மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.3.12

Astrology பொன் காய்க்கும் மரம்!

Astrology பொன் காய்க்கும் மரம்!

பொன்காய்க்கும் மரமா? என்னய்யா சொல்கிறீர்கள் என்று அவசரப்படுபவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் பதிவில் உள்ள செய்திகளைப் பொறுமையாகப் படிக்கவும். படித்து முடித்துவிட்டு ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம். புராணங்களை நம்ப வேண்டும். அவ்வளவுதான்! கேள்வி கேட்க ஆரம்பித்தால் எல்லாப் புராணங்களுமே செல்லாமல் போய்விடும்; சொல்லாமல் போய்விடும்!

நம்பிக்கையின் அடிப்படையில்தான் எல்லாமும் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன!

இரவு படுக்கின்றோம். காலையில் எழுவோம் என்ற நம்பிக்கையில்தான் படுக்கிறோம். எழுவோம் என்பதற்கு என்ன உத்திரவாதம் (guaranty) இருக்கிறது?
ஆம்னி பஸ்ஸில் பயணிக்கிறோம். முன்பின் தெரியாத ஓட்டுனர். பயணிக்கின்ற ஊருக்குப் போய்ச் சேருவோம் என்ற நம்பிக்கையில்தான் பயணிக்கிறோம். அதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? அந்த உத்திரவாதத்தை யார் உங்களுக்குக் கொடுக்க முடியும்?

ஏழு நாளில் சிவப்பழகு என்கிறான். நம்பிக்கையோடு பணம் கொடுத்து, கண்ட க்ரீமை எல்லாம் வாங்கிப் பூசிக்கொள்கிறோம். மேனி சிவப்பாக
மாறியிருக்கிறதா? நம்பிக்கையை விடாமல் மேலும் மேலும் பூசுகிறோம். அந்த நம்பிக்கையில் ஒரு பகுதியையாவது புராணங்களின் மேல் வையுங்கள்!

பல விஷயங்கள் நம்பிக்கையில் அடிப்படையில்தான் நடந்து கொண்டிடருக்கின்றன!
----------------------------------------------------
சோழ மன்னன் ஒருவனுக்கு திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை இல்லை. சிவபக்தனான அவன், தனக்கு பின் சிவசேவை செய்ய ஆளில்லை என்பதை நினைத்து வருந்தினான், அகத்திய முனிவரைச் சந்தித்துத் தன் மனக்குறையைச் சொல்லி அழுதான். திருவரங்குளம் சென்று, அங்கிருக்கும் சிவலிங்கத்தை வணங்கும்படி அவர் கூறி, அவனை அனுப்பி வைத்தார்.

மன்னனும் அத்தலம் சென்று சிவலிங்கத்தைத் தேடி அலைந்தான். அப்பகுதியில்தான் இருக்கும் இடத்தை அரசனுக்கு உணர்த்த, சிவபெருமான் திருவுளம் கொண்டார். அப்போது அப்பகுதியில் பசு மேய்க்கும் இடையர்கள் மூலம் ஒரு தகவலை மன்னன் அறிந்தான். அப்பகுதி வழியாக யாராவது பூஜைப் பொருள்களைக் கொண்டு வந்தால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தவறி விழுவதாக அவர்கள் கூறினார்கள். மன்னன் அந்த இடத்திற்குச் சென்று பூமியில் தோண்டிப் பார்த்தான். அப்போது பூமியிலிருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது. அவ்விடத்தில் ஒரு லிங்கமும் தென்பட்டது. சிவனின் தலையில் கீறிவிட்டோமோ என வருத்தப்பட்ட மன்னன், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றான். இறைவன் மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதியுடன் திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்து மன்னனுக்கு அருள் புரிந்தார். அந்த இடத்தில் அந்த மன்னன் எழுப்பிய கோயில்தான்  அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்.

ஒரு பூர நட்சத்திர நன்நாளில்தான் அந்த நிகழ்ச்சி நடந்ததாம். அதனால் அது பூர நட்சத்திரக் கோவிலாகக் கொண்டாடப்படுகிறது.

இறைவனின் அருளால் கோயிலைக் கட்டிய மன்னனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்து அவனை மகிழ்வித்தது.

பூரதீர்த்தம் என்பது அக்னிலோகத்தில் (அடடா, அப்படி ஒரு உலகம் உள்ளதா?) உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக
தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்கள் உள்ளதாம். (அங்கே தண்ணீர்ப்
பிரச்சினையே இருக்காது போல் உள்ளது)

அந்த ஏழு தீர்த்தங்களும் இத்தலத்தில் இருப்பதால் இது பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும். பூரம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்தநாள், மாதாந்திர நட்சத்திர நாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இங்கு சென்று வழிபட்டு
நன்மையடையலாம்!

கோவிலின் வெளிப் பிரகாரத்தில் பொற்பனை மரம் ஒன்று அக்காலத்தில் இருந்ததாம். அதிலிருந்து காய்த்த பொற்பழங்கள் மூலம் பணம் பெற்று  இக்கோவில் கட்டப்பெற்றதாகக் கூறப்படுகிறது.

(அப்படியொரு மரம் நம் வீடுகளிலும் இருந்தால் எப்படி இருக்கும்? ரோல்ஸ் ராய்ஸ் கார்தான். பெட்ரோல்? வீட்டிலே பங்க் ஒன்றை வைத்துக்கொண்டு
விடமாட்டோமா?)

ஆனால் தற்போது அந்த இடத்தில் அதன் அடையாளமாக கல் ஸ்தூபி ஒன்று மட்டும் உள்ளது. பதினோராம் நூற்றாண்டில் சோழர்களும், பாண்டியர்களும்
போட்டிபோட்டுக் கொண்டு செய்த திருப்பணியில் உருவான கோயிலாம் இது. இத்தல தீர்த்தம் சிவனது தலையில் இருந்து உருவானதால் ஹரதீர்த்தம் என
அழைக்கப்படுகிறதாம். இத்தலத்தின் பெயரும் திருவரங்குளம் ஆனதாம்!
------------------------------------------
நட்சத்திரக்கோவில் பகுதி - 17
பூர நட்சத்திரத்திற்கான கோவில்
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
-----------------------------------------
இறைவனின் பெயர்: ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் (திருவரங்குளநாதர்)
அம்பிகையின் பெயர்:  பிரஹன்நாயகி (பெரியநாயகி)
தல விருட்சம: மகிழமரம்
தீர்த்தம்: ஹர தீர்த்தம்
கோவில் இருக்கும் இடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7ஆவது கிலோ மீட்டரில் திருவரங்குள நாதர் கோவில் உள்ளது.
கோவிலின் நடை திரந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12 மணிவரை. மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை.
திருவிழாக்கள்: ஆடிப்பூரம் அம்மன் திருக்கல்யாணம், மகா சிவராத்திரி, திருவாதிரை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் ஆகிய நன்நாட்கள்
சிறப்பு: இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.

முகவரி:
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
திருவரங்குளம்- 622 303
புதுக்கோட்டை மாவட்டம்.
 
சிவனது மூல ஸ்தானத்திற்கு பின்புறம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரின் தனி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் பொற்பனை விநாயகர், அரங்குள விநாயகர், வீணாதர தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி, சதுர்த்தி விநாயகர், சப்த மாதர்கள், 63 நாயன்மார்கள்,  ஐயனார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சரஸ்வதி, மகாலட்சுமி, ஜேஷ்டா தேவி, பாலமுருகன், நவகிரகம், பைரவர், சூரியன், சந்திரன், நடராஜர், நால்வர் சன்னதிகளும் உள்ளன.
 
பூரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் ஜாதக தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், கிரக தோஷம், நாகதோஷம், மன நோயால் பாதிக்கப் பட்டவர் போன்றோர்கள் இக்கோவிலில் உறையும் அம்பிகையை வழிபடுவது ந்ன்மை பயக்கும்

சென்று வாருங்கள். வந்தபின் கிடைக்கும் நன்மைகளைப் பாருங்கள்!

அன்புடன் 
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

30 comments:

  1. சார் வணக்கம்,
    பாப் இசை மனனன் மைக்கல் ஜாதகம் அலசுங்க சார் வாரம் ஒரு அலசல் பாடம் சொல்லிதங்க சார். நேரமிருந்தால் மட்டும்/முடிந்தால் மட்டும் தொந்தரவுக்கு மன்னிக்கவும். இன்றைய பாடம் நன்றாகயிருந்தது.

    ReplyDelete
  2. ////பொன் காய்க்கும் மரம் ////
    பூர நட்சத்திரத்திர்க்கான
    அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
    தரிசிப்பதற்காக அளிக்கப் பட்டுள்ள விபரங்கள்,
    ஸ்தல வரலாறு , முகவரி,திறந்திருக்கும் நேரம்
    போன்றவைகள் மிகுந்த உபயோகமானவைகளாகும்.
    நன்றி!!

    ReplyDelete
  3. ஆம் நம்பிக்கையின் அடிப்படையில்தான் எல்லாமும் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன .

    காற்று இருப்பதாக நம்பித்தான் மூச்சை இழுக்கிறோம்
    மூச்சு இருக்கும் என்று நம்பித்தான் பாரம் சுமக்கிறோம்

    நம்பிக்கையை
    மனதிலும் செயலிலும் சேர்த்ததால்தான் புத்தன் இயேசு காந்தி மறைந்தும் மறையாமல் இருக்கிறார்கள்

    ReplyDelete
  4. /////கோவிலின் வெளிப் பிரகாரத்தில் பொற்பனை மரம் ஒன்று அக்காலத்தில் இருந்ததாம். அதிலிருந்து காய்த்த பொற்பழங்கள் மூலம் பணம் பெற்று இக்கோவில் கட்டப்பெற்றதாகக் கூறப்படுகிறது.////

    புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி என்னும் ஊருக்கு முன்பு காட்டில் ஒரு பெரிய கோட்டையின் மதில் சுவர் ஒன்று நீண்டு இடிந்து நிற்கிறது...
    அதனருகே இரண்டு கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இரண்டு கோவில்கள் (முனீஸ்வரர் கோவில், கீழக்கோட்டை, மேலக் கோட்டை எனப்படுகிறது) உள்ளன.. அவைகளை பொற்பனையான் கோவில் என்கிறார்கள்,
    புதுக்கோட்டையில் அக்கோயிலுக்கு செல்பவர்கள் பூக்கடையில் சொன்னால் போதும் பத்தடி உயர மாலையை தயாரித்துக் கொடுத்தும் விலையை எமாற்றாமலும் சரியாக பெற்றுக் கொள்வார்கள். அந்த தெய்வம் முனீஸ்வரன் என்பதும் அது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் கருதப் படுகிறது. தவறுதலாக ஏமாற்றுபவர்களை இரவில் கனவில் வந்து மிரட்டுவதாக சொல்வார்கள்.

    அவ்விரு கோவில்களுக்கும் இடையில் சிறு சிறு கோவில்கள் இருக்கின்றன அதிலே ஒரு காளியின் கோவிலும் அடக்கம் அந்த அம்பாளைப் பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு... அங்கே இருப்பது ஒருப் பெரிய பாலை மரம் (தல விருட்ச்சமாக இருக்கலாம்). முழுவதுமே காட்டுப் பகுதிதான் சக்தியுள்ள தெய்வம் திருவரங்குளம் செல்பவர்கள் அங்கும் சென்று வரலாம். காளியை தர்ஷிப்பதற்காவது சென்று வரலாம்.

    பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான ஆற்றுப் படுத்துதல்...
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  5. பதிவுக்கு சம்பந்தமில்லாத செய்தி...ஏழு நாளில் சிவப்பழகு பெற, தோல் நிறம் வெளுக்க உபயோகப்படுத்தும் களிம்பு வகைகளில் பாதரசம் அதிகமுள்ளதால் அவை சிறுநீரகத்தைப் பாதிக்கச் செய்யும். எது முக்கியம் உடல் நலமா? தோல் நிறமா? என்பதை கவனத்தில் கொண்டால் நல்லது. மேலதிகத் தகவல்களுக்கு இந்த சுட்டிகளைப் பார்க்கவும்.
    http://www.bvonbeauty.com/2010/05/21/skin-lighteners-pulled-from-shelves/
    http://www.chicagotribune.com/health/ct-met-mercury-skin-creams-20100518,0,4522094.story?page=1

    நட்சத்திரக் கோயிலாக வந்திருப்பது மற்றுமொரு சிவன் கோயில்.... பேசாமல் சிவனை மட்டும் கும்பிட்டுவிட்டு சிவனே என்று இருக்கலாம் போலிருக்கிறது.
    எங்கேயோ கேள்விப் பட்ட செய்தி இது... கோயிலுக்கும் சாமிக்கும் பெயர் தமிழ்ப்பெயராக இருந்தால் ஊர் பெயர் சமஸ்கிரதத்திலும், சாமிக்கு வடமொழி பெயர் என்றால் ஊரின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராகவும் இருக்குமாம்.

    நல்ல பதிவு, தகவல்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  6. திருவரங்குளத்தின் பெருமையைத் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. புதுக்கோட்டையிலிருந்து சில கல் தூரத்திலுள்ள ஆலங்குடி அருகில் அமைந்த சிற்றூர் இது. அருங்குளநாதர் என்பது ஈஸ்வரனின் திருநாமம் என்பதாக நினைக்கறேன். திருக்கோயில்கள் வரலாற்றினைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டுகிறேன். நட்சத்திரக் கோயில்கள் எனும் வரிசையில் இதுவரை நூலெதுவும் வந்ததாகத் தெரியவில்லை. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    .

    ReplyDelete
  7. "வாசி தீரவே காசு நல்குவீர்" என்று பாடி இறைவனையே ஓர் பொன்மயமான மரமாக மாற்றும் வல்லமை அடியார்களுக்கு உண்டு.எனவே பொன்ன்னளிக்கும் மரம் ஒன்றும் ஆச்சரியமில்லை.

    பூரம் நடசத்திரக் கோவில் தகவ‌ல் நல்ல உபயோகம்.நன்றி ஐயா!

    ReplyDelete
  8. //@தஞ்சாவூரான் அவர்கள்,

    நட்சத்திரக் கோயில்கள் எனும் வரிசையில் இதுவரை நூலெதுவும் வந்ததாகத் தெரியவில்லை.//

    விகடன் பிரசுரம் மற்றும் நர்மதா பதிப்பகம் நட்சத்திர பரிகாரங்கள் என்ற தலைப்பில் பிரசுரித்து உள்ளார்கள் என்று நினைக்கிறேன். ஜோதிடர் வித்யாதரன் (சரியான பெயர் தெரியவில்லை ஆனால் பிரபலமானவர். அடிக்கடி விகடன் மற்றும் தமிழ் பேப்பர்களில் எழுது வருபவர்) அவர்கள் எழுதியது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. நட்சத்திரக்கோயில் வரிசையில் இன்று என் பையனின் நட்சத்திரம், பதிவிற்கு நன்றி!

    ஏழு நாளில் சிவப்பழகு என்கிறான். நம்பிக்கையோடு பணம் கொடுத்து, கண்ட க்ரீமை எல்லாம் வாங்கிப் பூசிக்கொள்கிறோம். மேனி சிவப்பாக
    மாறியிருக்கிறதா? நம்பிக்கையை விடாமல் மேலும் மேலும் பூசுகிறோம். அந்த நம்பிக்கையில் ஒரு பகுதியையாவது புராணங்களின் மேல் வையுங்கள்!//

    அசத்தல்!

    ReplyDelete
  10. sriganeshh said...

    //விகடன் பிரசுரம் மற்றும் நர்மதா பதிப்பகம் நட்சத்திர பரிகாரங்கள் என்ற தலைப்பில் பிரசுரித்து உள்ளார்கள் என்று நினைக்கிறேன். ஜோதிடர் வித்யாதரன் (சரியான பெயர் தெரியவில்லை ஆனால் பிரபலமானவர். அடிக்கடி விகடன் மற்றும் தமிழ் பேப்பர்களில் எழுது வருபவர்) அவர்கள் எழுதியது என்று நினைக்கிறேன்.//

    அவர் ஜோதிட முனைவர் kp.வித்தியாதரன் தான்.webdunia tamil.com and link with "yahoo tamil,google tamil" ஆகியவற்றில் தொழில் முறை ஜோதிடராக உள்ளார்.

    ReplyDelete
  11. On the way from Pudukootai to virachilai,there is small village named Perungudi..the amman name Sri vendi vantha amman.very supreme god.very calm village.this is information.

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா,
    என் சகோதரரின் நட்சத்திரம் இன்று...நிச்சயம் இக்கோவிலுக்கு சென்று வர வேண்டும்.சிறுவயதில் என் பாட்டி கூறி மறந்து விட்ட புராணக் கதை இன்று மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்,ஐயா...நன்றி ஐயா...

    //பதினோராம் நூற்றாண்டில் சோழர்களும், பாண்டியர்களும்
    போட்டிபோட்டுக் கொண்டு செய்த திருப்பணியில் உருவான கோயிலாம் இது. இத்தல தீர்த்தம் சிவனது தலையில் இருந்து உருவானதால் ஹரதீர்த்தம் என
    அழைக்கப்படுகிறதாம்//

    இது தான் சாதாரண மனிதர்களுக்கும் சமயம் வளர்த்த மன்னர்களுக்கும் உள்ள வித்தியாசம் போலும்...நாம் கோவிலில் பிரசாதம் வாங்குவதிலும்,பணம்,சொத்துக்கள் சேர்ப்பதில் மட்டும் தான் போட்டி போடுகின்றோம்... நல்ல தகவல் பகிர்விற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  13. //sundari said...
    சார் வணக்கம்,
    பாப் இசை மனனன் மைக்கல் ஜாதகம் அலசுங்க சார் வாரம் ஒரு அலசல் பாடம் சொல்லிதங்க சார். நேரமிருந்தால் மட்டும்/முடிந்தால் மட்டும் தொந்தரவுக்கு மன்னிக்கவும். இன்றைய பாடம் நன்றாகயிருந்தது.//

    ஆஹா...இக்கோரிக்கையை நானும் முன்பு ஐயாவிட‌ம் கேட்டிருந்தேன்,இன்று நீங்க‌ளும் சேர்ந்து கொண்டீர்க‌ள்...நானும் உங்க‌ளுட‌ன் சேர்ந்து அலசலுக்காக காத்திருப்பேன்...

    ReplyDelete
  14. ////Blogger sundari said...
    சார் வணக்கம்,
    பாப் இசை மனனன் மைக்கல் ஜாதகம் அலசுங்க சார் வாரம் ஒரு அலசல் பாடம் சொல்லிதங்க சார். நேரமிருந்தால் மட்டும்/முடிந்தால் மட்டும் தொந்தரவுக்கு மன்னிக்கவும். இன்றைய பாடம் நன்றாகயிருந்தது.////

    உங்களுக்காக பயிற்சிப் பாடம் ஒன்றை இன்று வலை ஏற்றியுள்ளேன் சகோதரி!

    ReplyDelete
  15. ////Blogger V Dhakshanamoorthy said...
    ////பொன் காய்க்கும் மரம் ////
    பூர நட்சத்திரத்திர்க்கான
    அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
    தரிசிப்பதற்காக அளிக்கப் பட்டுள்ள விபரங்கள்,
    ஸ்தல வரலாறு , முகவரி,திறந்திருக்கும் நேரம்
    போன்றவைகள் மிகுந்த உபயோகமானவைகளாகும்.
    நன்றி!!////

    உங்களுக்கு உபயோகப்படாதது எது? அத்தனை நல்லவர் நீங்கள்!

    ReplyDelete
  16. ////Blogger thanusu said...
    ஆம் நம்பிக்கையின் அடிப்படையில்தான் எல்லாமும் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன .
    காற்று இருப்பதாக நம்பித்தான் மூச்சை இழுக்கிறோம்
    மூச்சு இருக்கும் என்று நம்பித்தான் பாரம் சுமக்கிறோம்
    நம்பிக்கையை
    மனதிலும் செயலிலும் சேர்த்ததால்தான் புத்தன் இயேசு காந்தி மறைந்தும் மறையாமல் இருக்கிறார்கள்/////

    ஆமாம் (உங்களைப் போன்ற சிலரிடம்) இருக்கிறார்கள்:-))))

    ReplyDelete
  17. ////Blogger தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    /////கோவிலின் வெளிப் பிரகாரத்தில் பொற்பனை மரம் ஒன்று அக்காலத்தில் இருந்ததாம். அதிலிருந்து காய்த்த பொற்பழங்கள் மூலம் பணம் பெற்று இக்கோவில் கட்டப்பெற்றதாகக் கூறப்படுகிறது.////
    புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி என்னும் ஊருக்கு முன்பு காட்டில் ஒரு பெரிய கோட்டையின் மதில் சுவர் ஒன்று நீண்டு இடிந்து நிற்கிறது...
    அதனருகே இரண்டு கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இரண்டு கோவில்கள் (முனீஸ்வரர் கோவில், கீழக்கோட்டை, மேலக் கோட்டை எனப்படுகிறது) உள்ளன.. அவைகளை பொற்பனையான் கோவில் என்கிறார்கள்,
    புதுக்கோட்டையில் அக்கோயிலுக்கு செல்பவர்கள் பூக்கடையில் சொன்னால் போதும் பத்தடி உயர மாலையை தயாரித்துக் கொடுத்தும் விலையை எமாற்றாமலும் சரியாக பெற்றுக் கொள்வார்கள். அந்த தெய்வம் முனீஸ்வரன் என்பதும் அது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் கருதப் படுகிறது. தவறுதலாக ஏமாற்றுபவர்களை இரவில் கனவில் வந்து மிரட்டுவதாக சொல்வார்கள்.
    அவ்விரு கோவில்களுக்கும் இடையில் சிறு சிறு கோவில்கள் இருக்கின்றன அதிலே ஒரு காளியின் கோவிலும் அடக்கம் அந்த அம்பாளைப் பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு... அங்கே இருப்பது ஒருப் பெரிய பாலை மரம் (தல விருட்ச்சமாக இருக்கலாம்). முழுவதுமே காட்டுப் பகுதிதான் சக்தியுள்ள தெய்வம் திருவரங்குளம் செல்பவர்கள் அங்கும் சென்று வரலாம். காளியை தர்ஷிப்பதற்காவது சென்று வரலாம்.
    பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான ஆற்றுப் படுத்துதல்...
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!////

    நீங்கள் புதுக்கோட்டைக்காரர். அதனால் முழு விவரமும் தெரிந்துள்ளது. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஆலாசியம்.

    ReplyDelete
  18. ////Blogger தேமொழி said...
    பதிவுக்கு சம்பந்தமில்லாத செய்தி...ஏழு நாளில் சிவப்பழகு பெற, தோல் நிறம் வெளுக்க உபயோகப்படுத்தும் களிம்பு வகைகளில் பாதரசம் அதிகமுள்ளதால் அவை சிறுநீரகத்தைப் பாதிக்கச் செய்யும். எது முக்கியம் உடல் நலமா? தோல் நிறமா? என்பதை கவனத்தில் கொண்டால் நல்லது. மேலதிகத் தகவல்களுக்கு இந்த சுட்டிகளைப் பார்க்கவும்.
    http://www.bvonbeauty.com/2010/05/21/skin-lighteners-pulled-from-shelves/
    http://www.chicagotribune.com/health/ct-met-mercury-skin-creams-20100518,0,4522094.story?page=1
    நட்சத்திரக் கோயிலாக வந்திருப்பது மற்றுமொரு சிவன் கோயில்.... பேசாமல் சிவனை மட்டும் கும்பிட்டுவிட்டு சிவனே என்று இருக்கலாம் லிருக்கிறது.
    எங்கேயோ கேள்விப் பட்ட செய்தி இது... கோயிலுக்கும் சாமிக்கும் பெயர் தமிழ்ப்பெயராக இருந்தால் ஊர் பெயர் சமஸ்கிரதத்திலும், சாமிக்கு வடமொழி பெயர் என்றால் ஊரின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராகவும் இருக்குமாம்.
    நல்ல பதிவு, தகவல்களுக்கு நன்றி ஐயா.////

    ஆமாம். சிவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார். இருக்கும் இடத்திலேயே அவரைக் கும்பிட்டுவிட்டு சிவனே என்று இருக்கலாம்! அலைச்சல் இல்லை!

    ReplyDelete
  19. /////Blogger Thanjavooraan said...
    திருவரங்குளத்தின் பெருமையைத் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. புதுக்கோட்டையிலிருந்து சில கல் தூரத்திலுள்ள ஆலங்குடி அருகில் அமைந்த சிற்றூர் இது. அருங்குளநாதர் என்பது ஈஸ்வரனின் திருநாமம் என்பதாக நினைக்கறேன். திருக்கோயில்கள் வரலாற்றினைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டுகிறேன். நட்சத்திரக் கோயில்கள் எனும் வரிசையில் இதுவரை நூலெதுவும் வந்ததாகத் தெரியவில்லை. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்./////

    முன்பு பலர் எழுதியுள்ளார்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு பரணிதரன் என்பவர் தமிழகக் கோவில்களைப் பற்றிய விரிவான தொடர் ஒன்ரை விகடனில் எழுதினார். திருத்தலங்களைப் பற்றிய செய்திக் கட்டுரைகளுக்கு அவர்தான் முன்னோடி. பிறகு அவைகள் நூல் வடிவாகவும் வந்தன. எனது ஆக்கங்களும் பின்னால் புத்தக வடிவாக வரும். நன்றி கோபாலன் சார்.
    .

    ReplyDelete
  20. ////Blogger kmr.krishnan said...
    "வாசி தீரவே காசு நல்குவீர்" என்று பாடி இறைவனையே ஓர் பொன்மயமான மரமாக மாற்றும் வல்லமை அடியார்களுக்கு உண்டு.எனவே பொன்ன்னளிக்கும் மரம் ஒன்றும் ஆச்சரியமில்லை.
    பூரம் நடசத்திரக் கோவில் தகவ‌ல் நல்ல உபயோகம்.நன்றி ஐயா!////

    நீங்கள் சொல்லும் அடியார்கள் எல்லாம் அக்காலத்தில் இருந்திருக்கிறர்ர்கள். இப்போது இருப்பவர்கள் எல்லாம் தடியார்கள்தான்!:-))))

    ReplyDelete
  21. ////Blogger sriganeshh said...
    //@தஞ்சாவூரான் அவர்கள்,
    நட்சத்திரக் கோயில்கள் எனும் வரிசையில் இதுவரை நூலெதுவும் வந்ததாகத் தெரியவில்லை.//
    விகடன் பிரசுரம் மற்றும் நர்மதா பதிப்பகம் நட்சத்திர பரிகாரங்கள் என்ற தலைப்பில் பிரசுரித்து உள்ளார்கள் என்று நினைக்கிறேன். ஜோதிடர் வித்யாதரன் (சரியான பெயர் தெரியவில்லை ஆனால் பிரபலமானவர். அடிக்கடி விகடன் மற்றும் தமிழ் பேப்பர்களில் எழுது வருபவர்) அவர்கள் எழுதியது என்று நினைக்கிறேன்.////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. ///Blogger Uma said...
    நட்சத்திரக்கோயில் வரிசையில் இன்று என் பையனின் நட்சத்திரம், பதிவிற்கு நன்றி!
    ஏழு நாளில் சிவப்பழகு என்கிறான். நம்பிக்கையோடு பணம் கொடுத்து, கண்ட க்ரீமை எல்லாம் வாங்கிப் பூசிக்கொள்கிறோம். மேனி சிவப்பாக
    மாறியிருக்கிறதா? நம்பிக்கையை விடாமல் மேலும் மேலும் பூசுகிறோம். அந்த நம்பிக்கையில் ஒரு பகுதியையாவது புராணங்களின் மேல் வையுங்கள்!//
    அசத்தல்!////

    உங்களின் மனம் நெகிழ்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி உமாஜி!

    ReplyDelete
  23. ////Blogger Ananthamurugan said...
    sriganeshh said...
    //விகடன் பிரசுரம் மற்றும் நர்மதா பதிப்பகம் நட்சத்திர பரிகாரங்கள் என்ற தலைப்பில் பிரசுரித்து உள்ளார்கள் என்று நினைக்கிறேன். ஜோதிடர் வித்யாதரன் (சரியான பெயர் தெரியவில்லை ஆனால் பிரபலமானவர். அடிக்கடி விகடன் மற்றும் தமிழ் பேப்பர்களில் எழுது வருபவர்) அவர்கள் எழுதியது என்று நினைக்கிறேன்.//
    அவர் ஜோதிட முனைவர் kp.வித்தியாதரன் தான்.webdunia tamil.com and link with "yahoo tamil,google tamil" ஆகியவற்றில் தொழில் முறை ஜோதிடராக உள்ளார்.////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. ////Blogger Ananthamurugan said...
    On the way from Pudukootai to virachilai,there is small village named Perungudi..the amman name Sri vendi vantha amman.very supreme god.very calm village.this is information.////

    நல்லது. நன்றி அனந்தமுருகன்!

    ReplyDelete
  25. என் மனைவி பூர நட்சத்திரக்காரர்தான். அவருடைய பார்வைக்கு இந்த கட்டுரையை கொண்டு வந்திருக்கிறேன். பூர நட்சத்திரம் இறுதிக் கட்டம் இருக்கும் போது பிறந்தவர். சுக்கிர தசை 8 மாதங்களே நீடித்தது.

    என்னைப் பொறுத்தவரை கறுப்பும் ஓர் அழகுதான். சிவப்பு மட்டும்தான் அழகு என்பது போலித்தனமானது. சிவப்பழகு தங்கள் பொருட்களை விற்பதற்கு சில நிறுவனங்கள் மேற்கொள்ளும் வியாபார தந்திரம் அவ்வளவே.

    //அப்படியொரு மரம் நம் வீடுகளிலும் இருந்தால் எப்படி இருக்கும்? ரோல்ஸ் ராய்ஸ் கார்தான். பெட்ரோல்? வீட்டிலே பங்க் ஒன்றை வைத்துக்கொண்டு
    விடமாட்டோமா?//

    எல்லாம் செய்யலாம். Income Taxகாரர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று முன் கூட்டியே யோசித்து வைத்துக் கொள்வது நல்லது.

    ReplyDelete
  26. ////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    என் சகோதரரின் நட்சத்திரம் இன்று...நிச்சயம் இக்கோவிலுக்கு சென்று வர வேண்டும்.சிறுவயதில் என் பாட்டி கூறி மறந்து விட்ட புராணக் கதை இன்று மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்,ஐயா...நன்றி ஐயா...
    //பதினோராம் நூற்றாண்டில் சோழர்களும், பாண்டியர்களும்
    போட்டிபோட்டுக் கொண்டு செய்த திருப்பணியில் உருவான கோயிலாம் இது. இத்தல தீர்த்தம் சிவனது தலையில் இருந்து உருவானதால் ஹரதீர்த்தம் என
    அழைக்கப்படுகிறதாம்//
    இது தான் சாதாரண மனிதர்களுக்கும் சமயம் வளர்த்த மன்னர்களுக்கும் உள்ள வித்தியாசம் போலும்...நாம் கோவிலில் பிரசாதம் வாங்குவதிலும்,பணம்,சொத்துக்கள் சேர்ப்பதில் மட்டும் தான் போட்டி போடுகின்றோம்... நல்ல தகவல் பகிர்விற்கு நன்றி ஐயா...////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  27. ////Blogger R.Srishobana said...
    //sundari said...
    சார் வணக்கம்,
    பாப் இசை மனனன் மைக்கல் ஜாதகம் அலசுங்க சார் வாரம் ஒரு அலசல் பாடம் சொல்லிதங்க சார். நேரமிருந்தால் மட்டும்/முடிந்தால் மட்டும் தொந்தரவுக்கு மன்னிக்கவும். இன்றைய பாடம் நன்றாகயிருந்தது.//
    ஆஹா...இக்கோரிக்கையை நானும் முன்பு ஐயாவிட‌ம் கேட்டிருந்தேன்,இன்று நீங்க‌ளும் சேர்ந்து கொண்டீர்க‌ள்...நானும் உங்க‌ளுட‌ன் சேர்ந்து அலசலுக்காக காத்திருப்பேன்...////

    தேடிப்பார்த்து பிறப்பு விவரங்கள் கிடைத்தால். அலசிப் பதிவிடுகிறேன். இருவரும் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  28. Blogger ananth said...
    என் மனைவி பூர நட்சத்திரக்காரர்தான். அவருடைய பார்வைக்கு இந்த கட்டுரையை கொண்டு வந்திருக்கிறேன். பூர நட்சத்திரம் இறுதிக் கட்டம் இருக்கும் போது பிறந்தவர். சுக்கிர தசை 8 மாதங்களே நீடித்தது.
    என்னைப் பொறுத்தவரை கறுப்பும் ஓர் அழகுதான். சிவப்பு மட்டும்தான் அழகு என்பது போலித்தனமானது. சிவப்பழகு தங்கள் பொருட்களை விற்பதற்கு சில நிறுவனங்கள் மேற்கொள்ளும் வியாபார தந்திரம் அவ்வளவே.
    //அப்படியொரு மரம் நம் வீடுகளிலும் இருந்தால் எப்படி இருக்கும்? ரோல்ஸ் ராய்ஸ் கார்தான். பெட்ரோல்? வீட்டிலே பங்க் ஒன்றை வைத்துக்கொண்டு
    விடமாட்டோமா?//
    எல்லாம் செய்யலாம். Income Taxகாரர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று முன் கூட்டியே யோசித்து வைத்துக் கொள்வது நல்லது.////

    அதிகபட்சவரி 30%. காய்க்கும் பழங்களின் எடையைப் போட்டு 30% பழங்களை அவர்களிடம் கொடுத்துவிடுவோம். என்ன பிரச்சினை வரப்போகிறது?

    ReplyDelete
  29. ஐயா, பிரச்சனை உண்டு. தங்கம் தயாரிப்பது (?) சட்டப்படி குற்றம். இந்த சட்டப் பிரிவின் கீழ் தங்க மோதிரம் போன்றவைகளை வருவித்து தந்த சாய்பாபா மேல் வழக்கும் தொடர்ந்திருக்கிறார் ஒருவர்.

    ReplyDelete
  30. ////Blogger தேமொழி said...
    ஐயா, பிரச்சனை உண்டு. தங்கம் தயாரிப்பது (?) சட்டப்படி குற்றம். இந்த சட்டப் பிரிவின் கீழ் தங்க மோதிரம் போன்றவைகளை வருவித்து தந்த சாய்பாபா மேல் வழக்கும் தொடர்ந்திருக்கிறார் ஒருவர்.///

    நீதிபதிகளில் சிலர் சாய்பாபாவின் பக்த்ர்கள். என்ன ஆகிறது என்று பார்ப்போம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com