மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.6.12

Astrology Popcorn Posts முற்பிறவி, கர்மவினை என்றெல்லாம் சொல்லி ஏன்(டா) பயமுறுத்துகிறீர்கள்?

Astrology  Popcorn Posts முற்பிறவி, கர்மவினை என்றெல்லாம் சொல்லி  ஏன்(டா) பயமுறுத்துகிறீர்கள்?

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி 5

”இன்றைய வாழ்க்கையில் ஏன் இத்தனை துயரங்கள், துன்பங்கள், தொல்லைகள் என்றால், ஜாதகப்படி முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே (உரியதாகவே) அடுத்த பிறவி அமையும். ஆகவே முற்பிறவியின் கூட்டுப் பலன் தான் இப்பிறவி என்று சொல்கிறார்கள். ஒரே வார்த்தையில் கர்மவினை என்கிறார்கள். வாத்தியார் என்னடாவென்றால் வாங்கி வந்த வரம் என்கிறார். அப்படி முற்பிறவியில் என்னதான் செய்தேன்? அதைத் தெரிந்து கொள்ள வழி இருக்கிறதா?”

”இருக்கிறது. ஒருவரின் ஜாதகம் அவர் முற்பிறவியில் செய்த நன்மை, தீமைகளைக் கோடிட்டுக் காட்டும்.”

”எப்படி?”

”கிரகங்கள் எல்லாம் வலுவிழந்து இருந்தாலும் அல்லது 3, 6, 8, 12 என்று தீய வீடுகளில் போய் படுத்திருந்தாலும்,  ஜாதகன் முற்பிறவியில் புண்ணியத்தைவிட பாபங்களையே (பாவங்களையே) அதிகமாகச் செய்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம். சில கிரகங்கள், குறிப்பாக சுபக் கிரகங்களான, குரு, சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியவை ஜாதகத்தில் வலுவாக இருந்தால் ஜாதகன் முற்பிறவியில் புண்ணியங்களை, தர்மங்களை அதிகமாகச் செய்திருக்கிறான் என்றும் தெரிந்து கொள்ளலாம்.”

”கோடிட்டுக் காட்டாமல், விளக்கமாகச் சொல்ல வழி இல்லையா?”

”இருக்கிறது. அதற்கு பிரசன்ன ஜோதிடம் உங்களுக்கு உதவும்.”

”பிரசன்ன ஜோதிடமா? அது என்ன புதுக் கரடி?

”நடைமுறை ஜோதிடத்தைப்போல, அதுவும் ஜோதிடத்தின் வேறு ஒரு பகுதி. நடைமுறை ஜோதிடத்தில் இருந்து அது முற்றிலும் மாறு பட்டது. பிரசன்ன ஜோதிடம் மிகவும் விரிவானது. பிறகு ஒரு சமயம், நேரம் கிடைக்கும்போது, அதை விரிவாக - தொடராக எழுதலாம் என்றுள்ளேன். என்னிடம் பழைய நூல் ஒன்று உள்ளது. அதைப் படித்தால் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும். ஏராளமான  வடமொழிச் சொற்கள்.முதலில் நான் ஒரு வடமொழி தெரிந்த வாத்தியாரை வைத்து அந்தச் சொற்களுக்கெல்லாம் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகுதான் விரிவு படுத்தி எழுத முடியும். என் நடையில் அனைவருக்கும் புரியும்படி எழுத முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் தற்சமயம் நேரமில்லை. ஒரு ஆண்டு பொறுத்துக்கொள்ளுங்கள்.
----------------------------------------------------------------------
Prasanna or Horary Astrology

The Prasanna branch is another unique division of Vedic Astrology. When a person asks a question to an astrologer, based on the time at which the question is asked, a horoscope is made for that time and date. With the help of this chart the astrologer predicts about the events that are going to take place. There are several types of Prasanna systems and it is almost a separate science by itself. Normally the Prasanna chart is studied along with the birth chart to give an additional dimension to predict the results correctly.

Horary Astrology is based on Hora or Hour.  Its principles are  similar to the principles of Natal Astrology.  Some factors which are unknown to Natal Astrology is known to Horary. For instance, a person may not have his time of birth. So he asks the Astrologer  questions and these questions are answered by Horary.

Karma =  The consequences of our past actions in this and previous lifetimes.
-------------------------------------------------------------------
முற்பிறவி

பிரசன்ன ஜோதிடத்தின் இன்னொரு பிரிவில், முற்பிறவியைக் குறித்து தெரிந்து கொள்ளும் வழி உள்ளது.

பிரசன்ன ஜோதிடத்தில், முற்பிறவியைக் குறித்து கேள்வி கேட்கப்படும் நேரத்தை வைத்து அந்த நிமிடத்திற்கான ஜாதகத்தைக் கணிப்பார்கள்.  கணிக்கப்பெற்ற ஜாதகத்தில், கீழ்க்கண்டவாறு வீடுகளை எடுத்துக் கொண்டு, ஜாதகனின் முற்பிறவியைச் சொல்வார்கள். முற்பிறவியில் அவன் செய்த சேட்டைகளூம், தேட்டைகளும், போட்ட ஆட்டங்களும், போட்ட ஆட்டைகளும் தெரியவரும்.

புண்ணிய ஆத்மாக்களின் ஜாதகத்தில் செய்த புண்ணியங்களும் தெரியவரும்!

அவ்வாறு கணிக்கப்பெற்ற முற்பிறவிக்கான பிரசன்ன ஜாதகத்தில் உள்ள 9ஆம் வீடுதான் லக்கினம்: அதை வைத்து கர்மாவின் சுயரூபத்தைச் சொல்வார்கள் (Karma Swarupa)

10ம் வீடு கர்ம தானம் (karma Dhana)
11ம் வீடு கர்ம சகாயம் (karma Sahaya)
12ம் வீடு கர்ம அதிகரணா (Karma Adhikarana)
1ம் வீடு கர்ம பூதவஸ்து (Karma Bhutha Vasthu)
2ம் வீடு கர்ம நாசகர்னா (Karma Nasa karana)
3ம் வீடு கர்ம சஹசார்யம் (Karma sahachari)
4ம் வீடு கர்மயூஸ் (Karmayus)
5ம் வீடு கர்ம பாக்கியம் (Karma Bhagya)
6ம் வீடு கர்மவியாபாரம் (Karma Vyapara)
7ம் வீடு கர்ம லாபம் (Karma Labha)
8ம் வீடு கர்மவியாயா (Karma Vyaya)

இதற்கெல்லாம் அர்த்தத்தை (பொருளை) நம் பெங்களூரு அம்மையார்தான் சொல்ல வேண்டும்! பின்னூட்டத்தில் சொல்வார்கள். பொறுத்திருங்கள்!
---------------------------------------------------
இடைச் சேர்க்கை:

வடமொழிச் சொற்களுக்கான பொருள் விளக்கத்தை நமது வகுப்பறை மாணவர் திரு.ஸ்ரீகணேஷ் அவர்கள் தன்னுடைய பின்னூட்டத்தில் தெரியப்படுத்தியிருந்தார். பதிவைப் படிப்பவர்களுக்கு அவைகள் உடனடியாகப் பயன் படட்டும் என்று பதிவில் உள்ளிட்டிருக்கிறேன். அன்பருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!

10ம் வீடு கர்ம தனம் (karma Dhana)
11ம் வீடு கர்ம சகாயம் (karma Sahaya)
सहाय ‍இதற்கு பின்பற்றுவோர், கம்பானியன், உதவி செய்பவர், வேலைக்காரர்கள் என்று லிஸ்ட் போடலாம்.
12ம் வீடு கர்ம அதிகரணா (Karma Adhikarana)
இதில் அதிகாரணா வில் வரும் "த" என்ற எழுத்துக்கு ஏற்ப அர்த்தம் கொள்ளலாம். முதன்மையான காரணம், (அ) மேற்பார்வையிடுதல் அதாவது சூப்பர்வைசிங்
1ம் வீடு கர்ம பூதவஸ்து (Karma Bhutha Vasthu)
பூத என்ற பூதம் என்ற பொருளில் கெட்ட என்றும் கொள்ளலாம், வஸ்து என்றால் பொருட்கள், பஞ்சபூதம் என்ற சொல்லில் வரும் அந்த அர்த்தமும் வரலாம். தேவ நாகரி எழுத்துக்களுக்கு ஏற்ப பொருள் கொள்ளலாம்.
2ம் வீடு கர்ம நாசகர்னா (Karma Nasa karana)
இதில் நாசகர்ணா (அ) காரண வா என்று தெரியவில்லை. காரண என்பது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது...அப்படி என்றால் நாசத்திற்கு காரணமான என்று எடுக்கலாம்...
3ம் வீடு கர்ம சஹசார்யம் (Karma sahachari)
சஹசார்யம் என்றால் தர்மபத்தினி அல்லது சகவாச தோழி என்றும் கொள்ளலாம்.
4ம் வீடு கர்ம ஆயூஸ் (Karmayus)
இது ஆயுள்
5ம் வீடு கர்ம பாக்கியம் (Karma Bhagya)
6ம் வீடு கர்மவியாபாரம் (Karma Vyapara)
7ம் வீடு கர்ம லாபம் (Karma Labha)
மேல் சொன்ன மூன்றும் நார்மல் அர்த்தம் தான். பாக்கியம், வியாபாரம், லாபம்
8ம் வீடு கர்மவியாயா (Karma Vyaya)
வ்யாயா என்பது செலவு, விரையமாகுதல்,என்று வெவ்வேறு பொருள் வரலாம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++====
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

123 comments:

  1. நான் ஆறு ஆண்டுகளுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்க்க சென்றபோது எனக்கு அவர்கள் சொன்ன முற்பிறவி பலன்களை மறுத்துப்பேச இயலவில்லை. வாழ்வின் இளம் வயதில் மிக அதிகமான கொடுமைக்காரனாகவும், பிற்பகுதியில் நிறைய சிவாலயங்களில் திருப்பணி செய்தவனாகவும் இருந்திருக்கிறேன். அதனால்தான் இந்தபிறவியில் இளம் வயதில் மிக மிக அதிக கஷ்டத்தை அனுபவித்து வந்தாலும் அதே நேரத்தில் நிறைய ஆலயங்களில் வழிபாடு செய்வதற்கும் கோவிலின் திருப்பணியில் ஈடுபடுவதற்கும் உரிய வாய்ப்பை இறைவன் வழ்ங்கியிருக்கிறான் என்று கூறினார்கள்.

    இதை நான் மறுக்காததற்கு காரணம், 1. அவர்கள் சொன்னபோது நாங்கள் இப்போது திருப்பணி செய்து வரும் ஆலயத்தில் திருப்பணி செய்து வரும் யோசனையே இல்லை. 2. நான் சொந்த தொழில்தான் செய்வேன், யாரிடமும் வேலை பார்க்க மாட்டேன் என்று கூறி எப்போது அந்த சொந்த தொழில் அமையும் என்பது வரை கூறினார்கள். மேலே கூறிய இரண்டும் அப்படியே நடந்தது.

    பொதுவாக ஜோதிடத்திலோ, பிரசன்னத்திலோ கடந்த காலத்தை மிகச் சரியாக சொல்லிவிட்டு எதிர்காலத்தை கோடிட்டு காட்டுவதில் சொதப்புவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ஆனால் என் விஷயத்தில் மேலே சொன்ன 2 விஷயம் தவிர இன்னும் சில விஷயங்கள் சொன்னார்கள். அதை எல்லாம் நான் அப்போதே மறந்து விட்டேன். இப்போது வகுப்பறைக்கு வந்த பிறகு மீண்டும் அசை போடும்போது, நான் வேறு திட்டத்துடன் செயல்பட்டு வந்தாலும் நாடி ஜோதிடத்தில் அவர்கள் சொன்ன பாதைக்கு வேறு ஏதோ ஒரு சக்தியினால் அல்லது சூழ் நிலையினால் தள்ளிச்செல்லப்பட்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிகிறது.

    ReplyDelete
  2. சரண் அவர்களே,
    வைதீஸ்வரன் கோயிலுக்கு நானும் போனேன் அனால் கோயிலுக்கு தான். அங்கே எல்லாரும் எச்சரித்தார்கள் உங்களை ஏமாற்றுவார்கள் என்று.
    யார் உண்மையான நாடி ஜோசியர் யார் போலி என வெளியூர் காரனான எனக்கு தெரியாததால் சும்மா வந்து விட்டேன்.
    நல்ல அனுபவம் உடைய நண்பர்களான உங்களை போன்றோர் இடத்தை காட்டினால் ஏன் போன்ற மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
    நன்றி.

    ReplyDelete
  3. //இதற்கெல்லாம் அர்த்தத்தை (பொருளை) நம் பெங்களூரு அம்மையார்தான் சொல்ல வேண்டும்! பின்னூட்டத்தில் சொல்வார்கள். பொறுத்திருங்கள்!//

    தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. உண்மையில் இதில் சில சொற்கள் கடினமானதாக இருக்கின்றன. சில ஹிந்திச் சொற்களும் (மூலம் சம்ஸ்கிருதமாக இருக்கலாம்) இருக்கின்றன.

    இதில், (கர்ம) தனம் (தானம் அல்ல), சகாயம் (உதவி), அதிகாரணா( இடம், அதிகாரம், உடைமைகள்) , சஹசாரி(ஹிந்தி) உடன் வருவோர், பாக்ய, வியாபாரா, லாபா, வியாயா(செலவு அல்லது விரயம்) முதலியவை தெரிகிறது. இதைக் கர்ம என்னும் சொல்லுடன் சேர்த்துப் பொருள் சொல்வது ப்ரசன்ன ஜோதிடம் நன்கு அறிந்தவர்களாலேயே இயலும் என்று நினைக்கிறேன்.

    சம்ஸ்கிருதத்தில் மிகுந்த பாண்டித்தியம் உடைய, உயர்திரு. ஸ்ரீகணேஷ் மற்றும், அன்புச் சகோதரர் புவனேஷ்வர் அவர்களோ கர்ம பூதவஸ்து, கர்ம நாசகர்னா, கர்மயூஸ் போன்ற வார்த்தைகளுக்கு பொருள் கூற இயலும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. மதிப்புக்கு உரிய சகோதரி பார்வதி அவர்கள் கூறிய விளக்கத்தை நான் வழி மொழிகிறேன்.

    அவை அனைத்துமே தெள்ளிய வடமொழி பதங்கள்.

    கர்ம என்ற முன் பதத்தை போட்டு இருப்பது "கர்மத்தால் விளைந்த ___" என்ற பொருளில் என நம்புகிறேன்.
    எடுத்துக்காட்டாக கர்ம சஹசார்யம் - சார்யம் என்றால் கடைப்பிடித்தல்/ஒட்டி ஒழுகுதல் என பொருள் படும். அதாவது கூட வாழ்பவர்கள் - சுற்றம். மனைவி மட்டும் அல்லாது, நண்பரும் உறவினரும் சூழ்ந்து இருப்போரும் அடக்கம்.

    கர்மத்தால் விளைந்த சுற்றம் என பொருள் வருகிற போழ்து நாம் முற்பிறப்பின் பயனாக இப்பிறப்பில் அடைந்த சுற்றம் என பொருள் கொள்ளலாம் என நம்புகிறேன்.
    ++++++
    கர்ம பூத வஸ்து: சொத்துக்கள் - முன் பிறப்பில் செய்த வினை பயனாக இப்பிறப்பில் நமக்கு கிட்டிய வீடு வாசல், வண்டி வாகம், சௌகர்ய சாதங்கள் முதலியன என நம்புகிறேன்.
    கர்மாயுஸ்: முன் வினைப்பயனாக நமக்கு கிட்டிய வாழ்நாட்கள் என நம்புகிறேன்.
    கர்ம நாசகர்னா: கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. நாச கர்ணா என்றால் அழிக்கும் வழி/அழிக்கும் ஹேது என பொருள் வரும். ஒரு வேளை நல வினைப்பயனாக இப்பிறப்பில் நமக்கு கிட்டும் நம் வினைகளை அறுக்கும் உபாயம் என பொருள் கொள்ளலாமா?
    ++++++
    எனக்கு வடமொழியில் பெரிய பாண்டித்தியம் என்று சொல்லிக்கொள்கிற அளவுக்கு சரக்கு இல்லை.
    அன்புச்சகோதரியின் பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி கூறுவதோடு நில்லாமல், அதற்காகவாவது இன்னும் படிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.
    ++++++
    நண்பர் ஸ்ரீ கணேஷ் அவர்களும் தமது விளக்கத்தை தந்தால் அனைவரும் பயன் பெறுவோம். :)

    ReplyDelete
  5. லால்குடி பெரியவர் இருக்கிறார். அவர் சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்றவர்தான். அவர் வந்து சரியான விளக்கம் சொல்வார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. ஆம்..
    இதனை "பிரவாக அநாதி" என்று சொல்லுவது உண்டு

    சஞ்சிதத்தில் இருந்து பிராரப்தம்
    அதனை தொடர்ந்து இப்பிறவியில் செய்கின்ற ஆகாமியம் என
    பிராரப்தம்
    சஞ்சிதம்
    ஆகாமியம்
    மூன்றாய் சொல்வதுண்டு

    இதனை ஒரு முறை நம் வகுப்பறை தோழர் திரு போகர் சொல்லியிருக்கிறார்.

    இன்னும் களஞ்சியத்தில் சேரட்டும்

    ReplyDelete
  7. நாடி சோதிடத்தை பொறுத்தவரையில்
    நமது (இந்து) நண்பர்கள் இந்துக்களாகவே (பிறந்து) இருந்துள்ளனர்.

    நாம் அறிந்த வரையில் இதுவரையில் ஒருவருடைய ஜாதகத்தில் கூட சென்ற பிறவியில் இந்துவல்லாத மதத்தில் பிறந்ததாக சொல்லவில்லை.

    யாரேனும் இருக்கலாம் ..
    நமக்கு தெரியும் காலம் வரை
    காத்திருப்போம்..

    வணக்கம்

    ReplyDelete
  8. முன்பே ஒரு முறை இதைப் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறேன் என்று நினைவு. இருந்தாலும் மீண்டும் சொல்கிறேன்.

    ஒருமுறை வீட்டில் சுவாமி உண்டியலில் இருந்த தொகை உண்டியல் (தகரம்) குத்தி எடுக்கப்பட்டு களவு போய்விட்டது.

    இதை அறிந்தவுடன் வாயில்புறம் வந்த அம்மா, தெருவில் வாழைப்பாடியில் இருந்து வரும் பேருந்தில் இருந்து இறங்கிச் செல்லும் ஒரு பிராமணரைப் பார்த்துவிட்டு அவரை வீட்டுக்கு அழைத்து வரச் சொன்னார்.வாயில் திண்ணையில் அமர்ந்த அவருக்கு மோர் கொடுத்துவிட்டு வெற்றிலை,பாக்கு, தட்சணை கால் ரூபாய் வைத்துவிட்டு "ஒரு பிரஸ்னம் சொல்லுங்கோ" என்றார் அம்மா!

    "அம்பி 9க்குள் ஒரு நம்பர் சொல்லு"என்றார் அந்த பிராமணர், என்னிடம்.

    "எட்டு" என்றேன்.

    சில நிமிடங்கள் கண் மூடியிருந்துவிட்டு கைகளால் எண்ணிவிட்டு,

    "இரும்புப் பாத்திரத்துக்குள் இருந்த உலோகங்களைக் காணவில்லை. என்ன தகர உண்டியலை உடைச்சு யாராவது காசைத் திருடிட்டாளா?" என்று கேட்டார். அம்மா ஈனஸ்வரத்தில் "ஆமாம்!"என்றார்.

    "போகட்டும், எடுத்தது பிராமணந்தான்.எதோ வைத்திய செலவுக்காகத்தான் எடுத்துவிட்டான், செலவு செய்துட்டான். கிடைக்காது. தேட வேண்டாம்.உங்களுக்குப் புண்ணீயம்தான்" என்று கூறிவிட்டு சட்டென்று எழுந்து போய் விட்டார்.

    நாடியும் பிரஸ்னத்தில்தான் நிலை கொண்டுள்ளது என்று தோன்றுகிறது.

    பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  9. அய்யர் சரியாகத்தான் சொல்கிறார்.

    சஞ்சித கர்மா என்பது அநாதி காலமாக நாம் சேர்த்து வைத்துள்ள வங்கி இருப்பு.

    இந்த பூமி வாசம் ஒரு ட்ரிப். அதற்கு நம் வங்கி இருப்பான சஞ்சித கர்மாவில் இருந்து எடுத்து கொண்டு வந்த செலவுத்தொகை பிராரப்தம்.

    ஆகாம்யம் - காமத்தில் இருந்து என்று பொருள். ஆசேது ஹிமாசலம் என்கிறோம், சேதுவில் இருந்து ஹிமாசலம் என்ற பொருளில். அது போல ஆகாம்யம் என்றால் காமத்தில் இருந்து என பொருள் படும். அதாவது இங்கே வந்த பின் நமது வேளை சீக்கிரம் வங்கி கணக்கை பூஜ்யம் ஆக்குவது. ஆனால் என்னை எடுத்து கொள்ளுங்கள். நான் ஒரு முழு அசடன், மூடன். வந்த வேலையை முற்றிலும் மறந்து விட்டு எதை எதையோ பார்த்து மயங்கி ஆசைப்பட்டு மேலும் கர்மத்தை சேர்த்து கொண்டு போகிறேன். நிகர லாபம் என்னவோ அந்த பிறை சூடிய பால் வெள்ளிய நீற்றினை பூசிய, அரவம் அணி பரமேஸ்வரனுக்கே வெளிச்சம்.

    அவன் அருள் இன்றி யாரே உய்வார்?

    கொஞ்ச நஞ்சமா பண்ணி இருக்கிறேன் அட்டூழியங்கள்? இருப்பது போதாதென்று இந்த ஜென்மத்திலேயே புதுசு புதுசாக தினுசு தினுசாக பண்ணியவற்றை கரைக்கவே இன்னும் எதனை ஜென்மமோ. இதில் பழைய ஸ்டாக் வேறு இருக்கிறது. ராகு தசையும் கேது தசையும் ஏழரை சனியும் ஏன் வலிக்காது?

    நான் செய்யக்கூடியது எல்லாம் மன்றாடியிடம் மன்றாடுவது ஒன்றே.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. வாழைப்பாடி தான் இன்று வாழப்பாடி ஆகி விட்டது. என் சொந்த ஊர் ஆத்தூர். அங்கே மற்றும் சேலத்தில் இன்றும் நம்பிக்கைக்கு உரிய நாடி ஜோதிடர்கள் உள்ளதாக கேட்டு இருக்கிறேன்.

    ஆத்தூரில் எங்கள் பூர்வீக வீட்டுக்கு அருகில் தான் (காந்தி நகர், அறுபதடி சாலை, அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளிக்கு பின்னால்) திரு மு மாதேஸ்வரன் இருக்கிறார் ஆனால் அவர் இப்போது பார்ப்பதில்லை. அவர் மருமான் திரு தனசேகரன் தான் பார்க்கிறார். (முன்னொரு பின்னூட்டத்தில்/பதிவில் இவர் பற்றி வந்ததால் இதை சொல்கிறேன்)

    ReplyDelete
  12. //லால்குடி பெரியவர் இருக்கிறார். அவர் சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்றவர்தான்.//

    நன்றி ஆனந்த். சமஸ்கிருதம் ஒரு மாபெரும் கடல். ஒரே சொல்லுக்குப் பல பொருள் சொல்லும் ஒரு ஆதி மொழி.மேலும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் வெவ்வேறு பொருள் வேறு.இப்போது புனாவில் சமஸ்கிருத்துக்கு 'க்ரோனாலாஜிசல் டிக்ஷ்னரி' தயாரித்து வருகிறார்கள்.
    அதாவது எந்த யுகத்தில் ,காலத்தில் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு என்ன பொருள் என்று அகராதி தயாரிக்கப்படுகிறது.

    பார்வதி அம்மையும், ஸ்ரீ கணேஷும் 95% சரியாகச்சொல்லிவிட்டார்கள்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. திடீர் என்று ஏன் திரு மு மாதேஸ்வரனை பற்றி சொல்கிறேன் என்றால் நான் இப்பொழுது ஊருக்கு போயிருந்த பொழுது அவரை தொடர்பு கொண்டேன். முன்னொரு பதிவிலும் அவரை பற்றி வாத்தியார் போட்டு இருந்தார். அதனால் ஒரு அப்டேட் கொடுப்பதற்காக சொன்னேன். தனக்கு வயதாகி விட்டதாகவும் பொறுப்புகளை மருமகப்பிள்ளையிடம் ஒப்படைத்து தான் ஓய்வாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

    ReplyDelete
  14. ////kmr.krishnan said...
    சமஸ்கிருதம் ஒரு மாபெரும் கடல். ஒரே சொல்லுக்குப் பல பொருள் சொல்லும் ஒரு ஆதி மொழி...////

    மன்னிக்க...
    ஆதி மொழி என்று சொல்வதனை object செய்கிறோம்..

    வாதமோ விவாதமோ இல்லை..
    சரியானதை சொல்ல வேண்டும் என்ற எண்ணம்.

    அய்யரை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்

    ReplyDelete
  15. உள்ளேன் ஐயா!
    (நானும் யாராவது குறிப்பிட்ட சரியான நாடி ஜோதிடரின் முகவரி தருவார்கள் என்றே காத்து இருக்கிறேன்)
    நன்றி.

    ReplyDelete
  16. குருவிற்கு வணக்கம்
    நல்ல ஒரு விருவிருப்பான பகுதி
    பதிவுக்கு நன்றி ஜயா

    ReplyDelete
  17. //////Blogger சரண் said...
    நான் ஆறு ஆண்டுகளுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்க்க சென்றபோது எனக்கு அவர்கள் சொன்ன முற்பிறவி பலன்களை மறுத்துப்பேச இயலவில்லை. வாழ்வின் இளம் வயதில் மிக அதிகமான கொடுமைக்காரனாகவும், பிற்பகுதியில் நிறைய சிவாலயங்களில் திருப்பணி செய்தவனாகவும் இருந்திருக்கிறேன். அதனால்தான் இந்தபிறவியில் இளம் வயதில் மிக மிக அதிக கஷ்டத்தை அனுபவித்து வந்தாலும் அதே நேரத்தில் நிறைய ஆலயங்களில் வழிபாடு செய்வதற்கும் கோவிலின் திருப்பணியில் ஈடுபடுவதற்கும் உரிய வாய்ப்பை இறைவன் வழ்ங்கியிருக்கிறான் என்று கூறினார்கள்.
    இதை நான் மறுக்காததற்கு காரணம், 1. அவர்கள் சொன்னபோது நாங்கள் இப்போது திருப்பணி செய்து வரும் ஆலயத்தில் திருப்பணி செய்து வரும் யோசனையே இல்லை. 2. நான் சொந்த தொழில்தான் செய்வேன், யாரிடமும் வேலை பார்க்க மாட்டேன் என்று கூறி எப்போது அந்த சொந்த தொழில் அமையும் என்பது வரை கூறினார்கள். மேலே கூறிய இரண்டும் அப்படியே நடந்தது.
    பொதுவாக ஜோதிடத்திலோ, பிரசன்னத்திலோ கடந்த காலத்தை மிகச் சரியாக சொல்லிவிட்டு எதிர்காலத்தை கோடிட்டு காட்டுவதில் சொதப்புவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
    ஆனால் என் விஷயத்தில் மேலே சொன்ன 2 விஷயம் தவிர இன்னும் சில விஷயங்கள் சொன்னார்கள். அதை எல்லாம் நான் அப்போதே மறந்து விட்டேன். இப்போது வகுப்பறைக்கு வந்த பிறகு மீண்டும் அசை போடும்போது, நான் வேறு திட்டத்துடன் செயல்பட்டு வந்தாலும் நாடி ஜோதிடத்தில் அவர்கள் சொன்ன பாதைக்கு வேறு ஏதோ ஒரு சக்தியினால் அல்லது சூழ் நிலையினால் தள்ளிச்செல்லப்பட்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிகிறது.//////

    ஜோதிடத்தில் கைதேர்ந்த மேதை ஒருவர், பல நாடி ஜோதிடர்களைச் சந்தித்துவிட்டு, இப்படிச் சொன்னார்:
    “கடந்த காலங்களை எல்லாம் துல்லியமாகச் செல்கிறார்கள். ஆனால் எதிர்காலப் பலன்கள் சரியாக இருப்பதில்லை”
    இதை அவர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார். காலதேவன் சொல்ல விட மாட்டான். அதாவது விதி சொல்ல விடாது. எதிர்கால பலன் துல்லியமாகத் தெரிந்தால் என்ன ஆவது? கேட்டுத் தெளிந்த மனிதனும் சும்மா இருக்க மாட்டான். பலன்களைச் சொல்பவனும் சும்மா
    இருக்க மாட்டான். இதனால் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி. எதிர்காலத்தை ஒரளவு தெரிந்து கொண்டால் போதும்!

    ReplyDelete
  18. /////Blogger Parvathy Ramachandran said...
    //இதற்கெல்லாம் அர்த்தத்தை (பொருளை) நம் பெங்களூரு அம்மையார்தான் சொல்ல வேண்டும்! பின்னூட்டத்தில் சொல்வார்கள். பொறுத்திருங்கள்!//
    தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. உண்மையில் இதில் சில சொற்கள் கடினமானதாக இருக்கின்றன. சில ஹிந்திச் சொற்களும் (மூலம் சம்ஸ்கிருதமாக இருக்கலாம்) இருக்கின்றன.
    இதில், (கர்ம) தனம் (தானம் அல்ல), சகாயம் (உதவி), அதிகாரணா( இடம், அதிகாரம், உடைமைகள்) , சஹசாரி(ஹிந்தி) உடன் வருவோர், பாக்ய, வியாபாரா, லாபா, வியாயா(செலவு அல்லது விரயம்) முதலியவை தெரிகிறது. இதைக் கர்ம என்னும் சொல்லுடன் சேர்த்துப் பொருள் சொல்வது ப்ரசன்ன ஜோதிடம் நன்கு அறிந்தவர்களாலேயே இயலும் என்று நினைக்கிறேன்.
    சம்ஸ்கிருதத்தில் மிகுந்த பாண்டித்தியம் உடைய, உயர்திரு. ஸ்ரீகணேஷ் மற்றும், அன்புச் சகோதரர் புவனேஷ்வர் அவர்களோ கர்ம பூதவஸ்து, கர்ம நாசகர்னா, கர்மயூஸ் போன்ற வார்த்தைகளுக்கு பொருள் கூற இயலும் என்று நினைக்கிறேன்.////

    தெரிந்ததைச் சொல்லுங்கள். சொன்னவரைக்கும் நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  19. /////Blogger Bhuvaneshwar said...
    மதிப்புக்கு உரிய சகோதரி பார்வதி அவர்கள் கூறிய விளக்கத்தை நான் வழி மொழிகிறேன்.
    அவை அனைத்துமே தெள்ளிய வடமொழி பதங்கள்.
    கர்ம என்ற முன் பதத்தை போட்டு இருப்பது "கர்மத்தால் விளைந்த ___" என்ற பொருளில் என நம்புகிறேன்.
    எடுத்துக்காட்டாக கர்ம சஹசார்யம் - சார்யம் என்றால் கடைப்பிடித்தல்/ஒட்டி ஒழுகுதல் என பொருள் படும். அதாவது கூட வாழ்பவர்கள் - சுற்றம். மனைவி மட்டும் அல்லாது, நண்பரும் உறவினரும் சூழ்ந்து இருப்போரும் அடக்கம்.
    கர்மத்தால் விளைந்த சுற்றம் என பொருள் வருகிற போழ்து நாம் முற்பிறப்பின் பயனாக இப்பிறப்பில் அடைந்த சுற்றம் என பொருள் கொள்ளலாம் என நம்புகிறேன்.
    ++++++
    கர்ம பூத வஸ்து: சொத்துக்கள் - முன் பிறப்பில் செய்த வினை பயனாக இப்பிறப்பில் நமக்கு கிட்டிய வீடு வாசல், வண்டி வாகனம், சௌகர்ய சாதங்கள் முதலியன என நம்புகிறேன்.
    கர்மாயுஸ்: முன் வினைப்பயனாக நமக்கு கிட்டிய வாழ்நாட்கள் என நம்புகிறேன்.
    கர்ம நாசகர்னா: கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. நாச கர்ணா என்றால் அழிக்கும் வழி/அழிக்கும் ஹேது என பொருள் வரும். ஒரு வேளை நல வினைப்பயனாக இப்பிறப்பில் நமக்கு கிட்டும் நம் வினைகளை அறுக்கும் உபாயம் என பொருள் கொள்ளலாமா?
    ++++++
    எனக்கு வடமொழியில் பெரிய பாண்டித்தியம் என்று சொல்லிக்கொள்கிற அளவுக்கு சரக்கு இல்லை.
    அன்புச்சகோதரியின் பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி கூறுவதோடு நில்லாமல், அதற்காகவாவது இன்னும் படிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.
    ++++++
    நண்பர் ஸ்ரீ கணேஷ் அவர்களும் தமது விளக்கத்தை தந்தால் அனைவரும் பயன் பெறுவோம். :)/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////Blogger ananth said...
    லால்குடி பெரியவர் இருக்கிறார். அவர் சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்றவர்தான். அவர் வந்து சரியான விளக்கம் சொல்வார் என்று நினைக்கிறேன்./////

    ஆகா, சொல்லட்டும்! அதுவரை பொறுத்திருப்போம்!

    ReplyDelete
  21. ////Blogger அய்யர் said...
    ஆம்..
    இதனை "பிரவாக அநாதி" என்று சொல்லுவது உண்டு
    சஞ்சிதத்தில் இருந்து பிராரப்தம்
    அதனை தொடர்ந்து இப்பிறவியில் செய்கின்ற ஆகாமியம் என
    பிராரப்தம்
    சஞ்சிதம்
    ஆகாமியம்
    மூன்றாய் சொல்வதுண்டு
    இதனை ஒரு முறை நம் வகுப்பறை தோழர் திரு போகர் சொல்லியிருக்கிறார்.
    இன்னும் களஞ்சியத்தில் சேரட்டும்////

    பதிவிற்கு பல விற்பன்னர்கள் வருவதால் எத்தனை வசதிகள், செய்திகள் பார்த்தீர்களா - விசுவநாதன்?

    ReplyDelete
  22. ////Blogger அய்யர் said...
    நாடி சோதிடத்தை பொறுத்தவரையில்
    நமது (இந்து) நண்பர்கள் இந்துக்களாகவே (பிறந்து) இருந்துள்ளனர்.
    நாம் அறிந்த வரையில் இதுவரையில் ஒருவருடைய ஜாதகத்தில் கூட சென்ற பிறவியில் இந்துவல்லாத மதத்தில் பிறந்ததாக சொல்லவில்லை.
    யாரேனும் இருக்கலாம் ..
    நமக்கு தெரியும் காலம் வரை
    காத்திருப்போம்..
    வணக்கம்/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!!

    ReplyDelete
  23. //////Blogger kmr.krishnan said...
    முன்பே ஒரு முறை இதைப் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறேன் என்று நினைவு. இருந்தாலும் மீண்டும் சொல்கிறேன்.
    ஒருமுறை வீட்டில் சுவாமி உண்டியலில் இருந்த தொகை உண்டியல் (தகரம்) குத்தி எடுக்கப்பட்டு களவு போய்விட்டது.
    இதை அறிந்தவுடன் வாயில்புறம் வந்த அம்மா, தெருவில் வாழைப்பாடியில் இருந்து வரும் பேருந்தில் இருந்து இறங்கிச் செல்லும் ஒரு பிராமணரைப் பார்த்துவிட்டு அவரை வீட்டுக்கு அழைத்து வரச் சொன்னார்.வாயில் திண்ணையில் அமர்ந்த அவருக்கு மோர் கொடுத்துவிட்டு வெற்றிலை,பாக்கு, தட்சணை கால் ரூபாய் வைத்துவிட்டு "ஒரு பிரஸ்னம் சொல்லுங்கோ" என்றார் அம்மா!
    "அம்பி 9க்குள் ஒரு நம்பர் சொல்லு"என்றார் அந்த பிராமணர், என்னிடம்.
    "எட்டு" என்றேன்.
    சில நிமிடங்கள் கண் மூடியிருந்துவிட்டு கைகளால் எண்ணிவிட்டு,
    "இரும்புப் பாத்திரத்துக்குள் இருந்த உலோகங்களைக் காணவில்லை. என்ன தகர உண்டியலை உடைச்சு யாராவது காசைத் திருடிட்டாளா?" என்று கேட்டார். அம்மா ஈனஸ்வரத்தில் "ஆமாம்!"என்றார்.
    "போகட்டும், எடுத்தது பிராமணந்தான்.எதோ வைத்திய செலவுக்காகத்தான் எடுத்துவிட்டான், செலவு செய்துட்டான். கிடைக்காது. தேட வேண்டாம்.உங்களுக்குப் புண்ணீயம்தான்" என்று கூறிவிட்டு சட்டென்று எழுந்து போய் விட்டார்.
    நாடியும் பிரஸ்னத்தில்தான் நிலை கொண்டுள்ளது என்று தோன்றுகிறது.
    பதிவுக்கு நன்றி ஐயா!/////

    அதை ஆரூட பிரசன்னம் என்பார்கள். நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஒரு முறை, தெரிந்தவர் ஒருவர் வீட்டில் சிறுவன் ஒருவன் காணாமல் போய்விட்டான். ஆரூட பிரசன்னம் பார்த்தவர், சொன்னவர். ”இப்போது கிடைக்க மாட்டான். இன்னும் மூன்று நாட்கள் கழித்து ஒரு பொறுப்பான மனிதர் மூலம் அவன் வந்து சேர்வான்!” அதுபோலவே நடந்தது!

    ReplyDelete
  24. ////Blogger Bhuvaneshwar said...
    அய்யர் சரியாகத்தான் சொல்கிறார்.
    சஞ்சித கர்மா என்பது அநாதி காலமாக நாம் சேர்த்து வைத்துள்ள வங்கி இருப்பு.
    இந்த பூமி வாசம் ஒரு ட்ரிப். அதற்கு நம் வங்கி இருப்பான சஞ்சித கர்மாவில் இருந்து எடுத்து கொண்டு வந்த செலவுத்தொகை பிராரப்தம்.
    ஆகாம்யம் - காமத்தில் இருந்து என்று பொருள். ஆசேது ஹிமாசலம் என்கிறோம், சேதுவில் இருந்து ஹிமாசலம் என்ற பொருளில். அது போல ஆகாம்யம் என்றால் காமத்தில் இருந்து என பொருள் படும். அதாவது இங்கே வந்த பின் நமது வேளை சீக்கிரம் வங்கி கணக்கை பூஜ்யம் ஆக்குவது. ஆனால் என்னை எடுத்து கொள்ளுங்கள். நான் ஒரு முழு அசடன், மூடன். வந்த வேலையை முற்றிலும் மறந்து விட்டு எதை எதையோ பார்த்து மயங்கி ஆசைப்பட்டு மேலும் கர்மத்தை சேர்த்து கொண்டு போகிறேன். நிகர லாபம் என்னவோ அந்த பிறை சூடிய பால் வெள்ளிய நீற்றினை பூசிய, அரவம் அணி பரமேஸ்வரனுக்கே வெளிச்சம்.
    அவன் அருள் இன்றி யாரே உய்வார்?
    கொஞ்ச நஞ்சமா பண்ணி இருக்கிறேன் அட்டூழியங்கள்? இருப்பது போதாதென்று இந்த ஜென்மத்திலேயே புதுசு புதுசாக தினுசு தினுசாக பண்ணியவற்றை கரைக்கவே இன்னும் எதனை ஜென்மமோ. இதில் பழைய ஸ்டாக் வேறு இருக்கிறது. ராகு தசையும் கேது தசையும் ஏழரை சனியும் ஏன் வலிக்காது?
    நான் செய்யக்கூடியது எல்லாம் மன்றாடியிடம் மன்றாடுவது ஒன்றே.////

    செலவிற்குக் கொண்டுவந்த தொகை கரைந்து விடாமல் பார்த்துக்கொள்ளூங்கள். மற்றதை வெள்ளிமலை மன்னவர் பார்த்துக்கொள்வார்!

    ReplyDelete
  25. /////Blogger Bhuvaneshwar said...
    வாழைப்பாடி தான் இன்று வாழப்பாடி ஆகி விட்டது. என் சொந்த ஊர் ஆத்தூர். அங்கே மற்றும் சேலத்தில் இன்றும் நம்பிக்கைக்கு உரிய நாடி ஜோதிடர்கள் உள்ளதாக கேட்டு இருக்கிறேன்.
    ஆத்தூரில் எங்கள் பூர்வீக வீட்டுக்கு அருகில் தான் (காந்தி நகர், அறுபதடி சாலை, அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளிக்கு பின்னால்) திரு மு மாதேஸ்வரன் இருக்கிறார் ஆனால் அவர் இப்போது பார்ப்பதில்லை. அவர் மருமான் திரு தனசேகரன் தான் பார்க்கிறார். (முன்னொரு பின்னூட்டத்தில்/பதிவில் இவர் பற்றி வந்ததால் இதை சொல்கிறேன்)/////

    ஆகா, சொல்லுங்கள். கேட்டுக்கொள்கிறோம். ஆத்தூர் புகழ் கிச்சடிச் சம்பா அரிசி இப்போதும் உள்ளதா?

    ReplyDelete
  26. /////Blogger kmr.krishnan said...
    //லால்குடி பெரியவர் இருக்கிறார். அவர் சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்றவர்தான்.//
    நன்றி ஆனந்த். சமஸ்கிருதம் ஒரு மாபெரும் கடல். ஒரே சொல்லுக்குப் பல பொருள் சொல்லும் ஒரு ஆதி மொழி.மேலும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் வெவ்வேறு பொருள் வேறு.இப்போது புனாவில் சமஸ்கிருத்துக்கு 'க்ரோனாலாஜிசல் டிக்ஷ்னரி' தயாரித்து வருகிறார்கள்.
    அதாவது எந்த யுகத்தில் ,காலத்தில் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு என்ன பொருள் என்று அகராதி தயாரிக்கப்படுகிறது.
    பார்வதி அம்மையும், ஸ்ரீ கணேஷும் 95% சரியாகச்சொல்லிவிட்டார்கள்.
    பாராட்டுக்கள்./////

    தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  27. //////Blogger Bhuvaneshwar said...
    திடீர் என்று ஏன் திரு மு மாதேஸ்வரனை பற்றி சொல்கிறேன் என்றால் நான் இப்பொழுது ஊருக்கு போயிருந்த பொழுது அவரை தொடர்பு கொண்டேன். முன்னொரு பதிவிலும் அவரை பற்றி வாத்தியார் போட்டு இருந்தார். அதனால் ஒரு அப்டேட் கொடுப்பதற்காக சொன்னேன். தனக்கு வயதாகி விட்டதாகவும் பொறுப்புகளை மருமகப்பிள்ளையிடம் ஒப்படைத்து தான் ஓய்வாக இருப்பதாகவும் அவர் கூறினார்./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. //////Blogger அய்யர் said...
    ////kmr.krishnan said...
    சமஸ்கிருதம் ஒரு மாபெரும் கடல். ஒரே சொல்லுக்குப் பல பொருள் சொல்லும் ஒரு ஆதி மொழி...////
    மன்னிக்க...
    ஆதி மொழி என்று சொல்வதனை object செய்கிறோம்..
    வாதமோ விவாதமோ இல்லை..
    சரியானதை சொல்ல வேண்டும் என்ற எண்ணம்.
    அய்யரை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்//////

    ஆதி என்றால் தொடக்கம் அறியப்பட முடியாத பழமை என்று பொருள். தமிழைப் போலவே, சமஸ்கிருதமும் தொடக்ககாலம் தெரியாத மொழிதானே? மறுப்பதற்கு அதில் என்ன உள்ளது. சற்று விளக்கிச் சொல்லுங்கள் விசுவநாதன்!

    ReplyDelete
  29. சமஸ்கிருதம் பழமையானது
    தமிழ் தொன்மையானது..

    ReplyDelete
  30. /////Blogger ஜி ஆலாசியம் said...
    உள்ளேன் ஐயா!
    (நானும் யாராவது குறிப்பிட்ட சரியான நாடி ஜோதிடரின் முகவரி தருவார்கள் என்றே காத்து இருக்கிறேன்)
    நன்றி.////

    நண்பர் சரண் அவர்களின் பின்னூட்டத்திற்கு (அதுதான் முதல் பின்னூட்டம்) நான் அளித்துள்ள பதிலைப் படியுங்கள் ஆலாசியம்!

    ReplyDelete
  31. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நல்ல ஒரு விருவிருப்பான பகுதி
    பதிவுக்கு நன்றி ஜயா////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. //பார்வதி அம்மையும், ஸ்ரீ கணேஷும் 95% சரியாகச்சொல்லிவிட்டார்கள்.
    பாராட்டுக்கள்.//

    பார்வதி அம்மையும் புவனேஷ்வரனும் என்று இருக்க வேண்டும். மாற்றி வாசிக்க வேண்டுகிறேன்.

    சமஸ்கிருதம் 'ஆதி மொழி' என்பதையும் 'பழைய மொழி' என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  33. /////Blogger அய்யர் said...
    சமஸ்கிருதம் பழமையானது
    தமிழ் தொன்மையானது../////

    பழமை = காலத்தால் முந்திய நிலை
    தொன்மை = காலத்தால் முற்பட்டது

    இரண்டிற்கும் ஒரே பொருள்தான் விசுவநாதன்!

    ReplyDelete
  34. /////Blogger kmr.krishnan said...
    //பார்வதி அம்மையும், ஸ்ரீ கணேஷும் 95% சரியாகச்சொல்லிவிட்டார்கள்.
    பாராட்டுக்கள்.//
    பார்வதி அம்மையும் புவனேஷ்வரனும் என்று இருக்க வேண்டும். மாற்றி வாசிக்க வேண்டுகிறேன்.
    சமஸ்கிருதம் 'ஆதி மொழி' என்பதையும் 'பழைய மொழி' என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.//////

    திருத்தங்களைக் குறிப்பிட்டுச் சொன்ன மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  35. 90 சதவீதம் நீங்கள் கூறியதைப் போல ஏமாற்றுக்காரர்கள் இருக்கிறார்கள். நாடி ஜோதிடத்தில் மட்டுமல்ல. எல்லா துறையிலும். முழுவதும் ஏமாற்றவில்லை என்றால் கூட தொழிலில் அக்கறை இல்லாமல், தங்களுக்கு கிடைக்கவேண்டிய லாபத்தையும் இழந்து வாடிக்கையாளருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்துபவர்களுக்கு பஞ்சமில்லை.

    எல்லா தொழிலிலும் லாபம் சம்பாதிப்பதுதான் நோக்கம். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி நாமும் நல்ல லாபத்துடன் வேகமாக முன்னேற வேண்டும் என்று நினைப்பதுதான் நியாயம். ஆனால் ஏனோதானோவென்று ஒரு விஷயத்தை செய்து முடித்துவிட்டு அநியாய கட்டணம் வசூலிப்பது எல்லா தொழிலிலும் அதிகரித்து வருகிறது.

    ReplyDelete
  36. வாத்தியார் அவர்கள் என்னுடைய கருத்துரைக்கு கீழ்க்கண்டவாறு மறுமொழியிட்டிருந்தார்கள்.
    ///////////////////// ஜோதிடத்தில் கைதேர்ந்த மேதை ஒருவர், பல நாடி ஜோதிடர்களைச் சந்தித்துவிட்டு, இப்படிச் சொன்னார்:
    “கடந்த காலங்களை எல்லாம் துல்லியமாகச் செல்கிறார்கள். ஆனால் எதிர்காலப் பலன்கள் சரியாக இருப்பதில்லை”
    இதை அவர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார். காலதேவன் சொல்ல விட மாட்டான். அதாவது விதி சொல்ல விடாது. எதிர்கால பலன் துல்லியமாகத் தெரிந்தால் என்ன ஆவது? கேட்டுத் தெளிந்த மனிதனும் சும்மா இருக்க மாட்டான். பலன்களைச் சொல்பவனும் சும்மா
    இருக்க மாட்டான். இதனால் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி. எதிர்காலத்தை ஒரளவு தெரிந்து கொண்டால் போதும்! ////////////////////////////////////

    உண்மைதான். எனக்கு நாடி ஜோதிடத்தில் அவர்கள் எதிர்காலம் பற்றி சொன்ன பலன்கள் அப்படியே நடந்தாலும் கால ஓட்டம் அதன் போக்கில்தான் என்னை அந்த வழியில் நடத்திச்சென்றது. அவர்கள் சொன்ன நிலைக்கு செல்ல எனக்கு எந்த வழியும் தெரியாமல் நான் என் போக்கிலேயே வேறு பாதைக்கு முயற்சி செய்து கிரகங்களிடம் மாற்றி மாற்றி அடி வாங்கிக்கொண்டே இருந்தேன்.

    ''சாகுற நாள் தெரிஞ்சுட்டா வாழ்ற நாள் நரகமாயிடும்.''

    *********************************
    ////////////////////////// Blogger Bhuvaneshwar said...

    சரண் அவர்களே,
    வைதீஸ்வரன் கோயிலுக்கு நானும் போனேன் அனால் கோயிலுக்கு தான். அங்கே எல்லாரும் எச்சரித்தார்கள் உங்களை ஏமாற்றுவார்கள் என்று.
    யார் உண்மையான நாடி ஜோசியர் யார் போலி என வெளியூர் காரனான எனக்கு தெரியாததால் சும்மா வந்து விட்டேன்.
    நல்ல அனுபவம் உடைய நண்பர்களான உங்களை போன்றோர் இடத்தை காட்டினால் ஏன் போன்ற மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
    நன்றி.////////////////////////////////////////
    நண்பரின் உறவினரான வைதீஸ்வரன் கோவில் ஆலய அர்ச்சகர் மூலம், நம்பிக்கைக்குரிய நாடி ஜோதிடர் விபரம் தர முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. Thanks to Sister Parvathi and Bhuvaneshwar.
    எனக்குத் தெரிந்த அளவு....இந்த சொற்கள் ஜோதிட சம்பந்தமாக வருவதால் நான் அதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு அர்த்தத்தை முயற்சி செய்திருக்கிறேன்.
    10ம் வீடு கர்ம தானம் (karma Dhana)
    இது கர்ம தனமாக இருக்க வேண்டும்.
    11ம் வீடு கர்ம சகாயம் (karma Sahaya)
    सहाय ‍இதற்கு பின்பற்றுவோர், கம்பானியன், உதவி செய்பவர், வேலைக்காரர்கள் என்று லிஸ்ட் போடலாம்.
    12ம் வீடு கர்ம அதிகரணா (Karma Adhikarana)
    இதில் அதிகாரணா வில் வரும் "த" என்ற எழுத்துக்கு ஏற்ப அர்த்தம் கொள்ளலாம். முதன்மையான காரணம், (அ) மேற்பார்வையிடுதல் அதாவது சூப்பர்வைசிங்
    1ம் வீடு கர்ம பூதவஸ்து (Karma Bhutha Vasthu)
    பூத என்ற பூதம் என்ற பொருளில் கெட்ட என்றும் கொள்ளலாம், வஸ்து என்றால் பொருட்கள், பஞ்சபூதம் என்ற சொல்லில் வரும் அந்த அர்த்தமும் வரலாம். தேவ நாகரி எழுத்துக்களுக்கு ஏற்ப பொருள் கொள்ளலாம்.
    2ம் வீடு கர்ம நாசகர்னா (Karma Nasa karana)
    இதில் நாசகர்ணா (அ) காரண வா என்று தெரியவில்லை. காரண என்பது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது...அப்படி என்றால் நாசத்திற்கு காரணமான என்று எடுக்கலாம்...
    3ம் வீடு கர்ம சஹசார்யம் (Karma sahachari)
    சஹசார்யம் என்றால் தர்மபத்தினி அல்லது சகவாச தோழி என்றும் கொள்ளலாம்.
    4ம் வீடு கர்மயூஸ் (Karmayus)
    இது ஆயுஸ் என்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஆயுள்
    5ம் வீடு கர்ம பாக்கியம் (Karma Bhagya)
    6ம் வீடு கர்மவியாபாரம் (Karma Vyapara)
    7ம் வீடு கர்ம லாபம் (Karma Labha)
    மேல் சொன்ன மூன்றும் நார்மல் அர்த்தம் தான். பாக்கியம், வியாபாரம், லாபம்
    8ம் வீடு கர்மவியாயா (Karma Vyaya)
    வ்யாயா என்பது செலவு, விரையமாகுதல்,என்று வெவ்வேறு பொருள் வரலாம்.
    நன்றி..

    ReplyDelete
  40. எனக்கு தெரிந்து சென்ற இருநூறு முன்னூறு வருஷங்களுக்கு முன்பு வரை வடமொழியும் தமிழும் கை கோர்த்து தான் வலம் வந்தன.
    தமிழ் மன்னர்களின் சாசனங்கள் வடமொழியிலும் கல்வெட்டுக்கள் தமிழிலும் இருப்பது நாம் அறிவோம்.

    வடமொழி பாரதத்தின் பொது இணைப்பு மொழி மட்டும் அல்லாமல் சாத்திரங்களை கொண்ட மொழியாகவும் இருந்து உள்ளது வரலாற்றை ஆராய்ந்தவர்கள் அறிவர். நான் கூறும் வரலாறு ஆங்கிலேயரின் ஆரிய திராவிட வரலாறு அல்ல. நம் நாட்டின் வரலாறு.

    தமிழ் மொழியில் பல வடமொழி சொற்கள் கலந்து இருப்பது நாம் அறிவோம். அது கலப்படம் அல்ல. நமது நண்பரின்/உறவினரின் குணங்களை நாமும் நம்மை அறியாமலேயே கொண்டு இருப்பதில்லையா? அது போல.

    +++++

    தமிழ் நாட்டில் பிராமணரே இல்லை என்று சிலர் வாதாடுவர். வடமொழியே இல்லை என வாதாடுவர். ஆனால் ப்ராம்மனமும் அவன் கொண்டு வந்த வடமொழியும் இல்லாமல் சோழ தேசம் உண்டு என்று சொல்லுவது வேடிக்கை.

    சோழ தேசத்தின் பெயர் காரணம் அந்தணர் சம்பந்தம் உடையது. சோள தேசம் என்று இருக்க வேண்டிய சொல் சோழ தேசம் என ழகரம் கொண்டது வேத சம்பந்தம் உடையது.

    கன்னடத்தில் ள அழகு. தெலுங்கில் த அழகு. மலையாளத்திலும் ழ அழகு. எல்லாம் வேத சம்பந்தம் உடையவை.

    நம்பினால் நம்புங்கள், வடமொழியிலும் ழ உண்டு.

    "மீடுஷ்டமாய சேஷுமதே" என சிவபெருமானை போற்றி பணியும் வாக்கில் மீடுஷ்டமாய என்ற பதத்தின் டகரம் ழ கரம் போல தான் உச்சரிக்கப்படும் என்பது யசுர் வேதம் சொல்லுபவர்களுக்கு தெரியும்.
    +++++
    சிலப்பதிகாரத்தில் மதுரைக்காண்டத்தில் வழக்குரை காதையில் வரி அறுபது ஒன்பது மற்றும் எழுபது:

    "முத்தீச் செல்வது நான்மறை முற்றி
    ஐம்பெரும் வேள்வியும் செய்தொழில் ஓம்பும்
    அறுதொழில் அந்தணர் பெறுமுறை விளக்க"

    என பிராம்மணனின் பஞ்ச மகா யக்ஞங்களை, ஆறு கடமைகளை பற்றி உள்ளது. மூன்று அக்னிகளை பற்றியும் உள்ளது. இந்த வரிகள் வார்திகன் எனும் பார்ப்பனனை பற்றிய விவரிப்பில் வரும். சொன்னது பிராம்மணன் என்றால் கூட ஆட்சேபிக்கலாம். சொன்னது இளங்கோ அடிகள். அவர் சமணர். அதிலும் சமண துறவி. அவருக்கு பட்சபாதமோ வெறுப்போ இருக்க வாய்ப்பில்லை. அவர் எல்லா தெய்வங்களையும் புகழ்ந்து தான் பாடி இருக்கிறார். ஆகா அவர் சொல்வதை நம்ப மறுக்க முடியாது.
    +++++
    ஆக, வடமொழி இல்லாமல் அந்தணர் இல்லை, அந்தணர் இல்லாமல் தமிழகம் இருந்தது இல்லை. அரசர் அந்தணர் வாணிபர் வேளாளர் என தமிழ் நூல்கள் கூறுவது வேத தர்மத்தை தான்.

    வேதத்துக்கு ரஹஸ்யம் என வடமொழியில் ஒரு பெயர் உண்டு. அதை தமிழில் ஸ்பஷ்டமாக மறை என்று கூறி உள்ளோம். வேதநெறி தழைத்தோங்க என்று நம் தமிழ் நாட்டின் செல்லப்பிள்ளை ஞான சம்பந்த மூர்த்தி அருளி இருக்கிறார் அல்லவா?
    +++++
    அதனால் போட்டி எல்லாம் வேண்டாம். ஒன்று நம்முடையது மற்றொன்று மாற்றானுடையது என்ற நினைப்பு இருந்தால் தானே போட்டியும் எதிர்ப்பும் வரும்? எல்லாம் நம் மொழி தான். போட்டி வேண்டாம்.

    நமக்கு எண்ணிலா வன்கொடுமை இழைத்த ஆங்கிலேயரின் மொழியை as a Lingua franca ஒத்துக்கொள்ள தெரிந்த நமக்கு நமது சொந்த மொழியை ஏற்றுக்கொள்ள முடியாதா?

    ReplyDelete
  41. நானும் ஏதாவது ஏமாற்றுப்பேர்வழி நாடி ஜோதிடரிடம் சென்று ஏமாந்துவிடுவேன் என்ற பயத்தில் ரொம்ப நாட்கள் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருடைய உறவினர் வைதீஸ்வரன் கோயிலில் அர்ச்சகராக பணிபுரிகிறார். அவரது பரிந்துரையின் பேரில் வைத்தீஸ்வரன் கோவில் தெற்குவீதியில் இருந்த ஒரு நாடிஜோதிடரிடம் சென்றேன்.

    பல ஏடுகள் படித்த பிறகு ஒரு ஓலையில் என் குடும்ப விபரம், தந்தையின் தொழில், பள்ளி கல்லூரி அனுபவங்கள், நாடி ஜோதிடம் பார்க்க செல்லும்போது என் தொழில் என்ற பல விபரங்கள் மிகச் சரியாக இருந்தது. ஆனாலும் எதிர் காலம் பற்றி அவர்கள் சொல்வதை நம்பத்தான் வேண்டுமா என்ற குழப்பத்தில்தான் இருந்தேன்.

    ஆனால் அவர்கள் என் எதிர்காலத்தில் மிக முக்கியமான சம்பவங்களாக சிலவற்றை குறிப்பிட்டார்கள். என் தொழில், கோவில் திருப்பணி, ஆகிய இரண்டும் அவர்கள் கூறிய படியே நடந்தன. மற்றவை தனிப்பட்ட விஷயங்கள். கடந்து சென்ற 6 விஷயங்களுமே மிகச்சரியாக நடந்தேறியது. சரியாக நடந்த விஷயங்களை அவர்கள் சொன்னதால் நான் முயற்சிக்கவில்லை. சிறு வயதில் இருந்து என்ன என் நோக்கமோ அதை தேடிதான் என் பாதையை அமைத்துக்கொண்டேன். ஆனால் சில சூழ் நிலைகள் அந்த பாதையிலிருந்து சற்று விலகி இப்போது நான் போகும் வழியில் செலுத்திக்கொண்டிருக்கிறது. அவற்றை நாடி ஜோதிடத்தில் மிகச் சரியாக குறிப்பிட்டிருந்ததுதான் எனக்கு ஆச்சரியமளிக்கும் விஷயம்.

    உதாரணம், திரைப்பட இயக்குனர் என்பது நீண்ட கால இலக்கு. குறுகிய கால இலக்கு பத்திரிகைப் பணி என்றுதான் நான் இருந்தேன். ஒன்றிரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உதவி ஒளிப்பதிவாளர், குறும்படம் ஒன்றில் உதவி இயக்குனர் என்று சென்ற நான், பிரபல நாளிதழ் ஒன்றில் பணியில் சேர்ந்த பிறகு, இனி இதுதான் என் வாழ்க்கை என்று பெருமூச்சு விட்டேன். ஆனால் அடுத்தடுத்து அங்கே எனக்கு கிடைத்த சில அனுபவங்கள் அந்த நாளிதழ் பணியை விட்டு வெளியேறி சொந்தத் தொழிலில் ஈடுபட வைத்தன.

    எப்போதுமே நாம் வேலை பார்க்கத்தானே போகிறோம். நமக்கு எதற்கு சேமிப்பு என்று அலட்சியமாக இருந்தேன். கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் அம்மாவின் நகை அடமானம், நண்பர் அளித்த தொகை, அம்மா பெயரில் வங்கிக்கடன் என்று முழுக்க முழுக்க அடுத்தவர் பணத்தை போட்டு தொழில் தொடங்கிவிட்டேன். இந்த பாதையில் என்னை செலுத்தியது எது?

    சில கேள்விகளுக்கு விடை தெரியாது என்பார்கள். வகுப்பறை பாடத்தை ஒழுங்காக கற்றுக்கொண்டதும் இதற்கான விடையை நான் இங்கே பகிர்ந்துகொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

    ReplyDelete
  42. நன்றி, சரண் அவர்களே. உங்கள் தகவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. @bhuvaneshwar,
    நீங்கள் சொன்ன மாதேஸ்வரன் அவர்கள் சேலத்தில் திருமால் மேன்சனுக்கு பின்னால் இருந்தவரா? அல்லது வேறு வேறா..?

    ReplyDelete
  45. //ஸ்ரீ கணேஷும் 95% சரியாகச்சொல்லிவிட்டார்கள்.//
    கிருஷ்ணன் சார், இது புவனேஸ்வரரும் என்று இருக்க வேண்டும். என்னை ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. @ நண்பர் ஸ்ரீகணேஷ்:

    நண்பரே,
    இந்த விவரத்தை பற்றி எனக்கு தெரியாதே. அவரிடம் அதை கேட்கவில்லை. மன்னிக்க வேண்டும்.
    ஏன் உறவினர்களிடம் அவரை பற்றி சொன்ன போது, பல ஆண்டுகளாக அவர் அங்கே தான் இருந்து வருகிறார் என்றும், அவ்வளவாக பெரிய கூட்டம் ஒன்றும் அவரிடம் வருவதில்லை என்றும் கூறினார்கள். மனதுக்குள் சிரித்து கொண்டேன். மேதைகளிடம் மக்கள் போவதில்லை என்று.
    +++++
    அந்த ஊரில் பிரபலமான ஜோசியர் ஆற்றையும் கோட்டையையும் தாண்டி மலையடிவாரத்தில் இருக்கிறார். கூடம் முழுக்க காலை நாலு மணியில் இருந்து கூட்டம் வழியும்.
    மனிதர் துல்லியமாக முகத்தில் அடித்தது போல சொல்லி விடுவார் தயவு தாட்சண்யமில்லாமல். அவரிடம் போய் வந்து பேய் அறைந்த மாதிரி மாதிரி இருந்தவர்களை நான் பார்த்து இருக்கிறேன்.
    (புதியவரானால் தனியே போக வேண்டாம் அங்கு மலைப்பாம்புகள் உண்டு)
    +++++
    அடுத்த முறை போனால் கேட்டு சொல்லுகிறேன்.
    :)

    ReplyDelete
  48. நன்றி. புவனேஸ்வரன்.
    ஆத்தூரில் பஸ்ஸடாண்ட் வளாகத்தில் செல்வம் டெக்ஸ்டைல்ஸ் கடை முதலாளியின் மூத்தமகன் என்னுடைய காலேஜ் மேட். என் நெருங்கிய நண்பன். இப்பொழுது கோவையில் பணிபுரிகிறான். அவர்கள் சொந்தத்தில் ஒரு எழுத்தாளரும் உண்டு. பெயர் ஹம்சா தனகோபால். இப்பொழுது அவர்கள் எழுத்தை காண முடிவதில்லை.

    ReplyDelete
  49. தேவையான மற்றும் அபூர்வமான
    தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  50. /////Blogger சரண் said...
    90 சதவீதம் நீங்கள் கூறியதைப் போல ஏமாற்றுக்காரர்கள் இருக்கிறார்கள். நாடி ஜோதிடத்தில் மட்டுமல்ல. எல்லா துறையிலும். முழுவதும் ஏமாற்றவில்லை என்றால் கூட தொழிலில் அக்கறை இல்லாமல், தங்களுக்கு கிடைக்கவேண்டிய லாபத்தையும் இழந்து வாடிக்கையாளருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்துபவர்களுக்கு பஞ்சமில்லை.
    எல்லா தொழிலிலும் லாபம் சம்பாதிப்பதுதான் நோக்கம். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி நாமும் நல்ல லாபத்துடன் வேகமாக முன்னேற வேண்டும் என்று நினைப்பதுதான் நியாயம். ஆனால் ஏனோதானோவென்று ஒரு விஷயத்தை செய்து முடித்துவிட்டு அநியாய கட்டணம் வசூலிப்பது எல்லா தொழிலிலும் அதிகரித்து வருகிறது.//////

    கலி முற்றிக்கொண்டு வருகிறது. அக்கிரமங்கள் மட்டுமே இப்போது அதிகமாக உள்ளது. வருந்த வேண்டிய விஷயம். அது ஒன்று மட்டுமே நம்மால் செய்யக்கூடியதும் ஆகும்!

    ReplyDelete
  51. Blogger சரண் said...
    வாத்தியார் அவர்கள் என்னுடைய கருத்துரைக்கு கீழ்க்கண்டவாறு மறுமொழியிட்டிருந்தார்கள்.
    ///////////////////// ஜோதிடத்தில் கைதேர்ந்த மேதை ஒருவர், பல நாடி ஜோதிடர்களைச் சந்தித்துவிட்டு, இப்படிச் சொன்னார்:
    “கடந்த காலங்களை எல்லாம் துல்லியமாகச் செல்கிறார்கள். ஆனால் எதிர்காலப் பலன்கள் சரியாக இருப்பதில்லை”
    இதை அவர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார். காலதேவன் சொல்ல விட மாட்டான். அதாவது விதி சொல்ல விடாது. எதிர்கால பலன் துல்லியமாகத் தெரிந்தால் என்ன ஆவது? கேட்டுத் தெளிந்த மனிதனும் சும்மா இருக்க மாட்டான். பலன்களைச் சொல்பவனும் சும்மா
    இருக்க மாட்டான். இதனால் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி. எதிர்காலத்தை ஒரளவு தெரிந்து கொண்டால் போதும்! ////////////////////////////////////
    உண்மைதான். எனக்கு நாடி ஜோதிடத்தில் அவர்கள் எதிர்காலம் பற்றி சொன்ன பலன்கள் அப்படியே நடந்தாலும் கால ஓட்டம் அதன் போக்கில்தான் என்னை அந்த வழியில் நடத்திச்சென்றது. அவர்கள் சொன்ன நிலைக்கு செல்ல எனக்கு எந்த வழியும் தெரியாமல் நான் என் போக்கிலேயே வேறு பாதைக்கு முயற்சி செய்து கிரகங்களிடம் மாற்றி மாற்றி அடி வாங்கிக்கொண்டே இருந்தேன்.
    ''சாகுற நாள் தெரிஞ்சுட்டா வாழ்ற நாள் நரகமாயிடும்.''////////

    சாகப் போகின்ற நாள் தெரிந்தால், சிலர் தங்களுடைய தகாத ஆசைகளை எல்லாம் அதற்குள் தீர்த்துக் கொண்டு விடுவார்கள். அதனால்தான் அது தெரிவதில்லை. ஆனால் நடைமுறை ஜாதகத்தில் (அஷ்டகவர்க்கத்தில்) அதற்கு உரிய காலத்தைக் கோடிட்டுக் காட்டலாம். சம்பந்தப்பட்ட ஜாதகனிடம் ஜோதிடர்கள் அதைச் சொல்ல மாட்டார்கள்!

    ReplyDelete
  52. //////Blogger sriganeshh said...
    Thanks to Sister Parvathi and Bhuvaneshwar.
    எனக்குத் தெரிந்த அளவு....இந்த சொற்கள் ஜோதிட சம்பந்தமாக வருவதால் நான் அதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு அர்த்தத்தை முயற்சி செய்திருக்கிறேன்.
    10ம் வீடு கர்ம தானம் (karma Dhana)
    இது கர்ம தனமாக இருக்க வேண்டும்.
    11ம் வீடு கர்ம சகாயம் (karma Sahaya)
    सहाय ‍இதற்கு பின்பற்றுவோர், கம்பானியன், உதவி செய்பவர், வேலைக்காரர்கள் என்று லிஸ்ட் போடலாம்.
    12ம் வீடு கர்ம அதிகரணா (Karma Adhikarana)
    இதில் அதிகாரணா வில் வரும் "த" என்ற எழுத்துக்கு ஏற்ப அர்த்தம் கொள்ளலாம். முதன்மையான காரணம், (அ) மேற்பார்வையிடுதல் அதாவது சூப்பர்வைசிங்
    1ம் வீடு கர்ம பூதவஸ்து (Karma Bhutha Vasthu)
    பூத என்ற பூதம் என்ற பொருளில் கெட்ட என்றும் கொள்ளலாம், வஸ்து என்றால் பொருட்கள், பஞ்சபூதம் என்ற சொல்லில் வரும் அந்த அர்த்தமும் வரலாம். தேவ நாகரி எழுத்துக்களுக்கு ஏற்ப பொருள் கொள்ளலாம்.
    2ம் வீடு கர்ம நாசகர்னா (Karma Nasa karana)
    இதில் நாசகர்ணா (அ) காரண வா என்று தெரியவில்லை. காரண என்பது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது...அப்படி என்றால் நாசத்திற்கு காரணமான என்று எடுக்கலாம்...
    3ம் வீடு கர்ம சஹசார்யம் (Karma sahachari)
    சஹசார்யம் என்றால் தர்மபத்தினி அல்லது சகவாச தோழி என்றும் கொள்ளலாம்.
    4ம் வீடு கர்மயூஸ் (Karmayus)
    இது ஆயுஸ் என்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஆயுள்
    5ம் வீடு கர்ம பாக்கியம் (Karma Bhagya)
    6ம் வீடு கர்மவியாபாரம் (Karma Vyapara)
    7ம் வீடு கர்ம லாபம் (Karma Labha)
    மேல் சொன்ன மூன்றும் நார்மல் அர்த்தம் தான். பாக்கியம், வியாபாரம், லாபம்
    8ம் வீடு கர்மவியாயா (Karma Vyaya)
    வ்யாயா என்பது செலவு, விரையமாகுதல்,என்று வெவ்வேறு பொருள் வரலாம்.
    நன்றி..//////

    விளக்கங்களுக்கு நன்றி நண்பரே! பதிவில் இதைச் சேர்த்துவிட்டேன்!

    ReplyDelete
  53. சார், என்னுடைய பின்னூட்டத்தை பதிவில் கொண்டதற்கு மிக்க நன்றி. நான் இதைப் பற்றி தான் இன்னும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். இதை வைத்துக்கொண்டு எப்படி முன்பிறவியை அறிவது என்று. என் கருத்துக்களை பின்னாளில் தங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்.

    ReplyDelete
  54. Blogger Bhuvaneshwar said...
    எனக்கு தெரிந்து சென்ற இருநூறு முன்னூறு வருஷங்களுக்கு முன்பு வரை வடமொழியும் தமிழும் கை கோர்த்து தான் வலம் வந்தன.
    தமிழ் மன்னர்களின் சாசனங்கள் வடமொழியிலும் கல்வெட்டுக்கள் தமிழிலும் இருப்பது நாம் அறிவோம்.
    வடமொழி பாரதத்தின் பொது இணைப்பு மொழி மட்டும் அல்லாமல் சாத்திரங்களை கொண்ட மொழியாகவும் இருந்து உள்ளது வரலாற்றை ஆராய்ந்தவர்கள் அறிவர். நான் கூறும் வரலாறு ஆங்கிலேயரின் ஆரிய திராவிட வரலாறு அல்ல. நம் நாட்டின் வரலாறு.
    தமிழ் மொழியில் பல வடமொழி சொற்கள் கலந்து இருப்பது நாம் அறிவோம். அது கலப்படம் அல்ல. நமது நண்பரின்/உறவினரின் குணங்களை நாமும் நம்மை அறியாமலேயே கொண்டு இருப்பதில்லையா? அது போல.
    +++++
    தமிழ் நாட்டில் பிராமணரே இல்லை என்று சிலர் வாதாடுவர். வடமொழியே இல்லை என வாதாடுவர். ஆனால் ப்ராம்மனமும் அவன் கொண்டு வந்த வடமொழியும் இல்லாமல் சோழ தேசம் உண்டு என்று சொல்லுவது வேடிக்கை.
    சோழ தேசத்தின் பெயர் காரணம் அந்தணர் சம்பந்தம் உடையது. சோள தேசம் என்று இருக்க வேண்டிய சொல் சோழ தேசம் என ழகரம் கொண்டது வேத சம்பந்தம் உடையது.
    கன்னடத்தில் ள அழகு. தெலுங்கில் த அழகு. மலையாளத்திலும் ழ அழகு. எல்லாம் வேத சம்பந்தம் உடையவை.
    நம்பினால் நம்புங்கள், வடமொழியிலும் ழ உண்டு.
    "மீடுஷ்டமாய சேஷுமதே" என சிவபெருமானை போற்றி பணியும் வாக்கில் மீடுஷ்டமாய என்ற பதத்தின் டகரம் ழ கரம் போல தான் உச்சரிக்கப்படும் என்பது யசுர் வேதம் சொல்லுபவர்களுக்கு தெரியும்.
    +++++
    சிலப்பதிகாரத்தில் மதுரைக்காண்டத்தில் வழக்குரை காதையில் வரி அறுபது ஒன்பது மற்றும் எழுபது:
    "முத்தீச் செல்வது நான்மறை முற்றி
    ஐம்பெரும் வேள்வியும் செய்தொழில் ஓம்பும்
    அறுதொழில் அந்தணர் பெறுமுறை விளக்க"
    என பிராம்மணனின் பஞ்ச மகா யக்ஞங்களை, ஆறு கடமைகளை பற்றி உள்ளது. மூன்று அக்னிகளை பற்றியும் உள்ளது. இந்த வரிகள் வார்திகன் எனும் பார்ப்பனனை பற்றிய விவரிப்பில் வரும். சொன்னது பிராம்மணன் என்றால் கூட ஆட்சேபிக்கலாம். சொன்னது இளங்கோ அடிகள். அவர் சமணர். அதிலும் சமண துறவி. அவருக்கு பட்சபாதமோ வெறுப்போ இருக்க வாய்ப்பில்லை. அவர் எல்லா தெய்வங்களையும் புகழ்ந்து தான் பாடி இருக்கிறார். ஆகா அவர் சொல்வதை நம்ப மறுக்க முடியாது.
    +++++
    ஆக, வடமொழி இல்லாமல் அந்தணர் இல்லை, அந்தணர் இல்லாமல் தமிழகம் இருந்தது இல்லை. அரசர் அந்தணர் வாணிபர் வேளாளர் என தமிழ் நூல்கள் கூறுவது வேத தர்மத்தை தான்.
    வேதத்துக்கு ரஹஸ்யம் என வடமொழியில் ஒரு பெயர் உண்டு. அதை தமிழில் ஸ்பஷ்டமாக மறை என்று கூறி உள்ளோம். வேதநெறி தழைத்தோங்க என்று நம் தமிழ் நாட்டின் செல்லப்பிள்ளை ஞான சம்பந்த மூர்த்தி அருளி இருக்கிறார் அல்லவா?
    +++++
    அதனால் போட்டி எல்லாம் வேண்டாம். ஒன்று நம்முடையது மற்றொன்று மாற்றானுடையது என்ற நினைப்பு இருந்தால் தானே போட்டியும் எதிர்ப்பும் வரும்? எல்லாம் நம் மொழி தான். போட்டி வேண்டாம்.
    நமக்கு எண்ணிலா வன்கொடுமை இழைத்த ஆங்கிலேயரின் மொழியை as a Lingua franca ஒத்துக்கொள்ள தெரிந்த நமக்கு நமது சொந்த மொழியை ஏற்றுக்கொள்ள முடியாதா?//////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  55. Blogger சரண் said...
    நானும் ஏதாவது ஏமாற்றுப்பேர்வழி நாடி ஜோதிடரிடம் சென்று ஏமாந்துவிடுவேன் என்ற பயத்தில் ரொம்ப நாட்கள் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருடைய உறவினர் வைதீஸ்வரன் கோயிலில் அர்ச்சகராக பணிபுரிகிறார். அவரது பரிந்துரையின் பேரில் வைத்தீஸ்வரன் கோவில் தெற்குவீதியில் இருந்த ஒரு நாடிஜோதிடரிடம் சென்றேன்.
    பல ஏடுகள் படித்த பிறகு ஒரு ஓலையில் என் குடும்ப விபரம், தந்தையின் தொழில், பள்ளி கல்லூரி அனுபவங்கள், நாடி ஜோதிடம் பார்க்க செல்லும்போது என் தொழில் என்ற பல விபரங்கள் மிகச் சரியாக இருந்தது. ஆனாலும் எதிர் காலம் பற்றி அவர்கள் சொல்வதை நம்பத்தான் வேண்டுமா என்ற குழப்பத்தில்தான் இருந்தேன்.
    ஆனால் அவர்கள் என் எதிர்காலத்தில் மிக முக்கியமான சம்பவங்களாக சிலவற்றை குறிப்பிட்டார்கள். என் தொழில், கோவில் திருப்பணி, ஆகிய இரண்டும் அவர்கள் கூறிய படியே நடந்தன. மற்றவை தனிப்பட்ட விஷயங்கள். கடந்து சென்ற 6 விஷயங்களுமே மிகச்சரியாக நடந்தேறியது. சரியாக நடந்த விஷயங்களை அவர்கள் சொன்னதால் நான் முயற்சிக்கவில்லை. சிறு வயதில் இருந்து என்ன என் நோக்கமோ அதை தேடிதான் என் பாதையை அமைத்துக்கொண்டேன். ஆனால் சில சூழ் நிலைகள் அந்த பாதையிலிருந்து சற்று விலகி இப்போது நான் போகும் வழியில் செலுத்திக்கொண்டிருக்கிறது. அவற்றை நாடி ஜோதிடத்தில் மிகச் சரியாக குறிப்பிட்டிருந்ததுதான் எனக்கு ஆச்சரியமளிக்கும் விஷயம்.
    உதாரணம், திரைப்பட இயக்குனர் என்பது நீண்ட கால இலக்கு. குறுகிய கால இலக்கு பத்திரிகைப் பணி என்றுதான் நான் இருந்தேன். ஒன்றிரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உதவி ஒளிப்பதிவாளர், குறும்படம் ஒன்றில் உதவி இயக்குனர் என்று சென்ற நான், பிரபல நாளிதழ் ஒன்றில் பணியில் சேர்ந்த பிறகு, இனி இதுதான் என் வாழ்க்கை என்று பெருமூச்சு விட்டேன். ஆனால் அடுத்தடுத்து அங்கே எனக்கு கிடைத்த சில அனுபவங்கள் அந்த நாளிதழ் பணியை விட்டு வெளியேறி சொந்தத் தொழிலில் ஈடுபட வைத்தன.
    எப்போதுமே நாம் வேலை பார்க்கத்தானே போகிறோம். நமக்கு எதற்கு சேமிப்பு என்று அலட்சியமாக இருந்தேன். கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் அம்மாவின் நகை அடமானம், நண்பர் அளித்த தொகை, அம்மா பெயரில் வங்கிக்கடன் என்று முழுக்க முழுக்க அடுத்தவர் பணத்தை போட்டு தொழில் தொடங்கிவிட்டேன். இந்த பாதையில் என்னை செலுத்தியது எது?
    சில கேள்விகளுக்கு விடை தெரியாது என்பார்கள். வகுப்பறை பாடத்தை ஒழுங்காக கற்றுக்கொண்டதும் இதற்கான விடையை நான் இங்கே பகிர்ந்துகொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.////////

    நல்லது. காலம் கனியட்டும். முதலில் பாடங்களைப் படித்துத் தேர்ச்சியடையுங்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  56. /////Blogger ஓம் தத் சத் said...
    தேவையான மற்றும் அபூர்வமான
    தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி ஐயா/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  57. /////Blogger sriganeshh said...
    சார், என்னுடைய பின்னூட்டத்தை பதிவில் கொண்டதற்கு மிக்க நன்றி. நான் இதைப் பற்றி தான் இன்னும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். இதை வைத்துக்கொண்டு எப்படி முன்பிறவியை அறிவது என்று. என் கருத்துக்களை பின்னாளில் தங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்.////

    வசதிப்படும்போது எழுதியனுப்புங்கள். தனிப் பதிவாக வலை ஏற்றிவிடுவோம். அனைவருக்கும் பயன்படட்டும்

    ReplyDelete
  58. ////Blogger arul said...
    nice post////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  59. அண்மையில் என் கண்ணில் பட்டது.விருப்பமானவர்கட்கு உதவும் என்ற எண்ணத்தில் பதிவு செய்கின்றேன்.நன்றி.
    Tuesday, March 22, 2011
    ஜாமக்கோள் பிரசன்னம் பாடங்கள்
    http://geminischoolofastrology.blogspot.com.au/2011/03/blog-post.html

    http://jamakkolarudam.blogspot.com.au/2012_03_01_archive.html

    ReplyDelete
  60. உள்ளேன் அய்யா...

    ReplyDelete
  61. // நடைமுறை ஜாதகத்தில் (அஷ்டகவர்க்கத்தில்) அதற்கு உரிய காலத்தைக் கோடிட்டுக் காட்டலாம். சம்பந்தப்பட்ட ஜாதகனிடம் ஜோதிடர்கள் அதைச் சொல்ல மாட்டார்கள்!//

    ----

    எப்படி என சொல்லுங்கள் ஐயா. போகிற நாளுக்குள் சில பல நல்ல காரியங்களை பண்ண வேண்டும் என ஆசை இருக்கிறது. பண்ணி விட்டு சிவ நாம ஸ்மரணத்தோடு ஆனந்தமாக பறவை கூட்டிலிருந்து சிறகடித்து பறந்து விடட்டும்.........

    ReplyDelete
  62. அந்த கடைசி நாளில் சிவத்யானத்தில் இருந்து கம்பீரமான ஸ்ரீ ருத்ரசூக்தத்தை சொல்லிக்கொண்டு ஒள்ளிய பிறை அணிந்த எம்பெருமானோடு இரண்டறக்கலக்க ஆசை. வயசாகி அடிப்படை தேவைகளுக்கு கூட அடுத்தவரை எதிர்பார்க்கும் அவலம் இல்லாமல் நல்ல கட்டுடலாக இருக்கையிலேயே மகிழ்ச்சியாக பயமற்று போய் ஜோதியில் கலந்து விட தான் ஆசை.
    நோயில் கிடந்து அல்லாடவும் வேண்டாம், விபத்தில் சட்டென்று என்ன நடக்கிறது என்று தெரியாமல் போகவும் வேண்டாம், தூக்கத்தில் போகவும் வேண்டாம் எனக்கு. நன்கு நினைவு இருந்து சுவாமி நாமாவை சொல்லிக்கொண்டே முழு விழிப்புணர்வுடன் சந்தோஷமாக போக வேண்டும். வயோதிகம் வேண்டாம். "பெரிசு போனா தேவலை, படுத்தி எடுக்குது" என்ற சொற்களை கேட்க வேண்டாம்.

    ReplyDelete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
  64. உயர்திரு கிருஷ்ணன் அவர்களின் பாராட்டுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  65. //செலவிற்குக் கொண்டுவந்த தொகை கரைந்து விடாமல் பார்த்துக்கொள்ளூங்கள். மற்றதை வெள்ளிமலை மன்னவர் பார்த்துக்கொள்வார்!//
    ---
    Very true Sir. Will follow your advice :)

    ReplyDelete
  66. தஞ்சை தந்த பேராசான் சேக்கிழார் அடிப்பொடி ஸ்ரீமான் திருநெய்த்தானம் நடராஜன் ராமச்சந்திரன்(டி என் ஆர்) அவர்கள் கூறுவார்:"தமிழ் என் தாய் மொழி; சமஸ்கிருதம் என் தந்தை மொழி; சமஸ்கிருதம் தேவ பாஷை; தமிழ் மஹாதேவ பாஷை."

    இப்போதுதான் படித்தேன் துருக்கி மொழியில் பழைய துருக்கி, புதுத் துருக்கி என்று உள்ளதாம்.பழைய துருக்கியில் அரபு கலப்பு அதிகமாம். எழுத்துக்களும் அரபு வடிவமாம்.புதிய துருக்கியில் அரபு எழுத்துக்களைக் களைந்துவிட்டு லத்தீன் எழுத்துக்களைக் கற்பித்து விட்டனராம்.எவ்வளவு முயன்றும் துருக்கி மொழியில் அரபு வாசனையைத் தவிர்க்க முடியவில்லையாம்.

    'ஆதி' என்ற சொல்லுக்கு 'மூலம்' என்ற பொருள் கொள்கிறார் அய்யர்.

    ஆதி என்பதற்குப் பழைய என்று பொருள் கொண்டால் போதுமானது.

    கன்னடக்காரார்கள் காவேரிப் பிரச்சனை மட்டுமில்லாமல்,தமிழ்தான் கன்னடத்துக்கு மூல மொழி என்றெல்லாம் பேசுவதைக் கேட்டும் நம்மீது காழ்ப்புக் கொள்கிறார்கள்.

    எப்போதும் அய்யர் சரியான சொற்களைத்தான் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். பல ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் எழுதியுள்ளார் என்பதும் தெரிகிறது. அவற்றையெல்லாம் நமக்குக் காணக் கொடுத்தாலே அவர் எவ்வாறு மொழியைக் கையாண்டுள்ளார் என்பது புரியும்.
    அது நமக்கு ஒரு பயிற்சியாகவும் இருக்கும்.

    ReplyDelete
  67. //நம்பினால் நம்புங்கள், வடமொழியிலும் ழ உண்டு.//

    ஏன் ரஷ்ய மொழியிலும் கூட ழ உள்ளதாம்.

    புவனேஷ்வரின் தமிழ்=சமஸ்கிருதம் பற்றிய கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டுகிறது. பிற பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டு மேல் அதிகத் தகவல்கள் தரலாம் என்று இருக்கிறேன்.

    ReplyDelete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. ஆப்ரிக்கா காட்டில் ஓர் சிங்கம்

    Rani Velu Nachiyar 1730 to 1799

    வங்காளத்தில் ஒரு புலி

    Lakshmi Bai, the Rani of Jhansi 1835 to 1858

    பொதிகை மலைசாரலில் ஒரு குயில்

    Sarojini Naidu - 1879 to 1949

    செங்கோட்டையில் ஒரு மாடப்புறா

    Themozhi

    அடுத்தமுறை குறிஞ்சி மலர் அல்லது பவளமல்லி (எதுவாயிருந்தாலும் சரி)

    சமஸ்கிரதத்தில் இவ்வளவு ஆர்வம் இருப்பவர்கள் இருந்தும் அந்த மொழி வழக்கொழிந்தது வியப்பானது

    பதிவிற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete
  71. வடமொழி வழக்கொழிந்து போனதா? எப்பொழுது? எங்கே? இது எனக்கு புது செய்தியாக இருக்கிறதே! தூர் தர்ஷனின் ஞானதர்ஷன் அலைவரிசையை ஒருதரம் பார்த்து விட்டு வந்து சொல்லுங்களேன்!

    குறிப்பிட்ட சமூகம் மட்டும் தான் இம்மொழியை பயன்படுத்துகிறது, அதனால் இம்மொழி செத்த மொழி என்று கூறுவோரும் உளர். அவர்கட்கு நான் கூற விழைவது இது தான். பிரெஞ்சு மொழியை இங்கு பேசுவோர் வெகு சிலர். ஆப்பிரிக்க ஜூலு பாஷை இங்கே பேசுவோர் இல்லை. மதுரையில் சௌராஷ்டிரா மொழி பேசுவோர் ஒரு சிறிய அளவில் உள்ளனர்.

    ஒரு மொழியை வெகு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்பதால் அம்மொழி இறந்த மொழி ஆகி விடாது.

    வடமொழி நன்கு ஆரோக்யமாக உயிரோட்டத்துடன் ஜாம் ஜாம் என்று இருக்கிறது, ஜே ஜே என்று வலம் வருகிறது என்று இந்த மன்றத்தில் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    உண்மையில் அது நல்லது தான். பலருக்கும் தெரிந்து அதை பேசி, கை பேசியில் தட்டச்சி சுருக்கி வளைத்து நெளித்து கொன்று விடுவதை விட சிலர் வாயில் மட்டும் இருந்து நெஞ்சில் நிறைந்து அது இப்பொழுது இருக்கும் நிலை ஒரு வகையில் நல்லதே. ஆனால் அந்நிலை மாற வேண்டும். அனைவரும் வடமொழியை கற்று அதன் அழகை அனுபவிக்க வேண்டும். அதனால் தமிழுக்கு ஒன்றும் குறை வந்து விடாது. ஆங்கிலத்தால் வராத குறையா நம் வடமொழியால் இனி வரவேண்டும்? தமிழ் குழந்தைகள் பலர் இன்னும் தமிழே தெரியாமல் நுனி நாக்கில் ஆங்கிலம் புரள உள்ளூரிலேயே வளருவதை பார்த்தால் தமிழ் தான் ஆஸ்பத்திரியில் உள்ளதோ என பதறுகிறது நெஞ்சம்.

    எத்தனை பேருக்கு சிலப்பதிகாரம் தெரியும்? எத்தனை பேருக்கு பிழை இன்றி பத்து பத்தி தமிழில் எழுத தெரியும்? தேமாங்காய் புளிமாங்காய் என்று பேசினால் அது எந்த அண்ணாச்சி கடையில் கிடைக்கும் என்று கேட்கும் ஆட்கள் மிகப்பலர். எத்தனை பேர் தமது தாய் மொழியை (தமிழ் என்றில்லை, தாய்மொழியை) பழுதற கற்று வருகின்றனர்?

    எல்லாருக்கும் ஆங்கிலம் தான் இன்று வேண்டும்.

    எனக்கு ஆங்கிலம் மீது கடுகத்தனையும் த்வேஷம் இல்லை. நான் ஆங்கிலத்திலும் அதன் இலக்கணப்படியே கவிகள் எழுதுபவன். ரசிப்பவன். ஆனால் முதற்க்கண் என் மொழியான தமிழை கற்றேன். அதன் பின் தான் ஆங்கிலம்.

    மெல்லத்தமிழினிச்சாகும் என்றான் அமரகவி. ஒரு வேளை இது உண்மை ஆகி விடுமோ என அஞ்சுகிறேன்.

    வடமொழி செத்ததா சாகவில்லையா என்பது கிடக்கட்டும். அது சாகாது. அதை பொத்தி போற்றி பாதுகாக்க பலர் உள்ளனர். தமிழைப்பற்றி கவலைப்படுவோம்.

    It's high time we realized the need to know our own roots and develop a mastery over our own mother tongues.

    ReplyDelete
  72. This comment has been removed by the author.

    ReplyDelete
  73. I agree with Krishnan Sir!

    -----

    கன்னடத்துக்கு தமிழ் தான் மூல வேர் என்று நம்மவர்கள் பேசுவது உண்மை ஆனாலும் தேவை அற்ற ஒரு பேச்சு என்பது எனது கருத்து.
    நான் பெங்களூரில், அதை சுற்றிய வட்டாரங்களில் வளர்ந்தவன் ஆதலால் இந்த பேச்சு கன்னடர்களுக்கு புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது தெரியும்.

    கன்னட மொழியும் ஆயிரம் ஆண்டு பழமையான மொழி தான். தமிழும் பிராகிருதமும்/வடமொழியும் கலந்த கலப்பு மொழி. ஆனால் அது தனித்த மொழியாக வளர்ந்து அதற்கே உரிய நளினமும் அழகும் கொஞ்ச வளைய வருகிறது.

    அம்மொழி பேசும் மக்களின் விருந்தோம்பல் அலாதியானது. அவர்கள் மொழிப்பற்று நம்மவர்களை விட கொஞ்சம் அதிகம்.

    அவர்களிடம் போய் சும்மா எங்கள் மொழியில் இருந்து தான் உங்கள் மொழி வந்தது என்றால் கட்டாயம் மனம் புண்படும்.

    இதெல்லாம் தேவை இல்லாத பேச்சு.

    அம்மாவிடம் இருந்து தான் மகள் பிறந்தாள் என்பது வியக்தம். ஆனாலும் அதையே மகளிடம் போய் சொல்லி, உன் அம்மாவை விட நீ கீழானவள் என்று சொன்னால் என்னவாகும்? இரு வேறு மனுஷிகள் என்ற முறையில் இருவரும் சமம் தானே? இருவருக்குமே தனித்தனியான குறை நிறைகள் உண்டு. அது போலத்தான் மொழிகளிலும்.

    அவர்கள் மொழிகளில் உள்ள அழகுகளை அனுபவித்தால் என்ன? நமது தான் உசத்தி என்ற நினைப்பும் மமதையும் உறவுகளை குலைக்கும். அதை தவிர ஒரு பிரயோஜனமும் கிடைக்காது.

    மேலும் பிறர் மனம் துணுக்குறும் என தெரிந்தே நாம் அவர்களிடம் நம் மொழியை சிறப்பித்து சொல்வது நாகரிகமாக தெரியவில்லை.

    ஏதோ தமிழராக பிறந்து விட்டோம் அவர்கள் கன்னடராக பிறந்து விட்டார்கள். அவ்வளவு தான். மொழி அன்பையும் புரிதலையும் தான் வளர்க்க வேண்டும். மனிதத்தை, பாசத்தை வளர்க்கும் இணைப்பு பாலமாக தான் இருக்க வேண்டுமே தவிர சண்டைக்கு வித்தாக இருந்தால் அது மொழிக்கே செய்யும் அவமரியாதை.

    நான் சீனர்களோடும் ரஷ்யர்களோடும் அமெரிக்கர்களோடும் பணி செய்த காலத்தில் அவர்கள் மொழிகளையும் கலாசாரத்தையும் பற்றி விவாதித்து அலசி இனிய நினைவுகளை கொண்டுள்ளதால் சொல்லுகிறேன்.

    சீனனிடம் போய் வெறும் ஹலோவை அவன் மொழியில் "ஈ ஹா" என்று சொல்லுங்கள்? உச்சி குளிர்ந்து போய் விடுவான்! அதே தான் இங்கேயும்.

    ஒரே மொழியை நட்புகளை சேர்க்கவும் பயன் படுத்தலாம், வெறுப்பை வளர்க்கவும் பயன்படுத்தலாம்.

    சாய்ஸ் நம் கையில்!

    ReplyDelete
  74. kmr.krishnan said...
    ////நம்பினால் நம்புங்கள், வடமொழியிலும் ழ உண்டு.//

    ஏன் ரஷ்ய மொழியிலும் கூட ழ உள்ளதாம்.

    புவனேஷ்வரின் தமிழ்=சமஸ்கிருதம் பற்றிய கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டுகிறது. பிற பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டு மேல் அதிகத் தகவல்கள் தரலாம் என்று இருக்கிறேன்.////

    ஐ, சூப்பர்!

    தங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன், ஐயா.

    ReplyDelete
  75. ஜயா,
    தொடர்கிறேன் உங்களை 2008 ம் ஆண்டு முதல்.

    எப்பொழுதாவது தான் படிக்கிறேன் உங்கள் பதிவினை. நிரம்ப மாதங்கள் கழித்து உங்கள் பதிவினை படிக்கிறேன். தொடர்ந்து நீங்கள் எழுதும் ஆற்றல் மிக வியக்கிறது. உங்களின் தன்னலமற்ற உழைப்புக்கு தலைவணங்குகிறேன்...பழனி முருகனின் அருளால் எல்லா நலமும் கிட்டட்டும். நேரம் இருப்பின் உங்க்ளை சந்திக்கிறேன். மிக்க நன்றி
    கணேஷ் , சென்னை

    ReplyDelete
  76. ////Pandian said...
    உள்ளேன் அய்யா...

    Thursday, June 21, 2012 11:49:00 அம////
    வாருங்கள் புது மாப்பிள்ளை தங்கள் வரவு நல்வரவாகுக!

    ReplyDelete
  77. A clarification for my last comment.

    மெல்லத்தமிழினிச்சாகும் என்றந்தப்பேதை உரைத்தான், ஆ இந்த வசையெனக் கெய்திடலாமோ!!!!.....

    இது பாரதி கூற்று.... அந்த கூற்றை உண்மையாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் தான் நான் எழுதினேன்......

    தமிழ் சாகும் என பாரதி கூறவில்லை. நான் இப்போது புலம்புவதை போல் பாரதி அன்று புலம்பினார்.

    ReplyDelete
  78. //செலவிற்குக் கொண்டுவந்த தொகை கரைந்து விடாமல் பார்த்துக்கொள்ளூங்கள். மற்றதை வெள்ளிமலை மன்னவர் பார்த்துக்கொள்வார்!//

    அய்யா. செலவிற்கு கொண்டு வந்த தொகையை தீர்த்தால்தானே அடுத்த பிறவியாவது பிரச்சனைகள் குறைவாக இருக்கும்.

    பிறவி, கர்மா பற்றி ஜோதிட ரீதியாகச் அலச முயல்கிறேன்.

    ஒரு ஆத்மா இத்தனை பிறவிகள் செய்துள்ள நல்வினைகள், தீவினைகள் அடங்கிய மூட்டைதான் சஞ்சித கர்மா.

    ஒரு ஆத்மா அடுத்த பிறவி எடுக்கும்போது இந்த சஞ்சித கர்மாவிலிருந்து ஒரு கைப்பிடி அள்ளி நமது ஜாதகத்தைப் பிரம்மன் உருவாக்குகிறார். இதுதான் பிராரப்த கர்மா. தான் என்ன எழுதினோம் என்று பிரம்மனுக்கே தெரியாதாம். அதனாலதான் என்னடா உன் கையெழுத்து தலையெழுத்து மாதிரி இருக்கு என்பார்கள். எல்லாம் மூட்டையில் என்ன இருக்கிறதோ அதைப் பொறுத்தது. நல்வினைகள் அதிகமாக இருந்தால் ஜாதகம் நன்றாக அமையும். இல்லையென்றால் மோசமாக அமையும்.

    இப்பொழுது இந்த பிறவியில் மேலும் சில நல்வினை, தீவினைகளைச் சேர்த்துக் கொள்கிறோம். இவற்றில் சிலவற்றின் பலன் இந்த பிறவியிலேயே கிடைக்கிறது. பலன் அனுபவிக்காதது கிரியமான கர்மா என்ற மூட்டையில் சேர்ந்து விடுகிறது.

    இந்த பிறவி முடியும்போது மிச்சமிருக்கும் பிராரப்த கர்மாவும், கிரியமான கர்மாவும் சஞ்சித கர்மா மூட்டையில் சேர்ந்து அதன் அடிப்படையில் அடுத்த பிறவி உண்டாகிறது.

    பிராரப்த கர்மா எப்படி மிச்சப்படும் என்ற கேள்வி எழலாம். என் நண்பர் ஒருவர் ஜாதகத்தில் அவருக்கு மோசமான நேரம் இருக்கும்போது முக்கியமான வேலைகள் எதையும் செய்ய மாட்டார். அவரிடம் நான் கேட்பது சரி நீங்கள் அனுபவிக்காது விட்ட பிராரப்த கர்மா உங்களை அடுத்த பிறவியிலும் தொடருமே அதற்கு என்ன செய்வீர்கள் என்று? அவர் அதை அடுத்த பிறவியில் பார்த்துக் கொள்ளலாம் என்பார்.

    இதில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் நல்வினைகள் மட்டுமே இருந்தால் கூட அதை அனுபவிக்க மீண்டும் பிறவியெடுக்க வேண்டுமென்பதுதான்.

    அப்பொழுது எப்படித்தான் பிறப்பற்ற நிலையை அடைவது என்று கேட்டால் அதற்குத்தான் கிருஷ்ணர் பாகவதத்திலும், பகவத் கீதையிலும் வழி காட்டுகிறார். நீங்கள் செய்யும் வினைகள் நிஷ்காம்ய கர்மாவாக இருக்க வேண்டும். அதாவது பலன்களை எதிர்பாராது கடமைகளைச் செய்து விளைவுகளை கடவுளுக்கே அர்ப்பணித்தல். இப்படி வாழ்பவர்கள் கர்ம ஞானிகள் எனப்படுவர். கர்ம ஞானம் உடையவர்தான் பிறவிக்கடல் தாண்ட முடியும்.

    இதைத்தான் திருவள்ளுவர்

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.

    என்கிறார்.

    ஆனால் நாமோ இந்த ஜென்மம் இல்லாவிட்டாலும் அடுத்த ஜென்மாவிலாவது இந்த ஆசை நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறோம். இப்படி பிறவிச் சுழலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறோம்.

    சிலர் தன்னுடைய ஜாதகப்படி தனக்கு இது கடைசிப் பிறவி என்று சொல்லிக் கொண்டு திரிவார்கள் அதற்கு அர்த்தம் புரியாமல். ஜாதகப்படி கடைசிப் பிறவி என்றால் அவருடைய சஞ்சித கர்மாவில் மிகவும் குறைவான இருப்பே உள்ளது. அதை மொத்தமாக வழித்து பிராரப்த கர்மாவாக்கி கடைசி பிறவியின் ஜாதகம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிறவியில் நிஷ்காம்ய கர்ம ஞானியாக அவர் வாழ்ந்தால் மட்டுமே அவருக்கு இது கடைசி பிறவியாக இருக்கும். இல்லையென்றால் இந்த பிறவியில் சேர்த்த நல்வினை, தீவினைகளைக் கழிக்க மறுபடி பிறக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  79. ஜகன்னாத் அவர்களே, மிக நல்ல பின்னூட்டம்.

    வாத்தியார் ஐயா சொன்ன போது நானும் இப்படி ஒரு வினாடி நினைத்தேன்.

    அனால் அவர் சொல்ல வந்த பொருள் வேறு. அவர் சொல்ல வந்தது கொண்டு வந்த புண்ணியம் அழிந்து பாவம் ஏறாமல் பார்த்துக்கொள்ளுங்கள், உங்களை வெள்ளிமலை மன்னவர் சிவனார் பார்த்துக்கொள்வார் என்று, என நான் நம்புகிறேன். அதனால் தான் ஆஹா அப்படியே செய்கிறேன் என சொன்னேன்.

    மற்றபடி நீங்கள் கூறுவது உண்மை. சிலர் பணிரண்டில் கேது வந்து உட்கார்ந்த உடன் நான் இனி பிறக்க மாட்டேனாக்கும் என்று சொல்லுவார்கள். அது மோக்ஷத்துக்கு அவர்கள் முயன்றால் எளிதாக கிடைக்க பண்ணும் ஒரு அமைப்பாக வேண்டுமானால் இருக்கலாம்.

    தெரியவில்லை. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்.

    மகா பெரியவருடைய ஜாதகத்தில் கேது இரண்டில் உள்ளது. ஆனால் அவர் ஜீவன் முக்தர் இல்லையா?

    :-)))

    ReplyDelete
  80. http://www.sanskrit.nic.in/SSII/ssii18.pdf

    http://www.youtube.com/watch?v=7DHpDa6eERo

    http://www.youtube.com/watch?v=IMWostFwwJc&feature=related

    http://www.tamilhindu.com/2011/05/from-cycle-to-sanskrit-hindutva-space-for-dalit-rights/

    சமஸ்கிருதம் கர்னாடகாவில் மட்டூர், (அல்லது மாட்டூர்,மத்தூர்?)ஷிமோகா அருகில் இருக்கும் கிராமத்தில் அனைவரும் சமஸ்கிருதத்திலேயே பேசுகிறார்கள்.
    இதாவது வைதீகப் பிராமணர்களால் அப்படி ஆகியிருக்கிறது.

    மத்தியபிரதேசத்தில் ஒரு கிராமத்தில் வைதீக நெறிகளுக்காக இல்லாமல் பள்ளியில் சமஸ்கிருதமே மீடியம் ஆக உள்ளது.மேலே உள்ள காணொளிகளைக் காணுங்கள்.

    இன்று தமிழகத்தில் 10 ஓரியென்டல் பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் பயில்பவர்களில் பெரும்பாலவனர்கள் பிராமணரல்லாதவர்களே. பிற மதத்தவரும் உள்ளனர். சமஸ்கிருதம் ஒரு கட்டாயப் பாட மொழியாகும்
    ஓ எஸ் எல் சி தேர்வில் மொத்த மதிப்பெண் 600 ஆகும்.
    இன்று ஓ எஸ் எல் சி சேரும் மாணவர்கள் விளிம்பு நிலையில் இருப்பவர்களே. மதிப்பெண் குறைந்ததாலோ, வேறுபள்ளிகளில் இடம் கிடைக்காததாலோ, கட்டணம் கட்ட முடியாததாலோதான் ஓரியென்டல் பள்ளிகளில் சேர்கிறார்கள்.அவர்கள் மூலம், அதாவது பிராமண‌ர்கள் அல்லாதவர்கள் மூலம் சமஸ்கிருதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    தமிழ் பிராமணர்களுக்கு சமஸ்கிருதம் பேச்சு மொழி அல்ல. தமிழ்தான் தாய் மொழி.சமஸ்கிருதம் வழிபாட்டு மொழிதான். எனவே இங்கே வழக்கொழிந்த மொழி என்று சொல்வதற்கில்லை.

    மேலும் சமஸ்கிருதம் பாரதத்திற்கு ஓர் இணைப்பு மொழியாகத்தான் இருந்துள்ளது. ஆங்காங்கு உள்ள பிராந்திய மொழியுடன், பிற மொழிக்காரர்களுடன் தொடர்புக்குத்தான் சமஸ்கிருதம் பயன்பட்டுள்ளது.
    அந்த இடத்தைத்தான் ஆங்கிலம், இந்தி இப்போது பிடித்துள்ளன‌.

    அண்ணல் அம்பேத்கர் நல்ல சமஸ்கிருத பண்டிதர். சமஸ்கிருதத்தை இந்தியாவின் நிர்வாக, இணைப்பு மொழியாக ஆக்க மக்கள் அவையில் மசோதாவைக் கொண்டு வந்தார். மசோதா நகல் இணையத்தில் கிடைக்கிறது.

    ReplyDelete
  81. எந்த ஒரு மொழியும் இந்த இனத்தவரக்கு
    என சொல்வது சரியல்ல

    சங்கம் அமைத்தவனுக்கு
    சகல மொழிகளும் தெரியும்

    ஊழிக்காலத்தில் படிக்க
    ஒரு படி எடுத்தவை என இவர்கள்

    ஒலியே... வரியே... என அவர்கள்..
    கிலியோ... புலியோ... என நாம்..

    அண்மையில் மொழி பிரச்சனையை காட்டும் அந்த படம் வேண்டாம் என்றனர் சபையிலே...

    அந்த மொழிக்கு கருப்பு கொடி எடுத்தவர்
    இன்று அங்கேயே..

    உறவுகள் உணர்வில் தொணிக்க வேண்டும்
    அது மொழியில் வெளிப்பட வேண்டும்

    முப்பது கோடி முகம் உடையாள் என்றவர் கூட இந்த மொழியை உயர்த்தி பாடியதாக காணோம்..

    சரி.. சரி..
    வகுப்பறை விறுவிறுப்பாக இருந்தால் சரி.. சரி..

    ReplyDelete
  82. ///Jagannath said...
    எல்லாம் மூட்டையில் என்ன இருக்கிறதோ அதைப் பொறுத்தது.///

    தாங்கள் சொல்லும் கருத்துக்களில் பல இடங்களில் அய்யர் வேறுபடுகின்றார்..

    எடுத்துச் சொல்ல விவாத மேடைளை வகுப்பறை அமைத்து தரும் வரை அமைதி கொள்கிறோம்

    வார மலர் வருவது போல
    வாரம் ஒரு தலைப்பில் விவாத மேடையை வகுப்பறை அமைக்குமானால் களம் இறங்கலாம்..

    ReplyDelete
  83. நெஞ்சிலே தோழமை இருந்தால் விவாத மேடை வரை காத்திருக்க தேவை இல்லை.
    நண்பரோடு கருத்துப்பகிர வாத மேடை எதற்கு? வார இறுதி எதற்கு?

    ReplyDelete
  84. அடடா!!!!!!!!!!!!! இந்த வாரம் நமக்கு சரியில்லையோ, எது சொன்னாலும்(மொழி/ஜாதி) அது ஏதாவது ஒரு எதிர்பாராத பிரச்சனையில் கொண்டு விடுகிறதே.!!!!!!!!!!!!!!!!!!!!

    ///சமஸ்கிரதத்தில் இவ்வளவு ஆர்வம் இருப்பவர்கள் இருந்தும் அந்த மொழி வழக்கொழிந்தது வியப்பானது///
    என்று நான் வியந்ததற்கு காரணம் ....
    There are a number of sociolinguistic studies of spoken Sanskrit which strongly suggest that oral use of Sanskrit is limited, with its development having ceased sometime in the past.[17] Accordingly, says Pollock (2001), "most observers would agree that, in some crucial way, Sanskrit is dead".[14] He describes it in comparison with the "dead" language of Latin:[18]
    http://en.wikipedia.org/wiki/Sanskrit

    Termination of spoken Sanskrit
    http://en.wikipedia.org/wiki/Termination_of_spoken_Sanskrit
    போன்ற தகவல்களினால் மட்டுமே.

    ஐயா மன்னிக்கவும் கலகம் மூட்டும் எண்ணத்தில் சொல்லவில்லை.

    ReplyDelete
  85. தோழமை இருப்பதாலே
    தோள் கொடுக்கும் தோழனாய்..

    தோழமை இருப்பதால் தான்
    தோன்றின பட்டி மண்டபங்கள் பல

    விவாத மேடை ஒருவரே
    சாதகமாகவும் பேசலாம்
    பாதகமாகவும் பேசலாம்

    புவனம் சுற்றும் தோழர்
    புவனேஷுக்கு இது தெரியும் தானே

    வாரம் முழுதும் வரும் நமக்கு
    வருமா இனி வார இறுதி

    வளம் சேர்ப்போம் ....
    வாருங்கள் நண்பரே...

    ReplyDelete
  86. This comment has been removed by the author.

    ReplyDelete
  87. This comment has been removed by the author.

    ReplyDelete
  88. நாவால் நவில்வதை
    நாமே புரிந்து கொள்ளாத போது

    நாவை புரிந்து கொள்ள சொல்வது
    நலமோ..

    வீரம் உடலில் மட்டுமல்ல..
    உரம் பொருந்திய அதிலும் உண்டு

    அது சரி..
    இது என்ன
    சாட்டிங் பெட்டியோ..

    இருக்கட்டும்
    இனி மனம் போல் வாழ்க.,.

    ReplyDelete
  89. சாதகமாகவும் பாதகமாகவும் ஒருவரே பேசலாம், ஆனால் அது விவாதமன்று, விதண்டை!

    வெண்ணிற புள்ளிகளை உடைய, கண்களிளின்றும் மதம் சொரியும் கச்சணிந்த போர் யானையை கண்டு அஞ்சாமல் பாய்ந்து தனது குறுவாளால் அதன் நெற்றியை பிளக்க வல்ல வீரம் மிகுந்த மறவர் விளையும் இந்நாட்டினை, வீரக்கழல் அணிந்து மலையினை வில்லாக வளைத்த, நெற்றியில் ஒரு கண்ணை உடைய பெருமான், கண்டோர் அஞ்சும், உயிர் நீங்கிய மண்ணுடலை எரிக்கும் அழகிய பாழிடத்தே கொண்ட சாம்பலை பூசி, ஒரு ஆலின் கீழ் அமர்ந்து காப்பான்.

    அவனே மண்ணுலக மாந்தரை அறிவு மயக்கத்தில் இருந்து காக்க எண்ணி, துவராடை உடுத்தி, கையினில் குற்றமற்ற துறவிகள் தாங்கும் ஒளி பொருந்திய திருக்கோலினை ஏந்தி தனது மங்கையரின் அன்புடைய நெஞ்சம் போல மிக்க மென்மை உடைய பாதங்கள், சிறு பரல் கற்களில் துன்புற நடந்து, தீயோரை வாதில் வென்று நூல் பல தந்து அருளுவான்.

    அத்தகைய அழகிய இயல்புடைய நம் இறைவன், கயல் போன்ற விழிகளை கொண்டு நாணி நிலம் நோக்கி நின்ற நமது அன்னையை மணக்க எண்ணி பாண்டியனும் நாணும் வண்ணம் ஒளிரும் கிளிச்சிறை என்னும் பொன்னால் ஆக்கபெற்ற குற்றம் நீங்கிய அணி மணி புனைந்து வேதம் எந்நாளும் ஒலிக்கும் மதுரையில், மணக்கோலத்தில் வீற்றிருந்து அருளுவன். அவன் வாதிலும் வல்லான், தீயோரின் சூதிலும் வல்லான். அவன் நமக்கு நண்பனாக, அன்பு பொருந்திய நெஞ்சத்தோடு நம்முடன் மாறுபடாது இனிது இருந்து களிப்பானாக.

    அறிவில் சிறந்த சான்றோரே, அத்தகைய வாதில் வல்லானை துதித்து நாமும் பேசுவோம் வாரீர்!

    யாவரும் அறியத்தக்க மொழிகளை, நாவாகிய குறுந்தடியால் நுமது வாயாகிய பறையை அறைந்து மண்ணுலக மாந்தர் பயனுற அன்புடன் நவில்வீராகுக.........

    எண்ணம் போல வாழ்வு.....

    ReplyDelete
  90. en.wikipedia.org/wiki/Mattur

    அதே விகிபீடியாவில் மேற்படி லின்க்கையும் பார்க்கவும்.

    விகிபீடியாவை யார் வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் என்பதால் அவரவர்கள்
    தங்கள் மன மாச்சரியங்களுக்குத் தகுந்தாற் போல மாற்றங்களைச் செய்கின்றனர்.
    விகிபீடியாவை ஆதென்டிக்காகக் கொள்ள முடியவில்லை.மன்னிக்கவும்.

    ReplyDelete
  91. This comment has been removed by the author.

    ReplyDelete
  92. This comment has been removed by the author.

    ReplyDelete
  93. This comment has been removed by the author.

    ReplyDelete
  94. அன்பு சகோதரி தேமொழி:

    Indeed, it is a crying shame that the very men that were born in this land of unparallelled history need to look outside of their homes and their masters to know their very roots.

    Such has been the influence of the English system of instruction, where pedagogy was not an instrument of enlightenment to the pupil but alas, one of delusion.

    So effective have the ugly tricks of Macaulay been till date, that sons of this land refuse to believe their real history and would rather run to unscrupulous texts and online sources and worse still, believe in them at first sight, after all, anything English must be true, so have we been indoctrinated by our erstwhile rulers.

    The results are here to see, with an already riven, dissected and vivisected India, with not a semblance to what it once was - a land of unparallelled harmony, wisdom and spiritual glory.

    The colonial rule might be dead, but its ghosts linger still.

    Sorry, rose tinted spectacles have never been known to have provided an honest view of the world around.

    ReplyDelete
  95. ///Bhuvaneshwar said...

    அன்பு சகோதரி தேமொழி:

    Indeed, it is a crying shame that the very men that were born in this land of unparallelled history need to look outside of their homes and their masters to know their very roots.

    Such has been the influence of the English system of instruction, where pedagogy was not an instrument of enlightenment to the pupil but alas, one of delusion.///

    இத தமிழ்ல சொல்லலாம்ல?????????????!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  96. எல்லாம் நம்ம பாஷை தான். தமிழே தெரியாம இங்கிலீஸ்ல தஸ்ஸு புஸ்ஸுன்னு ஆத்தினா தான் தப்பு!

    :-))))))

    ReplyDelete
  97. அன்பு சகோதரி தேமொழி:

    என் கேரக்டரையே நீங்க புரிஞ்சுக்கலையே....... :-)))

    +++++

    ஆங்கிலம் பேசவோ படிக்கவோ ரசிக்கவோ கூடாது என சொல்லுபவன் அல்லன் நான்.

    அந்த செயலை செய்வதற்கு முன்னால் வீட்டு பாஷையை நன்கு கசடற கற்க வேண்டும் என சொல்லுகிறேன்.

    ஆங்கிலம் பேசினா தப்பில்லை. தமிழே படிக்காம தமிழன் ஆங்கிலம் பேசினால் அது தப்பு.

    இது எப்படின்னா...... சமூக சேவை எல்லாம் ஒரு பெண் பண்ணலாம் தப்பில்லை. ஆனால் புருஷனை கவனிக்காமல் ஊராருக்கு உபகாரம் பண்ணுவது தப்பு.

    நாலு பேருக்கு சோறு போடுவது நல்லது தான். ஆனால் பெத்தவளை கவனிக்காம ஊரானுக்கு அன்னம் போட்டா அதில் புண்ணியமா?

    அதே போல தான்.

    ReplyDelete
  98. This comment has been removed by the author.

    ReplyDelete
  99. அன்பு சகோதரி தேமொழி:

    சில சமயம் நான் ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுவது சீன் போடுவதற்காக அல்ல. அந்த அவசியம் எனக்கு இல்லை!
    தமிழில் தட்டச்சுவது கொஞ்சம் கடினமான வேலை.

    உடனுக்குடன் பின்னூட்டம் இட வேண்டும் என்ற நிலையிலோ அல்லது வேறு வேலையாக இருப்பதால் நேரமில்லாமையாலோ ஆங்கிலத்தில் போட்டு விடுவேன். இன்று அப்படித்தான். சோறு சம்மந்தி சாப்பிட போகும் அவசரம். ஆங்கிலம்!

    அவ்வளவு தான். வேறு ஒன்றும் இல்லை.........
    :-)

    உதாரணமாக எனது வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் மலையாளத்திலும் பேசுவார்கள் தமிழிலும் பேசுவார்கள். மலையாள நெடி தமிழிலும் தமிழ் மணம் மலையாளத்திலும் வீசும்.

    அங்கே (Kerala) போனால் பாண்டி (தமிழன்) என துரத்துகிறான், இங்கே (Northern TN) போனால் மலையாளி என விரட்டுகிறான், என்ன பண்ணுவது என அப்பாவியாக கேட்பார்கள்!

    தமிழர்கள் தான் எனினும் நாகர்கோயில் பக்கம் அப்படித்தான். அது போல.......

    ReplyDelete
  100. ///kmr.krishnan said...

    en.wikipedia.org/wiki/Mattur

    அதே விகிபீடியாவில் மேற்படி லின்க்கையும் பார்க்கவும்.

    விகிபீடியாவை யார் வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் என்பதால் அவரவர்கள்
    தங்கள் மன மாச்சரியங்களுக்குத் தகுந்தாற் போல மாற்றங்களைச் செய்கின்றனர்.
    விகிபீடியாவை ஆதென்டிக்காகக் கொள்ள முடியவில்லை.மன்னிக்கவும்.///

    அப்போ.....நீங்க மாத்தூர் பற்றி கொடுத்த விக்கி சுட்டியையும் நம்பாதே அப்படின்னு சொல்றீங்க இல்லையா?

    ReplyDelete
  101. //அப்போ.....நீங்க மாத்தூர் பற்றி கொடுத்த விக்கி சுட்டியையும் நம்பாதே அப்படின்னு சொல்றீங்க இல்லையா?//

    நான் மட்டுர் பற்றி யூ ட்யூப் லின்க் கொடுத்துள்ளேன்.'சான்ஸ்க்ரிட் மட்டூர்'என்று கொடுத்தால் மேலும் பல யூஆர்ல் திறக்கின்றன. அவற்றையும் பார்த்துவிட்டு ஓரளவு திருப்தி ஏற்பட்டாலேயே ஒரு செய்தியைக் கொடுக்கலாம்.

    விக்கிபீடியாவை மட்டும் நம்பி ,அது ஒரு 'ஆதென்டிக் சோர்ஸ்' என்று நம்பி வாதங்களை வைப்பதற்குமுன் நன்கு யோசிக்க வேண்டும்.

    விக்கிபீடியாவை நடத்துபவர்களுடைய குறிக்கோளும் கூட ஆசிய கிழக்கத்திய நாடுகளின் முன்னேற்றம் ,வளர்ச்சியை காமாலைக் கண்ணுடன் பார்ப்பவர்கள் என்ற விமர்சனம் உண்டு. குறிப்பிட்ட மதத்தினை உலக மதமாக மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள் விக்கிபீடியா நிர்வாகிகள்.

    நீங்கள் மட்டுர் பற்றிய செய்தியையோ, அல்லது பிராமணர்கள் தமிழர்களே அல்ல என்றோ, தமிழ் பிராமண‌ர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்றோ, தமிழ் பிராமணர்களின் தாய்மொழி சமஸ்கிருதம்தான் என்றோ,வர்ணத்திலிருந்துதான் சாதி பிறந்தது என்றோ, பிராமணர்கள் "வருவதற்குமுன்" தழகத்தில் யாரும் சாதியே இல்லாமல் இருந்தார்கள் என்றோ, நந்தனாரை பிராமண‌ர்கள் தீயில் இட்டுப் பொசுக்கிவிட்டார்கள் என்றோ, கீழ வெண்மணியில் பெரியாரின் ஜாதிக்காரர்கள் தலித்களை தீயிட்டுக்கொன்றது பிராமணர்களால் தான் என்றோ, எப்படி வேண்டுமானாலும் எந்த சோர்ஸ் மூலமும் படித்து எதை நம்பினலும் நான் என்ன செய்ய முடியும்? எனக்கு கிடைக்க வேண்டிய தினசரி சோறும் தண்ணீரும் ஆண்டவன்
    கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தால் போதுமானது.
    "வடகோடு சாய்தென்ன? தென்கோடு நிமிந்தென்ன....?"

    ReplyDelete
  102. /////Blogger krishnar said...
    அண்மையில் என் கண்ணில் பட்டது.விருப்பமானவர்கட்கு உதவும் என்ற எண்ணத்தில் பதிவு செய்கின்றேன்.நன்றி.
    Tuesday, March 22, 2011
    ஜாமக்கோள் பிரசன்னம் பாடங்கள் http://geminischoolofastrology.blogspot.com.au/2011/03/blog-post.html
    http://jamakkolarudam.blogspot.com.au/2012_03_01_archive.html////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  103. /////Blogger Pandian said...
    உள்ளேன் அய்யா.../////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி பாண்டியன்!

    ReplyDelete
  104. //////Blogger Bhuvaneshwar said...
    // நடைமுறை ஜாதகத்தில் (அஷ்டகவர்க்கத்தில்) அதற்கு உரிய காலத்தைக் கோடிட்டுக் காட்டலாம். சம்பந்தப்பட்ட ஜாதகனிடம் ஜோதிடர்கள் அதைச் சொல்ல மாட்டார்கள்!//
    ----
    எப்படி என சொல்லுங்கள் ஐயா. போகிற நாளுக்குள் சில பல நல்ல காரியங்களை பண்ண வேண்டும் என ஆசை இருக்கிறது. பண்ணி விட்டு சிவ நாம ஸ்மரணத்தோடு ஆனந்தமாக பறவை கூட்டிலிருந்து சிறகடித்து பறந்து விடட்டும்........//////.

    மரணத்தைத் தெரிந்து கொள்வதற்கான ஜாதக வழிமுறைகளை இப்போது - அதுவும் பின்னூட்டத்தில் சொல்வதற்கில்லை! எத்தனை பேர்கள்
    அதனால் குழப்பம் அடைவார்கள் என்று யோசித்துப்பாருங்கள்!

    ReplyDelete
  105. ////Blogger Bhuvaneshwar said...
    அந்த கடைசி நாளில் சிவத்யானத்தில் இருந்து கம்பீரமான ஸ்ரீ ருத்ரசூக்தத்தை சொல்லிக்கொண்டு ஒள்ளிய பிறை அணிந்த எம்பெருமானோடு இரண்டறக்கலக்க ஆசை. வயசாகி அடிப்படை தேவைகளுக்கு கூட அடுத்தவரை எதிர்பார்க்கும் அவலம் இல்லாமல் நல்ல கட்டுடலாக இருக்கையிலேயே மகிழ்ச்சியாக பயமற்று போய் ஜோதியில் கலந்து விட தான் ஆசை.
    நோயில் கிடந்து அல்லாடவும் வேண்டாம், விபத்தில் சட்டென்று என்ன நடக்கிறது என்று தெரியாமல் போகவும் வேண்டாம், தூக்கத்தில் போகவும் வேண்டாம் எனக்கு. நன்கு நினைவு இருந்து சுவாமி நாமாவை சொல்லிக்கொண்டே முழு விழிப்புணர்வுடன் சந்தோஷமாக போக வேண்டும். வயோதிகம் வேண்டாம். "பெரிசு போனா தேவலை, படுத்தி எடுக்குது" என்ற சொற்களை கேட்க வேண்டாம்.////

    இதெல்லாம் உங்கள் ஆசை அல்லது விருப்பம். உங்கள் ஜாதகத்தில் என்ன ஸ்டோர் ஆகியுள்ளதோ அதன்படிதான் எல்லாம் நடக்கும்!

    ReplyDelete
  106. /////Blogger kmr.krishnan said...
    தஞ்சை தந்த பேராசான் சேக்கிழார் அடிப்பொடி ஸ்ரீமான் திருநெய்த்தானம் நடராஜன் ராமச்சந்திரன்(டி என் ஆர்) அவர்கள் கூறுவார்:"தமிழ் என் தாய் மொழி; சமஸ்கிருதம் என் தந்தை மொழி; சமஸ்கிருதம் தேவ பாஷை; தமிழ் மஹாதேவ பாஷை."
    இப்போதுதான் படித்தேன் துருக்கி மொழியில் பழைய துருக்கி, புதுத் துருக்கி என்று உள்ளதாம்.பழைய துருக்கியில் அரபு கலப்பு அதிகமாம். எழுத்துக்களும் அரபு வடிவமாம்.புதிய துருக்கியில் அரபு எழுத்துக்களைக் களைந்துவிட்டு லத்தீன் எழுத்துக்களைக் கற்பித்து விட்டனராம்.எவ்வளவு முயன்றும் துருக்கி மொழியில் அரபு வாசனையைத் தவிர்க்க முடியவில்லையாம்.
    'ஆதி' என்ற சொல்லுக்கு 'மூலம்' என்ற பொருள் கொள்கிறார் அய்யர்.
    ஆதி என்பதற்குப் பழைய என்று பொருள் கொண்டால் போதுமானது.
    கன்னடக்காரார்கள் காவேரிப் பிரச்சனை மட்டுமில்லாமல்,தமிழ்தான் கன்னடத்துக்கு மூல மொழி என்றெல்லாம் பேசுவதைக் கேட்டும் நம்மீது காழ்ப்புக் கொள்கிறார்கள்.
    எப்போதும் அய்யர் சரியான சொற்களைத்தான் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். பல ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் எழுதியுள்ளார் என்பதும் தெரிகிறது. அவற்றையெல்லாம் நமக்குக் காணக் கொடுத்தாலே அவர் எவ்வாறு மொழியைக் கையாண்டுள்ளார் என்பது புரியும்.
    அது நமக்கு ஒரு பயிற்சியாகவும் இருக்கும்./////

    காணக் கொடுத்தால் வரைக்கும் சரிதான். அதற்கு அடுத்துள்ள வரிதான் இடிக்கிறது (அவர் எவ்வாறு மொழியைக் கையாண்டுள்ளார் என்பது புரியும்.) புரிய வேண்டுமா அல்லது தெரிய வேண்டுமா? அதைத் தெளிவாகச் சொல்லுங்கள் சுவாமி!:-))))))

    ReplyDelete
  107. /////Blogger kmr.krishnan said...
    //நம்பினால் நம்புங்கள், வடமொழியிலும் ழ உண்டு.//
    ஏன் ரஷ்ய மொழியிலும் கூட ழ உள்ளதாம்.
    புவனேஷ்வரின் தமிழ்=சமஸ்கிருதம் பற்றிய கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டுகிறது. பிற பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டு மேல் அதிகத் தகவல்கள் தரலாம் என்று இருக்கிறேன்./////

    அடடா, நான் தமிழில் மட்டும்தான் ழ இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். தகவலுக்கு நன்றி. ரஷ்யாவில் ’ழ’ இருப்பதை எங்கே பிடித்தீர்கள் சார்?

    ReplyDelete
  108. //////Blogger தேமொழி said...
    ஆப்ரிக்கா காட்டில் ஓர் சிங்கம்
    Rani Velu Nachiyar 1730 to 1799
    வங்காளத்தில் ஒரு புலி
    Lakshmi Bai, the Rani of Jhansi 1835 to 1858
    பொதிகை மலைசாரலில் ஒரு குயில்
    Sarojini Naidu - 1879 to 1949
    செங்கோட்டையில் ஒரு மாடப்புறா
    Themozhi
    அடுத்தமுறை குறிஞ்சி மலர் அல்லது பவளமல்லி (எதுவாயிருந்தாலும் சரி)
    சமஸ்கிரதத்தில் இவ்வளவு ஆர்வம் இருப்பவர்கள் இருந்தும் அந்த மொழி வழக்கொழிந்தது வியப்பானது
    பதிவிற்கு நன்றி ஐயா//////

    பின்னூட்டத்தில் கடைசி இரண்டு வரிகள் மட்டுமே புரிகிறது சகோதரி. மற்ற வரிகளுக்கெல்லாம் நீங்கள் விளக்கம் சொன்னால் அதற்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன்! (உ- ம்: ஆப்பிரிக்கக் காட்டிற்கும் வேலு நாச்சியார் அவர்களுக்கும் என்ன தொடர்பு?)

    ReplyDelete
  109. /////Blogger காவேரி கணேஷ் said...
    ஜயா,
    தொடர்கிறேன் உங்களை 2008 ம் ஆண்டு முதல்.
    எப்பொழுதாவது தான் படிக்கிறேன் உங்கள் பதிவினை. நிரம்ப மாதங்கள் கழித்து உங்கள் பதிவினை படிக்கிறேன். தொடர்ந்து நீங்கள் எழுதும் ஆற்றல் மிக வியக்கிறது. உங்களின் தன்னலமற்ற உழைப்புக்கு தலைவணங்குகிறேன்...பழனி முருகனின் அருளால் எல்லா நலமும் கிட்டட்டும். நேரம் இருப்பின் உங்களை சந்திக்கிறேன். மிக்க நன்றி
    கணேஷ் , சென்னை//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  110. /////Blogger ஜி ஆலாசியம் said...
    ////Pandian said...
    உள்ளேன் அய்யா...
    Thursday, June 21, 2012 11:49:00 அம////
    வாருங்கள் புது மாப்பிள்ளை தங்கள் வரவு நல்வரவாகுக!//////

    ஆமாம், வகுப்பறையின் சார்பில் நானும் சொல்லிக்கொள்கிறேன். அவர் வரவு நல்வரவாகட்டும்!

    ReplyDelete
  111. //////Blogger Jagannath said...
    //செலவிற்குக் கொண்டுவந்த தொகை கரைந்து விடாமல் பார்த்துக்கொள்ளூங்கள். மற்றதை வெள்ளிமலை மன்னவர் பார்த்துக்கொள்வார்!//
    அய்யா. செலவிற்கு கொண்டு வந்த தொகையை தீர்த்தால்தானே அடுத்த பிறவியாவது பிரச்சனைகள் குறைவாக இருக்கும்.
    பிறவி, கர்மா பற்றி ஜோதிட ரீதியாகச் அலச முயல்கிறேன்.
    ஒரு ஆத்மா இத்தனை பிறவிகள் செய்துள்ள நல்வினைகள், தீவினைகள் அடங்கிய மூட்டைதான் சஞ்சித கர்மா.
    ஒரு ஆத்மா அடுத்த பிறவி எடுக்கும்போது இந்த சஞ்சித கர்மாவிலிருந்து ஒரு கைப்பிடி அள்ளி நமது ஜாதகத்தைப் பிரம்மன் உருவாக்குகிறார். இதுதான் பிராரப்த கர்மா. தான் என்ன எழுதினோம் என்று பிரம்மனுக்கே தெரியாதாம். அதனாலதான் என்னடா உன் கையெழுத்து தலையெழுத்து மாதிரி இருக்கு என்பார்கள். எல்லாம் மூட்டையில் என்ன இருக்கிறதோ அதைப் பொறுத்தது. நல்வினைகள் அதிகமாக இருந்தால் ஜாதகம் நன்றாக அமையும். இல்லையென்றால் மோசமாக அமையும்.
    இப்பொழுது இந்த பிறவியில் மேலும் சில நல்வினை, தீவினைகளைச் சேர்த்துக் கொள்கிறோம். இவற்றில் சிலவற்றின் பலன் இந்த பிறவியிலேயே கிடைக்கிறது. பலன் அனுபவிக்காதது கிரியமான கர்மா என்ற மூட்டையில் சேர்ந்து விடுகிறது.
    இந்த பிறவி முடியும்போது மிச்சமிருக்கும் பிராரப்த கர்மாவும், கிரியமான கர்மாவும் சஞ்சித கர்மா மூட்டையில் சேர்ந்து அதன் அடிப்படையில் அடுத்த பிறவி உண்டாகிறது.
    பிராரப்த கர்மா எப்படி மிச்சப்படும் என்ற கேள்வி எழலாம். என் நண்பர் ஒருவர் ஜாதகத்தில் அவருக்கு மோசமான நேரம் இருக்கும்போது முக்கியமான வேலைகள் எதையும் செய்ய மாட்டார். அவரிடம் நான் கேட்பது சரி நீங்கள் அனுபவிக்காது விட்ட பிராரப்த கர்மா உங்களை அடுத்த பிறவியிலும் தொடருமே அதற்கு என்ன செய்வீர்கள் என்று? அவர் அதை அடுத்த பிறவியில் பார்த்துக் கொள்ளலாம் என்பார்.
    இதில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் நல்வினைகள் மட்டுமே இருந்தால் கூட அதை அனுபவிக்க மீண்டும் பிறவியெடுக்க வேண்டுமென்பதுதான்.
    அப்பொழுது எப்படித்தான் பிறப்பற்ற நிலையை அடைவது என்று கேட்டால் அதற்குத்தான் கிருஷ்ணர் பாகவதத்திலும், பகவத் கீதையிலும் வழி காட்டுகிறார். நீங்கள் செய்யும் வினைகள் நிஷ்காம்ய கர்மாவாக இருக்க வேண்டும். அதாவது பலன்களை எதிர்பாராது கடமைகளைச் செய்து விளைவுகளை கடவுளுக்கே அர்ப்பணித்தல். இப்படி வாழ்பவர்கள் கர்ம ஞானிகள் எனப்படுவர். கர்ம ஞானம் உடையவர்தான் பிறவிக்கடல் தாண்ட முடியும்.
    இதைத்தான் திருவள்ளுவர்
    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார். என்கிறார்.
    ஆனால் நாமோ இந்த ஜென்மம் இல்லாவிட்டாலும் அடுத்த ஜென்மாவிலாவது இந்த ஆசை நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறோம். இப்படி பிறவிச் சுழலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறோம்.
    சிலர் தன்னுடைய ஜாதகப்படி தனக்கு இது கடைசிப் பிறவி என்று சொல்லிக் கொண்டு திரிவார்கள் அதற்கு அர்த்தம் புரியாமல். ஜாதகப்படி கடைசிப் பிறவி என்றால் அவருடைய சஞ்சித கர்மாவில் மிகவும் குறைவான இருப்பே உள்ளது. அதை மொத்தமாக வழித்து பிராரப்த கர்மாவாக்கி கடைசி பிறவியின் ஜாதகம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிறவியில் நிஷ்காம்ய கர்ம ஞானியாக அவர் வாழ்ந்தால் மட்டுமே அவருக்கு இது கடைசி பிறவியாக இருக்கும். இல்லையென்றால் இந்த பிறவியில் சேர்த்த நல்வினை, தீவினைகளைக் கழிக்க மறுபடி பிறக்க வேண்டியதுதான்.///////

    ஆமாம், மறுபடி மறுபடி பிறந்து அல்லல் படவேண்டியதுதான். அதில் ஒன்றும் சந்தேகமில்லை!

    ReplyDelete
  112. //////Blogger Bhuvaneshwar said...
    ஜகன்னாத் அவர்களே, மிக நல்ல பின்னூட்டம்.
    வாத்தியார் ஐயா சொன்ன போது நானும் இப்படி ஒரு வினாடி நினைத்தேன்.
    அனால் அவர் சொல்ல வந்த பொருள் வேறு. அவர் சொல்ல வந்தது கொண்டு வந்த புண்ணியம் அழிந்து பாவம் ஏறாமல் பார்த்துக்கொள்ளுங்கள், உங்களை வெள்ளிமலை மன்னவர் சிவனார் பார்த்துக்கொள்வார் என்று, என நான் நம்புகிறேன். அதனால் தான் ஆஹா அப்படியே செய்கிறேன் என சொன்னேன்.
    மற்றபடி நீங்கள் கூறுவது உண்மை. சிலர் பணிரண்டில் கேது வந்து உட்கார்ந்த உடன் நான் இனி பிறக்க மாட்டேனாக்கும் என்று சொல்லுவார்கள். அது மோக்ஷத்துக்கு அவர்கள் முயன்றால் எளிதாக கிடைக்க பண்ணும் ஒரு அமைப்பாக வேண்டுமானால் இருக்கலாம்.
    தெரியவில்லை. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்.
    மகா பெரியவருடைய ஜாதகத்தில் கேது இரண்டில் உள்ளது. ஆனால் அவர் ஜீவன் முக்தர் இல்லையா? :-)))//////

    ஆமாம். நான் சொன்னது, நீங்கள் புரிந்து கொண்டுள்ள அர்த்ததில்தான்!

    ReplyDelete
  113. //////Blogger kmr.krishnan said...
    http://www.sanskrit.nic.in/SSII/ssii18.pdf
    http://www.youtube.com/watch?v=7DHpDa6eERo
    http://www.youtube.com/watch?v=IMWostFwwJc&feature=related
    http://www.tamilhindu.com/2011/05/from-cycle-to-sanskrit-hindutva-space-for-dalit-rights/
    சமஸ்கிருதம் கர்னாடகாவில் மட்டூர், (அல்லது மாட்டூர்,மத்தூர்?)ஷிமோகா அருகில் இருக்கும் கிராமத்தில் அனைவரும் சமஸ்கிருதத்திலேயே பேசுகிறார்கள். இதாவது வைதீகப் பிராமணர்களால் அப்படி ஆகியிருக்கிறது.
    மத்தியபிரதேசத்தில் ஒரு கிராமத்தில் வைதீக நெறிகளுக்காக இல்லாமல் பள்ளியில் சமஸ்கிருதமே மீடியம் ஆக உள்ளது.மேலே உள்ள காணொளிகளைக் காணுங்கள்.
    இன்று தமிழகத்தில் 10 ஓரியென்டல் பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் பயில்பவர்களில் பெரும்பாலவனர்கள் பிராமணரல்லாதவர்களே. பிற மதத்தவரும் உள்ளனர். சமஸ்கிருதம் ஒரு கட்டாயப் பாட மொழியாகும்
    ஓ எஸ் எல் சி தேர்வில் மொத்த மதிப்பெண் 600 ஆகும்.
    இன்று ஓ எஸ் எல் சி சேரும் மாணவர்கள் விளிம்பு நிலையில் இருப்பவர்களே. மதிப்பெண் குறைந்ததாலோ, வேறுபள்ளிகளில் இடம் கிடைக்காததாலோ, கட்டணம் கட்ட முடியாததாலோதான் ஓரியென்டல் பள்ளிகளில் சேர்கிறார்கள்.அவர்கள் மூலம், அதாவது பிராமண‌ர்கள் அல்லாதவர்கள் மூலம் சமஸ்கிருதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
    தமிழ் பிராமணர்களுக்கு சமஸ்கிருதம் பேச்சு மொழி அல்ல. தமிழ்தான் தாய் மொழி.சமஸ்கிருதம் வழிபாட்டு மொழிதான். எனவே இங்கே வழக்கொழிந்த மொழி என்று சொல்வதற்கில்லை.
    மேலும் சமஸ்கிருதம் பாரதத்திற்கு ஓர் இணைப்பு மொழியாகத்தான் இருந்துள்ளது. ஆங்காங்கு உள்ள பிராந்திய மொழியுடன், பிற மொழிக்காரர்களுடன் தொடர்புக்குத்தான் சமஸ்கிருதம் பயன்பட்டுள்ளது.
    அந்த இடத்தைத்தான் ஆங்கிலம், இந்தி இப்போது பிடித்துள்ளன‌.
    அண்ணல் அம்பேத்கர் நல்ல சமஸ்கிருத பண்டிதர். சமஸ்கிருதத்தை இந்தியாவின் நிர்வாக, இணைப்பு மொழியாக ஆக்க மக்கள் அவையில் மசோதாவைக் கொண்டு வந்தார். மசோதா நகல் இணையத்தில் கிடைக்கிறது.//////

    தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  114. /////Blogger அய்யர் said...
    எந்த ஒரு மொழியும் இந்த இனத்தவரக்கு
    என சொல்வது சரியல்ல
    சங்கம் அமைத்தவனுக்கு
    சகல மொழிகளும் தெரியும்
    ஊழிக்காலத்தில் படிக்க
    ஒரு படி எடுத்தவை என இவர்கள்
    ஒலியே... வரியே... என அவர்கள்..
    கிலியோ... புலியோ... என நாம்..
    அண்மையில் மொழி பிரச்சனையை காட்டும் அந்த படம் வேண்டாம் என்றனர் சபையிலே...
    அந்த மொழிக்கு கருப்பு கொடி எடுத்தவர்
    இன்று அங்கேயே..
    உறவுகள் உணர்வில் தொணிக்க வேண்டும்
    அது மொழியில் வெளிப்பட வேண்டும்
    முப்பது கோடி முகம் உடையாள் என்றவர் கூட இந்த மொழியை உயர்த்தி பாடியதாக காணோம்..
    சரி.. சரி..
    வகுப்பறை விறுவிறுப்பாக இருந்தால் சரி.. சரி..//////

    வகுப்பறையின் விறுவிறுப்பு எப்போதும் குறையாது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!!

    ReplyDelete
  115. ///////Blogger அய்யர் said...
    ///Jagannath said...
    எல்லாம் மூட்டையில் என்ன இருக்கிறதோ அதைப் பொறுத்தது.///
    தாங்கள் சொல்லும் கருத்துக்களில் பல இடங்களில் அய்யர் வேறுபடுகின்றார்..
    எடுத்துச் சொல்ல விவாத மேடைளை வகுப்பறை அமைத்து தரும் வரை அமைதி கொள்கிறோம்
    வார மலர் வருவது போல
    வாரம் ஒரு தலைப்பில் விவாத மேடையை வகுப்பறை அமைக்குமானால் களம் இறங்கலாம்..//////

    வகுப்பறையில் பலதரப்பட்ட மாணவர்கள் இருக்கிறார்கள். ஆகவே விவாதமேடைக்கு இங்கே வாய்ப்பில்லை! வாத்தியாரின் அனுமதியும் அதற்கு இல்லை!

    ReplyDelete
  116. ///////Blogger Bhuvaneshwar said...
    நெஞ்சிலே தோழமை இருந்தால் விவாத மேடை வரை காத்திருக்க தேவை இல்லை.
    நண்பரோடு கருத்துப்பகிர வாத மேடை எதற்கு? வார இறுதி எதற்கு?//////

    கருத்தை வலியுறுத்திச் சொல்லுங்கள். வார்த்தையில் கடுமை வேண்டாம். அனைவருக்கும் வாத்தியாரின் வேண்டுகோள் இது!

    ReplyDelete
  117. //////Blogger தேமொழி said...
    அடடா!!!!!!!!!!!!! இந்த வாரம் நமக்கு சரியில்லையோ, எது சொன்னாலும்(மொழி/ஜாதி) அது ஏதாவது ஒரு எதிர்பாராத பிரச்சனையில் கொண்டு விடுகிறதே.!!!!!!!!!!!!!!!!!!!!
    ///சமஸ்கிரதத்தில் இவ்வளவு ஆர்வம் இருப்பவர்கள் இருந்தும் அந்த மொழி வழக்கொழிந்தது வியப்பானது///
    என்று நான் வியந்ததற்கு காரணம் ....
    There are a number of sociolinguistic studies of spoken Sanskrit which strongly suggest that oral use of Sanskrit is limited, with its development having ceased sometime in the past.[17] Accordingly, says Pollock (2001), "most observers would agree that, in some crucial way, Sanskrit is dead".[14] He describes it in comparison with the "dead" language of Latin:[18]
    http://en.wikipedia.org/wiki/Sanskrit
    Termination of spoken Sanskrit
    http://en.wikipedia.org/wiki/Termination_of_spoken_Sanskrit
    போன்ற தகவல்களினால் மட்டுமே.
    ஐயா மன்னிக்கவும் கலகம் மூட்டும் எண்ணத்தில் சொல்லவில்லை./////

    அது (கலகம் மூட்டும் எண்ணம் உங்களுக்கு இருக்காது என்று) தெரியாதா என்ன?

    ReplyDelete
  118. அமைதி!
    அமைதி!
    அமைதி!
    பின்னூட்டம் திசை மாறிப்போய்க்கொண்டிருக்கிறது.
    எழுதியவரை போதும்!
    அடுத்த பாடத்தைப் படிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்!
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  119. ///பின்னூட்டத்தில் கடைசி இரண்டு வரிகள் மட்டுமே புரிகிறது சகோதரி. மற்ற வரிகளுக்கெல்லாம் நீங்கள் விளக்கம் சொன்னால் அதற்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன்! (உ- ம்: ஆப்பிரிக்கக் காட்டிற்கும் வேலு நாச்சியார் அவர்களுக்கும் என்ன தொடர்பு?)///

    என்னால் முடிந்தவரை நானே பின்னோக்கிப் பார்த்து என் முன் பிறவிகள் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன்.
    முதலில் சிங்கம், பிறகு வேலு நாச்சியார், அப்புறம் புலி, அதற்கடுத்து லக்ஷ்மிபாய், அடுத்து குயில், பிறகு சரோஜினி நாய்டு, மாடப்புறா, இந்தப் பிறவியில் தேமொழியாகிய நான், அடுத்த பிறவியில் ஒரு மலர் என்று நானே கற்பனைப் படுத்திக் கொண்டேன் ஐயா.
    மணிரத்தினம் பாணியில் வசம் எழுதினால் இப்படிதான் குழப்பம் வருமோ?

    இன்றைய பதிவு தூண்டிவிட்ட கற்பனையினால் வாளேந்தி புரவியில் இருமுறை வலம் வந்துவிட்டேன். ஆனால் கற்பனை சுகமாக இருந்தது.

    ReplyDelete
  120. பதிவிற்கு மிக்க நன்றிகளும் அன்பு வணக்கங்களும், வாத்தியாரே.

    முருகன் அருளால் எனக்கும் ஒரு கவி வந்தது திடீரென்று,

    முருகனின் அன்புடைய பக்தர்களான வாத்தியாருக்கும் நண்பர் போகர் அவர்களுக்கும் இது சமர்ப்பணம்.

    ஏதேனும் குற்றம் இப்பாடலில் இருப்பின் சிறுவன் எனை சீறாதே அருளி, திருத்துமாறு வேண்டுகிறேன்.

    +++++

    காரிருள் குழலாள் குழவி
    ஆறிரு வந்தோள் போற்றி;
    சீறிடு முறுபகை மாற்றும்
    தாரணி வோன்வேல் போற்றி;
    மாறிடு மனத்தோர் வஞ்சம்
    காறிடுங் குழந்தை போற்றி;
    சோறிடும் எந்தை போல்வான்
    ஆறுவாய் குடக்கோ போற்றி!

    ஐந்தலைப் பொதிகை தங்கும்
    பைந்தமிழ் பிள்ளை முனிவன்
    மைந்தனாக் கொண்டு லகோர்க்கு
    நைந்திடாத் தென்மொழி யீந்த
    அஞ்சிறை மயில் மீதேகி
    அஞ்சிடும் மான்விழி எழுவர்
    மிஞ்சிடும் பிள்ளையி னன்பால்
    கொஞ்சிடும் கோவே போற்றி;
    -----
    ஆறிரு வந்தோள்: ஆறு + இரு + வன் + தோள் = பன்னிரண்டு வழிய தோள்கள்
    தாரணி வோன்: தார் + அணிவோன் (தார் - முனை கட்டப்படாத மாலை; திருச்செந்தூர் வேலன் படம் காணவும்)
    ஆறுவாய் குடக்கோ: ஆறு முகம் உடைய, மலைகளுக்கு (குடம் - மலை) அரசன் (முகத்துக்கு வாய் எனும் சொல்லையே பயன்படுத்துவது வடமிழியின் இயல்பு)

    மைந்தன் = சீடன்;
    அஞ்சிறை: அம் + சிறை = அழகிய சிறகு
    அஞ்சிடும் மான்விழி எழுவர்: மருண்டு விழிக்கும் மான் போன்ற கண்களை உடைய பெண்கள் எழுவர் - கார்த்திகை பெண்டிர்
    கோ: அரசன் - பிள்ளையை ராஜா என கொஞ்சும் பொருளில்.

    ReplyDelete
  121. SP.VR. SUBBAIYA said...
    /////Blogger ஜி ஆலாசியம் said...
    ////Pandian said...
    உள்ளேன் அய்யா...
    Thursday, June 21, 2012 11:49:00 அம////
    வாருங்கள் புது மாப்பிள்ளை தங்கள் வரவு நல்வரவாகுக!//////

    ஆமாம், வகுப்பறையின் சார்பில் நானும் சொல்லிக்கொள்கிறேன். அவர் வரவு நல்வரவாகட்டும்!////////

    வாத்தியார் அய்யா அவர்களுக்கும் ஆலாசியம் அய்யா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

    சில நாட்கள் வகுப்பு அறைக்கு வர முடியாமல் பொய் விட்டது மன்னிக்கவும்...

    ReplyDelete
  122. அய்யா வகுப்பறை தடம் மேரி பொய் கொண்டிருபதாக எண்ணுகிறேன்...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com