மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

24.8.11

Astrology எந்தப்பிள்ளை நல்லபிள்ளை?

--------------------------------------------------------------
Astrology எந்தப்பிள்ளை நல்லபிள்ளை?

ஒரு தாயிடம் சென்று நேர்காணல் செய்து, உங்கள் பிள்ளைகளில் எந்தப் பிள்ளை நல்லபிள்ளை என்றால், அவள் தன்னுடைய எந்தப் பிள்ளையையும் விட்டுக் கொடுக்க மாட்டாள். “எல்லாப் பிள்ளைகளுமே நல்லபிள்ளைகள்” என்றுதான் சொல்லுவாள். அதுதான் தாய் உள்ளம்.

தாயன்பிற்கு நிகரானது உலகில் எதுவும் இல்லை!

ஆனால், அதே தாயின் பிள்ளைகளை நேர்காணல் செய்து, “உங்கள் தாய்க்கு எந்தப் பிள்ளையின் மீது அதிகப் பாசம்” என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்வார்கள்

அதைக் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாட்டில் அற்புதமாக விளக்கினார்

  “படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் - ஒருவன்
      படுக்கையிலே முள்ளை வச்சி பார்த்து மகிழ்ந்தான்
   பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான் - ஒருவன்
      பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான்....... காவல் இருந்தான்!


சொன்னதை ‘நச்’ சென்று சொன்னார் அதுதான் சிறப்பு

தாயை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு, மனைவியின் கண் வீச்சில் கிறங்கி, அவளுடைய காலடியில் கிடக்கும் ஆசாமிகள்தான் இன்று அதிகம்!

அதைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள். இப்போது பாடத்தைப் பார்ப்போம்
------------------------------------------------------------------------------
ஜோதிடத்தை நன்கு அறிந்தவனை, எந்தக் கிரகம் நல்ல கிரகம் (எந்தக் கிரகம் மிகவும் அத்தியாவசியமானது - எந்தக் கிரகம் நமக்கு நன்மை செய்யத் தேவையானது) என்று கேட்டால்...... நன்றாகக் கவனிக்கவும்...... நன்கு அறிந்தவனைக் கேட்டால், என்ன சொல்வான்?

“எல்லாக் கிரகங்களுமே நல்ல கிரகங்கள்” என்றுதான் சொல்வான்

உண்மையும் அதுதான்.

கர்மவினைப்படி ஜாதகனுக்கு என்ன கொடுக்க வேண்டுமோ, அதைக் கிரகங்கள் உரிய நேரத்தில் தவறாமல் கொடுத்துவிடும்.

நன்மை, தீமை இரண்டும் கிரகங்களுக்கு ஒன்றுதான். அதில் அவைகளுக்குப் பேதம் இல்லை.

நன்மை, தீமை இரண்டையும் ஒன்றாக நினைத்தால், எதிர்கொண்டால் நமக்கும் எந்த வாதமும் இல்லை! வழக்கும் இல்லை!
------------------------------------------------------------------------------
சராசரி மனிதன் கேட்பான்:

“நன்மையை எப்போது வேண்டுமென்றாலும் கொடுக்கட்டும். தீமைகளை எப்போது கொடுப்பார்கள்? அதை மட்டும் சொல்லுங்கள்!”

“தங்களுடைய தசாபுத்திகளில் கொடுப்பார்கள். கோச்சாரத்தில் (கோள் சாரத்தில் That is in their transit) கொடுப்பார்கள். அதுவும் குறிப்பிட்ட நிலைப்பாடுகளில் அதிகமாகக் கொடுப்பார்கள். உங்கள் மொழியில் சொன்னால் தட்டிவிட்டுப் போவார்கள்.கவிழ்த்துவிட்டுப் போவார்கள். சிலரை உள்ளே பிடித்து வைத்துவிட்டும் போவார்கள்”

“அதை எப்படித் தெரிந்து கொள்வது?”

“அதற்கான பாடல் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்”
-------------------------------------------------------------------------------
   “கேளப்பா குருமூன்றில் கலைதானெட்டு
       கேடு செய்யும் சனி ஜென்மம் புந்திநாலில்
    சீளப்பா சேயேழு செங்கதிரோன் ஐந்தும்
       சீறிவரும் கரும்பாம்பு நிதியில்தோன்ற
    ஆளப்பா அசுரகுரு ஆறிலேற
       அப்பனே திசையினுடை வலுவைப்பாரு
    மாளப்பா குற்றம்வரும் கோச்சாரத்தாலே
       குழவிக்கு திரியாணங் கூர்ந்து சொல்லே!”


சந்திரன் உங்கள் ஜாதகத்தில் நிற்கும் ராசியை வைத்துக் கோள்சாரத்தைக் கணக்கிட வேண்டும். அதை மனதில் கொள்க!

குரு தனது சுற்றில் மூன்றாம் வீட்டிலும்
கலை (சந்திரன்) எட்டாம் வீட்டிலும்
சனி ஒன்றாம் வீட்டிலும்
புந்தி (புதன்) நான்காம் வீட்டிலும்
சேய் (செவ்வாய்) ஏழாம் வீட்டிலும்
செங்கதிரோன் (சூரியன்) ஐந்தாம் வீட்டிலும்
கரும்பாம்பு (ராகு) இரண்டாம் வீட்டிலும்
அசுரகுரு (சுக்கிரன்) ஆறாம் வீட்டிலும்

அதிகமான கேடுகளை (துன்பங்களைக்) கொடுப்பார்கள்
-----------------------------------------------------------------------------------
“சரி, அவர்களை எப்படி follow செய்வது? எந்தந்த வீட்டில் இன்று இருக்கிறார்கள். எப்போது இடம் மாறுவார்கள் என்று எப்படித் தெரிந்து கொள்வது?”

அது வெரி சிம்ப்பிள். அதற்கு ஒரு வழி இருக்கிறது. இங்கே அதைச் சொன்னால், அதுவும் சேர்ந்து திருட்டுப் போகும். வகுப்பறையின் சுவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டுபோய்விடுவார்கள். ஆகவே மின்னஞ்சல் அனுப்புங்கள். பதில் கிடைக்கும்

அன்புடன்
வாத்தியார்
________________________________________
வாழ்க வளமுடன்!

26 comments:

Ramachandran S said...

நல்ல விளக்கம் ஐயா

kmr.krishnan said...

கோள்சார விதிகளுக்கான பாட்டை எளிமையாக்கிக்கொடுத்ததற்கு நன்றி அய்யா

தமிழ் விரும்பி said...

ஆசிரியருக்கு வணக்கம்,

அருமையான கருத்தும் அற்புதமானப் பாடலோடு அதன் விளக்கமும் அருமை.

///தாயை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு, மனைவியின் கண் வீச்சில் கிறங்கி, அவளுடைய காலடியில் கிடக்கும் ஆசாமிகள்தான் இன்று அதிகம்!////

உண்மை தான், இதோடு மட்டும் அல்ல, புலன் இன்பம் செழிக்க கடவுளிடம் குத்தகை கொள்பவர்களும், அந்தக் கடவுளுக்கே கமிசன் தருபவர்களும், பெற்ற தெய்வங்களை தெருவிலே விட்டு விட்டு சுவர்க்கம் புக நுழைவுச் சீட்டு வாங்குவதாக எண்ணி தான தருமம் செய்பவர்களும் இவர்கள் தான்.

உங்களின் அந்த விரிவான படைப்பையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

கொள்சாரப் பாடம் அருமை.

நன்றிகள் ஐயா!

ARASU said...

ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
இன்றைய கிரக நிலைகள் மற்றும் கிரகங்கள் மாறும் தேதிகள் போன்ற அனைத்து விவரங்களும் பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும்தான்
தெளிவாகக் கொடுத்திருக்கிறார்களே அய்யா, இதை விடவும் சிம்பிளான வழி
வேறொன்று தேவையா அய்யா?
அன்புடன்,அரசு.
gtarasu1948@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு விளக்கம்
அனுப்ப தாழ்மையுடன் கோருகிறேன்.

Amuthan Sekar said...

Dear Sir,

I need your Email lessons. Kindly include my Email ID: amuthans@gmail.com

Thanks & Regards,
Amuthan Sekar

R.Srishobana said...
This comment has been removed by a blog administrator.
R.Srishobana said...

Vanakkam Ayya,
I have this wish about learning about Horoscope matching as this part of the astrology many of the astrologers go wrong on matching.I would greatly appreciate if u could find some time to take lesson about detailed analysis about Horoscopes matching

kannan said...

குரு ஐயா வணக்கம்!

இன்றைய வகுப்பறையில் கண்கலங்க வைத்து விட்டீர்கள் ஐயா!
காலம் சென்ற எமது தகப்பனாரை நினைத்து, பள்ளிகூட காலங்களில் வகுப்பறையிலே முதல் மாணவனாக வந்து மகன் மேல் நிலை வகுப்புக்கு வர வர கீல் நிலை மாணவனாக செல்வதை நினைத்து கண்டிக்க, கற்பனை உடன் கூடிய கனவு உலகில் மிதந்த மகனோ

" ஐயாவிற்கு முன்னாடி ஐயாவின் தயவு இன்றி பெரிய ஆளாக வேண்டும்", என்று

"அங்கும் இங்கும் ஓடி ஆடி பார்த்த பின்னர்",

காலம் தான் வீணாக செல்வதை உணர்ந்து தகப்பனாரின் சொல் படி வாழ்வோம் என்று பாதி தூரம் வர ஐயாவிம் மகனை பார்க்க மீதி தூரம் வர சந்தித்த இடத்தில் சில நாட்களில் மேல் உலகம் சென்று விட்டார் ஐயா சென்று விட்டார் .

தான் இறந்தால் கொல்லி கூட வைக்க வேண்டாம்

" பிச்சை எடுத்து நாளும் படிக்க வைக்கின்றேன் படித்தால் மட்டும் போதும்",

என்று கூறிய தந்தையின் ஆசையை உயிருடன் உள்ள போது நிறைவேற்றி காண்பிக்க முடிய வில்லையே என்ற குற்ற உணர்வு கடந்த 13 வருடமாக அணு அணுவாக என்னை கொல்லுது ஐயா கொள்ளுகின்றது.

" அழுதாலும் தொழுதாலும் மாண்டார் திருப்ப வருவாரோ "

என்ற வாக்கு தெரிந்தும் எத்தனையோ எண்ணத்துடன் வாழ்ந்த தந்தையின் ஆசையை விடல பருவத்தில் கேளாமல் இருந்து விட்டமே என்ற குற்ற உணர்வு எம்மை அணு அணுவாக கொள்ளுகின்றது வாத்தியார் ஐயா.

ananth said...

ஆமாம் ஐயா. இந்த கிரகங்கள் மற்ற இடத்தில் இருக்கும் போது தீய பலன் கொடுத்தாலும், இந்த குறிப்பிட்ட இடங்களில் இன்னும் அதிக தீய பலன்களைக் கொடுப்பார்கள் என்று நானும் படித்திருக்கிறேன்.

கிரகங்கள் கொடுக்கும் கோட்சார பலன்கள் பற்றி நான் படித்த ஜோதிட பாடலை கீழே கொடுத்துள்ளேன்:-

ஓதிய கோட்சரந் திசைசக்கரங்கடம்மில்
உதித்த நவகிரகத்தாலுண்டாகும் பலன்கள்
ஆதவன் செவ்வாயிருவர்காதியிலே பலன்கள்
அம்புலிக்கும் புதனுக்கும் மனுதினமும் பலனே
பீதகன் சுக்கிரன் பலன்கண் மத்தியத்திற்றருவர்
பெருகுசனி பாம்பிரண்டும் பிற்பலனே தருவர்
சூதுமதகரிக் கோடைக்கமல மாமுகையைச்
சுந்தரப் பொற்கிரியை வென்றதுணை முலைமாமயிலே

இந்த வகையில் சூரியனும், செவ்வாயும் ஒரு ராசிக்கு பெயர்ச்சியான உடனேயே அதற்குண்டான பலனைத் தருவார்கள். சந்திரனும், புதனும் ஆரம்பத்திலிருந்து இறுதி வரையிலும், குருவும், சுக்கிரனும் ராசி மத்தியிலும், சனி, ராகு, கேது ஆகியவை இறுதியிலும் பலன் தருவார்கள்.

dubai saravanan said...

Dear Sir,

I need your Email lessons. Kindly include my Email ID: dubaisaravanan@gmail.com

iyer said...

சட்டத்தினால் முடியாது
சாதிக்க துடிக்கும் ஊழல் போராட்டம்

சமுதாய விழிப்புணர்வே
சரியான போராட்டம் என்றாலும் ..

கட்டம் போட்ட அந்த
சட்டத்திற்குள் அத்தனை கிரகங்களும்

"அது" இல்லாமல் வழக்கம் போல்
அதுவதுவாகஇயங்குவதும்இயக்குவதும்

இருண்ட நாட்கள் எல்லாம்
உருண்டோடிட எப்பவும் போல்

வளமான வாழ்த்துக்கள்..
வழக்கமான திருக்குறளுடன்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
"சான்றோன்" எனக்கேட்ட தாய்.

iyer said...

.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ramachandran S said...
நல்ல விளக்கம் ஐயா//////

நல்லது. நன்றி நண்பரே!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
கோள்சார விதிகளுக்கான பாட்டை எளிமையாக்கிக்கொடுத்ததற்கு நன்றி அய்யா//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கே.எம்.ஆர்.கே சார்!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger தமிழ் விரும்பி said...
ஆசிரியருக்கு வணக்கம்,
அருமையான கருத்தும் அற்புதமானப் பாடலோடு அதன் விளக்கமும் அருமை.
///தாயை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு, மனைவியின் கண் வீச்சில் கிறங்கி, அவளுடைய காலடியில் கிடக்கும் ஆசாமிகள்தான் இன்று அதிகம்!////
உண்மை தான், இதோடு மட்டும் அல்ல, புலன் இன்பம் செழிக்க கடவுளிடம் குத்தகை கொள்பவர்களும், அந்தக் கடவுளுக்கே கமிசன் தருபவர்களும், பெற்ற தெய்வங்களை தெருவிலே விட்டு விட்டு சுவர்க்கம் புக நுழைவுச் சீட்டு வாங்குவதாக எண்ணி தான தருமம் செய்பவர்களும் இவர்கள் தான்.
உங்களின் அந்த விரிவான படைப்பையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
கொள்சாரப் பாடம் அருமை.
நன்றிகள் ஐயா!/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger ARASU said...
ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
இன்றைய கிரக நிலைகள் மற்றும் கிரகங்கள் மாறும் தேதிகள் போன்ற அனைத்து விவரங்களும் பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும்தான்
தெளிவாகக் கொடுத்திருக்கிறார்களே அய்யா, இதை விடவும் சிம்பிளான வழி
வேறொன்று தேவையா அய்யா?
அன்புடன்,அரசு.
gtarasu1948@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு விளக்கம்
அனுப்ப தாழ்மையுடன் கோருகிறேன்.//////

உண்மைதான். பஞ்சாங்கம் இல்லாத, வெளிநாட்டில் வாழ்கின்ற, ஆன்லைனில் பார்க்க விரும்புகிறவர்களுக்கான வழியைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன். அதன் விளக்கம் உங்கள் முகவரிக்கும் வரும். நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Amuthan Sekar said...
Dear Sir,
I need your Email lessons. Kindly include my Email ID: amuthans@gmail.com
Thanks & Regards,
Amuthan Sekar//////

விளக்கம் உங்கள் முகவரிக்கும் வரும். நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger R.Srishobana said...
Vanakkam Ayya,
I have this wish about learning about Horoscope matching as this part of the astrology many of the astrologers go wrong on matching.I would greatly appreciate if u could find some time to take lesson about detailed analysis about Horoscopes matching/////

பொறுத்திருங்கள். எழுதுகிறேன் சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kannan said...
குரு ஐயா வணக்கம்!
இன்றைய வகுப்பறையில் கண்கலங்க வைத்து விட்டீர்கள் ஐயா!
காலம் சென்ற எமது தகப்பனாரை நினைத்து, பள்ளிகூட காலங்களில் வகுப்பறையிலே முதல் மாணவனாக வந்து மகன் மேல் நிலை வகுப்புக்கு வர வர கீல் நிலை மாணவனாக செல்வதை நினைத்து கண்டிக்க, கற்பனை உடன் கூடிய கனவு உலகில் மிதந்த மகனோ
" ஐயாவிற்கு முன்னாடி ஐயாவின் தயவு இன்றி பெரிய ஆளாக வேண்டும்", என்று
"அங்கும் இங்கும் ஓடி ஆடி பார்த்த பின்னர்",
காலம் தான் வீணாக செல்வதை உணர்ந்து தகப்பனாரின் சொல் படி வாழ்வோம் என்று பாதி தூரம் வர ஐயாவிம் மகனை பார்க்க மீதி தூரம் வர சந்தித்த இடத்தில் சில நாட்களில் மேல் உலகம் சென்று விட்டார் ஐயா சென்று விட்டார் .
தான் இறந்தால் கொல்லி கூட வைக்க வேண்டாம்
" பிச்சை எடுத்து நாளும் படிக்க வைக்கின்றேன் படித்தால் மட்டும் போதும்",
என்று கூறிய தந்தையின் ஆசையை உயிருடன் உள்ள போது நிறைவேற்றி காண்பிக்க முடிய வில்லையே என்ற குற்ற உணர்வு கடந்த 13 வருடமாக அணு அணுவாக என்னை கொல்லுது ஐயா கொள்ளுகின்றது.
" அழுதாலும் தொழுதாலும் மாண்டார் திருப்ப வருவாரோ "
என்ற வாக்கு தெரிந்தும் எத்தனையோ எண்ணத்துடன் வாழ்ந்த தந்தையின் ஆசையை விடல பருவத்தில் கேளாமல் இருந்து விட்டமே என்ற குற்ற உணர்வு எம்மை அணு அணுவாக கொள்ளுகின்றது வாத்தியார் ஐயா./////

நம்மை அறியாமல், தெரியாமல் செய்த தவறுகளை எல்லாம் மறந்து விடுவதுதான் நல்லது. பழசை நினைத்துக் கவலைப் படுவதால் என்ன பயன்? என்ன நடந்துவிடப் போகிறது? ஆகவே கவலைகளை விட்டொழியுங்கள் கண்ணன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ananth said...
ஆமாம் ஐயா. இந்த கிரகங்கள் மற்ற இடத்தில் இருக்கும் போது தீய பலன் கொடுத்தாலும், இந்த குறிப்பிட்ட இடங்களில் இன்னும் அதிக தீய பலன்களைக் கொடுப்பார்கள் என்று நானும் படித்திருக்கிறேன்.
கிரகங்கள் கொடுக்கும் கோட்சார பலன்கள் பற்றி நான் படித்த ஜோதிட பாடலை கீழே கொடுத்துள்ளேன்:-
ஓதிய கோட்சரந் திசைசக்கரங்கடம்மில்
உதித்த நவகிரகத்தாலுண்டாகும் பலன்கள்
ஆதவன் செவ்வாயிருவர்காதியிலே பலன்கள்
அம்புலிக்கும் புதனுக்கும் மனுதினமும் பலனே
பீதகன் சுக்கிரன் பலன்கண் மத்தியத்திற்றருவர்
பெருகுசனி பாம்பிரண்டும் பிற்பலனே தருவர்
சூதுமதகரிக் கோடைக்கமல மாமுகையைச்
சுந்தரப் பொற்கிரியை வென்றதுணை முலைமாமயிலே
இந்த வகையில் சூரியனும், செவ்வாயும் ஒரு ராசிக்கு பெயர்ச்சியான உடனேயே அதற்குண்டான பலனைத் தருவார்கள். சந்திரனும், புதனும் ஆரம்பத்திலிருந்து இறுதி வரையிலும், குருவும், சுக்கிரனும் ராசி மத்தியிலும், சனி, ராகு, கேது ஆகியவை இறுதியிலும் பலன் தருவார்கள்.///////

உங்களின் பின்னூட்டத்திற்கும், இந்தப் பாடலுக்கும் நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger dubai saravanan said...
Dear Sir,
I need your Email lessons. Kindly include my Email ID: dubaisaravanan@gmail.com/////

விளக்கம் உங்கள் முகவரிக்கும் வரும். நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger iyer said...
சட்டத்தினால் முடியாது
சாதிக்க துடிக்கும் ஊழல் போராட்டம்
சமுதாய விழிப்புணர்வே
சரியான போராட்டம் என்றாலும்
கட்டம் போட்ட அந்த
சட்டத்திற்குள் அத்தனை கிரகங்களும்
"அது" இல்லாமல் வழக்கம் போல்
அதுவதுவாகஇயங்குவதும்இயக்குவதும்
இருண்ட நாட்கள் எல்லாம்
உருண்டோடிட எப்பவும் போல்
வளமான வாழ்த்துக்கள்..
வழக்கமான திருக்குறளுடன்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
"சான்றோன்" எனக்கேட்ட தாய்.///////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

Ravichandran said...

Ayya,

CAn you please send me link..

Sincere Student,
Ravu

vprasanakumar said...

Dear Sir,
I need your Explanation. Kindly include my Email ID: vprasanakumar@gmail.com

Balaji said...

Dear Sir,

Could you please send your lessons to my email id : ramanan.venkat.v@gmail.com

Thanks & Regards,
venkat

Lakhsmi Nagaraj said...

அய்யா,

வணக்கம். 461‍‍‍_470க்கான கிரக நிலை அறியும் பாடத்தை
என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

மிக்க நன்றி,

உங்கள் மாணவி