நகைச்சுவை: பணத்தின் மதிப்பும் உங்கள் மதிப்பும்
எல்லாமுமே நகைச்சுவைதான். நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு கற்பனை, விவகாரம், வாதம் வேண்டாம்!
1.ஆண்களின் கவனத்திற்கு (மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருங்கள்)
ஒரு கணவனும் மனைவியும் லிப்ட்டில் 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் ழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட்டில் ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந் விலகி நிற்கிறாள். இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட்டில் இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கமாகி மெளனமாக இருந்தான். வீட்டிற்கு நடந்தார்கள்.
மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.
கணவன் : இல்லடி, நான் லிப்ட்டில...
மனைவி : அட, அதைதான் விடுங்கன்னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளினேன்.
கணவன் : கிர்ர்ர்...
--------------------------------
2. சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்.
3. வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...
4. கொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம். நிறையப்படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம்.
5. நாய் நம்மளை இழுத்துக்கிட்டுப்போனா அது வாக்கிங், தொரத்திக்கிட்டு வந்தா அது ஜாக்கிங்
6. பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க . உங்களின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க
7. ஆட்டோகாரனுக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட்காரனுக்கு தூரம் கூட பக்கம்தான்,
---------------------------------
8
''மச்சான்... எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்! எதுக்கெடுத்தாலும், 'அதெல்லாம் அந்தக் காலம். அப்படீன்னு சிலர் சொல்லிட்டே இருக்காங்களே...’ அது ஏன்டா?''
''அவங்களோட வாழ்க்கை முறையைப் பற்றி சொல்றாங்கடா?''
''எனக்குப் புரியுற மாதிரி நச்சுன்னு நாலே வரியில சொல்லுடா.''
''வீட்டுக்கு ஒருத்தர் சம்பாதிச்சு டாக்டருக்கு படிக்க வெச்சது அந்தக் காலம். வீட்டுக்கு ரெண்டு பேர் சம்பாதிச்சு எல்.கே.ஜி படிக்க வெக்கிறது இந்தக் காலம். இப்போ புரியுதா?''
''இப்போ புரியுது மச்சான்!'
-----------------------------------------------
9
ஒரு குட்டி கதை!
கடவுள்: கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார். "நீ கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும் பொதி சுமப்பாய். உனக்கு 😰சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத் தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்."
கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: நாயைப் படைத்து அதனிடம் சொன்னார். "நீ 🚶மனிதனின் வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல நண்பனாய் இருப்பாய். மனிதன் தரும்
மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்."
நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: குரங்கைப் படைத்து அதனிடம் சொன்னார். "நீ மரங்களில் கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்."
குரங்கு: எனக்கு 10 வருடங்களே போதும் சாமி.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: மனிதனைப் படைத்தார். "நீ சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன் அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப் பாட்டுக்குள்
கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்."
மனிதன்: "சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு. கழுதை வேண்டாமென்று சொன்ன 30 வருடங்களையும், நாயின் 15 வருடங்களையும், குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்."
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள் மனிதனாகவும், பின் திருமணம் செய்து 30 ஆண்டுகள் கழுதையைப் போல குடும்பப் பாரம் சுமந்தும், குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள் நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும், கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப் போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான்...!!!
======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
2 முதல் 7 வரை உள்ளவை நகைச்சுவை அல்ல. அவை வாழ்க்கை அனுபவங்கள்.எல்லாமே அருமை.நன்றி ஐயா!
ReplyDeleteஎன்னுடைய கலாக்ஸி வகுப்பு பிரச்சனையை தீர்த்துவையுங்கள் ஐயா!இன்றும் மின் அஞ்சல் அனுப்புகிறேன்.
ஐயா, லிப்ட் ஜோக்கும்,குட்டி கதையும் அருமை.
ReplyDeleteYes Sir!.
ReplyDelete1. நகைச்சுவையிலாவது பெண்கள் (இடுப்பை காட்ட) புடவை கட்டுகிறார்களே... சந்தோஷம் தான்
ReplyDelete9. இது இந்த காலத்திற்கு பொருந்தாது. இந்த காலத்திற்கு ஏற்றார் போல் சொல்ல வேண்டுமானால்
முதல் 20 வருடங்கள்
பள்ளி புத்தகம் சுமக்கும் கழுதையாக
அடுத்த 30 ஆண்டுகள் வீட்டுக்கடனுக்கும் கிரிடிட் கார்டுக்கும் மாறி மாறி தாவும் குரங்கு போல
அடுத்த 15 ஆண்டுகள் பிள்ளைகள் வீட்டில் நாயைப் போல
அடுத்த 10 வருடங்கள் முதியோர் இல்லங்களை மாற்றிக் கொண்டு குரங்கைப் போல (பேரக் குழந்தைகளை வெளிநாட்டிற்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு மகிழ்வது போல நடிக்கிறான்(ள்))
Respected Sir,
ReplyDeleteHappy morning... Very interesting. Thanks for sharing....
With kind regards,
Ravichandran M.
வணக்கம் ஐயா
ReplyDeleteஇது நகைச்சுவை அல்ல மனித வாழ்க்கையின் ரகசியம்
இதை வாத்தியார் ஐயா அவர்கள் கூரிவிட்டார்
மிக்க நன்றி ஐயா
மிகவும் அருமை ஐயா
ReplyDelete