மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.6.12

Devotional மணியாக ஒரு பாடல்!


Devotional மணியாக ஒரு பாடல்!

திருமதி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிய பாடல் ஒன்றை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------
பக்திப் பாடல்
பாடிப் பரவசப் படுத்துபவர் திருமதி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள்
பாடலுக்கான சுட்டி:
http://youtu.be/1NkmDU6no38
இந்தப் பாடலை இணையத்தில் வலையேற்றிய அந்த முகம் தெரியாத நண்பருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக



வாழ்க வளமுடன்!

32 comments:

  1. வகுப்பறையில் வாத்தியார் உட்பட அனைவரும் சமம்.
    இங்கே வாத்தியாரைவிட அறிவிலும், அனுபவத்திலும், வயதிலும் மூத்த பெரியவர்கள் நிறையப்பேர்கள் வந்து போகின்றார்கள்.

    1. வீண் சர்ச்சைகளுக்கு இங்கே அனுமதியில்லை. அதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டுகிறேன்.
    2. ஒரு ஆக்கத்திற்கு மாற்றுக்கருத்து இருந்தால் கட்டுரையாக எழுதி அனுப்புங்கள்.
    3. பின்னூட்டங்களில் மறைமுகமாக எழுதி மற்றவர்களை வருத்தப்பட வைக்க வேண்டாம் ! அனைவரும் இதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
    4. உங்கள் கருத்துக்களை மட்டும் சொல்லுங்கள். அதுவும் சம்பந்தப்பட்ட பதிவில் மட்டும் சொல்லுங்கள்.
    5. அவர் அப்படிச் சொல்வார்...இப்படிச் சொல்வார் என்னும் அனுமானங்கள்.....விமர்சனங்கள் வேண்டாம்.
    6. அடுத்தவரை விமர்சிக்க இங்கே யாருக்கும் உரிமை இல்லை. இப்படி விமர்சித்துவரும் பின்னூட்டங்கள் இனி பதிவில் வெளியாகாது! இதை அனைவரும் மனதில் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்!
    என்றும் அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  2. வகுப்பறையில் வாத்தியார் உட்பட அனைவரும் சமம்.
    இங்கே வாத்தியாரைவிட அறிவிலும், அனுபவத்திலும், வயதிலும் மூத்த பெரியவர்கள் நிறையப்பேர்கள் வந்து போகின்றார்கள்.

    1. வீண் சர்ச்சைகளுக்கு இங்கே அனுமதியில்லை. அதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டுகிறேன்.
    2. ஒரு ஆக்கத்திற்கு மாற்றுக்கருத்து இருந்தால் கட்டுரையாக எழுதி அனுப்புங்கள்.
    3. பின்னூட்டங்களில் மறைமுகமாக எழுதி மற்றவர்களை வருத்தப்பட வைக்க வேண்டாம் ! அனைவரும் இதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
    4. உங்கள் கருத்துக்களை மட்டும் சொல்லுங்கள். அதுவும் சம்பந்தப்பட்ட பதிவில் மட்டும் சொல்லுங்கள்.
    5. அவர் அப்படிச் சொல்வார்...இப்படிச் சொல்வார் என்னும் அனுமானங்கள்.....விமர்சனங்கள் வேண்டாம்.
    6. அடுத்தவரை விமர்சிக்க இங்கே யாருக்கும் உரிமை இல்லை. இப்படி விமர்சித்துவரும் பின்னூட்டங்கள் இனி பதிவில் வெளியாகாது! இதை அனைவரும் மனதில் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்!
    என்றும் அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  3. உண்மையில் மணியான ஒரு பாடலையும், மணியான அறிவுரை ஒன்றையும் தந்தமைக்கும் நன்றி ஐயா.
    அறிவுரையைப் பின்பற்றுவதாக உறுதிமொழி தருகிறேன்.

    ReplyDelete
  4. ////OpenID Themozhi said...
    உண்மையில் மணியான ஒரு பாடலையும், மணியான அறிவுரை ஒன்றையும் தந்தமைக்கும் நன்றி ஐயா.
    அறிவுரையைப் பின்பற்றுவதாக உறுதிமொழி தருகிறேன்.///

    மணியான (ரத்தினச் சுருக்கமான) பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  5. உங்களுடைய கருத்துக்களுக்கு மிக
    நன்றிகள் அய்யா.
    மாணவர்களின் அனைவரின் மன உணர்ச்சிகளுக்கும்
    உங்களின் மறுமொழி மிக பெரிய ஒரு ஆறுதல்.
    பல கோடி நன்றிகள்..........,

    ஓம் சரவணபவ சரணம்

    ReplyDelete
  6. மணியான‌ பாடலுக்கும் மணியான அறிவுரைக்கும் நன்றி அய்யா!

    பட்டாம்மாவின் இசை வாரிசின் குரலும் ஒரு பட்டுதான்.'தெய்வ சக்திகளை நம்முள் இறக்கும் ஒரு சொல் வேண்டும்' என்ற பாரதியின் த்வனி இப்பாடலின் முதல் வரியில் பிரதிபலிக்கிறது.

    தங்களுடைய அறிவுறைப்படி நடந்து கொள்வதில் முதல் மாணாக்கனாக இருப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.

    ReplyDelete
  7. /////Blogger Bhogar said...
    உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் அய்யா.
    மாணவர்களின் அனைவரின் மன உணர்ச்சிகளுக்கும்
    உங்களின் மறுமொழி மிக பெரிய ஒரு ஆறுதல்.
    பல கோடி நன்றிகள்..........,
    ஓம் சரவணபவ சரணம்//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ///////Blogger kmr.krishnan said...
    மணியான‌ பாடலுக்கும் மணியான அறிவுரைக்கும் நன்றி அய்யா!
    பட்டாம்மாவின் இசை வாரிசின் குரலும் ஒரு பட்டுதான்.'தெய்வ சக்திகளை நம்முள் இறக்கும் ஒரு சொல் வேண்டும்' என்ற பாரதியின் த்வனி இப்பாடலின் முதல் வரியில் பிரதிபலிக்கிறது.
    தங்களுடைய அறிவுறைப்படி நடந்து கொள்வதில் முதல் மாணாக்கனாக இருப்பேன் என்று உறுதிகூறுகிறேன்./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
    ----------------------------------------------

    ReplyDelete
  9. 9 பேர் பயணிக்கும் அந்த பைக் பயணம் அதிசயம்தான். ஒரே இரு சக்கர வண்டியில் 20 பேருக்கு மேல் பயணிக்கும் வித்தை காட்டுதல் ராணுவத்தார்/காவல்துறையினர் செய்துகாட்டுவர். இது எந்தப் பயிற்சியும் இல்லாமல் செய்யும் சாகசம்தான்.கொரியாவோ அவர்கள்?

    ReplyDelete
  10. கணீரென்ற குரலில் ஒரு இனிமையான தமிழிசை!

    சீர்காழிக்கு பின்னர் இவ்வரிசையில் பட்டம்மாளின் பேத்தி ஆற்றிவரும் சேவை பாராட்டுக்குரியது!

    நன்றி..வணக்கம் ஐயா!

    ReplyDelete
  11. மிக அருமையான ஒரு பாடல் தந்தமைக்கு நன்றி ஐயா. நித்யஸ்ரீயின் வெண்கலக் குரலில், 'மணியான ஒரு பாடல்' கோவில் மணிபோல் கணீரென ஒலித்தது.
    தங்களின் அறிவுரைகளை நான் ஒவ்வொரு கணமும் நினைவில் வைத்திருப்பேன் என்று வாக்குக் கொடுக்கிறேன் ஐயா. எனக்கு மிகவும் மனநிறைவளித்த பதிவைத் தந்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆனந்தமுருகன் அவர்களின் பைக் பயணப் புகைப்படமும் நன்றாக இருந்தது. பக்கெட் பாப்பா கொள்ளை அழகு.

    ReplyDelete
  12. மாணவர்களின் கவணத்திற்கு தந்த அறிவுரைகளை ஏற்றே நடக்கின்றோம்..

    வகுப்பறை என்பது திருக் கோயில் போல..

    தாங்கள் குறிப்பிட்டது போல்
    இங்கு பலரும் வந்து செல்கின்றனர்..

    எங்கள் ஆதங்கங்களை உரிமையோடு இங்கு தானே சொல்ல முடியும்..

    நடைமுறை செய்திகளை (அதனை தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி உள்ளோம்) மாணவர்களுடன் வகுப்பறையில் இப்படி பகிர்ந்து கொள்கிறோம்.

    பக்கத்து வீட்டில் சண்டை வந்தால் எதுவும் அறியாத தன் வீட்டு குழந்தைகளை அடிப்பர்..

    இது குழந்தைகள் மீதுள்ள கோபம் அல்ல. பக்கத்து வீட்டுக் காரனை எதிர்க்கும் நோக்கம்..

    அந்த பாணியில் தான் ...
    ராஜசேகரை குறிப்பிட்டோம்

    அனுமதி பெற்றே
    அந்த கருத்துக்களையும் தந்துள்ளோம்

    சைவத்திற்கு
    கலங்கம் ஏற்படும் போது
    கலங்காமல் இருக்க முடியவில்லையே


    தாங்கள்
    எதை விரும்புகிறீர்களோ..
    அதை அப்படியே செய்ய தயார் நிலையில்...

    வழக்கமான வாழ்த்துக்களையும்
    அன்பான வணக்கங்களையும்..

    (இந்த பின் ஊட்டம் சக மாணவர்களுக்கும் சரியான விளக்கம் தரும் என்று நம்புகிறோம்)

    ReplyDelete
  13. ''மணியான ஒருப் பாடல் வேண்டும் அது
    மணிகண்டன் மீது இருக்க வேண்டும்.''

    அன்பான ஒரு மனது வேண்டும் அதில்
    அழகன் ஐயப்பன்! வந்து குடி இருக்க வேண்டும்
    துன்பங்கள் யாவும் தொலைத்து விடவேண்டும் அதற்கு
    அய்யனே! உந்தன் கருணை பார்வையது வேண்டும்
    நெய்யிலே அபிஷேகம் செய்ய வேண்டும் உன்னை
    நெய்யிலே அபிஷேகம் செய்ய வேண்டும் அதற்கு
    நல்ல வேலையும் பிறந்திட எனக்கருளே வேண்டும்
    பொய்யும் புரட்டும் மடிந்து விட வேண்டும் அதற்கு
    புலிமீது ஏறியே இப்போது நீ வர வேண்டும்
    சத்திமான மனம் மட்டும் வேண்டும் அதனுள்ளே
    சக்தியாக நீ விளங்க வேண்டும்
    எத்தனை பிறவி எடுக்க வேண்டுமென ஆணையிடவேண்டும்
    அத்தனையிலும் நின் பாதம் நான் பணியும்
    அற்புத வரமொன்று மட்டும் போதும்...
    அருள்வாய் நீ! ஆனந்த ரூபனே! அத்வைத சொரூபனே!
    சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!

    ஆஹா அற்புதமான ஒருப் பாடல்... கண்களில் நீர் வரவழைத்தது..
    எனது மூத்த சகோதரி நேற்றுக்கு முந்திய நாள் தான் முதல் முறையாக சபரிமலைக்கு விரதம் இருந்து செல்கிறார்கள் என்று அறிந்து அதனின் சிந்தனை என்னுள்ளே ஓடிக் கொண்டே இருக்கும் இந்தத் தருணம்.. ஸ்ரீ ஐயப்பனின் அமுத கானமதை வகுப்பறையிலே எங்களுக்களித்து ஆனந்தத்தில் மூழ்கச் செய்து விட்டீர்கள்.. மிக்க நன்றி... கலியுகவரதன் அவனின் அருள் யாவருக்கும் கிடைக்க அவனைப் பணிகிறேன்.

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  14. தங்களின் அறவுரையான அறிவுரையை சிரமேல் கொள்கிறேன்.
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  15. குருவிற்கு வணக்கம்

    ஐய்யப்பன் பாடல்
    படுவது நிதயஸ்ரீ மணியான ஒரு பாடல்
    நல்ல குரல்வளம் பெற்றவர்
    கலையில் மனம் மகிழயிருநதது
    தந்தமைக்கு நன்றி .

    "Dangerous bike riding"

    ReplyDelete
  16. குருவிற்கு வணக்கம்

    நல்லபாடல் "நித்யஸ்ரீ" நல்ல குரல்வளம்
    பெற்றவர் மணிஎன ஒலித்தது

    தைந்தமைக்கு நன்றி

    பக்கெட் பாப்பா அழகு

    ReplyDelete
  17. குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  18. இந்த பாடலினை சுழல விட
    அனுமதி வேண்டுகிறோம்

    கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததும் கொடி அசைந்ததா?

    நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
    மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?

    பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
    தாளம் வந்ததும் பாடல் வந்ததா?

    பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
    ராகம் வந்ததும் பாவம் வந்ததா?

    கண் திறந்ததும் காட்சி வந்ததா?
    காட்சி வந்ததும் கண் திறந்ததா?

    பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
    ஆசை வந்ததும் பருவம் வந்ததா?

    வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
    வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?

    பெண்மை என்பதான் நாணம் வந்ததா?
    நாணம் வந்த்தால் பெண்மை ஆனதா?

    ஓடி வந்ததும் தேடி வந்ததும்
    பாடி வந்ததும் பார்க்க வந்ததும்

    காதல் என்பதா? பாசம் என்பதா?
    கருணை என்பதா? உரிமை என்பதா

    ReplyDelete
  19. //////Blogger kmr.krishnan said...
    9 பேர் பயணிக்கும் அந்த பைக் பயணம் அதிசயம்தான். ஒரே இரு சக்கர வண்டியில் 20 பேருக்கு மேல் பயணிக்கும் வித்தை காட்டுதல் ராணுவத்தார்/காவல்துறையினர் செய்துகாட்டுவர். இது எந்தப் பயிற்சியும் இல்லாமல் செய்யும் சாகசம்தான்.கொரியாவோ அவர்கள்?/////

    இருக்கலாம். பைக்கில் பயணிப்பவர்களின் முகங்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  20. /////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    கணீரென்ற குரலில் ஒரு இனிமையான தமிழிசை!
    சீர்காழிக்கு பின்னர் இவ்வரிசையில் பட்டம்மாளின் பேத்தி ஆற்றிவரும் சேவை பாராட்டுக்குரியது!
    நன்றி..வணக்கம் ஐயா!/////

    ஆமாம். அசத்தும் குரல். எல்லாம் தெய்வ அருள்!

    ReplyDelete
  21. /////Blogger Parvathy Ramachandran said...
    மிக அருமையான ஒரு பாடல் தந்தமைக்கு நன்றி ஐயா. நித்யஸ்ரீயின் வெண்கலக் குரலில், 'மணியான ஒரு பாடல்' கோவில் மணிபோல் கணீரென ஒலித்தது.
    தங்களின் அறிவுரைகளை நான் ஒவ்வொரு கணமும் நினைவில் வைத்திருப்பேன் என்று வாக்குக் கொடுக்கிறேன் ஐயா. எனக்கு மிகவும் மனநிறைவளித்த பதிவைத் தந்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    ஆனந்தமுருகன் அவர்களின் பைக் பயணப் புகைப்படமும் நன்றாக இருந்தது. பக்கெட் பாப்பா கொள்ளை அழகு.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. /////Blogger அய்யர் said...
    மாணவர்களின் கவணத்திற்கு தந்த அறிவுரைகளை ஏற்றே நடக்கின்றோம்..
    வகுப்பறை என்பது திருக் கோயில் போல..
    தாங்கள் குறிப்பிட்டது போல்
    இங்கு பலரும் வந்து செல்கின்றனர்..
    எங்கள் ஆதங்கங்களை உரிமையோடு இங்கு தானே சொல்ல முடியும்..
    நடைமுறை செய்திகளை (அதனை தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி உள்ளோம்) மாணவர்களுடன் வகுப்பறையில் இப்படி பகிர்ந்து கொள்கிறோம்.
    சைவத்திற்கு
    கலங்கம் ஏற்படும் போது
    கலங்காமல் இருக்க முடியவில்லையே//////

    சொல்லுங்கள். நித்தியானந்தாவைப் பற்றிய செய்தி எல்லாம் நமக்கெதற்கு? சைவத்திற்கு ஒன்றும் கேடு வராது! கவியரசர் சொன்னதுபோல தோற்றுவித்தவன் (Founder) இல்லாத மதம் இது. பல மகான்களும், ஞானிகளும் போற்றி வளர்த்த மதம் இது. தன்னைத்தானே அது காப்பாற்றிக்கொள்ளும். என்னால் பல உதாரணங்களைத் தரமுடியும். பதிவில் அதெல்லாம் வேண்டாம் என்று வாளாவிருக்கிறேன்!

    ReplyDelete
  23. /////Blogger ஜி ஆலாசியம் said...
    ''மணியான ஒருப் பாடல் வேண்டும் அது
    மணிகண்டன் மீது இருக்க வேண்டும்.''
    அன்பான ஒரு மனது வேண்டும் அதில்
    அழகன் ஐயப்பன்! வந்து குடி இருக்க வேண்டும்
    துன்பங்கள் யாவும் தொலைத்து விடவேண்டும் அதற்கு
    அய்யனே! உந்தன் கருணை பார்வையது வேண்டும்
    நெய்யிலே அபிஷேகம் செய்ய வேண்டும் உன்னை
    நெய்யிலே அபிஷேகம் செய்ய வேண்டும் அதற்கு
    நல்ல வேலையும் பிறந்திட எனக்கருளே வேண்டும்
    பொய்யும் புரட்டும் மடிந்து விட வேண்டும் அதற்கு
    புலிமீது ஏறியே இப்போது நீ வர வேண்டும்
    சத்திமான மனம் மட்டும் வேண்டும் அதனுள்ளே
    சக்தியாக நீ விளங்க வேண்டும்
    எத்தனை பிறவி எடுக்க வேண்டுமென ஆணையிடவேண்டும்
    அத்தனையிலும் நின் பாதம் நான் பணியும்
    அற்புத வரமொன்று மட்டும் போதும்...
    அருள்வாய் நீ! ஆனந்த ரூபனே! அத்வைத சொரூபனே!
    சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
    ஆஹா அற்புதமான ஒருப் பாடல்... கண்களில் நீர் வரவழைத்தது..
    எனது மூத்த சகோதரி நேற்றுக்கு முந்திய நாள் தான் முதல் முறையாக சபரிமலைக்கு விரதம் இருந்து செல்கிறார்கள் என்று அறிந்து அதனின் சிந்தனை என்னுள்ளே ஓடிக் கொண்டே இருக்கும் இந்தத் தருணம்.. ஸ்ரீ ஐயப்பனின் அமுத கானமதை வகுப்பறையிலே எங்களுக்களித்து ஆனந்தத்தில் மூழ்கச் செய்து விட்டீர்கள்.. மிக்க நன்றி... கலியுகவரதன் அவனின் அருள் யாவருக்கும் கிடைக்க அவனைப் பணிகிறேன்.//////

    நெகிழ்ச்சியான உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  24. ////Blogger ஜி ஆலாசியம் said...
    தங்களின் அறவுரையான அறிவுரையை சிரமேல் கொள்கிறேன்.
    நன்றிகள் ஐயா!/////

    புரிதலுக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  25. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    ஐய்யப்பன் பாடல்
    படுவது நிதயஸ்ரீ மணியான ஒரு பாடல்
    நல்ல குரல்வளம் பெற்றவர்
    கலையில் மனம் மகிழயிருநதது
    தந்தமைக்கு நன்றி .
    "Dangerous bike riding"////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நல்லபாடல் "நித்யஸ்ரீ" நல்ல குரல்வளம்
    பெற்றவர் மணிஎன ஒலித்தது
    தந்தமைக்கு நன்றி
    பக்கெட் பாப்பா அழகு/////

    பாராட்டுக்கள் எல்லாம் பாடியவரையே சேரும்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஐயா
    நன்றி/////

    நல்லது!

    ReplyDelete
  28. Blogger அய்யர் said...
    இந்த பாடலினை சுழல விட
    அனுமதி வேண்டுகிறோம்
    கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
    நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
    மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
    பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
    தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
    பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
    ராகம் வந்ததும் பாவம் வந்ததா?
    கண் திறந்ததும் காட்சி வந்ததா?
    காட்சி வந்ததும் கண் திறந்ததா?
    பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
    ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
    வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
    வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
    பெண்மை என்பதான் நாணம் வந்ததா?
    நாணம் வந்த்தால் பெண்மை ஆனதா?
    ஓடி வந்ததும் தேடி வந்ததும்
    பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
    காதல் என்பதா? பாசம் என்பதா?
    கருணை என்பதா? உரிமை என்பதா/////

    குறிப்பிட்ட ஒரு பாடலை ஒலிக்க விடுவதற்கான காரணத்தையும் அவ்வப்போது சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும் விசுவநாதன்!

    ReplyDelete
  29. தங்களின் தெளிவான அறிவுரைக்கு நன்றி சார்!

    ReplyDelete
  30. தாங்கள் சொன்னதை அனைவரும் கேட்டு நடப்பார்கள் என்று நம்புகிறேன். பார்வதி அவர்கள் தன்னுடைய ஆக்கங்களில் என்ன சொல்கிறார் என்பது விளங்கியது. குத்தலாக விமர்சிக்கும் அளவுக்கு அவர் சொல்லியதில் என்ன குற்றம் இருக்கிறது என்பதுதான் இன்று வரை விளங்கவில்லை.

    ReplyDelete
  31. ///சொல்லுங்கள். நித்தியானந்தாவைப் பற்றிய செய்தி எல்லாம் நமக்கெதற்கு? சைவத்திற்கு ஒன்றும் கேடு வராது! கவியரசர் சொன்னதுபோல தோற்றுவித்தவன் (Founder) இல்லாத மதம் இது. பல மகான்களும், ஞானிகளும் போற்றி வளர்த்த மதம் இது. தன்னைத்தானே அது காப்பாற்றிக்கொள்ளும். என்னால் பல உதாரணங்களைத் தரமுடியும். பதிவில் அதெல்லாம் வேண்டாம் என்று வாளாவிருக்கிறேன்!////

    நித்தியானந்தாவை பற்றி பேசவில்லை.. அவரது நடைமுறைகளை தான் பேசுகிறோம் எதிர்க்கின்றோம்..

    தினமும் வரும் செய்தி
    திகைக்க வைக்கின்றது..

    நீங்கள் மதம் என குறிப்பிட்டு உள்ளீர்கள்.. மன்னிக்க...

    மதம் வேறு... சமயம் வேறு..
    மீண்டும் அய்யரே என வியக்க வேண்டாம்

    இந்த சமயத்திற்கு FOUNDER உண்டு...
    அவர் சங்கம் அமைத்த தலைவன்

    அடிப்படை உண்மைகளை தெளிவாக தெரியாமையினால்...

    அறிவில் குறைந்த சிலர் ...
    வேறு வாழ்க்கை நடத்தி வருகின்றனர்..

    அதை கண்டு கொள்ளக் கூடாது என்றால் எப்படி?

    அன்று சமனத்திற்கு எதிராக சைவம் தழைக்க ஆளுடைய பிள்ளையார் அமைதி கொண்டாரா ,,,?

    விருண்டு எழுவேண்டும் என்பதற்காகவே வேண்டுகோள் விடுக்கின்றோம்..

    நாளை முதல் 17 நாட்கள் Count down தினமும் ஒரு தேவார பதிகம் பதிவு செய்ய அனுமதி கோருகிறோம்..

    குழந்தைகள் தவறு செய்தால் இப்போது பெற்றோர்கள் SORRY கேளுன்னு சொல்லுவாங்க...

    எங்க காலத்தில சாமிக்கிட்டே மன்னிப்பு கேளுன்னு எங்க பெற்றோர்கள் சொல்லித்தருவாங்க அதே போல்

    இறைவன் திருமுன் வேண்டுகோள் வைக்கின்றோம்..

    நிலைமை மாற... சைவம்
    நிலைக்க..

    ReplyDelete
  32. அருமையான பதிவு.
    தங்கள் அறிவுரை அழகியது. வீரர்களிடம் முகத்தை கடுப்பாக்காமல் அதே சமயம் மைதான விதிகளை கண்போல காத்த கண்ணியமான டேவிட் ஷேப்பெர்ட் அம்பயர் ஞாபகம் வருகிறது.
    தங்கள் அறிவுரைகளை நான் கேட்டு நடப்பதாக இங்கே சொல்லுகிறேன், ஐயா.
    கூடையில் குட்டிப்பாப்பா கொள்ளை அழகு தான் :)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com