மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.3.15

Quiz.no.80 Answer: தைமாத மேகம் தரையில் வாடவில்லை!

Quiz.no.80 Answer: தைமாத மேகம் தரையில் வாடவில்லை!

புதிர் எண் 80ற்கான விடை

11.3.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 2 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. அம்மணிக்கு பார்த்த வரன்களெல்லாம் ஒன்று கூட அமையவில்லை. திருமணம் அதீத தாமதமானது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
2.அம்மணிக்குத் திருமணம் ஆனதா? அல்லது ஆகவில்லையா? ஆனது என்றால் எப்போது ஆனது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?

சரியான பதில்:
1. ஏழாம் வீடு அதீத பாதிப்பிற்கு உள்ளாகி யிருந்ததால் திருமணம் தாமதமாகியது.
2. ஜாதகிக்குத் திருமணம் அவளுடைய 32 வது வயதில் நடைபெற்றது.

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!

மகர லக்கின ஜாதகம்.
ஏழாம் வீட்டில் 12ம் வீட்டுக்காரன் குரு வந்து அமர்ந்திருக்கிறான்.
களத்திரகாரகன் சுக்கிரன் ஆறாம் வீட்டில் போய் அமர்ந்திருக்கிறான். ஏழாம் வீட்டுடனோ அல்லது லக்கினத்திடனோ அவனுக்குத் தொடர்பில்லை.
அத்துடன் சுக்கிரன் 6ம் வீட்டு அதிபதி புதனுடன் பரிவர்த்தனையாகி மேலும் கெட்டிருக்கிறான்.
ஏழாம் வீட்டு அதிபதி சந்திரன் நீசமாகியுள்ளான்.
தாமதத்திற்குக் காரணம் மேற்கூரிய அமைப்புக்கள்தான்.

ஆனால் ஒரு ஆறுதல்.ஏழாம் வீட்டுக்காரன் நீசமானாலும், ஏழில் அமர்ந்திருக்கும் குருவின் பார்வையைப் பெற்று, ஜாதகிக்குத் திருமணத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறான்.
ஜாதகிக்கு 18 வயதில் துவங்கி 38 வயது வரை சுக்கிர திசை.
ஜாதகியின் 31வது வயதில் சுக்கிர மகாதிசையில் சனி புத்தி துவங்கியது.
சனீஷ்வரன் லக்கினத்திற்கும் 2ம் வீட்டிற்கும் அதிபதி அவனும் சுக்கிரனும் சேர்ந்து தங்கள் தசாபுத்திகளில் ஜாதகிக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். உச்சமான குரு பகவான் கோச்சாரப்படி தன் நகர்வில் அதற்கு உதவி செய்தான்.
ஜாதகிக்கு அவளுடைய 32வது வயதில் திருமணம் நடந்தது

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 32 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில் 15 மட்டுமே இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதிலை/ஒட்டிய பதிலை எழுதியிருக்கிறார்கள். அதிலும் 3 பேர்கள் மட்டும்தான் திருமணம் நடந்த வயது அல்லது திசா புத்தியைச் சரியாகக் குறிப்பிட்டு 100/100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள். அவருக்கு மிகுந்த பாராட்டுக்கள். 12பேர்கள் திருமணம் ஆனதைக் குறிப்பிட்டுள்ளார்கள். திருமணம் நடந்த தசாபுத்தி அல்லது வயதில் குழம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கும் அவற்றிற்குரிய மதிப்பெண்களை வழங்கியிருக்கிறேன். மதிப்பெண்களைக் குறித்து யாரும் சண்டைக்கு வரவேண்டாம். அதை வாத்தியார் கொடுத்தவரை சரிதான் என்று எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

ஜாதகிக்குத் திருமணம் அவளுடைய 32 வது வயதில் நடைபெற்றது என்பதுதான் key answer
சுக்கிரதிசை குருபுத்தியில் திருமணம் நடந்தது என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். சுக்கிரதிசை சனிபுத்தியில் என்பது துல்லியமான விடையாகும்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
90 marks........////////Blogger Kirupanandan A said...
    இந்த ஜாதகத்தை பார்த்த முதல் பார்வையில் நான் நினைத்தது. "என்ன ஒரு ஆச்சரியம். முழு சுபனான குரு 7ல் உச்சமாக இருந்தும் திருமணம் தாமதமானதா?"
    1) தாமதத்திற்கு காரணம்: களத்திரகாரகனும் இந்த லக்கினத்திற்கு யோககாரகனுமான சுக்கிரன் 6ல் மறைவு. களத்திரஸ்தானாதிபதி சந்திரன் நீசம். 7ல் குரு உச்சமானாலும் இந்த ஜாதகத்திற்கு 2 துர்ஸ்தானங்களுக்கு அதிபதிமாகிறார்.
    முதல் கேள்வியில் திருமணம் தாமதம் என்று குறிப்பிட்டு விட்டு 2 கேள்வியில் ஆனதா இல்லையா என்று கேட்கிறீர்கள். அடுத்த பதில் தவறானால் அதற்கு தாங்கள்தான் பொறுப்பு. (தமாஷ்).
    2) திருமணம் ஆனது. 31 வயதிற்கு மேல் சுக்கிர தசையில் புதன் புத்தியில் நடந்தது. (இதற்கு தோதான பாடல் ஞாபகத்திற்கு வரவில்லை. நீங்களே உங்களுக்கு பிடித்த சரியான பாடலை இதற்கு போட்டுக் கொள்ளுங்கள்.)
    Tuesday, March 10, 2015 8:13:00 AM//////
-------------------------------------------------
2
90 marks .....//////Blogger slmsanuma said...
    Laknathipathi Saturn is looked by Vakkira Sevvai.
    Raghu looked the Second Place. Raghu also looked Sukkaran Karagan. Karagan Sukkaran is in 6th place (hidden place) and also 12th place to 7th place.
    Bhavagapathi Chandiran is in 11th place and Neecham. 11th place is also 5th place to the Bhavagam.
    Ucha Guru in 7th place looked Laknam and 7th Bhagavathipathi Chandiran.
    1) Marriage is delayed due to Karagan Sukkaran is in 6th place (hidden place) and also 12th place to 7th place. Bhavagapathi Chandiran is in 11th place and Neecham.
    2) Ucha Guru in 7th place looked Laknam and 7th Bhagavathipathi Chandiran.
    So the native got delayed marriage in her Sukkira Thisai and Guru Bukthi at the age of 30 years.
    Tuesday, March 10, 2015 8:16:00 AM/////////
------------------------------------------------
3
100 marks......../////OpenID guest2015 said...
    1. அம்மணிக்கு பார்த்த வரன்களெல்லாம் ஒன்று கூட அமையவில்லை. திருமணம் அதீத தாமதமானது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
    Reason for delayed marriage..
    lagna lord in 3rd house (inimical house in both rasi and navamsa)
    venus karaka for marriage is in 6th house. dainya parivartan yoga between 5th and 6th lord.
    retrograded mars in 9th house. 9th house lord mercury is weak with 3 bindus.
    Neecha mars(R) in navamsa with rahu in cancer.
    7th house lord moon under rahu ketu aspect/company. (navamsa)
    12th house lord Jupiter exalted in 7th house also it is 6th to 2nd house. Jupiter is alone in the 7th house which is not good.
    Rahu and maandhi in 4th house.
    2.அம்மணிக்குத் திருமணம் ஆனதா? அல்லது ஆகவில்லையா? ஆனது என்றால் எப்போது ஆனது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?
    YES.. delayed marriage
    venus and mars aspecting 12th house, 12th lord exaltation ensures family life.
    7th lord moon is strong with 5 bindus aspecting his own house in navamsa
    exalted jupiter in 7th house. aspecting moon in navamsa.
    marriage might have happened during venus dasha- saturn or mercury sub period. that is after 1997.
    thank you!
    Tuesday, March 10, 2015 9:11:00 AM///////
-----------------------------------------------
4
90 marks....///////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    Quiz 80க்கான பதில்.
    1.களத்திர காரகன் மற்றும் மகர லக்கின யோகாதிபதி சுக்கிரன் 6ல் மறைவு. களத்திர ஸ்தானாதிபதி சந்திரன் நீச்சம், மேலும் 7ல் குரு உச்சம். லக்கினாதிபதி சனியின் மீது வக்கிர செவ்வாய் பார்வை. ஆகவே அதீத தாமத திருமணம்.
    2. 30 வயதிற்கு மேல் சுக்கிர திசை, குரு புத்தியில் திருமணம் நடைபெற்றது. குரு சந்திர யோகம் உள்ளதால் நிச்சயம் திருமணம் நடைபெற்று இருக்கும்.
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.
    Tuesday, March 10, 2015 9:58:00 AM/////
------------------------------------------------
5
90.....////////Blogger Chandrasekharan said...
    Respected Sir Vanakkam,
    1.) திருமணம் அதீத தாமதமானது endru neengaley Thirumanam aanadhai confirm seidhuviteer..
    2.) Jadhagikku 34 vayadhil Sukhra dhasa and budhan bukthiyil thirumanam nadandhirukkum.
    Lagnathipathi sani 3-il. 12 & 3-m adhipathy Guru, 7-il uccham. 7-m adhipathy chandran neecham kalathira kaaragan sukran 6-il adhanal thirumanam thamadhamadhu.
    18-vadhu vayadhil sukra dhasa. shukran 5-m adhipathyaga irundhalum avar 6-m adhipathy budhanudan parivardhanai.
    Parivardhanai endraley ivargal dhasavil avarum, avaradhu dhasavil ivarum palangalai seivaargal.
    sukran dhasavil budhan palangal nadandhirukkum. budhan 6-m adhipathy (Thirumanam veetirkku 12-m veedu). budhan sukrnai pole velai seivaar adhanal sukra dhasavil budhan bukthiyil thirumanam nadandhirukkum. sukra dhasa budhan bukthi 34 vayadhil.. aagavey 34 vayadhil adhidha thamadamaga (Pengalukku adhu adhidha thamadamadhamdhan)thirumanam nadandhirukkum.
    Thank You.
    Tuesday, March 10, 2015 1:21:00 
-------------------------------------------------
6
90marks......////////Blogger amuthavel murugesan said...
    Answer to Quiz:80
    1. Married in Sukra dasa Guru pudhi.
    Guru in 7th place with ucham.He must do marriage.
    Delay reason;
    Sukran in 6th place and 12 th place guru in 7th place.
    M.Santhi
    Tuesday, March 10, 2015 1:23:00 PM//////
---------------------------------------------------
7
90marks......//////Blogger kmr.krishnan said...
    ஜாதகி 24 மே 1967, இரவு 11 மணி 18 நிமிடம் 15 விநாடிக்குப் பிறந்தவர்.
    பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
    1.திருமணம் தாமதமாக ஆனதற்கான காரணங்கள்: 7ம் அதிபன் சந்திரன் 11ல் நீசமடைந்தது.7ம் அதிபன் சந்திரனுக்கு 6ம் அதிபன் புதன், 8ம் அதிபன் சூரியனின் நேர் பார்வை.களத்திரகார‌கன் சுக்கிரன் 6ல் மறைந்தது.12,3க்கு உடைய குருஜி7ல் சென்று அமர்ந்தது.5ம் இடத்தில் 6,8க்கு உடையவர்கள் அமர்ந்ததால் குழந்தை பிறப்பு பற்றிய சந்தேகம் ஏற்பட்டு வரன் வீட்டினர் பல ஆண்டுகள் விலகிப் போயினர்.நவாம்சத்திலும் அந்த லக்கினத்திற்கு 7ம் இடத்திற்கு சனி கேது இரு பக்கங்களிலும் நின்றது.
    2. திருமணம் நடந்தது. 27 வயதில் சுக்கிரதசா குருபுக்தியில் திருமணம் நட‌ந்தது.சுக்கிரன் ஜாதகிக்கு யோககாரகன். எனவே அவரது தசாவில் திருமணம் நடந்தது. ராசி நவாம்சம் இரண்டிலுமே சந்திரனை குருபார்ப்பதால் கட்டாயம் திருமணம் உண்டு.
    Tuesday, March 10, 2015 1:28:00 PM/////////
---------------------------------------------------
8
90 marks.....///////Blogger bala said...
    Vanakkam Iyya,
    1.
    7aaam veedu kalathira sthanam
    Thirumanathiruku 7aam veedu + 7aam athipathi + 7aam veetuku kidaikum paaravayai+ 7 aam veetil amarnthirukum grahangalai+ Kalathira kaaragan paarka vendum.
    Intha jaathagathil,
    7 aam athipathi - Neecham (Chandran neecham in viruchigam)
    Kalathira kaaragan + yogakaaragan (for makara lagnam) - Sukran lagnathuku 6aam veetil.
    Chandran neecham aanalum, avan amarnthirupathu lagnathuku 11 aam veetil.
    Chandran ku 8aam athipathi (Maangalya sthanathipathi sooriyan + Villan aana 6aam veetukaaranin paaravai (Budhan suryanudan sernthu 6 aam veetu porupai yetrullan)
    Chandranku 7aam veetil amaranthirukum guru paaravai.
    Pothuvana vithi : 7il guru amarnthaal nala kanavan/Manaivi amayvaargal enbathu.
    9 aam veedanana bagya sthanthil Sevvai amarnthu irukiraar. (Makara lagnathuku sevvai nallavar kidayathu) + Antha sevvai ku lagnathipathiyin paaravaiyum kooda.
    9 aam veetinil sevvai irunthu thirumana bagyathai kaalaam kadathinaar.
    Ivai ellam sernthu thirumana thaamathathiruku kaaranam aanadhu.
    2.
    Thirumanam kandipaga nadanthu irukum.
    Guruvum + Kalathira kaaragan sukkiranum sernthu - Sukra thasai Guru buthiyil thirumanthai nadathi vethirupaargal.
    Tuesday, March 10, 2015 2:47:00 PM//////
-----------------------------------------------------
9
90 marks ......///////Blogger Sivachandran Balasubramaniam said...
    அன்பிற்குரிய ஐயா !!!
    புதிர் எண்: 80 இற்கான பதில் !!!!
    குடுக்கப்பட்ட ஜாதகி மகர லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சனி மூன்றாம் வீட்டில் (குரு வீட்டில் ) அமர்ந்துள்ளார். களத்திரஸ்தானாதிபதி சந்திரன் லாபஸ்தானத்தில் நீசம். 6 மற்றும் 8 ஆம் அதிபதிகளான புதன் மற்றும் சூரியன் 5இல் (பூர்வபுண்ணியத்தில்) அமர்ந்து 7ஆம் அதிபதி சந்திரனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாலும், 12 ஆம் அதிபதி 7இல் குரு உச்சமாய் அமர்ந்து இருப்பதாலும் ஜாதகிக்கு திருமணம் தாமதம். குரு பார்வை சந்திரனின் மேல் 5ஆம் பார்வையாக விழுவதால் ஜாதகிக்கு தனது 37ஆம் வயதில் சுக்கர திசை குரு புத்தியில் திருமணம் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. இது திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் அல்ல !!!!
    சிவச்சந்திரன்.பா
    Tuesday, March 10, 2015 3:04:00 PM///////
-----------------------------------------------
10
100 marks.....////////Blogger asbvsri said...
    Quiz No: 80 – Answer
    ஐய்யா வணக்கம்.
    லக்னாதிபதி சனி மூன்றாம் இடத்தில். இரண்டுக்கு இரண்டாம் இடம். ஜன்ம பகைவன் செவ்வாயின் பார்வையில்.
    ஏழாம் இடத்ததிபதி மாரகாதிபதி சந்த்ரன் நீச்சம் – 11 ஆம் இடத்தில் – பாதகஸ்தானத்தில். நவாம்சத்தில் பகைவன் சனியின் வீட்டில், கேதுவுடன், – ராஹு, செவ்வாய் பார்வையில். மேலும் ராஹுவும் செவ்வாயும் இரண்டாம் இடத்தில் களத்திரத்தின் குடும்பஸ்தானத்தை வெகுவாக கெடுக்கிறார்கள். சுகஸ்தானாதிபதி (பாதகாதிபதி) செவ்வாய் கன்னியில், பகைவன் வீட்டில். நவாம்சட்தில் நீச்சம், ஏழாம் அதிபதி (ராசி) சந்த்ரன் வீட்டில். மேலும் சுகஸ்தானமான 4 ஆம் இடம் மாந்தியால் வேறு கெட்டிருக்கிறது.
    களத்திரகாரகன் சுக்ரன் ஆறாம் இடத்தில் இருப்பதால் சுகமில்லை.
    குரு உச்சமாக இருந்தாலும், 12 க்கும், 3 க்கும் அதிபதி, தவிர நவாம்சத்தில் பகைவன் புதன் வீட்டில் இருப்பதால் ப்ரயோஜனமில்லை.
    ஆக திருமணத்திற்கு உதவி செய்யும் சுக்ரன், குரு மற்றும் 7 ஆம் அதிபதி தீய ஸ்தானத்தில் இருப்பதால் திருமணம் தாமதமானது. யோகாதிபதி சுக்ரன் அவருடய தசையில் திருமணத்தை நடத்திவைத்தார்.
    இருப்பு தசை புதன் 10 வருடம், 7 மாதம். பிறந்த தேதி மே மாதம் 24 ஆம் தேதி 1967 வருடம். கேது தசை 1985 வரை திருமணம் நடக்கவில்லை. சுக்ர தசையில் திருமணம் லக்னாதிபதி சனிபகவான் புக்தியில் 7 ஆம் அதிபதி சந்த்ரன் அந்த்ரத்தில் திருமணத்தை 1999 / 2000 ஆண்டில் குரு பகவான் கோள்ச்சாரத்தில் மீனத்தில் இருக்கும்போது நடத்திவைத்தார்.
    K R Ananthakrishnan, Chennai
    Tuesday, March 10, 2015 3:27:00 /////////
-----------------------------------------------
11
75 marks......///////Blogger anand tamil said...
    1.அதீத தாமததிற்க்கு காரணம் 7ம் அதிபதி சந்திரன் நீசம். 7‍ம் இடத்தில் சுபர்களின் பார்வை இல்லை .களத்திரகாரன் சுக்கிரன் 6இல் மறைந்தான்.7ம் அதிபதி சந்திரன் மேல் 3,6,8,12 ம் அதிபதிகளின் பார்வை.
    2.திருமணம் நடைபெற்றது.
    காரணம்:புதன் மற்றும் சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றுள்ளது.யெனவே சுக்கிரதிசை‍ புதன் புத்தியில் 34 வயதில் திருமணம் நடைபெற்றது
    Tuesday, March 10, 2015 3:29:00 PM/////
-------------------------------------------------
12
75 marks......///////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    மகர லக்ன ஜாதகி. லக்னாதிபதி சனி பகவான் 3ல் பகை வீட்டில், குரு பார்வையில் இருக்கிறார்.
    1. களத்திர காரகன் சுக்கிரன் 6ல் களத்திர ஸ்தானத்துக்கு 12ல் இருக்கிறார். களத்திர ஸ்தான அதிபதி சந்திரன் நீச்சம். செவ்வாயும், சனி பகவானின் நேரடிப் பார்வையில் இருக்கிறது; நவாம்சத்திலும் செவ்வாய் நீச்சம் ஆகியிருக்கிறார். அதனால் திருமணம் ஆகத்தான் செய்யும்.
    2. ஆனால் உச்சம் பெற்ற குரு 7ல் களத்திர ஸ்தானத்தில் இருந்து லக்னத்தையும், லக்னாதிபதியையும், களத்திர ஸ்தான அதிபதி சந்திரனையும் பார்க்கிறார். களத்திர காரகனும், பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியும் பரிவர்த்தனை ஆகியிருக்கிறார்கள். அவர்களே 9, 10க்கும் அதிபதி ஆகி தர்ம கர்மாதிபதி யோகத்தையும் கொடுக்கிறார்கள். 8ம் அதிபதி சூரியனும் பூர்வ புண்ணியத்தில். எனவே ஜாதகியின் 34வது வயதில் திருமணம் நடந்திருக்கும்.
    Tuesday, March 10, 2015 3:46:00 PM//////
---------------------------------------------------
13
100marks .....///////Blogger thozhar pandian said...
    குரு இயற்கை சுப கிரகமாக இருந்தாலும் மகர இலக்கினத்திற்கு 3 மற்றும் 12 வீட்டு அதிபதி. அதனால் பாவியாகிறார். அவர் 7ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்து இலக்கினத்தை தனது பார்வையில் வைத்திருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சந்திரன் நீசம் பெற்று குரு பார்வையில் உள்ளார். களத்திரகாரகர் சுக்கிரன் இலக்கினத்திற்கு 6ல், 7ம் வீட்டிற்கு 12ல் மறைந்தார். இந்த காரணங்களால்தான் திருமணம் தள்ளிப்போனது. தசா புக்தி படி சுக்கிர தசை 17 வயதில் இருந்து 37 வயது வரை. சுக்கிர தசையில் குரு புக்தி முடியும் வரை திருமணம் இல்லை. அதாவது 30 வயதிற்கு மேல், இலக்கினம் மற்றும் 2ம் வீட்டு அதிபதியான சனியின் புக்தியில் திருமணம் நடந்திருக்கும். குரு இயற்கை சுப கிரகமாவதாலும், சுக்கிரன் களத்திரகாரகராக மகர இலக்கினத்திற்கு யோக காரகராக இருப்பதாலும், திருமணம் அவர் தசையில் நடந்திருக்கும்.
    Tuesday, March 10, 2015 9:28:00 PM//////
--------------------------------------------
14
75 marks.....///////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.80:
    1. Reason for late marriage is Venus placed 12th house from seventh house.
    2. She has married at her age of 34 in Venus dasa mercury sub period (bhuthi).
    Explanations:
    I. Reasons for late marriage:
    i) Seventh house lord Moon is debilitated in 11th house.
    ii) Kalathra karaga is placed 12th house from seventh house.
    iii) Kathrakaraga (Venus) is not aspecting seventh house or house lord. (6/8)
    iv) Sun is aspecting (8th house lord) moon.
    II. Reasons for Married life:
    i) Jupiter is exalted in seventh house though it is twelfth house as well as 3rd house.
    ii) Exalted Jupiter is aspecting Moon, lagna and lagna lord.
    iii) Bagyathipathi Mercury is in 5th house and aspecting Moon (seventh house lord)
    iv) Mercury and Venus are in Mutual exchange position.
    v) Second house and twelfth house are not affected.
    Vi) In astavarga also having good parals.
    Hence, She has married after delay.
    With kind regards,
    Ravichandran M.
    Tuesday, March 10, 2015 9:49:00 PM//////
------------------------------------------------
15
90 marks.....///////Blogger Prakash Kumar said...
    Vanakkam ayya
    Answer for 80th question.
    Reason for late marriage: 7th athipathi neesam, sukran in 12th place from 7. Moon is under control of bhudhan (6th Lord) suriyan 8th Lord, dasaialum moosam
    Marriage might hv happened sukura dasa guru puthi. 7IL Samantha guru Athai seithuirupar
    Tuesday, March 10, 2015 10:59:00 PM/////
==============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

31 comments:

 1. 100 marks!! flying high.. thank you sir! i would like to join your galaxy class room. kindly post the details..

  tks
  sree

  ReplyDelete
 2. வணக்கம் குரு,

  மேல்நிலை வகுப்பில் 7மிடம் நீர் ராசியாக இருந்து குரு பகவான் அங்கு இருப்பராகில் அது விதவை தோஷம் என்று ஒரு ஜாதகத்தை அலசி இருந்தீர்கள். ஆனால் இங்கு வேறு விதமாக உள்ளதே.

  நன்றி
  செல்வம்

  ReplyDelete
 3. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
  புதிர் எண் 80
  தாமதமான திருமணம்.
  வீட்டிற்கு விருந்தினர் வந்த காரணத்தால் வகுப்புக்கு வந்து பரீட்சை எழுத முடியவில்லை. மன்னிக்கவும்.
  தங்களின் சரியான பதிலும் சக மாணவர்களின் பதில்களையும் படித்து கொண்டேன்
  நன்றி .
  அடுத்த பரீட்சைக்கு வந்து விடுவேன்.

  ReplyDelete
 4. Hello Sir,

  Thank you for 90 Marks. It is all because of your teaching. will try to get full marks.

  I would like to join in galaxy classroom. please reply me the details.

  kprakashkumar@gmail.com

  Regards
  Prakash.K

  ReplyDelete
 5. ஆசானுக்கு வணக்கம்.

  வழக்கம் போல என்னுடைய அண்ணாச்சியின் கேள்வி ஒன்றை இங்கு கேட்டுள்ளேன்.

  கேள்வி இது தான்.

  மகர லக்னத்திற்கு குரு 3 , 12 க்கு உடையவர் ஆனால் அவர் 7 ல் இருந்து 7 ம் அதிபதியை பார்த்ததினால் தாமத திருமணம் என்று கூறி உள்ளீர்கள். அவர் லக்னத்திற்கு நல்ல ஆதிபத்தியம் உடையவர் அல்ல அல்லவா ? தாங்கள் இதனை சற்று விளக்கி கூறவேண்டி விரும்பி கேட்டுகொள்கின்றேன். இந்த கேள்வி ஆனது என்னுடைய ஜாதக அறிவை வளர்த்துக்கொள்ள உதவும். நன்று நன்றி.

  ReplyDelete
 6. என்னுடைய பதிலுக்கு மதிப்பெண்கள் காணோமே அய்யா...

  திருமண காலத்தில் மட்டுமே குழப்பம் செய்திருந்ததாக எண்ணினேன்.

  சுத்தமாக தேறவில்லையோ..?

  ReplyDelete
 7. நவாம்சம் உட்பட பிற வர்கச் சக்கரங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மேலும் பலன்களைத் துள்ளியமாக அறியலாம். ஆனால் அயனாம்ச குழப்பம் மற்றும் துள்ளியமான பிறந்த நேரம் இல்லாதது இவற்றின் காரணமாக கணிப்பின் போது நவாம்சத்தைப் பார்ப்பதில் எனக்கு தயக்கம் உள்ளது. Digital கடிகாரங்கள் இல்லாத அன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் தோரயமான பிறந்த நேரம்தான் கொடுக்கப்பட்டிருக்கும். (பொதுவாகச் சொல்கிறேன். இங்கே கொடுக்கப்பட்ட ஜாதகத்தைப் பற்றி சொல்லவில்லை)

  பொதுவாக நவாம்ச லக்கினத்தில் சுக்கிரன், திரேக்காண லக்கினத்தில் செவ்வாய், சப்தாம்ச லக்கினத்தில் குரு, துவாதசாம்ச லக்கினத்தில் சூரியன் அல்லது சந்திரன் இருப்பது காரக பாவ செய்யும் என்று வர்கச் சக்கரத்தை வைத்து பலன் பார்க்கும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு.

  ReplyDelete

 8. Sir
  i use jagannatha hora (traditional lahiri ayanamsa -preferences-> default calculation options). is this setting accurate?. if i change the settings to author recommended settings i see the chart varies. pl recommend accurate settings.

  thank you

  ReplyDelete
 9. வணக்கம் ஐயா
  எந்த வீட்டில் எந்த கிரகம் இருகிரதோ அது அந்த வீட்டின் பலனை கொடுக்குமா அலலது அந்த வீட்டின் அதிபதி கொடுப்பார?
  புதன் நீச்சம் பெற்று 4ம் அதிபதியின் மேல் லக்கனத்திற்கு யோககாரன் பார்த்தால் ஜாதகரின் கல்வி நிலை எவ்வாறு இருக்கும் ஐயா
  கேள்வி தவராக இருந்தால் மன்னிக்கவும் ஐயா

  ReplyDelete
 10. பல நாட்களுக்கு பிறகு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். நன்றி. முன்னர் இதை வைத்து எனக்கு சிலர் மின்னஞ்சலில் தங்கள் சொந்த ஜாதகத்தை அனுப்பி சந்தேகங்களை கேட்டிருக்கின்ற‌னர். பணிவாக மறுத்துள்ளேன். என்னை போன்ற கத்துக்குட்டிகளுக்கு ஜாதகம் பார்த்து வருங்காலத்தை கணிக்கும் ஞானம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்க முயலும் போது பல முறை தவறுகள் செய்திருக்கிறேன். அதிர்ஷ்டத்தில் சில சமயம் அது சரியாக வருவதுண்டு. உடைந்த கடிகாரம் கூட நாளுக்கு இரு முறை சரியான நேரத்தை காட்டுவது போல் தான் இதுவும். இருப்பினும், சரியான முறையில் பதிலளித்திருந்தால் அது இறைவனின் ஆசியாலும், ஆசிரியரின் பாடங்களினால் மட்டுமே. தவறாக இருந்தால் அதற்கு நானே முழு காரணம்.

  ReplyDelete
 11. ///////OpenID guest2015 said...
  100 marks!! flying high.. thank you sir! i would like to join your galaxy class room. kindly post the details..
  tks
  sree/////

  உங்கள் பெயர் என்ன? அதைச் சொல்லுங்கள் முதலில். கேலக்ஸி வகுப்பிற்கு மின்னஞ்சலில் எழுதுங்கள்: classroom2007@gmail.com

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. ////Blogger selvam velusamy said...
  வணக்கம் குரு,
  மேல்நிலை வகுப்பில் 7மிடம் நீர் ராசியாக இருந்து குரு பகவான் அங்கு இருப்பராகில் அது விதவை தோஷம் என்று ஒரு ஜாதகத்தை அலசி

  இருந்தீர்கள். ஆனால் இங்கு வேறு விதமாக உள்ளதே.
  நன்றி
  செல்வம்/////

  நினைவில் இல்லையே சாமி. அந்தப் பாடத்தின் சுட்டியைத் தாருங்கள்!

  ReplyDelete
 14. ///////Blogger hamaragana said...
  அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
  புதிர் எண் 80
  தாமதமான திருமணம்.
  வீட்டிற்கு விருந்தினர் வந்த காரணத்தால் வகுப்புக்கு வந்து பரீட்சை எழுத முடியவில்லை. மன்னிக்கவும்.
  தங்களின் சரியான பதிலும் சக மாணவர்களின் பதில்களையும் படித்து கொண்டேன்
  நன்றி .
  அடுத்த பரீட்சைக்கு வந்து விடுவேன்./////

  நல்லது. அப்படியே செய்யுங்கள்!

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. ////Blogger Prakash Kumar said...
  Hello Sir,
  Thank you for 90 Marks. It is all because of your teaching. will try to get full marks.
  I would like to join in galaxy classroom. please reply me the details.
  kprakashkumar@gmail.com
  Regards
  Prakash.K//////

  கேலக்ஸி வகுப்பிற்கு மின்னஞ்சலில் எழுதுங்கள்: classroom2007@gmail.com

  ReplyDelete
 17. ////Blogger Prakash Kumar said...
  Hello Sir,
  Thank you for 90 Marks. It is all because of your teaching. will try to get full marks.
  I would like to join in galaxy classroom. please reply me the details.
  kprakashkumar@gmail.com
  Regards
  Prakash.K//////

  கேலக்ஸி வகுப்பிற்கு மின்னஞ்சலில் எழுதுங்கள்: classroom2007@gmail.com

  ReplyDelete
 18. ///////Blogger kanna said...
  ஆசானுக்கு வணக்கம்.
  வழக்கம் போல என்னுடைய அண்ணாச்சியின் கேள்வி ஒன்றை இங்கு கேட்டுள்ளேன்.
  கேள்வி இது தான்.
  மகர லக்னத்திற்கு குரு 3 , 12 க்கு உடையவர் ஆனால் அவர் 7 ல் இருந்து 7 ம் அதிபதியை பார்த்ததினால் தாமத திருமணம் என்று கூறி உள்ளீர்கள். அவர் லக்னத்திற்கு நல்ல ஆதிபத்தியம் உடையவர் அல்ல அல்லவா ? தாங்கள் இதனை சற்று விளக்கி கூறவேண்டி விரும்பி கேட்டுகொள்கின்றேன். இந்த கேள்வி ஆனது என்னுடைய ஜாதக அறிவை வளர்த்துக்கொள்ள உதவும். நன்று நன்றி.//////

  12ம் வீட்டிற்கும் அதிபத்யம் உள்ளவர்தானே! பதிவை மீண்டும் படியுங்கள். தாமதத்திற்கு வேறு முக்கியமான காரணங்களையும் கூறியுள்ளேன்!

  ReplyDelete
 19. ///////Blogger kanna said...

 20. //////Blogger Govindasamy said...
  என்னுடைய பதிலுக்கு மதிப்பெண்கள் காணோமே அய்யா...
  திருமண காலத்தில் மட்டுமே குழப்பம் செய்திருந்ததாக எண்ணினேன்.
  சுத்தமாக தேறவில்லையோ..?//////

  களத்திரகாரகனையும் தப்பாகக் குறிபீடுள்ளீர்கள். அத்துடன் திருமணம் நடந்த காலத்தையும் 43 வயது என்று தப்பாகக் குறிபிட்டுள்லீர்கள். அதனால் தேறவில்லை. அதற்கு என்ன கவலை? இது என்ன சென்ட்ரல் போர்டு பரீட்சையா? அடுத்த முறை பார்க்கலாம். கவலையை விடுங்கள்

  ReplyDelete
 21. //////Blogger Govindasamy said...

 22. /////Blogger Kirupanandan A said...
  நவாம்சம் உட்பட பிற வர்கச் சக்கரங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மேலும் பலன்களைத் துள்ளியமாக அறியலாம். ஆனால் அயனாம்ச குழப்பம் மற்றும் துள்ளியமான பிறந்த நேரம் இல்லாதது இவற்றின் காரணமாக கணிப்பின் போது நவாம்சத்தைப் பார்ப்பதில் எனக்கு தயக்கம் உள்ளது. Digital கடிகாரங்கள் இல்லாத அன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் தோரயமான பிறந்த நேரம்தான் கொடுக்கப்பட்டிருக்கும். (பொதுவாகச் சொல்கிறேன். இங்கே கொடுக்கப்பட்ட ஜாதகத்தைப் பற்றி சொல்லவில்லை)
  பொதுவாக நவாம்ச லக்கினத்தில் சுக்கிரன், திரேக்காண லக்கினத்தில் செவ்வாய், சப்தாம்ச லக்கினத்தில் குரு, துவாதசாம்ச லக்கினத்தில் சூரியன் அல்லது சந்திரன் இருப்பது காரக பாவ செய்யும் என்று வர்கச் சக்கரத்தை வைத்து பலன் பார்க்கும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு//////.

  உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருபானந்தன்!

  ReplyDelete
 23. /////Blogger Kirupanandan A said...

 24. //////OpenID guest2015 said...
  Sir
  i use jagannatha hora (traditional lahiri ayanamsa -preferences-> default calculation options). is this setting accurate?. if i change the settings to author recommended settings i see the chart varies. pl recommend accurate settings.
  thank you//////

  சரிதான். அதையே கடைப் பிடியுங்கள்!

  ReplyDelete
 25. //////OpenID guest2015 said...
  Sir
  i use jagannatha hora (traditional lahiri ayanamsa -preferences-> default calculation options). is this setting accurate?. if i change the settings to author recommended settings i see the chart varies. pl recommend accurate settings.
  thank you//////

  சரிதான். அதையே கடைப் பிடியுங்கள்!

  ReplyDelete
 26. ///////Blogger siva kumar said...
  வணக்கம் ஐயா
  எந்த வீட்டில் எந்த கிரகம் இருகிரதோ அது அந்த வீட்டின் பலனை கொடுக்குமா அலலது அந்த வீட்டின் அதிபதி கொடுப்பார?
  புதன் நீச்சம் பெற்று 4ம் அதிபதியின் மேல் லக்கனத்திற்கு யோககாரன் பார்த்தால் ஜாதகரின் கல்வி நிலை எவ்வாறு இருக்கும் ஐயா
  கேள்வி தவராக இருந்தால் மன்னிக்கவும் ஐயா/////

  அதிபதிக்குத்தான் முதல் அதிகாரம். வீட்டு ஓனருக்குத்தான் முழு அதிகாரம். குடியிருப்பவருக்கு அல்ல!

  ReplyDelete
 27. ///////Blogger siva kumar said...

 28. ///////Blogger thozhar pandian said...
  பல நாட்களுக்கு பிறகு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். நன்றி. முன்னர் இதை வைத்து எனக்கு சிலர் மின்னஞ்சலில் தங்கள் சொந்த ஜாதகத்தை அனுப்பி சந்தேகங்களை கேட்டிருக்கின்ற‌னர். பணிவாக மறுத்துள்ளேன். என்னை போன்ற கத்துக்குட்டிகளுக்கு ஜாதகம் பார்த்து வருங்காலத்தை கணிக்கும் ஞானம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்க முயலும் போது பல முறை தவறுகள் செய்திருக்கிறேன். அதிர்ஷ்டத்தில் சில சமயம் அது சரியாக வருவதுண்டு. உடைந்த கடிகாரம் கூட நாளுக்கு இரு முறை சரியான நேரத்தை காட்டுவது போல் தான் இதுவும். இருப்பினும், சரியான முறையில் பதிலளித்திருந்தால் அது இறைவனின் ஆசியாலும், ஆசிரியரின் பாடங்களினால் மட்டுமே. தவறாக இருந்தால் அதற்கு நானே முழு காரணம்.//////

  ஆமாம். எனக்கும் ஏராளமான பேர்கள் ஜாதகங்களை அனுப்பிப் பலன்களைக் கேட்கிறார்கள். நான் மறுத்து விடுவேன். எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை!

  ReplyDelete
 29. ///////Blogger thozhar pandian said...

 30. 90% மதிப்பெண்கள் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

  கலாக்சி வகுப்பில் உள் நுழைய முடியாததைப் பற்றி மின் அஞ்சல் அனுப்பியுள்ளேன்.அருள்கூர்ந்து பார்த்து பதில் அனுப்ப வேண்டுகிறேன்.
  kmrk1949@gmail.com

  ReplyDelete
 31. எனக்கே அனுப்பும் போது தங்களுக்கு அனுப்பவில்லை என்றால் தான் ஆச்சரியம் அய்யா:-)

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com