மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

29.8.11

Astrology அழகான பெண்ணும் அடங்காத தாதாவும்

------------------------------------------------------------------------------------------------
Astrology   அழகான பெண்ணும் அடங்காத தாதாவும்

அழகான பெண்ணும் அடங்காத தாதாவும் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும்?

என்ன ஆகும் சொல்லுங்கள்?

நானே சொல்லவா?

சரி, சொல்கிறேன்.

“கூடாத உறவு கேடில் முடியும்” என்று மூத்த தலைவர் சொன்னதைப்போல, அந்த உறவு கேடில் முடிவதோடு, விடமுடியாமல் தொடரும். பாவம் அந்தப் பெண்.

தாதா அந்தப் பெண்ணை நிச்சயம் வசப்படுத்திவிடுவான். உங்கள் மொழியில் சொன்னால் சாய்த்து விடுவான். வீழ்த்திவிடுவான். தன் கட்டுக்குள் வைத்துக்கொள்வான். அவள் மீண்டு வரமுடியாது. அதுதான் நடக்கும்.

“வாத்தி (யாரே), அதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கிறது ராசா! சந்திரனும் ராகுவும் ஒன்று சேர்ந்தால் அப்படித்தான் இருக்கும். அதை விளக்கத்தான் மேலே உள்ளதைச் சொன்னேன்”

“ஓஹோ..!”

“ஓஹோ அல்ல! ஆஹா என்று சொல்ல வேண்டும்!”
-------------------------------------------------------------------------------------
சந்திரன் மனகாரகன். Authority for mind

ஜாதகத்தில் சந்திரன் வலிமையுடன் இருந்தால், ஜாதகன் எப்பொதும் மன மகிழ்ச்சியுடன் இருப்பான். ஜாதகியாக இருந்தால், “லல லல்லல்லா...லல லல்லல்லா...” என்று பிண்ணனி இசை ஒலிக்க எப்பொதும் குஷியாக இருப்பாள்.

சந்திரன் வலிமை இழந்திருந்தால் மட்டும்தான் பிரச்சினை. அதைவிடப் பெரிய பிரச்சினை ராகுவுடன் சேர்ந்திருப்பது. சில (நன்றாகக் கவனிக்கவும்) சில ஜாதகர்களை அந்தக் கூட்டணி மன நோயாளியாக்கக்கூடும்.

லக்கினத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகி அழகான தோற்றத்துடன் இருப்பாள். உடன் ராகுவும் இருந்தால் ஜாதகி சுய கட்டுப்பாடுகள் மிகுந்தவளாக இருப்பாள். தன்முனைப்பு (ego) உள்ளவளாக இருப்பாள். யாருடனும் அனுசரித்துப் போகும் மனநிலை இல்லாதவளாக இருப்பாள். மனகாரகன் சந்திரனுடன் ராகு கூட்டாக இருந்தால் அந்த நிலை தவிர்க்கமுடியாததாக இருக்கும்.

சந்திரனுடன் ராகு சேரும்போது ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு சந்தேக மனப்பான்மை மிகுந்திருக்கும். யாரையும், எதையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.

சில சந்தேகப் பிறவிகளின் சந்தேகங்கள் வினோதமாக இருக்கும். வீட்டைப் பூட்டிவிட்டு ஊருக்குப் போகும்போது, பேருந்து நிலையத்திற்குச் சென்று, பேருந்தில் ஏறி அமர்ந்து, பயணச் சீட்டை வாங்கிய பிறகுதான் வீட்டை நன்றாகப் பூட்டினோமா? என்ற சந்தேகம் கிளம்பும். தன் மனைவி யாருடன் பேசினாலும் சந்தேகம் கொள்வான்.

அதுபோன்ற அமைப்புடைய பெண்னும் குழப்பமானவள்தான். தன்னுடைய கணவன் யதேட்சையாக வேறு ஒரு பெண்ணை உற்றுப் பார்த்தால், அவன் நாம் இருக்கும்போதே, இப்படி சைட் அடிக்கிறானே, இல்லாத போது என்னென்ன செய்வான் என்கின்ற சந்தேகம் எழும். கணவனின் நடவடிக்கை களைக் கவனிக்க வேண்டும் என்ற முனைப்பில், அவன் இல்லாத நேரங்களில் அவனுடைய சட்டைப் பையில் உள்ள காகிதங்களை படித்துப் பார்ப்பாள். அவனுக்கு வந்துள்ள அலைபேசி எண்களை நோண்டிப் பார்ப்பாள்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாம் சந்திரனுடன் சேரும் ராகுவின் திருவிளையாடல்

வாழ்க்கையைப் பற்றி ஒற்றை வரியில் சொல்லும்போது இப்படிச் சொல்வார்கள்:

Life is nothing but adjusting with the people around us.

நம்மைச் சுற்றியுள்ளவர்களை அனுசரித்துக்கொண்டு போவதுதான் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்.

அது இல்லாவிட்டால் என்ன ஆகும்?

ஒரு உதாரண ஜாதகத்துடன் அதை விரிவாக விளக்குகிறேன்

விளக்கம் நாளை. பொறுத்திருந்து படியுங்கள்

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
29.8.2011

வாழ்க வளமுடன்!

27 comments:

ananth said...

இந்த கூட்டணி இல்லாத துன்பத்தையும் இருப்பதாக நினைக்க வைக்கும். வேண்டுமானால் துன்பம் நேர்கையில் யாழிசைத்து இன்பம் சேர்க்க மாட்டாயா என்று பாடி வைக்கலாம்.

தமிழ் விரும்பி said...

///விளக்கம் நாளை. பொறுத்திருந்து படியுங்கள்///
நன்றிகள் ஐயா!

////"துன்பம் நேர்கையில் யாழிசைத்து இன்பம் சேர்க்க மாட்டாயா" என் அன்பே, ஆருயிரே, மாசற்ற சோதியே, தெய்வப் பெண்ணே, பேரழகின் பிறப்பிடமே.. என்று பாடி வைக்கலாம்.///
ஆகா, நண்பர் ஆனந்தின் பின்னூட்டத்தில் கவித்துவம் மின்னுகிறது.. அருமை.

Trading Options said...

Dear Sir:

Where can we get your astrology books?

Thanks, siva

kmr.krishnan said...

நான் ஒரு 'ஊ லல்லா கேஸ்'தான் ஐயா!ஆம். கடக லக்னம் கடக ராசி.பூசம்! ச‌ந்திரன் ஆட்சியில்.துன்பங்களை உடனே மறக்கும் மனம்.
'இனபமே எந்நாளும் துன்பமில்லை'என்று பாடிக்கொண்டு செல்லும் இயல்பு. சுலபமாக சபலத்திற்கு ஆளாகும் இயல்பும் கூடவே...!

Ravichandran said...

Ayya,

Dasa Puthi padam is not completed yet...When can we expect those...Because I am waiting to see Shani Bhawan stuff.

Sincere Student,
Trichy Ravi

SP.VR. SUBBAIYA said...

//////Blogger ananth said...
இந்த கூட்டணி இல்லாத துன்பத்தையும் இருப்பதாக நினைக்க வைக்கும். வேண்டுமானால் துன்பம் நேர்கையில் யாழிசைத்து இன்பம் சேர்க்க மாட்டாயா என்று பாடி வைக்கலாம்.//////

நீங்கள் பாடினால் இசை அமைக்க நான் தயார்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger தமிழ் விரும்பி said...
///விளக்கம் நாளை. பொறுத்திருந்து படியுங்கள்///
நன்றிகள் ஐயா!
////"துன்பம் நேர்கையில் யாழிசைத்து இன்பம் சேர்க்க மாட்டாயா" என் அன்பே, ஆருயிரே, மாசற்ற சோதியே, தெய்வப் பெண்ணே, பேரழகின் பிறப்பிடமே.. என்று பாடி வைக்கலாம்.///
ஆகா, நண்பர் ஆனந்தின் பின்னூட்டத்தில் கவித்துவம் மின்னுகிறது.. அருமை.//////

அவர் பெயரிலேயே ஆனந்தமான கவித்துவம் இருக்கிறதே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Trading Options said...
Dear Sir:
Where can we get your astrology books?
Thanks, siva/////

வருகின்ற டிஸம்பர் முதல் வாரம் புத்தகங்கள் கிடைக்கும். மும்மரமாக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
நான் ஒரு 'ஊ லல்லா கேஸ்'தான் ஐயா!ஆம். கடக லக்னம் கடக ராசி.பூசம்! ச‌ந்திரன் ஆட்சியில்.துன்பங்களை உடனே மறக்கும் மனம்.
'இன்பமே எந்நாளும் துன்பமில்லை'என்று பாடிக்கொண்டு செல்லும் இயல்பு. சுலபமாக சபலத்திற்கு ஆளாகும் இயல்பும் கூடவே...!/////

சபலம் என்கின்ற பதம் தவறான அர்த்தத்தைக் கொடுக்கும். சஞ்சலம் என்று வேண்டுமென்றால் சொல்லுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger Ravichandran said...
Ayya,
Dasa Puthi padam is not completed yet...When can we expect those...Because I am waiting to see Shani Bhawan stuff.
Sincere Student,
Trichy Ravi////

காலைப் பலகாரம், தொடர்ந்து, இட்லி + சாம்பார் என்றால் சலிப்புத்தட்டாதா? அதனால்தான் பொங்கல், வடை, நெய் ரோஸ்ட், மசால் தோசை, என்று விதம் விதமாகக் (வெரைட்டியாக) கொடுத்துக்கொண்டிருக்கிறேன். பொறுத்திருங்கள். அடுத்த இரு வாரங்களுக்கு முழுமைக்கும் இட்லி, சாம்பார்தான் - அதாவது தசாபுத்திப் பலன்கள்தான். என்ன சரிதானே நண்பரே?

Anonymous said...

sir

Accept me as your student. i need your email lessons include my id
rrobertclive32@gmail.com

Rathinavel.C said...

Dear sir
I am looking forward to know more about Guru dasa palangal

Thanks
Rathinavel.C

R.Srishobana said...

Vanakkam Ayya,
I've chandra lagna(Simham),but i never find myself happy coz next minute someone will make bullying on me...i got just 3 parals in ashtavarga but close to 8 points in Rupas...even my Mother used to ask me why r u so sad always...i never answered her bcoz i've been insulted mostly by my relatives...im not an bold girl,unlike most of the leo girls and unhappy person too but i have courage to move on in my life,the only trait in me which i always nurtured on...It was here and Ayya i've shared my feelings where i wished to share on reading this Blog...thanx for sharing us some good informations on Moon's impact

SP.VR. SUBBAIYA said...

/////Blogger KARIKAL said...
sir
Accept me as your student. i need your email lessons include my id
rrobertclive32@gmail.com/////

இது ஒரு திறந்தவெளி இணைய வகுப்பு. யார் வேண்டுமென்றாலும் படிக்கலாம். அனுமதி எதற்கு?

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Rathinavel.C said...
Dear sir
I am looking forward to know more about Guru dasa palangal
Thanks
Rathinavel.C///////

தசாபுத்திப் பலன்களில் மீதியுள்ள பாடங்கள் அடுத்த வாரம் தொடரும். பொறுத்திருங்கள் இரத்தினவேல்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger R.Srishobana said...
Vanakkam Ayya,
I've chandra lagna(Simham),but i never find myself happy coz next minute someone will make bullying on me...i got just 3 parals in ashtavarga but close to 8 points in Rupas...even my Mother used to ask me why r u so sad always...i never answered her bcoz i've been insulted mostly by my relatives...im not an bold girl,unlike most of the leo girls and unhappy person too but i have courage to move on in my life,the only trait in me which i always nurtured on...It was here and Ayya i've shared my feelings where i wished to share on reading this Blog...thanx for sharing us some good informations on Moon's impact/////

சிம்ம லக்கினமும், சிம்மராசியும் இயற்கையிலேயே துணிச்சலுக்கான இடங்கள். கவலை எதற்கு? காலம் வரும் பொறுத்திருங்கள். சாடியவர்கள் எல்லாம் உதவி கேட்டு நாடி வருவார்கள்

kannan said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

தாங்கள் ஒரு பதிமூன்று வருடத்திற்கு முன்னர் எனக்கு வாத்தியாராக அறிமுகம் ஆகி இருந்தால் ஒரு வேலை யாமும் ஏதாவது ஒரு துறையில் சிறந்த மேதையாக ஆகி இருப்பேன் ஐயா.

குடும்பஸ்தன் ஆக வேண்டிய கடைசி கட்டத்தில் இருந்து கொண்டு ஒன்றும் செய்ய முடிய வில்லை.

kannan said...

வாத்தியார் ஐயா வணக்கம்.


முருக பெருமான் காவி உடை அணியக்காரணம் கிழே வருமாறு கேள்வி பட்டேன் உண்மையா ஐயா .

மாம்பலம் கிடைக்க வில்லை என்ற உடன் தந்தையின் மேல் இருந்த கோபத்தால் தந்தை தந்த இரத்தம் தனது உடலில் இருக்க வேண்டாம் என கத்தி கொண்டு அறுத்து தனது உடலில் உள்ள இரத்தம் அனைத்தையும் வெளி ஏற்றினார் .

அவ்வாறு வெளியேறிய இரத்தம் ஆனது வெள்ளை நிற உடையில் பட்டதனால் தான் வேஷ்டி மற்றும் துண்டுகள் காவி நிறத்தீர்க்கு வந்தது என்று.

தந்தை தந்த இரத்தத்தை வெளியேற்றியதனால் தான் உடலில் சக்தி இல்லாமல் இருந்த முருகருக்கு பார்வதி தேவி சக்தியான வேல் லை கொடுத்ததினால் தான் மீண்டும் பழைய நிலைக்கு சக்தி உள்ள வேலவனாக வந்தாராம் ஐயா.

minorwall said...

சுயகட்டுப்பாடு மிகுந்துபோவதுதான் இப்படி ஸ்ட்ரெஸ் கட்டிழந்து வளரக் காரணமாயிருக்கிறது..
அந்த ஸ்ட்ரெஸ்தான் தனக்கு நேர்மையானவனாக தன் கணவன் இல்லையோ என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது..
அதுதான் பாக்கெட் கடிதங்களையும்,செல்போன் அழைப்புக்களையும்..ஏன் சில சமயங்களில் sign out ஆகாது மறந்துவிட்ட இமெயிலைகூட செக் பண்ணத் தூண்டுகிறது..
இப்படி ஒரு தாதா ராகு தொடுக்கும் அஸ்திரங்களைத் தவிடுபொடியாக்க கணவன் ஜாதகத்தில் எழில் சந்திரன் உச்சமானால்தான் முடியும் என்று ஜோடி சேர்க்கும் அமைப்பைத்தான் விதி என்கிறார்களோ?

iyer said...

///முருக பெருமான் காவி உடை அணியக்காரணம் ///

முருகா.. முருகா..

தவறான தகவல்கள்
தவறான சிந்தனைகள் தாம் தரும்..

"பெம்மான் முருகன்
பிறவான் இறவான்" - இது

அநுபூதி தந்த
அருணகிரியார் வாக்கு..

காவி உடை சைவத்திற்கு உகந்ததென
கருத ஒண்ணாதது.. கண்ணன்..

இன்னமும் சொல்ல
இங்கே விவரம் இருக்கிறது..

எடுத்துச் சொல்லஒரு வகுப்பு போதுமா
எப்பவும் போல் வாதமின்றியே..

வழக்கமான அமைதியுடன்
வளமான வாழ்த்துக்கள்...

iyer said...

கள்ளுக்குள்ளும் ஈரமுண்டு
கற்றுக் கொண்டால் பயன் உண்டு

அழகுடன் இணைவது தாதாவாணாலும்
அதற்குள் அமைந்துள்ள அமைதிபோல்

சந்திரனுடன் சேர்வது யாரோ..
சந்திக்க துடிப்பது யாரோ..

பார்த்திபனும் சீதாவும் நடித்தபடமும்
பிரபுவும் கௌதமியும் நடித்த படமும்

இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதானே
இன்னமும் அறிய அடுத்த வகுப்புக்கு

காத்திருக்கிறேன்.. அந்த ஜாதகத்தை
கண்டு அலசிட...

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kannan said...
வாத்தியார் ஐயா வணக்கம்.
தாங்கள் ஒரு பதிமூன்று வருடத்திற்கு முன்னர் எனக்கு வாத்தியாராக அறிமுகம் ஆகி இருந்தால் ஒரு வேலை யாமும் ஏதாவது ஒரு துறையில் சிறந்த மேதையாக ஆகி இருப்பேன் ஐயா.
குடும்பஸ்தன் ஆக வேண்டிய கடைசி கட்டத்தில் இருந்து கொண்டு ஒன்றும் செய்ய முடிய வில்லை./////

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. குடும்பஸ்தான் ஆனபிறகு மேதையானவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆர்வமும், தன்முனைப்பும், முயற்சியும் இருந்தால் போதும். வயது ஒன்றும் தடையில்லை.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kannan said...
வாத்தியார் ஐயா வணக்கம்.
முருக பெருமான் காவி உடை அணியக்காரணம் கிழே வருமாறு கேள்வி பட்டேன் உண்மையா ஐயா .
மாம்பலம் கிடைக்க வில்லை என்ற உடன் தந்தையின் மேல் இருந்த கோபத்தால் தந்தை தந்த இரத்தம் தனது உடலில் இருக்க வேண்டாம் என கத்தி கொண்டு அறுத்து தனது உடலில் உள்ள இரத்தம் அனைத்தையும் வெளி ஏற்றினார் .
அவ்வாறு வெளியேறிய இரத்தம் ஆனது வெள்ளை நிற உடையில் பட்டதனால் தான் வேஷ்டி மற்றும் துண்டுகள் காவி நிறத்தீர்க்கு வந்தது என்று.
தந்தை தந்த இரத்தத்தை வெளியேற்றியதனால் தான் உடலில் சக்தி இல்லாமல் இருந்த முருகருக்கு பார்வதி தேவி சக்தியான வேல் லை கொடுத்ததினால் தான் மீண்டும் பழைய நிலைக்கு சக்தி உள்ள வேலவனாக வந்தாராம் ஐயா./////

அதெல்லாம் உண்மையல்ல.
In Hinduism, deep saffron color is associated with sacrifice, religious abstinence, quest for light and salvation. Saffron or "Bhagwa" is the most sacred color for the Hindus and is often worn by Sanyasis who have left their home in search of the ultimate truth.

SP.VR. SUBBAIYA said...

////Blogger minorwall said...
சுயகட்டுப்பாடு மிகுந்துபோவதுதான் இப்படி ஸ்ட்ரெஸ் கட்டிழந்து வளரக் காரணமாயிருக்கிறது..
அந்த ஸ்ட்ரெஸ்தான் தனக்கு நேர்மையானவனாக தன் கணவன் இல்லையோ என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது..
அதுதான் பாக்கெட் கடிதங்களையும்,செல்போன் அழைப்புக்களையும்..ஏன் சில சமயங்களில் sign out ஆகாது மறந்துவிட்ட இமெயிலைகூட செக் பண்ணத் தூண்டுகிறது..
இப்படி ஒரு தாதா ராகு தொடுக்கும் அஸ்திரங்களைத் தவிடுபொடியாக்க கணவன் ஜாதகத்தில் எழில் சந்திரன் உச்சமானால்தான் முடியும் என்று ஜோடி சேர்க்கும் அமைப்பைத்தான் விதி என்கிறார்களோ?/////

ஜோடி சேர்க்கிறவர்கள் அதையெல்லாம் எங்கே பார்க்கிறார்கள். பணக்காரன் பணம் இருக்கும் வீட்டில்தான் பெண் தேடுகிறான். வேலைக்குச் சென்று பொருள் ஈட்டும் பெண்கள், தங்களைவிட அதிகமாக சம்பாதிக்கும் கணவனைத்தான் விரும்புகிறார்கள். காசே கடவுளாகிவிட்டது மைனர். உங்களுக்குத் தெரியாததா அது மைனர்!
நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து பின்னூட்டமிட்ட உங்களுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி மைனர்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger iyer said...
///முருக பெருமான் காவி உடை அணியக்காரணம் ///
முருகா.. முருகா..
தவறான தகவல்கள்
தவறான சிந்தனைகள் தாம் தரும்..
"பெம்மான் முருகன்
பிறவான் இறவான்" - இது
அநுபூதி தந்த
அருணகிரியார் வாக்கு..
காவி உடை சைவத்திற்கு உகந்ததென
கருத ஒண்ணாதது.. கண்ணன்..
இன்னமும் சொல்ல
இங்கே விவரம் இருக்கிறது..
எடுத்துச் சொல்லஒரு வகுப்பு போதுமா
எப்பவும் போல் வாதமின்றியே..
வழக்கமான அமைதியுடன்
வளமான வாழ்த்துக்கள்.../////

உண்மைதான். நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger iyer said...
கள்ளுக்குள்ளும் ஈரமுண்டு
கற்றுக் கொண்டால் பயன் உண்டு
அழகுடன் இணைவது தாதாவானாலும்
அதற்குள் அமைந்துள்ள அமைதிபோல்
சந்திரனுடன் சேர்வது யாரோ..
சந்திக்க துடிப்பது யாரோ..
பார்த்திபனும் சீதாவும் நடித்தபடமும்
பிரபுவும் கௌதமியும் நடித்த படமும்
இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதானே
இன்னமும் அறிய அடுத்த வகுப்புக்கு
காத்திருக்கிறேன்.. அந்த ஜாதகத்தை
கண்டு அலசிட...//////

உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி நண்பரே!

minorwall said...

////
SP.VR. SUBBAIYA said...
நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து பின்னூட்டமிட்ட உங்களுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி மைனர்!
////////
முடிஞ்சப்போ வந்துட்டுப் போறேன் சார்..நன்றி..