மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.8.15

கரம்கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல் அது!


கரம்கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல் அது!

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக்கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள்வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக்கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள்வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல் 
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல் 
(ஆறுமுகன் ... )

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல் 
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மனவாசல் 
வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல் 
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல் 
(ஆறுமுகன் ... )

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப்புகழ் வாசல் 
சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல் 
சக்திவடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல் 

இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்
மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர்வாசல்
மால்மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல் 
(ஆறுமுகன் ... )

அலைக் கரம்கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்
(ஆறுமுகன் ... ).

பாடிப்பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்!
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

 1. Dear Sirs'
  My Sincere Pleasured Wishes for the Happy Occasion of the Release of The First Book.

  REQUEST: If possible, kindly permit it in PDF like Format so that I shall zoom to my texture to read on.

  ReplyDelete
 2. அழகான வரிகள். "ஏழை முகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல்"... இப்படியுள்ளம் இறைவனிடம் உள்ளது போல் மனித (இ)மனத்திடமும் வேண்டும் என்பது தானே அர்த்தம். நல்ல பாடல்.

  ReplyDelete
 3. Dear sir,
  After one week I, just visited classroom and I am very glad to found that your book has already come out and immediately I called up umaiyal publishers & in turn they informed that they will send through Registered post to Bharuch , any way I am eagerly waiting for the book .
  Thanks
  G.Seenivasan
  Bharuch
  9099984275

  ReplyDelete
 4. அருமையான பாடல் ஐயா!

  ஐயா! முன்பணமாக ரூ.200/‍= அனுப்பியவர்கள் மீதித் தொகை ரூ.170/=ஐ
  வங்கிக்கணக்கில் செலுத்திவிடலாமா? விவரத்தைப் பின்னூட்டமாக இல்லாமல்
  வகுப்பறையில் அறிவிப்பாகத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்..

  ReplyDelete
 5. ///Blogger siva kumar said...
  உள்ளேன் ஐயா///////

  வருகைப்பதிவு போட்டாயிற்று. உள்ளே வந்து அமருங்கள்!

  ReplyDelete
 6. //////Blogger Rajah M E said...
  Dear Sirs'
  My Sincere Pleasured Wishes for the Happy Occasion of the Release of The First Book.
  REQUEST: If possible, kindly permit it in PDF like Format so that I shall zoom to my texture to read on./////

  பி.டி.எஃப் சாத்தியமில்லை. புத்தகத்தையே படியுங்கள்!

  ReplyDelete
 7. /////Blogger bhagwan said...
  அழகான வரிகள். "ஏழை முகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல்"... இப்படியுள்ளம் இறைவனிடம் உள்ளது போல் மனித (இ)மனத்திடமும் வேண்டும் என்பது தானே அர்த்தம். நல்ல பாடல்.////

  உண்மைதான். உங்களின் ரசனை உணர்வு வாழ்க!

  ReplyDelete
 8. .//////Blogger seenivasan said...
  Dear sir,
  After one week I, just visited classroom and I am very glad to found that your book has already come out and immediately I called up umaiyal publishers & in turn they informed that they will send through Registered post to Bharuch , any way I am eagerly waiting for the book .
  Thanks
  G.Seenivasan
  Bharuch
  9099984275//////

  உங்களின் ஆர்வத்திற்கு நன்றி. புத்தகம் கிடைத்தவுடன் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!

  ReplyDelete
 9. //////Blogger kmr.krishnan said...
  அருமையான பாடல் ஐயா!
  ஐயா! முன்பணமாக ரூ.200/‍= அனுப்பியவர்கள் மீதித் தொகை ரூ.170/=ஐ
  வங்கிக்கணக்கில் செலுத்திவிடலாமா? விவரத்தைப் பின்னூட்டமாக இல்லாமல்
  வகுப்பறையில் அறிவிப்பாகத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்..///////

  உங்களின் யோசனை ஏற்றுக்கொள்ளப் பெற்றது. நன்றி. அதன்படி ஒரு சின்ன அறிவிப்பையும் பதிவில் வெளியிட்டுள்ளேன்

  ReplyDelete
 10. /////Blogger dgjagadeesan jaga said...
  Congratulation Ayya./////

  நல்லது. நன்றி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com