மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.8.15

கவிதை: புதிய பாப்பா பாட்டு


கவிதை: புதிய பாப்பா பாட்டு

"ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா."

என்று அன்று பாரதியார் பாட்டு எழுதினார்.
இன்றைய நிலைமை என்ன?
தொடர்ந்து பாடியுங்கள்:

ஓரமா விளையாடு பாப்பா - நீ 
ஒண்டிய விளையாடனும் பாப்பா
வீட்டுக்குள்ள விளையாடனும் பாப்பா- நீ
வெளியவே வரக் கூடாது பாப்பா,

காலை எழுந்தவுடன் ஸ்கூலு - பின்பு
கண்ணை கட்டும் கம்ப்யூட்டர் கிளாசு,
மாலை முழுவதும் டியுசன் என்று - நீ
வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா,

எல்லா விளையாட்டும் விளையாடனும் பாப்பா
அதை மொபைல மட்டும் விளையாடனும் பாப்பா
சாதிகள் இருக்குதடி பாப்பா - அது
பணக்காரன் சாதி, ஏழை சாதி பாப்பா

பணத்தை மட்டும் சம்பாரிக்கனும் பாப்பா - அதை
நீ மட்டும் வச்சுகணும் பாப்பா
அன்பு எல்லாம் எதுக்குடி பாப்பா - நீ
ஆதாயம் வருதான்னு பாருடி பாப்பா
==========================================
2
பணக்காரனும் கஞ்சி குடிக்கிறான் ;
பரம ஏழையும்  கஞ்சி  குடிக்கிறான்.
என்ன... அது  ஓட்ஸ் கஞ்சி ;
இது ஓல்டு (பழைய) கஞ்சி!

சின்ன  வயசில  சில்லறைக்  காசு இருந்தா சாக்லெட் வாங்கித்
தின்போம். இப்ப சில்லறை இல்லைன்னா  சாக்லெட் திங்க
வேண்டியதா  இருக்கு!

விழுந்த மலர்களையும் உதிர்ந்த இலைகளையும்  இயற்கை
என்று  கடக்கிறேன். ஆனால், நாலு முடி விழுந்தால்  கவலை
வருகிறது.

சதுரங்கத்தில் கூட' மந்திரிகள் ' நேர்வழியில்  பயணிப்பதில்லை.

தலையில் கொஞ்சமாவது எண்ணெய்  தேயுடான்னு அம்மா
சொல்லும்போது  முடியாதுன்னு  சொன்னவன்  எல்லாம்
இப்ப எர்வாமாட்டின் (Ervamatin oil) வாங்கி  தேச்சுகிட்டு இருக்கான்.

எஞ்சினீயரிங் பைனல் இயர் பசங்களுக்கு  கேம்பஸ்
இண்டர்வியூவாம். சம்பளம் ஏழாயிரமாம் .
எல்கேஜிக்கு எண்பதாயிரம்  கட்டும்  அப்பாக்களே  கேட்டுக்கோங்க!
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

 1. உண்மை...

  கேம்பஸ்லனா ஏழாயிரமாம் .......
  ஆன Join Date (May be 1 Year later) சொல்லமாட்டாங்க .....
  அதுவரை வேறு வேலையக்கு போன Offer Cancel......

  ReplyDelete
 2. யதார்த்தம் ஐயா!

  ReplyDelete
 3. இன்று பிறந்த நாள் காணும்
  இனிய வகுப்பறை தோழருக்கு

  வாழ்த்துக்கள்
  வளமோடு நலம் பெற்று வாழ

  நல் வாழ்த்துக்கள்
  நலம் விரும்பிகளும் வாழ்த்தலாம்

  யார் அவர் என்று கேட்கிறீர்கள்
  அவர் அன்புக்குரிய நண்பர்

  அவரே நன்றி சொல்லுவார்
  அதுவரை பொறுத்து இருங்கள்

  ReplyDelete
 4. ஐயா வணக்கம்
  சில்லரைக்கு சாக்லேட் கொடுக்கும் நகைச்சுவை உண்மை சூப்பர் ஐயா.
  கண்ணன்.

  ReplyDelete
 5. /////Blogger Prasanna Venkatesh said...
  உண்மை...
  கேம்பஸ்லனா ஏழாயிரமாம் .......
  ஆன Join Date (May be 1 Year later) சொல்லமாட்டாங்க .....
  அதுவரை வேறு வேலையக்கு போன Offer Cancel......//////

  ஆமாம். எல்லாம் பணம் பறிக்கும் வேலையாகிவிட்டது,

  ReplyDelete
 6. /////Blogger kmr.krishnan said...
  யதார்த்தம் ஐயா!//////

  நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 7. //////Blogger Visu Iyer said...
  இன்று பிறந்த நாள் காணும்
  இனிய வகுப்பறை தோழருக்கு
  வாழ்த்துக்கள்
  வளமோடு நலம் பெற்று வாழ
  நல் வாழ்த்துக்கள்
  நலம் விரும்பிகளும் வாழ்த்தலாம்
  யார் அவர் என்று கேட்கிறீர்கள்
  அவர் அன்புக்குரிய நண்பர்
  அவரே நன்றி சொல்லுவார்
  அதுவரை பொறுத்து இருங்கள்////////

  Face Bookல் கலக்கி இருக்கிறீர்களே! லால்குடிக்காரர் என்று தெரியாதா என்ன? அவருக்கு நம் வகுப்பறையின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

  ReplyDelete
 8. /////Blogger lrk said...
  ஐயா வணக்கம்
  சில்லரைக்கு சாக்லேட் கொடுக்கும் நகைச்சுவை உண்மை சூப்பர் ஐயா.
  கண்ணன்./////

  நல்க்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com