----------------------------------------------------------------------------------------------------
Astrology பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை!
ஒரு அம்மணியின் ஜாதகம் இது
-------------------------------------------------------------------------------------------------
மகர லக்கினம். லக்கினாதிபதி ஏழில். லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கிறான். இது நல்ல அமைப்பு.
ஜாதகிக்கு அவன் சுயமாக நிற்கும் தன்மையை (standing Power) அளிப்பான். நவாம்சத்தில் சனி உச்சம் பெற்றுள்ளான். (சில காரணங்களுக்காக முழு ஜாதகத்தையும் கொடுக்கவில்லை. அதை மனதில் கொள்ளவும்)
ஆனால் எட்டாம் அதிபதி சூரியன் நைசாக உள்ளே வந்து உறவாடிக் கொண்டிருக்கிறான். அது கேடானது. சனிக்கு கடும் பகைவன் அவன். அத்துடன் ஆறாம் அதிபதி (வில்லன்) புதனும் வந்து ஒட்டிக் கொண்டிருக்கிறான்.
அவர்கள் ஜாதகியின் வீரியத்தைக் குறைப்பார்கள்.
சுக ஸ்தானத்தில் கேது. அந்த வீட்டதிபதி எட்டில். சுகக் கேடு. நவாம்சத்தில் செவ்வாய் நீசம் பெற்றுள்ளான்.
சனியுடன் சுக்கிரனுடன் சேர்ந்தால் என்ன ஆகும்?
அதீதமான காம உணர்வுகள் இருக்கும்.
ஜாதகிக்கும் இருந்தது.
தன்னைவிட இரண்டு வயது குறைவான இளைஞனைக் காதலித்ததோடு, திருமணமாகும் முன்பாகவே அவனுக்குத் தன்னைப் பலமுறை விருந்தாக்கி மகிழ்வித்தாள். தானும் மகிழந்தாள். அவன் கிரங்கிப் போனான்.
இவள் மீதுபைத்தியமாகி விட்டான்.
அவனது பெற்றோர்களுக்கு, இந்தக் காதல் விவகாரம் தெரிந்தபோது,
வயதில் மூத்த பெண் என்பதால் அவர்கள் முதலில் ஒப்புக்
கொள்ளவில்லை.
அவன் போராடி அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தபோது, இவள் சண்டித்தனம் செய்து மறுத்து விட்டாள்.
அதற்குக் காரணம், திருமணப் பேச்சின்போது, பையனின் தந்தை, இவளைத் தனியே சந்தித்துப் பேசிய தகாத வார்த்தைகள். இவள் ஒரேயடியாக மறுத்து விட்டாள். அவனுக்கு வேறு இடத்தில் திருமணமாகியது.
இவள் கடைசிவரை தனி மரமாகவே வாழ்ந்தாள்.
காரணம் கிரகக் கோளாறுதான்!
லக்கினத்தின் மீது நான்கு கிரகங்களின் பார்வை. இவளுக்கு முரட்டுக் குணத்தைக் கொடுத்தன. adamant ( impervious to pleas, appeals, or reason; stubbornly unyielding) .unrelenting பிடிவாதக் குணம், வளைந்து கொடுத்துப் போகாத தன்மை!
ஏழில் சுக்கிரனுடன் சனியின் சேர்க்கை. இருவரும் சேர்ந்தால் அதீத காம உணர்வு. பிஞ்சிலேயே பழுத்துவிட்டாள்.
சின்ன வயதில் முடிந்தபோதெல்லாம் இன்பம் துய்த்தாள்
அந்தப் பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் கிரகக்கோளாறு!
7ஆம் வீட்டில் நான்கு கிரகங்கள். கடுமையான கிரகயுத்தம் (Planetary war) களத்திரகாரகன் சுக்கிரன் சூரியனோடு ஜோதியில் கலந்து விட்டான் (அஸ்தமனமாகி விட்டான்) ஏழில் எல்லாக் கருமங்களும் அரங்கேறியுள்ளன.
அதனால் அவளுக்குத் திருமண வாழ்வு இல்லாமல் போய்விட்டது
இந்த விவகாரங்கள் எல்லாம் சனிதிசையில் நடந்தன. சனி லக்கின அதிபதி என்றாலும் கடுமையான கிரக யுத்ததில் இருக்கிறான். அத்துடன் கர்ம வினைப்பயன்களை அவன் யாராக இருந்தாலும் அளிக்கத்தவறுவதில்லை. அத்துடன் லக்கினத்தின் மேல் 6 மற்றும் 8 ஆம் அதிபதிகளின் பார்வை விழுகிறது. அதுவும் முக்கிய காரணமாகும். அதை மனதில் கொள்க!
படத்தில் உள்ள காதலர்களுக்கும் இந்தப் பதிவிற்கும் சம்பந்தமில்லை:-))))))
அன்புடன்
வாத்தியார்
31.8.2011
--------------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
//சுக ஸ்தானத்தில் கேது. அந்த வீட்டதிபதி எட்டில். சுகக் கேடு.//
ReplyDelete4ம் இடம் பெண்களுக்கு கற்பு ஸ்தானமும் கூட. அங்கே கேது இருப்பதும் ராகு பார்ப்பதும் இது போல்தான் நடக்கும். லக்னாதிபதி, புதன், சுக்கிரன் ஆகியோர் சேர்ந்தால் அவர் ஆணாயினும், பெண்ணாயினும் முறை தவறி போகக் கூடியவராக இருப்பார் என்று முன்பொரு முறை படித்த ஞாபகம். எங்கே என்று பார்த்து விட்டு சொல்கிறேன். இருப்பினும் இது பொது பலன்தான். தசா புத்தியும், ஜாதகத்தில் மற்ற அம்சங்களும் இதற்கு துணை புரிவதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி நடக்காது.
////Blogger ananth said...
ReplyDelete//சுக ஸ்தானத்தில் கேது. அந்த வீட்டதிபதி எட்டில். சுகக் கேடு.//
4ம் இடம் பெண்களுக்கு கற்பு ஸ்தானமும் கூட. அங்கே கேது இருப்பதும் ராகு பார்ப்பதும் இது போல்தான் நடக்கும். லக்னாதிபதி, புதன், சுக்கிரன் ஆகியோர் சேர்ந்தால் அவர் ஆணாயினும், பெண்ணாயினும் முறை தவறி போகக் கூடியவராக இருப்பார் என்று முன்பொரு முறை படித்த ஞாபகம். எங்கே என்று பார்த்து விட்டு சொல்கிறேன். இருப்பினும் இது பொது பலன்தான். தசா புத்தியும், ஜாதகத்தில் மற்ற அம்சங்களும் இதற்கு துணை புரிவதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி நடக்காது.////
நான்காம் இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தீயகிரகங்கள் இருந்தால், பெண் முறை தவறிப் போய்விடுவாள் (பொது விதி) அப்படிப்பட்ட ஜாதகத்தைப் பார்க்கும் ஜோதிடர்கள், பெண்ணின் தந்தையிடம், மனித நேயத்துடன் நேரடியாக அதைச் சொல்லி அவரைக் கலவரப் பாடுத்தாமல் இப்படிச் சொல்வார்கள்: “பெண்ணைப் படிக்க வைக்க வேண்டாம். படிக்க மாட்டாள் சீக்கிரம் மணம் முடித்து விடுங்கள்”
விளக்கத்திற்கு நன்றிகள் ஐயா!
ReplyDelete///ஏழாம் அதிபதி சுக்கிரன் சூரியனோடு ஜோதியில் கலந்து விட்டான் ////
ஏழாம் வீட்டுக் காரகன் சுக்கிரன் என்று இறந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்...
தட்டச்சு பிழை சரி செய்து விடுங்கள் ஐயா!
வாத்தியார் ஐயா வணங்குகின்றேன்.
ReplyDeleteதனி நபர் ஒழுக்கம் இல்லாத பெண்ணை தாங்கள் கூறுகின்றீர்கள் கிரக நிலையால் பெண்ணானவள் கற்பை இழந்து விட்டால் என்று. இது எப்படி ஐயா சபைக்கு பொருந்தும் . ஆனாலும் பெண்ணானாலும் கற்பு என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அல்லவா ஐயா.
எல்லா தப்பையும் செய்து விட்டு கிரக நிலையால் தான் செய்தேன் என்றால் பிறப்பின் முக்கியத்தும் என்ன ஐயா
பாரதி சொன்னது போல பிறந்தேன் வளந்தேன் மாண்டேன் என்று மாண்டு போகவா ஐயா.
எதோ எழுத வேண்டும் என்று தோன்றியது எழுதினேன் .
நன்றி ஐயா நன்றி.
ஐயா
ReplyDeleteமுடிந்த அளவிற்கு எல்லா மதத்தை சார்தவர்கள் கூட இந்தியா மற்றும் வெளி நாட்டில் வேலை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது . அவ்வாறு வேலை மற்றும் அறிமுகம் ஆனவர்கள் எல்லோரும் எம்மிடம் கேட்கும் கேள்வி எல்லாவற்றையும் இழந்து அதாவது காப்பி, , டி, அசைவ உணவிகள், மது பானம், தனி நபர் கற்புடன் இருக்கும் நி எங்களில் இருந்து என்ன பெரியதை சாதித்து விட்டாய் என்று , மண்ணில் பிறந்ததே எல்லா சுகத்தை அனுபவிக்க தான் ஒழிய உன்னை மாதிரியாக எல்லாவற்றையும் இழந்து வாழ அல்ல என்று.
என்னால் தக்க பதில் கூற முடிய வில்லை ஐயா ?
கண்ணனின் கருத்து சம்பந்தமாக.
ReplyDeleteஎல்லா சமயங்களில் எல்லாரும் நன்றாகவும் நல்லவராகவும் ; கெட்டும் கெட்டவராகவும் இருக்கின்றார்கள்.
இதில் தெரிவது என்னெனின் சமயங்களில் ஏற்ற இறக்கம் இல்லை என்பதே.
மறு பிறப்பை நம்புபவர்களுக்கு கட்டுப்(கற்பு)பாடான வாழ்க்கை அவசியம்.
பிறைரை இம்சிக்காது உதவி தொண்டு புரிவதில் பலர் திருப்தி கொள்வர்.
விடிந்தால் யாரையாவது கெடுத்தால்தான் முகம் கழுவினதாக உணர்பவர்களும் சமயங்களில் பற்றுள்ளவர்களாக உள்ளனர்.
Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteவிளக்கத்திற்கு நன்றிகள் ஐயா!
///ஏழாம் அதிபதி சுக்கிரன் சூரியனோடு ஜோதியில் கலந்து விட்டான் ////
ஏழாம்வீட்டுக் காரகன் சுக்கிரன் என்று இறந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்...
தட்டச்சு பிழை சரி செய்து விடுங்கள் ஐயா!//////
கரெக்ட். கவனக் குறைவினால் ஏற்பட்ட பிழை. பதிவில் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!
////Blogger kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா வணங்குகின்றேன்.
தனி நபர் ஒழுக்கம் இல்லாத பெண்ணை தாங்கள் கூறுகின்றீர்கள் கிரக நிலையால் பெண்ணானவள் கற்பை இழந்து விட்டால் என்று. இது எப்படி ஐயா சபைக்கு பொருந்தும் . ஆனாலும் பெண்ணானாலும் கற்பு என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அல்லவா ஐயா.
எல்லா தப்பையும் செய்து விட்டு கிரக நிலையால் தான் செய்தேன் என்றால் பிறப்பின் முக்கியத்தும் என்ன ஐயா பாரதி சொன்னது போல பிறந்தேன் வளர்ந்தேன் மாண்டேன் என்று மாண்டு போகவா ஐயா.
எதோ எழுத வேண்டும் என்று தோன்றியது எழுதினேன் .
நன்றி ஐயா நன்றி./////
பண்பாட்டை மதிக்கிறவர்களுகுத்தான் கற்பு. மற்றவர்களுக்கெல்லாம் ஒன்றுமில்லை! பிறப்பின் முக்கியத்துவம் எல்லாம் அதை உணர்ந்தவர்களுக்குத்தான். மற்றவர்களுக்கெல்லாம் நீங்கள் உங்களுடைய அடுத்த பின்னூட்டத்தில் எழுதியிருப்பதுபோலதான் வாழ்க்கை.
//////Blogger kannan said...
ReplyDeleteஐயா
முடிந்த அளவிற்கு எல்லா மதத்தை சார்தவர்கள் கூட இந்தியா மற்றும் வெளி நாட்டில் வேலை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது . அவ்வாறு வேலை மற்றும் அறிமுகம் ஆனவர்கள் எல்லோரும் எம்மிடம் கேட்கும் கேள்வி எல்லாவற்றையும் இழந்து அதாவது காப்பி, , டி, அசைவ உணவுகள், மது பானம், தனி நபர் கற்புடன் இருக்கும் நீ எங்களில் இருந்து என்ன பெரியதை சாதித்து விட்டாய் என்று , மண்ணில் பிறந்ததே எல்லா சுகத்தை அனுபவிக்கத்தான் ஒழிய உன்னை மாதிரியாக எல்லாவற்றையும் இழந்து வாழ அல்ல என்று.
என்னால் தக்க பதில் கூற முடியவில்லை ஐயா?/////
“நாற்பது வயதுவரை அவர்கள் சாப்பிட உணவு
நாற்பதற்கு மேல் அவர்களையே சாப்பிடும் அந்த உணவு”
என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் இரண்டே வரிகளில் கூறினார்
புலால் உண்ணாமை குறித்து வள்ளுவர் பத்துக் குறள்களை எழுதியுள்ளார். படித்துப்பாருங்கள் இணையத்தில் கிடைக்கும்.
அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. சொன்னாலும் அவர்களுடைய மண்டையில் அதெல்லாம் ஏறாது. ஒரு புன்னகை சிந்திவிட்டு, நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்
///Blogger krishnar said...
ReplyDeleteகண்ணனின் கருத்து சம்பந்தமாக.
எல்லா சமயங்களில் எல்லாரும் நன்றாகவும் நல்லவராகவும் ; கெட்டும் கெட்டவராகவும் இருக்கின்றார்கள்.
இதில் தெரிவது என்னெனின் சமயங்களில் ஏற்ற இறக்கம் இல்லை என்பதே.
மறு பிறப்பை நம்புபவர்களுக்கு கட்டுப்(கற்பு)பாடான வாழ்க்கை அவசியம்.
பிறைரை இம்சிக்காது உதவி தொண்டு புரிவதில் பலர் திருப்தி கொள்வர்.
விடிந்தால் யாரையாவது கெடுத்தால்தான் முகம் கழுவினதாக உணர்பவர்களும் சமயங்களில் பற்றுள்ளவர்களாக உள்ளனர்.////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
தொடர்ச்சியாக வருடங்கள் பல எழுதிவரும் தங்களை மனமார வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஎல்லாம் பொது விதி என்பதே சரி.இதே மகர லக்கினப் பெண் நாலாம் இடத்தில் சூரியன்,புதன்,செவ்வாய் உள்ளவள் நல்ல முறயில் திருமணமாகி சிறப்பாகக் குடித்தனம் நடத்துகிறாள். படிப்பும் எம் சி யே.வெளி நாட்டில் வேலை பார்க்கிறாள்.அன்பு மகனும், ஆசைக் கணவனும் என்று குறையேதும்
ReplyDeleteஇல்லை.
vanakkam ayya,
ReplyDeletei was previously thought that only the planetary placements and its lords are the main prospects which determines destiny of hte native,but after reading these two blogs on Planetary wars made it clear they were also important in predicting an horoscope clearly and thanx for giving the complete judging and explanations on both those horoscopes
இதே போன்ற ஜாதகமுடைய பெண் , ஆனால் சந்திரன் மட்டும் எட்டில் செவ்வாயுடன் ,அவர் வாழ்வும் இது போன்றே அமைந்தது, இப்போது மறுமணம் முடித்துள்ளார்.இன்னும் பிடிவாதகுணம் மாறவில்லை,தான் நினைத்ததையே செய்வார் , அவரின் வாழ்வில் அக்கறையுள்ளதினால் கேட்கிறேன் அவரின் ஆயுள்பங்கம் ஏற்படுமா ,1976 ஜூலை 28 இல் பிறந்தவர்.
ReplyDeleteI found the dob of this person, atleast next upcoming dasa - ketu will give "gNANAM" and take her in the right path and make her ready to lead a good life in Sukra dasa.
ReplyDelete"கற்பு நிலை என்று சொல்ல வந்தால்
ReplyDeleteஆணுக்கும் பெண்ணுக்கம் பொதுவில் வைப்போம் "
இது பாரதியின் வாக்கு..
"கற்பு என்பது உறுதி என்பதே" என
கற்றுத் தருகிறது வள்ளுவம்
"எண்ணங்களே வாழ்க்கை "
இது மனவியலாரின் கூற்று
"கிரக நிலை அடிப்படையிலே
அமைகிறது ஒருவரின் எண்ணங்கள் "
இது psycho சோதிடர்
"எண்ணங்களின் பிரதிபலிப்பே
கையில் ரேகைகள் "
இது கைரேகை கலைஞன் கூற்று
அட.. அது தானா கற்பு..?
அதற்குத் தான இத்தனை காப்பு..?
வணக்கம் ஐயா.
ReplyDeleteIyer சார் தங்களுடைய ஒவ்வொரு பதிப்பும் மிகவும் அருமை. படிக்கவே மிகவும் அற்புதமாக உள்ளது எம்முடைய மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.
Iiya,
ReplyDeleteSukaran is combusted by Sun and the effect of Saturn & Sukaran combination is no effect or it will be minimum also Sani maka thisai for this lady might have ended at 23(max) and her present age may be 35 - Whether I am correct?
Also i was informed that 10th lord in 7th house will leads to illegal contacts ?
And what is the role of Mercury (9th house in 7 place) i was informed that it was very good place.
Regards,
Marimuthu
///மண்ணில் பிறந்ததே எல்லா சுகத்தை அனுபவிக்க///
ReplyDeleteசுகங்களை அனுபவிக்காலிருப்பதே
சுகம் என அறியாதவர்கள் அவர்கள்..
சுகம் என எதை சொல்கிறீர் என
சுவைபட கேட்டுப் பாருங்கள்...
கடவுள் நம்பிக்கை உண்டா என
கறுப்புச் சட்டைகாரர்கள் கேட்பதுண்டு
கடவுள் என எதை சொல்கிறீர் என
கேட்டவுடன் மனதை சொறிந்த படி
தொலைவில் சென்றுவிடுவர்
தொல்லை தரும் அன்பர்கள்..
கடவுள் இல்லா கட்சிக்காரர்கள்
கண்டபடி பேசுவதை கேட்டபடி
சும்மா இருப்பதால் என்ன
சுகம் வரப்போகிறது..
சொன்னால் அவர்களுக்கு புரியாதென
சொல்லாமலிருந்தால் யாருக்கமே
அது புரியாமல் போய்விடும்
அதனால் அவர்கள் பாணியில் சொல்ல
இப்படி ஒரு அண்மை நிகழ்வை
இந்த பின்ஊட்டத்தின் பகுதியாக..
கடவுள் இல்லா
கட்சிக்காரர் ஒருவர்
ஆற்றங்கரை ஓரமாக
அமர்ந்திருக்கும் விநாயகரை பார்த்து
பிள்ளையாரை ஆற்றில் போடுவோம்
பின்னாடியே வரும் இந்த நாயையும்
அப்படியே போடுவோம்
அப்படியானால் யாருக்கு சக்தி என
அஞ்சுநிமிடத்தில் தெரியும் என
அவர் பாணியில் கிண்டலடித்தார்..
பதிலாக அவருக்கு சொன்னது..
மாறாக இப்படி செய்வோம்..
நாயை பிள்ளையார் மீது போடுவோம் பிள்ளையாரை நாய் மீது போடுவோம்
பிறகு தெரியும்
யாருக்கு சக்தி அதிகம் என ...
இப்படி சொல்வது சரியா தவறா
என்பதல்ல வாதம் ..
அவரவர்களுக்கு புரியும் படி
அவரவர்கள் பாணியிலே சொல்லனும்
மற்றதெல்லாம் அந்த
மறை நாயகன் பார்த்துக் கொள்வான்
வாழ்க..
நா
இந்த ஜாதகிக்கு லக்னதில் அல்லது 11இல் குரு இருந்தால் இந்த தீய பலன் தடுக்க பட்டு இருக்குமா அல்லது தீய பலன் குரைந்து பெயர் கெட்டு போகமல் இருக்குமா? யாரவது சொல்லுங்கல்.
ReplyDelete/////Blogger காவேரிகணேஷ் said...
ReplyDeleteதொடர்ச்சியாக வருடங்கள் பலவாக எழுதிவரும் தங்களை மனமார வாழ்த்துகிறேன்./////
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களால்தான் அடியவனால் தொடர்ந்து எழுத முடிகிறது! நன்றி!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஎல்லாம் பொது விதி என்பதே சரி.இதே மகர லக்கினப் பெண் நாலாம் இடத்தில் சூரியன்,புதன்,செவ்வாய் உள்ளவள் நல்ல முறையில் திருமணமாகி சிறப்பாகக் குடித்தனம் நடத்துகிறாள். படிப்பும் எம் சி யே.வெளி நாட்டில் வேலை பார்க்கிறாள்.அன்பு மகனும், ஆசைக் கணவனும் என்று குறையேதும்
இல்லை./////
ஜாதகத்தில் மற்ற கிரக அமைப்புக்களும் அதற்கு உதவியாக இருக்கும்
////Blogger R.Srishobana said...
ReplyDeletevanakkam ayya,
i was previously thought that only the planetary placements and its lords are the main prospects which determines destiny of hte native, but after reading these two blogs on Planetary wars made it clear they were also important in predicting an horoscope clearly and thanx for giving the complete judging and explanations on both those horoscopes/////
நல்லது. நன்றி சகோதரி! தொடர்ந்து படியுங்கள்!
////Blogger sarul said...
ReplyDeleteஇதே போன்ற ஜாதகமுடைய பெண் , ஆனால் சந்திரன் மட்டும் எட்டில் செவ்வாயுடன் ,அவர் வாழ்வும் இது போன்றே அமைந்தது, இப்போது மறுமணம் முடித்துள்ளார்.இன்னும் பிடிவாதகுணம் மாறவில்லை,தான் நினைத்ததையே செய்வார் , அவரின் வாழ்வில் அக்கறையுள்ளதினால் கேட்கிறேன் அவரின் ஆயுள்பங்கம் ஏற்படுமா ,1976 ஜூலை 28 இல் பிறந்தவர்./////
பிறந்த தேதியை மட்டும் கொடுத்துவிட்டு ஆயுள் பங்கம் ஏற்படுமா என்று கேட்பதில் என்ன பயன்?
/////Blogger RAMADU Family said...
ReplyDeleteI found the dob of this person, atleast next upcoming dasa - ketu will give "gNANAM" and take her in the right path and make her ready to lead a good life in Sukra dasa./////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Blogger iyer said...
ReplyDelete"கற்பு நிலை என்று சொல்ல வந்தால்
ஆணுக்கும் பெண்ணுக்கம் பொதுவில் வைப்போம் "
இது பாரதியின் வாக்கு..
"கற்பு என்பது உறுதி என்பதே" என
கற்றுத் தருகிறது வள்ளுவம்
"எண்ணங்களே வாழ்க்கை "
இது மனவியலாரின் கூற்று
"கிரக நிலை அடிப்படையிலே
அமைகிறது ஒருவரின் எண்ணங்கள் "
இது psycho சோதிடர்
"எண்ணங்களின் பிரதிபலிப்பே
கையில் ரேகைகள் "
இது கைரேகை கலைஞன் கூற்று
அட.. அது தானா கற்பு..?
அதற்குத் தானா இத்தனை காப்பு..?//////
ஆமாம். எண்ணங்கள் நன்றாக இருந்தால், செயல்கள் நன்றாக இருக்கும். செயல்கள் நன்றாக இருந்தால் விளைவுகள் நன்றாக இருக்கும். விளைவுகள் நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கை நன்றாக இருந்தால், மற்ற உயிர்களை இம்சிக்காமல் மனிதன் வாழ்வான்
//////Blogger kannan said...
ReplyDeleteவணக்கம் ஐயா.
Iyer சார் தங்களுடைய ஒவ்வொரு பதிப்பும் மிகவும் அருமை. படிக்கவே மிகவும் அற்புதமாக உள்ளது எம்முடைய மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்./////
உங்களுடைய பின்னூட்டங்கள் மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளன. நன்றி!
/////Blogger Marimuthu said...
ReplyDeleteIiya,
Sukaran is combusted by Sun and the effect of Saturn & Sukaran combination is no effect or it will be minimum also Sani maka thisai for this lady might have ended at 23(max) and her present age may be 35 - Whether I am correct?
Also i was informed that 10th lord in 7th house will leads to illegal contacts ?
And what is the role of Mercury (9th house in 7 place) i was informed that it was very good place.
Regards,
Marimuthu/////
ஏழாம் இடத்துப் புதன் நல்ல நினைவாற்றலைத்தருவார். அதே புதன் 6ஆம் இடத்து, மற்றும் 12ஆம் இடத்து அதிபதியாகும் பொழுது ஜாதகனுக்கு இம்சைகளை அளிக்கத்தவறுவதில்லை!
/////Blogger iyer said...
ReplyDelete///மண்ணில் பிறந்ததே எல்லா சுகத்தை அனுபவிக்க///
சுகங்களை அனுபவிக்காலிருப்பதே
சுகம் என அறியாதவர்கள் அவர்கள்..
சுகம் என எதை சொல்கிறீர் என
சுவைபட கேட்டுப் பாருங்கள்...
கடவுள் நம்பிக்கை உண்டா என
கறுப்புச் சட்டைகாரர்கள் கேட்பதுண்டு
கடவுள் என எதை சொல்கிறீர் என
கேட்டவுடன் மனதை சொறிந்த படி
தொலைவில் சென்றுவிடுவர்
தொல்லை தரும் அன்பர்கள்..
கடவுள் இல்லா கட்சிக்காரர்கள்
கண்டபடி பேசுவதை கேட்டபடி
சும்மா இருப்பதால் என்ன
சுகம் வரப்போகிறது..
சொன்னால் அவர்களுக்கு புரியாதென
சொல்லாமலிருந்தால் யாருக்கமே
அது புரியாமல் போய்விடும்
அதனால் அவர்கள் பாணியில் சொல்ல
இப்படி ஒரு அண்மை நிகழ்வை
இந்த பின்ஊட்டத்தின் பகுதியாக..
கடவுள் இல்லா
கட்சிக்காரர் ஒருவர்
ஆற்றங்கரை ஓரமாக
அமர்ந்திருக்கும் விநாயகரை பார்த்து
பிள்ளையாரை ஆற்றில் போடுவோம்
பின்னாடியே வரும் இந்த நாயையும்
அப்படியே போடுவோம்
அப்படியானால் யாருக்கு சக்தி என
அஞ்சுநிமிடத்தில் தெரியும் என
அவர் பாணியில் கிண்டலடித்தார்.
பதிலாக அவருக்கு சொன்னது..
மாறாக இப்படி செய்வோம்..
நாயை பிள்ளையார் மீது போடுவோம் பிள்ளையாரை நாய் மீது போடுவோம்
பிறகு தெரியும்
யாருக்கு சக்தி அதிகம் என ...
இப்படி சொல்வது சரியா தவறா
என்பதல்ல வாதம் ..
அவரவர்களுக்கு புரியும் படி
அவரவர்கள் பாணியிலே சொல்லனும்
மற்றதெல்லாம் அந்த
மறை நாயகன் பார்த்துக் கொள்வான்
வாழ்க../////
நான் சொல்லுவதெல்லாம் புரியும்படியாக உள்ளதா விசுவநாதன்?
//////Blogger dawoodkhanameer said...
ReplyDeleteஇந்த ஜாதகிக்கு லக்னதில் அல்லது 11இல் குரு இருந்தால் இந்த தீய பலன் தடுக்க பட்டு இருக்குமா அல்லது தீய பலன் குறைந்து பெயர் கெட்டு போகாமல் இருக்குமா? யாராவது சொல்லுங்கள்.//////
ஜாதகத்தில் குரு நல்ல நிலைமையில் இருந்தால் பல நன்மைகளைச் செய்வார். அதில் ஜாதகனின் பெயருக்குக் களங்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும் ஒன்று!
///ஆமாம். எண்ணங்கள் நன்றாக இருந்தால், செயல்கள் நன்றாக இருக்கும். செயல்கள் நன்றாக இருந்தால் விளைவுகள் நன்றாக இருக்கும். விளைவுகள் நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கை நன்றாக இருந்தால், மற்ற உயிர்களை இம்சிக்காமல் மனிதன் வாழ்வான்//
ReplyDeleteappadi valpavar
ungal vaguppu manavaraga irundhal....?
This is from "GURU" one of the old lessons - which is apt for this jadhakam.
ReplyDeleteஆசையால் துன்பங்கள் ஏற்படும். துன்பங்களால் அனுபவங்கள் ஏற்படும்
அனுபவங்களால் ஞானம் ஏற்படும்
உள் மனதின் ஆசைகளைத் தூண்டிவிட்டு, துன்பங்களைக் கொடுப்பவன் ராகு,
ஏற்பட்ட அத்துன்பங்களில் இருந்து அனுபவத்தைக் கொடுத்து, நமக்கு
ஞானத்தைக் கொடுப்பவன் கேது.
////Blogger iyer said...
ReplyDelete///ஆமாம். எண்ணங்கள் நன்றாக இருந்தால், செயல்கள் நன்றாக இருக்கும். செயல்கள் நன்றாக இருந்தால் விளைவுகள் நன்றாக இருக்கும். விளைவுகள் நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கை நன்றாக இருந்தால், மற்ற உயிர்களை இம்சிக்காமல் மனிதன் வாழ்வான்//
appadi valpavar
ungal vaguppu manavaraga irundhal....?////
இருந்தால் என்ற கேள்வி எதற்கு? இருக்கிறார்கள் விசுவநாதன்!
////Blogger RAMADU Family said...
ReplyDeleteThis is from "GURU" one of the old lessons - which is apt for this jadhakam.
ஆசையால் துன்பங்கள் ஏற்படும். துன்பங்களால் அனுபவங்கள் ஏற்படும்
அனுபவங்களால் ஞானம் ஏற்படும்
உள் மனதின் ஆசைகளைத் தூண்டிவிட்டு, துன்பங்களைக் கொடுப்பவன் ராகு,
ஏற்பட்ட அத்துன்பங்களில் இருந்து அனுபவத்தைக் கொடுத்து, நமக்கு
ஞானத்தைக் கொடுப்பவன் கேது.////
நல்லது.உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!