மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

26.9.11

Astrology கர்மவீரர் காமராஜரின் ஜாதகம்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology கர்மவீரர் காமராஜரின் ஜாதகம்

அன்பர் காமராஜரை அறியாதவர் யார் இருக்க முடியும்?

சுயநலமில்லாமல், மக்களுக்காகப் பாடுபட்ட இரண்டாவது தலைவர் அவர்தான் (முதல் இடம் எப்போதுமே மகாத்மா காந்திக்குத்தான்!)

விருதுநகரில் குமாரசாமி நாடாருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர். சிறுவயதிலே தந்தையைப் பறிகொடுத்ததால்  வறுமையில் அல்லல் பட்டார். ஆறு வயதில் தன் தந்தையை இழந்தார். தந்தை ஒரு தேங்காய் வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாமல் போனது. இளம் வயதில் ஒரு துணிக் கடையில் வேலை செய்தார். 16 வயதில் அரசியலில் நுழைந்து சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

அன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர் திரு.சத்தியமூர்த்தியின் அரவணைப்பு கிடைத்தது.

கல்கத்தாவிற்கு அருகில் உள்ள அலிப்பூர் சிறையில் 2 ஆண்டு காலம் வாசம் செய்ய நேரிட்டது. 1942ல் மீண்டும்  சிறைப்பட்டு அமராவதி நகர் சிறையில் 3 ஆண்டு காலம் வாசம் செய்ய நேர்ந்தது.

13.4.1954ஆம் தேதி தமிழ் நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றார்

மூடிக்கிடந்த 6,000 பள்ளிகளைத் திறக்க வைத்தார். ஏழைகளுக்கு இலவசக் கல்வித் திட்டத்தையும், மதிய உணவுத்  திட்டத்தையும் அறிமுகப்  படுத்திய முன்னோடி அவரே!

விவசாயத்திற்காக பவானி அணை, வைகை அணை, அமராவதி, சாத்தனூர் அணை பரம்பிக்குளம் பொன்ற அணைகள் எல்லாம் அவர்  காலத்தில் கட்டப்பட்டவையே!

திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம்,
நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிறுவனம், மணலி பெட்ரோலிய
நிறுவனம், போன்ற பலபெரிய தொழிற் சாலைகளும், அமபத்தூர் தொழிற்பேட்டை போன்றவைகள்  எல்லாம் அவர் காலத்தில் துவங்கப்பட்டவையே. இப்படிச்  சொல்லிக் கொண்டே போகலாம்.

சுமார் 10 ஆண்டு காலம் முதலமைச்சர் பதவியில் இருந்த அவர் தனக்கென்று எதுவும் செய்து கொள்ளவில்லை. சொந்தவீடு கூட இல்லாமல்  இருந்தவர்..

பின்னர் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகி,
இரண்டு பிரதமர்களைத் தேர்வு செய்து பதவில்  அமர்த்தியவர்
அவரே. அதனால் கிங் மேக்கர் என்னும் பட்டத்தையும் பெற்றார் அவர்.

அவரால் பதவி பெற்றவர்கள் லால் பகதூர் சாஸ்திரி, மற்றும் திருமதி இந்திரா காந்தி அம்மையார்!

அவரின் பரம பக்தரான கவியரசர் கண்ணதாசன், அவரைப்பற்றி இப்படிக் குறிப்பிட்டார்.

“ஆண்டியின் கையில் திருவோடாவது இருக்கும்
 அன்பனே காமராஜா, உன்கையில் அதுவும் இல்லையே!”


என்ன அசத்தலான வரிகள் பாருங்கள்!

1967ல் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் துறவறம் பூண்டவர் 2.10.1975ஆம் தேதி  இறைவனடி சேர்ந்தார்

அவருடைய ஜாதகத்தை இன்று அலசுவோம்!
________________________________________________________


----------------------------------------------------------------------------------------
அவர் கடக லக்கினக்காரர். அரசியலுக்கு என்று உள்ள லக்கினம் அது!

லக்கினாதிபதி சந்திரன் எட்டில். இளம் பருவத்தில் வறுமையில் வாடினார். அல்லல் உற்றார். போராட்டமான  வாழ்க்கை அமைந்தது.

சூரியன் 12 அமர்ந்ததால் இளம் வயதில் தந்தையைப் பறிகொடுக்க நேர்ந்தது. 'அன்னையோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்வி போம்” என்னும் பழமொழி அவர் விஷயத்தில் உண்மையானது.

அத்துடன் கல்விகாரகன் புதனும் 12ல் இருப்பதைக் கவனியுங்கள். அது கல்விகாரகனுக்கு உகந்த இடமல்ல!

7ல் சனி, களத்திர தோஷம். அத்துடன் குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் 12ல். அதனால் அவருக்கு, மனைவி,  மக்கள் என்று குடும்ப  வாழ்க்கை இல்லாமல் போயிற்று.

ஜாதகத்தின் பெரும் பலம். ஆட்சி பலம் பெற்ற குருவின் பார்வையில் லக்கினம்  இருந்தது. அது அவருக்குப் பல  வழிகளில் கை கொடுத்தது.

ஜாதகத்தில் புத ஆதித்ய யோகமும், குரு சண்டாள யோகமும் (குரு + கேது கூட்டணி) இருப்பதைக்  கவனியுங்கள். அவை இரண்டும்  அவருக்கு புத்தி சாதுர்யத்தையும், சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும்  பெற்றுத் தந்ததுடன், எடுத்த காரியங்களில் வெற்றிகளையும்  பெற்றுத்தந்தன!

இரண்டு அதி முக்கிய கிரகங்கள் (குரு மற்றும் சனி) ஆட்சி
பலத்துடன் இருப்பதைப் பாருங்கள்.இரண்டும்  திரிகோண, கேந்திர
பலத்துடன்இருப்பதையும் பாருங்கள் அவைகள் அவருக்குத்
தலைமைப் பதவியைப் பெற்றுத்தந்தன.

கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் வெற்றி ஸ்தானமான
3 ஆம் இடத்தில் அமர்ந்து, 9ஆம் இடமான  பாக்கியஸ்தானத்தைப்
பார்த்ததால் பல யோகங்களயும் வெற்றிகளையும் அவருக்குப்
பெற்றுத்தந்தது.

பாக்கியஸ்தானத்தில் குருவுடன் அமர்ந்த கேது தன் திசையில் அவரை மேன்மைப் படுத்தி திசை முடியும் சமயத்தில் அவருக்கு முதல்
அமைச்சர் பதவியைத் தந்துவிட்டுப்போனது!

இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள் - அதுவும் குறிப்பாக ராகு  கேதுக்கள் ஜாதகனுக்கு பலத்த யோகங்களைப் பெற்றுத்தரும்

ஒரு ஜாத்ககத்தை அலசுவது இப்ப்டித்தான். அதற்காகத்தான் இந்தப் பாடத்தை இன்று வலை ஏற்றியுள்ளேன். படித்துப் பயனடைந்தவர்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள். எழுதுபவர்களுக்கு அதுதான் டானிக்!
-------------------------------------------------------------------------------------------
2

நல்ல இல்வாழ்க்கை அமைவதற்கான ஜாதக அமைப்புக்கள் என்ன?
பதினோரு அமைப்புக்கள் உள்ளன. அதைவைத்து திருமணம் ஆக
வேண்டி யவர்கள்  தங்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமையுமா
என்று பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். நடுத்தரவயதினர்,  தங்கள்
உடன் பிறப்புக்களுக்கு அமையுமா என்று தெரிந்துகொள்ளலாம். வயதானவர்கள், தங்கள் மகன் அல்லது  மகளுக்கு அமையவிருக்கும் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் பாடமாகும். அனைவருக்கும் பயன் உள்ள பாடமாகும்.

அது மேல் நிலைப் பாடம்.மேல் நிலைப்பாட வகுப்பில் அதைப் பதிவு செய்துள்ளேன். படிப்பவர்கள் அது பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டுகிறேன்.

அன்புடன்
வாத்தியார்
______________________________________________


வாழ்க வளமுடன்!

50 comments:

மாணவி தேமொழி said...

ஐயா, வழக்கம்போல் எனக்கு பிடித்த ஜாதக அலசல் பாடம்; வழக்கம் போலவும் எளிமையான விளக்கங்கள்.
நன்றி. எளிதில் புரிய வைக்கும் ஆசிரியரான உங்களுக்கு என்றும் கடமைப் பட்டிருக்கும்
மாணவி தேமொழி

govind said...

Sir Today's post is really good. I searched for his charts but i cudnt get the correct one. Can you post the navamsa also. Moreover CAn you put more posts regarding kalathira dosham.

kmr.krishnan said...

கர்ம வீராரின் ஜாதக அலசல் அருமை!நன்றி ஐயா!

Ravichandran said...

Ayya,

I thought tht Guru+Rahu only as Guru Sandala Yogam, but i've learnt today only, it applies to Guru+Ketha as well. Good explanation for other houses. I have tried to become your student in higher class for the past 1year, but no success. Because I have bought your small stories books & sent so many mails for request, but no success. Anyway I am waiting patiently.

Sincere Student,
Ravi

Uma said...

அலசல் புரியும்படி இருந்தது. இதில் எனக்கு இருக்கும் ஒரு சந்தேகம் அரசியலுக்கு வருவதற்கு சூரியனையும் பார்க்க வேண்டும்தானே? சூரியன் பனிரெண்டில் இருக்க அவர் அரசியலுக்கு வந்து நிலைத்தது எப்படி? நீங்கள் சொல்வது போல் மற்ற கிரக அமைப்பு காரணமெனில், சூரியனின் பங்கு என்ன?

நான் கேட்க விரும்பும் மற்றொரு கேள்வி இது போல் சிறைக்கு செல்ல காரணமான கிரக அமைப்புகள் எவை?

Vannamalar said...

Sir,

Both Illyaraja and Kamarajar lessons are very useful to understand the birth chart.

Thanks,
Jay

kannan said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

தமிழ் விரும்பி said...

பாக்யாதிபதி, ஆட்சி பெற்ற கூரிய புத்திக்கு காரகன், ஞானகாரகனோடு கூட்டு (குரு+கேது) அதோடு ஆட்சி பெற்ற சனியின் பார்வையையும், செயலுக்கான கிரகம் செவ்வாய் அவனும் ராகுவோடு (இந்த ராகு, உலக பொருள்களை ஆராயும் எண்ணத்தை கொடுப்பவனும் கூட) கூட்டு; ஆக இவர்களின் ஏழாம் பார்வையும் கூரியபுத்தி ஞானகாரனின் மீது விழுகிறது... இந்த அமைப்பு அவர் ஆன்மிகம் மல்லாமல் (பெரிதும்), நாட்டிற்கான செயலில் தீவிரமாக இரங்கி வெற்றி பெற்றார் என்று கொள்ளலாமா?....
அதோடு, சட்டத்தை கட்டிக்காட்கும் ஈசுவரன் சனியின் ஆட்சி பெற்ற நேரடிப் பார்வை லக்னத்தில் விழுவதும் அவர் தர்மத்தையும், உண்மையையும் நீதியையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவர் கொள்கைவீரர் மற்றும் கர்மவீரர் என்பதும் அதற்கு ஒத்துழைப்பு லக்னம் பெரும் குருவின் ஐந்தாம் பார்வையும்... அதோடு அந்த சனியின் ஏழாம் பார்வையே லக்னமான அவரின் லட்சணத்தையும் (கரிய நெடிய மிகவும் எளிமையான தோற்றம்) தந்தது என்றும் கொள்ளலாமா?

பாடத்திற்கு நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.

rajakala said...

அய்யா மூன்ரில் உளள ராகு அவருக்கு செல்வத்தை கொடுக்கவில்லை? ஏழில் சனி ஆட்சியாக இருப்பது தோஷ நிவர்த்தி ஆகாதா?

SP.VR. SUBBAIYA said...

////Blogger மாணவி தேமொழி said...
ஐயா, வழக்கம்போல் எனக்கு பிடித்த ஜாதக அலசல் பாடம்; வழக்கம் போலவும் எளிமையான விளக்கங்கள்.
நன்றி. எளிதில் புரிய வைக்கும் ஆசிரியரான உங்களுக்கு என்றும் கடமைப் பட்டிருக்கும்
மாணவி தேமொழி////

உங்களின் அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger govind said...
Sir Today's post is really good. I searched for his charts but i cudnt get the correct one. Can you post the navamsa also. Moreover CAn you put more posts regarding kalathira dosham./////

சிலசமயங்களில் பஞ்சாங்க குழப்பங்களினால் நவாம்சம் சரியாக இருப்பதில்லை. அதனால் தரவில்லை!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
கர்ம வீராரின் ஜாதக அலசல் அருமை!நன்றி ஐயா!/////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ravichandran said...
Ayya,
I thought tht Guru+Rahu only as Guru Sandala Yogam, but i've learnt today only, it applies to Guru+Ketha as well. Good explanation for other houses. I have tried to become your student in higher class for the past 1year, but no success. Because I have bought your small stories books & sent so many mails for request, but no success. Anyway I am waiting patiently.
Sincere Student,
Ravi/////

ஒரு வருடமாகக் காத்திருக்கிறீர்களா? ஏன்? இங்கே பின்னூட்டத்தில் அதைச் சொல்லாமல் உங்கள் மின்னஞ்சல் மூலம் கேளுங்கள். சரி பார்த்துப் பதில் சொல்லுகிறேன். என்னுடைய மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

SP.VR. SUBBAIYA said...

Blogger Uma said...
அலசல் புரியும்படி இருந்தது. இதில் எனக்கு இருக்கும் ஒரு சந்தேகம் அரசியலுக்கு வருவதற்கு சூரியனையும் பார்க்க வேண்டும்தானே? சூரியன் பனிரெண்டில் இருக்க அவர் அரசியலுக்கு வந்து நிலைத்தது எப்படி? நீங்கள் சொல்வது போல் மற்ற கிரக அமைப்பு காரணமெனில், சூரியனின் பங்கு என்ன?
நான் கேட்க விரும்பும் மற்றொரு கேள்வி இது போல் சிறைக்கு செல்ல காரணமான கிரக அமைப்புகள் எவை?

கடக லக்கினமே அரசியலுக்கு உரிய லக்கினம். அதைப் பதிவில் சொல்லியிருக்கிறேனே சகோதரி. 12ஆம் வீட்டு அதிபதி ஆட்சி பலத்துடன் 12ல் அமர்ந்து ஆறாம் வீட்டைப் பார்க்கிறானே - அதுதான் இளம் வயதில் அவர் இரண்டு மூன்று முறைகள் சிறை செல்லக்காரணம். அப்படியே சிறை சென்றிருந்தாலும், உடன் இருக்கும் சூரியனால், அது செல்வாக்காக மாற்றப்பெற்று அவர் அரசியலில் பிரபலமடைந்தார்.
சூரியனும், புதனும் சேர்ந்து ஆதித்த யோகத்துடன் அந்த வேலையைச் செய்தன. அவரை முதலமைச்சர் பதவிவரைக்கும் உயர்த்திக்கொண்டு சென்றன!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Vannamalar said...
Sir,
Both Illyaraja and Kamarajar lessons are very useful to understand the birth chart.
Thanks,
Jay/////

நல்லது. உங்களின் புரிதலுக்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kannan said...
வாத்தியார் ஐயா வணக்கம்.//////

நல்லது பதில் வணக்கம் கண்ணன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தமிழ் விரும்பி said...
பாக்யாதிபதி, ஆட்சி பெற்ற கூரிய புத்திக்கு காரகன், ஞானகாரகனோடு கூட்டு (குரு+கேது) அதோடு ஆட்சி பெற்ற சனியின் பார்வையையும், செயலுக்கான கிரகம் செவ்வாய் அவனும் ராகுவோடு (இந்த ராகு, உலக பொருள்களை ஆராயும் எண்ணத்தை கொடுப்பவனும் கூட) கூட்டு; ஆக இவர்களின் ஏழாம் பார்வையும் கூரியபுத்தி ஞானகாரனின் மீது விழுகிறது... இந்த அமைப்பு அவர் ஆன்மிகம்மல்லாமல் (பெரிதும்), நாட்டிற்கான செயலில் தீவிரமாக இரங்கி வெற்றி பெற்றார் என்று கொள்ளலாமா?....
அதோடு, சட்டத்தை கட்டிக்காட்கும் ஈசுவரன் சனியின் ஆட்சி பெற்ற நேரடிப் பார்வை லக்னத்தில் விழுவதும் அவர் தர்மத்தையும், உண்மையையும் நீதியையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவர் கொள்கைவீரர் மற்றும் கர்மவீரர் என்பதும் அதற்கு ஒத்துழைப்பு லக்னம் பெரும் குருவின் ஐந்தாம் பார்வையும்... அதோடு அந்த சனியின் ஏழாம் பார்வையே லக்னமான அவரின் லட்சணத்தையும் (கரிய நெடிய மிகவும் எளிமையான தோற்றம்) தந்தது என்றும் கொள்ளலாமா?
பாடத்திற்கு நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.//////

கூர்ந்து பார்கப் பார்க்க நிறைய விஷயங்கள் புலப்படும். நன்றி ஆலாசியம்!

RAMADU Family said...

Guru Vanakkam,

Thanks for the lesson today. One question, You explained the poverty he faeed during his younger days, what planerty position) made him to be simple though he had a chance later in his life ?

RAMADU Family said...

Also, I will be happy if you can invite me for the higher studies. I am longing for that.

RAMADU.

RMURUGARAJAN said...

கர்ம வீரர் காமராஜர் ஜாதக அலசல் பாடம் மிக அசத்தல்,

Also i have applied for your higher class through e-mail but still i am waiting for your acceptance,

please accept me as your student for higher class,

thanks,

yours sincere student,
murugarajan.

SP.VR. SUBBAIYA said...

Blogger rajakala said...
அய்யா மூன்றில் உளள ராகு அவருக்கு செல்வத்தை கொடுக்கவில்லை? ஏழில் சனி ஆட்சியாக இருப்பது தோஷ நிவர்த்தி ஆகாதா?//////

பழைய பாடங்களைப் படியுங்கள். செல்வத்திற்கு யார்/எது காரணமென்று புலப்படும்! சனி ஆட்சி பெற்றால் தோஷ நிவர்த்தி என்று யார் சொன்னது?

SP.VR. SUBBAIYA said...

//////Blogger RAMADU Family said...
Guru Vanakkam,
Thanks for the lesson today. One question, You explained the poverty he faeed during his younger days, what planerty position) made him to be simple though he had a chance later in his life?////////

சின்ன வயதில் வறுமையில் வாடினார். வயதான காலத்தில் பதிவியில் இருந்தாலும், அவர் ஒன்றும் செல்வத்தைச் சேர்க்கவில்லை. எளிமையாகத்தான் இருந்தார். இரண்டாம் அதிபதி (2nd house lord) சூரியன் 12ல் அமர்ந்தார். 11ஆம் அதிபதி சுக்கிரன் பகை வீட்டில் அமர்ந்தார். அதனால்தான் அவரிடம் செல்வம் சேரவில்லை. அவரும் அதை விரும்பவில்லை. அதற்கு - அந்த எளிமைக்கு லக்கினத்தின் மேல் விழும் சனீஷ்வரனின் பார்வை காரணம்

SP.VR. SUBBAIYA said...

Blogger RAMADU Family said...
Also, I will be happy if you can invite me for the higher studies. I am longing for that.
RAMADU.//////

அழைப்பு அனுப்பியுள்ளேன். உங்களைப் பற்றி எழுதுங்கள்

SP.VR. SUBBAIYA said...

Blogger RMURUGARAJAN said...
கர்ம வீரர் காமராஜர் ஜாதக அலசல் பாடம் மிக அசத்தல்,
Also i have applied for your higher class through e-mail but still i am waiting for your acceptance,
please accept me as your student for higher class,
thanks,
yours sincere student,
murugarajan.//////

அழைப்பு அனுப்புகிறேன்.உங்களைப் பற்றி எழுதுங்கள். முதலில் உங்களின் மின்னஞ்சல் முகவரியை எழுதுங்கள். பின்னூட்டத்தில் அல்ல!
என்னுடைய மின்னஜ்சலுக்கு classroom2007@gmail.com ற்கு எழுதுங்கள்

minorwall said...

////////SP.VR. SUBBAIYA said...
Blogger rajakala said...
அய்யா மூன்றில் உளள ராகு அவருக்கு செல்வத்தை கொடுக்கவில்லை? ஏழில் சனி ஆட்சியாக இருப்பது தோஷ நிவர்த்தி ஆகாதா?//////

பழைய பாடங்களைப் படியுங்கள். செல்வத்திற்கு யார்/எது காரணமென்று புலப்படும்! சனி ஆட்சி பெற்றால் தோஷ நிவர்த்தி என்று யார் சொன்னது?\\\\\\\\\\\

கேள்வியில் குழப்பமிருப்பதால் பதில் இப்படி அமைந்திருக்கிறது..

ஆனால் இந்தக்கேள்வியின் தன்மையை ஆராய்ந்ததில் சனி இங்கு ஏழாம் வீட்டு அதிபதியாகிறான்..
கேந்திரத்தில் இருந்து ஆட்சிபெற்று லக்கினத்தத் தன் பார்வையில் கொண்டுள்ளான் என்கிற ரீதியில்
ஏழாம் ஆதி பலம் பொருந்தியவனாக இருந்தும்
களத்திரத்துக்குப் பங்கம் வகிப்பது என்பது எப்படி என்று கேள்வியமைந்திருக்கவேண்டும்..
இப்படிக்கேள்விக்கெல்லாம் மானிடருக்கு விடை தெரியாது..
அதனால்தான்
மனைவி அமைவதெல்லாம்(அமையாமல்போவதும்) இறைவன் கொடுத்தவரம் என்று பாடினான்..

arumuga nainar said...

Dear Sir,

I also waiting for the higher class invitation from your side.

dawoodkhanameer said...

புதியவர்கல்லுக்கு பயிர்சி தரும் வன்னம் ஜாதக அலசல் அருமை. தொடரவும் . ஒரு சந்தேகம் லக்னாதிபதி எங்கிருந்தாலும் அவரால் பார்கபடும் இடம் விருதி அடையும் என்ரு சிலர் சொல்கிரார்கல்.அது சரியா.அப்படி சரி என்ரால், லக்னாதிபதி சந்திரன் 2 ஆம் இடத்தை பார்கிரார்.ஆனல் குடும்பம் இல்லை.அப்படி என்ரால் லக்னாதிபதி பார்கும் பார்வைக்கு பலன் என்ன?

SP.VR. SUBBAIYA said...

//////Blogger minorwall said...
////////SP.VR. SUBBAIYA said...
Blogger rajakala said...
அய்யா மூன்றில் உளள ராகு அவருக்கு செல்வத்தை கொடுக்கவில்லை? ஏழில் சனி ஆட்சியாக இருப்பது தோஷ நிவர்த்தி ஆகாதா?//////
பழைய பாடங்களைப் படியுங்கள். செல்வத்திற்கு யார்/எது காரணமென்று புலப்படும்! சனி ஆட்சி பெற்றால் தோஷ நிவர்த்தி என்று யார் சொன்னது?\\\\\\\\\\\

கேள்வியில் குழப்பமிருப்பதால் பதில் இப்படி அமைந்திருக்கிறது..
ஆனால் இந்தக்கேள்வியின் தன்மையை ஆராய்ந்ததில் சனி இங்கு ஏழாம் வீட்டு அதிபதியாகிறான்..
கேந்திரத்தில் இருந்து ஆட்சிபெற்று லக்கினத்தத் தன் பார்வையில் கொண்டுள்ளான் என்கிற ரீதியில்
ஏழாம் ஆதி பலம் பொருந்தியவனாக இருந்தும் களத்திரத்துக்குப் பங்கம் வகிப்பது என்பது எப்படி என்று கேள்வியமைந்திருக்கவேண்டும்.. இப்படிக்கேள்விக்கெல்லாம் மானிடருக்கு விடை தெரியாது..
அதனால்தான் மனைவி அமைவதெல்லாம்(அமையாமல்போவதும்) இறைவன் கொடுத்தவரம் என்று பாடினான்..//////

கடக லக்கினத்திற்கு சனிகடும் பகைவன். அவனுக்கு அஷ்டமாதிபதி (8th lord) வேலையும் உண்டு. 7ல் அமர்ந்து அந்த வேலையைச் செய்தான். அத்துடன் குடும்பஸ்தான அதிபதி சூரியன் (2nd lord) விரையத்தில் அமர்ந்து குடும்ப வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிவிட்டான். அது காமராஜரின் தனிப் பட்ட வாழ்க்கை என்பதால் அதை விவரித்து எழுதவில்லை மைனர்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger arumuga nainar said...
Dear Sir,
I also waiting for the higher class invitation from your side.///////

உங்களுக்கு இல்லாமலா நைனா(ர்) அனுப்பிவைக்கிறேன்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger dawoodkhanameer said...
புதியவர்களுக்கு பயிற்சி தரும் வண்ணம் ஜாதக அலசல் அருமை. தொடரவும் . ஒரு சந்தேகம் லக்னாதிபதி எங்கிருந்தாலும் அவரால் பார்க்கப்படும் இடம் விருத்தி அடையும் என்று சிலர் சொல்கிறார்கள்.அது சரியா.அப்படி சரி என்றால், லக்னாதிபதி சந்திரன் 2 ஆம் இடத்தை பார்கிறார்.ஆனல் குடும்பம் இல்லை.அப்படி என்றால் லக்னாதிபதி பார்க்கும் பார்வைக்கு பலன் என்ன?//////

அந்த இடத்திற்கான அமைச்சரை மீறி அவர் என்ன செய்வார் சொல்லுங்கள்! இரண்டாம் வீட்டைப்பற்றி, அதன் நாயகன், காரகன், பார்வைகள் பற்றி நிறைய எழுதியுள்ளேன். பழைய பாடங்களில் உள்ளது. மொத்தம் 480 பாடங்கள். அனைத்த்யும் படித்தீர்களா? அதைச் சொல்லுங்கள்

rajakala said...

thank you thank you minorwall for considering my question and iam pleased at the way you elaborated on it

minorwall said...

ஆசியரின் விளக்கத்துக்கு நன்றி..

அன்பர் ஆலாசியத்தின் கூர்ந்த பார்வை அவருக்குக் தலை வலிதராமல் இருந்தால் சரி..

ஒரு அம்மையார் ஜெயிலுக்குப் போக வழி எது? என்று கேட்டிருக்கிறார்..பாவம்..
அவருக்கு ஏன் இப்படி ஒரு ஆர்வம் என்று புரியவில்லை..

Jagannath said...

சிறப்பான அலசல் குருவே. அவர் நாத்திகராக இருந்ததற்கு ஜாதக ரீதியாக ஏதாவது காரணமுண்டா? மேலும் மறைவிடத்தில் உள்ள புத ஆதித்ய யோகம் இவ்வளவு சிறந்த பலனை அளிக்கும் என்பது எனக்கு புதிய செய்தி.

ananth said...

திருமண வாழ்க்கை அமைவது என்பது வேறு, குடும்பம் அமைவது என்பது வேறு. திருமணம் செய்யாமலேயே சகோதரர்களின் குடும்பம், உறவினர்களின் குடும்பம் இவர்களை தன் குடும்பமாக எண்ணி அவர்களோடு ஒட்டி வாழ்பவர்கள் இருக்கிறார்கள். முன்னால் பிரதமர் வாஜ்பாய் அவர்களும் திருமணம் செய்துக் கொள்ளாமல் தத்துப் பிள்ளை, அவர்கள் மூலம் குடும்பம் என்று வாழ்கிறார். காமராஜர் அவர்களும் தன்னைச் சுற்றி இருந்தவர்களைத் தன் குடும்பமாக எண்ணி இருந்திருக்கலாம். இதுதான் சுக்கிரன் இரண்டில் இருப்பதற்கும் அவரை லக்னாதிபதி சந்திரன் பார்ப்பதற்குமான பலனாக இருக்க வேண்டும்.

//போற்றி போற்றி சூரிய பகவானே போற்றி//

மேலே உள்ளது இளங்கோவடிகளின் சிலப்பதிகாரப் பாடலை ஒத்துள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

”ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்.”

முதலில் திங்களைப் போற்றியவர் அடுத்து ஞாயிரையும் அடுத்து மழையையும் போற்றுவதாக அந்த முழுப் பாடல் அமைந்துள்ளது. ஞாயிறைப் (சூரியன்) போற்றும் பாடலை மட்டும் இங்கு கொடுத்திருக்கிறேன்.

தமிழ் விரும்பி said...

உண்மை தான் மைனர்...
தலைவலி இல்லை... கண் வழி தான் அதிகமாகி விட்டது. சீக்கிரம் கண்ணாடியை மாத்தும் நிலை வருகிறது.

சிவபிரகாஷம் said...

//அவரை முதலமைச்சர் பதவிவரைக்கும் உயர்த்திக்கொண்டு சென்றன!
// Sir , I didn't get a chance to meet him, but i heard about him many places. Enjoyable???... :)

//வாத்தியார் ஐயா வணக்கம்.// Next tie to Kannan... where were you?
Kannaa unai theedukiren vaaa....
Sorry Sorry,
Anna unai theedukiraar vaa.

Uma said...

ஒரு அம்மையார் ஜெயிலுக்குப் போக வழி எது? என்று கேட்டிருக்கிறார்..பாவம்..
அவருக்கு ஏன் இப்படி ஒரு ஆர்வம் என்று புரியவில்லை..//

எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான் ஹி ஹி. ஜாதகத்தின் நான்கு மூலைகளிலும் (மீனம், மிதுனம், கன்னி, தனுசு) தீய கிரகங்கள் இருந்தால் அவர்
ஜெயிலுக்குப்போவார் என்று ஒருமுறை படித்ததாக ஞாபகம். (சரியா என்று வாத்தியார்தான் சொல்லவேண்டும்). காமராஜர் ஜாதகத்தில் தனுசுவில் தீய கிரகம் இல்லையே, அப்படியும் எப்படி ஜெயிலுக்குப்போனார் என்று ஒரு குழப்பம்தான்.

Rajaram said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு மிகவும் அருமையான பதிவு இது.காமராஜர் அவர்களின் அந்த கறுப்பு நிறத்திற்கும்,அவருடைய நிதானமான குணத்திற்கும் லக்கினத்தைப் பார்த்த சனி தான் காரணம்.மேலும் கும்பராசிக்காரர்கள் மிகவும் நிதானமானவர்கள்.ஏனெனில் மகரம்,கும்பம் இரண்டு ராசிகளுக்குமே சனிதான் அதிபதி என்றாலும்,மகரச் சனிக்கும்,கும்பசனிக்கும் சில வேறுபாடுகள் உண்டு.மகரச்சனி மந்தனுக்குள் சிறிது வேகமாகமானவர்.ஏழாம் இடத்தின் ஆதிபத்யம் வாங்கியிருக்கும் சுக்கிரன் கூட 7ம் வீட்டிற்கு 8ல் தான் உள்ளார்.அது ஒரு மிகப்பெரிய‌ குறை அதுவும் ஒரு காரணம் குடும்பவாழ்க்கை இல்லாமல் போனதற்கு.

SP.VR. SUBBAIYA said...

Blogger ananth said...
திருமண வாழ்க்கை அமைவது என்பது வேறு, குடும்பம் அமைவது என்பது வேறு. திருமணம் செய்யாமலேயே சகோதரர்களின் குடும்பம், உறவினர்களின் குடும்பம் இவர்களை தன் குடும்பமாக எண்ணி அவர்களோடு ஒட்டி வாழ்பவர்கள் இருக்கிறார்கள். முன்னால் பிரதமர் வாஜ்பாய் அவர்களும் திருமணம் செய்துக் கொள்ளாமல் தத்துப் பிள்ளை, அவர்கள் மூலம் குடும்பம் என்று வாழ்கிறார். காமராஜர் அவர்களும் தன்னைச் சுற்றி இருந்தவர்களைத் தன் குடும்பமாக எண்ணி இருந்திருக்கலாம். இதுதான் சுக்கிரன் இரண்டில் இருப்பதற்கும் அவரை லக்னாதிபதி சந்திரன் பார்ப்பதற்குமான பலனாக இருக்க வேண்டும்.
//போற்றி போற்றி சூரிய பகவானே போற்றி//
மேலே உள்ளது இளங்கோவடிகளின் சிலப்பதிகாரப் பாடலை ஒத்துள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.
”ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்.”
முதலில் திங்களைப் போற்றியவர் அடுத்து ஞாயிரையும் அடுத்து மழையையும் போற்றுவதாக அந்த முழுப் பாடல் அமைந்துள்ளது. ஞாயிறைப் (சூரியன்) போற்றும் பாடலை மட்டும் இங்கு கொடுத்திருக்கிறேன்.

நல்லது. உங்களின் தகவல் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger rajakala said...
thank you thank you minorwall for considering my question and iam pleased at the way you elaborated on it//////

அவர் ஒரு பரோபகாரி. பலருக்கும் உதவி செய்பவர்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger minorwall said...
ஆசியரின் விளக்கத்துக்கு நன்றி..
அன்பர் ஆலாசியத்தின் கூர்ந்த பார்வை அவருக்குக் தலை வலிதராமல் இருந்தால் சரி..
ஒரு அம்மையார் ஜெயிலுக்குப் போக வழி எது? என்று கேட்டிருக்கிறார்..பாவம்..
அவருக்கு ஏன் இப்படி ஒரு ஆர்வம் என்று புரியவில்லை..///////

எல்லாம் ஒரு ஆர்வம்தான். களவையும் கற்று மற என்று சொல்லியிருக்கிறார்களே!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger Jagannath said...
சிறப்பான அலசல் குருவே. அவர் நாத்திகராக இருந்ததற்கு ஜாதக ரீதியாக ஏதாவது காரணமுண்டா? மேலும் மறைவிடத்தில் உள்ள புத ஆதித்ய யோகம் இவ்வளவு சிறந்த பலனை அளிக்கும் என்பது எனக்கு புதிய செய்தி.////////

இளமையில் நிலவிய வறுமை அதற்குக் காரணமாக இருக்கலாம். வறுமை பல குணமாற்றங்களைச் செய்யும்!

SP.VR. SUBBAIYA said...

Blogger தமிழ் விரும்பி said...
உண்மை தான் மைனர்...
தலைவலி இல்லை... கண் வழி தான் அதிகமாகி விட்டது. சீக்கிரம் கண்ணாடியை மாத்தும் நிலை வருகிறது.//////

கண்ணாடிக்கான அளவு மற்றும் குறிப்பு சீட்டை மைனருக்கு அனுப்பினால், அவர் ஜப்பானில் வாங்கி அனுப்பிவிடுவார். அவருக்கு அங்கே நிறையக் கடைகளைத் தெரியும்! இருவருக்குமே செலவு இருக்காது!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger சிவபிரகாஷம் said...
//அவரை முதலமைச்சர் பதவிவரைக்கும் உயர்த்திக்கொண்டு சென்றன!
// Sir , I didn't get a chance to meet him, but i heard about him many places. Enjoyable???... :)/////////

நான் அவரைச் சந்திருக்கிறேன். உடன் இருந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டிருக்கிறேன்! இன்றைக்கு நினைத்தாலும் மகிழ்வைத்தரும் விஷயம் அது!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Uma said...
ஒரு அம்மையார் ஜெயிலுக்குப் போக வழி எது? என்று கேட்டிருக்கிறார்..பாவம்..
அவருக்கு ஏன் இப்படி ஒரு ஆர்வம் என்று புரியவில்லை..//
எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான் ஹி ஹி. ஜாதகத்தின் நான்கு மூலைகளிலும் (மீனம், மிதுனம், கன்னி, தனுசு) தீய கிரகங்கள் இருந்தால் அவர் ஜெயிலுக்குப்போவார் என்று ஒருமுறை படித்ததாக ஞாபகம். (சரியா என்று வாத்தியார்தான் சொல்லவேண்டும்). காமராஜர் ஜாதகத்தில் தனுசுவில் தீய கிரகம் இல்லையே, அப்படியும் எப்படி ஜெயிலுக்குப்போனார் என்று ஒரு குழப்பம்தான்.////////

சூரியன் 12ல் இருந்தால் அரசாங்க விரோதம். சிறை தண்டனை எல்லாம் உண்டு. அதுபோல 10ஆம் வீட்டில் சனி இருந்தால், ஜாதகனை ஒரு நாளாவது லாக்கப்பில் வைத்துவிடும். இப்படி சில அமைப்புக்கள் உள்ளன சகோதரி! காமராஜருக்குப் பன்னிரெண்டில் சூரியன். அதுபோல மகாத்மா காந்திக்கும் 12ல் சூரியன். இருவரும் அப்போது இருந்த ஆங்கிலேய அரசை எதிர்த்து சிறைக்குச் சென்றார்கள்

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Rajaram said...
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு மிகவும் அருமையான பதிவு இது.காமராஜர் அவர்களின் அந்த கறுப்பு நிறத்திற்கும்,அவருடைய நிதானமான குணத்திற்கும் லக்கினத்தைப் பார்த்த சனி தான் காரணம்.மேலும் கும்பராசிக்காரர்கள் மிகவும் நிதானமானவர்கள்.ஏனெனில் மகரம்,கும்பம் இரண்டு ராசிகளுக்குமே சனிதான் அதிபதி என்றாலும்,மகரச் சனிக்கும்,கும்பசனிக்கும் சில வேறுபாடுகள் உண்டு.மகரச்சனி மந்தனுக்குள் சிறிது வேகமாகமானவர்.ஏழாம் இடத்தின் ஆதிபத்யம் வாங்கியிருக்கும் சுக்கிரன் கூட 7ம் வீட்டிற்கு 8ல் தான் உள்ளார்.அது ஒரு மிகப்பெரிய‌ குறை அதுவும் ஒரு காரணம் குடும்பவாழ்க்கை இல்லாமல் போனதற்கு.///////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

minorwall said...

///SP.VR. SUBBAIYA said...
கண்ணாடிக்கான அளவு மற்றும் குறிப்பு சீட்டை மைனருக்கு அனுப்பினால், அவர் ஜப்பானில் வாங்கி அனுப்பிவிடுவார். அவருக்கு அங்கே நிறையக் கடைகளைத் தெரியும்! இருவருக்குமே செலவு இருக்காது!//////

சிங்கபூரிலே கிடைக்காத கண்ணாடியா இருக்கு?
ஜப்பான் ஸ்பெஷல் தான் வேணும்னா நீங்க சொல்ற மாதிரி செய்யலாம்..
நேராவே ஆலாசியம் ஒரு ட்ரிப் அடிக்கலாம்.என்ன? கொஞ்சம் காஸ்ட்லி..
பட், ஆலாசியம் சாருக்குத் தாங்கும்..ஒன்னும் பிரச்சினையில்லே..

minorwall said...

///SP.VR. SUBBAIYA said...
நான் அவரைச் சந்திருக்கிறேன். உடன் இருந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டிருக்கிறேன்! இன்றைக்கு நினைத்தாலும் மகிழ்வைத்தரும் விஷயம் அது!////
நெகிழ்ச்சியான விஷயம்..

நான் அவருக்கு அடுத்த பெரிய கிங்மேக்கரை,மக்கள் தலைவரை நேரில் சந்தித்திருக்கிறேன்..

Sivachandran Balasubramaniam said...

ஐயா,

நீங்கள் மேல்நிலை பாடம், மேல்நிலை பாடம் என்று கூறி முக்கிய குறிப்புகளை தர மறுக்கிறீர்கள் !!! ஒன்று மேல்நிலை வகுப்பில் என்னை சேர்த்து பழைய பாடங்களை எனக்கு தாருங்கள். அல்லது கோயம்புத்தூரில் உங்கள் புத்தகம் எங்கே விற்பனை செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் வடகோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கலகத்துக்கு எதிரில் FACT என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு 10 மாத காலமாக உங்கள் ப்ளாக்கில் தினமும் குறைந்தது ஒரு 1 மணி நேரம் செலவிடுகிறேன் !!!

தயவு செய்து பதில் தரவும் !!!

சிவச்சந்திரன்

Subbiah Veerappan said...

//////Blogger Sivachandran Balasubramaniam said...
ஐயா,
நீங்கள் மேல்நிலை பாடம், மேல்நிலை பாடம் என்று கூறி முக்கிய குறிப்புகளை தர மறுக்கிறீர்கள் !!! ஒன்று மேல்நிலை வகுப்பில் என்னை சேர்த்து பழைய பாடங்களை எனக்கு தாருங்கள். அல்லது கோயம்புத்தூரில் உங்கள் புத்தகம் எங்கே விற்பனை செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் வடகோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கலகத்துக்கு எதிரில் FCT என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு 10 மாத காலமாக உங்கள் ப்ளாக்கில் தினமும் குறைந்தது ஒரு 1 மணி நேரம் செலவிடுகிறேன் !!!
தயவு செய்து பதில் தரவும் !!!
சிவச்சந்திரன்/////

நீங்கள் உங்கள் செலவழிக்கும் நேரத்தைக் கூறுகிறீர்கள். நான் எவ்வளவு நேரம் செலவழிகிறேன் தெரியுமா? எத்தனை ஆண்டுகளாக எழுதுகிறேன் தெரியுமா? முன்பிருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை. இணையத்தில் எத்தனை திருடர்கள் உலவுகிறார்கள் தெரியுமா?

அவர்களுக்காக யோசித்துத்தான் மேல்நிலைப் பாடங்களை பதிவில் வெளியிடுவதில்லை. அதற்கென்று உள்ள closed classroomல் பதிவிடுகிறேன்.

முதலில் பதிவில் உள்ள பாடங்கள் அனைத்தையும் படியுங்கள். பிறகு மேல்நிலை வகுப்பில் சேர்ந்து படிக்கலாம்.

/////நீங்கள் மேல்நிலை பாடம், மேல்நிலை பாடம் என்று கூறி முக்கிய குறிப்புகளை தர மறுக்கிறீர்கள்////

நான் யாருக்கும் ,மின்னஞ்சலில் பாடங்களை அனுப்பவதில்லை. உங்களுக்குத் தேவை என்றால் நீங்கள்தான் அந்தந்த வகுப்பிற்கு வந்து பாடங்களைப் படிக்க வேண்டும்! புரிந்ததா?