மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

23.3.15

மாறியது உலகம்; மாற்றியது யாரோ?


வாட்ஸ் அப்பில் விசு அய்யர் அனுப்பியது. நன்றாக இருந்ததால் இங்கே பதிவிட்டுள்ளேன். அனைவரும் படித்துப்  பாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=================================================
எங்கே? எங்கே? எங்கே?

இயற்கை எங்கே?

தென்னை ஓலை விசிறி எங்கே?

பனையோலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

தெல்லு விளையாட்டு எங்கே?

கோபிபிஸ் விளையாட்டு எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே?

ஊனாங்கொடி ரெயில் எங்கே?

கம்பர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல் துலக்க ஆலங்குச்சி  எங்கே?

கரிப்பழம் எங்கே?

கள்ளிப்பழம் எங்கே?

இளுவான் எங்கே?

எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

ரோசம் வளர்த்த கொங்க மாட்டுப்பால் எங்கே?

பனம் பழம் எங்கே?

சூரிப்பழம் எங்கே?

இளுவான் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடை பழக்கிய நடை வண்டி எங்கே ?

அரைஞான் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

கூட்டு வண்டி எங்கே?

ஆழ உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு  எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?

பனை ஓலை குடிசைகள்  எங்கே ?

தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே ?

குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் சிலுப்பி எங்கே ?

கால்கிலோ கடுக்கன்  சுமந்த காதுகள் எங்கே ?

நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள்  எங்கே?

வெத்திலை பாக்கு பரிசங்கள் எங்கே ?

தோளிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டு எங்கே ?

பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே ?

தாய்பாலைத் தரமாய் கொடுத்த தாய்மை எங்கே ?

மங்கலங்கள் தந்த  மஞ்சள் பை எங்கே ?

மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பணப்பையும் எங்கே?

தாவணி அணிந்த இளசுகள் எங்கே ?

சுத்தமான நீரும்  எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும்  எங்கே?

எல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு  ஆயுள் நமக்கு  எங்கே?

இதற்கு பாமரனாலும், மெத்தபடித்தவனாலும், விஞ்ஞானியாலும், ஏன் கணினியாலும் கூட பதில் சொல்ல முடியாது.

ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து  பணம் எனும் காகித்தை தேடி இந்த உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதுசரி அடுத்த தலைமுறையை பற்றி  சிந்திக்க நமக்கு  நேரம் தான் எங்கே? எங்கே?

Sent by Visu Ayyar - Chennai
=========================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5 comments:

வேப்பிலை said...

வகுப்பில் படிக்கும் போது
வருகிறது கூடுதல் மகிழ்ச்சி..

இதையே இன்றைய
இளைய கணினியாளர் சொன்னால்

கணினி இருந்த ஏசி அறை எங்கே?

dataவை சேர்த்து வைக்கும் 5.5 இன்ச்சு பிளாப்பி டிஸ்க்கு எங்கே?

அதன் பிறகு வந்த 3.5 இன்சு பிளாப்பி டிஸ்க்கு எங்கே?

பிளாப்பியை எறிந்து விட்ட சிடிக்கள் எங்கே?

அதையும் எடுத்து சாப்பிட்ட பென் டிரைவ்வுகள் தான் எங்ககே?

தலைவலிக்க சத்தம் போட்ட
டாட் மெட்ரிக்ஸ் பிரிண்டர் எங்கே?

கிளவுட் கம்யூட்டிங்கு அழைத்து செல்லும் இந்த கணினி எனும் பேய் தான் எங்கே எங்கே...?

gayathri devi said...

பணமே கடவுள் என்றாகி விட்டது ஐயா

ohm kaaran said...

எங்கே? ஏனில்லை.இவையெல்லம் நம் நினைவில் மட்டும். வரும் தலைமுறை இதைவிட வருத்தபட பொகிறார்கல் நம்மையும் திட்ட பொராங்க. நாம் தான் எடுத்து செல்ல மரந்துவிட்டொஅம்.[மரக்கடிக்கபட்டிருக்கிரொஅம்]

SELVARAJ said...

எங்களால் தான் Whatsappல் தங்களுக்கு தகவல் அனுப்ப இயலவில்லை. அதற்கு Mobile எண் வேண்டுமே ஸ்வாமி.

kmr.krishnan said...

நன்றாகத்தான் இருக்கின்றது.

'என்ன என்ன என்ன வெண்ணீர் அணிந்தது என்ன.... வேலைப் பிடித்தது என்ன...' மாதிரியில் 'எங்கே எங்கே' என்று போட்டுத் தள்ளிவிட்டார் வேப்பிலை மகராஜ் @ விசுஅய்யர்.

நேரு மறைந்த சமயம் கவியரசர் இதேபோல் 'எங்கே எங்கே' என்று எழுதியது
நினைவில் வந்தது.

'இளுவான்' இருமுறை கூறப்பட்டுள்ளது.அந்தக் கால அசடான‌ எனக்கே அது என்ன என்று புரியவில்லை.இந்தக் கால 'பெர்முடாஸ்'கள் இன்னும் பல சொற்களுக்குப் பொருள் தெரியாமல் திண்டாடுவார்கள்.

இப்போது கிராமத்தில் இருப்பதால் அய்யர் 'எங்கே' என்று கேட்டதில் பலவற்றை 'இங்கே' என்று சுட்டிக் காட்ட முடியும்.

வீட்டின் அருகில் ஓடும் வாய்க்காலில்(ஓடை?) அன்று பைய‌னகள் துண்டை விரித்து மீன் பிடித்தார்கள்.பள்ளியில் இருந்து திரும்பும் சிறார்கள்.ஆடைமுழுவதையும் முற்றாகக் களைந்து புத்த்கப் பையில் வைத்து நனையாமல் மரத்தில் மாட்டிவிட்டு, ஆனந்தமாக திகம்பர சாமியார்கள் போல
தண்ணிரில் குத்தாட்டம் போட்டார்கள். கரையில் நின்று மீன்களை வாங்கி சேகரம் செய்தது அவர்களுடன் பள்ளி செல்லும் சிறுமிகள்.யாருக்கும் எந்த சங்கோஜமும் இல்லை.எல்லாரும் சகஜ பாவத்துடன் யதார்த்தமாக,இயல்பாக‌ இருந்தார்கள். நகர(நரக?)வாசியாக இருந்து பழகிவிட்ட எனக்குத்தான் சங்கோஜமாக இருந்தது