மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.3.15

Astrology: quiz number.79 சொத்தும், சுகமும்!


Astrology: quiz number.79 சொத்தும், சுகமும்!

சொத்து, சுகத்துடன் இருப்பதற்கு ஆசைப்படாதவர்கள் யார்? சிலருக்கு அந்த அதிர்ஷ்டம் உள்ளது. பலருக்கு அது இல்லை! அதாவது சொத்தும் இருக்காது சுகமும் இருக்காது. எல்லாம் வாங்கி வந்த வரம்!

Quiz No. 79

புதிர் போட்டி எண்.79 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்! அத்துடன் உங்கள் பின்னூட்டத்தில் பதில்களை 1,2,என்று வரிசைப் படுத்தி முதலில் எழுதி விடுங்கள். பிறகு உங்கள் விளக்கங்களை எழுதுங்கள். எனக்கு உங்களின் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் கொடுக்கும் பணியை இலகுவாக்குங்கள்.

3.3.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்

:மேலே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

1. ஜாதகருக்குப் பிறப்பிலேயே சொத்துக்கள் (immovable properties) உண்டா? அல்லது இல்லையா? உண்டு என்றால் எதனால் உண்டு? இல்லை என்றால் எதனால் இல்லை?

2. மேலும் ஜாதகர் தன் சொந்தப் பணத்தில் வீடு ஒன்றைக் கட்டுவதற்கு ஆசைப்பட்டார். அது நிறைவேறியதா? அல்லது இல்லையா? நிறைவேறியது என்றால் எந்த வயதில் நிறைவேறியது? நிறைவேறவில்லை என்றால் எதனால் நிறைவேறவில்லை?

ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள். எந்தெந்த வீடுகளா? அதை எல்லாம் சொல்வதற்கில்லை. பழத்தை உரித்துத் தரமுடியாது. நீங்களே தோலை உரித்து சுளைகளை எடுத்துச் சாப்பிடுங்கள்!

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25 comments:

Chandrasekaran Suryanarayana said...

QUIZ NO.79 வணக்கம்

01/03/1962 ஆம் ஆண்டு புதன் கிழமை காலை 1.30.01 மணிக்கு கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை)

1. பிறப்பிலேயே சொத்துக்கள் இல்லை. 4ம் வீட்டு அதிபதி சனி 3ம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் சுய முயற்ச்சியால் தான் சொத்துக்கள் பெற முடியும். 4ம் வீட்டில் 22 பரல்கள்.4ம் வீட்டில் வந்து அமர்ந்துள்ள சுக்கிரனும் அஸ்தங்கம் ஆகி விட்டது.

2. வீடு கட்டும் ஆசை நிறைவேறியது. 45 வயதில் சூரிய தசை குரு புக்தியில் ஆசை நிறைவேறியது. விருச்சிக லக்கினகாரர்களுக்கு சூரியன் ராஜ யோகத்தை கொடுப்பவர். குரு இந்த லக்கினதிற்க்கு யோககாரர். ஆகையால், 4ம் வீட்டில் அமர்ந்துள்ள சூரியனும், குருவும் சேர்ந்து ஜாதகர் ஆசையை நிறைவேற்றினார்கள்.

slmsanuma said...

Laknathipathi Sevvai Ucham. Chandran is neecha Pangam in Laknam. Kethu look Laknam.
Ancestral Asset ---
Karagan Guru is in 12 place to 5th house which is for ancestral asset. 5th house looked by Sannesswaran and Kethu. Hence no ancestral asset to the native.
Father’s Asset ---
Karagan Suriyan is in 8th place to 9th house which is for father’s asset. Though the owner of the house chandran is in Neecha Pangam, in laknam and 5th place to the 9th house, Raghu is in 9th house with the Sevvai, Bhudhan, Saneeswaran parvai. Hence no father’s asset to the native.
House Construction ---
Karagan Bhudhan is in 12th place to 4th house which is for house construction. 4th house owner Saneeswaran is in 12th place to the 4th house. No other planets looks 4th house. So he cannot construct his own house.

Kirupanandan A said...

பிறப்பிலேயே சொத்துக்கள் என்றால் பரம்பரை சொத்தைப் பற்றி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

1) பிறப்பிலேயே சொத்துகள் இல்லை.

காரணம். பரம்பரைச் சொத்துக்கான இடம் 9ம் வீடு. அங்கு ராகு இருக்கிறார். அந்த இடம் பாப கிரக பார்வையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. 9ம் அதிபதி சந்திரன் நீசம் (நீச பங்கமா இல்லையா என்ற சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை). 9க்கு 9ம் இடமான 5ம் வீட்டின் அதிபதி குரு அந்த வீட்டிற்கு 12ல் இருக்கிறார்.

2) நிறைவேறியது.

அசையாச் சொத்துக்கான அதிபதி செவ்வாய் உச்சமாக இருக்கிறார். வீட்டு மனைக்குரிய 4ம் இடத்தில் இரண்டு சுப கிரகங்கள் இருக்கிறார்கள். எந்த வயதில் என்று சொல்வதில்தான் சிக்கல். சுக்கிர தசையில் குரு அல்லது சனி புத்தியின் போது நடக்கும் வாய்ப்பு அதிகம்.

பாடலுக்கு பாடலால் பதில் சொல்கிறேன் என்று யாராவது கிளம்பி விடக் கூடும் என்று முன் ஜாக்கிரதையாக இந்த முறை வாத்தியார் பாடலைக் கொடுக்கவில்லை போலும். அத்துடன் வாத்தியார் என்ன பாடல் போட்டியா நடத்துகிறார்?

Gpbarathi P said...

1.the native has no ancestral property. because the ninet place chandran is debilated

2.The native has built house by his own source of income

Barathi

SSS CONSTRUCTION said...

The person have not any assets belonging to his father because the fourth house lord is in 3rd place and the 9th house lord is in lakna and he is neecha then the person will build his own house because the lord of the building sukra is in 4the place and the 2nd lord and the 10th lord are also with his so the person will build is own house

amuthavel murugesan said...

Vanakam Ayya,

Answer to Quiz :79

1. He has some property
9th place ragu.His father has some property.

2. His aim success. due to
1. 'Sevai ucham' He must be 1 or more than 1 own property.
2. Sukra Dasa from 23rd age.

M.Santhi

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம் .
புதிர் எண் 79.
லக்னம் விரிச்சிகம் ராசி விரிச்சிகம்..

1.பூர்வீக சொத்து இருக்காது .

2.சுய சம்பத்தியத்தில் வீடு கட்டுவார் ..

1.a பூர்வ புண்ணிய ஸ்தானம் 5.வீட்டுக்காரன் *குரு *4ல் அமர்ந்துள்ளான் ..அதாவது தன வீட்டுக்கு 12ல் ஆனாலும் அது கேந்திரம்
..b பாகியஸ்தானமான 9ம் வீட்டில் ராஹு அமர்ந்து கெடுத்துள்ளான் ...அது ராசியாதிபதி வீடாகிறது ..ராசியாதிபதி நீசமாகிபோனான் .. .
c .பூர்வ புண்ணிய காரகன் குருவும் ,சூரியனும் [சுக்கிரன்] சேர்ந்து .. ..அமர்ந்துள்ளனர்.அவர்களின் பார்வை .9ம் மிடத்தை பார்கவில்லை.
..d .உச்சம் பெற்ற செவ்வாய்,ஆட்சி பெற்ற சனி கேது இவர்களது கூரிய பார்வை 9ம் மிடத்தை

இந்த 4.. a b,c,d, காரணத்தால் பூர்வீக சொத்து இருக்க வாய்ப்பு இல்லை...!!

2...a.லக்னத்திற்கு 3ல் கேது உச்சம் பெற்ற செவ்வாய் ஆட்சி பெற்ற சனி புதனும் சேர்ந்து இவர் *நல்ல * சம்பாத்தியம் செய்திருப்பார்
..b .வீடு ., வசதி., வாகனம்.., ஆகிவற்றிற்கு 4 மிடம் 2 சுபர்கள் குரு சுக்கிரன்..உடன் 10ம் வீட்டதிபதி சூரியன்
..c .12 மிடத்தை குரு 9ம் பார்வை ஆகவே சுப விரயங்களாக வீடு கட்டி . வசதியான வாழ்க்கை ..
.d .என்ன சந்திர நீசமாகி போனதால் அதுவும் லக்னத்தில் .என்னதான் சம்பாத்தியம் வீடு என இருந்தாலும் நிம்மதி இருக்காது..

இந்த..3 a.b.c.,காரணத்தால் சுயசம்பாதியத்தில் வீடு கட்டி இருப்பார்

என்னமோ எனக்கு தெரிந்த அலசல் ...???

asbvsri said...

Quiz No: 79 – Answer
ஐய்யா வணக்கம்.
சந்த்ரன் – குரு கேந்த்ரத்தில் – கஜ கேசரி யோகம்.
2 ஆம் அதிபதி (தனாதிபதி), 5 ஆம் இடத்து அதிபதியுமான குரு, 4 ஆம் இடம் சுக ஸ்தானத்தில். ஜாதகர் பிறப்பிலேயே செல்வந்தர்.
பூர்வ புண்ய ஸ்தானாதிபதி – 9 ஆம் அதிபதி – பாதகாதிபதி சந்த்ரன் நீச்சம் – லக்னத்தில் – நீச்ச சந்த்ரன் பணத்தை கொடுத்தார்.
பூர்வ புண்ய ஸ்தானத்தில் – கடகத்தில் ராஹு – பாதகஸ்தானத்தில்.
சுகஸ்தானத்தில் 10 ஆம் அதிபதி (தொழில் ஸ்தானாதிபதி) சூரியன் (பகைவன் சனியின் வீட்டில்) சுக்ரன், குருவுடன். பார்வை 10 ஆம் இடத்தில். தொழிலுக்கு காரகர் சூரியன், குரு.
தொழில் ஸ்தானத்தில் மாந்தி, ஆனால் குரு, சுக்ரன், சூரியன் பார்வை – நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க வைத்தது.
12 க்கும் 7 க்கும் அதிபதியான சுக்ரன் 4 ஆம் இடத்தில் சுகஸ்தானத்தில். சுகத்தை அனுபவித்தார். ஆனால் அவர் அவருடய தசையில் பணத்தயும் சொத்தையும் கொடுக்கவில்லை.
லக்னாதிபதி செவ்வாய் நீச்சமாகி பகைவர்கள் சனி மற்றும் புதனுடன் கூட கேது – ராஹுவின் பார்வையில். நவாம்சத்தில் செவ்வாய் கன்னியில் – ஜன்ம பகைவர் வீட்டில் – கன்னி செவ்வாய் கடலும் வற்றும் என்பார்கள். நிறய சம்பாதித்தார், ஆனால் சிலவும் செய்தார்.
2 ஆம் அதிபதி, தனாதிபதி, 5 ஆம் இடத்து அதிபதியுமான குரு, ராசியில் அவருக்கு 12 ஆம் இடத்தில். நவாம்சத்தில் 8 ஆம் இடத்தில் பகைவர் சுக்ரன் வீட்டில்.
4 ஆம் பாவாதிபதி சனி 3 ஆம் இடத்தில் – அவருடய வீட்டில் - சுகம் விரயமாகும்.
ஆனால் அவருடய மற்றொரு வீட்டில் செவ்வாயுடன் – செவ்வாய் பூமிக்கு அதிபதி. நீச்ச செவ்வாய் பூமியும் கொடுத்தார். வீட்டை கட்டினார்.
சூரிய தசையில் செவ்வாய் / சனி புக்தியில் 2006 லிருந்து 2008 க்குள் வீடு கட்டினார்.

K R Ananthakrishnan, Chennai

valli rajan said...

Dear Guruji,

1. 9th lord is neecham.
2.9th place is aspected by sani, ketu and rahu in 9th place.
3. Guru, venus in 4th house is good.
4. sun in 4th house in kumba rasi is bad.
5. Mars lord of land is exalted.

By birth he won't have immovable property but he will definitely build his own with some struggle.
In his venus dasa he will build his own house.

Govindasamy said...

1. ஜாதகருக்கு பிறப்பிலேயே சொத்துக்கள் இல்லை. 9ம் இடத்தில் ராகு. 9க்குரிய சந்திரன் லக்கினத்தில் நீசம். மேலும் ஆறு எட்டுக்குரிய கிரகங்களின் பார்வை 9ம் இடத்தில்.

2. தன் சொந்த சம்பாத்தியத்தில் வீடு கட்ட வாய்ப்புண்டு. 4க்குரிய சனி 3ல் ஆட்சி உச்சம். மேலும் லக்கினாதிபதியுடனும் 10க்குரியோனுடனும் கூட்டு. தனஸ்தான குரு 4ல் 10க்குரிய சூரியனுடனும் 11க்குரிய சுக்கிரனுடனும் கூட்டு. ஜாதகர் சூரிய திசையில் வீடு கட்டும் வாய்ப்புண்டு.

saravanakumar k Kumar said...

1. பூர்வீக சொத்துக்கள் இல்லை.
2. ஜாதகர் 2007ல் சொந்தவீட்டை பெற்றிருப்பார்

1. பூர்வீக சொத்துக்கள் இல்லை.
பூர்வீக 5ம் பாவகாதிபதி 5ம் பாவகத்திற்கு 12ல் மறைவு. மற்றும் 9ம் பாக்கியஸ்தானாதிபதி சந்திரன் விருச்சிகத்தில் நீசம்

2. ஜாதகர் 2007ல் சொந்தவீட்டை பெற்றிருப்பார்

சொந்த முயற்ச்சிக்கு மற்றும் சுகஸ்தானாதிபதி முறையே 3 மற்றும் 4ம் பாவக அதிபதி சனி திருவோணம் சந்திரன் சாரம் சந்திரன் நீசம் மேலும் ராகு 3ம் வீட்டை பார்ப்பதால் முயற்சி தடைபடும் நிலை.
இருப்பினும் ஜாதகர் தன்னுடைய சூரிய திசையில் குரு புத்தியில் அதாவது 2007ம் வருடம் வீடு கட்டியிருப்பார்.

Anonymous said...

1. ஜாதகருக்குப் பிறப்பிலேயே சொத்துக்கள் (immovable properties) உண்டா? அல்லது இல்லையா? உண்டு என்றால் எதனால் உண்டு? இல்லை என்றால் எதனால் இல்லை?

YES! 9TH LORD IN 1ST HOUSE. Lagna lord exalted aspecting 9th house.This suggests natal will enjoy Paternal property along with own earned property. also 9th lord moon is placed strong with 7- ashtavarga bindus. rahu in 9th house aspected by lagna lord mars shows he might have served in foreign land or even police/defense services.
2. மேலும் ஜாதகர் தன் சொந்தப் பணத்தில் வீடு ஒன்றைக் கட்டுவதற்கு ஆசைப்பட்டார். அது நிறைவேறியதா? அல்லது இல்லையா? நிறைவேறியது என்றால் எந்த வயதில் நிறைவேறியது? நிறைவேறவில்லை என்றால் எதனால் நிறைவேறவில்லை?

Fourth house lord saturn is in capricorn. ie. 12th to 4th house. also it is neecha in navamsa. Mars the karaka for house is also 4th to 12th house. vrichiga lagna yogakaraka jupiter in 4th house. so during surya dasha (jupiter/ mars/moon ) sub period his dream came true. Also saturn and venus together in navamsa. so there are possibilities for venus dasha-saturn sub period too.

thank you.
sree

kumar.S said...

1) ஒன்பதில் ராகு . ஒன்பதிற்கு அதிபதி நீசம். பரம்பரை சொத்து இருக்க வாய்ப்பு இல்லை சார் .

2) லக்ன சுபர்கள் ஆன சூரியன் & குரு வோட சேர்ந்த சுக்கிரன் (4ம் இடம்) திசை முடிவில் வீடு கட்டி இருப்பார் .நன்றி ,
குமார் . S

Ariyaputhiran Natarajan said...

ஐயா,
விருச்சிக லக்னம். லக்னாதிபதி உச்சமாய் நான்காம் அதிபதியுடன் இருப்பதாலும், கூடவே
லாபாதிபதி இருப்பதாலும் தந்தையின் சொத்துக்கள் உடையவர். ஆனால், செவ்வாய் ஆறாம்
அதிபரும் ஆவதால் தந்தை தேடிவைத்த சொத்துக்களை அழித்தாலும் அதை விட அதிக
சொத்துக்களை சேர்க்கக்கூடியவர்.
சுக்கிர தசையில் அழகான சொந்த வீடு கட்டியிருப்பார்.

அ.நடராஜன்

venkatesh r said...

புதிர் போட்டி எண்.79க்கான அலசல்.

விருச்சிக ராசி, விருச்சிக லக்கின ஜாதகர்.

அ.ஜாதகருக்குப் பிறப்பிலேயே அசையா சொத்துக்கள் உண்டு.

காரணங்கள் :

1. பாக்யாதிபதி சந்திரன் லக்னத்தில் நீசம் பங்கமாகி (லக்னாதிபதியான செவ்வாய் உச்சம்) வலுவுடன் உள்ளார்.
2. பாக்கிய ஸ்தானமான 9ல் ராகு அமர்ந்துள்ளார். பாக்கிய ஸ்தானத்திற்கு சனியின் நேர் பார்வையிலுள்ளது.
3. பூர்வ புண்ணியாதிபதி குரு 4ல் தந்தைக்காரகன் சூரியன் மற்றும் சுக்கிரனுடன் உள்ளார்.

ஆ. ஜாதகர் தன் சொந்தப் பணத்தில் வீடு ஒன்றைக் கட்டுவதற்கு ஆசைப்பட்டார். அந்த ஆசை அவரது 33 வயதில் நிறைவேறியது.

காரணங்கள் :

1. லக்னாதிபதியும் பூமிகாரகனுமான‌ செவ்வாய் உச்சமடைந்து வலுவாக உள்ளார்.
2. கர்மாதிபதி சூரியன் தனாதிபதி மற்றும் தனகாரகனுமான குருவுடன் 4மிடத்திலுள்ளார்.

மேற்கண்ட காரணங்களால், ஜாதகர் தன் 33 வயதில் சுக்கிர தசை, குரு புக்தியில், தன் சுய் சம்பாத்தியத்தில் ஒரு பெரிய பங்களா வீட்டை கட்டி தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

Chandrasekharan said...

Respected Sir Vanakkam,

1.) Asaiyadha sothukkal jadhagarukku piraviyil undhu.

2.) Jadhagar sukkira dhasa pin padhiyil, 35 vayadhil than sondha panathil veedu vaanginaar.

Kaaranangal:

1.) Lagnathipathy chevvai uccham. 9-il Rahu, 9-m adhipathy Chandran Neecha bangham. 4-m adhipathy paarvai 9-m idam adhanal poorviga veedu ulladhu.

2.) sukran 12-m adhipathy yaga vandhu 4-il amarndhadhal suba virayamaga veedu vanga vaithiruppar. sukra dhasavil, guru bukthiyil jaadhagar veedu vaangiiruppar.

Thank You.

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

லக்னாதிபதி செவ்வாய் 3ல் உச்சம். அவரை ராகு 7ம் பார்வையாக பார்க்கிறார். அதனால் மகா கோபக்கார்ர். 4ம் வீட்டு அதிபதி சனி பகவான் 3ல் இருப்பது நல்லதல்ல. இவருக்கு சகோதர்ர்களுடன் சண்டை ச்ச்சரவு ஏற்பட்டு பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காமல் போயிருக்கும்.

ஆனால் 4ம் இடத்துக்கு காரகம் வகிப்பவர்களான சந்திரன், சுக்கிரன் போன்றவர்கள் நல்ல நிலையில் இருப்பதாலும் செவ்வாய் உச்சமாக இருப்பதாலும் இவர் தன்னுடைய முப்பதாவது வயதில் சுக்கிர தசை செவ்வாய் புக்தியில் சொந்த முயற்சியில் சொந்த வீடு கட்டுவார்.

selvam velusamy said...

வணக்கம் குரு,

1. ஜாதகருக்கு பிறந்தபோதே அசையா சொத்துக்கள் இருந்திருக்கும். காரணங்கள் தனாதிபதியும் பூர்வ புன்னியாதிபதியுமாகிய குரு பகவானும், பத்தாமிடத்து அதிபதியும் பிதுர்காரகனுமாகிய சூரியனும் மற்றும் சுகத்துக்கு காரகனாகிய சுக்கிரனும் லக்னதிர்க்கு 4இல் உள்ளார்கள். மற்றும் லக்னாதிபதியும் பூமி காரகனுமாகிய செவ்வாய் மூன்றில் உச்சம் பெற்று மூன்றாமிடத்துக்கும் நான்காமிடத்துக்கும் அதிபதியாகிய சனி பகவானுடன் சேர்க்கை பெற்றுள்ளார்.

2. அவருடைய 33வது வயதிலிருந்து 35வது வயதிற்குள் அதாவது சுக்கிர திசை குரு புக்தியில் வீடு கட்டியிருப்பார். அல்லது அவரும் அவர் மனைவியும் சேர்ந்து வீடு கட்டியிருப்பார்கள். அதற்குரிய ஒரு தொகையான பணத்தை மனைவியின் மூலம் பெற்றிருப்பார். அது அவர் மனைவியின் பிறந்த வீட்டிலிருந்தோ அல்லது அவர் மனைவி வேலைக்கு சென்று சம்பாதித்தோ கொடுத்திருப்பார். காரணம் 7குடைய சுக்கிரன் 4மிடத்தொடு சம்பந்தம் பெற்று அவருடைய திசை நடப்பில் இருந்தது. அத்தோடு ஜீவன ஸ்தானதோடு குரு, சுக்கிரன் மற்றும் ஜீவனாதிபதி சூரியன் சம்பந்தபடுவதால் இவருக்கு அரசாங்க உத்தியோகம் உண்டு. அப்படியே இல்லை என்றாலும் தனியார் வேலையாக இருந்தாலும் நல்ல வருமானம் உண்டு.

நன்றி
செல்வம்

S.Namasu said...

மதிப்பிற்குரிய அய்யா, ஜோதிட புதிர் எண் 79 க்கான எனது கணிப்பு:

1. ஜாதகருக்கு பூர்வீக சொத்து இருக்கும் ஆனால் கிடைக்காது

2. ஜாதகர் தன்னுடைய 33 - 35 வயதில் சுக்கிர தசை குரு புத்தியில் வீடு கட்டுவார்

விருச்சிக லக்கினம், ராசி அதிபதி செவ்வாய் மகர ராசியில் (3ம் இடம் மறைவு ஸ்தானம்) உச்சம்.

பூர்வீக சொத்துக்கு காரகனான சூரியன் பகை வீடான கும்பத்தில், 9ம் வீட்டு அதிபதியான சந்திரன் நீசம் பெற்று லக்கினத்தில், 9ல் ராகு பகை வீட்டில், 5 க்கு உரிய குரு 12ல் உள்ளதனால் ஜாதகருக்கு பூர்வீக சொத்து இருந்தும் கிடைக்காது.

வீடு கட்டுவதற்கான அமைப்பு, 4ம் வீட்டு அதிபதியான சனி ஆட்சி, லக்கின அதிபதி/காரகன் செவ்வாய் உட்சம் பெற்றுள்ளதனால் ஜாதகர் நிச்சயம் வீடு கட்டுவார், அதற்க்கான அமைப்பானது அவருடைய 33வ 1மா 24நா லிருந்து 35வ 1மா 24நா சுக்கிர தசை குரு புத்தி (14மா) யில் நடந்திருக்கும்.

சுபம்...

நமசு

siva kumar said...

வணக்கம் ஐயா
Quiz no 79 திற்கான விடை

ஜாதகர் விருச்சக லக்கணம்
விருச்சக ராசி
லக்கண அதிபதி செவ்வாய்

1.ஜாதகருக்கு பிறப்பிலேயே சொத்துக்கள் இல்லை

2.தன் சொந்த பணத்தில் வீடு கட்டும் ஆசை நிறைவேறியது

ஜாதகபடி காரனங்கள்:

ஐயா விருச்சக லக்கணத்திற்கு யோககாரன் சந்திரன் நீச்சமாகி லக்கனத்தில் உல்லார்.மற்றும் பூர்வ புண்ணியதிபதி குருவும் தன் வீட்டிற்கு 12ல் மறைவு.பாக்கியஸ்தானமான 9ம் வீட்டில் ராகு அமர்ந்து உள்ளார். மற்றும் பாவ கிரகங்களான சனி,கேது,புதன் ஆகியோரின் நேரடி பார்வை 9ம் வீட்டிற்கு.
இருப்பினும் பாக்கிய ஸ்தானதிற்கு லக்கன அதிபதியின் பார்வை

2. 3ம் இடம் வெற்றிக்கு உரியது.மூற்றாம் வீட்டில் அதன் அதிபதி சனி,மற்றும் உச்சம் பெற்ற செவ்வாய் ஆகியோர் உள்ளார்.அதனால் அவர் ஆசை நிரவேறியது.
அது தன் 30ம் வயதில் சுக்கிர தசா செவ்வாய் புத்தியில் நடைபெற்றது ஐயா

ravichandran said...

Respected Sir,

My answer for our today's Quiz No. 79:-

1. He is not blessed to get immovable properties (ancestral properties) by birth.

2. He earned and got house after his age of 42.

REASONS:
I. Properties by birth:

i) In nineth house, rahu is sitting and nineth house lord is debilitated as well as Saturn, Mars, Kethu and Mercury is aspecting nineth house. It is worst.

ii) There is no benefic planets aspect either nineth house or nienth house lord.

iii) Fourth house lord is sitting in twelfth house from its own house.

iv) In navamsa also, there is no good sign for having properties by birth.

v) No favorable yogas.

Hence, 9th house, 9th house lord as well as fourth house lord is affected, He is not blessed to get properties by birth.

II. Self accquired properties:

i) Tenth house lord is sitting along with Jupiter and Venus in 4th house and aspecting to his own house. This is good sign for self earning.

ii) Second house lord is sitting in 4th house along with tenth house lord. This is also good sign for self earning and having properties.

iii) Eleventh house and second house is not affected.

iv) Lagna lord is exalted and aspecting nineth house and nineth house lord as well as yogathipathi is sitting in lagna.

v) Kala sarpa dosha horoscope.

Therefore, He earned and got house after his age of 42. ( Sun dhasa)

With kind regards,
Ravichandran M.

kmr.krishnan said...

ஜாதகர் 28 பிப்ரவரி 1962ல் காலை 1.30 மணிக்குப் பிறந்தவர். சென்னையைப்பிறந்த இடமாக் எடுத்துக்கொண்டேன்.

1.ஜாதகருக்கு பிறப்பிலேயே அசையாச் சொத்துக்கள் இல்லை.
2. சொந்த முயற்சியில் வீடுகட்டினார்.

நான்காம் அதிபன் சனைச்சரன் தன் வீட்டுக்கு 12ல் மறைந்தார். ஜன்மப் பகையாளர் செவ்வாயுடன் 3ல் கூட்டணியால் 4ம் அதிபன் சனி வலுவிழந்தார்.
மேலும் 8ம் அதிபன் புதனுடன் இருந்ததாலும் நான்காம் அதிபன் வலுவிழந்தார்.
கார்கன் செவ்வாயின் நிலையும் இதுவே. இவர்களுடன் கேதுவும் இருந்து சொத்துக்கள் இல்லாமல் செய்தார்.பாக்கிய ஸ்தான ராகு, 6ம் அதிபன் செவ்வாய் 3ல், 4ம் அதிபன் சனியுடன் இருப்பது ஆகியவை பூர்வீகச்சொத்து இல்லாமல் செய்தது.

2,5.7,க்கு உடைய குரு சுக்கிரன் நான்காம் இடத்தில் நின்றதும் , விருச்சிக ராசி லக்கினத்திற்கு உரிய செவ்வாய் 3ல் உச்சமாகி நின்றதும், கட்டாயம் வீடு கொடுத்திருக்கும். ஒன்றாம் அதிபன் மூன்றில் இருந்தால் சுய முயற்சியிலேயே
அனைத்தும் நடை பெறும்.லக்னாதிபன் 3ல் இருந்தால் சொந்த முயற்சியிலேயே ஜாதகர் முன்னுக்கு வருவர்.36 வயதியில் சுக்ரதசா சனி புக்தியில் வீடு கட்டினார்.

lrk said...

ஐயா. வணக்கம்

புதிர். 79 க்கு. பதில்கள்

1) அன்பருக்கு பிறப்பிலேயே சொத்து கிடையாது .

காரணங்கள் ;
9க்கு அதிபதி நீசம்
9ஆம் இடத்தில் ராகு .பூர்வ புண்ணிய ஸ்தானம் பாதிக்கப்பட்டு உள்ளது .

2) அன்பர் தன் 45 ஆவது வயதில் வீடு கட்டி இருப்பார் .

காரணங்கள் ;
**லக்கின யோக்காரகன் குரு 4ல் ,
**சுககாரகன் சுக்கிரன் 4 ல் ,
**ஜீவன ஸ்தானத்துக்கு அதிபதி சூரியன் 4ல்
ஆகியோர் இருந்து அவருக்கு வீடு கட்டும் யோக த்தை கொடுத்திருப்பார்கள் .

நன்றி ஐயா .
கண்ணன் .

Manikandan said...

௧. பூர்வீக சொத்து கிடைக்காது. பாக்கியாதிபதி நீசம் + லக்கினாதிபதி செவ்வாய் சனி மற்றும் ராகு கேதுஉடன் சேர்க்கை.

௨. சொந்த வீடு வாங்கி இருப்பார். (சுக்கிரன் desai)
நான்கில் குரு+சூரியன்+சுக்கிரன்.

Sudha B said...

Lagnathipathi ucham
4 the house owner sani and lagnathipathi koottu.
Dana karakan guru sukranudan serndu in 4th house.
The person is born rich.
10th house mandi with parvai by owner Suriyan, guru and sukran.
Good work and earned money as 2nd house paral is higher than 12th.
12th house onwner sukaran dis not help in achiving his desire of building house.
In suriya dasa sevvai bukti he built house.
Best wishes