மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.9.11

மகிழ்ச்சியைக் கொடுப்ப‌தில் முத‌லிடத்தில் இருப்பது எது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 மகிழ்ச்சியைக் கொடுப்ப‌தில் முத‌லிடத்தில் இருப்பது எது?

வாரமலர்

பதினான்கே வயதான ஜேக் நல்ல கால் பந்து ஆட்டக்காரன்.15 வயதுக்குக் குறைவான குழுவில் ஒரு முக்கிய உருப்பினன். 31  ஆகஸ்டு 2011 ஜேக்கின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாயிற்று. ஆம்! அன்றுதான்  கால் பந்து விளையாடும் போது அவனுக்கு ஓர் எதிர்பாராத விபத்து நேர்ந்தது.

 ஆவேசமாகப் பந்தை உதைத்து ஜேக் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தான்.'கோல் போஸ்டாக' இர்ண்டு உயரமான கம்புகள் நடப்பட்டு இருந்தன.தரையில் சொருகுவதற்கு வாகாக கூரான இரும்பு முனைகள் கம்புகளின் முனையில் இருந்துள்ளன.பந்து ஒரு'கோல் போஸ்டை'த் தாக்கி, அக் கம்பு தரையை விட்டுக் கிளம்பி அம்பு போல் பயணித்து ஜேக்கின் வலது புயத்தில் பாய்ந்து குத்தி,மறுபக்கம் வெளி வந்து விட்டது. திடீரென ஏற்பட்ட விபத்தால் ஜேக் அதிர்ச்சி அடைந்தானே தவிர பயமோ பதட்டமோ அடைய வில்லை.அவனுடைய அதிர்ஷ்டம் இரத்த நாளங்களைத் தாக்காமல் வெறும் சதையில்தான் இரும்பு முனை குத்தியுள்ளது.

நம் ஊரில் கன்னத்தில் முதுகில் அலகு குத்துவார்களே  அதுபோலத்தான். என‌வே இர‌த்த‌ம் வ‌ர‌வில்லை. எனெனினும் வ‌லி மிக‌வும் இருந்துள்ள‌து.க‌ம்பின் நீள‌ம் கார‌ண‌மாக‌ ஜேக்கால் ஆம்புல‌ன்ஸில் ஏற‌முடிய‌வில்லை.என‌வே குத்தியுள்ள‌ நிலையிலேயே க‌ம்பின் நீள‌ம் ர‌ம்ப‌த்தால் அறுக்க‌ப்ப‌ட்டு குறைக்க‌ப்ப‌ட்ட‌து. அத‌னால் ஏற்ப‌ட்ட‌ அசைவுக‌ள் பெருவ‌லியைக் கொடுத்தன‌. ஜேக் க‌ண் க‌ல‌ங்காம‌ல் பொறுத்துக் கொண்டான்.

அதன் பின்ன‌ர் அம்புல‌ன்ஸில் ம‌ருத்துவ‌ம‌னைக்கு அழைத்துச் செல்ல‌ப் ப‌ட்டான்  ஜேக்.அங்கே உட‌னே அறுவை சிகிச்சை செய்ய‌ப்ப‌ட்டு வீடு திரும்பினான். கோடை விடுமுறை முடிந்து 7 செப்ட‌ம்பெர் 2011 முதல் நாளே அன்றே ப‌ள்ளியில் ஆஜ‌ராகி விட்டான் ஜேக்! (நானா‌க‌ இருந்தால் அந்த‌ ஆண்டுப் ப‌டிப்பையே ஒத்தி வைத்து இருப்பேன்!)

இந்த‌ விப‌த்தைப்ப‌ற்றி முழு விவ‌ர‌த்தையும் இங்கிலாந்தில் உள்ள‌ எல்லா கால்ப‌ந்தாட்ட‌க் குழுக்க‌ளுக்கும் தெரிவித்து இது போன்ற‌ கூர்முனையுள்ள‌ 'கோல் போஸ்டு'க‌ளைத் த‌விர்க்க‌ அர‌சு அறிவுரை கூறியுள்ள‌து.அதுதான் ஒரு பொறுப்பான‌ அர‌சின் சிற‌ப்பு.

 ஜாக்கின் புகைப்படம், உங்கள் பார்வைக்காக!
--------------------------------------------------------------
2.
கம்மா‌ டிஸ்சார்டு என்ற‌ 25 வ‌ய‌து மங்கையின் பேட்டியில் இருந்து:

"கே: உங்க‌‌ளை எது புன் முறுவ‌ல் பூக்க‌ வைக்கும்?

ப‌:சூரிய‌ வெப்ப‌ம்,வெளிச்ச‌ம்,ந‌ண்ப‌ர்க‌ள் உற‌வின‌ர்க‌ள்!"

ந‌ன்றாக‌க் க‌வ‌னியுங்க‌ள். ம‌கிழ்ச்சி கொடுப்ப‌தில் முத‌லிட‌ம் கொடுப்ப‌து எது?

சூரிய ஒளி!

ஆம்! ஆண்டின் 7,8 மாத‌ங்க‌ள் ப‌னி, குளிர்காற்று,ம‌ழை, மேக‌ மூட்ட‌ம் என்று உள்ள‌ நாட்டில் சூரிய‌ ஒளியை க‌ண்டால் ம‌க்க‌ள் ம‌கிழ்ச்சி அடைகிறார்க‌ள். ஜூலை ஆக‌ஸ்டு மாத‌ங்க‌ள் தான் கோடை.ப‌னிக்கால‌த்தில் வெளியில் ந‌ட‌மாட‌ முடியாம‌ல் வீட்டிற்குள்ளேயே முட‌ங்கிக் கிட‌க்கும் பெண்க‌ள் முதிய‌வ‌ர்க‌ளுக்கு 'வின்ட‌ர் புளூஸ்'என்ற‌ ம‌ன‌ அழுத்த‌ நோய் உண்டாகுமாம்.

2012 ஒலிம்பிக்ஸ் ஜூலை ஆக‌ஸ்டு மாத‌ங்க‌ளிலேயே ந‌ட‌க்க‌ இருக்கிற‌து.

பிபிசி யின் ப‌ருவ‌நிலை அறிக்கையைப் பார்த்துவிட்டே எல்லோரும் ஒரு நாளின் ப‌ணிக‌ளைத் திட்ட‌மிடுகிறார்க‌ள்.95% கால‌நிலை அறிக்கை ச‌ரியாக‌வே உள்ள‌து. சில‌ ச‌ம‌ய‌ம் அறிக்கையின் ப‌டி இய‌ற்கை ந‌ட‌க்க‌ வில்லை எனில் எல்லோரும் அந்த‌ 'மெட்ரோலாஜிக‌‌ல் துறையைக் க‌ண்டிக்கிறார்க‌ள். ச‌மீப‌த்தில் ப‌ருவ‌ நிலை அறிக்கை த‌யாரிக்கும் அறிவிய‌ல் முறை ச‌ரிதானா என்ப‌தை ஆய்வு செய்ய‌ ஒரு நாடாளும‌ன்ற‌க் குழு அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

(மேலும் ஓரிரு வார‌ங்க‌ள் இல‌ண்ட‌ன் செய்திக‌ள் தொட‌ரும்.)

வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!
ஆக்க‌ம்:
நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான
கே.முத்துராம‌கிருஷ்ண‌ன். (லால்குடி).
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

4 comments:

  1. "தியானம் செய்வதை விட ஒரு மணி நேரம் கால்பந்து விளையாடுவது சிறந்தது' என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தியவர் விவேகானந்தர்..
    இதை மனதில்கொண்டுதான் நேற்றைய KMRK பதிவிலே பின்னூட்டமிடவில்லை..
    மேலும் வாத்தியாரின் copyright பற்றிய சர்ச்சைக்குள்ளான விமர்சனமும் அங்கே இருந்ததால் அதிலே புகுந்து குட்டையைக் குழப்பவேண்டாமே என்றே ஒதுங்கியிருந்துவிட்டேன்..
    'வாத்தியார் எழுப்பிய பதில் கேள்விகளுக்கு
    முதலில் ஞாயமா என்று கேள்விஎழுப்பியவர் ஏன் பதில் சொல்லாமல் போனார்' என்ற கேள்விக்கு இன்னும் பதிலில்லை..
    இன்று கால்பந்து ஆட்டம் பற்றிய ஜேக்கின் கதை நன்றாக இருந்தது..
    வலிமைதான் வாழ்வைத் தீர்மானிக்கிறது..இதைத்தான் விவேக்ஜி வலியிருத்தியிருந்தார்..
    உடல்வலு இல்லாத மனோவலிமை பலமில்லாததைப் போலே
    மனோவலு இல்லாத உடல்வலுவும் பலனில்லாததே..
    கடந்த இரண்டு நாட்களாக இந்த சிந்தனைக்கு செய்தியால் அடித்தளமிட்ட KMRK க்கு நன்றி..

    ReplyDelete
  2. சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகளைப் பற்றி, குறிப்பாக இந்தக்கால் பந்தாட்டப் பொன்மொழி பற்றி ஏற்கனவே விளக்கம் மைனர்வாளுக்கூக்கொடுத்து உள்ளேன்.

    செயலூக்கம் இல்லாமல் இருக்கும் மனிதர்களுக்காகச்சொல்லப்பட்டது அது. அதனால் ஆன்மிகத்தைவிட கால்பந்தாட்டமே சிறந்தது என்று பொருள் கொள்ளக்கூடாது.ஒரு முறை ஒரு சோம்பேரியிடம் 'என்னை நம்ப வைக்கும் படி ஒரு பொய் சொல்லு பார்ப்போம்' என்று கூட சுவாமிஜி கூறியுள்ளார்.அதனால் சுவாமிஜி பொய் சொல்லுவதை ஆதரித்தார் என்று கொள்ளலாமா?

    சாத்வீக குணத்தில் இருப்பதாக கற்பனையில் வாழ்ந்துகொண்டு, தாமச குணத்தில் இந்தியர் பலரும் இருந்த சமயத்தில் சுவாமிஜி வந்தார். தாமசத்தில் இருந்து ராஜச குணத்திற்கு மடை திருப்பிவிட நாத்திகரைப் போலவும், ஆன்மீகத்தை மட்டம் தட்டுவது போலவும் சில சமயம் பேசினார்.

    ReplyDelete
  3. இதே போன்ற ஒரு செய்தியை பல வருடங்களுக்கு முன் படித்தேன். தமிழ்நாட்டிலோ / கேரளாவிலோ நினைவில்லை. ஒரு பெண் பேருந்து ஓரத்தில் உட்கார்ந்திருந்தபோது ஒரு கம்பி அவரது கழுத்தில் என்று நினைவு, குத்தி மறுபக்கம்
    வந்துவிட்டது. பேருந்திலிருந்து வெளியில் கொண்டுவர இயலாத நிலையில் ரம்பம் கொண்டு அறுத்து பின்
    ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சை அளித்ததாக எழுதியிருந்தது. இத்தனைக்கும் அந்த பெண் சிறிது கூட வலியால் கத்தவோ கலங்கவோ இல்லையாம். அதைப்படித்ததும் என்ன ஒரு மனவலிமை என்று தோன்றியது. இப்போது இந்த செய்தியைப்படித்ததும் அதுவே தோன்றியது.

    ReplyDelete
  4. விபத்தை தந்தவன்.. அதைத் தாங்கும் மனத்தையும் தந்திருக்கிறான் போலும்...

    ///ந‌ன்றாக‌க் க‌வ‌னியுங்க‌ள். ம‌கிழ்ச்சி கொடுப்ப‌தில் முத‌லிட‌ம் கொடுப்ப‌து எது?

    சூரிய ஒளி!////
    உண்மை தான் சூரியன் தானே இந்த உலக இயக்கத்தின் தந்தை....
    நீரும், நிலமும், காற்றும் தேவைக்கு தகுந்தாற்போல் சுழற்றித் திரிபவன்!

    நல்ல பதிவுகள்....

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com