மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.3.12

Astrology: நெருப்பில் இட்டது திரும்பக் கிடைத்த இடம்!




Astrology: நெருப்பில் இட்டது திரும்பக் கிடைத்த இடம்!

மகரிஷிகளுக்குக் குறைவில்லாத நாடு நம் நாடு. எத்தனையோ மகரிஷிகள் தோன்றி, வாழ்ந்து, இறைவனடி சேர்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான மிருகண்ட மகரிஷி (என்ன பெயருடா சாமி!), அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் இருக்கும் தலத்தில் இறைவனுக்குப் பெரும் பொருட் செலவில் யாகம் ஒன்றை நடத்தினாராம். யாகத்திற்குத் தேவையான பொருட்களை மக்களும் வழங்கலாம் என்றாராம். மக்கள் ஒன்று சேர்ந்து தங்கம் கலந்த பட்டாடைகள் மூன்றை நெய்து அளித்தனர். ஒன்று இறைவனுக்கு, ஒன்று மிருகண்ட மகரிஷிக்கு, இன்னொன்று தங்கள் மன்னனுக்கு என்றார்கள்.

யாகத்தின் நிறைவில், இறைவனுக்காகக்கு கொடுத்த பட்டாடையையும், தனக்கென்று கொடுத்ததையும் மிருகண்ட மகரிஷி யாக குண்டத்தில் போட்டு விட்டார். நெருப்பில் போடப்பெற்ற பட்டாடைகள் இறைவனை அடைந்து விடுமா என்று மக்கள் மகரிஷியிடம் சந்தேகம் எழுப்பினர். நீங்கள் மூலஸ்தானத்தில் சென்று பாருங்கள், தெரியும் என்றார் மகரிஷி. மக்கள் ஆச்சர்யத்துடன் கோவிலுக்குள் சென்று மூலஸ்தானத்தைப் பார்த்தார்கள். அங்கிருந்த சிவலிங்கத்தின் மேல், யாககுண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு வியப்படைந்தார்கள். அவை எப்படி இங்கு வந்தன? என்று மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி கேட்டனர்.

மகரிஷி மக்களிடம் சொன்னார்: "அக்னியின் பல வகைகளில் பரணி என்னும் ருத்ர அக்னியும் ஒரு வகை. அந்த அக்னியில் இறைவனுக்கு நாமிடும் பொருட்களை அது அவரிடம் கொண்டு சேர்க்கிறது"

அதன் காரணமாகவே இத்தலம் பரணி நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாகக் கொண்டாடப் படுகிறது!

குலோத்துங்க சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜ சோழன் இப்பகுதியை ஆட்சி செய்த காலத்தில் இத்திருக்கோயில் கருவறை கருங்கல்லால் கட்டப்பெற்றது. இன்று நல்லாடை எனறு அறியப்படும் இந்த ஊர், முற்காலத்தில், ஜெயங்கொண்ட சோழநாட்டில் குறும்பூர் நாட்டில் நல்லாடை மங்களமான குலோத்துங்க சோழபுரம் என வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றுள்ளது. தற்போது அக்னீஸ்வரர் என அழைக்கப்படும் மூலவர் புராண காலத்தில் திருவன்னீஸ்வரம் உடையார் என்ற பெயரில் வணங்கப் பெற்றுள்ளார்.

அக்காலத்தில் இக்கோயிலில் சித்திரை விசாகத் திருவிழாவும், மார்கழி திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றுள்ளன!

கோவில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலின் மூன்று பக்கத்திலும் கோபுரத்துடன் கூடிய வாசல்கள் அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் துவார விநாயகர், பால முருகன், செல்வ விநாயகர், மகா விஷ்ணு, சோமாஸ்கந்தர், மகாலட்சுமி, சனிபகவான், கைலாசநாதர், கல்யாணி, புவனேஸ்வரி, சண்டிகேஸ்வரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சூரியன், பைரவர், துர்க்கை சன்னதிகள் உள்ளன. இங்கு சிவனே நவகிரக நாயகனாக இருப்பதால், இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. செம்பனார் கோவில், கீழப்பரசலூர், திருக்கடையூர், திருநள்ளாறு ஆகிய சிவத்தலங்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.
-------------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 16
பரணி நட்சத்திர கோவில்
நட்சத்திர வரிசையில் இது இரண்டாவது நட்சத்திரம்.
சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரம
இந்த நட்சத்திரக்காரர்களுக்கு உரிய கோவில்:
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
நல்லாடை கிராமம். நாகபட்டினம் மாவட்டம்
------------------------------------
சுவாமியின் பெயர்: அக்னீஸ்வரர்
அம்பிகையின் பெயர்: சுந்தரநாயகி
தல விருட்சம் : வன்னி, வில்வம்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
மயிலாடுதுறையிலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை உள்ளது.
தூரம் 15 கிலோ மீட்டர்கள்

முகவரி:
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்,
நல்லாடை-609 306
தரங்கம்பாடி தாலுக்கா,
நாகப்பட்டினம் மாவட்டம்.
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை

திருவிழாக்கள்: ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஆருத்திரா தரிசனம்.

இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலித்தவாறு அமர்ந்திருப்பது முக்கிய சிறப்பாகும். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் மற்றுமொரு சிறப்பாகும்.

பரணி நட்சத்திரக்காரர்கள் நல்லாடை அக்னீஸ்வரர் தலம் சென்று வழிபாடு செய்வது நன்மை பயக்கும். பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. இங்கு சிவன் அக்னி சொரூபமாக திகழ்வதால், பரணி நட்சத்திரக்காரர்கள் இவருக்கு ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று ஹோமம் செய்தாலரிரண்டு மடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தலாடை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி நல்லாடை ஆகிவிட்டதாம்

பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் ஜாதக தோஷங்கள் மற்றும் கஷ்டங்கள்  நீங்க இத்தல இறைவனை வழிபடலாம். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, வியாபாரம் செழிக்க, மற்ற நட்சத்திரக்காரர்களும் இங்கே உறைகின்ற இறைவனை வழிபட்டுப் பயனடையலாம்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

53 comments:

  1. மானாட்டம்
    மயிலாட்டம்
    கரகாட்டம்
    காவடியாட்டம்
    அந்த
    பூவை எடுக்கும்-இந்த
    பூவையின் ஆட்டம்- கண்டு
    மனம் போடுது
    கொண்டாட்டம்.

    ReplyDelete
  2. பரணி தரணி ஆளும் ,கேட்டை கோட்டையை ஆளும்,புரட்டாதி ஊரெட்டாளும் என்றெல்லாம் சொல்கிறார்களே ,இவை உண்மையா,அல்லது பழமொழியா அல்லது அடுக்குமொழி பேசத்தெரிந்தவன் அள்ளிவிட்டதா?
    .

    ReplyDelete
  3. வணக்கம் சார்
    இன்றைய பாடம் நல்லாயிருக்குது என்க்கு ஜாதக புத்தகம் வேண்டும் மேலும்
    எனக்கு இன்னு ரொம்ப ஜாதகம் சொல்லி கொடுங்க தங்களுக்கு நேரமிருந்தால் அப்புறம் நம்ப் வகுப்பிலிருக்கும் சகோதர சகோதரிகளை அர்த்த முள்ள் இந்து மதம் பகவத்கீதை அப்புறம் தத்துவ கதையெல்லாம் எழுத சொல்லுங்க அப்புறம் விவேகனந்தர்(அண்ண) சொற்பொழிவு வேண்டும்.

    ReplyDelete
  4. சுக்கிரனின் ஸ்தலமான கஞ்சனூரில் அருள்பாலிக்கும் இறைவனின் பெயரும் அக்னீஸ்வரர். பரணிக்கு (சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரம்) உரிய கோவிலின் இறையனார் பெயரும் அக்னீஸ்வரர். என்ன ஒற்றுமை!

    மிருகண்ட மஹரிஷியின் மகன் தான் 'என்றும் பதினாறு வயது' வரம் பெற்ற மார்கண்டேயர். 'ம்ருகண்டு' என்ற வடமொழிப் பெயர்தான் தமிழில் 'மிருகண்ட' என்று வழங்கப் படுகிறது.

    ReplyDelete
  5. வண்ணப் பூவை
    எடுக்கும்
    வண்ணப்
    பூவை

    ReplyDelete
  6. அட... படத்தில் உள்ள பெண் போல இப்படி வளைந்து நெளிந்து கூட புது வகை ஆடை ஆபரணங்களை அறிமுகப் படுத்தலாம் போலிருக்கிறதே. (சும்மாங்காட்டியும் "கேட் வாக்"னு டடக்.. டடக்னு நடக்கிரவங்கள பார்த்தா ரொம்ப அலுப்பா இருக்கு)

    ///அக்னியில் இறைவனுக்கு நாமிடும் பொருட்களை அது அவரிடம் கொண்டு சேர்க்கிறது///
    இந்து மதத்தில் இறந்தவர்களை எரியூட்டுபவர்கள் இதுபோன்று நெருப்பிலிட்டால் இறைவனடி சேர்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையினால் இருக்குமோ.

    ///பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வர் என்பது பழமொழி///
    தமிழ்நாட்டில் டி. ராஜேந்தர் முன்னோர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை

    வழக்கம்போல் தகவல் நிறைந்த பதிவிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  7. //// thanusu said...
    மானாட்டம்
    மயிலாட்டம்
    கரகாட்டம்
    காவடியாட்டம்
    அந்த
    பூவை எடுக்கும்-இந்த
    பூவையின் ஆட்டம்- கண்டு
    மனம் போடுது
    கொண்டாட்டம்./////

    மனம் போடுமா கொண்டாட்டம்
    மனைவிக்குத் தெரிந்தால் திண்டாட்டம்!:-)))

    ReplyDelete
  8. //// thanusu said...
    பரணி தரணி ஆளும் ,கேட்டை கோட்டையை ஆளும்,புரட்டாதி ஊரெட்டாளும் என்றெல்லாம் சொல்கிறார்களே ,இவை உண்மையா,அல்லது பழமொழியா அல்லது அடுக்குமொழி பேசத்தெரிந்தவன் அள்ளிவிட்டதா?////

    சொல்லடைகள். அவ்வளவுதான்.
    .

    ReplyDelete
  9. //// sundari said...
    வணக்கம் சார்
    இன்றைய பாடம் நல்லாயிருக்குது என்க்கு ஜாதக புத்தகம் வேண்டும் மேலும் எனக்கு இன்னு ரொம்ப ஜாதகம் சொல்லி கொடுங்க தங்களுக்கு நேரமிருந்தால் அப்புறம் நம்ப் வகுப்பிலிருக்கும் சகோதர சகோதரிகளை அர்த்த முள்ள் இந்து மதம் பகவத்கீதை அப்புறம் தத்துவ கதையெல்லாம் எழுத சொல்லுங்க அப்புறம் விவேகனந்தர்(அண்ண) சொற்பொழிவு வேண்டும்.////

    மைலாப்பூரில் ராமகிருஷ்ணர் மடம் உள்ளது. அங்கே அவரது நூல்கள் கிடைக்கும்

    ReplyDelete
  10. ///// Parvathy Ramachandran said...
    சுக்கிரனின் ஸ்தலமான கஞ்சனூரில் அருள்பாலிக்கும் இறைவனின் பெயரும் அக்னீஸ்வரர். பரணிக்கு (சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரம்) உரிய கோவிலின் இறையனார் பெயரும் அக்னீஸ்வரர். என்ன ஒற்றுமை!
    மிருகண்ட மஹரிஷியின் மகன் தான் 'என்றும் பதினாறு வயது' வரம் பெற்ற மார்கண்டேயர். 'ம்ருகண்டு' என்ற வடமொழிப் பெயர்தான் தமிழில் 'மிருகண்ட' என்று வழங்கப் படுகிறது.////

    தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. //// Parvathy Ramachandran said...
    வண்ணப் பூவை
    எடுக்கும்
    வண்ணப்
    பூவை////

    பூவையர் திலகங்கள் சொன்னால் சரிதான்!

    ReplyDelete
  12. //// kannan said...
    vanakkam iyaa////

    வணக்கம் தம்பி!

    ReplyDelete
  13. //// தேமொழி said...
    அட... படத்தில் உள்ள பெண் போல இப்படி வளைந்து நெளிந்து கூட புது வகை ஆடை ஆபரணங்களை அறிமுகப் படுத்தலாம் போலிருக்கிறதே. (சும்மாங்காட்டியும் "கேட் வாக்"னு டடக்.. டடக்னு நடக்கிரவங்கள பார்த்தா ரொம்ப அலுப்பா இருக்கு)
    ///அக்னியில் இறைவனுக்கு நாமிடும் பொருட்களை அது அவரிடம் கொண்டு சேர்க்கிறது///
    இந்து மதத்தில் இறந்தவர்களை எரியூட்டுபவர்கள் இதுபோன்று நெருப்பிலிட்டால் இறைவனடி சேர்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையினால் இருக்குமோ.
    ///பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வர் என்பது பழமொழி///
    தமிழ்நாட்டில் டி. ராஜேந்தர் முன்னோர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை
    வழக்கம்போல் தகவல் நிறைந்த பதிவிற்கு நன்றி ஐயா./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. This is the list of Maharishis. culled out from Orkut
    --------------------
    1. Agasthya Maharshi
    2. Athri Maharshi
    3. Ashtaavakra Maharshi
    4. Rshyasrnga Maharshi
    5. Kapila Maharshi
    6. Kashyapa Maharshi (Prajaapathi)
    7. Gowthama Maharshi
    8. Chyavana Maharshi
    9. Jamadagni Maharshi
    10. Dattaatreya Maharshi
    11. Dadheechi Maharshi
    12. Durvaaso Maharshi
    13. Naarada Maharshi
    14. Paraashara Maharshi
    15. Bharadwaaja Maharshi
    16. Bhrgu Maharshi
    17. Maarkandeya Maharshi
    18. Yaajnavalkya Maharshi
    19. Vasishthha Maharshi
    20. Vishwaamithra Maharshi
    21. Vyaasa Maharshi
    22. Shuka Maharshi
    23. Angiro Maharshi
    24. Aruni Maharshi
    25. Ourva Maharshi
    26. Kandu Maharshi
    27. Kanva Maharshi
    28. Kardama Maharshi
    29. Kaashyapa Maharshi
    30. Garga Maharshi
    31. Gouramukha Maharshi
    32. Jada Maharshi
    33. Jaabaali Maharshi
    34. Mathanga Maharshi
    35. Shankha Maharshi
    36. Likhitha Maharshi
    37. Jaimini Maharshi
    38. Devala Maharshi
    39. Nara Maharshi
    40. Naaraayana Maharshi
    41. Pippalaada Maharshi
    42. Pulastya Maharshi
    43. Bakadaalbhya Maharshi
    44. Mareechi Maharshi
    45. Maandavya Maharshi
    46. Mudgala Maharshi
    47. Maithreya Maharshi
    48. Raibhya Maharshi
    49. Romasha Maharshi
    50. Vaamadeva Maharshi
    51. Vaalmeeki Maharshi
    52. Vyshampaayana Maharshi
    53. Shameeka Maharshi
    54. Shaandilya Maharshi
    55. Shounaka Maharshi
    56. Samvartha Maharshi
    57. Sanaka Maharshi
    58. Sanandana Maharshi
    59. Sanatkumaara Maharshi
    60. Sanatsujaatha Maharshi
    61. Haareetha Maharshi
    62. Aaranyaka Maharshi
    63. Udanka Maharshi
    64. Jaigeeshavya Maharshi
    65. Dhowmya Maharshi
    66. Bruhaspathi Maharshi
    67. Mankana Maharshi
    68. Mrgasrnga Maharshi
    69. Vyaaghrapaada Maharshi
    70. Sukra Maharshi (Ushanasa)
    71. Shwetaketu Maharshi
    72. Upamanyu Maharshi
    73. Rubhu Maharshi
    74. Kaatyaayana Maharshi
    75. Vipula Maharshi
    76. Saandeepani Maharshi
    77. Saaraswatha Maharshi
    78. Aastheeka Maharshi
    79. Uthathhya Maharshi
    80. Grthsamada Maharshi
    81. Thandi Maharshi
    82. Mrukandu Maharshi
    83. Vaatsyaayana Maharshi
    84. Rucheeka Maharshi
    85. Aapravaana Maharshi
    86. Kaamandaka Maharshi
    87. Koushika Maharshi
    88. Daksha Maharshi
    89. Deerghathamo Maharshi
    90. Soubhari Maharshi

    ReplyDelete
  15. மார்கண்டேயரின் தந்தை ம்ருகண்டு மஹரிஷி.மார்கண்டேயர் சிவபக்தர், ஒப்பிலியப்பனுக்குப் பெண்கொடுத்து விஷ்ணுவுக்கு மாமனார் ஆனார்.அந்த வகையில் அந்த யுகத்திலேயே சைவ வைணவ ஒற்றுமைக்குப் பாடுபட்டார்.

    நல்ல பதிவு ஐயா! பல சிந்தனைகளைத் தூண்டியது.

    ReplyDelete
  16. அக்னியில் நாமிடும் பொருள்கள் அது இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது///////

    பொதுவாக சீனர்களிடமும் ஒரு பழக்கம் இருக்கிறது. இவர்கள் வருடத்தில் ஒருநாள் மாலையும் இரவும் சந்திக்கும் நேரங்களில் சீனக் கடைகளில் விற்கும் போலியான பேப்பர் பணத்தை கட்டு kattaaka வாங்கிவந்து இறந்து போன தன்னுடைய உறவினர்களை நினைத்து erikkiraarkal.

    இப்படி எரிப்பது ஏன் என்றால் எரிக்கும் பணம் கடவுளிடம் போய் கடவுளிடமிருந்து சம்பந்தப் பட்டவருக்கு போய்விடுமாம்.

    ReplyDelete
  17. ஆசிரியருக்கு அன்பு வணக்கம் ,

    நானும் பரணி நட்சதிரம் தான் .அருமையான பதிவு , மிக்க நன்றி .

    ReplyDelete
  18. ஆம். அக்கினியில் பலவகைகள் பேசப்படுகின்றன. ஒரே அக்கினிக்கு 7 நாக்குகள்
    என்றெல்லாம் உபனிடதத்தில் சொல்லப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாக்குக்கும் ஒவ்வொரு குணம் பேசப்படுகிறது.

    திருவண்ணாமலையில் மலை தீபத்திற்கு முதல் நாள் இரவு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.மேஷம் செவ்வாயுடன் தொடர்புடையது அல்லவா? என‌வே அதன் முழுமையான ஆளுமையுடைய நட்சத்திரமும் அக்கினியாகவே வகைப்படுத்தப்படுகிறது போலும்.

    ReplyDelete
  19. படத்தில் உள்ள பெண்ணைப்பார்த்தால் ராஜஸ்தானி போல் தெரிகிறது. அவர்கள்தான் கை நிறைய இப்படி வளையல்களை அடுக்கிக்கொண்டிருப்பார்கள். மேலும் காலில் கொலுசுக்குப்பதிலாக மொத்தமாக காப்பு போல் போட்டிருப்பார்கள் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை. எல்லாவற்றையும் விட எனக்கு மிகவும் பிடித்தது ராஜஸ்தானி உணவு வகைகள். நல்ல காரசாரமாக, மசாலா சேர்த்து சமைப்பார்கள்.

    ReplyDelete
  20. அவர் ராஜஸ்தானியப்பெண். அணிந்திருக்கும் வளையல்களின் எண்ணிக்கை 42 இருக்கலாம்.உண்மையாகவே அழகிதான்.ரப்பர்போல வளைந்த உடம்பு அபாரம்.

    அந்தப் படத்தைப் பற்றிய மைனருக்கு மிகவும் பிடித்த கமெண்ட் அவர் மின் அஞ்சல் அனுப்பினால் அவருக்கு மட்டும் அனுப்பப்படும்.

    படத்தை வெளியிட்ட ஐயாவுக்கு நன்றி. வளைந்து போஸ் கொடுத்த பெண்ணுக்கும், படம் எடுத்தவருக்கும் டபுள் நன்றி.

    ReplyDelete
  21. பரணி நட்சத்திரக்கோயில் பற்றிய தகவல்கள் அருமை. எனக்கு ஒவ்வொருமுறை படிக்கும்போதும் ஏற்படும் சந்தேகத்தை இப்போது கேட்டுவிடுகிறேன். இதுவரை பதிவிட்ட / பதிவிடப்போகும் கோயில்களுக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்களா அல்லது கேட்ட, படித்த தகவல்களை மட்டுமே வைத்து எழுதுகிறீர்களா? படிக்கும்போது நீங்கள் நேரில் பார்த்து எழுதுவது போலவே இருக்கிறது, அதனால்தான் கேட்டேன்.

    அந்த அக்னியில் இறைவனுக்கு நாமிடும் பொருட்களை அது அவரிடம் கொண்டு சேர்க்கிறது//

    இதைக்கேள்விப்பட்டிருக்கிறேன். இறந்தவர்களுக்குத் திதி கொடுக்கும்போதும் மந்திரங்கள் சொல்லி இவ்வாறே பொருட்களை நெருப்பிலிடுவர்.

    ReplyDelete
  22. கிருஷ்ணன் சார் உங்கள் லிஸ்டில் இரண்டு முறை கஸ்யப / காஸ்யப என்று வருகிறதே, இருவர் இதே பெயரில் இருந்தார்களா? கௌண்டின்ய மகரிஷியின் பெயர் இதில் இடம்பெறவில்லை.

    ReplyDelete
  23. ஒப்பிலியப்பனுக்குப் பெண்கொடுத்து விஷ்ணுவுக்கு மாமனார் ஆனார்.//

    கூடவே தன் பெண்ணிற்கு உப்பு போட்டு சமைக்கத்தெரியாது என்று குண்டையும் தூக்கிப்போட்டார்.

    ReplyDelete
  24. பின்னால் வரும் மஹரிஷிகள் எல்லோருமே முன்னால் இருக்கும் மஹரிஷிகளின் பிள்ளைகள் அல்லது பேரன்களே. எனவே காஸ்யபர் 1 , காஸ்யபர் 2 என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  25. உமாஜி கெளண்டிய கோத்திரமோ? அதுதான் அக்கரையாக அவரைப்பற்றிய விசாரணையோ?

    அந்தப் பட்டியல் ஒன்றும் முடிந்த முடிவல்ல. ஏதோ ஒரு வகையான பட்டியல் என்று கொள்ளலாம்.கெளண்டின்யரையும் சேர்த்துவிடலாம்.ஆட்சேபம் ஒன்றும் இல்லை. ரமண மஹரிஷியையும், வேதாத்ரி மஹரிஷியையும் சேர்த்தாலும் ஒன்றும் தப்பில்லை. யார் நம்மை கேட்கப் போகிறார்கள்?

    ம்ருகண்டு பின்னாலும் மார்கண்டேயர் முன்னாலும் வருகிறார்கள். அப்படிப் பார்த்தால் யார் யாருக்குப் பிள்ளை?

    எல்லாம் ஒரு 'இது'தான்

    ReplyDelete
  26. திரு.கே.எம்.ஆர் அவர்களின் பின்னூட்டங்கள் மூலம் நிறைய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி. உமாஜி, அவர் உப்புபோட்டு சமைக்கத் தெரியாதுன்னு குண்டு போடல, ஸ்தல புராணத்தின் படி, மார்க்கண்டேயரின் மகள் ஐந்து வயதுக் குழந்தையாக இருக்கும் போது, வயதானவர் வேடத்தில் வந்த திருமால், அவளை மணம் செய்து கொடுக்கக் கேட்க, 'அவள் சிறுமி,சமையலில் எதெதற்கு எவ்வளவு உப்பு போடவேண்டும் என்பதே தெரியாது' என,திருமால் தன் சுய உருவில் தோன்றி , அக்குழந்தையே பூதேவி என்று கூறி, அவள் உப்பே போடாமல் சமைத்தாலும் தான் ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தார் (அதாவது, அவரே வார்த்தை விட்டு மாட்டிக்கிட்டார்).

    ReplyDelete
  27. //////படங்கள் நன்றாக உள்ளது--
    நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 16
    பரணி நட்சத்திர கோவில்///////
    ஸ்தல வரலாறு,சென்று தரிசிப்பதற்கு
    ஏற்ப முகவரி யாவும் வழக்கம்போல்
    சிறப்பாக கொடுத்துள்ளீர்கள்.
    நன்றி!!

    ReplyDelete
  28. //திரு.கே.எம்.ஆர் அவர்களின் பின்னூட்டங்கள் மூலம் நிறைய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி.//

    நான் இங்கே பின்னூட்டம் இடுவதே பல மேலதிகத் தகவல்கள் கொடுப்பதற்காகத்தான்.யாருக்காவது, எப்போதாவது, ஏதாவது பலன் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான்.வாத்தியார் ஐயாவின் கட்டுரைகளை ஒரு அடிப்படையாகவும், முன் உதாரணமாக வைத்துக்கொண்டு மேன் மேலும் பல‌
    தகவல்களைத் தந்து வருகிறேன். வாத்தியார் ஐயா அத‌னை புரிந்து கொண்டுதான் என் பின்னூட்டங்களை மட்டுறுத்தல் இல்லாமல் வெளியிட்டு வருகிறார்கள்.சில சமயம் எக்குத் த‌ப்பாக ஏதாவது சொல்லி மாட்டிக் கொள்வதும் உண்டு.சில சமயம் நான் சொல்வதை வேறு விதமாகப் புரிந்து கொண்டு வாதப்பிரதி வாதங்கள் வந்தது உண்டு. ஆனால் அவற்றை நான் அவசியம் என்றே நினைக்கிறேன். தவறுகளைத் திருத்திக் கொள்ளவும்,
    மன்னிப்புக் கோரவும் மனம் பக்குவப்பட்டுள்ளதால் என்னால் தொடர்ந்து இதனைச் செய்ய முடிகிறது.உங்கள் பின்னூட்டத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  29. ///// kmr.krishnan said...
    This is the list of Maharishis. culled out from Orkut
    --------------------
    1. Agasthya Maharshi
    2. Athri Maharshi
    3. Ashtaavakra Maharshi
    4. Rshyasrnga Maharshi
    5. Kapila Maharshi
    6. Kashyapa Maharshi (Prajaapathi)
    7. Gowthama Maharshi
    8. Chyavana Maharshi
    9. Jamadagni Maharshi
    10. Dattaatreya Maharshi
    11. Dadheechi Maharshi
    12. Durvaaso Maharshi
    13. Naarada Maharshi
    14. Paraashara Maharshi
    15. Bharadwaaja Maharshi
    16. Bhrgu Maharshi
    17. Maarkandeya Maharshi
    18. Yaajnavalkya Maharshi
    19. Vasishthha Maharshi
    20. Vishwaamithra Maharshi
    21. Vyaasa Maharshi
    22. Shuka Maharshi
    23. Angiro Maharshi
    24. Aruni Maharshi
    25. Ourva Maharshi
    26. Kandu Maharshi
    27. Kanva Maharshi
    28. Kardama Maharshi
    29. Kaashyapa Maharshi
    30. Garga Maharshi
    31. Gouramukha Maharshi
    32. Jada Maharshi
    33. Jaabaali Maharshi
    34. Mathanga Maharshi
    35. Shankha Maharshi
    36. Likhitha Maharshi
    37. Jaimini Maharshi
    38. Devala Maharshi
    39. Nara Maharshi
    40. Naaraayana Maharshi
    41. Pippalaada Maharshi
    42. Pulastya Maharshi
    43. Bakadaalbhya Maharshi
    44. Mareechi Maharshi
    45. Maandavya Maharshi
    46. Mudgala Maharshi
    47. Maithreya Maharshi
    48. Raibhya Maharshi
    49. Romasha Maharshi
    50. Vaamadeva Maharshi
    51. Vaalmeeki Maharshi
    52. Vyshampaayana Maharshi
    53. Shameeka Maharshi
    54. Shaandilya Maharshi
    55. Shounaka Maharshi
    56. Samvartha Maharshi
    57. Sanaka Maharshi
    58. Sanandana Maharshi
    59. Sanatkumaara Maharshi
    60. Sanatsujaatha Maharshi
    61. Haareetha Maharshi
    62. Aaranyaka Maharshi
    63. Udanka Maharshi
    64. Jaigeeshavya Maharshi
    65. Dhowmya Maharshi
    66. Bruhaspathi Maharshi
    67. Mankana Maharshi
    68. Mrgasrnga Maharshi
    69. Vyaaghrapaada Maharshi
    70. Sukra Maharshi (Ushanasa)
    71. Shwetaketu Maharshi
    72. Upamanyu Maharshi
    73. Rubhu Maharshi
    74. Kaatyaayana Maharshi
    75. Vipula Maharshi
    76. Saandeepani Maharshi
    77. Saaraswatha Maharshi
    78. Aastheeka Maharshi
    79. Uthathhya Maharshi
    80. Grthsamada Maharshi
    81. Thandi Maharshi
    82. Mrukandu Maharshi
    83. Vaatsyaayana Maharshi
    84. Rucheeka Maharshi
    85. Aapravaana Maharshi
    86. Kaamandaka Maharshi
    87. Koushika Maharshi
    88. Daksha Maharshi
    89. Deerghathamo Maharshi
    90. Soubhari Maharshi////

    இதில் பிரபலமானவர்கள் என்றால் ஒரு பத்துபேர்கள் தேருவார்கள். அவ்வளவுதான்!

    ReplyDelete
  30. //// kmr.krishnan said...
    மார்கண்டேயரின் தந்தை ம்ருகண்டு மஹரிஷி.மார்கண்டேயர் சிவபக்தர், ஒப்பிலியப்பனுக்குப் பெண்கொடுத்து விஷ்ணுவுக்கு மாமனார் ஆனார்.அந்த வகையில் அந்த யுகத்திலேயே சைவ வைணவ ஒற்றுமைக்குப் பாடுபட்டார்.
    நல்ல பதிவு ஐயா! பல சிந்தனைகளைத் தூண்டியது.//////

    இப்போது அந்த பேதம் எல்லாம் 90% மறைந்து விட்டது.

    ReplyDelete
  31. //// thanusu said...
    அக்னியில் நாமிடும் பொருள்கள் அது இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது///////
    பொதுவாக சீனர்களிடமும் ஒரு பழக்கம் இருக்கிறது. இவர்கள் வருடத்தில் ஒருநாள் மாலையும் இரவும் சந்திக்கும் நேரங்களில் சீனக் கடைகளில் விற்கும் போலியான பேப்பர் பணத்தை கட்டு kattaaka வாங்கிவந்து இறந்து போன தன்னுடைய உறவினர்களை நினைத்து erikkiraarkal.
    இப்படி எரிப்பது ஏன் என்றால் எரிக்கும் பணம் கடவுளிடம் போய் கடவுளிடமிருந்து சம்பந்தப் பட்டவருக்கு போய்விடுமாம்./////

    சீனக் கடைகளில் அதுவும் கிடைக்கிறதா? நம் ஊர் என்றால் அதை வாங்கி (சில) மக்கள் புழக்கத்தில் விட்டுவிடுவார்கள்!

    ReplyDelete
  32. ///// naren said...
    ஆசிரியருக்கு அன்பு வணக்கம் ,
    நானும் பரணி நட்சதிரம் தான் .அருமையான பதிவு , மிக்க நன்றி ./////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  33. ///// kmr.krishnan said...
    ஆம். அக்கினியில் பலவகைகள் பேசப்படுகின்றன. ஒரே அக்கினிக்கு 7 நாக்குகள்
    என்றெல்லாம் உபனிடதத்தில் சொல்லப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாக்குக்கும் ஒவ்வொரு குணம் பேசப்படுகிறது.
    திருவண்ணாமலையில் மலை தீபத்திற்கு முதல் நாள் இரவு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.மேஷம் செவ்வாயுடன் தொடர்புடையது அல்லவா? என‌வே அதன் முழுமையான ஆளுமையுடைய நட்சத்திரமும் அக்கினியாகவே வகைப்படுத்தப்படுகிறது போலும்./////

    எங்களுக்கு (என்னைப் போன்ற பாமரர்களுக்கு) எல்லாம் ஒன்றாகத்தான் தெரிகிறது!

    ReplyDelete
  34. /// Uma said...
    படத்தில் உள்ள பெண்ணைப்பார்த்தால் ராஜஸ்தானி போல் தெரிகிறது. அவர்கள்தான் கை நிறைய இப்படி வளையல்களை அடுக்கிக்கொண்டிருப்பார்கள். மேலும் காலில் கொலுசுக்குப்பதிலாக மொத்தமாக காப்பு போல் போட்டிருப்பார்கள் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை. எல்லாவற்றையும் விட எனக்கு மிகவும் பிடித்தது ராஜஸ்தானி உணவு வகைகள். நல்ல காரசாரமாக, மசாலா சேர்த்து சமைப்பார்கள்.////

    தில்லியில் இருப்பதால், ராஜஸ்தானி, பஞ்சாபி என்று எல்லா உணவுவகைகளையும் ஒரு வாய் பார்த்துவிடுகிறீர்கள்! கொடுத்து வைத்தவர்தான்!

    ReplyDelete
  35. //// kmr.krishnan said...
    அவர் ராஜஸ்தானியப்பெண். அணிந்திருக்கும் வளையல்களின் எண்ணிக்கை 42 இருக்கலாம்.உண்மையாகவே அழகிதான்.ரப்பர்போல வளைந்த உடம்பு அபாரம். அந்தப் படத்தைப் பற்றிய மைனருக்கு மிகவும் பிடித்த கமெண்ட் அவர் மின் அஞ்சல் அனுப்பினால் அவருக்கு மட்டும் அனுப்பப்படும்.
    படத்தை வெளியிட்ட ஐயாவுக்கு நன்றி. வளைந்து போஸ் கொடுத்த பெண்ணுக்கும், படம் எடுத்தவருக்கும் டபுள் நன்றி./////

    ஏன் அவர் மட்டும் தான் படிக்க வேண்டுமா? பொதுவில் வைக்க முடியாத அளவிற்கு மோசமென்றால் எங்களுக்கு வேண்டாம் சாமி! இங்கே பல தாய்க்குலங்கள் வந்துபோவதால் கண்ணியத்தைக் கடைப் பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது சாமி! இதை நீங்கள் இங்கே சொல்லாமல் அவருக்கு மின்ன்ஞ்சலில் அனுப்பிவிட்டு சும்மா இருந்திருக்கலாம்!

    ReplyDelete
  36. ///// Uma said...
    பரணி நட்சத்திரக்கோயில் பற்றிய தகவல்கள் அருமை. எனக்கு ஒவ்வொருமுறை படிக்கும்போதும் ஏற்படும் சந்தேகத்தை இப்போது கேட்டுவிடுகிறேன். இதுவரை பதிவிட்ட / பதிவிடப்போகும் கோயில்களுக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்களா அல்லது கேட்ட, படித்த தகவல்களை மட்டுமே வைத்து எழுதுகிறீர்களா? படிக்கும்போது நீங்கள் நேரில் பார்த்து எழுதுவது போலவே இருக்கிறது, அதனால்தான் கேட்டேன்.
    அந்த அக்னியில் இறைவனுக்கு நாமிடும் பொருட்களை அது அவரிடம் கொண்டு சேர்க்கிறது//
    இதைக்கேள்விப்பட்டிருக்கிறேன். இறந்தவர்களுக்குத் திதி கொடுக்கும்போதும் மந்திரங்கள் சொல்லி இவ்வாறே பொருட்களை நெருப்பிலிடுவர்./////

    ஆமாம். எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

    ReplyDelete
  37. //// Uma said...
    கிருஷ்ணன் சார் உங்கள் லிஸ்டில் இரண்டு முறை கஸ்யப / காஸ்யப என்று வருகிறதே, இருவர் இதே பெயரில் இருந்தார்களா? கௌண்டின்ய மகரிஷியின் பெயர் இதில் இடம்பெறவில்லை./////

    அவரே சோர்ஸ் சொல்லியிருக்கிறார். வராததற்கு காரணம் ஒரிஜினல் பதிவாளரைத்தான் கேட்க வேண்டும் உமா அக்கா!

    ReplyDelete
  38. ///// Uma said...
    ஒப்பிலியப்பனுக்குப் பெண்கொடுத்து விஷ்ணுவுக்கு மாமனார் ஆனார்.//
    கூடவே தன் பெண்ணிற்கு உப்பு போட்டு சமைக்கத்தெரியாது என்று குண்டையும் தூக்கிப்போட்டார்./////

    தில்லியில் இருப்பதால் உங்களுக்கு குண்டு எல்லாம் பழகிவிட்டது - இல்லையா உமாஜி?

    ReplyDelete
  39. /// kmr.krishnan said...
    பின்னால் வரும் மஹரிஷிகள் எல்லோருமே முன்னால் இருக்கும் மஹரிஷிகளின் பிள்ளைகள் அல்லது பேரன்களே. எனவே காஸ்யபர் 1 , காஸ்யபர் 2 என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்./////

    வைத்துக்கொள்வோம். அதில் தவறு கண்டுபிடிக்க யார் உள்ளார்கள்?

    ReplyDelete
  40. //// kmr.krishnan said...
    உமாஜி கெளண்டிய கோத்திரமோ? அதுதான் அக்கரையாக அவரைப்பற்றிய விசாரணையோ?
    அந்தப் பட்டியல் ஒன்றும் முடிந்த முடிவல்ல. ஏதோ ஒரு வகையான பட்டியல் என்று கொள்ளலாம்.கெளண்டின்யரையும் சேர்த்துவிடலாம்.ஆட்சேபம் ஒன்றும் இல்லை. ரமண மஹரிஷியையும், வேதாத்ரி மஹரிஷியையும் சேர்த்தாலும் ஒன்றும் தப்பில்லை. யார் நம்மை கேட்கப் போகிறார்கள்?
    ம்ருகண்டு பின்னாலும் மார்கண்டேயர் முன்னாலும் வருகிறார்கள். அப்படிப் பார்த்தால் யார் யாருக்குப் பிள்ளை?
    எல்லாம் ஒரு 'இது'தான்////

    நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக்கூடாது - உங்களுக்குத் தெரியாதா?

    ReplyDelete
  41. //// Parvathy Ramachandran said...
    திரு.கே.எம்.ஆர் அவர்களின் பின்னூட்டங்கள் மூலம் நிறைய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி. உமாஜி, அவர் உப்புபோட்டு சமைக்கத் தெரியாதுன்னு குண்டு போடல, ஸ்தல புராணத்தின் படி, மார்க்கண்டேயரின் மகள் ஐந்து வயதுக் குழந்தையாக இருக்கும் போது, வயதானவர் வேடத்தில் வந்த திருமால், அவளை மணம் செய்து கொடுக்கக் கேட்க, 'அவள் சிறுமி,சமையலில் எதெதற்கு எவ்வளவு உப்பு போடவேண்டும் என்பதே தெரியாது' என,திருமால் தன் சுய உருவில் தோன்றி , அக்குழந்தையே பூதேவி என்று கூறி, அவள் உப்பே போடாமல் சமைத்தாலும் தான் ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தார் (அதாவது, அவரே வார்த்தை விட்டு மாட்டிக்கிட்டார்).////

    மனிதர்களுக்குத்தான் அறுசுவை எல்லாம். இறைவனுக்கு ஏது அதெல்லாம்?

    ReplyDelete
  42. //// V Dhakshanamoorthy said...
    //////படங்கள் நன்றாக உள்ளது--
    நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 16
    பரணி நட்சத்திர கோவில்///////
    ஸ்தல வரலாறு,சென்று தரிசிப்பதற்கு
    ஏற்ப முகவரி யாவும் வழக்கம்போல்
    சிறப்பாக கொடுத்துள்ளீர்கள்.
    நன்றி!!////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  43. // kmr.krishnan said...
    பின்னால் வரும் மஹரிஷிகள் எல்லோருமே முன்னால் இருக்கும் மஹரிஷிகளின் பிள்ளைகள் அல்லது பேரன்களே. எனவே காஸ்யபர் 1 , காஸ்யபர் 2 என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.//

    கச்யபர் 1 : இவர் மரீசி முனிவரின் புதல்வர். பிரஜாபதிகளுள் ஒருவர்.கத்ரு,விநதை,அதிதி,திதி,முதலிய ஏழு மனைவிகளின் மூலம் உலகத்தில் பலவகை உயிரினங்களும் உற்பத்தியாக காரணமாக இருந்தார்.

    காஸ்யபர் 2: இவர் மேதாதிதி முனிவரின் புதல்வர். சிருஷ்டி ஏற்பட்டதே கச்யப பிரஜாபதி மூலமாக என்பதால் இவர் கச்யப மஹரிஷியின் வம்சத்தில் வந்தவராகக் கருதப் படுகிறார்.

    ReplyDelete
  44. அக்னீஸ்வரர் எனும் பெயரில் பல சிவாலயங்களில் இறைவன் எழுந்தருளியிருக்கிறார். திருக்காட்டுப் பள்ளித் தலத்திலும் இறைவனின் திருநாமம் அக்னீஸ்வரர் தான். அக்னி என்பது ரிக் வேத காலத்திலிருந்து மனிதனுக்கும் தேவர்களுக்கும் பாலமாக அமைந்தது. அதனால்தான் நாம் அகினியில் ஹோம திரவியங்களை இட்டு அந்தந்த தேவதைக்கு உரிமையாக்குகிறோம். ஹோமத்தில் மிஞ்சும் அனைத்து திரவியங்களையும் ஒருசேர இட்டு பூரணாஹூதி செய்கிறோம். அகினிதான் இந்துக்களின் பிரதான தேவதை. அந்த அக்னியின் பெயரால் விளங்கும் அனைத்து ஈஸ்வர மூர்த்திகளும் பழமையும், பெருமையும் கொண்டவை. நல்ல கட்டுரை, நல்ல விரிவான பின்னூட்டங்கள்.

    ReplyDelete
  45. உமாஜி கெளண்டிய கோத்திரமோ? அதுதான் அக்கரையாக அவரைப்பற்றிய விசாரணையோ?//

    ஹி ஹி ஆமாம், பிறந்த வீட்டில் அந்த கோத்திரம்தான், இல்லேன்னா இவ்வளவு ஷார்ப்பா எங்க கண்டுபிடிக்கப்போறோம்?

    ReplyDelete
  46. அடியேனுடைய குரு சொல்லியபடி
    மிருகண்ட மகரிஷி பிரம்ம லோகத்தில் மிருக படைப்பினை இறை ஆணையாக
    செய்பவர். இந்த நிகழ்வினால் தான் மிருகம் என்ற பெயர் ஜீவராசிகளுக்கு
    தோன்றியது.

    மேலும் ஒவ்வொரு மகரிஷி பெயரும் சித்தர் பெயரை போல் காரண பெயர்களே. அவர்களின் பெயருக்கு பின்னே பல(த்த) ஆன்மீக காரணங்களும், விளங்கங்களும்
    பொதிந்து உள்ளன. தக்க சற்குருவை நாடினால் இதற்கான விளக்கங்களை
    தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

    உதாரணத்திற்கு சம்வத்சர மகரிஷி அளித்தது தான் நாம் பூஜா/ஹோம/யக்ன சங்கல்பத்தின் பொழுது கூறும் சம்வத்சரே (வருடத்தின் பெயர் - கர நாம சம்வத்சரே).

    உத்தர கண்ட மகரிஷி அளித்தது தான் உத்தராயண காலம் (வருடத்தின் முதல் ஆறு மாதம்)

    இறை பின்புலமும், அருளும் மிக்க இந்த மகரிஷிகளின் பெயர்களை கலியுகத்தில் கூறுவதே
    நாம் முற்பிறவியில் செய்த பாக்கியம் ஆகும். இவர்கள் உலகிற்கும், ஜீவராசிகளுக்கும் ஆற்றிய தன்னலமில்லா சேவை அளவிட முடியாதது. நம்மால் முடிந்த அளவிற்கு நன்றிகடனாக ரிஷி அர்க்யம் சந்தர்ப்பம் கிடைக்கும் போது கண்டிப்பாக செய்ய வேண்டும்.

    ReplyDelete
  47. நன்றி ஓம் தத் சத் அவர்களே.

    நவீன அறிவியலில் கூட சில தத்துவங்களுக்கு அதனைக் கண்டு பிடித்தவருடைய பெயரை வைப்பது வழக்கமாக உள்ளது.அது போல ரிஷிகளின் நாமங்கள் அவர்களின் நற்செயலுடன் தொடர்புடையதாக உள்ளது என்பது சரியே! சங்கப்பாடல்களிலும் புலவர்களுக்குக் காரணப்பெயர்கள் உள்ளன.

    தாங்கள் நிறைய விவரம் தெரிந்தவர் என்று வெளிப்படுகிறது. தாங்களும் இங்கே கட்டுரைகள் அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

    ReplyDelete
  48. //// Parvathy Ramachandran said...
    // kmr.krishnan said...
    பின்னால் வரும் மஹரிஷிகள் எல்லோருமே முன்னால் இருக்கும் மஹரிஷிகளின் பிள்ளைகள் அல்லது பேரன்களே. எனவே காஸ்யபர் 1 , காஸ்யபர் 2 என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.//
    கச்யபர் 1 : இவர் மரீசி முனிவரின் புதல்வர். பிரஜாபதிகளுள் ஒருவர்.கத்ரு,விநதை,அதிதி,திதி,முதலிய ஏழு மனைவிகளின் மூலம் உலகத்தில் பலவகை உயிரினங்களும் உற்பத்தியாக காரணமாக இருந்தார்.
    காஸ்யபர் 2: இவர் மேதாதிதி முனிவரின் புதல்வர். சிருஷ்டி ஏற்பட்டதே கச்யப பிரஜாபதி மூலமாக என்பதால் இவர் கச்யப மஹரிஷியின் வம்சத்தில் வந்தவராகக் கருதப் படுகிறார்.////

    உங்களின் விளக்கங்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  49. //// Thanjavooraan said...
    அக்னீஸ்வரர் எனும் பெயரில் பல சிவாலயங்களில் இறைவன் எழுந்தருளியிருக்கிறார். திருக்காட்டுப் பள்ளித் தலத்திலும் இறைவனின் திருநாமம் அக்னீஸ்வரர் தான். அக்னி என்பது ரிக் வேத காலத்திலிருந்து மனிதனுக்கும் தேவர்களுக்கும் பாலமாக அமைந்தது. அதனால்தான் நாம் அகினியில் ஹோம திரவியங்களை இட்டு அந்தந்த தேவதைக்கு உரிமையாக்குகிறோம். ஹோமத்தில் மிஞ்சும் அனைத்து திரவியங்களையும் ஒருசேர இட்டு பூரணாஹூதி செய்கிறோம். அகினிதான் இந்துக்களின் பிரதான தேவதை. அந்த அக்னியின் பெயரால் விளங்கும் அனைத்து ஈஸ்வர மூர்த்திகளும் பழமையும், பெருமையும் கொண்டவை. நல்ல கட்டுரை, நல்ல விரிவான பின்னூட்டங்கள்./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  50. //// Uma said...
    உமாஜி கெளண்டிய கோத்திரமோ? அதுதான் அக்கரையாக அவரைப்பற்றிய விசாரணையோ?//
    ஹி ஹி ஆமாம், பிறந்த வீட்டில் அந்த கோத்திரம்தான், இல்லேன்னா இவ்வளவு ஷார்ப்பா எங்க கண்டுபிடிக்கப்போறோம்?/////

    ஆராய்ச்சிக்கு உரிய மேட்டர்தான்!

    ReplyDelete
  51. //// ஓம் தத் சத் said...
    அடியேனுடைய குரு சொல்லியபடி
    மிருகண்ட மகரிஷி பிரம்ம லோகத்தில் மிருக படைப்பினை இறை ஆணையாக
    செய்பவர். இந்த நிகழ்வினால் தான் மிருகம் என்ற பெயர் ஜீவராசிகளுக்கு
    தோன்றியது.
    மேலும் ஒவ்வொரு மகரிஷி பெயரும் சித்தர் பெயரை போல் காரண பெயர்களே. அவர்களின் பெயருக்கு பின்னே பல(த்த) ஆன்மீக காரணங்களும், விளங்கங்களும் பொதிந்து உள்ளன. தக்க சற்குருவை நாடினால் இதற்கான விளக்கங்களை
    தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
    உதாரணத்திற்கு சம்வத்சர மகரிஷி அளித்தது தான் நாம் பூஜா/ஹோம/யக்ன சங்கல்பத்தின் பொழுது கூறும் சம்வத்சரே (வருடத்தின் பெயர் - கர நாம சம்வத்சரே).
    உத்தர கண்ட மகரிஷி அளித்தது தான் உத்தராயண காலம் (வருடத்தின் முதல் ஆறு மாதம்)
    இறை பின்புலமும், அருளும் மிக்க இந்த மகரிஷிகளின் பெயர்களை கலியுகத்தில் கூறுவதே
    நாம் முற்பிறவியில் செய்த பாக்கியம் ஆகும். இவர்கள் உலகிற்கும், ஜீவராசிகளுக்கும் ஆற்றிய தன்னலமில்லா சேவை அளவிட முடியாதது. நம்மால் முடிந்த அளவிற்கு நன்றிகடனாக ரிஷி அர்க்யம் சந்தர்ப்பம் கிடைக்கும் போது கண்டிப்பாக செய்ய வேண்டும்.////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சுவாமி!

    ReplyDelete
  52. அன்புள்ள வாத்தியார் ஐய்யா
    நான் புதிதாக வகுப்பறையில் சேர்ந்துள்ளேன்.வரிசையாக பாடங்களை படிக்க என்ன செய்ய வேண்டும்.
    விஸ்வேஸ்வரன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com