நகைச்சுவை: பெங்களூர் ஸ்பெஷல்!
நீங்கள் பெங்களூர் வாசியா? அல்லது பெங்களூரை சொந்த ஊராகக் கொண்டவரா? அப்படியென்றால் மேலே படிக்க வேண்டாம். பதிவை விட்டு விலகிக் கொள்வது நல்லது. நம் இருவருக்குமே நல்லது!
நகைச்சுவைகளை நகைச்சுவைக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க வேண்டும். இது வேப்பிலை மட்டும் வாழை இலையோடு வருபவர்களுக்காக வலியுறுத்திச் சொல்லப்படுகிறது.
--------------------------------------
1. பெங்களூரில் சும்மானாச்சிக்கும் ஒரு கல்லை எறிந்தீர்கள் என்றால் இரண்டுதான் சான்ஸ்! ஒன்று அது நாய் ஒன்றைத் தாக்கும் அல்லது ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரைத் தாக்கும். நாய்க்குக் கழுத்தில் பட்டை இருக்கும் அல்லது இல்லாமலும் இருக்கும், ஆனால் சாப்ட்வேர் இஞ்சினியருக்குக் கண்டிப்பாகக் கழுத்தில் பட்டை (strap) இருக்கும்
2. இந்தியாவில் வாகனங்களை நாம் இடது (Left) பக்கத்தில்தான் ஓட்டுவோம். ஆனால் பெங்களூரில் we drive on what is left of the road
3. பெங்களூரின் தெரு விபத்துக்களுக்கான முக்கிய காரணம் என்ன? போக்குவரத்து விதிப்படி வண்டி ஓட்டுவதுதான் காரணமாக இருக்கும்
4. பெங்களூரில் ஒரு ஆசாமி வாடகைக்கு வீடு தேடி அலைகின்றார். வயதான வீட்டுக்கார அம்மணியைச் சந்திக்கிறார். அந்த அம்மணி கட்டுப் பாட்டில் நிறைய வாடகை வீடுகள் உள்ளன. இருவருக்கும் நடந்த உரையாடலின் சுருக்கம் கீழே உள்ளது.
”மகனே, எங்கே நீ வேலை பார்க்கிறாய்?”
”இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் அம்மா”
”ஓ அந்த பஸ் கம்பெனியிலா? சாரி, நான் நல்லதொரு ஐ.டி கம்பெனி ஊழியருக்குத்தான் வாடகைக்கு வீட்டைக் கொடுப்பதாக உள்ளேன்.”
It would appear that Infosys operates more buses than BMTC in Bangalore"
பெங்களூரில் தங்கும் விடுதிகள்தான் கொழிக்கும் பிஸினஸ். ஐ.டி நிறுவனங்களுக்கு இரண்டாவது இடம்தான்
Bangalore, where PG(Paying Guest) is the first business and IT, the second.
* When someone says Its raining in Bangalore, be sure to ask them which area,which lane
and which road.
* If a Bangalorean stops at a traffic light, others behind him stop too because The others
conclude that he has spotted a policeman that they themselves have not.
*Bangalore is the only city where distance is measured in units of time.
*Rickhsaw driver, grocery seller and common shop keeper thinks that you earn at least 1 lakh p/month if you are in IT sector.
* Out of every 100 software engineers in Bangalore, 90 are utterly frustrated and
rest have a gf/bf.
* Bus drivers use horns instead of brakes
* I quote : Bangalore: The City where more people know Language C than kannada".
* Universal answer in Bangalore is "Adjust maadi"
சரி பண்ணிக்கிட்டு போப்பா!
சொந்த சரக்கல்ல! வாட்ஸப்பில் வந்தது. முடிந்தவரை சுவைகெடாமல் மொழி மாற்றம் செய்து கொடுத்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
எங்களுக்கு அவ்வனுபவம் இல்லை
ReplyDeleteபெங்களூர் ஸ்பெஷல் சூப்பர் ஐயா
ReplyDeleteஒரு தடவை பெங்களூரு போய் இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று பார்த்து விட்டு வரப்போறேன்.
ReplyDeleteசரியாக சொன்னீர்கள். சாப்ட்வேர் இஞ்சினியர் என்பது மாறி corporate slaves [ strap/Tag] என்றாகிவிட்டது. பெயரளவில் தான் white collar job. இதை சொன்னால் இங்கு வருபவர்கள் நம்மை கடிந்து கொள்ளக்கூடும். மாறி வரும் பணி சூழல் அப்படி மாற்றி விட்டது.
ReplyDeleteஎன்ன செய்ய நேற்று நீங்கள் பகிர்ந்த ஓஷோ வார்த்தை'ஐ ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
"உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய் ஆகவே சுற்றியிருப்பதை, அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்!"
பெங்களுரில இடம் என்ன விலை?
ReplyDeleteஅட்ஜெட் ம்மாடி
ReplyDeleteஅன்புடன்
வேப்பிலை
பங்களூரூ என்று சொல்ல வேண்டுமாம். பேங்ளூர் என்றோ பெங்களூர் என்றோ சொன்னால் தவறாமல் நம்மைத் திருத்துகிறார்கள்.
ReplyDeleteஎன் பங்கிற்கு ஒரு சில பங்களூரூ நகைச்சுவை சொல்கிறேன்.
ஒருமுறை பங்களூருவில் காரில் ஜெயநகருக்கு வழி கேட்டுக் கொண்டே சென்றோம்.யாரைக் கேட்டாலும் 'சீதா ஹோகி' என்றே சொல்லி வந்தனர்.
ஜெயநகர் வந்த பாடில்லை.மீண்டும் ஒருமுறை 'சீதா ஹோகி'என்றவுடன் ஓட்டுனர் கடுப்பாகி 'என்னடா இது, சீதா ராதான்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்க.நாங்க கேக்கறது ஜெயாடா"என்றரே பார்க்கலாம்.(சீதா அல்லது சீத ஹோகி என்றால் 'நேராகப் போகவும்' என்று பொருளாம்)
பெங்களூருவில் ஒரு திருமணத்தில் பரிமாறுபவர்கள் 'சாக்கா, பேக்கா'என்று கேட்டுக் கொண்டே வந்தனர்.கன்னடம் தெரியாத தமிழர் 'சாக்குல கொஞ்சம் பேக்குல கொஞ்சம்' போடுங்க என்றாராம்!!! (வேணுமா ,வேண்டாமா அல்லது போதுமா என்பதே சாக்கா,பேக்கா)
பனசங்கரி என்று ஒரு இடத்திற்குப் பெயர்.அங்கே அதை 'பன்சங்கரி'அல்லது பி எஸ் கே என்பார்கள். பனசங்கரி என்றால் என்ன பொருள் என்று கேட்டேன்.
பணக்கார சங்கரி என்று பொருள் என்று அப்போதுதான் பங்களூருவாசியாகி இருந்த தமிழ்ப்பையன் கூறினான். கன்னடத்தில், நாம் தமிழில் 'வ'என்று சொல்வதை 'ப'என்பார்கள்.வன சங்கரி அதாவது வன துர்காதான் பன்சங்கரி.
அங்கே வனதுர்கை கோவிலும் உண்டு.
Hello Sir,
ReplyDeleteNice Blog.
1. I have sent 3 or 4 emails to join the galaxy classroom. please reply at the earliest.
உண்மை நான் பெங்களுரில் இரண்டு வருடமாக ஐ டி கம்பனியில் பணியாற்றுகிறேன்
ReplyDelete