மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

27.8.15

Short Story சிறுகதை: இந்தியன் ஆயா சர்வீஸ் (I.A.S)


இந்தியன் ஆயா சர்வீஸ் (I.A.S)

சிறுகதை
---------------------------------------------
கதிரேசன் தேசப்பற்று மிக்கவர். நம் நாட்டைப் பற்றி யாராவது குறையாகச் சொன்னால் அவர்களுடன் சண்டைக்குப் போய்விடுவார்.

மக்களிடம் கட்டுப்பாடின்மை, பரவலாகக் காணப்படும் லஞ்சம், ஊழல், என்று யாராவது சொன்னால், அதெல்லாம் குறைபாடுகள். அதைவைத்து ஒட்டு
மொத்த தேசத்தையும் மோசமாகச் சொல்லாதீர்கள் என்று வாதம் செய்யத் துவங்கிவிடுவார்.

இது ஆன்மீக பூமி. எத்தனை ஆயிரம் கோயில்கள் உள்ளன. தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் போன்று கருங்கல் திருப்பணியில் ஜொலிக்கும் ஒரு கோயிலையாவது நீங்கள் வேற்று நாட்டில் காட்ட முடியுமா என்பார்?

"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே"

என்ற பாரதியின் வரிகளை உரக்கச் சொல்லுவார்.

”இட்லி, சாம்பாருக்கு இணையான உணவைக் காட்டுங்கள் பார்க்கலாம்” என்பார். ”தயிர் சாதம், மாங்காய் ஊறுகாய்க்கு ஈடு எது?” என்பார்.

அப்படிச் சொல்பவர், அமெரிக்காவை யாராவது பாராட்டிச் சொன்னாலும், அவர்களுடன் சண்டைக்குப் போய்விடுவார்.

”எதற்காக அமெரிக்கபுராணம் பாடுகிறீர்கள்? அமெரிக்காவில் என்ன இருக்கிறது? 500 ஆண்டுகளுக்கு முன்பு கொலம்பஸ் என்னும் மாவீரன்
கண்டுபிடித்த பின்புதான் அமெரிக்கா. இத்தாலி, ஸ்பானிஷ், பிரெஞ்ச், ஜெர்மனி, இங்கிலாந்து என்று பல தேசத்து மக்கள் குடியேறியதால்
உருவான நாடு அது. கலவையான நாடு அது. நமக்குள்ள நீண்ட வரலாறு, இதிகாசங்கள், இலக்கியங்கள் எல்லாம் அவர்களிடம் இல்லை. அவர்கள் தேசத்துப் பணமான டாலர் மதிப்பு உச்சத்தில் இருப்பதால், எல்லோருக்கும், அதாவது பணத் தேடலில் உள்ள எல்லோருக்கும் அமெரிக்கா உயர்வாகத்
தெரிகிறது. அவ்வளவுதான்.  கரிகால்சோழன் திருச்சி கல்லணையை கட்டி கிட்டத்தட்ட 13 நூற்றாண்டுகள் ஆகிறது. அதை மனதில் வையுங்கள். ”
என்பார்.

”என்ன அண்ணே, அப்படிச் சொல்லிவிட்டீர்கள், நம் செட்டிநாட்டு
ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமான பேர்கள், அங்கே சென்று
பெரும்பொருள் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்திற்கு ஒருவராவது இப்போது அங்கே இருக்கிறார்கள்.”

”போனவர்களில் ஒருவராவது சம்பாதித்தது போதும் என்று திரும்பி வருகிறார்களா?” அதைச் சொல்லுங்கள்.

”திரும்பி வராததற்கு பணம் மட்டும் காரணமில்லை. அங்கே உள்ள
ஒழுக்கம் (Discipline) கட்டுப்பாடு, போன்றவைகளும் காரணமாகும்.
எத்தனை பெரிசுகள் அவர்கள் அனுப்பும் பணத்தை வைத்து இங்கே செளகரியமாக இருக்கிறார்கள் தெரியுமா? அத்துடன் எத்தனை பேர்கள், அங்கே சென்று மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று தங்கிவிட்டு வருகிறார்கள் தெரியுமா?”

”அங்கே என்ன சுற்றுலா பயணத்திற்கா செல்கிறார்கள்? இல்லையே!
தங்கள் பிள்ளைகளின் மகப்பேறு சமயத்தில் உதவிக்காகச் செல்கிறார்கள்.
அங்கே பிரசவத்திற்கு பத்து லட்சம் ரூபாய் செலவாகும். அத்துடன்
போகின்ற ஒவ்வொருவருக்கும் குறைந்தது இரண்டு லட்ச ரூபாய்களாவது
செலவாகும். எல்லாம் எதற்காக? அங்கே பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக அமெரிக்கக்  குடியுரிமை கிடைத்துவிடும். அதற்காகத்தான்
அங்கே பிரசவம். இங்கே இருந்து செல்கிறவர்களை ஆறு மாதங்களுக்கு
மேல் தங்க அங்கே அனுமதிக்க மாட்டார்கள். ஆகவேதான் பெண்ணின்
பெற்றோர்களும்,  பையனின் பெற்றோர்களும் மாறி மாறி ஷிப்ட்
முறையில் சென்று திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆயா வேலை
பார்க்கச் சென்று கொண்டிருக்கிறார்கள். பச்சைக் குழந்தையை,  முதல் ஒரு வருடம் பார்த்துக் கொள்ளும் வேலை. அப்படிப் போகிறவர்களுக்கு அங்கே  உள்ள அவதிகள் உங்களுக்குத் தெரியுமா?”

“அவதிகளா? என்ன அவதிகள்?”

“முதலில் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாது. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டியதுதான். அங்கே உங்களை விசா அனுப்பி
அழைத்துக் கொண்ட மகராசனோ அல்லது மகராசியோ உங்களைக் கூட்டிக்கொண்டு போனால்தான் நீங்கள் வெளியே செல்ல முடியும்.
அவர்கள் தங்களுடைய விடுமுறை நாட்களில்தான் அதைச் செய்வார்கள். திருவான்மியூரில் உள்ள மகன் வீட்டில் தங்கிக் கொண்டு, பையில் சில்லறையை அள்ளிப் போட்டுக்கொண்டு, பஸ்ஸில் ஏறி பாரீஸ்
கார்னர்வரை ஒரு ரவுண்டு அடித்துவிட்டுத் திரும்புவீர்களே அதுபோல
அங்கே செல்ல முடியாது.

கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிற வீடுகளில், வேளா
வேளைக்கு வித விதமான சமையல் எல்லாம் இருக்காது. வாரத்திற்கு
ஒரு நாள்தான் சமையல் செய்வார்கள். செய்தவற்றை எல்லாம்
ஃபிரிட்ஜில்  அடுக்கிவைத்து விடுவார்கள். வேண்டும்போது ஓவனில்
சூடு பண்ணி நீங்கள் சாப்பிட வேண்டும். திங்கட்கிழமை ஊற்றிக்
கொள்கிற சாம்பார்தான் மீண்டும் வியாழக் கிழமைக்கு வரும்.
செவ்வாய்க் கிழமை ஊற்றிக்  கொள்கிற புளிக் குழம்பைத்தான்
மீண்டும் வெள்ளிக்கிழமை ஊற்றிக் கொள்ள வேண்டும். புதன்
கிழமைக்கு வரும் ரசத்தைத்தான் சனிக்கிழமை நீங்கள் ஊற்றிக்
கொள்ளவேண்டும். பொரியலும் இப்படித்தான் அடுக்கு முறையில்
வரும். சூடான சமையல் சாப்பாடு எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில்
தான்!”

“ஓஹோ.....”

“அதைவிட அவதி ஒன்று உள்ளது. டாய்லெட்டிற்குப் போனால் தண்ணீர் ஊற்றிக் கழுவிவிட்டு ஆனந்தமாக வெளியே வரமுடியாது. எல்லாம்
பேப்பர்தான். துடைத்துப் போட்டுவிட்டு வரவேண்டும். நாத்தம் பிடித்த
ஊர்கள்”

இதற்குமேல் தாங்காது என்று வந்தவர்கள் ஓட்டம் பிடித்துவிடுவார்கள். கதிரேசனும் வசை புராணத்தை அத்துடன் நிறுத்திக் கொள்வார்.
                         
                                        ****************************************

மனித மனம் மகத்தானது. மனதை இரண்டாகப் பிரிக்கலாம். அறிவு மனம் (conscious mind), ஆழ்மனம் (Sub-conscious mind) என இரு பிரிவுகளாக
பிரிக்கலாம். அறிவுமனதிற்கு ஐம்புலன்களின் நேரடித் தொடர்பு உண்டு. கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், சப்தங்கள்,
மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொட்டு
உணர்ந்த புரிதல்கள் அனைத்தும் செய்திகளாக அறிவு மனத்தில் பதிவு
பெறுகின்றன. அதற்கு நல்லது கெட்டது தெரியும். சிலவற்றை நாம் ஒதுக்குவோம். பலவற்றை விரும்புவோம். கிடைத்த அனுபவத்தை
வைத்து சிந்தித்து சீர்தூக்கி  நம் செயல்களைத் தொடரவைப்பது அறிவு மனம்தான். அதாவது வெளிமனம்தான்.

ஆனால் ஆழ்மனம் அல்லது உள்மனம் என்பது ஒரு பெட்டகத்தைப்
போன்றது. தன்னிச்சையாக இயங்கக்கூடியது. அறிவு மனத்திற்குக்
கிடைக்கும் செய்திகள் எதையும் அது ஏற்காது. அதற்கு நல்லது கெட்டது
என்று எதுவும் தெரியாது, கிடையாது. வெற்றி,தோல்வி என்றும் எதுவும் கிடையாது. உண்மையான அனுபவத்திற்கும், கற்பனையான அனுபவத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அது அறியாது.

இத்தகைய பண்புகளைக் கொண்ட ஆழ்மனம் என்ன செய்யும்?

சமயங்களில் வக்கிரமாக நம்மைப் பேசவைக்கும். தேவையில்லாததை செய்ய வைக்கும்.

கதிரேசன் அண்ணன் வாழ்க்கையிலும் அதுதான் நடக்கிறது. அவருக்கு அமெரிக்காவைப் பிடிக்காமல் போனதற்கு அவருடைய அண்ணன்
சிவராமன் செட்டியாரும் அவருடைய மனைவி செல்லம்மை ஆச்சியும்
தான் காரணம். அண்ணனுக்கும் தம்பிக்கும் பத்து வயது வித்தியாசம். இடையில் இரண்டு சகோதரிகள்.

சிவராமன் செட்டியாருக்கு இரண்டு மகன்கள். இருவருமே அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறார்கள். மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள் என்று
பெரிய நிறுவனங்களில் வேலை. கை நிறையச் சம்பாத்தியம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பத்தாயிரம் டாலர்கள் பணம் அனுப்பிக்
கொண்டிருக்கிறார்கள். அதாவது இன்றைய பணபறிமாற்றத்தில் சுமார்
ஆறு லட்சத்தி முப்பத்தாறாயிரம் ரூபாய்கள். சராசரியாக மாதம் இரண்டு
லட்ச ரூபாய்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். காரைக்குடியைச்
சுற்றி இந்தப் பக்கம் கோட்டையூர்வரை அந்தப் பக்கம் மானகிரி,
நாச்சியாபுரம்வரை இடமாக வாங்கிப் போட்டுக்கொண்டிருக்கிறார்.

அத்துடன் நான்கு பேரக் குழந்தைகள். அமெரிக்க மண்ணிலேயே
எல்லாப் பிரசவமும். அதற்கு ஆச்சியும், செட்டியாரும் அடிக்கடி
போய் வந்தார்கள்.

ஆச்சிக்கு பத்து வருட விசா. நினைத்தால் புறப்பட்டுப் போய்விடுவார்.
போய் வந்து விட்டு சும்மா இருக்காமல் வருகிறவர்கள் போகிறவர்களிடம்
எல்லாம் அமெரிக்கப் பெருமையையே பேசிக் கொண்டிருப்பார். ஆச்சியின் அளப்பறை ஓவராக இருக்கும். அதில் மனம் நொந்த கதிரேசனின்
ஆழ்மனதில் எல்லாம் தங்கிவிட்டது.

கதிரேசனுக்கு ஒரே ஒரு பெண் மட்டும்தான். வயது இருபத்தி மூன்றாகிறது. மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் படித்தவளுக்கு
இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்து சென்னையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். அம்சமாக இருப்பாள். பார்த்தவர்களைத்
திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. பெண் கேட்டும், செய்யச் சொல்லியும் நிறையப் பேர்கள் நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கதிரேச
அண்ணன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன்களை எல்லாம்
வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு உள்நாட்டு வரனையே தேடிக்கொண்டிருந்தார்.

நல்ல வரன் கிடைத்ததா?

கிடைத்தது. ஆனால் அவர் திருமணத்தை நிச்சயம் செய்த போது,
பின்னால் வரவிருக்கும் இடையூறு தெரியாமல் போய்விட்டது. அதைக்
காலதேவனின் சேட்டை அல்லது விளையாட்டு என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

                                     ****************************************

கதிரேசன் செட்டியாரின் மகளுக்கு நல்ல வரனாக அமைந்து திருமணமும் தடபுடலாய் நிறைவேறியது. மாப்பிள்ளையின் தந்தையாருக்கு
சென்னையில் உள்ள கனரகத் தொழிற்சாலை ஒன்றில் மேலாளர்
வேலை. அவருடைய நிறுவன வளாகத்திலேயே அவருக்கு வீடு.
அவர்களுக்கு சென்னையில் இரண்டு இடங்களில் சொந்த வீடுகள்
உள்ளன. அதில் ஒரு வீட்டில் தன் மகனையும், மருமகளையும்
குடியிருக்கச் சொல்லிவிட்டு, புதுக்கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துவிட்டார்.

பூவெல்லாம் உன் வாசம் என்பதுபோல கதிரேசன் செட்டியாருக்கு  மனமெல்லாம் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.

ஆனால் அந்த மகிழ்ச்சி இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை.

அவருடைய மாப்பிள்ளைக்கு, அவர் வேலை பார்த்த நிறுவனத்தார்,
பதவி உயர்வு கொடுத்ததோடு, அமெரிக்காவில் உள்ள தங்கள்
கிளைக்குச் செல்லும்படி உத்தரவை அடித்துக் கையில் கொடுத்து
விட்டார்கள்.

புதிதாகத் திருமணமானவன் என்று சொல்லியபோது, மனைவிக்கும் வேலைபோட்டுக் கொடுத்துக் கூடவே கூட்டிக் கொண்டு செல்லுங்கள்
என்று சொல்லிவிட்டார்கள். சொல்லியதோடு அல்லாமல், பத்தே
நாட்களில் விசா, விமானப் பயணத்திற்கான சீட்டுக்கள் என்று எல்லாவற்றையும் கையில் திணித்து வலுக்கட்டாயமாக வழியனுப்பி வைத்துவிட்டார்கள். அவர்கள் அவசரம் அவர்களுக்கு.

கதிரேசன் செட்டியாருக்கு மட்டும்தான் மிகுந்த வருத்தம். அரை மனதுடன் பெண்ணையும் மாப்பிள்ளையையும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில்
வழியனுப்பி வைத்தார்.

வருத்தம் அதோடு முடிந்ததா? அதெப்படி முடியும்? அதற்குப் பிறகுதான் அதிகமானது.

                                  **********************************************

மகளும் மாப்பிள்ளையும் அமெரிக்கா சென்ற ஆறாவது மாதமே மகள் மாதமாக இருக்கிறாள் என்று தகவல் வந்தது. மாப்பிள்ளை, பிரசவத்தை
அமெரிக்காவிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.
அதனால் அடுத்து வந்த சில மாதங்களிலேயே கதிரேசன் செட்டியாரும்
அவருடைய மனைவியும் அமெரிக்காவிற்குப் புறப்பட்டுச் செல்லும்படியாகிவிட்டது.

விசா, மற்றும் டிக்கெட்டுகளை எல்லாம் மாப்பிள்ளை ஏற்பாடு செய்து
வாங்கி அனுப்பிவிட்டார். கதிரேசன் செட்டியாரின் மனைவி பிள்ளை
பிறந்தவுடன் அதற்குப் போடுவதற்காக தங்கச் சங்கிலி , வைரத்தோடு,
ஜீரோ சைஸ்ஸில் குழந்தை ஆடைகள் என்று எல்லாவற்றையும்
வாங்கிச் சேர்த்துவிட்டார்.

காரைக்குடியைவிட்டுப் புறப்பட வேண்டிய நாளும் வந்தது.
இன்னோவா டாக்ஸி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இருவருக்கும் சேர்த்து 4 பெரிய பெட்டிகள், ஹாண்ட் லக்கேஜ்
என்று சாமான்களும் இருந்தன.

சென்னை விமான நிலையம்வரை வருகிறேன் என்று கதிரேசன்
செட்டியாரின் நெருங்கிய நண்பரான ஏகப்ப செட்டியாரும் அவர்களுடன்
செல்வதற்குத் தயாராக இருந்தார்.

அப்போதுதான் அது நடந்தது.

கதிரேசன் செட்டியாரைப் பார்ப்பதற்காகப் புதுக்கோட்டையில் இருந்து வந்திருந்த அவர்களுடைய உறவினர் மாணிக்கம் செட்டியார்
ஆச்சரியத்துடன் கேட்டார்.

“என்ன பயணமா? எந்த ஊருக்கு? பெட்டிகளெல்லாம் பலமாக இருக்கிறதே!”

ஏகப்ப செட்டியார்தான் குறுக்கிட்டுச் சொன்னார்.” ஐ.ஏ.எஸ் படிப்பதற்காக அண்ணன் அமெரிக்க செல்கிறார்கள்”

“ஐ.ஏ.எஸ்ஸா? இந்த வயதிலா? படித்து என்ன செய்யப் போகிறார்?”

“படித்துவந்தவுடன் இங்கே உள்ள மற்ற நகரத்தார்களுக்குப் பாடம் நடத்துவார்”

வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏகப்ப செட்டியார் விளக்கிச் சொன்னார்.

தங்கள் பிள்ளைகளின் பிரசவத்திற்காக அமெரிக்கா செல்பவர்களை யெல்லாம், நக்கலாக, ஆயா வேலைக்குச் செல்கிறார்கள் என்றும்
இந்தியன் ஆயா சர்வீஸ் படிக்கச் செல்கிறார்கள் என்றும் கதிரேசன்
இதுவரை சொன்னதையும், இப்போது அவரே தன் மனைவியுடன்
ஆயா வேலை செய்யச் செல்கிறார் என்பதையும் லாவகமாக விளக்கிச் சொன்னார். கேட்டவருக்குப்  புரிந்தது. தன்னை மறந்து சிரித்தார்.

கதிரேசன் செட்டியாருக்கு நெத்தியடியாக ஒன்று மட்டும் விளங்கியது. புரிந்தது. யாரையும் கேலி செய்யக் கூடாது. எள்ளி நகையாடக் கூடாது.

முற்பகல் செய்தால் பிற்பகல் நமக்கே அது வரும் என்ற ஆன்றோர்களின் அர்த்தமுள்ள சொற்களெல்லாம் மனதில் வந்து போயின!

இதெல்லாம் நடந்து ஒருவருடம் ஆன பிறகு கதிரேசன் செட்டியார் இந்தியாவிற்குத் திரும்பிவந்தவுடன் செய்த முக்கியமான வேலை.

அமெரிக்காவையோ அல்லது அங்கே செல்லும் பெற்றோர்களையோ
கேலி செய்வதை அறவே நிறுத்திவிட்டார்.

காலன் நடத்தும் பாடத்தில் அதுதானே முக்கியம். அதாவது அனுபவப்பட்டுத் திருந்துவதுதானே முக்கியம்!
-------------------------------------------------------------------------
மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய சிறுகதை இது. அதில்
வெளிவந்து வரவேற்பைப் பெற்றகதை. நீங்கள் படித்து மகிழ வேண்டும்
என்பதற்காக அக்கதையை இன்று வலை ஏற்றியிருக்கிறேன்.

அன்புடன்
வாத்தியார்                                            ==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28 comments:

siva kumar said...

வணக்கம் ஐயா
மிகவும் பயனுள்ள வரிகள்

Kumanan Samidurai said...

அய்யா வணக்கம்,

கதை நன்றாக இருக்குது, இதில் பல உண்மை மற்றும் திருவிளையாடல் உள்ளது,

நன்றி,
அன்புடன்
சா.குமணன்

selvaspk said...

Nicely put together. Its not a story though, its the reality.

My co-worker got a baby on July and now she is back office on Aug 24th! one month with baby and baby is taken care by her parents later her in-laws will be coming!!

When I asked many of friends, why do they want to stay here in US? below are summary of their version of stories
1. Life in US is very simple, less cumbersome compared to India
2. Less responsibility, simple life, healthy life style
3. Once you used to the life here (basically go work, come home spend more time with your family) going back to India and getting into public transportation..bllah..
4. Kids raise here with high standards!! (I will leave it to those who believe so)
5. Job satisfaction or culture
6. You can get into fancy lifestyle even if one person is working
7. You got loans to fulfill (they buy properties in india but never going to enjoy at their times)

But in my opinion,
1. People are selfish, if in India, they have to share social responsibility which many of the ladies here doesn't want to bear (controversial but bitter truth)
2. Many think they cant make same money in India.
3. Everyone wants to earn money, when a person struggled for money he says he struggled, middle class says he want to go next class, upper middle class thinks about expanding his properties, High class think they should have born here!!!
4. And they buy properties which they will mentally feel good but physically never going to harvest! as they save pennies and live like idiots and bought crores worth of properties for future!! and run behind money for loans!
5. Eventually I see Indian families where the kids were raised half American, couldn't speak indian language or culture and cant be 100% American! They we call ABCD stuck in middle!! Rarely visit India (many doesn't want to visit, they seem to think Euro trip is more fun!)
6. After the age of 45 Indians living here realize what they did to themselves, but time pass by. At that point, they seem to think, they cant mix to their relatives, friends as the time created gap!!!

While there are many more, there is always two sides of coin. This is reality and we just need to accept as we accepted corrupted Indian politics, officials with ruthless selfish people who don't care for fellow Indian and still there lives few selfless good people.

Out of 100 people I spoke, 60 want to stay, 20 not yet decided, 15 ask me back why you want to go back, only 5 says they want to go back (may be visa issues..lol)

May be this is the real high time where people seem to think like the poet said 'Yaadum Oore Yavarum kelir'.

kmr.krishnan said...

தற்போதைய நடைமுறைகளை விவரமாகச் சொல்லி அதற்குள் ஒரு நீதியையும் புகுத்தி அழகாக எழிதியுள்ளீர்கள் ஐயா!அருமையான, எளிமையான கதை.
உங்கள் கதைகள் எல்லாமே நீதியை நேரடியாகச் சொல்லி விடுகின்றன.படிப்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த வயதினரானாலும் சட்டென்று எல்லாம் விளங்கிவிடும்.

B. Lakshmi Narayanan, Tuticorin said...

"இந்தியன் ஆயா சர்வீஸ் படிக்கச் செல்கிறார்கள்"
.
.
.
அற்புதமான உவமை வாத்தியாரே!!!

வேப்பிலை said...

கருத்து ஏதும் இல்லை

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம் .
அமெரிக்காவில் என்ன விஷயம் இருக்கிறதோ இல்லையோ .இந்த கழிவறை பிரச்சினை ..ஐயோ கடவுளே. !!!
முடியாது ... ஆனால் முன்கூட்டியே கண்டிசன் போட்டதால் எனது மகன் ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தான்
IAS படித்து பாஸ் பண்ணிட்டு ..!!!!ஓடியே வந்துட்டோம் ..!!!!

நிறைய விஷயங்கள் இந்தியாவில் இல்லாதது .அங்கு இருக்கிறது ... இட ஒதீக்கீடு ..கிடையாது ...
அங்கு இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் சொல்லும் வார்த்தை திறமைக்கு மதிப்பு இருக்கிறது ..
ஆதலால் எனது குழைந்தைகளை இங்கு படிக்க வைத்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது சுலபம் ..
ஆனாலும் வாழ்ந்து முடிந்த நமக்கு சொர்கமே என்றாலும் அது நம்மூரை போலாகுமா !!! ஆகாதையா.....!!!. ஆகாது..!!
வாத்தியார் அய்யாவின் கதை நடை ஆஹா ..!!! கண்முன் நடக்கும் சம்பவமாக கொண்டு செல்வது சிறப்பு ..

gopu said...

அருமை சார்

lrk said...

Nice story sir
Kannan.

Gurusamy said...

Good Story. I can connect to the story as i moved here an year ago. But not everyone eats the old food. Most of our people... cooks daily and eats the fresh food.

selvam velusamy said...

வணக்கம் குரு,

சிறுகதை மிகவும் அருமை. இதுபோல் ஒரு நிலைமை பெரும்பாலானோர்க்கு அமைவது உண்டு.

நன்றி,
செல்வம்

bhagwan said...

அமெரிக்க வாழ்வு என்றால் என்ன என்பதை அப்பட்டமாக முதலில் படம் பிடித்தக் காட்டியுள்ளீர்கள்.பெற்றோர்கள் அமெரிக்காவுக்கு என்ன நிமித்தத்தில் செல்கிறார்கள் என்பதையும் விலா வாரியாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்! அவை தவிர்க்க இயலாதன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரியப்படுத்தியுள்ள பாங்கு பாராட்டுக்குரியது, வாத்தியாரே! எல்லாவற்றுக்கும் மேலாக கடைசியில் காலனைக் காட்டி தவறு செய்தவர் திருந்துவது போலச் சொல்லியிருக்கும் பாணி, பலே! படிப்பவரில் mindset உள்ள பலர் நிச்சயம் திருந்துவர்.
வாழ்க, வாத்தியாரின் ப(பா)ணி¡

Subbiah Veerappan said...

//////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
மிகவும் பயனுள்ள வரிகள்////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger Kumanan Samidurai said...
அய்யா வணக்கம்,
கதை நன்றாக இருக்குது, இதில் பல உண்மை மற்றும் திருவிளையாடல் உள்ளது,
நன்றி,
அன்புடன்
சா.குமணன்/////

விளையாடல் இருக்கலாம். ஆனால் திருவிளையாடல் கிடையாது சாமி!

Subbiah Veerappan said...

//////Blogger selvaspk said...
Nicely put together. Its not a story though, its the reality.
My co-worker got a baby on July and now she is back office on Aug 24th! one month with baby and baby is taken care by her parents later her in-laws will be coming!!
When I asked many of friends, why do they want to stay here in US? below are summary of their version of stories
1. Life in US is very simple, less cumbersome compared to India
2. Less responsibility, simple life, healthy life style
3. Once you used to the life here (basically go work, come home spend more time with your family) going back to India and getting into public transportation..bllah..
4. Kids raise here with high standards!! (I will leave it to those who believe so)
5. Job satisfaction or culture
6. You can get into fancy lifestyle even if one person is working
7. You got loans to fulfill (they buy properties in india but never going to enjoy at their times)
But in my opinion,
1. People are selfish, if in India, they have to share social responsibility which many of the ladies here doesn't want to bear (controversial but bitter truth)
2. Many think they cant make same money in India.
3. Everyone wants to earn money, when a person struggled for money he says he struggled, middle class says he want to go next class, upper middle class thinks about expanding his properties, High class think they should have born here!!!
4. And they buy properties which they will mentally feel good but physically never going to harvest! as they save pennies and live like idiots and bought crores worth of properties for future!! and run behind money for loans!
5. Eventually I see Indian families where the kids were raised half American, couldn't speak indian language or culture and cant be 100% American! They we call ABCD stuck in middle!! Rarely visit India (many doesn't want to visit, they seem to think Euro trip is more fun!)
6. After the age of 45 Indians living here realize what they did to themselves, but time pass by. At that point, they seem to think, they cant mix to their relatives, friends as the time created gap!!!
While there are many more, there is always two sides of coin. This is reality and we just need to accept as we accepted corrupted Indian politics, officials with ruthless selfish people who don't care for fellow Indian and still there lives few selfless good people.
Out of 100 people I spoke, 60 want to stay, 20 not yet decided, 15 ask me back why you want to go back, only 5 says they want to go back (may be visa issues..lol)
May be this is the real high time where people seem to think like the poet said 'Yaadum Oore Yavarum kelir'./////

உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger kmr.krishnan said...
தற்போதைய நடைமுறைகளை விவரமாகச் சொல்லி அதற்குள் ஒரு நீதியையும் புகுத்தி அழகாக எழிதியுள்ளீர்கள் ஐயா!அருமையான, எளிமையான கதை.உங்கள் கதைகள் எல்லாமே நீதியை நேரடியாகச் சொல்லி விடுகின்றன.படிப்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த வயதினரானாலும் சட்டென்று எல்லாம் விளங்கிவிடும்./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
"இந்தியன் ஆயா சர்வீஸ் படிக்கச் செல்கிறார்கள்" .
அற்புதமான உவமை வாத்தியாரே!!!/////

நல்லது. உங்களின் விமர்சனத்திற்கு நன்றி லக்‌ஷ்மி நாராயணன்!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
கருத்து ஏதும் இல்லை//////

உங்கள் விருப்பத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம் .
அமெரிக்காவில் என்ன விஷயம் இருக்கிறதோ இல்லையோ .இந்த கழிவறை பிரச்சினை ..ஐயோ கடவுளே. !!!
முடியாது ... ஆனால் முன்கூட்டியே கண்டிசன் போட்டதால் எனது மகன் ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தான்
IAS படித்து பாஸ் பண்ணிட்டு ..!!!!ஓடியே வந்துட்டோம் ..!!!!
நிறைய விஷயங்கள் இந்தியாவில் இல்லாதது .அங்கு இருக்கிறது ... இட ஒதீக்கீடு ..கிடையாது ...
அங்கு இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் சொல்லும் வார்த்தை திறமைக்கு மதிப்பு இருக்கிறது ..
ஆதலால் எனது குழைந்தைகளை இங்கு படிக்க வைத்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது சுலபம் ..
ஆனாலும் வாழ்ந்து முடிந்த நமக்கு சொர்கமே என்றாலும் அது நம்மூரை போலாகுமா !!! ஆகாதையா.....!!!. ஆகாது..!!
வாத்தியார் அய்யாவின் கதை நடை ஆஹா ..!!! கண்முன் நடக்கும் சம்பவமாக கொண்டு செல்வது சிறப்பு ../////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

//////Blogger gopu said...
அருமை சார்/////

நல்லது. நன்றி கோபு!

Subbiah Veerappan said...


/////Blogger lrk said...
Nice story sir
Kannan.//////

நல்லது. நன்றி கண்ணன்!

Subbiah Veerappan said...

/////Blogger Gurusamy said...
Good Story. I can connect to the story as i moved here an year ago. But not everyone eats the old food. Most of our people... cooks daily and eats the fresh food./////

இருக்கலாம். எண்ணிக்கையில் அவர்கள் குறைவாகவே இருப்பார்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
சிறுகதை மிகவும் அருமை. இதுபோல் ஒரு நிலைமை பெரும்பாலானோர்க்கு அமைவது உண்டு.
நன்றி,
செல்வம்/////

உண்மைதான். அதைவெளிப்படுத்தும் முகமாகத்தான் இக்கதையை எழுதினேன். நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger bhagwan said...
அமெரிக்க வாழ்வு என்றால் என்ன என்பதை அப்பட்டமாக முதலில் படம் பிடித்தக் காட்டியுள்ளீர்கள்.பெற்றோர்கள் அமெரிக்காவுக்கு என்ன நிமித்தத்தில் செல்கிறார்கள் என்பதையும் விலா வாரியாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்! அவை தவிர்க்க இயலாதன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரியப்படுத்தியுள்ள பாங்கு பாராட்டுக்குரியது, வாத்தியாரே! எல்லாவற்றுக்கும் மேலாக கடைசியில் காலனைக் காட்டி தவறு செய்தவர் திருந்துவது போலச் சொல்லியிருக்கும் பாணி, பலே! படிப்பவரில் mindset உள்ள பலர் நிச்சயம் திருந்துவர்.
வாழ்க, வாத்தியாரின் ப(பா)ணி¡/////

உங்களின் பாராட்டிற்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி நண்பரே!

வேப்பிலை said...

இந்த படத்தை உடனே மாற்றுங்கள்
இதில் சட்ட பிரச்சனை இருக்கிறது

இது போன்ற படங்களை வைத்து
இப்படி எழுதுவதற்கு சட்டத்தில் இடமில்லை

நல்லெண்ணத்தில் சொல்கிறோம்
நலமுடன் செயல் படுத்துவது உங்கள் விருப்பம்

Kamala said...

மிக நல்ல கதை, அமெரிக்க உண்மைகளைத் தெளிவாகச் சொல்கிறது. எல்லாம் சரிதான். ஆனால் அமெரிக்கா போய் வந்தவர்கள் கழுத்தில் தலை நிற்காமல் இந்திரலோகம் போய்வந்தது போல நடந்துகொள்வதைப் பார்த்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.

Subbiah Veerappan said...

//////Blogger வேப்பிலை said...
இந்த படத்தை உடனே மாற்றுங்கள்
இதில் சட்ட பிரச்சனை இருக்கிறது
இது போன்ற படங்களை வைத்து
இப்படி எழுதுவதற்கு சட்டத்தில் இடமில்லை
நல்லெண்ணத்தில் சொல்கிறோம்
நலமுடன் செயல் படுத்துவது உங்கள் விருப்பம்///////

வேப்பிலையார் சொன்னால் கேட்காமல் இருப்போமா? உடனே செயல் படுத்திவிட்டோம்!

Subbiah Veerappan said...

/////Blogger Kamala said...
மிக நல்ல கதை, அமெரிக்க உண்மைகளைத் தெளிவாகச் சொல்கிறது. எல்லாம் சரிதான். ஆனால் அமெரிக்கா போய் வந்தவர்கள் கழுத்தில் தலை நிற்காமல் இந்திரலோகம் போய்வந்தது போல நடந்துகொள்வதைப் பார்த்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.//////

உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!