மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.9.09

சனிப் பெயர்ச்சி!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
சனிப் பெயர்ச்சி!

சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும்
இல்லை என்பார்கள்.

சனி என்ன நம் மாமனாரா? பெண்ணைக் கொடுத்தவரா? அவராக
வந்து கொடுப்பதற்கு?

நம் ஜாதகத்தின் படி என்னென்ன பலாபலன்கள் உள்ளதோ - அதாவது
நம் கர்மவினைப்படி என்ன பலன்கள் store ஆகியுள்ளதோ - அதைக்
கொடுப்பவர் அவர். அவர் store keeper. அவ்வளவுதான். அவரைக் கண்டு
பயப்பட வேண்டாம்.

அவரில்லாமல் யாருடைய வாழ்க்கையும் இங்கே நடக்காது.
ஆமாம், அவர்தான் ஆயுள்காரகர். அயுள் முடிந்துவிட்டால், ஜாதகனை
ஒரு விநாடிகூட, இங்கே இருக்க அவர் அனுமதிக்க மாட்டார்.
வலுக்கட்டாயமாக போர்டிங் பாஸ் கொடுத்து அனுப்பி விடுவார்.

எங்கே?

எங்கே அனுப்பிவைப்பார் என்பது தெரியாது. இந்த உலகத்தைவிட்டு
அனுப்பி வைத்து விடுவார். அது மட்டும் தெரியும்.

”வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!”
என்று கவியரசர் பாடி வைத்துள்ளார்.

அதோடு, தொடர்ந்து சொல்லியுள்ளார்:

”உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!”

கவியரசர் சொன்ன அந்தக் கோட்டைதான் எங்கே உள்ளது என்பது
தெரியவில்லை:-)))

ஆகவே சனீஷ்வரன் நமக்கு முக்கியமானவர். அவருக்கு இன்னொரு
இலாக்காவும் இருக்கிறது. அவர்தான் தொழில்காரகன், ஜீவனகாரகன்.
ஒரு ஜாதகன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு உரிய தொழிலை அல்லது
வேலையைக் கொடுப்பவர் அவர்தான்.

ஆகவே, அவர் அங்கேயும் நமக்கு முக்கியமானவர்
=====================================================
++++++ ஒரு ஜாதகனுக்கு அவன் பார்க்கும் தொழிலில் அல்லது வேலையில்
பிரச்சினை என்றால். அது ஏன்? எப்போது அந்த நிலை மாறும் என்பதைப்
பார்க்க ஒரு ஃபார்முலா உள்ளது.

10ஆம் வீட்டை, லக்கினமாக எடுத்துக் கொண்டு, அன்றையத் தேதியில்
கோச்சார சனீஷ்வரன் அந்த வீட்டிலிருந்து எங்கே இருக்கிறான் என்று
பாருங்கள். அந்த வீட்டிற்கு 6, 8,12ஆம் வீடுகளில் அவன் சஞ்சாரம் செய்தால்,
பிரச்சினைதான். அந்த வீட்டை விட்டு நகரும் வரை பிரச்சினை தீராது.
பதவி நீக்கம், பதவி பறிமுதல், பதவியிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுதல்,
தண்ணீர் இல்லாக் காட்டிற்கு மாற்றப்படுதல் என்று எது வேண்டுமென்றாலும்
நடக்கும். அந்த வீட்டிற்கு 11ல் சனி சஞ்சாரம் செய்தால், பதவி உயர்வு,
பதவியில் மேன்மை, பெருமை எல்லாம் கிடைக்கும்
----------------------------------------------------
அதுபோல எப்போது டிக்கெட் கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியுமா?
அதற்கு ஏதாவது சூத்திரம் இருக்கிறதா?

++++++இருக்கிறது. அது ஒருவரிச் சூத்திரம். அதை இங்கே சொல்ல முடியாது.
வாசகர்கள் என்னைப் பிறாண்டி எடுப்பதோடு. எனக்கு டிக்கெட் கொடுத்து
விடுவார்கள். ஆகவே, சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய
நேரத்தில் அதைச் சொல்லி உங்களுக்கு அறியத் தருகிறேன். பொறுத்திருங்கள்
--------------------------------------------------------
சரி விஷயத்திற்கு வருகிறேன்

செ‌ப்ட‌ம்ப‌ர் 26ஆ‌ம் தே‌தி சனிக்கிழமை, மதியம் மணி 3.18க்கு சனீஷ்வரன்
சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார்.

இ‌ந்த சனிப் பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய
மாற்றங்கள், பாதிப்புகள் அதற்கான பரிகாரங்கள் ஆகியன ராசி வாரியாக
தொகுத்து கீழே உள்ள தளத்தில் கொடுக்கப்பெற்றுள்ளது!

விரிவான சனிப்பெயர்ச்சி (பொதுப்பலன்களுக்கான) தளம் அது!
உங்கள் ராசிக்கான பகுதியைக் க்ளிக் செய்து, படித்து முழு விவரங்களையும்
அறிந்து கொள்ளுங்கள். அதற்கான சுட்டி கீழே உள்ளது.
----------------------------------------------------
இந்தப் பொதுப்பலன்களைப் பற்றி ஒரு விஷயம்.
அவைகள் பொதுவானவை அவ்வளவுதான்.
அவர்கள், பத்திரிக்கை விற்பதற்காகவும், சிலர் புத்தகங்கள் விற்பதற்காகவும்
பொதுப் பலன்களை எழுதுகிறார்கள்.
நாமும் காசு கொடுத்து வாங்கி, மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம்.
அது எப்படி நமக்குப் பொருந்தும்?

அம்பானிக்கும், அனுஷ்கா சர்மாவிற்கும், அஜீத்திற்கும், அய்யம்பேட்டை
கலிவரதனுக்கும், அம்மா மண்டபம் ரங்கராஜனுக்கும், ஒரே ராசி என்று வைத்துக்
கொள்ளூங்கள், இந்தப் பொதுப் பலன்களின் படியா, அவர்கள் அனைவருக்கும்
இன்ப, துன்பங்கள் வரப்போகின்றன. இல்லை!

110 கோடி மக்கள் வகுத்தல் 12 ராசிகள் = 9.16 கோடி மக்கள்
இந்த 9.16 கோடி மக்களுக்கும் எப்படிப் பலன் ஒருவிதமாகப் பொருந்தும்?

++++++அவரவர்களின் ஜாதகப்படிதான் பலன்கள் அமையும்.

1. உங்கள் ஜாதகத்தில் ஏகப்பட்ட யோகங்கள் இருந்து, அதற்கான தசாபுத்தி
நடந்து கொண்டிருந்தால், இந்தக் கோச்சாரங்கள் வழிவிட்டு விடும்.

2. நல்ல தசை அல்லது புத்தி நடந்து கொண்டிருந்தாலும் கோள்சாரங்கள்
பாதிப்பை ஏற்படுத்தாது.

சுருங்கச் சொன்னால், கோள்சாரத்தைவிட, தசை/புத்தி முக்கியம்.

ஒரு சாலையில் முதலமைச்சர் வருகிறார். அவருக்கு முன், அவருடைய பைலட்
மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகின்றன என்றால் மொத்த சாலையும்
துடைக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப் பட்டிருக்கும் இல்லையா? ஏன் தப்பித்தவறி
நீங்கள் சென்றாலும், வழி விட்டு ஒதுங்கி நிற்ப்பீர்கள் இல்லையா?
அதுபோலத்தான் இதுவும்.
------------------------------------------------------------------
பெயர்ச்சி என்றவுடன், சனீஷ்வரன் மூட்டை முடிச்சுகளைக் கட்டி எடுத்துக்
கொண்டு வீடு மாறுகிறார் என்று நினைக்க வேண்டாம்.

அவருக்கு எதற்கு மூட்டை, முடிச்சு?

வானவெளியில், 121 பாகையில் இருந்து 150 பாகைகள் வரை, சிம்ம ராசியில்
இதுவரை சஞ்சாரம் செய்தவர், இப்போது 151 பாகைக்குள், தன் சுழற்சியின் மூலம்
நுழைகிறார். அது கன்னி ராசி. அங்கே அவர் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு
வாசம் செய்வார்.

அவர் ஒரு பாகையைக் கடக்க எடுத்துக் கொள்ளூம் காலம் ஒரு மாதமாகும்.
கன்னிராசியின் 30 பாகைகளையும் அவர் கடப்பதற்கு 30 மாதங்களாகும்.

அதுவரை அங்கே இருப்பார். அங்கே மடக்கு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து
கொண்டு செய்ய வேண்டிய பணிகளைச் செவ்வனே செய்வார்.
--------------------------------------------------------
இந்த சனிப்பெயர்ச்சியால், அதிக நன்மைகளை அடைய உள்ளவர்கள், மகர
ராசிக் காரர்களும், கடக ராசிக்காரர்களும் ஆவார்கள்.

1
மகர ராசிக்காரர்கள், அஷ்டமச் சனியால் (அதாவது 8ஆம் இடத்துச் சனியால்)
பலவிதமான தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அந்தத்
தொல்லைகள் அனைத்தும் நீங்கிவிடும். வாழ்க்கை வளம் பெறும், மகிழ்ச்சி
உடையதாக இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++
2
அதுபோல கடக ராசிக்காரர்களும், இதுவரை, ஏழரைச் சனியால் அவதிப்
பட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த அவதிகள் முழுமையாக நீங்கி விடும்.
வாழ்க்கை வளம் பெறும், மகிழ்ச்சி உடையதாக மாறும்.
இதுவரை பாதச்சனியாக அமர்ந்து அவர்களைப் பலவழிகளிலும் அலைக்கழித்த
சனிஷ்வரன் யோகம் தரும் வீடான 3ஆம் வீட்டில் (அவருக்கு அது நல்ல வீடு)
அமர்ந்து, புகழையும், பாராட்டையும் அவர்களுக்குத் தருவார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
3.
மேஷ ராசிக்கு ஆறாம் இடத்திற்கு சனி வருகிறார். அந்த ராசிக்காரர்களுக்கு
எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
இதுவரை 5ஆம் வீட்டில் அமர்ந்து கொண்டு, அல்லல்படுத்திய சனீஷ்வரன்,
விபரீத வீடான 6ஆம் வீட்டில் அமர்ந்து சகல யோகங்களையும் தர உள்ளார்.
++++++++++++++++++++++++++++++++++++++++
4.
விருச்சிக ராசிக்குப் பதினொன்றாம் இடத்திற்கு சனி வருகிறார்.
அந்த ராசிக்காரர்களுக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
இதுவரை 10ஆம் வீட்டில் நின்ற சனிபகவான், லாப வீடான 11ஆம் வீட்டில்
அமர்ந்து பல நன்மைகளைச் செய்ய உள்ளார்.
+++++++++++++++++++++++++++++++++++++++
5.
மீன ராசிக்காரர்களுக்கு 7ஆம் இடத்திற்கு சனி வருகிறார். அவர்களுக்கு
தொல்லைகள் அவ்வப்போது தலையைக் காட்டும். இதுவரை ராசிக்கு 6வது
வீட்டில் அமர்ந்து பல நன்மைகளைச் செய்த சனீஷ்வரன், ராசிக்கு 7வது வீட்டில்
நுழைந்து தலைவலியைத் தரப்போகிறார். வீண் அலைச்சல், நஷ்டங்கள் ஏற்படும்.
நன்மைகள் அதிகமாக இருக்காது!
+++++++++++++++++++++++++++++++++++++++
6.
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி, 8ஆம் இடத்திற்கு சனி வருகிறார்.
அவர்களுக்குத் தொல்லைகள் முதுகில் ஏறி சவாரி செய்யும்.
இந்த ராசிக்காரர்களுக்குத்தான் அதிகமான தொல்லைகள், பிரச்சினைகள்
ஏற்படும். அஷ்டமச்சனி. அதை நினைவில் வையுங்கள்
இதுவரை உங்களின் ராசிக்கு 7வது வீட்டில் இருந்தவர் அஷ்ட்டமத்துச் சனியாக
இருந்து செயல்படப் போகிறார்.அஷ்ட்டமத்துச் சனி அவஸ்தை தான்.
அகப்பட்டவனுக்கு அஷ்ட்டமத்துச் சனி என்பார்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++++++
7.
துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பம். முதல் இரண்டரை
ஆண்டுகளில் பலவிதமான விரையங்கள் ஏற்படும். விரையம் = Loss
+++++++++++++++++++++++++++++++++++++++
10.சிம்மம் - 2ல் பாதச்சனி (ஏழரையில் கழிவுச்சனி)
11. கன்னி - 1ல் ஜன்மச்சனி (ஏழரையில் 2வது காலகட்டம்)
இவ்விரண்டு ராசிக்காரர்களுக்கும் விட்டகுறை, தொட்டகுறை.
ஏழரைச் சனியின் பாதிப்புக்கள் தொடரும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8. ரிஷபம் - 5ல் கோள்சாரச்சனி (கோள்சாரத்தில் மனஸ்தானம்)
9. மிதுனம் - 4ல் (சுகஸ்தானத்தில் கோள்சாரச்சனி)
12. தனுசு - 10 ல் கோள்சாரக் கேந்திரச்சனி
இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் கலந்த பலன் (Mixed Results)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சனியின் கோச்சார சஞ்சாரத்தால் கிடைக்கும் நன்மைகள் அல்லது
தீமைகளின் அளவைச் சொல்ல முடியுமா? அதற்கு ஏதாவது சூத்திரம்
இருக்கிறதா?

++++++இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் எந்தந்த இடங்களில் 30ம்
அதற்கு மேற்பட்ட பரல்களும் உள்ளன என்பதைக் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். அந்த இடங்களில் சஞ்சார சனியால் எந்தவிதமான
உபத்திரவங்களும் இருக்காது.

ஏழரைச் சனியின் இடங்களான 12, 1, 2ஆம் வீடு ஆகிய மூன்று இடங்களிலும்,
30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருந்தால், ஏழரைச் சனி, ஜாதகனை
ஒன்றும் செய்யாது. அந்த ஏழரை ஆண்டுகளும் ஜாதகன் செளக்கியமாக
இருப்பான்.

அதற்கு மாறாக சனி சஞ்சாரம் செய்யும் இடம் 25 பரல்களூம், அல்லது
அதற்குக் குறைவான பரல்களைக் கொண்டிருந்தால் கோள்சாரச் சனி,
ஜாதகனைப் படுத்தி எடுக்கும்.
------------------------------------------------------------------
முழுப் பலன்களுக்கான சுட்டி இங்கே!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

102 comments:

  1. விளக்கம் நன்று. எனக்கு மிதுன ராசி. சுகஸ்தானத்துக்கு போகப் போகிறார். ஒரு ஆறுதல். எனக்கு அங்கே 33 பரல்கள்.

    ReplyDelete
  2. sir, interesting lesson on sani peyarchi, my rasi is mithunam, and in the fourth place kanni enaku 30 paralkal so I feel little relief.!!!

    ReplyDelete
  3. நீங்க சொன்னது போலவே நடந்தது.
    எனக்கு 12,1,2 ஆம் இடங்களில் 27,20௦,21 பரல்கள் என்ற நிலையில் ஏழரைச் சனியின் காலம் குரு தசை என்று கூடப் பார்க்காமல் புரட்டி எடுத்தது.
    வெளிநாடு சம்பந்தமாக ஜவாப்தாரியாகி கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் businessலே பிரச்சினை,பார்ட்னெர் எதிராளியாக,வெட்டுகுத்து ஆகும் அளவுக்கு,பஞ்சாயத்திலே எதிர் தீர்ப்பு, FIR போடாத குறைதான்,(எப்படியாவது FIR போட்டு விடலாமா என்று எல்லா எதிரிகளும் துடித்த அளவுக்கு),அவமானம் என்று என் அளவுக்கு பெரும் பண நஷ்டங்கள்.
    ஜப்பானிலே ஒரு வருட காலத்திலேயே சேர்க்கக்கூடிய தொகையை 4லே மாசத்துலே இழந்தேன்.
    நம்பிய சுற்றம் சூழல் நட்புன்னு எல்லாம் போனதுதான் ரொம்ப வருத்தம்.யார் யாரெலாம் எப்போதுமே என்கூட நிப்பாங்கன்னும், எதை எதை வாழ்க்கையில் செய்யவே கூடாதுன்னும் ரொம்ப நல்லாவே பாடம் எடுத்தார் தலைவர் சனிபகவான்.
    இதிலே காமெடி என்ன என்றால் எல்லாமே நானாகவே வம்புக்குன்னு தேடிக்கிட்டது.

    ReplyDelete
  4. மகரத்தில் பிறந்த சிகரமே . . .

    அட. . .
    அது நீங்க தானா . . .

    அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி
    விலகியது . . .(காலம் கனியுது)

    இது விலகலா . .
    விலக்கலா . . .

    அடியார் அவர்களுக்கு
    "நல்லனவே செய்யும்"
    என ஞான சம்பந்தப் பெருமான்
    இறைவன் திருவாக்கு கொண்டு கோளறு பதிகத்தில் "ஆனை" இட்டு உரைத்த வண்ணம் . .

    நம் போன்ற சிவனடியார்களுக்கு
    நல்லதே நடக்கும் . . .
    தீயன வந்தாலும் தாங்கும் சக்தியை இறைவன்தருவதால். . .

    பொய்மையும் வாய்மைஇடத்தே என்பது போல் . . .
    தீமையும் நன்மையிடத்தே . .

    ReplyDelete
  5. மீன ராசிகாரன் எனக்கு 6 சனியில் 12ம் வீட்டதிபதி தசையில் பெரிய நன்மை கிடைக்கவில்லை. தசை தான் முக்கியம், கோள்சாரம் அடுத்த்து என்று இப்போது புரிகிறது.

    ReplyDelete
  6. விளக்கம் அபாரம்.

    பொது பலன் படித்துவிட்டு Mesha rasi super time நினைதேன்,but after reading your விளக்கம், Bit clear How people can mislead with பொது பலன். Thanks

    Mesha rasi- Rishaba Lagna- சந்திரனுக்கு 6ல் இப்போது சனி அமர்கிறார் (As per பொது பலன் good), but ஐதகரின் லக்னதின் 10ம் இடத்திலிருந்து சனி அமர்கிர இடம் 8,அஷ்டகவார்கதில் 6ம் இடத்துக்கு 28 பரல், தற்போது for him Job Not comfortable நிலைமை with these aspects will சனி will make things more worse in Job?

    ReplyDelete
  7. ////ananth said...
    விளக்கம் நன்று. எனக்கு மிதுன ராசி. சுகஸ்தானத்துக்கு போகப் போகிறார். ஒரு ஆறுதல். எனக்கு அங்கே 33 பரல்கள்.////

    வாழ்த்துக்கள் ஆனந்த்! இந்த இரண்டரை ஆண்டுகள் உங்களளுக்கு வளம் சேர்ப்பதாக இருக்கட்டும்!

    ReplyDelete
  8. ////Thanuja said...
    sir, interesting lesson on sani peyarchi, my rasi is mithunam, and in the fourth place kanni enaku 30 paralkal so I feel little relief.!!!/////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  9. /////minorwall said...
    நீங்க சொன்னது போலவே நடந்தது.
    எனக்கு 12,1,2 ஆம் இடங்களில் 27,20,21 பரல்கள் என்ற நிலையில் ஏழரைச் சனியின் காலம் குரு தசை என்றுகூடப் பார்க்காமல் புரட்டி எடுத்தது.
    வெளிநாடு சம்பந்தமாக ஜவாப்தாரியாகி கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் businessலே பிரச்சினை,பார்ட்னர் எதிராளியாக,வெட்டுகுத்து ஆகும் அளவுக்கு,பஞ்சாயத்திலே எதிர் தீர்ப்பு, FIR போடாத குறைதான்,(எப்படியாவது FIR போட்டு விடலாமா என்று எல்லா எதிரிகளும் துடித்த அளவுக்கு),அவமானம் என்று என் அளவுக்கு பெரும் பண நஷ்டங்கள்.
    ஜப்பானிலே ஒரு வருட காலத்திலேயே சேர்க்கக்கூடிய தொகையை 4லே மாசத்துலே இழந்தேன்.
    நம்பிய சுற்றம் சூழல் நட்புன்னு எல்லாம் போனதுதான் ரொம்ப வருத்தம்.யார் யாரெலாம் எப்போதுமே என்கூட நிப்பாங்கன்னும், எதை எதை வாழ்க்கையில் செய்யவே கூடாதுன்னும் ரொம்ப நல்லாவே பாடம் எடுத்தார் தலைவர் சனிபகவான்.
    இதிலே காமெடி என்ன என்றால் எல்லாமே நானாகவே வம்புக்குன்னு தேடிக்கிட்டது./////

    இல்லை, அதுவும் சனியின் கைங்கர்யம்தான். உங்களை வம்பிற்குப் போகச்சொன்னது அல்லது வம்பில் சிக்க வைத்தது எல்லாம் அவருடைய வேலைதான்!

    எப்பேர்ப்பட்ட ஆளையும், அவர் மடக்கி விடுவார்! அவரால் முடியாதது ஒன்றுமில்லை.
    ஹைவேயில் நாம் வண்டியை ஒழுங்காக ஓட்டினாலும், எதிரில் வருகிறன் லேன் மாறி வந்து தப்பு செய்தால் நாம் என்ன செய்ய முடியும்? அவர், ஒன்று நம்மைத் தப்பு செய்ய வைப்பார். அல்லது ஒருவனை அனுப்பி வைத்து நம் நிலைமையை தப்பாக்கி விடுவார். அதுதான் சனீஷ்வரனின் வலிமை!

    ReplyDelete
  10. iyer said...
    மகரத்தில் பிறந்த சிகரமே . . .
    அட. . .
    அது நீங்க தானா . . .
    அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி
    விலகியது . . .(காலம் கனியுது)
    இது விலகலா . .
    விலக்கலா . . .
    அடியார் அவர்களுக்கு
    "நல்லனவே செய்யும்"
    என ஞான சம்பந்தப் பெருமான்
    இறைவன் திருவாக்கு கொண்டு கோளறு பதிகத்தில் "ஆனை" இட்டு உரைத்த வண்ணம் . .
    நம் போன்ற சிவனடியார்களுக்கு
    நல்லதே நடக்கும் . . .
    தீயன வந்தாலும் தாங்கும் சக்தியை இறைவன்தருவதால். . .
    பொய்மையும் வாய்மைஇடத்தே என்பது போல் . . .
    தீமையும் நன்மையிடத்தே . .////

    என்ன சுவாமி சொல்கிறீர்கள்? உங்கள் எழுத்துக்களுக்குக் கோனார் வந்து நோட்ஸ் போட வேண்டும் போல உள்ளதே!

    ReplyDelete
  11. ////krish said...
    மீன ராசிகாரன் எனக்கு 6 சனியில் 12ம் வீட்டதிபதி தசையில் பெரிய நன்மை கிடைக்கவில்லை. தசை தான் முக்கியம், கோள்சாரம் அடுத்த்து என்று இப்போது புரிகிறது.////

    தகவலுக்கு நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  12. ////singaiSuri said...
    விளக்கம் அபாரம்.
    பொது பலன் படித்துவிட்டு Mesha rasi super time நினைதேன்,but after reading your விளக்கம், Bit clear How people can mislead with பொது பலன். Thanks
    Mesha rasi- Rishaba Lagna- சந்திரனுக்கு 6ல் இப்போது சனி அமர்கிறார் (As per பொது பலன் good), but ஜாதகரின் லக்னத்தின் 10ம் இடத்திலிருந்து சனி அமர்கிற இடம் 8,அஷ்டகவர்க்கதில் 6ம் இடத்துக்கு 28 பரல், தற்போது for him Job Not comfortable நிலைமை with these aspects will சனி will make things more worse in Job?////

    தினந்தோறும் சனியை வணங்குங்கள். உபத்திரவங்கள் குறையும்!

    ReplyDelete
  13. நான் விருச்சிக ராசி லாப ஸ்தானத்தில் 32பரல் மேலும் ராகு உச்சத்தில் சந்திரனுடன் சேர்ந்து இப்போது சந்திர தசை, நன்மைதானே?

    ReplyDelete
  14. GOOD MORNING SIR,

    I AM MEENA RASI 7TH HOUSE(KANNI) HAS 30 ASTAVARGAM NOW RUNNING MOON DASA AND MERCURY BUDHI. SO I FEEL LITTLE RELIEF. DOES THE SATURN HURT ME LOT.

    YOUR LOVINGLY
    SUNDARI.P

    ReplyDelete
  15. /////Uma said...
    நான் விருச்சிக ராசி லாப ஸ்தானத்தில் 32பரல் மேலும் ராகு உச்சத்தில் சந்திரனுடன் சேர்ந்து இப்போது சந்திர தசை, நன்மைதானே?////

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திரன் நீசம். நீசமாகிவிட்டதால், சந்திரதசை பெரும் நன்மைகளைச் செய்யும் வாய்ப்பில்லை!

    ReplyDelete
  16. /////sundari said...
    GOOD MORNING SIR,
    I AM MEENA RASI 7TH HOUSE(KANNI) HAS 30 ASTAVARGAM NOW RUNNING MOON DASA AND MERCURY BUDHI. SO I FEEL LITTLE RELIEF. DOES THE SATURN HURT ME LOT.
    YOUR LOVINGLY
    SUNDARI.P//////

    நீங்கள் சிம்ம லக்கினக்காரர். சிம்ம லக்கினத்திற்கு சனி first rated malefic. அதனால் சனியின் உபத்திரவங்கள் இருக்கத்தான் செய்யும்! வடபழநி முருகனை வழிபடுங்கள். அவர் உங்களுக்குக் கை கொடுப்பார்!

    ReplyDelete
  17. அப்பாடா இவ்வளவு நாளும் பட்ட கஸ்டம் இனிக் குறையும். வாத்தியாரே நான் மகர ராசி அப்போ இனிக் குந்தவையைத் தேடலாம்.

    ReplyDelete
  18. நான் மகரம், மகன் கடகம். பட்ட கஷ்டத்திலிருந்து விடுதலை. இந்தச் செய்தி சந்தோஷமா இருக்கு.

    கன்னி ராசிக்காரங்களுக்கு எப்போது ஏழரை முடிவடைகிறது?????

    ReplyDelete
  19. வணக்கம் ஐயா,

    இதுவ‌ரை 5ம் இட‌த்துச் ச‌னியும்,10ம் இட‌த்துக் குருவும் என்னைப் புரட்டிப் போட்டுவிட்டார்க‌ள்.5ம் இடத்துச் சனி பகவான் அவமானங்களை அள்ளித் தந்தார்.பத்தாமிடத்துக் குரு பதவியைப் பறித்தார்.‌ஆனாலும் 11ம் வீட்டு (இலாப ஸ்தானம்) அதிபதியான சூரிய திசை என்பதால் ஆறுதல் பரிசாக சொத்து மதிப்பை மட்டும் ஆறு மடங்காக்கிவிட்டுப் போகிறார்.கோள் சாரத்தை விட தசா/தசாபுத்தி எவ்வளவு முக்கியம் என்பதற்கு இது ஒன்றே எடுத்துக் காட்டு.‌உங்க‌ள் ப‌திவைப் ப‌டிக்க‌த் தொட‌ங்கிய‌ பிறகுதான் எனக்குத் தெளிவும் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வந்துள்ளது.மேஷ‌ ராசிக்கார‌னான‌ என‌க்கு சனி பகவான் அதன் மிகுந்த நன்மை அளிக்கும் வீடான 6ம் வீட்டிற்குப் போகிறார்.டிசம்பரில் குருவும் அதன் அற்புத பலன்களை அளிக்கும் 11ம் வீட்டிற்குப் போகவிருக்கிறார்.ஜனவரியில் எனது பத்தாம் வீட்டு (தொழில் ஸ்தானம்) அதிபதியான சந்திரனின் திசையும்,புத்தியும் ஆரம்பமாவதால் இனி கொஞ்ச காலமாவது இளைப்பாற வாய்ப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையுடன் சனிப் பெயர்ச்சியை சந்திக்கத் தயாராகிவிட்டேன்.மிக்க நன்றி.

    ReplyDelete
  20. ஐயா,
    எனக்கு துலாம்ராசி .லக்கனத்திலிருந்து 11ம்மிடத்தில் சனி.எனக்கு இரண்டாம் சுற்று 71/2சனி

    ReplyDelete
  21. அய்யா, எனக்கு தனுசு லக்னத்தில் புதன், மிதுனத்தில் குரு&சந்திரன், மகரத்தில் சூரியன் & சுக்ரன், சிம்மத்தில் சனி, கன்னியில் ராகு.

    இப்போது கன்னியில் சனி...கன்னியில் 27 பரல்கள்,புதன் திசை,புதன் புக்தி...

    சம்பள உயர்வு கிடடைக்குமா? அல்லது என்னுடைய வேலைக்கு ஆபத்து உண்டா?

    ReplyDelete
  22. ஓ..
    திருப்பதிக்கே லட்டுவா . .
    கன்டக்டருக்கே டிக்கெட்டா . .
    என்ற வரிசையில்
    இப்போ . .

    கோனாருக்கே கோனார் நோட்ஸா..

    ReplyDelete
  23. எத்தனையோ பேப்பர்களில்
    ராசிக்கு தனியாகவும்
    நட்சத்திரங்களுக்கு தனியாகவும்
    பலன்கள் கொடுத்திருந்தாலும்,
    ந‌ம‌து வாத்தியார் கொடுக்கும்
    ப‌ல‌ன்க‌ளை ப‌டித்தால் த‌னி
    தெம்பு வ‌ருது சாமி.
    அடியேன் கும்ப‌ராசி.
    ந‌ன்றி அய்யா.

    ReplyDelete
  24. saar, viruchika rasi. sukra tasai. raku uchcham, anusham. inimallavathu enakkana viruppankal niraiverum?

    ReplyDelete
  25. வாத்தியாரே..

    என் வீட்டுக்குள்ள வர்றதுக்கு முன்னாடியே வேலையைக் காமிச்சிட்டார் சனீஸ்வரன்..

    இங்க பாருங்க என் சோகத்தை.. http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_26.html

    ReplyDelete
  26. ஏழரைச்சனி இன்று 3.27க்கு விலகி,3ம் இடத்துக்குச் செல்கிறார்.ஜென்ம கேது 7ல் ராகு,எல்லம் சேர்ந்து கொண்டு இல்லாத பிரச்சனை எல்லாம்வந்தது.தானாபாதி.தம்பிரானாபாதி.ந‌ல்லveளை,பொங்குசனி.ஜென்ம சனியின் போது வினாயகர் கோவிலை தினமும் சுத்தம் செய்தேன்.வரும் என‌
    பயம் காட்டிய பிரச்னைகள் தெரித்து ஓடி விட்டன.வாசகர்கள் கோவில் கைங்கர்யம் செய்தால் சனைச்சரன் மன்னித்து விட்டு விடுவார்.நான் முன்னுதாரண்ம்.

    ReplyDelete
  27. விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திரன் நீசம். நீசமாகிவிட்டதால், சந்திரதசை பெரும் நன்மைகளைச் செய்யும் வாய்ப்பில்லை//
    விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் ஆனால் எனக்கு நீச்ச செவ்வாயும் நீச்ச சந்திரனும் பரிவர்த்தனை (நீச்ச பங்க ராஜ யோகம்), அப்போதும் சந்திர தசை நன்மை செய்யாதா?

    ReplyDelete
  28. நல்ல timely பாடம் சார்.

    சனி லக்கினத்தில் சஞ்சரிக்கும்போதும் உடம்பையும் மனதையும் படுத்துவார் என்று நினைக்கிறேன். என்னை படுத்தினார்( கடக லக்னம்). இத்தனைக்கும் அங்கே 36 பரல்கள். சனியின் சுயவர்கத்தில் கடகத்தில் 6 பரல்கள். தெளிவு படுத்துங்கள் சார். I was running jupiter dasa mercury bukthi.

    ReplyDelete
  29. வாத்தியாரே கடகராசிக்கு நெஜமாலுமே சனி விட்டுடிச்சா? :-)

    ReplyDelete
  30. ////வந்தியத்தேவன் said...
    அப்பாடா இவ்வளவு நாளும் பட்ட கஸ்டம் இனிக் குறையும். வாத்தியாரே நான் மகர ராசி

    அப்போ இனிக் குந்தவையைத் தேடலாம்.////

    ஆகா, தேடுங்கள். அப்படியே உங்கள் தோழி பூங்குழலியையும் தேடுங்கள்!

    ReplyDelete
  31. ////புதுகைத் தென்றல் said...
    நான் மகரம், மகன் கடகம். பட்ட கஷ்டத்திலிருந்து விடுதலை. இந்தச் செய்தி சந்தோஷமா

    இருக்கு.
    கன்னி ராசிக்காரங்களுக்கு எப்போது ஏழரை முடிவடைகிறது?/////

    கன்னிக்கு இப்போதுதான் 2nd phase, இன்னும் 3rd phase உள்ளது. ஆக மொத்தம் 5

    ஆண்டுகள் ஆகும் சகோதரி!

    ReplyDelete
  32. /////இராதா கிருஷ்ணன் said...
    வணக்கம் ஐயா,
    இதுவ‌ரை 5ம் இட‌த்துச் ச‌னியும்,10ம் இட‌த்துக் குருவும் என்னைப் புரட்டிப்

    போட்டுவிட்டார்க‌ள்.5ம் இடத்துச் சனி பகவான் அவமானங்களை அள்ளித்

    தந்தார்.பத்தாமிடத்துக் குரு பதவியைப் பறித்தார்.‌ஆனாலும் 11ம் வீட்டு (இலாப ஸ்தானம்)

    அதிபதியான சூரிய திசை என்பதால் ஆறுதல் பரிசாக சொத்து மதிப்பை மட்டும் ஆறு

    மடங்காக்கிவிட்டுப் போகிறார்.கோள் சாரத்தை விட தசா/தசாபுத்தி எவ்வளவு முக்கியம்

    என்பதற்கு இது ஒன்றே எடுத்துக் காட்டு.‌உங்க‌ள் ப‌திவைப் ப‌டிக்க‌த் தொட‌ங்கிய‌ பிறகுதான்

    எனக்குத் தெளிவும் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வந்துள்ளது.மேஷ‌ ராசிக்கார‌னான‌

    என‌க்கு சனி பகவான் அதன் மிகுந்த நன்மை அளிக்கும் வீடான 6ம் வீட்டிற்குப்

    போகிறார்.டிசம்பரில் குருவும் அதன் அற்புத பலன்களை அளிக்கும் 11ம் வீட்டிற்குப்

    போகவிருக்கிறார்.ஜனவரியில் எனது பத்தாம் வீட்டு (தொழில் ஸ்தானம்) அதிபதியான

    சந்திரனின் திசையும்,புத்தியும் ஆரம்பமாவதால் இனி கொஞ்ச காலமாவது இளைப்பாற

    வாய்ப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையுடன் சனிப் பெயர்ச்சியை சந்திக்கத்

    தயாராகிவிட்டேன்.மிக்க நன்றி.//////

    அதெல்லாம் கிடைக்கும் தைரியமாக இருங்கள். எல்லோருக்கும் 337 தான்!

    ReplyDelete
  33. /////DHANA said...
    ஐயா,
    எனக்கு துலாம்ராசி .லக்கனத்திலிருந்து 11ம்மிடத்தில் சனி.எனக்கு இரண்டாம் சுற்று

    71/2சனி/////

    Second round of Saturn will elevate the native to the next position in his life. Don't worry!
    அதனால்தான் இரண்டாம் சுற்றுக்குப் பொங்கு சனி என்று பெயர்

    ReplyDelete
  34. ////Arul said...
    அய்யா, எனக்கு தனுசு லக்னத்தில் புதன், மிதுனத்தில் குரு&சந்திரன், மகரத்தில் சூரியன்

    & சுக்ரன், சிம்மத்தில் சனி, கன்னியில் ராகு.
    இப்போது கன்னியில் சனி...கன்னியில் 27 பரல்கள்,புதன் திசை,புதன் புக்தி...
    சம்பள உயர்வு கிடைக்குமா? அல்லது என்னுடைய வேலைக்கு ஆபத்து உண்டா?/////

    பத்துக்கு உரிய புதனின் தசை. பத்தாம் இடத்தில் சனி. நல்லது நடக்கும். கவலைப்

    படாதீர்கள். பரல்கள் சராசரிக்கும் குறைவாக இருப்பதால் தாமதப்படும்!

    ReplyDelete
  35. ////iyer said...
    ஓ..
    திருப்பதிக்கே லட்டுவா . .
    கன்டக்டருக்கே டிக்கெட்டா . .
    என்ற வரிசையில்
    இப்போ . .
    கோனாருக்கே கோனார் நோட்ஸா../////

    நன்றாகப் படியுங்கள் உங்கள் பின்னூட்டங்கள் பிடிபடவில்லை. அதற்குத்தான் நோட்ஸ்

    கேட்டேன். கோனாருக்கு எதற்கு கோனார் நோட்ஸ்? விவகாரமாக இருக்கிறதே ஸ்வாமி!

    ReplyDelete
  36. /////thirunarayanan said...
    எத்தனையோ பேப்பர்களில்
    ராசிக்கு தனியாகவும்
    நட்சத்திரங்களுக்கு தனியாகவும்
    பலன்கள் கொடுத்திருந்தாலும்,
    ந‌ம‌து வாத்தியார் கொடுக்கும்
    ப‌ல‌ன்க‌ளை ப‌டித்தால் த‌னி
    தெம்பு வ‌ருது சாமி.
    அடியேன் கும்ப‌ராசி.
    ந‌ன்றி அய்யா.//////

    ‘ நாராயணா’ என்று சொன்னால் எனக்குத் தெம்பு கிடைக்கிறது சாமி:-)))))

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. சரஸ்வதி பூஜை முன்னிட்டு கல்வி சம்பந்தமாக ஒரு பதிவு கொடுதால் பொருத்தமாக இருக்குமே ஐயா...எதிர் பார்க்கலாமா???

    ReplyDelete
  39. /////vattukozhi said...
    saar, viruchika rasi. sukra tasai. raku uchcham, anusham. inimallavathu enakkana

    viruppankal niraiverum?/////

    நியாயமான விருப்பங்கள் நிறைவேறும் சகோதரி.

    ReplyDelete
  40. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    என் வீட்டுக்குள்ள வர்றதுக்கு முன்னாடியே வேலையைக் காமிச்சிட்டார் சனீஸ்வரன்..
    இங்க பாருங்க என் சோகத்தை.. http://truetamilans.blogspot.com/2009/09/blog-

    post_26.html/////

    அதெல்லாம் சரிதான். உங்களுக்குக் கை கொடுக்கும் தண்டாயுதபாணிமீது கோபம் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது உனா தானா? அடுத்த பின்னூட்டத்தைப் படியுங்கள்.அனுபவம் பேசுகிறது அதில்!

    ReplyDelete
  41. /////kmr.krishnan said...
    ஏழரைச்சனி இன்று 3.27க்கு விலகி,3ம் இடத்துக்குச் செல்கிறார்.ஜென்ம கேது 7ல்

    ராகு,எல்லம் சேர்ந்து கொண்டு இல்லாத பிரச்சனை

    எல்லாம்வந்தது.தானாபாதி.தம்பிரானாபாதி.ந‌ல்லveளை,பொங்குசனி.ஜென்ம சனியின் போது

    வினாயகர் கோவிலை தினமும் சுத்தம் செய்தேன்.வரும் என‌
    பயம் காட்டிய பிரச்னைகள் தெரித்து ஓடி விட்டன.வாசகர்கள் கோவில் கைங்கர்யம்

    செய்தால் சனீஸ்வரன் மன்னித்து விட்டு விடுவார்.நான் முன்னுதாரன்ணம்./////

    உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  42. Dear Sir,
    As Mr. Thirunarayan said,even we read many rasipalan books,after reading your artecles, explanation, palans our confidence is elevated and boosted to face the consiquences. Good and easy understadabl explanation. For me sani Bhagavan entering to 12 place &6th place from 10th house(mesham)my ashtagavargam (12=31,1=31,2=33)
    but sani suyavargam got only 2parals. will this 2 1/2 yrs will go with mixed results or with troubles this my 2nd round of 71/2yrs sani.

    ReplyDelete
  43. சரஸ்வதி பூஜைக்கான புராண விளக்கங்கள் இருந்தால் கொஞ்சம் தாருங்கள் ஐயா.பயனுள்ளதாக இருக்கும்.நன்றி!!!

    ReplyDelete
  44. Rasi/Lagnam பலன்கள் பார்க்க I found something in below site.

    http://idlyvadai.blogspot.com/2009/09/blog-post_6496.html

    ReplyDelete
  45. சார்,
    இங்கே சனி 5லே இருந்தால் மிக்ஸ்ட் ரிசல்ட் என்று நீங்கள் சொன்னீர்கள்.
    1.லக்கினத்திலிருந்து 5ஆம் இடம் பூர்வ புண்ணியம், புத்திர ஸ்தானம் என்னும்போது கோள்சாரத்திலே சனி சந்திரனுக்கு 5லே இருந்தால் பூர்வ புண்ணியம், புத்திர ஸ்தானத்துக்கான பலன்களுக்கு நல்ல விளைவை ஏற்படுத்துவாரா?அல்லது கெடுதலா?
    2.கோள்சாரத்திலே இருக்கும் இடத்திலிருந்து சனி லக்கினத்திலிருந்து 5ஆம் இடத்தை 7ஆம் பார்வை பார்த்தால் பலன்கள் எவ்வாறாகும்? (இவ்வாறு கோட்சாரத்தை ஜனன கால கிரக நிலை லக்கின பாவ அடிப்படையுடன் லிங்க் பண்ணிப் பார்ப்பது முறையா?தவறா? )
    குழப்பமாக உள்ளது.விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  46. /////Uma said...
    விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திரன் நீசம். நீசமாகிவிட்டதால், சந்திரதசை பெரும்

    நன்மைகளைச் செய்யும் வாய்ப்பில்லை//
    விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் ஆனால் எனக்கு நீச்ச செவ்வாயும் நீச்ச சந்திரனும்

    பரிவர்த்தனை (நீச்ச பங்க ராஜ யோகம்), அப்போதும் சந்திர தசை நன்மை செய்யாதா?/////
    செய்யாதா?////

    பரிவர்த்தனை செய்து கொண்டுள்ளவர்கள் இருவருமே வீணாகப் போய்விட்டார்களே சகோதரி! அதாவது இருவரும் நீசமாக உள்ளார்களே?

    உங்கள் சந்தோசத்துக்காக இதைச் சொல்கிறேன்: இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்!

    ReplyDelete
  47. chaks said...
    நல்ல timely பாடம் சார்.
    சனி லக்கினத்தில் சஞ்சரிக்கும்போதும் உடம்பையும் மனதையும் படுத்துவார் என்று நினைக்கிறேன். என்னை படுத்தினார்( கடக லக்னம்). இத்தனைக்கும் அங்கே 36 பரல்கள். சனியின் சுயவர்கத்தில் கடகத்தில் 6 பரல்கள். தெளிவு படுத்துங்கள் சார். I was running jupiter dasa mercury bukthi./////

    சஞ்சாரத்தைப் பார்ப்பதற்கு லக்கினத்தைவைத்து ஏன் குழப்புகிறீர்கள்? சஞ்சாரத்திற்கு ராசியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  48. /////யுவகிருஷ்ணா said...
    வாத்தியாரே கடகராசிக்கு நெஜமாலுமே சனி விட்டுடிச்சா? :-)////

    நெசமாலுமே விட்டிடுச்சு கண்ணா, விட்டிடுச்சு!

    ReplyDelete
  49. /////Arul said...
    சரஸ்வதி பூஜை முன்னிட்டு கல்வி சம்பந்தமாக ஒரு பதிவு கொடுதால் பொருத்தமாக இருக்குமே ஐயா...எதிர் பார்க்கலாமா???////

    தற்சமயம் நேரம் இல்லை. சுருக்கமாக எழுதுகிறேன்! இரண்டு நாள் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  50. marutham said...
    Dear Sir,
    As Mr. Thirunarayan said,even we read many rasipalan books,after reading your artecles, explanation, palans our confidence is elevated and boosted to face the consiquences. Good and easy understadabl explanation. For me sani Bhagavan entering to 12 place &6th place from 10th house(mesham)my ashtagavargam (12=31,1=31,2=33)
    but sani suyavargam got only 2parals. will this 2 1/2 yrs will go with mixed results or with troubles this my 2nd round of 71/2yrs sani.

    Second round of Saturn will elevate the native to the next position in his life. Don't worry!
    அதனால்தான் இரண்டாம் சுற்றுக்குப் பொங்கு சனி என்று பெயர்.

    ReplyDelete
  51. singaiSuri said...
    Rasi/Lagnam பலன்கள் பார்க்க I found something in below site.
    http://idlyvadai.blogspot.com/2009/09/blog-post_6496.html

    பார்க்கிறேன் நண்பரே. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  52. minorwall said...
    சார்,
    இங்கே சனி 5லே இருந்தால் மிக்ஸ்ட் ரிசல்ட் என்று நீங்கள் சொன்னீர்கள்.
    1.லக்கினத்திலிருந்து 5ஆம் இடம் பூர்வ புண்ணியம், புத்திர ஸ்தானம் என்னும்போது கோள்சாரத்திலே சனி சந்திரனுக்கு 5லே இருந்தால் பூர்வ புண்ணியம், புத்திர ஸ்தானத்துக்கான பலன்களுக்கு நல்ல விளைவை ஏற்படுத்துவாரா?அல்லது கெடுதலா?/////

    புத்திரஸ்தானத்திற்கான அதிகாரங்கள் வேறு கிரகங்களுக்கு உரியது. அதில் சனியின் தலையீடு இல்லாமல் சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா/புத்திகள் பார்த்துக்கொள்ளூம்.
    தசை/புத்தி வலுவாக இருந்தால் கோள்சாரம் வழிவிட்டுவிடும். பதிவில் எழுதியிருக்கிறேன் மைனர்.மீண்டும் ஒருமுறை படியுங்கள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    2.கோள்சாரத்திலே இருக்கும் இடத்திலிருந்து சனி லக்கினத்திலிருந்து 5ஆம் இடத்தை 7ஆம் பார்வை பார்த்தால் பலன்கள் எவ்வாறாகும்? (இவ்வாறு கோட்சாரத்தை ஜனன கால கிரக நிலை லக்கின பாவ அடிப்படையுடன் லிங்க் பண்ணிப் பார்ப்பது முறையா?தவறா? )
    குழப்பமாக உள்ளது.விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.//////

    இதில் குழப்பத்திற்கெல்லாம் இடமில்லை. மேலே உள்ள பதில்தான் இதற்கும்!

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. Dear Sir, I am thulam rasi; sani in second house and running sani thisai sukra buddhi. 7 1/2 sani second round starts now. Would this affect me a lot. - Krishnan

    ReplyDelete
  55. /////Mak said...
    Dear Sir, I am thulam rasi; sani in second house and running sani thisai sukra buddhi. 7 1/2 sani second round starts now. Would this affect me a lot. - Krishnan/////

    Second round of Saturn will elevate the native to the next position in his life. Don't worry!
    அதனால்தான் இரண்டாம் சுற்றுக்குப் பொங்கு சனி என்று பெயர்.

    ReplyDelete
  56. ஐயா,

    மிக அருமையான பாடம் இன்று. அனைவரும் பொதுப் பலன்களைப் பார்த்து ஏமாந்து போகிறார்கள். அதில் நானும் ஒருவன். எனக்கு போன முறை சனீஸ்வரன் 6ம் இடம். ஆனால் 10ம் வீட்டை லக்கினமாக எடுத்தால் சனி 12ம் வீட்டில் சஞ்சாரம். வேலை போய், ரொம்ப கஷ்டப் பட்டுவிட்டேன்(குரு 11ம் இடம் வந்தும்). தற்போது தான் புரிகிறது உங்கள் பாடம் படித்தவுடன்....

    இன்று சனீஸ்வரன் 7ம் இடம் (தனுசு-லக்கினத்திலிருந்து 10ம் இடம், கன்னியில் பரல்கள் 32). ஐயா, தற்போது வேலை கிடைத்துவிடுமா? தங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  57. ////Guru Selvam said...
    ஐயா,
    மிக அருமையான பாடம் இன்று. அனைவரும் பொதுப் பலன்களைப் பார்த்து ஏமாந்து போகிறார்கள். அதில் நானும் ஒருவன். எனக்கு போன முறை சனீஸ்வரன் 6ம் இடம். ஆனால் 10ம் வீட்டை லக்கினமாக எடுத்தால் சனி 12ம் வீட்டில் சஞ்சாரம். வேலை போய், ரொம்ப கஷ்டப் பட்டுவிட்டேன்(குரு 11ம் இடம் வந்தும்). தற்போது தான் புரிகிறது உங்கள் பாடம் படித்தவுடன்....
    இன்று சனீஸ்வரன் 7ம் இடம் (தனுசு-லக்கினத்திலிருந்து 10ம் இடம், கன்னியில் பரல்கள் 32). ஐயா, தற்போது வேலை கிடைத்துவிடுமா? தங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நன்றி.////

    கிடைக்கும். நம்பிக்கையோடு இருங்கள். தினமும் இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்

    ReplyDelete
  58. chaks said...
    நல்ல timely பாடம் சார்.
    சனி லக்கினத்தில் சஞ்சரிக்கும்போதும் உடம்பையும் மனதையும் படுத்துவார் என்று நினைக்கிறேன். என்னை படுத்தினார்( கடக லக்னம்). இத்தனைக்கும் அங்கே 36 பரல்கள். சனியின் சுயவர்கத்தில் கடகத்தில் 6 பரல்கள். தெளிவு படுத்துங்கள் சார். I was running jupiter dasa mercury bukthi./////

    சஞ்சாரத்தைப் பார்ப்பதற்கு லக்கினத்தைவைத்து ஏன் குழப்புகிறீர்கள்? சஞ்சாரத்திற்கு ராசியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.//

    இல்ல சார். ராசியிலிருந்து (கன்னி) சனி 11லும், குரு 2 இலுமாக நல்ல இடத்தில் இருந்தும் தொந்தரவு இருந்ததால் கேட்டேன். மற்றபடி குழப்பம் ஒன்றும் இல்லை. நன்றி.

    ReplyDelete
  59. ஜெயா டி.வி...ல...3.27 க்கு சனி பெயர்ச்சின்னு சொன்னாங்க...நீங்க முன்னால சொல்றீங்க...கன்ஃயூசன்.

    அப்புறம் ஜெயா டி.வி...ல வர்ணனையாளர் நம்ம சனிபகவானைத்தான் மத்த மதத்துல சாத்தான்..ன்னு சொல்றாங்கன்னு சொன்னார்.

    இது எந்த அளவுக்கு உண்மை...

    ReplyDelete
  60. saare, naan kadaga lagnam magara raasi neenga sonna maadhiri 10 idaththukku 6 idam sani varugirathu, ennudaiya thozilukku sani peyarchi nalladhu seiyumaa kannila 28 paralgal irukku

    ReplyDelete
  61. GOOD EVENING SIR AND ALL MY CLASS ROOM FRIENDS,

    HAPPY SARASVATHY POOJA TO U(SIR AND DEAR FRIENDS)

    Wish you happy dasara...Hope this dasara brings u lot of happyness and joys as you like...May your desires be fulfilled and live happily

    YOUR LVINGLY STUDENTS AND FRIEND,
    SUNDARI.P

    ReplyDelete
  62. chaks said...
    chaks said...
    நல்ல timely பாடம் சார்.
    சனி லக்கினத்தில் சஞ்சரிக்கும்போதும் உடம்பையும் மனதையும் படுத்துவார் என்று நினைக்கிறேன். என்னை படுத்தினார்( கடக லக்னம்). இத்தனைக்கும் அங்கே 36 பரல்கள். சனியின் சுயவர்கத்தில் கடகத்தில் 6 பரல்கள். தெளிவு படுத்துங்கள் சார். I was running jupiter dasa mercury bukthi./////
    சஞ்சாரத்தைப் பார்ப்பதற்கு லக்கினத்தைவைத்து ஏன் குழப்புகிறீர்கள்? சஞ்சாரத்திற்கு ராசியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.//
    இல்ல சார். ராசியிலிருந்து (கன்னி) சனி 11லும், குரு 2 இலுமாக நல்ல இடத்தில் இருந்தும் தொந்தரவு இருந்ததால் கேட்டேன். மற்றபடி குழப்பம் ஒன்றும் இல்லை. நன்றி.////

    it is all right Chakkaravarthi!

    ReplyDelete
  63. /////டவுசர் பாண்டி... said...
    ஜெயா டி.வி...ல...3.27 க்கு சனி பெயர்ச்சின்னு சொன்னாங்க...நீங்க முன்னால சொல்றீங்க...கன்ஃயூசன்.
    அப்புறம் ஜெயா டி.வி...ல வர்ணனையாளர் நம்ம சனிபகவானைத்தான் மத்த மதத்துல சாத்தான்..ன்னு சொல்றாங்கன்னு சொன்னார்.
    இது எந்த அளவுக்கு உண்மை.../////

    நீங்கள் வகுப்பறை மாணவர் இல்லை! சுவரேறிக் குதித்து வந்தவர் போல தெரிகிறது.
    இது போன்ற அச்சு,பிச்சுக் கேள்விகளை எல்லாம் இங்கே வந்து கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். சென்னையில் அடி வாங்கிவிட்டு செங்கல்பட்டில் போய் அழுதால் எப்படி? அந்த மேதாவியிடமே கடிதம் எழுதிக் கேளுங்கள்!

    ReplyDelete
  64. /////jpmeera said...
    saare, naan kadaga lagnam magara raasi neenga sonna maadhiri 10 idaththukku 6 idam sani varugirathu, ennudaiya thozilukku sani peyarchi nalladhu seiyumaa kannila 28 paralgal irukku/////

    மகர ராசிக்கு இந்த சனிப் பெயர்ச்சி நன்மையை அளிக்கும். கவலை எதற்கு?

    ReplyDelete
  65. ////sundari said...
    GOOD EVENING SIR AND ALL MY CLASS ROOM FRIENDS,
    HAPPY SARASVATHY POOJA TO U(SIR AND DEAR FRIENDS)
    Wish you happy dasara...Hope this dasara brings u lot of happyness and joys as you like...May your desires be fulfilled and live happily
    YOUR LVINGLY STUDENTS AND FRIEND,
    SUNDARI.P////

    உங்களுக்கும் பூஜை வாழ்த்துக்கள். நன்றி சகோதரி!

    ReplyDelete
  66. வகுப்பு ஆசிரியருக்கும், சக மாணவர்களுக்கும் சனிப் பெயர்ச்சி வாழ்த்துகள்[:)] மற்றும் விசயதசமி வாழ்த்துகள்.

    Do your work with atmost sincerity, You'll never fail!

    இச்சிறுவனின் நம்பிக்கை:

    இறை நம்பிக்கையே இன்பத்திற்கு வழி.
    கடவுளை வழிபடுங்கள், கஷ்டங்களிலிருந்து விடுபடுங்கள்!


    // singaiSuri said...
    Rasi/Lagnam பலன்கள் பார்க்க I found something in below site.

    http://idlyvadai.blogspot.com/2009/09/blog-post_6496.html //

    தகவலுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  67. sir, Good explanation about Sani Peyarchi, As you have informed taking 10th house as lagna (Makaram) and from there the transit Sani is in Kanni i.e. 9th place, how it will be? Nalla Palangalo allathu ketta palangalo - palangal proffession sambanthamaga mattum eduthukolla venduma allathu anaithu palangalagavum eduthukkolla venduma. Thanks. Sakthi Ganesh.

    ReplyDelete
  68. Dear Sir

    Padam Arumai. Enakku Arthashtama Shani(4th place) Start Sir..

    Ennidam Nermayum , Nambikkayum ulladhu. Sani bhagavan than ennai kappatravendum..

    Indru Pinnutta bhadilgal Attakasamaga irundhadhu... Thanks Sir..

    Kalakkunga Sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  69. கன்னி ராசி, விருச்சிக லக்கினம், ஆறாம் வீட்டில் 31 பரல்கள், பதினோராம் வீட்டில் 26 பரல்கள், பன்னிரண்டாம் வீட்டில் 30 பரல்கள், முதலாம் வீட்டில் 34 பரல்கள், சந்திரதிசை நடக்குது. அப்ப 7 1/2 சனி, அட்டமத்து சனி பாதிப்பு எனி இல்லையா?

    ReplyDelete
  70. /////PowerPix365 said...
    வகுப்பு ஆசிரியருக்கும், சக மாணவர்களுக்கும் சனிப் பெயர்ச்சி வாழ்த்துகள்[:)] மற்றும் விசயதசமி வாழ்த்துகள்.
    Do your work with atmost sincerity, You'll never fail!
    இச்சிறுவனின் நம்பிக்கை:
    இறை நம்பிக்கையே இன்பத்திற்கு வழி.
    கடவுளை வழிபடுங்கள், கஷ்டங்களிலிருந்து விடுபடுங்கள்!///////

    உங்கள் புரிதலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  71. /////Sakthi Ganesh said...
    sir, Good explanation about Sani Peyarchi, As you have informed taking 10th house as lagna (Makaram) and from there the transit Sani is in Kanni i.e. 9th place, how it will be? Nalla Palangalo allathu ketta palangalo - palangal proffession sambanthamaga mattum eduthukolla venduma allathu anaithu palangalagavum eduthukkolla venduma. Thanks. Sakthi Ganesh./////

    சனி தொழில்காரகன், அதோடு மகரத்திற்கு அதிபதி. சனீஷ்வரன் பாக்கியத்திற்குச் செல்ல,
    (அதுவும் சனிக்கு நட்பு வீடு) ஜாதகனுக்கு தொழிலில் உயர்வைத்தருவார்.

    ReplyDelete
  72. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Padam Arumai. Enakku Arthashtama Shani(4th place) Start Sir..
    Ennidam Nermayum , Nambikkayum ulladhu. Sani bhagavan than ennai kappatravendum..
    Indru Pinnutta bhadilgal Attakasamaga irundhadhu... Thanks Sir..
    Kalakkunga Sir..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    பின்னூட்ட பதில்கள் வழக்கம்போலவே இருப்பதாக நான் நினைக்கிறேன். நீங்கள் உயர்வாகச் சொல்வதன் காரணம் தெரியவில்லை!

    ReplyDelete
  73. /////Sas said...
    கன்னி ராசி, விருச்சிக லக்கினம், ஆறாம் வீட்டில் 31 பரல்கள், பதினோராம் வீட்டில் 26 பரல்கள், பன்னிரண்டாம் வீட்டில் 30 பரல்கள், முதலாம் வீட்டில் 34 பரல்கள், சந்திரதிசை நடக்குது. அப்ப 7 1/2 சனி, அட்டமத்து சனி பாதிப்பு எனக்கு இல்லையா?/////

    கன்னி ராசி எனும் போது உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுகிறது. உங்கள் வயது என்ன? அது முதல் சுற்றா அல்லது இரண்டாவது சுற்றா? அதைச் சொல்லுங்கள்

    ReplyDelete
  74. /////Sas said...
    கன்னி ராசி, விருச்சிக லக்கினம், ஆறாம் வீட்டில் 31 பரல்கள், பதினோராம் வீட்டில் 26 பரல்கள், பன்னிரண்டாம் வீட்டில் 30 பரல்கள், முதலாம் வீட்டில் 34 பரல்கள், சந்திரதிசை நடக்குது. அப்ப 7 1/2 சனி, அட்டமத்து சனி பாதிப்பு எனக்கு இல்லையா?/////

    கன்னி ராசி எனும் போது உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுகிறது. உங்கள் வயது என்ன? அது முதல் சுற்றா அல்லது இரண்டாவது சுற்றா? அதைச் சொல்லுங்கள்

    1st round, it is for my daughter.
    Thanks,
    SAS

    ReplyDelete
  75. Dear Sir, Thanks for mice article Since you are relived from asthma sani now onwards we can except lessons daily .. :)
    So when is your book relasing sir?

    ReplyDelete
  76. அய்யா வணக்கம். உங்களுடுய சனி பெயர்ச்சி விளக்கம் சிறப்பாக இருந்தது .எனக்கு துலா ராசி மற்றும் லக்னமும் கூட. சமுதாயஅஷ்டக வர்கத்தில் அதாவது பனிரண்டாம் வீட்டில் சனி உடன் பதினேழு பரல்கள் .சுயவர்கத்தில் சனி இரண்டு பரல்கள் , தற்போதுபுதன் தசையில்(சுய பரல்கள் ஆறு ) கேது புத்தி (பதினென்றாம் இடத்தில்(புதன்),சூரியன் ,கேது (சுக்கிரன்) ) வயது செப்டம்பரில் இருந்து அய்ம்பத்திஒன்பது .எனக்கு பலன்கள் எப்படி இருக்கும் .உங்களின் பதிலை ஆவலுடன் எதிபார்க்கும் உங்கள் செட்டி .நன்றி

    ReplyDelete
  77. Dear Sir,

    I thought 71/2 is over, I am Kadagam. But ashtavarga points for kanni is 24, so hoping for getting better!!! oh man...last 7 years its been shaky.

    -Shankar

    ReplyDelete
  78. //கூக்குரலாலே கிடைக்காது //

    ஒருவேளை கூகிளில் தேடினால் கிடைக்கக் கூடுமோ!

    ReplyDelete
  79. Believe it or not...around 320pm on 26th Sep..lot of crows were crying in my area..( May be due to some danger or other things) ..FYI... i am thula rasi & thula lagna...Swathi 4th padam....

    ReplyDelete
  80. Sir,
    I am a Thula Rasi man. Budhan Dasa started from 23rd August 2009.
    At the time of birth Saturn was in Vrichika. Whether this is second round of 7 1/2 for me? If so can I call it Pongu Sani. 7 1/2 with Budha Dasa is said to be good as I read in some of the Astrology books. Lagna is Makara. My horoscope has been already with you. Just for a clarification, whether will there be any change in my present place of work?

    RAMESH BABU

    ReplyDelete
  81. Sir,
    I am a Thula Rasi man. Budhan Dasa started from 23rd August 2009.
    At the time of birth Saturn was in Vrichika. Whether this is second round of 7 1/2 for me? If so can I call it Pongu Sani. 7 1/2 with Budha Dasa is said to be good as I read in some of the Astrology books. Lagna is Makara. My horoscope has been already with you. Just for a clarification, whether will there be any change in my present place of work?
    BUDHA AND SUKRA IN LAGNA (MAKARAM)
    RAMESH BABU

    ReplyDelete
  82. ////Sas said...
    /////Sas said...
    கன்னி ராசி, விருச்சிக லக்கினம், ஆறாம் வீட்டில் 31 பரல்கள், பதினோராம் வீட்டில் 26 பரல்கள், பன்னிரண்டாம் வீட்டில் 30 பரல்கள், முதலாம் வீட்டில் 34 பரல்கள், சந்திரதிசை நடக்குது. அப்ப 7 1/2 சனி, அட்டமத்து சனி பாதிப்பு எனக்கு இல்லையா?/////
    கன்னி ராசி எனும் போது உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுகிறது. உங்கள் வயது என்ன? அது முதல் சுற்றா அல்லது இரண்டாவது சுற்றா? அதைச் சொல்லுங்கள்/////
    1st round, it is for my daughter.
    Thanks,
    SAS////

    முதல் சுற்று என்றால் மங்கு சனி. மனிதனை மங்க (defame) வைக்கும் சனி
    உங்கள் குழந்தைக்கு வயது 12ற்குக் கீழே என்றால், அக்குழந்தைக்கு பாதிப்பு இருக்காது.
    பன்னிரெண்டு வயதிற்கு மேலே என்றால், படிப்பில் கவனம் சிதறும்

    ReplyDelete
  83. ////vijayan said...
    Dear Sir, Thanks for mice article Since you are relived from asthma sani now onwards we can except lessons daily .. :)
    So when is your book relasing sir?////

    புத்தகம் டிசம்பரில் வரும்! நன்றி!

    ReplyDelete
  84. //////KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
    அய்யா வணக்கம். உங்களுடைய சனி பெயர்ச்சி விளக்கம் சிறப்பாக இருந்தது .எனக்கு துலா ராசி மற்றும் லக்னமும் கூட. சமுதாயஅஷ்டக வர்கத்தில் அதாவது பனிரண்டாம் வீட்டில் சனி உடன் பதினேழு பரல்கள் .சுயவர்கத்தில் சனி இரண்டு பரல்கள் , தற்போதுபுதன் தசையில்(சுய பரல்கள் ஆறு ) கேது புத்தி (பதினென்றாம் இடத்தில்(புதன்),சூரியன் ,கேது (சுக்கிரன்) ) வயது செப்டம்பரில் இருந்து ஐம்பத்தியொன்பது எனக்கு பலன்கள் எப்படி இருக்கும் .உங்களின் பதிலை ஆவலுடன் எதிபார்க்கும் உங்கள் செட்டி .நன்றி/////

    சனி மூன்றாவது சுற்று.முதல் இரண்டரை வருடங்களில் பணம் விரையமாகலாம்.
    அதைத் தவிக்க நீங்களாகவே சுபச் செலவாக எதாவது செய்யுங்கள்!

    ReplyDelete
  85. ////hotcat said...
    Dear Sir,
    I thought 71/2 is over, I am Kadagam. But ashtavarga points for kanni is 24, so hoping for getting better!!! oh man...last 7 years its been shaky.
    -Shankar/////

    கடகத்திற்கு சனீஸ்வரனின் தொல்லை முடிந்து விட்டது. ஹாப்பியாக இருங்கள்.

    ReplyDelete
  86. ////நாமக்கல் சிபி said...
    //கூக்குரலாலே கிடைக்காது //
    ஒருவேளை கூகிளில் தேடினால் கிடைக்கக் கூடுமோ!///

    நாமக்கல்காரர்கள் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டார்கள்.நக்கல் அதிகம். ஆகவே உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்!:-))))

    ReplyDelete
  87. ////மிஸ்டர் அரட்டை said...
    Believe it or not...around 3:20pm on 26th Sep..lot of crows were crying in my area..( May be due to some danger or other things) ..FYI... i am thula rasi & thula lagna...Swathi 4th padam....//////

    காக்காய்களுக்கு சோறு வையுங்கள். அவைகள் வந்து கத்திக் குரல் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.
    உங்கள் ராசிக்கு தற்சமயம் அது நல்லதும் கூட!

    ReplyDelete
  88. ///RAMESH BABU J said...
    Sir,
    I am a Thula Rasi man. Budhan Dasa started from 23rd August 2009.
    At the time of birth Saturn was in Vrichika. Whether this is second round of 7 1/2 for me? If so can I call it Pongu Sani. 7 1/2 with Budha Dasa is said to be good as I read in some of the Astrology books. Lagna is Makara. My horoscope has been already with you. Just for a clarification, whether will there be any change in my present place of work?
    RAMESH BABU////

    இரண்டாவது சுற்று. ஆனால் எதையும் இப்போது செய்யாதீர்கள். இரண்டரை வருடங்கள் செல்லட்டும்

    ReplyDelete
  89. nan mesa laknam 2il sukiran , 3il budan,suriyan,ragu, 6il sani, sevai, 7il guru, 9 il kethu, 11 il moon.paralkal 1-37, 2-24, 3-28, 4-34, 5-25, 6-28, 7-24, 8-24, 9-26, 10-27, 11-29, 12-31. budan thisai budan puthi nadakiradhu, enaku sani peyarchi eppadi irukum iya.

    ReplyDelete
  90. பரிவர்த்தனை செய்து கொண்டுள்ளவர்கள் இருவருமே வீணாகப் போய்விட்டார்களே சகோதரி! அதாவது இருவரும் நீசமாக உள்ளார்களே?
    அப்படியானால் செவ்வாய் தசையும் நன்மை செய்யாது இல்லையா? ராது உச்சத்தில் இருப்பதால் ராகு தசை நன்மை செய்யுமா?

    ReplyDelete
  91. Dear Sir,

    My zodiac sign is kadagam/poosam. In my Horoscope sani is in 9th place when i take 10th place as lagnam sani is on 12th place which is not good. Did i understand correctly? excuse me i am a "kadaisi bench kandasamy" i have started my studies that's why i am bit worried. thanks

    ReplyDelete
  92. ////பிரகாஷ் துரைசாமி said...
    nan mesa laknam 2il sukiran , 3il budan,suriyan,ragu, 6il sani, sevai, 7il guru, 9 il kethu, 11 il moon.paralkal 1-37, 2-24, 3-28, 4-34, 5-25, 6-28, 7-24, 8-24, 9-26, 10-27, 11-29, 12-31. budan thisai budan puthi nadakiradhu, enaku sani peyarchi eppadi irukum iya.////

    மேஷ லக்கினம், அதற்குப் பதினொன்றில் சந்திரன் என்றால் நீங்கள் கும்பராசி. சரியா?
    பதிவில் கும்ப ராசிக்கு என்ன நடக்கும் என்று எழுதியுள்ளேன். படித்துத் தெரிந்து கொள்ளூங்கள்>

    ReplyDelete
  93. /////Uma said...
    பரிவர்த்தனை செய்து கொண்டுள்ளவர்கள் இருவருமே வீணாகப் போய்விட்டார்களே சகோதரி! அதாவது இருவரும் நீசமாக உள்ளார்களே?
    அப்படியானால் செவ்வாய் தசையும் நன்மை செய்யாது இல்லையா? ராது உச்சத்தில் இருப்பதால் ராகு தசை நன்மை செய்யுமா?/////

    நீங்களாகவே எதையாவது கற்பனை செய்துகொண்டு குழம்பாதீர்கள். ஒரு தசை மோசமாக இருந்தால், அடுத்துவரும் தசை நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  94. /////kulo said...
    Dear Sir,
    My zodiac sign is kadagam/poosam. In my Horoscope sani is in 9th place when i take 10th place as lagnam sani is on 12th place which is not good. Did i understand correctly? excuse me i am a "kadaisi bench kandasamy" i have started my studies that's why i am bit worried. thanks/////

    எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். கடக ராசிக்கரர்களுக்கு, ஏழரைச் சனி முடிந்து, நல்ல காலம் ஆரம்பம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

    ReplyDelete
  95. வணக்கம் ஐயா. ரொம்ப லேட்-ஆன வணக்கம். ஊருக்கு போயிருந்தேன்... அதனால பாடம் உடனே படிக்க முடியல.

    விருச்சிக ராசி (அதனால்தான் Scorpion King), கடக லக்னம். ஆதி பதியபடி, லக்கனதுல சனி உக்காந்து 7th & 8th வீட்ட பார்க்கிறார்.

    இப்போ, 11-ம் வீட்டுக்கு வர்றார். 11-ம் வீடு மொத்ததுல நல்ல இருக்கும்-னு சொல்லறிங்க. வேற எதாவது special பலன் இருக்குமா ஐயா?

    ReplyDelete
  96. /////Scorpion King said...
    வணக்கம் ஐயா. ரொம்ப லேட்-ஆன வணக்கம். ஊருக்கு போயிருந்தேன்... அதனால பாடம் உடனே படிக்க முடியல.
    விருச்சிக ராசி (அதனால்தான் Scorpion King), கடக லக்னம். ஆதி பதியபடி, லக்கனதுல சனி உக்காந்து 7th & 8th வீட்ட பார்க்கிறார்.
    இப்போ, 11-ம் வீட்டுக்கு வர்றார். 11-ம் வீடு மொத்ததுல நல்ல இருக்கும்-னு சொல்லறிங்க. வேற எதாவது special பலன் இருக்குமா ஐயா?////

    உங்கள் ராசிப்படி தன் சுழற்சியில் சனீஷ்வரன் 11ஆம் இடத்திற்கு வருகிறார்.நல்ல காலம் ஆரம்பம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
    Scorpion King என்று பெயர் வைத்துக் கொண்டு எதற்குக் கவலை? யாராவது வந்தால் (கொடுக்கால்) போட்டுத்தள்ளூங்கள்:-))))

    ReplyDelete
  97. மதிப்பிற்குரிய ஐயா,

    வணக்கம். எனது ராசி கும்பம், லக்கனம் கடகம். 1ல் ராகு, 3ல் சனி, குரு,
    7ல் சூரியன், சுக்கிரன், புதன், கேது, 8ல் சந்திரன், செவ்வாய்.

    07 பிப்ரவரி 1981 சனி கிழமை மாலை 5:45 மணிக்கு பிறந்தேன்.

    உங்களது ஜோதிட பாடங்களில் உயிரோட்டம் கண்டேன்.

    உங்களது ஜோதிட பாடங்கள் படித்து, எனது ஜாதகத்தில் கால சர்பதோசம் உள்ளது என அறிந்தேன். 38 பரல்கள் லக்கனத்தில். விளக்கத்திற்க்கு நன்றி ஐயா.

    கும்ப ராசிக்கு தற்பொழுது அஸ்டமத்து சனி. 19 வருடங்கலாக + 7ல் சனியாக 2.5 வருடம் சனி பகவானால் மிகவும் கஸ்டப்பட்டேன். படித்து முடித்து ஆறு வருடங்களாக வேலை இல்லை. இன்று ஆரம்பமாகிய அஸ்டமத்து சனி.

    1.அஸ்டமத்து சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?
    2.வேலை வாய்ப்பு எப்படி ஐயா?(கேட்காமல் இருக்க முடியவில்லை)

    ReplyDelete
  98. /////Theivendrakumar PP said...
    மதிப்பிற்குரிய ஐயா,
    வணக்கம். எனது ராசி கும்பம், லக்கனம் கடகம். 1ல் ராகு, 3ல் சனி, குரு,
    7ல் சூரியன், சுக்கிரன், புதன், கேது, 8ல் சந்திரன், செவ்வாய்.
    07 பிப்ரவரி 1981 சனி கிழமை மாலை 5:45 மணிக்கு பிறந்தேன்.
    உங்களது ஜோதிட பாடங்களில் உயிரோட்டம் கண்டேன்.
    உங்களது ஜோதிட பாடங்கள் படித்து, எனது ஜாதகத்தில் கால சர்பதோசம் உள்ளது என அறிந்தேன். 38 பரல்கள் லக்கனத்தில். விளக்கத்திற்க்கு நன்றி ஐயா.
    கும்ப ராசிக்கு தற்பொழுது அஸ்டமத்து சனி. 19 வருடங்களாக + 7ல் சனியாக 2.5 வருடம் சனி பகவானால் மிகவும் கஸ்டப்பட்டேன். படித்து முடித்து ஆறு வருடங்களாக வேலை இல்லை. இன்று ஆரம்பமாகிய அஸ்டமத்து சனி.
    1.அஸ்டமத்து சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?
    2.வேலை வாய்ப்பு எப்படி ஐயா?(கேட்காமல் இருக்க முடியவில்லை)//////

    1. இருட்டில் எதற்காக பயணிக்க வேண்டும். விடியட்டும் பொறுத்திருங்கள். அஷ்டமச்சனி முடியட்டும்
    2. வேலை கிடைக்கும். கிடைக்கிற வேலையில், ஸ்டேட்டஸ், சம்பளம் என்று பார்க்காமல் சேர்ந்துகொள்ளும் மனம் வேண்டும். கர்மகாரகன் சனி, வேலை செய்வதற்குத் தடையாக இருக்கமாட்டான்.

    ReplyDelete
  99. மதிப்பிற்குரிய ஜயா,

    தாங்கள் பதில் அனுப்பியதற்க்கு நன்றி.

    திருமணம் இருட்டில் நடக்காமல் இருக்க செய்கிறேன்(எனது பெற்றோர் ஆசியுடன் + உங்கள் ஆசியுடன்).

    நீங்கள் வேலை பற்றி கூறிய கருத்துடன், மேலும் முயற்சி செய்கிறேன்.

    மிக்க நன்றி ஜயா.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com