மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

28.9.11

துன்பம் எப்போதும் தோழிகளுடன்தான் வலம் வரும்!

----------------------------------------------------------------------------------------
 துன்பம் எப்போதும் தோழிகளுடன்தான் வலம் வரும்!

    “துன்பத்திற்கு தோழிகளா? என்ன சார் சொல்கிறீர்கள்?”

உங்கள் புருவங்களை உயர்த்தவைக்க வேண்டும் என்பதற்காக அந்த வார்த்தைப் பிரயோகம். தஞ்சாவூர்ப் பெரியவர் போன்றோருக்காக சரியான
வார்த்தைகளுடன் செய்தி கீழே உள்ளது. படித்துப் பயன் பெறுங்கள்:

துன்பம் எப்போதும் தனியாக வராது. துணையோடு தொடர்ந்து வரும்! அதாவது துணைகளை அழைத்துக்கொண்டுதான் வரும்

ஒரு சின்ன சம்பவம். என்ன நடந்தது பாருங்கள்

ஏழை விவசாயி ஒருவரின் வீட்டில் பசு ஒன்று கன்றை ஈன்றிருந்தது. அதே நேரம் மழையும் பெய்து கொண்டிருந்தது. மாட்டுக் கொட்டகை செம்மையாக இல்லாததால். பிறந்திருந்த கன்று ஈரத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது. பெய்த மழையில் குடியிருந்த மண் வீட்டின் முன்பகுதி இடிந்து  விட்டது. இவற்றைச் சரி செய்யலாம் என்றால் உதவிக்கு ஆளில்லை. விவசாயியின் மனைவி உடல் நலமில்லாமல் படுத்திருந்தாள். போதாக்குறைக்கு வேலைக்காரன் இறந்துவிட்ட செய்தி வேறு கிடைத்துள்ளது. நிலத்தில் ஈரம் காய்ந்து போவ தற்குள் விதைத்துவிடலாம் என்று  அவன் விதை நெல்லைத் தூக்கிக் கொண்டு ஓடினால், எதிரே பழைய கடன்காரன் வந்து நின்று கொண்டு கடன் பாக்கியைக் கேட்கிறான். அவனுக்குச் சாக்கு போக்கு சொல்லி சமாளித்து விட்டு அனுப்பி னால், அரசாங்க ஆட்கள் உழுது பயிரிட்ட பூமிக்கு நிலவரி கேட்டுப்
பெறுவதற்கு வந்து நிற்கிறார்கள். ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றால், குருக்கள் வந்து உள்ளூர் கோவிலுக்கு உரிய  காணிக்கைப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகுமாறு வற்புறுத்துகிறார். அவரையும் சமாளித்து அனுப்பினால், நேரம் காலம் தெரியாமல்  உள்ளூர்ப் புலவர் ஒருவர் வந்து, கவிதை பாடி பரிசு தருமாறு கேட்கிறார். அந்த விவசாயிதான் என்ன செய்வான்? அவனுக்கு ஏற்பட்டுள்ள  துன்பம் ஒன்றா இரண்டா, ஒவ்வொன் றாகத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்தால் அவன்தான் என்ன செய்வான்? பார்க்க முடியாத, பார்த்து  ஆறுதல் சொல்ல முடியாத கொடுமைகள் அல்லவா அவன் படுகின்ற துன்பம்!

பாடலைப் பாருங்கள்

    “ஆசன மழை பொழிய இல்லம் விழ
         அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
    மாசரம் போகுதென்று விதை கொண்டோட
         வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
    கோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
         குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
    பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க
         பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே!

         - விவேக சிந்தாமணி பாடல்

கதையின் நீதி: துன்பம் வரும்போது தனியாக வராது. துணையுடன் வந்துதான் நம்மைத் தொல்லைப் படுத்தும்! ஆகவே துன்பம் வருங்காலத்தில்
அதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2
எதெது எப்போது கவிழும்?

பெரியவர்கள் துணையின்றி இருக்கும் பருவப்பெண்ணின் வாழ்க்கை
படைபலம் இல்லாத அரசனின் வீரம்
காவல் இல்லாத விளை நிலம்
கரை இல்லாத ஏரி
ஒழுங்கில்லதவன் செய்து கொள்ளும் ஆடம்பரமான அலங்காரம்
ஆசான் இல்லாது பெற்ற அறிவு
இவை அனைத்தும் அச்சாணி இல்லாத வண்டிக்குச் சமம். என்று வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் கவிழ்ந்து போகும்!

பாடலைப் பாருங்கள்:

    மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம்
        காப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி
    கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம்
        ஆப்பிலா சகடுபோல அழியும் என்று உரைக்கலாமே!

        - விவேக சிந்தாமணி

----------------------------------------------------------------------------------
உங்களைக் கவர்ந்த பாடலைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

58 comments:

kmr.krishnan said...

ஆம், துன்பம் எப்போதும் தொடர்கதைதான். ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் அல்லவா?
பட்டறிவைப் பாடலாக வடித்துள்ள விவேக சிந்தாமணியில் பட்டினத்தாரின் சாயல் சிறிது உள்ளது.

இதையெல்லாம் இளைஞர்கள் இங்கே இல்லாவிட்டால் எங்கே கற்க முடியும்?

நன்றி ஐயா!

மாணவி தேமொழி said...

ஐயா,
முதல் பாடல் தவறாமல்
"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்கை என்றால் தாங்காது பூமி"
என்ற பாடலை நினைவு படுத்தியது.
"பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்" என்ற சொல் வழக்கையும் நினைவூட்டியது. தொடர்ந்து காலில் அடி படுவதையும், தொடர்ந்து அடிமேல் அடி விழுந்து குடும்பங்கள் துன்புறுவதையும் நான் அநுபவத்திலும் பார்த்ததுண்டு. எல்லாம் நேரம்தான்... கோள்சாரமோ இல்லை தசாபுக்தியோ என்று உங்கள் பாடங்களை படித்தபின் யோசித்திருக்கிறேன். நல்ல பதிவு ஐயா. நன்றி.
மாணவி தேமொழி

thamurali said...

Still farmers are in same status. No changes.

sekar said...

துன்பம் எப்படி எல்லாம் வரும் என்ற விவேகசிந்தாமணி யின் பாடல் அருமை உண்மை . அளித்த தங்களுக்கு நன்றி

ananth said...

இரண்டாவது பாடல் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கிறது. எனது ஓட்டு அதற்குதான். முதல் பாடல் மிகைப் படுத்தப் பட்டுள்ளது போல் தெரிகிறது. ஒருவருக்கு இப்படியெல்லாம் துன்பம் தொடர்ச்சியாக வரும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

RAMADU Family said...

Guru Vanakkam,

Chandrashtamathula velia kilambi irupparo ?

Thanjavooraan said...

மிக அருமையான பதிவு. வாழ்க்கையில் நம்மில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இவை. இவற்றில் முதல் பாடலையும், அது குறித்த விளக்கத்தையும் நான் சில காலம் முந்தி ஏதோவொரு வலைத்தளத்தில் எழுதியிருக்கிறேன். தெரியாமலா சொன்னார்கள் நமது முன்னோர்கள் "பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்" என்று. எனக்கு ஜோதிடக்கலை பற்றி அரிச்சுவடி கூட தெரியாது. என்றாலும் பெரியோர்கள் சொல்வார்கள், துன்பம் வந்தால் தொடர்ந்து வரும், அது கிரக நிலையின் காரணம் என்று. அது போலவே ஒருவனைத் தூக்கோ தூக்கென்று தூக்கியும் விடுமாம். ஆனால், பாவம் உச்சத்துக்குப் போனவன் திடீரென்று கீழே விழுந்தால் தாங்கமுடியாது. ஒரு ஆன்மீகப் பெரியவரின் பேச்சைக் கேட்டேன். அவர் சொன்னார், 'மன அழுத்தம்' எல்லா வசதிகளும் கொண்டவர்களுக்குத்தான் வரும், அன்றாடம் காய்ச்சி உழைத்து வாழ்பவர்களுக்கு வராதாம். அதற்கான காரணங்களை சிந்திப்போம். இரண்டாவது பாடலும் மிகவும் அனுபவபூர்வமான சிந்தனையின் வெளிப்பாடு. காவல் இல்லாத கரையில்லாத எதுவும் தாக்குப் பிடிப்பது சிரமம். நன்றி ஐயா!

Nareshkumar said...

வணக்கம் ஜயா,
Sir irandu padalum nanru. Ethethu epodhu kavizhum ennai kavarthathu. Thank you.have a nice day. epodhu kavizhum ennai kavarthathu. Thank you.have a nice day.

Ravichandran said...

Ayya,

Me too facing exactly same as first song, bcoz of 7 1/2 saturn. I like 2nd song. Both songs analyses/frames real life...Hats off to those poets, bcoz it shows inch by inch persons inner life..

Sincere Student,
Trichy Ravi

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
ஆம், துன்பம் எப்போதும் தொடர்கதைதான். ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் அல்லவா?
பட்டறிவைப் பாடலாக வடித்துள்ள விவேக சிந்தாமணியில் பட்டினத்தாரின் சாயல் சிறிது உள்ளது.
இதையெல்லாம் இளைஞர்கள் இங்கே இல்லாவிட்டால் எங்கே கற்க முடியும்?
நன்றி ஐயா!/////

உங்களின் எண்ணப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger மாணவி தேமொழி said...
ஐயா,
முதல் பாடல் தவறாமல்
"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்கை என்றால் தாங்காது பூமி"
என்ற பாடலை நினைவு படுத்தியது.
"பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்" என்ற சொல் வழக்கையும் நினைவூட்டியது. தொடர்ந்து காலில் அடி படுவதையும், தொடர்ந்து அடிமேல் அடி விழுந்து குடும்பங்கள் துன்புறுவதையும் நான் அநுபவத்திலும் பார்த்ததுண்டு. எல்லாம் நேரம்தான்... கோள்சாரமோ இல்லை தசாபுக்தியோ என்று உங்கள் பாடங்களை படித்தபின் யோசித்திருக்கிறேன். நல்ல பதிவு ஐயா. நன்றி.
மாணவி தேமொழி/////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger thamurali said...
Still farmers are in same status. No changes./////

உண்மைதான். எங்கள் (கோவை) மாவட்டத்தைத் தவிர!:-))))

SP.VR. SUBBAIYA said...

//////Blogger sekar said...
துன்பம் எப்படி எல்லாம் வரும் என்ற விவேகசிந்தாமணி யின் பாடல் அருமை உண்மை . அளித்த தங்களுக்கு நன்றி////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///Blogger ananth said...
இரண்டாவது பாடல் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கிறது. எனது ஓட்டு அதற்குதான். முதல் பாடல் மிகைப் படுத்தப் பட்டுள்ளது போல் தெரிகிறது. ஒருவருக்கு இப்படியெல்லாம் துன்பம் தொடர்ச்சியாக வரும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.////

மிகைப்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக இல்லை என்று கூறவும் முடியாது. நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger RAMADU Family said..
Guru Vanakkam,
Chandrashtamathula velia kilambi irupparo ?//////

சந்திராஷ்டம தினமாக இருந்தால், இதுபோன்ற சிரமங்கள் இரண்டு மடங்காகி மன உளைச்சளைத் தரும் என்பது உண்மைதான்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Thanjavooraan said...
மிக அருமையான பதிவு. வாழ்க்கையில் நம்மில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இவை. இவற்றில் முதல் பாடலையும், அது குறித்த விளக்கத்தையும் நான் சில காலம் முந்தி ஏதோவொரு வலைத்தளத்தில் எழுதியிருக்கிறேன். தெரியாமலா சொன்னார்கள் நமது முன்னோர்கள் "பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்" என்று. எனக்கு ஜோதிடக்கலை பற்றி அரிச்சுவடி கூட தெரியாது. என்றாலும் பெரியோர்கள் சொல்வார்கள், துன்பம் வந்தால் தொடர்ந்து வரும், அது கிரக நிலையின் காரணம் என்று. அது போலவே ஒருவனைத் தூக்கோ தூக்கென்று தூக்கியும் விடுமாம். ஆனால், பாவம் உச்சத்துக்குப் போனவன் திடீரென்று கீழே விழுந்தால் தாங்கமுடியாது. ஒரு ஆன்மீகப் பெரியவரின் பேச்சைக் கேட்டேன். அவர் சொன்னார், 'மன அழுத்தம்' எல்லா வசதிகளும் கொண்டவர்களுக்குத்தான் வரும், அன்றாடம் காய்ச்சி உழைத்து வாழ்பவர்களுக்கு வராதாம். அதற்கான காரணங்களை சிந்திப்போம். இரண்டாவது பாடலும் மிகவும் அனுபவபூர்வமான சிந்தனையின் வெளிப்பாடு. காவல் இல்லாத கரையில்லாத எதுவும் தாக்குப் பிடிப்பது சிரமம். நன்றி ஐயா!///////

உங்களுடைய கருத்துப் பகிர்விற்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி கோபாலன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Nareshkumar said...
வணக்கம் ஜயா,
Sir irandu padalum nanru. Ethethu epodhu kavizhum ennai kavarthathu. Thank you.have a nice day. epodhu kavizhum ennai kavarthathu. Thank you.have a nice day./////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ravichandran said...
Ayya,
Me too facing exactly same as first song, bcoz of 7 1/2 saturn. I like 2nd song. Both songs analyses/frames real life...Hats off to those poets, bcoz it shows inch by inch persons inner life..
Sincere Student,
Trichy Ravi/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

arumuga nainar said...

வணக்கம் ஐயா,
இரண்டு பாடல்களும் மிக அருமை, வாழ்க்கையில் நம் முன்னோர்கள் சொன்னதை, எழுதிவைத்து போனதை தெரிந்து, செயல்படுவது நல்லது.

T K Arumugam said...

ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்
கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே

- விவேக சிந்தாமணி

இந்த பாடலுக்கு சரியான விளக்கம் என்ன வென்று தெரியவில்லை. பெண்களை இழிவு படுத்தும் நோக்கத்தில் எழுதிய பாடலாக நான் இதை கருதவில்லை. வேறு எதோ விளக்கம் இருக்க வேண்டும். தயவு செய்து தெளிவு படுத்தவும்

நன்றி

ஆறுமுகம் T K

Rajaram said...

ஆசிரியர் அவர்கள் பதிவிட்டுள்ள இரண்டு பாடல்களும் அருமை. நான் எப்பொழுதும் இரண்டாவது பாடலில் உள்ள கருத்தை எப்போதும் நண்பர்களிடம் சொல்லுவேன்.ஏனெனில் எனக்கு அது மிகவும் பொருந்தியது எனது படிப்பு விஷயத்தில்,எந்த ஒரு விஷயமானாலும் அதற்கு ஒரு வழிகாட்டுதல், நெறி முறைப்படுத்தல்,பன்படுத்துதல் என்று அது சார்ந்த,தொடர்புடைய‌ ஆயிரம் விளக்கங்கள் நடைமுறை வாழ்க்கையில் உள்ளன.அது தான் வாழ்வியல் தத்துவமும் கூட. நன்றி ஐயா!!!!.

Jagannath said...

குருவே. நான் காமராஜர், இந்திரா காந்தி ஜாதகம் பற்றிய பதிவுகளில் கேட்டுள்ள கேள்விகளுக்குப்
பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விரும்பி said...

பதிவு அருமை... அதிலும் இரண்டாம் பாடல் இரண்டில் அருமை.... காப்பு தானே கற்பும் கூட..

கோபாலன் ஐயா அவர்கள் சொன்னது...
///ஒரு ஆன்மீகப் பெரியவரின் பேச்சைக் கேட்டேன். அவர் சொன்னார், 'மன அழுத்தம்' எல்லா வசதிகளும் கொண்டவர்களுக்குத்தான் வரும், அன்றாடம் காய்ச்சி உழைத்து வாழ்பவர்களுக்கு வராதாம். அதற்கான காரணங்களை சிந்திப்போம்.///

உண்மைதான் ஐயா! அவனிடம் என்ன இருக்கிறது இழப்பதற்கு, இழந்த / பாதித்தப் பிறகு மனம் அழுத்தம் வருவதற்கு... உண்மையில் அவனே சுதந்திரமானவன்... பலவருடங்கள் அவனின் மனதைப் போல அவன் வீட்டின் கதவுகள் கூட பூட்டப் படாமலே இருக்கும்.. இன்னும் சொன்னால் நீதி தேவனின் சன்னதி போன்றதே..

நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.

Uma said...

இரண்டாவது பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

SP.VR. SUBBAIYA said...

///////Blogger arumuga nainar said...
வணக்கம் ஐயா,
இரண்டு பாடல்களும் மிக அருமை, வாழ்க்கையில் நம் முன்னோர்கள் சொன்னதை, எழுதிவைத்து போனதை தெரிந்து, செயல்படுவது நல்லது.///////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger T K Arumugam said...
ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்
கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே
- விவேக சிந்தாமணி
இந்த பாடலுக்கு சரியான விளக்கம் என்ன வென்று தெரியவில்லை. பெண்களை இழிவு படுத்தும் நோக்கத்தில் எழுதிய பாடலாக நான் இதை கருதவில்லை. வேறு எதோ விளக்கம் இருக்க வேண்டும். தயவு செய்து தெளிவு படுத்தவும்
நன்றி
ஆறுமுகம் T K/////////

இதுபோன்று சில பாடல்கள் அத்தொகுப்பில் உள்ளன. அவ்வளவு பெரிய ஞானி எழுதியதாக இருக்க வழியில்லை. இடைச் சொருகலாக இருக்கலாம். நாம் நல்லவற்றை எடுத்துகொள்வோம். ஒவ்வாதவற்றை விலக்கிவிடுவோம் நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger Rajaram said...
ஆசிரியர் அவர்கள் பதிவிட்டுள்ள இரண்டு பாடல்களும் அருமை. நான் எப்பொழுதும் இரண்டாவது பாடலில் உள்ள கருத்தை எப்போதும் நண்பர்களிடம் சொல்லுவேன்.ஏனெனில் எனக்கு அது மிகவும் பொருந்தியது எனது படிப்பு விஷயத்தில்,எந்த ஒரு விஷயமானாலும் அதற்கு ஒரு வழிகாட்டுதல், நெறி முறைப்படுத்தல்,பன்படுத்துதல் என்று அது சார்ந்த,தொடர்புடைய‌ ஆயிரம் விளக்கங்கள் நடைமுறை வாழ்க்கையில் உள்ளன.அது தான் வாழ்வியல் தத்துவமும் கூட. நன்றி ஐயா!!!!.//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Jagannath said...
குருவே. நான் காமராஜர், இந்திரா காந்தி ஜாதகம் பற்றிய பதிவுகளில் கேட்டுள்ள கேள்விகளுக்குப்
பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.//////

தாமதமாக வந்தவற்றிற்கெல்லாம், இப்போது பதில் எழுதிக்கொண்டிருக்கிறேன். உங்களது கேள்விக்கும் பதில் வரும் நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தமிழ் விரும்பி said...
பதிவு அருமை... அதிலும் இரண்டாம் பாடல் இரண்டில் அருமை.... காப்பு தானே கற்பும் கூட..
கோபாலன் ஐயா அவர்கள் சொன்னது...
///ஒரு ஆன்மீகப் பெரியவரின் பேச்சைக் கேட்டேன். அவர் சொன்னார், 'மன அழுத்தம்' எல்லா வசதிகளும் கொண்டவர்களுக்குத்தான் வரும், அன்றாடம் காய்ச்சி உழைத்து வாழ்பவர்களுக்கு வராதாம். அதற்கான காரணங்களை சிந்திப்போம்.///
உண்மைதான் ஐயா! அவனிடம் என்ன இருக்கிறது இழப்பதற்கு, இழந்த / பாதித்தப் பிறகு மனம் அழுத்தம் வருவதற்கு... உண்மையில் அவனே சுதந்திரமானவன்... பலவருடங்கள் அவனின் மனதைப் போல அவன் வீட்டின் கதவுகள் கூட பூட்டப் படாமலே இருக்கும்.. இன்னும் சொன்னால் நீதி தேவனின் சன்னதி போன்றதே..
நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.//////

உண்மைதான் ஆலாசியம். உடைமைகள் அதிகம் உள்ளவனுக்குத்தான் மன அழுத்தமும் அதிகம் இருக்கும். அதைக் காப்பாற்ற வேண்டிக் கவலைப்படும் மன அழுத்தம்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Uma said...
இரண்டாவது பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

rajakala said...

ஆசான் இல்லாது பெற்ற அறிவு எதனால் கவிழும் சற்று விளக்கவும்

தமிழ் விரும்பி said...

திருவாளர் டி.கே. ஆறுமுகம் ஐயா அவர்களுக்கு விளக்கம் தரும் விதமான எனது முயற்சி...
தாங்கள் சொல்வது போல் பெண்களை இழிவு படுத்துவதாக ஆகாது தான்..
ஆனால்!..
பெண்கள் கல்வி மறுக்கப் பட்டக் காலம்,
அடுப்பூத... பிள்ளைப் பெற.. இன்னும் சொன்னால்
போக, மோக அடிமையாக பெண்கள் கொடுமைப் படுத்தப் பட்டக் காலம் அது (இப்போதும் அப்படித் தான் மாடலிங் சினிமா செக்ஸ் என்று இந்தப் பெண்களுக்கு எங்கே புரிகிறது)... அப்போது அவர்களின் கல்வி கேள்வி மிகவும் குறைவு என்பதால்... விவேகம் விசாலமாக இருந்திருக்கவில்லை அதனாலே மதி மயங்கி போய் சேலைக் கட்டிய (பெண்ணின் ஏழுப் பருவத்தில் இது இடைப்பட்டது) அதனாலே சேலைகட்டிய மாதரை நம்பி அவர்கள் சொல்படி காரியத்தில் இறங்கினால்.. தெருவில் நிற்பார் என்று கூறியிருக்கிறார்.

அதனாலே இதேக் கருத்தை... ஒளவையாரும் "தையல் சொல் கேளேல்" என்றார் (அவரும் ஒருப் பெண்தானே ஆனால் அவர் படித்தவர்), அதைப் போலவே வள்ளுவனாரும் பல இடங்களில் பெண்ணின் நிலையை விளக்கும் போதும் இந்த அடிமைத்தனம் விளங்கும்...
உதாரணம்... ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன மண்ணை சான்றோன் எனக் கேட்ட (நன்றாக கவனிக்கணும் கேட்ட அதாவது அவைக்கு அனுமதி இல்லை) அதோடு கற்பு என்பதைக் கூட பெண்ணிற்கு மாத்திரம் என்பது போலும் வரும் வேறு ஒரு குறள்.

வள்ளுவர் பெண் அடிமையை பாடவில்லை.. மாறாக நிலைமையைப் பாடினார்.. ஒரு புலவன் தான் வாழ்ந்தக் காலத்திலிருந்து வெகு காலம் தள்ளி யோசித்தால் அவன் பாரதியைப் போல கம்பனைப் போல (வள்ளுவருக்கும் அந்த கதி தானாம்) அவன் காலத்தால் அவன் மக்களால் விரட்டப் படுவார்கள்...

அதனாலே" தையலை உயர்வு செய்" என்றான் பாரதி... விவேக சிந்தாமணி அன்றைய நிலை காலமும் கருத்தும் மாறுகிறது.. பொருந்துவதை கொள்ளுவோம்... நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.

தமிழ் விரும்பி said...

அனைவரும் மன்னிக்கணும்.. அதிகபிரசங்கித் தனத்திற்கு... அதோடு வாத்தியாரின் பாராட்டையும், சில நேரம் திட்டியும் பெற்றவன் இந்த மாணவன் என்ற உரிமையி இதற்கும் நான் பதில் சொல்ல விளைகிறேன்... ஆசிரியரும் மன்னிக்கணும்.
ஆசான் இல்லாமல் பெற்ற அறிவு முழுமை பெற்றதாக இருக்காது.. அதன் உண்மை தார்ப்பரியம் அறிந்ததாக இருக்காது.. குறைவு நிறைவு செய்து சீர்பட்டு இருக்காது(சீர் செய்யத் தான் அவர் இல்லையே)... அதோடு பொதுவாக ஒன்றை எழுதியதை படிக்கும் பொது அதில் ஜீவன் இருக்காது... அதையே குரு நம்மிடம் இருக்கும் போது அதில் ஜீவன் இருக்கும்... அது அவருள்ளே உள்ள ஆத்மா பேசும் அதனாலே அதன் அருமை சக்தி பெரிது.. இப்படி பலவாக கூறலாம்.. நன்றிகள்.
அன்புடன் வாத்தியாரின் வகுப்பறை மாணவன்,
ஆலாசியம் கோ.

தமிழ் விரும்பி said...

///ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன மண்ணை சான்றோன்///
பிழை திருத்தம் மண்ணை அல்ல மகனை
நன்றி..

RMURUGARAJAN said...

பதிவு மிக அருமை,

முதல் பாடலை போல் தான் இன்றைக்கு பெரும்பாலோர் அவதியுருகின்றனர் பல விதங்களில்,

அதே போல் இரண்டவது பாடலும் நமக்கு பல விதங்களில் தத்துவர்த்தமக உள்ளது.

நன்றி ஐயா,

முருகராஜன்

SP.VR. SUBBAIYA said...

/////Blogger rajakala said...
ஆசான் இல்லாது பெற்ற அறிவு எதனால் கவிழும் சற்று விளக்கவும்//////

நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்? பள்ளி இறுதியாண்டு வரையே படித்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் படிப்பு ஆசான் (வாத்தியார்) இல்லாமல் உங்களுக்கு எப்படி சாத்தியப்பட்டது? அதைச் சொல்லுங்கள் முதலில். எப்படிக் கவிழும் என்பதைப் பிறகு நான் சொல்கிறேன்! செய்யுள் நடையில் இருக்கும் ஜோதிடத்தை உரை நடைப் படுத்தி, உங்களுக்கு சொல்லித்தர - புரியும்படி சொல்லித் தர ஒருவர் வேண்டுமெனும் போது, அவருக்கு என்ன பெயர்? அதையும் சொல்லுங்கள் சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

Blogger தமிழ் விரும்பி said...
திருவாளர் டி.கே. ஆறுமுகம் ஐயா அவர்களுக்கு விளக்கம் தரும் விதமான எனது முயற்சி...
தாங்கள் சொல்வது போல் பெண்களை இழிவு படுத்துவதாக ஆகாது தான்..
ஆனால்!..
பெண்கள் கல்வி மறுக்கப் பட்டக் காலம்,
அடுப்பூத... பிள்ளைப் பெற.. இன்னும் சொன்னால்
போக, மோக அடிமையாக பெண்கள் கொடுமைப் படுத்தப் பட்டக் காலம் அது (இப்போதும் அப்படித் தான் மாடலிங் சினிமா செக்ஸ் என்று இந்தப் பெண்களுக்கு எங்கே புரிகிறது)... அப்போது அவர்களின் கல்வி கேள்வி மிகவும் குறைவு என்பதால்... விவேகம் விசாலமாக இருந்திருக்கவில்லை அதனாலே மதி மயங்கி போய் சேலைக் கட்டிய (பெண்ணின் ஏழுப் பருவத்தில் இது இடைப்பட்டது) அதனாலே சேலைகட்டிய மாதரை நம்பி அவர்கள் சொல்படி காரியத்தில் இறங்கினால்.. தெருவில் நிற்பார் என்று கூறியிருக்கிறார்.
அதனாலே இதேக் கருத்தை... ஒளவையாரும் "தையல் சொல் கேளேல்" என்றார் (அவரும் ஒருப் பெண்தானே ஆனால் அவர் படித்தவர்), அதைப் போலவே வள்ளுவனாரும் பல இடங்களில் பெண்ணின் நிலையை விளக்கும் போதும் இந்த அடிமைத்தனம் விளங்கும்...
உதாரணம்... ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன மண்ணை சான்றோன் எனக் கேட்ட (நன்றாக கவனிக்கணும் கேட்ட அதாவது அவைக்கு அனுமதி இல்லை) அதோடு கற்பு என்பதைக் கூட பெண்ணிற்கு மாத்திரம் என்பது போலும் வரும் வேறு ஒரு குறள்.
வள்ளுவர் பெண் அடிமையை பாடவில்லை.. மாறாக நிலைமையைப் பாடினார்.. ஒரு புலவன் தான் வாழ்ந்தக் காலத்திலிருந்து வெகு காலம் தள்ளி யோசித்தால் அவன் பாரதியைப் போல கம்பனைப் போல (வள்ளுவருக்கும் அந்த கதி தானாம்) அவன் காலத்தால் அவன் மக்களால் விரட்டப் படுவார்கள்...
அதனாலே" தையலை உயர்வு செய்" என்றான் பாரதி... விவேக சிந்தாமணி அன்றைய நிலை காலமும் கருத்தும் மாறுகிறது.. பொருந்துவதை கொள்ளுவோம்... நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.///////////

மாதராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும்’ என்று சொன்னான் பாரதி. ஆகவே நாம் நமக்கு உவந்த கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்வோம். காலத்தால் கூறப்பட்டவைகளைத் தெரிந்துகொள்வோம். எடுத்துக்கொள்ள வேண்டாம்!

SP.VR. SUBBAIYA said...

///////Blogger தமிழ் விரும்பி said...
அனைவரும் மன்னிக்கணும்.. அதிகபிரசங்கித் தனத்திற்கு... அதோடு வாத்தியாரின் பாராட்டையும், சில நேரம் திட்டியும் பெற்றவன் இந்த மாணவன் என்ற உரிமையி இதற்கும் நான் பதில் சொல்ல விளைகிறேன்... ஆசிரியரும் மன்னிக்கணும்.
ஆசான் இல்லாமல் பெற்ற அறிவு முழுமை பெற்றதாக இருக்காது.. அதன் உண்மை தார்ப்பரியம் அறிந்ததாக இருக்காது.. குறைவு நிறைவு செய்து சீர்பட்டு இருக்காது (சீர் செய்யத் தான் அவர் இல்லையே)... அதோடு பொதுவாக ஒன்றை எழுதியதை படிக்கும் பொது அதில் ஜீவன் இருக்காது... அதையே குரு நம்மிடம் இருக்கும் போது அதில் ஜீவன் இருக்கும்... அது அவருள்ளே உள்ள ஆத்மா பேசும் அதனாலே அதன் அருமை சக்தி பெரிது.. இப்படி பலவாக கூறலாம்.. நன்றிகள்.
அன்புடன் வாத்தியாரின் வகுப்பறை மாணவன்,
ஆலாசியம் கோ.////////

நல்லது. தர்க்கத்திற்கு முடிவு இல்லை ஆலாசியம். ஏகலைவன் யாரிடம் வித்தை கற்றுக் கொண்டான்? என்று திருப்பிக் கேட்பார்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger RMURUGARAJAN said...
பதிவு மிக அருமை,
முதல் பாடலை போல் தான் இன்றைக்கு பெரும்பாலோர் அவதியுருகின்றனர் பல விதங்களில்,
அதே போல் இரண்டவது பாடலும் நமக்கு பல விதங்களில் தத்துவர்த்தமக உள்ளது.
நன்றி ஐயா,

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

minorwall said...

///Blogger T K Arumugam said...
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே

- விவேக சிந்தாமணி\\\\

ஜீன்,T -ஷர்ட், மிடி, சுடிதார், மினிஸ்கர்ட் போட்ட பெண்களை நம்பலாம் போலும்..

விவேக சிந்தாமணி நவனாகரீகத்தை உயர்த்திப் பிடிக்கிறது..நல்ல தொலைநோக்குப் பார்வை..

minorwall said...

/////துன்பம் எப்போதும் தனியாக வராது. துணையோடு தொடர்ந்து வரும்! அதாவது துணைகளை அழைத்துக்கொண்டுதான் வரும்///

தொடர்ந்து வருவது கடும்துன்பமானால் நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறி என்று நினைக்கிறேன்...

நல்ல அதிர்ஷ்டகரமான சம்பவங்கள் நடக்கக் காத்திருக்கின்றன என்று அர்த்தம்..

அப்போதான் 'நியூட்டன் 3rd லா' சரியாகப் பொருந்திவரும்..

எல்லாம் அனுபவம்தான்..

minorwall said...

////SP.VR. SUBBAIYA said...
ஏகலைவன் யாரிடம் வித்தை கற்றுக் கொண்டான்? என்று திருப்பிக் கேட்பார்கள்!////

நினைத்தேன் சொன்னீர்-

நூறு வயது..

minorwall said...

/////பெரியவர்கள் துணையின்றி இருக்கும் பருவப்பெண்ணின் வாழ்க்கை
படைபலம் இல்லாத அரசனின் வீரம்
காவல் இல்லாத விளை நிலம்
கரை இல்லாத ஏரி
ஒழுங்கில்லதவன் செய்து கொள்ளும் ஆடம்பரமான அலங்காரம்
ஆசான் இல்லாது பெற்ற அறிவு
இவை அனைத்தும் அச்சாணி இல்லாத வண்டிக்குச் சமம். என்று வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் கவிழ்ந்து போகும்!\\\\\\\\

தற்காலத்துக்கு ஒவ்வாத பாடல்..ஒவ்வொரு வரியும்..

ananth said...

//ஏகலைவன் யாரிடம் வித்தை கற்றுக் கொண்டான்? என்று திருப்பிக் கேட்பார்கள்!//

ஏகலைவனை விடுங்கள். தர்கத்திற்காகவோ தற்பெருமைக்காகவோ இதைச் சொல்லவில்லை. ஜோதிடத்தில் எனக்கும் குரு என்று யாரும் இல்லை. ஆனாலும் கற்றுக் கொண்டேன். விதி இருக்கிறது எனும் போது விதி விலக்கும் இருக்கும்.

iyer said...

துன்பத்தையே துணையாக கொண்டு
துயரத்தை போக்கிக் கொண்டவர்உண்டு

துவளாமல் இருக்கவே வள்ளுவரும்
துன்பம் வரும் வேளையில்சிரிங்க என

சுத்தத் தமிழில் ..
சுயமாக சிந்திக்க சொல்லி தந்துள்ளார்

துன்பம் துணையாக வந்தாலும்
தனியாக வந்தாலும் பெறுபவரை

பொறுத்து அதன் தன்மையும் மாறும்
பொறுமையாய் கேளுங்கள்

அப்பர் வாக்கை வாரியார் சொல்வது
UPPER வாக்கு not lower வாக்கு..

நாமார்க்குங் குடியல்லோம்
நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம்
நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம்
பணிவோ மல்லோம்

இன்பமே எந்நாளும் துன்ப மில்லை

தாமார்க்குங் குடியல்லாத்
தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண்
குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும்
மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே
குறுகி னோமே.

SP.VR. SUBBAIYA said...

//////’Blogger minorwall said...
///Blogger T K Arumugam said...
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே
- விவேக சிந்தாமணி\\\\
ஜீன்,T -ஷர்ட், மிடி, சுடிதார், மினிஸ்கர்ட் போட்ட பெண்களை நம்பலாம் போலும்..
விவேக சிந்தாமணி நவனாகரீகத்தை உயர்த்திப் பிடிக்கிறது..நல்ல தொலைநோக்குப் பார்வை..//////

இன்று எல்லாப் பெண்களுமே வேலைக்குச் செல்கிறார்கள். சம்பாதிக்கும் பெண்களை நம்பித்தான் ஆகவேண்டும் மைனர்.

SP.VR. SUBBAIYA said...

////Blogger minorwall said...
/////துன்பம் எப்போதும் தனியாக வராது. துணையோடு தொடர்ந்து வரும்! அதாவது துணைகளை அழைத்துக்கொண்டுதான் வரும்///
தொடர்ந்து வருவது கடும்துன்பமானால் நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறி என்று நினைக்கிறேன்...
நல்ல அதிர்ஷ்டகரமான சம்பவங்கள் நடக்கக் காத்திருக்கின்றன என்று அர்த்தம்..
அப்போதான் 'நியூட்டன் 3rd லா' சரியாகப் பொருந்திவரும்..
எல்லாம் அனுபவம்தான்..//////

அனுபவம் தொடரட்டும். ஆனால் அதை (அவற்றில் சிலவற்றை) எழுத மாட்டேன் என்கிறீர்களே - அது ஏன்?

SP.VR. SUBBAIYA said...

////////Blogger minorwall said...
////SP.VR. SUBBAIYA said...
ஏகலைவன் யாரிடம் வித்தை கற்றுக் கொண்டான்? என்று திருப்பிக் கேட்பார்கள்!////
நினைத்தேன் சொன்னீர்-
நூறு வயது..///////

வயதா முக்கியம்? இறுதிவரை சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதற்கு இறைவன் அருள் செய்தால் போதும் மைனர்!

SP.VR. SUBBAIYA said...

Blogger minorwall said...
/////பெரியவர்கள் துணையின்றி இருக்கும் பருவப்பெண்ணின் வாழ்க்கை
படைபலம் இல்லாத அரசனின் வீரம்
காவல் இல்லாத விளை நிலம்
கரை இல்லாத ஏரி
ஒழுங்கில்லதவன் செய்து கொள்ளும் ஆடம்பரமான அலங்காரம்
ஆசான் இல்லாது பெற்ற அறிவு
இவை அனைத்தும் அச்சாணி இல்லாத வண்டிக்குச் சமம். என்று வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் கவிழ்ந்து போகும்!\\\\\\\\ தற்காலத்துக்கு ஒவ்வாத பாடல்..ஒவ்வொரு வரியும்..///////

ஒவ்வொருவரியும் ஒவ்வாதது என்பது சரியல்ல மைனர். காவல் இல்லாத விளை நிலம் என்றால் விளைச்சல் நம் வீட்டிற்கு வராது. இன்றைக்கும் இங்கே நிலைமை அதுதான் மைனர்! ஜப்பானில் அப்படி இல்லாமல் இருக்கலாம்!

SP.VR. SUBBAIYA said...

////////Blogger ananth said...
//ஏகலைவன் யாரிடம் வித்தை கற்றுக் கொண்டான்? என்று திருப்பிக் கேட்பார்கள்!//
ஏகலைவனை விடுங்கள். தர்கத்திற்காகவோ தற்பெருமைக்காகவோ இதைச் சொல்லவில்லை. ஜோதிடத்தில் எனக்கும் குரு என்று யாரும் இல்லை. ஆனாலும் கற்றுக் கொண்டேன். விதி இருக்கிறது எனும் போது விதி விலக்கும் இருக்கும்.///////

நானும் குரு இல்லாமல்தான் ஜோதிடத்தைக் கற்றேன். எத்தனை சிரமப் பட்டேன் என்பது எனக்குத்தான் தெரியும். இரண்டு ஆண்டுகளில் கற்க வேண்டியதை மூன்று ஆண்டுகள் பயின்று கற்றுக்கொள்ள வேண்டியாதாயிற்று. இப்போது பல்கலைக் கழகங்களில் அஞ்சல் வழிக் கல்வியாகவும் சொல்லித் தருகிறார்கள். அப்போது அந்த வசதி இல்லை. நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

Blogger iyer said...
துன்பத்தையே துணையாக கொண்டு
துயரத்தை போக்கிக் கொண்டவர்உண்டு
துவளாமல் இருக்கவே வள்ளுவரும்
துன்பம் வரும் வேளையில்சிரிங்க என
சுத்தத் தமிழில் ..
சுயமாக சிந்திக்க சொல்லி தந்துள்ளார்
துன்பம் துணையாக வந்தாலும்
தனியாக வந்தாலும் பெறுபவரை
பொறுத்து அதன் தன்மையும் மாறும்
பொறுமையாய் கேளுங்கள்
அப்பர் வாக்கை வாரியார் சொல்வது
UPPER வாக்கு not lower வாக்கு..

நாமார்க்குங் குடியல்லோம்
நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம்
நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம்
பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத்
தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண்
குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும்
மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே
குறுகி னோமே.////////

நல்லது விசுவநாதன் அப்பரின் வாக்கைக்கொடுத்து எங்களை அள்ளிக் கொண்டு போய்விட்டீர்கள். நன்றி!

ram said...

முதல் வரி ஆவீன என்று வர வேண்டும்

rajakala said...

ஆசான் இல்லாது பெற்ற அறிவு பற்றி விளக்கிய ஆசிரியருக்கும் ஆனந்த் மற்றும் ஆலாசியம் சகோதரர்களுக்கும் எனது நன்றி. மகிழ்ச்சி

minorwall said...

///////காவல் இல்லாத விளை நிலம் என்றால் விளைச்சல் நம் வீட்டிற்கு வராது. இன்றைக்கும் இங்கே நிலைமை அதுதான் மைனர்! ஜப்பானில் அப்படி இல்லாமல் இருக்கலாம்!\\\\\\\

இன்றைய ஜப்பான் நியூஸ்..இந்திய ரூபாயில் மதிப்பு ஆறு லட்சத்துக்கு மேலான தொகையை டாய்லெட் ரூமில் வைத்துவிட்டு
'இந்தத்தொகையை சுனாமி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்குகிறேன்..' என்று பெயரிடப்படாமல் எழுதிய கடிதம் ஒன்றையும் கூடவைத்துச் சென்ற யாரோ ஒரு ஆள் பற்றிய செய்திதான் அது..
இதிலே முக்கியமா நோட் பண்ண வேண்டிய பாயின்ட் என்னவென்றால் பணத்தை எடுத்த ஆள் பொறுப்பா கொண்டு சேர்க்கவேண்டிய இடத்துக்கு சேர்த்ததுதான்..ஜப்பானில் காவல் இல்லாத நிலத்து விளைச்சல் கதைக்கு உதாரணம் இதுதான்..

minorwall said...

//SP.VR. SUBBAIYA said...
அனுபவம் தொடரட்டும். ஆனால் அதை (அவற்றில் சிலவற்றை) எழுத மாட்டேன் என்கிறீர்களே - அது ஏன்?/////

ஒண்ணும் பெருசா காரணம் இல்லை..எழுதுவதற்கு சரியான மூட் வரலை..அவ்வளோதான்..

ஏற்கெனவே ரெண்டு பார்ட் கதையைக் குடுத்துட்டு அத அப்பிடியே கிடப்புலே போட்டாச்சு..

இதுலே புதுசா வேற கதையா?ன்னு ஒரு சோம்பல்தான் சார்..

minorwall said...

////SP.VR. SUBBAIYA said...
வயதா முக்கியம்? இறுதிவரை சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதற்கு இறைவன் அருள் செய்தால் போதும் மைனர்!\\\\\\

உங்கள் சுறுசுறுப்புக்குக் கேட்கவா வேண்டும்..?

சோம்பலில்லாமல் தொடர்ந்து எழுதுகிறீர்களே?

kannan said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

உயர் திரு ஜவஹலால் நேரு, இன்றைய நட்சத்திர நடிகர்
உயர் திரு சிவாஜி ராவ் கேக்வாட்
( ரஜினி காந்த் ) , உயர் திரு இளைய ராஜா இன்னும் நிறைய பேறுகளின் ஜாதகம் ( நீச பங்க )

" கால சர்ப்ப தோஷத்தில்
பிறந்தவர்கள்",

அவர்களின் இளமை கால வாழ்க்கை அனைவருக்கும் தெரியும் என்பதால் அதே நீச பங்க ஜாதகத்தில் பிறந்த கண்ணனும் பட்ட பாடுகள் எல்லாம் எம்பெருமான்

" திரு நீல கண்ட கண்ணனுக்கு ",

தான் தெரியும் .

வாத்தியார் ஐயா கூறி உள்ளது அனைத்தும் உண்மை . கஷ்ட காலத்தில் தான் மேலும் மேலும் கஷ்டம் வரும் என்பது என்னுடைய அனுப பூர்வமான சத்தியமான உண்மை ஐயா!.

kavithai (kovaikkavi) said...

இரண்டு பாடல்களுமே அருமை ஐயா. இப்படி அறிய நாம் பாக்கியம் பண்ணியிருக்க வேண்டும். நன்றி சகோதரா. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com