மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.3.15

கவிதை: நதியில் விளையாடும் தென்றல் அடுத்து என்ன செய்யும்?


கவிதை: நதியில் விளையாடும் தென்றல் அடுத்து என்ன செய்யும்?

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் 

தாலாட்டுப் பாட்டு!

இதுவரை கவியரசர் அவர்கள் எழுதிய காதல், தத்துவம், சொல்விளையாட்டுப் பாடல்கள் என்று பல பாடல்களைப் பார்த்துக் கொண்டு வந்தோம். இன்று ஒரு மாறுதலுக்காகத் தாலாட்டுப் பாடல்களைப் பார்ப்போம். சுழற்சி முறையில் அந்த வகைப் பாடல்களும் மீண்டும் வரும்!

காதல் பாடல்களை எந்த முனைப்புடன் எழுதினாரோ அதே முனைப்புடன் கவியரசர் அவர்கள் பல அற்புதமான தாலாட்டுப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் கவியரசரின் சமகாலப் பாடலாசிரியர். காதல் பாடல்களையும் தத்துவப் பாடல்களையும் அனாயசமாக எழுதியவர் அவர். ஆனால் தாலாட்டுப் பாடல்கள் என்றால், கவியரசரிடம் எழுதி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிடுவாராம். அது கண்ணதாசனுக்குதான் சிறப்பாக வரும் என்றும் மனம் உவந்து சொல்லிவிடுவராம்.

கவியரசர் அவர்கள் எழுதிய இரண்டு தாலாட்டுப் பாடல்களை இன்று பதிவிட்டிருக்கின்றேன்

படித்து மகிழுங்கள்
--------------------------------------
"முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
(முத்தான)

சின்னஞ்சிறு சிறகு கொண்ட சிங்காரச் சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ
மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
பூவின் மணமல்லவோ பொன் போன்ற முகமல்லவோ
(முத்தான)

காணாத மனிதரையும் காண வைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ
தாழங்குடையல்லவோ தள்ளாடும் நடையல்லவோ
மாலைப் பொழுதல்லவோ வண்டாடும் செண்டல்லவோ
(முத்தான)"

படம் : நெஞ்சில் ஓர் ஆலயம் - 1962
குரல் : பி.சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி
நடிகை : தேவிகா

முத்தான முத்து, கட்டான மலர். சின்னஞ்சிறு சிறகு உடைய சிங்காரச் சிட்டு செம்மாதுளை பிளந்த சிரிப்பு. மாவடு கண்,மைனாவின் மொழி, பூவின் மணம் பொன் போன்ற முகம் .தாழங்குடை தள்ளாடும் நடை, மாலைப் பொழுது போன்றவள்வண்டாடும் செண்டு என்று எட்டு வரிகளுக்குள்
மனதை மயக்கும் விதம் விதமான வர்ணனைகளோடு பாடலை எழுதினார் பாருங்கள். அதுதான் சிறப்பு

முத்தாய்ப்பான வரிகள் கீழே:
காணாத மனிதரையும் காண வைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ
------------------------------------
மற்றுமொரு பாடல்: பாசமலர் படத்தில் வந்த இந்தப் பாடல் சிகரம் தொட்ட பாடலாகும். இலக்கிய நயம் மிகுந்த பாடலாகும். கவியரசருக்குப் பெரும் புகழைச் சேர்த்த பாடலாகும். பாடலைப் பாருங்கள்:

பெண்:
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல 
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக 
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி 
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகைமலை தோன்றி மதுரைநகர் கண்டு 
பொலிந்த தமிழ் மன்றமே
ஆண்: 
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல 
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக 
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி 
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகைமலை தோன்றி மதுரைநகர் கண்டு 
பொலிந்த தமிழ் மன்றமே
ஆண்: 
யானைப் படை கொண்டு 
சேனை பல வென்று 
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு 
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு... 
வாழப் பிறந்தாயடா
பெண்: 
தங்கக் கடிகாரம் வைர மணியாரம் 
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
ஆண்: 
நதியில் விளையாடி கொடியின் தலைசீவி 
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரைநகர் கண்டு 
பொலிந்த தமிழ் மன்றமே
பெண்: 
சிறகில் எனை மூடி அருமை மகள் போல 
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து 
பிரித்த கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா
ஆண்: 
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல 
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து 
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெண்:
அன்பே ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராராரிரோ
அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ

இந்தப் பாடலில் பல வரிகள் அற்புதமான வரிகளாகும். மலர்ந்து மலராத பாதிமலர் என்று குழந்தைக்கு உதாரணம் சொன்னதோடு விடிந்தும் விடியாத காலைப் பொழுதையும் உதாரணப் படுத்திச் சொன்னது அதி சிறப்பாகும். இளந்தென்றல் நதியில் குளித்துவிட்டு அருகில் இருக்கும் கொடிகளில் தலை சீவும் என்றதும் அருமை. புவியாளப் பிறந்தவனடா நீ என்று சொன்னதும், உனக்காக உலகை விலை பேசுவார், வாங்கித் தருவார் என்று சொன்னதும் அருமை

”கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா,
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா”
என்ற வரிகள் பாடலின் முத்தாய்ப்பான வரிகளாகும்

நதியில் விளையாடும் தென்றல் அடுத்து என்ன செய்யும்? என்று கேட்டால் நமக்குச் சொல்லத் தெரியாது. ஆனால் கவியரசர்”அது கொடியில் தலை சீவிக் கொள்ளும் என்று அருமையாகச் சொன்னார் பாருங்கள். அதனால்தான் அவர் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்

அன்புடன், 
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

 1. கருத்தேதும் இல்லை...
  கவணித்துக் கொண்டு இருக்கின்றோம்

  ReplyDelete
 2. இரண்டாவது பாடல் கவிதை நயம், இலக்கிய நயம் மிகுந்த பாடல்தான். கவிஞர்கள் எப்படி வார்த்தைகளை அடுக்கி இப்படி பாடல்கள் எழுதுகிறார்களோ என்று பல முறை வியந்திருக்கிறேன். நமக்கு இதெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது.

  ReplyDelete
 3. எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஐயா

  ReplyDelete
 4. வணக்கம் குருவே
  இரண்டு பாடல்களில் எவற்றை கேட்பது எவற்றை மறப்பது என்றே தெரியவில்லை.
  இரண்டு பாடள்களுமே அருமை
  இனிப்பை சிரிது உண்டாலும் திவட்டிவிடும் ஆனால் கன்னதாசன் பாடல் வரிகள் எவ்வளவு கேட்டாலும் பார்தாலும் தெவட்டாத அமிர்தம் போன்று ஐயா
  எனக்கு மிகவும் பிடித்த பாடல் இவை இரண்டும்
  ஊங்களுக்கு மனமார்ந்த நன்றி குருவே

  ReplyDelete
 5. /////Blogger வேப்பிலை said...
  கருத்தேதும் இல்லை...
  கவணித்துக் கொண்டு இருக்கின்றோம்/////

  நீங்கள் கவனிப்பதே நாங்கள் செய்த பாக்கியம்தான் வேப்பிலை சுவாமி
  மலேசியா பட்டயக் கணக்காய்வாளரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்!

  ReplyDelete
 6. /////Blogger வேப்பிலை said...
  கருத்தேதும் இல்லை...
  கவணித்துக் கொண்டு இருக்கின்றோம்/////

  நீங்கள் கவனிப்பதே நாங்கள் செய்த பாக்கியம்தான் வேப்பிலை சுவாமி
  மலேசியா பட்டயக் கணக்காய்வாளரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்!

  ReplyDelete
 7. /////Blogger Kirupanandan A said...
  இரண்டாவது பாடல் கவிதை நயம், இலக்கிய நயம் மிகுந்த பாடல்தான். கவிஞர்கள் எப்படி வார்த்தைகளை அடுக்கி இப்படி பாடல்கள் எழுதுகிறார்களோ என்று பல முறை வியந்திருக்கிறேன். நமக்கு இதெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது.//////

  வராவிட்டால் பரவாயில்லை. அவற்றை ரசிக்கும் அறிவும் மனமும் இருந்தால் போதுமே சுவாமி!

  ReplyDelete
 8. /////Blogger gayathri devi said...
  எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஐயா/////

  நல்லது. நன்றி சகோதரி!

  ReplyDelete
 9. ////Blogger siva kumar said...
  வணக்கம் குருவே
  இரண்டு பாடல்களில் எவற்றை கேட்பது எவற்றை மறப்பது என்றே தெரியவில்லை.
  இரண்டு பாடள்களுமே அருமை
  இனிப்பை சிரிது உண்டாலும் திவட்டிவிடும் ஆனால் கண்ணதாசன் பாடல் வரிகள் எவ்வளவு கேட்டாலும் பார்தாலும் தெவட்டாத அமிர்தம் போன்று ஐயா
  எனக்கு மிகவும் பிடித்த பாடல் இவை இரண்டும்
  உங்களுக்கு மனமார்ந்த நன்றி குருவே////////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

  ReplyDelete
 10. கவனிப்புகளில் பல வகைகள் இருக்கின்றன. இரு உன்னை பிறகு கவனித்துக் கொள்கிறேன் என்றோ நேரம் வரட்டும் கவனித்துக் கொள்கிறேன் அல்லது வேறு விதத்தில் கவனித்துக் கொள்கிறேன் என்று சிலர் சொல்வதையும் கேட்டிருக்கிறோம். வேப்பிலை சுவாமிஜி என்னையும் ஏதோ ஒரு விதத்தில் கவனித்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 11. கவியரசருக்கு ஏன் தாலாட்டுப் பாடல் நன்றாக வந்தது? ஆசை ஆசையாக நிறையக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதால் இருக்குமோ?

  கலாக்சி வ‌குப்பிற்குள் என்னை அனுமதியுங்கள் ஐயா!என் மின் அஞ்சல் பார்த்து ஒரு தீர்வு தாருங்கள் ஐயா! பல மாதங்களாக இந்தப் பிரச்சனை உள்ள‌து. நானும் தினமும் இன்று சரியாகும் நாளை சரியாகும் என்று எதிர் பார்த்து ஏமாந்து வருகிறேன்.

  ReplyDelete
 12. வணக்கம் ஐயா !

  எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பாடலுக்குத் தாங்கள் அளித்த விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com