மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

17.8.15

நகைச்சுவை: பெண்ணோட உயரத்தைச் சொன்னீங்க, ஆனா அகலத்தைச் சொன்னீங்களா?


நகைச்சுவை: பெண்ணோட உயரத்தைச் சொன்னீங்க, ஆனா 
அகலத்தைச் சொன்னீங்களா?

1.
மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க!
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே.
----------------------------------------
2.
டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்குன்னு எழுதி வெச்சிருக்காங்களாம்.
------------------------------------------
3.
என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.
-----------------------------------------
4.
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படிச் செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
------------------------------------------
5.
நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...
நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?
---------------------------------------------
6.
கணவன் ; சாமி கிட்ட என்னம்மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும்னு வேண்டிகிட்டேன்ங்க... நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்னு வேண்டிகிட்டேன்...
-----------------------------------------------
7.
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
-------------------------------------------------
8.
டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்...
பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்...
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !!
பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..
-------------------------------------------------
9.
பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…
நிஜமாவா?
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..
--------------------------------------------
10.
என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.
அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...
-------------------------------------------
11.
எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!
இருந்தா?
அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!
--------------------------------------------------
12
நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!
நிஜமாவா, எப்படி?
அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!'...
---------------------------------------------------
17.
பல்லு எப்படி விழுந்திச்சு?
அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்!
-----------------------------------------------------
18. மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
------------------------------------------------------------------
19
டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி-"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
-----------------------------------------------------------
20
வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
------------------------------------------------------
21.
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
-----------------------------------------------------
22.
நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
-------------------------------------------------------------------
23.
மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல..............
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ...........!
மனைவி . . . . ????
--------------------------------------
இவற்றில் எது நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11 comments:

SELVARAJ said...

7

lrk said...

ஐயா வணக்கம்
2, 6, 8, 23 நகைச்சுவை நன்றாக உள்ளது ஐயா.

///கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ...........! ///
அருமை.

கண்ணன்.

B. Lakshmi Narayanan, Tuticorin said...

23வது அருமை... சார், கேள்வி பதில் மீண்டும் வகுப்பறையில் எப்போது??? ஆவலோடு காத்திருக்கிறோம் சார்....

venkatesh r said...

அய்யா வணக்கம்.
அத்தனை நகைச்சுவைகளும் சுவைத்தன.
நன்றி. இதையும் பகருங்கள்.
"உன் பொண்ணு ஏன் வாயில நகையை கடிச்சுகிட்டே கம்ப்யூட்டரை பாத்துகிட்டுருக்கா?
அதுவா? வாத்தியார் வகுப்பறைலே "நகைச்சுவை" பத்தி எழுதியிருக்காராம்."


kmr.krishnan said...

20 is good

GOWDA PONNUSAMY said...

Ayya vanakkam.
Tamil typing is not functioning now, which may be reaction of Jokes.
Headig is a super selection.Joke of uyaramum akalamum is the best one.
Rest all related, subject to imagine. kalyanam, ammaavukku ena nadippu, pallu ponathu, kadaisi marunthu saavirkku munnum pinnum, manaivi illaatha kaaranaththaal athu sorkkam.
With regards,
-Ponnusamy.

Thirumal Muthusamy said...

ஐயா

கடை இரண்டும் நன்று

எம்.திருமால்
பவளத்தானூர்

A.Lakshmanan, Musiri said...

அத்தனை நகைச்சுவைகளும் நன்றாக உள்ளது ஐயா.

Spalaniappan Palaniappan said...

அய்யா வணக்கம்
எல்லாம் நன்று
4, 12, 18,21, 23 சிறப்பு

bhagwan said...

பொதுவா சொல்லனும்னா சிலது தவிர்த்து எல்லாமே நல்லாயிருக்கு. ஆனா, குறிப்பிட்டு சொல்லனும்னா, 18ல கலக்கிட்டீங்க. அப்பறம் 4, 21, 22 எல்லாம் டாப்.

Kumanan Samidurai said...

Ayya Vanakkam, Ellam Nalla iruku. Nandri Ayya.

Oru sandhegam,.. Ellam Doctor matrum kanavan/manaivi pathi mattum irruku...


Ippadikku

Kumanan