மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.9.15

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில அர்த்தமுள்ள கருத்துகள்!


அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில அர்த்தமுள்ள கருத்துகள்!

மிக நீளமான பதிவு. பொறுமையுடன் படியுங்கள் சாமிகளா!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
👍ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன்
ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை
 போன்றது,
  அது நிச்சயம் மரணத்தை தரும்
.
👍ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் அல்லது சேர்த்து வைக்க வேண்டும் வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

👍கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

👍ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான். ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

👍நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

👍உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

👍கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

👍காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

👍பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.

பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

👍சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

👍சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

👍கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

👍விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

👍இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

👍கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

👍அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.

ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

👍யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

👍எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

👍அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

👍சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.

அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,

👍வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

👍அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

👍எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.

👍மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.

பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

👍பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.

கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

👍கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

👍வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

👍பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

👍வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.

👍கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோபம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.

உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.
================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

  1. முன்னுக்கு பின் முரணான கருத்து/ஆலோசனை
    மாறும் காலத்திற்கு ஏற்ப மாறாத சிந்தனைகளை சொல்லவில்லை

    இந்த பதிவை ஒதுக்கி வைக்கிறோம்
    இனிய நல வணக்கங்களுடன்

    ReplyDelete
  2. வணக்கம் ஜயா,

    நல்ல பதிவு அர்த்த சாஸ்திரம் இன்றைய வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒன்று... கலியுகத்தில மனிதர்களான நம்மிடம் (நிறையபேர்) வாக்கு சுத்தம் இல்லை, எண்ணங்கள், செயல், ஒழுக்கம் என்று எதுவும் இல்லை...

    இருளில் விளக்கொளி போல் உள்ளது உங்க பதிவு...

    மிகவும் நன்றி

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... great post. It insists the importance of education from top to bottom.

    All is well.

    Have a nice day.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  4. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

    மிக அருமையான விஷயம் ...ஒரு மனிதனகபட்டவன் வாழ்வில் இவை அனைத்தும் கடை பிடித்தல் போதும் .
    நிறைவான வாழ்வு .வாழ்ந்தவானாகிரான்..
    நன்றி.

    ReplyDelete
  5. அருமையான பதிவு ஐயா....பகிர்வுக்கு நன்றி...!!

    ReplyDelete
  6. மிகவும் அருமை ஐயா. சாணக்கியரின் கருத்துக்களை தேடிப் பதிவிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. ஐயா,
    மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகள். நன்றி.

    ReplyDelete
  8. ஐயா

    நன்று. இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால்!

    எம்.திருமால்
    பவளத்தானூர்

    ReplyDelete
  9. ////Blogger வேப்பிலை said...
    முன்னுக்கு பின் முரணான கருத்து/ஆலோசனை
    மாறும் காலத்திற்கு ஏற்ப மாறாத சிந்தனைகளை சொல்லவில்லை
    இந்த பதிவை ஒதுக்கி வைக்கிறோம்
    இனிய நல வணக்கங்களுடன்////

    ஆமாம். லெக்கிங்ஸ் போடக்கூடிய காலம். இது எல்லோருடனும் ஒத்துப்போகும் என்று சொல்வதற்கில்லை. நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  10. ///Blogger Remanthi said...
    வணக்கம் ஜயா,
    நல்ல பதிவு அர்த்த சாஸ்திரம் இன்றைய வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒன்று... கலியுகத்தில மனிதர்களான நம்மிடம் (நிறையபேர்) வாக்கு சுத்தம் இல்லை, எண்ணங்கள், செயல், ஒழுக்கம் என்று எதுவும் இல்லை...
    இருளில் விளக்கொளி போல் உள்ளது உங்க பதிவு...
    மிகவும் நன்றி/////

    நல்லது. நன்றி நண்பரே! உங்களின் முழுப் பெயர் என்ன?

    ReplyDelete
  11. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... great post. It insists the importance of education from top to bottom.
    All is well.
    Have a nice day.
    With kind regards,
    Ravichandran M.////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  12. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    மிக அருமையான விஷயம் ...ஒரு மனிதனாகப்பட்டவன் வாழ்வில் இவை அனைத்தும் கடை பிடித்தல் போதும் .
    நிறைவான வாழ்வு .வாழ்ந்தவானாகிறான்..
    நன்றி.//////

    உண்மைதான். உங்களின் நிறைவான பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  13. /////Blogger kohilam said...
    அருமையான பதிவு ஐயா....பகிர்வுக்கு நன்றி...!!/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. //////Blogger sriram1114 said...
    மிகவும் அருமை ஐயா. சாணக்கியரின் கருத்துக்களை தேடிப் பதிவிட்டமைக்கு நன்றி./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger வரதராஜன் said...
    ஐயா,
    மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகள். நன்றி./////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  16. ////Blogger Thirumal Muthusamy said...
    ஐயா
    நன்று. இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால்!
    எம்.திருமால்
    பவளத்தானூர்/////

    அளவு எப்படி மிஞ்சும்? வேண்டிய அளவை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் நண்பரே!

    ReplyDelete
  17. //////Blogger பரிவை சே.குமார் said...
    பயனுள்ள பகிர்வு ஐயா...////

    நல்லது. நன்றி குமார்!

    ReplyDelete
  18. அய்யா வணக்கம்
    நல்ல விசயங்களை தொகுத்து தந்திருக்கிறீர்கள். .இந்த விசயங்களை ஓரளவு கடைபிடித்தால் நன்று . இதை படித்து ஒதுக்கி விடக்கூடிய நல்லவர்கள் தான் நாட்டில் இருந்து வருகின்றனர் . எவ்வளவோ நல்ல ஆரோக்கியமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது . அதை கடைபிடிக்கும் மன நிலையில் தான் மக்கள் இல்லை என்பது தான் உண்மை

    தொடரட்டும் உங்கள் பணி
    சோமசுந்தரம் பழனியப்பன்
    மஸ்கட்

    ReplyDelete
  19. ////Blogger Spalaniappan Palaniappan said...
    அய்யா வணக்கம்
    நல்ல விசயங்களை தொகுத்து தந்திருக்கிறீர்கள். .இந்த விசயங்களை ஓரளவு கடைபிடித்தால் நன்று . இதை படித்து ஒதுக்கி விடக்கூடிய நல்லவர்கள் தான் நாட்டில் இருந்து வருகின்றனர் . எவ்வளவோ நல்ல ஆரோக்கியமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது . அதை கடைபிடிக்கும் மன நிலையில் தான் மக்கள் இல்லை என்பது தான் உண்மை
    தொடரட்டும் உங்கள் பணி
    சோமசுந்தரம் பழனியப்பன்
    மஸ்கட் /////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி பழனியப்பன்!

    ReplyDelete
  20. வணக்கம். நீங்களே ஒரு நூல் நிலையம் என நினைக்கிறேன். நல்ல கருத்துக்களை பதிவிட்டதற்கு நன்றிகள் .

    ReplyDelete
  21. that was a copy paste post , including a spelling mistake

    ReplyDelete
  22. ////Blogger shree said...
    வணக்கம். நீங்களே ஒரு நூல் நிலையம் என நினைக்கிறேன். நல்ல கருத்துக்களை பதிவிட்டதற்கு நன்றிகள் .//////

    நீங்கள் நினைப்பதுபோல நூல் நிலையமில்லை. அடுத்த பின்னூட்டத்தைப் படித்து விட்டுச் சொல்லுங்கள் சகோதரி.

    ReplyDelete
  23. /////Blogger sarul said...
    that was a copy paste post , including a spelling mistake//////

    காப்பி அடிப்பது என்றால் தேர்வில் காப்பி அடிப்பது போன்ற மேட்டர் அல்ல ராசா! இது வாட்ஸ் அப்பில் எனக்கு வந்தது ஆகும். நன்றாக இருந்ததால் எடுத்துப் பதிவிட்டுள்ளேன். எனக்கு அனுப்பியவர் சோர்ஸ் எழுதவில்லை. ஆகவே நானும் எழுதவில்லை.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com