மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

8.9.11

பணத்தைச் சம்பாதிப்பதற்கான அடிப்படை விதிகள்

------------------------------------------------------------------------------------------------
பணத்தைச் சம்பாதிப்பதற்கான அடிப்படை விதிகள்

SIX PRINCIPLES OF EARNING MONEY*

1. வரைமுறையோடு வாழ்பவர்கள், வரைமுறையற்ற பணத்தைச் சேர்க்கமுடியாது.
"No point using *limited life* to chase *unlimited money.*

2. வாழ்ந்து முடிப்பதற்குள் செலவழிக்க இயலாத அளவிற்குப் பணத்தைச் சேர்க்க முயற்சிப்பது வீண் வேலை!
"No point* earning so much money you cannot live to spend it* .

3. உங்கள் பணமே உங்களுடையதல்ல, அதை நீங்கள் செலவு செய்யும்வரை! (செலவழிக்காமல் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணம் உங்களுடையதல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும்!)
"Money is not yours until you *spend it.*

4. இளம் வயதாக இருக்கும்போது, உங்களுடைய ஆரோக்கியத்தைப் பணயம் வைத்துப் பணத்தைச் சேர்க்கிறீர்கள். வயதான பிறகு அதே பணத்தை வைத்து உங்கள் ஆரோக்கியத்தைத் திரும்பப்பெற முயற்சி செய்கிறீர்கள். அது முடியாத நிலையில் நீங்கள் தொலைத்த ஆரோக்கியம் மட்டுமே, உங்களை அல்லும் பகலும் படுத்தி எடுக்கும்.
"When you are young, you *use your health to chase your wealth* ; when you are old, you* use your wealth to buy back your health* . Difference is that, *it is too late*.

5
மகிழ்ச்சி என்பது உங்கள் கையிருப்பை வைத்தல்ல. குறைந்த அளவு உங்கள் கைத்தேவை என்ன என்பதைவைத்துத்தான்! அதை உணருங்கள்
  “How happy a man is, *is not how much he has but how little he needs*.

6
தன் உறவுகளோடு (மனைவி மக்களோடு) கூடிக் குலாவுவதற்கு நேரம் இல்லாத ஒருவன், அவர்களுக்காகப் பொருள் ஈட்டுவதற்குக் கடுமையாக அந்த நேரத்தைப் பயன்படுத்துவது பயனற்றது. அதாவது வீண்வேலை!
- No point *working so hard to provide for the people you have no time to spend with*.

எச்சரிக்கை:
சொந்த சரக்கல்ல. மின்னஞ்சலில் வந்தது. மொழிமாற்றம் மட்டும் அடியேனுடையது.
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

15 comments:

Ravichandran said...

Ayya,

All points are acceptable and true as well. But without money, even relations also not maintaining relationship with us.Whats ur opinion.

Sincere Student,
Trichy Ravi

rajakala said...

ayya தங்களது ஆரோக்கியம் மட்டுமல்ல இளமையையும் சேர்த்து பனயம் வைக்கிரார்கள இன்ரு நமது இளம் பெண்கள

kmr.krishnan said...

ஐந்தாவது கருத்து மஹாத்மா காந்திஜியின் கருத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.
"Nature provides everything for your needs; not for your greed"

"இயற்கை உங்களுடைய தேவைக்கு எல்லாவற்றயும் அளித்துள்ளது;உஙளுடைய பேராசைக்கு அல்ல."

R.Srishobana said...

Ayya,

Every points slated here are needed for all those people who only respects and values only "valuable" people and not "valuable" Virtues in the Real People...

ananth said...

சுருக்கமாக சொல்வதானால் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழியை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

//But without money, even relations also not maintaining relationship with us.//

இதைப் படித்தவுடன் கீழே உள்ள எங்க ஊரு ராஜா திரைப்பட பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

”பானையிலே சோறிருந்த பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வெச்சா சொந்தமில்லே பந்தமில்லே”

தமிழ்வாசி - Prakash said...

பணம் பற்றி எனது பதிவையும் பாருங்க..
http://tamilvaasi.blogspot.com/2011/09/man-vs-money.html

iyer said...

பணக்காரனாவதற்கு யாரும்
பணம் சம்பாதிக்க தேவையில்லை

அப்படிச் சொல்வதெப்படி என ஆச்சரியமாக ஏன் பார்க்கிறீர்கள்..

தேவைகளை குறைத்துக் கொண்டாலே
தேடி வரும் சேமிப்பாக என சொல்வது

அன்று.. ஆனால்
இன்று...

பணம் பேசத் தொடங்கினால் ..
உலகமே வாயை மூடிக்கொள்ளும்

பணம் வந்தால் மாறுவது
குணம் என்றால் அது தவறு

கொடுத்துப் பாருங்க பணத்தை அல்லது
எடுத்துப் பாருங்க ஒருத்ர்கிட்டே

அன்பிற்கு முன்னால்.. எவ்வளவு
பணமும் பெரிதல்ல என்றாலும்

கடல் நீரில் செல்லும்
கப்பல் போலவே

வாழ்க்கை பயணத்திற்கும்
வசதியாக வாழவும் பணம் தேவை

கப்பலுக்குள் கடந்து செல்லவுள்ள
கடல் தண்ணீர் போனாலும்

பணத்திற்காக வாழ்ந்தால் வாழ்க்கை பயணம் அமைதியாயிராது;அவர்கள்

வங்கி இருப்பு கூடும் போது
வாழ்க்கை இருப்பு குறைந்து விடும்

SP.VR. SUBBAIYA said...

///////Blogger Ravichandran said...
Ayya,
All points are acceptable and true as well. But without money, even relations also not maintaining relationship with us.Whats ur opinion.
Sincere Student,
Trichy Ravi/////

பணம் இல்லாத உறவுக்காரன், நம்மிடம் உதவி கேட்டு வந்துவிடுவானோ என்ற தேவையற்ற சிந்தனைகள்தான் அதற்குக் காரணம். மனிதன் சுயநலவாதியாகிவிட்டான். மனித நேயம் மறைந்துகொண்டு வருகிறது.

SP.VR. SUBBAIYA said...

//////Blogger rajakala said...
தங்களது ஆரோக்கியத்தை மட்டுமல்ல இளமையையும் சேர்த்து பணயம் வைக்கிறார்கள் இன்றைய இளம் பெண்கள்//////

உண்மைதான். 32 வயதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் பொருள் ஈட்டலில் மும்மரமாக இருக்கும் பெண்களை நானும் அறிவேன்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said...
ஐந்தாவது கருத்து மஹாத்மா காந்திஜியின் கருத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.
"Nature provides everything for your needs; not for your greed"
"இயற்கை உங்களுடைய தேவைக்கு எல்லாவற்றயும் அளித்துள்ளது;உஙளுடைய பேராசைக்கு அல்ல."//////

உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்

SP.VR. SUBBAIYA said...

////Blogger R.Srishobana said...
Ayya,
Every points slated here are needed for all those people who only respects and values only "valuable" people and not "valuable" Virtues in the Real People.../////

இன்றைய வாழ்க்கை டவுன் பஸ் வாழ்க்கை. அதற்கெல்லாம் நேரம் இல்லை சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ananth said...
சுருக்கமாக சொல்வதானால் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழியை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
//But without money, even relations also not maintaining relationship with us.//
இதைப் படித்தவுடன் கீழே உள்ள எங்க ஊரு ராஜா திரைப்பட பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
”பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வெச்சா சொந்தமில்லே பந்தமில்லே”/;////

ஒரு படத்தில் நாகேஷ் சொல்வார், “பணம் பத்தும் செய்யும். என்னிடம் பணத்தைக் கொடுங்கள் நான் பதினொன்றைச் செய்வேன். பணத்தால் முடியாததையும் நான் செய்வேன்”

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தமிழ்வாசி - Prakash said...
பணம் பற்றி எனது பதிவையும் பாருங்க..
http://tamilvaasi.blogspot.com/2011/09/man-vs-money.html//////

நல்லது. தகவலுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger iyer said...
பணக்காரனாவதற்கு யாரும்
பணம் சம்பாதிக்க தேவையில்லை
அப்படிச் சொல்வதெப்படி என ஆச்சரியமாக ஏன் பார்க்கிறீர்கள்..
தேவைகளை குறைத்துக் கொண்டாலே
தேடி வரும் சேமிப்பாக என சொல்வது
அன்று.. ஆனால்
இன்று... பணம் பேசத் தொடங்கினால் ..
உலகமே வாயை மூடிக்கொள்ளும்
பணம் வந்தால் மாறுவது
குணம் என்றால் அது தவறு
கொடுத்துப் பாருங்க பணத்தை அல்லது
எடுத்துப் பாருங்க ஒருத்ர்கிட்டே
அன்பிற்கு முன்னால்.. எவ்வளவு
பணமும் பெரிதல்ல என்றாலும்
கடல் நீரில் செல்லும்
கப்பல் போலவே
வாழ்க்கை பயணத்திற்கும்
வசதியாக வாழவும் பணம் தேவை
கப்பலுக்குள் கடந்து செல்லவுள்ள
கடல் தண்ணீர் போனாலும்
பணத்திற்காக வாழ்ந்தால் வாழ்க்கை பயணம் அமைதியாயிராது;அவர்கள்
வங்கி இருப்பு கூடும் போது
வாழ்க்கை இருப்பு குறைந்து விடும்////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!

Anonymous said...

பணம் தைரியத்தின் அடயாலம்.. வாழ்க்கைக்கு பணம் இரண்டாம் பட்ஷமே என்றாலும் அது தரும் தைரியம் வாழ்க்கைக்கு அவசியம் அத்யாவஷியம்.

எல்லொரும் ப‌ண‌க்கார‌ வாழ்வை தேடுவ‌தில்லை. பாதுகாப்பான‌ வாழ்க்கைக்கு ப‌ண‌த்தை தேடுகின்ற‌ன‌ர் அய்யா.

பெரும்பாலானேற்கு இந்த தேடல் நிரைவுபெருவதில்லை, அதனாலேயெ இந்த கருத்துக்கள் மலர்ந்ததாக நான் கருதுகின்றேன்.

பணம் இருப்பவன் அடுத்தவருக்கு அதை கொடுப்பதில்லை, அவர்களுக்கு நல்ல மனமுமிருப்பதில்லை. இயல்பாகவே அவர்களுக்க தலை கனத்துவிடுகின்றது. இல்லாதவனை அவர்கள் படுத்தும் பாடிருக்கின்றதே அடேயப்பா...

ஒரு பாடலில் சொல்லுவார்

பணமிருக்கும் மனிதனிடம் குனமிருப்பதில்லை,
குனமிருக்கும் மனிதனிடம் பணமிருப்பதில்லை.

பணம் என்ற அஷ்திரம் சில இடங்களில் எமனையும் வென்றிருப்பது இதில் நகையான ஒன்று.