மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.3.15

மகிழ்ச்சிக்கான பாதை எது?

மகிழ்ச்சிக்கான பாதை எது?

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?

இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “The way to happiness ” இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

“The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். “இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.

சந்தோஷத்தின் வழி’யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்’ என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. “சும்மா இருப்பதே சுகம்’ என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18. அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்கள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளி எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்.

படித்ததில் பிடித்தது. அறியத் தந்துள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

  1. மகிழ்ச்சிக்கான பாதையை காட்டிய என் ஆசிரியருக்கு வணக்கம்.

    ஐயா கேலக்ஸீ வகுப்பிற்கு எனக்கு ஒரு அட்மிஷன் தாரும் ஐயா

    ReplyDelete
  2. Anbudan vathiyar ayya vanakkam

    Mika arumaiyana. VArianll. Arumai

    ReplyDelete
  3. Complete book reading experience Professor

    ReplyDelete
  4. “சும்மா இருப்பதே சுகம்’ என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

    அருமையான வாசகம். உண்மை.

    ReplyDelete
  5. Respected Sir,

    Happy morning... nice.

    With kind regards,
    Ravichandran M

    ReplyDelete
  6. இவையெல்லாமே
    இந்த திருக்குறளில் சொல்லி உள்ளது

    இங்கு தமிழன் சொன்னா சும்மா
    இங்கிலாந்திலிருந்து சொன்னா

    அது வே வேதம் என்ற எண்ணம்
    அறுகும் வரை சந்தோஷத்தை

    தேடுவார்கள்..
    தேடி கிடைப்பதல்ல சந்தோஷம்

    கல்லில் ஒளிந்திருக்கும்
    கண்கவர் சிற்பத்தை எடுப்பது போல

    படித்ததை
    பகிர்ந்தது சரி..

    அதுவே..
    அப்படியே சரி என சொல்லாததால்

    வாழ்த்துகிறோம்
    வணக்கங்களுடன்...

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா!

    அருமையான கருத்துக்கள். ரான் ஹப்பார்ட் அவருடைய நாட்டிற்கு தகுந்தவாறு 21 புத்திமதிகளை ஆங்கிலத்தில் அள்ளி வீசீயிருக்கிறார். நீங்கள் அவற்றை நாகரிகமாக உங்களுடைய நடையில் மொழிபெயர்த்துள்ளீர். உதாரணத்திற்கு இந்த "சந்தோஷத்திற்கான வழி" இரண்டும் நேரிடை மொழிபெயர்ப்பில் இப்படித்தான் உள்ளது.

    2. அ.தீங்கு தரும் போதை மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்.
    ஆ."தண்ணி" அளவோடு அடியுங்கள்.
    3. வரைமுறையற்ற பாலியல் உறவு வேண்டாம்.

    சரிதானே அய்யா!

    ReplyDelete
  8. பயனுள்ள அறிவுரைகளுக்கு நன்றி ஐயா!

    கலாக்சி வ‌குப்பிற்குள் என்னை அனுமதியுங்கள் ஐயா!என் மின் அஞ்சல் பார்த்து ஒரு தீர்வு தாருங்கள் ஐயா! பல மாதங்களாக இந்தப் பிரச்சனை உள்ள‌து. நானும் தினமும் இன்று சரியாகும் நாளை சரியாகும் என்று எதிர் பார்த்து ஏமாந்து வருகிறேன்.

    ReplyDelete
  9. இவை எல்லாமே எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடியவைதான். இவற்றைக் கடை பிடித்தாலே எவ்வளவோ பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

    ReplyDelete
  10. arumaiyaana kurippugal !. vaazhvu muzuvadhum payanpadum !

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா
    பயனுள்ள தகவள்
    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  12. sir

    i have sent few requests to classroom2007@gmail.com for joining your galaxy class room. pl reply.

    thank you

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com