மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

23.8.11

Astrology: சோகத்தில் முடியும் ஜாதகங்கள்!

--------------------------------------------------------------------------------------
Astrology: சோகத்தில் முடியும் ஜாதகங்கள்!

காலசர்ப்ப தோஷம் என்பது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாடம் நடத்தியுள்ளேன். ராகு & கேதுவிற்குள் அத்தனை கிரகங்களும் அடங்கிவிடும் நிலைமை அது. அதன் கால அளவு பற்றி  இருவேறான கருத்துக்கள் உள்ளன.

சிலர் 30 அல்லது 33 வயதுவரை காலசர்ப்ப தோஷம் இருக்கும். அதற்குப்பிறகு அந்த தோஷமே யோகமாக மாறிவிடும் என்பார்கள்.

வேறு சிலர் கால சர்ப்ப தோஷம் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் நீடிக்கும்  என்பார்கள்.

ஆனால் கால சர்ப்ப தோஷத்தில் இரண்டு வகைகள் உள்ளன.

1. காலமிரித யோகம்: ராகு முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், கேது  கடைசியாக வரும் அமைப்பு. இது கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது நன்மை பயக்கக்கூடிய அமைப்பு.

2. விலோமா யோகம்: கேது முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், ராகு  கடைசியாக வரும் அமைப்பு. இதுவும் கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது தீமை பயக்கக்கூடிய அமைப்பு.

There are two types of Kala Sarpa Yogas. One is when all of the seven grahas that are caught in the axis are moving toward the mouth of the serpent, Rahu. This is called kalamrita yoga and is considered the main formation. The other is when all of the planets are moving towards the tail Ketu and is known as viloma.

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

இது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன் துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.

அதற்குப் பிறகு என்ன செய்வது?

மனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச் செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.

என்ன காரணம்?

ஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன் ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப் பூர்த்தி யாக்கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்கவில்லை.

பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.

ஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
23.8.2011
வாழ்க வளமுடன்!

18 comments:

அம்பாளடியாள் said...

அருமையான விளக்கமையா .இதுவரைத் தெரிந்திராத ஒன்று .மிகச் சிறப்பாகச் சொன்னீர்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....

ananth said...

என் ஜாதகத்தில் just missஆக ராகு கேது axisக்கு வெளியில் குருவும் லக்கினமும் இருக்கிறது. மற்ற கிரகங்கள் ராகு கேதுக்குள் அடங்கி விட்டன.

ரம்மி said...

வாத்தியாருக்கு வணக்கம்!

கால சர்ப்ப தோஷம், பிறந்தது முதல் 30 - 33வயது வரையே பாதிப்பு
இருக்கும்: பிறகு ஏற்றத்தைக் கொடுக்கும் என்றுபாடத்தில் உள்ளது! ஆனால் அதன் பாதிப்பு இறுதி வரை தொடரும் போலும்! சில விஷயங்களில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, 30 வயதுக்கு மேல் சில விஷயங்களில் ஏற்றத்தைக் கொடுக்கும்!

குறையாயின் திருத்துமாறு வாத்தியார் அய்யாவைக் கேட்டுக் கொள்கிறேன்!

Ramachandran S said...

அருமையான விளக்கம்.

தமிழ் விரும்பி said...

மூன்றில் ராகு அதன்பிறகு ஒன்பதில் கேது இடையில் அனைத்து மற்றக் கிரகங்கள் இருந்தும் இதற்கு வெளியே சந்திரனும் நீச சனியும் சேர்ந்து இருக்கிறார்கள்... இதுவும் கால சர்ப் தோஷத்தில் வருமென்று கொள்வதால்.. அனுபவத்தில் லக்னத்தில் உள்ள பரல்களின் அளவிலே படுத்தியது எனலாம்... அதன் பிறகு படிப் படியாக......

நன்றிகள் ஐயா!

RMURUGARAJAN said...

எனது ஜதகதில் ராகு கொடி பிடித்து மற்றவர்கள் பின் செல்கின்றனர் ஆனால் லக்கினம் மட்டும் வெளியே உள்ளது.
வயதும் 34 ஆகிவிட்டது.லக்கினதில் பரல் 30 உள்ளது ஆக வரும் காலம் யோகமாக அமையும் என்று நினைக்கிறேன்.

தங்கள் படத்தில் எற்கனவே கூறியுள்ளது போல் லக்கினம் வெளிய இருந்தலும் இந்த தோசம் உண்டு.

அல்லாவ ஐயா அவர்களே,

நன்றி,

முருகராஜன்,
கோவை.

arul said...

good explanation

kmr.krishnan said...

ரஜனிகாந்த், ஜவ‌ஹர்லால் நேரு போன்ற பலர் கால சர்ப தோஷம் உள்ளவர்கள்.பின் வாழ்வுதான் நன்றாக‌ அமைந்தது.தோஷம் இருந்த சமயத்தில் பல துன்பங்களை அநுபவித்தனர்.நன்கு விளக்கியுள்ளீர்கள்.நன்றி

reka said...

how to calculate paral. where it was given in website..

மாணவி தேமொழி said...

விளக்கத்திற்கு மிக்க நன்றி அய்யா,
மிகவும் பொருத்தமான படத்தை போட்டுள்ளீர்கள்.
கால சர்ப்ப தோஷத்தில் மாட்டி தவிப்பவர்களில் நானும் உள்ளேன்.
"பேரு பெத்த பேரு தாக நீரு லேது" என்று தெலுங்கில்; பெரிய இடமாக தோன்றினாலும் குடிக்கும் தண்ணீருக்கே வக்கற்று இருப்பவர்களை சொல்வார்களாம்.
அது போல என் வாழ்க்கையும் வெளியில் இருந்து பார்பவர்களுக்கு பிரமிப்பாக இருக்க கூடும்; ஆனால் என்னை விட திறமையை மேம்படுத்த உழைக்காதவர்களும், வாழ்க்கையை சுலபமாக எடுத்துக் கொண்டு முன்னேற முயற்சி எடுக்காதவர்களும், சிறந்த நிலையை எளிதாக அடைந்து விடுவதை கண்கூடாக பார்த்துள்ளேன். எனக்கு சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது போல் நான் என் குறிக்கோளை அடையப் போகிறேன் என நினைக்கும் ஒவ்வொரு முறையும் ஏதாவது முட்டுக்கட்டையை சந்தித்துவிட்டு, எனக்கு பின் ஆரம்பித்தவர்கள் என்னை தாண்டி முன்னேறி பேரும், புகழும், செல்வாக்கும் அடைவதை பார்த்துள்ளேன். என்ன வாழ்கை இது என குமைந்தும் உள்ளேன். 30 அல்லது 33 வயதில் நல்ல மாற்றம் ஏற்படும் என்பது என் வாழ்வில் நடக்கவில்லை. மோசமானது என்றும் கூறலாம்.
இதை பகிர்ந்து கொள்வதில் ஒரு மன ஆறுதல் அவ்வளவே.
பணிவுடன்
உங்கள் மாணவி
தேமொழி

பி.கு. ஆர்வமுள்ளவர்கள் என் காலசர்ப்ப ஜாதகத்தை பார்க்க விரும்பினால் இங்கே சொடுக்கி பார்க்கலாம்

http://onnumepuriyale.blogspot.com/2011/08/blog-post.html

sridhar said...

அய்யா!
எனது ஜாதகத்திலும் காலசர்ப்ப தோஷம் உள்ளது. ஆனால் கிரகங்கள் அமைப்பு இவ்வாறு.
சிம்மத்தில் சனியும்+ராகு.
கும்பத்தில் சந்திரன் + கேது.
மற்ற கிரகங்கள்
கடகம் - குரு ,
மேஷம் - செவ்வாய்+சுக்ரன் ,
ரிஷபம் - லக்னம், சூரியன், புதன்.
இது எவ்வகை அய்யா ?

ananth said...

பெண்கள் விஷயத்தில் நீடித்த திருமண வாழ்விற்கு சுக்கிரன், 7ம், 8ம் அதிபதிகள் நன்றாக அமைய வேண்டும் என்பார்கள். இல்லாவிட்டால் பலமான 9ம் இடமும் அதன் அதிபதியும் இருக்க வேண்டும் என்பார்கள். இந்த ஜாதகத்தில் கால சர்பத்தை நீக்கி விட்டு பார்த்தாலும் இதில் எதுவுமே சரியில்லை.

R.Srishobana said...

Vanakam Ayya,
I have this doubt,if an auspicious planet(Venus,Jupiter,Moon,Mercury) gets debilitated and placed in an inimical houses(3,6,8,12) but gets an Neechabhanga Rajayoga and vargottama,will it gives good results in its dasa or bad results are pronounced.As given in the above Horoscope i guess it has Neechabhanga (as the lord of the house which is exalted in the house a debilitated planet occupies gives neechabhanga) and if -ve and -ve gives +ve results,shoudn't her 2nd house be getting some good results rather than a bad results.....sorry if i had overruled yours explanations...Plz clarify the same and this is just my point of view and pardon me if i had made any mistake

iyer said...

கால சர்ப்பம் என்றாலே
கால்கோல் இடும் ராகுவும் கேதும்

கொடி பிடிப்பது யார் என்ற கேள்வியே
மடியில் இருப்பது எது என

எல்லோரும் சொல்லியது போல்
என் பங்கிற்கும் சொல்லவே

சனியைத் தவிர எல்லாம்
சடுதியாகவே அந்த விட்டத்தில்

கால சர்ப்ப தோஷமே என்றாலும்
காலத்தை மாற்றும் மாமருந்து

கடவுள் எண்ணத்தில் என்பதால்
கவலையின்றியே இருப்போம்

இன்பமே எந்நாளும் துன்பமில்லை
இது அப்பர் வாக்கு..

A.Lakshmanan, Musiri said...

அன்பார்ந்த அய்யா,
கட்டுரை மிகவும் அருமை.தெய்வ நினைவோடு வெளிப்படுத்தப்படும் அன்புக்கு சக்தி மிகவும் அதிகம் என்பதை அறிந்து கொண்டேன். நன்றி.

sriganeshh said...

Dear Sir,

I have read when benefics conjoins the effect gets reduced.further being suffered under this kalasarpa or kalaamirtha... whatever, what i have seen is visiting respective jyotirlinga stala breaks this yoga to a great extent.
For example, in my case rahu (7 degree)in rishaba with atmakaraka jupiter (27 degree)got nullified to a great extent after visit to ujjain mahakaleshwar and ketu in vrishchik got nullified to a great extent after visit to Tryambakeshwar, near nashik.
I have no idea on this jyotirlingam link to 12 houses of horoscope. It came to me suddenly and then i went ahead. One thing essentially to borne in mind is, this is related to time and hence only when the time comes, everything will happen for this natives. I visited ujjain in the year 2006 and though am very near to nashik (just two hours from mumbai), i was able to go tryambakeshwar only in the year 2009, inspite of many efforts to go early.
Regular of worship of shiva on pradosha days and observing shivratri either on monthly basis or yearly once helps one very much.
just my two cents on this

arul said...

sir,

from clockwise from where we have to count? whether we have to count from mesha rasi?

Stalin Vanangamudi said...

ஜவஹர்லால் நேருவுக்கு கேது கொடி பிடித்த கால சர்ப்ப யோகம் தானே..