மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.9.15

தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...!


தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...!

திருநெல்வேலி - அல்வா

ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா

கோவில்பட்டி - கடலைமிட்டாய்

பண்ருட்டி - பலாப்பழம்

மார்த்தாண்டம் - தேன்

பவானி - ஜமுக்காளம்

உசிலம்பட்டி - ரொட்டி

நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்

பொள்ளாச்சி - தேங்காய்

வேதாரண்யம் - உப்பு

சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா

சாத்தூர் - காராசேவு, மிளகாய்

மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து

மாயவரம் - கருவாடு

திருப்பூர் - பனியன், ஜட்டி

உறையூர் - சுருட்டு,கைத்தறி புடவை

கும்பகோணம் - வெற்றிலை, சீவல்

தர்மபுரி - புளி, தர்பூசணி

ராஜபாளையம் - நாய்

தூத்துக்குடி - உப்பு

ஈரோடு - மஞ்சள், துணி

தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை

நீலகிரி - தைலம்

ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி

கல்லிடைக்குறிச்சி - அப்பளம்

காரைக்குடி - ஓலைக்கூடை

செட்டிநாடு - பலகாரம்

திருபுவனம் - பட்டு

குடியாத்தம் - நுங்கு

கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்

ஆலங்குடி - நிலக்கடலை

கரூர் - கொசுவலை

திருப்பாச்சி - அரிவாள்

காஞ்சிபுரம் - பட்டு, இட்லி

நாகப்பட்டினம் - கோலா மீன்

திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்

பத்தமடை - பாய்

பழனி - பஞ்சாமிர்தம், விபூதி

மணப்பாறை - முறுக்கு, மாடு

உடன்குடி - கருப்பட்டி

கவுந்தாம்பட்டி - வெல்லம்

ஊத்துக்குளி - வெண்ணெய்

கொடைக்கானல் - பேரிக்காய்

குற்றாலம் - நெல்லிக்காய்

செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா

சங்கரன் கோவில் - பிரியாணி

அரியலூர் - கொத்தமல்லி

சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை

கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்

திருச்செந்தூர் - கருப்பட்டி

குளித்தலை - வாழைப்பழம்

ஆம்பூர் - பிரியாணி, தோல் உற்பத்தி பொருள்கள்..

ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய்,தக்காளி

ஓசூர் - ரோஜா

நாமக்கல் - முட்டை

பல்லடம் - கோழி

குன்னூர் - கேரட்
.
விருதுநகர் - பரோட்டா

திருச்சி - லால்கடை பூந்தி

வாணியம்பாடி - பிரியாணி , தோல் உற்பத்தி பொருள்கள்..
===============================================================
ஏதாவது விடுபட்டிருந்தால் கவலை வேண்டாம். வேப்பிலை சுவாமி வந்து சொல்லுவார்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

  1. தஞ்சாவூர் ஒரு காலத்தில் முந்திரிப் பருப்புக்கும் புகழ் பெற்றதாக இருந்தது.
    இன்று முந்திரிக்காடுகள் அழிக்கப்பட்டு எல்லாம் காலனிகள் ஆகிவிட்டன.
    தஞ்சை பலாப்பழத்திற்கும் பெயர் பெற்றது.மிகவும் இனிப்பான பலா கிடைக்கும் அங்கே. பண்ருட்டிப் பலாப்பழம் பெரிதாக இருக்கும்;ஆனால் ருசி குறைவுதான்.

    பண்ருட்டி கொலு பொம்மைகளுக்கும் பெயர் பெற்றது.

    அரியலூர் மிளகாய்க்கும் பெயர் பெற்றது.

    திருச்செந்தூர் கருப்பட்டிக்கு சில்லுக்கருப்ப்ட்டி என்று பெயர். அதில் சுக்கு சேர்த்து இருப்பார்கள். சுக்கு மிட்டாய் போல வெறுமனே சாப்பிடலாம். பனை ஓலைக் கூடையில் பொதிந்து தருவார்கள்.

    குளித்தலையைக் காட்டிலும் தொட்டியத்தில்தான் வாழைப்பழம் கனஜோர்.
    திருவையாற்றிலும் மிக்க மலிவாகக் கிடைக்கும். ஆனால் உடனே பயன் படுத்தும் நிலையில் இருக்கும்.ஒரு நாள் கூட வைக்க முடியாது.

    தூத்துக்குடி, விருதுந‌கர் துவரம்பருப்புக்கும் பெயர் பெற்றவை.

    ராஜபாளையம் நாய்க்கு மட்டுமல்ல.பருத்திக்கும் பெயர் பெற்றது.
    அந்த‌ ஊர் ராஜுக்கள்தான் தமிழக அரசியலையே பின்னால் இருந்து ஆட்டி வைப்பவர்கள்.மறைந்த குமாரசாமி ராஜா முதல்வராகக்கூட இருந்துள்ளார்.

    சேலம் கைத்தறி நெசவாளர்களும் பட்டு நெசவாளர்களும் நிறைந்த ஊர்.
    சேலம் குண்டஞ்சி வேட்டி அகில இந்தியப் புகழ் பெற்றது.

    கல்லிடைக்குறிச்சியில் பிராமண விதவைகளுக்குச் சீவனம் கொடுத்த அப்பள வியாபாரம் இன்று முஸ்லிம்க்ள் கையில் உள்ளது. அங்கிருந்து மொத்தமாக‌ வாங்கி நம்முடைய 'லேபல்' போட்டு விற்கலாம். அம்மாமி அப்பள‌ம் எல்லாம் இன்று இஸ்லாமியர்கள் மடியாகச் செய்தவையே!எல்லாம் எந்திர மயமாகிவிட்டது.
    கல்லிடைக்குறிச்சிக்காரகள் தான் தமிழகத்தில் முதல் தொழில் முனைவோர். ராயல் என்ஃபீல்ட் போன்றவை அவர்கள் துவங்கியதுதான்.

    எல்லாம் சரி! நீங்கள் நீண்ட நாட்களாக வாழும் கோவையை மறந்தது ஏனோ?

    தமிழகத்தின் மான்செஸ்டர் கோவை! வித விதமான துணிமணிகள் கிடைக்குமே!ஊட்டி அருகில் இருப்பதால் இங்கிலீஷ் காய்கறிகள் கோவையில் தான் சூப்பராக இருக்கும்.

    ReplyDelete
  2. அண்ணா! தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் எல்லாம் வாங்கலாம் தானே! ஆனாலும் இந்த ஊரில் இது சிறப்பு ! எனக் கொள்ளலாமென நினைக்கிறேன்.
    பட்டாசு,லுங்கி,பட்டுச்சேலை, கற்சிலைகள் இவற்றுக்கும் பிரபலமான ஊர்கள் உண்டல்லவா?

    ReplyDelete
  3. இத்தனையும் வாங்க
    எத்தனை பணம் வேணும்

    இலவசமா அடுத்த வருஷத்திலே
    இவங்க தருவாங்களா? அது சரி...

    தமிழ் நாட்டையே சுத்தினா எப்படி
    தாண்டி கொஞ்சம் வாங்களேன்

    ReplyDelete
  4. ஐயா வணக்கம்

    திண்டுக்கல்லில் பூட்டு என்பதை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து ( தொழிலும் நலிவடைந்து விட்டது ) இப்போது திண்டுக்கல் பிரியாணி என மாற்றபட்டு விட்டனர்
    சின்னாளப்பட்டி சுங்கடிச் சேலை மிகப் பிரசித்திப் பெற்றது.
    சோழவந்தான் வெற்றிலை.

    கண்ணன்.

    ReplyDelete
  5. நன்றி வாத்தியாரே!!! அருமை... மேலும் அதிக தகவல் தந்த kmr.krishnan அவர்களுக்கும் நன்றி...

    ReplyDelete
  6. //////Blogger kmr.krishnan said...
    தஞ்சாவூர் ஒரு காலத்தில் முந்திரிப் பருப்புக்கும் புகழ் பெற்றதாக இருந்தது.
    இன்று முந்திரிக்காடுகள் அழிக்கப்பட்டு எல்லாம் காலனிகள் ஆகிவிட்டன.
    தஞ்சை பலாப்பழத்திற்கும் பெயர் பெற்றது.மிகவும் இனிப்பான பலா கிடைக்கும் அங்கே. பண்ருட்டிப் பலாப்பழம் பெரிதாக இருக்கும்;ஆனால் ருசி குறைவுதான்.
    பண்ருட்டி கொலு பொம்மைகளுக்கும் பெயர் பெற்றது.
    அரியலூர் மிளகாய்க்கும் பெயர் பெற்றது.
    திருச்செந்தூர் கருப்பட்டிக்கு சில்லுக்கருப்பட்டி என்று பெயர். அதில் சுக்கு சேர்த்து இருப்பார்கள். சுக்கு மிட்டாய் போல வெறுமனே சாப்பிடலாம். பனை ஓலைக் கூடையில் பொதிந்து தருவார்கள்.
    குளித்தலையைக் காட்டிலும் தொட்டியத்தில்தான் வாழைப்பழம் கனஜோர்.
    திருவையாற்றிலும் மிக்க மலிவாகக் கிடைக்கும். ஆனால் உடனே பயன் படுத்தும் நிலையில் இருக்கும்.ஒரு நாள் கூட வைக்க முடியாது.
    தூத்துக்குடி, விருதுந‌கர் துவரம்பருப்புக்கும் பெயர் பெற்றவை.
    ராஜபாளையம் நாய்க்கு மட்டுமல்ல.பருத்திக்கும் பெயர் பெற்றது.
    அந்த‌ ஊர் ராஜுக்கள்தான் தமிழக அரசியலையே பின்னால் இருந்து ஆட்டி வைப்பவர்கள்.மறைந்த குமாரசாமி ராஜா முதல்வராகக்கூட இருந்துள்ளார்.
    சேலம் கைத்தறி நெசவாளர்களும் பட்டு நெசவாளர்களும் நிறைந்த ஊர்.
    சேலம் குண்டஞ்சி வேட்டி அகில இந்தியப் புகழ் பெற்றது.
    கல்லிடைக்குறிச்சியில் பிராமண விதவைகளுக்குச் சீவனம் கொடுத்த அப்பள வியாபாரம் இன்று முஸ்லிம்கள் கையில் உள்ளது. அங்கிருந்து மொத்தமாக‌ வாங்கி நம்முடைய 'லேபல்' போட்டு விற்கலாம். அம்மாமி அப்பள‌ம் எல்லாம் இன்று இஸ்லாமியர்கள் மடியாகச் செய்தவையே!எல்லாம் எந்திர மயமாகிவிட்டது.
    கல்லிடைக்குறிச்சிக்காரகள் தான் தமிழகத்தில் முதல் தொழில் முனைவோர். ராயல் என்ஃபீல்ட் போன்றவை அவர்கள் துவங்கியதுதான்.
    எல்லாம் சரி! நீங்கள் நீண்ட நாட்களாக வாழும் கோவையை மறந்தது ஏனோ?
    தமிழகத்தின் மான்செஸ்டர் கோவை! வித விதமான துணிமணிகள் கிடைக்குமே!ஊட்டி அருகில் இருப்பதால் இங்கிலீஷ் காய்கறிகள் கோவையில் தான் சூப்பராக இருக்கும்.///////

    இங்கிலீஷ் காய்கறிகளுக்கு மேட்டுப்பாளையம்தான் சந்தை. கோவையில் அன்னபூர்ணா (10 இடங்களில் உள்ளது) ஹோட்டல் டிபன், சாப்பாடு காப்பிக்குப் பெயர்பெற்றது.

    ReplyDelete
  7. /////Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    அண்ணா! தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் எல்லாம் வாங்கலாம் தானே! ஆனாலும் இந்த ஊரில் இது சிறப்பு ! எனக் கொள்ளலாமென நினைக்கிறேன்.
    பட்டாசு,லுங்கி,பட்டுச்சேலை, கற்சிலைகள் இவற்றுக்கும் பிரபலமான ஊர்கள் உண்டல்லவா?//////

    ஆஹா பாட்டாசுகளுக்கு சிவகாசி, பட்டுச் சேலைகளுக்கு காஞ்சிபுரம்.

    ReplyDelete

  8. //////Blogger Nachiappan Narayanan said...
    super//////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger வேப்பிலை said...
    இத்தனையும் வாங்க
    எத்தனை பணம் வேணும்
    இலவசமா அடுத்த வருஷத்திலே
    இவங்க தருவாங்களா? அது சரி...
    தமிழ் நாட்டையே சுத்தினா எப்படி
    தாண்டி கொஞ்சம் வாங்களேன்//////

    வெளி மாநிலங்களில் கிடைப்பவை பற்றி பட்டியல் இட்டால் போய் வாங்க முடியுமா சாமி?

    ReplyDelete
  10. /////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    திண்டுக்கல்லில் பூட்டு என்பதை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து ( தொழிலும் நலிவடைந்து விட்டது ) இப்போது திண்டுக்கல் பிரியாணி என மாற்றபட்டு விட்டனர்
    சின்னாளப்பட்டி சுங்கடிச் சேலை மிகப் பிரசித்திப் பெற்றது.
    சோழவந்தான் வெற்றிலை.
    கண்ணன்.///////

    ஆமாம். நன்றி தூத்துக்குடிக்காரரே!

    ReplyDelete
  11. //////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    நன்றி வாத்தியாரே!!! அருமை... மேலும் அதிக தகவல் தந்த kmr.krishnan அவர்களுக்கும் நன்றி.../////

    திருச்செந்தூர் கருப்பட்டிக்கு சில்லுக்கருப்பட்டி என்று பெயர். அதில் சுக்கு சேர்த்து இருப்பார்கள். சுக்கு மிட்டாய் போல வெறுமனே சாப்பிடலாம். பனை ஓலைக் கூடையில் பொதிந்து தருவார்கள்.” என்று கே.எம்.ஆர்.கே எழுதியுள்ளார். ஒரு கால் கிலோ அளவு வாங்கி கூரியரில் அனுப்பிவையுங்கள் ராசா. எப்படியிருக்கிறது என்று பார்ப்போம். பணம் அனுப்பி வைக்கிறேன்

    ReplyDelete
  12. ஐயா,
    எங்களூரில் ( கரூர் மாவட்டம், கிருட்டிணராயபுரம் தாலுக்கா) லாலாப்பேட்டையில் மிக மலிவாக வெற்றிலை, ரஸ்தாளி, பூவன் ஆகியன கிடைக்கும். திருச்சி-கோவை பஸ் மார்க்கத்தில் லெவல் கிராஸிங்கில் நிற்கும் பஸ் மற்றும் லாரிகளில் பிரயாணம் செய்வோர் அனைவரும் இவற்றை வாங்குவர். அவ்வளவு மலிவு.

    ReplyDelete
  13. ////Blogger வரதராஜன் said...
    ஐயா,
    எங்களூரில் ( கரூர் மாவட்டம், கிருட்டிணராயபுரம் தாலுக்கா) லாலாப்பேட்டையில் மிக மலிவாக வெற்றிலை, ரஸ்தாளி, பூவன் ஆகியன கிடைக்கும். திருச்சி-கோவை பஸ் மார்க்கத்தில் லெவல் கிராஸிங்கில் நிற்கும் பஸ் மற்றும் லாரிகளில் பிரயாணம் செய்வோர் அனைவரும் இவற்றை வாங்குவர். அவ்வளவு மலிவு.////

    உண்மைதான். நானும் வாங்கியிருக்கிறேன். தகவலுக்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com