மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
1.9.11
என்ன ராசா வேண்டும் உனக்கு?
-------------------------------------------------------------------------------------------------------------
என்ன வேண்டும்?
மனிதனுக்கு என்ன வேண்டும்? ஒவ்வொரு பிறவிக்கும் என்ன வேண்டும்?
அற்புதக் கீர்த்தி வேண்டும். கீர்த்தி என்னும் சொல்லிற்கு ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி எங்கும் பரவியுள்ள புகழ் (fame) என்று பொருள். என்றும் மறையாத புகழ்.
ஆனந்த வாழ்க்கை வேண்டும். ஆனந்த வாழ்க்கை என்பது, நல்ல இல்லாள், சொற்கேட்டு நடக்கும் குழந்தைகள், குறைவில்லாத செல்வம் நிறைந்த வாழ்க்கை.
நற்பொருள் என்பது நல்ல வழியில் சேரும் பொருட்கள். உங்கள் மொழியில் பணம்.
இவையெல்லாம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
பிள்ளையார்பட்டியில் உறைந்திருக்கும் விநாயகப் பெருமானைத் தாள் பணிந்து வணங்குங்கள் என்கிறார் கவியரசர் கண்ணதாசன். அப்படியே செய்வோம்.
இன்றையப் பொருளாதார சூழ்நிலையில், பணம் ஈட்டும் வேலையில், டவுன் பஸ்போல ஓடிக்கொண்டிருக்கும் பல மனிதர்களின் வாழ்க்கையில் அதற்கெல்லாம் நேரம் ஏது?
இன்று விநாயகர் சதுர்த்தி. உகந்த நாள். இன்று ஒரு நாளாவது அவரை இருகரம் கூப்பி வணங்குவோம். அனுதினமும் வணங்கிய பலனை அவர் தருவார்
------------------------------------------------------------------------------------
"அற்புதக் கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை’
- கவியரசர் கண்ணதாசன்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
Subscribe to:
Post Comments (Atom)
நான் விநாயகப் பெருமானை உபாசிப்பவன். அவரை வணங்கி விட்டு சென்றால் சகல காரியமும் கைகூடி (சகல காரிய சித்தி) இருக்கிறது. இறையருளால் மிகவும் பெரிய கண்டத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். இதன் விபரங்களை என் பதிவிலேயெ தந்திருக்கிறேன்.
ReplyDeleteமூத்தவன் முதல்வன்
ReplyDeleteமுழுமுதற் கடவுளவன்
வேதநாயகன்...
அவன் பெயர் விநாயகன்
அவன் திருத் தாள் பணிந்தே
போற்றுவோம் நாளும்...
அருமை, அருமை... விநாயகர் சதுர்த்தி யாகிய
இன்று நமது வகுப்பறை புதுப் பொழிவு பெற்றுள்ளது.
நன்றிகள் ஐயா!
விநாயகப்பெருமானின் அருள் வகுப்பறை ஆசானாக்கும் மாணவர்களுக்கும்
ReplyDeleteகுறையின்றிக் கிடைக்க அவன் அருளாலே அவன் தாள் வணங்குகிறேன்
வாத்தியார் ஐயா வணக்கம்.
ReplyDeleteபிள்ளையார் பட்டிக்கி நேரில் சென்று வணங்க முடியாத குறையை போக்கி வகுப்பறை மூலம் மாணவர்கள் அனைவரையும் வணங்க செய்த வாத்தியாருக்கு நன்றி.
சிறிய தகவல்
பிள்ளையார் பட்டியில் உள்ள விநாயகரும், கோவை - ஈச்சனாரி யில் உள்ள விநாயகரும் தரிசிக்க ஒன்று போல இருப்பார்கள்.
மும்பை சித்தி விநாயகரும், திருவனந்தபுரத்தில் பழவன்காடியில் உள்ள விநாயகரும் ஒன்று போல இருப்பர்.
தும்பிக்கையில்
ReplyDeleteநம்பிக்கை வைத்தால் ..
துன்புறும் செயல்யாவும்
தொலைவிலே சென்றுவிடும்
நாத தத்துவமாக நிற்கும்
நாயகன் விநாயகன்..
நாளும் அவன் பாதம் பணிந்தே
நாம் தொடங்கும் செயல்யாவும்
வெற்றிகள் பலவற்றை
பற்றிக் கொண்டே
அன்பான துணைவி
அறிவுள்ள மக்கள்; தவறாமல்
கடமையாற்றும் பணியாட்கள்
கண்ணியமான வாழ்வும் பெற்றிட
வாழ்த்துகிறோம்..புனித இறை
வணக்கங்களுடனே..
ஐந்து புனித கடமைகளை
ReplyDeleteஐயமின்றி சொல்லுது இஸ்லாம்
எந்த ஒன்றையாவது செய்ய விரும்பும்
எல்லோரும் "ஜகாத்" தரமறுப்பதில்லே
ஹஜ்ஜூக்கு உம்ரா செய்யதவறினாலும்
நோன்புவைக்கும் அனைத்துதோழருக்கு
விழாமல் இருப்பது பெருமையன்று
விழும் போதெல்லாம் எழுவதே
பெருமைக்குரிய செயல் என்ற
பெருமகனாரின் சிந்தனையுடன்..
ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்கள்..
நெல்லை நாயகம்
ReplyDeleteநம்வகுப்பின் பெரியவர்
ஹமாராகான அவர்கள் சில நாட்களகாக
ஹமாரா வகுப்புக்கு வருவதில்லேயே..
அவர் நலம் விரும்பி
அந்த பதிவினை பின்ஊட்டத்தில் தந்தால்
உங்களைப் போல்
உங்கள் வகுப்பறை தோழரும் மகிழ்வர்
வேறு என்ன கேட்க போகிறோம், ஐயா. நல்ல மனைவியும், வேலையும், சொந்த நாட்டில் குடும்பத்தை செட்டில் ஆக்கும் வாய்ப்பும் தான்.
ReplyDeleteவினாயகர் சதுர்த்தி என்றால் பிள்ளையார்பட்டி ...விழா என்றால் காரைக்குடி.
ReplyDeleteகாரைக்குடி டாக்சி ஸ்டாண்ட் முக்கில் நடைபெறும் இன்னிசை விருந்தில் சீர்காழி அவர்களின் பாட்டு கச்சேரி...அது ஒரு கனாக்கலாம்...இப்பவும் டைம் மிஷின் இருந்தால் ஒரு தடவையாவது சென்று சிறு வயதில் பெற்றோரின் கட்டுப்பாடு இல்லாமல் சுகந்திரமாக அனுபவிக்கலாம்.
அனைவருக்கும் வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
அதாவது உங்கள் மூன்று சாய்ஸ் இல் இரண்டாம் சாய்ஸ் தான் என் சாய்ஸ்.
ReplyDeleteதனிமையில் ஓடி ஓடி உழைத்து மன விரக்தியின் உச்சிக்கே போய் வந்த ஒரு ஆத்மாவின் சாய்ஸ் வேற என்ன வாக இருக்க முடியும்.
//////Blogger ananth said...
ReplyDeleteநான் விநாயகப் பெருமானை உபாசிப்பவன். அவரை வணங்கி விட்டு சென்றால் சகல காரியமும் கைகூடி (சகல காரிய சித்தி) இருக்கிறது. இறையருளால் மிகவும் பெரிய கண்டத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். இதன் விபரங்களை என் பதிவிலேயெ தந்திருக்கிறேன்./////
தகவல் பகிர்விற்கு நன்றி நண்பரே!
/////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteமூத்தவன் முதல்வன்
முழுமுதற் கடவுளவன்
வேதநாயகன்...
அவன் பெயர் விநாயகன்
அவன் திருத் தாள் பணிந்தே
போற்றுவோம் நாளும்...
அருமை, அருமை... விநாயகர் சதுர்த்தி யாகிய
இன்று நமது வகுப்பறை புதுப் பொழிவு பெற்றுள்ளது.
நன்றிகள் ஐயா!/////
தமிழ் விரும்பிகள் வரும் இடம் பொலிவுடன் இருக்க வேண்டாமா? அதனால்தான் ஹி,ஹி..!
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteவிநாயகப்பெருமானின் அருள் வகுப்பறை ஆசானாக்கும் மாணவர்களுக்கும்
குறையின்றிக் கிடைக்க அவன் அருளாலே அவன் தாள் வணங்குகிறேன்/////
ஆஹா வணங்குங்கள். எல்லோரும் நலம் வாழ நாம் பாடுவோம்!
Blogger kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா வணக்கம்.
பிள்ளையார் பட்டிக்கு நேரில் சென்று வணங்க முடியாத குறையை போக்கி வகுப்பறை மூலம் மாணவர்கள் அனைவரையும் வணங்க செய்த வாத்தியாருக்கு நன்றி. சிறிய தகவல்
பிள்ளையார் பட்டியில் உள்ள விநாயகரும், கோவை - ஈச்சனாரியில் உள்ள விநாயகரும் தரிசிக்க ஒன்று போல இருப்பார்கள்.
மும்பை சித்தி விநாயகரும், திருவனந்தபுரத்தில் பழவன்காடியில் உள்ள விநாயகரும் ஒன்று போல இருப்பர்./////
கண்களை மூடிக்கொண்டு தரிசியுங்கள். எல்லா இடங்களிலும் வேழமுகத்தார் ஒன்றுபோல்தான் இருப்பார்!
/////Blogger iyer said...
ReplyDeleteதும்பிக்கையில் நம்பிக்கை வைத்தால் ..
துன்புறும் செயல்யாவும் தொலைவிலே சென்றுவிடும்
நாத தத்துவமாக நிற்கும் நாயகன் விநாயகன்..
நாளும் அவன் பாதம் பணிந்தே நாம் தொடங்கும் செயல்யாவும்
வெற்றிகள் பலவற்றை பற்றிக் கொண்டே
அன்பான துணைவி அறிவுள்ள மக்கள்; தவறாமல்
கடமையாற்றும் பணியாட்கள் கண்ணியமான வாழ்வும் பெற்றிட
வாழ்த்துகிறோம்..புனித இறை
வணக்கங்களுடனே../////
வாழ்க வளமுடன்; வளர்க நலமுடன்!
///// Blogger iyer said...
ReplyDeleteஐந்து புனித கடமைகளை ஐயமின்றி சொல்லுது இஸ்லாம்
எந்த ஒன்றையாவது செய்ய விரும்பும் எல்லோரும் "ஜகாத்" தரமறுப்பதில்லே
ஹஜ்ஜூக்கு உம்ரா செய்யதவறினாலும் நோன்புவைக்கும் அனைத்துதோழருக்கு
விழாமல் இருப்பது பெருமையன்று விழும் போதெல்லாம் எழுவதே
பெருமைக்குரிய செயல் என்ற பெருமகனாரின் சிந்தனையுடன்..
ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்கள்../////
நல்லது நன்றி விசுவநாதன்!
/////Blogger iyer said...
ReplyDeleteநெல்லை நாயகம் நம்வகுப்பின் பெரியவர்
ஹமாராகான அவர்கள் சில நாட்களகாக ஹமாரா வகுப்புக்கு வருவதில்லேயே..
அவர் நலம் விரும்பி அந்த பதிவினை பின்ஊட்டத்தில் தந்தால்
உங்களைப் போல் உங்கள் வகுப்பறை தோழரும் மகிழ்வர்/////
ஆமாம். ஏன் அவரைக் காணுவதில்லை. கணபதி அருள்வார். கணபதி வருவார்! (அவர் பெயரில் கணபதி உண்டு)
/////Blogger RK said...
ReplyDeleteவேறு என்ன கேட்க போகிறோம், ஐயா. நல்ல மனைவியும், வேலையும், சொந்த நாட்டில் குடும்பத்தை செட்டில் ஆகும் வாய்ப்பும் தான்.////
கிடைப்பது போதும் என்றால் சொந்த நாட்டில் வாய்ப்புக் கிடைக்குமே நண்பரே!
////Blogger sriganeshh said...
ReplyDeleteவினாயகர் சதுர்த்தி என்றால் பிள்ளையார்பட்டி ...விழா என்றால் காரைக்குடி. காரைக்குடி டாக்சி ஸ்டாண்ட் முக்கில் நடைபெறும் இன்னிசை விருந்தில் சீர்காழி அவர்களின் பாட்டு கச்சேரி...அது ஒரு கனாக்கலாம்...இப்பவும் டைம் மிஷின் இருந்தால் ஒரு தடவையாவது சென்று சிறு வயதில் பெற்றோரின் கட்டுப்பாடு இல்லாமல் சுகந்திரமாக அனுபவிக்கலாம்.
அனைவருக்கும் வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்./////
மகர நோன்பு அக்கிரகாரம் என்று அவ்விடத்தின் பெயரைச் சொல்லாமல் விட்டு விட்டீர்களே!
///Blogger RK said...
ReplyDeleteஅதாவது உங்கள் மூன்று சாய்ஸ் இல் இரண்டாம் சாய்ஸ் தான் என் சாய்ஸ். தனிமையில் ஓடி ஓடி உழைத்து மன விரக்தியின் உச்சிக்கே போய் வந்த ஒரு ஆத்மாவின் சாய்ஸ் வேற என்னவாக இருக்க முடியும்./////
விநாயகர் அருள்வார். உங்கள் சாய்ஸ் உங்கள் கை வசப்படட்டும்!