மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.9.09

துவக்கமும், முடிவும்!


===========================================

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
துவக்கமும், முடிவும்!

கடந்த 17 நாட்களாக தொடர்ந்து ஜோதிடப்பாடங்கள்
மொத்த இடுகைகள் 14
மொத்த பின்னூட்டங்கள் சுமார் 1,000
இப்படியே போய்க் கொண்டிருந்தால், மனம் மற்றும் உடம்பின்
கெமிஸ்ட்ரி மாறிவிடலாம்.
அதைத்தவிர்ப்பதற்காக இன்று வேறு பாடம்
-------------------------------------------------------------
அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லை’ அனைவரும் அறிவோம்.
தொலைபேசியைக் கண்டுபிடித்த மேதை அவர்.
ஆனால் அவர் தன் குடும்பத்தினருடன் ஒருமுறைகூடத் தொலைபேசியில் பேசியதில்லை.
அவருடைய மனைவியும், மகளும் காது கேளாதவர்கள்.
அதுதான் வாழ்க்கை!
மற்றவர்களுக்காக வாழுங்கள்!


பற்றுடன் (attachment) இருப்பதுதான் மோசமான நிலை.
அதை இழக்க நேர்கையில் மனம் காயப்படும்.
பற்றில்லாமல் இருங்கள். அனைத்தையும் அறியும் வாய்ப்புக் கிடைக்கும்
அதை இழக்கும்போது (அந்தப் பற்றில்லாத நிலையை), எந்த இழப்பும் இல்லை!


உங்கள் முகத்திற்கு நேராக இனிக்கப் பேசும் மக்களை வைத்தது
உங்கள் வாழ்க்கையல்ல!
உங்களுக்குப் பின்னால், உண்மையான மனதோடு இருப்பவர்களை
வைத்துத்தான் உங்கள் வாழ்க்கை!


முட்டை வெளியில் இருந்து உடைபடும்போது, ஒரு ஜீவனின் வாழ்க்கை முடிவிற்கு வருகிறது.
அதே முட்டை, உள்புறமிருந்து உடைபடும்போது, ஒரு ஜீவனின் வாழ்க்கை துவங்குகிறது!.
எல்லா பெரிய செயல்களும் உள்ளிருந்திருந்துதான் துவக்கத்தைப் பெறும்

காலை வணக்கத்துடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

84 comments:

  1. முட்டை philosophy அற்புதம்.

    ReplyDelete
  2. குருவே,

    ஆஹா...முட்டை தத்துவம் அருமை. பல பல அர்த்தங்களை உள்ளடக்கியது...
    புறத்தில் பூப்பதை விட அகத்தில் பூப்பதே சிறக்கும்.
    நல்ல சிந்தனை,நல்ல எண்ணம்,நல்ல சொல்,நல்ல எழுத்து இறைவனின் வரம்..
    நான் உங்கள் மாணவன். நீங்கள் இறைவனின் சிறந்த மாணவர்

    ReplyDelete
  3. சார்,

    இன்றைய பாடமும் சூப்பர். அர்த்தம் புரிந்தது வைத்தியரே.

    பற்றே அற்ற வாழ்கை வாழ்வது தேவை தான, நாம் ஏன் மனித பிறவி எடுத்தோம்?

    வணக்கத்துடன்
    சரவணகுமார்

    ReplyDelete
  4. பிறருக்காக வாழ்வதும் பற்றில்லாமல் இருப்பதும் நல்லதுதான். பலருக்கு இது தெரிவதில்லை. பலர் கெட்ட பின்பு ஞானி என்ற பாடல் வரிக்கு உதாரணமானவர்கள். முட்டை தத்துவம் நன்று.

    (ரம்ஜான்) பண்டிகை வருவதால் ஒரு அரை வாரம் விடுமுறைக்கு பிறகுதான் மீண்டும் வர இயலும்.

    ReplyDelete
  5. ///singaiSuri said...
    முட்டை philosophy அற்புதம்.////

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லைப்பற்றிய தகவலும் நெகிச்சியானதுதான்!

    ReplyDelete
  6. ////Sivasubramanian said...
    குருவே,
    ஆஹா...முட்டை தத்துவம் அருமை. பல பல அர்த்தங்களை உள்ளடக்கியது...
    புறத்தில் பூப்பதை விட அகத்தில் பூப்பதே சிறக்கும்.
    நல்ல சிந்தனை,நல்ல எண்ணம்,நல்ல சொல்,நல்ல எழுத்து இறைவனின் வரம்..
    நான் உங்கள் மாணவன். நீங்கள் இறைவனின் சிறந்த மாணவர்////

    அனுபவமே இறைவன் அளிக்கும் சிறந்த வரம்!

    ReplyDelete
  7. ///Saravana said...
    சார்,
    இன்றைய பாடமும் சூப்பர். அர்த்தம் புரிந்தது வைத்தியரே.
    பற்றே அற்ற வாழ்கை வாழ்வது தேவை தான, நாம் ஏன் மனித பிறவி எடுத்தோம்?
    வணக்கத்துடன்
    சரவணகுமார்////

    நாம் ஏன் மனித பிறவி எடுத்தோம்? என்பது இப்போது விளங்காது.
    நாடி, நரம்பெல்லாம் தளர்ந்த பின்பு, விளங்கும்.
    எல்லோருக்கும் அல்ல! அடிபட்டு உணர்ந்தவனுக்கு மட்டும் விளங்கும்

    திருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்
    வருந்தாத உருவங்கள் இருந்தென்ன லாபம்
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
    இவர்போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்!
    -கவிஞர் வாலி
    அதுதான் வாழ்க்கை
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>
    என்ன வாத்தியாரை, வைத்தியராக்கி உள்ளீர்?
    உம்மோடு சேர்ந்து பைத்தியமாகாமல் இருந்தால் சரி!

    ReplyDelete
  8. ////Blogger ananth said...
    பிறருக்காக வாழ்வதும் பற்றில்லாமல் இருப்பதும் நல்லதுதான். பலருக்கு இது தெரிவதில்லை. பலர் கெட்ட பின்பு ஞானி என்ற பாடல் வரிக்கு உதாரணமானவர்கள். முட்டை தத்துவம் நன்று.
    (ரம்ஜான்) பண்டிகை வருவதால் ஒரு அரை வாரம் விடுமுறைக்கு பிறகுதான் மீண்டும் வர இயலும்.////

    ஏன் எங்களுக்கு மட்டும் ரம்ஜான் இல்லையா? நானும் அரை வாரம் விடுமுறை விட்டு விடட்டுமா ஆனந்த்?

    ReplyDelete
  9. வேண்டுகோள்

    ///You have been signed out of this account.

    This may have happened automatically because another user signed in from the same browser. To continue using this account, you will need to sign in again. This is done to protect your account and to ensure the privacy of your information.///

    எனக்கு நான்கு ஜிமெயில் கணக்குகள் உள்ளன
    fire fox browserஐ உபயோகிக்கிறென்.
    கடந்த 10 நாட்களாக மேற்கண்ட எச்சரிக்கை தோன்றிகொண்டே இருக்கிறது

    அதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?
    ஏதேனும் ஸ்ஃபைவேர் உள்ளே நுழைந்திருக்கும் வாய்ப்பு உள்ளதா?
    அதைக் கண்டு பிடித்து, அழிக்கும் வழி என்ன?
    எனது கோப்புக்களும், சேர்த்து வைத்துள்ள பல மின்னஞ்சல் முகவரிகளும் திருட்டுப்போகும் வாய்ப்பு உள்ளதா?
    எந்த அயோக்கியன் இப்படிச் செய்கிறான் என்று கண்டு பிடிக்க முடியுமா?
    browserல் நுழைகிறவர்கள் எந்த அளவிற்கு அழிவு வேலைகளைச் செய்ய முடியும்?
    என்பது போன்றவற்றை தெரிந்தவர்கள் எனக்கு அறியத்தாருங்கள்

    கணினி தொழில்நுட்ப அறிவு எனக்கு இல்லை!
    ஆகவே உங்கள் உதவி தேவை!
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  10. Signing out of Gmail account happens normally. It is a safetyfeature, so that the account is not opened automatically when the browser is opened.

    ReplyDelete
  11. முட்டை உதாரனம் அருமை. நல்ல சிந்தனை.

    ReplyDelete
  12. அய்யா வணக்கம்.
    இன்று பாடத்தில் வந்த படங்களும் பிரமாதமாக இருந்தன, மற்றும் அத்துடன் சொன்ன கருத்துக்களும், தத்துவங்களும் மிக பிரமாதம்.
    நாலு வார்த்தை ஆனாலும் நல்ல மலர் கொண்டு செய்த மாலையாக நறுமணம் வீசுகிறது.

    ReplyDelete
  13. என் வாழ்நாளின் முதல் நேரடி வணக்கம் ஐயா ,

    இருபத்தைந்து வருடங்கள் சென்னை தொலைபேசியில் பணி புரிந்து வருகிறேன் அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் இந்த கதையை உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.
    நீங்கள் சொன்ன அறிவுரையின்படி வாழ்ந்துகொண்டுடிருகிறேன் அகலவருசையில் (பரோட் பேண்ட் ) என்றும் அப்படியே வாழ்வேன்- பற்றிலாமல் வாழ்கைஇல்லை- ஆசையில்லாமல் உலகம் இல்லை. கடவுள் உலகம் இருக்கவேண்டும் என்று நினைகிறார். மனிதன் உலகம் அழியவேண்டும் என்று நினைக்கிறான்.
    நன்றி ஐயா,
    முருகன் சென்னை தொலைபேசி

    ReplyDelete
  14. இன்றைய பாடம் மிக மிக அருமை. நன்றி ஐயா

    ReplyDelete
  15. அய்யா ஒரு நெட் கனக்சன் இல்லாத சிஸ்டத்தில் அல்லது ஒரு தனி ஹார்டு டிஸ்கில் உங்களது கட்டுரைகள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், இடுகைகளை வெளியிடுவதை மட்டும் காப்பி செய்து கனக்ஸன் இருக்கும் சிஸ்டத்தில் போட்டு வெளியிடவும். நெட் கனக்ஸன் இருந்தால் நீங்கள் என்ன பாதுகாப்பு செய்தாலும் உடைத்து ஹாக் செய்வார்கள், உங்கள் பிடிக்கவில்லை என்றால் தகவல்களை அழிக்கவும் செய்வார்கள். ஆதாலால் ஒரு நெட் இல்லாத பேக்-அப் சிஸ்டம் அல்லது பேக்-அப் ஹார்டு டிஸ்க் வைத்து உங்கள் டேட்டாஸ் பாதுகாப்பது நல்லது.

    ReplyDelete
  16. முட்டை உதாரணம் நச் வாத்தியாரே..!

    காலை வணக்கங்கள்..!

    ReplyDelete
  17. //ஏன் எங்களுக்கு மட்டும் ரம்ஜான் இல்லையா? நானும் அரை வாரம் விடுமுறை விட்டு விடட்டுமா ஆனந்த்?//

    நன்றாகதான் இருக்கும். தாராளமாக செய்யுங்கள்

    ReplyDelete
  18. என்னதான் சார் இன்னைக்கு பாடம்? முட்டைலேருந்து குஞ்சு வந்ததா?
    குஞ்சுலேருந்து முட்டை வந்ததா? பாடமா?(chemistry இன்னும் மாறலை.)
    எப்டியோ சிம்பிளா முடிச்சுட்டீங்க. இதுக்கும் நாங்க பின்னூட்டம் இடுவோமே

    ReplyDelete
  19. /////Blogger krish said...
    Signing out of Gmail account happens normally. It is a safetyfeature, so that the account is not opened automatically when the browser is opened.//////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  20. ////Blogger பித்தன் said...
    முட்டை உதாரணம் அருமை. நல்ல சிந்தனை.////

    நன்றி பித்தன்!

    ReplyDelete
  21. /////Blogger Meena said...
    அய்யா வணக்கம்.
    இன்று பாடத்தில் வந்த படங்களும் பிரமாதமாக இருந்தன, மற்றும் அத்துடன் சொன்ன கருத்துக்களும், தத்துவங்களும் மிக பிரமாதம்.
    நாலு வார்த்தை ஆனாலும் நல்ல மலர் கொண்டு செய்த மாலையாக நறுமணம் வீசுகிறது./////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. ////Blogger murugan said...
    என் வாழ்நாளின் முதல் நேரடி வணக்கம் ஐயா ,
    இருபத்தைந்து வருடங்கள் சென்னை தொலைபேசியில் பணி புரிந்து வருகிறேன் அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் இந்த கதையை உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.
    நீங்கள் சொன்ன அறிவுரையின்படி வாழ்ந்துகொண்டுடிருகிறேன் அகலவருசையில் (பரோட்பேண்ட் ) என்றும் அப்படியே வாழ்வேன்- பற்றிலாமல் வாழ்கைஇல்லை- ஆசையில்லாமல் உலகம் இல்லை. கடவுள் உலகம் இருக்கவேண்டும் என்று நினைகிறார். மனிதன் உலகம் அழியவேண்டும் என்று நினைக்கிறான்.
    நன்றி ஐயா,
    முருகன் சென்னை தொலைபேசி/////

    எல்லா மனிதர்களும் அப்படி நினைப்பதில்லை. மனித சமுதாயம் வாழவேண்டும் என்று பாடுபட்டவர்கள் எண்ணற்றவர்கள் உண்டு. உதாரணமாக தாமஸ் ஆல்வா எடிசன். ரமண மஹரிஷி!

    ReplyDelete
  23. ////Blogger kumar.S said...
    இன்றைய பாடம் மிக மிக அருமை. நன்றி ஐயா////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. ////Blogger பித்தன் said...
    அய்யா ஒரு நெட் கனக்சன் இல்லாத சிஸ்டத்தில் அல்லது ஒரு தனி ஹார்டு டிஸ்கில் உங்களது கட்டுரைகள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், இடுகைகளை வெளியிடுவதை மட்டும் காப்பி செய்து கனக்ஸன் இருக்கும் சிஸ்டத்தில் போட்டு வெளியிடவும். நெட் கனக்ஸன் இருந்தால் நீங்கள் என்ன பாதுகாப்பு செய்தாலும் உடைத்து ஹாக் செய்வார்கள், உங்கள் பிடிக்கவில்லை என்றால் தகவல்களை அழிக்கவும் செய்வார்கள். ஆதாலால் ஒரு நெட் இல்லாத பேக்-அப் சிஸ்டம் அல்லது பேக்-அப் ஹார்டு டிஸ்க் வைத்து உங்கள் டேட்டாஸ் பாதுகாப்பது நல்லது./////

    உங்களுடைய பரிந்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  25. ////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    முட்டை உதாரணம் நச் வாத்தியாரே..!
    காலை வணக்கங்கள்..!/////

    நன்றி உண்மைத்தமிழரே1

    ReplyDelete
  26. ////Blogger ananth said...
    //ஏன் எங்களுக்கு மட்டும் ரம்ஜான் இல்லையா? நானும் அரை வாரம் விடுமுறை விட்டு விடட்டுமா ஆனந்த்?//
    நன்றாகதான் இருக்கும். தாராளமாக செய்யுங்கள்///

    நன்றி. வழக்கமான ஜோதிடப் பாடங்களுக்குப் பதிலாக, வேறு கலக்கலான, கலகலப்பான பதிவுகளாகப் போட்டு விடுமுறையைக் கொண்டாடுவோம்!

    ReplyDelete
  27. Present sir!!! Sir nowadays you have not given moral touches like this...kindly add atleast one in all lessons...

    Your stories and morals are more values than your lessons...

    I have asked to send me your stories book...But I haven't received yet...kindly have a look on this...

    ReplyDelete
  28. ///minorwall said...
    என்னதான் சார் இன்னைக்கு பாடம்? முட்டைலேருந்து குஞ்சு வந்ததா?
    குஞ்சுலேருந்து முட்டை வந்ததா? பாடமா?(chemistry இன்னும் மாறலை.)
    எப்டியோ சிம்பிளா முடிச்சுட்டீங்க. இதுக்கும் நாங்க பின்னூட்டம் இடுவோமே////

    மேக்கப்பை விரும்பாத கன்னி இருப்பாளா? பின்னூட்டத்தை விரும்பாத பதிவர் இருப்பாரா? சொல்லுங்கள் மைனர்!

    ReplyDelete
  29. /////Blogger Arul said...
    Present sir!!! Sir nowadays you have not given moral touches like this...kindly add atleast one in all lessons...
    Your stories and morals are more values than your lessons.../////

    அடடா, நெஞ்சை ‘டச்’ பண்ணிட்டிங்க அருள்!

    ReplyDelete
  30. /////Blogger Arul said...

    ////I have asked to send me your stories book...But I haven't received yet...kindly have a look on this.../////

    Book no.1 பிரதிகள் இல்லை.தீர்ந்து விட்டது. second edition தயாரிப்பில் உள்ளது. அடுததவாரம் அனுப்பி வைக்கிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  31. vaathiyar ayya ungaludaiya muttai thathuvam miga nandru

    ReplyDelete
  32. அய்யா,உங்களிடம் இருந்து இந்த மாதிரி ஒரு change of mode - refreshing பதிவை எதிர்பார்த்தேன், தத்துவங்கள் அருமை. படங்களும் அருமை..!

    ReplyDelete
  33. >>>>>>>>>>>>>>>>>>>>>>>
    என்ன வாத்தியாரை, வைத்தியராக்கி உள்ளீர்?
    உம்மோடு சேர்ந்து பைத்தியமாகாமல் இருந்தால் சரி!
    +++++++++++++++++++++++++++++++++++
    மதிப்புக்குரிய வைத்தியரே!!!

    உங்களை பைத்தியமாக்க விடமாட்டேன். அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்.
    தங்கள் புத்தககங்களின் பிரதி எனக்கும் ஒன்று வேண்டும்.
    நானும் கோவையில் இருப்பதால் நேரில் வந்தால் கிடைக்குமா? ஆசையுடன்!!!

    கீழ்படிந்த
    சரவணகுமார்

    ReplyDelete
  34. ///prabakar.l.n said...
    vaathiyar ayya ungaludaiya muttai thathuvam miga nandru///

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. ////RVC said...
    அய்யா,உங்களிடம் இருந்து இந்த மாதிரி ஒரு change of mode - refreshing பதிவை எதிர்பார்த்தேன், தத்துவங்கள் அருமை. படங்களும் அருமை..!/////

    மாணவர்களின் பல்ஸ் தெரியாதா எனக்கு?
    அதனால் ஒரு மாற்றம் வேண்டித்தான் பதிவை இட்டேன்!

    ReplyDelete
  36. ////Saravana said...
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>
    என்ன வாத்தியாரை, வைத்தியராக்கி உள்ளீர்?
    உம்மோடு சேர்ந்து பைத்தியமாகாமல் இருந்தால் சரி!
    +++++++++++++++++++++++++++++++++++
    மதிப்புக்குரிய வைத்தியரே!!!
    உங்களை பைத்தியமாக விடமாட்டேன். அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்.
    தங்கள் புத்தககங்களின் பிரதி எனக்கும் ஒன்று வேண்டும்.
    நானும் கோவையில் இருப்பதால் நேரில் வந்தால் கிடைக்குமா? ஆசையுடன்!!!
    கீழ்படிந்த
    சரவணகுமார்//////

    அடங்க மாட்டீரா நீர்! திரும்ப திரும்ப வைத்தியரே என்று நக்கலடித்துக் கொண்டிருக்கீறீர்? வகுப்பறையில் இருந்து நீக்கிவிடுவேன். இது முதல் & இறுதி எச்சரிக்கை! அதை மனதில் கொள்க!

    ReplyDelete
  37. ஒரு முட்டையில இவ்வளவு தத்துவமா... Very nice

    ReplyDelete
  38. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  39. Dear Sir,

    கருத்துகளும், தத்துவமும் பிரமாதம், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

    Rgds
    Nainar

    ReplyDelete
  40. இன்றைய பாடம் அருமை ஐயா. மேலும் உங்கள் ஜோதிடப் பாடங்கள் புத்தகங்ளுக்கு முன் பதிவாக இரண்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன்.எங்களைப் போல முன் பதிவு செய்பவர்களுக்கு உறுதிப்படுத்தும் மின்ன‌ஞ்சலும் வந்தால் நன்றாக இருக்கும்.சிரமத்திற்கு மன்னிக்கவும்.(இரண்டு வார்த்தைகளில் போதும்)நன்றி.

    ReplyDelete
  41. முட்டை விலை ஏறிக்கொண்டே செல்கின்ற இந்த கால கட்டத்திற்கு தேவையான கதை.

    ///You have been signed out of this account.

    This may have happened automatically because another user signed in from the same browser. To continue using this account, you will need to sign in again. This is done to protect your account and to ensure the privacy of your information.///

    This msg will appear in the following cases:
    1. when you trying to sign out while your account is not fully loaded (due to low bandwidth connection).

    2.when you are trying to sign out a google account and then immediately sign in to another google account.

    to achieve this:
    sign out from the current account then login page will be displayed, in that choose the option called "sign in as different user".

    3.whenever an user sign in to google account, google uses a single session for a browser.so you can sign in to only one account at a time using one browser.
    Cookies keep the details of that particular session(like session id,expire and etc.,). these details will be cleared when you "sign out". then you can sign in to another account.
    sometimes cookies maynot cleared properly, you've to clear it manually(press "Ctrl + alt + del" then select all check box then click clear).

    tips:
    because of common session, you have sign out an account is must for sign in to another account.

    if you use more than one browser, you can sign in into different accounts using different browser(I.E., FireFox, Chrome...).
    but remember 1 Browser = 1 Account.


    Best feature of the session is "session expires".
    if an account is idle more than 20 mins will be automatically sign out.

    my opinion, people can't decrypt google's data. they use some well furnished encrypt algorithm.

    always clear your "web history" when you completed browsing. so that other's can't access your account.(because browsers may have saved your "username" & "password".)

    ReplyDelete
  42. அருமையான தத்துவங்கள்
    நன்றி அய்யா.

    ReplyDelete
  43. thuvakkamum mutivum vaathiyar nagaisuvaiyoodu vagupparaiyai kondu selvar endru than therium . puthar pola pon mozhi kalaiyum serthe idukirar

    nandru ayya

    http://sathuragirisundaramahalingam.blogspot.com/

    ReplyDelete
  44. thuvakkamum mutivum vaathiyar nagaisuvaiyoodu vagupparaiyai kondu selvar endru than therium . puthar pola pon mozhi kalaiyum serthe idukirar

    nandru ayya

    http://sathuragirisundaramahalingam.blogspot.com/

    ReplyDelete
  45. அன்புள்ள ஆசிரியருக்கு அநேக வணக்கங்கள் ,

    தங்களின் இன்றையப் பாடம் மிகவும் நன்று .
    நானும் சில நேரங்களில் நினைப்பது உண்டு :
    ஆண்டவன் ரிஷிகளை இந்தியாவில் படைத்தான் அதே நேரம்
    அதற்கு சமமான விஞ்ஞானிகளை மேலை நாடுகளில் படைத்தான் என்று
    அதைத் தான் தாங்களும் கூறுகிறீர்கள் .

    நீதி போதனைக்கு மிக்க நன்றி !
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் !!

    அன்புடன் மாணவன்,
    ஆலாஸ்யம். கோ (ஆலாலசுந்தரம்).

    ReplyDelete
  46. Indraya karuthukal Nenchathai thodukindrathu.

    Everybody will not understand this concept in the same time.

    Whether they have enough money/all required life faclities/feelings or not , some persons only understand this. They are able to live with less sufferings.

    Regards.

    ReplyDelete
  47. வணக்கம்
    வாத்தியார் அவர்களுக்கு,

    "உங்கள் முகத்திற்கு நேராக இனிக்கப் பேசும் மக்களை வைத்தது
    உங்கள் வாழ்க்கையல்ல!
    உங்களுக்குப் பின்னால், உண்மையான மனதோடு இருப்பவர்களை
    வைத்துத்தான் உங்கள் வாழ்க்கை!"

    அவர்களை எப்படி இனம்காண முடியும்? கொஞ்சம் அதை பற்றியும் இன்னொரு சந்தர்ப்பத்தில் விளக்குங்களேன்...என் முகம் முன் எல்லோரும் இனிக்க இனிக்க தான் பேசுகிறார்கள்...பின்னே என்ன பேசுவார்கள் என்பதாய் நான் அறிய முடியும்???

    ReplyDelete
  48. ////Blogger இராகவன் நைஜிரியா said...
    நன்றிகள் பல.////

    நன்றி ராகவன்

    ReplyDelete
  49. /////Blogger sasi said...
    ஒரு முட்டையில இவ்வளவு தத்துவமா... Very nice/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  50. Blogger arumuga nainar said...
    Dear Sir,
    கருத்துகளும், தத்துவமும் பிரமாதம், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
    Rgds
    Nainar////

    நன்றி நைனார்
    பழுதை என்று மிதிக்கவும் முடியாது, பாம்பு என்று தாண்டவும் முடியாது.
    அப்படித்தோற்றமுள்ளவர்கள் இறைவன் படைப்பில் உண்டு.

    ReplyDelete
  51. Blogger இராதா கிருஷ்ணன் said...
    இன்றைய பாடம் அருமை ஐயா. மேலும் உங்கள் ஜோதிடப் பாடங்கள் புத்தகங்ளுக்கு முன் பதிவாக இரண்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன்.எங்களைப் போல முன் பதிவு செய்பவர்களுக்கு உறுதிப்படுத்தும் மின்ன‌ஞ்சலும் வந்தால் நன்றாக இருக்கும்.சிரமத்திற்கு மன்னிக்கவும்.(இரண்டு வார்த்தைகளில் போதும்)நன்றி.////

    300ற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அத்தனை பெயர்களையும் வரிசைபடுத்தி mail contact folderல் சேர்க்கும் வேலை இப்போதுதான் முடிந்தது. இரண்டொரு நாளில் அனைவருக்கும் ஒரே க்ளிக்கில்
    விவரங்கள் வரும்!

    ReplyDelete
  52. ////Blogger PowerPix365 said...
    முட்டை விலை ஏறிக்கொண்டே செல்கின்ற இந்த கால கட்டத்திற்கு தேவையான கதை.////

    முட்டை சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு, சாப்பிடும்போது இது நினைவிற்கு வந்து படுத்தாமல் இருக்க வேண்டும்.:-))) எனக்குப் பிரச்சினை இல்லை. நான் சைவ உணவு சாப்பிடுகிறவன்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ///You have been signed out of this account.

    This may have happened automatically because another user signed in from the same browser. To continue using this account, you will need to sign in again. This is done to protect your account and to ensure the privacy of your information.///

    This msg will appear in the following cases:
    1. when you trying to sign out while your account is not fully loaded (due to low bandwidth connection).

    2.when you are trying to sign out a google account and then immediately sign in to another google account.

    to achieve this:
    sign out from the current account then login page will be displayed, in that choose the option called "sign in as different user".

    3.whenever an user sign in to google account, google uses a single session for a browser.so you can sign in to only one account at a time using one browser.
    Cookies keep the details of that particular session(like session id,expire and etc.,). these details will be cleared when you "sign out". then you can sign in to another account.
    sometimes cookies maynot cleared properly, you've to clear it manually(press "Ctrl + alt + del" then select all check box then click clear).
    tips:
    because of common session, you have sign out an account is must for sign in to another account.
    if you use more than one browser, you can sign in into different accounts using different browser(I.E., FireFox, Chrome...).
    but remember 1 Browser = 1 Account.
    Best feature of the session is "session expires".
    if an account is idle more than 20 mins will be automatically sign out.
    my opinion, people can't decrypt google's data. they use some well furnished encrypt algorithm.
    always clear your "web history" when you completed browsing. so that other's can't access your account.(because browsers may have saved your "username" & "password".)/////

    நீண்ட பதிலுக்கும் அரிய தகவல்களுக்கும் நன்றி நண்பரே!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  53. ////Blogger thirunarayanan said...
    அருமையான தத்துவங்கள்
    நன்றி அய்யா./////

    பராட்டிற்கு நன்றி நாராயணன்!

    ReplyDelete
  54. ////////Blogger prabakar.l.n said...
    thuvakkamum mutivum vaathiyar nagaisuvaiyoodu vagupparaiyai kondu selvar endru than therium . puthar pola pon mozhi kalaiyum serthe idukirar
    nandru ayya
    http://sathuragirisundaramahalingam.blogspot.com/////

    நன்றி பிரபாகரன்!

    ReplyDelete
  55. /////Blogger Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு அநேக வணக்கங்கள் ,
    தங்களின் இன்றையப் பாடம் மிகவும் நன்று .
    நானும் சில நேரங்களில் நினைப்பது உண்டு :
    ஆண்டவன் ரிஷிகளை இந்தியாவில் படைத்தான் அதே நேரம்
    அதற்கு சமமான விஞ்ஞானிகளை மேலை நாடுகளில் படைத்தான் என்று
    அதைத் தான் தாங்களும் கூறுகிறீர்கள் .
    நீதி போதனைக்கு மிக்க நன்றி !
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் !!
    அன்புடன் மாணவன்,
    ஆலாஸ்யம். கோ (ஆலாலசுந்தரம்)./////

    உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  56. /////Blogger NSK said...
    Indraya karuthukal Nenchathai thodukindrathu.
    Everybody will not understand this concept in the same time.
    Whether they have enough money/all required life faclities/feelings or not , some persons only understand this. They are able to live with less sufferings.
    Regards./////

    நீங்கள் சொல்வது உண்மை! நன்றி

    ReplyDelete
  57. ////பாலாஜி.ச.இமலாதித்தன் said...
    வணக்கம்
    வாத்தியார் அவர்களுக்கு,
    "உங்கள் முகத்திற்கு நேராக இனிக்கப் பேசும் மக்களை வைத்தது
    உங்கள் வாழ்க்கையல்ல!
    உங்களுக்குப் பின்னால், உண்மையான மனதோடு இருப்பவர்களை
    வைத்துத்தான் உங்கள் வாழ்க்கை!"
    அவர்களை எப்படி இனம்காண முடியும்? கொஞ்சம் அதை பற்றியும் இன்னொரு சந்தர்ப்பத்தில் விளக்குங்களேன்...என் முகம் முன் எல்லோரும் இனிக்க இனிக்க தான் பேசுகிறார்கள்...பின்னே என்ன பேசுவார்கள் என்பதாய் நான் அறிய முடியும்???//////

    உண்மையான நண்பர்களும், விசுவாசமிக்க உறவுகளும் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் பழகுவார்கள். அவர்களை அறிந்து கொள்ள ஒரு உபாயம் உள்ளது.2 அல்லது 3 பக்கங்களில் கட்டுரையாக எழுத வேண்டியது இருக்கும். பின் ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்

    ReplyDelete
  58. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு....ஐய்யன் வள்ளுவன் சொன்னது.

    ReplyDelete
  59. மன்னிக்கவும் குருவே ..
    ஒன்றும் புரியவில்லை.
    அதுவும் முட்டை தத்துவம் சுத்தமாக புரியவில்லை ...

    ReplyDelete
  60. ////மதி said...
    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு....ஐய்யன் வள்ளுவன் சொன்னது.////

    அய்யன் இறைவனின் திருவடிகளைப் பற்றுங்கள் என்று சொன்னார்
    நாம் அதைத்தவிர மற்ற எல்லாவற்றையும் பற்றிக்கொண்டு உள்ளோம்

    ReplyDelete
  61. ////மதி வேங்கை said...
    மன்னிக்கவும் குருவே ..
    ஒன்றும் புரியவில்லை.
    அதுவும் முட்டை தத்துவம் சுத்தமாக புரியவில்லை ...////

    அதனால் ஒன்றும் பாதகம் இல்லை. உலக இயக்கம் நின்று விடாது.
    சில விஷயங்கள் புரியாதவரைக்கும் நல்லதுதான்!

    ReplyDelete
  62. me too encountered such a similar issue while I was @ another trading site sign-in.initially I thought as you had shocked. But within an hour I recognized that without closing/signing-out a single winwow I was entering an another window caused such alarm.
    I think PowerPix365 had given a clear technical explanation.

    ReplyDelete
  63. இன்றைய பாடங்களும், தத்துவங்களும் அருமையாக இருக்கிறது.
    உங்கள் முயற்சியை பாராட்டத் தோன்றியது.

    ReplyDelete
  64. DEAR SIR,

    GOOD EVENING SIR,
    TODAY STORY IS SO MUCH NICE. I LOVE SO MUCH LIKE THIS MORAL STORY. ONE MILLION THANKS FOR UR MORAL STORY
    AND I AM LAUGHING SO MUCH DUE TO CAR CRASH PICTURE NICE SIR.

    YOUR LOVINGLY STUDENTS
    LAKSHMI

    ReplyDelete
  65. ////minorwall said...
    me too encountered such a similar issue while I was @ another trading site sign-in.initially I thought as you had shocked. But within an hour I recognized that without closing/signing-out a single winwow I was entering an another window caused such alarm.
    I think PowerPix365 had given a clear technical explanation.////

    உண்மைதான் மைனர். அவருக்கு நன்றி சொல்லிவிட்டேன்!

    ReplyDelete
  66. ////ஜெஸ்வந்தி said...
    இன்றைய பாடங்களும், தத்துவங்களும் அருமையாக இருக்கிறது.
    உங்கள் முயற்சியை பாராட்டத் தோன்றியது.////

    தோன்றியதை உடனே செயல் படுத்தியதற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  67. ////sundari said...
    DEAR SIR,
    GOOD EVENING SIR,
    TODAY STORY IS SO MUCH NICE. I LOVE SO MUCH LIKE THIS MORAL STORY. ONE MILLION THANKS FOR UR MORAL STORY
    AND I AM LAUGHING SO MUCH DUE TO CAR CRASH PICTURE NICE SIR.
    YOUR LOVINGLY STUDENTS
    LAKSHMI/////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  68. ///Self Realization said...
    guruvey saranam/////

    பர்பஸ் இல்லாமல் சரணத்தை இப்படியெல்லாம் வேஸ்ட் செய்யலாமா?

    ReplyDelete
  69. Dear Sir

    Thathuva mazhaiyaga irundhalum, Valkkai niyayangal than unmai.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaram

    ReplyDelete
  70. Dear Sir


    Arumaiyana Thathuvam..

    Nice Sir

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  71. ///Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Thathuva mazhaiyaga irundhalum, Valkkai niyayangal than unmai.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaram////

    வாழ்க்கை நியதியை அழுத்தமாகச் சொல்லும்போது தத்துவமாகின்றது!

    ReplyDelete
  72. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Arumaiyana Thathuvam..
    Nice Sir
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  73. Gmail இறுதியில் இந்த தகவலை நீங்கள் பார்க்கலாம் , எந்த IP Address இல் இருந்து Access பண்ணி இருக்கிறோம் என்று..
    'This account is open in 1 other location (203.12.78.9). Last account activity: 8 hours ago. Details
    Gmail view: standard | turn off chat | basic HTML Learn more' அதில் Detail ஜ click பண்ணிணால் மேலதிக தகவலை பெறலாம். உங்களுடைய broadband Ip address இலா என்று check பண்ணி கொள்ளலாம்.

    ReplyDelete
  74. அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழை இலை விருந்து போன்று சுவையக உள்ளன. புதிய மாண‌வன்

    ReplyDelete
  75. பற்று அற்ற நிலை பற்றி பாரதியார்
    ..................................
    விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்த‌
    சிட்டுக் குருவியைப் போலே

    எட்டு திசையும் பற‌ந்து திரிகுவை
    ஏறிய காற்றில் விரைவொடு நீந்துவை
    மட்டுபடாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ்
    வானொலி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)

    பெட்டையினோடு இன்பம் பேசிக்களிப்புற்று
    பீடை இலாதது ஓர் கூடு கட்டிக்கொண்டு
    முட்டை தரும் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
    முந்த உணவு கொடுத்து அன்பு செய்து இங்கு (விட்டு)

    முற்ற‌த்திலேயும் க‌ழ‌னி வெளியிலும்
    முன் க‌ண்ட‌ தானிய‌ம் த‌ன்னைக் கொணர்ந்து உண்டு
    மற்ற‌ப் பொழுது க‌தை சொல்லித் தூங்கிப் பின்
    வைக‌றை ஆகும் முன் பாடி விழிப்புற்று!

    ‍ ம‌காக‌வி பார‌தியா‍‍‍‍ர் ‍‍‍‍‍‍‍ ‍‍
    kmr.krishnan
    http://parppu.blogspot.com

    ReplyDelete
  76. ////Emmanuel Arul Gobinath said...
    Gmail இறுதியில் இந்த தகவலை நீங்கள் பார்க்கலாம் , எந்த IP Address இல் இருந்து Access பண்ணி இருக்கிறோம் என்று..
    'This account is open in 1 other location (203.12.78.9). Last account activity: 8 hours ago. Details
    Gmail view: standard | turn off chat | basic HTML Learn more' அதில் Detail ஜ click பண்ணிணால் மேலதிக தகவலை பெறலாம். உங்களுடைய broadband Ip address இலா என்று check பண்ணி கொள்ளலாம்./////

    தகவலுக்கு நன்றி இமானுவேல்!

    ReplyDelete
  77. /////RaaKul said...
    அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழை இலை விருந்து போன்று சுவையாக உள்ளன. புதிய மாண‌வன்/////

    எனக்கும் வாழையிலைச் சாப்பாடு என்றால் மிகவும் பிடிக்கும்! நன்றி ராகுல்!

    ReplyDelete
  78. ///kmr.krishnan said...
    பற்று அற்ற நிலை பற்றி பாரதியார்
    ..................................
    விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்த‌
    சிட்டுக் குருவியைப் போலே
    எட்டு திசையும் பற‌ந்து திரிகுவை
    ஏறிய காற்றில் விரைவொடு நீந்துவை
    மட்டுபடாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ்
    வானொலி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)
    பெட்டையினோடு இன்பம் பேசிக்களிப்புற்று
    பீடை இலாதது ஓர் கூடு கட்டிக்கொண்டு
    முட்டை தரும் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
    முந்த உணவு கொடுத்து அன்பு செய்து இங்கு (விட்டு)
    முற்ற‌த்திலேயும் க‌ழ‌னி வெளியிலும்
    முன் க‌ண்ட‌ தானிய‌ம் த‌ன்னைக் கொணர்ந்து உண்டு
    மற்ற‌ப் பொழுது க‌தை சொல்லித் தூங்கிப் பின்
    வைக‌றை ஆகும் முன் பாடி விழிப்புற்று!
    ‍ ம‌காக‌வி பார‌தியா‍‍‍‍ர் ‍‍‍‍‍‍‍ ‍‍
    kmr.krishnan
    http://parppu.blogspot.com/////

    பற்று அற்ற நிலைக்கு ஓட்டுப்போட்டது. நீங்கள் ஒருவர்தான் என்று நினைக்கிறேன்.நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  79. Sir, Periya Gnanigal, siddhargal sonna patru atrra nilayai migavum simple aga nale variyil simple aga utharanathudam algaga manathil pathiyumbadi soneergal, Nandri.

    ReplyDelete
  80. /////Sakthi Ganesh said...
    Sir, Periya Gnanigal, siddhargal sonna patru atrra nilayai migavum simple aga nale variyil simple aga utharanathudam algaga manathil pathiyumbadi soneergal, Nandri./////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே~!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com