---------------------------------------------------------------------------------------
Astrology அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்!
இந்தியாவில் அதிகம் பேரால் கையாளப்பட்ட, பார்க்கப்பெற்ற, அலசப்பெற்ற ஜாதகத்தை இன்று உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
அன்னை இந்திரா காந்தி அவர்களின் ஜாதகம்தான் அது!
----------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
அவருடைய வாழ்க்கை அனைவரும் அறிந்ததே. அதனால் அலசுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஜோதிடம் கற்றுக்கொண்டிருப்பவர்கள். இது போன்று நன்கு அறிந்தவர்களின் ஜாதகத்தை அலசிப் பார்த்தே தங்களுடைய ஜோதிட அறிவை மேன்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
திருமதி. இந்திரா காந்தி அவர்கள் 19.11.1917 அன்று இரவு 11.11 மணிக்கு அலகாபாத் நகரில் பிறந்தார்.
அவர் கடக லக்கினக்காரர். மகர ராசிக்காரர்.
ஜாதகத்தின் மிகச் சிறப்பான அம்சம் 3 பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன.
சந்திரனும் சனியும் லக்கினம் மற்றும் ஏழாம் வீட்டில் பரிவர்த்தனை பெற்றுள்ளன.
சூரியனும் செவ்வாயும் இரண்டு மற்றும் ஐந்தாம் வீட்டில் பரிவர்த்தனை பெற்றுள்ளன.
குருவும் சுக்கிரனும் ஆறு மற்றும் பதினொன்றாம் வீட்டில் பரிவர்த்தனை பெற்றுள்ளன
மூன்று பரிவர்த்தனை யோகங்களால் ஆறு கிரகங்கள் உச்சம் பெற்றதைப் போன்ற வலிமையைப் பெறுகின்றன. பொதுவாக 3 அல்லது 4 கிரகங்கள் ஜாதகத்தில் உச்சம் பெற்றிருந்தால் அது ஜாதகருக்கு அல்லது ஜாதகிக்கு ராஜயோகத்தைக்கொடுக்கும்
இந்தப் பரிவர்த்தனைகள்தான் அவரை வலிமையுடையர் ஆக்கின. மன உறுதி கொண்டவர் ஆக்கின. பரிவர்த்தனைகளின் பலம் அதீத சக்திகளை உடையது. அந்த அதீத சக்திதான் அவரை இந்தியப் பிரதமாராக்கியதுடன், தொடர்ந்து 17 ஆண்டுகள் அவரைப் பதவியில் வைத்து அழகு பார்க்கவும் செய்தது.
எதிர்ப்பு சக்திகளையெல்லாம் உடைத்த அவர் தேசத்தின் நிர்வாகத்தை சீரமைத்தார். ஸ்திர தன்மையைக் கொடுத்தார்.
அவருக்கு சிம்மாசன யோகம் இருந்தது. 10ஆம் அதிபதி செவ்வாய் இரண்டில் வந்தமர்ந்தார்.அத்துடன் புத ஆதித்ய யோகம் ஐந்தாம் இடத்தில் இருந்தது.
குரு 11ல் அமர்ந்து, அவருக்கு செல்வத்தையும், வாழ்க்கை வசதிகளையும் அள்ளிக்கொடுத்தார்.ஆறில் இருந்த ராகு, அவர் தன்னுடைய எதிரிகளை எல்லாம் துவம்சம் செய்ய உதவினார்.
சனி திசை சந்திர புத்தியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவை இரண்டும் மாரக இடமான ஏழுடன் சம்பந்தப்பட்டிருந்தால் அந்தக் காரியத்தைச் செவ்வனே செய்தன. 31.10.1984 ல் அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாகவே, சென்னையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் அவரை எச்சரித்தார்.
ஜோதிடத்தில் முழு நம்பிக்கை வைத்திருந்த திருமதி. காந்தி அவர்கள் அந்தத்தேதியில், தன்னுடைய நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருந்தார். இருந்தாலும் விதிவிடவில்லை. மெய்காப்பாளர்கள் மூலம் அதை நிறைவேற்றியது. அவருடைய பாதுகாப்பிற்காகப் போடப் பட்டிருந்த காவலர்களில் இருவர் அவருக்கு எமனாக மாறி அவரைச் சுட்டுக்கொன்ற கொடுமையை என்னவென்பது?
எல்லாம் விதி. வேறு என்னத்தைச் சொல்லமுடியும்?
அவர் சிறு வயதில் மிகப் பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண்ணாக இருந்தார். கல்கத்தாவில் உள்ள சந்திநிகேதன் பள்ளியிலும், பிறகு லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திலும் படித்தார். மத்தியவயதில் அரசியலில் ஜொலித்தார். பிரதமரின் மகள் என்னும் மரியாதையோடு வலம் வந்தார்.
தன்னுடைய 49வது வயதில் நாட்டின் பிரதமரானார். சுமார் 17ஆண்டுகள் இந்தையப் பிரதமராக ஆட்சி செலுத்தினார். தனது 67வது வயதில் (31 October 1984 அன்று ) உயிர் நீத்தார்.
அவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் சனி இருந்ததன் காரணமாக 25 வயதில் (1942ல்) திருமணமான அவர் 43 வயதில் (1960ல்) தன் கணவர் பெரோஸ் காந்தியைப் பறிகொடுக்க நேர்ந்தது.
லக்கினத்தில் சனி இருப்பது அவயோகம். அதுவும் பெண்கள் ஜாதகத்தில் அப்படியொரு அமைப்பு இருந்தால் அவள் இளம் வயதிலேயே விதைவையாகி விடுவாள். சனியினுடன் சுபக்கிரங்களின் சேர்க்கை அல்லது பார்வை இருப்பது மட்டுமே அதற்கு விதிவிலக்காகும்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
பதிவுக்கு நன்றிகள் ஐயா!
ReplyDelete/////அவருடைய வாழ்க்கை அனைவரும் அறிந்ததே. அதனால் அலசுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஜோதிடம் கற்றுக்கொண்டிருப்பவர்கள். இது போன்று நன்கு அறிந்தவர்களின் ஜாதகத்தை அலசிப் பார்த்தே தங்களுடைய ஜோதிட அறிவை மேன்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.////
உண்மை மிகவும் நேர்த்தியான கருத்து...
நன்றி!
Guru Vanakkam,
ReplyDeleteArumayana alasal. Also it gives a pleasure to see this kind of Yoga jadhakam.
PS I still didn't get my invite to to the higher class. or did i miss it ?
ஐயா,
ReplyDeleteஒரு வாரத்தில் மூன்று ஜாதக அலசல்கள். எனக்கு பிடித்திருக்கிறது, நன்றி.
பொறுமையுடன் பதிவும் இட்டு சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கும் உங்கள் பணி மகத்தானது.
நன்றிகள் பல.
வணக்கத்துடன்
மாணவி தேமொழி
உலகம் வியந்த அற்புத பெண்மனி இந்திரா காந்தி பற்றி ஜாதக அலசல் படம் மிகச்சிறப்பாக தந்தமைக்கு,
ReplyDeleteமிக்க நன்றி,
அம்மையரின் ஜாதகத்தில் பரிவர்த்தனை யோகம் மூலம் 6 கிரகங்கள் பலம் பெற்றது மிகப்பெரிய யோகம்,
மேலும் 5ந்தம் இடதிற்க்கு குரு பார்வை மற்றும் செவ்வாய்(யோககாரன்) பார்வை,செவ்வாய் 2ல் இருந்தும் அம்மையார் தனது புதல்வர்களையும் மிக குறைந்த வயதில் துர் மரணத்தில் இழப்பதற்க்கு காரணம் கூறினால் மிக பயனுள்ளதாக அமையும்.
நன்றி,
தங்களின் மணவன்,
முருகராஜன்.
Good morning everyone,
ReplyDeleteI have one doubt regarding this parivarthana yoga, you once written that the parivarthana yoga between Mars and saturn is not good.Can you explain more abt that? i havnt received your lessons from you mail id. i request you to check whether my id is included.
Thank you!
ஐயா, உங்கள் கவனத்திற்கு: பதிவில் அம்மையாரின் பிறந்த நாளில் தட்டச்சு பிழை
ReplyDelete//அவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் சனி இருந்ததன் காரணமாக 25 வயதில் (1942ல்) திருமணமான அவர் 43 வயதில் (1960ல்) தன் கணவர் பெரோஸ் காந்தியைப் பறிகொடுக்க நேர்ந்தது.//
ReplyDeleteஅத்துடன் சுக்கிரனுடன் ராகு, அதற்கு 7ல் கேது, மாந்தி என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் 5ந்தம் இடதிற்க்கு குரு பார்வை மற்றும் செவ்வாய்(யோககாரன்) பார்வை,செவ்வாய் 2ல் இருந்தும் அம்மையார் தனது புதல்வர்களையும் மிக குறைந்த வயதில் துர் மரணத்தில் இழப்பதற்க்கு காரணம் கூறினால் மிக பயனுள்ளதாக அமையும்//
ReplyDeleteஇரண்டில் சூரியன் மூன்று / பனிரெண்டுக்கு அதிபதியான புதனுடன் சேர்ந்திருப்பதும், பனிரெண்டில் டபுள் வில்லன்கள் (கேது/மாந்தி) சேர்ந்திருப்பதுதான் இதற்குக் காரணமா? வாத்தியார்தான் இது சரியா என்று சொல்லவேண்டும்.
செவ்வாயின் பார்வை எட்டாம் இடத்திற்கு இருப்பதால்தான் அவருக்கு ஆயுதத்தால் மரணம் நேர்ந்ததா?
வாத்தியார் ஐயா வணக்கம்.
ReplyDeleteவகுப்பறை கலைகட்டி கொண்டு இருக்கு. தற்பொழுது வரும் பாடங்கள் எல்லாம் ஒரே சிக்ஸ் யும் போரும் மாகத்தான் இருக்கு ஆக மொத்தம் வகுப்பறை என்னும் கிரிக்கெட் மைதானம் சும்மா தக தக என்று ஜொலிக்குது.
சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாகவே, சென்னையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் அவரை எச்சரித்தார்.//
ReplyDeleteயார் அவர்?
///RMURUGARAJAN said...
ReplyDeleteஅம்மையார் தனது புதல்வர்களையும் மிக குறைந்த வயதில் துர் மரணத்தில் இழப்பதற்க்கு காரணம் கூறினால் மிக பயனுள்ளதாக அமையும்.////
அதுக்குக் காரணம் சோதிட ரீதியிலே சொல்லனுமின்னா இந்தம்மாவோட மருமக ஜாதகத்திலேயும் தலைவர் மிஸ்டர். சனியன் லக்னத்திலேயே டேரா போட்ருக்கார்..
Date of birth :
9th Dec.1946
Time of birth : 21:30 hrs. ( Italian Zonal Standard Time)
Place of birth : Turin (Italy) 45N03, 07E40
என்னமோ போங்க..போற போக்கைப்பார்த்தா கொஞ்சம்கொஞ்சமா ஜோசியத்தை நம்புறாப்போலே
ஆகிப்பூடும் போலே இருக்கே..
ஆசிரியர் அவர்களுக்கு அம்மையாரின் அதீத தைரியத்துக்கும்,தைரியத்திற்கும் லக்கினத்தைப்பார்த்த லக்கினாதிபதி காரணம்.தன் கண் முன்னே தனது அரசியல் வாரிசாக வளர்த்த மகனுக்கும் காரியம் செய்ய வைத்தது,5 ல் நின்ற புத்திரஸ்தான விரோதிகளான சூரியன்,புதன்(இவருக்கு 3,12ம் வீட்டு ஆதிபத்யம் வேறு) கூட்டணி என்பது என் கணிப்பு சரியா?தவறா?.
ReplyDeleteஆசிரியர் அவர்கள் தயவுசெய்து எனக்கும் மேல்நிலைப்பாடங்கள் கிடைக்க ஆவணசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.....
///அவருக்கு சிம்மாசன யோகம் இருந்தது. 10ஆம் அதிபதி செவ்வாய் இரண்டில் வந்தமர்ந்தார்.///
ReplyDeleteபத்தாம் அதிபதி ரெண்டாமிடத்தில் இருந்தால் சிம்மாசன யோகமா?
இல்லே..சும்மாதான் கேட்டேன்..எனக்கு ரொம்பத் தெரிஞ்சவுரு ஒருத்தருக்கு அப்பிடி இருக்குது..அதான்..
/////Uma said...
ReplyDeleteசுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாகவே, சென்னையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் அவரை எச்சரித்தார்.//
யார் அவர்?\\\\\\\\
நினைத்தேன்-கேட்டீர்..
நூறு வயது..
(பழைய பாடல் மேட்டில் படிக்கவும்..)
/////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteபதிவுக்கு நன்றிகள் ஐயா!
/////அவருடைய வாழ்க்கை அனைவரும் அறிந்ததே. அதனால் அலசுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஜோதிடம் கற்றுக்கொண்டிருப்பவர்கள். இது போன்று நன்கு அறிந்தவர்களின் ஜாதகத்தை அலசிப் பார்த்தே தங்களுடைய ஜோதிட அறிவை மேன்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.////
உண்மை மிகவும் நேர்த்தியான கருத்து...
நன்றி!//////
நல்லது. நன்றி ஆலாசியம்!
////Blogger RAMADU Family said...
ReplyDeleteGuru Vanakkam,
Arumayana alasal. Also it gives a pleasure to see this kind of Yoga jadhakam.
PS I still didn't get my invite to to the higher class. or did i miss it ?/////
உங்களுக்கு அழைப்பு அனுப்பப்பெற்றுள்ளது!
///////Blogger மாணவி தேமொழி said...
ReplyDeleteஐயா,
ஒரு வாரத்தில் மூன்று ஜாதக அலசல்கள். எனக்கு பிடித்திருக்கிறது, நன்றி.
பொறுமையுடன் பதிவும் இட்டு சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கும் உங்கள் பணி மகத்தானது.
நன்றிகள் பல.
வணக்கத்துடன்
மாணவி தேமொழி//////
இன்றையத் தேதியில் 2654 தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். பொறுமை இல்லையென்றால், தொடர்ந்து எழுத முடியுமா என்ன?
//////Blogger RMURUGARAJAN said...
ReplyDeleteஉலகம் வியந்த அற்புத பெண்மனி இந்திரா காந்தி பற்றி ஜாதக அலசல் படம் மிகச்சிறப்பாக தந்தமைக்கு,
மிக்க நன்றி,
அம்மையாரின் ஜாதகத்தில் பரிவர்த்தனை யோகம் மூலம் 6 கிரகங்கள் பலம் பெற்றது மிகப்பெரிய யோகம்,
மேலும் 5ந்தம் இடதிற்க்கு குரு பார்வை மற்றும் செவ்வாய்(யோககாரன்) பார்வை,செவ்வாய் 2ல் இருந்தும் அம்மையார் தனது புதல்வர்களையும் மிக குறைந்த வயதில் துர் மரணத்தில் இழப்பதற்க்கு காரணம் கூறினால் மிக பயனுள்ளதாக அமையும்.
நன்றி,
தங்களின் மாணவன்,
முருகராஜன்.//////
ஐந்தில் விரையாதிபதி புதன் இருப்பதைக் கவனியுங்கள். புதல்வர்களை அல்ல! ஒரு புதல்வனை - சஞ்சைய் காந்தியை மட்டும் (அவர் இருக்கும் போது பறி கொடுத்தார்) அதற்கு மகனின் அல்ப ஆயுசும் ஒரு காரணம்
Blogger govind said...
ReplyDeleteGood morning everyone,
I have one doubt regarding this parivarthana yoga, you once written that the parivarthana yoga between Mars and saturn is not good.Can you explain more abt that? i havnt received your lessons from you mail id. i request you to check whether my id is included.
Thank you!/////
நீங்கள் சுட்டிக்காட்டும் சனி, செவ்வாய் பரிவர்த்தனை இந்த ஜாதகத்தில் இல்லை சுவாமி. அதற்கான பலனை முன்பே எழுதியுள்ளேன். பழைய பாடங்களில் உள்ளது தேடிப் படியுங்கள். உங்கள் மெயில் ஐ.டி என்ன?
//////Blogger மாணவி தேமொழி said...
ReplyDeleteஐயா, உங்கள் கவனத்திற்கு: பதிவில் அம்மையாரின் பிறந்த நாளில் தட்டச்சு பிழை//////
தட்டச்சுப் பிழையைச் சரி செய்துவிட்டேன். சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி சகோதரி!
///////Blogger ananth said...
ReplyDelete//அவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் சனி இருந்ததன் காரணமாக 25 வயதில் (1942ல்) திருமணமான அவர் 43 வயதில் (1960ல்) தன் கணவர் பெரோஸ் காந்தியைப் பறிகொடுக்க நேர்ந்தது.//
அத்துடன் சுக்கிரனுடன் ராகு, அதற்கு 7ல் கேது, மாந்தி என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்./////
உண்மைதான். திருமண பலாபலன்களுக்கு, லக்கினம், சந்திர ராசி மற்றும் சுக்கிரனை வைத்தும் பலன்களைப் பார்க்க வேண்டும். அப்படி ஆழமாக ஆராய்ந்து பார்ப்பவர்கள் மிகவும் குறைவு. நன்றி ஆனந்த்!
Blogger Uma said...
ReplyDeleteமேலும் 5ந்தம் இடதிற்க்கு குரு பார்வை மற்றும் செவ்வாய்(யோககாரன்) பார்வை,செவ்வாய் 2ல் இருந்தும் அம்மையார் தனது புதல்வர்களையும் மிக குறைந்த வயதில் துர் மரணத்தில் இழப்பதற்க்கு காரணம் கூறினால் மிக பயனுள்ளதாக அமையும்//
இரண்டில் சூரியன் மூன்று / பனிரெண்டுக்கு அதிபதியான புதனுடன் சேர்ந்திருப்பதும், பனிரெண்டில் டபுள் வில்லன்கள் (கேது/மாந்தி) சேர்ந்திருப்பதுதான் இதற்குக் காரணமா? வாத்தியார்தான் இது சரியா என்று சொல்லவேண்டும்.
செவ்வாயின் பார்வை எட்டாம் இடத்திற்கு இருப்பதால்தான் அவருக்கு ஆயுதத்தால் மரணம் நேர்ந்ததா?///////
ஆமாம். ஆமாம். ஆமாம். நன்று. தேறிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!
/////////Blogger kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா வணக்கம்.
வகுப்பறை களைகட்டி கொண்டு இருக்கு. தற்பொழுது வரும் பாடங்கள் எல்லாம் ஒரே சிக்ஸரும் பவுண்டரியுமாகத்தான் இருக்கு ஆக மொத்தம் வகுப்பறை என்னும் கிரிக்கெட் மைதானம் சும்மா தக தக என்று ஜொலிக்குது.///////
நீங்கள் சந்தோஷப்பட்டால் சரிதான்! எழுதும் நோக்கமும் அதுதான்!
/////Blogger Uma said...
ReplyDeleteசுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாகவே, சென்னையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் அவரை எச்சரித்தார்.//
யார் அவர்?///////
அவர் பெயர் சுந்தரம்! முன்பு பத்திரிக்கைகளில் அச் செய்தி வந்திருந்தது. அக்டோபர் 31 வரை தனக்கு நேரம் சரியில்லை என்பதால் அவர் தன்னுடைய வெளி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு வீட்டிற்குள்ளேயே இருந்தார். விதிவிடவில்லை. மெய்க்காப்பாளர்கள் (Body guards) வடிவில் நுழைந்துவிட்டது
/////Blogger minorwall said...
ReplyDelete///RMURUGARAJAN said...
அம்மையார் தனது புதல்வர்களையும் மிக குறைந்த வயதில் துர் மரணத்தில் இழப்பதற்க்கு காரணம் கூறினால் மிக பயனுள்ளதாக அமையும்.////
அதுக்குக் காரணம் சோதிட ரீதியிலே சொல்லனுமின்னா இந்தம்மாவோட மருமக ஜாதகத்திலேயும் தலைவர் மிஸ்டர். சனியன் லக்னத்திலேயே டேரா போட்ருக்கார்..
Date of birth :
9th Dec.1946
Time of birth : 21:30 hrs. ( Italian Zonal Standard Time)
Place of birth : Turin (Italy) 45N03, 07E40
என்னமோ போங்க..போற போக்கைப்பார்த்தா கொஞ்சம்கொஞ்சமா ஜோசியத்தை நம்புறாப்போலே
ஆகிப்பூடும் போலே இருக்கே..///////
விடிய விடிய (அதாவது இரவு முழுவதும்) இராமயண கதை கேட்டவன், விடிந்தபின் “சீதைக்கு ராமன் சித்தப்பன்” என்றானாம். அந்தக் கதை தெரியுமா மைனர்? நான்கு ஆண்டுகளாகப் பதிவுகளைப் படித்துவிட்டு, நீங்கள் சொல்லும் சொல் (ஜோசியத்தை நம்புறாப்போலே) அதைத்தான் நினைவு படுத்துகிறது மைனர்
//////Blogger Rajaram said...
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு அம்மையாரின் அதீத தைரியத்துக்கும்,தைரியத்திற்கும் லக்கினத்தைப்பார்த்த லக்கினாதிபதி காரணம்.தன் கண் முன்னே தனது அரசியல் வாரிசாக வளர்த்த மகனுக்கும் காரியம் செய்ய வைத்தது,5 ல் நின்ற புத்திரஸ்தான விரோதிகளான சூரியன்,புதன்(இவருக்கு 3,12ம் வீட்டு ஆதிபத்யம் வேறு) கூட்டணி என்பது என் கணிப்பு சரியா?தவறா?./////
கரெக்ட். சரிதான்!
/////ஆசிரியர் அவர்கள் தயவுசெய்து எனக்கும் மேல்நிலைப்பாடங்கள் கிடைக்க ஆவணசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி...../////
உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன?
////Blogger minorwall said...
ReplyDelete///அவருக்கு சிம்மாசன யோகம் இருந்தது. 10ஆம் அதிபதி செவ்வாய் இரண்டில் வந்தமர்ந்தார்.///
பத்தாம் அதிபதி ரெண்டாமிடத்தில் இருந்தால் சிம்மாசன யோகமா?
இல்லே..சும்மாதான் கேட்டேன்..எனக்கு ரொம்பத் தெரிஞ்சவுரு ஒருத்தருக்கு அப்பிடி இருக்குது..அதான்..///////
தனக்கு கிடைக்கும் யோகத்தில் பாதியை உங்களுக்குத் தருவாரா? அதற்கு வழியிருக்கிறதா பாருங்கள் மைனர்!
/////Blogger minorwall said...
ReplyDelete/////Uma said...
சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாகவே, சென்னையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் அவரை எச்சரித்தார்.//
யார் அவர்?\\\\\\\\
நினைத்தேன்-கேட்டீர்..
நூறு வயது..
(பழைய பாடல் மெட்டில் படிக்கவும்..)/////
கேட்டார் - சொன்னேன்
நினைத்தேன் - மீண்டும் வந்தீர்
உமக்கும் நூறு வயது!
4ம் அதிபதி சுக்ரன் ராகு சம்பந்தப்பட்டதாலும் மாத்ரு காரகன் சந்திரன் சனி பார்வை பெற்றதாலும், தாயை சிறுவயதில் இழந்தார். 9ம் அதிபதி குரு 11ல் நின்றதாலும் அவர் தந்தைகாரகனான சூரியனைப் பார்த்ததாலும் தந்தையால் நல்ல பலன்களை அடைந்தார்.பாடம் அருமை நன்றி ஐயா!
ReplyDeleteநூறு வயது வாழ்த்துக்கு நன்றி..
ReplyDelete/////SP.VR. SUBBAIYA said...
தனக்கு கிடைக்கும் யோகத்தில் பாதியை உங்களுக்குத் தருவாரா? அதற்கு வழியிருக்கிறதா பாருங்கள் மைனர்!\\\\\
முழுசாவே தருவார்..ஏன்னா சாட்ஷாத் நம்ம மைனரேதான் அந்த ஆளு..
////விடிய விடிய (அதாவது இரவு முழுவதும்) இராமயண கதை கேட்டவன், ///
ReplyDeleteநீங்களே 'கதை' ன்னு சொல்லிட்டீங்களே..அதான்.. இதை எப்புடி உண்மைன்னு நம்புறது?
'நம்புனா நம்புங்கள்..நம்பாட்டி போங்கள்'ன்னும் நீங்களே சொல்லிடுவீங்க..
சுந்தரம் மாதிரி நெத்தியிலே அடிச்சாமாதிரி சொல்ல ஒரு ஆளு இன்னும் வரலையே..
அதான்..இப்பிடி..
நல்ல அலசல் குருவே. இந்திரா காந்தியைக் கொல்ல வேண்டுமென்று அவருடைய மெய்க்காப்பாளர் ஜாதகத்தில் இருந்திருக்குமா? ஒருவரைக் கொலைகாரன் ஆக்கும் ஜாதக அமைப்பு எது? ஒரு கொலைகாரரன் தனக்கு விதிக்கப்பட்டதைத்தான் செய்கிறான் என்பதால் அவனுக்குப் பாவம் சேராதா? இதைப் பற்றி கர்மவினை சித்தாந்தம் என்ன சொல்கிறது?
ReplyDeleteSir vanakam, good morning. How are you sir. Hope you are fine. After long time I am glad to comment here. Sir I am also glad to inform you that I have completed my b.e successfully this year and got job in wipro via an off campus. "Kamarajar jatakam alasal migavum arumai ,niraya jothida vithigal ore jataka alasalil kidaithathu, migavum payan ullathaga amaithathu "mikka nanri sir. Sir I think that Its my bad time for past 6 months Because I Faced lots of travels and disappointments. I was unable to do anything properly. I missed to follow your blog properly during that time,felt a lot for that. Atlast Sir I request you to invite me for the class room website. I hope you will invite me today . Thank you sir. By your student.love you sir. Take care. God bless you. See you again.you are fine. After long time I am glad to comment here. Sir I am also glad to inform you that I have completed my b.e successfully this year and got job in wipro via an off campus. "Kamarajar jatakam alasal migavum arumai ,niraya jothida vithigal ore jataka alasalil kidaithathu, migavum payan ullathaga amaithathu "mikka nanri sir. Sir I think that Its my bad time for past 6 months Because I Faced lots of travels and disappointments. I was unable to do anything properly. I missed to follow your blog properly during that time,felt a lot for that. Atlast Sir I request you to invite me for the class room website. I hope you will invite me today . Thank you sir. By your student.love you sir. Take care. God bless you. See you again.
ReplyDeleteசிம்மாசன யோகம் என்று ஒன்று இருக்கிறதா என்று சந்தேகம்தான் வருகிறது. பி வி ராமன் அவர்கள் தனது 300 Important Combinations என்ற நூலில் 300 யோகங்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறர். அதில் இந்த யோகத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.
ReplyDeletesir - Vanakkam. I have been learning a lot thru your blog for the past 1 year. May i also participate and receive lessons in the higher class room.
ReplyDeleteThank you.
Regards / Guru
gg0174@gmail.com
போற போக்கைப்பார்த்தா கொஞ்சம்கொஞ்சமா ஜோசியத்தை நம்புறாப்போலே
ReplyDeleteஆகிப்பூடும் போலே இருக்கே..//
அப்ப இத்தனை நாளா நீங்க நம்பலியா?
நினைத்தேன்-கேட்டீர்..நூறு வயது..//
ReplyDeleteதங்கள் ஆசிகளுக்கு நன்றிகள்!
ஆமாம். ஆமாம். ஆமாம். நன்று. தேறிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!//
ReplyDeleteரொம்ப நன்றி சார்!
ஒருவரைக் கொலைகாரன் ஆக்கும் ஜாதக அமைப்பு எது?//
ReplyDeleteஅவ், வரவர வகுப்பறைல தீவிரவாதம் அதிகமாயிடுச்சி போல. ஏற்கனவே ஜெயிலுக்குப் போவதற்கான அமைப்பு எதுன்னு நான் கேட்டதுக்கே மைனர் கமெண்ட் போட்டிருந்தார். இதுக்கு என்ன கமெண்ட் போடுகிறார்னு பார்க்கலாம்.
சிம்மாசன யோகம் என்று ஒன்று இருக்கிறதா என்று சந்தேகம்தான் வருகிறது.//
ReplyDeleteஐயகோ! மைனர் கண்டுகொண்டிருந்த பகல் கனவை இப்படி ஒரு குண்டைத் தூக்கிப்போட்டு கலைத்துவிட்டீர்களே ஆனந்த்?
/////Blogger kmr.krishnan said...
ReplyDelete4ம் அதிபதி சுக்ரன் ராகு சம்பந்தப்பட்டதாலும் மாத்ரு காரகன் சந்திரன் சனி பார்வை பெற்றதாலும், தாயை சிறுவயதில் இழந்தார். 9ம் அதிபதி குரு 11ல் நின்றதாலும் அவர் தந்தைகாரகனான சூரியனைப் பார்த்ததாலும் தந்தையால் நல்ல பலன்களை அடைந்தார்.பாடம் அருமை நன்றி ஐயா!/////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger minorwall said...
ReplyDeleteநூறு வயது வாழ்த்துக்கு நன்றி../////
/////SP.VR. SUBBAIYA said...
தனக்கு கிடைக்கும் யோகத்தில் பாதியை உங்களுக்குத் தருவாரா? அதற்கு வழியிருக்கிறதா பாருங்கள் மைனர்!\\\\\
முழுசாவே தருவார்..ஏன்னா சாட்ஷாத் நம்ம மைனரேதான் அந்த ஆளு..//////
எதிர்பார்த்ததுதான்!:-)))
//////Blogger minorwall said...
ReplyDelete////விடிய விடிய (அதாவது இரவு முழுவதும்) இராமயண கதை கேட்டவன், ///
நீங்களே 'கதை' ன்னு சொல்லிட்டீங்களே..அதான்.. இதை எப்புடி உண்மைன்னு நம்புறது?
'நம்புனா நம்புங்கள்..நம்பாட்டி போங்கள்'ன்னும் நீங்களே சொல்லிடுவீங்க..
சுந்தரம் மாதிரி நெத்தியிலே அடிச்சாமாதிரி சொல்ல ஒரு ஆளு இன்னும் வரலையே..
அதான்..இப்பிடி..//////
அவராகவா வருவார்? நீங்கள்தான் தேடிப் பிடிக்க வேண்டும் மைனர்!
//////Blogger Jagannath said...
ReplyDeleteநல்ல அலசல் குருவே. இந்திரா காந்தியைக் கொல்ல வேண்டுமென்று அவருடைய மெய்க்காப்பாளர் ஜாதகத்தில் இருந்திருக்குமா? ஒருவரைக் கொலைகாரன் ஆக்கும் ஜாதக அமைப்பு எது? ஒரு கொலைகாரரன் தனக்கு விதிக்கப்பட்டதைத்தான் செய்கிறான் என்பதால் அவனுக்குப் பாவம் சேராதா? இதைப் பற்றி கர்மவினை சித்தாந்தம் என்ன சொல்கிறது?/////
ஜாதகத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தால், இது போன்ற செயல்களில் ஜாதகன் ஈடுபடுவான். கர்மவினைகள் அடுத்த பிறவியிலும் ஜாதகனைத் தொடரும்.
//////Blogger Nareshkumar said...
ReplyDeleteSir vanakam, good morning. How are you sir. Hope you are fine. After long time I am glad to comment here. Sir I am also glad to inform you that I have completed my b.e successfully this year and got job in wipro via an off campus. "Kamarajar jatakam alasal migavum arumai ,niraya jothida vithigal ore jataka alasalil kidaithathu, migavum payan ullathaga amaithathu "mikka nanri sir. Sir I think that Its my bad time for past 6 months Because I Faced lots of travels and disappointments. I was unable to do anything properly. I missed to follow your blog properly during that time,felt a lot for that. Atlast Sir I request you to invite me for the class room website. I hope you will invite me today . Thank you sir. By your student.love you sir. Take care. God bless you. See you again.you are fine. After long time I am glad to comment here. Sir I am also glad to inform you that I have completed my b.e successfully this year and got job in wipro via an off campus. "Kamarajar jatakam alasal migavum arumai ,niraya jothida vithigal ore jataka alasalil kidaithathu, migavum payan ullathaga amaithathu "mikka nanri sir. Sir I think that Its my bad time for past 6 months Because I Faced lots of travels and disappointments. I was unable to do anything properly. I missed to follow your blog properly during that time,felt a lot for that. Atlast Sir I request you to invite me for the class room website. I hope you will invite me today . Thank you sir. By your student.love you sir. Take care. God bless you. See you again./////
பதிவில் உள்ள பாடங்களை எல்லாம் படித்துவிட்டீர்களா? முதலில் அதைச் செய்யுங்கள். அதற்குப் பிறகு மேல் நிலைப் பாடங்களைப் படிக்கலாம்!
//////Blogger ananth said...
ReplyDeleteசிம்மாசன யோகம் என்று ஒன்று இருக்கிறதா என்று சந்தேகம்தான் வருகிறது. பி வி ராமன் அவர்கள் தனது 300 Important Combinations என்ற நூலில் 300 யோகங்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறர். அதில் இந்த யோகத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.//////
யோகங்கள் மொத்தம் ஆயிரம். அவர் 300 யோகங்களை மட்டுமே குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
/////Blogger Gurumurthy said...
ReplyDeletesir - Vanakkam. I have been learning a lot thru your blog for the past 1 year. May i also participate and receive lessons in the higher class room.
Thank you./////
உங்களுக்கு அழைப்பு அனுப்பியுள்ளது!
/////Blogger Uma said...
ReplyDeleteபோற போக்கைப்பார்த்தா கொஞ்சம்கொஞ்சமா ஜோசியத்தை நம்புறாப்போலே
ஆகிப்பூடும் போலே இருக்கே..//
அப்ப இத்தனை நாளா நீங்க நம்பலியா?/////
அவருக்குப் பாதி நம்பிக்கை உள்ளது. பாதி நம்பிக்கை இல்லை. அதுதான் பிரச்சினை!
/////Blogger Uma said...
ReplyDeleteநினைத்தேன்-கேட்டீர்..நூறு வயது..//
தங்கள் ஆசிகளுக்கு நன்றிகள்!/////
உங்கள் வயசு. உங்கள் ஜாதகப்படிதான்:-)))))
//////Blogger Uma said...
ReplyDeleteஆமாம். ஆமாம். ஆமாம். நன்று. தேறிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!//
ரொம்ப நன்றி சார்!/////
இதற்கெல்லாமா நன்றி தெரிவிக்க வேண்டும்?
/////Blogger Uma said...
ReplyDeleteஒருவரைக் கொலைகாரன் ஆக்கும் ஜாதக அமைப்பு எது?//
அவ், வரவர வகுப்பறைல தீவிரவாதம் அதிகமாயிடுச்சி போல. ஏற்கனவே ஜெயிலுக்குப் போவதற்கான அமைப்பு எதுன்னு நான் கேட்டதுக்கே மைனர் கமெண்ட் போட்டிருந்தார். இதுக்கு என்ன கமெண்ட் போடுகிறார்னு பார்க்கலாம்.//////
பஞ்சமா பாதகச் செய்ல்களைச் செய்பவனின் ஜாதகத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிரகதியில் இருக்கும்.
///////Blogger Uma said...
ReplyDeleteசிம்மாசன யோகம் என்று ஒன்று இருக்கிறதா என்று சந்தேகம்தான் வருகிறது.//
ஐயகோ! மைனர் கண்டுகொண்டிருந்த பகல் கனவை இப்படி ஒரு குண்டைத் தூக்கிப்போட்டு கலைத்துவிட்டீர்களே ஆனந்த்?/////
சிம்மாசன யோகம் என்பது உண்டு. மைனர் இந்தக் குண்டிற்கெல்லாம் பயப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்!
///SP.VR. SUBBAIYA said...
ReplyDelete///சிம்மாசன யோகம் என்பது உண்டு. மைனர் இந்தக் குண்டிற்கெல்லாம் பயப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்!///
பெரிய வாத்தியார் சொல்லிட்டா சரிதான்..
எங்களுக்கெல்லாம் அணுகுண்டு அயிட்டமே அல்வா சாப்புடுற மாதிரி..
சாதாரண தீபாவளி குண்டு எல்லாம் ஜுஜுபி மேட்டர்..
///SP.VR. SUBBAIYA said...
அவருக்குப் பாதி நம்பிக்கை உள்ளது. பாதி நம்பிக்கை இல்லை. அதுதான் பிரச்சினை!////
பெருசா நல்ல விஷயம் எதுவும் எதிர்பாராம, சொந்த முயற்சியில்லாமே நடந்தா
அதுக்கு matter of coincidence /coordination என்று நடைமுறையிலே எதாவுது ஒரு பெயர் வெச்சுக்கலாம்.
சோதிட ரீதியிலே எதாவுது கிரகங்களைக் காரணம் சொல்லலாம். இருக்கமுடியாது..
அப்பிடி நடந்த விஷயங்கள் இருக்கு..
தீவிர முயற்சி எடுத்தும் 'கிளிக்' ஆகாத விஷயங்களும் இருக்கு..
இதுலே என்ன காமெடின்னா 'பாஸிட்டிவ் திங்கிங், மோடிவேஷன்' ன்னு full tempo லே போற ஆளுங்களுக்கும்
எதிர்பார்த்த காரியங்கள் ஊத்திக்குறதுதான்..
அதுனாலே..ஒண்ணும் சொல்றாப்போலே இல்லே..
/// Uma said...
ReplyDeleteஒருவரைக் கொலைகாரன் ஆக்கும் ஜாதக அமைப்பு எது?//
அவ், வரவர வகுப்பறைல தீவிரவாதம் அதிகமாயிடுச்சி போல. ஏற்கனவே ஜெயிலுக்குப் போவதற்கான அமைப்பு எதுன்னு நான் கேட்டதுக்கே மைனர் கமெண்ட் போட்டிருந்தார். இதுக்கு என்ன கமெண்ட் போடுகிறார்னு பார்க்கலாம்.\\\
'கொலையே செய்யாமல் கொலைப்பழியில் 20 வருஷம் ஜெயிலில் கிடக்கக் காரணம் எது?' என்ற கேள்வி தற்காலத்து 3 பேர் மரணதண்டனை சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய வழக்குக்கு பொருத்தமாக இருக்கும்.. Jagannath , Uma ரெண்டு பேரும் கேட்டிருந்த கேள்விகளை இணைத்து 'செய்யாத கொலைக்குத் ஜெயில் தண்டனை வழங்கும் அமைப்பு எது?' என்கிற ரீதியிலான இந்தக் கேள்வி எப்படி?
'செய்யாத கொலைக்குத் ஜெயில் தண்டனை வழங்கும் அமைப்பு எது?' என்கிற ரீதியிலான இந்தக் கேள்வி எப்படி?//
ReplyDeleteநல்ல கேள்வி. ஒருவேளை ஆறாம் இடம் கேட்டதால் இருக்குமோ?
////////Blogger minorwall said...
ReplyDelete///SP.VR. SUBBAIYA said...
///சிம்மாசன யோகம் என்பது உண்டு. மைனர் இந்தக் குண்டிற்கெல்லாம் பயப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்!///
பெரிய வாத்தியார் சொல்லிட்டா சரிதான்..
எங்களுக்கெல்லாம் அணுகுண்டு அயிட்டமே அல்வா சாப்புடுற மாதிரி..
சாதாரண தீபாவளி குண்டு எல்லாம் ஜுஜுபி மேட்டர்..
///SP.VR. SUBBAIYA said...
அவருக்குப் பாதி நம்பிக்கை உள்ளது. பாதி நம்பிக்கை இல்லை. அதுதான் பிரச்சினை!////
பெருசா நல்ல விஷயம் எதுவும் எதிர்பாராம, சொந்த முயற்சியில்லாமே நடந்தா
அதுக்கு matter of coincidence /coordination என்று நடைமுறையிலே எதாவுது ஒரு பெயர் வெச்சுக்கலாம்.
சோதிட ரீதியிலே எதாவுது கிரகங்களைக் காரணம் சொல்லலாம். இருக்கமுடியாது..
அப்பிடி நடந்த விஷயங்கள் இருக்கு..
தீவிர முயற்சி எடுத்தும் 'கிளிக்' ஆகாத விஷயங்களும் இருக்கு..
இதுலே என்ன காமெடின்னா 'பாஸிட்டிவ் திங்கிங், மோடிவேஷன்' ன்னு full tempo லே போற ஆளுங்களுக்கும்
எதிர்பார்த்த காரியங்கள் ஊத்திக்குறதுதான்..
அதுனாலே..ஒண்ணும் சொல்றாப்போலே இல்லே..///////
அடுத்து அஷ்டகவர்க்கப் பாடத்தை முழு வீச்சில் நடத்த உள்ளேன். அதைத் தொடர்ந்து விடாமல் படியுங்கள். நிறைய விஷயங்கள் உங்களுக்குப் புலப்படும் மைனர். பலன் பார்ப்பதற்கு அதில் நிறையக் குறுக்கு வழிகள் உள்ளன மைனர்!
//////Blogger minorwall said...
ReplyDelete/// Uma said...
ஒருவரைக் கொலைகாரன் ஆக்கும் ஜாதக அமைப்பு எது?//
அவ், வரவர வகுப்பறைல தீவிரவாதம் அதிகமாயிடுச்சி போல. ஏற்கனவே ஜெயிலுக்குப் போவதற்கான அமைப்பு எதுன்னு நான் கேட்டதுக்கே மைனர் கமெண்ட் போட்டிருந்தார். இதுக்கு என்ன கமெண்ட் போடுகிறார்னு பார்க்கலாம்.\\\
'கொலையே செய்யாமல் கொலைப்பழியில் 20 வருஷம் ஜெயிலில் கிடக்கக் காரணம் எது?' என்ற கேள்வி தற்காலத்து 3 பேர் மரணதண்டனை சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய வழக்குக்கு பொருத்தமாக இருக்கும்.. Jagannath , Uma ரெண்டு பேரும் கேட்டிருந்த கேள்விகளை இணைத்து 'செய்யாத கொலைக்குத் ஜெயில் தண்டனை வழங்கும் அமைப்பு எது?' என்கிற ரீதியிலான இந்தக் கேள்வி எப்படி?//////
கணவனைப் பிரிந்து வாட வேண்டும் என்ற அமைப்புள்ள பெண், விதவையாகி, அவனைப் பிரிந்து வாழ்வதற்கும் அல்லது விவாகரத்தாகிப் பிரிந்து வாழ்வதற்கும், அவளுடைய மனத்துன்பத்தில் என்ன வேறுபாடு இருக்க முடியும்? பிரிவு பிரிவுதானே. அதுபோல குற்றம் செய்துவிட்டு சிறையில் இருப்பவனுக்கும், பழியால், செய்யாத குற்றத்திற்கு சிறையில் இருப்பவனுக்கும் சிறை வாழ்க்கை வேறாக இருக்காது. மனத்துன்பமும் வேறாக இருக்காது. கர்ம வினைப் பயன்! லக்கினம், ஐந்தாம் வீடு, ஆறாம் வீடு, பன்னிரெண்டாம் வீடு ஆகிய வீடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் அது!
////Blogger Uma said...
ReplyDelete'செய்யாத கொலைக்குத் ஜெயில் தண்டனை வழங்கும் அமைப்பு எது?' என்கிற ரீதியிலான இந்தக் கேள்வி எப்படி?//
நல்ல கேள்வி. ஒருவேளை ஆறாம் இடம் கெட்டதால் இருக்குமோ?/////
ஆமாம். ஆறாம் வீடுதான் முக்கியமான காரணம்!
அடுத்து அஷ்டகவர்க்கப் பாடத்தை முழு வீச்சில் நடத்த உள்ளேன்//
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நல்லது..நன்றி சார்..
ReplyDelete///பஞ்சமா பாதகச் செய்ல்களைச் செய்பவனின் ஜாதகத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிரகதியில் இருக்கும். ///
ReplyDeleteஐயா, வழக்கமாகவே வக்கிரகதியில் செல்லும் ராகு, கேது ஆகியவற்றையும் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டுமா? எனக்கு ராகு, கேது அத்துடன் சனியும் வக்கிரகதியில் இருக்கிறது. அதனால் மூன்று வக்கிரம் என்று கொள்வதா? அல்லது ராகு, கேது கிரகங்களில் சேராது என்று தள்ளி விடுவதா? விளக்குவீர்களா ஐயா?நன்றி
//////Blogger Uma said...
ReplyDeleteஅடுத்து அஷ்டகவர்க்கப் பாடத்தை முழு வீச்சில் நடத்த உள்ளேன்//
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//////
நல்லது. உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!
/////Blogger மாணவி தேமொழி said...
ReplyDelete///பஞ்சமா பாதகச் செய்ல்களைச் செய்பவனின் ஜாதகத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிரகதியில் இருக்கும். ///
ஐயா, வழக்கமாகவே வக்கிரகதியில் செல்லும் ராகு, கேது ஆகியவற்றையும் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டுமா? எனக்கு ராகு, கேது அத்துடன் சனியும் வக்கிரகதியில் இருக்கிறது. அதனால் மூன்று வக்கிரம் என்று கொள்வதா? அல்லது ராகு, கேது கிரகங்களில் சேராது என்று தள்ளி விடுவதா? விளக்குவீர்களா ஐயா?நன்றி////////
ராகு & கேது அந்தக் கணக்கில் இல்லை!