மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

10.8.15

நகைச்சுவை: அப்படிப் போடு ராசா!


நகைச்சுவை: அப்படிப் போடு ராசா!

1
மனைவி: கண்ணாளா, முதன் முதலில் என்னைப் பார்த்தபோது, அதாவது பெண் பார்க்க வந்தபோது, நான் என்ன கலர் சேலை கட்டிக்கொண்டிருந்தேன் என்பது உங்கள் நினைவில் இருக்கிறதா?

கணவன்: இல்லை!

மனைவி: என் மேல் உங்களுக்கு அக்கறையோ, அன்போ இல்லை!

கணவன்: அப்படியில்லை ராசாத்தி. தண்டவாளத்தில் தலையைக் கொடுக்கப்போகிறவன், வரப்போவது, சதாப்தியா அல்லது ராஜ்தானி எக்ஸ்பிரஸ்ஸா என்று பார்ப்பானா? நீயே சொல்!
===========================================================
2
குஜராத்தில், ஒரு தொழில் அதிபரிடம், கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும்!

கேள்வி: உங்கள் ஊழியர்கள் நேரம் தவறாமல் சரியான நேரத்திற்கு வருவதற்கு நீங்கள் கையாளும் உத்தி என்ன?

புன்னகையுடன் அவர் சொன்ன பதில்: "சிம்ப்பிள். என்னிடம் 30 அதிகாரிகள் இருக்கிறார்கள். 25 கார் நிறுத்தங்களில் மட்டுமே கட்டணம் இல்லை. மீதி உள்ள ஐந்திற்கும் கட்டணம் உண்டு!"

("It's simple; I have 30 Employees and 25 free Parking spaces & 5  paid...!)
===========================================================
3
வங்கி ஒன்றில், அதன் மேலாலருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே நடந்த உரையாடல்:

Customer : நான் இன்னைக்கு பாங்க்ல Chequeஐ டெபொசிட் செய்தால், அது எப்ப sir clear ஆகும்??

பேங்க் மேனேஜர்: 3 நாள் ஆகும்

Customer : என்னோட Cheque எதிர்ல இருக்கற Bankற்கு உடையதுதானே...... ரெண்டு பேங்கும் எதிர் எதிர்லதான் இருக்கு. பின்ன எதுக்கு 3 நாள் ஆகும்?

Bank Manager : சார், Procedure ன்னு ஒன்னு follow பண்ணனும் இல்ல. யோசிச்சு பாருங்க . நீங்க வெளியில போறீங்க. வழியில ஒரு சுடுகாடு வருது. சுடுகாடு முன்னாடி திடீர்ன்னு நீங்க செத்துபோயிட்டீங்க. அப்டியே உங்கள எரிச்சிடுவாங்களா இல்லை வீட்டுக்கு எடுத்துகிட்டுப் போயி சாங்கியம் செஞ்சி முடித்த பிறகு சுடுகாட்டுக்கு எடுத்துக்கிட்டு போவாங்களா ???

Customer ????"
============================================================
இந்த மூன்றில் எது நன்றாக உள்ளது?

அன்புடன்,
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

Thirumal Muthusamy said...

sir,

second one is productive approach. so i like the second.

M.Thirumal
pavalathanur

lrk said...

ஐயா வணக்கம்
1 ஆம் நகைச்சுவை யில்
//நீயே சொல்! ///
என்று சொல் லி மனைவியின் முறைப்பை கற்பனையில் விட்டது அருமை.

கண்ணன்.

வேப்பிலை said...

1.
பெண்கள் சேலை காட்டுவதாக
சொல்லுவது ஒரு ஜோக் என்று நினைத்தேன்

2.
குஜராத்தில் உள்ள உழியர்கள்
கார் வைத்துக்கொள்ளும் அளவிற்கு

வசதி படைத்தவர்கள் என்று சொல்லும் முதலாளிகள்
விவசாயத்தை பற்றி (நில மசோதாவால்) சிந்திப்பதில்லை

என்பதை பொடி வைத்து பாருங்கள்
எப்படி எல்லாம் ஜோக் சேர்க்கபடுகிறது

3.
பாங்கில் பணம் போடுவதும் சுடுகாட்டுக்கு
பயணம் போவதும் ஒன்னு என்று

வங்கி சேவையை புத்தி சாலி தானமாக
விளக்கமாக சொன்ன bank ஆபீசர் பாராட்டுக்குரியவர்

பழனி. கந்தசாமி said...

மூணாவது ஜோக்குதான் அருமை. ஒவ்வொருத்தனும் சாகறப்ப குழி வெட்டி வச்சுட்டு அதில போய்ப் படுத்திட்டு செத்தா எவ்வளவு வேலை மிச்சம்?

Subbiah Veerappan said...

/////Blogger Thirumal Muthusamy said...
sir,
second one is productive approach. so i like the second.
M.Thirumal
pavalathanur/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
1 ஆம் நகைச்சுவை யில்
//நீயே சொல்! ///
என்று சொல் லி மனைவியின் முறைப்பை கற்பனையில் விட்டது அருமை.
கண்ணன்./////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger வேப்பிலை said...
1.
பெண்கள் சேலை காட்டுவதாக
சொல்லுவது ஒரு ஜோக் என்று நினைத்தேன்
2.
குஜராத்தில் உள்ள உழியர்கள்
கார் வைத்துக்கொள்ளும் அளவிற்கு
வசதி படைத்தவர்கள் என்று சொல்லும் முதலாளிகள்
விவசாயத்தை பற்றி (நில மசோதாவால்) சிந்திப்பதில்லை
என்பதை பொடி வைத்து பாருங்கள்
எப்படி எல்லாம் ஜோக் சேர்க்கபடுகிறது
3.
பாங்கில் பணம் போடுவதும் சுடுகாட்டுக்கு
பயணம் போவதும் ஒன்னு என்று
வங்கி சேவையை புத்தி சாலி தானமாக
விளக்கமாக சொன்ன bank ஆபீசர் பாராட்டுக்குரியவர்//////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

//////Blogger பழனி. கந்தசாமி said...
மூணாவது ஜோக்குதான் அருமை. ஒவ்வொருத்தனும் சாகறப்ப குழி வெட்டி வச்சுட்டு அதில போய்ப் படுத்திட்டு செத்தா எவ்வளவு வேலை மிச்சம்?/////

உண்மைதான். நிறையப் பேருக்கு இன்னும் 100 ஆண்டுகள் வாழ ஆசை இருக்கும்போது. அதெல்லாம் நடக்காது சாமி!

Nagendra Bharathi said...

இரண்டாவது