மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.11.09

Short Story: ஆசையின் அளவு!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Short Story: ஆசையின் அளவு!

இறைவன் எழுந்தருளினார். அவர் எழுந்தருளிய இடம் ஒரு வனாந்தரப் பகுதி.
அவர் எங்கே வேண்டுமென்றாலும் எப்பொது வேண்டுமென்றாலும் எழுந்தருள்வார். பாஸ்போர்ட், விசா, டாலரில் கை இருப்பு, பாதுகாப்பு சோதனைகள், போர்டிங் பாஸ் என்று எந்த சிக்கலும் இல்லாதவர் அவர்!

திரைப்படங்களில் வரும் நாட்டாமைக்காரரின் தோற்றத்தில் அவர் இருந்தார்.

அங்கே நடுத்தர வயதுக்காரன் ஒருவன், காட்டு மர மொன்றை வெட்டி விறகாக்கிக் கொண்டிருந்தான். மூன்று சுமைகளுக்கான விறகுகள் சேர்ந்திருந்தன.

காலையில் இருந்து வெட்டிக்கொண்டிருப்பான் போலும் வியர்த்து விறுவிறுத்திருந்தான். களைத்தும் போயிருந்தான்.

அவன்மேல் இரக்கம் கொண்டு, அவனருகில் சென்ற இறைவன், கணீரென்ற குரலில் சொன்னார்:

“வெட்டியது போதும், போ!”

திடுக்கிட்டுத் திரும்பிய அவன், அவரை இந்த வனப் பகுதியின் சொந்தக்காரர் என்று நினைத்துப் பயத்துடன் சொன்னான்,” அய்யா, என்னை நம்பி, என் வீட்டில், பத்து ஜீவன்கள் இருக்கின்றன. இங்கே இருந்து வெட்டிக் கொண்டு போய் விற்கும் விறகுகளை வைத்துத்தான் என் ஜீவனம் நடக்கிறது. நான் தேக்கு மற்றும் சந்தன மரங்களில் கையை வைக்க மாட்டேன். எரிக்கப் பயன்படும் கருவேல மரங்களைத்தான் வெட்டுவேன். இன்னும் ஒரு நான்கு நாழிகைகள்
வெட்டிவிட்டுப் புறப்படுகிறேன். தயவு செய்து அதை நீங்கள்அனுமதிக்க வேண்டும்!”

அவன் சொல்வது உண்மை என்பதை உணர்ந்த இறைவன், அவனுக்கு உதவி செய்து, அவனுடைய வறுமையைப் போக்கலாம் என்று முடிவு செய்தார்.

சற்று தூரத்தில் கிடந்த, செங்கல் ஒன்றின் அளவில் இருந்த, கல் ஒன்றைக் காட்டி, அதை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார்.

அவனும் செய்தான்.

அவன் கொண்டுவந்த கல்லைத் தன் விரலால் இறைவன் தொட, சட்டென்று ஜொலிக்கும் தங்கமாக மாறியது அந்தக்கல்! பளபளவென்றும் மின்னியது.

விறகுவெட்டி, அவரை இறைவன் என்று உணராமல், ஏதோ சித்து வேலைக்காரர் என்று நினைத்துவிட்டான். மேலும் கிடைத்த தங்கத்தைப் பார்த்து மகிழ்ச்சி கோள்ளாமல், சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்.

“என்ன, மகிழ்ச்சிதானே? இதை வைத்து உன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்.போய் வா” என்றார்

சட்டென்று அவன் சொன்னான்,” அய்யா, இதை வைத்து என் கஷ்டங்கள் அனைத்தும் முழுமையாகத் தீராது!”

புன்னகைத்த இறைவன், “ அதைக் கீழே வைத்துவிட்டு, அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வா” என்று சற்று தூரத்தில் இருந்த பாறாங்கல்லைக் காண்பித்தார்.

அவனும், மகிழ்வுடன் ஓடிச் சென்று, அந்தப் பாறாங்கல்லைத் தூக்க முடியாமல், சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு வந்து அவர் முன்னே நின்றான்.

அவன் கொண்டுவந்த அந்தப் பாறாங்கல்லைத் தன் விரலால் இறைவன் தொட, சட்டென்று அதுவும் ஜொலிக்கும் தங்கமாக மாறியது!.

திகைத்துப்போன அவன் ஒரு கணம் யோசித்தான். மின்னலாக யோசித்தவன், அதைக் கீழே வைத்துவிட்டுச் சொன்னான்.

“அய்யா உங்களைப் போலவே எனக்கும் பத்து விரல்கள் இருக்கின்றன. நான் தொட்டால் அது தங்கமாக மாறும் சக்தியை, என்னுடைய ஒரு விரலுக்கு கொடுத்துவிடுங்கள். நான் வேண்டும் போது தொட்டு, வேண்டிய தங்கத்தை நானே பெற்றுக் கொள்கிறேன்”

புன்னகைத்த கடவுள்,” இவன் பேராசை மிக்கவன்: என்றைக்குமே பக்குவப்படமட்டான்” என்ற முடிவிற்கு வந்தார். சட்டென்று அந்த இடத்தைவிட்டு அகன்றார். ஆமாம் கண்ணிற்குப் புலப்படாமல் மறைந்தார்.

விறகு வெட்டி திகைத்துப் போனான். தங்கமாகமாறிய கற்கள் இரண்டும் மீண்டும் கற்களாக மாறித் தரையில் கிடந்தது. வந்தது இறையென்று உணர்ந்த விறகு வெட்டி கலங்கிப்போனான். கலங்கி என்ன பயன்? காலம்கடந்த கலக்கம். அவன் வாழ்க்கை முழுவதும் விறகு வெட்டிப் பிழைப்பதிலேயே கரைந்தது.

ஆசை இருக்கலாம். ஆனால் பேராசை இருக்கக் கூடாது! மனம் பக்குவப்பட்டால் மட்டுமே இறைவன் திருவடியில் சேர முடியும்!
----------------------------------------------------
மின்னஞ்சல் பாடம் (எண் 12) அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

A to P வரை துவக்க எழுத்தைக் கொண்ட பெயர்களுக்குப் புது மின்னஞ்சல் ஐ.டி ஒன்றை ஏற்படுத்தி அனுப்பியுள்ளேன். மற்றவர்களுக்குப் பழைய மின்னஞ்சல் ஐ.டியிலேயே பாடங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

நாள் ஒன்றிற்கு 500 மின்னஞ்சல்களுக்குமேல் அனுமதியில்லை எனும் கூகுள் ஆண்டவரின் கட்டுப்பாட்டிற்குத் தலைவணங்கி, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளதால், அவர்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து விட்டேன். ஒரே சமயத்தில் அனைவருக்கும் பாடங்கள் செல்வதற்காக இந்த ஏற்பாடு

முதல் பிரிவிற்கு : vaaththiyar2010@gmail.com
இரண்டாவது பிரிவினருக்கு: vaaththiyar@gmail.com

பாடங்கள் கிடைக்காதவர்கள், அந்தந்தப் பிரிவிற்கே கடிதம் எழுதும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் 60 மணி நேர விடுப்பில், சொந்த ஊருக்குச் செல்வதால், அடுத்த வகுப்பு 28.11.2009 சனிக்கிழமை காலையில் துவங்கும்.

நேரம்?

இணைய வகுப்பிற்கு ஏது நேரம் அல்லது காலம்? வாத்தியார் துவங்கும் நேரம்தான் வகுப்பறையின் நேரம். நீங்கள் வரும் நேரம்தான் உங்களுக்கான வகுப்பறை நேரம்!

சரி, காலை 10:30 மணி என்று வைத்துக்கொள்ளுங்கள்!

விடுமுறையில் செல்வதால், உங்களுக்கு இங்கேயும் பாடம். அங்கேயும் (மின்னஞ்சல் வகுப்பிலும்) பாடம். அனைவரும் Home work செய்து, எடுத்துக் கொண்டு வாருங்கள்

அன்புடன்,
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

60 comments:

  1. Dear Sir

    "Perasai Perum Nastam Endra Kadhai Arumai Sir."

    Thanks Sir. Minnanchal Padam ethirpakkiren sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  2. வணக்கம் சார்,
    நீங்கள் அனுப்பிய பாடம் கிடைத்தது!!! நன்றி சொல்லுறன்!!!
    Take good leave and come back fresh again sir!!!

    ReplyDelete
  3. வணக்கம் ஆசானே,
    கதையும் கருத்தும் நன்று,
    பேராசை பெரும் நஷ்டம் ஆனது.

    இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்வோம்
    எதுவும் இல்லது போனால்:
    இறைவனிடம் வேண்டி உழைத்து வாழ்வோம்.

    மின் அஞ்சல் பாடத்திற்கு நன்றிகள் குருவே.

    ReplyDelete
  4. மின் அஞ்சல் பாடம் கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
  5. அய்யா இனிய காலை வணக்கம்,
    கதை அருமை அய்யா......மின் அஞ்சல் பாடதிர்க்கு நன்றிக்ள் ,,,,,have a nice journey

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  6. பேராசை பெரும் நட்டம் என்பதை உணர்த்திய நல்லதொரு நீதிக்கதை. எல்லாருக்கும், எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடியது.

    ReplyDelete
  7. அய்யா,
    மின் அஞ்சல் பாடம் படித்தேன் வழக்கம் போல் சந்தேகம்,,,,

    எனக்கு நவாம்சத்தில் துலாம் லக்னம் 3,6 உரிய குரு பகவான் 4,5 க்கு உரிய சனி உடன் பரிவர்தனை ...3இல் சனி ,5இல் குரு......இந்த அமைப்பை தைன்ய பரிவர்தனை என்பதா ?அல்லது கஹல பரிவர்த்தனை என்பதா?
    நன்றி வணக்கம்......

    ReplyDelete
  8. மின்னஞ்ச‌ல் பாடம் கிடைத்தது.நன்றி.எளிமையாக இருக்கிறது.ஏற்க‌னவே கொஞ்சம் சோதிடம் அறிந்தவனாகையால் உங்கள் பாடம் புரிவதோடு,அதன் எளிமை என்னை வெகுவாகக் கவர்கிறது.அடிப்படைக் கேள்விகள் மனதில்
    தோன்றுவது இல்லை.ந‌ன்றி.பேரா‌சைக் க‌தை ந‌ன்று.இதைப்போன்று பேரா‌சை அற்ற‌ விற‌கு வெட்டிக்கு த‌ன் இரும்புக் கோடாலியை ம‌ட்டும் கேட்டுப் பெற்ற‌த‌ர்க்காக‌ வெள்ளி, த‌ங‌கக் கோடாலிகளையும் அளித்த‌ பெண் தெய்வ‌க் க‌தை சிறு வய‌தில் 'ப‌ட‌ம் பார்த்துக் க‌தை சொல்' ப‌குதியில்ப‌டித்துள்ளேன்,அய்யா!

    ReplyDelete
  9. கதை அருமை, மின் அஞ்சல் பாடம் கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
  10. Dear Sir,

    Present Sir!!!

    Got the lesson 11. I feel the lesson is especially for me, because Iam thula lagnam. Thanks for the lesson. All the best for your work in your native and parying god for the quick completion of the same. Please convey our best regards to your family members on behalf of our classmates.

    Thanks
    Saravana

    ReplyDelete
  11. இந்த கதை முன்னாடியே ஒரு தடவை எழுதியிருக்கிறீர்கள். ரொம்ப மறதி!!!!

    ReplyDelete
  12. //இந்த கதை முன்னாடியே ஒரு தடவை எழுதியிருக்கிறீர்கள். ரொம்ப மறதி!!!!//

    ஆசிரியருக்கு 7ல் புதன். ஞாபக மறதியே வரக்கூடாதே. சனி தசை சுய புத்தி தன் புத்தியைக் காட்டிவிட்டது போலும்.

    ReplyDelete
  13. //ஆசிரியருக்கு 7ல் புதன். ஞாபக மறதியே வரக்கூடாதே. சனி தசை சுய புத்தி தன் புத்தியைக் காட்டிவிட்டது போலும்.//

    ஹா ஹா ஹா

    திரு. ஆனந்த், நான் உங்கள் பின்னூட்டம் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன், எப்போதுதான் நான் நன்றாகக் கற்றுக்கொள்வேனோ என்று. நிறைய புத்தகங்கள் படிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. விறகு வெட்டி கதை நானும் படிச்சிருக்கேன்.
    மூன்று கோடாலிகளும் பெற்ற விறகு வெட்டி
    ஒரு நாள் தன் மனைவியை அழைத்துக்கொண்டு
    சூட்டிங் பார்க்க போனார்.அங்கே பயங்கர கும்பல்.
    அதிலே அவர் மனைவி காணாமல் போய்விட்டார்.
    உடனே விறகு வெட்டி தேவதையை நினைத்து அழுதார்.
    தேவதையும் தோன்றினாள்.தன் மனைவியை காணவில்லை
    என்ற விபரத்தை தேவதையிடம் கூறினார் விறகு வெட்டி.
    உடனே தேவதை நமீதாவை அழைத்து வந்து விறகு வெட்டியிடம்
    காட்டிற்று.விறகு வெட்டியும் ஆம் இவள்தான் என் மனைவி
    என்று தேவதையிடம் கூறினான்.
    தேவதைக்கு உண்மை விளங்கி விட்டது.உடனே தேவதை விறகு வெட்டியிடம்
    கேட்டது."நீ ஏழையாக இருந்த போது உண்மையாக இருந்தாய்.இப்போது பொய்
    சொல்ல ஆரம்பித்துவிட்டாய்."
    அப்போது விறகுவெட்டி சொன்னான்.
    "தாயே நான் இது என் மனைவி இல்லை என்று உங்களிடம் சொல்வேன்.
    நீங்கள் உடனே நயநன்தாராவை இதுவா உன் மனைவி என்று காட்டுவீர்கள்.
    நானும் இல்லை என்று சொல்வேன்.அப்புறமாக என் மனைவியை கொண்டு
    வந்து காட்டுவீர்கள் நான் ஆம் என்று சொல்வேன். நீங்கள் மகிழ்ந்து மூன்று
    பேரையும் என் தலையில் கட்டிவிடுவீர்கள்.ஆகவே நான் பயந்து போய்
    முதலிலேயே ஆம் என்று சொல்லிவிட்டேன்" என்றானாம்

    ReplyDelete
  15. அய்யா, மின்னஞ்சல் பாடம் கிடைத்தது, நன்றி. சந்தேகம் வரும்போலதான் தெரியுது, எதுக்கும் நல்லா 4, 5 தடவை படிச்சுடுறேன். திருநாராயணன் சார், உங்க கோடாலி கதை லேட்ட்ஸ்ட் வெர்ஷன் - அருமை. ரசித்தேன். உங்க வீட்ல பிளாக் படிக்கிற பழக்கம் இல்ல போல..! :)

    ReplyDelete
  16. அய்யா Rvc நம்ம வீட்டிலே மாத்திரம் இல்லே நைனா.

    ந‌ம்ப‌ சொந்த‌ங்க‌ள்ல‌யே யாருக்கும் அந்த‌ ந‌ல்ல‌
    ப‌ழ‌க்க‌ம் இல்லே நைனா.

    ReplyDelete
  17. திரு நாராயணன் அவர்களே,

    அடடே! இது என்னப் புதுக்கதையாய் இருக்குது.
    இருந்தாலும் நல்ல காமெடித்தான்.
    நன்றி வணக்கம்.

    ReplyDelete
  18. ஜோதிடராவதற்கான கிரக நிலைகள். இது சம்பந்தமாக ஒரு கட்டுரை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதனுடைய சுட்டியைக் கீழே கொடுத்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்து பயன் பெறலாம். ஆசிரியரைப் போல் நானும் (3 நாள்) விடுமுறையில் செல்கிறேன். 3 நாட்களுக்கு சேர்த்து 3 பின்னூட்டமாக இன்று இட்டு விட்டேன். எங்கள் நாடான மலேசியாவில் நாளை பொது விடுமுறை. பிறகு வார இறுதி விடுமுறை. இஃதெல்லாம் முடிந்து இனி திங்கட்கிழமைதான்.

    http://www.planetarypositions.com/notes/

    ReplyDelete
  19. வாத்தியார், ஒரு வேண்டுகோள்.

    பதிவில் இடம்பெறும் புகைப்படங்களுக்கு, குறைந்த பட்சம், அது எடுக்கப்பட்ட source பக்கத்துக்கு ஒரு லிங்க் கொடுத்திடுங்க. நன்றி.
    :)

    ReplyDelete
  20. வணக்கம் ஐயா,
    இன்று நான் நங்கநல்லூரிலுள்ள அனுமான் கோவிலுக்கு சென்றுவிட்டேன் ஐயா தாமதமாக இப்பொழுதுதான் படித்தேன் ரொம்ப் ந்ல்லா பேராசை கொள்ளகூடாது என்பதை தாங்களுக்கே உரிய பாணி(நடையில்)யில் மிகவும் அருமையாக சொல்லிவிட்டிர்கள் இது தாங்களின் கற்பனையா அல்லது வேறெங்கேனுமிருந்து
    பெறப்பட்ட கதையா தங்களின் எழுத்துவன்மை என்னை மிகவும் விய்க்கவைக்கிறது ஐயா 12த் பாடம் கிடைத்தது நன்றி ஐயா தாங்கள் பயணம் இனிதாக அமைய வேண்டுகிறேன்.
    சுந்தரி

    ReplyDelete
  21. திரு நாரயணன் சகோதரருக்கு,
    அப்பா கதை ரொம்பா நல்லாயிருந்தது ஆலோசியம் சகோதரர் சொன்னமாதரி ரொம்பா காமெடி இதை நீங்களே எழுதினீங்கள இல்ல வேறு யாராவது சொன்னங்களா ரொம்ப நல்லாயிருக்குது இந்த வகுப்பறையில் உங்களை எல்லாம்
    நான் சகோதர பெற்றதற்கு வாத்தியாருக்கு நான் ரொம்பா நன்றி சொல்லனும்
    நான் ரொம்ப நேரம் சிரித்தேன்
    சுந்தரி

    ReplyDelete
  22. சகோதரர் ஆனந்தனுக்கு,
    தாங்கள் அளித்த சுட்டியை நான் படிப்பேன் ரொம்ப நன்றி. HAPPY WEEK END TO U DEAR BROTHER.
    சுந்தரி.

    ReplyDelete
  23. வணக்கம் அய்யா,
    நீங்கள் அனுப்பிய பாடம் கிடைத்தது!!! நன்றி

    "பாடம் ஸ்கிரீன் ஷாட்டில் எட்டுப் பக்கங்கள். யோசித்து, தட்டச்சி, அதை உங்களுக்கு அளிப்பதற்கு எவ்வளவு நேரம் பிடித்திருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். அதோடு, அவற்றைக் கவனத்துடன் படித்து மனதில் ஏற்றுங்கள். மேலோட்டமாகப் படித்துவிட்டு, “சார், அடுத்த பாடம் எப்போது என்று கேட்காதீர்கள்!"

    ரொம்ப நல்லா சொன்னிங்க வாத்தியாரே. உங்கள் கஷ்டம் எங்களுக்கு புரிகிறது. தங்கள் பனி சிறக்க வாழ்துக்கள்.

    ReplyDelete
  24. Dear Sir,

    I didn't receive your lessons. Please send it to me I am eagerly waiting for.

    Padma

    ReplyDelete
  25. வணக்கம் ஜயா,
    பாடங்கள் கிடைத்ததது . நன்றி . பின்னூட்டம் இடாவிட்டாலும் அதிகமாக ஒவ்வோரு நாளும் எட்டி பார்த்து விடுவேன். முடிவும் துவக்கமும் பதிவு சிறப்பாக இருந்தது .

    ReplyDelete
  26. அய்யா,
    மின்னஞ்சல் பாடம் கிடைத்தது.நன்றி.

    ReplyDelete
  27. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    "Perasai Perum Nastam Endra Kadhai Arumai Sir."
    Thanks Sir. Minnanchal Padam ethirpakkiren sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    நன்றி ராஜாராமன். மின்னஞ்சல் பாடத்தை அனைவருக்கும் அனைவருக்கும் அனுப்பிவிட்டேன். இந்நேரம் உங்களுக்குக் கிடைத்திருக்கும்.

    ReplyDelete
  28. /////Thanuja said...
    வணக்கம் சார்,
    நீங்கள் அனுப்பிய பாடம் கிடைத்தது!!! நன்றி சொல்கிறேன்!!!
    Take good leave and come back fresh again sir!!!//////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  29. /////Alasiam G said...
    வணக்கம் ஆசானே, கதையும் கருத்தும் நன்று,
    பேராசை பெரும் நஷ்டம் ஆனது. இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்வோம்
    எதுவும் இல்லது போனால்: இறைவனிடம் வேண்டி உழைத்து வாழ்வோம்.
    மின் அஞ்சல் பாடத்திற்கு நன்றிகள் குருவே./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  30. //////krish said...
    மின் அஞ்சல் பாடம் கிடைத்தது. நன்றி./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  31. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    கதை அருமை அய்யா......மின் அஞ்சல் பாடத்திற்கு நன்றிக்ள் ,,,,,have a nice journey
    நன்றி வணக்கம்/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  32. /////ananth said...
    பேராசை பெரும் நட்டம் என்பதை உணர்த்திய நல்லதொரு நீதிக்கதை. எல்லாருக்கும், எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடியது./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  33. /////astroadhi said...
    அய்யா,
    மின் அஞ்சல் பாடம் படித்தேன் வழக்கம் போல் சந்தேகம்,,,,
    எனக்கு நவாம்சத்தில் துலாம் லக்னம் 3,6 உரிய குரு பகவான் 4,5 க்கு உரிய சனி உடன் பரிவர்தனை ...3இல் சனி ,5இல் குரு......இந்த அமைப்பை தைன்ய பரிவர்தனை என்பதா ?அல்லது கஹல பரிவர்த்தனை என்பதா?
    நன்றி வணக்கம்....../////

    இரண்டையும் கலந்து கொடுக்கும் பரிவர்த்தனை என்று எடுத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  34. //////kmr.krishnan said...
    மின்னஞ்ச‌ல் பாடம் கிடைத்தது.நன்றி.எளிமையாக இருக்கிறது.ஏற்க‌னவே கொஞ்சம் சோதிடம் அறிந்தவனாகையால் உங்கள் பாடம் புரிவதோடு,அதன் எளிமை என்னை வெகுவாகக் கவர்கிறது.அடிப்படைக் கேள்விகள் மனதில்
    தோன்றுவது இல்லை.ந‌ன்றி.பேரா‌சைக் க‌தை ந‌ன்று.இதைப்போன்று பேரா‌சை அற்ற‌ விற‌கு வெட்டிக்கு த‌ன் இரும்புக் கோடாலியை ம‌ட்டும் கேட்டுப் பெற்ற‌த‌ர்க்காக‌ வெள்ளி, த‌ங‌கக் கோடாலிகளையும் அளித்த‌ பெண் தெய்வ‌க் க‌தை சிறு வய‌தில் 'ப‌ட‌ம் பார்த்துக் க‌தை சொல்' ப‌குதியில்ப‌டித்துள்ளேன்,அய்யா!/////

    தகவலுக்கு நன்றி சார்! நமது வகுப்பில் 75 வயது மாணவர் ஒருவர் சென்றவாரம் புதிதாகச் சேர்ந்துள்ளார். இருப்பவர்களில் அவர்தான் வயதில் சீனியர்!

    ReplyDelete
  35. /////சிங்கைசூரி said...
    கதை அருமை, மின் அஞ்சல் பாடம் கிடைத்தது. நன்றி.////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  36. /////Saravana said...
    Dear Sir,
    Present Sir!!!
    Got the lesson 11. I feel the lesson is especially for me, because Iam thula lagnam. Thanks for the lesson. All the best for your work in your native and parying god for the quick completion of the same. Please convey our best regards to your family members on behalf of our classmates.
    Thanks
    Saravana/////

    நன்றி முருகா!

    ReplyDelete
  37. /////Uma said...
    இந்த கதை முன்னாடியே ஒரு தடவை எழுதியிருக்கிறீர்கள். ரொம்ப மறதி!!!!//////

    மறதியல்ல! முன்பு நான் துவங்கிய பதிவு ஒன்றில் முதல் பதிவாக எழுதியது இந்தக் கதைதான். வகுப்பறை மாணவர்களுக்காக அதை இங்கே பதிவிட்டுள்ளேன். அவ்வளவுதான்!

    ReplyDelete
  38. //////ananth said...
    //இந்த கதை முன்னாடியே ஒரு தடவை எழுதியிருக்கிறீர்கள். ரொம்ப மறதி!!!!//
    ஆசிரியருக்கு 7ல் புதன். ஞாபக மறதியே வரக்கூடாதே. சனி தசை சுய புத்தி தன் புத்தியைக் காட்டிவிட்டது போலும்.////

    மறதியல்ல! முன்பு நான் துவங்கிய பதிவு ஒன்றில் முதல் பதிவாக எழுதியது இந்தக் கதைதான். வகுப்பறை மாணவர்களுக்காக அதை இங்கே பதிவிட்டுள்ளேன். அவ்வளவுதான்! இப்போது நடப்பது புதன் திசை.சுயபுத்தி!:-))))

    ReplyDelete
  39. /////Uma said...
    //ஆசிரியருக்கு 7ல் புதன். ஞாபக மறதியே வரக்கூடாதே. சனி தசை சுய புத்தி தன் புத்தியைக் காட்டிவிட்டது போலும்.//
    ஹா ஹா ஹா
    திரு. ஆனந்த், நான் உங்கள் பின்னூட்டம் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன், எப்போதுதான் நான் நன்றாகக் கற்றுக்கொள்வேனோ என்று. நிறைய புத்தகங்கள் படிப்பீர்கள் என்று நினைக்கிறேன்./////

    அவர் என்ன உத்தியோகம் பார்க்கிறார் என்று தெரிந்திருந்தால் இப்படிக் கேட்டிருக்க மாட்டீர்கள்!

    ReplyDelete
  40. /////thirunarayanan said...
    விறகு வெட்டி கதை நானும் படிச்சிருக்கேன்.மூன்று கோடாலிகளும் பெற்ற விறகு வெட்டி
    ஒரு நாள் தன் மனைவியை அழைத்துக்கொண்டு சூட்டிங் பார்க்க போனார்.அங்கே பயங்கர கும்பல். அதிலே அவர் மனைவி காணாமல் போய்விட்டார். உடனே விறகு வெட்டி தேவதையை நினைத்து அழுதார். தேவதையும் தோன்றினாள்.தன் மனைவியை காணவில்லை என்ற விபரத்தை தேவதையிடம் கூறினார் விறகு வெட்டி. உடனே தேவதை நமீதாவை அழைத்து வந்து விறகு வெட்டியிடம் காட்டிற்று.விறகு வெட்டியும் ஆம் இவள்தான் என் மனைவி என்று தேவதையிடம் கூறினான். தேவதைக்கு உண்மை விளங்கி விட்டது.உடனே தேவதை விறகு வெட்டியிடம்
    கேட்டது."நீ ஏழையாக இருந்த போது உண்மையாக இருந்தாய்.இப்போது பொய்
    சொல்ல ஆரம்பித்துவிட்டாய்."அப்போது விறகுவெட்டி சொன்னான். "தாயே நான் இது என் மனைவி இல்லை என்று உங்களிடம் சொல்வேன். நீங்கள் உடனே நயநன்தாராவை இதுவா உன் மனைவி என்று காட்டுவீர்கள். நானும் இல்லை என்று சொல்வேன்.அப்புறமாக என் மனைவியை கொண்டு வந்து காட்டுவீர்கள் நான் ஆம் என்று சொல்வேன். நீங்கள் மகிழ்ந்து மூன்று
    பேரையும் என் தலையில் கட்டிவிடுவீர்கள்.ஆகவே நான் பயந்து போய் முதலிலேயே ஆம் என்று சொல்லிவிட்டேன்" என்றானாம்/////

    நன்றி. இதை நானும் படித்திருக்கிறேன்!

    ReplyDelete
  41. /////RVC said...
    அய்யா, மின்னஞ்சல் பாடம் கிடைத்தது, நன்றி. சந்தேகம் வரும்போலதான் தெரியுது, எதுக்கும் நல்லா 4, 5 தடவை படிச்சுடுறேன். திருநாராயணன் சார், உங்க கோடாலி கதை லேட்ட்ஸ்ட் வெர்ஷன் - அருமை. ரசித்தேன். உங்க வீட்ல பிளாக் படிக்கிற பழக்கம் இல்ல போல..! :)/////

    படித்தாலும், அவரின் உண்மைக்குணம் தெரிந்ததால் கவலைப்படமாட்டார்கள்!

    ReplyDelete
  42. /////thirunarayanan said...
    அய்யா Rvc நம்ம வீட்டிலே மாத்திரம் இல்லே நைனா. ந‌ம்ப‌ சொந்த‌ங்க‌ள்ல‌யே யாருக்கும் அந்த‌ ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ம் இல்லே நைனா.////

    ஆமாம். அதிலேயும் பல செளகரியங்கள் உள்ளன!

    ReplyDelete
  43. //////ananth said...
    ஜோதிடராவதற்கான கிரக நிலைகள். இது சம்பந்தமாக ஒரு கட்டுரை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதனுடைய சுட்டியைக் கீழே கொடுத்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்து பயன் பெறலாம். ஆசிரியரைப் போல் நானும் (3 நாள்) விடுமுறையில் செல்கிறேன். 3 நாட்களுக்கு சேர்த்து 3 பின்னூட்டமாக இன்று இட்டு விட்டேன். எங்கள் நாடான மலேசியாவில் நாளை பொது விடுமுறை. பிறகு வார இறுதி விடுமுறை. இஃதெல்லாம் முடிந்து இனி திங்கட்கிழமைதான்.
    http://www.planetarypositions.com/notes//////

    தகவலுக்கு நன்றி! படிப்பவர்கள் எல்லாம் ஜோதிடராகிவிடமுடியாது. கர்மகாரகன் சனியின் பெர்மிசன் வேண்டும். அதை மனதில் வையுங்கள்!

    ReplyDelete
  44. /////SurveySan said...
    வாத்தியார், ஒரு வேண்டுகோள்.
    பதிவில் இடம்பெறும் புகைப்படங்களுக்கு, குறைந்த பட்சம், அது எடுக்கப்பட்ட source பக்கத்துக்கு ஒரு லிங்க் கொடுத்திடுங்க. நன்றி. :)////

    அவற்றில் ரகசியம் ஒன்றும் இல்லை google imagesல் இருந்துதான் படங்களை எடுத்துப் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  45. ////sundari said...
    வணக்கம் ஐயா,
    இன்று நான் நங்கநல்லூரிலுள்ள அனுமான் கோவிலுக்கு சென்றுவிட்டேன் ஐயா தாமதமாக இப்பொழுதுதான் படித்தேன் ரொம்ப் ந்ல்லா பேராசை கொள்ளகூடாது என்பதை தாங்களுக்கே உரிய பாணி(நடையில்)யில் மிகவும் அருமையாக சொல்லிவிட்டிர்கள் இது தாங்களின் கற்பனையா அல்லது வேறெங்கேனுமிருந்து பெறப்பட்ட கதையா தங்களின் எழுத்துவன்மை என்னை மிகவும் விய்க்கவைக்கிறது ஐயா 12த் பாடம் கிடைத்தது நன்றி ஐயா தாங்கள் பயணம் இனிதாக அமைய வேண்டுகிறேன்.
    சுந்தரி/////

    சொற்பொழிவொன்றில் முன்பு கேட்ட கதை. என்னுடைய நடையில் ஊதிப் பெரிசாக்கியிருக்கிறேன். நன்றி!

    ReplyDelete
  46. /////Scorpion King said...
    வணக்கம் அய்யா,
    நீங்கள் அனுப்பிய பாடம் கிடைத்தது!!! நன்றி
    "பாடம் ஸ்கிரீன் ஷாட்டில் எட்டுப் பக்கங்கள். யோசித்து, தட்டச்சி, அதை உங்களுக்கு அளிப்பதற்கு எவ்வளவு நேரம் பிடித்திருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். அதோடு, அவற்றைக் கவனத்துடன் படித்து மனதில் ஏற்றுங்கள். மேலோட்டமாகப் படித்துவிட்டு, “சார், அடுத்த பாடம் எப்போது என்று கேட்காதீர்கள்!"
    ரொம்ப நல்லா சொன்னிங்க வாத்தியாரே. உங்கள் கஷ்டம் எங்களுக்கு புரிகிறது. தங்கள் பனி சிறக்க வாழ்துக்கள்.////

    புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  47. ////padma said...
    Dear Sir,
    I didn't receive your lessons. Please send it to me I am eagerly waiting for.
    Padma////

    உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரியப்படுங்கள். சோதித்துப் பார்க்கிறேன்!

    ReplyDelete
  48. /////kannan said...
    yes Sir////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  49. /////Emmanuel Arul Gobinath said...
    வணக்கம் ஜயா,
    பாடங்கள் கிடைத்ததது . நன்றி . பின்னூட்டம் இடாவிட்டாலும் அதிகமாக ஒவ்வோரு நாளும் எட்டி பார்த்து விடுவேன். முடிவும் துவக்கமும் பதிவு சிறப்பாக இருந்தது .////

    ஆமாம். உங்கள் படிப்பு முடியட்டும். அதற்குப் பிறகு வாருங்கள்!

    ReplyDelete
  50. /////RaaKul said...
    அய்யா,
    மின்னஞ்சல் பாடம் கிடைத்தது.நன்றி./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  51. ஐயா!
    மின்னஞ்சல் பாடம் கிடைத்தது நன்றி

    ReplyDelete
  52. ஐயா!
    மின்னஞ்சல் பாடம் கிடைத்தது நன்றி

    ReplyDelete
  53. I have read a book on Intution "Your Intution Zone". The author says that the intution is one of the senses of all the beings. Humans because of the development of other senses have lost the ability to tap Intution. It could also be developed like any skills, like music. One important conclusion he reaches is astrology is also a method to develop intution, by constantly analysing future events with some set of guidelines. After studying the principles of astrology and trying to make prediction the skills slowly or suddenly develop.

    ReplyDelete
  54. /////DHANA said...
    ஐயா!
    மின்னஞ்சல் பாடம் கிடைத்தது நன்றி////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  55. //////krish said...
    I have read a book on Intution "Your Intution Zone". The author says that the intution is one of the senses of all the beings. Humans because of the development of other senses have lost the ability to tap Intution. It could also be developed like any skills, like music. One important conclusion he reaches is astrology is also a method to develop intution, by constantly analysing future events with some set of guidelines. After studying the principles of astrology and trying to make prediction the skills slowly or suddenly develop./////

    தகவலுக்கு நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  56. அவர் என்ன உத்தியோகம் பார்க்கிறார் என்று தெரிந்திருந்தால் இப்படிக் கேட்டிருக்க மாட்டீர்கள்!//
    என்ன உத்தியோகம் பார்க்கிறார்?

    ReplyDelete
  57. ////Uma said...
    அவர் என்ன உத்தியோகம் பார்க்கிறார் என்று தெரிந்திருந்தால் இப்படிக் கேட்டிருக்க மாட்டீர்கள்!//
    என்ன உத்தியோகம் பார்க்கிறார்?////

    கணக்காய்வாளர் - ஆடிட்டர்! கணக்கைப் பிரித்து மேய்பவர். ஜோதிடத்தை மட்டும் விட்டு விடுவாரா என்

    ReplyDelete
  58. கணக்காய்வாளர் - ஆடிட்டர்! கணக்கைப் பிரித்து மேய்பவர். ஜோதிடத்தை மட்டும் விட்டு விடுவாரா என்//

    ஓ......... புதன் ரொம்பதான் பலமாக இருக்கிறார். எனக்கு புதன் மிது‍ ல் ஆட்சி, ஆனாலும் ல‍ க்கு 6 ம் இடம் + சனி பகவானும் கூட. உங்கள் பாடங்களை (பழைய) 3 ம் முறையாக படிக்கிறேன். ஆனாலும், ஒரு ஜாதகத்தைப் பார்த்தால் எப்படி பலன் பார்ப்பது என்று குழம்புகிறது. நானும் விடுவதாக இல்லை.

    ReplyDelete
  59. ////Uma said...
    கணக்காய்வாளர் - ஆடிட்டர்! கணக்கைப் பிரித்து மேய்பவர். ஜோதிடத்தை மட்டும் விட்டு விடுவாரா என்//
    ஓ......... புதன் ரொம்பதான் பலமாக இருக்கிறார். எனக்கு புதன் மிது‍ ல் ஆட்சி, ஆனாலும் ல‍ க்கு 6 ம் இடம் + சனி பகவானும் கூட. உங்கள் பாடங்களை (பழைய) 3 ம் முறையாக படிக்கிறேன். ஆனாலும், ஒரு ஜாதகத்தைப் பார்த்தால் எப்படி பலன் பார்ப்பது என்று குழம்புகிறது. நானும் விடுவதாக இல்லை./////

    ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். பிடிபடும்வரை விடாதீர்கள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com