--------------------------------------------------------------------------------------------
Astrology அழகான பெண்ணும் அடங்காத தாதாவும் - பகுதி 2
முன் பதிவைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சந்திரனும் ராகுவும் ஒருவரின் தோள் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு கூட்டாக இருந்தால் என்ன நடக்கும் என்பதை ஒரு உதாரண ஜாதகத்துடன் விரிவாக விளக்குவதாக நேற்றையப் பாடத்தில் சொல்லியிருந்தேன்.
அதை இன்று பார்ப்போம்.
அந்த அமைப்பு இருந்து மற்ற கிரகங்கள் எல்லாம் ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. நன்றாக இல்லாவிட்டால் மட்டுமே பிரச்சினைகள் தலை தூக்கும்.
கீழே கொடுத்துள்ளது ஒரு அம்மணியின் ஜாதகம்.
அம்மணி படித்தவர். உரிய வயதில் திருமணமாகிவிட்டது. கணவர் ஒரு அரசியல்வாதி. வீடு தங்கமாட்டார். எப்போதும் கட்சி, காட்சி என்று சுற்றிக் கொண்டிருப்பார். ஓரளவு செல்வாக்குடனும் இருந்தார். கட்சி மற்றும் கட்சியைவைத்துச் செய்யும் பணிகளின் மூலம் குறைவில்லாத பணவரவும் இருந்தது. அவர் மகிழ்ச்சியுடன்தான் இருந்தார்.
ஆனால் அவரைக் கைபிடித்த மனைவிக்கு திருமண வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. கணவரின் நடத்தை மீது சந்தேகம் வேறு ஏற்பட்டு, அவரை வாட்டிக்கொண்டிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல வெறுப்படைந்து
விட்டார். அத்துடன் தனது 27ஆவது வயதில் கணவரை விட்டுப் பிரிந்து விவாகரத்தும் பெற்றுவிட்டார். தனிப்பட்டுப் போய்விட்டார்.
என்ன காரணம்?
லக்கினத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகி அழகான தோற்றத்துடன் இருப்பாள். உடன் ராகுவும் இருந்தால் ஜாதகி சுய கட்டுப்பாடுகள் மிகுந்தவளாக இருந்தாள். தன்முனைப்பு (ego) உள்ளவளாக இருந்தாள். யாருடனும் அனுசரித்துப் போகும் மனநிலை இல்லாதவளாக இருந்தாள். மனகாரகன் சந்திரனுடன் ராகு கூட்டாக இருந்தால் அந்த நிலை ஏற்பட்டது. அத்துடன் ஜாதகிக்கு சந்தேக மனப்பான்மை யும் மிகுந்திருந்தது.
அந்த சந்தேகங்கள்தான் வலுத்து கடைசில் விவாகரத்தில் முடிந்தது.
விவாகரத்துவரை சென்றதற்கு அது மட்டும்தான் காரணமா?
இல்லை!
லக்கினத்தில் இருந்து ஏழாம் வீடு மிகவும் பலவீனமடைந்திருப்பதைப் பாருங்கள். ஏழில் மூன்று கிரகங்களின் ஆதிக்கம். அவர்களில் ஒருவன் வில்லன். ஆறாம் வீட்டு அதிபதியான புதன். பூர்வபுண்ணியாதிபதியான சூரியனும் நீசம்பெற்று அங்கே ஆதிக்கம் செலுத்துகிறான். அவர்கள் இருவருடன் கேதுவும் உள்ளார். ஏழாம் அதிபதி சுக்கிரன் பகைவீட்டில். பகை வீட்டில் இருந்தாலும் பரிவர்த்தனை யோகத்துடன் உள்ளார். அதனால்தான் திருமணமே நடந்தது.
12ல் சனி. அது அயன, சயன போக பாகியத்திற்கான வீடு. அங்கே சனி இருப்பது நல்லதல்ல. போக பாக்கியத்தைக் குறைத்தான். அவளுடைய தூக்கத்தைக் கெடுத்தான். அவன் தன்னுடைய வேலையைக் கச்சிதமாகச் செய்தான். ஜாதகியின் புணர்ச்சி இன்பத்தில் கையை வைத்தான். ஜாதகிக்கு அது தொடர்ந்து கிடைக்காமல் இருக்கும் வழியைச் செய்தான். திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.
ஜாதகிக்குக் கேது திசை நடக்கும்போது அது இரண்டும் நடந்தது. அதாவது விவாகம் மற்றும் விவாகரத்து ஆகிய இரண்டுமே கேது திசையில் அரங்கேறியது. கேது ஏழில் இருப்பதைக் கவனியுங்கள். அத்துடன் அவர் வேறு இரு முக்கியமான கிரகங்களுடன் கிரகயுத்தத்தில் இருப்பதையும் கவனியுங்கள்
விளக்கம் போதுமா?
ஒரு ஜாதகத்தை சர்ப் எக்செல் போட்டு அலசுவது இப்படித்தான்.
அன்புடன்
வாத்தியார்
30.8.2011
வாழ்க வளமுடன்!

இரண்டிற்குரிய சுக்கிரன் பரிவர்தனை ஆனாலும் குருவுடன் யுத்தத்தில் இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு குடும்பம் இருக்காது. இருந்தாலும் நிலைக்காது. கொடுப்பது போல் கொடுத்து பறித்துக் கொண்டார். ’கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி’ என்ற பாடல் நினைவிற்கு வருகிறது.
ReplyDeleteநாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு சம்பந்தமில்லாதது. ஆயினும் சொல்கிறேன். சந்திர கிரகண நாளில் ஜாதகி பிறந்திருக்கிறார். அத்துடன் அது மாமாங்க வருடம் என்றும் சொல்லலாம்.
/////Blogger ananth said...
ReplyDeleteஇரண்டிற்குரிய சுக்கிரன் பரிவர்தனை ஆனாலும் குருவுடன் யுத்தத்தில் இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு குடும்பம் இருக்காது. இருந்தாலும் நிலைக்காது. கொடுப்பது போல் கொடுத்து பறித்துக் கொண்டார். ’கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி’ என்ற பாடல் நினைவிற்கு வருகிறது.
நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு சம்பந்தமில்லாதது. ஆயினும் சொல்கிறேன். சந்திர கிரகண நாளில் ஜாதகி பிறந்திருக்கிறார். அத்துடன் அது மாமாங்க வருடம் என்றும் சொல்லலாம்.//////
உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!
good explanation sir
ReplyDeleteசுக்கிரன் குருவுடன் யுத்தத்தில் என்று எவ்வாறு முடிவெடுக்கின்றீர்கள் என அறியத் தரவும்.
ReplyDeleteகிரக யுத்தம் 5, 10 பாகை இடைவெளி எனத் தெரியும்.
இங்கே சிம்மத்தில் இவர்கள்(Venus Jupiter) ஒவ்வொருவரின் நட்சத்திரங்கள் பாதங்கள் எதுவுமே தெரியாது.
DOB, DOT இரண்டுமே தரப்படவில்லை.
தயைகூர்ந்து விளக்கம் வேண்டுகின்றேன்.
சிறு திருத்தம். கேது புத்தி இல் விவாகம், விவாகரத்து நடந்து இருக்க வேண்டும்.
ReplyDeleteAyya,
ReplyDeleteI have three clarification on this horoscope:
1. Guru is looking Lagnam & chandran as 9th Parvai.So Ist Kaga Kesari yogam?
2. Even in seventh house, Suryan & Budhan mix is Budha Aditya Yogam.
With above two yogams, will she get any benefits or not?
3. If Suryan is placed other planets, Suryan will destroy others..Ist? If so, Kethu should have lost power?
These are my doubts, I may be wrong as well.Plase clarify.
Sincere Student,
Trichy Ravi
லக்னாதிபதி 9ல் நட்பு வீட்டில் இருந்தும், குருவின் பார்வை இருந்தும், லக்னத்திற்கே குருபர்வை இருந்தும் இப்படியெல்லாம் நடந்து உள்ளதே. அப்போ குருவின் 'பவர்'தான் என்ன?
ReplyDeleteDear Sir,in planetary war,which planet and how it dominates?.Then some planets rules two houses.when taking into analysis,which house lord has to be given preference.Example saturn,venus,mars,mercury,jupiter rules two houses.No one has written so far about it in detail.Please write of planetary war and lord ruling two houses when you have time sir.Thank you. I tried my best to explain you sir
ReplyDeleteMany things fell in place today, giving me an 'Aha moment' after reading your article.
ReplyDeleteIf one was not privy to information like this in the past he simply couldn't judge situations correctly.
As they say in US :
Today it gave me the Low down (however late/slow I am).
அய்யா,
ReplyDeleteதனியார்(ப்ரைவேட்) பாதுகாப்புத் துறையில் பனியாறும் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், வெகுகாலமாக IAS தேர்வு எழுதிக்கொண்டிருக்கின்றார். நல்ல நிர்வாகத்திறமையுள்ள அவரின் ஜாதகத்தில், ராகு மற்றும் இருக்கும் எல்லா சனியனும் காற்று போகும் எல்லா துளைகலிலும் கைவெய்து அடைத்துக் கொண்டிருக்கின்றான். அவரின் ஜாதகத்தைப் பார்த்து தாங்கள் அவர் IAS ஆவாரா இல்லை இப்படியே காலம் தல்லுவாறா என்று சொல்ல வேண்டுகின்றேன்.
//சுக்கிரன் குருவுடன் யுத்தத்தில் என்று எவ்வாறு முடிவெடுக்கின்றீர்கள் என அறியத் தரவும்.
ReplyDeleteகிரக யுத்தம் 5, 10 பாகை இடைவெளி எனத் தெரியும்.
இங்கே சிம்மத்தில் இவர்கள்(Venus Jupiter) ஒவ்வொருவரின் நட்சத்திரங்கள் பாதங்கள் எதுவுமே தெரியாது.
DOB, DOT இரண்டுமே தரப்படவில்லை.
தயைகூர்ந்து விளக்கம் வேண்டுகின்றேன்.//
ஒருவர் தேவ குரு, மற்றொருவர் அசுர குரு. பகை கிரகங்கள். ஒருவருக்கொருவர் அள்ளி கொடுப்பதை விடுத்து தள்ளி கெடுக்கத்தான் பார்ப்பார்கள். ஒருவர் மற்றவருடைய காரகத்துவம், ஆதிபத்தியம் இவற்றைக் கெடுக்கத்தான் பார்ப்பார். யுத்தம் என்பது இந்த அர்த்தத்தில் சொன்னது. நீங்கள் சொல்வது வேறொன்று. விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்
அதனால் என்ன அய்யா, அந்தப்பெண் இந்நேரம் ஞானம் பெற்றிருப்பாள்.
ReplyDeleteஅடுத்து என்ன சுக்ரதிசாதானே 20 ஆண்டுகள், சொல்லவா வேண்டும்.
நண்பர் krishnarருக்காக:
ReplyDeleteநான் செக் பண்ணிப்பார்த்ததில் இந்த அம்மணி பிறந்தநாள்: 1969 october19 th morning 4 AM .
longitude lattitude காரைக்குடி ன்னு வெச்சுக்குவோம்..
கிட்டத்தட்ட நெருங்கிட்டேனா வாத்தியார் சார்?
ஒரு பத்து நிமிடங்கள் செலவாகின..
ராகு தசையிலே கேது புத்தியில் divorce என்றால் கணக்கு சரியாகிறது..from 1997 june to 1998 july (this period).
சூரியனும், சுக்கிரனும் பரிவர்த்தனையாகினாலும், கேதுவால் அரசியல்வாதி கனவனை அனுசரித்துப்போக முடியவில்லை போலும்.
ReplyDeleteதோசஜதகரை தன் பார்வயிலேயே வைத்துக்காக்க அவரென்ன ஆலங்குடி ப்ரஹஷ்பதியா? ஜதகப்படி நீசகுருதானே அய்யா.அதான் ராகுகாலத்தில் வேர சைட் விசிட்டிங் போய்ட்டார் போலும் சரிதானே அய்யா.
hello sir, ennum mailla advance classes poitu iruka illai mudinchitha?
ReplyDeleteeverybody whos interested in astrology shuld read rani tamil magazines. actor rajesh (of antha yelu natkal fame) is writing evry week for the past 40 editions about his expe'nces with different forms of astrology. i contacted him and he agrred to send me all the previous copies too. if anybodys interested to get it, ill be glad to share it with ulike our teacher is doin here with us.contact me free_radical15@yahoo.com . thanks
ReplyDeleteஆகா..
ReplyDeleteஅருமை..
சாதகத்துக்குரியவரின் பி நாள் தராமல்
சரியாக யோசித்து அலச தந்த வகுப்பு
அருமை.. எடுத்துச் சொன்ன விதம்
அற்புதம்தான் என்றாலும்யுத்தம்எங்கே?
அந்த அரசியல் வாதி...
அவர் தானே.. (?)
வழக்கம் போல்
வகுப்பிற்கு வரும் குறள் சிந்தனை..
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
/////Blogger arul said...
ReplyDeletegood explanation sir////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger krishnar said...
ReplyDeleteசுக்கிரன் குருவுடன் யுத்தத்தில் என்று எவ்வாறு முடிவெடுக்கின்றீர்கள் என அறியத் தரவும்.
கிரக யுத்தம் 5, 10 பாகை இடைவெளி எனத் தெரியும். இங்கே சிம்மத்தில் இவர்கள்(Venus Jupiter) ஒவ்வொருவரின் நட்சத்திரங்கள் பாதங்கள் எதுவுமே தெரியாது. DOB, DOT இரண்டுமே தரப்படவில்லை.
தயைகூர்ந்து விளக்கம் வேண்டுகின்றேன்.//////
உங்களின் ஆர்வத்திற்கு நன்றி. சில காரணங்களுக்காக முழு ஜாதகத்தையும் கொடுக்கவில்லை. பொறுத்துக் கொள்ளவும்.
//////Blogger Saravanan said...
ReplyDeleteசிறு திருத்தம். கேது புத்தியில் விவாகம், விவாகரத்து நடந்து இருக்க வேண்டும்./////
ஆமாம். நன்றி
/////Blogger Ravichandran said...
ReplyDeleteAyya,
I have three clarification on this horoscope:
1. Guru is looking Lagnam & chandran as 9th Parvai.So Ist Kaga Kesari yogam?
2. Even in seventh house, Suryan & Budhan mix is Budha Aditya Yogam.
With above two yogams, will she get any benefits or not?
3. If Suryan is placed other planets, Suryan will destroy others..Ist? If so, Kethu should have lost power?
These are my doubts, I may be wrong as well. Plase clarify.
Sincere Student,
Trichy Ravi///////
என்ன யோகம் இருந்து என்ன பிரயோஜனம். விவரித்து இருப்பது ஏழாம் பாவத்தை வைத்துத்தான். அதுதான் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களால் அடிபட்டுப் போயிருக்கிறதே. ஒவ்வொரு கிரகமும் தன்னுடைய திசை புத்தியில் செய்ய வேண்டியதைச் செய்துவிடும்.
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteலக்னாதிபதி 9ல் நட்பு வீட்டில் இருந்தும், குருவின் பார்வை இருந்தும், லக்னத்திற்கே குருபார்வை இருந்தும் இப்படியெல்லாம் நடந்து உள்ளதே. அப்போ குருவின் 'பவர்'தான் என்ன?//////
நடந்த கூத்தெல்லாம் ஏழாம் வீட்டைவைத்து. அதற்கு தனி மினிஸ்ட்ரி உள்ளபோது லக்கினாதிபதி என்ன செய்வார் கிருஷ்ணன் சார்? 10 & 11 ஆம் அதிபதி சனி விரையத்தில் உள்ளதைப் பார்த்தீர்களா? லக்கினாதிபதி தலைப் பிடித்துத் தூக்கி விட்டால், அவன் காலில் உதைத்துத் தள்ளிவிடுவான். தானிக்குத் தீனி சரிபோயிந்தி!
Blogger Lazy boy said...
ReplyDeleteDear Sir,in planetary war,which planet and how it dominates?.Then some planets rules two houses.when taking into analysis,which house lord has to be given preference.Example saturn,venus,mars,mercury,jupiter rules two houses.No one has written so far about it in detail.Please write of planetary war and lord ruling two houses when you have time sir.Thank you. I tried my best to explain you sir//////
இதுவரை சுமார் 500 பாடங்களை எழுதியுள்ளேன். முதலில் பழைய பாடங்களை எல்லாம் படியுங்கள் நண்பரே!
படித்தால் எல்லாம் உங்களுக்கு தெரியவரும்!
////Blogger RK said...
ReplyDeleteMany things fell in place today, giving me an 'Aha moment' after reading your article.
If one was not privy to information like this in the past he simply couldn't judge situations correctly.
As they say in US :
Today it gave me the Low down (however late/slow I am)./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger தகடூரான் said...
ReplyDeleteஅய்யா,
தனியார்(ப்ரைவேட்) பாதுகாப்புத் துறையில் பனியாறும் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், வெகுகாலமாக IAS தேர்வு எழுதிக்கொண்டிருக்கின்றார். நல்ல நிர்வாகத்திறமையுள்ள அவரின் ஜாதகத்தில், ராகு மற்றும் இருக்கும் எல்லா சனியனும் காற்று போகும் எல்லா துளைகலிலும் கைவெய்து அடைத்துக் கொண்டிருக்கின்றான். அவரின் ஜாதகத்தைப் பார்த்து தாங்கள் அவர் IAS ஆவாரா இல்லை இப்படியே காலம் தள்ளுவாரா என்று சொல்ல வேண்டுகின்றேன்.//////
நான் தனிப்பட்ட ஜாதகங்களை எல்லாம் பார்த்துப் பலன் சொல்வதில்லை. நூற்றுக்கணக்கான தனிப்பட்ட ஜாதகங்கள் விதம் விதமான கேள்விகளுடன் எனது மின்னஞ்சல் பெட்டியில் உள்ளன. அதற்கெல்லாம் நேரமில்லை நண்பரே!
////Blogger ananth said...
ReplyDelete//சுக்கிரன் குருவுடன் யுத்தத்தில் என்று எவ்வாறு முடிவெடுக்கின்றீர்கள் என அறியத் தரவும்.
கிரக யுத்தம் 5, 10 பாகை இடைவெளி எனத் தெரியும்.
இங்கே சிம்மத்தில் இவர்கள்(Venus Jupiter) ஒவ்வொருவரின் நட்சத்திரங்கள் பாதங்கள் எதுவுமே தெரியாது.
DOB, DOT இரண்டுமே தரப்படவில்லை.
தயைகூர்ந்து விளக்கம் வேண்டுகின்றேன்.//
ஒருவர் தேவ குரு, மற்றொருவர் அசுர குரு. பகை கிரகங்கள். ஒருவருக்கொருவர் அள்ளி கொடுப்பதை விடுத்து தள்ளி கெடுக்கத்தான் பார்ப்பார்கள். ஒருவர் மற்றவருடைய காரகத்துவம், ஆதிபத்தியம் இவற்றைக் கெடுக்கத்தான் பார்ப்பார். யுத்தம் என்பது இந்த அர்த்தத்தில் சொன்னது. நீங்கள் சொல்வது வேறொன்று. விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்/////
தனிப்பட்ட காரணங்களால் நான் முழு ஜாதகத்தையும் கொடுக்கவில்லை. அதனால் ஏற்பட்ட சந்தேகமாக இருக்கலாம். உங்கள் பதிலுக்கு நன்றி ஆனந்த்!
////Blogger மோகனரங்கன் said...
ReplyDeleteஅதனால் என்ன அய்யா, அந்தப்பெண் இந்நேரம் ஞானம் பெற்றிருப்பாள்.
அடுத்து என்ன சுக்ரதிசாதானே 20 ஆண்டுகள், சொல்லவா வேண்டும்./////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
//////Blogger minorwall said...
ReplyDeleteநண்பர் krishnarருக்காக:
நான் செக் பண்ணிப்பார்த்ததில் இந்த அம்மணி பிறந்தநாள்: 1969 october19 th morning 4 AM .
longitude lattitude காரைக்குடி ன்னு வெச்சுக்குவோம்..
கிட்டத்தட்ட நெருங்கிட்டேனா வாத்தியார் சார்?
ஒரு பத்து நிமிடங்கள் செலவாகின..
ராகு தசையிலே கேது புத்தியில் divorce என்றால் கணக்கு சரியாகிறது..from 1997 june to 1998 july (this period).///////
வாத்தியார் காரைக்குடியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தரும் ஜாதகங்கள் எல்லாம் அந்தப் பகுதி மக்களுடையதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்காமல் இருந்திருந்தால் இன்னும் நெருங்கி வந்திருப்பீர்கள் மைனர்!
/////Blogger மகாலிங்கம் said...
ReplyDeleteசூரியனும், சுக்கிரனும் பரிவர்த்தனையாகினாலும், கேதுவால் அரசியல்வாதி கணவனை அனுசரித்துப்போக முடியவில்லை போலும். தோச ஜாதகரைத் தன் பார்வையிலேயே வைத்துக்காக்க அவரென்ன ஆலங்குடி ப்ரஹஷ்பதியா? ஜாதகப்படி நீசகுருதானே அய்யா.அதான் ராகுகாலத்தில் வேர சைட் விசிட்டிங் போய்ட்டார் போலும் சரிதானே அய்யா.//////
சிம்மத்தில் உள்ள குரு எப்படி, யாரைக்கேட்டு நீச மடைந்தார்?
///Blogger karthik said...
ReplyDeletehello sir, ennum mailla advance classes poitu iruka illai mudinchitha?/////
மேல் நிலைப் பாடங்கள் தனி இணைய தளத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே உறுப்பினர்கள். புத்தகமாக வரும்போது அனைவரும் படிக்கலாம். இங்கே எழுதினால் எழுத எழுத திருட்டுப் போய்க்கொண்டிருக்கும்.
////Blogger karthik said...
ReplyDeleteeverybody whos interested in astrology should read rani tamil magazines. actor rajesh (of antha yelu natkal fame) is writing evry week for the past 40 editions about his expe'nces with different forms of astrology. i contacted him and he agrred to send me all the previous copies too. if anybodys interested to get it, ill be glad to share it with ulike our teacher is doin here with us.contact me free_radical15@yahoo.com . thanks//////
தகவலுக்கு நன்றி. எனக்கும் அனுப்பி வையுங்கள் நானும் படித்துப் பார்க்கிறேன்.
ஒரு ஜாதகத்தில் சூரியனும்,சந்திரனும் நிழல் கிரக்த்துடன் இணைந்துவிட்டாலே (ராகு,கேது)அவர்கள் வாழ்வில் எல்லாமே சொதப்பிவிடும்..இவர் ஜாதகத்திலும் அப்படித்தான் இருக்கிறது. இல்லையா அய்யா?
ReplyDeletealso, i know of a nice gentleman in coimbatore whos an advanced reik healr. he does free healing for ppl and intiates ppl too. mail me for furthe details if any of u i intereted. thanks n regards.
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteஅய்யா,
இந்த அம்மணியின் அரசியல்வாதி கணவரின் ஜாதகம் ஒருவேளை வலுவாக
ஏழாம் பாவமும் லக்கினமும் மற்ற கேந்திர திரிகோணங்களும் கெடாமல்
இருந்திருந்தால் இவர்கள் விவாக ரத்துவரை செல்லாமல் வாழ்ந்திருப்பார்களோ ?
அன்புடன், அரசு.
எனக்கும் ராகு/சந் சேர்ந்து பதினொன்றில். ஆனால் நான் யாரையுமே சந்தேகப்படமாட்டேனே. எல்லாரையும் எளிதில் நம்பிவிடுவதுதான் என்னோட மைனஸ். ஒருவேளை லக்கினத்தில் இந்த அமைப்புள்ளவர்கள்தான் இப்படியா அல்லது வேறு ஏதாவது அமைப்புகளால் மாறுபடுமா?
ReplyDeleteDear Subbaiya ,
ReplyDeleteVanakkam.
If one born on Mesha rashi,He/she be born on either ( Aswini/ Bharani/ Kirthigai nachathiram) so on birth he/she will have Kethu Maga thisai or after 80 years he/she will ruled by Kethu thisai. Hence i don't agree with you on Marriage and Divorce taken on Kethu maga thisai. Probabily marriage should have taken place during Raghu Thisai.Also Raghu has insight of Guru parvai.
Could you please explain on above facts?
Regards,
Marimuthu
/////Blogger iyer said...
ReplyDeleteஆகா.. அருமை..
சாதகத்துக்குரியவரின் பி நாள் தராமல்
சரியாக யோசித்து அலச தந்த வகுப்பு
அருமை.. எடுத்துச் சொன்ன விதம்
அற்புதம்தான் என்றாலும்யுத்தம்எங்கே?
அந்த அரசியல் வாதி...
அவர் தானே.. (?)
வழக்கம் போல்
வகுப்பிற்கு வரும் குறள் சிந்தனை..
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி./////
வையுங்கள் நானும் படித்துப் பார்க்கிறேன்.////
நல்லது. நன்றி விசுவநாதன்!
////Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteஒரு ஜாதகத்தில் சூரியனும்,சந்திரனும் நிழல் கிரகத்துடன் இணைந்துவிட்டாலே (ராகு,கேது)அவர்கள் வாழ்வில் எல்லாமே சொதப்பிவிடும்..இவர் ஜாதகத்திலும் அப்படித்தான் இருக்கிறது. இல்லையா அய்யா?/////
ஆமாம். புரிதலுக்கு நன்றி நண்பரே!
//////Blogger karthik said...
ReplyDeletealso, i know of a nice gentleman in coimbatore whos an advanced reik healr. he does free healing for ppl and intiates ppl too. mail me for furthe details if any of u i intereted. thanks n regards./////
தகவலுக்கு நன்றி!
////Blogger ARASU said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
அய்யா,
இந்த அம்மணியின் அரசியல்வாதி கணவரின் ஜாதகம் ஒருவேளை வலுவாக ஏழாம் பாவமும் லக்கினமும் மற்ற கேந்திர திரிகோணங்களும் கெடாமல்
இருந்திருந்தால் இவர்கள் விவாக ரத்துவரை செல்லாமல் வாழ்ந்திருப்பார்களோ ?
அன்புடன், அரசு./////
அப்படி இருந்திருந்தால், அவருக்கு இந்தப் பெண்ணுடன் விவாகமே நடந்திருக்காது!
//////Blogger Uma said...
ReplyDeleteஎனக்கும் ராகு/சந் சேர்ந்து பதினொன்றில். ஆனால் நான் யாரையுமே சந்தேகப்படமாட்டேனே. எல்லாரையும் எளிதில் நம்பிவிடுவதுதான் என்னோட மைனஸ். ஒருவேளை லக்கினத்தில் இந்த அமைப்புள்ளவர்கள்தான் இப்படியா அல்லது வேறு ஏதாவது அமைப்புகளால் மாறுபடுமா?/////
லக்கினம்தானே குணங்களுக்கான இடம். அதானால் இந்த அமைப்பும் அதற்கான பலனும் லக்கினத்திற்கு மட்டும்தான் என்று எடுத்துக்கொள்ளுங்கள் உமாஜி!