நெஞ்சைத் தொட்ட பதில்!
செட்டி நாட்டு வீதியொன்றில் கீரைவிற்றுகொண்டு செல்கிறாள் ஒருபெண். வீட்டு வாசலில் மகனோடுஅமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிடுகிறாள்.
" ஒரு கட்டு கீரை என்ன விலை....?"
" ஓரணாம்மா"
"ஓரணாவா....? அரையணாதான்தருவேன். அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"
"இல்லம்மா வராதும்மா".
" அதெல்லாம் முடியாது.அரையணாதான்". பேரம் பேசுகிறாள் அந்தத் தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்தபெண் கூடையை எடுத்துக்கொண்டுசிறிது தூரம் சென்றுவிட்டு,
"மேல காலணா போட்டு கொடுங்கம்மா"என்கிறாள்
"முடியவே முடியாது. கட்டுக்குஅரையணாதான் தருவேன்"... என்று தாய் பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையைக் கொடுத்துவிட்டு ரெண்டணா காசை
வாங்கிக் கொண்டு கூடையை தூக்கிதலையில் வைக்க போகும் போது கீழேசரிந்தாள்.
"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடலையா...?" என்று அந்த தாய் கேட்க,
"இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்"
"சரி. இரு இதோ வர்றேன்." என்றுகூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லிகளையும், அவற்றிற்குத் தேவையான சட்னியையும் வைத்துக் கொண்டு வந்தாள். "
”இந்தா சாப்பிட்டுவிட்டுப் போ" என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.
எல்லாவற்றையும்பார்த்துகொண்டிருந்த அந்தத் தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு பேரம் பேசுனீங்க..ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு ரெண்டரையணா வருதும்மா.....? என்றுகேட்க
அதற்கு அந்த தாய்,
"வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா" என்று நெத்தியடியாகக் கூறினாள்.
நெஞ்சைத் தொட்ட அந்தப் பதில், அன்று முழுவதும் மனதையே சுற்றி வந்தது
========================================================================
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

sir,
ReplyDeletevery good story for decision making.
M. Thirumal
pavalathanur
Anbudan vathiyar Ayala vanakkam
ReplyDeleteYes I read it in the face book.. Throughout the day my mind set I the same words.?...now a days is young mothers doing like this? Or teach like...? .???????????
Nice story and good answer.
ReplyDeleteReminded my father gave us similar advice 'when it comes to good business, Foe or family never discriminate nor favor, its only business'.
ஆம் ஐயா! முற்றிலும் உண்மை. வியாபாரத்தை வியாபாரமாகவும்,தர்மத்தை தர்மமாகவும் பார்க்கத் தெரிய வேண்டும்.
ReplyDeleteஒரு ஆச்சியைப் பற்றிய உண்மைச் சம்பவம்:
தன் இல்லத்தில் காரியஸ்தராகவும்,கணக்கராகவும் இருந்த அந்தணருக்கு, ஆச்சி வீட்டின் பசுமாட்டுப் பால் விற்பனை செய்யப்பட்டது. ஆச்சி 30% தண்ணீர் கலந்து அந்தணர் இல்லத்திற்குப் பால் கொடுத்து வந்தார்கள்.பாலுக்கான தொகையை அந்தணரின் சம்பளத்தில் பிடித்தம் செய்து ஆச்சியிடம் செட்டியார் கொடுத்து விடுவார்.
அந்தணரின் மகன் பொறியியல் கல்லூரியில் சேர வேண்டிய தருணம் வந்தது.
பெருந்தொகை தேவைப்பட்டது.செட்டியாரிடம் கேட்டார் அந்தணர். செட்டியார் ஆச்சியிடம் முதலில் கேட்கச்சொன்னார்.அவ்வாறே அந்தணர் ஆச்சியிடம் பிரஸ்தாபித்தார். ஆச்சி பதில் ஒன்றும் கூறாமல் உள்ளே சென்று பெரிய தொகையை எடுத்து வந்து கொடுத்தார்.மேலும் ஆச்சி கூறினார்:"இது உங்களுடைய சேமிப்பே.எனவே திருப்பித்தர வேண்டாம். உங்களுக்கு அளித்த பாலில் 30% தண்ணீர் கலந்து கொடுத்தேன். அதற்கான தொகையை சேர்த்து வட்டிக்கு அளித்து அதை வளரச் செய்தேன்" என்றார்கள்.
அந்தணர் நன்றியால் கண் கலங்கினார்.
kmrk1949@gmail.com
அருமை... அருமை... வாத்தியாரே!!!
ReplyDeleteஅணா காலத்தில் தான் இதல்லாம்
ReplyDeleteஆனால் இந்த காலத்தில் இல்லை
இருக்குமானால் இங்கே
இருக்குமா செங்கல் பொடி மாகி
இன்னமும் பல....
இவர்கள் எங்களையும் சாக சொல்கிறார்கள்
நாடகம் நடத்துகிறார்கள் - same side goal போட்டு
நாங்கள் கேட்பது என்ன "மகளிர் மட்டும் மது அருந்தும் பார்" தானே
அதை கூட இவர்களால் செய்ய முடியாது என்றால்
அப்புறம் எதற்கு வாக்களர் அடையாள அட்டை
It is very true I am also observing this activity in my daily life from so many people.They bargain very hard way but when it comes for help so many people are doing that is reason the world is still moving.
ReplyDeleteG.seenivasan
Bharuch
உண்மையில் நெஞ்சைத்தொட்ட பதில் அருமை ஐயா
ReplyDeleteவியாபாரத்தில் தர்மம் பார்க்கப்பட வேண்டும்.
ReplyDeleteசரியான எடை,அளவு,தரம் மிகவும் முக்கியம்.
mrp விட அதிக விலைக்கு விற்பது அதர்மம்,ஏமற்றுவேலை.
அந்த தாயின வாக்கு ஏற்புடையது அல்ல.but she is a kind hearted mother
நன்றி,
தயாநிதி, அவியனுர்.
வணக்கம் வாத்தியார் ஐயா!
ReplyDeleteநீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வகுப்பறைக்கு வந்து உள்ளேன் . வகுப்பறைக்கு வரவிடாமல் செய்தது என்னவோ "திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல்" தான் வேறு ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை .
அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையையன் அல்லவா :-))
என்ன ஐயா அடியவன் கூறுவது உண்மை தானே !
0.00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000001 மடங்கு கூட லாபம் இல்லாமல் வியாபாரம் செய்தால் அதற்க்கு பெயர் தர்மர்!.
மேலே கூறியது போல அதே மடங்கு இலாபம் வைத்து வியாபாரம் செய்வது தான் வியாபார தர்மம் .
மேலே கூறிய உண்மையை கூறியது என்னவோ தங்களை போன்ற ஒரு குரு நாதர் தான் .
நன்றி உணர்வை சொல்லி தரும் நாயும் ஒரு குரு தானே ஐயா !
கூகுள் ஆண்டவர் கூறிய தத்துவத்தில் ஒரு சிறிய பிழை உண்டு என்பது அடியவனின் தாழ்மையான கருத்து,
"தந்தை"! என்பவர் "கோடான கோடான" உலகத்தில் இது வரை "கணிதத்தில்" கண்டு பிடிக்காத அளவிற்கு மேலான "குரு"! ஆவார் என்பது அடியவனின் கருத்து ஆகும்.
எல்லாம் வல்ல "எம்பெருமானின்"! அருளால் மங்கலம் உண்டாகட்டும்.
நன்றி! சுபம்.
வாத்தியாருக்கு வணக்கம்
ReplyDeleteதங்களுக்கு மிகவும் பிடித்த "கும்ப இலக்கனகாரன்"! அடியவன்.
ஜோதிடத்தில் மிகவும் வல்லவர்கள் ஆகிய "சேர நாட்டவர்" மிகவும் முக்கியம் தரும் "மாந்தியை இலக்கணத்தில் இருந்து இலாபம் ஸ்தானம்"! என்று அழைக்கப்படும் 11 ம் இடத்தில கொண்டவன் அடியவன் ஆகும் ஐயா !.
சரி கூற வந்த கருத்துக்கு வருகின்றேன் .
தாங்கள் நடிப்பு திலகம் " சிவாஜி கணேசன்"! நடித்த "கௌரவம்" என்னும் திரை காவியத்தை கண்டு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.
அதனை போலவே ஆனால் ஒரு பெரிய மாற்றம் மட்டும் "குருநாதர் தந்தை "ரஜினி காந்த் தர்மத்தின் பக்கமும்"! "அதர்மத்தின் பக்கம் சீடன் ஆகிய குருவின் பெயரை கெடுக்க வந்த ஒரு பைத்தியக்காரனும் மிகவும் விரைவில் மோத உள்ளனர்.
வாத்தியார் ஆகிய தாங்கள் தர்மம் வெற்றி பெற ஆசிர்வதிக்க வேண்டும் ஐயனே!
மங்கலம் உண்டாகட்டும் . நன்றி . சுபம் .
/////Blogger Thirumal Muthusamy said...
ReplyDeletesir,
very good story for decision making.
M. Thirumal
pavalathanur//////
நல்லது. நன்றி நண்பரே!
//////Blogger hamaragana said...
ReplyDeleteAnbudan vathiyar Ayala vanakkam
Yes I read it in the face book.. Throughout the day my mind set I the same words.?...now a days is young mothers doing like this? Or teach like...? .???????????////
வணக்கம் கணபதியாரே! உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!
//////Blogger selvaspk said...
ReplyDeleteNice story and good answer.
Reminded my father gave us similar advice 'when it comes to good business, Foe or family never discriminate nor favor, its only business'./////
ஆமாம். அந்தக் காலத்து மனிதர்களிடம் இது எல்லாம் இருந்தது. இப்போது இல்லை.
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஆம் ஐயா! முற்றிலும் உண்மை. வியாபாரத்தை வியாபாரமாகவும்,தர்மத்தை தர்மமாகவும் பார்க்கத் தெரிய வேண்டும்.
ஒரு ஆச்சியைப் பற்றிய உண்மைச் சம்பவம்:
தன் இல்லத்தில் காரியஸ்தராகவும்,கணக்கராகவும் இருந்த அந்தணருக்கு, ஆச்சி வீட்டின் பசுமாட்டுப் பால் விற்பனை செய்யப்பட்டது. ஆச்சி 30% தண்ணீர் கலந்து அந்தணர் இல்லத்திற்குப் பால் கொடுத்து வந்தார்கள்.பாலுக்கான தொகையை அந்தணரின் சம்பளத்தில் பிடித்தம் செய்து ஆச்சியிடம் செட்டியார் கொடுத்து விடுவார்.
அந்தணரின் மகன் பொறியியல் கல்லூரியில் சேர வேண்டிய தருணம் வந்தது.
பெருந்தொகை தேவைப்பட்டது.செட்டியாரிடம் கேட்டார் அந்தணர். செட்டியார் ஆச்சியிடம் முதலில் கேட்கச்சொன்னார்.அவ்வாறே அந்தணர் ஆச்சியிடம் பிரஸ்தாபித்தார். ஆச்சி பதில் ஒன்றும் கூறாமல் உள்ளே சென்று பெரிய தொகையை எடுத்து வந்து கொடுத்தார்.மேலும் ஆச்சி கூறினார்:"இது உங்களுடைய சேமிப்பே.எனவே திருப்பித்தர வேண்டாம். உங்களுக்கு அளித்த பாலில் 30% தண்ணீர் கலந்து கொடுத்தேன். அதற்கான தொகையை சேர்த்து வட்டிக்கு அளித்து அதை வளரச் செய்தேன்" என்றார்கள்.
அந்தணர் நன்றியால் கண் கலங்கினார்.
kmrk1949@gmail.com//////
உண்மைதான். இதுபோன்ற சம்பவங்களை நானும் நேரில் பார்த்திருக்கிறேன் - எங்கள் பகுதி மக்களிடம்! நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
ReplyDeleteஅருமை... அருமை... வாத்தியாரே!!!//////
நல்லது. நன்றி தூத்துக்குடிக்காரரே!
Blogger வேப்பிலை said...
ReplyDeleteஅணா காலத்தில் தான் இதல்லாம்
ஆனால் இந்த காலத்தில் இல்லை
இருக்குமானால் இங்கே
இருக்குமா செங்கல் பொடி மாகி
இன்னமும் பல....
இவர்கள் எங்களையும் சாக சொல்கிறார்கள்
நாடகம் நடத்துகிறார்கள் - same side goal போட்டு
நாங்கள் கேட்பது என்ன "மகளிர் மட்டும் மது அருந்தும் பார்" தானே
அதை கூட இவர்களால் செய்ய முடியாது என்றால்
அப்புறம் எதற்கு வாக்களர் அடையாள அட்டை /////
ஆமாம். அந்தக் காலத்து மனிதர்களிடம் இது எல்லாம் இருந்தது. இப்போது இல்லை.
/////Blogger seenivasan said...
ReplyDeleteIt is very true I am also observing this activity in my daily life from so many people.They bargain very hard way but when it comes for help so many people are doing that is reason the world is still moving.
G.seenivasan
Bharuch////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger VM. Soosai Antony said...
ReplyDeleteஉண்மையில் நெஞ்சைத்தொட்ட பதில் அருமை ஐயா////
ஆமாம். அதனால்தான் அந்தத் தலைப்பு நண்பரே!
/////Blogger daya nidhi said...
ReplyDeleteவியாபாரத்தில் தர்மம் பார்க்கப்பட வேண்டும்.
சரியான எடை,அளவு,தரம் மிகவும் முக்கியம்.
mrp விட அதிக விலைக்கு விற்பது அதர்மம்,ஏமற்றுவேலை.
அந்த தாயின வாக்கு ஏற்புடையது அல்ல.but she is a kind hearted mother
நன்றி,
தயாநிதி, அவியனுர்./////
kind hearted mother என்று எழுதியுள்ளீர்கள் அல்லவா - அதனால்தான் இந்தக் கதை நெஞ்சைத் தொட்டது.
Blogger kannan Seetha Raman said...
ReplyDeleteவணக்கம் வாத்தியார் ஐயா!
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வகுப்பறைக்கு வந்து உள்ளேன் . வகுப்பறைக்கு வரவிடாமல் செய்தது என்னவோ "திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல்" தான் வேறு ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை .
அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையையன் அல்லவா :-))
என்ன ஐயா அடியவன் கூறுவது உண்மை தானே !
மடங்கு கூட லாபம் இல்லாமல் வியாபாரம் செய்தால் அதற்க்கு பெயர் தர்மர்!.
மேலே கூறியது போல அதே மடங்கு இலாபம் வைத்து வியாபாரம் செய்வது தான் வியாபார தர்மம் .
மேலே கூறிய உண்மையை கூறியது என்னவோ தங்களை போன்ற ஒரு குரு நாதர் தான் .
நன்றி உணர்வை சொல்லி தரும் நாயும் ஒரு குரு தானே ஐயா !
கூகுள் ஆண்டவர் கூறிய தத்துவத்தில் ஒரு சிறிய பிழை உண்டு என்பது அடியவனின் தாழ்மையான கருத்து,
"தந்தை"! என்பவர் "கோடான கோடான" உலகத்தில் இது வரை "கணிதத்தில்" கண்டு பிடிக்காத அளவிற்கு மேலான "குரு"! ஆவார் என்பது அடியவனின் கருத்து ஆகும்.
எல்லாம் வல்ல "எம்பெருமானின்"! அருளால் மங்கலம் உண்டாகட்டும்.
நன்றி! சுபம்.///////
என்னென்னவோ எழுதி குழப்புகிறீர்களே சாமி!
/////Blogger kannan Seetha Raman said...
ReplyDeleteவாத்தியாருக்கு வணக்கம்
தங்களுக்கு மிகவும் பிடித்த "கும்ப இலக்கனகாரன்"! அடியவன்.
ஜோதிடத்தில் மிகவும் வல்லவர்கள் ஆகிய "சேர நாட்டவர்" மிகவும் முக்கியம் தரும் "மாந்தியை இலக்கணத்தில் இருந்து இலாபம் ஸ்தானம்"! என்று அழைக்கப்படும் 11 ம் இடத்தில கொண்டவன் அடியவன் ஆகும் ஐயா !.
சரி கூற வந்த கருத்துக்கு வருகின்றேன் .
தாங்கள் நடிப்பு திலகம் " சிவாஜி கணேசன்"! நடித்த "கௌரவம்" என்னும் திரை காவியத்தை கண்டு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.
அதனை போலவே ஆனால் ஒரு பெரிய மாற்றம் மட்டும் "குருநாதர் தந்தை "ரஜினி காந்த் தர்மத்தின் பக்கமும்"! "அதர்மத்தின் பக்கம் சீடன் ஆகிய குருவின் பெயரை கெடுக்க வந்த ஒரு பைத்தியக்காரனும் மிகவும் விரைவில் மோத உள்ளனர்.
வாத்தியார் ஆகிய தாங்கள் தர்மம் வெற்றி பெற ஆசிர்வதிக்க வேண்டும் ஐயனே!
மங்கலம் உண்டாகட்டும் . நன்றி . சுபம் .//////
மோதல், அடிதடி எல்லாம் எனக்கு பழக்கம் இல்லாத மேட்டர்கள். ஆகவே என்னை இழுக்காமல் நீங்களே மோதி வெற்றி பெறுங்கள். வாத்தி(யார்)யின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு!
வாத்தியார் ஐயா,
ReplyDeleteவணக்கம். கீரைக்கட்டு மற்றும் பால் கதைகளில் வரும் அத்துனையும் நெஞ்சைத் துளைத்தன.