மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

5.3.15

Health: எப்போதும் இளைமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

Health: எப்போதும் இளைமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்

இணையத்தில் படித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

kmr.krishnan said...

'இம்ப்காப்ஸ்' என்ற அரசுசார்பு மருந்து தயாரிப்பாளர்கள் 'திரிபலா' என்ற‌ மாத்திரை தயாரிக்கின்றனர். இதில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிகாய் ஆகியவை உள்ளன.500 மாத்திரை கொண்ட பெட்டி ரூ.250/‍= ஆகும். நம் உடலுக்கு ஏற்றபடி 2,3 மாத்திரைகள் இரவு எடுத்துக் கொள்ளலாம்.நெல்லிக்கயில் நிறைய விட்டமின் கிடைக்கும்.தான்றிக்காயின் பலனை தெரிந்தவர்கள் சொல்லலாம். கடுக்காய் பற்றி ஐயா எழுதியுள்ளது அனைத்தும் சரி. நன்றி ஐயா!

வேப்பிலை said...

இத்துடன் முக்கியாமான
இன்னொரு டிப்ஸ் சொல்கிறேன்

கண் பார்வை கோளாறு
கண்ணில் புரை-காட்ராக்டெட்

பிரச்சனைகளில் இருந்து தப்ப
பிரத்தியேகமான ஒன்று உள்ளது

அது ஜாதிக்காய்..
அந்த ஜாதிக்காயை எடுத்து

உரைகல்லில் இட்டு
உரைத்து/அறைத்து

அந்த விழுதினை
அப்படியே கண்களின் மேல்

இரப்பை பகுதியில் (upper lid)
இட்டு (பத்து போலிடவும்)விடவும்

உறங்கும் முன் இதனை செய்தால்
உபயோகமான கண் பிரச்சனை தீரும்

கணினியில் பணிபுரிபவர்
கண் விழித்து பணிபுரிபவர்களும்

இதனை செய்யலாம்
இது செலவில்லா ஆரோக்கியம்

gayathri devi said...

dear sir,
I am very thankful to you to hear about kadukkai benefits. we will consume it daily as per your advise.

venkatesh r said...

நல்ல பதிவு.

கடுக்காயும் தாயும் கருத்தில் ஒன்றானாலும்
கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ‍‍‍‍‍‍‍‍: கடுக்காய் நோய்
ஓட்டி உடல் தேற்றும், உற்ற அன்னையோ சுவைகள்
ஊட்டி உடல் தேற்றும் உவந்து.

என்ற மருத்துவ பாடல் கடுக்காய் பெற்ற தாயை விடப் பெரியது எனப் புகழ்கிறது.

பகிர்வுக்கு நன்றி.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்

மிக அருமையான விஷயம் ..காலை தோல் நீக்கி இஞ்சி சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிடுதல் .மதியம் சுக்கு சோறு வடித்த கஞ்சியுடன் சேர்த்து குடிக்க ,,இரவு கடுக்காய் இளம் வெந்நீரில் கலந்து குடிக்க
உடம்பு சுருசுருப்பக ,அப்படி இருக்கும்..
நன்றி ...

kmr.krishnan said...

தான்றிக்காய் பற்றி தமிழ் விக்கியில் குறிப்பு உள்ளது.