மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.6.12

Astrology - Popcorn Posts அறுவை சிகிச்சை யாருக்கு, எப்போது ஏற்படும்?


Astrology - Popcorn Posts அறுவை சிகிச்சை யாருக்கு, எப்போது ஏற்படும்?

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி நான்கு!

அறுவை சிகிச்சை (Surgery) என்றால் யாருக்குத்தான் பயம் இல்லை?

Surgery is an act of performing surgery may be called a surgical procedure, operation, or simply surgery. In this context, the verb operate means to perform surgery.

எத்தனை மன திடம் இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் நிலவும் அசாத்திய மருத்துவமனைக் கட்டணங்களுக்கு எங்கே போவது? பணம் இருப்பவனை விட்டுத்தள்ளுங்கள். போதிய பணம் இல்லாதவன் என்ன செய்வான்? யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் அல்லது உறவினர்கள் / நண்பர்களிடம் கையேந்த வேண்டு்ம். அந்த நிலைமை பொருள் இல்லாதவனுக்கு
வரக்கூடாது. ஏன் ஒருவருக்கும் வரக்கூடாது. இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டு மேலே படியுங்கள்.

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி?

அதை இன்று பார்ப்போம்!

எட்டாம் வீட்டில் தேமே என்று தனித்திருக்கும் தீய கிரகங்களால், அந்தத் தீமை உண்டாகாது.

சனி லக்கினாதிபதியாகவும், எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கவும், அத்துடன் ஆறாம் அதிபதியைப் பார்த்துத் தொலைக்கவும்  செய்யும் நிலையில், அப்படி அமர்ந்திருக்கும் சனியைச் செவ்வாய் தன் பார்வையில் வைத்திருந்தால், ஜாதகனுக்கு ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.

ஒரு தீய கிரகம் இன்னொரு தீய கிரகத்தினால் பாதிக்கப்பெற்ற நிலையில் - அதாவது சேர்க்கை அல்லது பார்வையால் -  பாதிக்கப்பெற்ற நிலையில், ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட  நேரிடும். உதாரணம் ராகு, செவ்வாயின்
பார்வையைப் பெற்று இருக்கும் நிலையில், ஜாதகனுக்கு
சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ ஒரு முறை அறுவை
சிகிச்சை நடக்கும். அது அவைகள் இருக்கும் இடத்தை வைத்து,
அறுவை சிகிச்சைக்கு  உட்பட இருக்கும் உடலின் அவயங்கள் மாறுபடும்
++++++++++++++++++++++++++++++++
“வாத்தி (யார்) அதென்ன புதிதாக பாப்கார்ன் பதிவுகள் என்ற பெயர்”

“ராசா, கொறிக்கும்படியாக ஒரே ஒரு மேட்டரை (செய்தியை அல்லது விதியை -astrological rule)  வைத்து, மனதில் பதியும் படியாக எழுதப்பெறும் பதிவுகளுக்கு இனி அந்தப் பெயர்தான்!”

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

55 comments:

  1. ஐயா, மூன்றுமுறை கத்தியைச் சந்தித்து வெற்றி வாகை சூடியுள்ளேன்
    லக்கினாபதி சனி, கேதுவுடன் இருக்கும் சூழ்நிலை.
    எத்தனைமுறை அறுவைச் சிகிச்சைகள் நடை பெறலாம், எந்த தசை போன்ற நேரங்களில் நடக்கக் கூடும் என்று கணிக்க வாய்ப்புள்ளதா?
    பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  2. நண்பர் ஒருவர் தன் மனைவிக்கு இப்போது ராகு திசை நடக்கிறது. அதில் இந்த புத்தியில் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்பதை கணித்து அறுவை சிகிச்சைக்காக குறிப்பிட்ட அளவு பணமும் தயார் செய்து வைத்திருந்தார். அவர் என்னிடம் சொல்லி கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து அவர் மனைவிக்கு அறுவை சிகிச்சை நடந்தேறியது.

    ReplyDelete
  3. உள்ளேன் ஐயா.
    பாடம் நன்று.
    கதி என்றதும் ஞாபகம் வருகிறது.
    சனியும் புதனும் சேர்ந்து எட்டாம் இடத்தில் இருந்தால் அரச தண்டனையால் மரணம் என்று.
    அது சிரச்சேதமா இல்லை தூக்கா இல்லை பிற முறையா என தெரிந்து கொள்ள வழி இருக்கிறதா?
    நன்றி.......

    ReplyDelete
  4. ஐயா....... செவ்வாய் பார்வை உள்ள கேது எப்படி? அல்லது அவருக்கு ஒன்றும் இல்லை, செவ்வாய் பார்வை உள்ள ராகு மட்டும் தான் கத்தியை நீட்டுவாரா?

    எட்டாம் அதிபதியை செவ்வாய் பார்த்தால்?

    ReplyDelete
  5. ////Blogger தேமொழி said...
    ஐயா, மூன்றுமுறை கத்தியைச் சந்தித்து வெற்றி வாகை சூடியுள்ளேன்
    லக்கினாபதி சனி, கேதுவுடன் இருக்கும் சூழ்நிலை.
    எத்தனைமுறை அறுவைச் சிகிச்சைகள் நடை பெறலாம், எந்த தசை போன்ற நேரங்களில் நடக்கக் கூடும் என்று கணிக்க வாய்ப்புள்ளதா?
    பதிவிற்கு நன்றி.//////

    சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசாபுத்திகளில் நடக்கும் (Sub periods of the related planets) பயப்படாதீர்கள். மேலும் அந்த சமயத்தில் கோள்சாரத்தில் (by transit) சனியும் மோசமான இடங்களில் இருக்க வேண்டும். மோசமான இடங்கள் என்றால் தெரியும் அல்லவா?

    ReplyDelete
  6. /////Blogger சரண் said...
    நண்பர் ஒருவர் தன் மனைவிக்கு இப்போது ராகு திசை நடக்கிறது. அதில் இந்த புத்தியில் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்பதை கணித்து அறுவை சிகிச்சைக்காக குறிப்பிட்ட அளவு பணமும் தயார் செய்து வைத்திருந்தார். அவர் என்னிடம் சொல்லி கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து அவர் மனைவிக்கு அறுவை சிகிச்சை நடந்தேறியது.////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சரண்!

    ReplyDelete
  7. ////Blogger Bhuvaneshwar said...
    உள்ளேன் ஐயா. பாடம் நன்று.
    கதி என்றதும் ஞாபகம் வருகிறது.
    சனியும் புதனும் சேர்ந்து எட்டாம் இடத்தில் இருந்தால் அரச தண்டனையால் மரணம் என்று.
    அது சிரச்சேதமா இல்லை தூக்கா இல்லை பிற முறையா என தெரிந்து கொள்ள வழி இருக்கிறதா?
    நன்றி.......////

    இது இந்தப் பாடத்திற்கு சம்பந்தம் இல்லாத கேள்வி.
    இருந்தாலும் நீங்கள் ஒரு விஞ்ஞானி என்பதால் பதில் கூறுகிறேன்.
    அரச தண்டனைக்கு சூரியன் முக்கியமில்லையா? அவரை ஏன் ஓரம் கட்டிவிட்டீர்கள்?
    சிரச்சேதமெல்லாம் நம் நாட்டில் ஏது சாமி?

    ReplyDelete
  8. ////Blogger Bhuvaneshwar said...
    ஐயா....... செவ்வாய் பார்வை உள்ள கேது எப்படி? அல்லது அவருக்கு ஒன்றும் இல்லை, செவ்வாய் பார்வை உள்ள ராகு மட்டும் தான் கத்தியை நீட்டுவாரா?/////

    கார்த்திக்கோடு நடிக்கும் காஜல் அகர்வால் எப்படி? என்று கேட்பதைப்போல் உங்கள் கேள்வி. யார் நடித்தால் என்ன படம் ஓடுவதும் ஓடாததும் திரைக்கதையில் இருக்கிறது. இங்கேயும் அப்படித்தான் கிரகங்களின் வலுவில் அவை உள்ளன!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////எட்டாம் அதிபதியை செவ்வாய் பார்த்தால்?////

    எட்டாம் அதிபதி சுபக்கிரகமாக இருந்தால்? யோசித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  9. மிக அருமையான பதிவு. பன்முறை களம் கண்ட மகாவீரர் (வீரி?!!!) நான். ஆபரேஷன் தியேட்டர் அடுத்தவீடு போலவும், அனஸ்தீஷியா அல்வா போலவும் பாவிக்கும் மனநிலை வந்துவிட்டது. வீட்டிலும் பாதிப்பேர் ஆபரேஷன்களை சந்தித்து வெற்றிவாகை சூடியவர்கள். பயம் என்பது போய், 'ஸ்போர்டிவ்' ஆக எடுத்துக் கொள்ளத் தெரிந்து கொண்டு விட்டேன். கவுன் மாட்டும் பெண்ணிடம்,'உன் குழந்தை ஸ்கூலுக்குப் போகுதா'? என்று விசாரிப்பதில் தொடங்கி, ஊசி போடும் அனஸ்தீஷியா டாக்டரிடம், 'இந்த நரம்பில் போடாதீங்க, பல்ஜ் ஆகும் இதுல தான் எப்பவும் போடுவாங்க' என்று அட்வைசப் போடும் அளவுக்குத் தேறிவிட்டேன். பாதி ஆபரேஷனில் நினைவு வந்து, 'இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்துங்க' ரீதியில், 'இன்னும் கொஞ்சம் அனஸ்தீஷியா கொடுங்க' என்று கேட்ட அனுபவமும் உண்டு.
    ஆறாம் இடத்தை, மறைவு ஸ்தானத்திலிருக்கும், குறைந்த பரல்களுடனான ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதால் இந்நிலை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. அறுவை சிகிச்சை கத்தியால் உடலுக்கு செய்யும் நன்மை. மரண தண்டனை என்பது கத்தியால் ஆத்மாவுக்கு செய்யும் நன்மை என்று கருதி ரொம்ப யோசித்து கேட்டு விட்டேன்.... :)
    சூரியனை விட்டு விட்டது கொஞ்சம் பிசகு தான்.......

    ReplyDelete
  11. /////Blogger Parvathy Ramachandran said...
    மிக அருமையான பதிவு. பன்முறை களம் கண்ட மகாவீரர் (வீரி?!!!) நான். ஆபரேஷன் தியேட்டர் அடுத்தவீடு போலவும், அனஸ்தீஷியா அல்வா போலவும் பாவிக்கும் மனநிலை வந்துவிட்டது. வீட்டிலும் பாதிப்பேர் ஆபரேஷன்களை சந்தித்து வெற்றிவாகை சூடியவர்கள். பயம் என்பது போய், 'ஸ்போர்டிவ்' ஆக எடுத்துக் கொள்ளத் தெரிந்து கொண்டு விட்டேன். கவுன் மாட்டும் பெண்ணிடம்,'உன் குழந்தை ஸ்கூலுக்குப் போகுதா'? என்று விசாரிப்பதில் தொடங்கி, ஊசி போடும் அனஸ்தீஷியா டாக்டரிடம், 'இந்த நரம்பில் போடாதீங்க, பல்ஜ் ஆகும் இதுல தான் எப்பவும் போடுவாங்க' என்று அட்வைசப் போடும் அளவுக்குத் தேறிவிட்டேன். பாதி ஆபரேஷனில் நினைவு வந்து, 'இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்துங்க' ரீதியில், 'இன்னும் கொஞ்சம் அனஸ்தீஷியா கொடுங்க' என்று கேட்ட அனுபவமும் உண்டு.
    ஆறாம் இடத்தை, மறைவு ஸ்தானத்திலிருக்கும், குறைந்த பரல்களுடனான ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதால் இந்நிலை என்று நினைக்கிறேன்.///////

    அடடே, ”எனது மருத்துவமனை அனுபங்கள்” என்று சுவாரசியமாக பதிவு எழுதும் அளவிற்கு விஷயதானம் வைத்திருப்பீர்கள் போலிருக்கிறதே! வாரமலரில் ஆன்மீகப் பதிவுகளோடு, ஒரு மாறுதலுக்காக அதுபோன்ற கட்டுரைகளையும் எழுதுங்களேன்!

    ReplyDelete
  12. /////Blogger Bhuvaneshwar said...
    அறுவை சிகிச்சை கத்தியால் உடலுக்கு செய்யும் நன்மை. மரண தண்டனை என்பது கத்தியால் ஆத்மாவுக்கு செய்யும் நன்மை என்று கருதி ரொம்ப யோசித்து கேட்டு விட்டேன்.... :)
    சூரியனை விட்டு விட்டது கொஞ்சம் பிசகு தான்......./////

    ஆத்மாவா? இந்தியாவில் இன்று (பெரும்பாலும்) இரண்டுவிதமான மனிதர்கள்தான் உள்ளார்கள். அடுத்த சொத்தை எங்கே வாங்கலாம்’ அல்லது கையில் குவியும் பணத்தை எதில் போட்டு வைக்கலாம் என்று அலைபவர்கள் ஒரு வகை! அடுத்தநாள் செலவிற்கு என்ன செய்வது என்று மூளையைக் கசக்கிக்கொண்டு அல்லாடும் மனிதர்கள் ஒரு வகை!

    நீங்கள் என்னவென்றால் ஆத்மாவைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள்! இளைஞர்தானே நீங்கள்? ரூட்டை மாற்றி தேசிய ஓடையில் பயணத்தைத் துவங்குங்கள் சாமி!

    ஆத்மாவைப் பற்றிக் கவலைப்பட கே.முத்துராமகிருஷ்ணரையும் சேர்த்து என்னைப் போன்ற வயசான டிக்கெட்டுகள் உள்ளோம் நண்பரே!

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. ////Blogger Bhuvaneshwar said...
    போகிற வழிக்கு புண்ணியம் தேட ஆசை.//////

    இந்த ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////கொஞ்சூண்டு பெண்ணாசை மட்டும் மிச்சம் மீதி உள்ளதால் திருமணம் செய்து கொள்வேன். விட்ட குறை தொட்ட குறை போல இருக்கிறது. சுக்கிரனின் நிலை அப்படி./////

    இந்த ஆசையும் நிறைவேற வாழ்த்துக்கள். அழகில் (அழகுக்கு மட்டுமே உதாரணம்) காஜல் அகர்வால் அல்லது அனுஷ்கா சர்மா போன்ற பெண் மனைவியாகக் கிடைத்து உங்களின் சுக்கிரக் கடமைகளை நிறைவேற உதவட்டும். இந்திரனையும் சந்திரனையும் பிரார்த்திக்கின்றேன்!

    ReplyDelete
  16. /////Blogger Bhuvaneshwar said...
    என்னடா பட்டவர்த்தனமாக கொஞ்சூண்டு பெண்ணாசை மிச்சம் மீதி இருக்கிறது என்று சொல்கிறானே? பெரும் மூடன் இவன், பிசகாக பேசுகிறானே என்று என்ன வேண்டாம்.
    பெண்ணாசை என்றால் கல்யாணம் பண்ணி வாழ வேண்டும் என்ற ஆசை. அதை தான் சொன்னேன்.//////

    ஆகா, அதைச் செய்யுங்கள் முதலில். அணு ஆராய்ச்சியை எல்லாம் அப்புறம் வைத்துக்கொள்ளலாம். பெண்ணைவிட அணு ஒன்றும் பெரியதல்ல! முக்கியமானதல்ல!:-)))

    ReplyDelete
  17. SP.VR. SUBBAIYA said...
    //வாரமலரில் ஆன்மீகப் பதிவுகளோடு, ஒரு மாறுதலுக்காக அதுபோன்ற கட்டுரைகளையும் எழுதுங்களேன்!//

    நிச்சயமாகச் செய்கிறேன் ஐயா.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. குருவிற்கு வணக்கம்
    பாடம்,
    பாப்கார்ன் பதிவு,
    உள்ளேன் ஜயா
    நன்றி.

    ReplyDelete
  20. //அடடே, ”எனது மருத்துவமனை அனுபங்கள்” என்று சுவாரசியமாக பதிவு எழுதும் அளவிற்கு விஷயதானம் வைத்திருப்பீர்கள் போலிருக்கிறதே! வாரமலரில் ஆன்மீகப் பதிவுகளோடு, ஒரு மாறுதலுக்காக அதுபோன்ற கட்டுரைகளையும் எழுதுங்களேன்!//

    "ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு அப்பாவி"என்ற தலைப்பில் 20 ஜூன் 2012 துக்ளக் இதழில் சோ ராமசுவாமி ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதியுள்ளார்.அவ‌ர்
    மருத்துவமனையில் இருந்த அனுபவம்தான். சுவையாக இருக்கிறது.

    நமது நண்பர் ஆன‌ந்தும் தனது அறுவை சிகிச்சை பற்றி அறிவியலாகவும், சோதிட ரீதியிலும் தன் பிளாகில் எழுதியுள்ளார்.

    நான் 1975 போல ஒரு காஸ்மெடிக் சர்ஜெரி செய்து கொண்டேன்.அதுவும் அது தொடர்பான செய்திகளும் மிகவும் சுவையானவை. ஆனால் இந்த உமா, தேமொழி ஆகியோர் இருக்குமிடத்தில் சொல்ல வெட்கமாக இருக்கிறது.என்னை ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.மைனரும் சேர்ந்தால் அதகளம்தான் போங்கள்.

    பார்வதி அம்மையின் பலமுறை சர்ஜரி ஏன்? அனுபவங்கள் சொல்லக்கூடியதாக இருந்தால் அதனுடைய அறிவியல், நடைமுறைச் சிக்கல்கள், பொருளாதார இழப்புக்கள், ஆகியவை பற்றி நகைச்சுவை கூட்டி எழுதலாம்.பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  21. enakku viruchaka lakkanam.9l chevvai,12 l sani.herine operation 2 andukaluku mun nadanthathu.yentha thasa pukthi theriya villai

    ReplyDelete
  22. //எத்தனை மன திடம் இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் நிலவும் அசாத்திய மருத்துவமனைக் கட்டணங்களுக்கு எங்கே போவது? பணம் இருப்பவனை விட்டுத்தள்ளுங்கள். போதிய பணம் இல்லாதவன் என்ன செய்வான்? யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் அல்லது உறவினர்கள் / நண்பர்களிடம் கையேந்த வேண்டு்ம்.//

    சார், பொது இன்சுரன்ஸ் பாலிசிகளில் ஹெல்த் இன்ஸ்சுரன்ஸ் என்று ஒரு பாலிசி உண்டு. இதில் ஃப்ரீ ஃப்ளோட்டர் என்ற வகையில் மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து முடிந்தவரையில் ஒரு பாலிசி எடுத்து வைத்தால், தேவையான பொழுது கைக்கொடுக்கும்.

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. லக் அதி ஆறாம் அதி உடன் ஆறாம் வீட்டில், இதுவரை பார்த்தவர்கள் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்றே சொல்லியிருக்கிறார்கள், நானும் அப்படியே நம்புகிறேன். நல்ல வேளையா சனியும் செவ்வாயும் 1 / 12 பொசிஷன்ல ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத நிலையில்.

    ReplyDelete
  25. நான் 1975 போல ஒரு காஸ்மெடிக் சர்ஜெரி செய்து கொண்டேன்.அதுவும் அது தொடர்பான செய்திகளும் மிகவும் சுவையானவை. ஆனால் இந்த உமா, தேமொழி ஆகியோர் இருக்குமிடத்தில் சொல்ல வெட்கமாக இருக்கிறது.என்னை ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.//

    பயப்படாம எழுதுங்க, நாங்க பார்த்துக்க மாட்டோம்????

    ReplyDelete
  26. //எட்டாம் வீட்டில் தேமே என்று தனித்திருக்கும் தீய கிரகங்களால், அந்தத் தீமை உண்டாகாது//

    தனி மரம் தோப்பாகாது என்று இதற்கு காரணம் சொல்லலாம். 6,8,12 ஸ்தானாதிபதிகள் (இன்னும் இருக்கிறது) என்று ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களின் பங்கு/உறவு இதில் இருக்கிறது.

    ReplyDelete
  27. நல்ல பதிவு அதிலும் மிக்க முக்கயமான விசயம் உள்ள பதிவு.
    சுருங்க சொல்லி விளங்க வைப்பது இதுதான் . நல்ல பதிவு அய்யா .
    இன்றைய மருத்துவ உலகில் அறுவை சிகிச்சை இல்லாத மனிதர்கள் மிக்க குறைவாகி வருகிறார்கள். குறிப்பாக இன்றைய குழைந்தகளுக்கு கண்டிப்பாக இது நடந்து விடுகிறது. இதை மருத்துவர்களின் முன் ஏற்பாடான சிகிச்சை என்பதா அல்லது வருமான வழி என்பதா ?

    மேல்கண்ட எந்த அமைப்பும் இல்லாமலே என் இரு மகள்களுக்கும் டான்சில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

    ReplyDelete
  28. SP.VR. SUBBAIYA said...அடடே, ”எனது மருத்துவமனை அனுபங்கள்” என்று சுவாரசியமாக பதிவு எழுதும் அளவிற்கு விஷயதானம் வைத்திருப்பீர்கள் போலிருக்கிறதே! வாரமலரில் ஆன்மீகப் பதிவுகளோடு, ஒரு மாறுதலுக்காக அதுபோன்ற கட்டுரைகளையும் எழுதுங்களேன்!

    நான் வழிமொழிகிறேன்

    ReplyDelete
  29. kmr.krishnan said...நான் 1975 போல ஒரு காஸ்மெடிக் சர்ஜெரி செய்து கொண்டேன்.அதுவும் அது தொடர்பான செய்திகளும் மிகவும் சுவையானவை. ஆனால் இந்த உமா, தேமொழி ஆகியோர் இருக்குமிடத்தில் சொல்ல வெட்கமாக இருக்கிறது.என்னை ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.மைனரும் சேர்ந்தால் அதகளம்தான் போங்கள்.

    கலகலப்பாக இருக்கட்டுமே இந்த வாரம் ஆக்கமாக போடுங்கள்,
    .

    ReplyDelete
  30. GoodMorning sir

    True sir ..
    Yenakku Saturn 6th lord ,mars eight lord
    Sat exalted in second and Mars deb in 11th ,rendum perum mutual aspect panraanga ..
    Minor ,somewhat major surgeries 4 times nadhandhadhu ...
    Now running ,Ketu MD ,sat AD ,sat ret ,always some or other health problem is there ..sat-mars marupadiyum yedhum problem panni ,surgery situation varumo ?
    BTW all the surgeries Mars/sat AD/PDla thaan aachu ...

    Thanks

    ReplyDelete
  31. இன்று காரம் தூவிய பாப்கார்ன் சுள்ளுன்னு இருக்கு சார்!
    பதிவுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  32. விருச்சிக லக்னம் லக்னாதிபதி செவ்வாய் ஆறாமிடத்தில் ஆட்சி, இது வரை மூன்று முறை அறுவை சிகிச்சை செய்தாகி விட்டது. எங்கள் ஜோதிடர் கண்ணை மூடி கொண்டு சொல்லலாம் "ஆறாம் இட செவ்வாய் கத்தி வைக்காமல் விடாது" என்கிறார். உண்மையா? இன்னும் எதனை முறை வைக்க வேண்டி வருமோ தெரியவில்லை. :) . இதுவும் கடந்து போம்!!!

    ReplyDelete
  33. சில வருடங்களுக்கு முன்னால்,ஐம்பது வயது மதிக்கதக்க ஒருவர், என்னை வந்து சந்தித்தார்.

    தன்னுடைய இருபது வயதில் இருந்தே தனக்கு,
    பல இனம் புரியாத நோய்களால் தாக்கபடுவதாகவும்.
    இதுவரை தன்னுடை உடம்பில் பதினெட்டுக்கு,
    மேற்பட்ட ஆபரேஷன்கள் நடந்துள்ளதாகவும்,என்று சொல்லி தன்னுடைய
    சட்டையை கழற்றி,தன் உடலை காட்டினார்.

    ''அந்த பெரியவரின் உடல் முழுவதும் தழும்புகளாக இருந்தது.ஆப்ரேஷன் செய்து தையல் போட்ட அடையாளங்கள் மிகவும் விகாரமாக தெரிந்தது.பார்த்த நானே சிறிது கலங்கி போய்விட்டேன்''.

    என்னை பார்த்து மிகவும் பரிதாபமாக கேட்டார்.
    தம்பி எனக்கு ஏன் இந்த கொடுமையான நிலை,
    இது ஜாதகம் பார்த்தால் தெரியுமா என்றார்.
    கண்டிப்பாக இது ஜாதகத்திற்கு அப்பற்ப்பட்ட விசயம்,என்பது மட்டும்
    எனக்கு நன்றாக புரிந்தது.

    அப்போது நான் ''முன் ஜென்ம கர்மவினைகள்'' பற்றி,
    மிக தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன்.
    எனவே என்னுடைய சொந்த செலவில்,அவரையும் அழைத்து கொண்டு தஞ்சாவூர் போனேன்.

    அங்கு ஒருவர் வைத்திருந்த''அகத்தியர் ஜீவ நாடி''மூலம்,என்னுடன் வந்தவரின் துன்பத்திற்க்கான காரணம் ஆராயப்பட்டது.

    'அகத்தியரின் ஜீவ நாடியில்'வந்தது இது தான்.

    இன்று எம் எதிரில் நாடி கேட்க வந்துள்ள முதியவனின் நிலை கண்டு அகத்தியன் ஆன யாம் அனுதாபப்படுகிறோம்.
    இருபது வயதில் இருந்து ஐம்பது வயது வரை,
    கடந்த முப்பது வருடங்களாக,தனக்கு வந்த நோய்கள் பற்றியும்,
    அதனால் நடந்த பதினெட்டு அறுவை சிகிச்சைகள் பற்றியும்,
    தனக்கு திருமண வாழ்வில் இருந்து,சராசரி மனித வாழக்கை கூட,
    மறுக்கப்பட்டுள்ளதாக எண்ணி வருத்தம் கொண்டுள்ளான்.

    இப்பிறவியில் தனக்கு சராசரி வாழ்க்கை,அமையவில்லை என்று,கவலைப்படும் இவன்,
    முற்பிறவியில் சராசரியாக வாழவில்லை.

    முற்பிறவியில் இவன் மதுரையில் பிறந்து இருந்தான்.மூர்க்கனாகவும் முரடனாகவும் கூட நட்போடு,
    மதுரையை கலக்கக்கூடிய ரவுடியாக வலம் வந்தான்.

    ''இவனிடம் கத்தியால் குத்துபட்டவர்கள் எத்தனையோ பேர்,
    சில பேர் உடல் உறுப்புகள் பாதிக்கபட்டு நடைப்பிணமாக வாழ்ந்தார்கள்,
    சிலர் இறந்தும் போனார்கள்,,

    முற்பிறவியில் இவனால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் விட்ட சாபத்தாலும்,பாவத்தாலும்,பிரம்மஹத்தி தோசத்தாலும்,
    இவனுக்கு இவ்வளவு உடல்ரீதியாக துன்பங்கள்.

    முற்பிறவியில் ரவுடியாக இருந்து,பலரின் உடல்களை குத்தி கிழித்தான்.
    அதன் காரணமாகவே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோய்கள் வந்து,
    சிகிச்சை என்கிற பெயரிலும்,மருத்துவம் என்கிற பெயரிலும்,கத்திப்பட்டது.பதினெட்டு முறை.

    ReplyDelete
  34. மேற்கொண்டு தனக்கு எதுவும் அறுவை சிகிச்சை நடக்குமோ என்று,
    இவன் பயப்படுகிறான்.அகத்தியனை நம்பி வந்ததால்,
    இவனுக்கு அந்த துன்பம் ஏற்ப்படாது.

    ஒவ்வொரு மாதத்தில் வருகிற,இவனுடைய ஜென்ம நட்ச்சதிரத்தில்,வைத்தியனுக்கெல்லாம் வைத்தியனாகிய,வைத்தீஸ்வரன்கோவிலில்,குடி கொண்டுள்ள ஈசனை,வைதீஸ்வரனை,வணங்கி வர வேண்டும்.
    மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு,பணம் இல்லாத ஏழைகளுக்கு,தன்னால் முயன்ற அளவிற்கு,பொருளுதவி செய்து வரவேண்டும்.
    இந்த இரண்டு வழிமுறைகளை,வாழ்க்கை முழுவதும் அனுசரித்து வந்தால்,அகத்தியன் அருளால் நலமோடு வாழ்வான்.
    என்று அருள்வாக்கை முடித்தார்.

    இந்த அருள்வாக்கை கேட்ட பெரியவர்,சிறிது நேரம் சிலை போல் அமர்ந்துவிட்டார்.
    தன்னுடைய உடல் சார்ந்த,துன்பத்திற்கெல்லாம்,
    தன் முன் ஜென்ம கர்மவினைகள் தான்,காரணமென்று உணர்ந்து கொண்டதாகவும்,
    அகத்தியர் கூறியபடியே,இனி நடப்பதாகவும் உறுதி எடுத்தார்.

    அகத்தியரின் ஜீவ நாடியை தனக்கு அறிமுகப்படுத்தியதற்கு,எனக்கு நன்றி கூறினார்.

    அகத்தியர் கூறியபடி நடந்ததால்,அவருக்கு உடலில் எந்த பாதிப்பும் கடைசி வரை வரவில்லை.

    இது போல் பல முற்பிறவி அனுபவங்களை,நாடி மூலம் எனது,
    சொந்த செலவிலே ஆராய்ந்து உள்ளேன்.

    இது போல் பலரின் முற்பிறவி கர்மவினை அனுபவங்களை,ஆராய்ந்து பார்த்த பொழுது எனக்கு தெரிந்த உன்மை இது தான்.

    ''காரணமின்றி இவ்வுலகில் காரியம் எதுவும் நடப்பதில்லை.நாம் இன்று அனுபவிக்கிற இன்பம் துன்பத்திற்கான காரணங்கள்,நம்முடைய முற்பிறவிகளில் உள்ளது''.

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  35. போகர் எழுதியுள்ள அகத்தியர் நாடி ஜோதிடர் நான் வாழ்ந்த தஞ்சாவூர் ஈஸ்வரி நகர்(மருத்துவக் கல்லூரிப்) பகுதியில் சில ஆண்டுகள் இருந்தார்.இப்போது இல்லை.அவருக்கே உட‌ல்,மனோ நிலை பாதிப்பு ஏற்பட்டது என்று கேள்வி.

    பரிஹார காண்டத்தில் முற்பிறவி வாழ்க்கை பற்றி சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    அதிக வட்டி கிடைக்கும் என்று ஆசைப்பட்டு பல டுபாக்கூர் கம்பெனிகளில் முதலீடு செய்து பெருத்த நஷ்டத்திற்கு ஆளான ஒருவருக்கு
    பொதுக் காண்டத்தில் அவருக்கு நட்டம் ஏற்பட்டதைத் துல்லியமாகக் கூறி, ப‌ரிஹார காண்டத்தில் முற்பிறவியில் அநியாய‌ வ‌ட்டி வாங்கிய கந்து வட்டிக்காரராக இருந்ததாகப் போட்டு உடைதார்.

    இந்த நாடி சோதிடத்தில் அந்த‌ ஓலைச் சுவடிகள் அந்த சோதிடக் குடும்பங்களுக்கு இடையே பங்கு பிரிக்கப்பட்டு சிதறிப்போய் உள்ளனவாம். பல போலிகளும் உள்ளனர். போகர் அய்யா சரியான நாடி சோதிடர்களைச் சுட்டினால் நன்றி உடையவர்களாவோம்

    ReplyDelete
  36. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    பாடம்,
    பாப்கார்ன் பதிவு,
    உள்ளேன் ஜயா
    நன்றி./////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  37. /////Blogger kmr.krishnan said...
    //அடடே, ”எனது மருத்துவமனை அனுபங்கள்” என்று சுவாரசியமாக பதிவு எழுதும் அளவிற்கு விஷயதானம் வைத்திருப்பீர்கள் போலிருக்கிறதே! வாரமலரில் ஆன்மீகப் பதிவுகளோடு, ஒரு மாறுதலுக்காக அதுபோன்ற கட்டுரைகளையும் எழுதுங்களேன்!//
    "ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு அப்பாவி"என்ற தலைப்பில் 20 ஜூன் 2012 துக்ளக் இதழில் சோ ராமசுவாமி ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதியுள்ளார்.அவ‌ர்
    மருத்துவமனையில் இருந்த அனுபவம்தான். சுவையாக இருக்கிறது.
    நமது நண்பர் ஆன‌ந்தும் தனது அறுவை சிகிச்சை பற்றி அறிவியலாகவும், சோதிட ரீதியிலும் தன் பிளாகில் எழுதியுள்ளார்.
    நான் 1975 போல ஒரு காஸ்மெடிக் சர்ஜெரி செய்து கொண்டேன்.அதுவும் அது தொடர்பான செய்திகளும் மிகவும் சுவையானவை. ஆனால் இந்த உமா, தேமொழி ஆகியோர் இருக்குமிடத்தில் சொல்ல வெட்கமாக இருக்கிறது.என்னை ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.மைனரும் சேர்ந்தால் அதகளம்தான் போங்கள்.
    பார்வதி அம்மையின் பலமுறை சர்ஜரி ஏன்? அனுபவங்கள் சொல்லக்கூடியதாக இருந்தால் அதனுடைய அறிவியல், நடைமுறைச் சிக்கல்கள், பொருளாதார இழப்புக்கள், ஆகியவை பற்றி நகைச்சுவை கூட்டி எழுதலாம்.பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்./////

    செய்வதாகச் சொல்லிவிட்டார் கிருஷ்ணன் சார்! பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  38. ////Blogger sasikrr said...
    enakku viruchaka lakkanam.9l chevvai,12 l sani.herine operation 2 andukaluku mun nadanthathu.yentha thasa pukthi theriya villai////

    தசா புத்தியைத் தெரிந்து கொள்வதில் என்ன சிரமம்? ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டு கணினி மூலம் ஜாதகத்தை 10 பக்கங்களுக்குப் பிரதி எடுத்துக்கொடுத்துவிடுவார்களே சாமி!

    ReplyDelete
  39. /////Blogger sriganeshh said...
    //எத்தனை மன திடம் இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் நிலவும் அசாத்திய மருத்துவமனைக் கட்டணங்களுக்கு எங்கே போவது? பணம் இருப்பவனை விட்டுத்தள்ளுங்கள். போதிய பணம் இல்லாதவன் என்ன செய்வான்? யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் அல்லது உறவினர்கள் / நண்பர்களிடம் கையேந்த வேண்டு்ம்.//
    சார், பொது இன்சுரன்ஸ் பாலிசிகளில் ஹெல்த் இன்ஸ்சுரன்ஸ் என்று ஒரு பாலிசி உண்டு. இதில் ஃப்ரீ ஃப்ளோட்டர் என்ற வகையில் மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து முடிந்தவரையில் ஒரு பாலிசி எடுத்து வைத்தால், தேவையான பொழுது கைக்கொடுக்கும்./////

    இன்சூரன்சில் மொத்த செலவையும் கொடுத்துவிடுவார்களா என்ன?

    ReplyDelete
  40. /////Blogger Uma said...
    லக் அதி ஆறாம் அதி உடன் ஆறாம் வீட்டில், இதுவரை பார்த்தவர்கள் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்றே சொல்லியிருக்கிறார்கள், நானும் அப்படியே நம்புகிறேன். நல்ல வேளையா சனியும் செவ்வாயும் 1 / 12 பொசிஷன்ல ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத நிலையில்./////

    6/8 அல்லது 1/12 பொசிஷனில் வில்லன்கள் இருப்பது எப்போதுமே நல்லது!

    ReplyDelete
  41. ////Blogger Uma said...
    நான் 1975 போல ஒரு காஸ்மெடிக் சர்ஜெரி செய்து கொண்டேன்.அதுவும் அது தொடர்பான செய்திகளும் மிகவும் சுவையானவை. ஆனால் இந்த உமா, தேமொழி ஆகியோர் இருக்குமிடத்தில் சொல்ல வெட்கமாக இருக்கிறது.என்னை ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.//
    பயப்படாம எழுதுங்க, நாங்க பார்த்துக்க மாட்டோம்////

    அதானே! பார்த்தாலும் பின்னூட்டம் இடமாட்டார்கள். அதுக்கு நான் கியாரண்டி!

    ReplyDelete
  42. //////Blogger ananth said...
    //எட்டாம் வீட்டில் தேமே என்று தனித்திருக்கும் தீய கிரகங்களால், அந்தத் தீமை உண்டாகாது//
    தனி மரம் தோப்பாகாது என்று இதற்கு காரணம் சொல்லலாம். 6,8,12 ஸ்தானாதிபதிகள் (இன்னும் இருக்கிறது) என்று ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களின் பங்கு/உறவு இதில் இருக்கிறது./////

    உண்மைதான் ஆனந்த்! உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  43. /////Blogger thanusu said...
    நல்ல பதிவு அதிலும் மிக்க முக்கயமான விசயம் உள்ள பதிவு.
    சுருங்க சொல்லி விளங்க வைப்பது இதுதான் . நல்ல பதிவு அய்யா .
    இன்றைய மருத்துவ உலகில் அறுவை சிகிச்சை இல்லாத மனிதர்கள் மிக குறைவாகி வருகிறார்கள். குறிப்பாக இன்றைய குழந்தைகளுக்கு கண்டிப்பாக இது நடந்து விடுகிறது. இதை மருத்துவர்களின் முன் ஏற்பாடான சிகிச்சை என்பதா அல்லது வருமான வழி என்பதா ?
    மேல்கண்ட எந்த அமைப்பும் இல்லாமலே என் இரு மகள்களுக்கும் டான்சில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது./////

    சில மருத்துவர்களே சனியாகவும் செவ்வாயாகவும் மாறிவிடுவதால் இது போல ஏற்பட்டு விடுகிறது!

    ReplyDelete
  44. ////Blogger thanusu said...
    /// kmr.krishnan said...நான் 1975 போல ஒரு காஸ்மெடிக் சர்ஜெரி செய்து கொண்டேன்.அதுவும் அது தொடர்பான செய்திகளும் மிகவும் சுவையானவை. ஆனால் இந்த உமா, தேமொழி ஆகியோர் இருக்குமிடத்தில் சொல்ல வெட்கமாக இருக்கிறது.என்னை ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.மைனரும் சேர்ந்தால் அதகளம்தான் போங்கள்.///
    கலகலப்பாக இருக்கட்டுமே இந்த வாரம் ஆக்கமாக போடுங்கள்,/////

    பெண்கள் படிக்க வேண்டாம் என்ற டிஸ்கியுடன் போட்டுவிடுவோம்!

    ReplyDelete
  45. /////Blogger Sowmya said...
    GoodMorning sir
    True sir ..
    Yenakku Saturn 6th lord ,mars eight lord
    Sat exalted in second and Mars deb in 11th ,rendum perum mutual aspect panraanga ..
    Minor ,somewhat major surgeries 4 times nadhandhadhu ...
    Now running ,Ketu MD ,sat AD ,sat ret ,always some or other health problem is there ..sat-mars marupadiyum yedhum problem panni ,surgery situation varumo ?
    BTW all the surgeries Mars/sat AD/PDla thaan aachu ...//////

    பழநி அப்பனை வழிபடுங்கள். உங்களுக்கு இனி ஒன்றும் வராது. செவ்வாயை ஒரு தட்டுத் தட்டி உட்காரவைத்துவிடுவார்!

    ReplyDelete
  46. /////Blogger ஜி ஆலாசியம் said...
    இன்று காரம் தூவிய பாப்கார்ன் சுள்ளுன்னு இருக்கு சார்!
    பதிவுக்கு நன்றிகள் ஐயா!/////

    சரி, அடுத்ததாக இனிப்பைத் தடவிக் கொடுத்து விடுகிறேன்!:-)))

    ReplyDelete
  47. /////Blogger Anandhiselva said...
    விருச்சிக லக்னம் லக்னாதிபதி செவ்வாய் ஆறாமிடத்தில் ஆட்சி, இது வரை மூன்று முறை அறுவை சிகிச்சை செய்தாகி விட்டது. எங்கள் ஜோதிடர் கண்ணை மூடி கொண்டு சொல்லலாம் "ஆறாம் இட செவ்வாய் கத்தி வைக்காமல் விடாது" என்கிறார். உண்மையா? இன்னும் எதனை முறை வைக்க வேண்டி வருமோ தெரியவில்லை. :) . இதுவும் கடந்து போம்!!!/////

    ஆறாம் இடத்தைப் பார்க்கும் இன்னொரு வில்லனைப் பற்றி அவர் சொன்னாரா இல்லையா?

    ReplyDelete
  48. Blogger Bhogar said...
    சில வருடங்களுக்கு முன்னால்,ஐம்பது வயது மதிக்கதக்க ஒருவர், என்னை வந்து சந்தித்தார்.
    தன்னுடைய இருபது வயதில் இருந்தே தனக்கு,
    பல இனம் புரியாத நோய்களால் தாக்கபடுவதாகவும்.
    இதுவரை தன்னுடை உடம்பில் பதினெட்டுக்கு,
    மேற்பட்ட ஆபரேஷன்கள் நடந்துள்ளதாகவும்,என்று சொல்லி தன்னுடைய
    சட்டையை கழற்றி,தன் உடலை காட்டினார்.
    ''அந்த பெரியவரின் உடல் முழுவதும் தழும்புகளாக இருந்தது.ஆப்ரேஷன் செய்து தையல் போட்ட அடையாளங்கள் மிகவும் விகாரமாக தெரிந்தது.பார்த்த நானே சிறிது கலங்கி போய்விட்டேன்''.
    என்னை பார்த்து மிகவும் பரிதாபமாக கேட்டார்.
    தம்பி எனக்கு ஏன் இந்த கொடுமையான நிலை,
    இது ஜாதகம் பார்த்தால் தெரியுமா என்றார்.
    கண்டிப்பாக இது ஜாதகத்திற்கு அப்பற்ப்பட்ட விசயம்,என்பது மட்டும்
    எனக்கு நன்றாக புரிந்தது.
    அப்போது நான் ''முன் ஜென்ம கர்மவினைகள்'' பற்றி,
    மிக தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன்.
    எனவே என்னுடைய சொந்த செலவில்,அவரையும் அழைத்து கொண்டு தஞ்சாவூர் போனேன்.
    அங்கு ஒருவர் வைத்திருந்த''அகத்தியர் ஜீவ நாடி''மூலம்,என்னுடன் வந்தவரின் துன்பத்திற்க்கான காரணம் ஆராயப்பட்டது.
    'அகத்தியரின் ஜீவ நாடியில்'வந்தது இது தான்.
    இன்று எம் எதிரில் நாடி கேட்க வந்துள்ள முதியவனின் நிலை கண்டு அகத்தியன் ஆன யாம் அனுதாபப்படுகிறோம்.
    இருபது வயதில் இருந்து ஐம்பது வயது வரை,
    கடந்த முப்பது வருடங்களாக,தனக்கு வந்த நோய்கள் பற்றியும்,
    அதனால் நடந்த பதினெட்டு அறுவை சிகிச்சைகள் பற்றியும்,
    தனக்கு திருமண வாழ்வில் இருந்து,சராசரி மனித வாழக்கை கூட,
    மறுக்கப்பட்டுள்ளதாக எண்ணி வருத்தம் கொண்டுள்ளான்.
    இப்பிறவியில் தனக்கு சராசரி வாழ்க்கை,அமையவில்லை என்று,கவலைப்படும் இவன்,
    முற்பிறவியில் சராசரியாக வாழவில்லை.
    முற்பிறவியில் இவன் மதுரையில் பிறந்து இருந்தான்.மூர்க்கனாகவும் முரடனாகவும் கூட நட்போடு,
    மதுரையை கலக்கக்கூடிய ரவுடியாக வலம் வந்தான்.
    ''இவனிடம் கத்தியால் குத்துபட்டவர்கள் எத்தனையோ பேர்,
    சில பேர் உடல் உறுப்புகள் பாதிக்கபட்டு நடைப்பிணமாக வாழ்ந்தார்கள்,
    சிலர் இறந்தும் போனார்கள்,,
    முற்பிறவியில் இவனால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் விட்ட சாபத்தாலும்,பாவத்தாலும்,பிரம்மஹத்தி தோசத்தாலும்,
    இவனுக்கு இவ்வளவு உடல்ரீதியாக துன்பங்கள்.
    முற்பிறவியில் ரவுடியாக இருந்து,பலரின் உடல்களை குத்தி கிழித்தான்.
    அதன் காரணமாகவே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோய்கள் வந்து,
    சிகிச்சை என்கிற பெயரிலும்,மருத்துவம் என்கிற பெயரிலும்,கத்திப்பட்டது.பதினெட்டு முறை.//////

    அருணகியார் முற்பிறவியில் என்னவாக இருந்தார். ஏன் அவருக்கு கொடிய துன்பம் இப்பிறவியில் ஏற்பட்டது என்பதை முருகப் பெருமானே நேரில் அவருக்குக் காட்சி கொடுத்துச் சொன்னதாக சரித்திரம் உண்டு. அதுபோல முருகப் பெருமான் நமக்கும் (அட்லீஸ்ட் கனவில்) வந்து சொன்னால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
  49. /////Blogger Bhogar said...
    மேற்கொண்டு தனக்கு எதுவும் அறுவை சிகிச்சை நடக்குமோ என்று,
    இவன் பயப்படுகிறான்.அகத்தியனை நம்பி வந்ததால், இவனுக்கு அந்த துன்பம் ஏற்படாது.
    ஒவ்வொரு மாதத்தில் வருகிற,இவனுடைய ஜென்ம நட்ச்சதிரத்தில்,வைத்தியனுக்கெல்லாம் வைத்தியனாகிய,வைத்தீஸ்வரன்கோவிலில்,குடி கொண்டுள்ள ஈசனை,வைதீஸ்வரனை,வணங்கி வர வேண்டும்.
    மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு,பணம் இல்லாத ஏழைகளுக்கு,தன்னால் முயன்ற அளவிற்கு,பொருளுதவி செய்து வரவேண்டும்.
    இந்த இரண்டு வழிமுறைகளை,வாழ்க்கை முழுவதும் அனுசரித்து வந்தால்,அகத்தியன் அருளால் நலமோடு வாழ்வான்.
    என்று அருள்வாக்கை முடித்தார்.
    இந்த அருள்வாக்கை கேட்ட பெரியவர்,சிறிது நேரம் சிலை போல் அமர்ந்துவிட்டார்.
    தன்னுடைய உடல் சார்ந்த,துன்பத்திற்கெல்லாம்,
    தன் முன் ஜென்ம கர்மவினைகள் தான்,காரணமென்று உணர்ந்து கொண்டதாகவும்,
    அகத்தியர் கூறியபடியே,இனி நடப்பதாகவும் உறுதி எடுத்தார்.
    அகத்தியரின் ஜீவ நாடியை தனக்கு அறிமுகப்படுத்தியதற்கு,எனக்கு நன்றி கூறினார்.
    அகத்தியர் கூறியபடி நடந்ததால்,அவருக்கு உடலில் எந்த பாதிப்பும் கடைசி வரை வரவில்லை.
    இது போல் பல முற்பிறவி அனுபவங்களை,நாடி மூலம் எனது,
    சொந்த செலவிலே ஆராய்ந்து உள்ளேன்.
    இது போல் பலரின் முற்பிறவி கர்மவினை அனுபவங்களை,ஆராய்ந்து பார்த்த பொழுது எனக்கு தெரிந்த உன்மை இது தான்.
    ''காரணமின்றி இவ்வுலகில் காரியம் எதுவும் நடப்பதில்லை.நாம் இன்று அனுபவிக்கிற இன்பம் துன்பத்திற்கான காரணங்கள்,நம்முடைய முற்பிறவிகளில் உள்ளது''.
    ஓம் சரவணபவ நம//////

    முற்பிறவி கர்மவினைகளை எதை வைத்து ஆராய்கிறீர்கள்? அதைப் பற்றிச் சொல்லுங்கள்!

    கூகுள் காமாட்சி அக்காவிடம் கிடைத்த செய்தி:
    The prospect of knowing one's past birth fascinates many people. The Maharishis were capable of 'seeing' the past and future of people just be looking at them. 'Thrikaala gyanam' due to their spiritual strength helped them 'see' like this. Another factor that helps in 'seeing' particularly the past is by analyzing the way one behaves in the present life or by what one experiences in the present life.

    The 'vasanas' of the past births continue in the present birth.

    If there is some particular tendency seen specifically in a person, it can be said that he has carried it from the previous birth.

    Similarly the experiences (both good and bad) of the previous births give their respective results in the present birth. It is possible to relate an experience that 'sucks' one in the present birth to a causative happening in the previous birth. Such experiences can be logically explained. One can understand such connections very well from naadi readings of many people.
    மேலும் படிக்க: http://jayasreesaranathan.blogspot.in/2009/03/knowing-your-previous-birth.html

    ReplyDelete
  50. ////Blogger kmr.krishnan said...
    போகர் எழுதியுள்ள அகத்தியர் நாடி ஜோதிடர் நான் வாழ்ந்த தஞ்சாவூர் ஈஸ்வரி நகர்(மருத்துவக் கல்லூரிப்) பகுதியில் சில ஆண்டுகள் இருந்தார்.இப்போது இல்லை.அவருக்கே உட‌ல்,மனோ நிலை பாதிப்பு ஏற்பட்டது என்று கேள்வி.
    பரிஹார காண்டத்தில் முற்பிறவி வாழ்க்கை பற்றி சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
    அதிக வட்டி கிடைக்கும் என்று ஆசைப்பட்டு பல டுபாக்கூர் கம்பெனிகளில் முதலீடு செய்து பெருத்த நஷ்டத்திற்கு ஆளான ஒருவருக்கு பொதுக் காண்டத்தில் அவருக்கு நட்டம் ஏற்பட்டதைத் துல்லியமாகக் கூறி, ப‌ரிஹார காண்டத்தில் முற்பிறவியில் அநியாய‌ வ‌ட்டி வாங்கிய கந்து வட்டிக்காரராக இருந்ததாகப் போட்டு உடைதார்.
    இந்த நாடி சோதிடத்தில் அந்த‌ ஓலைச் சுவடிகள் அந்த சோதிடக் குடும்பங்களுக்கு இடையே பங்கு பிரிக்கப்பட்டு சிதறிப்போய் உள்ளனவாம். பல போலிகளும் உள்ளனர். போகர் அய்யா சரியான நாடி சோதிடர்களைச் சுட்டினால் நன்றி உடையவர்களாவோம்/////

    சொத்துக்களைப் பங்கு வைத்துக்கொள்வதைபோல சுவடிகளையும் பங்கு வைத்துக்கொண்டுவிட்டார்கள். அதுதான் பிரச்சினை! பேராசைதான் காரணம்!

    ReplyDelete
  51. காரணமின்றி இவ்வுலகில் காரியம் எதுவும் நடப்பதில்லை.நாம் இன்று அனுபவிக்கிற இன்பம் துன்பத்திற்கான காரணங்கள்,நம்முடைய முற்பிறவிகளில் உள்ளது''.

    வழி மொழிகிறோம்
    வணக்கங்களுடன்...

    ReplyDelete
  52. Medical Astrology பற்றி எழுதுவதாக சொன்னீர்களே..
    அதற்கு இது ஆரம்பமோ...
    ஓ...

    ReplyDelete
  53. ///SP.VR. SUBBAIYA said...
    சொத்துக்களைப் பங்கு வைத்துக்கொள்வதைபோல சுவடிகளையும் பங்கு வைத்துக்கொண்டுவிட்டார்கள். அதுதான் பிரச்சினை! பேராசைதான் காரணம்!///

    நம் ராஜராஜ சோழன் செய்தது போல இந்த ஓலைச்சுவடிகளை மக்களின் நலன் கருதி அவற்றை மீட்க வழி செய்ய வேண்டும். அந்தக் குடும்பங்களுக்கு சரியான, அவர்கள் விரும்பும் ஈட்டுத்தொகை கொடுத்து ஓலைகளை மக்களுடமை ஆக்கவேண்டும். இதற்கு அரசு முயற்சி செய்யாவிட்டாலும் வைதீஸ்வரன் கோயில், சிதம்பரம் போன்ற கோயில் நிர்வாகங்களோ, அல்லது ஆதீனங்களோ முயற்சி எடுக்க வேண்டும்.

    அல்லது மக்களும் தொண்டு நிறுவனம் போல அமைப்பு ஒன்றினை உருவாக்கி நிதி திரட்டி அந்த ஓலைகளை பொதுவாக்க வேண்டும். தொன்று தொட்டு தொழில் செய்துவரும் அந்தக் குடும்பங்களின் திறமையை வீணாக்காது அவர்களையே மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்க செய்து அந்த ஓலைகளில் உள்ளவற்றை இணையத்தில் அனைவரும் பயன்படும்படி வைக்க வேண்டும்.

    என் அப்பாவின் நண்பரின் மனைவி இந்த ஓலைகளில் உள்ள செய்யுள்களில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற விரும்பினார். அவர் நாடிஜோதிட நிலையத்திற்கு அதைப் பற்றி தகவல் சேகரிக்க சென்றபொழுது நானும் உடன் சென்றேன். ஓலைகள் கிடைக்காது என்பதே அவருக்கு கிடைத்த பதில். பின் அவர் ஆராய்ச்சிக்கு என்ன செய்தார் என்று எனக்கு தெரியவில்லை.

    இந்தியாவின் காப்புரிமை சட்டத்தின்படி படைப்பாளி இறந்து அறுபது ஆண்டுகள் ஆனால் அது அனைவருக்கும் பயன்படும் நிலையில் பொதுவாகிவிடுகிறது. ஆனால் இதுபோன்று ஒருசிலரின் சுயநலத்தால் அது பயன்படாது போவது படைப்பாளிக்கே விருபமில்லாமல்தான் இருக்கும். இதனால் அழிவது நம் நாட்டில் தோன்றிய கலை/இலக்கியம் ஒன்று.

    This is one of the aspects of entitlement that results in disastrous outcome.

    ReplyDelete
  54. nanri iya,covai iruppathal urukku senru therinthu kolkiren.
    Chevvai kku ,sani parvai irunthal thirumanathil sikkal erpatum enkirarkal.(kadhal,kalappu)unmaiya?
    Sikkalil thirumanam nadaiperuma?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com