மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

26.3.15

நகைச்சுவை: ஜல்லிக்கட்டிற்கும் கல்யாணத்திற்கும் என்ன வித்தியாசம்?


நகைச்சுவை: ஜல்லிக்கட்டிற்கும் கல்யாணத்திற்கும் என்ன வித்தியாசம்?

கொஞ்சம் சிரிங்க பாஸ்...துரத்தும் நகைச்சுவை. நேற்றையப் பதிவைப்
பலரும் படித்ததால், நகைச்சுவையை இன்றும் தொடர்ந்து
பதிவிட்டுள்ளேன். இன்றும் படித்து மகிழுங்கள்.

பலரும் படித்தது எப்படித் தெரியும்? கூகிள் பளாக்கர் வந்தவர்களின் எண்ணிக்கையைச் சொல்லும் ராசா!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------
1
"நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?"

"ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்."

#####
2
நோயாளி : டாக்டர் நீங்க ஒரு காரியம்….. செய்யணும்

டாக்டர் : நான் ஆபரேசன் மட்டும்தான் பண்ணுவேன்….. காரியம் எல்லாம்
ஐயர் தான் செய்வார்.

#####
3
நீதிபதி: ஒரே வீட்டை ஏன் பதினைந்து முறை கொள்ளை அடிச்சே?

திருடன்: ஐயா நான் அவங்க பாமிலி திருடன், எப்புவுமே விசுவாசமா இருப்பேன்.

#####
4

1:- “ காதலிக்கும் மனைவிக்கும் என்னங்க வித்தியாசம்?”

கவிஞர்:- “ காதலி கரும்பைப்போன்றவள்
மனைவி இரும்பைப்போன்றவள்”

1: - ???

#####
5
ஆவி1 :விஷம் குடிச்சி சாக போனேன்..விஷத்துல கலப்படம் பிழைச்சிக்கிட்டேன்..

ஆவி2 :அப்புறம் எப்படி செத்த?

ஆவி1 :காப்பாத்த மருந்து கொடுத்தாங்க..மருந்துல கலப்படம் செத்துட்டேன்..

####
6
டீச்சர்: நாம் பேசும் மொழியை ஏன் தாய் மொழி என்று சொல்கிறோம் ?

மாணவி : எப்போதும் அம்மாக்கள் பேசுவதாலேயும், அந்த வாய்ப்பு அப்பாக்களுக்கு குறைவாக கிடைப்பாதலேயும், நாம் பேசும் மொழி தாய் மொழி என்று அறியப்படுகிறது.

#####
7
டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

நோயாளி -"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

#####
8
பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?

அம்மா-விமலாடா..

பையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய "டார்லிங்"னு கூப்பிடுறார்.

‪#‎செத்தான்டா_சேகரு‬

#####
9
''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட
இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''

''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன் ,வாங்கிகிறீங்களா ?

#####
10
வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?

மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க எங்களை
அடிக்கிறதால அடி முட்டாள் சார்

####
11
நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல,
யாருக்கு பின்னாடி நீ நின்ன?"

"போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.
===============================================================
12
பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!”

அப்பா ஒருகணம் யோசித்தார். “மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…”
என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.

“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார். மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார். “சார்..
நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… இதுதான் கோபமா…?’. “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ…
 ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது. “சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க
நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா…
இதுதான் கோபமா…?’. “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…”
என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார். “ஹலோ…
ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.
“ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை
தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச்
சரியாப் பாத்து போன் பண்ணுங்க…” போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.

“மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது. “டேய்… அறிவு கெட்டவனே… மடப்பயலே ... நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…
இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? முண்டம்....அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம்... மவன...
நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன்.... பாத்துக்க… வைடா போனை…!”

மகன் அப்பாவிடம் சொன்னான். “அப்பா… கோபம்னா என்னனு
புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?”

“இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்... ... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.

“ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது
போன் வந்துச்சா…!”😜
============================================
உபரி: 
ஜல்லிக்கட்டும் கல்யாணமும் ஒன்று. வளர்த்தவன் எஸ்கேப்பாகி
விடுவான். அடக்க வந்தவன் மாட்டிக் கொண்டுவிடுவான். உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
==============================================
எது நன்றாக உள்ளது? அதைச் சொல்லிவிட்டுப் போங்கள்!
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25 comments:

kmr.krishnan said...

No.2 is the best,Sir.

Thank you!

ohm kaaran said...

இறுதி'ல் கொடுக்கப்பட்ட நகைச்சுவை துணுக்கு மிக மிக அருமை :)

S.Namasu said...

அனைத்தும் அருமை சார்...

lrk said...

ஐயா வணக்கம் .

///ஹலோ… ராமசாமி இருக்காரா…? ////

சூப்பர் ஐயா .
வாய்விட்டுச் சிரித்துவிட்டேன் .
நன்றி
கண்ணன் .

gayathri devi said...

கோபத்திற்கும் கொலைவெறீக்கும் practicaல் ஆக அப்பா மகனுக்கு

சொல்லி கொடுத்த ஜோக் அருமை ஐயா

MAHALINGAM said...

வணக்கம், மிக நன்றாக இருந்தது கொபதிரிக்கும் கொலைவெறரிகும் உள்ள வித்தியாசம். மிக அர்புதம். வாய் விட்டு சிரிதென். நன்றி

நன்மனம் said...

""
ஐயா வணக்கம் .

///ஹலோ… ராமசாமி இருக்காரா…? ////

சூப்பர் ஐயா .
வாய்விட்டுச் சிரித்துவிட்டேன் .
""
Repeat
Sridhar

வேப்பிலை said...

யார் அந்த ராமசாமி...?

Indian said...

Sir,
1,2,4,5,6 and 8 are superb.. totaly
it is absolutely fantastic.

SELVARAJ said...

ராமசாமி தான் சாமி

Karthick M said...

Kobam and kolai veri arumail

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
No.2 is the best,Sir.
Thank you!//////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger ohm kaaran said...
இறுதி'ல் கொடுக்கப்பட்ட நகைச்சுவை துணுக்கு மிக மிக அருமை :)/////

நல்லது. நன்றி கண்ணன்!

Subbiah Veerappan said...

/////Blogger S.Namasu said...
அனைத்தும் அருமை சார்...//////

நல்லது. நன்றி நண்பரே! உங்களின் முழுப்பெயர் என்ன சாமி?

Subbiah Veerappan said...

////Blogger lrk said...
ஐயா வணக்கம் .
///ஹலோ… ராமசாமி இருக்காரா…? ////
சூப்பர் ஐயா .
வாய்விட்டுச் சிரித்துவிட்டேன் .
நன்றி
கண்ணன் ./////

நல்லது. ஒன்றாவது வாய்விட்டுச் சிரிக்கும்படி இருந்ததே!

Subbiah Veerappan said...

//////Blogger gayathri devi said...
கோபத்திற்கும் கொலைவெறிக்கும் practicaல் ஆக அப்பா மகனுக்கு
சொல்லி கொடுத்த ஜோக் அருமை ஐயா/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

//////Blogger MAHALINGAM said...
வணக்கம், மிக நன்றாக இருந்தது கோபத்திற்கும் கொலைவெறிக்கும் உள்ள வித்தியாசம். மிக அற்புதம். வாய் விட்டு சிரித்தேன். நன்றி/////

நல்லது. நன்றி மகாலிங்கம்!

Subbiah Veerappan said...

//////Blogger நன்மனம் said...""
ஐயா வணக்கம் .
///ஹலோ… ராமசாமி இருக்காரா…? ////
சூப்பர் ஐயா .
வாய்விட்டுச் சிரித்துவிட்டேன் .
""
Repeat
Sridhar///////

நல்லது. நன்றி நன்மனத்தாரே!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
யார் அந்த ராமசாமி...?/////

யார் இந்த வேப்பிலை?

Subbiah Veerappan said...

//////Blogger Indian said...
Sir,
1,2,4,5,6 and 8 are superb.. totaly
it is absolutely fantastic.//////

உங்களின் ரசனை உணர்வு வாழ்க! நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger SELVARAJ said...
ராமசாமி தான் சாமி///////

ஆமாம் சாமி!

Subbiah Veerappan said...

/////Blogger Karthick M said...
Kobam and kolai veri arumai//////

நல்லது. நன்றி கார்த்திக்

B. Lakshmi Narayanan, Tuticorin said...

கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…?

மிக அருமை... வயிறு வலிக்க சிரித்தேன்... நன்றி வாத்தியாரே

அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

Pal said...

வணக்கம், மிக நன்றாக இருந்தது.கோபத்திற்கும் கொலைவெறீக்கும் உள்ள வித்தியாசம் மிக அருமை சார்

pa.jothi said...

ஐயா, எல்லா ஜோக்குகளும் அருமை