மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

21.9.11

தெள்ளற வித்தை கற்றவன் என்ன செய்வான்?

--------------------------------------------------------------------------------------
தெள்ளற வித்தை கற்றவன் என்ன செய்வான்?

பிள்ளை வளர்ந்து பெரியவனாகிவிட்டால்(இளைஞனாகி விட்டால்), தன் தந்தை சொல்லும் அறிவுரைகளைக் கேட்கமாட்டான்.
இல்லாளும், வயதாகிவிட்டால், கணவனை மதிக்க மாட்டாள்.
கல்விக் கற்றுத் தேரிய மாணவனும் ஆசிரியரைத் தேடமாட்டான்.
வியாதி முற்றிலும் குணமாகிவிட்டால், மக்களும் வைத்தியரைத் தேட மாட்டார்கள்!

யார் சொன்னது? ஞானி ஒருவன் சொன்னது!

உரைநடையாகச் சொல்லவில்லை. பொட்டில் அடித்த மாதிரிப் பாடலாகச் சொல்லிவைத்தான். நீங்கள் அறிந்து கொள்ள அந்தப் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.

“பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல்புத்தி கேளான்
கள்ளின் நல்குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப்பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகோர் பண்டிதரைத் தேடார்!


-விவேக சிந்தாமணி என்னும் நூலில் வரும் பாடல் இது!

உலக இயல்பு அது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். “எனக்கு எழுபது வயதாகிவிட்டது. என் மனைவிக்கு 68 வயதாகிறது. இன்று வரை அவள் என் சொல்லை மீறமாட்டாள்” என்று யாராவது ஒருவர் கத்தியைத் தூக்கிக்கொண்டுவரலாம். அதெல்லாம் விதிவிலக்கு (exemption)
 
Exemptions should not be taken as examples.
விலக்குகள் உதாரணமாகாது
அதை மனதில் வையுங்கள்!

ஒரு மாறுதலுக்காக விவேக சிந்தாமணிப் பாடலை வலை ஏற்றினேன். எப்படியுள்ளது? ஒரு வார்த்தை சொல்லுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
21.09.2011


வாழ்க வளமுடன்!

30 comments:

ananth said...

இன்றும் நான் விரும்பி படிக்கும் புத்தகங்களில் விவேக சிந்தாமணியும் ஒன்று. தாங்கள் இங்கு மேற்கோள் காட்டியிருக்கும் பாடலும் நன்று. ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம், ஆயினும் பெரும்பான்மையாக இந்த பாடலில் உள்ளது போல்தான் நடக்கிறது.

இதில் எனக்கு பிடித்த பாடல்கள் பல இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று கீழே கொடுத்திருக்கிறேன்.

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே.

Baalaaji Ve said...

ஐயா,
மிகச் சரியாக நம் சான்றோர் பட்டுணர்ந்து சொல்லிய விஷயத்தை அனைவரிடம் பகிர்ந்தமைக்கு
நன்றி. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தை மனிதம் கடக்கும்போது இதை நன்குணர்வர்.
மிக்க நன்றி.
அன்புடன்
பாலா

Baalaaji Ve said...

ஐயா,
மிகச் சரியாக நம் சான்றோர் பட்டுணர்ந்து சொல்லிய விஷயத்தை அனைவரிடம் பகிர்ந்தமைக்கு
நன்றி. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தை மனிதம் கடக்கும்போது இதை நன்குணர்வர்.
மிக்க நன்றி.
அன்புடன்
பாலா

மாணவி தேமொழி said...

நல்ல மாறுதல் ஐயா, கதை, கவிதை, பாடம் என தொய்வுராமல் செல்கிறது.

ஏற்கனவே உங்கள் பதிவில் ஏழு பயனில்லாதவைகளாக (ஆபத்துக்கு உதவாப் பிள்ளை) என விவேக சிந்தாமணி சொல்லும் நீதிகளில் ஒன்றை படித்ததாக ஞாபகம். மேலும் ஒரு நீதி அறிந்து கொள்ள வாய்ப்பேற்பட்டது. நன்றி.
மாணவி தேமொழி

dorairaj said...

நன்றாக உள்ளது

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ananth said...
இன்றும் நான் விரும்பி படிக்கும் புத்தகங்களில் விவேக சிந்தாமணியும் ஒன்று. தாங்கள் இங்கு மேற்கோள் காட்டியிருக்கும் பாடலும் நன்று. ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம், ஆயினும் பெரும்பான்மையாக இந்த பாடலில் உள்ளது போல்தான் நடக்கிறது.
இதில் எனக்கு பிடித்த பாடல்கள் பல இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று கீழே கொடுத்திருக்கிறேன்.
ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே./////

நல்லது. நன்றி ஆனந்த்! நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலை முன்பே வலையில் ஏற்றியுள்ளேன். குறிச்சொல் பகுதியில் அதற்கான சுட்டி உள்ளது!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Baalaaji Ve said...
ஐயா,
மிகச் சரியாக நம் சான்றோர் பட்டுணர்ந்து சொல்லிய விஷயத்தை அனைவரிடம் பகிர்ந்தமைக்கு
நன்றி. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தை மனிதம் கடக்கும்போது இதை நன்குணர்வர்.
மிக்க நன்றி.
அன்புடன்
பாலா/////

ஆமாம். ஒரு காலகட்டத்தில் அனைவரும் வாழ்க்கையின் தத்துவங்களை உணர்வார்கள். உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அல்லது உணரவைத்துத்தான் சனீஷ்வரன் போர்டிங்பாஸைத் தருவான்!

SP.VR. SUBBAIYA said...

///Blogger மாணவி தேமொழி said...
நல்ல மாறுதல் ஐயா, கதை, கவிதை, பாடம் என தொய்வுராமல் செல்கிறது.
ஏற்கனவே உங்கள் பதிவில் ஏழு பயனில்லாதவைகளாக (ஆபத்துக்கு உதவாப் பிள்ளை) என விவேக சிந்தாமணி சொல்லும் நீதிகளில் ஒன்றை படித்ததாக ஞாபகம். மேலும் ஒரு நீதி அறிந்து கொள்ள வாய்ப்பேற்பட்டது. நன்றி.
மாணவி தேமொழி/////

நல்லது. உங்களின் வாய்மொழிக்கு நன்றி சகோதரி! நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலுக்கான சுட்டி குறிச்சொல் பகுதியில் உள்ளது!

SP.VR. SUBBAIYA said...

////Blogger dorairaj said...
நன்றாக உள்ளது/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

iyer said...

///“எனக்கு எழுபது வயதாகிவிட்டது. என் மனைவிக்கு 68 வயதாகிறது. இன்று வரை அவள் என் சொல்லை மீறமாட்டாள்” என்று யாராவது ஒருவர் கத்தியைத் தூக்கிக்கொண்டுவரலாம். ///

அவரை மட்டும் சரியாக
அடையாளம் காட்டினால் எப்படி..?

எல்லோரையும் அது போல காட்டி
எப்படி இடம் இருக்கும் இந்த வகுப்பில்

புரிந்தவர்கள்
புரிந்து கொள்வார்கள்.. மற்றவர்கள்

புரிந்து கொண்டபின்
புரிந்து கொள்வார்கள்..

இந்த பட்டியலில்
இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள.

பணத்தை தேடிய மனிதன் மட்டும் ஒரு
பைசா விழுந்தாலும் பைய எடுப்பான்

வழக்கம் போல் இந்த
வகுப்பில் வரும் கவிஞரின் வரிகள்..

காசேதான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் அது தெரியுமப்பா..

கைகைக் கை மாறும் பணமே அதை
கைப்பற்ற நினைக்குது மனமே

தமிழ் விரும்பி said...

இல்லை!.... தாங்கள் சொல்வது போல் யாரும் அப்படி தைரியமாக கத்தியை தூக்கிக் கொண்டு வரமாட்டார்கள் என உறுதுதியாக நம்புகிறேன்... உலகிலே பெரிய குடும்பமாம் கைலாயக் குடும்பம்; அங்கே எம்பெருமான் ஈசனுக்கே அது தான் நிலையாக அமைந்ததாம்... அப்படி இருக்க வேறு யார் வரப் போகிறார்கள்?

விவேகங்களை சிந்தும் மணியானப் பாடல்கள் அருமை.
நன்றிகள் ஐயா!

அன்புடன்,
ஆலாசியம் கோ.

SP.VR. SUBBAIYA said...

Blogger iyer said...
///“எனக்கு எழுபது வயதாகிவிட்டது. என் மனைவிக்கு 68 வயதாகிறது. இன்று வரை அவள் என் சொல்லை மீறமாட்டாள்” என்று யாராவது ஒருவர் கத்தியைத் தூக்கிக்கொண்டுவரலாம். ///
அவரை மட்டும் சரியாக
அடையாளம் காட்டினால் எப்படி..?/////

நான் யாரையும் குறிப்பிட்டு அடையாளம் காட்டவில்லை. அனைவருக்கும் சேர்த்துப் பொதுவாகத்தான் சொல்லியிருக்கிறேன் சுவாமி!
பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger தமிழ் விரும்பி said...
இல்லை!.... தாங்கள் சொல்வது போல் யாரும் அப்படி தைரியமாக கத்தியை தூக்கிக் கொண்டு வரமாட்டார்கள் என உறுதுதியாக நம்புகிறேன்... உலகிலே பெரிய குடும்பமாம் கைலாயக் குடும்பம்; அங்கே எம்பெருமான் ஈசனுக்கே அது தான் நிலையாக அமைந்ததாம்... அப்படி இருக்க வேறு யார் வரப் போகிறார்கள்?
விவேகங்களை சிந்தும் மணியானப் பாடல்கள் அருமை.
நன்றிகள் ஐயா!
அன்புடன்,
ஆலாசியம் கோ.///////

வரமாட்டார்கள். தவறி வர ஆசைப்படுபவர்களைத் தடுத்து நிறுத்ததான் அந்த ‘டிஸ்கி’ ஆலாசியம். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

Thanjavooraan said...

ஐயா, விவேகசிந்தாமணி பிற்கால இலக்கியம். அதில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு சில விதிவிலக்குகள் உண்டு என்பதும் உண்மை. ஆகையால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அந்த இலக்கியம் சொல்லுகின்ற கருத்துக்கள் விதிவிலக்கா, அல்லது இயல்பாக நடந்து கொண்டிருக்கும் காரியங்கள் விதிவிலக்கா என்பதுதான். எனக்கென்னவோ, விவேகசிந்தாமணி காலத்தில் அதன் ஆசிரியர் வெளியிட்ட கருத்துக்கள்தான் விதிவிலக்காக இருக்குமோ என்பதுதான். என் கருத்துத் தவறு என்று பலரும் நினைக்கலாம். காலம் மாறிக் கொண்டிருக்கிறது. வேகம் அதிகரித்திருக்கிறது. தலைகீழ் மாற்றம் என்றுகூட சொல்லலாம். அந்த நிலையில் விவேகசிந்தாமணி சொன்னது போல நடப்பது இந்தக் காலத்துக்கு ஒவ்வாததாக இருக்கலாம். வளர்ந்த மகன் தந்தையை மறந்தால் ஆயிரக்கணக்கான முதியோர் இல்லங்கள் இருக்க வேண்டும். மருத்துவரிடம் சென்று மாதம் ஒரு முறை ஆலோசனை நடத்தும் பெரியவர்கள் ஏராளம் இருக்க முடியாது. தொண்டு கிழவியானாலும், தன் கணவனை அன்போடு நடத்தும் சில 'பெரிசு'களைப் பார்த்து இளையவர்கள் பொறாமைப் படவேண்டும். அப்படி நடப்பார்கள். ஆகையால் விவேகசிந்தாமணியின் கருத்து இந்த காலத்துக்கு ஒவ்வாது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. இதில் மாறுபாடு உள்ளவர்கள் தயவு செய்து என்னிடம் கோபப் பட வேண்டாம். இது ஒரு இலக்கியச் சர்ச்சைதானே. மாறுபாடு உடையவர்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். எனக்கு ஆட்சேபமில்லை. சரிதானே!

rajakala said...

பாடலுக்கும் பாடத்துக்கும் நன்ரி வாழக்கையும் சில பாடங்கலையும் கத்து கொடுத்துக் கொன்டுதான் இருக்கிரது இருந்தாலும் இது போன்ர நீதிக் கருத்துக்கள அடங்கிய பாடல்கள தொடர்ந்து வெலியிடவும்

Srividhya said...

Very good song.

Ravichandran said...

Ayya,

Every word is true in real life..This is showcasing so many people real characters..

Sincere Student,
Trichy Ravi

kmr.krishnan said...

உண்மையிலேயே பாரதத்தில் இன்னும் தாய் தந்தை மீது கடைசிவரை அக்கறை உள்ள பிள்ளைகள் அதிகமே இருக்கிறார்கள்.காலம் அவ்வளவு மோசம் ஆகிவிடவில்லை.முதியவர்களின் சர்க்கரைநோய், இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் காரணமாக, பிள்ளை, மருமகள் உணவுக் கட்டுப்பாட்டை
வலியுறுத்தும் போது, பெரிசுகள் மனத்தாங்கல் அடைவது உண்டு. இரண்டாவது குழந்தைத்தன்மை அடைந்த முதியவர்களைப் போல உபத்திரவம் ஏதும் கிடையாது.ஆனாலும் கூடவே வைத்துக்கொண்டு பராமரிக்கும் பிள்ளைகள் அநேகம் உண்டு.


பெரியவர் தஞ்சாவூரார் அவர்களுக்குப் புண்ணியவதியான‌ அவர் மனைவியார்
பெரியவரின் 55 வயதிலேயே மறைந்துவிட்டார்.அதனால் அவருக்கு அவர் ஓய்வு பெற்றபின் மனைவியார் எப்படி நடந்துகொள்வார்கள் என்ற அநுபவம் இல்லை.அவருடைய மூத்த மகனும் மருமகளும் பேத்திகள் இருவரும் அருமையாக அமைந்துவிட்டனர். 'குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா' என்று பாடிக்கொண்டு பல தொண்டுகளைத் தன் 75 வயதிலும் செய்து வருகிறார்.சமீபத்தில் அவர் எழுதிய பாரதி கண்ட பெரியோர்கள் என்ற நூல் பதிப்பாகியுள்ளது..

RMURUGARAJAN said...

ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யம் குறையாமல் பதிவை தருவதற்கு தங்களை விட்டால் யார் உள்ளார்,

அதுபோல் இன்றைய பதிவும் அமைந்தது.

நன்றி ஐயா,

RAMADU Family said...

We can add one more line to this :

"Prachanai illadhavan Josiyaray theda maatan"

SUNRAYS said...

விவேகமான பதிவு

நன்றி ஐயா...

SP.VR. SUBBAIYA said...

////Blogger Thanjavooraan said...
ஐயா, விவேகசிந்தாமணி பிற்கால இலக்கியம். அதில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு சில விதிவிலக்குகள் உண்டு என்பதும் உண்மை. ஆகையால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அந்த இலக்கியம் சொல்லுகின்ற கருத்துக்கள் விதிவிலக்கா, அல்லது இயல்பாக நடந்து கொண்டிருக்கும் காரியங்கள் விதிவிலக்கா என்பதுதான். எனக்கென்னவோ, விவேகசிந்தாமணி காலத்தில் அதன் ஆசிரியர் வெளியிட்ட கருத்துக்கள்தான் விதிவிலக்காக இருக்குமோ என்பதுதான். என் கருத்துத் தவறு என்று பலரும் நினைக்கலாம். காலம் மாறிக் கொண்டிருக்கிறது. வேகம் அதிகரித்திருக்கிறது. தலைகீழ் மாற்றம் என்றுகூட சொல்லலாம். அந்த நிலையில் விவேகசிந்தாமணி சொன்னது போல நடப்பது இந்தக் காலத்துக்கு ஒவ்வாததாக இருக்கலாம். வளர்ந்த மகன் தந்தையை மறந்தால் ஆயிரக்கணக்கான முதியோர் இல்லங்கள் இருக்க வேண்டும். மருத்துவரிடம் சென்று மாதம் ஒரு முறை ஆலோசனை நடத்தும் பெரியவர்கள் ஏராளம் இருக்க முடியாது. தொண்டு கிழவியானாலும், தன் கணவனை அன்போடு நடத்தும் சில 'பெரிசு'களைப் பார்த்து இளையவர்கள் பொறாமைப் படவேண்டும். அப்படி நடப்பார்கள். ஆகையால் விவேகசிந்தாமணியின் கருத்து இந்த காலத்துக்கு ஒவ்வாது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. இதில் மாறுபாடு உள்ளவர்கள் தயவு செய்து என்னிடம் கோபப் பட வேண்டாம். இது ஒரு இலக்கியச் சர்ச்சைதானே. மாறுபாடு உடையவர்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். எனக்கு ஆட்சேபமில்லை. சரிதானே!//////

வயதான தந்தையைப் பராமரிப்பதைப் பற்றிப் பாடலில் சொல்லப்படவில்லை. சொல்லி இருப்பது சாதாரண விஷயம். விடலைப் பருவத்தில் இருந்து இளைஞனாக மாறும் காலத்தில், மகன் தந்தையின் சொற்களைக் கருதிப்பாரான் என்பதுதான் கருத்து. அது பற்றி உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் சார்!

SP.VR. SUBBAIYA said...

Blogger rajakala said...
பாடலுக்கும் பாடத்துக்கும் நன்றி வாழக்கையும் சில பாடங்களையும் கத்து கொடுத்துக் கொன்டுதான் இருக்கிறது இருந்தாலும் இது போன்ற நீதிக் கருத்துக்கள அடங்கிய பாடல்கள தொடர்ந்து வெளியிடவும்//////

தொடர்ந்து வரும். வாரம் ஒருமுறை!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Srividhya said...
Very good song.////

நல்லது.நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

Blogger Ravichandran said...
Ayya,
Every word is true in real life..This is showcasing so many people real characters..
Sincere Student,
Trichy Ravi/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
உண்மையிலேயே பாரதத்தில் இன்னும் தாய் தந்தை மீது கடைசிவரை அக்கறை உள்ள பிள்ளைகள் அதிகமே இருக்கிறார்கள்.காலம் அவ்வளவு மோசம் ஆகிவிடவில்லை.முதியவர்களின் சர்க்கரைநோய், இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் காரணமாக, பிள்ளை, மருமகள் உணவுக் கட்டுப்பாட்டை
வலியுறுத்தும் போது, பெரிசுகள் மனத்தாங்கல் அடைவது உண்டு. இரண்டாவது குழந்தைத்தன்மை அடைந்த முதியவர்களைப் போல உபத்திரவம் ஏதும் கிடையாது.ஆனாலும் கூடவே வைத்துக்கொண்டு பராமரிக்கும் பிள்ளைகள் அநேகம் உண்டு./////

பாடலின் வரிகளை மீண்டும் ஒருமுறை பாருங்கள் கிருஷ்ணன் சார். “பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல்புத்தி கேளான்”
அதாவது சிறுவனாக இருந்து, இளைஞனாக மாறும் பருவத்தில், தந்தையின் வார்த்தைகளைக் கேட்கமாட்டான். பெற்றோர்களைப் பராமரிப்பதைப் பற்றி அவர் ஒன்றும் இதில் சொல்லவில்லை!

///////பெரியவர் தஞ்சாவூரார் அவர்களுக்குப் புண்ணியவதியான‌ அவர் மனைவியார்
பெரியவரின் 55 வயதிலேயே மறைந்துவிட்டார்.அதனால் அவருக்கு அவர் ஓய்வு பெற்றபின் மனைவியார் எப்படி நடந்துகொள்வார்கள் என்ற அநுபவம் இல்லை.அவருடைய மூத்த மகனும் மருமகளும் பேத்திகள் இருவரும் அருமையாக அமைந்துவிட்டனர். 'குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா' என்று பாடிக்கொண்டு பல தொண்டுகளைத் தன் 75 வயதிலும் செய்து வருகிறார்.சமீபத்தில் அவர் எழுதிய பாரதி கண்ட பெரியோர்கள் என்ற நூல் பதிப்பாகியுள்ளது..//////

தகவலுக்கு நன்றி சார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger RMURUGARAJAN said...
ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யம் குறையாமல் பதிவை தருவதற்கு தங்களை விட்டால் யார் உள்ளார்,
அதுபோல் இன்றைய பதிவும் அமைந்தது.
நன்றி ஐயா,/////

உங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தால் சரிதான். இங்கே வயது வித்தியாசத்துடன், இன்றையத்தேதிக்கு சுமார் 2632 தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை மனதில் வைத்துக்கொண்டு எழுத வேண்டிய பொறுப்பு உள்ளது சுவாமி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger RAMADU Family said...
We can add one more line to this :
"Prachanai illadhavan Josiyaray theda maatan"/////

ஆமாம். உண்மைதான். நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger SUNRAYS said...
விவேகமான பதிவு
நன்றி ஐயா.../////

நல்லது நன்றி.

Thanjavooraan said...

///வயதான தந்தையைப் பராமரிப்பதைப் பற்றிப் பாடலில் சொல்லப்படவில்லை. சொல்லி இருப்பது சாதாரண விஷயம். விடலைப் பருவத்தில் இருந்து இளைஞனாக மாறும் காலத்தில், மகன் தந்தையின் சொற்களைக் கருதிப்பாரான் என்பதுதான் கருத்து. அது பற்றி உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் சார்///


ஆம் ஐயா! விடலைப் பருவத்தில் பொதுவாக இளைஞர்கள் யார் சொல்லையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளுவதில்லை. அப்படி ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைவதில்லை. கல்லூரியிலோ, வெளியிலோ, ஆசிரியர்கள், பெரியவர்கள் ஆகியோரின் அனுபவம், அவர்கள் சொல்லும் கருத்துக்களிலுள்ள உண்மை, நேர்மை இவற்றைக் கருதாமல் தன் இச்சைப்படி நடக்கும் பருவம் அது. மரக்கன்று வளரும் பருவத்தில், பிஞ்சு நிலையில் அது வளையாமல் நேராக வைத்துக் கட்டிவிட்டால், மரம் நேராக வளரும், அதன் இஷ்டத்துக்கு வளரட்டும் என்று விட்டுவிட்டால், கிளை வளைந்து, பலன் அடுத்த வீட்டுக்காரனுக்குத்தான் போகும். இதெல்லாம் பழைய பஞ்சாங்கக் கருத்தக்களைப் போலத் தோன்றலாம். ஆனால், அனுபவத்தின் சாரம். நன்றி ஐயா.