மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.8.15

யார் வாழ்நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.?

யார் வாழ்நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.?

" The Monk who sold his Ferrari " புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் " நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்?" (Who will cry when you die?).

“நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்" என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்:

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழப் பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. உங்கள் தினசரி பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். உதாரணமாய் நல்ல புத்தகம் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் யோசிப்பதிலோ செலவழிக்கலாம்.

11. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.

12. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

13. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கலாம்.

14. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

15. எதிலும் வித்யாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள்.

16. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

19. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

20. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே

என்ன சரிதானா?

அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22 comments:

  1. sir vankkam balance money 170 anuppivittan ennudya daughter bhavani account ill transfer pannivittom book anuppi vakkimaru kettu koligiran...

    ReplyDelete
  2. Respected Sir,

    Monday starts with happy due to your nice post. Thanks for sharing.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  3. "உதிரி பூ"க்களுக்கும் மணம் உண்டு என்ற
    உண்மையை சொல்லவந்த பதிவு...

    ReplyDelete
  4. வணக்கம், வாத்தியாரய்யா.
    உங்களின் தேர்ந்தெடுப்புக்கு உட்பட்ட இந்தப் புத்தகம் மிகவும் சிறந்தது. சிந்திக்க வைக்கும் வரிகள். மிக சாதாரணமாகச் சொல்லப்பட்டஇருக்கும் அந்த 20 விஷயங்களும் பல முறை படிக்கும்போது ஆழ்மனதில் அலாதியான கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. மிகவும் இயல்பாக நடைமுறையில் செயல்படுத்த முடியக்கூடியவைகள்தான் அவைகள். அவற்றை செயல்படுத்துவதன் மூலம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் நிச்சயம் மகிழ்ச்சியூட்டுவனவாகத்தானிருக்கும்.
    எளிமை வலிமை என்பது இனிமையே!

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்
    நிச்சயமாக எல்லாமே சரிதான் ஐயா
    கண்ணன்.

    ReplyDelete
  6. அய்யா வணக்கம், நல்ல கருத்தன செய்தி, நன்றி. வணக்கம், சா. குமணன்

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி வாத்தியாரே....

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா
    அனைத்தும் மிகவும் அருமை

    ReplyDelete
  9. மிகவும் அருமை .
    நீண்ட நாட்களுக்கு பிறகு மிக்க மகிழ்ச்சியுடன் வகுப்பு அறைக்கு வந்ததற்கு சனி பகவானுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

    ReplyDelete
  10. /////Blogger kmr.krishnan said...
    Nice Sir/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. /////Blogger Nagendra Bharathi said...
    அருமை///////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. ///////Blogger eswari sekar said...
    sir vankkam balance money 170 anuppivittan ennudya daughter bhavani account ill transfer pannivittom book anuppi vakkimaru kettu koligiran...//////

    அனுப்பி வைக்கச் சொல்கிறேன். பொறுத்திருங்கள்! இரண்டொரு நாட்களின் வந்துவிடும். வரிசைப்படி அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்!

    ReplyDelete
  13. //////Blogger ravichandran said...
    Respected Sir,
    Monday starts with happy due to your nice post. Thanks for sharing.
    With kind regards,
    Ravichandran M.//////

    அப்படியா? நல்லது. உங்கள் பின்னூட்டம் கண்டு எனக்கும் மகிழ்ச்சிதான்!

    ReplyDelete
  14. /////Blogger வேப்பிலை said...
    "உதிரி பூ"க்களுக்கும் மணம் உண்டு என்ற
    உண்மையை சொல்லவந்த பதிவு...//////

    அடடா, முதல் முறையாக வேப்பிலையாரிடம் இருந்து பாராட்டுடன் வந்த பின்னூட்டம். நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  15. ///////Blogger bhagwan said...
    வணக்கம், வாத்தியாரய்யா.
    உங்களின் தேர்ந்தெடுப்புக்கு உட்பட்ட இந்தப் புத்தகம் மிகவும் சிறந்தது. சிந்திக்க வைக்கும் வரிகள். மிக சாதாரணமாகச் சொல்லப்பட்டஇருக்கும் அந்த 20 விஷயங்களும் பல முறை படிக்கும்போது ஆழ்மனதில் அலாதியான கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. மிகவும் இயல்பாக நடைமுறையில் செயல்படுத்த முடியக்கூடியவைகள்தான் அவைகள். அவற்றை செயல்படுத்துவதன் மூலம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் நிச்சயம் மகிழ்ச்சியூட்டுவனவாகத்தானிருக்கும்.
    எளிமை வலிமை என்பது இனிமையே!//////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    நிச்சயமாக எல்லாமே சரிதான் ஐயா
    கண்ணன்.

    நல்லது. நன்றி கண்ணன்

    ReplyDelete
  17. /////Blogger Kumanan Samidurai said...
    அய்யா வணக்கம், நல்ல கருத்தான செய்தி, நன்றி. வணக்கம், சா. குமணன்//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    பகிர்வுக்கு நன்றி வாத்தியாரே..../////

    நல்லது. நன்றி தூத்துக்குடிக்காரரே!

    ReplyDelete
  19. ////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    அனைத்தும் மிகவும் அருமை//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    மிகவும் அருமை .
    நீண்ட நாட்களுக்கு பிறகு மிக்க மகிழ்ச்சியுடன் வகுப்பு அறைக்கு வந்ததற்கு சனி பகவானுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்./////

    உங்களுடைய தற்போதைய முகவரியைத் தெரியப்படுத்துங்கள். வகுப்பறை ஜோதிடப் புத்தகத்தை அனுப்பிவைக்கிறேன்.

    ReplyDelete
  21. வாத்தியார் ஐய்யாவின் பதிவுக்கு இணையே இல்லை என்பது எங்ஙனம் திண்ணமோ, அதற்கு வேப்பிலையின் மணம் புத்துணர்ச்சி என்பதும் திண்ணமே.
    அருமையான பதிவு மனதை கொள்ளை கொண்டது.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com