மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.6.12

Astrology - Popcorn Posts மயக்கும் உலகத்தில் கிடைக்கும் வாய்ப்புக்கள்!

Astrology - Popcorn Posts மயக்கும் உலகத்தில் கிடைக்கும் வாய்ப்புக்கள்!

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி ஒன்று!

யாருக்குத்தான் ஆசை இல்லை? பெரும்பாலான மக்களுக்குத் திரைப்படங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. சிலர் வெளியே சொல்லுவார்கள். சிலர் சொல்ல மாட்டார்கள். சிலர் கடும் முயற்சி செய்து அதில் ஒரு இடத்தைப் பிடிப்பார்கள். சிலர் அதுவாகத் தேடி வரட்டும் என்று காத்திருப்பார்கள்.

பணம், பெயர், புகழ் என்று ஒரு சேர எல்லாம் கிடைக்கும் துறை ஒன்று உண்டென்றால், அது சந்தேகத்திற்கு இடமின்றி திரைப்படத்துறைதான்.

அதிலும் நடிகர் அல்லது பாடகர் என்றால் அதி விரைவில், புகழின் உச்சிக்குப் போய்விடலாம். எண்ணற்ற ரசிகர்கள் வேறு கிடைப்பார்கள்.

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி?

அதை இன்று பார்ப்போம்!

சுக்கிரன் ஜாதகத்தில் வலுவாக (Strong) இருந்தால் எல்லாக் கலைகளும் எளிதில் கைவரும்!

நடிப்பும், பாடும் திறமையும் கலையோடு சம்பந்தப்பட்டது. அதை மனதில் கொள்க!

சரி, அதையே தொழிலாகக் கொள்வதற்கு என்ன அமைப்பு வேண்டும்?

தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டுடன் சுக்கிரனுக்கு நல்ல சம்பந்தம் அல்லது நல்ல தொடர்பு இருக்க வேண்டும். நேரடியாகவும் இருக்கலாம் அல்லது மறைமுகமாகவும் இருக்கலாம். இருக்க வேண்டும்.

4ஆம் வீட்டில் அல்லது 10ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் நிலை. அல்லது 10ஆம் வீட்டின் மீது சுக்கிரனின் பார்வை அல்லது 10ஆம் வீட்டுக்காரனுடன் சுக்கிரன் கூட்டாக (ஒன்றாக) இருக்கும் நிலைமை ஆகியவை அந்த வாய்ப்பை நல்கும்!
------------------------------------------------------------------------------
உதாரணம்

நடிகர் திரு ரஜினிகாந்த்தின் ஜாதகம்.

சிம்ம லக்கின ஜாதகர். சிம்ம லக்கினம் நாயகர்களுக்கு (Heroes) உரிய லக்கினம்
பத்தாம் வீட்டின் (ரிஷப வீட்டின்) அதிபதியே சுக்கிரன். அதுவும் அவர் அம்சத்தில் ஆட்சி பலத்துடன் உள்ளார். லக்கினாதிபதி சூரியன் கேந்திரத்தில் அமர்ந்து பத்தாம் வீட்டைத் தன் பார்வையில் வத்திருப்பது ஒரு சிறப்பாகும்!
இந்த அமைப்புக்கள்தான் அவரை நடிகராக்கின!
++++++++++++++++++++++++++++++++
“வாத்தி (யார்) அதென்ன புதிதாக பாப்கார்ன் பதிவுகள் என்ற பெயர்”

“கண்ணா, கொறிக்கும்படியாக ஒரே ஒரு மேட்டரை (செய்தியை அல்லது விதியை -astrological rule)  வைத்து, மனதில் பதியும் படியாக எழுதப்பெறும் பதிவுகளுக்கு இனி அந்தப் பெயர்தான்!”

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

27 comments:

  1. பாப்கார்ன் போஸ்ட்டுக்கு நல்வரவு .

    நம் ரஜினி தன் குரு தசையில் தான் உச்சத்திற்கு சென்றார். அந்த குரு அம்சத்திலும் ஆட்சி.

    ////கண்ணா கொறிக்கும்படியாக ஒரே ஒரு மேட்டரை....மனதில் பதியும் படியாக////

    அந்த குறிப்புகளோடு இந்த மாதிரியான வரிகளும் மனதில் பதிந்து விடுகிறது அய்யா.

    ReplyDelete
  2. எளிதில் கவரும் நபர் - ரஜினிகாந்த்.

    அவர் ஜாதகத்தில் உள்ள கலைஞனுக்குரிய கிரக சூழ்நிலையை எளிமையாக விளக்கியிருந்தது அருமை ஐயா.

    **********
    ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் ராசியில் சமம்(விருச்சிகம்), அம்சத்தில் பகை(கடகம்),

    இராசி, அம்சம் இரண்டிலுமே இரண்டாம் இடத்தில் அமைந்திருக்கிறது.-இது வாக்குக்கும் உரிய ஸ்தானம். சுக்கிரன் சுய வர்க்கத்தில் 6 பரல்களுடன் இருக்கிறார். ஜாதகர் கதாசிரியர்.

    ReplyDelete
  3. பாப்கார்ன் பதிவிற்கு வாழ்த்துக்கள்..
    பண்புடன் வரவேற்று மகிழ்கிறோம்

    பைபிள் அங்கில் தளத்தில் தான்
    பாப்கார்ன் பதிவுகள் என பெயரிட்டு பார்த்திருக்கிறேன்

    நம் வகுப்பிலும் வந்த
    சுடச்சுட வந்த பாப்கார்ன்னுக்கும்

    கடைசியில் வைச்ச பஞ்சிற்கும்..
    வாழ்த்துக்களும் வணக்கமும்.

    ReplyDelete
  4. ஐயா பாப்கார்ன் பதிவு மிகவும் பிடித்திருக்கிறது :))))
    இதுபோன்ற பதிவுகளை மிக ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

    என் ஜாதகத்தின் சுயபரிசோதனை:
    (1). ///சுக்கிரன் ஜாதகத்தில் வலுவாக (Strong) இருந்தால் எல்லாக் கலைகளும் எளிதில் கைவரும்!///
    சுக்கிரன் எனக்கு ஏழில் இருக்கிறாரே ராகுவுடன்

    (2). ///நடிப்பும், பாடும் திறமையும் கலையோடு சம்பந்தப்பட்டது. அதை மனதில் கொள்க!///
    அடடா, இது மட்டும் இல்லாமப் போச்சே...செத்துப்போன ஆளா நடிக்க சொன்னாக் கூட அபத்தமா நடு நடுவில சிரிச்சு நிறைய ஷாட் வாங்குவேன்னு வீட்டில எல்லோரோட அபிப்ராயப் படுவாங்க.

    (3).///அதையே தொழிலாகக் கொள்வதற்கு என்ன அமைப்பு வேண்டும்?
    தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டுடன் சுக்கிரனுக்கு நல்ல சம்பந்தம் அல்லது நல்ல தொடர்பு இருக்க வேண்டும். நேரடியாகவும் இருக்கலாம் அல்லது மறைமுகமாகவும் இருக்கலாம். இருக்க வேண்டும்.///
    ரஜினிக்கு இருப்பதுபோலவே எனக்கும் எல்லாம்... என் மகர லக்கினத்திற்கு பத்தாம் வீட்டின் (துலா) அதிபதியே சுக்கிரன். அதுவும் சுக்கிரன் அம்சத்தில், துலாவில் ஆட்சி பலத்துடன் உள்ளார். என் லக்கினாதிபதி சனியும் லக்கினத்தில் அமர்ந்து பத்தாம் பார்வையாக பத்தாம் வீட்டை தன் பார்வையில் வைத்திருக்கிறார். ஆஹா, இது எல்லாமே இருக்கே.

    ஐயா, இந்த இராண்டாவது பாய்ண்ட்தான் கொஞ்சம் உதைக்குது. அது தவிர மத்தபடி ஓகே. அது அவ்வளவு முக்கியமில்லன்னு வச்சிக்கிரேனே. ப்ளீஸ் ...

    ReplyDelete
  5. Guru vanakkam,

    Sukran 7la. adhanla rasikaradhoda sari.

    Ramadu.

    ReplyDelete
  6. குருவிற்கு வணக்கம்
    பாப்கார்ன் நல்ல புதிய பதிவு
    நன்றி

    ReplyDelete
  7. தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் சுக்கிரனுக்கு நல்ல சம்பந்தம் இருந்தால் கலைகளில் தேர்ச்சி .அதுவே கர்மகாரகன் சனிக்கு பத்தாம் இடத்தோடு நல்ல சம்பந்தம் இருந்தால் தொழிலில் வியாபாரத்தில் தேர்ச்சி இருக்கும் எனக்கொள்ளலாமா அய்யா .

    எந்த விதமான தொழில் வியாபார தேர்ச்சி இருக்கும் அய்யா .

    ReplyDelete
  8. பாப்கார்ன் சூடாக,காரமாக,நமத்து போகாமல்(பல்லை பதம் பார்க்காமல் ) நன்று!!!

    ReplyDelete
  9. /////Blogger arul said...
    arumayana pathivu ayya/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ////Blogger thanusu said...
    பாப்கார்ன் போஸ்ட்டுக்கு நல்வரவு .
    நம் ரஜினி தன் குரு தசையில் தான் உச்சத்திற்கு சென்றார். அந்த குரு அம்சத்திலும் ஆட்சி.
    ////கண்ணா கொறிக்கும்படியாக ஒரே ஒரு மேட்டரை....மனதில் பதியும் படியாக////
    அந்த குறிப்புகளோடு இந்த மாதிரியான வரிகளும் மனதில் பதிந்து விடுகிறது அய்யா.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ///Blogger சரண் said...
    எளிதில் கவரும் நபர் - ரஜினிகாந்த்.
    அவர் ஜாதகத்தில் உள்ள கலைஞனுக்குரிய கிரக சூழ்நிலையை எளிமையாக விளக்கியிருந்தது அருமை ஐயா.
    ---------------------
    ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் ராசியில் சமம்(விருச்சிகம்), அம்சத்தில் பகை(கடகம்),
    இராசி, அம்சம் இரண்டிலுமே இரண்டாம் இடத்தில் அமைந்திருக்கிறது.-இது வாக்குக்கும் உரிய ஸ்தானம். சுக்கிரன் சுய வர்க்கத்தில் 6 பரல்களுடன் இருக்கிறார். ஜாதகர் கதாசிரியர்./////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. ////Blogger அய்யர் said...
    பாப்கார்ன் பதிவிற்கு வாழ்த்துக்கள்..
    பண்புடன் வரவேற்று மகிழ்கிறோம்
    பைபிள் அங்கில் தளத்தில் தான்
    பாப்கார்ன் பதிவுகள் என பெயரிட்டு பார்த்திருக்கிறேன்
    நம் வகுப்பிலும் வந்த
    சுடச்சுட வந்த பாப்கார்ன்னுக்கும்
    கடைசியில் வைச்ச பஞ்சிற்கும்..
    வாழ்த்துக்களும் வணக்கமும்./////

    நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  13. /////Blogger srinits78 said...
    Nalla irukku/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. Blogger தேமொழி said...
    ஐயா பாப்கார்ன் பதிவு மிகவும் பிடித்திருக்கிறது :))))
    இதுபோன்ற பதிவுகளை மிக ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
    என் ஜாதகத்தின் சுயபரிசோதனை:
    (1). ///சுக்கிரன் ஜாதகத்தில் வலுவாக (Strong) இருந்தால் எல்லாக் கலைகளும் எளிதில் கைவரும்!///
    சுக்கிரன் எனக்கு ஏழில் இருக்கிறாரே ராகுவுடன்
    (2). ///நடிப்பும், பாடும் திறமையும் கலையோடு சம்பந்தப்பட்டது. அதை மனதில் கொள்க!///
    அடடா, இது மட்டும் இல்லாமப் போச்சே...செத்துப்போன ஆளா நடிக்க சொன்னாக் கூட அபத்தமா நடு நடுவில சிரிச்சு நிறைய ஷாட் வாங்குவேன்னு வீட்டில எல்லோரோட அபிப்ராயப் படுவாங்க.
    (3).///அதையே தொழிலாகக் கொள்வதற்கு என்ன அமைப்பு வேண்டும்?
    தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டுடன் சுக்கிரனுக்கு நல்ல சம்பந்தம் அல்லது நல்ல தொடர்பு இருக்க வேண்டும். நேரடியாகவும் இருக்கலாம் அல்லது மறைமுகமாகவும் இருக்கலாம். இருக்க வேண்டும்.///
    ரஜினிக்கு இருப்பதுபோலவே எனக்கும் எல்லாம்... என் மகர லக்கினத்திற்கு பத்தாம் வீட்டின் (துலா) அதிபதியே சுக்கிரன். அதுவும் சுக்கிரன் அம்சத்தில், துலாவில் ஆட்சி பலத்துடன் உள்ளார். என் லக்கினாதிபதி சனியும் லக்கினத்தில் அமர்ந்து பத்தாம் பார்வையாக பத்தாம் வீட்டை தன் பார்வையில் வைத்திருக்கிறார். ஆஹா, இது எல்லாமே இருக்கே.
    ஐயா, இந்த இராண்டாவது பாய்ண்ட்தான் கொஞ்சம் உதைக்குது. அது தவிர மத்தபடி ஓகே. அது அவ்வளவு முக்கியமில்லன்னு வச்சிக்கிறேனே. ப்ளீஸ் ...//////

    திரையுலகம் தப்பிப் பிழைத்ததற்கு சந்தோஷப் படுங்கள்:-))))))

    ReplyDelete
  15. ///Blogger RAMADU Family said...
    Guru vanakkam,
    Sukran 7la. adhanla rasikaradhoda sari.
    Ramadu.////

    ரசனை இருந்தால் போதும். எப்போது மகிழ்ச்சியோடு இருக்கலாம். ரசிப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் உள்ளன!

    ReplyDelete
  16. பதிவிற்கு நன்றி சார்! எனக்கும் ஜாதகத்தில் சுக் (நான்கு, பத்தாம் இடத்தின் அதி) வலுவாக நான்காம் இடத்தில், பத்தாம் வீட்டை நேரடிப்பார்வையில் பார்க்கிறார். கலைகளில் ஆர்வம் இருக்க இதுதான் காரணம் என நினைக்கிறேன். ஆனால் அம்சத்தில் பகை கிரகமான சூரியனுடன் ஏழில்.

    ReplyDelete
  17. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    பாப்கார்ன் நல்ல புதிய பதிவு
    நன்றி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ////Blogger thanusu said...
    தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் சுக்கிரனுக்கு நல்ல சம்பந்தம் இருந்தால் கலைகளில் தேர்ச்சி .அதுவே கர்மகாரகன் சனிக்கு பத்தாம் இடத்தோடு நல்ல சம்பந்தம் இருந்தால் தொழிலில் வியாபாரத்தில் தேர்ச்சி இருக்கும் எனக்கொள்ளலாமா அய்யா .
    எந்த விதமான தொழில் வியாபார தேர்ச்சி இருக்கும் அய்யா/////

    செய்யும் தொழிலில் ஏற்றம் இருக்கும். என்ன தொழில் அல்லது வியாபாரம் என்பதற்கெல்லாம் வேறு அமைப்புக்கள் உள்ளன. பழைய பாடங்களில் உள்ளது. படித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  19. ////Blogger Ananthamurugan said...
    பாப்கார்ன் சூடாக,காரமாக,நமத்து போகாமல்(பல்லை பதம் பார்க்காமல் ) நன்று!!!/////

    அப்படி இருந்தால்தானே கொறிக்க முடியும்!

    ReplyDelete
  20. ////Blogger Uma said...
    பதிவிற்கு நன்றி சார்! எனக்கும் ஜாதகத்தில் சுக் (நான்கு, பத்தாம் இடத்தின் அதி) வலுவாக நான்காம் இடத்தில், பத்தாம் வீட்டை நேரடிப்பார்வையில் பார்க்கிறார். கலைகளில் ஆர்வம் இருக்க இதுதான் காரணம் என நினைக்கிறேன். ஆனால் அம்சத்தில் பகை கிரகமான சூரியனுடன் ஏழில்./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  21. (உலகம் என்னும் மேடையிலே)

    நாம் எல்லோருமே நடிகர்கள் தான்..
    உறவுகளிடம் நட்புகளிடம் என பல்வேறு நிலைகளில் பல்வேறு பாத்திரங்களில் நடித்துக் கொண்டு தானே இருக்கின்றோம் சகோதரியாரே..

    இந்த நடிப்பிலும்
    சிலருக்கு பணம் (சொத்து) கிடைக்கலாம்
    சிலருக்கு உறவுகளின் பாராட்டும் கிடைக்கலாம்..
    சிலருக்கு உறவுகளின் மத்தியில் மதிப்பும் கிடைக்கலாம்..

    ஷூட்டிங், கால் ஷீட், கட், ஸ்டார்ட் என டெக்னிக்கல் வார்த்தைகள் இல்லாத நடிப்பு தான்..

    நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து

    என மாணிக்கவாசகரின் வார்த்தைகளை நினைத்து..

    வணக்கமும்வாழ்த்துக்களும்

    ReplyDelete
  22. //நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து//

    என் முந்தைய ஆக்கமான 'எதனால்தான் இந்தப் பாசாங்கு?'என்பதில் வந்திருக்க வேண்டிய வரிகள் இங்கே வந்துள்ளன.போகட்டும் இங்கேயாவது வந்ததே என்று மகிழ்ச்சிதான்.
    ============================================
    என் ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமடைந்து லக்னம் ராசி இரண்டுக்கும் 3ல் மறைந்து கேதுவுடன் கூட்டணி போட்டு 6,9க்குடைய நீச குருவின் பார்வை, 5,10க்குடைய யோககாரகன் (12ல் நின்று) செவ்வாயின் பார்வையை பெற்றுள்ளார். நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார்.பள்ளி நாடகங்களில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடித்துள்ளேன்.

    வீட்டுத்திண்ணையிலும் அம்மாவின் புடவை, அக்காவின் தாவணிகளை திரைச் சீலையாகத் தொங்கவிட்டு அட்டைக்கிரீடம், அட்டைக்கத்தி எல்லாம் ஜிகினா ஒட்டி, அமர்களமாக நாடகம் போட்டுள்ளேன். கதை,வசனம், இயக்கம்,
    இசை என்று அனைத்திலும் டி ஆருக்கு முன்பே கால்பதித்து இருந்தும் அந்தப் பாதையில் பயணிக்க முடியாமல் போனதற்குக்காரணம் 9ல் ராகு, 10க்குடையவன் 12ல் மறைவு! திரைத் துறைக்குப் பெரிய நஷ்டம்தான்

    ReplyDelete
  23. ///kmr.krishnan said...
    இங்கேயாவது வந்ததே என்று மகிழ்ச்சிதான்.////

    தங்கள் எப்படி சொல்கிறீர்களோ அவ்வண்ணமே... அடியேனும்...

    (இது
    உண்மையில் நடிப்பல்ல...
    உணர்வுகள் சொல்லும் நிஜம்.. என்று)

    ReplyDelete
  24. நிறைய பப்கோர்ன்களுக்காக சிறுவர்கள் நாம் வரிசையில் காத்திருக்கிறோம் வாத்தியாரே!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com