மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.3.12

Numerology பெயருக்கு Make Up போடுவது எப்படி?



பெயருக்கு அரிதாரம் பூசுவது எப்படி?

(நேற்றையப் பதிவும், இந்தப் பதிவும் அடுத்த 2 பதிவுகளும் மீள்பதிவுகள். அவற்றைத் தொடர்ந்து எண் கணிதத்தை விரிவாக எழுத உள்ளேன். ஆகவே இதை பழைய பதிவுதானே என்று கேள்வி கேட்காமல் தொடர்ந்து படியுங்கள். எழுதப்போகும் புதிய பதிவுகளுக்கு இது முன்னுரையாக இருக்கும். அந்த நினைப்பில் படியுங்கள்)

அபரிதமான வெற்றி அல்லது அபரிதமான தோல்வி!

சனீஷ்வரனின் எண் 8 என்பதை அனைவரும் அறிவோம். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 8

இந்த எட்டாம் எண்ணிற்கு ஒரு விஷேசம் உண்டு. அந்த எண்ணை உடையவர்கள் வாழ்க்கையில் அதீத வெற்றியை அடைவார்கள் அல்லது அதீதமான தோல்வியை அடைவார்கள்.

எண் ஜோதிடத்தில் மட்டுமல்ல, ஜாதகத்திலும் அதே பலன் உண்டு.

சனி, மகரம் மற்றும் கும்ப லக்கினங்களுக்கு அதிபதி. அதில் கும்பலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, லக்கினாதிபதியும் சனிதான், விரையாதிபதியும் (12th Lord) சனிதான். அந்த லக்கினக்காரர்களுக்கு, சனீஷ்வரன் ஜாதகத்தில் உச்ச, கேந்திர, கோணங்களில் இருந்தால்
மட்டுமே வாழ்க்கை சிறக்கும்.

இல்லையென்றால் அவர்கள் படாதபாடு படவேண்டியதிருக்கும். வாழ்க்கை முழுவதும் போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும்.

ஒருவருடைய பெயர் அல்லது ஒரு நிறுவனத்தின் பெயர் 8 அல்லது
26 என்று வந்தால் அது சிறப்பாக இருக்காது. இரண்டு எண்களுமே
மோசமான எண்களாகும். ஆனால் 17 என்று வரும் எண் பெரிய
வெற்றியைத் தரக்கூடிய எண்ணாகும்

உதாரணம்: B O M B A Y = 2 7 4 2 1 1 = 17

17ஆம் எண்ணிற்கான பலன்: It is a highly spiritual and fortunate number

அதை 15 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை என்று மாற்றினார்கள்.

M U M B A I = 4 6 4 2 1 1 = 18  (இது நல்ல எண் அல்ல)  மாற்றிய பிறகு பம்பாய் பல பிரச்சினைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. மாற்றியவர்கள் இதை அறிந்தார்களா? அல்லது உணர்ந்தார்களா? தெரியவில்லை!

நம் மெட்ராஸ் சென்னையாக மாறியதும் அறிந்த கதைதான்.
M A D R A S = 4 1 4 2 1 3 = 15  (இது சூப்பரான எண்)
 மாறிய பிறகு, அதாவது   C H E N N A 1 = 3 5 5 5 5 1 1 = 25 (இது சுமாரான எண்தான். ஆனால் மோசமில்லை)

எல்லா வளங்களுடன் இருக்கும் எங்கள் ஊரின் எண்:
C O I M B A T O R E = 3 7 1 4 2 1 4 7 2 5 = 36
----------------------------------------------------------------------
தனிப்பட்ட பெயர்களின் கூட்டல் எண் சரியாக உள்ளதா என்று எப்படித் தெரிந்துகொள்வது?

சிம்ப்பிள். ஜாதகனின் பிறந்த எண்ணும் (birth number) பெயரின் கூட்டல் எண்ணும் ஒன்றாக இருந்தால் போதும். சரியாயாக உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம்.

1, 10, 19, 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 1
2, 11, 20, 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 2
3, 12, 21, 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 3
4, 13, 22, 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 4
5, 14, 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 5
6, 15, 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 6
7, 16, 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 7
8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 8
9, 18, 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 9
---------------------------------------------------------------------
எழுத்துக்களுக்கான எண்கள்:

A = 1, B = 2, C = 3, D = 4, E = 5, F = 8, G = 3, H = 5,

I OR J = 1, K = 2, L = 3, M = 4, N= 5, O = 7, P = 8

Q = 1, R = 2, S = 3, T = 4

U = 6, V = 6, W = 6

X = 5, Y = 1, Z = 7

=========================================================================
இதை எல்லாம் எப்படி வடிவமைத்தார்கள் என்று கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். கேள்வி கேட்டுக் கொண்டி ருந்தால் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாது.

நம்பிக்கை இருந்தால், கடைப்பிடிக்கலாம், நம்பிக்கை இல்லாவிட்டால் கடாசி விட்டு (உதறிவிட்டு) அடுத்த வேலையைப்பார்க்கலாம். நமக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காக, ஆதாரம் கேட்டு, அடுத்தவன் தலையை உருட்டக்கூடாது:-)))

நம் பெயர் நம்மைக்கேட்டு வைக்கப்படவில்லை. அதுதான் பரிதாபம். அதுதான் அவலம். நாம் ஆசைப்படும் பெயரை நாம் மாற்றிக்கொள்ளலாம் என்றால் முடியாது. Birth Certificate, College certificates, Employment order, Marriage certificate, Bank account, Bank Deposit, Share certificates, Property Deeds, Passport, Ration Card, Voters Card, PAN Card என்று பல விஷயங்கள் அதற்குத்
தடையாக இருக்கும். குறுக்கே நின்று கழுத்தை அறுக்கும்

ஒரு சகோதரி கேட்டுள்ளார். வைத்த பெயரை எப்படி சார் மாற்றிக்கொள்வது?

இளையாராஜாவின் பாடல்களைக் கவனித்தீர்கள் என்றால் தெரியும். நகாசு வேலைகள் செய்திருப்பார். சில பாடல்களில் Fluteன் ஒலி , சிலபாடல்களில் Guitarன் ஒலி, சில பாடல்களில் சாக்ஸஃபோன் ஒலி என்று இடையிடையே சில இசைக்கருவியை அதிகமாக ஒலிக்கவிட்டுப் பாடலை கேட்பவர்கள் மயங்கும்படி செய்திருப்பார்.

அதுபோல நீங்களும் ஏற்கனவே உள்ள உங்கள் பெயரில் ஒரிரெண்டு எழுத்துக்களைக் கூட்டி, உங்கள் பிறப்பு எண்ணுடன் அது இசைந்து ஒலிக்கும்படி செய்துவிடுங்கள்.

பெயர் என்றவுடன், வெளி நாட்டுக்காரனுக்கெல்லாம் First Name, middle name, last name என்றும், நம் வட இந்தியப் பகுதி மக்களுக்கெல்லாம் Sur Name என்று பெயரில் இரண்டு அல்லது மூன்று பகுதிகள் இருக்கும் (உதாரணம் Sachin Tendulkar, Sarath Pavar, Lallu Prasad Yadav )

அதனால் நாம் நமது இன்ஷியலுடன் பெயரை எடுத்துக்கொள்ள வேண்டும் (அப்படித்தானே சுவாமி உங்கள் பள்ளிச் சான்றிதழ்களில் இருக்கும் ?)

சரி இசைந்து ஒலிக்கும்படி எப்படிச் செய்வது?

சிலருக்கு உதவி செய்யலாம் என்று உள்ளேன். எல்லோருக்கும் செய்ய முடியாது. 10  முதல் 20 பேர்கள் வரை. அந்த சிலரை எவ்வாறு தெரிவு 
செய்வது என்பதை நீங்களே சொல்லுங்கள்!

உதாரணங்கள் வேண்டுமா?

கீழே கொடுத்துள்ளேன்

இருக்கும் பெயருக்கு அரிதாரம் பூசுவது அல்லது மேக்கப் போடுவது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ஓக்கேயா?

அதிகப்படியான எழுத்துக்களுடன் மாற்றிக்கொண்ட பெயரை எப்படி நடைமுறைக்குக் கொண்டுவருவது?

அதை அடுத்த பாடத்தில் சொல்லித்தருகிறேன்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++
கீழே உள்ள க்ளிப்பிங்கின் தேதியைப்பாருங்கள். 2.11.1989 என்று உள்ளதா? இருபத்தியிரண்டு  வருடங்கள் கழித்துப் பயன்படும் என்று சேர்த்து வைக்கவில்லை. இதுபோன்று, இலக்கியம், சினிமா, ஜோதிடம்
சம்பந்தப்பட்ட பேப்பர் கட்டிங்குகள் என்னிடம் நிறைய உள்ளன.
வீட்டில் உள்ள மூத்தவர்கள் அவற்றைக் குப்பை (waste) என்பார்கள்.
நான் சொத்து (wealth) என்பேன். பலருக்கும் பயன்படுவதால் அதை
சொத்து என்று சொல்வதில் தவறில்லை!:-)))))

படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்திப்பாருங்கள். படம் பெரிதாகத் தெரியும்!




வாழ்க வளமுடன்!

99 comments:

  1. ஐயா,
    அருமை நியூமராலஜி பற்றித் தொடர்வது சந்தோசம். நீங்கள் சொல்வதுபோல் எனக்குப் பிறந்த தேதி 5(05-05-1982),தேதியின் கூட்டு எண்(30) 3,பெயரின் கூட்டு எண் (AR.RAJARAM)6,மொத்த எண்‍ 15,புதன்,குரு&சுக்கிரன் என வருகிறது.ஆனால் எண் 3 என் வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் தொட்டு வருகிறது. இதில் எதைக் கணக்கிலெடுத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  2. ///17ஆம் எண்ணிற்கான பலன்: It is a highly spiritual and fortunate number///
    அப்படியா! அப்படிஎன்றால் இப்படி எழுதுவதே நன்றாக இருக்கும்...

    A+L+A+S+I+A+M +G
    1+3+1+3+1+1+4 +3 = 17

    பள்ளிச் சான்றிதழ்களிலும், இப்போது பார்க்கும் வேலை நிறுவனத்தின் "நேம் கார்டிலும்" இப்படித்தான் இயல்பாக அமைத்துள்ளது.

    தெரியவில்லை இருக்கலாம்...
    நமக்கு தனாதிபதியே சனீஸ்வரன் தான் அவனும் நீசபங்கம் அடைந்து இருக்கிறான்.

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. எடுத்தவுடன் என்னுடைய பிறந்த தேதியை போட்டு அதித வெற்றி அல்லது அதீத தோல்வி என்று (உமா பாணியில் )ஒரு குண்டையும் போட்டு விட்டீர்கள் .

    நான் நேற்றே பின்னூட்டத்தில் சொல்லி இருந்தேன் எண் பிறந்த தேதி 17.

    தேதி மாதம் வருடம் மூன்றையும் கூட்டினால் 6 வரும் . ஆகையால் 6, 5,ஆகியவைகள் வருமாறு பயணங்கள், வாகன எண்கள் பார்த்துக் கொள்கிறேன் .அய்யவிடமிருந்து இன்னும் அதிகம் எதிர் பார்க்கிறோம் .

    இந்த 17 அதீத வெற்றி தோல்வி பற்றி விரிவாக சொல்லுங்கள் அய்யா.

    ReplyDelete
  4. அய்யவிடமிருந்து அதிகம் எதிர் பார்க்கும் விளக்கம் ஒன்று உள்ளது.

    ஒன்று முதல் ஒன்பது வரை எண்களுக்கு கிரகங்களை ஒதுக்கி , பிறந்த தேதி அல்லது கூட்டு தேதிக்கு பலன் சொல்லும் எண் கணிதத்தில் ஏன் அந்த ஒன்பதுக்கு மட்டும் எழுத்தில்லாமல் ஆனது .

    ReplyDelete
  5. ///நாம் மாற்றிக்கொள்ளலாம் என்றால் முடியாது..///

    பெயரை மாற்றிக் கொள்வது சிரமம் அல்ல.. ஒரு affidavit பதிவு செய்து gazettleல் வந்து விட்டால் நமது பெயரை நம் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்..

    எழுத்துக்களை கூட்டி அல்லது குறைத்து என்பது பெற்றோர் வைத்த பெயர் மீது உள்ள பற்று தான் காரணம்..

    டி ராஜேந்தர் இப்போ விஜய ராஜேந்தர்..

    சென்ற பதிவின் பின் ஊட்டத்தில் சொன்னது போல் நியுமராலஜி உடன் நேமாலஜி ப்ரீனாலஜி மற்றும் pot-u-pori சேர்த்து பலன் சொல்லும் போது தான் பளிச்சென்று பொருந்தும்..

    இல்லையென்றால் ஜாதகத்தில் 5ம் இடத்தை மட்டும் வைத்துக் கொண்டு பலன் சொல்வதுபோலாகிவிடும்..

    ReplyDelete
  6. ///இந்த எட்டாம் எண்ணிற்கு ஒரு விஷேசம் உண்டு. அந்த எண்ணை உடையவர்கள் வாழ்க்கையில் அதீத வெற்றியை அடைவார்கள் அல்லது அதீதமான தோல்வியை அடைவார்கள்.///

    எட்டில் உள்ளது இணைந்திருக்கும்
    இருபூஜ்ஜியங்கள்..
    ஒன்று முழுமை மற்றொன்று வெறுமை

    சித்தர்கள் கையாளும் நடை பயிற்சியில் இந்த "எட்டு" நடை பயிற்சி

    சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது..

    எட்டைப் ப்ற்றி எழுதச் சொன்னால் எழுதிக் கொண்டே இருக்கலாம்..

    அத்தனை இருக்கிறது எட்டில் மட்டும்.
    நம்ம இடத்துக்கு வந்துட்டு அதெ சொல்லாட்டி எப்படி.. ? அடுத்த பதிவு முழுதும் எட்டு பற்றியே இருக்கட்டும்..

    மேலதிக தகவல்களை (அஞ்சல் வழி) தந்து மகிழ்கிறோம்..

    ReplyDelete
  7. ///// Rajaram said...
    ஐயா,
    அருமை நியூமராலஜி பற்றித் தொடர்வது சந்தோசம். நீங்கள் சொல்வதுபோல் எனக்குப் பிறந்த தேதி 5 (05-05-1982),தேதியின் கூட்டு எண்(30) 3,பெயரின் கூட்டு எண் (AR.RAJARAM)6,மொத்த எண்‍ 15,புதன்,குரு&சுக்கிரன் என வருகிறது.ஆனால் எண் 3 என் வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் தொட்டு வருகிறது. இதில் எதைக் கணக்கிலெடுத்துக் கொள்ளலாம்.////

    கூட்டு எண்தான் விதி எண். அதுதான் பல நிகழ்வுகளைத் தொட்டுவரும். அதையே கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  8. ///இதை எல்லாம் எப்படி வடிவமைத்தார்கள் என்று கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். கேள்வி கேட்டுக் கொண்டி ருந்தால் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாது.///

    சரியாக சொன்னீர்கள்..
    ஆனால் பாருங்கள்..
    இது பற்றிய விளக்கங்கள் சித்தர் பாடல்களில் உள்ளன..

    ரோனியர் காலத்திற்கு முன்பு எண்கள் தமிழ் எழுத்தில் என்று சொல்லுவார்கள் அதற்கும் முன்னர் இருந்த தமிழர் பண்பாட்டில் இந்த எண் முறை இருந்திருக்கிறது

    திருமந்திரத்தில் உள்ள எண் கலை பட்டியல் நம்மை வியக்க் வைக்கிறது.. அது பற்றிய ஒரு வெளிக் குறிப்பினை தந்து விட்டு நியுமராலஜி பாடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்..

    ReplyDelete
  9. //// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    ///17ஆம் எண்ணிற்கான பலன்: It is a highly spiritual and fortunate number///
    அப்படியா! அப்படிஎன்றால் இப்படி எழுதுவதே நன்றாக இருக்கும்...
    A+L+A+S+I+A+M +G
    1+3+1+3+1+1+4 +3 = 17
    பள்ளிச் சான்றிதழ்களிலும், இப்போது பார்க்கும் வேலை நிறுவனத்தின் "நேம் கார்டிலும்" இப்படித்தான் இயல்பாக அமைத்துள்ளது.
    தெரியவில்லை இருக்கலாம்...
    நமக்கு தனாதிபதியே சனீஸ்வரன் தான் அவனும் நீசபங்கம் அடைந்து இருக்கிறான்.
    நன்றிகள் ஐயா!/////

    17 நல்ல எண். அந்த எண்ணில் பெயர் வருவது நல்லதுதான். அதையே பயன் படுத்துங்கள்!

    ReplyDelete
  10. //// thanusu said...
    எடுத்தவுடன் என்னுடைய பிறந்த தேதியை போட்டு அதித வெற்றி அல்லது அதீத தோல்வி என்று (உமா பாணியில் )ஒரு குண்டையும் போட்டு விட்டீர்கள் .
    நான் நேற்றே பின்னூட்டத்தில் சொல்லி இருந்தேன் எண் பிறந்த தேதி 17.
    தேதி மாதம் வருடம் மூன்றையும் கூட்டினால் 6 வரும் . ஆகையால் 6, 5,ஆகியவைகள் வருமாறு பயணங்கள், வாகன எண்கள் பார்த்துக் கொள்கிறேன் .அய்யவிடமிருந்து இன்னும் அதிகம் எதிர் பார்க்கிறோம் .
    இந்த 17 அதீத வெற்றி தோல்வி பற்றி விரிவாக சொல்லுங்கள் அய்யா./////

    17ஆம் எண்ணிற்கு வெற்றிதான். தோல்வி கிடையாது. கும்ப லக்கின சனிக்கு மட்டும்தான் வெற்றி தோல்வி. கும்பலக்கினத்திற்கு சனி லக்கினாதிபதி அத்துடன் விரையாதிபதியும் அவனே (He is the lagna lord and also 12th lord) அந்த லக்கின ஜாதகத்தில், சனி கேந்திர திரிகோணங்களில் இருந்தால் தொடர் வெற்றிதான். மாறாக அந்த லக்கின ஜாதகத்தில் சனி, 6, 8, 12ல் இருந்தால் விளைவுகள் மாறாக இருக்கும்!

    ReplyDelete
  11. /// thanusu said...
    அய்யாவிடமிருந்து அதிகம் எதிர் பார்க்கும் விளக்கம் ஒன்று உள்ளது.
    ஒன்று முதல் ஒன்பது வரை எண்களுக்கு கிரகங்களை ஒதுக்கி , பிறந்த தேதி அல்லது கூட்டு தேதிக்கு பலன் சொல்லும் எண் கணிதத்தில் ஏன் அந்த ஒன்பதுக்கு மட்டும் எழுத்தில்லாமல் ஆனது////

    எண் கணிதத்தை வடிவமைத்த மேதைகள், அந்த எண் கடவுளின் எண் என்பார்கள். அதனால் அந்த எண்ணிற்கு எந்த எழுத்தும் கொடுக்கப்படவில்லை!

    ReplyDelete
  12. //// vprasana kumar said...
    very good lesson sir////

    நல்லது. தொடர்ந்து படியுங்கள்

    ReplyDelete
  13. ///நாம் மாற்றிக்கொள்ளலாம் என்றால் முடியாது..///

    பெயரை மாற்றிக் கொள்வது சிரமம் அல்ல.. ஒரு affidavit பதிவு செய்து gazettleல் வந்து விட்டால் நமது பெயரை நம் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்..

    எழுத்துக்களை கூட்டி அல்லது குறைத்து என்பது பெற்றோர் வைத்த பெயர் மீது உள்ள பற்று தான் காரணம்..

    டி ராஜேந்தர் இப்போ விஜய ராஜேந்தர்..

    சென்ற பதிவின் பின் ஊட்டத்தில் சொன்னது போல் நியுமராலஜி உடன் நேமாலஜி ப்ரீனாலஜி மற்றும் pot-u-pori சேர்த்து பலன் சொல்லும் போது தான் பளிச்சென்று பொருந்தும்..

    இல்லையென்றால் ஜாதகத்தில் 5ம் இடத்தை மட்டும் வைத்துக் கொண்டு பலன் சொல்வதுபோலாகிவிடும்..

    ReplyDelete
  14. SP.VR SUBBAIYA said....17ஆம் எண்ணிற்கு வெற்றிதான். தோல்வி கிடையாது. கும்ப லக்கின சனிக்கு மட்டும்தான் வெற்றி தோல்வி. கும்பலக்கினத்திற்கு சனி லக்கினாதிபதி அத்துடன் விரையாதிபதியும் அவனே (He is the lagna lord and also 12th lord) அந்த லக்கின ஜாதகத்தில், சனி கேந்திர திரிகோணங்களில் இருந்தால் தொடர் வெற்றிதான். மாறாக அந்த லக்கின ஜாதகத்தில் சனி, 6, 8, 12ல் இருந்தால் விளைவுகள் மாறாக இருக்கும்!

    பிறந்த தேதி பலனோடு இதையும் சேர்த்து சொல்லி விடுங்கள் அய்யா நான் துலாம் லக்னம்.சனி எனக்கு நான்கில் ஆட்சி.

    ReplyDelete
  15. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    எண் ஜோதிடத்தில் உள்ள விரிவான
    பதிவுகளை தங்களின் ஆக்கத்தில்
    படிப்பதற்கு ஆவலாக உள்ளேன்.
    நன்றி!!

    ReplyDelete
  16. padam arumai my son kumba lagnam lagnathipathi 11 th house life kastmga erukkuma sir

    ReplyDelete
  17. ////Blogger அய்யர் said...
    ///நாம் மாற்றிக்கொள்ளலாம் என்றால் முடியாது..///
    பெயரை மாற்றிக் கொள்வது சிரமம் அல்ல.. ஒரு affidavit பதிவு செய்து gazettleல் வந்து விட்டால் நமது பெயரை நம் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்..
    எழுத்துக்களை கூட்டி அல்லது குறைத்து என்பது பெற்றோர் வைத்த பெயர் மீது உள்ள பற்று தான் காரணம்..
    டி ராஜேந்தர் இப்போ விஜய ராஜேந்தர்..
    சென்ற பதிவின் பின் ஊட்டத்தில் சொன்னது போல் நியுமராலஜி உடன் நேமாலஜி ப்ரீனாலஜி மற்றும் pot-u-pori சேர்த்து பலன் சொல்லும் போது தான் பளிச்சென்று பொருந்தும்..
    இல்லையென்றால் ஜாதகத்தில் 5ம் இடத்தை மட்டும் வைத்துக் கொண்டு பலன் சொல்வதுபோலாகிவிடும்../////

    இயன்றவரை தரவுள்ளேன் விசுவநாதன்!

    ReplyDelete
  18. ////Blogger அய்யர் said...
    ///இந்த எட்டாம் எண்ணிற்கு ஒரு விஷேசம் உண்டு. அந்த எண்ணை உடையவர்கள் வாழ்க்கையில் அதீத வெற்றியை அடைவார்கள் அல்லது அதீதமான தோல்வியை அடைவார்கள்.///
    எட்டில் உள்ளது இணைந்திருக்கும்
    இருபூஜ்ஜியங்கள்..
    ஒன்று முழுமை மற்றொன்று வெறுமை
    சித்தர்கள் கையாளும் நடை பயிற்சியில் இந்த "எட்டு" நடை பயிற்சி
    சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது..
    எட்டைப் ப்ற்றி எழுதச் சொன்னால் எழுதிக் கொண்டே இருக்கலாம்..
    அத்தனை இருக்கிறது எட்டில் மட்டும்.
    நம்ம இடத்துக்கு வந்துட்டு அதெ சொல்லாட்டி எப்படி.. ? அடுத்த பதிவு முழுதும் எட்டு பற்றியே இருக்கட்டும்..
    மேலதிக தகவல்களை (அஞ்சல் வழி) தந்து மகிழ்கிறோம்../////

    ஆகா, செய்யுங்கள்! புதிய செய்திகளை உங்கள் பெயருடன் சேர்த்துப் பதிவிடுகிறேன்!

    ReplyDelete
  19. /////Blogger thanusu said...
    SP.VR SUBBAIYA said....17ஆம் எண்ணிற்கு வெற்றிதான். தோல்வி கிடையாது. கும்ப லக்கின சனிக்கு மட்டும்தான் வெற்றி தோல்வி. கும்பலக்கினத்திற்கு சனி லக்கினாதிபதி அத்துடன் விரையாதிபதியும் அவனே (He is the lagna lord and also 12th lord) அந்த லக்கின ஜாதகத்தில், சனி கேந்திர திரிகோணங்களில் இருந்தால் தொடர் வெற்றிதான். மாறாக அந்த லக்கின ஜாதகத்தில் சனி, 6, 8, 12ல் இருந்தால் விளைவுகள் மாறாக இருக்கும்!
    பிறந்த தேதி பலனோடு இதையும் சேர்த்து சொல்லி விடுங்கள் அய்யா நான் துலாம் லக்னம்.சனி எனக்கு நான்கில் ஆட்சி./////

    சனி கேந்திரத்தில் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். கவலையை விடுங்கள்:!

    ReplyDelete
  20. ///Blogger V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    எண் ஜோதிடத்தில் உள்ள விரிவான
    பதிவுகளை தங்களின் ஆக்கத்தில்
    படிப்பதற்கு ஆவலாக உள்ளேன்.
    நன்றி!!/////

    உங்கள் ஆர்வம் வாழ்க! ஆவல் வளர்க!

    ReplyDelete
  21. ////Blogger eswari sekar said...
    padam arumai my son kumba lagnam lagnathipathi 11 th house life kastmga erukkuma sir/////

    லக்கினாதிபதி 11ல் இருக்கிறார் அல்லவா - பிறகு எதற்குக் கவலை? If the lagna lord is in the eleventh, minimum efforts and maximum benefits!

    ReplyDelete
  22. வணக்கம்! எனக்கு ஐயா அவர்கள் கருத்து கூறி மாற்றம் தருவார் என எதிர்பார்க்கிறேன்! ஏனெனில் எனது பெயர் கூட்டெழுத்து 26! பிறந்த தேதி 29!

    V.RAMESH, s/o Venkatapathy

    ReplyDelete
  23. //சிலருக்கு உதவி செய்யலாம் என்று உள்ளேன். எல்லோருக்கும் செய்ய முடியாது. 10 முதல் 20 பேர்கள் வரை. அந்த சிலரை எவ்வாறு தெரிவு
    செய்வது என்பதை நீங்களே சொல்லுங்கள்! //

    1 வகுப்புறைக்காக அதாவது வகுப்பின் முன்னேற்றத்திற்காகவும் , வகுப்பு அசிரியிற்கு உதவியதற்கும் சிறந்த மாணவரை தேர்ந்து எடுக்கலாம் .

    2 வார மலரில் அதிக கட்டுரை எழுதிய மாணவரை தேர்ந்து எடுக்கலாம் .

    3 ஒரு ஆண் , ஒரு பெண் - ஆசிரியர்கு விருப்பட்ட மாணவரை தேர்ந்து எடுக்கலாம் .

    4 வயதில் குறைந்த ஒரு மாணவரை தேர்ந்து எடுக்கலாம் .

    5 நாட்டிற்காக தியாகம் செய்த, நிறைய கட்டுரைகள் எழுதிய வயது முதிர்ந்த ஒரு மாணவரை தேர்ந்து எடுக்கலாம்.

    ReplyDelete
  24. @alasiam
    //A+L+A+S+I+A+M +G
    1+3+1+3+1+1+4 +3 = 17//

    தங்கள் பெயர் எழுத்து 14 + 3...
    தங்களை அழைக்கும் பெயர் ஆலாசியம் என்று நினைக்கிறேன். ஆகவே பெயர் 14 அதாவது கேதுவின் ஆதிக்கத்தில்...பொதுவாக நான் கண்ட வரையில் இந்த எண் ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு வெளி நாட்டு தொடர்பில் வேலை அமைகிறது அல்லது வருமானம் வருவதற்கு வாய்ப்பு அமைகிறது. அதை தவிர 14+9= 23 வை chireo ராயல் நம்பர் என்று கூறுகிறார். ஆக இயற்கையாகவே அமைந்துவிட்டது...
    இதற்கு கட்டாயம் ஜாதகம் இடம் கொடுத்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  25. @ஆசிரியர்
    //கும்ப லக்கின சனிக்கு மட்டும்தான் வெற்றி தோல்வி. கும்பலக்கினத்திற்கு சனி லக்கினாதிபதி அத்துடன் விரையாதிபதியும் அவனே (He is the lagna lord and also 12th lord) அந்த லக்கின ஜாதகத்தில், //

    தங்கள் கூற்று ஒரு பகுதி சரி. ஆனால் அந்த விரையாதிபதி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு உயரத்தை எட்டலாம்.
    I do have kumbha lagna saturn along with sun, mars and mercury, he is also the dispositor of venus (Yogakaraka and bhadaka for kumbha lagna)in makar (12th house),but somehow nothing troubled me...probably adipradhikshana of hanuman at srinivasaperumal temple at mylapore during my school days and later on daily recital of hanuman chalisa could have saved troubles for me...

    ReplyDelete
  26. எழுதுக்களுக்குரிய எண்களின் குறிப்பு கொடுத்ததற்கு நன்ற ஐயா. மீள் பதிவு?
    ஹி..ஹி.. ஹீ. ...நான் ஒமிட்ல தட்டுன பாடமா இது!!!

    ReplyDelete
  27. ///thanusu said...அய்யவிடமிருந்து அதிகம் எதிர் பார்க்கும் விளக்கம் ஒன்று உள்ளது. ஒன்று முதல் ஒன்பது வரை எண்களுக்கு கிரகங்களை ஒதுக்கி , பிறந்த தேதி அல்லது கூட்டு தேதிக்கு பலன் சொல்லும் எண் கணிதத்தில் ஏன் அந்த ஒன்பதுக்கு மட்டும் எழுத்தில்லாமல் ஆனது .///

    எனக்கு என்ன தோன்றியதென்றால்,
    1 . எழுத்துக்களுக்குரிய எண்களைப் பார்க்கும் பொழுது அவை மேலைநாட்டு எண்கணிதத்தில் "வருவது போல் வரிசையாகக் கொடுக்கப் படவில்லை" . இதில்தான் நான் விக்கியில் பார்த்தும் கோட்டை விட்டேன். இந்திய எண்கணிதம் என்பது வேறுபட்டது என்பது கட்டுரையை முழுவது படித்திருந்தால் தெரிந்திருக்கும். அவசரபுத்தி :)))

    2 . அத்துடன் இந்திய எண்கணிதத்தில் "9 என்ற எண்ணிற்கு எழுத்துக்கள் இல்லை". மேலை நாட்டு எண்கணிதத்தில் 9 என்ற எண்ணிற்கு எழுத்துக்கள் உள்ளது.

    அதனால் இந்த எட்டில்தான் ஏதோ சூட்சுமம் இருக்கிறது. பெயர்களுக்கு ஒலி வடிவம் இருப்பதால், அதைக்குறிக்க எழுத்துக்கள் இருக்கிறது. நம் முன்னோர்கள் இதை இசையுடன் ...அதன் ஒலி வடிவத்துடன் இணைத்திருக்கக் கூடும். That is somehow associated with musical octave.

    Indian classical music divides the "octave" into 12 semitones of which the 7 basic notes are,
    in ascending tonal order, Sa Re Ga Ma Pa Dha Ni Sa for Hindustani music, and
    Sa Ri Ga Ma Pa Dha Ni Sa for Carnatic music
    similar to Western music's Do Re Mi Fa Sol La Ti Do

    The notations refer to middle octave of the keyboard.
    Sa (Shadaj) = Do
    Re (Rishab) = Re
    Ga (Gandhar) = Mi
    Ma (Madhyam) = Fa
    Pa (Pancham) = So
    Dha (Dhaivat) = La
    Ni (Nishad) = Ti
    Sa (Shadaj) = Do

    A musical octave spans a factor of two in frequency and there are twelve notes per octave. Notes are separated by the factor 2 1/12 or 1.059463. (1.059463 x 1.059463 x 1.059463...continued for a total of twelve)
    s – Shadjama – First key in an octave
    r1 – Shuddha Rishaba – Second key in an octave
    r2 – Chatushruthi Rishaba – Third key in an octave
    r3 – Satsruthi Rishaba – Fourth key in an octave
    g1 – Shuddha Gaandhaara – Third key in an octave
    g2 – Saadhaarana Gaandhaara – Fourth key in an octave
    g3 – Anthara Gaandhaara – Fifth key in an octave
    m1 – Shuddha Madhyama – Sixth key in an octave
    m2 – Prathi Madhyama – Seventh key in an octave
    p – Panchama – Eighth key in an octave
    d1 – Sudhdha Dhaivatha – Ninth key in an octave
    d2 – Chatusruthi Dhaivatha – Tenth key in an octave
    d3 – Shatsruthi Dhaivatha – Eleventh key in an octave
    n1 – Sudhdha Nishaadha – Tenth key in an octave
    n2 – Kaisiki Nishaadha – Eleventh key in an octave
    n3 – Kaakali Nishaadha – Twelveth key in an octave

    சுருக்கமாக என்ன சொல்ல வருகிறேன் என்றால்(????!!!) "இசை ஒலியை அடிப்படையாகக் கொண்டும்", கொடுக்கப்பட்ட எண்ணின் கூட்டுத்தொகை "சரியான பலனை கணிக்கும்படியும்" (back calculate?) ஆராய்ந்தே இந்த எண்ணிற்கு இந்த எழுத்து என்று இணைக்கப் பட்டிருக்கக் கூடும்.

    [ச, ரி, க, ம, ப, த, நி, ச ...அதானால் எட்டிற்கு மேல் எண்களை உபயோகப் படுத்தாமல் இருந்திருக்கலாம். இதில் லாஜிக் இருப்பதாக(?) மைனர் நினைத்தால் அவருக்கென்று மேற்கொண்டு அராய்ச்சி செய்ய சில சுட்டிகள்:

    Frequency of musical notes:

    http://www.phy.mtu.edu/~suits/notefreqs.html
    http://www.intmath.com/trigonometric-graphs/music.php]

    ReplyDelete
  28. ///அந்த சிலரை எவ்வாறு தெரிவு செய்வது என்பதை நீங்களே சொல்லுங்கள்! ///

    ஐயா, உங்கள் மாணவர்களுக்கு உதவி செய்யும் உங்கள் நல்ல மனம் வாழ்க ...நாடு போற்ற வாழ்க!!!

    But FYI ...I am out of the loop :)))
    அந்தக் குமுதம் அட்டைப் படத்தில் உள்ள பெயர் மாற்றியவர்கள் யாரும் எதுவும் பெரிதாக சாதித்ததாகவும் தெரியவில்லையே...
    என் பிறவி எண் (பிறந்த தேதி கூட்டுத்தொகை எண்) ... 4
    விதி எண் (பிறந்த தேதியில் உள்ள தேதி,மாதம்,வருடத்தின் கூட்டுத்தொகை எண்)...1
    சூட்டப் பட்டப் பெயர் "தேமொழி" கூட்டுத் தொகை ....38
    அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட உபயோகிக்கும் பெயரின் கூட்டுத் தொகை ...59

    இதில் பிறவி எண், விதி எண் இவற்றை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது.
    அப்பா ஆசையுடன் சூட்டிய பெயரையோ அல்லது அவர் தேர்ந்தெடுத்து கொடுத்த உச்சரிப்பையோ மாற்றுவதா? தேமொழியா? நெவர் ...

    ReplyDelete
  29. //நம் மெட்ராஸ் சென்னையாக மாறியதும் அறிந்த கதைதான்.
    M A D R A S = 4 1 4 2 1 3 = 15 (இது சூப்பரான எண்)//

    இந்த வரிசையில் சிலோன் ஸ்ரீலங்கா ஆனதையும் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். பெங்களூரூ ஆன பின் இங்கே மழை குறைந்து வெயில் காய்கிறது. சென்னையிலிருந்து தண்ணீர்க் கஷ்டம் ட்ரெயின் பிடித்து வந்துவிட்டது. அரசியலோ ஒரே குழப்பம்.

    //நம் பெயர் நம்மைக்கேட்டு வைக்கப்படவில்லை. அதுதான் பரிதாபம். அதுதான் அவலம். //

    என்னைக் கூப்பிடும் பெயர் சற்றே மாடர்னாக இருக்கும். இருந்தும், தாய்ப்பாசம் காரணமாக, என் தந்தை பார்வதி என்ற பெயரையே (பாட்டியின் பெயர்) பள்ளியில் சேர்க்கும்போது கொடுத்து விட்டார். கூப்பிடும் பெயரையே கொடுத்திருக்கலாம் என்று பின்னாளில் பல ஜோசியர்கள் சொன்ன போதும், சகோதரி தேமொழி சொன்னது போல், பெயரை மாற்ற என் தந்தைப்பாசம் தடுக்கிறது.

    ReplyDelete
  30. தேமொழி அவர்களின் இசை ஆராட்ச்சிஎண் கணிதத்தோடு அ...................ம்...........மா.........டி.............. உங்களை வகுப்பின் தகவல் களஞ்சியமாகவே எடுத்துக் கொள்கிறேன் .

    அதிலும் இந்த ச, ரி, க, ம, ப தா,நி, ச, வை எண் கணிதத் தொடு சேர்த்து கொடுத்து அசத்திட்டீங்க.

    சேவைக்கும் தகவலுக்கும் நன்றிகள் தோழி அவர்களே.

    ReplyDelete
  31. நான் பிறந்ததும் 26ம் தேதிதான். எனது இயற்பெயரை கூட்டினால் 41 என்று வரும். இனிசியலைச் சேர்த்தால் 42 என்று வருகிறது. பெயரின் முதல் எழுத்து K வந்தால் அவ்வளவு நல்லதல்ல என்று சொல்வார்கள். எனக்கு இதை மாற்ற வேண்டிய சிரமத்தைக் கொடுக்காமல் பிறப்பு பத்திரம் பதியும் போது A என்ற எழுத்தை அவர்களாகவே முன்னால் போட்டு பதிந்து விட்டார்கள்.

    ReplyDelete
  32. ////sriganeshh said...
    @alasiam
    //A+L+A+S+I+A+M +G
    1+3+1+3+1+1+4 +3 = 17//

    தங்கள் பெயர் எழுத்து 14 + 3...
    தங்களை அழைக்கும் பெயர் ஆலாசியம் என்று நினைக்கிறேன். ஆகவே பெயர் 14 அதாவது கேதுவின் ஆதிக்கத்தில்...பொதுவாக நான் கண்ட வரையில் இந்த எண் ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு வெளி நாட்டு தொடர்பில் வேலை அமைகிறது அல்லது வருமானம் வருவதற்கு வாய்ப்பு அமைகிறது. அதை தவிர 14+9= 23 வை chireo ராயல் நம்பர் என்று கூறுகிறார். ஆக இயற்கையாகவே அமைந்துவிட்டது...
    இதற்கு கட்டாயம் ஜாதகம் இடம் கொடுத்திருக்க வேண்டும்./////

    மிக்க நன்றி ஸ்ரீகணேஷ் அவர்களே!
    நான் பிறந்தது 21 ஆம் தேதி..
    பிறவி எண் = 3
    பிறந்த தேதி/மாதம்/வருடம்..
    விதி எண் = 21 / 11 / 1969 = 30

    லக்னாதிபதி குரு அவர் பதினொன்றில்
    மேற்கண்ட சனி பகவானை தனது நேரடிப் பார்வையில் வைத்தும் இருக்கிறார்.

    கேது என்றால் அவர் தான் எனது நட்சத்திரா அதிபதி...
    அவரும் அம்சத்தில் பாக்கியத்தில் இருக்கிறார்...

    நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார்...

    அந்திகாலத்திலாவது கைகூடினால் போதும்...
    இறைவன் அருளட்டும்.

    ReplyDelete
  33. @தேமொழி,
    Thanks for the Links. It will help me in my research of harmonic movement of market.
    Sanjay Rathji used to advocate katapayadi system of numerology.. It is numbers based on sanskrit numerals.

    ReplyDelete
  34. SP.VR.SUBBAIYA said...சனி கேந்திரத்தில் ஆட்சி பலத்துடன் உள்ளார் கவலையை விடுங்கள்.

    நன்றிகள் அய்யா .நான் இன்னும் மூன்றாம் சுற்றாக வகுப்பறையின் பாடங்களை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் .எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஜோதிடம் தெரிகிறது. சனி நான்கில் ஆட்சி, அத்துடன் பாக்யாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்திலேயே ஆட்சி, லக்னாதிபதி 11 இல் , குரு ஐந்தில் இருந்து லக்னத்தையும் , லக்னாதிபதியையும் பார்கிறார் , பத்தில் சூரியன் ராகு , இறைவன் என்னை ஓரளவிற்கு நன்றாகவே வைத்துள்ளான் என்று பாடங்களின் மூலம் தெரிந்து கொள்கிறேன்.

    இருப்பினும் தாங்களின் வார்த்தைகளில் கேட்கும்போது ஒரு திருப்தி.அதனால்தான் கேட்டேன் .

    ReplyDelete
  35. அய்யா வணக்கம் , தொடருட்டும் உங்கள் பணி.ஆவலுடன் அடுத்தடுத்த பதிவுகளை படிக்க ஆர்வமாக உள்ளேன்

    ReplyDelete
  36. @தேமொழி,
    Thanks for the Links. It will help me in my research of harmonic movement of market.
    Sanjay Rathji used to advocate katapayadi system of numerology.. It is numbers based on sanskrit numerals.

    ReplyDelete
  37. பல ஆண்டுகளுக்கு முன்பே வானவியல், கணிதம், இசை, மொழி ஆகிய துறைகளை தொடர்பு படுத்தி நம் முன்னோர்கள் என்ன நுணுக்கமாக, துல்லியமாக கணக்குகளைப் போட்டு வழிமுறைகளை உருவாக்கி தந்து அசத்தியிருக்கிறார்கள். வியக்க வைக்கிறது. "katapayadi system" தகவலுக்கு நன்றி ஸ்ரீகணேஷ்

    ReplyDelete
  38. ///அவற்றை தொட்ர்ந்து எண் கணிதத்தை விரிவாக எழுத உள்ளேன்///
    அன்புள்ள ஐயா,கரும்பு தின்ன கூலியா? விரிவாக ஒரு 500 பதிவுகள் போடுங்கள்.ஆவலோடு காத்திருக்கிறோம்.
    என் பிறந்த தேதி 17,என் பெயர் C.SADAN RAJ கூட்டுத்தொகை,21 இதில் 'ராஜ்"ஐ எடுத்துவிட்டு C.SADAN மட்டும் கூட்டுத்தொகை,17.இது சரியா? ஒரு வாரத்தை சொல்லுங்கள்.செய்ய வேண்டியவற்றை உடனே செய்துவிடுகிறேன்.

    ReplyDelete
  39. ஆங்கில எழுத்துக்களின் எண் மதிப்பினை சுலபமாக நினைவில் வைப்பதற்கு,
    A I J Q Y ----------- 1
    B K R ------------- 2
    C G L S --------------- 3
    D M T ---------------- 4
    E H N X --------------- -5
    U V W --------------- 6
    O Z -------------- 7
    F P --------------- 8
    நன்றி!

    ReplyDelete
  40. அய்யா,

    எண்கணித தகவலுக்கு தங்களின் சிரத்தைக்கு மிக்க நன்றி. வெகு நாட்களாக... ஏன் அனேக வருடமாக இந்த எண் கணிதத்தில் உள்ள சுவாரியசத்தை அறிய வெகு ஆவலாய் உள்ளேன். தங்களது தயவால் அதை அடைய போகின்றேன். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    எண்களுக்கு உரிய கிரகங்களை ஞாபகத்தில் வைத்துகொள்ள சிறு வழி மனதில் உதித்தது .. தங்கள் பார்வைக்கு பகிர்ந்து உள்ளேன் அடியேன் பிழையை பொறுத்தருளவும்.

    கிரகங்களுக்கு 1ல் ஆரம்பித்து 31 வரை வரிசையாக எண்கள் ஒதுக்கபட்டு உள்ளன.

    ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் ஆரம்ப எண்ணுடன் 9 ஆல் கூட்டி வர அந்த வரிசையில் வரும் அணைத்து எண்களும் அந்த கிரகத்திற்கு உரிய எண்கள் என சுலபமாக நினைவில் வைத்து கொள்ளலாம். ஆனால கூட்டு தொகை 31 க்கு மேல் மிகுதல் கூடாது. மொத்தம் 9 கிரகங்கள் அதனால் 9 ஆல் கூட்டிக்கொள்ள வேண்டும்.

    உதாரணத்திற்கு : 4, 13, 22, 31 are ruled by RAHU,
    4, 13 (4 + 9), 22 (13 + 9 ), 31 (22 + 9 ) are ruled by ராகு.

    மேலும் 23 எந்த கிரகத்திற்கு உரிய எண் என்று உடனே ஞாபகத்தில் வரவில்லை என்றால் அந்த என்னை 9 ஆல் வகுத்தால் வரும் மீதி எண்தான் அந்த கிரகத்திற்கு உரிய எண்.

    23 / 9 ஆல் வகுத்தால் மீதி 5 வரும். இது புதனுக்கு உரிய கிரகம்.

    5, 14, 23, are ruled by MERCURY,

    இது தவறான வழி என்றால் தயவு கூர்ந்து மன்னிக்கவும்.

    ReplyDelete
  41. செவ்வாய்க்கு உரிய எண் 9 , ஆகையால் இந்த கிரகத்திற்கு உரிய வரிசை எண்களை 9 ஆல் வகுக்கும் போது மீதி 0 வரும். இதை மட்டும் சிறிது ஞாபகத்தில் வைத்துகொள்ள வேண்டும்.

    ReplyDelete
  42. Very simple and good lesson. Thank you sir

    ReplyDelete
  43. Ananthamurugan total 47 intial g_3 so 50 DOB total-9 pls.explain.

    ReplyDelete
  44. Dear Sir,

    I have requested for the access for your new website where you are taking advanced lessons. Kindly give me the details of the link, user name and password.

    Regards,
    Arulnithi Thiyagarajan

    ReplyDelete
  45. csekar2930said...1,2,3,.....

    நல்ல யோசனை சேகர் அவர்களே.

    ReplyDelete
  46. ///அந்த என்னை 9 ஆல் வகுத்தால் வரும் மீதி எண்தான் அந்த கிரகத்திற்கு உரிய எண். ..///

    எந்த கிரகத்திற்குரிய எண்ணாக இருந்தால் என்ன?

    நமக்குரிய எண் எது அதை சொல்லுங்கள்..

    நம்மை போல பலரும் அதைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..

    அறிவியல் (science )பாடத்திலிருந்து
    கணக்கு (maths) பாடத்திற்கு வந்திருக்கிறோம்

    கணக்கு பதிவியல் (accounts) பாடத்திற்கு வர வேண்டாமா?

    அப்போ தானே பொருளியல் (economics) தெளிவாக புரியும்

    ReplyDelete
  47. ///அந்த என்னை 9 ஆல் வகுத்தால் வரும் மீதி எண்தான் அந்த கிரகத்திற்கு உரிய எண். ..///

    ////எந்த கிரகத்திற்குரிய எண்ணாக இருந்தால் என்ன?

    நமக்குரிய எண் எது அதை சொல்லுங்கள்..////

    அய்யா..

    அந்த எண் என்று குறிப்பிட்டது நான் உதாரணத்திற்காக எடுத்துக்கொண்ட 23 யை குறிப்பிட்டேன். வாத்தியார் அய்யா குறிபிட்டது போல், எண்கணிதத்தில் கிரகங்களுக்கு வரிசை படுத்தப்பட்ட ஓற்றை இலக்காக எண்கள் முறையே 1 - சூரியன், 2 - சந்திரன், 3 - குரு, 4 - ராகு, 5 - புதன், 6 - சுக்கிரன், 7 - கேது, 8 - சனி, 9 - செவ்வாய். இதை வைத்து வாத்தியார் அய்யா அளித்துள்ள பதிவை மறுபடியும் ஒப்பிட்டு பார்த்தல் தங்களுக்கு புரியும் என நம்புகின்றேன். தங்கள் கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  48. பதிவிற்கு நன்றி! உடல்நிலை சரியில்லாததான் காரணமாக இப்போது அலுவலகத்திலிருந்து கிளம்புவதால் விரிவான பின்னூட்டம் திங்களன்று.

    ReplyDelete
  49. ///அந்த என்னை 9 ஆல் வகுத்தால் வரும் மீதி எண்தான் அந்த கிரகத்திற்கு உரிய எண். ..///

    ///.. எந்த கிரகத்திற்குரிய எண்ணாக இருந்தால் என்ன?

    நமக்குரிய எண் எது அதை சொல்லுங்கள்.. . ..///

    அய்யா, தங்களுக்கு பதில் அளித்து பின்னுட்டம் இட்டு இருந்தேன். ஏதோ ஒரு காரணத்தால் மறுபடியும் அதை காண முடியவில்லை.

    so, I have explained shortly.

    The planets are classified with numbers; every planets are numbers allotted with 4 or 3.

    We can easily identifying the plants with single digit numbers:

    1 - SUN
    2 - MOON,
    3 - JUPITER,
    4 - RAHU,
    5 - MERCURY,
    6 - VENUS,
    7 - KETU,
    8 – SATURN and
    9 – MARS

    As from this series we can add 9 with any number we will get possible numbers for the particular planet.

    Example: 6 for Venus.

    6 + 9 = 15 ( <= 31) for Venus
    15 + 9 = 24 ( <= 31) for Venus

    so, 6, 15, 24 are ruled by VENUS.

    25 is belongs to Kethu.

    How could we find this immediately?

    25 / 9 so, reminder is 7. 7 is ruled by Kethu. so 25 also ruled by Kethu. but if you get reminder as 0 so, you have to remember that's for Mars (9, 18, 27).

    Kindly refer this with Vathiyaar’s article.. You may understand my points. Thanks a lot for your comments.

    ReplyDelete
  50. வணக்கம் ஐயா,
    வெளியூர் சென்றுவிட்டதால் வகுப்பறைக்கு வர இயலவில்லை...மன்னிக்கவும் ஐயா...

    நான் என்று விடுப்பு எடுத்தாலும் அன்றெல்லாம் வகுப்பறையில் முக்கியமான பாடங்களை தவற விட்டுவிடுகிறேன்...ஆயினும் மீண்டும் வந்து எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கும் வசதி 'பிளாக்"களில் உள்ளதால் என் போன்ற மாணவர்களுக்கு நிம்மதியாய் உள்ளது...

    ஐயா,என்னுடைய பெயரின் கூட்டெழுத்து 32...ஆனால் என் பிறந்த எண் 26(ம்...போராட்ட எண்?!!!)...என் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்...பிறந்த எண்ணும் பெயரெண்ணும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் 26ல் என் பெயரை மாற்றினால் அது இன்னும் மோசமான "காம்பினேஷன்"ஆக அமையாதா?...தெளிவுப்படுத்தினால் மகிழ்வேன் ஐயா...நன்றி... ‌

    ReplyDelete
  51. அய்யா தங்களின் இனையத்தளம் www.classroom2012.com கூகுள் க்ரோமில் எல்லோராலும் பார்க்கும் படி உள்ளது. பக்கத்தின் கடைசி பகுதியை மவுசில் ரைடில் கிளிக்கி இன்ஸ்பெக்ட் எலிமென்ட் தந்து கீழ்கண்ட வரிகளை நீக்கினால் தெளிவாக படிக்கலாம்.

    delete the javascript lines.
    ____________________________
    -
    script type="text/JavaScript">
    function MM_validateForm()
    script----------------------------

    மேலும் அங்கே நிறைய பாடங்களில்லை. ஏதே ஒரு ஆர்வத்தில் அனுமதியின்றி சென்று பார்த்துவிட்டேன். மன்னிக்கவும், மேலும் பாதுகாப்பை அதிகரிக்கவும்.

    ReplyDelete
  52. எண் கணிதத்தை பற்றி எழுதுவது மிகவும் மகிழ்ச்சி!

    எனது குழந்தையின் லக்கினம் கும்பம், லக்கினத்தில் குரு 6சுயவர்க்க பரலுடன் சந்திரன் & குரு நேர் 7ஆம் பார்வையில் உள்ளன‌ர் ஆனால் லக்கினதிபதி சனிச்வரன் 8ல் மறைந்துள்ளர்.

    அவளின் பிறந்த தேதி 1.2.2010, பிறந்த தேதி எண் 1, தேதி கூட்டு எண் 6, பெயர் என்று 5 வருமாறு வைத்துள்ளோம்! இதை பற்றி கருத்து கூறினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

    ReplyDelete
  53. copy paste from old link
    http://classroom2007.blogspot.jp/2010/03/blog-post_02.html
    //////minorwall said...
    ////நம் பெயர் நம்மைக்கேட்டு வைக்கப்படவில்லை. அதுதான் பரிதாபம். அதுதான் அவலம். நாம் ஆசைப்படும் பெயரை நாம் மாற்றிக்கொள்ளலாம் என்றால் முடியாது. Birth Certificate, College certificates, Employment order,
    Marriage certificate, Bank account, Bank Deposit, Share certificates, Property Deeds, Passport, Ration Card, Voters Card, PAN Card என்று பல விஷயங்கள் அதற்குத்
    தடையாக இருக்கும். குறுக்கே நின்று கழுத்தை அறுக்கும்

    ஒரு சகோதரி கேட்டுள்ளார். வைத்த பெயரை எப்படி சார் மாற்றிக்கொள்வது?/////


    என் கணிதத்தை எல்லோருமே அவ்வளவு சுலபமாக கைகொண்டு பெயர் மாற்றம் செய்து விடலாம் என்பது சற்று ஆபத்தாக கூட முடியலாம்..
    பல கோணங்களில் ஆராய்ந்து பெயரமைக்காவிடில் (விரும்பத்தகுந்ததா/விரும்பத்தகாததா) விளைவுகளை வேடிக்கை பார்க்கவேண்டியதாகிவிடும்..
    ஆசிரியர் சொல்லியிருக்கிற விஷயப்படி நமது பெயரை மாற்றி அமைக்க முடியாது என்பது அவலம் என்று குறிப்பிட்டதிலே சிறு மாற்றம்
    செய்வது சரியாகும் என்று நினைக்கிறேன்..
    பெயர் மாற்றம் செய்த பின் அதனை குறிப்பிட்ட காலம் தினமும் உச்சரித்த வண்ணம் எழுதி வருவோமேயானால் நமது உடல் அந்த ஒலியதிர்வுகளின் தாக்கத்தில் எண்ண அலைகளின் மாறுபாட்டை உணரலாம்..அதன் அடிப்படையில் சந்திக்கும் மனிதர்களுடனான சம்பவங்களும் மாறிடும்.. விளைவு விரும்பத்தகுந்ததாக அமையும் பட்சத்தில் TAMIL NADU. GOVERNMENT GAZETTE லே பெயர் மாற்றம் பற்றிய விவரத்தை வெளிட்டு நாளிதழ்களிலும் வெளிட்டு அதிகாரபூர்வமானதாக அறிவிக்கலாம்.(இந்த அலுவலகம் சென்னை மவுண்ட் ரோட்டிலே ஹிக்கின்பாதம்ஸ் புத்தக கடையின் அருகிலே இருக்கிறது.)
    இந்த விவரங்களின் அடிப்படையில் நமக்கு வேண்டிய அனைத்து சான்றிதழ்களிலுமே புதிய பெயரை அச்சிடுமாறு கோரலாம்.

    ReplyDelete
  54. contd..
    ////minorwall said...
    Printing works required by the Government Departments in the State are being executed by this Department

    The Stationery and Printing Department at Door No.816, Anna Salai,Chennai-2
    இதுதான் சரியான முகவரி என்று நினைக்கிறேன்.. நேரடியாக செல்லும் முன் ஊர்ஜிதம் செய்துகொள்ளவும்..///////

    ReplyDelete
  55. minorwall said...
    Horlicks
    5+7+2+3+1+3+2+3=26
    (எவர்க்ரீன் மார்க்கெட்)

    k.R.Narayanan
    2+2+5+1+2+1+1+1+5+1+5=26
    பார்த்த உடனே இவர் ஒரு scholar என்ற வகையிலே அறியப்படுபவராக இருந்தாலும் ஒரு கிளிண்டனை போலே வசீகரத்துக்கு என்று சற்றும் சொல்ல முடியாது.எனினும் இந்த எண் 26 இவருக்கு எப்படி பலன் தந்தது என்பது புரியவில்லைதான்..
    இப்படி விஷயங்கள்தான் ஜோதிட சம்பந்தமான அடிப்படைகளிலான தீர்வை நோக்கி எண் கணித வாசிகள் நகர்வதற்கு காரணம்..
    பொதுவாக சனியின் ஆதிக்கத்தின் கீழ் வரும் எண்களில் பெயர் அமைந்து சிரமங்களை அனுபவிக்கும் நபர்கள் அல்லது பிறந்துவிட்டவ்ர்கள் புதனுடைய எண்ணான 5லே பெயர் அமையும் படி மாற்றிக்கொண்டால் அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பது பொது விதி..(பண்டிட் சேதுராமன் அவர்கள் அனுபவ கணக்குப்படி.)எவ்வளவோ பேர் அரசியலில் உயரத்துக்கு வர சில முக்கிய எண்களை பெயராக வைத்து முயற்சித்து வருகின்ற போதும் (தற்சமயம் அரசியலில் இருப்பவர்கள் பலரும் அடக்கம்.) எல்லோருக்கும் ஏன் வெற்றி அமைவதில்லை என்பதும் எதிர்பாராத சிலருக்கு இப்படி எண்கணித விதிகளை மீறி புதிராக நிகழ்வுகள் சம்பவிப்பது யாராலுமே கணிக்கமுடியாததாகிவிடுகிறது.

    ReplyDelete
  56. div id="fancybox-overlay" style="background-color: rgb(0, 0, 0); cursor: pointer; height: 3016px; display: block; opacity: 0.95;"

    delete this lines.

    ReplyDelete
  57. பொதுவாக எல்லோருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விழைகிறேன்..
    நுமெராலாஜி என்ற சப்ஜெக்ட் கொஞ்சம் துல்லியமாக விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதால் ஏனோதானோ என்று தீவிரமாக படித்து ஆராயாமல் ஏதோ கவர்ச்சிக்கு உள்ளாகி பெயர்மாற்றம் செய்துகொள்வது என்பது சுயமாக வைத்தியம் செய்துகொள்வதைப் போலவே பலன்களைத் தரும்..எந்த விளைவுக்கும் தயாராக ஒரு வித்தியாசமான அனுபவத்துக்கு என்று நினைத்து இந்த முயற்சியை செய்துபார்ப்பது நல்லது என்பதே துவக்ககட்ட நுமெராலாஜிஆர்வலர்களுக்கான எனது அன்பான செய்தி..
    எல்லா விஷயங்களிலும் ஏதாவது குறுக்குசால் ஓட்டுவது என்ற வேலையைச் செய்ய வேண்டாமே என்று சிலசமயம் எதுவாக இருந்தாலும் கண்டும் காணாமல் மேம்போக்காக இருந்துவிடுவது உண்டு.. எதையாவது படித்து ஏதாவது செய்து என்னவாவது ஆவது அவரவர் தலையெழுத்து என்று 'டேக் இட் ஈசி பாலிசி'யிலே பொழுதுபோக்குதலே என்னைப் போன்ற ஆட்களின் மனநிலைக்கு சரி என்று முடிவெடுத்துவிட்டேன்..

    ReplyDelete
  58. நேற்றைய செய்தி :::
    ////SP.VR. SUBBAIYA said...
    ////Blogger Kalai said...
    Is Numerology followed in our olden days? Somewhere I heard it is very recent theory now-a-days. Anyways Im intrested to follow your lessons sir. Sorry for not typing in tamil./////

    மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுப் பிரபலமாகியது. Ceiro தான் அதற்கு authority!/////


    /////http://classroom2007.blogspot.jp/2010/03/blog-post_04.html லே சொன்ன செய்தி:
    SP.VR. SUBBAIYA said...சீரோ எண் கணிதத்தைக் கற்றுக்கொண்டது இந்தியாவில் என்பது அதைவிடச் சிறப்பான செய்தியாகும்!//////

    http://classroom2007.blogspot.jp/2010/03/blog-post_02.html லின்க்கின் செய்தி :

    /////hamaragana said...

    அன்புடன் அசீரியருக்கு வணக்கம்
    எண்கணிதம் கீரோ என்ற மேல்நாட்டு அறிஞர் இந்திய வந்து பம்பாய் ஒரு ஜோதிட அறிஞரிடம் பயின்று அவர் உர்வகியது எண்கணிதம்
    இதற்கு மூலம் இந்தியனின் மூளைதான்.///////

    SP.VR. SUBBAIYA said... உண்மைதான். இதை அவரே தன்னுடைய நூலில் சொல்லியுள்ளார்!/////

    என்னத்தச் சொல்றது?

    ReplyDelete
  59. please give me invitation for ur classroom12.com vrnbabu"gmail.com

    ReplyDelete
  60. ///தேமொழி said...
    இதில் லாஜிக் இருப்பதாக(?) மைனர் நினைத்தால் அவருக்கென்று மேற்கொண்டு அராய்ச்சி செய்ய சில சுட்டிகள்://///

    தேமொழியின் 'note' was noted .

    இருப்பதாக(?)என்று நீங்களே கொஸ்டின் போட்டுவிட்டதால் வசதியாகிப் போனது..

    ReplyDelete
  61. minorwall said...The Stationery and Printing Department at Door No.816, Anna Salai,Chennai-2
    இதுதான் சரியான முகவரி என்று நினைக்கிறேன்.. நேரடியாக செல்லும் முன் ஊர்ஜிதம் செய்துகொள்ளவும்..///////



    சரியான விலாசம் தான் . தொலை பேசி எண்கள் மாறிவிட்டன. என்னிடம் இருந்தது , ஆனால் தற்சமயம் கையில் இல்லை .

    ReplyDelete
  62. ///R.Srishobana said...
    ஐயா,என்னுடைய பெயரின் கூட்டெழுத்து 32...ஆனால் என் பிறந்த எண் 26(ம்...போராட்ட எண்?!!!)...என் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்...பிறந்த எண்ணும் பெயரெண்ணும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் 26ல் என் பெயரை மாற்றினால் அது இன்னும் மோசமான "காம்பினேஷன்"ஆக அமையாதா?..////
    my own comment copy paste from old link
    http://classroom2007.blogspot.jp/2010/03/blog-post_02.html

    பொதுவாக சனியின் ஆதிக்கத்தின் கீழ் வரும் எண்களில் பெயர் அமைந்து சிரமங்களை அனுபவிக்கும் நபர்கள் அல்லது பிறந்துவிட்டவ்ர்கள் புதனுடைய எண்ணான 5லே பெயர் அமையும் படி மாற்றிக்கொண்டால் அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பது பொது விதி..(பண்டிட் சேதுராமன் அவர்கள் அனுபவ கணக்குப்படி.)

    ReplyDelete
  63. ///Balamurugan Jaganathan said...
    ///அந்த என்னை 9 ஆல் வகுத்தால் வரும் மீதி எண்தான் அந்த கிரகத்திற்கு உரிய எண். ..///

    ///.. எந்த கிரகத்திற்குரிய எண்ணாக இருந்தால் என்ன?

    நமக்குரிய எண் எது அதை சொல்லுங்கள்.. . ..////\\\\\



    நீங்கள் தலையை சுத்தி காதைத் தொட முயற்சிக்கிறீர்கள் என்பதே என் கருத்து பாலமுருகன்.

    சிங்கிள் டிஜிட்டைத் தாண்டிய எந்த இலக்க எங்களையும் அவற்றைத் தனித்தனியாகப் பிரித்து சேர்த்துக் கூட்டினால் வரும் மொத்த எண்ணே அந்த இறுதி எண்..

    நீங்கள் உதாரணம் காட்டிய 25 அல்லவா? 2 +5 =7 எதற்காக (ஒன்பதாம் எண்ணால் வகுக்கவேண்டும்?)

    எந்த எண்ணாக இருந்தாலுமே இப்படி எளிதாகக் கூட்டி கணக்கு பண்ணிவிட முடியும்..

    ReplyDelete
  64. ////ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியதாவது:-

    கூடங்குளத்தில் ஒரு நெருக்கடியான சூழல் வரப்போகிறது என்பது முன்பே எதிர்பார்த்ததுதான். மத்திய-மாநில குழுக்கள் அறிக்கை தாக்கல் செய்தபிறகு இதுபோன்ற முடிவை எடுக்கப்போகிறார்கள் என்று தெரிந்ததுதான். கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானதுதான் என்றும், உலகத்தரம் வாய்ந்தது எனவும் உண்மைக்கு புறம்பான கருத்துகளை அப்துல் கலாம் கூறி வருகிறார்.

    கூடங்குளம் அணுஉலை ரஷ்ய நாட்டு அணுஉலை. அந்த நாடு தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.வில் ஓட்டுபோட்டுள்ளது. கூடங்குளத்தில் பாதிப்பு ஏற்பட்டால் நஷ்ட ஈடு தரமாட்டோம் என ஒப்பந்தம் போட்டுள்ளது.

    கூடங்குளம் அணுஉலை நமது உயிருக்கு எதிரானது. எனவே ரஷ்ய நாட்டு அணுஉலையான இந்த அணுஉலை நமக்கு தேவையில்லை. கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடும் வரை நாம் ஒற்றுமையாக இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்./// நன்றி மாலைமலர்.

    என்னக் கொடுமை இது விளங்குமா!
    மேன்மை மிகு ஐயா அப்துல்கலாமையே (அவர் துறை சார்ந்த அறிவே இல்லாதவர் என்கிற ரீதியில் பேசும் பேச்சு இது).
    இந்தியாவில் உள்ள எண்ணெய் வளங்களைஎல்லாம் கண்டு பிடித்து சொன்னவன் அந்த ரஷ்யாக் காரன். (அது நேருவின் வேலை)
    இந்தியாவில் சுததிரத்திற்குப் பின்பு காலகாலமாக இருக்கும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு எல்லாம் இந்த ரஷ்யாக் காரன் தான் துணைக்கு நின்று வாழவைத்தான்...
    விண்வெளிக்கும் சர்மாக்களை அழைத்துச் சென்றதும் இந்த ரஷ்யாக் காரன் தான்...
    இன்றல்ல என்றைக்கும் இந்தியாவிற்கு ஒரு உன்னதமான நம்பிக்கையான ஒரு வல்லரசாக இருப்பதும், இருக்கப் போவதும் அந்த ரஷ்யாக் காரனாகத் தான் இருக்க முடியும்..
    ஓட்டை மாத்திப் போட்டதால் மாத்திரமே ( இதை முன்பே செய்தாது இப்போது திடீரென்று ஞான உதயம் பெற்றது போல்!?... (சீன ஆதரவு நாடு என்பதாலோ? இருக்கலாம் இருந்தும் நமக்கு சாதகம் தான்) அதுவும் ஊர் நாட்டாமை செய்து பேர் வாங்கும் அமெரிக்காவின் தீர்மானம் என்பதாலும் இன்னும் வேறு சில வற்றையும் பேச வேண்டும் என்பதாலும் இப்படி செய்து இருக்கலாம் இருந்தும் என் போன்றோருக்கு எதிர்த்து வாக்களித்ததில் வருத்தம் தான்) அவன் கெட்டவன் என்பதும்...

    அதற்காக அவன் இந்தியனுக்கு செய்த நல்லவைகளை எல்லாம் மறந்து விட்டுப் பேசுவது????? ஒரு வேலை இன்னும் வரலாறு படிக்காமல் இருக்கலாம் ஏனென்றால் இந்திய அரசியலுக்கு சரியானத் தேர்வாக அது தானே அமையும்....

    விஞ்ஞானி அப்துல் கலாமே பொய்ப் பிரச்சாரம் செய்கிறார் என்பதிலே லட்சணம் தெரிகிறது... என்னக் கொடுமையோ இது... தலை எழுத்து; நாளையும் விடியுமா???!!!!

    ReplyDelete
  65. /////Uma said...
    பதிவிற்கு நன்றி! உடல்நிலை சரியில்லாததான் காரணமாக இப்போது அலுவலகத்திலிருந்து கிளம்புவதால் விரிவான பின்னூட்டம் திங்களன்று.////

    உமா என்னாயிற்று? மருத்துவரைப் பாருங்கள்.

    விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.

    ReplyDelete
  66. வணக்கம் சார்,
    நீசமான கோள் வக்கிரம் or அஸ்தங்கம் அடைந்தால் அதற்கான பலன்

    "நீசமாய் கோளும் வக்கிர நிலையில் நிற்கும் காலை ஆட்சிக்கு மேலாய் உச்சம் அடைந்திடும் பலனைக் கொண்டு சூட்சுமம் அறிந்து மற்ற சுவர் நிலை தெரிந்து தக்க மாட்சிமையோடு குருவை மதித்துமே பலனை கூறு"

    இது ஒரு ஜோதிட சங்க கால பாடல் என்று படித்திருக்கிறேன். இந்த பாடல் சரியா சார்?

    ReplyDelete
  67. // நீங்கள் தலையை சுத்தி காதைத் தொட முயற்சிக்கிறீர்கள் என்பதே என் கருத்து பாலமுருகன்.///

    Nice idea. Thanks a lot Minorwall

    ReplyDelete
  68. @alaasiyam

    நீர்த்துப் போன பழைய செய்திகளின் தொகுப்புதான் வரலாறு..
    சமீபத்திய, புதிய நடப்புகளின்,நிகழ்வுகளின் தாக்கத்திலே
    செயலாற்றுவதைத் தவிர உயிர்ப்புள்ளவருக்கு வேறு வழியில்லை..
    அதுவும் தமிழனுக்கு..வேறு வழியே இல்லை..

    இலங்கையில் நடந்த மிக மோசமான இனப் படுகொலை பற்றி
    உலக அரங்கிலே சிறிய அளவில் கூட எதிர்ப்பைப் பதிவுசெய்ய வராத நாடுகள்
    பற்றி நமக்கு கவலை எதற்கு?இந்தியாவே கூட இந்த லிஸ்ட்டிலேதான் இருந்திருக்கும்..
    தமிழ்நாட்டிலே ஒரு சீட் கூட பிடிக்கமுடியாத நிலை காங்கிரசுக்கு வந்து ப.சிதம்பரம்
    அவர்கள் ஸ்ரீகணேஷ் சோதிடப்படி சன்னியாசம் வாங்கவேண்டிய நிலை வந்துவிடலாம்
    என்ற நிலை காரணமாக இப்படியொரு திடீர் ஞானோதயம்..
    மற்றபடி உணர்வு அடிப்படையில் இருதலைக்கொள்ளி எறும்பாக தமிழக காங்கிரசார் பாவம்..

    இந்திய அரசின் பிராண்ட் இமேஜ் ஆக அரசின் எல்லா டெக்னிகல் திட்ட விஷயங்களுக்கான
    மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிஆர் ஒ ஆக அப்துல் கலாமை இந்தியா பயன்படுத்துகிறது..
    இவரும் சிரமேற்கொண்டு அவரது தனித்தன்மையை அவரே கெடுத்துக்கொள்கிறார்..
    சமீபத்தில் இலங்கைக்கு தூதுவராகச் சென்று சிங்களத்திலே உரையாற்றியதுவும் அவரது பேரறிவுக்கு உதாரணங்கள்..
    ஒரு முறையாவது இவர் தன் சொந்த ஊரான ராமநாதபுரத்தைச் சுற்றிய பகுதிவாழ் மக்களின் மீன்பிடித்தொழில் சார்ந்த வாழ்வாதாரம் இலங்கை அரசினால், இந்திய அரசினால் பந்தாடப் படுவது கண்டு தமிழ்நாடெங்கிலும் பொங்கிஎழுகிற உணர்வின் ஒரு சிறு துளியையாவது வெளிப்படுத்தியிருப்பாரா?
    அதனால் அப்துல் கலாமும் அரசியல்வாதிதான்..யாருக்கு ஆதரவாக அரசியல் செய்கிறார் என்பதை வைத்தே அவரைப் பற்றிய விமர்சனம் எழுகிறது..
    'உலகத்தோடு ஓட்ட ஒழுகல் கல்லார்
    பல கற்றும் கல்லாதார்..' என்ற குரல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது..

    ReplyDelete
  69. ////////Balamurugan Jaganathan said...
    // நீங்கள் தலையை சுத்தி காதைத் தொட முயற்சிக்கிறீர்கள் என்பதே என் கருத்து பாலமுருகன்.///

    Nice idea. Thanks a lot Minorwall ///////

    தவறாக எடுத்துக் கொள்ளாமல் இயல்பாக எடுத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி..

    //////கிரகங்களுக்கு 1ல் ஆரம்பித்து 31 வரை வரிசையாக எண்கள் ஒதுக்கபட்டு உள்ளன.////////

    ஆராய்ச்சி உணர்வுடன் ஆர்வம் உள்ளவர் என்பது புரிகிறது.. ஆனால்

    இது என்ன விவரம் சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை..

    ReplyDelete
  70. @sriganesh

    ஸ்ரீ கணேஷ் எண் கணிதம் நான் இதுவரை கேள்விப்பட்டிராத புது பார்மட் டிலே இருக்கிறது..அதனால் ஒன்றுமே புரியவில்லை..இந்தியன் நுமேரோலாஜி லிஸ்ட் எழுத்துக்களை கொண்டு பார்த்தால் அவர் சொல்லும் எழுத்துக்களும் அதற்கான கிரகங்களும் எந்த வகையிலும் பொருந்தவில்லை..விளக்கினால் புரிந்துகொள்வேன்..

    ReplyDelete
  71. ////////ரமேஷ் வெங்கடபதி said...
    வணக்கம்! எனக்கு ஐயா அவர்கள் கருத்து கூறி மாற்றம் தருவார் என எதிர்பார்க்கிறேன்! ஏனெனில் எனது பெயர் கூட்டெழுத்து 26! பிறந்த தேதி 29!

    V.RAMESH, s/o வேங்கடபதி//////

    அய்யா அவர்கள் பதிலுக்கு காத்திருக்கும் இடைவேளையில் நான் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்..29 மறதி,விவாதப் போக்கைத் தூண்டும்..(நெகடிவ் விஷயங்களாக சொன்னால்)

    26 மேலும் சிக்கலை கூட்டும்..
    தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்தால் எனது நுமெராலாஜி ஆராய்ச்சி ஈடுபாட்டுக்கு ஒரு துணை செய்தவராக இருப்பீர்கள்..
    பிறந்த தேதி மாதம் வர்ஷம் டோட்டல் எண்ணுக்கு உகந்த எண் நல்ல பலன்களைத் தரும் என்பதே என் அலசல்..வாய்ப்புக்கு நன்றி..

    ReplyDelete
  72. /// Ananthamurugan said...
    Ananthamurugan total 47 intial g_3 so 50 DOB total-9 pls.explain.///////

    congrats..u r perfectly alright..

    ReplyDelete
  73. ///////@alasiam
    //A+L+A+S+I+A+M +G
    1+3+1+3+1+1+4 +3 = 17//
    நான் பிறந்தது 21 ஆம் தேதி..
    பிறவி எண் = 3
    பிறந்த தேதி/மாதம்/வருடம்..
    விதி எண் = 21 / 11 / 1969 = 30 ௦//////
    அண்ணன் ஆலாசியம் அவர்களுக்கு,
    நீங்கள் பக்தி மார்க்கத்தில் வழி சொல்பவர்.
    நான் நம்பிக்கையை மட்டுமே இறுகப் படித்திருப்பவன்..
    இருந்தாலும் ஆராய்ச்சி ஆர்வம்..தெரிந்துகொண்ட விஷயத்தைப் பகிர்கிறேன்..
    ஒரு சின்ன டிப்ஸ்...உங்கள் விஷயத்தில் பொருந்தும்..
    பிறந்த தேதியும், கூட்டு எண்ணும் மூன்றாகவே வந்தால் உங்களின் பெயர் எண்ணுக்கான பலன்களே வாழ்வில் தூக்கலாக இருக்கும்..
    17 ஆம் எண்ணான பெயர்க்கான சனி பகவானின் ஆதிக்கம் தூக்கல்..அதுதான் உங்களை தீவிர ஆன்மீகப் பாதைக்கு இழுக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது..உங்களுக்கு வேறு நல்ல சுக வாழ்வுக்கான நல்ல எண்கள் எவ்வளவோ இருந்தாலும் ஏற்கனவே நல்ல ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை அமைந்திருப்பதால் இதனை டிஸ்டர்ப் பண்ணாமல் இருப்பதே நல்லது என்றே நினைக்கிறேன்..

    ReplyDelete
  74. minorwall said...
    ///R.Srishobana said...
    ஐயா,என்னுடைய பெயரின் கூட்டெழுத்து 32...ஆனால் என் பிறந்த எண் 26(ம்...போராட்ட எண்?!!!)...என் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்...பிறந்த எண்ணும் பெயரெண்ணும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் 26ல் என் பெயரை மாற்றினால் அது இன்னும் மோசமான "காம்பினேஷன்"ஆக அமையாதா?..////
    பொதுவாக சனியின் ஆதிக்கத்தின் கீழ் வரும் எண்களில் பெயர் அமைந்து சிரமங்களை அனுபவிக்கும் நபர்கள் அல்லது பிறந்துவிட்டவ்ர்கள் புதனுடைய எண்ணான 5லே பெயர் அமையும் படி மாற்றிக்கொண்டால் அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பது பொது விதி..(பண்டிட் சேதுராமன் அவர்கள் அனுபவ கணக்குப்படி.)///

    மிக்க‌ ந‌ன்றி மைன‌ர் அவ‌ர்க‌ளே...த‌ங்க‌ளுக்கு எண்க‌ணித‌ம் ந‌ன்றாக‌ தெரிந்திருக்கிறதே!!!...எதுவாகினும் என் பெயர் மாற்றாமல் இருந்தாலே போதும் எனக்கு...தீர்வு கிடைத்தால் எனக்கும் நிம்ம‌தியே...

    வகுப்பறைக்கு வந்து அனைவருக்கும் பதிகளை தந்து கொண்டிருக்கும் துணை வாத்தியார் மைனர் அவர்களுக்கு மீண்டும் எனது நன்றிகள்...

    ReplyDelete
  75. ////minorwall said...
    ///////@alasiam
    //A+L+A+S+I+A+M +G
    1+3+1+3+1+1+4 +3 = 17//
    நான் பிறந்தது 21 ஆம் தேதி..
    பிறவி எண் = 3
    பிறந்த தேதி/மாதம்/வருடம்..
    விதி எண் = 21 / 11 / 1969 = 30 ௦//////
    அண்ணன் ஆலாசியம் அவர்களுக்கு,
    நீங்கள் பக்தி மார்க்கத்தில் வழி சொல்பவர்.
    நான் நம்பிக்கையை மட்டுமே இறுகப் படித்திருப்பவன்..
    இருந்தாலும் ஆராய்ச்சி ஆர்வம்..தெரிந்துகொண்ட விஷயத்தைப் பகிர்கிறேன்..
    ஒரு சின்ன டிப்ஸ்...உங்கள் விஷயத்தில் பொருந்தும்..
    பிறந்த தேதியும், கூட்டு எண்ணும் மூன்றாகவே வந்தால் உங்களின் பெயர் எண்ணுக்கான பலன்களே வாழ்வில் தூக்கலாக இருக்கும்..
    17 ஆம் எண்ணான பெயர்க்கான சனி பகவானின் ஆதிக்கம் தூக்கல்..அதுதான் உங்களை தீவிர ஆன்மீகப் பாதைக்கு இழுக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது..உங்களுக்கு வேறு நல்ல சுக வாழ்வுக்கான நல்ல எண்கள் எவ்வளவோ இருந்தாலும் ஏற்கனவே நல்ல ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை அமைந்திருப்பதால் இதனை டிஸ்டர்ப் பண்ணாமல் இருப்பதே நல்லது என்றே நினைக்கிறேன்..////

    மிக்க நன்றி சகோதரரே!

    தங்களின் ஆய்வு எனக்கு பெரு மகிழ்ச்சித் தருகிறது.. அப்படி என்றால் அன்னையின் அருளால் நிச்சயம் கைகூடும் என்றே நம்புகிறேன்..

    தங்களின் கருத்து வேள்வியில் நெய் வார்த்தது போல் இருக்கிறது.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  76. minorwall said...

    congrats..u r perfectly alright..

    thank u so much!minor

    ReplyDelete
  77. minorwall//

    மைனர்வாள் ஐயா!

    தங்கள் விசாரணைக்கு மிக்க நன்றி! பிறந்த தேதி 29/09/1965.கோயமுத்தூர்.10.45இரவு!

    மறதி என்பது மிக குறைவு! எப்போதாவது தாட் ப்ளாக் போல வருவது உண்டு! விவாதம் என்பது சர்க்கரைப் பொங்கல்..அதுவும் மீறியவர்களோடு மட்டுமே..எளியவர்களிடம் மிகக்குறைவு!

    உழைப்புக்கு பலன் நேரடியாக வருவதில்லை! வேறொரு வழியில்,ரூபத்தில்..!

    எனது ப்ரச்சனையே..வரும் சங்கடங்கள் எல்லாம் எதிர்பாராத இடங்களில் இருந்து மிகச்சரியாக ஒருசேர வருவதுதான்! ஆனால் சிறிது கஷ்ட.நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டு, தீர்வுகள் கண்ணுக்குத் தெரிந்து, மெல்ல விலகிச்செல்லும்!

    எனது முயற்சிகளுக்கு ஏற்ற முன்னேற்றத்தை நான் அடையவில்லை எனினும்,ஒவ்வொரு அடியாக பரம்பொருள் எனக்குத் துணையாக வந்தென்னைத் தாங்கி உயர்த்திதான் வருகிறது!

    தாங்கள் ஆராய்ந்து தக்க விளக்கம் தருவதை விரும்புகிறேன்! மிக்கநன்றி !

    ReplyDelete
  78. @shobana,

    வாத்தியார் வகுப்பறையிலே நுமேராலஜியைப் பற்றி மீள்பதிவு போட்டுவிட்டு அடுத்தடுத்த பதிவுகளுக்கான வேலையை சலிக்காமல் தொடர்ந்து செய்துவருகிறார்..இடையிடையே பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்லவேண்டி இருக்கிறது..குதர்க்கமான பின்னூட்டங்களை வாதம் பண்ணிக் கொண்டிருக்காமல் தவிர்த்து அடுத்த கட்ட வேலைகளை பார்ப்பது என்ற ஆரோக்கிய சிந்தனை அவரை ஆக்கிரமித்திருக்கிறது..

    அடுத்து நாளை மலருக்கான முஸ்தீபுகளில் இறங்கவேண்டியிருக்கிறது..என்னைப் போன்ற ஆர்வம் இருந்தும் சொந்தமாகப் பதிவிலே கவனம் செலுத்தமுடியாத நண்பர்களின் எழுத்தார்வத்துக்கு ஒரு வடிகாலாக அவர் எடுத்திருக்கும் இந்த முயற்சி பல நல்ல கலைஞர்களை உலகுக்க்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது..வேலைப்பளுவோ நிச்சயம் அதிகம்தான்..எனக்கெல்லாம் இப்படி தலைக்குமேல் லோட் ஏற்றிக்கொள்ள சர்வநிச்சயமாக மனசில்லை..எனவே அந்த வாத்தியாரின் தியாக உணர்வுக்கு மதிப்பளித்து வணங்குகிறேன்..

    நுமேராலாஜி எண்,எழுத்து என்று நுண்ணிய கணக்கு வேலைகளுடன் கிரகங்கள், அதன் தன்மைகள் என்று அத்துடன் ஜனன ஜாதகம் இருந்தால் அதன் அடிப்படையில் கிரகங்களில் ஜாதகருக்குப் பலன் தரும் கிரகம் எது என்பதையும் கணித்து பலவகைகளிலும் ஆராய்ந்து பலன் சொல்லவேண்டிய விஷயம்..

    வாத்தியாருக்கு அதற்கான நேரமும் ஒதுக்கப்பட வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 48 மணி நேரமாக அதிகப்படுத்தினால் ஒருவேளை சாத்தியமாகலாம்..அதனாலேதான் அவர் சொந்தஜாதகக் கேள்விகளைத் தவிருங்கள் என்று தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியும் வந்தார்..இருந்தாலும் என்னைப்போலவே பல அன்பர்களும் ஆர்வத்தைக் கைவிடுவதாக இல்லை...

    எனக்கு இன்று கொஞ்சம் நேரம் கிடைத்த காரணத்தால், பண்டிட் சேதுராமன் அவர்களை மானசீகமான குருவாக ஏற்று பத்து வருடங்களுக்கு முன் படித்த, அதன்பின் ஆராய்ச்சியிலும் கிடைத்த சில அனுபவ விஷயங்களையே இங்கே வகுப்பறையில் இன்று அரங்கேற்றினேன்..அதுவும் வாத்தியாரின் மவுனம் சம்மதமே என்ற கணக்கீட்டு அடிப்படையிலேதான்..

    நான் என்றென்றும் உங்கள் தோழனாக,ஓர் வாசகனாகப் பயணிப்பதையே விரும்புகிறேன்..
    துணை வாத்தியார் என்ற சோபனாவுக்குதான் இந்த பதில்..

    ReplyDelete
  79. @ரமேஷ் வெங்கடபதி...
    /////மைனர்வாள் ஐயா! ///
    மைனர் என்றே சொல்லுங்கள்.. ஐயாவெல்லாம் தேவையில்லை..

    எனக்கே நல்ல பலன் சொல்ல ஆள் யாராவது கிடைப்பாரா என்றே நான் தேடிவருகிறேன்..
    வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் நம்மில் பலரும் அப்படியே இருக்கிறோம் என்றே நினைக்கிறேன்..

    இருந்தாலும் வெளிப்படையாக தங்களின் சொந்த விஷயங்களை துணிச்சலாகப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..

    'தாட் ப்ளாக்' என்கிற விஷயமே சந்திரன் சம்பந்தப் பட்ட விஷயம்..விவாதம் பற்றிய உங்கள் அங்கீகரிப்புக்கு நன்றி..
    மனோகாரகன் சந்திரன் விருச்சிக ராசிக்கு நீசமாகிப் போவதாலும் கேதுவுடன் சேர்க்கை பெறுவதாலும் இது காரணமாகும்..பெயரின் முதலெழுத்து R இரண்டின் ஆதிக்கமே..
    தவிர 2 -சந்திரன் 9 -செவ்வாய் என்ற இரண்டு எண்களும் சேர்ந்து 29 வருகிறது..சந்திர மங்கள யோகம் உங்கள் ஜாதகத்திலும் இருக்கிறது..
    நுமேராலாஜி படி சந்திரனும் செவ்வாயும் எதிரெதிர் துருவங்கள்..இவையிரண்டும் இணைவதால் 29 சிக்கல் கொடுக்கும்.
    மற்றைய விவரிக்கப்பட்ட உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் 26ரூபத்திலே பிடித்திருக்கும் தலைவர் சனி பகவான்தான் காரணம்..

    பிறந்த எண் இரண்டைத் தவிர்த்து கூட்டு எண் ஐந்தாக வருவதால் அதன் சார்பாக பெயரை மாற்றுதல் நலம்பயக்கும்..

    கூட்டு எண் ஐந்தாம் எண்ணுக்கான புதன் உங்கள் ஜாதகப்படி நல்ல ஆதிபத்தியம் பெற்றுமே அஸ்தமனமாகிப் போகிறார்..
    ஆதிபத்தியப்படி 9 ,10 இடம்பெறும் சனி உங்களுக்கு நல்லவன்தான் என்றபோதிலும்
    நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதாக உங்களின் அனுபவம் 26 லே பெயர் அனுகூலமாக இல்லை என்றே அறிவுறுத்துகிறது..
    லக்கினாதிபதி சுக்கிரன் ஆறாமிட ஆதிக்கம் பெற்றுவிடுகிறான்..செவ்வாய் நீச சந்திரனுடன் சேர்கை..நுமேராலாஜி படி ரெண்டாம் நம்பருக்கு 9 நம்பர் ஆகாது..

    இப்படியாக புதன்,சுக்கிரன்,செவ்வாய்,சனி என்று எல்லோரையும் ஒதுக்க காரணங்கள் இருப்பதால் எஞ்சியிருக்கும்
    ராஜ கிரகம் குரு சுயவர்க்கம் 7பரலுடன் பதினொண்ணாம் இட ஆதிபத்தியம் பெற்று கலக்கலாக இருக்கிறார்..அவருக்குமே எட்டாம் இட ஆதிபத்தியமும் வேறு சேர்ந்துவிடுகிறது..

    நடப்பு சுக்கிர தசையாக இருப்பதால் லக்கினாதிபதி சுக்கிரன் ஆறாமிட ஆதிக்கம் பெற்றாலுமே ஆட்சிபெற்று 5பரலுடன் லக்கினாதிபதி என்ற சூப்பர் பவராக இருப்பதால்
    அவருக்கான ஆறாம் எண்ணிலே பெயர் வைத்தால் நல்லது பண்ணுவார் என்றே நினைக்கிறேன்..

    33 - செல்வத்துடன் பராசக்தி கடாட்சம் என்று மிதமாக மாற்றங்கள் இருக்கும்..51 -திடீர் முன்னேற்றம் ,69 -பிரமிக்கத்தக்க அந்தஸ்து அதி தீவிரமான மாற்றங்களை தரும்..

    நல்லதையே நினைத்து பிரகாசமான எதிர்காலம் வரும் என்று நம்பி முயற்சிகளைத் துவங்கலாம்..

    குருவா சுக்கிரனா என்ற கேள்விக்கு எனது பதில் சுகவாழ்வுக்கு வழிசொல்லும் சுக்கிரனே என்று தீர்ப்பளிக்கிறேன்..
    ஹை கோர்ட்டுக்குப் பின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் மாற்றலாம்..
    எதுவாயிருந்தாலும் இறுதித் தீர்ப்பு உங்கள் கையிலேதான்..
    என் பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு சொல்ல யாராவுது வாரீங்களா?

    ReplyDelete
  80. மைனர்ஜி! இது ஓகே தானே!
    விரைவான அதுவும் விரிவான அலசலுக்கு மிக்க நன்றி! தந்தையின் பெயரையும் தற்போது சேர்த்து எழுதிவருகிறேன்! 63 வருகிறது! இனி மூளையை கசக்க வேண்டும் 69 கொண்டு வர!..உங்கள் யோசனையை செயலாக்க முயலுகிறேன்! மிக்க நன்றி!

    ReplyDelete
  81. //கிரகங்களுக்கு 1ல் ஆரம்பித்து 31 வரை வரிசையாக எண்கள் ஒதுக்கபட்டு உள்ளன.//

    ////...ஆராய்ச்சி உணர்வுடன் ஆர்வம் உள்ளவர் என்பது புரிகிறது.. ஆனால் இது என்ன விவரம் சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.. ////

    Minorwall

    ஒன்பது கிரகத்திற்கும் என்ன என்ன எண்கள் வரும்... அதை மறக்காமல் எளிமையாக எப்படி நினைவில் வைத்து கொள்ளுவது என்ற விபரீத முயற்சியில் இறங்கியதன் விளைவு தங்களது பார்வையில் சிக்கிகொண்டுவிட்டேன்.. தங்களது தயவால் எளிமையான வழியும் கிடைத்தது.. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மற்றபடி ஆராய்ச்சி உணர்வு என்று அடியேனை தங்கள் அளவிற்க்கு மிகை படுத்திவிடாதிர்கள்.. வாத்தியாரின் தயவால் ஜோதிடத்தில் சிறிய நாட்டம் ஏற்பட்டு உள்ளது .....

    கிரகங்களுக்கு 1ல் ஆரம்பித்து 31 வரை வரிசையாக எண்கள் ஒதுக்கபட்டு உள்ளன


    1, (1 + 9) 10, (10 + 9) 19, (19 + 9) 28 <= 31 - Sun
    2, (2 + 9) 11, (11 + 9) 20, (20 + 9) 29 <= 31 - Moon
    3, (3 + 9) 12, (12 + 9) 21, (21 + 9) 30 <= 31 - Guru
    4, (4 + 9) 13, (13 + 9) 22, (22 + 9) 31 <= 31 - Rahu
    5, (5 + 9) 14, (14 + 9) 23 <= 31 - MER
    6, (6 + 9) 15, (15 + 9) 24 <= 31 - VEN
    7, (7 + 9) 16, (16 + 9) 25 <= 31 - Ketu
    8, (8 + 9) 17, (17 + 9) 26 <= 31 - SAT
    9, (9 + 9) 18, (18 + 9) 27 <= 31 - MARs

    ReplyDelete
  82. ///minorwall said... என் பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு சொல்ல யாராவுது வாரீங்களா?///

    அதற்கெல்லாம் ஒரு தகுதி வேணாமா? நீங்கள் செய்யும் ஜாதக அலசல்களைப் பார்த்து தலை சுற்றிப் பேயிருக்கேன். ஆனால் ஒன்று மட்டும் தெரிஞ்சுக்க ஆசை. இந்த "மைனர்வாள்" புனைப் பெயரின் எண்கணிதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது.

    ReplyDelete
  83. ///தேமொழிsaid...
    ///minorwall said... என் பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு சொல்ல யாராவுது வாரீங்களா?///

    அதற்கெல்லாம் ஒரு தகுதி வேணாமா? நீங்கள் செய்யும் ஜாதக அலசல்களைப் பார்த்து தலை சுற்றிப் பேயிருக்கேன். ஆனால் ஒன்று மட்டும் தெரிஞ்சுக்க ஆசை. இந்த "மைனர்வாள்" புனைப் பெயரின் எண்கணிதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது////
    ஆமாம்...சபாஷ்!ச‌ரியான‌ கேள்வி!!!...தேமொழி சகோதரி கூறிய பின்பு தான் என‌க்கும் அதில் ச‌ந்தேக‌ம் வ‌ந்துவிட்ட‌து...

    வ‌குப்ப‌றையில் ப‌ல‌ரும் அறிந்திடாத‌ விஷ‌ய‌ங்க‌ளை தாங்க‌ள் அறிந்திருப்ப‌தால் தான் துணை வாத்தியார் என்று கூறினேன்...அறிந்திடாதவைகளை அறிய செய்பவர் ஆசான் என்பதால் தான் கூறினேன்...'தலைவரின்' பெருந்த‌ன்மையை ம‌திக்கின்றேன்...ந‌ன்றி மைன‌ர் அவ‌ர்க‌ளே...

    ReplyDelete
  84. /////ரமேஷ் வெங்கடபதி said...
    மைனர்ஜி! இது ஓகே தானே!///////

    ஒரேழுத்து கூடினாலுமே நுமேராலாஜி படி விளைவுகள் பலன்கள் மாறிவிடும் என்பதால் 'ஜி' யும் வேண்டாம்..


    ////விரைவான அதுவும் விரிவான அலசலுக்கு மிக்க நன்றி! தந்தையின் பெயரையும் தற்போது சேர்த்து எழுதிவருகிறேன்! 63 வருகிறது! இனி மூளையை கசக்க வேண்டும் 69 கொண்டு வர!..உங்கள் யோசனையை செயலாக்க முயலுகிறேன்! மிக்க நன்றி!////

    என் அலசலிலே பார்வை விவரங்களை ஏதும் சேர்க்கவில்லை..இன்னும் விடுபட்ட வேறு கோணங்கள் வேறு யார் கண்ணுக்காவது புலப்படலாம்..இறுதியிலே சொன்ன குருவா சுக்ரனா என்ற முடிவிலே கூட யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கலாம்..தகுதியான காரணங்களும் இருக்கலாம்..
    ////33 - செல்வத்துடன் பராசக்தி கடாட்சம் என்று மிதமாக மாற்றங்கள் இருக்கும்..51 -திடீர் முன்னேற்றம் ,69 -பிரமிக்கத்தக்க அந்தஸ்து அதி தீவிரமான மாற்றங்களை தரும்../////

    இந்த மூன்று எண்களுக்குள் நாம் நமக்கு விருப்பமான பலன்களைத் தெரிந்து அதனடிப்படையிலேயே செலக்ட் பண்ணும் முறையிலே பண்டிட் சேதுராமன் விளக்கியிருந்தார்..

    ஆனால் வேறொரு புத்தகத்திலே படித்தபோது இவற்றினுள்ளும் மிகப்பொருத்தமான எண் என்று ஒன்றைத் தேர்வுசெய்யும் விதம் என்று சொல்லி புரியாத வகையிலே ஏதேதோ கணக்குகள் போட்டு எழுதப்பட்டிருந்தது..பண்டிட் சேதுராமன் அவர்களின் இலக்கண அளவுக்கு தெளிவாக இதுவரை வேறு புத்தகங்கள் எனக்குத் தெரியாத காரணத்தால் sticking to one school of thought என்ற பாலிசி அடிப்படையிலேயே இந்த அலசல் முடிவை எடுத்தேன்.

    வாத்தியார் வகுப்பிலே நடத்திய பாடங்கள் மூலம் அறிந்த அஸ்ட்ரலாஜி கொண்டு தாங்களும் நன்கு தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வரவேண்டுகிறேன்..

    நுமேராலாஜி படி சனி பெயர் தவிர்ப்பது நல்லது என்றே வலியுறுத்தப்படுகிறது..ஆனால் அஸ்ட்ரலாஜி படி அதுவும் உங்கள் ஜாதகப்படி சனி நல்லவனாகவே இருக்கிறான்..இதுபோன்ற இடறல்கள் வருவதாலேயே நுமேராலாஜி பார்க்கும் போது அஸ்ட்ரலாஜியைப் போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை என்று சொல்லியிருப்பார் பண்டிட்..

    எதுவாயிருந்தாலும் இப்போதிருக்கும் நிலை மாறி நீங்கள் எதிர்பார்த்திருக்கும் நல்லது நடந்தால் நல்லதுதான்..வாய்ப்புக்கு நன்றி..வணக்கம்..

    ReplyDelete
  85. ////R.Srishobana said...
    ///தேமொழிsaid...
    ///minorwall said... என் பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு சொல்ல யாராவுது வாரீங்களா?///

    அதற்கெல்லாம் ஒரு தகுதி வேணாமா? நீங்கள் செய்யும் ஜாதக அலசல்களைப் பார்த்து தலை சுற்றிப் பேயிருக்கேன். ஆனால் ஒன்று மட்டும் தெரிஞ்சுக்க ஆசை. இந்த "மைனர்வாள்" புனைப் பெயரின் எண்கணிதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது////
    ஆமாம்...சபாஷ்!ச‌ரியான‌ கேள்வி!!!...தேமொழி சகோதரி கூறிய பின்பு தான் என‌க்கும் அதில் ச‌ந்தேக‌ம் வ‌ந்துவிட்ட‌து...

    வ‌குப்ப‌றையில் ப‌ல‌ரும் அறிந்திடாத‌ விஷ‌ய‌ங்க‌ளை தாங்க‌ள் அறிந்திருப்ப‌தால் தான் துணை வாத்தியார் என்று கூறினேன்...அறிந்திடாதவைகளை அறிய செய்பவர் ஆசான் என்பதால் தான் கூறினேன்...'தலைவரின்' பெருந்த‌ன்மையை ம‌திக்கின்றேன்...ந‌ன்றி மைன‌ர் அவ‌ர்க‌ளே.////

    இன்று நடந்த விஷயங்களுக்குக் காரணம்
    நுமேராலாஜி பற்றி சொல்லிய என் தகப்பனார்,
    மானசீக குரு பண்டிட் சேதுராமன் அவர்கள்,
    பின்னூட்ட மட்டுறுத்தல் ஏதும் செய்யாது முழுக்க முழுக்க ஒதுங்கி நின்று
    வலைப்பதிவின் வாசகருக்கு முழு சுதந்திரம் அளித்து விளையாட வைத்து வேடிக்கை பார்க்கும் இயக்குனராய்
    ஆதிபத்திய அலசலுக்கு பாடம் நடத்தி அடிக்கல் போட்ட ஆசிரியர் SP.VR. சுப்பையா அவர்கள்,
    தன் சொந்த விவரங்களை நமக்காகப் பகிரங்கமாகப் பகிர்ந்துகொண்டு அலசலுக்கு வாய்ப்பளித்த திரு.ரமேஷ் வெங்கடபதி அவர்கள்,
    எதிர்ப்புக் குரல் ஏதுமின்றி இதுவரை அமைதிகாத்த சக வாசகர்கள் என்று பட்டியல் நீண்ட போதிலும்
    இந்த கணிப்புகள் மூலம் பயனாளி தேர்ந்தேடுத்த 69சுக்ரன் அவருக்கு அருள் புரிந்து பிரமிக்கத்தக்க அந்தஸ்தை அவருக்கு நல்கினால்
    அதுதான் நாமெல்லாம் மகிழவேண்டிய,கொண்டாடவேண்டிய விஷயமாக இருக்கும்..

    நாம் எதிர்பார்த்த நல்ல விஷயங்களை நமக்குக் கைகூடவைக்கும் நாளும் எண்ணும் எழுத்துமே நல்ல விஷயங்களாகும்..

    அந்த நம்பிக்கையிலேதான் இங்கே அனைவரும் கூடியிருக்கிறோம்..

    அதை ஒவ்வொன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்துதான் நாம் அறிந்துகொள்ள முடியும்..

    நன்றி..வணக்கம்..

    ReplyDelete
  86. இந்திய அரசின் பிராண்ட் இமேஜ் ஆக அரசின் எல்லா டெக்னிகல் திட்ட விஷயங்களுக்கான
    மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிஆர் ஒ ஆக அப்துல் கலாமை இந்தியா பயன்படுத்துகிறது..
    இவரும் சிரமேற்கொண்டு அவரது தனித்தன்மையை அவரே கெடுத்துக்கொள்கிறார்..//

    உண்மை, முன்னர் அவர்மேல் இருந்த மதிப்பு இப்போது குறைந்துவிட்டது.

    'உலகத்தோடு ஓட்ட ஒழுகல் கல்லார்
    பல கற்றும் கல்லாதார்..' என்ற குரல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது..//

    ஹல்லோ, அது குரல் இல்லை குறள்.

    இறுகப் படித்திருப்பவன்..// பிடித்திருப்பவன்

    ReplyDelete
  87. என் பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு சொல்ல யாராவுது வாரீங்களா?//

    நான் சொல்றேன், என்ன கேட்கணுமோ கேளுங்க!

    ReplyDelete
  88. என் பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு சொல்ல யாராவுது வாரீங்களா?//

    நான் சொல்றேன், என்ன கேட்கணுமோ கேளுங்க!

    ReplyDelete
  89. என்னோட பிறந்த தேதி 5 . தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் 32 (அதுவும் ஐந்து). எப்போதும் என் பெயரை s உமா என்று எழுதுவதால் கூட்டுத்தொகை 14 (அதுவும் ஐந்து), பிறந்த கிழமை புதன் (அதுவும் ஐந்திற்கான கிரகம்). எனக்கும் கொஞ்சம் சொல்றது???????

    ReplyDelete
  90. மைனரின் அலசல் பற்றி:

    ப்ளாக் படிக்கிற பையனுக்கு எம்புட்டு அறிவு???? (வடிவேலு ஸ்டைலில் patikkavum)

    ReplyDelete
  91. //////Uma said...
    என்னோட பிறந்த தேதி 5 . தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் 32 (அதுவும் ஐந்து). எப்போதும் என் பெயரை s உமா என்று எழுதுவதால் கூட்டுத்தொகை 14 (அதுவும் ஐந்து), பிறந்த கிழமை புதன் (அதுவும் ஐந்திற்கான கிரகம்). எனக்கும் கொஞ்சம் சொல்றது???????////////

    நீங்க ரொம்ம்ம்ப நல்லவுங்க..

    ReplyDelete
  92. Uma said...
    தெய்வபக்தி சிரத்தை,ஆன்மீக நட்டம் என்றெல்லாம் இல்லாமல் ஏதோ ஒரு ஆர்வத்திலே //

    நாட்டம்!

    ஆன்மீகத்துலே இறங்கினா நட்டம் வர்றது இயற்கைதானே?அதுனாலே சரியாத்தான் எழுதியிருக்கேன்..

    அதே போலே குறள் படிச்சு உச்சரிக்கும் பொது கேட்ட குரலை 'குரல்' என்று சொல்லியிருந்தேன்..

    நான் ஒண்ணு சொன்னா நீங்க ஒண்ணு புரிஞ்சுக்குறீங்களே?

    'நம்பிக்கை நமக்குச் சொல்லித்தரும் பாடத்தைப் கெட்டிப் பத்திரமாக படித்திருப்பவன்' என்று சொல்ல வந்ததை சுருக்கமாக
    நம்பிக்கையைப் படித்திருப்பவன் என்று சொல்லியிருந்தேன்..

    நீங்க புரிஞ்சுக்குவீங்கன்னு நினைச்சேன்..ம்ஹூம்..
    கவிதைக்கு மட்டும்தான் விளக்கவுரை எழுதமுடியுமோ?

    நாங்க நின்னா பேச்சு,படுத்தா எழுத்து,அசைஞ்சா கவிதை..

    அதுனாலே ஒண்ணொண்ணா விளக்கிப் புத்தகம் போடா முடியாது..

    ஷார்ப்பா கப்னு புரிஞ்சுக்கிடணும்..

    புரிஞ்சுதா?

    ReplyDelete
  93. நீங்க ரொம்ம்ம்ப நல்லவுங்க..//

    அட சீரியசா கேட்கறேன், சொல்லுங்க!

    ReplyDelete
  94. /////Uma said...
    நீங்க ரொம்ம்ம்ப நல்லவுங்க..//

    அட சீரியசா கேட்கறேன், சொல்லுங்க!//////

    நல்ல காம்பினேஷன்..எதையும் சேஞ் பண்ண வேண்டிய அவசியமில்லை..

    பிறந்ததிலேருந்து செல்லமா
    வளர்ந்தவராக இருப்பீர்கள்.
    கலகலப்பாக பழகும் உங்கள் இனிய குணம் உங்களைச் சுற்றிலும் எப்போதும் நல்ல நண்பர் குழாமைச் சேர்த்துவிட்டிருக்கும்..

    ரொம்ப கஷ்டப்படாமலேயே இயற்கையாகவே உங்களுக்கு வாழ்க்கையில் எல்லோரும் சராசரியாக எதிர்பார்க்கிற நடக்கவேண்டிய விஷயங்கள் நடந்து விடும்..

    உங்களுக்குத் தோணினதை தாராளமா செய்யலாம்..எல்லாமே பாசிடிவ்தான்..

    அப்புறம்..என்னத்தைச் சொல்றது?

    உங்களுக்கு மூணு மொழி வரைக்கும் பேச அதிகாரம்(?) இருக்கு..(ஜோசியக்காரன் ஸ்டைல் தொத்துதா?)

    ஒரு மூடு இருந்தா பேய்க்கதைலாம் எழுதுவீங்க..அதுகூட ஆரம்பிச்சு ரெண்டு மூணு கதையைக் குடுத்ததோட சரி..
    மூலையிலே போயி முடங்கிப் படுத்துக்குவீங்க..

    இந்த மைனரோட மட்டும் மோதவேணாம்..
    அவர் தனிமரம் இல்லே தோப்பு..
    உங்க கும்பலுக்கே வெச்சுடுவார் ஆப்பு..

    மத்தபடி ஒண்ணும் பிரச்சினை இல்லே..

    எது வந்தாலும் சமாளிக்கத்தான் பாவம் உங்க வூட்டுக்காரர் இருக்காரில்லே.?
    அப்புறம் என்னா?

    ReplyDelete
  95. பிறந்ததிலேருந்து செல்லமா வளர்ந்தவராக இருப்பீர்கள்.
    கலகலப்பாக பழகும் உங்கள் இனிய குணம் உங்களைச் சுற்றிலும் எப்போதும் நல்ல நண்பர் குழாமைச் சேர்த்துவிட்டிருக்கும்..//

    இது சரி!

    ரொம்ப கஷ்டப்படாமலேயே இயற்கையாகவே உங்களுக்கு வாழ்க்கையில் எல்லோரும் சராசரியாக எதிர்பார்க்கிற நடக்கவேண்டிய விஷயங்கள் நடந்து விடும்..//

    இப்படி குத்துமதிப்பா எழுதினா எதைன்னு எடுத்துக்கறது?

    உங்களுக்குத் தோணினதை தாராளமா செய்யலாம்..எல்லாமே பாசிடிவ்தான்..//

    செஞ்சிடுவோம்!

    உங்களுக்கு மூணு மொழி வரைக்கும் பேச அதிகாரம்(?) இருக்கு..(ஜோசியக்காரன் ஸ்டைல் தொத்துதா?)
    ஒரு மூடு இருந்தா பேய்க்கதைலாம் எழுதுவீங்க..அதுகூட ஆரம்பிச்சு ரெண்டு மூணு கதையைக் குடுத்ததோட சரி..மூலையிலே போயி முடங்கிப் படுத்துக்குவீங்க..//

    மைண்ட்வாய்ஸ்: இனிமே இவர்கிட்ட ஜோசியம் கேட்பியா???? கேட்பியா????


    இந்த மைனரோட மட்டும் மோதவேணாம்..
    அவர் தனிமரம் இல்லே தோப்பு..
    உங்க கும்பலுக்கே வெச்சுடுவார் ஆப்பு..//

    இந்த வாய்ஜாலம் எல்லாம் நம்மகிட்ட நடக்காது.

    மத்தபடி ஒண்ணும் பிரச்சினை இல்லே..
    எது வந்தாலும் சமாளிக்கத்தான் பாவம் உங்க வூட்டுக்காரர் இருக்காரில்லே.? அப்புறம் என்னா?//

    ஹி ஹி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com