மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

30.9.11

வெள்ளைக் காகத்தின் வேலை என்ன?

----------------------------------------------------------------------------------------
வெள்ளைக் காகத்தின் வேலை என்ன?

பக்தி மலர்

அந்தக் கூட்டம் ஜோனாதனின் பெற்றோர்களுக்கு மிகுந்த க‌வலை அளிப்பதாக இருந்தது.ஆம்! தன் மகனை குழுவிலிருந்து விலக்கப் போகிறார்கள் என்றால் எந்தத் தாய் தந்தைக்குத்தான் கவலை தோன்றாது?

இத்தனைக்கும் ஜோனாதனின் நடவடிக்கைகளைப் பற்றிப் புகார் வந்த போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் அவனுடன் பலமுறை  பேசித்தான் பார்த்தார்கள் அவனுடைய பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை.

ஜோனாதன் செய்த தவறுதான் என்ன?

அந்தக் குழுவில் உள்ள பலரும் சொன்ன புகார்களைப் பட்டியலிட்டுப் பார்க்காலாம்.

ஜோனாதான் உணவு எடுப்பதில் அக்கறை காட்டாமல் பறப்பதில் அதிகக் கவனம் செலுத்துகிறானாம்.

"நம்முடைய ஜாதிப் பறவைகள் பறப்பதைவிட அதிக உயரம் இவன் பறக்க முயற்சி செய்கிறான்"

"இவன் செய்யும் சாகசச் செயல்களால் மற்ற இளைஞர்களான பறவைகளும் இவனைப்போலவே செய்ய ஆவல் கொள்கின்றன”

"பக்கவாட்டில் பறந்து பார்கிறான்.நல்ல உயரத்திற்குப் போய் விட்டு அங்கிருந்து இறக்கைகளை மடக்கிக்கொண்டு விழுந்து பார்க்கிறான்”

"'டைவ்' அடிக்க பார்க்கிறான்”

"பறப்பதில் இதுவரை நாம் செய்யாதவற்றையெல்லாம் இவன் செய்கிறான்”

"நம்முடைய வேலையான மீன் பிடித்து உண்பதை இவன் பெரும்பாலும் புறக்கணிக்கிறான்."

புகார்கள் முடிவில்லாமல் கூறப்பட்டன.

ஜோனாதன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

இந்த இடத்தில் நான் முக்கியமான ஒன்றை உங்க‌ளுக்குச் சொல்லி விட வேண்டும்.

ஜோனாதன் மனிதன் அல்ல. அவனுடைய முழுப்பெயர் "ஜோனாதன் லிவிங்ஸ்டன் சீகல்" ஜோ ஒரு கடற்பறவை.கடற்காக்கை என்று சொல்லலாம்.

கடற் காக்கைகளை நமது வேதாரண்யம் போன்ற கடற்கரைகளில் காணலாம்.

அவைகள் வெள்ளை நிறத்தில் ந‌ம் கறுப்புக் காக்கைகளைப் போலவே 'காகா'என்றே கறையும்.

'சீ கல்' பெரிய இறக்கைகள் பெற்று இருந்தாலும், கடல் அலைகள் எழும்பும் உயரத்தை தாண்டிப் பறக்க மாட்டா.

நம் ஹீரோ ஜோ அந்த இனப் பறவைகளில் சற்றே வித்தியாசமான பிறவி.

"ஜோ! நான் சொல்வதைக்கேள். நாம் பறப்பதற்காகப் பிறக்கவில்லை. மீன் பிடித்து உண்ணவே பிறந்துள்ளோம்." இது தலைவர் சீ கல் கூறியது.

"பணிவுடன் உங்க‌ளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் தலைவர் பெரியவரே! உங்க‌ளுடைய கருத்து மிகவும் பழமையான கருத்து. நாம் மீன் பிடித்து உண்பதே பறப்பதற்காகத்தான். நமக்கு இயற்கை அளித்துள்ள கொடை பறப்பதற்கான இறக்கைகள்.அவற்றை நாம் செவ்வனே பயன்படுத்தி மேலும் சிறப்பாகப் பறக்க வேண்டும் என்பதே என் கொள்கை." என்றான் ஜோனாதன்!

"அப்படியானால் நம் குழுவின் கட்டுப்பாட்டை மீறி செயல் பட்டுக் கொண்டே தான் இருப்பாயா?"

"நான் தேடிச் சோறு தினம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, கூடிக் கிழப்பருவம் எய்தி,பின் கூற்றுக்கு இரையாகிப் போகும் வேடிக்கையான பிறவி அல்ல.எனக்குப் பறக்க சுதந்திரம் உள்ளது. எனவே மேலும் முயன்று பறப்பேன். பறப்பதில் உச்ச நிலையை அடைவேன்"

"இந்தக் கலகக்காரனை, நம் இனத் துரோகியை அடித்து விரட்டுங்கள்."

கட்டளையிட்டார் தலைவர். கட்டளை நிறைவேற்றப்பட்டது.

ஜோவின் தாய் கதறி அழுதாள். "மகனே இப்போதே சரியாக உணவு எடுக்காமல் எலும்பும் தோலுமாக உள்ளாய்.வேண்டாமடா இந்த ஆராய்ச்சியெல்லாம். பெரியவர்கள் சொல்லைக் கேளடா."

ஜோ மனம் மாறவில்லை. தன் இலட்சியமே பெரிதென சொந்த பந்தங்களை யெல்லாம் விட்டுப் பிரிந்து, பறந்து சென்றான்.

தனிமையில் தன் பறக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள மேலும் மேலும் முயற்சியில் ஈடுபட்டான்.

பருந்தும் ,வல்லூறும், கருடனும் பறக்கும் உயரத்தை எட்ட முடியுமா என்று எண்ணினான். 'உயர உயரப் பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா?' என்று தன் இனத்தார் கேட்டது காதில் ஒலித்தது.'ஏன் குருவி பருந்தாகக் கூடாது?' என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

'வேகமாகப்பறக்கும் பறவைகள் எப்படி இற‌க்கைகளைப் பயன்படுத்துகின்றன, பறந்து கொண்டே பூவில் தன் உடலை நிலை நிறுத்தி தேன் உறுஞ்சும் சிட்டு எப்படி தன் சிறகுகளை படபடக்கிறது, ஒரிரு அசைவுகளைமட்டும் செய்து விட்டு கருடன் எப்படி நீண்டநேரம் காற்றில் வழுக்கிச்செல்கிறது' என்றெலாம் ஆய்வு செய்தான். எல்லாவற்றையும் தானும் செய்து பார்த்து பறப்பதில் ஒரு நிபுணன் ஆனான் நம் கதாநாயகன் ஜோ!

அந்தசமயத்தில் ஒளி பொருந்திய பொன்மய வண்ணத்தில் இர‌ண்டு பறவைகள் வானில் இருந்து ஜோவிடம் வந்தன.

"ஜோனாதன் லிவிங்ஸ்டன்! உன்னுடைய சாதனைகளைக் கண்டு மெச்சினோம். மேலும் உனக்குக் கற்பிக்கவே நாங்கள் வந்துள்ளோம்." என்றனர்.

ஜோ அந்த அதிசயப் பறவைகளின் தோற்றத்தைக் கண்டு வியந்தான்.

ஜோ: "நீங்கள் என்ன சொக்க வாசிகளா? சொர்க்கம் என்று ஒன்று உள்ளதா?"

புதிய பறவைகள்:"சொர்க்கம் என்பது ஒரு பூமியோ,இடமோ அல்ல. நீ இப்போது அடைய இருக்கும் , முயற்சி செய்து கொண்டிருக்கும் பணியில் நிறைவு எய்திவிட்டால் அதுவே சொர்க்கம்."

அந்த அதிசயப் பற‌வைகள் ஜோவிற்கு பல பறக்கும் வித்தைகளைக் கற்பித்த‌ன.

ஜோவும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டான். இனி பறக்கும் வித்தையில் ஜோவுக்குத் தெரிய வேண்டியது ஒன்றும் இல்லை என்ற நிலை வந்த போது அந்த அற்புதப் பறவைகள் காற்றில் கரைந்தது போலக் காணாமல் போயின.

பாடம் சொல்லிக்கொடுக்கும் போது, 'அன்பு' என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கப் பணித்து இருந்தனர் அந்த அதிசயப் பறவைகள். ஜோவுக்கு அன்பு என்ற மந்திரம் மனதில் ஆழப்பதிந்துபோய், தன் இனத்தாரின் மீது அனபு பெருகியது. தன் மக்கள் வாழும் பகுதிக்குசென்றான். தனக்கு ஒரு சீடன் கிடைப்பான என்று காத்து இருந்தான்.

ஒருநாள் அப்படிஓர் இளைஞன் கிடைத்தான். தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அந்த சீடனுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு
ஜோனாதன் மேல் நோக்கிப் பறக்கத் துவங்கினான். மேலும் மேலே, மேலே மேலே, மேலே...... விண்ணை எட்டும் வரை பறந்து மறைந்தான்.

Qoutes:
========
I want to fly where no seagull has flown before. I want to know what there is to know about life!
--------
Father, Mother: Son, this may not be the best life, but it's all we know. Jonathan: There's got to be more to life than fighting for fish heads!
------------------------------------------------------------------------
[the Elder banishes Jonathan from the flock]
The Elder: You are henceforth and forever outcast!
----------------------------------------------------------------
Jonathan: Listen, everybody! There's no limit to how high we can fly! We can dive for fish and never have to live on garbage again!
------------------------------------------------------------------------
Chang: Heaven isn't a place; heaven is perfection.
-------
Chang: Perfect speed isn't moving fast at all; perfect speed is being there.
-----------
Chang: To fly as fast as thought to anywhere that is now - you begin by knowing that you have already arrived...
----
Chang: I am a perfect expression of freedom, here and now.
----------
Jonathan: You have the freedom to be yourself, your true self, here and now - and nothing can stand in your way!
---------
Jonathan: I only wish to share what I've learned - the very simple fact that it is right for a gull to fly!
------------
Jonathan: The only true law is that which sets us free.
========================================================================
இது RICHARD BACH என்பவர் எழுதிய Jonathan Livingstone Seagull (1970களில் வெளிவந்து பிரபலமான)தத்துவ நாவலைத் தழுவி எழுதியது.

கூகுள் ஆண்டவரைக்கேட்டால் முழுநாவலும் படிக்கக் கிடைக்கும். இந்திய, இந்து, பெளத்த மதக் கொள்கைகள் மேற்கே பரவியதன் தாக்கமாக
இந்த நாவல் வெளி வந்துள்ளது.

ஜீவாத்ம பரமாத்ம தத்துவத்தை விளக்க நம் வேத உபநிடதங்களில் மரத்தின் மேல்  உணவெடுக்காமல் மேல் நோக்கியே அமர்ந்திருக்கும் பறவையும், கீழ்க்கிளைகளில் உணவைக் கொத்திக் கொன்டு இருக்கும் பறவையும் பேசப்பட்டுள்ளன.கீழ்க்கிளையில் உணவெடுக்கும் பறவை சலித்துப் போய் மேற்கிளையில் உள்ள பறவையிடம் மெள்ள மெள்ள சென்று அடையுமாம்.

வாழ்க வளமுடன்!
ஆக்கம்:
வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான
கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

============================================================
வாழ்க வளமுடன்!

38 comments:

kmr.krishnan said...

என் ஆக்கத்தை வெளியிட்டமைக்கு மீண்டும் ந‌ன்றி ஐயா!

நேற்று திருக்கடையூரில் நடந்த ஒரு நகரத்தார் மணிவிழாவில் ஆச்சிக்குக் கழுத்துறு அணிவிக்கப்பட்டு வலம் வந்தார்கள்.தங்கள் பகிர்வால் கழுத்துறு பற்றி ஏற்கனவே அறிந்து இருந்த நான் அக்காட்சியை நேரில் கண்டு வியந்தேன்

தமிழ் விரும்பி said...

மிகவும் அற்புதமான கதை...
இந்த "ஜோ" - வை அப்படியே நமது மகாகவியாக கற்பனை செய்து / கற்பனை அல்ல அவனையே எழுதியதாக நான் உணர்கிறேன்....அதிலே சிறிய மாற்றம் மட்டுமே கொள்ளவேண்டும்.. அவன் தன் இனத்திடம் (மனிதரிடத்தில்) மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த இயற்கையையும் அன்பால் தழுவினான்.

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று திலகர் /விவேகானந்தர் / பாரதி கூறியதும்.. ஒட்டு மொத்த உயிரினமும் அந்த ஆன்ம சுதந்திரத்திற்க்காகத் தான் போராடுகிறது அது தான் மனித லட்சியம் என்பதும், என்பர்...

இந்த இருபது வரிக்குள்ளே செயல் முறை வேதாந்தத்தின் சுருக்கம் நிறைந்துக் கிடக்கிறது.... இதுவே உபநிஷதம் கூறிய உயரிய லட்சியம்... இந்த புவியில் பிறந்து அந்தப் பேரொளியில் கலந்த நம் மூதாதையர்கள் எல்லோரும் சென்ற மகத்தான வழி...

அருமை... திருவாளர் கே.எம்.ஆர்.கே அவர்களின் ஆக்கத்தில் மிக உயர்ந்தது இதுவே.... அருமை... அற்புதம்... சூப்பர்ப்.....
அன்புடன்,
ஆலாசியம் கோ.

kannan said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

மனதார கூறுகின்றேன் வாத்தியார் ஐயா!

85 வயதிலையும் பெற்ற மக்கள், கொள்கை, பணம், புகழ், என்று வாழ்வில் எல்லாம் கிடைத்த மனிதனும் இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என்று அங்கும் , இங்கும் ஒய்வு இல்லாமல் அலையும் கடல் அலைபோல அலைகின்றது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், கடந்த இரண்டு வருடமாக தங்களுடைய மாணவனாக சேர்த்த பின்னர் என்னுடைய அறிவிற்கு தெரிந்ததை கூறுகின்றேன் ஐயா! தாங்கள் இந்த வயதிலையும் எல்லாத்தையும் வேண்டாம் என்று ஒதிக்கி கொண்டு தங்களுக்கு தெரிந்ததை மற்றும் தெரிகின்றதை மற்றவருக்கு தெரிவிக்கின்ற தங்களுடைய குணத்திற்கு எல்லாம் வல்ல எம்பெருமான்

" திருசெந்தூர் பாலசுப்பிரமணியர் "'

தான் தங்களுடைய தொண்டு மென்மேலும் சிறக்க அருள்புரிய வேண்டும் ஐயா!.

--

kannan said...

ஐயா!

அற்ப சுகம் எங்கும் கிடைக்கும் என்று "கழுகு " கூட தனக்கு உணவு எங்கு கிடைக்கும் என்று தான் அமைதி இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றது ஆனால், அற்ப புத்தி படைத்த மனித இனம் கையில் தூக்கி வைத்து கொண்டு விளையாட வேண்டிய மழலையிடம் கூட அற்ப சுகம் தேடுகின்ற கலியுகத்தில் நிலையான இன்பம் அல்லது சுகம் அல்லது புண்ணியம் அல்லது நல்ல வாழ்க்கை முறை எது என்பதினை கூறிய ஐயாவிற்கு சிரசு தாழ்ந்த கும்பிடு ஐயா!.

iyer said...

///ஜீவாத்ம பரமாத்ம தத்துவத்தை விளக்க நம் வேத உபநிடதங்களில்///
///கீழ்க்கிளையில் உணவெடுக்கும் பறவை சலித்துப் போய் மேற்கிளையில் உள்ள பறவையிடம் மெள்ள மெள்ள சென்று அடையுமாம்.///

அய்யரின் கருத்து..
அன்று போலவே மாறுபடுவதால்

பதில் எதுவும் பின்ஊட்டமாக தராமல்
பாடலாசிரியரின் வரிகளை சிந்திக்க

வகுப்பில் தருகிறோம்
வழக்கம் போல் அய்யர் பாணியில்...தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன

வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன ?

வெறும் கோவில்
இதில் என்ன அபிஷேகம்

உன் மனம் எங்கும்
தெரு கூத்து பகல் வேஷம்

கள்ளிக்கென்ன முள்ளில் வேலி
போடி தங்கச்சி

காற்றுக்கேது தோட்டக்காரன்
இதுதான் என் கட்சி

"தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்"
அது தெரியாமல் போனாலேவேதாந்தம்

மண்ணைத் தோண்டி
தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி

என்னைத் தோண்டி
ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

iyer said...

///ஜீவாத்ம பரமாத்ம தத்துவத்தை விளக்க நம் வேத உபநிடதங்களில்///
///கீழ்க்கிளையில் உணவெடுக்கும் பறவை சலித்துப் போய் மேற்கிளையில் உள்ள பறவையிடம் மெள்ள மெள்ள சென்று அடையுமாம்.///

அய்யரின் கருத்து..
அன்று போலவே மாறுபடுவதால்

பதில் எதுவும் பின்ஊட்டமாக தராமல்
பாடலாசிரியரின் வரிகளை சிந்திக்க

வகுப்பில் தருகிறோம்
வழக்கம் போல் அய்யர் பாணியில்...தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன

வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன ?

வெறும் கோவில்
இதில் என்ன அபிஷேகம்

உன் மனம் எங்கும்
தெரு கூத்து பகல் வேஷம்

கள்ளிக்கென்ன முள்ளில் வேலி
போடி தங்கச்சி

காற்றுக்கேது தோட்டக்காரன்
இதுதான் என் கட்சி

"தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்"
அது தெரியாமல் போனாலேவேதாந்தம்

மண்ணைத் தோண்டி
தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி

என்னைத் தோண்டி
ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

RAMADU Family said...

Superb, A very good motivator.

Thanks for the post Mr.Krishnan

Ramadu.

Ravichandran said...

Ayya,

Good motivating story..Thanks for that..

Sincere Student,
Ravi

kmr.krishnan said...

///அய்யரின் கருத்து..
அன்று போலவே மாறுபடுவதால்
பதில் எதுவும் பின்ஊட்டமாக தராமல்///


உங்க‌ளுடைய‌ க‌ருத்து மாறுப‌டுகிறது என்றால் அத‌னைக் கூறினாலே எல்லோரும் அறிந்து கொள்ள‌ ஏதுவாகும்.க‌ருத்து மோதல்களைத் தவிர்த்து , கருத்துப் பரிமாற்றமாகச் செய்து கொள்ளலாம்.‌


முன்ன‌ர் ஒருமுறை பார‌தியைப் ப‌ற்றி ஏதோ சொன்னீர்க‌ள், அத்ற்கு த‌ஞ்சாவூரா‌ன் கேட்ட‌ கேள்விக‌ளுக்குப் பதில் அளிக்க‌வில்லை.மீண்டும் விவேகானந்தரைப் பெரியாருடன் ஒப்பிட்டீர்கள். விளக்கம் கேட்டதற்கும் தக்க பதில் அளிக்கவில்லை.

முத‌ல் முத‌லாகப் ப‌திவிட்ட‌ ஜான‌கிராம‌னை தங்களுடைய மேட்டிமைத்தனத்தால் அழ வைத்தீர்கள். இன்று அவர் பதிவுலகை விட்டே வெளியேறிவிட்டார்.

தெளிவுற மொழிதல் என்பதே மொழிக்கான இலக்கணம்.மொழியைப் பிறருக்குப் புரியாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான்.

ப‌ல‌முறை நானும் ஐயாவும் உங்க‌ளை இந்த‌ புதுக்க‌விதை பாணியைத் த‌விர்க்க‌ச்சொல்லியும்,புரியும் ப‌டி எழுத‌ வேண்டியும் வ‌ந்துள்ளோம்.
எல்லாம் செவிட‌ன் காதில் ஊதிய‌ ச‌ங்குதான்.

என் ப‌திவில் உங்க‌ளுக்கு விம‌ர்சிக்க‌வோ பாராட்ட‌வோ எதுவும் இல்லையெனில் தா‌ங்க‌ள் வெள்ளி, ஞாயிறு இர‌ண்டு நாட்களும் ஓய்வு எடுத்துக் கொள்ள‌ வேண்டுகிறேன்.

ஐயாவின் அனும‌தியின் பேரிலேயே தொட‌ர்ந்து எழுதுகிறேன். ஐயா என்று என்னுடைய‌ ஆக்க‌ங்களை வெளியிடுவ‌தை நிறுத்துகிறாரோ அதுவ‌ரை வ‌குப்ப‌றைக்கு க‌ட்டுரைக‌ளை அனுப்பிக் கொண்டு இருப்பேன்.

"தேரான் தெளிவும் தெளிந்தான் க‌ண் ஐயுர‌வும்
தீரா இடும்பை த‌ரும்"

Uma said...

சுவாரசியமான ஆக்கம்

kmr.krishnan said...

///இஸ்லாமியருக்கு கேட்குமோ
இந்த நாகஸ்வர ஓசை..

பதினான்காவது அத்தியாயத்தில்
படிக்க வேண்டிய 35வது வசனம்

இப்ராஹிமலைகுசாலுத்து சலாம் தரும்
இந்த துவாவை கேளுங்கள் ..

"ரஜனுபினி வபனுபியன்னாபதுல் அஸ்லாம்"

இந்த வகுப்பில் இதனை பதிவு செய்து இஸ்லாம் சொல்லும் தியானத்தை

உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்..
உண்மையிலேயே விளக்கம் வேண்டின்

எழுதுங்கள்..இங்கு
எழுத தொடங்கவில்லை///

த‌னி ஆவ‌ர்த‌ன‌ம்தான் செய்வேன்,பொதுவில் எதுவும் செய்ய‌ மாட்டேன் என்ற‌ உங்க‌ள் நிலையில் மாற்ற‌ம் தேவை.

'மேலும் வ‌குப்ப‌றையின் போக்கு ச‌ரியில்லை' என்றும் கூட‌ சொல்லியுள்ளீர்க‌ள்.

அவ்வாறாயின் அத‌னைப் ப‌க்குவ‌மாக‌ எடுத்துச் சொல்லி ச‌ரியான‌ பாதையைக் காட்ட‌லாமே!


உங்க‌ள் பூட‌க‌மான‌ சொற்க‌ளால் உங்க‌ளைப்ப‌ற்றிய‌ "ஏதோ மெத்த‌ப்ப‌டித்த‌ மேதாவி இவ‌ர்;சாதார‌ண‌ர்க‌ளை க‌ண்டுகொள்ள‌ மாட்டார்" என்று 'இமேஜ் பில்டப்' கொடுத்து வ‌ருகிறீர்க‌ள்.

ந‌ம் வேத‌ங்க‌ளும் உப‌நிட‌த‌ங்க‌ளும், கீதையும் ப‌ல‌ வ்கையில் விள‌க்க‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌யே.பெரும்பாலும் ஐரோபிய‌ க‌ன‌வான்க‌ள் சொல்லிய‌வைக‌ளையே "ஐய‌ர்க‌ள்" ஆங்கில‌த்தில் ப‌டித்துவிட்டு தானும் குழ‌ம்பி ம‌ற்ற‌வ‌ர்க‌ளையும் குழ‌ப்பி வ‌ருகிறார்க‌ள்.

minorwall said...

இந்த ஆக்கத்தில் காணப்பட்ட 'ஜோ' வின் தன்முனைப்பும் தன முயற்சியில் சற்றும்மனம் தளராத தொடந்த ஊக்கமும் எனக்குப் பிடித்த விஷயங்கள்..வாழ்வில் சாதிக்க/அல்லது நினைத்த நிலையை அடைய இது முன்னுதாரணமான விஷயம்..
"நான் தேடிச் சோறு தினம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, கூடிக் கிழப்பருவம் எய்தி,பின் கூற்றுக்கு இரையாகிப் போகும் வேடிக்கையான பிறவி போல் வீழ்வேனென்று நினைத்தாயோ?" என்ற வரிகள் மகாநதி திரைப்படத்தில் கமலஹாசன் பயன்படுத்திய எனக்கு மிகவும் பிடித்த
பாரதியின் வரிகளின் முழுப் பாடலையும் ஒருமுறை தஞ்சைப் பெரியவரிடம் கேட்டுப் பெற்றேன்..
இந்த வரிகளை உத்வேகத்தைப் பற்றி எழுதும்போது கையாண்டிருப்பது சிறப்பு..
'ஜோ' வின் இந்த முயற்சியை கடைசிப் பாராவில் சொல்லப்பட்ட விஷயத்துடன் இணைத்துச் சொல்ல முயன்றிருக்கும் செய்திதான் எனக்கு சரியாக விளங்கவில்லை..
ஒருவேளை உணவுக்காக கீழ்கிளைகளில் தொங்கும் பறவைகளுக்குப் புரியாதோ?

thanusu said...

"சுவர்க்கம் என்பது ஒரு பூமியோ இடமோ அல்ல,நீ இப்போது அடைய இருக்கும், முயற்சி செய்து கொண்டு இருக்கும் பணியில் நிறைவு செய்து விட்டால் அதுவே சுவர்க்கம் "

அருமையன் வரிகள் superp .

குருகிய கால மனித வாழ்கையில், தான் வாழ்ந்த வாழ்கை அதற்குள் முடிய போகிறதே , போதவில்லை என்பதே மனிதனின் கடைசிகால என்னமாக இருக்கிறது . நமக்கு நரகம, சொர்க்கமா, எனும் எண்ணங்களும் மேலோங்குமாம் , இவை வயதான பெரியவர்கள் ,வாழும் வாழ்கையை பற்றி சொல்வது .
தாய்க்கு தனையனாய் ,மனைவிக்கு கணவனாய், பிள்ளைக்கு பெற்றோராய்,உடன் பிறப்புகளுக்கு சகோதரனாய் , வாழ்கையில் பல வேசங்கள் கட்டும் மனிதனுக்கு , ஒவ்வொரு கதா பாத்திரத்தின் கடமைஎயும், கச்சிதமாய் நிறைவு செய்து முடிக்கும் போது ,சுவர்க்கம் கிடைக்கிறது , அதாவது வாழும் போதே சொர்கத்தை பார்க்கலாம் .

மனதை வளப்படுத்தும்" ஜோ" மாதிரியான கட்டுரைகளையும் அவ்வபோது எழுதவும்.

kmr.krishnan said...

///ஒருவேளை உணவுக்காக கீழ்கிளைகளில் தொங்கும் பறவைகளுக்குப் புரியாதோ?////


மைன‌ர்வாள்! முழு நாவ‌லையும் ப‌டித்தால் க‌ட்டாய‌ம் புரியும்.நாவ‌ல் என்று பெய‌ர்தானே த‌விர‌, இன்றைக்கு இருந்தால் ஒரு 100 ப‌க்கங்கள்தான் இருக்கும் . கூகுளாரைக் கேட்டுப் ப‌டியுங்க‌ள்.

'தேடிச்சோறு..." வ‌ரிக‌ளிலும் பாரதி சொல்ல‌ வ‌ருவ‌தில் 'வீழ‌மாட்டேன்' என்றால் என்ன‌தான் மேற்கொண்டு செய்ய‌ அவ‌ர் உத்தேசிக்கிறார்? எது 'அசீவ்மெண்டு'க‌ளின் எல்லை?

நிச்சயம் பாரதி உலகாயத வெற்றிகளைப் பற்றி அங்கே பேசவில்லை.

ananth said...

//முத‌ல் முத‌லாகப் ப‌திவிட்ட‌ ஜான‌கிராம‌னை தங்களுடைய மேட்டிமைத்தனத்தால் அழ வைத்தீர்கள். இன்று அவர் பதிவுலகை விட்டே வெளியேறிவிட்டார்.//

இதற்கெல்லாமா பதிவுலகை விட்டு வெளியேறுவது. உரலுக்குள் தலையை விட்டு விட்டு உலக்கைக்கு பயந்தால் எப்படி. அதிலும் இது தான் யாரென்று வெளிப்படுத்திக் கொள்ள தைரிமில்லாத கோழை உலக்கை.

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். யாருடனும் வம்பு வளர்க்க விருப்பமில்லை.

ananth said...

முழு நாவலையும் படிக்காமல் கருத்தைச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இருக்கிறது. இருப்பினும் இதில் நல்லதொரு படிப்பினை இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

iyer said...

மன்னிக்க..
இன்றைய பதிவாளரை பற்றி
இப்பவும் எதுவும் சொல்லவில்லை.

வேதாந்தம் சொல்லப்பட்டாலும்
வேறுபட்டால் சொல்லாமலிருக்க

அய்யரால் முடியவில்லையே தவிர
அடுத்தவரை அப்படி பார்க்குமென்னம்

இல்லை.. இல்லை..
இதற்கு மேல் சொல்ல

வகுப்பறையில் பதிவு செய்ய இந்த
வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள

விரும்பவில்லை..
விசுவை புரிந்தவர்களுக்கு புரியும்..

திருவாளர் kmrk அவர்களுக்கு
திருப்பி பதிலாக இல்லை கருத்தாக..


///மொழியைப் பிறருக்குப் புரியாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான்.///

நன்றி உங்கள் பாராட்டுக்களுக்கு..

///தா‌ங்க‌ள் வெள்ளி, ஞாயிறு இர‌ண்டு நாட்களும் ஓய்வு எடுத்துக் கொள்ள‌ வேண்டுகிறேன்.///

நன்றி உங்கள் ஆலோசனைக்கு..

///ஐயாவின் அனும‌தியின் பேரிலேயே தொட‌ர்ந்து எழுதுகிறேன்.///

தொடர்ந்து எழுதுங்கள்.. மனதை
தொட்டுவிடும் எண்ணங்களுகாக

அதைத்தான் நாங்களும்விரும்புகிறோம்
அவர்களைப் போலவே..

வழக்கம் போல் வரும் கவிஞர்
வரிகளில் இருந்து...


உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது மீதி

தெய்வம் என்றால் அது தெய்வம்-அது சிலை என்றால் வெறும் சிலை தான்

உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை

தண்னீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்

"நண்பனும் பகை போல் தெரியும்-அது
நாட்பட நாட்படப் புரியும்"

SP.VR. SUBBAIYA said...

///////அய்யரின் கருத்து..அன்று போலவே மாறுபடுவதால்//////

உங்களின் கருத்து மாறுபடுகிறது என்றால். அதைச் சுருக்கமாக அல்லது விளக்கமாகச் சொல்லலாமே? அதைவிடுத்து, தெய்வம் தந்த வீடு வீதியிருக்க...என்று கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளைச் சொன்னால், குழப்பமாக இல்லையா? நீங்கள் இனிமேல் உங்கள் கருத்துக்களை நேராகவே சொல்லலாம். அதைவிடுத்து வரிக்கு வரி புரியாததைச் சொல்லி எழுதுகிறவரைக் கடுப்படிக்க வேண்டாம், விசுவநாதன்! இது வாத்தியாரின் அன்பான வேண்டுகோள். இன்று முதல் இதைக் கடைப்பிடிக்க வேண்டுகிறேன். நன்றாகக் கவனிக்கவும். ........வேண்டுகிறேன்!

minorwall said...

////kmr.krishnan said...
மைன‌ர்வாள்! முழு நாவ‌லையும் ப‌டித்தால் க‌ட்டாய‌ம் புரியும்.///

நேரம் கிடைக்கும்போது படிக்க முயற்சிக்கிறேன்..நன்றி..

minorwall said...

////kmr.krishnan said...
'தேடிச்சோறு..." வ‌ரிக‌ளிலும் பாரதி சொல்ல‌ வ‌ருவ‌தில் 'வீழ‌மாட்டேன்' என்றால் என்ன‌தான் மேற்கொண்டு செய்ய‌ அவ‌ர் உத்தேசிக்கிறார்? எது 'அசீவ்மெண்டு'க‌ளின் எல்லை?

நிச்சயம் பாரதி உலகாயத வெற்றிகளைப் பற்றி அங்கே பேசவில்லை.///////

///எது 'அசீவ்மெண்டு'க‌ளின் எல்லை? ///

இதுதான் எனக்குக் இன்றைய கேள்வியாக இருக்கிறது..எனது பலமும், பலவீனமும், விருப்பமும், வெறுப்பும் தெரிந்து தெளிந்து சில இலக்குகள் முடிந்து அடுத்த இலக்காக எதைகொள்வது என்று பயணிக்கிற சூழலில் இந்தக் கேள்வி தொடர்ந்து எழுகிறது..


பாரதிபற்றிய விளக்கத்துக்கு கொண்டுசெல்லும் கருத்தாகையால் எனக்குப் புரியாத அவரின் உத்வேகத்துக்கு உலகாயதம் சார்ந்த அன்றைய இந்திய சுதந்திரம் சார்ந்ததாகவே இதுவரை பொதுச்செய்திகள் மூலம் அறிந்திருக்கிறேன்.. திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை எழுதியதுபோலே அவரவர் பார்வையில் பட்டுப் பொருள்கொள்ளும் முறைகள் பலவிதமாகிப் போகும் என்பதால் இன்றைக்கு பாரதியைப் பற்றி, அவர் கொள்கைக்கருத்துக்கள் பற்றி தாமாகவே ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதனை பதிவிட்டு நிறுத்திவிடாமல் பாரதியைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டுவரும் தஞ்சைப் பெரியவர் கோபாலன் அவர்கள் எங்காவது பாரதியின் வரிகளில்

நேரிடையாக இதுபற்றி அவரின் எண்ணம் வெளிப்பட்டுள்ளதா என்பது பற்றி தனிக் கட்டுரை ஒன்றை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறன்..அவர்தான் அதிகமாக பாரதியைப் பற்றித் தெரிந்திருப்பார் என்ற ரீதியில் அவரை வேண்டுகிறேன்..ஏற்கனவே இதுபோன்றே சிறிதளவு பாரதியின் உத்வேகத்தில் எனக்குப் புரியாதது, வித்தியாசமாக உணர்ந்தது பற்றியும் தஞ்சைப் பெரியவர் கோபாலன் அவர்களுடன் கருத்தை பரிமாறிக்கொண்டதில் நீண்ட விளக்கமாக பாரதியைப் பற்றி இணையத்தில் விளக்கிப் பதிவிட இது வாய்ப்பாக அமையும் என்றெண்ணி அவரை அழைக்கிறேன்..

hotcat said...

Dear KMRK Sir,

Good story, really felt good to read this...Its good motivating story....Please write more.

Thank you!

Thanjavooraan said...

என்னுடைய "பாரதி பயிலக வலைப்பூ" குறித்த செய்தியைத் தங்கள் தளத்தின் முகப்பில் வெளியிட்டுப் பெருமைப் படுத்தியிருக்கிறீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பர்கள் இந்த வலைப்பூவில் வெளியாகியிருக்கும் "தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு" 22 பகுதிகளையும் படித்துத் தஞ்சை மராத்தியரின் ஆட்சியில் சுமார் 250 ஆண்டுகள் எப்படி இருந்தது, மராத்திய மன்னர்களின் வாழ்க்கை முதலியவற்றை அறிந்து கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதன் தொடர்ச்சியாக மராத்தியர் காலத்திய கலை, இலக்கியம், நிர்வாகம், மருத்துவம், ஆலயங்கள் இவை குறித்த செய்திகளையும் வெளியிடவிருக்கிறேன். ஆசிரியர் ஐயா அவர்களுக்கும் அன்புள்ளம் கொண்ட 'வகுப்பறை'யின் மாணவர்களுக்கும் மீண்டும் எனது நன்றியறிதலை உரித்தாக்குகிறேன்.

krishnar said...

தேடிச் சோறு தினம் தின்று ..

"....ஏன் என்னை யாரும் புரிஞ்சுக்க மாட்றாங்க .
கவிதை கதை எழுதுறது தப்பா .. ஏன் என்னை விரோதியா பாக்குறாங்க எல்லாருந்தான் இஞ்சினியருக்கு படிக்குறாங்க ..என்னையும் அதையே படிக்க சொன்னா என்னால முடியாது நான் தமிழ் படிப்பேன்னு சொன்னதால அப்பாவும் அம்மாவும் என்கிட்ட பேசமாட்டேங்குறாங்க...."

"ஜோ" - வை அப்படியே ஒத்த ஒருவர் தான் மேலேயுள்ளவரும் என எண்ணுகின்றேன்.இன்றைய தேடலில் கிடைத்தது.
http://devarajvittalan.blogspot.com/2009/10/blog-post_16.html

சுட்டியை அழுத்தவும்.

மாணவி தேமொழி said...

மதிப்பிற்குரிய kmr.k அவர்களின் பதிவு அருமை.
கல்லூரி நாட்களில் துணைப் பாடநூலாக அறிமுகப் படுத்தப்பட்ட புத்தகம் 'ஜானதன் லிவிங்க்ஸ்டன் சீகல்'; பாட நூல் என்பதால் கடனே என்று படித்து, விதியே என்று தேர்வெழுதி, உடனே மறந்தும்விட்ட நூல். புத்தகத்தின் சாரத்தையும், அது எடுத்து சொன்ன கருத்துகளையும், அதில் தத்துவங்கள் கையாளப் பட்ட விதத்தையும் புரிந்து கொள்ளக் கூடிய வயதில்லை அப்பொழுது. இப்பொழுது மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது இந்தப் பதிவு. நன்றி.
[பி. கு: ///மரத்தின் மேல் உணவெடுக்காமல் மேல் நோக்கியே அமர்ந்திருக்கும் பறவை/// என்ற வரிகள் படித்தவுடன் மைனர்வாள் படம் மனதில் தவிர்க்க முடியாமல் ஏனோ வந்தது. அவரைக் கோபம் கொள்ள வேண்டாம் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன். :)]

minorwall said...

///////மாணவி தேமொழி said... [பி. கு: ///மரத்தின் மேல் உணவெடுக்காமல் மேல் நோக்கியே அமர்ந்திருக்கும் பறவை/// என்ற வரிகள் படித்தவுடன் மைனர்வாள் படம் மனதில் தவிர்க்க முடியாமல் ஏனோ வந்தது. அவரைக் கோபம் கொள்ள வேண்டாம் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன். :)]/////

வாங்க..தேமொழி.
கொஞ்சம் அண்ணாந்தாப்போலே இருந்துட்டேன்..
இதப் பார்த்துப் போட்டுக் குடுத்துட்டீங்கோ..சரி...
போட்டோவை மாத்திடுறேன்..
இதுலே கோவப்படுறதுக்கு என்ன இருக்கு?

நான் நேத்திக்கே உங்க கமென்ட் பார்த்துட்டு
/////மாணவி தேமொழி said...
ஐயா,
இனிப்புகளும், காரங்களும்
ஃபில்டர் காஃபியும் பிரமாதம்
இந்த ஆசிரியர் பிரசாதம்
இதுவே எனக்கு போதும்..///

'அஹ்..ஹாஹ்..ஹ..ஹஹாஹ்..ஹ..ஹா'..என்று முடித்திருந்தால்
இன்னும் எப்ஃ பெக்ட் தூக்கலா இருந்திருக்கும்ன்னு நேத்திக்கே கமென்ட் அடிக்கலாம்ன்னு நினைச்சேன்..

minorwall said...

அது சரி..நீங்க ஏன் திடீர்ன்னு ஒரேநாள் மாடெர்ன் டிரஸ்லே வந்துட்டு மறுநாள் சேலை கட்டிட்டீங்கோ..

ஏன்?
விவேக சிந்தாமணியிலே
'சேலைகட்டிய மாதரை நம்பாதீங்கோ..'ன்னு டாபிக் டிஸ்கஷன் எஃபக்டோ?

Thanjavooraan said...

ஜப்பான் மைனர் அவர்களுடன் உரையாட நீண்ட நாட்கள் கழித்து இப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது. பாரதி குறித்து அவர் எழுப்பிய ஒரு வினா என்னை இங்கு பின்னூட்டம் இட அழைத்தது. "தேடிச்சோறு நிதம் தின்று.....வீழ்வேனென்று நினைத்தாயோ?" என்று தினந்தினம் பாரதி தனது குளியலறையில் உரத்த குரலில் பராசக்தியிடம் கேள்வி கேட்டுகப் பாடிக் கொண்டிருப்பார் என்று அவர் மகள் சகுந்தலா எழுதுகிறார். அப்படியென்றால் அவர் செய்ய விரும்பியது, வாழ விரும்பியது என்ன/எப்படி என்று கேள்வி எழுவது சரி. அவர் பராசக்தியிடம் ஒரு முறை சொல்கிறார், "என்னை இப்படி உப்புக்கும், புளிக்கும், பருப்புக்கும் திண்டாட விடுவாயானால், நான் உன்னைப் பாடமாட்டேன், நாத்திகனாக ஆகிவிடுவேண்" என்று எச்சரிக்கிறார். ஆக லோகாயத‌ வாழ்க்கையில் அவனுக்குத் திருப்தி இல்லை. பின் என்னதான் செய்ய வேண்டுமாம்? என்றால், "நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்" இவை மூன்றும்தான் என்கிறான். அப்படியானால் தனிப்பட்ட, தனிமனித சாதனைகள் செய்வது தமது நோக்கமல்ல, இந்த நாட்டுக்கு, மக்களுக்கு, பிறருக்காக நான் கவிதை புனைய, பொழுதெலாம் நாட்டிற்குழைக்க, சோராதிருந்து பிறர் வாழ தவமிருக்க எண்ணினான். இதைத்தான் உண்டு, உறங்கி, இடர் செய்து செத்திடும் கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கை என்றும் அது த‌னக்குத் தேவையில்லை என்றும் எக்காளமிடுகிறான். தோன்றி அழிவது வாழ்க்கை, இதில் இன்பம், துன்பம், வெறுமை இந்த மூன்றில் எதுவரினும் அதுவே பரசிவ முக்தி என்கிறான். இதைவிட பாரதியின் வாக்குக்கு வேறு விளக்கம் தேவையா என்ன?

Thanjavooraan said...

அன்பு நண்பர் ஜப்பான் மைனர் அவர்களே, தயைகூர்ந்து என்னுடைய
http://www.ilakkiyapayilagam.blogspot.com
எனும் வலைப்பூவிற்குச் சென்று அதில் "பாரதியின் வேண்டுதல்" எனும் தலைப்பில் சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவினைப் படித்துப் பாருங்கள். அது ஒரு பார‌தி விழா கூட்டத்துக்கென்று தயாரிக்கப்பட்டது என்றாலும், நீங்கள் எழுப்பியுள்ள வினாவுக்கு விடை அந்தக் கட்டுரையில் இருக்கிறது. படித்தபின் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மாணவி தேமொழி said...

மைனர்வாள், நன்றி..... ஆனால் வகுப்பிலே 'அஹ்..ஹாஹ்..ஹ..ஹஹாஹ்..ஹ..ஹா' என்று எப்ஃ பெக்ட்டோட சிரித்தால் வாத்தியார் சைலென்ஸ் சொல்லிடுவார்னு விட்டுட்டேன்.

மாணவின்னு பொருத்தமா இருக்குமேன்னு சீருடை அணிந்திருந்த பெண் படம் போட்டேன், ஆனா அதுக்குன்னு ரொம்ப சின்ன பொண்ணு படம் அது. அதனால சேலை கட்டிய பெண் படத்திற்கு மாறினேன். ... உபயம்: விகடன் ஓவியர் இளையராஜா.

"சேலை கட்டிய மாதரை நம்பாதே" அப்பிடின்னா ராஜ ராஜ சோழன் படத்தில வர்ற மனோரமா போன்ற கதாபாத்திரம்னு அர்த்தம். அவங்கள கூட்டு சேத்துகிட்டு கெட்ட வேலைக்கு போனா, சிறைக்கு போறது நிச்சயம் அப்படின்னு என் அகராதியிலே அர்த்தம். அதனால 'சேலைகட்டிய மாதரை நம்பாதீங்கோ"ன்னு சொன்னா பெருமையா எடுத்துக்குவேன்.

minorwall said...

////Thanjavooraan said...
இதைவிட பாரதியின் வாக்குக்கு வேறு விளக்கம் தேவையா என்ன?///

அய்யா கோபாலன் அவர்களுக்கு,
தெளிவான விளக்கத்துக்கு நன்றி..

உங்கள் பக்கத்துக்கு வந்து படித்தேன்..பாரதியின் வரிகளைப் படிக்கும் வாய்ப்பு பெற்றேன்..

மிக்க நன்றி..
விளக்கவுரை யாரும் எழுதாமலேயே படித்து எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலான தமிழில்தான் பாரதி எழுதியிருக்கிறார் என்பது படிக்கும் ஆர்வத்துக்கு இடையூறாக இல்லாமல் இருக்கிறது..
கிட்டத்தட்ட இங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, பாரதியைப் பற்றி எதேச்சையாக மிக சமீபத்தில் நீங்கள் பதிவிட்டிருக்க அதனை படிக்கும் வாய்ப்பாக எனக்கு KMRK மூலமான கருத்துரையாடல் அமைந்தது..
கொஞ்சம் பாரதி பற்றி அறிந்தேன்..
விளக்கம் பெற்றேன்.. நன்றி..

minorwall said...

தெளிவான விளக்கத்துக்கு நன்றி..
நீங்கள் செலக்ட் பண்ணியிருந்த இரண்டு படங்களுமே நல்ல அழகாக இருந்தன..
ராஜராஜன் படம் இனிமேல்தான் தேடித் பார்க்கவேண்டும்..
'நம்பாதீங்கோ..'வுக்கு நல்ல பதில்..நல்ல வெளிப்பாடு..
தொடர்க..நன்றி..

ஆமா..
அதென்ன 'தேமொழி'?
தேன்மொழி என்கிற பெயரை கூப்பிட வசதியாக 'தேமொழி'ன்னு அழைப்பார்கள்..
ஏனெனில் இதே பெயரில் என் மலேசியாவில் அத்தை மகள்
இருக்கிறார்..சமீபத்தில் சிங்கப்பூரில் திருமணத்தில் அவரில் இரு பெண்பிள்ளைகளுடன் சந்தித்தேன்..
உங்கள் பெயர்க்காரணம் அதே கதையா?இல்லை புதுக்கதையா?

மாணவி தேமொழி said...

///'நம்பாதீங்கோ..'வுக்கு நல்ல பதில்..நல்ல வெளிப்பாடு..
தொடர்க..நன்றி..

ஆமா..
அதென்ன 'தேமொழி'?
தேன்மொழி என்கிற பெயரை கூப்பிட வசதியாக 'தேமொழி'ன்னு அழைப்பார்கள்..
ஏனெனில் இதே பெயரில் என் மலேசியாவில் அத்தை மகள்
இருக்கிறார்..சமீபத்தில் சிங்கப்பூரில் திருமணத்தில் அவரில் இரு பெண்பிள்ளைகளுடன் சந்தித்தேன்..
உங்கள் பெயர்க்காரணம் அதே கதையா?இல்லை புதுக்கதையா?////

மைனர்வாள்,
..நன்றி....
ஹி..ஹி..ஹீ.. நான் மாறுவேடத்தில் உள்ள உங்கள் அத்தைப் பெண் அல்ல.
'தேமொழி' என்பது தமிழார்வமுள்ள என் தந்தை சூட்டிய பெயர்.
தேன்மொழி மருவி தேமொழி என்பதாகும் என்றும், தமிழ் இலக்கண மரபுப்படி சரியானது என்றும் சொன்னார்.
ஆனால் பள்ளி நாட்களில் தேர்வுத் தாள்களில் என் பெயரைத் தவறாக எழுதிவிட்டேன் என எண்ணி (Themozhi ...ஆங்கிலம் உட்பட) எழுத்துப் பிழையை(?) ஆசிரியர்கள் திருத்திய அநுபவமும் உண்டு.
"மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாதவப் பெரியோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்"
....என்று மகாகவி பாரதி "புதுமைபெண்" கவிதையில் எழுதியுள்ளார்.

நீங்களும் படத்தை மாற்றி விட்டீர்கள் என்பபதை தெரிந்து கொண்டேன். :)

kmr.krishnan said...

///சமீபத்தில் சிங்கப்பூரில் திருமணத்தில் அவரில் இரு பெண்பிள்ளைகளுடன் சந்தித்தேன்.///

அப்பா! மைனருக்குத்தான் என்ன ஜாக்கிரதை உணர்வு!டெல்லிக்கார அம்மா க‌லாய்க்க இடம் இல்லாமல் பண்ணிவிட்டாரே!

minorwall said...

தேமொழி ஸ்பெஷல்..
நல்ல 'தேனிமையான' விளக்கம்..
நாங்களும் கொஞ்சம் தமிழிலே புதுசா எதாவுது ட்ரை பண்ணலாமேன்னுதான்..நன்றி..
1962 ஜூன் 23rd லே பிறந்தாலே கொஞ்சம் இப்புடித்தான் புதுசா பேரு வெச்சுப்பாங்கலாம்..

minorwall said...

////kmr.krishnan said...
///சமீபத்தில் சிங்கப்பூரில் திருமணத்தில் அவரில் இரு பெண்பிள்ளைகளுடன் சந்தித்தேன்.///

அப்பா! மைனருக்குத்தான் என்ன ஜாக்கிரதை உணர்வு!டெல்லிக்கார அம்மா க‌லாய்க்க இடம் இல்லாமல் பண்ணிவிட்டாரே!//////

அவுகளே சும்மா இருந்தாலும் நீங்க தேடிக் கண்டுபிடிச்சு தெளிவா போட்டுக் குடுக்காம இருக்க மாட்டீங்களே சார்..

Uma said...

மைனருக்குத்தான் என்ன ஜாக்கிரதை உணர்வு!//
அந்த பயம் இருக்கணும்!!

minorwall said...

/////Uma said...
மைனருக்குத்தான் என்ன ஜாக்கிரதை உணர்வு!//
அந்த பயம் இருக்கணும்!!/////

வாங்கோ..எங்கே..அம்மணிய இன்னும் காணோமேன்னு நினைச்சேன்..நல்லா இருக்கியளா?

Uma said...

..நல்லா இருக்கியளா?// ம்ம்