக தூரமான இடங்களுக்குச் செல்லும் போது பஸ்ஸில் செல்வதே என் வழக்கம். பெட்ரோலை மிச்சப்படுத்துவதோடு, பயணக் களைப்பும் தெரியாது.

    தாங்கள் தொடர்ந்து எழுதுவதற்கு முடிவெடுத்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி.

    //இதில் முக்கியப் பங்கு டெல்லி உமாஜிக்குத்தான்.//

    மேலிடத்திற்கு இதற்காக ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ். உண்மையில், உமாஜியின் அசாத்திய நினைவாற்றலையும் எதையும் கூர்ந்து கவனிக்கும் திறனையும் பல முறை வியந்திருக்கிறேன்.

    //என் எழுத்தும் ஏதோ ஒரு மூலையில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்று தோன்றியது.மனதில் மகிழ்ச்சி தோன்றியது.//

    ஒரு மூலையில் தாக்கமா?. அதன் வீச்சு மிகப் பெரிது. 'தாக்கங்கள் பெற்றே நான் எழுதுகின்றேன்' என்று நான் சென்ற வாரம் எழுதியதைப் படித்திருப்பீர்கள். இது போல் நிறைய இருக்கிறது.

    என் ஆக்கத்தைக் குறித்த தங்கள் கருத்து என் உள்ளத்தை நெகிழச் செய்தது. தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  22. Nurse assumes the patient to be anaesthetized whilst she is actually asleep? ewwww...... creepy!

    ReplyDelete
  23. தனுசுவுக்கு அடித்தது யோகம். அவரின் இந்த வார ஆக்கத்திற்கும், அடுத்த வார ஆக்கத்திற்கு வித்தாகவும் படங்கள் தந்திருக்கிறார் தேமொழி.

    ஓவியத்திலிருப்பவர், ஒடிசி நடனப்பெண் என்பதாக, திரு.அய்யர் அவர்கள், திரு.கே.எம்.ஆர்., திரு. மைனர் ஆகியோர் தெரிவித்திருந்தனர். ஒடிசி நடனப்பெண்கள், தலையில் வைக்கும் பட்டியில் ஒரு சிறிய கூம்பும் (கோன்) இருக்கும். அதோடு இடுப்புப் பட்டி, பெரிய பட்டையாக அடர் நிறத்தில், மணிகள், இலைவடிவங்கள் கோர்க்கப்பட்டு இருக்கும். ஒரு மெல்லிய தாவணியும் அணிவார்கள். என் ஊகம், இது அவர் கற்பனையில் வந்த நடனமணியாக இருக்கலாம். அல்லது மிகப் பழங்கால ஒடிசி நடனப்பெண்களின் ஓவியம் பார்த்து அந்த இன்ஸ்பிரேஷனில் வந்ததாகவும் இருக்கக் கூடும்.

    ReplyDelete
  24. தனுசு அவர்களின் இரு கவிதைகளும் நன்றாக இருந்தது. முதல் கவிதையை விட, இரண்டாவது கவிதை என்னை நிரம்பப் பாதித்தது. (முதல் கவிதைக்கு மேலிடம் நாளை வந்து 'வாட் மேட்டரு' எனக் கேள்வி போடக் கேட்டுக்கொள்கிறேன்)

    கவியரசரின் வைரவரிகளான,

    சாவே உனக்கொரு நாள்
    சாவு வந்து சேராதோ!
    சஞ்சலமே நீயும் ஒரு
    சஞ்சலத்தைக் காணாயோ?
    தீயே உனக்கொரு நாள்
    தீ மூட்டிப் பாராமோ?

    என்ற வரிகளை முதல் வரிகள் நினைவுபடுத்தின. (இது நினைவு வந்ததும், ஆலாசியம் அண்ணாவின் 'அன்னைத் தமிழில்' இசைஞானி இசையமைத்த முதல் பாடல்' என்ற தலைப்பில் இந்தப் பாடல் வந்திருந்தது ஞாபகம் வந்து போய்ப் பார்த்தேன். நமது வகுப்பறையிலும் ஆலாசியம் அண்ணாவே (http://classroom2007.blogspot.in/2011/03/blog-post_26.html ) பதிவில் இதைத் தந்திருக்கிறார்.)

    உங்கள் வார்த்தை ஆளுமை எப்போதும் அருமை.
    //எங்கள்
    ரோமியோக்கள் வாகனத்தில்
    தங்களின் ஜூலியட்டுக்காக
    சாலையில் எட்டு போடும் போது
    நீ
    ஏழரையாய் வந்து விடுகிறாய்//

    என்று தொடங்கித் தொடரும் ஒவ்வொரு வரிகளும் நிறையச் சிந்திக்க வைத்தது.
    அற்புதம்.

    இரு நாள் முன்பு எம்.ஜி.ரோட்டில், அஜீத், நயன் தாரா நடித்த ஷூட்டிங் நடந்தது.
    எக்கச்சக்க பாதுகாப்பு. கெடுபிடி. சைக்கிள் கேப்பில் 'தல'யப் பார்த்தபோது உங்க் நினைவுதான் வந்தது.(வாத்தியார், உங்க கவிதைக்குப் பாண்டியராஜன் படம் போட்டுட்டார், அஜீத் படம் போட்டிருந்தா நல்லாருக்கும்னு ஜாலியா ஒரு வாட்டி கமென்ட் பண்ணியிருந்தது நினைவு வந்தது).

    ReplyDelete
  25. திரு. சரவணனின் ஆக்கம் அவர் ஒரு தேர்ந்த, பண்பட்ட எழுத்தாளர் என்பதை உறுதிப்படுத்தியது. அனுபவம் மனதை மிக உருக்குவதாக இருந்தது.

    அநேகமாக நான் கீழே கூறுவதை உங்கள் நண்பர் செய்திருக்கக் கூடும். உங்கள் ஆக்கத்தைப் படிப்போரின் மேலதிகத் தகவலுக்காக,

    1. எம்பெருமான் முத்துக்குமாரஸ்வாமியின் அர்த்த ஜாம பூஜையை நேத்திரப்பிடி தரிசனம் என்று சொல்வார்கள். அதில் ஸ்வாமிக்குச் சார்த்திய நேத்திரப்பிடி சந்தனம், திருச்சாந்துருண்டை போலவே மருத்துவ மகத்துவமிக்கது.

    2.ஒரு நாள் இரவு தங்கி அர்த்தஜாம பூஜை, மறுநாள் அதிகாலை நிர்மால்ய தரிசனம் ஆகியவற்றைப் பார்த்துப் பின் நேத்திரப்பிடி சந்தனம் வாங்கி வந்து குழந்தைக்குத் தருவது நல்லது. இது பற்றிய விவரங்கள், வைத்தீஸ்வரன் கோவில் டிக்கெட் கவுண்டர் எதிரில் இருக்கும் பெரிய போர்டில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

    திரு. போகரின் பின்னூட்டத்தை நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி. முருகனருளால் தங்கள் நண்பரின் குழந்தை விரைவில் நலம் பெறப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  26. தனுசுவின் இரண்டாவது கவிதை சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்தது.
    மேலை நாடுகளில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய ஒன்று சாலை விதிகள்.

    கனடா போன முதல் நாளே அதை கண்கூடாக பார்க்க முடிந்தது. (இடது புறமாக நடைபாதை தானே என நான் நடக்க, போலீஸ்கார அக்கா (???) என்னை, நீங்கள் பிரிட்டனை சேர்ந்த நாட்டில் இருந்து வருகிறீர்களா? என கேட்டு அந்தப்பக்கமாக போ என சொன்ன அனுபவம் உண்டு)

    ஆனால் அங்கே வாகனுங்களுக்கான இடைவெளி அவ்வளவு கடுமையுடன் கடைப்பிடிக்க படுகின்றன. குழந்தைகள் சாலையை கடக்கும் போது ஒரு இருபதடி முப்பதி தள்ளியே அவசர அவசரமாக வண்டிகள் நிற்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.

    சிக்னல் வெள்ளை (பாதசாரிகள் சாலையை கடக்க வெள்ளை விளக்கு) ஆனால் கண்ணை மூடிக்கொண்டு நடக்கலாம்.

    அங்கே ஓட்டுனர் உரிமம் மூன்று நிலைகளில் கிட்டும். ஜி ஒன்று, ஜி இரண்டு பின்னர் ஜி.

    ஜி ஒன்றில் நம்மூர் எல் போர்டு போல, யாராவது ஜி உரிமம் பெற்றவர் கூட இருந்தால் மட்டுமே ஓட்ட முடியும். அதுவும் ஊருக்குள் மட்டுமே. நெடுஞ்சாலையில் அல்ல. ஓராண்டு இந்த உரிமத்தில் ஒட்டியே பழக வேண்டும். பிறகு தான் ஜி ஒன்றை பற்றி நினைக்கலாம்.

    ஒரு ஆண்டுக்கு பின் அடுத்த தேர்வு/சோதனையில் (driving, parallel parking etc.) தேறினால் ஜி இரண்டு உரிமம் கிட்டும். அதனால் நெடுஞ்சாலையில் ஓட்டலாம் ஆனால் குடித்திருக்க கூடாது. துணை இன்றி போகலாம்.

    இது ஒரு ஆண்டு கட்டாயம் இருக்கும்.

    அதன் பிறகு தான் ஜி தேர்வு. அதில் தேறினால் முழு உரிமம். ஒரு பாட்டில் பீர் வரை குடித்து ஓட்ட அனுமதி உண்டு.

    இது எல்லாம் பண்ணி முடிக்க எழுநூறு டாலர்கள் குறைந்த பட்சம் செலவாகும் (குறைந்த பட்ச பயிற்சி கட்டணமும் சேர்த்து).
    நாம் பண்ணும் ஒவ்வொரு தவறும் உரிமை அட்டையில் மின் முறையில் சேமிக்கப்படும். பெரிய தவறுகள் செய்தால் உரிமம் தற்காலிக அல்லது நிரந்தர ரத்தாகும்.

    ReplyDelete
  27. திரு. புவனேஷ்வரின் கவிதையை மிக அருமையாக, பக்தி ரசம் ததும்ப அமைந்திருந்தது. ஞானப் பசி கொண்டோரின் ஏக்கம் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. 'நாயகி பாவம்' எனவும் கொள்ளலாம். சீர் பிரித்துப் படிக்க எளிமையாகவும், மிக நல்ல கருத்தாழமிக்க வார்த்தைகளுடனும் இருப்பது அருமை.
    அதற்கு வாத்தியார் அவர்கள் போட்டிருக்கும் படமும் அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  28. மென்பொருள் பொறியாளர்களின் பாடுகள் குறித்து திரு. ஆனந்த முருகன் அனுப்பிய செய்தி நானறிந்த வரையில் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை.

    'குடியரசுத் தலைவர்' படம் பார்த்தவுடன், எனக்குத் திரு. அய்யர் அவர்கள் அளித்த கருத்துரை போல், 'உறுதிப்படுத்தியாச்சா' என்றே தோன்றியது. போட்டோவில் President
    என்று போட்டிருப்பதும் சரியில்லை என்று தோன்றியது.

    இம்முறை சபரியாரின் செய்தி எனக்கு ஏனோ சிரிப்பைத் தரவில்லை.

    ReplyDelete
  29. எனது ஆக்கத்தினைப் படித்துப் பாராட்டிய, திரு. அய்யர் அவர்கள், திரு.கே.எம்.ஆர் அவர்கள், திரு. புவனேஷ்வர் அவர்கள், திரு.மைனர் அவர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  30. //இது ஒரு யூகம்தான். பார்வதி அம்மை, அய்யர் போன்றோர் வேறு தோன்றினாலும் கூறலாம்.//

    திரு. கே.எம்.ஆர் அவர்கள் கூறிய விளக்கம் மிகச் சரியென்றே எண்ணுகின்றேன். திரு. அய்யர் அவர்கள் தரும் மேலதிகத் தகவலுக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  31. வகுப்பறைக்கு நீண்ட நாட்கள் வரமுடியாமல் எனக்கு பணி அமைந்துவிட்டது. ஆசிரியர் ஐயா அவர்கள் எனக்கு விடுப்பு அளித்து ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன்.இன்றைய வார மலரைப் பார்த்தேன், இன்னமும் முழுமையாகப் படிக்கவில்லை. திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் மிக ஆழமான ஆன்மீகத் தலைப்பிலிருந்து சற்றே மாறுபட்டு அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். உண்மையில் இதுபோன்ற அனுபவம் சுவையானதும் கூட. கவிஞர் தனுசு இப்போது முதுகலை பட்டத்துக்குப் பின் முனைவர் பட்ட ஆய்வாளராகிவிட்டார் போல் தோன்றுகிறது, வளமான, சுவையான, வேகமான கவிதைகளை அள்ளித் தருகிறார். தேமொழி அவர்கள் ஒடிசி நடனம் பற்றிய ஓவியம் சிறப்பானது. பரதத்திலிருந்து ஒடிசி வேறுபடுவது சில நுட்பமான அசைவுகளின்மூலம் தான். உடலை மூன்று பகுதிகளாகப் பிரித்து, மேல், இடை, கீழ் என்று மேல் வலப்புறம் அசைந்தால் நடு இடப்புறமும், அடி வலப்புறமுமாக வளைந்து பாவம் வெளிப்பட ஆடுதல். ஒடிசி மிகச் சிறந்த நாட்டியக் கலை. நாட்டிய நாடகங்களை ஆடிக் காட்ட ஒடிசி சிறந்த மார்க்கம் என்பதால் ஒடிசி மிகச் சிறந்த கலையாகக் கருதப்படுகிறது. அதில் ஆர்வம் கொண்டு அவர் வரைந்த படத்துக்குப் பாராட்டுக்கள். புவனேஷ்வர் கவிதைத் திறத்தோடு இசைத் திறனும் கொண்டிருக்க வேண்டும். கீர்த்தனை இயற்றுவது என்பது தனித் திறமை. அத்தகையோர் குறைந்து வரும் இந்நாளில் புவனேஷ்வர் மேலும் பல கீர்த்தனைகளை பல ராகங்களில் அமைத்து இயற்ற வேண்டும். சரவணன் வைத்தீஸ்வரன்கோயில் குறித்து எழுதியிருக்கிறார். பல ஆண்டுகள் அவ்வூர் திருவிழாவுக்குச் சென்று கீழ கோபுர வாயிலுக்கு எதிரில் இருந்த என் நண்பர் வைத்தியநாதன் இல்லத்தில் தங்கி கோயில் திருக்குளத்தில் நீந்திய நாட்களை நினைவு கூர்கிறேன். கே.எம்.ஆர். சபைக்குத் திரும்பி விட்டார். ஓய்வுக்குப் பிறகும் சிலருக்கு பணி நீட்டிப்பு கிடைக்கும் போலிருக்கிறது. வழக்கம் போல் வெளிர் ஓட்டு ஓட்டுங்கள் கே.எம்.ஆர். ஆனந்தமுருகனின் படைப்பு போன்ற சிலவற்றைப் படித்துவிட்டுப் பின்னர் கருத்தினை தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  32. என் கருத்துக்களைத் தொடர்கிறேன். திரு சபரி நாராயணன் நல்ல நகைச்சுவைப் பிரியர் என்பது தெரிகிறது. நகைச்சுவை இல்லாத வாழ்க்கை வீண் என்பது என் கருத்து. தொடரட்டும் அவர் பணி. வருங்கால குடியரசுத் தலைவர் எப்படி இருக்க வேண்டும்? அந்த புகைப்படத்தில் காணப்படும் தூங்கி வழியும் வகையிலா? அல்லது வேறொரு சந்தர்ப்பத்தில் எதிர் கட்சியினரைப் பார்த்து கோபம் கொப்புளிக்க நம் ஊர் மேடைப் பேச்சாளர் போல ஆத்திரத்தின் உச்சியில் நின்று கத்திய காட்சியை பல ஆங்கில ஊடகங்கள் அடிக்கடி காட்டுகின்றன, போகிற போக்கில் எதிரிலுள்ளவர்கள் ஒருசில கிலோ சதையை இழக்க நேரிடும் அளவுக்கு இருந்தது அந்தக் காட்சி. பாபு ராஜேந்திர பிரசாத் போன்ற அமைதியும், அறிவும், அன்பும் படைத்தவராகவா நம் ஜனாதிபதி இருக்க வேண்டுமமா. டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கடராமன், டாக்டர் அப்துல் கலாம் போன்றவர்கள் உட்கார்ந்த இடமல்லவா அது? போகட்டும் "விதியே! விதியே! இந்திய மக்களை என்செய நினைத்தாய்?" என்று புலம்ப வைத்துவிட்டார்கள். காங்கிரஸ்காரர்கள் அடிக்கடி ஒரு கருத்துச் சொல்வார்கள். எந்தவொரு சதிச்செயல் இந்தியாவில் நடந்தாலும், அதில் அந்நிய கைவரிசை இருக்கிறது என்பார்கள். ஒருக்கால் இதிலும் இருக்கிறதோ என்னவோ?

    ReplyDelete
  33. திருமதி பார்வதி அவர்களின் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை அறை அனுபவத்தைத் தொடர்ந்து நான் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு. நான் சொல்ல இருப்பது சுயபுராணம் அல்ல என்றாலும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. என்ன செய்ய? சென்னை மெட்றாஸ் மெடிகல் சேன்டரில் எனக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்தார்கள். ஆங்கியோ செய்தபின் அறுவை சிகிச்சைதான் ஒரே வழி என்று தெரிவித்தார்கள். அப்போது எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அறைக்கு ஒரு டாக்டர் வந்தார். பின்னால் வந்த நர்ஸ் அவர் பெயரைச் சொல்லி, இவர்தான் சர்ஜன் என்றார். மிக எளிமை, அன்பு, திறமை படைத்தவராகத் தோன்றினார். அறுவை சிகிச்சையன்று காலை 4.30 மணிக்கு என் அறைக்கு வந்த நர்ஸ் எனக்கு ஒரு இஞ்செக்ஷன் போடவேண்டுமென்றார். போட்டுக் கொண்ட மறுகணம் என் நினைவு போய்விட்டது. மறுபடி கண்விழித்த போது, அதுவும் அங்கிருந்த நர்ஸ் "கோபாலன் சார் எழுந்திருங்கள். உங்களுக்கு ஆபரேஷன் முடிந்துவிட்டது" என்று பல முறை சொன்னதும் கண்களைத் திறக்க முடியாமல் மிகவும் சிரமத்துடன் அரைகுறையாகக் கண்கள் செறுக விழித்துப் பார்த்தால் ஐ.சி.யு.வில் படுத்திருந்தேன். மார்பிலும் காலிலும் பிளாஸ்டர் ஒட்டபட்ட நிலை. காலடியில் ஒரு நர்ஸ் நின்றுகொண்டு மானிட்டரைப் பார்த்து ஒவ்வொரு நிமிஷமும் குறித்துக் கொண்டிருக்க மற்றொரு நர்ஸ் எனக்கு ஸ்பூனில் எடுத்து பாலை வாயில் ஊட்டிவிட்டு வாய், மூக்கு, வயிறு பகுதிகளில் செறுகியிருந்த குழாய்களை எடுத்துவிட்டு என்னைப் பேசவிட்டு குரல் மாறியிருக்கிறதா என்பதைப் பார்த்து ஒரு குழந்தையைக் கவனிப்பது போல கவனித்துக் கொண்டார்கள். பத்து நாட்கள் தங்கி அந்த மருத்துவ மனையை விட்டு வெளியே வந்தபோது நான் சிகிச்சைக்காக வந்தவனைப் போல் அல்லாமல் ஒரு ஸ்டார் ஓட்டலிலிருந்து வந்தவன் போல் உணர்ந்தேன். என்னை டிஸ்சார்ஜ் ஆகும்போது மருத்துவ மனையைப் பற்றி கருத்துக் கூறச் சொன்னார்கள். நான் சொன்னேன்: "I consider this hospital as temple, Doctors as Gods, and Nurses as Angels."

    ReplyDelete
  34. வைத்தீஸ்வரன் கோவில் கட்டுரையை வெளியிட்ட வாத்தியாருக்கும், படித்துவிட்டு பின்னுட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

    //////////minorwall said...
    நல்ல மருத்துவர்களை சந்தித்ததுதான் அந்த மாய மந்திரம் என்பது சரவணனுக்கு மனதில் படாததாலேதான் நடந்த கதை சம்பந்தமேயில்லாமல் வைத்தீஸ்வரன் கோவில் வரை போகியிருக்கிறது..

    மருத்துவரையே சந்திக்காதிருந்தால் மாயமந்திர அடிப்படையை சிலாகிக்கலாம்.

    மற்றபடி எழுத்து நடை இயல்பாக அமைந்திருந்தது..பாராட்டுக்கள்..
    ///////////////////////

    உடம்பில் இருந்து நீர் பிரியும்போது 5 முதல் 10 என்ற அளவில் வெளியேற வேண்டிய புரோட்டீன், 150 முதல் 170 என்ற அளவில் வெளியாகும் அந்த வியாதிக்கு மருத்துவர்கள் என்னவோ ஒரு பெயர் சொன்னார்கள். அந்த பெயர் என் நினைவில் இல்லை.

    இந்த வியாதிக்கு மருந்து கண்டுபிப்பு என்பது ஆராய்ச்சி அளவில்தான் இருக்கிறது. ஏதாவது ஒரு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை இதற்கான தீர்வு என்று உங்கள் தலையில் கட்ட நான் தயாராக இல்லை என்று கூறி அப்போதைக்கு உடல் வீக்கத்தையும் நீர்பிரியும் பிரச்சனையையும் சரிசெய்ய மட்டும்தான் நான் மருந்து தருகிறேன் என்று டாக்டர் சொன்னார்.

    டாக்டர் மருந்து இல்லை என்று சொன்ன வியாதி அந்தக் குழந்தைக்கு மறுபடி இது நாள் வரை தலைதூக்கவில்லை என்ற விஷயத்தைதான் நமக்கு மீறிய ஒரு சக்தி என்று அதை வைத்தீஸ்வரன் கோவில் வடிவில் நான் பார்த்தேன்.

    புரோட்டீன் எக்கச்சக்கமாக லாஸ் ஆவதை தடுக்க அவர் சொன்ன மாற்று வழி அந்த சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தருவது.

    அதை நண்பர் சரியாக பின்பற்றி வருவதால்தான் இந்த வியாதி பிரச்சனை மறுபடி வரவில்லை என்று நினைக்கிறோம்.

    மிகச்சிறு வயதிலேயே அந்தக் குழந்தைக்கு இருக்கும் அந்த குறைபாடு தெரியவந்தது, அதற்கு சரியான மருத்துவர்களிடம் செல்ல வைத்தது என்று சில விஷயங்கள் எங்களை மீறி தன்னாலேயே நடந்தன. அந்த சம்பவங்கள் நடைபெறுவது இறைவன் சித்தம் என்று நினைக்கிறோம் அவ்வளவுதான்.

    தன்மீது நம்பிக்கை இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை. உடன் ஒருவரின் துணை தேவைப்படும் என்னைப்போன்றவர்களுக்கு இறை நம்பிக்கை.

    நாம் செய்யும் ஒரு செயல் நிச்சயம் சிறப்பாகவே நடந்தேறும். அதற்கு கடவுள் துணை புரிவார் என்ற நம்பிக்கையுடன் செயல்களை செய்கிறோம். லாட்டரி டிக்கட்டே வாங்காமல் இறைவனிடம் லாட்டரி சீட்டில் பரிசு வாங்கித்தர சொல்லி வேண்டுதல் செய்வது அபத்தமானது அல்லவா.

    ஒரு வாதத்துக்கு கோயிலில் இருக்கும் சாமிக்கு எந்த சக்தியும் இல்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அந்த சாமி நம்மளை பார்த்துக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் பாசிட்டிவ் எனர்ஜியுடன் ஒரு காரியத்தை செய்தால் அது வெற்றி பெறும் சதவீதம் கூடும் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு.

    minorwall said... சொன்னதுபோல் நல்ல மருத்துவர்களை சந்தித்ததால்தான் குழந்தையின் சிக்கல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்று வைத்துக்கொண்டாலும் அந்த மருத்துவர்களை சந்திக்கவைத்தது இறைவன் சித்தம் என்று நாங்கள் நம்புகிறோம்.

    ReplyDelete
  35. என் இரு ஆக்கத்தையும் வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  36. பார்வதி அவர்கள் தன் மருத்துவமனை அனுபவங்கள் எனும் போது மாத்திரை சாப்பிட்டது வாந்தி எடுத்தது போன்றவை இருக்கும் எனனினைத்தேன். ஆனால் பாக்யரரஜ் படம் பார்த்தது மாதிரி காட்சியும் இடை சொருகலாக வரும் உதாரன வார்த்தைகளும் இருந்தன. சாதாரன செய்தியை இப்படி கலகலப்பாக எழுத முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. உங்களின் எழுத்து நடைக்கு ஒரு சல்யூட்.

    இறைவன் அருளால் இதுவரை மருத்துவமனை வாசம் என்பது எனக்கு இருந்தது இல்லை. வழக்கமான முழு உடல் பரிசோதனைக்கு கம்பெனி அனுப்புவதோடு சரி. அதிலும் இதுவரை எதற்கும் மருந்து மாத்திரை சாப்பிட்டதில்லை .

    தூங்கியதால் ஆபரேஷன் தியேட்டருக்கு போனது பரவாய்ல்லை , சிலரை மார்சுவரிக்கும், சுடுகாட்டுக்குமே அனுப்பிவிடுகிறார்கள். சென்ற மாதமும் ஒரு செய்தி தினமலரில் படித்தேன். நீங்கள் அடுத்த முறை போகும் போது ஜாக்கிரதையாக இருக்கவும்.

    ReplyDelete
  37. //அந்த சாமி நம்மளை பார்த்துக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் பாசிட்டிவ் எனர்ஜியுடன் ஒரு காரியத்தை செய்தால் அது வெற்றி பெறும் சதவீதம் கூடும் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு.

    minorwall said... சொன்னதுபோல் நல்ல மருத்துவர்களை சந்தித்ததால்தான் குழந்தையின் சிக்கல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்று வைத்துக்கொண்டாலும் அந்த மருத்துவர்களை சந்திக்கவைத்தது இறைவன் சித்தம் என்று நாங்கள் நம்புகிறோம்.//

    ஆம் நானும் அவ்வாறு நம்புகிறேன்.

    இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டென்டன் கூலியிடம் ஓர் இதய சர்ஜ‌ரி செய்து கொண்டவரின் நேரடியான அனுபவம், ஒவ்வொரு சர்ஜ‌ரி முடிந்தவுடனும்
    பிரார்த்தனை செய்வாராம் அந்த டாகடர்.

    ReplyDelete
  38. என் ஓவியத்தினை வெளியிட்ட வாத்தியாருக்கு நன்றி. ரசித்தவர்களுக்கும், கருத்து சொல்ல நேரம் எடுத்துக் கொண்டவர்களுக்கும் நன்றி.
    இது முன்பு வெளிவந்த கதகளி ஓவியத்தை வரைந்த காலத்தில் வரைந்ததுதான். அதே பெய்ண்ட் கம்பெனி விளம்பரத்தின் மற்றொரு அறிமுகம். இதைத்தொடர்ந்து மணிப்புரி நடனமும் வந்தது. அதையும் வரைந்துள்ளேன். அதை மற்றொருமுறை வார மலருக்கு அனுப்ப உள்ளேன்.

    அய்யர் ஐயா ஓடி see = ஒடிஸி நடனப்பெண்ணை ஓடிப்போய் பார் என்கிறார் :))) சரிதானா?
    ____________
    பார்வதியின் நகைச்சுவை எழுத்துநடை மிகவும் பிடித்தது. இதுபோன்று நகைச்சுவைப் படைப்புகளையும் அதிகமாகத் தருமாறு பார்வதியைக் கேட்டுக் கொள்கிறேன். அறுவை சிகிச்சை என்றதும் கலக்கமடையும் பலருக்கு உங்கள் படைப்பு நம்பிக்கையைத் தரும்.

    ஆறுதல் கூற ஆள் இருந்தால், குறைகளைக் காது கொடுத்துக் கேட்டு மனச் சுமையைக் குறைக்க வழி செய்தால் வயதானர்வளுக்கும் நோயாளிகாளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். இறுதி காலத்தில் மலேஷியா வாசுதேவன் அவர்கள் தன்னை அனைவரும் தவிர்த்ததை சொல்லி வருந்தியது இந்தப் பதிவு நினைவிற்கு கொண்டு வந்தது.
    ____________
    KMRK ஐயாவின் தகவல் பகிர்வு நாட்டின் பொருளாதாரத்திற்கு நம்மால் செய்யமுடியும் ஒரு செயலை நினைவிற்கு கொண்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கும் அது நன்மையைத் தரும், விபத்துகளைக் குறைக்கும், நம் தனிப்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்தும், உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும், எரிபொருளை வேறு ஆக்கபூர்வமான செயல்களுக்கு உபயோகித்து உற்பத்தியையும் பெருக்க உதவும், உண்மைதான்..உண்மைதான் ஆனால் நடைமுறையில் நம்மால் வசதிக்குத்தான் முன்னுரிமை கொடுக்க முடிகிறது.
    ____________
    இது என்ன சிறுபிள்ளைத் தனமா இருக்கு? இரு ...இரு வாத்தியார்ட்ட சொல்றேன்னு மிரட்டுகிறாள் இந்தப் பெண்!!
    "கடைசி மாமன் பெண்குட்டி
    என்னைவிட சிறுகுட்டி-அவள்
    மூனுமாசம் முன்னாடி
    முடிஞ்சிதய்யா வளைகாப்பு!" என்ற வரிகள் ...

    "ஐயராத்து பொண்ணு சொன்னா கேட்டுக்கோடா அம்பி
    ஆத்துக்காரியா என்ன ஏத்துக்கோடா நம்பி
    எதுத்தாது ஏகாம்புஜம் ஏழெட்டு மாசம்
    பக்கத்தாத்து பத்மாவுக்கு சீமந்தம் போனமாசம்
    கோடியாத்து கோமளாவுக்கு கல்யாணம் அடுத்த மாசம்
    நேக்குந்தான் வயசாச்சுடா எப்போ நம்ம ஜானவாசம் "

    என்ற பழைய பாடலை நினைவிற்கு கொண்டு வந்தது. இணையத்தில் எங்கேயும் தேடி இந்தப் பாடல் கிடைக்கவில்லை. நான் விவரம் தெரியாத அரைடிக்கெட் வயதில் இந்தப்படலைப் பாடிக்கொண்டிருப்பேன், அந்த நினைவில் இருந்து எழுதுகிறேன். ஏ. வி. ரமணனும் அவர் திருமணம் செய்து கொண்ட உமாவும், அவர்கள் திருமணத்திற்கு முன்னே இணைந்து மெல்லிசைப்பாடல்கள் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த பொழுது அவர்களைப் பாடச் சொல்லி ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தார்களாம். உமாவுக்கு அந்தப் பாட்டு தெரியாது அவர் முதலியாராத்து பொண்ணு என்று ரமணன் நகைச்சுவையாக மறுத்ததாக குமுதத்தில் ஒரு துணுக்கு வெளியாகி இருந்தது. ஆனால் தான் மணக்கப்போகும் பெண் உமா உண்மையிலேயே ஒரு அய்யராத்துப் பெண் என்று ரமணனுக்கு தெரிந்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். (பின்குறிப்பு: வேண்டுகோள், இது தனுசுவின் பாடலைப் பார்த்து நினைவிற்கு வந்த சுவையான தகவல் ஒன்றினைப் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. இதை ஜாதிப் பிரச்னை கண்ணோட்டத்தில் அணுக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கருத்தினால் எரிச்சலடைந்தால் என் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக எழுதவும், வகுப்பறையில் தேவையில்லாமல் விவாதத்தைத் தவிர்க்க வழி ஏற்படும், நன்றி)
    ......................................
    "சாவே உனக்கு ஒரு சாவு வராதா" என்று எழுதிய கண்ணதாசனின் பாணியில் ஆரம்பித்து சாலை விதிகளை மதிப்போம் என்ற தனுசுவின் பாடல் நல்ல சமுதாய உணர்வுடன் எழுதப்பட்டுள்ளது. தனுசுவின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடிப்பது அனைவரையும் எளிதில் சென்று அடையும் வரிகளின் எளிமை. அதனால் அவர் சொல்லவரும் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. இரண்டு பாடல்களும் அதை வழக்கம் போலத் தருகிறது. நன்றி.

    ReplyDelete
  39. சரணின் கட்டுரை நன்றாக இருந்தது. அமைதியாக இருப்பவர்கள் ஒவ்வொருவராக பதிவில் தாங்கள் படித்ததற்கு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியைத் தருகிறது. சரண் சுவைபட எளிய வரிகளில் கொடுத்துள்ளார். அவருக்கு நன்றியும் பாராட்டும் வாழ்த்துக்களும். இதுபோன்று ஒவ்வொருவராக எழுத்துலகிற்கு அறிமுகப் படுத்தும் வாத்தியாரின் பணியையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
    ____________
    புவனேஷ்வரின் கோபியர் கொஞ்சும் ரமணனின் மரபுப் பாடல் நன்றாக இருந்தது. இப்படி பல பெண்கள் ஒரு ஆணைத் துரத்திப் பாடினால் நடைமுறையில் இப்பொழுது திட்டுதான் விழும்.
    இது போன்று நிறைய பாடல்கள் எழுதுங்கள் அடுத்த மார்கழி இசை நிகழ்ச்சிகளில் பாடுபவர்களின் கவனத்தில் அது சென்றடைந்தால் நல்லது. வீணை வகுப்பில் தெலுகு கீர்த்தனைகளுடன் என் மனம் ஒன்றியதில்லை. அதனால் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடல்தான் நான் வாசித்த பாடல்களில் மிகவும் பிடித்தது. மற்ற பாடல்கள் இசையில் ஆர்வத்தைக் குறைத்தது என்றும் சொல்லலாம்.

    எதையும் அனுபவிப்பவர்கள் நிலையில் இருந்து காரணம் சுலபமாகப் புரியும். படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு இரட்டைப் பின்னலிடும் காரணம் வசதிக்காகத்தான். மல்லாக்கவே படுக்க வைப்பதால் தலையணையில் படுக்க வசதியாக இருக்கும். முடியும் உடலுக்கு அடியில் மாட்டிக்கொண்டு தொந்தரவு கொடுக்காது, தளர்வாக பின்னுவதால் அதனால் தலைவலியும் குறையும். வயதாக வயதாக நாளமில்லாசுரப்பிகள் முடி அடர்த்தியைக் குறைத்துவிடுகிறது. பின்பு இரட்டைப்பின்னல் எலிவால் போல் தெரிவதால் ஒற்றைபின்னலுக்கு மாறுவதும், அதுவும் எலிவால் போன்று ஆனால் கொண்டைக்கு போவதும் தேவையாகிறது. இந்திராகாந்தி போன்ற முடியலங்காரம் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படாது. நிறைய நேரமும் மிச்சமாகும். (பெண்கள் கவனிக்க :-) இந்த செய்தி உங்களுக்கு உதவும், தினம் தினம் லாரியை முடியால் கட்டி இழுக்கும் நிர்பந்தம் நமக்கில்லை)
    ____________
    புள்ளிவிவரச் செய்திகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் ஆனந்தமுருகனின் துணுக்கு மிகவும் பிடித்தது. ஆராய்ச்சி முடிவுகளுக்கு ஆதாரம் யாரோ?
    ____________
    சபரி கூடிய விரைவில் அலாஸ்கா மாநில காவல்துறையினரிடம் இருந்து மான நஷ்ட வழக்கை எதிர்பார்க்கலாம் :-)

    ReplyDelete
  40. //இதை ஜாதிப் பிரச்னை கண்ணோட்டத்தில் அணுக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கருத்தினால் எரிச்சலடைந்தால் என் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக எழுதவும், வகுப்பறையில் தேவையில்லாமல் விவாதத்தைத் தவிர்க்க வழி ஏற்படும்,//

    இதுதான் விவாதத்தைத் துவக்குவதற்காகவே போடப் பட்ட தூண்டில்.
    இந்த விளக்கம் இல்லாமல் இருந்து யாராவது துவக்கியிருந்தால் அப்போது இதைச் சொல்லி இருக்க வேண்டும்.

    எல்லாவிதமான வாழ்க்கையில் தவிர்க்க வேண்டிய ஒழுங்கீனங்களையும் திரைப்படத்தில் காட்டிவிட்டு , ஹீரோ தன் கைகளால் முகத்தைப் பொத்திக் கொள்ளும் காட்சியையும் காட்டித் தப்பித்துக் கொள்ளும் சாமர்த்தியம் இது.

    ReplyDelete
  41. தஞ்சாவூரார் கோபாலன்ஜி அவர்களுடைய மீண்டும் வகுப்பறை விஜயம் மகிழ்ச்சி அளிக்கிறது. 'வெளிர் ஓட்டு ஓட்டுதல்' என்பது ஒரு தஞ்சை மாவட்டப் பிரயோகம். அதற்கான சரியான விளக்கம் தஞ்சாவூராரும் ஏனையோரும் அளித்தால் நன்றியுடையவன் ஆவேன்.

    ReplyDelete
  42. தனுசு அவர்கள், தேமொழி அவர்களின் பாராட்டுக்களுக்கு நன்றி.

    என் சிறிய வயதில், எங்களைப் பார்த்துக் கொண்ட பெண்மணி, நான் வெளியில் செல்லும் போது, 'பாத்துக் கோளாறா போய்ட்டுவா ஆத்தா' என்று வழியனுப்புவார். மதுரை வட்டாரவழக்கில் அதற்குக் 'கவனமாகப் போய்வா' என்று அர்த்தம். 'கோளாறு' என்பதன் ஒரிஜினல் அர்த்தம் புரியாமல் அவர் சொன்னாலும் அதன் பின்னிருக்கும் அக்கறையைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். அதைப்போலவே, தனுசுஅவர்களின் பின்னூட்டத்தின் கடைசி வரி, அவருக்கு என் மீதிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. உங்கள் அன்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே!!!!.

    ReplyDelete
  43. இனைய தொடர்பு பிரச்சினையால் இன்று தொடரந்து வகுப்புக்கு வரமுடியவில்லை.

    மீண்டும் வந்த கிருஷ்னன் அவர்களுக்கு நன்றிகள்.நான் வகுப்பறைக்கு வரும் முன் அதிகம் பார்ப்பது அரசியல் செய்திகள் மட்டுமே.இங்கு வந்த பின் தான் கட்டுரை படிப்பது ,கதை என்று கவனம் திரும்பியது.நான் எழுத ஆரம்பித்த போது உங்களின் தாக்கம் எனக்கு வந்தது. நீங்கள் எழுதுவதில் ஸ்வாரஸ்யத்துக்கு சேர்க்கும் சொலவடை வார்தைகள் எனக்கு பிடிக்கும். அந்த வகையில் வந்ததுதான் இன்று என் ஆக்கத்தில் வந்த சந்தணமும் சமையலும்.

    எழுத வந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.

    ReplyDelete
  44. சரனின் வைதீஸ்வர வைத்தியன்,

    பிரார்த்தனை பலிக்கும் என்பது எனது நம்பிக்கை.

    மைனர் அவர்கள் சொன்னதுதான் முத்தாய்ப்பு.
    "அந்த மருத்துவர்களை சந்திக்கவைத்தது இறைவன் சித்தம்"

    ReplyDelete
  45. புவனேஷ்வரின் பக்தி, கவிதையில் தெரிகிறது. எனக்கும் ஆசையாகத்தான் இருக்கு இப்படி ஒரு மரபு கவிதை எழுத ஆனால் உமா அவர்களின் பானியில் சொன்னால், வாயை திறந்தால் காற்று தான் வருகிறது.

    நன்றி புவனேஷ்வர்.

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. மதிப்பிற்குரிய கிருஷ்ணன் ஐயா ராகம்/ஸ்வரம் நானே குறிப்பிடுவது பற்றி சொன்னது பற்றி நானும் நினைத்தேன்.

    இதை பற்றி முன்னொரு நாள் சில ஆண்டுகளுக்கு முன்னர் எனதுஅம்மாவிடம் நான் பேசிய போது, "அதையும் நீயே போடாதே, படிக்கிறவர்கள் விருப்பத்துக்கு விட்டு விடு, சந்தம் மட்டும் பொருந்தி வருமாறு மீட்டர் தப்பாமல் எழுது, அவரவர்களே ட்யூன் போட்டுக்கொள்வார்கள்" என்றார். நல்ல அறிவுரை என்று அன்று முதல் நல்ல பிள்ளையாக அப்படியே நடந்து வருகிறேன்.

    -----

    மதிப்பிற்குரிய மூத்த ஐயா தஞ்சை பெரியவர் பாராட்டுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். உங்களை போன்ற பெரியோரின் ஆசியால் மேலும் பல படைக்க விழைகிறேன்.

    -----

    சகோதரி தேமொழியின் பாராட்டுக்கு நன்றி.
    தமிழில் பாடுவது தனி சுவை தான். மொழி தெரிந்து தெலுங்கில் பாடினால் அதுவும் சுவை தான் என்றாலும் நம்மவர்கள் இன்னும் கொஞ்சம் தமிழ் கீர்த்தனங்களை பாடினால் தேவலை என்று நானும் நினைப்பது நிஜம். எப்போதுமே தெலுங்கு கீர்த்தனங்களை மட்டுமே நம்மவர்களே பாடுவது கொஞ்சம் வருத்தம் தான். இப்பொழுது மாற்றம் நடக்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம். புதிய பாடகர்கள் தமிழ் கீர்த்தனங்களையும் விடாமல் பாடுகிறார்கள்.

    லௌகிகமாக பார்த்தல் பல பெண்கள் ஒரு ஆடவனை காதலிப்பது திட்டு வாங்கி தரும் தான் எனினும் பக்தி மார்க்கத்தில் அது தவறில்லை. பதினாறாயிரத்து எட்டு தேவியருக்கும் ஒவ்வொருவருக்கு பிரத்தியேகமான திருவுருவோடு எம்பெருமான் அருள் புரிந்த கருணை வள்ளல். காதல் கொள்ள இறைவனை விட தகுதியான ஆசாமி யார்?

    மேலும் இன்றைய விளம்பரங்களில் பல பெண்கள் ஒரு நறுமண (??) திரவியத்தால்/உள்ளாடையால்/வாய் நறுமணம் தரும் மாத்திரையால்/சவரக்களிம்பால் ஒரு ஆடவனை சுற்றி வருவதாக காண்பிப்பதை பார்த்து ஒன்றும் சொல்லாத நமது தமிழ்ச்சாதி இந்த கவிதையை என்ன சொல்லி விடும்?

    உங்கள் கருத்துகளை தந்தமைக்கு நன்றி.

    -----

    அன்பு சகோதரர் தனுசு அவர்களின் பாராட்டுக்கு நன்றிகள்.
    அவர் எழுதுவது போல vibrant ஆக புதுக்கவிதைகள் எழுத முயன்றாலும் எனக்கு வருவதில்லை.

    இது தான் இறைவனின் படைப்பில் உள்ள அழகு பாருங்கள். உங்கள் ஸ்டைல் எனக்கும் என் ஸ்டைல் உங்களுக்கு பிடித்து இருக்கிறது. இருவருமே ஒருவர் படைப்பை மற்றோவர் ரசித்து மகிழ்கிறோம் இல்லையா.....

    வாழ்த்துக்கள் சகோ......

    -----

    பார்வதி அவர்கள் சொன்னது:
    //உள்ளூரில் மிக அதிக தூரமான இடங்களுக்குச் செல்லும் போது பஸ்ஸில் செல்வதே என் வழக்கம். பெட்ரோலை மிச்சப்படுத்துவதோடு, பயணக் களைப்பும் தெரியாது//. அது மட்டும் இல்லை, நம்ம பெங்களூர் சாலைகளில் பத்திரமாக பேருந்தில் போவது நல்லது. BMTC முன் போல இல்லை. நன்றாகவே உள்ளது. வோல்வோ பஸ்கள் வந்த பின்னர் சாலை நெரிசல்கள் கொடுமை. வோல்வோ பஸ் மட்டும் விட்டால் போதாது. அதற்கேற்ற சாலைகளும் வேண்டும் என என்று "நம்ம பெங்களூரு" மேலிடம் உணருமோ.

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத நகைச்சுவை ரிச்மன்ட் பாலத்தின் மேல் ஒரு போலீஸ் காரர் நின்று வாகன நெரிசலை கட்டுப்படுத்திய காட்சி. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னாள் கல்லூரி மேல் தளத்தில் நின்று அதைப்பார்த்த போது நானும் சக நண்பர்களும் விழுந்து விழுந்து சிரித்தது இன்னும் நினைவில் உள்ளது.

    My humble gratitude to all good hearts here.
    ---

    Bhuvaneshwar D
    www.bhuvaneshwar.com

    ReplyDelete
  48. தேமொழியின் ஓவியம் எப்போதும் பச்சை வண்ணத்தில் இருப்பத்ற்கு காரனம் ஏதும் உள்ளதா.


    பகலில் வந்த பௌர்னமியே
    நீ
    ஆடி வந்தது ஒடிசி என்கிறார்கள்
    எனக்கு
    இந்த ஒடிசி தெரியாது
    புரட்டாசியும் தெரியாது.
    தெரிந்ததெல்லாம்
    பொன்மகள் நீ
    பூ லோகம் இருப்பதும்
    உனைக்கொண்டாட
    நான்
    மஞ்சத்தில்
    பூக்கோலம் தெளிப்பது மட்டுமே.

    ReplyDelete
  49. ஆனந்தமுருகன் பதித்த படங்களில் 9 வது படத்துக்கு தேவையான வாசகம் 10 வது படத்தில் இருக்கிறது.

    அந்த படத்தை பார்த்ததும் பல கம்மாண்ட்ஸ் வந்தது.
    1) கூச்சல் கத்தல் உள்ள சபையிலேயே இந்த தூக்கம் என்றால் அமைதியான அந்த ஜனாதிபதி மாளிகையில் எவ்வளோ... தூக்கம் தூங்குவார்.

    2) ரப்பர் ஸ்டாம்ப் செய்வதற்கு இந்தியாவில்தான் அதிகம் செலவாகிறதாம்

    ReplyDelete
  50. அய்யர் said...மேம்பாலம் பற்றி எழுதுங்கள்..

    எழுதிட்டா போச்சு .நன்றி அய்யர் அவர்களே

    ReplyDelete
  51. Bhuvaneshwar said...தனுசு அவர்களின் கவிதைகள் இரண்டும் அழகாக இருந்தன. முதல் கவிதை கிராமிய பாங்குடன் இருந்தது.

    நன்றி புவனேஸ்வர்

    ReplyDelete
  52. kmr.krishnan said..அப்போ சீக்கிரமாகவே இந்தியாவை மக்கட்த்தொகையில் முதல் நாடு என்ற இலக்கை எட்ட வைக்க உத்தேசமோ?

    நாடென்ன செய்தது நமக்கு-என
    கேள்விகள் கேட்பது எதற்கு
    நீ என்ன செய்தாய் அதற்கு
    என நினைத்தால் நன்மை உனக்கு (தலைவர் படப்பாடல்)

    இந்தியா முதலிடம் பெற நம்மால் ஆன காரியம் இதுதான் என்றால் செய்துட்டா போச்சு

    ReplyDelete
  53. //லௌகிகமாக பார்த்தல் பல பெண்கள் ஒரு ஆடவனை காதலிப்பது திட்டு வாங்கி தரும் தான் எனினும் பக்தி மார்க்கத்தில் அது தவறில்லை.//

    நமது நாட்டில் பண்டித ஜவஹர்லாலுக்கும், புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கும் அந்தக் கவர்ச்சி இருந்தது.எழுத்தாளர் ஜெயகாந்தன் எம் ஜி ஆரை ரிக்ஷாகாரர்களின் மனைவிமார்களின் ஆதர்ச ஆணாக சித்தரித்து 'சினிமாவுக்குப்போன சித்தாளு' என்ற தொடர் எழுதினார்.(என் மனதிலிருந்து ஜெயகாந்தனின் லட்சிய புருஷர் இமேஜை விலக்க வைத்த கதை அது)
    நாம் காணவே இப்படி கவர்ச்சி இருந்த ஆண்கள் இருந்துள்ளனர். தியாகராஜ பாகவதருடன் ஒரு முறை பேசியாவதுவிட வேண்டும் என்ற ஆசையுடைய பெண்கள் நிறையப் பேர் இருந்துள்ளனர்.

    பக்தி பாவத்தில் ஜீவாத்மாக்களில் ஆண் பெண் பேதம் இல்லை.பரமாத்மா ஒருவனே மகாபுருஷர். நாம் அனைவரும் பெண்களே.எனவே இப்படியான இறைவன் மேல் காதல் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் கொள்ளலாம்.

    ReplyDelete
  54. Parvathy Ramachandran said..
    ///உங்கள் வார்த்தை ஆளுமை எப்போதும் அருமை.......////

    தாங்களின் நீண்ட பாராட்டுக்கு மிக்க நன்றிகள் பார்வதி.இரண்டாவது கவிதை மதிப்ர்குரிய உமா அவர்கள் பார்த்த ஒரு சாலை விபத்துக்காகவே எழுதியதுதான் .

    அஜித்தை பார்த்த போது என் நினைவு வந்ததற்கு , நன்றி. அஜித்தைப்ப்றி நான் சொன்னதற்கு காரணம் என் இரண்டாவது மகள் அஜித் விசிறி,பெரிய பெண் விஜய் விசிறி. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும் . அஜித் அழகு அதைவிட அவரின் சிரிப்பு அழகு , சினிமாவில் MGR அவர்களின் சிரிப்பு அத்தனை அழகு,அத்தனை கவர்ச்சி,அத்தனை ஈர்ப்பு தலைவருக்கு அடுத்து அஜித் அதனால் தான் அஜித்தை சொன்னேன்

    ReplyDelete
  55. minorwall said...இப்படி எனைக் கவர்ந்த ஒரு அழகை சிறந்த கவிதையாக வடித்த தனுசுவின் கருணைக்கு எல்லையே இல்லை..புல்லரித்துப் போனது..வாழ்த்துக்கள்..

    ரசித்து பாராட்டிய மைனருக்கு நன்றிகள்

    ReplyDelete
  56. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. Thanjavooraan said...தனுசு இப்போது முதுகலை பட்டத்துக்குப் பின் முனைவர் பட்ட ஆய்வாளராகிவிட்டார் போல் தோன்றுகிறது, வளமான, சுவையான, வேகமான கவிதைகளை அள்ளித் தருகிறார்.

    நன்றிகள் அய்யா .அனைத்தும் தாங்களின் ஆசிர்வாதம் .நான் வகுப்பறையில் அதிகம் எதிர்பார்ப்பது உங்களின் பின்னூட்டம் ,சென்ற வாரம் நம் KMRK அவர்களுக்காக எழுதிய பொது உங்களின் பின்னூட்டத்தை அதிகம் எதிர் பார்த்தேன் .

    சென்ற மாதம் தாங்களை சந்திக்க முயற்சித்து முடியாமல் (எனக்கு நேரம் இல்லாததால்) வந்தது எனக்கு வருத்தம் தந்தது. அதைவிட என் நண்பர்களும் தாங்களை சந்திக்க முடியாமல் போனதில் வருத்தப்பட்டார்கள் .

    மிக்க நன்றிகள் அய்யா

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  61. தேமொழி said...தனுசுவின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடிப்பது அனைவரையும் எளிதில் சென்று அடையும் வரிகளின் எளிமை. அதனால் அவர் சொல்லவரும் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்துகிறது

    நன்றி தேமொழி . மனம் நிறைந்த பாராட்டுக்கு மகிழ்ச்சி , நீண்ட பின்னூட்டமிட்டு மேலும் மேலும் நல்ல கவிதைகள் வர கைதட்டும் உங்களுக்கு மீண்டும் நன்றிகள் .

    ReplyDelete
  62. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  63. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  64. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  65. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  66. பதிவிற்கு சம்பந்தம் இல்லாத, சர்ச்சையை, வாதங்களை உருவாக்கும் கருத்துக்களைக் கொண்ட பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. (மொத்தம் 6)

    இது வகுப்பறை. விவாத மேடை அல்ல! பட்டிமன்றமும் இங்கே நடைபெறவில்லை. ஆகவே வாத்தியாருக்கும், சக மாணவர்களுக்கும் ஏற்படும் மன உளைச்சலைக் கவனத்தில் கொண்டு பின்னூட்டங்களை இடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    உங்கள் ஒத்துழைப்பு இன்றி வகுப்பறையைத் தொடர்ந்து நடத்துவது சிரமம். அனைவரும் அதை மனதில் கொள்க!

    வாத்தியார் உட்பட வகுப்பறையில் உள்ள அனைவரும் சமமானவர்களே!

    என்னைவிட வயதிலும், கல்வி அறிவிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் பலர் இங்கே உள்ளார்கள். வாதம் செய்து அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள்.

    என்றும் அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  67. Well, when the sheet is balanced, I opine that Vaathiyaar has done the right thing by intervening.

    Not the one to back away from a provocative confrontation and flinch, I got myself into an unnecessary tangle, a right pickle.

    My apologies to any one whose feelings or sentiments I might have hurt, albeit rather inadvertently.

    Thanks.

    Bhuvaneshwar D

    ReplyDelete
  68. பார்வதி அம்மாவுக்கு , நீங்கள் மங்கையர் மலரில் எழுதியதை பள்ளி பருவத்திலேய படித்திருக்கிறேன். என் அம்மா உங்கள் தொடர் கட்டுரையை என்னிடம் படிக்கச் சொல்லி அறிமுகம் செய்தார். அந்த நாட்களில் tonsils ஆபரேஷன் கு நான் பயந்த போது உங்கள் கட்டுரை ரொம்ப உதவியாய் இருந்தது. பல வருடங்கள் கழித்து அதே நடையில் படிக்கும் போது நிறைய சந்தோசம். என் அப்பாவுக்கு இப்போதுதான் இரண்டு அறுவை சகிச்சை நடந்து உள்ளது. Open heart bypass and laproscopic for kidney stones.
    நிறைய கவலைகளை சுமந்து கொண்டு இருக்கும் வேளையில் பெரியவர்கள் நீங்கள் , வாத்தியார் அய்யா போன்றவர்கள் சொல்லும் வார்த்தைகள் நிறைய ஆறுதல் தருகிறது. மன இறுக்கத்தை குறைக்கிறது. நான் இன்னும் சிறு தினங்களில் இந்தியாவுக்கு வருகிறேன். அப்பாவை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிறது. என் இரண்டாவது மகன் பிறந்து இப்பொழுதுதான் அப்பாவிடம் காட்ட எடுத்து வருகிறேன். நிறைய நெகிழ்ச்சியுடன் இந்த கட்டுரையை தந்த உங்களுக்கும் , அய்யாவுக்கும் என் வணக்கங்கள்.

    மற்ற வகுப்பறை தோழர்களுக்கும் , தோழிகளுக்கும் பின்னோட்டம் எழுத முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். அவசரமாக கிளம்புவதால் (நாங்கள் இந்த வருட கடைசியில் கிளம்பலாம் என்றிருந்தோம்) தமிழில் தட்டச்சு செய்து பின்னோட்டம் இட முடியவில்லை. மேலும் பல பாடங்களை ஒரே நாளில் படிப்பதாலும் அப்போபோ எழுத முடியவில்லை. எல்லாம் சரிவர இன்னும் ஒறிரு மாதங்கள் ஆகலாம் என்று நினைகிறேன். வகுப்பு தோழர்களுக்கு ஒரு அன்பான மற்றும் உரிமையான வேண்டுகோள், உங்கள் பிரார்த்தனையில் என் அப்பா விரைவில் குணமாகிடவும் வேண்டி கொள்ளுங்கள். மருத்துவ ரீதியாக அவர் உடம்பில் ஏதும் இல்லை என்று மருத்துவர் சொல்லி விட்டார்கள். ஆனால் நிறைய பயந்து போய் உள்ளார். கூட உள்ளவர்கள் நிறைய தெம்பு தந்து கொண்டு இருக்கிறார்கள். இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறோம்.

    வாத்தியார் அய்யாவுக்கு நன்றி. பண முகதோரை அறிமுகம் செய்து அவர்களுக்கு ஒருவரையொருவர் connect செய்து கொள்ள ஒரு பாலமாக இருக்கிறீர்கள் அல்லவா அதற்கும் , எப்போதும் உங்கள் positive thoughts மற்றும் positive vibration கும். கலை சியாட்டல்

    ReplyDelete
  69. திருமதி கலையரசி அவர்களுக்கு,

    என் கட்டுரை குறித்த தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. ஆனால், நீங்கள் குறிப்பிட்ட‌
    'மங்கையர் மலர்' தொடர் கட்டுரையை எழுதியவர் நானல்ல. நானும் அந்தக் கட்டுரையை என் சிறு வயதில் படித்திருக்கிறேன். நான் கடந்த சில வருடங்களாகத் தான் எழுதி வருகிறேன்.

    தங்கள் தந்தை விரைவில் உடல் நலம் பெற நிச்சயம் பிரார்த்தனை செய்கிறேன். தாயகம் திரும்பும் தங்களின் கவலைகள் விரைவில் நீங்கவும் நிச்சயம் இறைவன் அருளுவார். தங்களுக்கு மீண்டும் என் நன்றி.

    ReplyDelete
  70. மருத்துவமனை அனுபவங்களை நகைச்சுவையுடன் எழுதுவதற்கும் ஒரு ரசனை வேண்டும், கிரேட் பார்வதி! இதுபோல் எவ்வளவு படித்தாலும் எனக்கு ஆபரேஷன் என்றாலே ரொம்ப பயம். கத்தியின்றி, ரத்தமின்றி வாழ்க்கை முடிந்துவிடவேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்!!!! மாமியாரை ஒவ்வொருமுறை ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போதும், மற்றும் எனக்கு செக் அப்புக்குப் போகும்போதும் டாக்டரை குடைந்து குடைந்து கேள்விகள் கேட்பது வழக்கம். ஒரு டாக்டர் பதில் சொல்ல எரிச்சல் காட்டுவார் என்பது போல் தோன்றினால் டாக்டரையே மாற்றிவிடுவேன்.

    ReplyDelete
  71. பெட்ரோலைச் சேமிப்பது குறித்து கிருஷ்ணன் சார் பகிர்ந்த மின்னஞ்சல் அருமை! முயற்சிக்கலாம்.

    இதில் முக்கியப் பங்கு டெல்லி உமாஜிக்குத்தான். என் ஆக்கங்களில் பலவற்றை நினைவு கூர்ந்து எழுதியிருந்தார்.//
    நன்றி! அதில் சொலவடைகள் விட்டுப்போய்விட்டது, அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!!

    தேமொழியின் இரண்டு ஓவியங்களும் அருமை, இருப்பினும் அதிகம் கவர்ந்தது இரண்டாவது ஓவியமே!

    தனுசுவின் இரண்டு கவிதைகளும் சுபெர்ப். இரண்டாவது கவிதை அதிகம் பிடித்திருந்தது. சாலை விதிகளை மதிப்போம்!

    ReplyDelete
  72. சரவணன் எழுதிய உண்மைக்கதை மனைதை நெகிழ்த்தியது.

    புவநேஸ்வரின் கவிதை, ஆனந்தமுருகனின் நகைச்சுவைப் பகிர்வு எல்லாமே அருமை.

    இப்படித் தூங்குகிறவர் ஜனாதிபதி ஆனால் .................. வெளங்கிரும்!!!!!!

    ReplyDelete
  73. உண்மையில், உமாஜியின் அசாத்திய நினைவாற்றலையும் எதையும் கூர்ந்து கவனிக்கும் திறனையும் பல முறை வியந்திருக்கிறேன்.//

    அசாத்திய நினைவாற்றல் என்று எல்லாம் இல்லை, எனக்குப்பிடித்த விஷயங்களை, நபர்களை மறக்கமாட்டேன், ஆர்வமில்லாத விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வதில்லை. இன்னும் சொன்னால் என் வீட்டில் இருக்கும் பாத்திரங்களே மறந்துவிடும், என் அம்மா வரும்போது பார்த்துக் கேட்டால்தான் உண்டு. நேத்து போன ரூட் உனக்கு இன்னிக்கு மறந்துடும் என்பது என் கணவர் அடிக்கடி அடிக்கும் கமெண்ட்.

    ReplyDelete
  74. முதல் கவிதைக்கு மேலிடம் நாளை வந்து 'வாட் மேட்டரு' எனக் கேள்வி போடக் கேட்டுக்கொள்கிறேன்)//

    வாட் மேட்டரு தனுசு?

    ReplyDelete
  75. இரண்டாவது கவிதை மதிப்ர்குரிய உமா அவர்கள் பார்த்த ஒரு சாலை விபத்துக்காகவே எழுதியதுதான் .//

    தனுசு, இரண்டு வரிகள் படித்ததுமே நினைத்து உங்களிடம் கேட்க நினைத்தேன், நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஆமா இந்த 'மதிப்பிற்குரிய'ன்னு ஒரு வார்த்தை எக்ஸ்ட்ராவா டைப் செய்ய கஷ்டமா இல்லை உங்களுக்கு??

    ReplyDelete
  76. கலை, உங்கள் தந்தை விரைவில் குணமடைய நானும் வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  77. கலையரசி said...
    வகுப்பு தோழர்களுக்கு ஒரு அன்பான மற்றும் உரிமையான வேண்டுகோள், உங்கள் பிரார்த்தனையில் என் அப்பா விரைவில் குணமாகிடவும் வேண்டி கொள்ளுங்கள்.

    நான் இறை நம்பிக்கை அதிகம் உள்ளவன். பிரார்த்தனையை நம்புபவன் ,தாங்களின் தந்தை விரைவில் குனமடைய மனம் நிறைய வேண்டிக்கொள்கிறேன்.கடவுள் கைவைட மாட்டார் தைரியமாக இருங்கள், அவர் குனமான செய்தியை இங்கே நீங்கள் பினூட்டமாக இடுவீர்கள்.

    ReplyDelete
  78. @parvathy

    மன்னிக்கவும். கிட்டத்தட்ட அதே நடையில் இருந்ததால் , அது நீங்கள்தான் என்று நினைத்து கொண்டேன். மேலும் அவரின் பெயரும் ஞாப்ககத்தில் இல்லை. மீண்டும் என்னை மன்னிக்கவும்.

    ReplyDelete
  79. @Uma @Thanusu @Parvathy மூவரின் அன்புக்கும் கடமை பட்டுள்ளேன்

    ReplyDelete
  80. Dear all,
    I would be glad if some one mentions the details of the correct Nadi Josiar in (near) Vaitheeswaran Koil for the benefit of others. This will help many, and I would visit Chennai Soon and would like to visit if God Willing. I have seen many Nadi Josiars, including Salem, Chennai Tambaram, Mylapore, and also once near Vaitheeswaran Koil. Found majority not enough skilled. Would appreciate relevant response in this regard. Feel sad that such good contributions will not appear again, including the one like Amar Seva. BALASUBRAMNANIAN PULICAT RIYADH.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com