----------------------------------------------------------------------------------------
லண்டன் மாநகரத்தைப் பற்றிச் சுவையான செய்திகள்
வாரமலர்
1
"மண்ணின் மைந்தர்கள்" கொள்கை சிறிது சிறிதாக இங்கிலாந்தில் எதிர்காலத்தில் பரவி வலுப் பெறக்கூடிய சாத்தியக் கூறுகள் இப்போதே தென் படுகின்றன. ஜான்புல் என்ற ஒருவர் இங்கிலாந்துக் கொடியினை ஆடையாக அணிந்து, வித்தியாசமான தோற்றத்துடன் தெரு முனைகளில் தனி நபராகப் போராட்டம் நடத்துகிறார். அவர் கையில் வைத்திருக்கும் பிரச்சார அட்டையில் 'பிரித்தானியர்களின் வேலைகளைப் பாதுகாப்போம்' என்று எழுதியுள்ளது.லியோ மெகின்ஸ்ட்ரி என்ற பிரபல பத்திரிகையாளர் 'ஆங்கிலேய முதலாளிகளுக்கு நாட்டுப்பற்று வெகுவாகக் குறைந்துவிட்டது. ஏனெனில் குறைந்த சம்பளத்திற்கு வெளிநாட்டவர் கிடைக்கிறார்கள் என்று அவர்களுக்கே வேலை அனைத்தையும் கொடுக்கிறார்கள்.புதிதாக உருவாக்கப்பட்ட பணிகளில் 80சதவீதம் வந்தேரிகளுக்குக் (இம்மிகரன்ட்ஸ்)கொடுக்கப்பட்டுள்ளது' என்று புள்ளி விவரம் கொடுத்து எழுதியுள்ளார்.இதையெல்லாம் பார்க்கும் போது இங்குள்ள நம்மவர்கள் இந்திய வேர்களை முழுதும் இழந்துவிடாமல் எதற்கும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.
*********************************************************
2
விசித்திரமான போட்டிகள் நம்மூரில் மட்டும்தான் நடக்கிறது என்று எண்ணிவிட வேண்டாம்.இங்கேயும் உண்டு.ஆட்டுக்கிடா சண்டை, கோழிச்சண்டை எல்லாம் நம்மூரில் நடக்கிறது என்றால், இங்கே கழுதைப் பந்தயம் நடக்கிறது. குதிரைப்பந்தயம் பணக்காரர்களுக்கானது. கழுதைப்பந்தயம் ஏழைகளுக்கானது. கழுதைப் பந்தயத்திற்கு 'பெட்' கட்டுவது உண்டு.ஸேன்ட்ர்ஸ்ட் என்ற இடத்தில் 40 கழுதைகள் கலந்து கொண்ட பந்தயம் நடந்துள்ளது.
*************************************************************
3
இந்து நாளிதழில் ஞாயிறு அன்று திருமண விளம்பரம்(மணமகன், மணமகள் தேவை) அதிக எண்ணிக்கையில் வரும்.அது போலவே நம் தமிழ் நாள் இதழ்களிலும் அந்த வகை விளம்பரங்கள் வரும். தமிழ்நாட்டில் எத்தனை வகையான சாதிகள் உள்ளன என்பதை அந்த விளம்பரங்களை ஆராய்ந்தாலே அறிந்து கொள்ளலாம். கல்யாணமாலை போன்ற தொலைக்காட்சி ஊடகங்களில் கூட மறக்காமல், மறைக்காமல் சாதிப்பெயர் சொல்லி பெண் ,ஆண் தேடுவார்கள்.
இங்கேயும் வகுப்பு (கிளாஸ்)வேற்றுமை உண்டு. அது பத்திரிகைகளில் வெளிப்படையாக வருவதில்லை. ஆனால் பழகத் துவங்கும் முன்னர் இருபாலரும் எந்தப்பிரிவு என்பதை எவ்வாறோ அறிந்து கொள்வதாகவே தெரியவருகிறது.இரகசிய விசாரணை செய்துதர 'டிடெக்டிவ்' நிறுவனங்களின் உதவி நாடப்படுகிறது என்கிறார்கள்.
இங்கு மணமகன், மணமகள் தேவை விளம்பரங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
1.ஆண்களுக்குப் பெண்கள்.2. பெண்களுக்கு ஆண்கள்.3. ஆண்களுக்கு ஆண்கள்4. பெண்களுக்குப் பெண்கள்.
நான் வாசித்த 60 விளம்பரங்களில் சுமார் 20 விளம்பரங்கள் 60 வயதைக் கடந்தவர்கள் கொடுத்துள்ளனர்.அதிகபட்ச வயது 72! ஒரு 72 வயது மூதாட்டி தனக்கு ஒரு பேச்சுத் துணையாக, வீட்டு ஆண்பிள்ளை என்று சொல்லிக் கொள்ள ஒரு ஆண் துணை தேவை என்கிறார்.
பெரும்பாலானவர்கள் தங்களைப் பற்றி விவரிப்பது அவர்களுடைய தன்னம்பிக்கையைக் காட்டுவதாக உள்ளது.ஒரு 64 வயதுப் பெண் தன்னை இவ்வாறு கூறிக் கொள்கிறார்: "very attractive, slim, fit, curtly, female 64...." companionship+ , friendship+ , romance+ , for fun(may be more)
இது போன்ற சொற்கள் திருமண விளம்பரங்களில் காணக் கிடைக்கிறது. அந்த + க்கு என்ன பொருள் என்பதை உங்களுடைய கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
****************************************************************
4.
நமது நாட்டைப்பற்றி சொல்வது 'இந்தியா ஒரு குப்பை மேடான நாடு' மக்கள் எல்லா இடங்களிலும் குப்பை போடுவது இந்தியாவில் மட்டுமே உள்ளது என்று ஒரு தோற்றம் உலக நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. நான் ஹீத்ரூ விமான நிலையத்தில் இறங்கியவுடனேயே சாக்லேட் காகிதங்களும், ஐஸ்கிறீம் கோன்களும் கிடப்பதைப் பார்த்தேன்.அருகாமையில் குப்பைத்தொட்டி இருந்தும் கண்ட இடத்தில் குப்பைகளை வீசுவது இங்கேயும் உள்ளது. ஆனால் ஒரு சில நிமிடங்களில் அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டிய பணியாளர்கள் அங்கே வந்து அகற்றி விடுகிறார்கள். குப்பை போடும் மனோபாவம் இங்கேயும் உள்ளது என்பதைக் கூறவே இதைச் சொன்னேன். இதைச் சொல்வதால் நாமும் வழக்கம் போல் குப்பை போடுவதைத் தொடரலாம் என்பது என் கருத்தாக யாரும் எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
தினசரி பிரதான சாலைகளில் உள்ள குப்பைத் தொட்டிகள் அகற்றப்படுகின்றன. வாரம் ஒருமுறை வீட்டுக் குப்பைகள் அகற்றப்படுகின்றன.வீட்டு வாசலில்மறுசுழற்சிக்கான தொட்டி,மறு சுழற்சி செய்ய முடியாத குப்பைகளுக்கான தொட்டி என்று இரண்டு உள்ளன.ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு தொட்டி அகற்றப்படுகிறது.மறு சுழற்சி செய்வதாக அரசாங்கம் கூறினாலும் அப்படி நடப்பதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. நமது தூத்துக்குடி துறைமுகத்தில் கூட இலண்டன் குப்பைகள் வந்து இறங்கியுள்ளதையும், சில தமிழ் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும் செய்தியாக வாசித்து இருக்கலாம்!
குப்பை லாரிகளில் எழுதியுள்ள வாசகம் சிந்திக்க வைக்கிறது."நாம் பிரிட்டனில் மூன்றில் ஒரு பாகம் உணவினை குப்பைகளில் கொட்டுகிறோம்"
முந்தைய அமெரிக்க அதிபர் கூறிய சொற்கள் ஏனோ என் மனதில் தோன்றியது."இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள மக்கள் அதிகமாக உணவைச் சாப்பிடுவதால் தான் உணவு விலைகள் ஏறிவிட்டன;பஞ்ச நிலை உணாடாகிறது"!வளர்ந்த நாடுகளில் குப்பைகளாகும் உணவைக் கணக்கில் ஏனோ எடுத்துக்கொள்வதில்லையே அவர்கள்!
நம்மூர் டாஸ்மாக் கடைகளில் நடப்பதுபோலவே குடிமகன்கள் இங்கேயும் பாட்டிலை சாலைகளிலும் நடைபாதைகளிலும் சுக்கு நூறாக உடைப்பது நடக்கிறது. கால் முழுவதும் மூடும் காலணி அணியவில்லை என்றால் கண்ணடிச் சில்லு காலில் குத்துவதைத் தவிர்க்க முடியாது.
************************************************************
5.
இங்கே செல்லப் பிராணிகள் வளர்ப்பது என்பது ஒரு புனித சடங்கு போலவே நடக்கிறது.பெரும்பாலும் வித விதமான நாய்கள்தான் 'பெட்' ஆக உள்ளன.குறைந்த அளவில் பூனைகள் வளர்க்கப்படுகின்றன.தவறாமல் எல்லா செல்லப்பிராணிகளுமே கொழு கொழு என்று குண்டாகவே உள்ளன. நடைப்பயணம் போகும் போது தன் உடல் எடையையே தாங்க முடியாமல் திணறித் திணறி நடந்துவரும் நாய்களை தவறாமல் தரிசிக்கலாம்.
"உங்கள் நாய் என்றோ, உங்கள் பூனை என்றோ" செல்லப்பிராணி வளர்ப்பவர்களிடம் தவறியும் கூறி விட முடியாது.அந்தச் செல்லத்தின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு பெயர் சொல்லித்தான் குறிப்பிட வேண்டும்.அவர்களுடைய செல்லத்தின் அருமை பெருமைகளைப் புகழ்ந்துவிட்டால் ,ஒரு பிரித்தானியரை நம் வசப்படுத்திவிட முடியும்.
நம்மூர் நாய்களைப் போலவே விளக்குக் கம்பங்களைப் பார்த்தால் காலைத் தூக்கிக் கொள்வது இங்கே உள்ள நாய்களும் செய்கின்றன.
அருகில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் கையால் எழுதிய ஒரு அறிவிப்பைப் பார்த்தேன்."என் அருமைச் செல்லம் புஸ்ஸி(கேட்) காணாமல் போய்விட்டது. ஷூ வுக்குள் போய் ஒண்டிக் கொள்ளும் பழக்கம் உடையவன். உங்கள் இல்லத்தில் அணியாமல் கிடக்கும் ஷூக்களை சோதிக்க வேண்டுகிறேன்.கண்டு பிடித்துத் தகவல் கூறுபவர்களுக்குச் சன்மானம் உண்டு"
இங்கேயுள்ள 4 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனுடைய கார்ட்டூன் படத்தை பூங்காவில் உள்ள குப்பைத் தொட்டியின் வெளியே ஒட்டி உள்ளதை ரசித்தேன்.நாய் ஒன்றினைப் பிடித்துச் செல்லும் மங்கையின் படத்தை வரைந்து அதன் கீழே எழுதியுள்ள வாசகம் நகைப்பாக உள்ளது.
"The dog may be your loving pet; but his poos are not our pet.
Please pick up the poo and drop in the dust bin"
poo என்பதற்கு நீங்களே பொருள் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.
(மேலும் வரும்)
வாழ்க வளமுடன்!
கே.முத்துராமகிருஷ்ணன்,லால்குடி
முகாம்: இலண்டன் மாநகர்
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
21.8.11
லண்டன் மாநகரத்தைப் பற்றிச் சுவையான செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
இரவும் வரும் பகலும் வரும்
ReplyDeleteஉலகம் ஒன்று தான்
உறவும் வரும் பகையும் வரும்
இதயம் ஒன்று தான்…
பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்று தான்
வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்று தான்
இளமை வரும் முதுமை வரும் உடலுமொன்று தான்…
தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான்..
விழியிரண்டு இருந்த போதும்
பார்வை ஒன்றுதான் …
வழிபடவும் வரம் தரவும்
தெய்வம் ஒன்றுதான்..
என் ஆக்கத்தைப் பதிவிட்டமைக்கு நன்றி அய்யா! இந்தப் பதிவு முன்னரே எழுதப்பட்டது. அதன் பின்னர் இலண்டன் கலகம் நடந்தது. இதுவரை நடந்த
ReplyDeleteகலகங்களைவிட மோசமானதாகச் சொல்கிறார்கள். இன்னமும் பல பகுதிகளில் பதட்டம் உள்ளது. இதுபற்றி ஒரு பதிவினை அடுத்து அனுப்புகிறேன்.பர்மிங்காம் கோவிலுக்குச் செல்ல உத்தேசித்து இருந்தோம் .அங்கு நிலமை மோசம். இன்னும் இந்தியா திரும்ப ஒருமாதம் உள்ளதால் நிலைமை சீரானவுடந்தான் வெளியில் கிளம்ப முடியும்.நாங்கள் வாழும் பகுதியில் ஒரு சம்பவமும் நடக்கவில்லை.இங்கிருந்து 12 மைலில் சம்பவங்கள் நடந்துள்ளன.
உங்கள் லண்டன் அனுபவங்கள் அருமை நண்பர் கே.எம்.ஆர். இன்னும் ஏராளமான நிகழ்வுகளை நீங்கள் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் சொல்ல மறந்ததோ, அல்லது இனிதான் சந்திக்கப் போகிறீர்களோ, சில நிகழ்வுகள் மனதை நெகிழச் செய்பவைகளாக அமைந்தன எனக்கு. பேருந்தில் பகல் 11 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரங்களில் மூத்த குடிமக்கள் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு அடையாள அட்டைகள் உண்டு. அதைக் காட்டினால் பஸ் பயணத்துக்குக் கட்டணம் இல்லை. அவர்கள் ஏறும்போதோ அல்லது இறங்கும் போதோ நாம் அங்கு இருந்து அவர்களுக்கு வழி விட்டால், அவர்கள் கண்களிலிருந்து மறையும் வரை நமக்கு நன்றி சொல்லும் அழகு, அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். முன் பின் பழக்கமில்லாதவர்களாக இருந்த போதும், நாம் நமது வீட்டு வாயிலில் தோட்டப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் நம்மைப் பார்த்து "ஹாய்" என்று அன்பொழுக புன்னகையுடன் கையசைத்துவிட்டுப் போகிறார்கள். வியாபாரத் தலங்களில் ஒரு பவுண்டு சாமான்கள் என்று எதை எடுத்தாலும் ஒரு பவுண்டுக்கு விற்கிறார்கள். இது ஓர் அரிய வாய்ப்பு. மேலும் வர்த்தகர்கள் நாம் விலையில் ஏதாவது பேரம் பேசினால் (நம்மூர் வழக்கப்படி) புன்னகை புரிகிறார்கள், போய்யா, சாவு கிறாக்கி பெரிசா சாமான் வாங்க வந்துட்டன் என்றெல்லாம் சொல்வதில்லை. ஐயா! கே.எம்.ஆர். அவர்களே இதுபோன்ற உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கி (றேன்) றோம்.
ReplyDeleteநல்ல விஷயங்கள் பொதிந்து கிடக்கும் பதிவு..நம்மூர் லோக்கல் நிர்வாக அமைப்புக்களை குறை சொல்வதாக அமைந்துவிடுமோ என்று அங்கும் குப்பை போடும் மனோபாவம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது..
ReplyDeleteஓனிக்ஸ் என்னும் வெளிநாட்டு கம்பெனியிடம் சென்னை மாநகர குப்பை அகற்றும் பணி ஒப்பந்தமிடப்பட்டிருந்தது..முந்தைய அளவிலிருந்து வேறுபாடு தென்பட்டதே ஒழிய சுத்தமாக சுத்தமானதா என்றால், வெளிநாடுகளில் வாழ்ந்து பார்த்து ஒப்பீடு செய்து பார்த்தால் இல்லை என்றுதான் சொல்லமுடிகிறது..மக்களின் மனோபாவமும் நிர்வாக செயல்பாடுகளும் இன்னும் எவ்வளவோ மேம்பாடு அடையவேண்டும் என்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை..காரணம் ஆயிரம் இருக்கலாம்..மீறி காரியமாகுமா என்பதுதான் சாதனை..
அனைத்தும் சுவையான தகவல்கள்தாம். லண்டனிலும் அதைப் சுற்றியுள்ள பகுதிகளிலும் சமீபத்தில் கலவரம் நடந்ததே, அது தாங்கள் இருக்கும் இடத்தில் நடந்திருக்காது என்று நினைக்கிறேன். அடுத்து இனி லண்டனிலேயே நிரந்தரமாக தங்கிவிடுவது என்று முடிவு செய்து விட்டீர்களா.
ReplyDeleteநல்லப் பதிவு...
ReplyDeleteபுற நாகரிகம் அதிகம் நிறைந்த இடங்கள் மேல்திசை
அகநாகரிகம் நிறைந்த இடங்கள் கீழ்த்திசை என்பார்கள்...
பலரும் பார்ப்பது புறத்தை தானே...
"நாயை அடிப்பானேன் ____ சுமப்பானேன்" என்று ஒரு கோபமொழி வழக்கத்தில் உண்டு... அதை அடிக்காமல் சுமக்கிறார்கள்... இது போன்றவர்களைப் பார்க்கும் போது நான் சில நேரங்களில் சிரிப்பதும், சிலநேரங்களில் சற்று வருந்துவதும் உண்டு... ஆறறிவுள்ள மனிதர்கள் பல இடங்களில் உணவின்றி தவிக்கிறார்கள்... இது போன்ற செல்லப் பிராணிகளுக்கு பணம், நேரம் இவைகளை செலவழிப்பதைப் பார்க்கும் போது தான் அது போன்ற உணர்வு வரும்... இதில் கொடுமை என்ன வென்றால்.. நம்மூரில் உள்ள காவல், வேட்டை நாய்களுக்கு வீட்டுக் காரர்கள் தான் எஜமான்கள். இது போன்ற நவீன நாகரிகம் பெருகிய நாடுகளில் அவைகளின் "poo " வையும் சுமந்து திரிபவர்கள் எப்படி எஜமானர்களாக இருக்க முடியும்.
நல்லப் பதிவு... மேலைநாட்டில் நாம் கற்றுக் கொள்ள நல்லப் பல இங்கிதம் உண்டு... வழக்கமாக காலகாலமாக நாம் அவைகளை விட்டு வேறு விசயங்களை மட்டும் கடை பிடிப்பது தான் உண்மை.
இனக் கலவரம் வருத்தம் அளிப்பதாக உள்ளது... மன நோயாளிகள் பெருகி விட்டார்கள் என்பது தான் அது... பாரதி கூறியது போல்... உலகமெல்லாம் அமரத்துவம் பெறவேண்டும் அதற்கு இந்தியா வழிமுறைகளை இந்த உலகிற்கு அளிக்கும்.. ஆம், இந்தியா உலகிற்கு அளிக்கும், ஆம்,ஆம் இந்தியா உலகிற்களிக்கும்.
அருமையான பதிவு... என் போன்றோர் காணும் காட்சிகள் என்றாலும்... பகிர்வுக்கும், பதிப்பிற்கும் நன்றிகள் ஐயா!
ஐயா!
ReplyDeleteதான் பெற்ற இன்பம் பெருக இந்த வையகம் என்ற சொல்லுக்கு ஏற்ற்றார்போல வெள்ளை காரங்க நாட்டிற்கு போகி தான் கண்டு கேட்டு அனுபவித்த அனைத்தையும் தான் பயிலும் வகுப்பறையில் மற்ற அனைவரும் படித்து இன்புற செய்யும் தங்களின் மனதே பெரும் தன்மையான மனது ஸ்ரீ முத்து ராம கிருஷ்ண சார்வாள்
அனைத்தும் சுவையான தகவல்கள்
ReplyDelete